இணையப் பாதுகாப்பை நிர்வகிப்பதில் இந்தியா முழுமையான தன்னம்பிக்கையை அடைய வேண்டும் -கௌசிக் ரே

 இன்றைய உலகில், டிஜிட்டல் இணைப்பு என்பது தேசிய உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் ஒரு காலகட்டத்தில், இணைய பாதுகாப்பு என்பது வெறும் தகவல் தொழில்நுட்பம் (IT) பிரச்சனையிலிருந்து தேசிய பாதுகாப்பின் அடிப்படையான ஒரு முக்கிய பகுதியாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் இணையப் பாதுகாப்பு தீர்வுகளுக்கான தேவை 2030-ம் ஆண்டளவில் $12.9 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, தோராயமாக 60% தயாரிப்புகள் மற்றும் மீதமுள்ளவை சேவைகளுக்கு காரணமாகும். இருப்பினும், இந்தியா, முதன்மையாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றிலிருந்து வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களை (Original Equipment Manufacturers (OEM)) பெரிதும் நம்பியுள்ளது. இந்த சார்பு தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது.


இணையப் பாதுகாப்பில் தன்னம்பிக்கை ஏன் முக்கியமானது? :


தேசிய பாதுகாப்பு கவலைகள் : இந்தியா டிஜிட்டல் ரீதியில் ஒருங்கிணைந்த பொருளாதாரமாக மாறும்போது, ​​அத்தியாவசிய சேவைகளான எரிசக்தி கட்டங்கள், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், போக்குவரத்து மற்றும் உற்பத்தி போன்றவை இணைய உள்கட்டமைப்பை அதிகளவில் நம்பியுள்ளன. இணையப் பாதுகாப்பு என்பது இனி ஒரு துணைச் செயல்பாடு அல்ல, ஆனால் தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைந்த அங்கமாகும்.


புவிசார் அரசியல் பரிசீலனைகள் : இந்தியா சிக்கலான அல்லது இறுக்கமான உறவுகளைக் கொண்ட நாடுகளின் வெளிநாட்டு இணையப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை நம்பியுள்ளது. இவற்றில் சீனா (வன்பொருள் மற்றும் கூறுகளுக்கு), ரஷ்யா (பாதுகாப்பு வன்பொருளுக்கு) மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (மேம்பட்ட மென்பொருளுக்கு) ஆகியவை அடங்கும். இந்த சார்பு அபாயங்களை உருவாக்குகிறது. இந்த வெளிநாட்டு தயாரிப்புகளின் மூலம் நம்முடைய மறைக்கப்பட்ட பலவீனங்களை எதிரிகள் சுரண்டலாம். இது இந்தியாவின் இராஜதந்திர நலன்களை அச்சுறுத்துகிறது.


பொருளாதாரத் தேவைகள் : ஒரு வலுவான உள்நாட்டு இணையப் பாதுகாப்புத் துறை இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க முடியும். இது அதிக மதிப்புள்ள வேலைகளை உருவாக்குதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.


இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பில் செயல்பாட்டு தொழில்நுட்ப (Operational Technology (OT)) மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவை அடங்கும். இந்த அமைப்புகள் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், இரயில்வே சிக்னலிங் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் போன்ற அத்தியாவசிய சேவைகளைக் கட்டுப்படுத்துகின்றன. கடந்த காலத்தில், இணைய அபாயங்களைத் தடுக்க OT சூழல்கள் தனிமையில் செயல்பட்டன. ஆனால் தொழில்துறை 4.0 உடன், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயல்பாட்டு தொழில்நுட்ப (OT) அமைப்புகள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனால், தாக்குதல்களுக்குப் பாதிப்பு அதிகரிக்கிறது. 2013 மற்றும் 2020-க்கு இடையில், பெரும்பாலும் அரசால் வழங்கப்படும் முக்கியமான உள்கட்டமைப்பு மீதான சைபர் தாக்குதல்கள் 3900% அதிகரித்தன. இது இந்தியா தனது சொந்த சைபர் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்க வேண்டிய அவசரத் தேவையைக் காட்டுகிறது.


உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் உள்நாட்டு சைபர் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை நம்பியிருப்பதால் அதன் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து கனடா சமீபத்தில் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. நாடுதழுவிய திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் செயல்பாட்டுத் தொழில்நுட்ப (OT) பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குவதை இந்த அறிக்கை பரிந்துரைத்தது. இதேபோன்ற அணுகுமுறை இஸ்ரேலிலும் சிறப்பாக செயல்பட்டது. அரசாங்க ஆதரவுடன் இஸ்ரேல் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது மற்றும் உலகளவில் அதன் பாதுகாப்பு தீர்வுகளை விரிவுபடுத்துகிறது.


சைபர் பாதுகாப்பில் முழுமையான தன்னம்பிக்கையை அடைய, இந்தியா பின்வரும் இராஜதந்திர பகுதிகளில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்:


ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) முன்முயற்சிகள் : இணையப் பாதுகாப்பு தீர்வுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) இந்தியா முதலீட்டை அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு இணையப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு IITகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானது. கூடுதலாக, இந்தியா எரிசக்தி மற்றும் நீர்வழி பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.


ஆழமான தொழில்நுட்ப புத்தொழில்களை மேம்படுத்துதல் (Leveraging deep tech startups) : இந்தியா முழு அளவிலான சைபர் பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை உருவாக்க புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். உள்நாட்டு செயல்பாட்டு தொழில்நுட்ப (OT) பாதுகாப்பு தீர்வுகளை வெற்றிகரமாக உருவாக்கிய WhizHack Technologies போன்ற புத்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


தேசிய பாதுகாப்பு உத்தி (National security strategy) : இந்தியாவின் விரிவான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் சைபர் பாதுகாப்பை ஒருங்கிணைப்பட வேண்டும். முக்கியமான உள்கட்டமைப்பிற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது உள்நாட்டுத் தொழில்துறையை வலுப்படுத்தும். இந்திய மாற்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டு சைபர் பாதுகாப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.


கொள்கை கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை : இந்திய இணையப் பாதுகாப்பு தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இது தேசிய முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் (National Critical Information Infrastructure Protection Centre (NCIIPC)), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM), MeitY, தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (NCSC) மற்றும் இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சில் (DSCI) போன்ற முக்கிய பங்குதாரர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கூடுதலாக, இந்திய தீர்வுகளை உலகளாவிய நட்பு நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க, நாம் வழக்கமான கருத்துசார்ந்த-ஆதார (Proof-of-Concept (PoC)) சோதனைகளை நடத்த வேண்டும்.


