நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் என்பது என்ன? - ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— பாஜக தலைமைக் கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் ஆகியோர் அளித்த இரு அறிவிப்புகள் தொடர்பாக, வரும் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பதிலை பரிசீலனைக்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


— பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்டம் (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026) பற்றிய விவாதத்தின்போது, அவை விதிகள் 353-ன்படி முன்அறிவிப்பு ஏதுமின்றி, அமித் ஷா மீது "நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக ராகுல் காந்தி மீது அமித் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக "உரிமை மீறல்" மற்றும் "அவமதிப்பு"  அறிவிப்பாணையை  ஜூலை மாதம் 30-ஆம் தேதி தாக்கூர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

— மேலும், ஜூலை மாதம் 29-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், பொதுத் தேர்வுகள் திருத்தச் சட்ட விவாதத்தின்போது ராகுல் காந்தி பயன்படுத்திய "நாடாளுமன்றத்திற்குப் புறம்பான சொற்கள்" குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஞ்சய் ஜெய்ஸ்வால் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— நாடாளுமன்றப் பணிகளைத் தடையின்றி நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில சிறப்பான உரிமைகளே நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் ஆகும்.


— அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் விலக்களிப்புகள் (immunities) ஆகியவற்றை நாடாளுமன்றமே வரையறுக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள்-105 மற்றும் 122 நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளைப் பற்றியும், பிரிவுகள் 194 மற்றும் 212 மாநில சட்டமன்றங்களின் சிறப்புரிமைகளைப் பற்றியும் விளக்குகின்றன.


— பிரிவு-105: நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முழு பேச்சுரிமை உண்டு. நாடாளுமன்றத்திலோ அல்லது அதன் எந்தவொரு குழுவிலோ ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய பேச்சுக்கோ அல்லது அளித்த வாக்கிற்கோ எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது.


— பிரிவு-122: நாடாளுமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் நடைமுறை தவறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அதை எந்தவொரு நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது.


— சட்டப்பிரிவு-194 மற்றும் சட்டப்பிரிவு-212 ஆகிய இரண்டும் மாநில சட்டமன்றத்திற்கான இணையான சட்டப்பிரிவுகள் ஆகும்.


— இத்தகைய சிறப்புரிமை மீறப்பட்டுவிட்டது என்று கருதப்பட்டால், எந்தவொரு உறுப்பினரும் அதுகுறித்த தீர்மானத்தை கொண்டுவர முடியும்.


— நாடாளுமன்றச் சிறப்புரிமை குறித்து கேள்வி எழுப்பும் உரிமை பின்வரும் இரண்டு நிபந்தனைகளை நிறைவு செய்வதன் அடிப்படையில் அமைகிறது: (i) அந்தப் பிரச்சனை சமீபத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும். (ii) அந்த விவகாரத்தில் மாநிலங்களவையின் தலையீடு அவசியமானதாக இருக்க வேண்டும்.


— ஒரு உரிமைமீறல் தீர்மானத்தின் மீதான முதல் கட்ட ஆய்வை மக்களவைத் தலைவர் மேற்கொள்கிறார். எனவே, இந்த உரிமை மீறல் தீர்மானத்தின்மீது அவைத்தலைவர் அவராகவே நேரடியாக முடிவெடுக்கலாம் அல்லது அதனை நாடாளுமன்றத்தின் உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்.


Original Link: What are parliamentary privileges?

Share: