Showing posts with label Natural disaster. Show all posts
Showing posts with label Natural disaster. Show all posts

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மறுபரிசீலனை செய்தல். - அமிதாப் சின்ஹா

வயநாடு போன்ற நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில், நிலச்சரிவுகளை நிச்சயமாக முன்னரே கணிக்க முடியும். ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை தகுந்த நேரத்தில் வெளியேற்றுவதற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பையும் உருவாக்க முடியும். இதுபோன்ற கணிப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


`மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், இதுபோன்ற நிகழ்வுகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் முக்கியத்துவம் குறித்த விவாதங்களை மீண்டும் அதிக்கரிக்க செய்துள்ளன.


எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல் (Creating warning systems)


வயநாடு போன்ற, நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகளில், நிலச்சரிவுகளைக் கணிக்க முடியும்.  வயநாடு 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அபாயப் பகுதிகளில் இருந்து சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றுவதற்காக, முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளை உருவாக்கலாம். இதுபோன்ற அமைப்புகள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் திறம்படச் செயல்படுகின்றன. சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த இரண்டு வெற்றிகரமான சம்பவங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அந்த நாட்டில் 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், பேரிடர் நிகழ்வதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே ஆபத்தான பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


நிலச்சரிவுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின்  எடுத்துக்காட்டுகள் இந்தியாவிலும் நிகழ்ந்துள்ளன. 2024-ஆம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, கேரளாவின் தெற்கே அமைந்துள்ள மூணாறு மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இருப்பினும், அந்தச் சம்பவங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்குக் காரணங்களில் ஒன்று, அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வந்த நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இடுக்கி மாவட்ட நிர்வாகம் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியதே ஆகும்.


மனிஷா வினோதினி ரமேஷ் தலைமையிலான இந்த ஆராய்ச்சிக் குழு, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்கி வரும் பல்வேறு குழுக்களில் ஒன்றாக உள்ளது.


பல்வேறு மாதிரிகள்


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 13% 0.42 மில்லியன் சதுர கி.மீ.. நிலச்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இமயமலைப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த அபாயம் மிக அதிகமாக உள்ளது.


சமீபத்தில், மண்டி இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிக்ஸ் பிரைஸ் சுக்லாவும் அவரது குழுவினரும், தங்களுக்கென சொந்தமான நிலச்சரிவு முன் எச்சரிக்கை அமைப்பை வெளியிட்டுள்ளனர். இது இமயமலைப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கொண்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. கடந்த இமயமலைப்பகுதியில், நிகழ்ந்த  80  நிலச்சரிவுகளை அடிப்படையாக கொண்டு அவர்களின் மாதிரிகள் சரிபார்க்கப்பட்டன.


அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் முறைகளிலிருந்து மாறுபட்ட ஒரு வழிமுறையை சுக்லா பூகம்பங்களைக் கணிக்கப் பயன்படுத்தி வருகிறார். அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்,  அதிக ஆபத்து உள்ள பகுதிகளில், சாய்வு அளவிகள் (Tilt Meters), அழுத்த அளவீட்டுக் கருவிகள்  (Pressure Gauges), அதிர்வுகள் மற்றும் நிலத்தின் அசைவுகளை அளவிடும் முடுக்க அளவிகள் (Accelerometers) போன்ற பல்வேறு கருவிகளைக் கொண்ட உணரிகள் வலையமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த உணரிகள் பதிவு செய்யும் அளவுகள், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறினால், உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.


அறிவியல்ரீதியாக, இது மிகவும் உறுதியான ஒரு முறையாகும். மேலும், மக்களை வெளியேற்றுவதைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்கு இது போதுமான கால அவகாசத்தை வழங்குகிறது. மற்ற நாடுகளிலும், இந்த முறையில்தான் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு வரம்பு, கருவிகள் நிறுவப்பட்டுள்ள சரிவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைக்கும். அருகிலுள்ள சரிவைப் பற்றி எதுவும் கிடைக்காது. நிலச்சரிவுகள் என்பவை மிகவும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளாகும் என்று சுக்லா கூறினார்.


இமயமலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்காணிக்க, சுக்லா நிகழ்தகவு முன்னறிவிப்பு முறையைப் பயன்படுத்தி வருகிறார். அவரது குழு, கடந்தகால நிகழ்வுகளின் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, இமயமலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களை வரைபடமாக்கியுள்ளது.


மழைப்பொழிவு மிகவும் பொதுவான காரணிகளில் ஒன்றாக இருப்பதால், இந்த இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மாதிரியாகக் காட்ட, இந்தக் குழு மிகவும் குறிப்பிட்ட பகுதி சார்ந்த மழைப்பொழிவு முன்னறிவிப்புகளைப் பயன்படுத்துகிறது. மண்ணின்த்தன்மைகள், பாறையின் உறுதித்தன்மை, சரிவின் அளவு மற்றும் மக்கள் அடர்த்தி போன்ற பல்வேறு காரணிகளும் இந்த மாதிரியில் இடம்பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு தேதியிலும், ஒவ்வொரு இடத்திற்கும் மழைப்பொழிவிலிருந்து பெறப்பட்ட அளவுருக்களின் 7-10 அடுக்குகள் உள்ளன என்று அவர் கூறினார். இது, நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.


"ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான மழை முன்னறிவிப்பு, அந்தத் தேதியிலோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னரோ மட்டுமே கிடைக்கும். எனவே, எங்கள் முறை நீண்டகாலத்திற்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடியாது. இந்திய வானிலை ஆய்வுத்துறை தயாரித்து வரும் உயர்-தெளிவுத்திறன் (High-resolution) கொண்ட மழை முன்னறிவிப்புகள் கிடைத்தவுடன், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை பல நாட்களுக்கு முன்பே கணிக்க முடியும். இருப்பினும், எங்களுடைய முறை, மலைத்தொடர் முழுவதும் உள்ள அதிக நிலச்சரிவு அபாயம் அதிகமான இடங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள அபாயகரமான இடங்களைக் கூட அடையாளம் காண உதவுகிறது என்று சுக்லா கூறினார்.


தேவையான வளங்களும் உரிய முயற்சிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால், நிலச்சரிவுகளுக்கான மிகவும் விரிவான மற்றும் திறன் மிக்க முன்எச்சரிக்கை அமைப்பை இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாக்க முடியும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில், அடிக்கடி நிலச்சரிவு நிகழும் மற்றும் மனித உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக ஆபத்து மிக்க பகுதிகளை முதலில் அடையாளம் காணவேண்டும். ஆனால், அந்தப் பணி இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அது முடிந்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உணரிகள் (Sensors) பொருத்தும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று அவர் கூறினார்.


"இமயமலைப்பகுதியில், வடமேற்குப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில இடங்களைக் கொண்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கார்வால், உத்தர்காஷி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி, சிம்லா ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாகவும், அதிக மக்கள்தொகையைக் கொண்டவையாகவும் உள்ளன. ஐஸ்வாலைச் சுற்றியுள்ள மிசோரம் மற்றும் மணிப்பூரின் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியாகவும் உள்ளன. நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக  கருதப்படும் சிக்கிம்,  ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாக உள்ளது. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சிக்கிமில் சாலைப் போக்குவரத்து வலையமைப்பு மிகவும் விரிவாக இல்லாததாகும். இதனால் மலைகளை அதிகமாக வெட்டும் பணிகளும், இயற்கை நிலப்பரப்பில் ஏற்படும் பாதிப்புகளும் குறைகின்றன. அதன் விளைவாக, மலைச்சரிவுகள் அதிக நிலைத்தன்மையுடன் காணப்படுகின்றன என்று ஷுக்லா கூறினார்.


Original Link: Amid Western Ghats landslides, revisiting need for developing early warning systems.

Share:

உத்தரப் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டதன் காரணம் என்ன? - அமிதாப் சின்ஹா

வட இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் இடியுடன் கூடிய கனமழை அடிக்கடி பெய்யும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேரிடரின் அளவு சமீபத்திய ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது. அதற்கான காரணம் கீழே குறிப்பிட்டுள்ளது.


இந்த வாரத் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தைத் தாக்கிய சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வானிலை ஆய்வுத் துறையின் ஆவணங்களில், இந்த வளிமண்டல நிகழ்வு 'ஆந்தி' (Andhi) என்று குறிப்பிடப்படுகிறது. இப்பிராந்தியத்தில் ஆண்டுதோறும் நிகழும் ஒரு பொதுவான நிகழ்வு இதுவாகும். இருப்பினும், இந்த ஆண்டு ஏற்பட்ட அழிவு மிக அதிக அளவில் பரவலாக இருந்தது. இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமான பிரயாக்ராஜில் 21 பேரும், அதைத் தொடர்ந்து மிர்சாபூரில் 19 பேரும், படோஹியில் 16 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பருவமழைக்கு முந்தைய காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சில சமயங்களில் ஜூலை மாதம் வரையிலும் நீடிக்கும், வட இந்தியாவின் பல பகுதிகளில் இடி, மின்னல், மழை மற்றும் சில நேரங்களில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய இந்தப் புழுதிப் புயல்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் உலக அளவிலும், குறிப்பாக வறண்ட பகுதிகளில் ஏற்படுகின்றன.


பெரும்பாலான இதுபோன்ற இடியுடன் கூடிய மழைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அவை, மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இருப்பினும், வலுவான இடியுடன் கூடிய மழைகள் பரவலான அழிவை ஏற்படுத்தக்கூடும். இது மணிக்கு 90 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசும் காற்று பெரிய மரங்களை வேரோடு சாய்த்துவிடும். சுவர்கள் இடிந்து விழலாம், மின் கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் சரிந்து விழலாம், மேலும் தளர்வான பொருட்கள் காற்றில் பறந்து அபாயகரமான எறிபொருட்களாக மாறக்கூடும். மின்னல் தாக்கியதால் சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.


சமீபத்திய இடியுடன் கூடிய மழை வழக்கத்தைவிட வலுவாகவும் பரவலாகவும் இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, குறைந்தது எட்டு மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ.க்கு மேல் பதிவாகியுள்ளது. சில இடங்களில் இது மணிக்கு 130 கி.மீ. வேகத்தையும் எட்டியுள்ளது.


வட இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய இடியுடன் கூடிய மழையானது, பொதுவாக நிலப்பரப்பு தீவிரமாக வெப்பமடைவதைத் தொடர்ந்து ஏற்படுகிறது. பொதுவாக, வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் ஈரப்பதம் நிறைந்த காற்றே, இதற்குத் தேவையான எரிபொருளை வழங்குகிறது.


ஆனால், வேறு சில வானிலை நிலவரங்களும் ஒன்றுசேர்ந்ததே இந்த சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழைக்கு வழிவகுத்தது. பல பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டியதுடன், வலுவான தென்கிழக்குக் காற்று வங்காள விரிகுடாவிலிருந்து வந்த ஈரப்பதம் வடமேற்கு உத்தரப் பிரதேசம் வரை சென்றடைவதை உறுதி செய்தது. இதன் விளைவாக, தரைக்கு அருகிலுள்ள காற்று வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் மாறியது.


மேற்கத்திய சீர்குலைவுகள் என்பவை ஈரானுக்கு அப்பால் உருவாகி இந்தியாவிற்கு மழையைக் கொண்டுவரும், கிழக்கு நோக்கி நகரும் மழையைக் கொண்டுவரும் காற்று அமைப்புகளாகும். தற்போது நிலவும் மேற்கத்திய சீர்குலைவுகளின் காரணமாக, நிலப்பரப்புக்கு அருகிலுள்ள வெப்பமான காற்றைக் காட்டிலும் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் காற்று குளிர்ச்சியாகவும் வறண்டதாகவும் இருந்தது. "இது வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதோடு, வலுவான இடியுடன் கூடிய மழையைத் தூண்டும் ஒரு முக்கிய காரணியாகவும் அமைகிறது," என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறினார்.


2018-ம் ஆண்டில், கடைசியாக உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற இடியுடன் கூடிய மழை தாக்கியபோது, ​​100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகப் பதிவானது. அந்த ஆண்டில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பல பெரிய இடியுடன் கூடிய மழை நிகழ்வுகள் ஏற்பட்டன. ஒவ்வொரு ஆண்டும், வட இந்தியாவில் பல்வேறு தீவிர நிலைகளைக் கொண்ட இடியுடன் கூடிய மழையால் சுமார் பன்னிரண்டு இறப்புகள் பதிவாகின்றன. இருப்பினும், இந்த இறப்புகள் பொதுவாக காலப்போக்கில் பரவலாக நிகழ்கின்றன.


முன்னறிவிப்பின் துல்லியம்


வானிலை ஆய்வு மையங்களால் இடியுடன் கூடிய மழையை முன்கூட்டியே கணிக்க முடியும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) வானிலை அறிக்கைகளில் இதுபோன்ற முன்னறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுகிறது, இந்த நிகழ்விலும் அவ்வாறே செய்தது. இருப்பினும், மோகபாத்ராவே ஒப்புக்கொண்டபடி, காற்றின் உச்ச வேகம் குறைவாக மதிப்பிடப்பட்டது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) ஆரம்பகட்ட முன்னறிவிப்பு, காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை இருக்கும் எனக் கணித்திருந்தது. பின்னர் அது மணிக்கு 70 கி.மீ. எனத் திருத்தப்பட்டது. நேரடி வானிலை மற்றும் அண்மைக்கால எதிர்காலத்திற்கான முன்னறிவிப்பை விவரிக்கும் அதன் உடனடி முன்னறிவிப்புகளில், காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ. வரை எட்டக்கூடும் என்று அது கூறியுள்ளது.


அது பெரும்பாலான இடியுடன் கூடிய மழைகளை உள்ளடக்கியிருந்தாலும், சில இடங்களில் காற்றின் வேகம் கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது. “ஆறு-ஏழு மாவட்டங்களில், மணிக்கு 100 கி.மீ.க்கும் அதிகமான காற்றின் வேகம் பதிவு செய்யப்பட்டது. அதை எங்கள் முன்னறிவிப்புகள் இத்தகைய அதிக வேகத்தைக் கணிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக, முன்னறிவிப்பு சரியான நேரத்தில் மற்றும் சிறப்பாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் இப்போது எங்களிடம் சுமார் 2,400 நிலையங்களைக் கொண்ட மிகவும் வலுவான கண்காணிப்பு வலையமைப்பு உள்ளது. இது இதுபோன்ற நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகக் கணிக்க எங்களுக்கு உதவுகிறது. மேலும், எங்கள் திறன்களை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்று மோகபாத்ரா கூறினார்.



புயல்களைப் போலல்லாமல், இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு மக்களை வெளியேற்றுவது நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு வழி அல்ல. ஒரு புயலில், அச்சுறுத்தல் கடலில் இருந்து கடற்கரையை நோக்கி ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்கிறது. எனவே, மக்களைக் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துவது உயிரிழப்புகளைக் குறைக்க உதவுகிறது. மறுபுறம், இடியுடன்கூடிய மழை என்பது மிகவும் பரவலாக நிகழும் ஒரு நிகழ்வாகும். அருகிலுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் பல இடியுடன் கூடிய மழை நிகழ்வுகள் ஏற்படலாம்.


Original Link: What triggered the powerful thunderstorms in Uttar Pradesh that killed over 100?


Share:

இந்தியாவின் பேரிடர் மீட்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு சரிவு -அஸ்வதி ரேச்சல் வருகீஸ்

பேரிடர் மீட்பு நிதி அமைப்பின் (disaster response financing system) மிகவும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட மாதிரிக்கான சான்றுகள் உள்ளன.


பேரிடர் மீட்புக்கான மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வளங்களை மாற்றுவது வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது. இது மாநிலங்களின்

மதிப்பிடப்பட்ட தேவைகளுக்கும், அவை உண்மையில் பெறுவதற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு மத்திய அரசு கேரளாவிற்கு நிதியை வழங்கியபோது இந்த ஏற்றத்தாழ்வு மீண்டும் தெளிவாகியது. இந்தப் போக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவின் நிதி கூட்டாட்சி அமைப்பு ஒத்துழைப்பிலிருந்து விலகி, மேலும் நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட பேரிடர்-ஆபத்து நிதி மாதிரியாக மாறுகிறதா?


ஜூலை 2024-ல் வயநாட்டில் ஏற்பட்ட சோகம், கிட்டத்தட்ட 300 இறப்புகளை ஏற்படுத்தியது மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தது. இந்த பிரச்சினையில் கடுமையான கவனத்தை ஈர்த்ததாவது, கேரளாவின் ₹2,200 கோடி இழப்புக்கு எதிராக, ஒன்றிய அரசு ₹260 கோடியை மட்டுமே அங்கீகரித்தது. இது வெறும் 11% (₹1,200 கோடி மதிப்பிடப்பட்ட இழப்பு, ஆனால் ₹2,200 கோடி மீட்புக்கான குறிப்பாணையில் மாநிலத்தால் கோரப்படுகிறது). இந்த பொருத்தமின்மை கேரளாவிற்கு மட்டும் உரியது அல்ல. இது கூட்டுறவுக் கூட்டாட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. இன்றைய பேரிடர்கள் மாநிலங்களுக்கு நிதி அழுத்த சோதனைகளாக செயல்படுகின்றன. மேலும், காலநிலை மாற்றங்கள் தீவிரமடைவதால், இந்தியாவின் பேரிடர்-நிதி அமைப்பு வெளிப்படையான அழுத்தத்தைக் காட்டுகிறது.


ஒரு சரிவு உள்ளது


பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005-ன் (Disaster Management Act) கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் பேரிடர்-மீட்பு நிதி அமைப்பு (disaster-response financing system), இரண்டு-அடுக்கு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதமும் மற்றும் பெரும்பாலான மாநிலங்களுக்கு பகிர்வு விகிதம் 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக நிதியளிக்கப்படும் மாநில பேரிடர்-மீட்பு நிதியின் (State Disaster Response Fund (SDRF)) மூலம் தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணத்தை வழங்குகிறது. மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் தேசிய பேரிடர்-மீட்பு நிதி (National Disaster Response Fund (NDRF)), ஒரு பேரிடர்காலம் கடுமையானதாக வகைப்படுத்தப்படும்போது அது மாநிலங்களை ஆதரிக்கிறது. கொள்கையளவில், இந்த அமைப்பு சமநிலையில்

தெரிகிறது. ஆனால் நடைமுறையில், அது மத்தியக் கட்டுப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.


முதலாவதாக, நிவாரண விதிமுறைகள் காலாவதியானவை (பழமையானவை) மற்றும் நெகிழ்வானவை அல்ல. இது இழப்பீட்டுக்கான உச்சவரம்புகள், இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ₹4 லட்சம் மற்றும் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு ₹1.2 லட்சம் ஒரு பத்தாண்டுகளில் அரிதாகவே மாறியுள்ளன. இந்தத் தொகைகள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் மறுகட்டமைப்பிற்கு அல்ல. இந்த இடைவெளி ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் மாநிலங்களை நிதி ரீதியாக பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.


இரண்டாவதாக, பேரிடர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதில் குழப்பம் உள்ளது. "கடுமையான" பேரிடர் என்றால் என்ன என்பதை சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை. இது தேசிய பேரிடர்-மீட்பு நிதி (NDRF) உதவிக்கு யார் தகுதியானவர் என்பதை தீர்மானிக்கும்போது பரந்துபட்ட விருப்பத்திற்கு இடமளிக்கிறது.


மூன்றாவதாக, உதவி வெளியீடுகள் நடைமுறை சார்ந்தவை, தானியங்கியாக (automatic) செயல்படுபவை அல்ல. பொருள்சார் குறிகாட்டிகள் (objective indicators) ஆதரவைத் தூண்டும் அமைப்புகளைப் போலன்றி, இந்தியாவின் செயல்முறை தொடர்ச்சியான அனுமதிகள், மாநில குறிப்பாணை, மத்திய மதிப்பீடு மற்றும் அவசரநிலை மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது தாமதங்களை ஏற்படுத்தும் உயர்மட்ட ஒப்புதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.


இறுதியாக, நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு அளவுகோல்கள் பலவீனமாக உள்ளன. இது வெளிப்பாட்டை அளவிட மக்கள்தொகை மற்றும் மொத்த புவியியல் பகுதியைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை உண்மையான ஆபத்தான நிலைகளைப் புறக்கணிக்கிறது. இது பேரிடர் பாதிப்புக்கான ஒரு மறைமுகமாக வறுமையையும் பயன்படுத்துகிறது. இது ஒரு வலுவான பேரிடர்-ஆபத்து குறியீட்டைப் பயன்படுத்துவதில்லை. இது வெள்ளம், நிலச்சரிவுகள் அல்லது சூறாவளிகளுக்கு மக்களின் உண்மையான அபாயங்களுடன் இந்த நிதி ஒதுக்கீடுகள் பொருந்தவில்லை.

வயநாடு நிகழ்வு வலுவான நிறுவன குறைபாடுகளை அம்பலப்படுத்தியது. நிதி உதவியைக் குறைப்பதை நியாயப்படுத்த, கேரளாவின் செலவிடப்படாத மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) இருப்பு ₹780 கோடியையும், மூலதன முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முந்தைய ₹529 கோடி வட்டி இல்லாத கடனையும் மத்திய அரசு மேற்கோள் காட்டியது. இருப்பினும், இந்த நிலுவையில் உள்ள நிதி பெரும்பாலும் செயலற்ற நிதியை அல்ல, உறுதியான பணிகளை பிரதிபலிக்கின்றன. மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) தவணைகள் நிதியாண்டின் பிற்பகுதியில் வருகின்றன. அதே நேரத்தில், பேரிடர்கள் பருவகாலமாக இருப்பதால் தற்காலிக நிலுவைகள் தவிர்க்க முடியாதவை. மேலும், மாநில பேரிடர்-மீட்பு நிதி (SDRF) விதிகள் செலவினங்களை மறுகட்டமைப்பு அல்லது வாழ்வாதார மறுசீரமைப்பிற்கு அல்ல, உடனடி நிவாரணத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, மாநிலங்கள் பணப்புழக்கத்திற்காக சில இருப்புக்களை வைத்திருக்க வேண்டும்.


காலநிலை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்தியா நடவடிக்கை எடுப்பதன் மூலம் பில்லியன் கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று உலகளாவிய ஆய்வு கூறுகிறது.


மேலும், வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான பேரிடராக வகைப்படுத்துவதை ஒன்றிய அரசு தாமதப்படுத்தியது. இதனால், கேரளாவிற்கு அதிக தேசிய பேரிடர் மீட்பு நிதி (NDRF) ஆதரவு கிடைப்பது கட்டுப்படுத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் இதே போன்ற பேரிடர்களுக்கு பெரிய தொகுப்புகளைப் பெற்றன. 2018-ல் கஜா புயலுக்குப் பிறகு தமிழ்நாடு இதே போன்ற பொருத்தமின்மைகளை எதிர்கொண்டது. 2019 வெள்ளத்தின்போது கர்நாடகாவும் இதே பிரச்சனையைக் கண்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே மாதிரியைக் காட்டுகின்றன. மெதுவான ஒப்புதல்கள் மற்றும் இழப்புகளுக்கும் உதவிக்கும் இடையிலான இடைவெளிகள் அதிகரிப்பது கூட்டுறவு கூட்டாட்சி, அதிகாரத்துவ பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்த ஒரு அமைப்பை வெளிப்படுத்துகின்றன.


உலகளாவிய நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வது


பல நாடுகள் இப்போது தரவு சார்ந்த மற்றும் வெளிப்படையான பேரிடர் நிதியுதவியைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவின் கூட்டாட்சி அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (Federal Emergency Management Agency (FEMA)) தனிநபர் சேத வரம்புகளைப் பயன்படுத்துகிறது. மெக்சிகோவின் முன்னாள் இயற்கை பேரிடர்களுக்கான நிதி (FONDEN) மழை அல்லது காற்று வரம்புகளை மீறும் போது தானாகவே நிதியை வெளியிட்டது. பிலிப்பைன்ஸ் மழை மற்றும் இறப்புக்கான குறியீடுகள் மூலம் விரைவான பேரிடர் மீட்பு நிதிகளை தீவிரப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் காப்பீட்டு வசதிகள் விரைவான பணம் பரிமற்றங்களுக்கு செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா கூட்டாட்சி உதவியை வருவாயுடன் ஒப்பிடும்போது ஒரு மாநிலத்தின் நிவாரணச் செலவுடன் இணைக்கிறது. இந்த அமைப்புகள் தெளிவான விதிகளுடன் விருப்புரிமையை மாற்றுகின்றன. நிவாரணம் விரைவாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க முடியும் என்பதை அவை காட்டுகின்றன. தாமதம், விருப்புரிமை மற்றும் கூட்டாட்சி பரிமாற்றங்களில் நம்பிக்கையை மீட்டெடுக்க மழையின் தீவிரம், மில்லியனுக்கு இறப்புகள் அல்லது இழப்பு-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் போன்ற ஒத்த புறநிலைத் தூண்டுதல்களை இந்தியா ஏற்றுக்கொள்ளலாம்.


கூட்டாட்சி உணர்வை மீண்டும் கட்டியெழுப்புதல்


16-வது நிதி ஆணையம் இந்த கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப நிவாரண விதிகளை இது புதுப்பிக்க முடியும். இது விரிவான பாதிப்பு குறியீட்டைப் பயன்படுத்தி ஒதுக்கீடுக்கான அளவுகோல்களை திருத்தலாம் மற்றும் பேரிடர் உதவி கடன் அடிப்படையிலானதாக இல்லாமல் மானிய அடிப்படையிலானதாக இருப்பதை உறுதி செய்யலாம். மாநிலங்கள் தங்கள் பேரிடர் நிதிகளின்மீது செயல்பாட்டு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு செலவினங்களுக்குப் பிறகு மட்டுமே கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும், அவற்றை முன்கூட்டியே அங்கீகரிக்கக்கூடாது. இந்த சீர்திருத்தம் மத்திய மேற்பார்வையை பலவீனப்படுத்துவது பற்றியது அல்ல, ஆனால் கூட்டாட்சி செயல்பாட்டை வலுப்படுத்துவது பற்றியது. வேகமான, விதிகள் அடிப்படையிலான பதில்களை செயல்படுத்தும் ஒரு அமைப்பு அரசாங்கத்தின் இரு அடுக்குகளுக்கும், மிக முக்கியமாக, நடைமுறை தாமதங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு அமைப்பைவிட குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும்.


நெருக்கடிகளின்போது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத் தேவை


பேரிடர்கள் உடல்ரீதியான பாதிப்புகளை மட்டுமல்ல, நிறுவன ரீதியான பாதிப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. நிவாரண முயற்சிகள் பெரும்பாலும் ஒற்றுமை செயல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளாக மாறும். இது நிதி கூட்டாட்சி அமைப்பை அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் பேரிடர் நிதி அமைப்பு, நடைமுறை தொண்டு நிறுவனத்திலிருந்து (procedural charity) விதிகள் சார்ந்த கூட்டாண்மையாக உருவாக வேண்டும்.


எதிர்காலத்தில் வரும் வெள்ளம் அல்லது நிலச்சரிவு, அரசியலமைப்பு ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கும் கூட்டுறவு, சமத்துவம் மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதற்காக மாநிலங்கள் வாதிட வேண்டியதில்லை. கூட்டாட்சி நெருக்கடியில் முக்கியமானதாக இருக்கும்போது, அது தோல்வியடைகிறது. வயநாடு சோகம் ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது. அடுத்த புயல் வருவதற்கு முன்பு இந்தியா பேரிடர் நிவாரணத்தின் நிதி அடித்தளத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.


அஸ்வதி ரேச்சல் வருகீஸ், திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர்.



Original Article: India’s disaster response, a slippery slope for federalism 

Share:

எத்தியோப்பியாவில் ஹய்லி குபி (Hayli Gubbi) எரிமலை வெடிப்பு -அமிதாப் சின்ஹா

எத்தியோப்பியாவில் ஹய்லி குபி (Hayli Gubbi) எரிமலை வெடிப்பு: வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹய்லி குபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. அனைத்து கணக்கீடுகளின் படியும் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது. எரிமலைக்குழம்பு அல்லது மாக்மா ஓட்டம் எதுவும் இல்லை. ஆனால், எரிமலை வெடிக்கும்போது அதிக அளவு வாயு மற்றும் புகைமூட்டம் வெளியேறியது.


எத்தியோப்பியாவில் ஹய்லி குபி எரிமலை வெடிப்பு: எத்தியோப்பியாவிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் எரிமலை சாம்பல் அதிக உயர மேகமாக (high-altitude cloud) இந்தியாவை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை, எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில், செங்கடல் கடற்கரைக்கு அருகில் உள்ள Hayli Gubbi எரிமலையின் அரிய வெடிப்பிலிருந்து வெளியேறிய எரிமலை சாம்பல் அது.


பல நீண்டதூர விமானங்கள் பறக்கும் அதே உயரத்தில் எரிமலை சாம்பல் மேகம் நகர்ந்து கொண்டிருந்தது. இது ஆபத்தானது. ஏனெனில், இது பார்வை நிலையைக் குறைக்கும் மற்றும் சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைக் கொண்டுள்ளது. இவற்றைத் தவிர்க்க விமான நிறுவனங்களின் அட்டவணையை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஹய்லி குபி எரிமலை வெடிப்பு என்றால் என்ன?


வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹய்லி குபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. அது எரிமலைக்குழம்பு அல்லது மாக்மாவை உருவாக்கவில்லை. மாறாக, பெரிய அளவிலான வாயு மற்றும் புகைமூட்டம் எரிமலை வெடிப்பில் வெளியேறியது. தீங்கு விளைவிக்கும் சாம்பல் துகள்கள் எரிமலைக்கு அருகில் விழுந்தன. ஆனால், மிகவும் நுண்ணிய துகள்களும், சல்பர்-டை-ஆக்சைடு அல்லது கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்களும் வளிமண்டலத்தில் அதிக உயரத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15-40 கிலோமீட்டர் உயரத்தில் செல்லக்கூடியத்தன்மை கொண்டவை.


எரிமலையைச் சுற்றியுள்ள காற்று கடுமையாக வெப்பமடைந்து, இலகுவாகி, மேலே எழுவதால் இது நிகழ்கிறது. அது மேலே எழும்போது, ​​அது மெல்லிய சாம்பல் துகள்கள் மற்றும் வாயுக்களையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.


அந்த உயரத்தில், காற்று நீரோட்டங்கள் மிகவும் வலுவாக இருக்கும். மேலும், எரிமலை புகை காற்று நீரோட்டத்தின் திசையில் பயணிக்கிறது. எத்தியோப்பியன் எரிமலை வெடிப்புகளிலிருந்து வெளியேறிய புகை விவகாரத்தில் இது போன்று நடந்தது.


காற்று நீரோட்டங்களைத் தொடர்ந்து, எரிமலை சாம்பல் மற்றும் வாயுக்கள் மேற்கு நோக்கி இந்தியாவை நோக்கி பயணித்து. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் நுழைந்து, பின்னர் தென்மேற்கு இருந்து வடகிழக்கு திசையில் டெல்லி மற்றும்

உத்தரபிரதேசம் நோக்கி நகரும். அதே பாதையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் இந்த சாம்பல் மேகங்கள் முழுமையாக சீனாவிற்குள் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அது ஆபத்தானதா?


எரிமலை வெடிப்புகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் அதிக அளவு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் புகைமூட்டம் மிக அதிக உயரத்தில் நகர்ந்து கொண்டிருந்ததால் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், அவை பெரும்பாலும் இந்த உயரங்களில் பயணிக்கும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தின. தொலைதூர சர்வதேச வழித்தடங்களில் பறக்கும் வணிக விமானங்கள் பொதுவாக பூமியிலிருந்து 10-14 கிலோமீட்டர் உயரத்தில் செல்கின்றன. இது எரிமலை சாம்பல் மேகம் சென்று கொண்டிருந்த பகுதியாகும்.


எரிமலை சாம்பல் மேகம் பார்வை திறனில் பாதிப்பை ஏற்படுத்தி, விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும் திறன் கொண்டது. மிக நுண்ணிய துகள்கள் விமான எஞ்சின்களுக்குள் நுழைந்து உருகக்கூடும். இதனால் என்ஜின்கள் செயலிழக்கக்கூடும். விமானங்களில் வலுவான சுத்திகரிப்பு அமைப்புகள் இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், இந்த சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் உணர்விகள் சாம்பலால் தடுக்கப்பட்டு சரியாக வேலை செய்வதை நிறுத்தக்கூடும். சில தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இன்னும் சுத்திகரிப்பு அமைப்புகள் வழியாக செல்ல வாய்ப்புள்ளது.


ஆபத்து முக்கியமாக விமானத்தின் இயந்திரங்களும் மற்ற இயந்திரப் பாகங்களுக்கும் தான் உள்ளது. இதனாலேயே விமான நிறுவனங்கள் எரிமலை சாம்பல் பயணிக்கும் பகுதிகளைத் தவிர்க்கின்றன. உலகம் முழுவதும் எரிமலை வெடிப்புகளைக் கண்காணித்து, ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச மையங்களின் வலைப்பின்னல் ஒன்று உள்ளது. விமானப் போக்குவரத்து நிர்வகிக்கப்படும் அடிப்படையில், பயணிகள் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகிறது.



அது எப்படி முடிகிறது?


எரிமலைத் தூண்களின் இயக்கம் ஒரு குறுகியகால நிகழ்வாகும். அவற்றின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்குள் முற்றிலுமாக நின்றுவிடும். காலப்போக்கில், சிறிய சாம்பல் துகள்கள் பரவி, சிக்கல்களை ஏற்படுத்த முடியாத அளவுக்கு மெல்லியதாகின்றன. மேகங்களும் மழையும் இந்தத் துகள்களில் பலவற்றை காற்றில் இருந்து அகற்ற உதவுகின்றன. இதனால் அவற்றின் தாக்கத்தை பெரிதும் குறைத்துவிடும்.


சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் காற்றில் நீண்டகாலம் தங்கியிருக்கும். ஆனால், அவை ஏற்கனவே வளிமண்டலத்தில் உள்ளன. வளிமண்டலத்தில் அவற்றின் தற்போதைய செறிவில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு புகைமூட்டத்தில் உள்ள இந்த வாயுக்களின் அளவு அதிகமாக இல்லை.


Orginal Article: Hayli Gubbi volcanic eruption in Ethiopia

Share: