சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பு (International Big Cat Alliance) ஏன் முக்கியமானது? - குஷ்பு குமாரி

 ஜனவரி 23 அன்று, சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பு (International Big Cat Alliance (IBCA)) ஒரு முழுமையான ஒப்பந்த அடிப்படையிலான அரசுகளுக்கிடையேயான அமைப்பாக மாறியது. ஏழு பெரும்பூனைகளின் உலகளாவிய பாதுகாப்பிற்காக இந்தக் கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி 2023-ல் தொடங்கினார். கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசாங்கம் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் சேர விரும்பும் நாடுகளின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை இது வைத்திருக்கிறது. இந்த ஆவணங்களில் உறுதி செயதல், ஒப்புதல் அல்லது அணுகல் ஆவணங்கள் அடங்கும்.





முக்கிய அம்சங்கள் :


1. கட்டமைப்பு ஒப்பந்தம் (framework agreement), இப்போது நடைமுறையில் உள்ளது. இது திட்டமிட்டபடி சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பின் (IBCA) இயக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இப்போது அது அதன் நிர்வாக அமைப்புகள், செயலகம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை அமைக்கலாம். இந்தியா உட்பட மொத்தம் 27 நாடுகள் சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பில் (IBCA) சேர ஒப்புக்கொண்டுள்ளன.


2. சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பு (IBCA) கட்டமைப்பு ஒப்பந்தத்தால் நடைமுறைக்கு வருவதற்கு, இந்தியா உட்பட ஐந்து நாடுகள் தங்கள் ஒப்புதல் ஆவணத்தை அங்கீகரித்து முறையாக சமர்பிக்க வேண்டியிருந்தது. கடந்த மாதம், ஒப்பந்தத்தை அங்கீகரித்த ஐந்தாவது நாடாக லைபீரியா மாறியது. ஒப்பந்தத்தை அங்கீகரித்த மற்ற நான்கு நாடுகள் இந்தியா, நிகரகுவா, எஸ்வதினி மற்றும் சோமாலியா என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.


3. சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பு (IBCA) என்பது பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 2023-ம் ஆண்டில் மைசூரில் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழு பெரும்பூனைகளைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே ஐபிசிஏவின் முக்கிய குறிக்கோள் ஆகும். இவற்றில் சிங்கம் (lion), புலி (tiger), சிறுத்தை (leopard), வேங்கைப் புலி (cheetah), பனிச்சிறுத்தை (snow leopard), ஜாகுவார் (jaguar) மற்றும் பூமா (puma) ஆகியவை அடங்கும். இந்த இனங்கள் பற்றிய அறிவுப் பகிர்வை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதில் இது கவனம் செலுத்துகிறது.


4. இந்த கூட்டணியில் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு அல்லாத நாடுகள் இரண்டும் அடங்கும். இந்த பெரும்பூனைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்ட நாடுகள் வனவிலங்கு அல்லாத நாடுகளும் ஆகும். பெரும்பூனை பாதுகாப்பில் ஆர்வமுள்ள வனவிலங்கு அல்லாத நாடுகளும் கூட்டணியின் ஒரு பகுதியாகும். இந்தக் கூட்டணியில் பாதுகாப்பு கூட்டாளிகள் மற்றும் இந்தத் துறையில் பணிபுரியும் அறிவியல் அமைப்புகளும் அடங்கும்.


5. இந்தியா செப்டம்பர் 2024-ம் ஆண்டில் சர்வதேச பெரும்பூனைக் கூட்டமைப்பில் (IBCA) அதிகாரப்பூர்வமாக இணைந்தது. அதற்கு முன், பிப்ரவரி 2024-ல், IBCA-ன் தலைமையகத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2023-24 முதல் 2027-28 வரையிலான காலத்திற்கு ரூ.150 கோடிக்கான ஒரு முறை பட்ஜெட்டையும் இது அனுமதித்தது.


பெரும்பூனைகள் பற்றி (About the Big Cats)


1. சிங்கம் (பாந்தெரா லியோ) (Lion (Panthera Leo)) : சிங்கங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. அவை அனைத்து பூனைகளிலும் மிகவும் சமூகமானவை மற்றும் பெருமைமிகு குழுக்களாக வாழ்கின்றன. சிங்கங்கள் புதர்க்காடுகள் போன்ற திறந்த காடுகளை விரும்புகின்றன. வயது வந்த ஆண் சிங்கங்களுக்கு ஒரு முக்கிய உடல் அமைப்பு உள்ளது. விரிவான, நீண்டகால பாதுகாப்பு முயற்சிகள் மூலம் ஆசிய சிங்கங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக சிங்கத் திட்டம் (Project Lion) ஆகஸ்ட் 2020-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வேகமாக குறைந்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான முக்கியமான தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாக (World Lion Day) அனுசரிக்கப்படுகிறது. ஆசிய சிங்கங்களின் ஒரே தாயகம் குஜராத் மாநிலமாகும்.


2. சிறுத்தை (Panthera Pardus) (Leopard (Panthera Pardus)) : ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா இரண்டிலும் ஒன்பது வகையான சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறுத்தை பெரும்பூனைகளில் மிகச் சிறியது. பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறனுக்காக இது நன்கு அறியப்பட்டதாகும். சிறுத்தைகள் இரவு நேர விலங்குகள், அதாவது அவை இரவில் வேட்டையாடுகின்றன. "இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை, 2022" அறிக்கையின்படி, இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 13,784 சிறுத்தைகள் இருந்தன. இது 2018-ம் ஆண்டில் 12,852ஆக இருந்ததைவிட அதிகமாகும்.


 3. பனிச்சிறுத்தை (Panthera uncia) (Snow Leopard (Panthera uncia)) : பனிச்சிறுத்தை பன்னிரண்டு ஆசிய நாடுகளின் மலைகளில் வாழ்கிறது. இந்த நாடுகளில் ஆப்கானிஸ்தான், பூட்டான், சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை அடங்கும். இந்தியாவில், பனிச்சிறுத்தை எண்ணிக்கைகான மதிப்பீடு (Snow Leopard Population Assessment (SPAI)), 2024 மொத்தம் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. அவை லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படுகின்றன.


4. புலி (பாந்தெரா டைக்ரிஸ்) (Tiger (Panthera Tigris)) : அகில இந்திய புலி மதிப்பீடு (All India Tiger Estimation) 2022 சுருக்க அறிக்கையின் ஐந்தாவது சுழற்சியின்படி, இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் உள்ளன. இது உலகின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. புலிகளைப் பாதுகாப்பதற்காக அஸ்ஸாம், பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒன்பது சரணாலங்களில் 1973-ம் ஆண்டில், மத்திய நிதியுதவித் திட்டமான புலி திட்டம் (Project Tiger) தொடங்கப்பட்டது.


5. வேங்கைப் புலி (Acinonyx jubatus) (Cheetah (Acinonyx jubatus)) : 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க கிளையினங்கள் அல்ல இந்த வகை இனம். இந்தியா ஒரு காலத்தில் ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. ஆசிய சிறுத்தை சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சிவப்பு பட்டியலால் "மிகவும் ஆபத்தான நிலையில்" வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஈரானில் மட்டுமே உயிர்வாழ்வதாக நம்பப்படுகிறது. மறுபுறம், ஆப்பிரிக்க சிறுத்தை IUCN சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய (vulnerable (VU)) இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிறுத்தைகளை இடமாற்றம் செய்வது சீட்டா திட்டத்தின் (Project Cheetah) கீழ் தொடங்கியது.


6. ஜாகுவார்ஸ் (பாந்தெரா ஓன்கா) (Jaguars (Panthera onca)) : ஜாகுவார் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல, அவை முக்கியமாக தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன. சில ஜாகுவார்களுக்கு மரபணுப் பண்பு காரணமாக கருப்பு ரோமங்கள் உள்ளன. இந்த கருப்பு ஜாகுவார் கருப்பு சிறுத்தைகள் என்று அழைக்கப்படுகிறது. மாயன் (Mayan) மற்றும் ஆஸ்டெக் (Aztec) நாகரிகங்களில், ஜாகுவார் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக இருந்தது.


7. பூமா (பூமா கன்கலர்) (Puma (Puma concolor)) : பூமா இனமானது, வீட்டுப் பூனையுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த இனத்தில் கூகர் (cougar) என்ற ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது. இது "சிறிய பூனைகளில்" மிகப்பெரியது. அவை கனேடிய யூகோன் (Canadian Yukon) முதல் தெற்கு ஆண்டிஸ் வரையிலான எல்லையில் 'மலை சிங்கங்கள்' (mountain lions) மற்றும் 'பாந்தர்கள்' (panthers) என்றும் அழைக்கப்படுகின்றன. அவர்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவைகள் அல்ல.


பெரும்

பூனைகள்

IUCN நிலை

அட்டவணை (WPA, 1972)

புலி

அழியும் நிலையில் உள்ளது

அட்டவணை 1

சிறுத்தை

ஆசிய விலங்கு - ஆபத்தான நிலையில் உள்ளது

அட்டவணை 1

சிறுத்தை

ஆப்பிரிக்க விலங்கு - பாதிக்கப்படக்கூடியது

அட்டவணை 1

சிங்கம்

பாதிக்கப்படக்கூடியது

அட்டவணை 1

பனிச்சிறுத்தை

பாதிக்கப்படக்கூடியது

அட்டவணை 1

ஜாகுவார்

கிட்டத்தட்ட அழியும் நிலை 

-

பூமா

தற்போது ஆபத்தில் இல்லை

-


முக்கிய தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள்


1. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, உத்தரகண்ட் : இந்தப் பூங்கா, நைனிடால் அருகே, இமயமலை அடிவாரத்தில் உள்ளது. இந்த பூங்கா பிரபலமானது மற்றும் ஒரு புகழ்பெற்ற தரநிலையைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் முதல் தேசிய பூங்காவாகும். மற்றும் புலி திட்டம் (Project Tiger) இங்கு தொடங்கப்பட்டது.


2. சுந்தர்பன் தேசியப் பூங்கா, மேற்கு வங்கம் : சுந்தர்பன் தேசிய பூங்கா (Sunderban National Park) மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. இது ஒரு உயிர்க்கோளக் காப்பகம் (biosphere reserve), ஒரு தேசிய பூங்கா (national park) மற்றும் ஒரு புலிகள் காப்பகம் (tiger reserve) ஆகும். இந்த பூங்கா உலகின் மிகப்பெரிய சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பான சுந்தர்பன் டெல்டாவிற்கு பெயர் பெற்றது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். தேசிய பூங்கா அதன் ராயல் பெங்கால் புலிகளுக்கு பிரபலமானது. மீன்பிடி பூனைகள் (fishing cats), மக்காக்குகள்-குரங்கு இனம் (macaques), சிறுத்தை பூனைகள் (leopard cats), இந்திய சாம்பல் கீரிகள் (Indian grey mongoose), காட்டுப்பன்றிகள் (wild boar), பறக்கும் நரிகள் (flying fox), இந்திய எறும்புண்ணிகள் (pangolin) மற்றும் பல போன்ற பிற வனவிலங்குகளுக்கும் இது தாயகமாகும்.


3. ரதபானி வனவிலங்கு சரணாலயம், மத்தியப் பிரதேசம் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி வனவிலங்கு சரணாலயம் (Ratapani Wildlife Sanctuary), டிசம்பர் 2024-ம் ஆண்டில் இந்தியாவின் 57-வது புலிகள் காப்பகமாக மாறியது. இது 763.8 சதுர கி.மீ மையப் பகுதியையும் 507.6 சதுர கி.மீ இடையகப் பகுதியையும் கொண்டுள்ளது. காப்பகத்தின் மொத்த பரப்பளவு 1271.4 சதுர கி.மீ ஆகும். இந்தக் கூடுதலாக, மத்தியப் பிரதேசத்தில் இப்போது எட்டு புலிகள் காப்பகங்கள் உள்ளன.


புலிகள் காப்பகம்


    இந்தியாவில் புலிகள் காப்பகம் என்பது 1973-ம் ஆண்டு புலிகள் திட்ட முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது புலிகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சரணாலயங்கள் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அவை பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும் உதவுகின்றன.


4. பாந்தவ்கர் தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேசம் : பந்தவ்கர் தேசிய பூங்கா மத்தியப் பிரதேசத்தின் மையத்தில் உள்ளது. காடுகளில் புலிகளைப் பார்க்க இது சிறந்த இடங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வங்காளப் புலிகளைக் கொண்டுள்ளது.




Original article:

Share:

கடல் வெப்ப அலைகள் (marine heatwaves (MHW)) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. இலாப நோக்கற்ற குழுவான காலநிலை மையத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்டது. கடல் வெப்ப அலைகள் (marine heatwaves (MHW)) மிகவும் அதிகமாகி வருவதைக் கண்டறிந்தது. சில பகுதிகளில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை (sea surface temperatures (SST)) இந்த ஆண்டின் இந்த நேரத்தில் வழக்கமான அளவை விட 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்ந்துள்ளது.


2. மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்போதைய கடல் வெப்ப அலைகள் (MHW) இதுவரை பதிவு செய்யப்படாத இரண்டாவது மோசமான அளவாகும். மேலும், இது 2010–11 கோடையில் மிக மோசமானது. அந்த நேரத்தில், வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் உயர்ந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உச்சத்தை எட்டியது என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.


3. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட 'புவி வெப்பமடைதலின் கீழ் கடல் வெப்ப அலைகள்' என்ற 2018-ம் ஆண்டு ஆய்வின்படி, கடந்த சில பத்தாண்டுகளில், கடல் வெப்ப அலைகள் (MHW) நீண்டகாலம் நீடிக்கும், அடிக்கடி மற்றும் தீவிரமாகிவிட்டதாகக் கண்டறிந்துள்ளது. "1982 மற்றும் 2016-க்கு இடையில், கடல் வெப்ப அலைகள் (MHW) நாட்களின் எண்ணிக்கையில் இரட்டிப்பாக அதிகரிப்பதை நாங்கள் கண்டறிந்தோம்" என்று ஆய்வு கூறியது.


4. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) 2021 அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் கடல் வெப்ப அலைகள் (MHW) 50% அதிகரித்துள்ளதாகக் கூறியது. அவை இப்போது நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் மேலும் கடுமையானதாகி வருகின்றன. கடல் வெப்ப அலைகள் (MHW) வாரங்கள் அல்லது ஆண்டுகள்கூட நீடிக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது. அவை சிறிய கடலோரப் பகுதிகளை பாதிக்கலாம் அல்லது பல பெருங்கடல்களிலும் பரவலாம். மேற்பரப்பு மற்றும் ஆழமான நீர்நிலைகள் இரண்டிலும், அனைத்து அட்சரேகைகளிலும், அனைத்து வகையான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் கடல் வெப்ப அலைகள் (MHW) காணப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா? :


1. கடல் வெப்ப அலை என்பது ஒரு வகையான தீவிர வானிலை நிகழ்வு ஆகும். ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்போது இது நிகழ்கிறது. இந்த அதிகரிப்பு குறைந்தது ஐந்து நாட்களுக்கு நீடிக்க வேண்டும். அமெரிக்க அரசு நிறுவனமான தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) படி, கடல் வெப்ப அலைகள் வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட தொடரலாம்.


2. கடல் வெப்ப அலைகள் (MHW) கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் 2010-11 காலகட்டத்தில் கடல் வெப்ப அலைகள் (MHW) பெரிய மீன் இறப்புகளுக்கு வழிவகுத்தன. இதன் பொருள் பல மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகள் குறுகிய காலத்தில் பெரும்பாலும் ஒரு பகுதியில் திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் இறந்தன. வெப்ப அலைகள் கெல்ப் காடுகளையும் (kelp forests) அழித்தன. கெல்ப்ஸ் குளிர்ந்த நீரில் வளர்வதால் இந்தக் காடுகள் முக்கியமானவை. அவை, பல கடல் விலங்குகளுக்கு வாழ்விடம் மற்றும் உணவு இரண்டையும் வழங்குகின்றன.


3. இந்த வெப்ப அலைகள் பவளப்பாறை வெண்மையாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது பவளப்பாறைகளின் இனப்பெருக்க திறனைக் குறைத்து அவற்றை பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக, அவை கொடிய நோய்களுக்கு ஆளாகின்றன. ஆயிரக்கணக்கான கடல் விலங்குகள் உயிர்வாழ பவளப்பாறைகளை நம்பியுள்ளன. பவளப்பாறைகள் சேதமடைந்தால், இந்த விலங்குகளும் ஆபத்தில் இருக்கலாம்.




Original article:

Share:

உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச காலநிலை கொள்கையில் அதன் தாக்கங்கள் குறித்த இந்தியாவின் மாறிவரும் நிலைப்பாடு -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. விரைவான பொருளாதார வளர்ச்சியே, வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதன் விளைவாக, மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள் உட்பட பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளை அது நிராகரிக்கிறது.


2. இந்த வாதங்கள் புதியவை அல்ல என்றாலும், இந்தியா இப்போது அவற்றை மிகவும் வலுவாகவும், தெளிவாகவும் முன்வைக்கிறது. இந்தியா தனது காலநிலை நடவடிக்கைகளில் அதிக நெகிழ்வுத்தன்மையை உருவாக்க முயற்சிக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்தப் பிரச்சினையில் நாட்டின் எதிர்காலத் தேர்வுகளுக்கான தெளிவான கட்டமைப்பையும் இது வழங்குகிறது.


3. இந்தியாவின் மாறிவரும் கவனமானது, தற்போதைய சூழ்நிலையை மறுபரிசீலனை செய்வதன் மூலம் இயக்கப்படுகிறது. உலகம் 2030 அல்லது 2035ஆம் ஆண்டிற்கான அதன் கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வளர்ந்த நாடுகள் போதுமான நடவடிக்கை எடுக்காததே ஆகும். உண்மையில், உலகளாவிய உமிழ்வு இன்னும் அதிகரித்து வருகிறது என்பதே நிதர்சனம்.


4. இந்தியா போன்ற வளரும் நாடுகள், தணிப்பு முயற்சிகளுக்கு வளங்களை செலவிடுவதற்கு சிறிய ஊக்கத்தொகையைக் கொண்டுள்ளது. முழு உலகமும் பெரிய அளவில் உமிழ்வைக் குறைக்கும்போது மட்டுமே தணிப்பின் நன்மைகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும். கூடுதலாக, இந்த நன்மைகள் உடனடியாகப் பிரதிபலிக்காது. ஏனென்றால், புவி வெப்பமடைதல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடப்படும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவால் ஏற்படுவதில்லை. மாறாக, வளிமண்டலத்தில் அவற்றின் நீண்டகால செறிவால் இது விளைகிறது.


5. ஏற்பு என்பது உடனடி மற்றும் உள்ளூர் நன்மைகளை வழங்குகிறது. இது சமூகங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க உதவுகிறது. மீள்தன்மையை வலுப்படுத்துவது வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பல சந்தர்ப்பங்களில், மீள்தன்மையானது இருக்கும் செறிவைப் பொறுத்தது. அதனால்தான் பருவநிலை நெருக்கடியிலிருந்து பாதுகாக்க வளர்ச்சியே சிறந்த வழி என்று இந்தியா வாதிடுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? :


1. 2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் தரநிலைகளை பூர்த்தி செய்வதை இந்தியா முதலில் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அது கூறியது. அதன் பிறகு, 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதில் இந்தியா கவனம் செலுத்த முடியும். இந்த அணுகுமுறையானது மிகவும் முக்கியம். ஏனெனில், இது விரைவான பொருளாதார வளர்ச்சியுடன் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் டிகார்பனைசேஷனை சமநிலைப்படுத்தும் சவாலைத் தவிர்க்க இந்தியாவுக்கு உதவும்.


2. இந்தியா சீனாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. சீனாவானது, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலில் முழுமையாக கவனம் செலுத்தியுள்ளது. 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து நான்கு மடங்கு அதிகரித்துள்ள அதன் உமிழ்வுகள் குறித்து அது கவலைப்படவில்லை. உலகளாவிய காலநிலை கட்டமைப்பு உருவாக்கப்பட்ட நேரமும் இதுதான்.


3. காலநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய கவனம் சற்று குறைந்துள்ள நேரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறது. 2023 மற்றும் 2024 ஆகியவை அடுத்தடுத்து அதிக வெப்பநிலையைப் பதிவு செய்த போதிலும் இது நடக்கிறது. ஆயுத மோதல்கள் மற்றும் தொழில்நுட்பப் போர்கள் போன்ற முக்கிய பிரச்சினைகள் காலநிலை நெருக்கடியிலிருந்து கவனத்தை மாற்றியுள்ளன.


4. இந்தியா தற்போது தனது சொந்த குறைந்த கார்பன் மேம்பாட்டு நிலையை தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. வெளிப்புற குறுக்கீடு இல்லாமல் அதன் ஆற்றல் மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. இந்தக் கோரிக்கை நியாயமானது மற்றும் கருத்துள்ளது. இருப்பினும், இதை அடைவதற்கான பொறுப்பு உலகின் பிற பகுதிகளை விட இந்தியாவிற்கு அதிகம் உள்ளது.


5. அதனால்தான், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய மட்டு அணு உலைகளை (small modular nuclear reactors (SMR)) உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இந்தியா தனது அணுசக்தித் திறனை விரிவுபடுத்துவதில் மிகவும் மெதுவாக உள்ளது. இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் (India-US civil nuclear deal) மற்றும் அணுசக்தி வழங்குநர் குழுவில் (Nuclear Suppliers Group) சிறப்பு விலக்கு ஆகியவை இந்த விரிவாக்கத்தை விரைவுபடுத்த உதவியிருக்க வேண்டும். இருப்பினும், பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது, சிறிய மட்டு அணு உலைகள் (​​SMR) அணுசக்தித் துறையில் வளர்ச்சிக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகின்றன.




Original article:

Share:

தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் என்னென்ன விஷயங்களை பரிசீலிக்கும்? -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 2023-ஆம் ஆண்டு முதல்,  தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, ​​கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், இது போன்ற தாமதங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தன. மற்ற அனைத்து வழக்குகளுக்கும் தமிழ்நாடு வழக்கு ஒரு முன்மாதிரியாக (precedent)  அமையும்.


சட்டப்பேரவைச் செயல்பாட்டில் ஆளுநரின் அதிகார வரம்பு குறித்த கேள்விகளை எழுப்பி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்தது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நீண்டகால தாமதம் "நாட்டின் ஜனநாயக அமைப்பை தோல்வியடைய செய்யும்" (system of democracy will fail in this country) சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.


மாநில மசோதாக்களை அங்கீகரிப்பதில் ஆளுநரின் பங்கை வரையறுக்கும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின் மீது இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது. ஆளுநர் மசோதாவை அங்கீகரிக்க வேண்டும் (assents to the Bill),  நிராகரிக்க வேண்டும் அல்லது மறுஆய்வுக்காக  குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் மசோதாவைப் பெற்ற பிறகு இந்த முடிவு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்றும்  அரசியலமைப்பின் 200-வது பிரிவு கூறுகிறது.


சட்டமியற்றுவதில் ஆளுநரின் பங்கு


அரசியலமைப்புச் சட்டம் ஆளுநரின் பதவியை அரசியல் சார்பற்றதாகக் கருதுகிறது. பல ஆண்டுகளாக, ஆளுநரின் அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக, ஆளுநர் மாநில அமைச்சரவை குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, ஆளுநர் பிரிவு 356-ன் கீழ்  குடியரசுத்தலைவர் ஆட்சியை (President’s rule) பரிந்துரைக்கலாம் மற்றும் பிரிவு 200-ன் கீழ் மசோதாக்களை அங்கீகரிப்பது குறித்து முடிவு செய்யலாம்.


மாநில சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அது ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது. பிரிவு 200 ஆளுநருக்கு மூன்று விருப்பங்களை வழங்குகிறது:


மசோதாவை அங்கீகரித்து, அதை ஒரு மாநில சட்டமாக மாற்றுவது.


மசோதாவை நிராகரித்து, மறுபரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கு  மீண்டும் அனுப்பலாம்.


மசோதாவை  குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம்.


ஆளுநர் ஒரு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பினால், மாநில சட்டமன்றம் அதை மாற்றலாம் அல்லது மாற்றங்கள் இல்லாமல் மீண்டும் (shall not withhold assent therefrom) நிறைவேற்றலாம். மசோதா மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ​​அவர் "அதற்கான ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்த கூடாது", ஆளுநர் மசோதாவை அங்கீகரிக்க வேண்டும். இருப்பினும், ஆளுநர் மசோதா உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாகக் கருதினால் (derogate from the powers of the High Court) அவர் அதை அங்கீகரிக்க முடியாது. இது போன்ற சூழல்களில், அந்த மசோதா இறுதி முடிவுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும்.

தமிழ்நாடு சர்ச்சை


2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைப்பது மற்றும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்வது குறித்து பலமுறை கவலைகளை எழுப்பி வருகிறது. ஜனவரி 2023 முதல் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பல மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்ட காரணத்தினால் நவம்பர் 2023-ல், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 


நவம்பர் 6, 2023 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிட முடியாது" என்று கூறியது. மேலும், "கட்சிகள் ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன் ஆளுநர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நிலுவையில் உள்ள மசோதாக்களை  தமிழ்நாடு சட்டசபை மீண்டும் நிறைவேற்றியது. இருப்பினும், ஆளுநர் இந்த மசோதாக்களில் இரண்டை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார். மீதமுள்ள மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்கவில்லை.


உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும் பிரச்சினைகள்


நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் சில சிக்கல்கள்:


மாநில சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பிறகு, ஆளுநர் இரண்டாவது முறை மசோதாவை அங்கீகரிக்க மறுத்தால், குறிப்பாக மசோதா முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளுநர் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை என்றால் இது முக்கியமானது.


எந்தவொரு மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது இந்த அதிகாரம் குறிப்பிட்ட வகை மசோதாக்களுக்கு மட்டுமே உள்ளதா என்பது 


ஒரு மசோதாவை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ஆளுநரின் முடிவைப் பாதிக்கும் காரணிகள்.


ஆளுநர் காலவரையின்றி ஒப்புதல் அளிக்கும்போது - பாக்கெட் மறுப்பு அதிகாரம் (pocket veto)  என்ற கருத்தை ஆராய்தல் மற்றும் அதற்கு இந்தியாவில் ஏதேனும் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை உள்ளதா என்பதை ஆய்வு செய்தல்.


சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க ஒரு காலக்கெடு இருந்தால்.


ஒப்புதலுக்கான காலக்கெடு  குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து


ஆளுநர் ஒரு மசோதாவை "முடிந்தவரை விரைவில்" (as soon as possible) முடிவு செய்ய வேண்டும் என்று சட்டப்பிரிவு 200 கூறுகிறது. இருப்பினும், அது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கடந்த கால வழக்குகளில் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்துள்ளது. ஆனால், ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.


2016-ஆம் ஆண்டு நபம் ரெபியா மற்றும் பமாங் பெலிக்ஸ் VS துணை சபாநாயகர் வழக்கில், இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி மதன் லோகூர் ஒரு தனி கருத்தை தெரிவித்தார். ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதலை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் ஆளுநர் மசோதாவை ஒரு செய்தியுடன் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் இருக்கலாம் என்று அவர் கூறினார்.


நவம்பர் 2023-ல், பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அரசாங்கம் குற்றம் சாட்டியது. பிரிவு 200-ல் உள்ள "முடிந்தவரை விரைவில்" (as soon as possible) என்ற  சொல், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு மசோதாவை காலவரையின்றி தாமதப்படுத்த முடியாது என்பதைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.




Original article:

Share:

தொழில்நுட்பமும் சமத்துவக் கல்வியில் உள்ள சவாலும் -மாதவ் சவான்

 கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தெளிவான திட்டம் இந்தியாவிடம் இல்லை. இதனால் அது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது கடினமாகிறது.


இந்தியாவில், 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில் கல்வியை மேம்படுத்த பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) பள்ளிகளில் அதிகமான குழந்தைகள் சேர்வதாகவும், உட்கட்டமைப்பு மேம்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியது. இருப்பினும், கற்றல் நிலைகள் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தன. அதே நேரத்தில், கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தன. கல்வியில் டிஜிட்டல் தீர்வுகளுக்கு பல நம்பிக்கைகள் இருந்தன. ஆனால், கிராமப்புற இந்தியாவில் உண்மையான மாற்றம் COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகுதான் வந்தது. ASER தரவு இந்த டிஜிட்டல் மாற்றத்தை தெளிவாகக் சுட்டிக்காட்டுகிறது.


திறன்பேசி (Smartphone) பயன்பாடும் கிராமப்புற வீடுகளும்


2018ஆம் ஆண்டில், கிராமப்புற வீடுகளில் 90% பேர் சாதாரண அலைபேசிகளை (mobile phones) வைத்திருந்தனர். மேலும், 36% பேர் திறன்பேசிகளைக் கொண்டிருந்தனர். 2022-ஆம் ஆண்டில், திறன்பேசி வைத்திருப்பவர்கள் 74% அதிகரித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின்படி இந்த எண்ணிக்கை இப்போது 84% எட்டியுள்ளது. வீட்டில் திறன்பேசிகளை வைத்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளது. மேலும், திறன்பேசி வைத்திருக்கும் 14 முதல் 16 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 19%-லிருந்து 31% ஆக அதிகரித்துள்ளது.


வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) தரவு, சிறு குழந்தைகளின் தாய்மார்களுக்கு சொந்தமாக தொலைபேசிகள் உள்ளதா என்பதை தெளிவாகக் காட்டவில்லை. எத்தனை தாய்மார்கள் தனிப்பட்ட முறையில் திறன்பேசி வைத்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.


கல்வி கற்பதற்கு திறன்பேசி வைத்திருப்பது முக்கியம். இது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.


முக்கியமாக, தொற்றுநோய் காலத்தில், பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக உரைகள், பணித்தாள்கள் மற்றும் காணொளிகளைப் பகிர திறன்பேசிகள் பயன்படுத்தப்பட்டன. மெய்நிகர் பயிற்சி அமர்வுகளும் (virtual training sessions) பொதுவானதாகிவிட்டன. தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தாங்கள் கற்றுக்கொண்ட டிஜிட்டல் திறன்களைத் தொடர்ந்து பயன்படுத்தினர். இருப்பினும், சில டிஜிட்டல் நடைமுறைகளின் முக்கியத்துவம் குறைந்தது. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence (AI)) மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது.


டிஜிட்டல் புரட்சி, திறந்தவெளி மற்றும் தொடர் கல்வி மூலம் பின்தங்கியவர்களுக்கு உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கல்விக்கான தேவை அதிகமாக உள்ளது. அதை மேம்படுத்த பல வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது ​​பள்ளி மாணவர்களின் தாய்மார்களில் 40%-க்கும் மேற்பட்டோர் பள்ளிப்படிப்பை குறைவாகவோ அல்லது தேவையான பள்ளிப்படிப்பை  பெறவில்லை. சிலர் சிறுவயது முதல் பள்ளிக்குச் சென்றதில்லை, வெகு சிலர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். தாய்மார்களுக்கு கல்வி கற்பிப்பதில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும். இது அவர்களின் குழந்தைகளின் கற்றலை ஆதரிக்கவும், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும் உதவும்.


கடந்த 30 ஆண்டுகளில், கணினிகள், இணையம் மற்றும் அலைபேசிகள் உலகை மாற்றுவதை நாம் பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து நாம் இப்போது, ​​செயற்கை நுண்ணறிவு காலத்தில் நுழைகிறோம். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் கல்வியை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையைத் தருகிறது. கற்றலை மேம்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.


ஆனால், தொழில்நுட்பம் மலிவு விலையில் கிடைக்கும் நேரத்தில், சலுகை பெற்றவர்களுக்கு ஒரு புதிய மற்றும் மேம்பட்ட பதிப்பு தோன்றும். தொழில்நுட்பம் வாக்குறுதியளித்தபடி கல்வியில் பின்தங்கியவர்களுக்கு இன்னும் உதவவில்லை. ஒரு பெரிய பிரச்சனை சாதனங்களின் பற்றாக்குறையாகும். பல மாணவர்களிடம் கணினிகள் அல்லது தேவையான திறன்பேசிகள் இல்லாததால் அவர்கள் கல்வி கற்பது கடினமாகிறது.


இருப்பினும், 2024-ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை தரவுகளின்படி, எதிர்காலத்தில் தனிப்பட்ட திறன்பேசிகள் இல்லாதது குறைவான பிரச்சனையாக இருக்கும். பெரும்பாலான கிராமப்புற வீடுகள் ஏற்கனவே திறன்பேசி வைத்திருக்கின்றன. வரும் ஆண்டுகளில், பல குடும்பங்கள் இரண்டாவது அலைபேசி வாங்குவதை எளிதாகக் காணலாம். கற்றலுக்கு திறன்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது.


எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், சாதனங்கள் எளிதில் கிடைக்கிறது. இதற்கு, மொழி ஒரு பெரிய தடையாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. மக்கள் இப்போது தங்கள் உள்ளூர் மொழிகளில் எழுதவோ பேசவோ முடியும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதும் தற்போது எளிதான செயல்முறையாகும். அனைத்து கற்றல் கருவிகளும் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் எங்கு கண்டுபிடிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் கற்பனை செய்து பாருங்கள், ஒரு கிராமத்தில் ஓர் இடத்தில் - பள்ளி என்று வைத்துக் கொள்வோம் - ஒரு அறிவார்ந்த சாதனம் என்ன, எங்கே, எப்படி என்பது பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடியதாக இருந்தால்?


அனைவருக்கும் பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், பல குழந்தைகளின் பள்ளி வருகை இன்னும் பிரச்சனையாகவே உள்ளது. ஒரு கிராமத்தில் அல்லது சமூகத்தில், குழந்தைகள் கல்விக்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். சிலர் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மற்றவர்கள் தனியார் வகுப்புகளை எடுக்கிறார்கள். சிலர் பள்ளிக்குச் செல்வதில்லை. இது கிராமம் மற்றும் சமூக மட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, பள்ளிகளில் கற்றல் தரம் பாதிக்கப்படுகிறது.



தொற்றுநோய் காலத்தில், மகாராஷ்டிராவில் உள்ள பல கிராமங்கள் கற்றல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஒரு வசதியான இடத்தைப் (vantage point) பயன்படுத்தின. கிராமங்களில் கல்வியை மேம்படுத்த இந்த முறையைப் பயன்படுத்தலாம். சரியான பாடத்திட்டம் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை குழு கற்றலை ஒழுங்கமைக்க உதவும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி புதிய பள்ளிகளை அமைக்கலாம். ஆனால் முதலில், அதிக மாணவர்கள் சேராமல் போகலாம்.


கடந்த 5,000 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாகரிகமும் அதன் சொந்த பள்ளிக்கல்வி முறையை உருவாக்கியுள்ளது. ஒரு அமைப்பிலிருந்து வரும் ஆசிரியர்களும் கற்பித்தல் முறைகளும் எப்போதும் மற்றொரு நாட்டில் வேலை செய்யவில்லை. ஒரு நாட்டிலிருந்து வரும் பாடத்திட்டங்கள் எப்போதும் மற்றொரு நாட்டிற்கு ஏற்றதாக இல்லை. நாகரிகங்கள் காலம், தூரம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தால் பிரிக்கப்பட்டதால் இது நடந்தது. பின்னர், பேரரசு மற்றும் காலனித்துவ காலங்கள் வெவ்வேறு நாகரிகங்களை இணைக்கத் தொடங்கின. இன்று, நாடுகளுக்கு எல்லைகள் இருந்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அவற்றை ஒன்றிணைக்கின்றன. அவற்றை ஒன்றிணைப்பதில் கல்வியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதனால் பெறப்படும் பலனும் ஒரு முக்கிய காரணியாகும். பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான சந்தைத் தேவைப்படுகிறது. பொது பயன்பாட்டிற்காக கொடையாளர்களால் நிதியளிக்கப்படும் தொழில்நுட்பங்களைத் தவிர, ஒரு தொழில்நுட்பம் லாபம் ஈட்ட முடியாவிட்டால் அது பயன்படுத்தப்படுவதில்லை.


வன்பொருள் மற்றும் சாதனங்கள் குறைவான விலையில் கிடைக்க தொடங்கிவிட்டன. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளால், மேம்பட்ட மற்றும் சக்திவாய்ந்த வன்பொருளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கல்வியில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதுமைகளை உலகளவில் மாற்றுவதற்கு சமுதாயநல முதலீடுகள் (philanthropic investments) போதுமானதாக இருக்குமா? ஒரு நாடாக, தொழில்நுட்பத்தின் வாக்குறுதியை மிகவும் தேவைப்படுபவர்களின் நலனுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு வரைபடத்தை இந்தியா உருவாக்க வேண்டும்.


மாதவ் சவான் பிரதம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்




Original article:

Share: