நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த, உயிரி மருந்து ‘சக்தி (SHAKTI) திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன?

தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் உயிரி மருந்து சக்தி (Biopharma SHAKTI) திட்டத்தை முன்மொழிகிறது. இந்தத் திட்டம் மற்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம் தொடர்பான பிற அறிவிப்புகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே உள்ளன.


தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை 2026-ன் ஒரு பகுதியாக, இந்தியாவை உயிரி மருந்துத் தொழில்நுட்ப துறையில் ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயிரி மருந்துத் தொழில்நுட்ப சக்தி திட்டத்தை அறிவித்தார்.


நீரிழிவு, புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும், குறைவான விலையில் மக்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுவதற்கு உயிரியல் மருந்துகள் முக்கியமானவை என்று நிதியமைச்சர்  குறிப்பிட்டார்.


முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து


நிதியமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் சுகாதார மேம்பாட்டிற்கான உத்தி (Strategy for Healthcare Advancement through Knowledge, Technology and Innovation (SHAKTI))  என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.


சேர்க்கப்பட்டுள்ள மருந்துகள்:


உயிரினங்கள் (செல்கள், பாக்டீரியா அல்லது விலங்குகள்) அல்லது அவற்றின் கூறுகளான புரதங்கள் மற்றும் மரபணுக்களிலிருந்து பெறப்படும் சிக்கலான மருந்துகளான உயிரியல் மருந்துகளை (Biologics) உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புற்றுநோய்கள், தன்னுடல் தாக்க நோய்கள் (வாதம், குடல் அழற்சி நோய் மற்றும் சொரியாசிஸ்) மற்றும் மரபணு கோளாறுகள் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உயிரியல் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற மருந்துகளை சுத்திகரிப்பது, பதப்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது சிக்கலானதாக இருக்கும்.


இந்தத் திட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்துகளின் (biosimilar medications) உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இவை உயிரியல் மருந்துகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்காது.




உள்கட்டமைப்பு ஆதரவு:


இந்தத் திட்டத்தின்கீழ், மூன்று புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (National Institutes of Pharmaceutical Education and Research (NIPER)) தொடங்ப்படவுள்ளது. மேலும், தற்போதுள்ள 7  நிறுவனங்கள் உயிரிமருத்துவத் துறையை மையமாகக் கொண்ட வலையமைப்பின் (Biopharma-focused network) ஒரு பகுதியாக மேம்படுத்தப்படும்.


இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற தளங்களின் வலையமைப்பும் உருவாக்கப்படும்.


உலகத் தரநிலைகள் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடுவை எட்டுவதற்காக, ஒரு பிரத்யேக அறிவியல் ஆய்வுக் குழு மற்றும் நிபுணர்கள் மூலம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை (Central Drugs Standard Control Organisation) வலுப்படுத்த இருப்பதாக நிதி அமைச்சர் கூறினார்.


உயிரி மருந்து சக்தி திட்டம் (Biopharma SHAKTI) ஏன் தொடங்கப்பட்டது?


தொற்று நோய்களுக்குப் (non-communicable diseases (NCDs)) பதிலாக, இந்தியா அதிக அளவில் நீண்டகால நோய்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் 63% தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. இதில், இருதய நோய்கள் மொத்த இறப்புகளில் 27% ஆகவும், அதைத் தொடர்ந்து நாள்பட்ட சுவாச நோய்கள் (11%), புற்றுநோய்கள் (9%), மற்றும் நீரிழிவு நோய் (3%) ஆகவும் உள்ளன.


முக்கியமாக, இந்தத் திட்டம் சரியான நேரத்தில் வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிறுவன அடையாள மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு அக்டோபர் 2025 முதல் 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பிறகு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து இறக்குமதிகள் தேசியப் பாதுகாப்புக்கு மருந்து இறக்குமதிகள் அச்சுறுத்தலாக உள்ளதா என்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட பிரிவு 232 விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் தீர்வைகள் பொதுவான மருந்துகள் மற்றும் அமெரிக்காவில் உற்பத்தித் தளங்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பதால், இந்தியா இந்த அபாயத்தை தவிர்த்துவிட்டது. இந்தியாவின் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியில் 90% பொது மருந்துகளாகும் (generic medicine). இவற்றில் பாதி அமெரிக்காவிற்குச் செல்கின்றன. மேலும், பல இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் மருந்துத் தொழிற்சாலைகளும் உள்ளன.


வரி விதிப்பு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டதால், அக்டோபர் 2025-ல் அமெரிக்காவிற்கான இந்தியாவின் மருந்து ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 23.7 சதவீதம் சரிந்தது. ஆனால், அடுத்த மாதமே அது முந்தைய ஆண்டைவிட 9.8 சதவீதமாக அதிகரித்தது.


இந்த வரி விகிதம் 250% வரை உயரக்கூடும் என்பதால், பயோலாஜிக்கல்ஸ் மற்றும் பயோசிமிலர்கள் துறையில் கவனம் செலுத்துவது, மருந்து சார்ந்த வரிகளிலிருந்து இந்தியாவின் மருந்துத் துறையைப் பாதுகாக்க உதவும். மேலும், அதன் நிலையை ‘உலகின் மருந்தகம்’ (pharmacy of the world) என்பதிலிருந்து, சிக்கலான பயோசிமிலர் மற்றும் உயிரியல் மருந்துகளுக்கான ஒரு மையமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.


Biologicals மற்றும் Biosimilars என்றால் என்ன?


         உயிரியல் மருந்துகள் (Biologicals) என்பது  இயற்கை உயிரி (மிகச்சிக்கலான புரதங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்துகள் ஆகும்.  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்துகள் (Biosimilars) என்பது உயிரியல் மருந்துகளுக்கு ஏற்றதாக இருந்தாலும், ஒரே மாதிரி அல்லாத நகல் மருந்துகள் ஆகும்.


இந்தியாவின் மருந்துவத் துறை எவ்வாறு செயல்பட்டுள்ளது


இந்தியாவின் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மொத்த மருந்துகள், மருந்து இடைநிலைப் பொருட்கள், மருந்து உருவாக்கங்கள் மற்றும் உயிரியல் மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.


இந்தியாவின் மருந்துத் துறை உலகின் மூன்றாவது பெரிய துறையாகும். இது உலகளாவிய மரபுவழி மருந்துகளுக்கான (உயிரியல் மருந்துகளுக்கு ஏற்ற மாதிரிகள்) தேவையில் 20%-ஐப் பூர்த்தி செய்கிறது. மேலும், 2025-ஆம் ஆண்டு  நிதியாண்டில் 191 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற அதிகவரி கொண்ட  ஒழுங்குமுறை சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.


குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா ஒரு முன்னணி நாடக உள்ளது. உலகின் பெரும்பாலான டிப்தீரியா, டேட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (diphtheria, tetanus and pertussis (DPT)) தடுப்பூசிகள், பேசிலஸ் கால்மெட்-குவெரின் (Bacillus Calmette-Guerin (BCG)) மற்றும் தட்டம்மை தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது.


2025-ஆம் ஆண்டு நிதியாண்டில், இத்துறையின் ஆண்டு வருவாய் ரூ.4.72 லட்சம் கோடியை எட்டியது. 2015 முதல் 2025 நிதியாண்டு வரை ஏற்றுமதி ஆண்டுக்கு 7 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.