NCIIPC   :   National Critical Information Infrastructure Protection Centre

IIT         :   Indian Institutes of Technology

NCSC    :   National Cyber Security Coordinator's office

DSCI      :   Data Security Council of India

MeitY    :   Ministry of Electronics and Information Technology 


பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி : இது மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால், இதற்கான மீள்தன்மையை உருவாக்குவதில் நீண்ட காலம் எடுக்கும். நான்கு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் தேவைப்படும் இணையப் பாதுகாப்புகளில் மிகப்பெரிய பற்றாக்குறை உள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவது தொடர்ந்து வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும். உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெரிய அளவிலான சைபர் பாதுகாப்பு பயிற்சித் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் நாம் தொடங்கலாம். கூடுதலாக, இணையப் பாதுகாப்பு தன்னம்பிக்கை மற்றும் தேசிய பொறுப்புணர்வுக்கான கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.


இணையப் பாதுகாப்பில் தன்னிறைவு அடைவது இந்தியாவிற்கு பெரும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்:


வேலைவாய்ப்பு வளர்ச்சி : ஒரு வலுவான இணையப் பாதுகாப்புத் துறையானது, அதிக திறமையான வேலைகளை உருவாக்கும். இந்த வேலைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), தயாரிப்பு மேம்பாடு (product development) மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் (security operations) இருக்கும்.


வணிக விரிவாக்கம் : இந்திய இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் வளரும். இது இணையப் பாதுகாப்பு தீர்வுகளில் இந்தியா உலகளாவிய தலைவராக மாற உதவும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தாக்கம் : ஒரு தன்னிறைவான இணையப் பாதுகாப்புத் துறையானது, அந்நிய செலாவணி வெளியேற்றத்தைக் குறைத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.


தொழில்நுட்பத்தில் தன்னிறைவை மேற்கொள்வது ஒரு தேர்வாக இல்லாமல், அவசியமான ஒரு முக்கியமான கட்டத்தில் இந்தியா உள்ளது. நாட்டில் வலுவான திறமைக் குழு, செலவு குறைந்த கண்டுபிடிப்பு மற்றும் நடுநிலை புவிசார் அரசியல் நிலைப்பாடு உள்ளது. இந்த நன்மைகள் இந்தியா இணையப் பாதுகாப்பில், குறிப்பாக முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய வீரராக மாற உதவும். 2032-ம் ஆண்டுக்குள் முக்கியமான உள்கட்டமைப்புக்கான உலகளாவிய இணையப் பாதுகாப்புச் சந்தை 71 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறையில் தனது நிலையைப் பாதுகாக்க இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


சரியான கொள்கை கட்டமைப்பு, ஆழமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முதலீடு மற்றும் பொது-தனியார் ஒத்துழைப்புடன், இந்தியா தனது இணையப் பாதுகாப்பு அமைப்பை மறுவடிவமைக்க முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் நீண்ட கால பொருளாதார பின்னடைவை உறுதி செய்கிறது.


இந்தக் கட்டுரையை விஸ்ஹேக் டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி கௌசிக் ரே எழுதியுள்ளார்.



Original article:

Share:

இந்தியாவில் காசநோயை ஒழித்தல்: முன்னேற்றம் மற்றும் சவால்களின் ஒரு பயணம். -மனோஜ் ஜெயின், பிரனய் சின்ஹா, கென்னத் ஜி. காஸ்ட்ரோ

 காசநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கத்திடம் ஆதரவும் பணமும் உள்ளது. ஆனால், அதை முற்றிலுமாகத் தடுக்க உள்ளூர் முயற்சிகள் இன்னும் சீராக இருக்க வேண்டும்.


காசநோய் (TB) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும், கோவிட்-19 உட்பட வேறு எந்த தொற்று நோயையும்விட அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, உலகின் காசநோய் நோயாளிகளில் 25% இந்தியாவில் உள்ளது. இருப்பினும், காசநோயை ஒழிக்க இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா சமீபத்தில் தனது வலைப்பதிவில், இந்தியாவில் காசநோய் நோயாளிகளும் இறப்புகளும் 20% குறைந்துள்ளதாகப் பகிர்ந்து கொண்டார்.  


பல வருட அனுபவமுள்ள காசநோய் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக, இந்தியாவால் காசநோயை ஒழிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வலுவான கொள்கைகள், தொடர்ச்சியான அரசாங்க ஆதரவு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் குழுப்பணி அணுகுமுறை மூலம் இது நிகழும்.


பல ஆண்டுகளாக, இந்தியாவின் காசநோய் திட்டம் நோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இது அதன் பழைய பெயரான திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (Revised National TB Control Programme (RNTCP)) என்பதிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, "காசநோயை ஒழித்தல்" என்னும் ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தார். இது அவசர உணர்வை உருவாக்கியது மற்றும் களப்பணியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவரையும் கடினமாக உழைக்கத் தூண்டியது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2019ஆம் ஆண்டில், இந்தப் புதிய பணியை பிரதிபலிக்கும் வகையில் RNTCP, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National TB Elimination Programme (NTEP)) என மறுபெயரிடப்பட்டது.


காசநோயை ஒழிப்பதற்கான உறுதிப்பாடு அதிக நிதிக்கு வழிவகுத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், காசநோய் திட்டங்களுக்கான பட்ஜெட் 2015ஆம் ஆண்டு ₹1,200 கோடியிலிருந்து 2024ஆம் ஆண்டு 3,300 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் பணம் சிறந்த நோயறிதல் கருவிகள், மருந்துகள் மற்றும் பெரிய அளவிலான திரையிடல் திட்டங்களை அறிமுகப்படுத்த உதவியுள்ளது. எடுத்துக்காட்டாக, தொலைதூரப் பகுதிகளிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையேயும் காசநோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சிறிய எக்ஸ்ரே இயந்திரங்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.


அரசாங்கம் மருத்துவ சிகிச்சைகள் மூலம் மட்டுமல்லாமல், சமூக நிலைமைகளை மேம்படுத்துவதன் மூலமும் காசநோயை நிவர்த்தி செய்து வருகிறது. இது போன்ற திட்டங்களைத் தொடங்கியுள்ளது:


  1. நிக்ஷய் மித்ரா (Nikshay Mitra) – காச நோயாளிகளுக்கு ஆதரவளிக்க சமூகங்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.


  1. நிக்ஷய் போஷன் யோஜனா (Nikshay Poshan Yojana) – சிறந்த ஊட்டச்சத்துக்காக நிதி உதவி வழங்குகிறது.


  1. ஜன் ஆரோக்கிய யோஜனா (Jan Arogya Yojana) – ஆரம்பகால கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வைப் பரப்புவதில் கவனம் செலுத்துகிறது.


இந்தத் திட்டங்கள் அத்தியாவசிய ஆதரவை வழங்குகின்றன மற்றும் காசநோய் பராமரிப்பில் சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.


துரதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 தொற்றுநோய் ஒரு பெரிய சவாலாக இருந்தது. வளங்களும் சுகாதார சேவைகளும் வைரஸை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தின. இது காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையைப் பாதித்தது. இருப்பினும், காசநோய் ஒழிப்பில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்தால், வரும் ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும். சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர் ஊர்வசி சிங் தலைமையிலான 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் மூலம் அரசாங்கம் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது. காசநோயை எதிர்த்துப் போராடுவதற்காக 347 மாவட்டங்களில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.


கொள்கைகளை செயல்படுத்துவதே இப்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசாங்கத்திடம் ஆதரவும் வளங்களும் உள்ளன. ஆனால், உள்ளூர் செயல்படுத்தல் இன்னும் சீராக இருக்க வேண்டும். மோசமான தளவாடங்கள், பயிற்சி இல்லாமை மற்றும் சமூக களங்கம் போன்ற பிரச்சினைகள் முன்னேற்றத்தை மெதுவாக்குகின்றன. இதுவரை ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தக்கவைக்க இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வது முக்கியம். இந்தியா முன்னேற மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.


மாவட்ட காசநோய் அதிகாரிகள் சரியான திறன்களையும் கருவிகளையும் கொண்டிருப்பதை உறுதி செய்வதன் மூலம் நாம் வலுவான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அதிகாரிகள் கொள்கைகளை  உலக நடவடிக்கைகளுடன் இணைக்கிறார்கள். எனவே, அவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் அல்ட்ராபோர்ட்டபிள் எக்ஸ்-கதிர்கள் போன்ற மேம்பட்ட கருவிகளை அணுக வேண்டும்.


இரண்டாவதாக, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) மருத்துவ தீர்வுகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் களங்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க பொது விநியோக முறை போன்ற பிற திட்டங்களுடன் இது இணைந்து செயல்பட முடியும். இந்த காரணிகள் காசநோய் வழக்குகளை அதிகரிக்கின்றன மற்றும் விளைவுகளை மோசமாக்குகின்றன. அவற்றை நிவர்த்தி செய்வது காசநோயை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


மூன்றாவதாக, மையத்திலிருந்து புதிய கொள்கைகள் வலுவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டோடு வர வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு வழக்கமான தணிக்கைகள் மற்றும் தரவு அடிப்படையிலான மேம்பாடுகள் அவசியம். ஆராய்ச்சியாளர்களுடன் ஒத்துழைப்பது தடைகளைக் கண்டறியவும், உத்திகளை மேம்படுத்தவும், மாவட்டங்கள் பொறுப்புடன் இருப்பதை உறுதி செய்யவும் உதவும்.


காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், அதை ஒழிப்பதற்கு இன்னும் அதிக முயற்சியும் அவசரமும் தேவை. அதன் தொலைநோக்கு பார்வையை உலகளாவிய வெற்றியாக மாற்ற, இந்தியா உள்ளூர் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.  வறுமை மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் போன்ற சமூகப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும். மேலும், பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும். காசநோயை ஒழிப்பது என்பது ஒரு நோயைத் தடுப்பது மட்டுமல்ல.  இது மில்லியன் கணக்கான மக்களுக்கு நியாயம், கண்ணியம் மற்றும் சிறந்த ஆரோக்கியத்தைப் பற்றியது. இந்த இலக்கை அடைவது உலகளாவிய சுகாதாரத்தில் இந்தியாவின் தலைமையை வெளிப்படுத்தும். மேலும், குழுப்பணி மற்றும் உறுதியுடன் கடினமான நோய்களைக் கூட தோற்கடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும்.



Original article:

Share:

நீர் பசுமை வரவுகள் எவ்வாறு மேலும் பாதுகாப்பை வழங்க முடியும்? - ஏஞ்சலோ ஜார்ஜ்

 மேம்படுத்தப்பட்ட நெல் சாகுபடி, நுண் நீர்ப்பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் போன்ற திறமையான விவசாய முறைகளை நீர் பசுமை வரவுகள் ஊக்குவிக்கின்றன.


உலக மக்கள் தொகையில் 18% இந்தியாவில் உள்ளனர், ஆனால் அதன் நிலத்தடி நீரில் 4% மட்டுமே உள்ளது. இந்த நீர் மிக விரைவாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில், ஒரு நபருக்குக் கிடைக்கும் நிலத்தடி நீரின் அளவு 25% குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று, மக்கள் நிரப்பப்படுவதைவிட அதிகமான தண்ணீரை வெளியேற்றினால், 80% குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் இருக்கும் என்று எச்சரிக்கிறது.


விவசாயம் 87% நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் 13% வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளைவிட இந்திய விவசாயத்திற்கு ஒரு டன் பயிருக்கு 2 முதல் 3 மடங்கு அதிக தண்ணீர் தேவை என்று நிதி ஆயோக் கூறுகிறது. 1990ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பல அணைகள் இப்போது அவற்றின் திறனில் பாதிக்கும் குறைவாகவே செயல்படுகின்றன. இது விவசாயிகள் நிலத்தடி நீரை இன்னும் அதிகமாக நம்பியிருக்க வைக்கிறது.


நாட்டில் பல தண்ணீர் பிரச்சனைகள் உள்ளன. சில பயிர்கள் அதிக தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. மேலும், பாசன முறைகள் திறமையாக இல்லை. தண்ணீர் குழாய்களில் கசிவு ஏற்படுகிறது. கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் விரைவான வளர்ச்சி நீர் மாசுபாட்டை மோசமாக்கியுள்ளது. ஆறுகள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதிக்கிறது. தெளிவான தேசிய நீர் கொள்கை இல்லாதது நிலைமையை நிர்வகிப்பதை இன்னும் கடினமாக்குகிறது.


இந்தியா கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த சிக்கலை தீர்க்க, வழக்கமான நீர் சேமிப்பு முறைகளுக்கு அப்பால் புதிய யோசனைகள் நமக்குத் தேவை. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க அரசாங்கம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை  (Mission LiFE) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி பசுமை வரவு திட்டம் (green credit programme) ஆகும். இது கார்பன் வரவுகளைப் போலவே செயல்படுகிறது.


இந்த திட்டத்தின் கீழ், மக்கள், விவசாயிகள் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக பசுமைக் கடன்களை (green credits) பெறலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த கடன்களை வர்த்தகம் செய்யலாம்.


நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, திறமையான பயன்பாடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, Mission LiFE நீர் பசுமைக் கடன்களில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு நீர் பயனரும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்காக வெகுமதி பெற வேண்டும் என்பதே இதன் கருத்து. வழக்கமான பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது நீர் சேமிப்பை வர்த்தகம் செய்யக்கூடிய நீர் பசுமை கடன்களாக மாற்றலாம். இந்த கடன்களை அவர்கள் வாங்க வேண்டியதைவிட அதிகமாக தண்ணீரைப் பயன்படுத்துபவர்கள் வாங்கலாம். இந்த அமைப்பு கார்பன் வரவுகளைப் போல செயல்படுகிறது.  சிறந்த நீர் பயன்பாடு, மறுசீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புடன் பொருளாதார சமநிலையை ஊக்குவிக்கிறது.


நீர் பசுமை வரவுகளை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு வலுவான கட்டமைப்பு முக்கியமானது. இதில் நீர் தடம் அடிப்படைகளை அமைத்தல், அளவீடு மற்றும் சரிபார்ப்புக்கான தரநிலைகளை உருவாக்குதல் மற்றும் வர்த்தக கடன்களுக்கான சந்தையை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்கான வெகுமதி நிலைகள் மழைப்பொழிவு, நிலத்தடி நீர் தரம் மற்றும் நீர் கிடைக்கும் தன்மை போன்ற உள்ளூர் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். நீரின் மதிப்பை தீர்மானிப்பது அதன் பயன்பாட்டை நிர்வகிப்பதில் முதல் படியாகும். விலை நிர்ணயம் செலவு மீட்பு, நியாயத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான ஊக்கத்தொகைகளை சமநிலைப்படுத்த வேண்டும். அரசு நிறுவனங்கள், விவசாய குழுக்கள் மற்றும் நீர் மேலாண்மை நிறுவனங்கள் கட்டமைப்பு உள்ளூர் தேவைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும்.


Bisleri நிறுவனம், Teri School of Advanced Studies இணைந்து, நீர் துறைக்கான நீர் பசுமை வரவு மாதிரியை (water green credit model) உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வு உலகளாவிய நீர் வர்த்தக நடைமுறைகளைப் பார்த்து, ஒரு வணிகத்தின் நீர் பயன்பாட்டை அளவிடுவதற்கான ஒரு முறையை உருவாக்கியது. அது மூலப்பொருட்களிலிருந்து இறுதி தயாரிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வரை அளவீடுகிறது. வணிகங்கள் தங்கள் நீர் பயன்பாட்டிற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், உள்ளூர் நீர் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடுகளையும் உள்ளடக்கியதன் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.


பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, நாம் தொழில்துறை நீர் பயன்பாட்டில் மட்டுமல்லாமல், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் நீர் பற்றாக்குறை பயிர் உற்பத்தியைக் குறைக்கும், உணவு விநியோகத்தை அச்சுறுத்தும் மற்றும் விவசாயிகளின் வருமானத்திற்கு தீங்கு விளைவிக்கும். நுண்ணிய நீர்ப்பாசனம் மற்றும் துல்லிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பழைய முறைகளுடன் ஒப்பிடும்போது நீர்ப்பாசன செலவுகளை 50% குறைக்கலாம், 45% அதிக தண்ணீரைச் சேமிக்கலாம் மற்றும் பயிர் விளைச்சலை 114% அதிகரிக்கலாம்.


நீர் பசுமை வரவுகள் நெல் தீவிரப்படுத்துதல், நுண் நீர்ப்பாசனம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் போன்ற சிறந்த விவசாய முறைகளை ஊக்குவிக்கின்றன. மண்ணின் ஈரப்பதத்தை சரிபார்ப்பதன் மூலம் தண்ணீரை எவ்வாறு திறமையாக பயன்படுத்துவது என்பதை விவசாயிகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அதிகப்படியான நீர்ப்பாசனத்தை நிறுத்தலாம். ஆனால், இதைச் செயல்படுத்த சிறிய மற்றும் சிறு பண்ணைகளைக் கொண்டவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி மற்றும் நிதி உதவி தேவைப்படுகிறது.


விவசாயத்தைத் தவிர பல வழிகளில் தண்ணீரைச் சேமிக்க முடியும். செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்தல் அல்லது கழிப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பயன்பாடுகளுக்காக மக்கள் மழைநீரைச் சேகரிக்கலாம். சிங்க் மற்றும் ஷவர் தொட்டிகளில் (கிரே வாட்டர்) இருந்து பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்தம் செய்து பாசனம் அல்லது கழிப்பறைகளுக்கு மீண்டும் பயன்படுத்தலாம். மீட்டர் மற்றும் சென்சார்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள் கசிவுகளைக் கண்டறிந்து நீர் வீணாவதைத் தடுக்க உதவும். வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் நீர் சேமிப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதும் தண்ணீரைச் சேமிக்க உதவுகிறது.


நீர் பசுமை வரவுத் திட்டங்களை செயல்படுத்துவது சில முக்கியமான படிகளை உள்ளடக்கியது:

1. தெளிவான விதிகளை அமைத்தல் - வரவுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் வழங்கப்படுகின்றன என்பதற்கான குறிப்பிட்ட தரநிலைகளை வரையறுத்தல்.


2. கடன்களை நெகிழ்வானதாக மாற்றுதல் - பாதுகாப்பு முயற்சிகள் சமநிலையில் இருக்கும் வகையில் பல்வேறு துறைகளில் வரவுகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்தல்.


3. டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் - சிறந்த வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுக்காக கடன்களைப் பதிவு செய்ய, வழங்க மற்றும் கண்காணிக்க ஆன்லைன் அமைப்புகளைப் பயன்படுத்துதல்.


சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நீர் வரவு அமைப்புகளை மேம்படுத்த அறிவு, நிதி மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் உதவலாம்.


நீர் பசுமை வரவுகள் நீர் பற்றாக்குறையை தீர்க்க உதவுகின்றன. இந்த அமைப்புக்கு அரசாங்கங்கள், விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவு தேவை. அவை ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும் அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், அவர்கள் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கலாம்,  தண்ணீரைச் சேமிக்கலாம் மற்றும் எதிர்காலத்திற்கு போதுமான தண்ணீரை உறுதி செய்யலாம்.


ஏஞ்சலோ ஜார்ஜ், தலைமை நிர்வாக அதிகாரி, Bisleri International Pvt Ltd.



Original article:

Share:

டிரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) முக்கியமான பொருளாதார வாய்ப்பை வழங்குகிறது. -குல்ஷன் சச்தேவா

 இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் முக்கியமான கூட்டு நாடுகளாக உள்ளன. ஆனால், 2007ஆம் ஆண்டு முதல் அவர்களின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னேறியுள்ளன? தற்போதைய உலகளாவிய சூழ்நிலை அவர்கள் ஒரு நியாயமான ஒப்பந்தத்தில் உடன்படுவதற்கு நல்ல வாய்ப்பை உருவாக்குகிறதா?


டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் உலகளாவிய வர்த்தகத்தை பாதிக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement (FTA)) முடிக்க விரும்புகின்றன. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கியதால், இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.


கடந்த மாதம், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்ற ஐரோப்பிய அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு பயணம் செய்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) முடிக்குமாறு இரு தலைவர்களும் தங்கள் குழுக்களிடம் கூறினர். மார்ச் 10 முதல் மார்ச் 14 வரை, இரு தரப்பினரும் பிரஸ்ஸல்ஸில் 10வது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர் மற்றும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மீதமுள்ள பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.


இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்படும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஒரு முக்கியமான படியாக இருக்கலாம். இது இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 2024  நிதியாண்டில், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான வர்த்தகம் சுமார் $190 பில்லியனை எட்டியது. இந்தியா $106 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து $82 பில்லியனுக்கும் அதிகமாக இறக்குமதி செய்தது.


2000ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் $118 பில்லியன் முதலீடு செய்துள்ளன. இது நாட்டிற்கு வரும் அனைத்து அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) சுமார் 17% ஆகும். இந்தியாவில் ஐரோப்பிய ஒன்றிய முதலீடுகள் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த முதலீடுகளைவிட அதிகம்.


சுமார் 6,000 ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. இருப்பினும், மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் வழியாக இந்தியாவிற்குள் கிட்டத்தட்ட பாதி பணம் பாய்வதால், FDI-ஐக் கண்காணிப்பது கடினம். இந்த நாடுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான முக்கிய முதலீட்டு வழிகளாக செயல்படுகின்றன. இந்திய நிறுவனங்களும் கடந்த 25 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் $40 பில்லியன் முதலீடு செய்துள்ளன.


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2004ஆம் ஆண்டு முதல், முக்கியமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை போன்ற இராஜதந்திர கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்வு போன்ற பிற துறைகளில், உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட ஐரோப்பிய ஒன்றியம் உதவுகிறது. இருப்பினும், வர்த்தகத்தைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் முடிவுகளில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.


2007ஆம் ஆண்டில், 2005 கூட்டு செயல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உயர்மட்ட வர்த்தகக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்திற்கான (Bilateral Trade and Investment Agreement (BTIA)) பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அந்த நேரத்தில், ஐக்கிய இராச்சியம் இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த ஒப்பந்தம் பல பகுதிகளை உள்ளடக்கியது. அவை:


  • பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகம்

  • முதலீடு

  • பொது கொள்முதல் (அரசாங்கம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குதல்)

  • தொழில்நுட்ப விதிமுறைகள் (தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விதிகள்)

  • அறிவுசார் சொத்துரிமைகள் (கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளுக்கான சட்டப் பாதுகாப்பு)

  • புவியியல் அறிகுறிகள் (குறிப்பிட்ட பிராந்தியங்களுடன் இணைக்கப்பட்ட சிறப்பு தயாரிப்பு பெயர்கள்)

  • போட்டி கொள்கை (நியாயமான வணிக போட்டியை உறுதி செய்வதற்கான விதிகள்)

  • தகராறு தீர்வு (மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகள்)


முதலில், இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்பட்டதால் மிகுந்த உற்சாகம் நிலவியது. ஐரோப்பிய ஒன்றியம் விரிவடைந்து ஒற்றை நாணயத்தை அறிமுகப்படுத்திய பிறகு ஐரோப்பியத் தலைவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். கார்கள், ஒயின்கள், மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் நிபுணர்களின் நடமாட்டம் குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் சிறப்பாகவே நடந்தன. இருப்பினும், தரவு பாதுகாப்பு மற்றும் அரசாங்க கொள்முதல் போன்ற சில சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருந்தன.


2008ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒன்பதாவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் (India-EU summit), இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் 2009ஆம் ஆண்டுக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்யத் திட்டமிட்டனர். ஆனால், ஐரோப்பாவின் சில யூரோப் பகுதி நாடுகளில் நிதி நெருக்கடிகளில் கவனம் செலுத்தியபோதும், இந்தியா 2010ஆம் ஆண்டில் இருந்து கொள்கை சிக்கல்களை எதிர்கொண்டபோதும் முன்னேற்றம் குறைந்தது. 2010ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா உச்சிமாநாட்டில், 2011ஆம் ஆண்டு வசந்த காலத்திற்கு ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்தனர். இருப்பினும், பல தவறவிட்ட காலக்கெடு மற்றும் 12 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக 2013ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் முடக்கப்பட்டன.


நரேந்திர மோடி பிரதமரானபோது, ​​வெளியுறவுக் கொள்கையில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதால், மக்கள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்பார்த்தனர். அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். 2016ஆம் ஆண்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு மற்றும் 2020 செயல் திட்டத்திலும், அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை மீண்டும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய பகுதியாக மாற்றினார்.


இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதிகள் வளரவில்லை. மேலும், அதன் உற்பத்தித் துறையும் தடுமாறிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக, இந்தியா வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து எச்சரிக்கையாக இருந்தது மற்றும் எந்த பெரிய புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதைத் தவிர்த்தது. இந்த நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 22 உறுப்பினர்கள் உட்பட பல நாடுகளுடனான முதலீட்டு ஒப்பந்தங்களையும் இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்தது.


பிரெக்ஸிட் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் விஷயங்களை மேலும் சிக்கலாக்கியது. இருப்பினும், மே 2021ஆம் ஆண்டில், பிரதமர் மோடி 27 ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனும், ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்களுடனும் ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தினார். சந்திப்பின்போது, ​​அவர்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர் மற்றும் "இணைப்பு கூட்டாண்மையை" ஏற்படுத்தினர்.


BTIA-க்குப் பதிலாக மூன்று தனித்தனி ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும் EUவும் தேர்வு செய்தன. இந்த ஒப்பந்தங்கள் வர்த்தகம், முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் புவியியல் குறியீடுகள் (GI) ஆகியவற்றை உள்ளடக்கியது. GI என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வரும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு குறியீடு ஆகும்.


சரியான நேரத்தில் இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருந்தது. ஆனால் சமீபத்தில், ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) ஆகியவற்றுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. UK உடனான பேச்சுவார்த்தைகளும் சிறப்பாக முன்னேறி வருகின்றன.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய FTA-ல் முக்கிய தடைகள்


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை (TTC) தொடங்கின. இது மூன்று பணிக்குழுக்களைக் கொண்டுள்ளது:


1. தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு

2. பசுமை மற்றும் சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள்

3. வர்த்தகம், முதலீடு மற்றும் வலுவான விநியோகச் சங்கிலிகள்


ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் மட்டுமே ஒரு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை (TTC) கொண்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு முதல், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 10 சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. அடுத்த சுற்று மே 5ஆம் தேதி புதுதில்லியில் தொடங்கும். முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் புவியியல் குறியீடுகள் (புவியியல் குறியீடுகள்) ஒப்பந்தங்கள் குறித்து அவர்கள் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் 76 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. இது சில இந்திய ஏற்றுமதிகளுக்கு சவால்களை உருவாக்குகிறது.


டிரம்ப் நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. இது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்களை மும்முரமாக வைத்திருக்கிறது. இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. முக்கியப் பிரச்சினைகளில் பண்ணை பொருட்கள், ஒயின்கள் மற்றும் கார்கள் மீதான வரிகள் மற்றும் சந்தை அணுகல் ஆகியவை அடங்கும். இந்தியா தனது திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய சிறந்த வாய்ப்புகளையும் விரும்புகிறது. 


ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (CBAM) வர்த்தக பேச்சுவார்த்தைகளை மிகவும் சிக்கலாக்குகிறது. இது எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் ஆகியவற்றின் இந்திய ஏற்றுமதிகளுக்கு கூடுதல் வரிகளைச் சேர்க்கிறது. அவை இப்போது சுதந்திர வர்த்தக ஒப்பந்த (FTA) விவாதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. வலுவான அமலாக்கம், தரவு பிரத்தியேகத்தன்மை மற்றும் சிறந்த காப்புரிமை பாதுகாப்பு உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமை மீதான கடுமையான விதிகளையும் EU விரும்புகிறது.


பாதுகாப்புவாத மனநிலையைத் தாண்டிச் செல்லுதல்


நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர் தரநிலைகள் குறித்த விதிகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. EFTA உடனான வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியா இந்த விதிகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், பிணைப்பு உறுதிமொழிகளை வழங்கவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான ஒப்பந்தத்தைப் போலவே, சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்களிலும் இந்தியா ஏற்கனவே அரசாங்க கொள்முதலைக் கையாண்டுள்ளது. ஒயின்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான அதன் ஒப்பந்தங்களை இந்தியா குறிப்பிடலாம்.


உலக அரசியல் பதட்டங்களையும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பலவீனமான உறவுகளையும், சீனாவுடனான வர்த்தகத்தில் அபாயங்களைக் குறைக்க ஐரோப்பாவின் முயற்சியையும் எதிர்கொள்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரிகிறது. இருப்பினும், தரவு பாதுகாப்பு, கார்பன் வரி, பண்ணை பொருட்கள் மற்றும் சேவைகள் போன்ற முக்கிய விஷயங்களில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை. இதன் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் தான் விரும்பிய முழு ஒப்பந்தத்திற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.


தற்போதைய உலகளாவிய அரசியல் சூழ்நிலை ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு நல்ல வாய்ப்பை உருவாக்குகிறது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் பகிரப்பட்ட நலன்கள் மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) பற்றிய விவாதங்களுடன் நன்கு பொருந்துகிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் உலகிற்கு பாதுகாப்புவாத அணுகுமுறையிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மேலும், இந்தியா நவீனமயமாக்கப்படும்போது, ​​வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் எரிசக்தி மாற்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஒரு முக்கியப் பங்காளியாக இருக்கும்.



Original article:

Share:

இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாச்சார நிலப்பரப்பை கட்டமைப்பதில் நாளந்தா, விக்ரம்ஷிலா மற்றும் ஓடந்தபுரி போன்ற பண்டைய பல்கலைக்கழகங்களின் வரலாற்று முக்கியத்துவம். -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • இந்திய தொல்லியல் துறை (ASI) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பழங்கால விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தின் தளத்தை மேம்படுத்தி வரும் நிலையில், பீகார் அரசு சமீபத்தில் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஆன்டிசாக் கிராமத்தில் 202.14 ஏக்கரை மத்திய பல்கலைக்கழகத்திற்காக அடையாளம் கண்டுள்ளது.


  • இந்த திட்டத்திற்கு 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ₹500 கோடியை அனுமதித்தது. இருப்பினும், மாநில அரசால் பொருத்தமான நிலத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் முன்னேற்றம் மெதுவாக இருந்தது.


  • பிப்ரவரி 24 அன்று பாகல்பூரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்ரம்ஷிலா பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் உலகிற்கு ஒரு சிறந்த கற்றல் மையமாக இருந்தது என்று கூறினார். புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவுவதன் மூலம் அரசாங்கம் ஏற்கனவே பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தை மீட்டெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதனால், தற்போது ​​அவர்கள் விக்ரம்ஷிலாவில் கவனம் செலுத்தி அங்கு ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை தொடங்க வாய்ப்புள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • விக்ரம்ஷிலா மகாவிஹார், கி.பி 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பால வம்சத்தின் மன்னர் தர்மபாலரால் நிறுவப்பட்டது. இது நாளந்தா இருந்த அதே காலத்தில் இருந்தது மற்றும் செழித்து வளர்ந்தது.


  • நாளந்தா பல்கலைக்கழகம் குப்தர் காலம் (கி.பி. 320-550) முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது, அதே நேரத்தில் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகம் பாலர் காலத்தில் (8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) செழித்து வளர்ந்தது. பல்வேறு பாடங்களைக் கற்பிப்பதற்காக நாளந்தா உலகளவில் மிகவும் பிரபலமானது. இதற்கு நேர்மாறாக, விக்ரம்ஷிலா தாந்த்ரீக மற்றும் அமானுஷ்ய ஆய்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. தர்மபாலரின் ஆட்சியின் போது, ​​விக்ரம்ஷிலா மிக முக்கியமான பல்கலைக்கழகமாக இருந்தது. மேலும், நாளந்தாவின் விவகாரங்களைக்கூட கட்டுப்படுத்தியது என்று ASI தொல்பொருள் ஆய்வாளர் (பாட்னா வட்டம்) சுஜித் நயன் தெரிவித்தார்.


  • இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நாளந்தா தான் பழமையானது. ஒரு காலத்தில், இரண்டு பல்கலைக்கழகங்களும் ஒரு பொதுவான புரவலரான தர்மபாலனைப் பகிர்ந்து கொண்டன. அவர்கள் அறிவையும், ஆச்சார்யர்கள் என்று அழைக்கப்படும் ஆசிரியர்களையும் கூட பரிமாறிக்கொண்டனர்.


  • அதன் உச்சத்தில், விக்ரம்ஷீலா இறையியல், தத்துவம், இலக்கணம், மெட்டாபிசிக்ஸ் மற்றும் தர்க்கம் போன்ற பாடங்களைக் கற்பித்தது. இருப்பினும், மிக முக்கியமான பாடம் தந்திரங்களைப் பற்றிய ஆய்வு ஆகும். ஏனென்றால், புத்த மதம் மற்றும் இந்து மதம் இரண்டிலும் அமானுஷ்ய அறிவியல் மற்றும் மந்திரம் படிக்கப்பட்ட தாந்த்ரீகத்தின் காலத்தில் விக்ரம்ஷீலா இருந்தது.


  • இந்தப் பல்கலைக்கழகம் பல சிறந்த அறிஞர்களை உருவாக்கியது. அவர்களில் ஒருவர் திபெத்தில் புத்த மதத்தை நிலைநாட்ட உதவிய அதிசா திபங்கரா ஆவார்.


  • இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக செழித்து வளர்ந்தது. ஆனால், 13ஆம் நூற்றாண்டில் நாளந்தாவுடன் சேர்ந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்து மதத்தின் எழுச்சி, புத்த மதத்தின் வீழ்ச்சி மற்றும் பக்தியார் கல்ஜியின் படையெடுப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது நடந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர்.


  • விக்ரம்ஷிலாவின் இடிபாடுகள், அதில் உள்ள ஸ்தூபிகள், அறைகள் மற்றும் ஒரு பெரிய நூலகம் ஆகியவை அதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் காட்டுகின்றன. தளத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நூலகத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து மொழிபெயர்த்தனர் என அறியப்படுகிறது.


Original article:

Share:

கூகுள் வரி என்றறியப்படும் வரி எது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


. நிதி மசோதா, 2025-ல் செய்யப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக, இணைய வழி விளம்பரங்களுக்கான சமன்படுத்தல் வரியை (equalisation levy) நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய அமெரிக்க நிர்வாகத்தின் வரிகள் மீதான அழுத்தத்தின் கீழ், சில வணிக வரிகளை எளிதாக்குவதற்கான இந்தியாவின் அறிவிப்புக்குறியாக நிபுணர்கள் பார்க்கின்றனர்.


• நிதி மசோதா, 2025-ல் திருத்தங்களின் ஒரு பகுதியாக இணைய வழி விளம்பரங்களுக்கான சமன்படுத்தும் வரியை ரத்து செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இது வணிகங்கள் மீதான சில வரிகளை நீக்குவதற்கான ஒரு அறிவிப்புக்குறியாக இந்தியாவிடமிருந்து நிபுணர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கட்டணங்கள் மீதான அழுத்தத்தின் காரணமாக இதை செய்தனர்.


• 2025 நிதி மசோதாவின் 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1, 2025 முதல் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு விதிக்கும் 6 சதவீத சமன்படுத்தும் வரியை (equalisation levy (EL)) நீக்க ஒன்றிய அரசு விரும்புகிறது. 2016 முதல் நடைமுறையில் உள்ள இந்த வரி, இணைய வழி விளம்பரங்களுக்காக வெளிநாட்டு சேவை வழங்குநர்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சத்திற்கு மேல் செலுத்தும் தொகைக்கு பொருந்தும்.


• கடந்த ஆண்டு, அமெரிக்காவுடனான பதட்டங்களுக்குப் பிறகு கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 2% வரியை இந்தியா கடந்த ஆண்டு நீக்கியது. இருப்பினும், இணைய வழி விளம்பரங்களுக்கான 6% வரி அமலில் இருந்தது.


• மேலும், பிரிவு 143(1)-ல் ஒரு புதிய துணைப்பிரிவு (iia) சேர்க்கப்பட்டுள்ளது. இது வரித் துறை தற்போதைய வருமான வரி வருவாயை முந்தைய ஆண்டு வருவாயுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், ஏதேனும் முரண்பாடுகளைக் குறிக்கவும் அனுமதிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• இன்வெஸ்டோபீடியாவின் படி, கூகுள் வரி, திசைதிருப்பப்பட்ட லாப வரி  (diverted profits tax) என்றும் அழைக்கப்படுகிறது. இது சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி-தவிர்ப்பு எதிர்ப்பு விதிகளைக் குறிக்கிறது. குறைந்த அல்லது பூஜ்ஜிய வரி விகிதங்களைக் கொண்ட பிற அதிகார வரம்புகளுக்கு லாபம் அல்லது பங்குவீத உரிமைகளை (royalties) நிறுவனங்கள் திருப்பி விடுவதைத் தடுக்க பல அதிகார வரம்புகள் விதியை செயல்படுத்தின. உதாரணமாக, இணைய ஜாம்பவான் ஆல்பாபெட். கூகுள் UK-வில் $6.5 பில்லியன் வருவாய் ஈட்டிய போதிலும், அயர்லாந்தின் குறைந்த வரி நகரமான டப்ளினில் அதன் பரிவர்த்தனைகளை முடிப்பதன் மூலம் இங்கிலாந்தில் மிகக் குறைந்த அளவிலான வரிகளைச் செலுத்தியது.



Original article:

Share:

முற்கால சோழர் தலைநகரின் வளமான வரலாற்றை வெளிக்கொணரும் மற்றொரு நகர்வு. -என். சாய் சரண்

 தமிழ்நாடு அரசு காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகாருக்கும், தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கும் ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் விரிவான குறிப்புகளைக் கொண்ட பூம்புகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை இந்த அகழ்வாராய்ச்சிகள் வெளிக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பண்டைய தமிழர்களின் கடல்சார் வர்த்தகத் திறமையை வெளிக்காட்டும் முயற்சியாக, தமிழ்நாடு தொல்லியல் துறை மாநில கடற்கரையில் தொடர்ச்சியான ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கான திட்டத்தை வகுத்துள்ளது.


2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யும்போது, ​​நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய அகழ்வாராய்ச்சிகளை அறிவித்தார். இதில் பண்டைய சோழர்களின் தலைநகரான காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகார் மற்றும் 50 கிலோமீட்டர் தெற்கே உள்ள ஒரு முக்கியமான துறைமுக நகரமான நாகப்பட்டினம் இடையேயான ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியின் முதல் கட்டமும் அடங்கும்.


இந்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிகள் புதையல்களைக் (treasures) கண்டுபிடித்து பூம்புகாரின் வளமான வரலாற்றைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதி வங்காள விரிகுடாவில் சந்திக்கும் இந்த பண்டைய நகரம், சங்க இலக்கியத்திலும் எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிப்ளஸ் (Periplus) என்பது துறைமுகங்கள் மற்றும் கடலோர அடையாளங்களை பட்டியலிட்ட ஒரு பண்டைய கையெழுத்துப் பிரதியாகும். இது ஒரு நில வரைபடம் மற்றும் பயண வழிகாட்டியாக செயல்படுகிறது. பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை முக்கிய வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்ற மையங்களாக இருந்தன. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவுடன் ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்பட்டன. பூம்புகார் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், பின்னர் கடல் அலைகளின் காரணமாக நீரில் மூழ்கியதாகவும் நம்பப்படுகிறது.


முந்தைய ஆய்வுகள்


பூம்புகார் கடற்கரையில் ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் திட்டமிடப்படுவது இது முதல் முறை அல்ல. 1980-களில், தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையிலான தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் (National Institute of Oceanography (NIO)) ஆகியவை கடல்தள ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுகள் 20-30 மீட்டர் ஆழத்தில் உள்ள கட்டமைப்புகளைக் கண்டறிய பக்கவாட்டு ஸ்கேன் சோனார் (Side-scan sonar), எதிரொலி ஆழ அளப்பான்கள் மற்றும் காந்தமானிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தின. இது பூம்புகாரின் பண்டைய கடந்த காலத்தைப் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்கியது.


ஏப்ரல் 6, 1990 அன்று தி இந்துவில் வெளியான ஒரு செய்தி, பூம்புகாருக்கு அருகில் உள்ள வானகிரி அருகே 19.5 மீட்டர் ஆழத்தில் 4.5 கி.மீ தொலைவில் ஒரு கப்பல் விபத்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்ததாக தமிழ்நாடு தொல்லியல் துறை அப்போதைய இயக்குநரான நடன காசிநாதன் சுட்டிக்காட்டினார். இரும்பினால் ஆன அந்தக் கப்பல் இரண்டாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களால் மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி கடற்பரப்பிற்கு மேலே தெரியும். அதே நேரத்தில் அதன் பெரும்பகுதி கடல் தளத்தின் கீழ் புதைந்துள்ளது. பூம்புகாரில் இருந்து 20 கி.மீ தெற்கே உள்ள தரங்கம்பாடியில் கோட்டை அருங்காட்சியகத்திற்கு அருகில், கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில், 7 மீட்டர் ஆழத்தில் ஒரு மெகாலிதிக் அமைப்பு இருப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் உள்புற மற்றும் வெளிப்புற கல் வட்டங்களையும், கூழாங்கல் கெய்ன் போன்ற உறையையும் வெளிப்படுத்தின. இது 10 மீட்டர் அகலமுள்ள மெகாலிதிக் அமைப்பை உருவாக்கியது.


மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்


1991 முதல் 1993 வரை நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கடலுக்கு அடியில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் செங்கல் அமைப்புகளைக் கண்டறிந்ததாக இந்து நாளிதழின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த செங்கற்கள் கிமு 2ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 4ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை என்று நடனா காசிநாதன் மதிப்பிட்டார். நீரில் மூழ்கிய கட்டமைப்புகளுக்கு அருகில் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்களும் காணப்பட்டன. 1997-ஆம் ஆண்டில், லேட்டரைட் கற்களால் ஆன ஒரு கட்டமைப்பின் எச்சங்களை டைவர்ஸ் கண்டுபிடித்தார்.


2004-ஆம் ஆண்டில், பூம்புகார் கடற்கரையில் கிழக்கு கடற்படை கட்டளையால் அனுப்பப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் கப்பலான INS Darshak, 23 மீட்டர் ஆழத்தில் ஒரு U-வடிவ அமைப்பைக் கண்டுபிடித்தது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டதாக நம்பப்படும் டச்சு கப்பலின் எச்சங்களையும் அந்தக் கப்பல் மீட்டது. மீட்கப்பட்ட கலைப்பொருட்களில் மூன்று ஈய இங்காட்கள் (lead ingots) இருந்தன. ஒவ்வொன்றும் சுமார் ஒரு மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டவை. இங்காட்களில் W. Blackett' என்ற குறி இருந்தது, இது பிரிட்டிஷ் உற்பத்தியாளரின் பெயராக இருக்கலாம். மற்றொரு குறி, 1792 என்றும் குறிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை உற்பத்தி ஆண்டாகவும் இருக்கலாம். அவற்றில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் சின்னமான வயர் என்ற இதய வடிவிலான கல்வெட்டும் இருந்தது. ஏப்ரல் 9, 2004 அன்று தி இந்து செய்தித்தாளில் செய்தி வெளியானது போல, கடல் தளத்தில் இரண்டு மீட்டர் நீளமுள்ள பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


அரசாங்கத்தின் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சித் திட்டத்தை நிபுணர்கள் ஆதரிக்கின்றனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் வி. செல்வகுமார், பூம்புகார் அருகே மேலும் ஆய்வுகள் நடத்தினால் தமிழ் கடல்சார் பாரம்பரியம் குறித்த புதிய விவரங்கள் வெளிப்படும் என்று கூறுகிறார்.


கடல்வழி சமூகம்


புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் கே. ராஜன் கூறுகையில், தமிழர்கள் தங்கள் சாகசப் பயணங்களுக்குப் பெயர் பெற்ற கடல்சார் சமூகமாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, சிலப்பதிகாரம் மற்றும் பட்டினப்பாலை சங்க இலக்கியங்கள் பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரைப் பற்றி விரிவாக குறிப்பிடுகின்றன.


சங்க காலத்திற்குப் பிந்தைய இலக்கியங்கள் பூம்புகார் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்ததையும் பின்னர் நீரில் மூழ்கியதையும் உறுதிப்படுத்துகின்றன. பண்டைய பூம்புகார் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக இருந்ததை வெளிநாட்டு பயணிகளின் கணக்குகள் உறுதிப்படுத்துகின்றன. தொல்பொருள் ஆய்வுகள் நகரத்தின் அம்சங்கள் மற்றும் கடல்சார் வரலாறு பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கக்கூடும். பாண்டியர்களின் பண்டைய துறைமுகம் மற்றும் ஆரம்பகால தலைநகரான கொற்கையில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாடு   தொல்லியல் துறை பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது.



Original article:

Share: