வயநாடு போன்ற நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில், நிலச்சரிவுகளை நிச்சயமாக முன்னரே கணிக்க முடியும். ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை தகுந்த நேரத்தில் வெளியேற்றுவதற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பையும் உருவாக்க முடியும். இதுபோன்ற கணிப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
`மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், இதுபோன்ற நிகழ்வுகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் முக்கியத்துவம் குறித்த விவாதங்களை மீண்டும் அதிக்கரிக்க செய்துள்ளன.
எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல் (Creating warning systems)
வயநாடு போன்ற, நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகளில், நிலச்சரிவுகளைக் கணிக்க முடியும். வயநாடு 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அபாயப் பகுதிகளில் இருந்து சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றுவதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளை உருவாக்கலாம். இதுபோன்ற அமைப்புகள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் திறம்படச் செயல்படுகின்றன. சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த இரண்டு வெற்றிகரமான சம்பவங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அந்த நாட்டில் 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், பேரிடர் நிகழ்வதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஆபத்தான பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நிலச்சரிவுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள் இந்தியாவிலும் நிகழ்ந்துள்ளன. 2024-ஆம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, கேரளாவின் தெற்கே அமைந்துள்ள மூணாறு மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இருப்பினும், அந்தச் சம்பவங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்குக் காரணங்களில் ஒன்று, அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வந்த நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இடுக்கி மாவட்ட நிர்வாகம் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியதே ஆகும்.
மனிஷா வினோதினி ரமேஷ் தலைமையிலான இந்த ஆராய்ச்சிக் குழு, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்கி வரும் பல்வேறு குழுக்களில் ஒன்றாக உள்ளது.
பல்வேறு மாதிரிகள்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 13% 0.42 மில்லியன் சதுர கி.மீ.. நிலச்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இமயமலைப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த அபாயம் மிக அதிகமாக உள்ளது.
சமீபத்தில், மண்டி இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிக்ஸ் பிரைஸ் சுக்லாவும் அவரது குழுவினரும், தங்களுக்கென சொந்தமான நிலச்சரிவு முன் எச்சரிக்கை அமைப்பை வெளியிட்டுள்ளனர். இது இமயமலைப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கொண்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. கடந்த இமயமலைப்பகுதியில், நிகழ்ந்த 80 நிலச்சரிவுகளை அடிப்படையாக கொண்டு அவர்களின் மாதிரிகள் சரிபார்க்கப்பட்டன.
அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் முறைகளிலிருந்து மாறுபட்ட ஒரு வழிமுறையை சுக்லா பூகம்பங்களைக் கணிக்கப் பயன்படுத்தி வருகிறார். அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம், அதிக ஆபத்து உள்ள பகுதிகளில், சாய்வு அளவிகள் (Tilt Meters), அழுத்த அளவீட்டுக் கருவிகள் (Pressure Gauges), அதிர்வுகள் மற்றும் நிலத்தின் அசைவுகளை அளவிடும் முடுக்க அளவிகள் (Accelerometers) போன்ற பல்வேறு கருவிகளைக் கொண்ட உணரிகள் வலையமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த உணரிகள் பதிவு செய்யும் அளவுகள், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறினால், உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
அறிவியல்ரீதியாக, இது மிகவும் உறுதியான ஒரு முறையாகும். மேலும், மக்களை வெளியேற்றுவதைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்கு இது போதுமான கால அவகாசத்தை வழங்குகிறது. மற்ற நாடுகளிலும், இந்த முறையில்தான் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு வரம்பு, கருவிகள் நிறுவப்பட்டுள்ள சரிவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைக்கும். அருகிலுள்ள சரிவைப் பற்றி எதுவும் கிடைக்காது. நிலச்சரிவுகள் என்பவை மிகவும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளாகும் என்று சுக்லா கூறினார்.
இமயமலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்காணிக்க, சுக்லா நிகழ்தகவு முன்னறிவிப்பு முறையைப் பயன்படுத்தி வருகிறார். அவரது குழு, கடந்தகால நிகழ்வுகளின் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, இமயமலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களை வரைபடமாக்கியுள்ளது.
மழைப்பொழிவு மிகவும் பொதுவான காரணிகளில் ஒன்றாக இருப்பதால், இந்த இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மாதிரியாகக் காட்ட, இந்தக் குழு மிகவும் குறிப்பிட்ட பகுதி சார்ந்த மழைப்பொழிவு முன்னறிவிப்புகளைப் பயன்படுத்துகிறது. மண்ணின்த்தன்மைகள், பாறையின் உறுதித்தன்மை, சரிவின் அளவு மற்றும் மக்கள் அடர்த்தி போன்ற பல்வேறு காரணிகளும் இந்த மாதிரியில் இடம்பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு தேதியிலும், ஒவ்வொரு இடத்திற்கும் மழைப்பொழிவிலிருந்து பெறப்பட்ட அளவுருக்களின் 7-10 அடுக்குகள் உள்ளன என்று அவர் கூறினார். இது, நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.
"ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான மழை முன்னறிவிப்பு, அந்தத் தேதியிலோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னரோ மட்டுமே கிடைக்கும். எனவே, எங்கள் முறை நீண்டகாலத்திற்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடியாது. இந்திய வானிலை ஆய்வுத்துறை தயாரித்து வரும் உயர்-தெளிவுத்திறன் (High-resolution) கொண்ட மழை முன்னறிவிப்புகள் கிடைத்தவுடன், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை பல நாட்களுக்கு முன்பே கணிக்க முடியும். இருப்பினும், எங்களுடைய முறை, மலைத்தொடர் முழுவதும் உள்ள அதிக நிலச்சரிவு அபாயம் அதிகமான இடங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள அபாயகரமான இடங்களைக் கூட அடையாளம் காண உதவுகிறது என்று சுக்லா கூறினார்.
தேவையான வளங்களும் உரிய முயற்சிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால், நிலச்சரிவுகளுக்கான மிகவும் விரிவான மற்றும் திறன் மிக்க முன்எச்சரிக்கை அமைப்பை இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாக்க முடியும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில், அடிக்கடி நிலச்சரிவு நிகழும் மற்றும் மனித உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக ஆபத்து மிக்க பகுதிகளை முதலில் அடையாளம் காணவேண்டும். ஆனால், அந்தப் பணி இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அது முடிந்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உணரிகள் (Sensors) பொருத்தும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று அவர் கூறினார்.
"இமயமலைப்பகுதியில், வடமேற்குப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில இடங்களைக் கொண்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கார்வால், உத்தர்காஷி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி, சிம்லா ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாகவும், அதிக மக்கள்தொகையைக் கொண்டவையாகவும் உள்ளன. ஐஸ்வாலைச் சுற்றியுள்ள மிசோரம் மற்றும் மணிப்பூரின் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியாகவும் உள்ளன. நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக கருதப்படும் சிக்கிம், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாக உள்ளது. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சிக்கிமில் சாலைப் போக்குவரத்து வலையமைப்பு மிகவும் விரிவாக இல்லாததாகும். இதனால் மலைகளை அதிகமாக வெட்டும் பணிகளும், இயற்கை நிலப்பரப்பில் ஏற்படும் பாதிப்புகளும் குறைகின்றன. அதன் விளைவாக, மலைச்சரிவுகள் அதிக நிலைத்தன்மையுடன் காணப்படுகின்றன என்று ஷுக்லா கூறினார்.