இந்தியாவின் மருத்துவ சாதனங்கள் துறையும் உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் 187 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன் ஏற்றுமதிகளில் காந்த அதிர்வு அலை வரைவு (Magnetic Resonance Imaging (MRI) மற்றும் கணினி வழி அகத்தோற்ற வரைவு  (Computed Tomography Scan (CT)) வரைவுகள், நேரியல் முடுக்கிகள் (inear accelerators), இதயம் சார்ந்த ஸ்டென்ட்‌கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள், நுட்பமான படமெடுக்கும் கருவிகள் மற்றும் உயிர் ஆதரவு தொழில்நுட்பங்களில் விரிவடைந்துள்ளதை குறிக்கிறது.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிற சுகாதாரத் தொடர்பான முன்முயற்சிகள்


உள்கட்டமைப்பு மேம்பாடு: தற்போதுள்ள துணை மருத்துவ வல்லுநர்களுக்கான (Allied Health Professionals (AHPs)) நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் புதிய துணை மருத்துவ வல்லுநர்களுக்கான நிறுவனங்கள் நிறுவப்படும் என்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண் மருத்துவம், கதிரியக்கவியல், மயக்க மருந்து, அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பயன்பாட்டு உளவியல் மற்றும் நடத்தை ஆரோக்கியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் துணை மருத்துவ வல்லுநர்களை உருவாக்கும்.


முதியோர் பராமரிப்பில் கவனம் (geriatric care): முதியோர் மற்றும் அது தொடர்பான பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஒரு வலுவான பராமரிப்புச் சூழல் அமைப்பு (CARE ecosystem) திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டில் 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பராமரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய திறன்களை ஒருங்கிணைத்து, பல்வேறு திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் இணைந்த பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளது.


மருத்துவ சுற்றுலா மையங்கள் (Medical tourism hubs): ஐந்து பிராந்திய மருத்துவ மையங்களை உருவாக்கவும், இந்த முயற்சியில் மாநிலங்களுக்கு ஆதரவளிக்கவும் தனியார் துறையுடன் இணைந்து ஒரு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சரின் கூற்றுப்படி, இந்த மையங்கள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களாகச் செயல்படும். இந்த மையங்களில் ஆயுஷ் மையங்கள் மற்றும் மருத்துவ மதிப்பு சுற்றுலா வசதி மையங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த முயற்சி, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்கள் என இருவருக்கும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆயுஷ் மீதான கவனம்: தற்போதைய காலகட்டத்தில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நிதியமைச்சர் மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களை அமைப்பதற்கும், உயர் தரச் சான்றிதழ் சூழல் அமைப்புக்காக ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கும் திட்டங்களை அறிவித்தார். பாரம்பரிய மருத்துவத்திற்கான சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில், ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை மேம்படுத்துவதற்கான திட்டமும் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மனநலப் பராமரிப்பு மற்றும் அதற்கான அணுகலுக்கு ஊக்கம்: வட இந்தியாவில் 2-வது தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நிறுவப்படும் என்றும், ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மையங்களை நிறுவுவதன் மூலம் அவற்றின் திறன்களை 50% விரிவுபடுத்தவும் இந்த வரவு செலவுத் அறிக்கை முன்மொழிகிறது.

 

Original Article : What’s in Biopharma SHAKTI scheme announced by FM Sitharaman?



Share:

நிதியமைச்சர் 'சிப் உற்பத்தித் திட்டம் 2.0' குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், இத்திட்டம் குறைமின்கடத்தி உற்பத்தி ஆலைகளைத் (fabs) தாண்டி விரிவடையுமா? -சௌம்யரேந்திர பாரிக்

 இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 2.0 (India Semiconductor Mission (ISM) 2.0), அரசு இனி சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளைத் தாண்டி மற்ற துறைகளிலும் கவனம் செலுத்த வழிவகை செய்கிறது. அதாவது, குறைமின்கடத்திகளின் உற்பத்திக்குத் தேவையான கருவிகள், மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள், வடிவமைப்பு கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மற்றும் விநியோகச் சங்கிலியின் உறுதித்தன்மை போன்ற விரிவான தளங்களில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவின் குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தித் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய குறைமின்கடத்தி  உற்பத்தி திட்டம் 2.0' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த இரண்டாம் கட்டத்தின் நோக்கம், குறைமின்கடத்தி உற்பத்திக்குத் தேவையான கருவிகள் மற்றும் மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்தியாவின் சொந்த அறிவுசார் சொத்துரிமையை உருவாக்குவது மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்துவது ஆகும். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதற்காக, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களை அமைப்பதிலும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


டிசம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த முதன்மையான திட்டத்தின் முதல் கட்டம், சுமார் 10 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது. இது முக்கியமாக குறைமின்கடத்தி உற்பத்தி, சிப் தொகுப்பு மற்றும் சோதனை ஆலைகளை அமைப்பதற்கு ஆதரவளித்தது. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, அரசு இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி 2.0 (ISM 2.0) திட்டத்தை இறுதி செய்துள்ளது. இதன் மொத்த நிதி ஒதுக்கீட்டுத் தொகையானது சுமார் 15 பில்லியன் டாலர் ஆகும். இம்முறை சிப் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வாயுக்களுக்கு நிதி உதவி அளிப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.


ஞாயிற்றுக்கிழமை அன்று நிதி அமைச்சர் இந்திய குறைமின்கடத்தி  உற்பத்தி திட்டத்திற்கான 2.0 (ISM 2.0) முழுமையான நிதிஒதுக்கீட்டு விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், 2026-27-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக மத்திய நிதி அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ₹1,000 கோடியை ஒதுக்கியுள்ளது.


2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகையில், 'இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 1.0 (ISM 1.0) இந்தியாவின் குறைமின்கடத்தி திறன்களை விரிவுபடுத்தியது. அதன் தொடர்ச்சியாக, இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் (ISM) 2.0 திட்டமானது, குறைக்கடத்திகள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும்; முழுமையான இந்திய அறிவுசார் சொத்துக்களை வடிவமைக்கும்; விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும், தொழில்நுட்பம் மற்றும் திறமையான தொழிலாளர்களை உருவாக்க, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார்.


இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் (ISM) 2.0 ஏன் தேவை?


இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்தின் (ISM) முதல் கட்டத்தில், சிப்களை தயாரிப்பதற்கான அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதில் டாடா குழுமத்தின் ஒரு சிப் தயாரிப்பு ஆலை மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology), டாடா (Tatas), சிஜி பவர் (CG Power), கேய்ன்ஸ் செமிகான் (Kaynes Semicon) போன்ற நிறுவனங்களின் சிப் தொகுப்பு மற்றும் சோதனை ஆலைகளும் அடங்கும். அதே வேளையில், ஒட்டுமொத்த குறைமின்கடத்தி சூழலமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்த அரசாங்கம், சிப் பேக்கேஜிங் (Packaging) பணிகளுக்காக தற்போது வழங்கப்படும் 50% மானியத்தை குறைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. 


இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி 2.0 திட்டமானது, வெறும் சிப் உற்பத்தி  என்பதோடு அரசாங்கத்தின் கவனத்தை நிறுத்திக்கொள்ளாமல், குறைமின்கடத்தி உபகரணங்கள், மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள், வடிவமைப்பு கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை என அனைத்து விரிவான பகுதிகளுக்கும் விரிவுபடுத்துகிறது. 


இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் (ISM 2.0) குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு, இத்துறையில் இந்தியாவின் வளர்ந்துவரும் லட்சியங்களை வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை வெறும் சிப் தயாரிப்பு என்ற நிலையிலிருந்து மாற்றி, உபகரணங்கள், மூலப்பொருட்கள், இந்திய அறிவுசார் சொத்துரிமை மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை உள்ளிட்ட ஒட்டுமொத்த மதிப்புத் தொடர் உத்தியை நோக்கி நகர்த்துகிறது. உலகளாவிய குறைமின்கடத்தி உற்பத்தி சந்தையில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க இது மிக அவசியமமாகப் பாரக்கப்படுகிறது. இனி சிப்களைத் தயாரிப்பது மட்டுமே முக்கியமல்ல என்றும்  வடிவமைப்பு, கருவிகள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்குத் தேவையான ஆரம்பகட்ட உள்ளீடுகள் ஆகியவற்றில் திறன்களை வளர்ப்பதே முதன்மை நோக்கமாகாக் கருதப்படுகிறது. இவைதான் நீண்டகாலப் போட்டித்தன்மையையும் ராஜதந்திர ரீதியிலான தன்னாட்சி சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் என்று இந்திய மின்னணு மற்றும் குறைமின்கடத்தி சங்கத்தின் (India Electronics and Semiconductor Association (IESA)) தலைவர் அசோக் சந்தக் தெரிவித்துள்ளார்.


இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 1.0: இதுவரை கடந்து வந்த பாதை


கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அமைச்சரவை 'இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்தின்கீழ்' (India Semiconductor Mission), ₹4,594 கோடி மதிப்பிலான நான்கு புதிய குறைமின்கடத்தி சிப் தொகுப்பு மற்றும் சோதனை மையங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் ஒடிசாவிலும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா ஒன்றும் அமையவுள்ளன. இதன் மூலம், சிப் தயாரிப்பு, சிப் தொகுப்பு மற்றும் சோதனை மையங்கள் என மொத்தம் 10 சிப் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு அரசு தற்போது நிதி உதவி வழங்கி வருகிறது.


இதற்கு முன்னதாக, இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்தின்கீழ் (India Semiconductor Mission) ரூ.76,000 கோடி மதிப்பீட்டில் ஆறு சிப் உற்பத்தி ஆலைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் $11 பில்லியன் மதிப்பிலான Tata - (Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC)) தொழிற்சாலை, மற்றும் மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology), டாடா (Tatas),  ஜப்பானின் ரெனசாஸ் (Renesas) நிறுவனத்துடன் இணைந்த சிஜி பவர் (CG Power), கேய்ன்ஸ் செமிகான் (Kaynes Semicon) மற்றும் HCL-Foxconn ஆகிய நிறுவனங்களின் சிப் தொகுப்பு மற்றும் சோதனை ஆலைகளும் அடங்கும். இவற்றில் சில ஆலைகளின் பணிகள் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.








Share:

நலத்திட்டங்களின் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்துதல். -தீபா சின்ஹா

 மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக நிதி செலவிடும் பொறுப்பு இப்போது மாநில அரசுகளிடம் வந்துவிட்டது. அதே வேளையில், ஒன்றிய அரசு அதற்கான சட்டங்களை இயற்றுவதிலும், வழிமுறைகளை நிர்ணயிப்பதிலும் முன்னிலை வகித்து அந்தத் திட்டங்களை வழிநடத்துகிறது.


2026–27 ஆம் ஆண்டிற்கான சமூகத் துறைக்கான நிதிநிலை அறிக்கை சற்று வழக்கத்திற்கு மாறானது. ஏனெனில், இதில் புதிய முக்கியத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, ஒவ்வொரு நிதிநிலை திட்ட அறிக்கையிலும் இத்தகைய புதிய திட்டங்களை அறிவிப்பது ஒரு பொதுவான நடைமுறையாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


குறைவான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம்


இருப்பினும், இந்தத் துறைக்கான உண்மையான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டே வருகிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கான திட்டங்களுக்கு நீண்டகாலமாகவே மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது. இதில் ஓய்வூதியத்திற்கான தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme (NSAP)), மகப்பேறு நலன்களுக்கான 'சமர்த்யா' (SAMARTHYA), குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்கான 'பால்னா' (PALNA), பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான பிரதமரின் ஊட்டச்சத்து சக்தி நிர்மாணத் திட்டம் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)) மற்றும் சிறு குழந்தைகளுக்கான 'சக்ஷம் அங்கன்வாடி' (Saksham Anganwadi) ஆகிய திட்டங்கள் அடங்கும். உண்மையில், இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெரும்பாலும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இந்த ஆண்டும், இந்த உயர்வு மிகக் குறைவாகவே உள்ளது; அதாவது ஓய்வூதியத்திற்கான தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு (NSAP) வெறும் 0.2% முதல், சக்ஷம் அங்கன்வாடி திட்டத்திற்கு 5.2% வரை மட்டுமே பெயரளவில் உயர்ந்துள்ளது. மேலும், இத்திட்டங்கள் அனைத்திற்கும் 2025–26-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (Revised Estimates (RE)), நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளை (Budget Estimates (BE)) விடக் குறைவாக உள்ளன. இது ஒதுக்கப்பட்ட நிதிகூட முழுமையாகச் செலவிடப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.


சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பெரிய துறைகளிலும் இதே போன்ற நிலைதான் நீடிக்கிறது. 2026–27-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகள், முந்தைய ஆண்டின் (2025–26 BE) நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, சுகாதாரத்திற்கு 6.4% மற்றும் கல்விக்கு 8.3% மட்டுமே நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய அதிகரிப்புகளும் கூட நம்மை தவறாக வழிநடத்தக்கூடியவை. ஏனெனில், 2025–26-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (RE), அந்த ஆண்டின் ஆரம்ப ஒதுக்கீட்டை (BE) விட முறையே 3.7% மற்றும் 5.2% குறைவாக உள்ளன.


பெரும்பாலான சமூகநலத் துறைகளில், 2025–26-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (RE), முதலில் ஒதுக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாக உள்ளன. இதில் நகர்ப்புற வளர்ச்சி (41%), ஊரக வளர்ச்சி (20%), வடகிழக்கு மாநில வளர்ச்சி (24%) மற்றும் சமூக நலன் (17%) ஆகிய துறைகளில் மிக அதிகப்படியான நிதிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதிநிலை திட்ட அறிக்கைகளில் முக்கியமாகக் கருதப்பட்ட சில திட்டங்களுக்கு நிதி செலவிடப்படுவதும் மந்தமாக உள்ளது. உதாரணமாக, 'ஜல் ஜீவன் மிஷன்' (Jal Jeevan Mission) திட்டத்திற்கான ஒதுக்கீடு 2025–26 நிதிநிலை மதிப்பீட்டில் (BE) ₹67,000 கோடியாக இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (RE) ₹17,000 கோடியாகக் குறைந்துள்ளது. அதேபோல், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (கிராமப்புறம்) ((Pradhan Mantri Awas Yojana (PMAY))₹54,832 கோடியிலிருந்து ₹32,500 கோடியாகவும், பிரதமர் வீட்டுவசதித் திட்டம்-நகர்ப்புறத் திட்டம் ₹19,794 கோடியிலிருந்து ₹7,500 கோடியாகவும் குறைந்துள்ளன. இவ்வளவு குறைவான நிதி பயன்பாடு இருந்தபோதிலும், 2026–27 பட்ஜெட்டில் மீண்டும் கடந்த ஆண்டின் நிதிநிலை மதிப்பீட்டிற்கு நிகரான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மொத்தச் செலவினத்தில் இந்தத் துறைகளுக்கான ஒதுக்கீடு பெரிய மாற்றமின்றி அப்படியே உள்ளது. ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டங்களில் (Centrally Sponsored Schemes (CSS)), ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாகவே செலவு செய்யப்பட்டுள்ளது. 2025–26 நிதிநிலை மதிப்பீட்டில் (BE) ₹5,41,850 கோடியாக இருந்த ஒதுக்கீடு, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (RE) ₹4,20,078 கோடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், 2026–27 நிதிநிலை மதிப்பீட்டில் (BE) மீண்டும் ₹5,48,798 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


தவறான இலக்கு


பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, மூலதனச் செலவினங்களுக்கு (Capital Expenditure) முக்கியத்துவம் அளிப்பது இந்த முறையும் தொடர்கிறது; இதற்காக ₹12 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய செலவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ அல்லது தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதிலோ எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பது குறித்த தெளிவான மதிப்பீடு இன்னும் இல்லை. இந்தியப் பொருளாதாரம் இப்போதும் பழைய பிரச்சனைகளையே எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாகப் படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பு இல்லாமை, பலவீனமான கட்டமைப்பு மாற்றம், குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் அதனால் ஏற்படும் குறைந்த வருமானம் போன்றவை மக்களின் வாங்கும் திறனை (Purchasing Power) குறைத்துள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தொடர்ச்சியான கொள்கைரீதியான முயற்சிகள் தேவை என்றும் வெறும் நிதிநிலைத் திட்ட அறிக்கையின் மூலமாக மட்டுமே இதைச் சாதித்துவிட முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். 


அதேநேரத்தில், நிதிநிலைத் திட்டத்தின் முன்னுரிமைகள் மாறவில்லை. அவை சந்தையின் எதிர்வினையை எதிர்பார்த்து, 'வழங்கல் முறை' (Supply-side measures) சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்காதபோதிலும், பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டில் கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.


பொறுப்பைத் தட்டிக்கழித்தல்


2026-27-ஆம் ஆண்டின் நிதிநிலைத் திட்ட அறிக்கையானது, சமூகநலத் திட்டங்களுக்கான செலவினங்களை மாநில அரசுகளே முன்னின்று கவனிக்கும் தற்போதைய போக்கைத் தொடர்கிறது. 2015-ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களின் (CSS) செலவைப் பகிர்ந்து கொள்ளும் முறை மாற்றப்பட்டது; இதன் விளைவாக, செலவின் பெரும்பகுதி மாநிலங்களின் பொறுப்பிற்கு மாறியுள்ளது. முன்பு சில முக்கியத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசே முழு நிதியையும் வழங்கியது. ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) நீக்கிவிட்டு VB-G RAM G திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இந்த நிலை கணிசமாக மாறியுள்ளது. உதாரணமாக, விக்சித் பாரத் - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் ₹96,000 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டிருந்தாலும், புதிய 60:40 பகிர்வு முறையின்கீழ் மாநிலங்கள் சுமார் ₹56,000 கோடியை வழங்கினால் மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர். எனவே, இந்தியாவின் சமூகநலச் செலவினங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டுமானால், மாநில நிதி ஒதுக்கீடுகளை விரிவாக ஆய்வு செய்வது அவசியமாகக் கருதப்படுகிறது. 


இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: மாநிலங்களுக்கு கூடுதலாகச் செலவு செய்யத் தேவையான நிதி வசதி இருக்கிறதா? மாநிலங்களின் செலவு மற்றும் பொறுப்புகள் அதிகரித்து வரும் வேளையில், ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் ஆதரவு குறைந்து வருகிறது. மொத்த வரி வருவாயில் மாநிலங்கள் சுமார் 34% மட்டுமே பெறுகின்றன. இது நிதி ஆணையம் பரிந்துரைத்த 41%-ஐ விட மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஒன்றிய அரசு 'செஸ்' (Cess) மற்றும் கூடுதல் வரிகளை அதிகமாகச் சார்ந்திருப்பதே ஆகும். மேலும், மாநிலங்களுக்கு நிதி ஆணையம் வழங்கும் மானியத் தொகையும் 2025-26 நிதிநிலை மதிப்பீட்டில் ₹1,32,767 கோடியாக இருந்தது, தற்போது 2026-27 நிதிநிலை மதிப்பீட்டில் ₹1,29,397 கோடியாகக் குறைந்துள்ளது.


ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சமூக நலத்திட்டங்களுக்கானச் செலவினங்கள் மாநில அரசுகளை நோக்கியே நகர்ந்துள்ளன. அதேசமயம் ஒன்றிய அரசு சட்டங்கள் மற்றும் விதிகளை உருவாக்குவதன் மூலம் கொள்கை முடிவுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது முக்கியமான சில கேள்விகளை எழுப்புகிறது: ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதிச்சுமையையும், தங்களின் சொந்த முன்னுரிமைகளையும் மாநில அரசுகள் எவ்வாறு சமன் செய்கின்றன? இது மக்கள் சமூகச் சேவைகளைப் பெறுவதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இந்த விவகாரங்கள் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 


தீபா சின்ஹா, இணைப் பேராசிரியர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.








Share:

புதிய நிதி விதிமுறை நாட்டின் வளர்ச்சி மற்றும் செலவினங்களில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்? -ஜிகோ தாஸ்குப்தா

 2026-27 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கை, வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைப்பதே ஆகும். குறிப்பாக, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஒரு நாட்டின் நிதித்துறைக் கொள்கை எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பது, அங்கிருக்கும் நிதி விதிகளின் தன்மையைப் பொறுத்தே அமையும். தற்போது இந்திய ஒன்றிய அரசு, 'ஆரோக்கியமான நிதி மேலாண்மை' (Sound finance rules) என்று அழைக்கப்படும் விதிகளைப் பின்பற்றுகிறது. கடன் வாங்குவதை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். 2003-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை' (Fiscal Responsibility and Budget Management (FRBM)) சட்டத்திற்குப் பிறகு, இந்தியா பெரும்பாலும் இந்த விதிகளையே கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், கடந்தஆண்டில் இதில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


முதலாவதாக, நிதிப் பற்றாக்குறைக்கும் (Fiscal Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (Gross Domestic Product (GDP)) இடையிலான விகிதத்தில் அதிக கவனம் செலுத்திய நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (FRBM) சட்டத்தைப் போலல்லாமல், இந்தப் புதிய நிதிக் கொள்கையானது கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (Debt-to-GDP) விகிதத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கிறது. இரண்டாவதாக, இந்தப் புதிய கொள்கை கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 50 சதவீதமாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை 2031-ஆம் ஆண்டிற்குள் அடைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (FRBM) சட்டத்தின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட 40 சதவீத வரம்பைவிடச் சற்று அதிகமான கடன் அளவை அனுமதிக்கிறது.


இந்த மாற்றங்கள் நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இரண்டு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தற்போதைய கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Debt-to-GDP ratio) இலக்கை விட அதிகமாக உள்ளதால், அதைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, முதன்மைப் பற்றாக்குறையை 2026 நிதியாண்டில் உள்ள 0.8%-லிருந்து 2027 நிதியாண்டில் 0.7%-ஆகக் குறைக்கவும், அதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையை (Fiscal deficit) 4.4%-லிருந்து 4.3%-ஆகக் குறைக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கை, 2022-ஆம் நிதியாண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் அதே அணுகுமுறையைப் போன்றது என்கின்றனர். 


