இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் (Bar Council of India (BCI)) அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன? இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தால் வழக்கறிஞர்களைப் பதிவுசெய்ய முடியுமா? மாநில வழக்கறிஞர் சங்கங்களின் பணி என்ன? மேலும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் வழக்கறிஞர்களாக பணி செய்ய முடியுமா? இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அதன் அதிகாரங்கள் மற்றும் சட்டத் தொழிலை ஒழுங்குபடுத்துவதில் அதன் பங்கு ஆகியவை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்களுக்குப் பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக, தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026-ஆம் ஆண்டுப் பிரிவு மாணவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்ய வேண்டாம் என்று மாநில வழக்கறிஞர் சங்ககளுக்கு இந்திய வழக்கறிஞர் சங்கம் (BCI) ஆகஸ்ட் 13 அன்று உத்தரவிட்டது. இருப்பினும், சில மணிநேரங்களிலேயே அந்த உத்தரவை இந்திய வழக்கறிஞர் சங்கம் திரும்பப் பெற்று, அது தொடர்பான நடவடிக்கைகளையும் முடித்துவைத்தது. இந்தச்சூழலில், இந்திய வழக்கறிஞர் சங்கம் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. இந்திய வழக்கறிஞர் சங்கம் என்பது, இந்திய வழக்கறிஞர் சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின்கீழ் நாடாளுளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.
2. 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் (Advocates Act) சட்டம், பிரிவு 3-ன்கீழ் மாநில வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் பிரிவு 4-ன்கீழ் இந்திய வழக்கறிஞர் சங்கம் என இரண்டு அடுக்கு கட்டமைப்பை உருவாக்குகிறது.
3. இந்திய வழக்கறிஞர் சங்கமானது, ஒவ்வொரு மாநில வழக்கறிஞர் சங்கத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் மற்றும் அலுவல்வழி உறுப்பினராகச் (Solicitor General) செயல்படும் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரைக் கொண்டுள்ளது. மாநில வழக்கறிஞர் சங்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்குப் பதவியில் இருப்பார்கள்.
4. சங்கம் அதன் உறுப்பினர்களிலிருந்து, இரண்டு வருட காலத்திற்குத் தனது தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறது. தற்போது, மனன் குமார் மிஸ்ரா இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பணி மற்றும் செயல்பாடுகள் யாவை?
5. 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் 7-வது பிரிவானது, இந்தியாவில் சட்டத் தொழில் மற்றும் சட்டக் கல்விக்கான வழக்கறிஞர் சங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் பிரதிநிதித்துவ அதிகார வரம்பை கொண்டுள்ளது: அவை,
வழக்கறிஞர்களுக்கான தொழில்முறை நடத்தை மற்றும் ஒழுக்க விதிமுறைகளுக்கான தரநிலைகளை நிர்ணயித்தல். மேலும், வழக்கறிஞர் சங்கத்தின் மூலம் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு விவகாரத்தையும் விசாரித்து முடிவு செய்தல்,
வழக்கறிஞர் சங்கத்தின் ஒழுங்குமுறைக் குழுவும், ஒவ்வொரு மாநில வழக்கறிஞர் சங்கத்தின் ஒழுங்குமுறைக் குழுக்களும் பின்பற்ற வேண்டிய ஒரு செயல்முறையை வகுத்தல்,
வழக்கறிஞர்களின் உரிமைகள், சிறப்பு உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல். சட்ட சீர்திருத்தத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆதரித்தல்,
இந்தியாவில் சட்டக்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில வழக்கறிஞர் மன்றங்களுடன் கலந்தாலோசித்து, சட்டக் கல்வியை மேம்படுத்துவதற்கும், சட்டக் கல்விக்கான தரநிலைகளை வகுத்தல்,
வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்குச் சட்டப் பட்டத்தை ஒரு தகுதியாகக் கொண்ட பல்கலைக்கழகங்களை அங்கீகரித்தல்,
இதற்காக, இந்திய வழக்கறிஞர் சங்கம் நேரடியாகப் பல்கலைக்கழகங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறது அல்லது மாநில வழக்கறிஞர் சங்கங்களை அந்த பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்,
புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களைக் கொண்டு சட்டத் தலைப்புகள் குறித்த கருத்தரங்குகள் மற்றும் உரைகளை நடத்துதல்; சட்ட முக்கியத்துவம் வாய்ந்த இதழ்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிடுதல்.
ஏழைகளுக்கு சட்ட உதவி வழங்குதல். இந்தியாவில் வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்காக, இந்தியாவிற்கு வெளியே பெறப்பட்ட வெளிநாட்டுச் சட்டத் தகுதிகளைப் பரஸ்பர அடிப்படையில் (Reciprocal basis) அங்கீகரித்தல்.
வழக்கறிஞர் சங்கத்தின் (Bar Council) நிதியை நிர்வகித்தல் மற்றும் முதலீடு செய்தல், அந்த சங்கங்களை நிர்வகிக்கும் உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகளைச் செய்தல் போன்றவைகளாகும்.
6. வழக்கறிஞர் சங்கம் பின்வரும் நோக்கங்களுக்காகவும் நிதிகளை உருவாக்கலாம்:
(i) ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் அல்லது பிற ஆதரவாளர்களுக்கான நலத்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு நிதியுதவி வழங்குதல்,
(ii) சட்ட உதவி (Legal Aid) வழங்குதல்,
(iii) சட்ட நூலகங்களை (Law Libraries) உருவாக்குதல்,
6. குறிப்பாக, வழக்கறிஞர் சங்கம் இந்த நோக்கங்களில் ஏதேனும் ஒன்றிற்காக மானியங்கள், நன்கொடைகள் மற்றும் பரிசுகளையும் பெறலாம்.
வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர்களாக பதிவுசெய்வதற்கு பொறுப்பான அமைப்பாகுமா?
இல்லை. வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 7, வழக்கறிஞர் சங்கத்திற்கு ஒழுங்குமுறை (Regulatory) மற்றும் பிரதிநிதித்துவ (Representative) பொறுப்புகளை வழங்குகிறது. அதேபோல், பிரிவு 49, வழக்கறிஞர் சங்கத்திற்கு விரிவான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
ஆனால், இந்தப் பிரிவுகள் எதுவும் ஒரு நபரை வழக்கறிஞராக பதிவுசெய்யும் அதிகாரத்தை வழக்கறிஞர் சங்கத்திற்கு வழங்கவில்லை. இந்த அதிகாரம் மாநில வழக்கறிஞர் சங்கத்திடம் உள்ளது.
குறிப்பாக, பிரிவு 6, மாநில வழக்கறிஞர் சங்கத்தின் பணிகளில் ஒன்றாக, “தனது பதிவேட்டில் (Roll) நபர்களை வழக்கறிஞர்களாக சேர்த்துக்கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது.
8. இருப்பினும், வழக்கறிஞர் பதிவு செய்யும் செயல்முறையில் வழக்கறிஞர் சங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறமுடியாது. வழக்கறிஞர் சங்கத்தின் பிரிவு 26, இந்திய வழக்கறிஞர் சங்கத்திற்க்கு ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை (narrow carve-out) வழங்குகிறது.
9. ஒரு மாநில வழக்கறிஞர் சங்கத்தின் பதிவுக் (Enrolment Committee) குழு, ஒருவரின் சேர்க்கை விண்ணப்பத்தை நிராகரிக்க முடிவு செய்தால், “அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை விளக்கும் “விண்ணப்ப மறுப்புக்கான (refusal of the application) ஆதாரங்களின் அறிக்கை” உடன் அந்த விவகாரத்தை வழக்கறிஞர் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர், பிரிவு 26(3)-ன் படி, “இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் கருத்துக்கு ஏற்ப மாநில வழக்கறிஞர் மன்றம் அந்த விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் செய்யமுடியுமா?
1. 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (BCI) வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட அமைப்புகள் இந்தியாவில் தொழில் செய்ய அனுமதி அளித்தது. இவர்களால் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக வாதாட முடியாது என்றாலும், வெளிநாட்டுச் சட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கவும், பெருநிறுவனங்கள் சார்ந்த வணிகப் பரிவர்த்தனைகளில் பணியாற்றவும் முடியும்.
2. 10-ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியாவில் வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்களை அனுமதிப்பதை இந்தியா வழக்கறிஞர் சங்கம் எதிர்த்து வந்தது. இருப்பினும், நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டு தொடர்பான கவலைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் இந்தியாவை சர்வதேச வணிக நடுவர் மன்ற நடவடிக்கைகளை (international commercial arbitration) முக்கியமான ஒன்றாக மாற்றுவது ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்தியா வழக்கறிஞர் சங்கம் பின்னர் இதற்கு அனுமதி அளித்தது.
3. விரிவான 'நோக்கங்கள் மற்றும் காரணங்கள்' குறித்த அறிக்கையில், "பரஸ்பர ஒத்துழைப்பு (reciprocity) என்ற கொள்கையின் அடிப்படையில், நன்கு வரையறுக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுக்குட்பட்ட முறையில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டுச் சட்ட அமைப்புகள் இந்தியாவில் வெளிநாட்டுச் சட்டம், பல்வேறு சர்வதேசச் சட்டங்கள் மற்றும் சர்வதேச நடுவர் மன்ற விவகாரங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் விதிகளைச் செயல்படுத்த இந்தியா வழக்கறிஞர் சங்கம் தீர்மானிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
4. தங்கள் சொந்த நாடுகளில் சட்டத் தொழில் செய்ய சட்டப்பூர்வ தகுதி பெற்றிருந்தால், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட அமைப்புகள், இந்தியாவில் சட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு (Register) செய்யலாம். இருப்பினும், அவர்களால் இந்தியச் சட்டத்தின்கீழ் வழக்கறிஞர்களாக பணி செய்ய முடியாது.