17-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகள் என்னென்ன? -குஷ்பு குமாரி மற்றும் ரோஷ்னி யாதவ்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 25% கூடுதல் அபராத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்த அதே நாளில், இரு நாடுகளும் பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், இந்தியாவின் நோக்கம் உலக நலனே என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த செவ்வாய் கிழமையன்று  தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:


— இந்த ஆண்டு இந்தியா பிரிக்ஸ் (BRICS) அமைப்பிற்குத் தலைமை தாங்குவது குறித்து புதுடெல்லியில் பேசிய ஜெய்சங்கர், தற்போதைய உலகச் சூழல் நிச்சயமற்ற தன்மையுடனும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று கூறினார்.


— 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இலச்சினையை (Logo) அறிமுகப்படுத்திப் பேசிய அவர், 'தற்போதைய உலகளாவிய சூழலில் புவிசார் அரசியல் நிச்சயமற்றத் தன்மை, சிக்கலான பொருளாதார நிலைமைகள், காலநிலை அபாயங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் உலக நாடுகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான வளர்ச்சி இடைவெளிகள் எனப் பல ஒன்றோடொன்று தொடர்புடைய சவால்கள் உள்ளன' என்று கூறினார்.


— ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகளையும் கருத்தில் கொண்டு, உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கான ஒரு முக்கியமான தளமாக பிரிக்ஸ் (BRICS) தொடர்ந்து இருந்து வருகிறது, என்றும்  கூறினார்.


— 2026-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின்  தலைமைப் பொறுப்பிற்கான நான்கு முக்கிய முன்னுரிமைகளை வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். அவை மீள்திறன் (resilience), கண்டுபிடிப்பு (innovation), ஒத்துழைப்பு (cooperation) மற்றும் நிலைத்தன்மை (sustainability) ஆகியனவாகும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இவை வழிகாட்டியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


— அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, மற்றும் கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகிய பிரிக்ஸ் அமைப்பின் மூன்று முக்கியப் பிரிவுகளில், இந்த முன்னுரிமைகள் ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


— இந்தியா தனது ஓராண்டுகால பிரிக்ஸ் (BRICS) தலைமைப் பொறுப்பின் போது, 2023-ஆம் ஆண்டு G20 தலைமையின் போது பின்பற்றிய அதே முறையை கையாளும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வரவேற்கப்படுவார்கள் என்றும் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு தவிர, அமைச்சரவை அளவிலான கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பணிக்குழு கூட்டங்கள் என சுமார் 100 நிகழ்வுகள் இந்தியாவின் 60 நகரங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


— புதிய பிரிக்ஸ் (BRICS) நாடுகள் அமைப்பின் இலச்சினையின் (Logo) விளக்கத்தையும் சுட்டிக்காடியுள்ளார். இது பிரிக்ஸ் நாடுகளின் நிறங்களைக் கொண்ட ஒரு தாமரை மலர் என்றும் இது பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைப்பதன் மூலம் இந்தியாவின் தலைமையைக் குறிக்கிறது என்றும் விளக்கியுள்ளார்.


— பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் உள்ளன. மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் அதன் கூட்டமைப்பு நாடுகளாக உள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


— பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து முக்கியமான மேற்கத்திய அல்லாத நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தோனேசியா இதில் இணைந்ததை அடுத்து, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


— எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஒட்டுமொத்தமாக, பிரிக்ஸ் (BRICS) அமைப்பு இப்போது உலகின் மக்கள் தொகையில் பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கையும் பிரதிபலிக்கிறது. சவுதி அரேபியா நாட்டிற்கும் இந்த அமைப்பில் இணைவதற்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


— இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகளாவிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதில் சேர்க்கப்படாத நாடுகளின் பிரதிநிதியாகத் தங்களை பிரிக்ஸ் (BRICS) அமைப்பு கருதுகிறது. இது வளரும் நாடுகளின் குரலாக தன்னை முன்னிறுத்துவதோடு, நியாயமான வளர்ச்சி, சமமான வர்த்தக விதிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்களை ஆதரிக்கிறது. மேலும், நடைமுறைக்கு சாத்தியமான மாற்று வழிகளையும் பிரிக்ஸ் அமைப்பு ஆதரிக்கிறது.


— புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank (NDB)), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) அல்லது உலக வங்கி விதிப்பது போன்ற அரசியல் நிபந்தனைகள் எதுவுமின்றி கடன்களை வழங்குகிறது. மேலும், பிரிக்ஸ் (BRICS) நாடுகள் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் கூட்டு முதலீடுகளைச் செய்யவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.


 Original Article : What were the major outcomes of the 17th BRICS Summit? -Khushboo Kumari and Roshni Yadav

Share: