தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு விழா என்றால் என்ன? இந்தியாவில் உள்ள மற்ற விலங்குகள் சார்ந்த விழாக்கள் யாவை? விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுத்தல் சட்டம் (Prevention of Cruelty to Animals (PCA) Act) என்றால் என்ன?
தற்போதைய செய்தி :
சமீபத்தில், அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை நடத்த கிராமக் குழுவுக்கு அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிகழ்வை நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் இருப்பதாக குறிப்பிட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் விழாவை நடத்த அனுமதி வழங்கவும், காவல்துறை தேவையான பாதுகாப்பை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி P. முருகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் G. ஜெயச்சந்திரன் மற்றும் K. K. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
முக்கிய அம்சங்கள்:
1. ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஒரு பாரம்பரிய காளை அடக்கும் விளையாட்டு (bull-taming sport) ஆகும். பொங்கல் பண்டிகை இயற்கை மற்றும் செழிப்பான அறுவடைக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இதில் கால்நடை வழிபாடு (cattle-worship) ஒரு பகுதியாகும்.
2. தமிழக அரசின் வலைத்தளத்தின்படி, ஜல்லிக்கட்டு கி.மு. 400 மற்றும் 100-க்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கியது என்றும், இந்தியாவில் உள்ள ஆயர்கள் என்ற இனக்குழுவினரால் இது விளையாடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் ஜல்லி (வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள்) மற்றும் கட்டு (கட்டப்பட்டது) ஆகிய இரண்டு வார்த்தைகளிலிருந்து வந்தது.
3. இந்தத் திருவிழாவில், ஒரு காளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விடப்படுகிறது. அதை அடக்கும் நபருக்கு, அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் நாணயங்கள் பரிசாகக் கிடைக்கும். பங்கேற்பாளர்கள் காளையைக் கட்டுப்படுத்த அதன் திமிலைப்பிடிக்க முயற்சிப்பார்கள், சில சமயங்களில் அவர்கள் காளையுடன் ஓடுவார்கள்.
4. புலிகுளம் மற்றும் காங்கேயம் என்பது இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் காளைகளின் இனமாகும். இந்த விழா மாநிலத்தின் கலாச்சார சுற்றுலாவின் முக்கியப் பகுதியாகும். இதில் வாடி மஞ்சுவிரட்டு, வேலிவிரட்டு, வடம் மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.
5. ஜல்லிக்கட்டு, வேளாண் சமூகத்தினர் தங்கள் தூய்மையான இன நாட்டு காளைகளைப் பாதுகாக்கும் பாரம்பரிய முறையாகக் கருதப்படுகிறது. கால்நடைகள் இனப்பெருக்கம் பெரும்பாலும் செயற்கை முறையில் நடைபெறும் இக்காலத்தில், பாதுகாப்பாளர்களும் உழவர்களும் வாதிடுவது என்னவென்றால், ஜல்லிக்கட்டு என்பது இந்த ஆண் விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும் — இல்லையெனில் அவை உழவுக்கு பயன்படுத்தப்படாவிட்டால் இறைச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதாகும்.
கம்பாலா விழா (Kambala festival)
1. இது கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக துளு மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாட்டுப்புற விளையாட்டாகும். இது பல குடும்பங்களுக்கு, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள பன்ட் சமூகத்தினருக்கு, இது ஒரு பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கம்பாலா போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையில், அவர்கள் ஆண்டு முழுவதும் எருமை ஜோடிகளைப் பராமரிக்கின்றனர்.
2. சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, சிலர் கம்பாலா திருவிழா, சிவபெருமானின் ஒரு வடிவமான ஸ்ரீ கத்ரி மஞ்சுநாதரை, செழிப்பான அறுவடைக்காக நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது என்று கருதுகின்றனர். மற்றவர்கள் இந்த நிகழ்வு கர்நாடகாவில் உள்ள உழவர்களால் தொடங்கப்பட்டது என்று கூறுகின்றனர். எருமைகளுக்குப் பயிற்சி அளித்து, அவற்றை போரில் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஹொய்சால மன்னர்கள் இந்த பந்தய வழக்கத்தைத் தொடங்கினார்கள் என்று நம்பப்படுகிறது..
3. கம்பாலாவில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. நெகிலு (கலப்பை) எனப்படும் முதல் வகையில், எருமைகளில் கட்டப்பட்ட இலகுவான கலப்பைகளைப் பயன்படுத்திப் போட்டி நடத்தப்படுகிறது. இது ஆரம்ப நிலை விலங்குகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
4. இரண்டாவது வகை ஹக்கா (கயிறு) ஆகும். இதில் எருமைகள் ஒரு கயிற்றால் ஒன்றாகக் கட்டப்பட்டு, பந்தய வீரர்களால் ஓட்டப்படுகின்றன. மூன்றாவது வகையான அடடா ஹலகேயில், பந்தய வீரர்கள் எருமைகள் இழுக்கும் ஒரு பலகையின் மீது நிற்கிறார்கள். இவ்வாறு, ஜாக்கிகள் விலங்குகளுக்குப் பின்னால் ஓடும் ஹக்கா மற்றும் நெகிலு போன்ற போட்டிகளைப் போல் இல்லாமல், இதில் எருமைகள் ஜாக்கிகளை இழுத்துச் செல்கின்றன.
5. கேனே ஹலேஜ் என்பது நான்காவது வகையாகும். இதில் மரப்பலகை ஒன்று எருமைகளுடன் கட்டப்பட்டிருக்கும். வீரர்கள் நிற்கும் அந்தப் பலகையில் இரண்டு துளைகள் இருக்கும்; சேற்றுப் பாதையில் அது செல்லும்போது அந்தத் துளைகள் வழியாகத் தண்ணீர் வெளியேறும். தண்ணீர் எவ்வளவு உயரத்திற்குத் தெறிக்கிறது என்பதைப் பொறுத்தே போட்டியின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார்.
மரமடி (Maramadi)
கேரள சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, கலப்பூட்டு அல்லது போத்தோட்டம் என்றும் அழைக்கப்படும் மரமடி என்பது, அறுவடை காலத்திற்குப் பிறகு கேரளாவில் உள்ள ஊரக பகுதிகளில் நடத்தப்படும் ஒரு காளைப் பந்தயம் ஆகும். இந்த விழாவில், புதிதாக உழப்பட்ட பரந்த நெல் வயல்கள் பந்தயத்திற்கான 'விளையாட்டுத் திடலாக' அமைகின்றன. பத்தனம்திட்டா மாவட்டம் ஆனந்தபள்ளி பகுதியில் ஓணம் பண்டிகையின்போது மிகவும் பிரசித்தி பெற்ற மரமடி பந்தயம் நடைபெறுகிறது.
பைல்கடா ஷரியாத் (Bailgada Sharyat)
சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிராவின் காளை வண்டிப் பந்தயம் ‘பைல்காடா ஷர்யத்’ (Bailgada Sharyat) என்று அழைக்கப்படுகிறது. இது கொங்கண், மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா விவசாயிகளின் 450 ஆண்டு பழமையான பாரம்பரிய போட்டியாகும். இந்த பந்தயத்தில், நான்கு வேகமான காளைகள் ஒரு வண்டியை 350 முதல் 450 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்கின்றன. மேலும், எந்த அணி வேகமாகச் செல்கிறதோ அதுவே வெற்றி பெறும்.
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் (Prevention of Cruelty to Animals (PCA) Act)
1. விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (PCA Act) விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை வரையறுக்கிறது. இதில், விலங்குகளின்மீது அதிக சுமை ஏற்றுவது அல்லது அதிக வேலை வாங்குவது, அதற்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் வழங்காமல் இருப்பது, ஒரு விலங்கைக் காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களாக கருதப்படும்.
2. இந்தச் சட்டம் தண்டனையை பின்வருமாறு விதிக்கிறது: முதல் குற்றத்திற்கு, 10 ரூபாய்க்குக் குறையாத, 50 ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடியதுமான அபராதம் விதிக்கப்படும். மேலும், முந்தைய குற்றம் நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் செய்யப்படும் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு, 25 ரூபாய்க்குக் குறையாததும், 100 வரை நீட்டிக்கப்படக்கூடியதுமான அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
3. ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் அதுபோன்ற விலங்குத் திருவிழாக்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. ஏனெனில், இந்த விளையாட்டுகள் கொடூரமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கலாம் என்றும், சில சமயங்களில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் காயங்களையோ அல்லது உயிரிழப்புகளையோ ஏற்படுத்தக்கூடும் என்றும் விலங்குநல அமைப்புகளும் நீதிமன்றங்களும் கவலை தெரிவிக்கின்றன.
4. 2023-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு, கம்பாலா மற்றும் மாட்டு வண்டிப் பந்தயங்கள் போன்ற காளைகளை அடக்கும் விளையாட்டுகள் தொடர அனுமதிக்கும் வகையில், 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் (Prevention of Cruelty to Animals (PCA) Act)) சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
Original Article : Jallikattu festival begins in Tamil Nadu. -Khushboo Kumari