இரண்டாவதாக, புதிய 'கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி' (Debt–GDP) இலக்கானது, முந்தைய நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (FRBM) சட்டத்தைவிட அரசாங்கத்திற்கு நிதி மேலாண்மையில் கூடுதல் சுதந்திரத்தை (Fiscal space) வழங்குகிறது. 2027- ஆம் நிதியாண்டில் 'முதன்மைப் பற்றாக்குறை' மற்றும் 'நிதிப் பற்றாக்குறை' ஆகிய இரண்டும் குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குறைப்பின் அளவு 2022-ஆம் நிதியாண்டிலிருந்து காணப்பட்ட வேகத்தைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


நிதி இலக்கை அடைதல்


அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமானால், அரசாங்கம் தனது கடன் அல்லாத வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைக் குறைக்க வேண்டும். 2026-27 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கடன் அல்லாத வருமானத்தின் பங்கு 9.5%-லிருந்து (2025-26) 9.3%-ஆகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. மறைமுக வரிகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) வசூல் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்; இவை இரண்டும் முந்தைய ஆண்டைவிட 0.3 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கடன் இல்லா வருவாய் (Non-debt receipts) குறைவாக இருந்தபோதிலும், 2026-27 நிதியாண்டில் (FY27) ஒட்டுமொத்த அரசுச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அரசுச் செலவினத்தின் பங்கு, சென்ற நிதியாண்டில் இருந்த 13.9%-லிருந்து 13.6%-ஆகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உட்கட்டமைப்பு போன்ற மூலதனச் செலவுகள் மாற்றமின்றி 3.1%-ஆகவே தொடர்கிறது. ஆனால், அன்றாட நிர்வாகச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிக லாபமும் வளர்ச்சியும் தரக்கூடிய மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் கடந்த கால நடவடிக்கைகளையே இதுவும் பிரதிபலிக்கிறது.


மொத்தச் செலவினங்களைக் குறைத்ததன் சுமை, முக்கியமாக மேம்பாட்டுச் செலவினங்களின் (Development Expenditure) மீது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சமூக நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சேவைகளுக்கான செலவுகளும் அடங்கும். 2025-26 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6.1% ஆக இருந்த மேம்பாட்டுச் செலவினம், 2026-27 நிதியாண்டில் 5.7%-ஆகக் குறைந்துள்ளதாக நிதிநிலைத் திட்ட மதிப்பீடு (Budget Estimates (BE)) காட்டுகிறது. இந்தக் குறைப்புக்கு முக்கியக் காரணம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடு குறைந்ததே ஆகும். இத்துறைகளுக்கான பங்கு 2025-26-ல் 1.5%-லிருந்து 2026-27–ல் 1.2%-ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான வருவாய் செலவினங்களில் செய்யப்பட்ட பெரும் குறைப்பே, கிராமப்புற வளர்ச்சி நிதி குறைய முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


சுருக்கமாகச் சொன்னால், சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் மறைமுக வரிக் குறைப்பால் ஏற்பட்ட சாதகமான தேவைகள் (Demand), விவசாயம் மற்றும் கிராமப்புறங்களுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் முழுமையாக ஈடுசெய்யப்பட்டுவிட்டன.


சமீபத்திய நிதிசார் விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துவது, குறைந்தது இரண்டு முக்கியமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 


இரண்டு சிக்கல்கள்


முதலாவதாக, பலவீனமான உலகப் பொருளாதாரச் சூழலில் முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து கவலை எழுந்துள்ளது. உலகளாவிய தேவை மற்றும் ஏற்றுமதி குறைவாக உள்ளதால், நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. தற்போதைய நிதிக்கொள்கை, பெருநிறுவன முதலீடுகளைத் ஈர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்கின்றனர். 


இரண்டாவதாக, இந்தியாவில் வளர்ச்சியின் பலன்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதில் சிக்கல் உள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான அரசின் நடவடிக்கைகள், பெரும்பாலும் விவசாயம் மற்றும் வளர்ச்சி சார்ந்த செலவினங்களையே பாதித்துள்ளன. ஆனால், பெருநிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வரி வருவாய், கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய அளவிலேயே தற்போதும் நீடிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்கம் தனது கடன் சார்ந்த இலக்குகளை அடைவதில் காட்டும் கவனத்தை, இந்த இரண்டு முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.









Share:

இந்தியாவின் எரிசக்தி தற்சார்பைப் பாதுகாப்பதற்கு தோரியம் சார்ந்த அணுசக்தி உற்பத்தி ஏன் முக்கியமானது?. -அனில் சசி

இப்போது சர்வதேச சந்தையிலிருந்து யுரேனியத்தை நாம் அணுக முடியும் என்பதால், அனல்மின் உலைகளின் திறன் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இந்த விரிவாக்கம் இந்தியாவில் தோரியம் சார்ந்த அணுசக்தி உற்பத்திக்கு விரைவாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பாகும்.


இந்தியாவின் அணுசக்தி உத்தி நீண்டகாலமாக மூன்று கட்டத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டம் ஒரு அடிப்படை வரம்பை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் யுரேனிய வளங்கள் குறைவாக உள்ளன. அதே நேரத்தில், தோரியத்தின் பெரிய இருப்புக்கள் உள்ளன. முதல் கட்டத்தில், அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (pressurised heavy water reactors (PHWR)) யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. அவை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மேலும், அவை புளூட்டோனியத்தை ஒரு துணைப் பொருளாகவும் உற்பத்தி செய்கின்றன. இரண்டாம் கட்டத்தில், இந்த புளூட்டோனியம் வேக ஈனுலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலைகள் கிடைக்கக்கூடிய எரிபொருளைப் பன்மடங்கு பெருக்குகின்றன. மேலும், அவை இறுதி கட்டத்திற்கான அடித்தளத்தையும் தயார் செய்கின்றன. இறுதிக் கட்டம் தோரியம் அடிப்படையிலான அணுசக்தியில் கவனம் செலுத்துகிறது. இந்தக் கட்டத்தில், தோரியம் யுரேனியம்-233 ஆக மாற்றப்படுகிறது. இது நாட்டிற்கு நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்கிறது.


முன்னாள் அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோத்கர், தற்போது ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் வேந்தராகவும், ராஜீவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். அவர் அனில் சசியிடம் குறிப்பிட்டதாவது, இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தில் இயங்கும் ஒரு பெரிய அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) திறனுடன், இந்தியா உயர்-மதிப்பீடு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியம் (High-Assay Low-Enriched Uranium (HALEU)) போன்ற மேம்பட்ட எரிபொருட்களுடன் தோரியத்தை கதிர்வீச்சு செய்வதன் மூலம் யுரேனியம்-233-ஐ உற்பத்தி செய்யத் தொடங்கலாம். இந்த செயல்முறை இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும்.


நமது அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) திறனின் விரிவாக்கம், இந்தியாவில் தோரியம் சார்ந்த அணுமின் உற்பத்திக்கு விரைவாக மாறுவதற்கான வாய்ப்பை எந்த அளவிற்கு வழங்குகிறது?


இந்தியாவில் தோரியம் அடிப்படையிலான அணுமின் உற்பத்திக்கு மாறுவது நமது எரிசக்தி சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானது. இதற்கு வெப்ப அல்லது வேகமான அணு உலைகளில் தோரியத்தை கதிர்வீச்சு செய்வதன் மூலம் போதுமான அளவு பிளவுபடக்கூடிய யுரேனியம்-233 (U233) இருப்புக்களை உருவாக்குவது அவசியம். மூன்றுகட்ட அணுசக்தித் திட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில் எங்கள் மதிப்பிடப்பட்ட உள்நாட்டு யுரேனிய வளங்கள் மிகக் குறைவாக இருந்ததால், வெப்ப உலைகளை அடிப்படையாகக் கொண்ட தேவையான கதிர்வீச்சுத் திறனை உருவாக்குவது சாத்தியமாகவில்லை. இதன் விளைவாக, வேக ஈயுலைகளைக் கட்டுவது அவசியமானது. வேக ஈயுலைகளால் பிளவுபடக்கூடிய எரிபொருளை உற்பத்தி செய்து பெருக்க முடியும். இந்தத் திறன், அவற்றை இந்தத் திட்டத்திற்கு மிகவும் இன்றியமையாததாக மாற்றியது. இந்தக் காரணமே இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அந்தத் திட்டம் இன்றும் செல்லுபடியாகிறது. மேலும், அது தற்போதும் பொருத்தமானதாகவே இருக்கிறது.


nuclear power

தற்போது இந்தியா சர்வதேச சந்தையிலிருந்து யுரேனியத்தை நாம் அணுக முடியும் என்பதால், வெப்ப உலைத் திறன் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அணுசக்தி திட்டம் 100GWe அணுசக்தி திறனை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) மொத்தமாக உள்ளன. இந்த அளவு அதிகரிப்பு அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் (PHWR) பெரிய அளவில் பிளவுபடக்கூடிய U-233-ஐ உற்பத்தி செய்யத் தொடங்குவதற்கும், இந்தியாவில் தோரியம் சார்ந்த அணுசக்தி உற்பத்திக்கு விரைவான மாற்றத்தை செயல்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகும்.


அழுத்தப்பட்ட கனநீர் உலைக்கு (PHWR) தோரியம் உயர்-மதிப்பீடு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியம் (HALEU) அடிப்படையிலான மாற்று எரிபொருளைக் கொண்டிருப்பது உண்மையில் சாத்தியமாகும். இது பொருளாதார, பாதுகாப்பு மற்றும் நன்மைகளுக்கும் வழிவகுக்கும். அதேநேரத்தில் தோரியத்தை U-233-ஆக திறம்பட மாற்றும். அழுத்தப்பட்ட கனநீர் உலைகளால் (PHWR) தனித்துவமாக வழங்கக்கூடிய இருதரப்புக்கும் நன்மை பயக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது.


அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) திறனை 50-75 Gw-ஆக (1Gw அல்லது giga watt என்பது 1000 மெகா வாட்களுக்கு சமம்) அதிகரிப்பதில் கூடுதல் நிதி ஆதாரங்கள் மற்றும் புதிய நிறுவனங்களின் தேவை எவ்வளவு முக்கியமானது?


2047-ம் ஆண்டு இலக்கான தேதிக்குள் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) திறனை 50-75 GW-ஆக உயர்த்துவதற்கு சராசரியாக ஆண்டுக்கு 3 GWe திறன் கூடுதலாக தேவைப்படும். இதன் பொருள், 700 MWe மற்றும் 220 MWe அலகுகளின் கலவையைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 8 அணு உலைகளைச் சேர்க்க வேண்டும். இதற்கு குறிப்பிடத்தக்க கூடுதல் நிதி ஆதாரங்கள் தேவைப்படும் என்பது தெளிவாகிறது. மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனமான இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (NPCIL) தொழில்நுட்ப வழங்குநராக, திறன் மேம்பாட்டாளராக, தனது சொந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டே, ஒரு வழிகாட்டியாகவும் மற்றும் ஆலோசகராகவும் செயல்படுத்தும்போது பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களைக் கொண்டுவர வேண்டும். இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (NPCIL) கடந்த காலங்களில் தொழில்துறையில் திறன் மேம்பாட்டிற்காக இதைச் செய்துள்ளது.


வேக ஈனுலைகளில் உருவாக்கம் செய்வதற்கான யுரேனியம் குறைவாகவே கிடைப்பதால், தோரியத்தை பிளவுபடக்கூடிய யுரேனியமாக மாற்றுவதற்கு, தன்னிறைவு பெற்ற தோரியம் சார்ந்த அணுசக்தி உற்பத்தி திறனை அடைவதற்கான அவசியம் எவ்வளவு முக்கியமானது?


இந்தியாவின் மூன்று-கட்டத் திட்டத்தின்கீழ் முதலில் திட்டமிடப்பட்டபடி, தேவையான வேக உலைத் திறனை உருவாக்குவதற்கு காத்திருக்காமல் தோரியம் கட்டநிலையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு சாத்தியமானது? அதாவது முன்பு குறிப்பிட்டது போல, இது இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்திற்கு தோரியம் முக்கியமானதாக உள்ளது. வளர்ந்த இந்தியா (Vikasit Bharat) தேவைகளுக்கு ஏற்ப, தோரியம் உருகிய உப்பு உலைகளின் மூலம் (U-233-ன் பிளவிலிருந்து ஆற்றல் வருகிறது. அதேநேரத்தில், சமமான அல்லது சற்று அதிக அளவு U-233 உற்பத்தி செய்யப்படுகிறது) தன்னிறைவு மின் உற்பத்தித் திறனை அமைக்க முடியும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்கு தோரியத்தை U-233-ஆக மாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையிலான பெரிய கதிர்வீச்சு தளங்கள் தேவைப்படுகின்றன. அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் (PHWRs) விரிவடைந்துவரும் திறன் ஒரு நடைமுறைத் தீர்வை வழங்குகிறது. இந்த உலைகள் எரிசக்திச் சுதந்திரத்தை நோக்கிய பயணத்திற்கு ஒரு உடனடி வாய்ப்பை அளிக்கின்றன. வேக ஈனுலைகளின் திறன் முழுமையாக மேம்படுத்தப்படும் வரை காத்திருக்காமல் இதைச் செய்ய முடியும்.


இந்தச் சூழலில், இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தால் எரிபொருளாகக் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் (PHWR) முக்கியப்பங்கு, தோரியத்தின் கதிர்வீச்சு மூலம் (HALEU உடன்) தோரியத்தை பிளவுபடக்கூடிய யுரேனியமாக மாற்றுவதற்கு உதவுவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?


இரண்டாம் கட்டத்தில் உருவாக்கப்படவுள்ள வேக ஈனுலைகளில் (fast breeder reactors (FBR)), தோரியத்தின் கதிர்வீச்சு மூலம் தோரியத்தை பிளவுபடக்கூடிய யுரேனியமாக மாற்றுவது திட்டமிடப்பட்டது. இரண்டாம்கட்டத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தோரியத்தை U233-ஆக மாற்றுவதற்கான கதிர்வீச்சுத் தளங்களை உருவாக்குவதற்கான அதன் முழு அளவிலான பயன்பாடு கணிசமாக தாமதமாகிறது. வேக உலைத் துறையில் சமநிலை மேம்பாட்டுப் பணிகளில் ஆக்சைடு-எரிபொருள் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலையை (Prototype Fast Breeder Reactor (PFBR)) நிறைவு செய்தல், தொடர்ச்சியான வேக ஈனுலைகளை (FBR) உருவாக்குதல், வேக உலை திறனின் விரைவான வளர்ச்சிக்கு குறுகிய இரட்டிப்பு நேர உலோக-எரிபொருள் வேக உலைகளை உருவாக்குதல் மற்றும் அடுத்தடுத்த பயன்பாடு ஆகியவை அடங்கும். கூடுதலாக, இது தொடர்புடைய நீர் மற்றும் பைரோ-அணுக்கரு மறுசுழற்சி தொழில்நுட்பங்களை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும்.


மீதமுள்ள வளர்ச்சிக்குத் தேவையான கால அளவைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிசக்தித் தேவைகளுக்கு ஏற்ப அளவில் யுரேனியம் சார்ந்த மின் உற்பத்தியிலிருந்து கையகப்படுத்தும் திறன் கொண்ட தோரியம் சார்ந்த மின் உற்பத்தித் திறனை ஆதரிக்கத் தேவையான அளவுகளில் U-233 ஐ உற்பத்தி செய்யத் தேவையான வேகமான உலைத் திறன், பொருத்தமான நேரத்தில் கிடைப்பது சாத்தியமில்லை. மறுபுறம், இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை அடிப்படையாகக் கொண்ட பெரிய அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் (PHWR) திறன் உருவாகி வருகிறது. அதற்குப் பதிலாக உயர்-மதிப்பீடு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HALEU) இறக்குமதி செய்து, தோரியத்துடன் அழுத்தப்பட்ட கனநீர் உலைகளில் (PHWR) அதை கதிர்வீச்சு செய்வதன் மூலம் இழந்த நிலத்தை மீண்டும் பெறவும், தோரியம்-யுரேனியம்233 நிலையை மிக முன்னதாகவே தொடங்கவும் வழிவகுக்கும். இந்த அணுகுமுறை ஒரு இருதரப்புக்கும் நன்மை பயக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இது தவறவிடக்கூடாத ஒரு வாய்ப்பு.


வேகமான அணு உலை மேம்பாட்டுத் திட்டமும், அதேநேரத்தில் தொடர வேண்டுமா?


ஆம். எந்த சந்தேகமே இல்லை. இந்தியா இன்னும் ஒரு வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அதன் எரிசக்தித் தேவைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். குறைந்தபட்சம் இணைவு ஆற்றல் களத்திற்கு வரும் வரை, நமது வளர்ந்துவரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணு எரிபொருள் பெருக்கம் அவசியமாக இருக்கும்.


இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு (சாந்தி) சட்டம், 2025, இறக்குமதி செய்யப்பட்ட LWR அடிப்படையிலான அணுசக்தித் திட்டங்களுக்கு அதிக வாய்ப்புகளைத் திறந்துவிடுகிறது. அவற்றின் சாத்தியக்கூறுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?


இறக்குமதி செய்யப்பட்ட இலகு நீர் உலைகளை (Light-Water Reactor (LWR)) நான் எப்போதும் ஒரு கூடுதல் அம்சமாகவே கருதி வருகிறேன். நமது பெரிய மற்றும் வளர்ந்துவரும் எரிசக்தித் தேவைகள் மற்றும் நமது செயல்படுத்தல் திறனில் உள்ள பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூடுதல் அம்சங்கள் பொருளாதாரரீதியாக போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் நமது அணு எரிபொருள் சுழற்சி கொள்கைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும் இருந்தால் உதவியாக இருக்கும்.


மேலும், நமது நாட்டிற்குத் தேவையான எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான (உலோக எரிபொருள் உலைகள், உருகிய உப்பு உலைகள், உயர் வெப்பநிலை உலைகள், தோரியம் எரிபொருள் சுழற்சிகள் போன்றவை) நமது மேம்பாட்டு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் தற்போதைய முக்கியத் தேவைகளை நிவர்த்தி செய்யத் தயாராக உள்ள நிரூபிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


மதிப்பீடுகளின்படி, 1,000 மெகாவாட் திறன் கொண்ட இலகு நீர் அணு உலைக்கு (LWR) 80% மின் உற்பத்தித் திறன் காரணியில் (PLF) ஆண்டுக்கு சுமார் 25 டன் செறிவூட்டப்பட்ட எரிபொருள் தேவைப்படும். ஒரு டன்னுக்கு எரிபொருளின் விலை சுமார் $1.76 மில்லியனைக் கருத்தில் கொண்டு, இலகு நீர் அணு உலை (LWR) ஆலைக்கான எரிபொருள் செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடியாக இருக்கும். இதன் பொருள், இந்த விகிதத்தில், 1 டாலர் என்பது ரூ. 80 ஆகும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்குப் பதிலாக இயற்கை யுரேனியம் பயன்படுத்தப்படுவதால், அழுத்தப்பட்ட கனநீர் உலைகளுக்கான (PHWR) எரிபொருள் மதிப்பீடுகள் குறைவாக இருக்கலாம். இந்த எண்களைக் கருத்தில் கொண்டு, அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் (PHWR) சிறிய அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்துடன் தோரியத்தை இணைப்பதில் உள்ள சமரசத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?. மேலும், செலவுக் கண்ணோட்டத்தில் இந்த முன்மொழிவு எவ்வளவு சாத்தியமானது?


கொடுக்கப்பட்ட அணுசக்தி உற்பத்தித் திறனை ஆதரிக்க தேவையான வெட்டியெடுக்கப்பட்ட யுரேனியத்தைப் பொறுத்தவரை, அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) இலகு நீர் அணு உலைகளுடன் (LWR) ஒப்பிடும்போது மிகவும் திறமையானவை. இருப்பினும், இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்தும் PHWR உலைகளில் எரிபொருள் தயாரிப்பு மற்றும் எரிபொருள் சுழற்சியின் பிந்தைய கட்டச் செலவுகள் அதிகமாக உள்ளன. இதற்குக் காரணம், எரிபொருள் எரிந்து தீரும் அளவு குறைவாக இருப்பதுதான், இது அதிக எரிபொருள் பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது. அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) எரிபொருளில் செறிவூட்டலைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த செலவுகள் குறையும். எரிப்பு குறைந்தபட்ச வரம்பைவிட அதிகமாக இருந்தால், தோரியம் மேலும் சிக்கனத்திற்கு வழிவகுக்கிறது. அழுத்தப்பட்ட கனநீர் உலையில் (PHWR), உயர்-மதிப்பீடு குறைந்த-செறிவூட்டப்பட்ட யுரேனியம் (HALEU) - தோரியம் எரிபொருளைப் பயன்படுத்தும்போது குறைவாக உள்ளது. இந்தச் செலவு, இயற்கை யுரேனியத்தில் இயங்கும் அழுத்தப்பட்ட கனநீர் உலைகளின் (PHWR) செலவை விடக் குறைவாகும்.


 Original Article : Why Thorium-based nuclear power generation is key to securing India’s energy independence?. -Anil Sasi

Share:

உச்சநீதிமன்றம் மாதவிடாய் சுகாதாரத்தை ஏன் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தது மற்றும் பள்ளிகள் எவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்? -வினீத் பல்லா

நீதிமன்றத்தின் இந்த வாதம், ‘அடிப்படை சமத்துவம்’ (substantive equality) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பின் 14-வது பிரிவு சட்டத்தின்முன் சமம் (equality before the law) என்ற கருத்திற்கு உத்தரவாதம் அளித்தாலும், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவமின்மையை நிலைநிறுத்தக்கூடும் (perpetuate inequality) என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஒரு புள்ளி (Period) ஒரு வாக்கியத்தை முடிக்க வேண்டும். ஒரு பெண்ணின் கல்வியை அல்ல. ["Period" என்ற சொல்லின் இரட்டைப் பொருள் – வாக்கிய முடிவு மற்றும் மாதவிடாய் – தமிழிலும் "புள்ளி" / "period" என்று வைத்து புரிதலுக்காக இவ்விடத்தில் பயன்படுத்தப்படுகிறது]


அமெரிக்கக் கல்வியாளர் மெலிசா பெர்டனின் இந்தக் கூற்றை முன்னுரையாகக் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வெள்ளிக்கிழமை அன்று, மாதவிடாய் சுகாதாரத்திற்கான அணுகலை ஒரு சுகாதாரப் (menstrual hygiene) பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒரு அரசியலமைப்பு உரிமையாகவும் அங்கீகரித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.


நீதிமன்றம் தொடர்ச்சியான ஆணையை பிறப்பித்தது. இது நீதிபதிகள் அந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் ஒரு நீதிமன்ற உத்தரவாகும். ஒவ்வொரு பள்ளியிலும் இலவச சானிட்டரி நாப்கின்களும், பயன்பாட்டில் இருக்கும் கழிப்பறைகளும் இருப்பதை ஒன்றிய  மற்றும்  அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.


மாதவிடாய் சுகாதாரம் (Menstrual hygiene)  ஒரு அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும்.


நீதிமன்றத்தின் இந்த வாதம், ‘அடிப்படை சமத்துவம்’ (substantive equality) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் சமம் (equality before the law) என்ற கருத்திற்கு உத்தரவாதம் அளித்தாலும், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவமின்மையை நிலைநிறுத்தக்கூடும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


அனைவரையும் சமமாக நடத்துவது என்பது, சில சமயங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவதையும் குறிக்கிறது என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது. உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் அல்லது கழிப்பறை வசதி இல்லாததால் அந்த பெண்ணால் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால், அந்த பெண் சக மாணவர்களுக்குச் சமமான நிலையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.


மாதவிடாய் சுகாதார நடவடிக்கைகள் இல்லாதது, ஒரு உயிரியல் யதார்த்தத்தை ஒரு கட்டமைப்புரீதியான பாகுபாடாக மாற்றுவதன் மூலம், பாலின அடிப்படையிலான பின்தங்கிய நிலையை வலுப்படுத்துகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


அந்தத் தீர்ப்பு, மாதவிடாய் ஆரோக்கியத்தை அரசியலமைப்பின் 21-வது பிரிவால், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்குள் (right to life and personal liberty) உள்ளடக்கியது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையும் வாழ்வுரிமையில் அடங்கும் என்று நீதிமன்றம் கூறியது.


மாதவிடாய் ஏற்படும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை (Menstrual Hygiene Management (MHM)) வசதிகள் கிடைக்காதது, அவர்களை களங்கம், பிற்போக்குத்தனமான எண்ணங்கள் மற்றும் அவமானத்திற்கு உள்ளாக்குகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாததால் ஒரு மாணவியை படிப்பை பாதியில் நிறுத்தவோ அல்லது பள்ளிக்கு வராமல் இருக்கவோ கட்டாயப்படுத்துவது, அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் விரிவாக விளக்கம் அளித்தது.


கல்வி உரிமை 


பின்னர் நீதிமன்றம், மாதவிடாய் ஆரோக்கியத்தின் பார்வையில், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009 (RTE Act)) பற்றிய விளக்கத்தை வழங்குகிறது.


கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 3-ல் உள்ள "இலவசக் கல்வி" (free education) என்ற சொல் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதற்கு மட்டும் இல்லை - இது ஒரு குழந்தை தனது கல்வியை முடிப்பதைத் தடுக்கும் எந்தவொரு நிதித் தடையையும் நீக்குவதைக் குறிக்கிறது என்று நீதிமன்றம்  கூறியது.


சுகாதாரப் பொருட்களுக்கான இந்தச் செலவு பள்ளிக்கு வராமல் இருப்பதற்கோ அல்லது படிப்பை நிறுத்துவதற்கோ வழிவகுக்கும்போது, ​​அரசின் செயலற்றத் தன்மை ஒரு உறுதி செய்யப்பட்ட உரிமையை நிபந்தனைக்குட்பட்ட ஒன்றாக மாற்றிவிடுகிறது என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. எனவே, கல்வி உண்மையாகவே 'இலவசமாக' இருப்பதை உறுதி செய்வதற்காக, இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவது ஒரு சட்டப்பூர்வ கடமையாகும் (statutory obligation) என்று நீதிமன்றம் கூறியது.


பின்னர், கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 19, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் உட்பட குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் தரங்களைப் பராமரிக்க பள்ளிகளை கட்டாயப்படுத்துகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. இது உள்கட்டமைப்புத் தேவை சார்ந்தது மட்டுமல்ல, ஒரு முக்கியமான தேவை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.


"'தடையற்ற அணுகல்' (barrier-free access) தேவையை ஒரு உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சானிட்டரி நாப்கின்கள் இல்லாததும், அதை அப்புறப்படுத்துவதற்கான சுகாதாரமான வழிமுறை  இல்லாததால், பெண்கள் பள்ளிக்கு வராமல் போவது அல்லது பள்ளியைவிட்டு வெளியேறும் சூழல்  ஏற்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது. அத்தகைய வசதிகள் இல்லாததை "முற்றிலும் அரசியலமைப்பு தோல்வி"  (stark constitutional failure) என்று குறிப்பிட்டது.


அரசிற்கான வழிமுறைகள்


மூன்று மாதங்களுக்குள் ஒன்றிய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட, காலக்கெடு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


முதலாவதாக, அரசு மற்றும் தனியார் நடத்தும் ஒவ்வொரு பள்ளியும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இவை "ஆக்சோ-மக்கும் சானிட்டரி நாப்கின்களாக" (oxo-biodegradable sanitary napkins) இருக்க வேண்டும் என்றும், கழிப்பறை வளாகத்திற்குள் விற்பனை இயந்திரங்கள் மூலமாகவோ அல்லது பள்ளியில் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலமாகவோ விநியோகிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


இரண்டாவதாக, பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து சுத்தம் செய்யப்படும் மூடப்பட்ட கழிவுநீர்த் தொட்டிகள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


மூன்றாவதாக, நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்பாட்டுக்குரிய, பாலினத்தால் பிரிக்கப்பட்ட கழிப்பறைகள், பயன்படுத்தக்கூடிய நீர் இணைப்புடன் இருக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும், சோப்பு மற்றும் தண்ணீர் எப்போதும் கிடைக்கும் வகையில், கை கழுவும் வசதிகளைக் கொண்ட கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நான்காவதாக, மாதவிடாய் தொடர்பான அவசரத் தேவைகளைக் கையாள்வதற்காக, மாற்று உள்ளாடைகள், மாற்று சீருடைகள் மற்றும் அப்புறப்படுத்தக்கூடிய பைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன் கூடிய 'மாதவிடாய் சுகாதார மேலாண்மை மூலைகளை' பள்ளிகளில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதவிடாய் கசிவு அல்லது கறைபடுவதால் ஒரு பெண் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்பது உறுதி செய்யப்படும்.


மாதவிடாயைச் சுற்றியுள்ள களங்கத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தையும் அந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. ஏனெனில், சூழல் ஆதரவற்றதாகவோ அல்லது விரோதமானதாகவோ இருந்தால், நல்ல வசதிகள் இருந்தாலும்கூட எந்தப் பயனும் இருக்காது என்று நீதிமன்றம் கூறுகிறது.


மாதவிடாய் பற்றிய உயிரியல் யதார்த்தம் குறித்து சிறுவர்களுக்குக் கல்வி கற்பிப்பது மிகவும் முக்கியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தப் பிரச்சினையில் ஒரு ஆண் மாணவர், மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஒரு பெண் மாணவியைத் துன்புறுத்தக்கூடும். இது அந்தபெண் மாணவிப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கக்கூடும்."


பருவமடைதல் மற்றும் மாதவிடாய் குறித்த பாலின உணர்வுள்ள பாடத்திட்டங்களைச் சேர்ப்பதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (National Council of Educational Research and Training) கவுன்சில் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி (State Council of Educational Research) மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘ஆண் அல்லது பெண் எனப் பாகுபாடின்றி’ (whether male or female) அனைத்து ஆசிரியர்களும் மாதவிடாய் ஏற்படும் மாணவிகளுக்கு ஆதரவளிப்பதற்கான பயிற்சியைப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது.


மாவட்ட கல்வி அதிகாரிகள் (District Education Officers (DEO)) பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், முன்னுரிமையாக வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வசதிகளின் உண்மை நிலையை மதிப்பிடுவதற்காக, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மாணவர்களிடமிருந்தே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு வடிவில் பெயர் குறிப்பிடப்படாதக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


“தங்கள் உடல் ஒரு சுமையாகக் கருதப்பட்டதால், பள்ளிக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் நாங்கள் இதைத் தெரிவிக்க விரும்புகிறோம்: இதில் தவறு உங்களுடையது அல்ல” என்று இறுதி தீர்ப்பை எழுதிய போது  நீதிமன்றம் கூறியது.


 Original Article : Why Supreme Court made menstrual hygiene a fundamental right and what schools must provide?. -Vineet Bhalla

Share: