சமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை தடை செய்ய வேண்டுமா? -மந்திரா மோடி

 ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை தடை செய்ய வேண்டுமா? அமண்டா தேர்ட் மற்றும் அபராஜிதா பாரதி ஆகியோர் மந்திரா மோடியுடன் கேள்வி குறித்து விவாதிக்கின்றனர். 


அமண்டா, ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் விவாதத்தைப் பற்றி எங்களிடம் சொல்ல முடியுமா? 


அமண்டா: இந்த கொள்கை முடிவு எதிர்பாராத விதமாக வந்துள்ளது. இது நாம் நீண்ட காலமாக விவாதித்து வரும் விவாதம் அல்ல. தொற்றுநோய்க்குப் பிறகு, குழந்தைகள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். மேலும், சமூக ஊடகங்களால் சில குழந்தைகள் தீங்குகளை எதிர்கொள்கின்றனர். இதனால் விவாதம் தீவிரமடைந்துள்ளது. 


தடைக்கான அழுத்தம் முக்கியமாக பெற்றோர் குழுக்களிடமிருந்து இருந்து உருவானது. குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களை பொறுப்பேற்குமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. 2025-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா கூட்டாட்சித் தேர்தலை நோக்கிச் செல்வதால் காரணங்களும்  இந்த விவாதத்திற்கு பின்னால் உள்ளன. செய்தி உள்ளடக்கத்திற்கு செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த மாட்டோம் என மெட்டா அறிவித்துள்ளது. எனவே, அரசாங்கம் முர்டாக் (Murdoch) ஊடகக் குழுவை திருப்திப்படுத்த விரும்புகிறது. தடையை ஆதரிப்பதன் மூலம் அரசாங்கம் இதைச் செய்ய முடியும். 


தடையானது நல்லவிதமாகத் தோன்றினாலும், பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையவில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடங்களைத் தேடுகிறார்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களின் மீது நாம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அழுத்தம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த இடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


அபராஜிதா, வயது வரம்பு பற்றி உங்கள் கருத்து என்ன?


அபராஜித பாரதி: வயது வரம்புகளை அமல்படுத்துவது பற்றி நாம்விவாதிக்கும் போது, தரவுகள் முக்கியம். இந்தியாவில், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் (Digital Personal Data Protection Act, 2023) சட்டம் 2023 சரிபார்க்கக்கூடிய பெற்றோரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கும் தளங்களைப் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறது. ஆனால், இதை எப்படி செயல்படுத்துவது? அதேபோல், ஆஸ்திரேலியாவின் பிரதமர் 16-வயது வரை சமூக ஊடகங்களை தடை செய்வது பற்றி பேசும்போது, அந்த தடை எவ்வாறு செயல்படுத்தப்படும்? என்பது குறித்து தெளிவாக விளக்கவில்லை.

 

டிஜிட்டல் உலகில் தடைகளை அமல்படுத்துவது கடினம். அமண்டா குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகள் பெரும்பாலும் கட்டுப்பாடுகளை உடைப்பதற்கான வழிகளை தெரிந்து வைத்துள்ளார்கள். உதாரணமாக, தென் கொரியாவின் சிண்ட்ரெல்லா சட்டம் (Cinderella Law) நள்ளிரவு முதல் காலை 6:00 மணி வரை கேமிங்கை தடை செய்தது. ஆனால், குழந்தைகள் தளங்களை அணுக அடையாள திருட்டைப் பயன்படுத்தத் தொடங்கினர். 


வயது வரம்புகள் பெற்றோர்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இது நியாயமா?


அபராஜித பாரதி:  நீங்கள் சொல்வது சரி தான். இந்தியாவில், டிஜிட்டல் கல்வியறிவு குறைவாக இருப்பதாலும், பல மொழிகள் இருப்பதாலும் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. தளங்கள் எப்போதும் எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. பல குடும்பங்கள் சாதனங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. டெல்லியில் உள்ள அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 10,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 80% குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்த உதவுவதை நாங்கள் கண்டறிந்தோம். எனவே, பாதுகாப்பான ஆன்லைன் பயன்பாட்டில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் இல்லை.  


2021-ஆம் ஆண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) தரவுகள், 40% இந்தியர்களுக்கு மட்டுமே கணினியில் கோப்புகளை நகலெடுப்பது அல்லது நகர்த்துவது எப்படி என்று தெரியும் என்பதைக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை மேம்பட்டிருக்கலாம், ஆனால் வயதைச் சரிபார்க்க அடையாள அடிப்படையிலான சரிபார்ப்பைப் பயன்படுத்துவது அவர்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, ஆன்லைன் தளங்களுக்கு என்ன பொறுப்புகள் உள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தும் போது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அவர்கள் வடிவமைப்பு மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

 

அமண்டா, வீட்டில் குடும்பங்கள் என்ன பேசுகின்றன?

 

அமண்டா: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் அதிகமாக பயன்படுத்துவதாக உணர்கிறார்கள். தீங்கு விளைவிக்கும் தீவிர நிகழ்வுகளை மட்டுமே முன்னிலைப்படுத்தும் ஊடக சூழலால் இது மோசமடைகிறது. குழந்தைகள் குறிப்பிடத்தக்க தீங்குகளை எதிர்கொள்ளும் தீவிர நிகழ்வுகளை மட்டுமே ஊடகங்கள் அடிக்கடி தெரிவிக்கின்றன. இது ஒருதலைப்பட்சமான உரையாடலை உருவாக்குகிறது. குழந்தைகளின் டிஜிட்டல் ஈடுபாட்டின் நேர்மறையான அம்சங்களை இது கவனிக்கவில்லை.

 

உயர்தர ஆன்லைன் பாதுகாப்பு பொருட்களை வழங்கும் சில நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், பெற்றோர்கள் பார்க்கும் கதைகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆதாரங்கள் பரவலாகக் கிடைக்கவில்லை. ஊடக விவாதத்தை சமநிலைப்படுத்த வேண்டும். ஆன்லைனில் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பெற்றோருக்கு வலுவான ஆலோசனைகளை வழங்குவது முக்கியம். ஆன்லைனில் இருப்பதன் பலன்களை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களை ஆதரிக்கும் போது, ​​அது தீங்குகளைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.


அபராஜித பாரதி:   இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் கல்வி முறை பெரும் பங்கு வகிக்கிறது. இந்த திறன்கள் வேலைகளுக்கு முக்கியம் என்பதால் பள்ளி பாடங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். இருப்பினும், அடிக்கடி திரை நேரத்தைப் பற்றி பேசுகிறோம். உடல் செயல்பாடுகள் மற்றும் எழுத்து ஆகியவற்றுடன் தொழில்நுட்பத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறோம் என்பது பற்றிய கேள்விகளை இது எழுப்புகிறது.


கூடுதலாக, குழந்தைகள் தங்கள் முக்கிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தியப் பள்ளிகளில் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த போதிய பாடங்கள் இல்லை.  ஆன்லைனில் எப்படி நடந்துகொள்வது, ஆபத்துக்களை அடையாளம் கண்டுகொள்வது என்பதைப் புரிந்துகொள்வது போன்றவற்றை குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தரவை ஆன்லைனில் பகிர்கிறார்கள், தனியுரிமையைப் பணயம் வைக்கிறார்கள். இதை எப்படி நிவர்த்தி செய்வது? 


அமண்டா:  நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பெற்றோர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விட வித்தியாசமாகப் பயன்படுத்துவதை குழந்தைகள் கவனித்திருக்கிறார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்காக ஒரு விதியையும், தங்களுக்கு மற்றொன்றையும் வைத்திருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பதை உள்ளடக்கியது. பெற்றோர் காட்டும் பழக்கவழக்கங்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன. பெற்றோர்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, தொழில்நுட்பத்தை தாங்களே பயன்படுத்துவது.

 

அபராஜித பாரதி:  இந்தியாவில், 'பகிர்தல்' (பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய முக்கியமான உள்ளடக்கத்தை ஆன்லைனில் பகிர்வது) தொடர்பான சட்டங்களைப் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இருப்பினும், அசாம் காவல்துறை போன்ற சட்ட அமலாக்க நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் பெற்றோர்களை எச்சரித்துள்ளன.  தரவு பாதுகாப்பு சட்டத்தின் (data protection laws) கீழ், ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட தரவை சரிசெய்யவும் அழிக்கவும் உரிமை உண்டு. குழந்தைகள், வளர்ந்தவுடன், அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளாக இருந்தபோது பதிவிட்ட மற்றும் ஏற்காத விஷயங்களை நீக்க இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவார்கள்.

 

சமூக ஊடகங்களில் பல குழந்தைகளின் செல்வாக்கு செலுத்துபவர்கள் உள்ளனர். இதற்கு என்ன செய்வது?


அபராஜித பாரதி: 2023-ஆம் ஆண்டில், குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (National Commission for Protection of Child Rights) பொழுதுபோக்குத் துறையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 


இந்த வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு ஒலிக்கட்புல உள்ளடக்கத்திலும் (audio visual content) குழந்தை நடிக்கும் முன் தயாரிப்பாளர்கள் மாவட்ட நீதிபதிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு பெற்றோரை பொறுப்பேற்க மாட்டார்கள். இருப்பினும், சமூக ஊடகங்களில், தயாரிப்புகளை விளம்பரப்படுத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பயன்படுத்துவதாக மக்கள் நினைக்கும் போது சில கணக்குகள் காட்டுகின்றன. 


பிரான்சில், 16 வயதுக்குட்பட்ட குழந்தை செல்வாக்கு செலுத்தி பணம் சம்பாதித்தால், அந்த குழந்தைக்கு 16 வயது ஆகும் வரை அந்த பணத்தை பெற்றோரால் அணுக முடியாது என்று ஒரு சட்டம் உள்ளது. இதே போன்ற விதிமுறைகளை உருவாக்குவது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும்.


குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க சமூக ஊடக தளங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் என்ன பொறுப்புகளைக் கொண்டுள்ளன?


 அமண்டா:  குழந்தைகளை தீங்கிலிருந்து பாதுகாப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். குழந்தைகள் ஆன்லைனில் பாதுகாப்பாக ஈடுபடக்கூடிய சூழல்களை உருவாக்குவதில் போதுமானதாக இல்லை. நிறுவனங்களையும் அரசாங்கங்களையும் இணக்க பயன்முறையிலிருந்து குழந்தைகளுக்கு உகந்த சூழல்களை வடிவமைப்பதற்கு மாற்ற வேண்டும்.  


வயது உத்தரவாத தொழில்நுட்பங்கள் அல்லது சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை தீர்மானிப்பது ஒரு பெரிய சவால். அடையாள சரிபார்ப்புக்கு வரும்போது நாம் எவ்வளவு பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். குறிப்பாக தனியார் நிறுவனங்கள் இதைச் செய்ய அதிக தரவுகளை சேகரிக்க வேண்டியிருந்தால்? 


அபராஜித பாரதி: தீங்கு விளைவிக்கும் அதே தொழில்நுட்பம் ஆன்லைனில் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை தானாக தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளைக் காட்டினால், நிறுவனங்கள் அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை நன்மை மற்றும் தீமை இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பதை இது காட்டுகிறது. எனவே, டிஜிட்டல் துறையில் தடை விதிப்பது கடினம்.


தடை செய்வது தீர்வல்ல என்றால், தளங்களை எவ்வாறு மேம்படுத்த முடியும்? 


உலகளாவிய உதாரணங்களை நாம் பார்க்கலாம். 2020-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வயதுக்கு ஏற்ற வடிவமைப்பு குறியீடு (Age-Appropriate Design Code) தளங்களில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது மெட்டா, கூகுள், டிக்டோக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களில் 128 மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்துகிறது. இருப்பினும், இந்தியாவில் இதுபோன்ற விதிமுறைகள் இன்னும் இல்லை. 


இந்த மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தளங்கள் மேம்பாடுகளைச் செய்ததாகக் கூறினால் மட்டும் போதாது. இந்த மேம்பாடுகள் செய்யப்பட்ட பிறகு குழந்தைகளின் செயல்கள் எவ்வாறு மாறுகிறது என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.



Original article:

Share:

"ஒரே நாடு, ஓரே தேர்தல்" கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது

 ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு (anti-federal)  எதிரானது. 


நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது அரசியல் கட்சிகள் மற்றும் குடிமை சமூகத்தில் உள்ள பலரின் எதிர்ப்பையும் மீறி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


 இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளார்.  முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த உள்ளது. பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறும். 


ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் அரசியலமைப்பு திருத்தங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இந்த முன்மொழிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டால் அவற்றை நடத்துவதற்கான செலவு கணிசமாக குறையும் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. இரண்டாவதாக, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததால், அரசியல் கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது ஆட்சி மற்றும் சட்டமன்ற பணிகளை பாதிக்கிறது. இருப்பினும், செலவு குறைப்பு பற்றிய தரவு எதுவும் இல்லை. தற்போது, பொதுத் தேர்தல்கள் நீண்ட காலம் எடுக்கும், சில மாநில தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன. 


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தல் நடைமுறை நீட்டிக்கப்படலாம். ஒரு மாநில சட்டமன்றம் அதன் ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் கலைக்கப்பட்டால், மீதமுள்ள ஆண்டுக்கு மட்டுமே தேர்தல்கள் நடத்தப்படும். 


இருப்பினும், புதிய சட்டசபைக்கு முழு ஐந்தாண்டு பதவி காலம் இருக்காது. அதன் பதவிக்காலம் அந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும். ஒரே நேரத்தில் தேர்தல் மூலம் செலவுகளைச் சேமிக்கும் யோசனைக்கு இலக்குக்கு எதிராக இந்த விதி உள்ளது. இது கூட்டாட்சி கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது. 


பல அடுக்கு நிலைகளைக் கொண்ட ஆட்சி முறையில், மக்கள் யார் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசாங்கத்தின் வெவ்வேறு மட்டங்கள் குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டுள்ளன. 


ஒவ்வொரு பிரதிநிதியும் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டிருக்க அனுமதிக்கிறது. வாக்காளர்கள் கட்சி சார்பு, வேட்பாளர் பலம், கருத்தியல் நிலைப்பாடுகள் அல்லது தங்கள் தொகுதிக்கு குறிப்பிட்ட சமூக-பொருளாதார காரணங்களின் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை செய்யலாம். அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையும் அதன் தேர்தல்களும் முக்கியமானவை. 

 

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான இரண்டாவது காரணம், பிரதிநிதிகள் எப்போதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையான பிரச்சாரம் தற்போதைய ஆளும் கட்சிகளின் செயல்பாடுகளின் காரணமாக ஏற்படுகிறது. 


பல அடுக்குகளாக தேர்தல்களை ஒன்றாக நடத்துவது ஒவ்வொரு அடுக்கின் முக்கியத்துவத்தையும் குறைக்கும். குறிப்பாக, சட்டமன்றம் மற்றும் நகராட்சி / பஞ்சாயத்து மட்டங்களில், ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. 


கடைசியாக, இந்த முன்மொழிவை அமல்படுத்த, தற்போது பல மாநில அரசுகளின் பதவிக்காலத்தை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கூட்டாட்சியை (federalism) ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக குழுக்கள் ஒன்றிய அரசின் இந்த முன்மொழிவை நிராகரிக்கின்றனர்.



Original article:

Share:

சுற்றுச்சூழல் பிரச்சினையை ஒரு தேர்தல் பிரச்சினையாக மாற்றுதல் - அஜய் தியாகி

 சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறலாம். 


கேரள மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரபல சுற்றுச்சூழல் நிபுணர்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த கஸ்தூரி ரங்கன் குழுவில் (Kasturirangan committee) உறுப்பினர் செயலாளராக இருந்ததன் அடிப்படையில் இதற்கான அறிக்கையை 2013 இல் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தோம். 


சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தில் (Ministry of Environment and Forests (MoEF)) இந்தக் குழு நிறுவப்பட்ட சூழலானது இந்த நிகழ்வின் சோகம் நமக்கு நினைவூட்டியது. மேலும், இந்த குழுவானது ஆறு மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியது. மேலும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது. இறுதியில், சீரான அறிக்கையை உருவாக்கும் கடினமான பணியை அது எதிர்கொண்டது.


அதன் முடிவில், இந்தக் குழு தனது முயற்சிகளில் மிகவும் திருப்தி அடைந்ததாகவும் மற்றும் இவற்றின் பரிந்துரையின் நடைமுறை மற்றும் போதுமான அளவு செயல்படுத்தக்கூடியவை என்று உணர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை.


இப்படியான அவலங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நம் நாட்டில் செயல்படுத்துவது ஏன் மிகவும் கடினமாக அமைகிறது.


கருத்தில் கொள்ள பல காரணிகள் உள்ளன. முதலாவதாக, குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வளரும் நாடு இந்தியா ஆகும். இது உலக மக்கள்தொகையில் 18 சதவீதத்தையும், உலக கால்நடைகளில் 30 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், இது உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது மற்றும் உலகின் நீர் ஆதாரங்களில் வெறும் 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் $2,500 மற்றும் பெரிய அளவில் வருமான சமத்துவமின்மையை கொண்டுள்ளது.


வளர்ச்சி முரண்பாடு :  


ஆனால், வளர்ச்சிக்கான விருப்பங்கள் சுற்றுச்சூழல் தடைகளைச் சந்திப்பது இயற்கையானதாக உள்ளது.


'சுற்றுச்சூழல்' என்பது தனித்துவமாக வரையறுக்க முடியாத அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் ஒன்றியம், மாநிலம் அல்லது ஒரே நேரத்தில் எந்தப் பட்டியலிலும் ‘சுற்றுச்சூழல்’ சேர்க்கப்படாததில் ஆச்சரியமில்லை. இதில் நீர், காடு, சுகாதாரம் போன்ற அதன் கூறுகள் இந்த பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இது அரசாங்கங்களின் சட்டமியற்றும் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு இடையே அதிகார வரம்பில் சிக்கல்களை உருவாக்குகிறது.


சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் நீண்டகால நன்மைகள் குறித்து வாக்காளர்களை நம்ப வைக்க அரசியல் கட்சிகள் அடிக்கடி போராடுகின்றன. இந்த நடவடிக்கைகள் மற்ற வளர்ச்சித் திட்டங்களுடன் முரண்படும்போது இது குறிப்பாக உண்மையாகும் .


இதற்கு நேர்மாறாக, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வேலை உருவாக்கும் திட்டங்கள் மூலம் கட்சிகள் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்துவது எளிது. எனவே, இந்தியா போன்ற வேகமாக வளரும் நாட்டில், அரசியல்வாதிகள் பாதுகாப்பு திட்டங்களை விற்பனை செய்வதில் கடுமையான சிக்கல் உள்ளது.


மாநில மற்றும் ஒன்றிய அளவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஐந்தாண்டு தேர்தல் சுழற்சியில் கவனம் செலுத்துகின்றனர். இந்த சுழற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நீண்டகால நோக்கங்களுடன் முரண்படுகிறது.


சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் 1984-ல் 'போபால் சோகத்திற்கு' (Bhopal tragedy) பின்னர் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 26 பிரிவுகளை மட்டுமே கொண்டது. மேலும், பயனுள்ள அமலாக்கத்திற்கான துணை சட்டங்களை நம்பியுள்ளது. இந்த அணுகுமுறை கருத்தியல் ரீதியாக சரியானதாக இருந்தாலும், நடைமுறையில் இது சரியாக வேலை செய்யவில்லை. இந்த சட்டம் மிகக் குறைவான திருத்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால், அதன் கீழ் உள்ள விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அறிவிப்புகள் வளர்ச்சித் தேவைகள், சிறப்புத் திட்டங்கள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் அடிக்கடி மாற்றப்படுகின்றன. 


துரதிருஷ்டவசமாக, இந்த அணுகுமுறை வெற்றிபெறவில்லை. இந்தச் சட்டமே காலப்போக்கில் மாறாமல், மிகக் குறைவான திருத்தங்களுடன் உள்ளது. இருப்பினும், சட்டத்தின் கீழ் அரசாங்கங்கள் வெளியிடும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு இதையே கூற முடியாது.


வளர்ச்சித் தேவைகள், 'சிறப்பு' (special) அல்லது 'இராஜதந்திர' (strategic) இயல்புடைய திட்டங்கள், வாழ்வாதாரப் பிரச்சினைகள், மக்கள் பிரதிநிதித்துவங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இவை வழக்கமான அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது முக்கியமான மற்றும் அத்தியாவசியமான சுற்றுச்சூழல் அம்சங்களை 'பேச்சுவார்த்தைக்குட்படாததாக' (non-negotiable) மாற்ற வேண்டும். இந்த அம்சங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இது பங்குதாரர்கள், அரசாங்கங்கள் அல்லது நீதிமன்றங்களின் விளக்கத்திற்கு இடமளிக்காது.


பலவீனமான அமலாக்கம் (Weak enforcement)


சுற்றுச்சூழல் சட்டங்களை அமல்படுத்துவது மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது பலவீனமாக உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (State Pollution Control Boards (SPCBs)) பெரும்பாலும் நிதி பற்றாக்குறை மற்றும் குறைவான பணியாளர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் அரசாங்க ஒதுக்கீடுகளை நம்பியுள்ளனர் மற்றும் நிதிநிலை அறிக்கையில் மற்ற கோரிக்கைகளுக்கு இடையே குறைந்த முன்னுரிமை கொண்டுள்ளனர். 


மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் (State Pollution Control Boards (SPCBs)) பல தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்க முடியாத அரசியல்வாதிகள் ஆவார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை வழங்கும்போது வாடகைக்கு பணம் எடுப்பது மற்றும் ஊழல் செய்வது போன்ற கடுமையான பிரச்சினையும் உள்ளது.


பொது நலனுக்காக தங்கள் சம்பாதிக்கும் திறனை விட்டுக்கொடுக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவது முக்கியம். இந்த தலைப்பில் ஏராளமான ஆய்வுகள் உள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறை எதுவும் இல்லை.


பல சிறப்பு வகை மலைப்பாங்கான மாநிலங்கள் இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்பியுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு அமைக்கும் ஒவ்வொரு நிதிக் குழுவிலும் அதைக் கொண்டு வருகிறார்கள். இந்த நிதிக் குழுக்கள் மாநிலங்களுக்கு எப்படி நிதி பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்பதை முடிவு செய்கின்றன. இத்தனை முயற்சிகள் செய்தும் வெற்றி கிடைக்கவில்லை.


தேர்தல் ஆணையத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அரசியல்வாதிகள் மற்றும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது உதவும்.


கட்டுரையாளர் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சிறப்பு ஆய்வாளர் மற்றும் முன்னாள் செபி தலைவர் ஆவார்.



Original article:

Share:

டெலாவேர் உச்சி மாநாடு : குவாட் நாடுகள் செழித்தோங்குகின்றன. -மோகன் குமார்

 குவாட் உச்சிமாநாடு ஒரு முக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது மற்றும் அது அதன் செய்தியை சரியாகப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும், தடுப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது.


அடுத்த குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு செப்டம்பர் 21, 2024 அன்று அமெரிக்காவின் டெலாவேரில் நடைபெற உள்ளது. இந்த குவாட் உச்சிமாநாட்டின் நேரம் மற்றும் இடம் பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டது. 


 இந்த ஆண்டு இந்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதாக இருந்தது. ஆனால், இந்தியா ஒரு தேதியை முன்மொழிந்தபோது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரச்சாரத்தில் இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. வரவிருக்கும் உச்சிமாநாடு ஜனாதிபதியாக ஜோ பைடனின் கடைசி உச்சிமாநாடாக இருக்கும். மேலும், அதை அவரது சொந்த ஊரான டெலாவேரில் நடத்துவது பொருத்தமானது. இந்த உச்சிமாநாடு குவாட் மீதான ஜோ பைடனின் உறுதிப்பாட்டையும் கௌரவிக்கிறது. செப்டம்பர் 2021-ல் வாஷிங்டன் டி.சி.யில் முதல் குவாட் உச்சி மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். 


இது நான்காவது குவாட் உச்சி மாநாடாகும். ஜப்பானிய தலைவர் ஷின்சோ அபே 2007-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பிறகு குவாட் ஒரு கடினமான தொடக்கத்துடன் தொடங்கியது. குவாட் அமைப்பின் மதிப்பானது குறைவதாக தோன்றிய ஒரு காலத்திற்குப் பிறகு, அது 2017-ல் புதுப்பிக்கப்பட்டது. அப்போதிருந்து, குவாட் ஒரு இராஜதந்திர அளவிலும், ஆனால் இராணுவம் அல்லாத செயல் திட்டத்தில் கவனம் செலுத்தி, அது வலுவானது மற்றும் நீடித்தது என்பதைக் காட்டியுள்ளது. 


இதுவரை நடைபெற்ற மூன்று உச்சி மாநாடுகளைப் பார்க்கும்போது, ​​பல பொதுவான கருப்பொருள்கள் தோன்றுகின்றன. இந்த உச்சி மாநாட்டிற்கான முக்கிய கருப்பொருளானது, இந்தோ-பசிபிக் கடல்சார் கள விழிப்புணர்வு முயற்சி (initiative regarding Indo-Pacific Maritime Domain Awareness) ஆகும். இது 2022-ல் டோக்கியோ குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது மற்றும் 2023 ஹிரோஷிமா உச்சி மாநாட்டில் தொடரப்பட்டது.


தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் பிராந்திய நட்பு நாடுகளின் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அவர்கள் இந்த கூட்டணி நாடுகளுக்கு காலநிலை மாற்றத்திற்கு பதிலளிக்க உதவும் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் சட்டங்களை அமல்படுத்துவதற்கு அமையும்.


மற்ற முக்கிய கருப்பொருள் காலநிலை (climate) ஆகும். இந்தோ-பசிபிக் நாடுகள் காலநிலை நெருக்கடியின் மையத்தில் உள்ளன மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கடந்த உச்சிமாநாட்டில், குவாட் தலைவர்கள் சுத்தமான எரிசக்தி விநியோகச் சங்கிலிகளுக்கான கூட்டுக் கொள்கைகளை அமைத்தனர். இது நாடுகளில் சுத்தமான எரிசக்தியில் முதலீடு செய்யப்படும் முறையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Quad-ன் காலநிலை தகவல் சேவைகள் (Climate Information Services (CIS)) முன்முயற்சியானது, இந்தோ-பசிபிக் பகுதியில் காலநிலை தரவுகளைப் பகிர்வதற்கான திறன், ஒத்துழைப்பு மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Quad Indo-Pacific Oceans Research Alliance என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் தரவுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய காலநிலை மாறுபாடுகளில் அவற்றின் செல்வாக்கை மதிப்பிடுவதற்கும், கடல் மட்ட உயர்வு மற்றும் காலநிலை மாற்றம் எவ்வாறு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் குவாட் உறுப்பினர் வளங்களை பாதிக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கும் ஒரு அறிவியல் வலையமைப்பாகும். நவம்பரில் அஜர்பைஜானில் அடுத்த COP-29 கூட்டத்திற்கு முன்னதாக, டெலாவேரில் உள்ள குவாட் தலைவர்கள் இந்த பகுதியில் ஒரு வலுவான செய்தியை அனுப்ப முடியும்.


2021-ல் வாஷிங்டனில் நடந்த முதல் உச்சிமாநாட்டிலிருந்து உள்கட்டமைப்புக்கு ஒரு நிலையான கவனம் செலுத்துகிறது. ஆரம்பத்தில், குவாட் உள்கட்டமைப்புக்காக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, பல முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. உயர்தர உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் குவாட் கட்டமைப்பு கூட்டுறவு (Quad Infrastructure Fellowship) மற்றும் கடலுக்கடியில் கேபிள்களில் கவனம் செலுத்தும் கேபிள் இணைப்பு மற்றும் மீள்தன்மைக்கான குவாட் கூட்டு முயற்சி (Quad Partnership) ஆகியவை இதில் அடங்கும். டெலாவேர் உச்சி மாநாடு இந்த முயற்சிகளை முன்னெடுக்கும் என்று நம்பப்படுகிறது.


குவாட் உச்சி மாநாடுகளில் தலைவர்களின் விவாதங்களில் முக்கியமான குறிப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எப்போதும் இடம்பெற்றுள்ளது. இதற்கு டெலாவேர் உச்சிமாநாடு ஒரு விதிவிலக்கல்ல. குவாட் அமைப்பானது எதிர்காலத்தின் கண்டுபிடிப்புகளுக்கு தலைமை தாங்குவதையும், புதிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் நன்மைகள் நாடு முழுவதும் பகிர்ந்து கொள்ளப்படுவதையும் உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. 2021-ம் ஆண்டில், குவாட் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தரநிலைகள் குறித்த கொள்கைகளைக் கொண்டு வந்துள்ளது. இது மே 2023-ல் கொள்கைகளை ஒப்புக்கொண்டது.


இணையவெளி பாதுகாப்பு (Security in cyberspace) என்பது குவாட் நாடுகளுக்கு நீண்டகாலமாக கவலையளிக்கிறது. இணைய பாதுகாப்பு (cybersecurity) முதல் முக்கியமான உள்கட்டமைப்பு மென்பொருள் வரை, குவாட் ஒரு பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான இணைய சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளுக்கு எதிரான இணைய தாக்குதல்கள் இடையூறு விளைவிக்கக் கூடிய வகையில் நிகழ்கின்றன. முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கான இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தோ-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட முக்கியமான உள்கட்டமைப்பின் இணையப் பாதுகாப்பிற்கான கூட்டுக் கொள்கைகளை Quad அமைப்பின் நட்பு நாடுகள் உருவாக்கியுள்ளனர்.


குவாட் அமைப்பு நாடுகளுக்கு ஆரோக்கியம் முக்கிய கவனம் செலுத்துகிறது மற்றும் டெலாவேரில் முக்கியமானதாக இருக்கும். குவாட் கூட்டு சுகாதார பாதுகாப்பு (Quad Health Security Partnership), 2023 உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்டது. இதில்,  குவாட் அமைப்பானது, தடுப்பூசிக்கான கூட்டாண்மையின் வெற்றியை உருவாக்குகிறது. இந்த புதிய கூட்டாண்மை பல முயற்சிகளை ஆதரிக்கும். இது கள தொற்றுநோயியல் மற்றும் பரவல் பதிலளிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும். இது நோய் கண்காணிப்பை மேம்படுத்துகிறது, தரவு அமைப்புகளை மேம்படுத்துகிறது மற்றும் தேசிய சுகாதார அவசரகால செயல்பாட்டு மையங்களை வலுப்படுத்தும். இந்த மேம்பாடுகள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பரவல்கள் மற்றும் பிற சுகாதார சவால்களுக்கு நிபுணர்கள் விரைவாகவும் திறமையாகவும் பதிலளிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தோ-பசிபிக் முழுவதும் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதிலளிப்பதில் உள்ள முக்கியமான இடைவெளிகளை இந்த நாடுகளின் கூட்டாண்மை நிவர்த்தி செய்யும் என்று குவாட் அமைப்பு நம்புகிறது.


டெலாவேர் உச்சிமாநாடு ஒரு முக்கியமான நேரத்தில் நடக்கிறது. இந்த உச்சிமாநாடானது அதன் செய்தியை சரியாகப் பெறுவது முக்கியம் ஆகும். இது தடுப்பு மற்றும் உறுதியை திறம்பட சமநிலைப்படுத்த வேண்டும். இந்தோ-பசிபிக் பகுதியில் ஒருதலைப்பட்சமான மாற்றங்களைச் செய்வதிலிருந்து எந்தவொரு சக்தியையும் தடுப்பதற்கு கடுமையாக ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், பல்வேறு இராஜதந்திர ரீதியில் இராணுவம் அல்லாத பகுதிகளில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் குவாட் அமைப்பு கவனம் செலுத்துகிறது என்பதை உறுதி செய்து தெளிவுபடுத்த வேண்டும். 


மோகன் குமார் பிரான்சுக்கான இந்திய தூதராக இருந்தார். அவர் இப்போது ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

இந்தியா மின்மயமாகிறது, ஆனால் மின்னேற்று நிலையங்கள் (Charging Points) எந்த அளவில் உள்ளன? -சோனல் ஷா மனிஷா ஷர்மா

 ஆண்கள், மலிவு விலை (affordability) மற்றும் செயல்பாட்டு சார்ஜிங் நிலையங்களுக்கு (functional charging points) முன்னுரிமை அளிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இதற்கிடையில், பெண்கள் பாதுகாப்பு, வசதி, பயன்பாடு மற்றும் அணுகல் ஆகியவை இவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. 


இந்திய அரசு தனது போக்குவரத்து அமைப்பிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க கடுமையாக உழைத்து வருகிறது. இந்த மாற்றத்தில் மின்சார இரு சக்கர வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அனைத்து மின்சார வாகன (EV) விற்பனையில் 58% ஆகும். இருப்பினும், நாட்டின் அனைத்து இருசக்கர வாகன விற்பனையில் 5% மட்டுமே அவை இன்னும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. பெண் ஓட்டுநர்கள் இந்த சந்தையில் ஒரு சிறிய குழு ஆவார். 2019-20ஆம் ஆண்டில், அனைத்து ஓட்டுநர் உரிமங்களில் 12% மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் பெண்கள் மின்சார இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக அர்பன் கேடலிஸ்ட்ஸ் (Urban Catalysts) ஆய்வு நடத்தியது. இந்த ஆராய்ச்சிக்கு இங்கிலாந்தின் எய்டின் உயர்-தொகுதி போக்குவரத்து பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டத்தால் (High-Volume Transport Applied Research Programme) நிதியளிக்கப்பட்டது. இவர்கள் தற்போதைய உள் எரிப்பு இயந்திரம் (internal combustion engine(ICE)) மற்றும் மின்சார இரு சக்கர வாகனம் பயன்படுத்துபவர்களுடன் முதன்மை ஆய்வுகள் மற்றும் குழு விவாதங்களை (focus group discussions (FGD)) மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளானது சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. இதில், பொது இடங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வது குறித்த பெரும் கவலை அடைவதாக இந்த ஆய்வுக்கான முடிவுகள் காட்டுகின்றன.


பெரும்பாலான மின்சார இரு சக்கர வாகன (electric two-wheeler (E2W) பயனர்கள் தங்கள் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்கிறார்கள். இதில் 90% தனிப்பட்ட பயனர்களும், 75% வணிகப் பயனர்களும் அடங்குவர். இதனால், இவர்கள் பெரும்பாலும் தங்கள் பயண தூரத்தை குறைத்துக் கொள்கிறார்கள். சார்ஜிங் நிலையங்களின் இடங்கள் பற்றிய நம்பகமான தகவல்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், பொதுவாக பெண்கள் E2W பயனர்கள் கூடுதல் பாதுகாப்புக்கான கவலைகளை எதிர்கொள்கின்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த பெண் பயனர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதாவது, “சார்ஜ் செய்ய மாலுக்குச் சென்றாலும், பார்க்கிங் பகுதியில்தான் இதற்கான வசதிகள் அமைந்துள்ளன. மேலும், இதைச் சுற்றிலும் விளக்குகளோ, பாதுகாப்பு வசதிகளோ மற்றும் இதைச் சுற்றிலும் ஆட்களே இல்லை. இதனால், சார்ஜ் செய்யும் போது தனியாக நிற்பது பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்.


மின்சார இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் மற்றொரு பெண் குறிப்பிடுவதாவது, “பொது சார்ஜிங் நிலையங்களுக்குச் செல்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், எனக்கு அங்கு நீண்ட நேரம் நிற்க வசதியாக இல்லை. இது தேவையற்ற கவனத்தை ஈர்க்கும். மேலும், நான் ஏன் நிற்கிறேன் என்று மக்கள் கேள்வி எழுப்பலாம். இதை தவிர்க்க, வீட்டிலேயே எனது வாகனத்தை சார்ஜ் செய்ய தேர்வு செய்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.


ஆண்கள் மலிவு விலை மற்றும் செயல்பாட்டு சார்ஜிங் நிலையங்களைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினர். இருப்பினும், பெண்களுக்கு இதில் வெவ்வேறு முன்னுரிமைகள் இருந்தன. பாதுகாப்பு, சௌகரியம், பயன்பாட்டினை மற்றும் சார்ஜிங் நிலையங்களை எளிதாக அணுகுவதை அவர்கள் மதிப்பிட்டனர். சார்ஜிங் நிலையங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பெண்கள் கவலைப்பட்டனர். இந்த இடங்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட நேர காத்திருப்பு குறித்து அவர்கள் கவலைப்பட்டனர்.


தற்போதுள்ள மின்சார இரு சக்கர வாகன (E2W) பயனர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றோம். இதன் அடிப்படையில், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள பொது சார்ஜிங் நிலையங்களை (public charging stations) மதிப்பிடுவதற்கான மதிப்பாய்வு கட்டமைப்பை உருவாக்கினோம். இந்த கட்டமைப்பு 23 தொடர்புடைய பண்புகளுடன் நான்கு விதமான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. இந்த நான்கு அம்சங்கள் கீழே குறிப்பிடுவன:


1. சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிவதில் எளிமை.


2. பாதுகாப்பு.


3. மின்னேற்ற உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் இணைப்பு.


4. வசதிகள்.


இதில், ஒவ்வொரு பண்புக்கும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 0.5 முதல் 3.0 வரை மதிப்பு கொடுக்கப்பட்டது. டெல்லி மற்றும் சென்னையில் உள்ள 60 சார்ஜிங் நிலையங்களை மதிப்பீடு செய்ய களஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில் டெல்லி வடக்கு, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில், சென்னை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. தரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பண்புக்கும் 0 முதல் 3 வரை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதில், மொத்த மதிப்பெண்ணானது சார்ஜிங் நிலையங்களின் மதிப்பீட்டை தீர்மானித்தது. 0 முதல் 33 வரையிலான மதிப்பெண்கள் மிகவும் மோசமாகவும், 33.01 முதல் 66 வரை மோசமானதாகவும், 66.01 முதல் 99 வரை திருப்திகரமாகவும் மதிப்பிடப்பட்டது.


சென்னையில் சார்ஜிங் நிலையங்கள் அனைத்து அம்சங்களிலும் மோசமாக மதிப்பிடப்பட்டுள்ளன. டெல்லி சார்ஜிங் நிலையங்கள் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு வசதியில் மோசமாக மதிப்பிடப்பட்டன. ஆனால், சார்ஜிங் நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றன. மேலும்,  இதன் வசதிகளில் மிகவும் மோசமாக மதிப்பிடப்பட்டன. 


சார்ஜிங் நிலையங்கள் குறித்து நம்பகத்தன்மை இல்லாத தகவல்கள் 


தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்களில், டெல்லியில் 64% மற்றும் சென்னையில் 46% ஆக செயல்பட்டன. ஆற்றல் திறன் பணியகத்தின்படி (Bureau of Energy Efficiency), சென்னையில் 151 பொது சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இதற்கு மாறாக, டெல்லியில் 2,452 சார்ஜிங் நிலையங்கள் இருப்பதாக ஸ்விட்ச் டெல்லி இணையதளம் (Switch Delhi website) தெரிவித்துள்ளது. டெல்லியில் ஒவ்வொரு 103 மின்சார வாகனங்களுக்கும் ஒரு சார்ஜிங் நிலையம் உள்ளது என்று மாதிரி கணக்கெடுப்பு (sample survey) காட்டுகிறது. சென்னையில் 455 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையங்கள் உள்ளது. இது ஒவ்வொரு 6-20 மின்சார வாகனங்களுக்கு ஒரு பொது சார்ஜரின் உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடப்படுகிறது  என்று Alvarez & Marsal, 2022 கணக்கெடுப்பு காட்டுகிறது.


மின்னேற்று நிலையங்கள் செயல்படுகின்றனவா மற்றும் துல்லியமாக அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த குழு வெவ்வேறு சார்ஜிங் நிலையங்களை இயக்குபவர்களிடமிருந்து திறன்பேசி பயன்பாடுகளைப் பயன்படுத்தியது. இதில், பலவற்றில் தெளிவான அடையாளங்கள் அல்லது தெரிவுநிலையைக் கொண்டிருக்கவில்லை.

மின்னேற்று (சார்ஜிங்) நிலையங்களின் பாதுகாப்பு  


பெரும்பாலான மின்னேற்று நிலையங்களில் உதவியாளர் அல்லது பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பயனர்களுக்கு தகவலுடன் உதவுவதற்கு இது ஒரு கவலையாக இருந்தது. சில இடங்களில், குறிப்பாக பெட்ரோல் பம்புகள் (petrol pumps) மற்றும் சாலையோரங்களில் (along roadsides) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மத்திய டெல்லியில் சில நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.


மின்னேற்று (சார்ஜிங்) உள்கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பு


இதில் பொதுவாக, பல காரணிகளை மதிப்பீடு செய்தோம். E2W-களுக்கான வேகமான சார்ஜர்களின் கிடைக்கும் தன்மை, அவற்றின் இயங்குதன்மை, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய தகவல் மற்றும் சார்ஜிங் நிலையங்களை அணுகுவதற்கான காத்திருப்பு நேரம் ஆகியவற்றை பொறுத்து மதீப்பீடு அமைகிறது.


ஒரு பெண் E2W பயனர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “நான் சார்ஜ் செய்யும் இடத்திற்கு வந்தபோது, ​​சார்ஜிங் போர்ட் (charging port) எனது வாகனத்திற்குப் பொருந்தவில்லை என்பதைக் கண்டறிந்தேன். எனது இரு சக்கர வாகனத்தின் பேட்டரியின் அளவு குறைந்ததால், அது கண் சிமிட்ட ஆரம்பித்ததால் நான் மிகவும் பயந்தேன். நான் எப்படியோ வீட்டிற்கு திரும்பினேன். ஆனால், அது எனக்கு ஒரு கனவாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.


வசதிகள் (Amenities)


சென்னை மற்றும் டெல்லியில் சார்ஜிங் நிலையங்களில் வசதிகள் இல்லை. மேலும், இவர்களுக்கு இருக்கை, நிழலான காத்திருப்புப் பகுதிகள், குடிநீர், கழிவறைகள் இல்லை. மேலும், வாகனத்தை சார்ஜ் செய்யும் போது நிறுத்த போதுமான இடவசதி இல்லை. டெல்லி, சென்னை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் வெப்ப அலைகள் இருப்பதால் நிழல் காத்திருப்புப் பகுதிகள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது.

 

பரிந்துரைகள் (Recommendations)


சார்ஜிங் நிலையங்களில் உள்கட்டமைப்புக்கு கட்டணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்களை மின் அமைச்சகமானது திருத்தம் கொண்டு வருகிறது. இந்த வழிகாட்டுதல்கள், சார்ஜிங் நிலையங்களின் தரவுத்தளத்தை பராமரிக்க ஒரு இணையவழி போர்டல், மென்பொருள் அல்லது திறன்பேசி பயன்பாட்டை உருவாக்க பரிந்துரைக்கின்றன. மேலும், நாடு முழுவதும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.


பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான அனுமதிகளை வழங்க ஒன்றிய மற்றும் மாநில நோடல் முகமைகள் (Central and state nodal agencies) சார்ஜிங் நிலையங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். சார்ஜிங் பாயின்ட் ஆபரேட்டர்கள் (Charging point operators (CPO)) ஒவ்வொரு வாரமும் சார்ஜிங் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு நிலையைப் புதுப்பிக்க வேண்டும். பயனர் வசதிக்காக அவை உடனடியாக கிடைக்கும் தகவல்களையும் வழங்க வேண்டும். கூடுதலாக, சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டினை இருமொழி அடையாளங்கள் (bilingual signage) மற்றும் அறிவுறுத்தல் தகவல்களுடன் (instructional information) மேம்படுத்த வேண்டும்.


சார்ஜிங் நிலைய ஆபரேட்டர்கள் (Charging point operators (CPO)) ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மாநில நோடல் முகமைகளுடன் இணைந்து, பாலினத்தால் பிரிக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்களின் பயன்பாடு குறித்த தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாநில நோடல் முகமைகள் இந்தத் தரவை மத்திய நோடல் முகமைகளுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும். இந்த அணுகுமுறை சார்ஜிங் நிலையங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை நாள் மற்றும் வாகன வகையின் அடிப்படையில் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைப் புரிந்துகொள்ள உதவும். சில வாகன வகைகளுக்கு கூடுதல் சார்ஜிங் நிலையங்களைச் சேர்க்கலாமா அல்லது சிலவற்றை அகற்றலாமா என்பதைத் தீர்மானிக்கவும் இந்த தரவு உதவும்.


சார்ஜிங் நிலையங்கள் (CPs) இரவில் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். அவை செயல்படும் பகுதிகளில் இருக்க வேண்டும், தனி மதுபானக் கடைகளுக்கு அருகில் இருக்கக்கூடாது. சார்ஜிங் நிலையங்களின் உயரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கும், நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் அணுகக்கூடிய, தடையற்ற பாதை இருக்க வேண்டும். மின்சார இரு சக்கர வாகனம் (E2W) பயன்படுத்துபவர்களுக்கு உதவ பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஆதரவாக கருதப்படலாம். 


நம்பகமான பொது சார்ஜிங் இணையவழியை உருவாக்குவதற்கு வேகமான சார்ஜர்களின் கிடைக்கும் தன்மை மற்றும் இயங்கும் தன்மையும் மிக முக்கியமானதாக இருக்கும். கூடுதலாக, நிழலான இருக்கை பகுதிகள், குடிநீர் மற்றும் அருகிலுள்ள கழிப்பறைகள் போன்ற வசதிகள் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான (E2Ws) ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும்.


மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் பிற வணிக வாகனங்களின் பயன்பாடு பல காரணிகளைப் பொறுத்தது. பொது சார்ஜிங் உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, வசதி மற்றும் மலிவு ஆகியவை இதில் அடங்கும். அரசாங்கமும் சார்ஜிங் நிலையங்களின் ஆபரேட்டர்களும் (Charging Point Operators (CPOs)) இணைந்து ஒரு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.



Original article:

Share:

வட இந்தியாவைவிட தென்னிந்தியா வளர்ச்சியடைந்தது எப்படி?

 சிறந்த மற்றும் நீண்டகால அரசியல் முறைகள் மூலம் தீர்க்கப்படாவிட்டால் இந்த சவால்கள் மோசமடையும். கூட்டாட்சி அமைப்பின் நிலையான மற்றும் ஆரோக்கியமான செயல்பாடு  ஆபத்தில் உள்ளது. 


பல ஆண்டுகளாக, இந்தியாவின் வளர்ச்சியை எந்த மாநிலங்கள் இயக்குகின்றன என்பதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய சில மாநிலங்கள்  தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன. மற்றவை பொருளாதாரத் தலைநகரங்களாக மாறிவிட்டன. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் புதிய செயல்பாட்டு அறிக்கை கடந்த 60 ஆண்டுகளில் இந்த மாற்றங்களை ஆய்வு செய்துள்ளது. 


ஒருபுறம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உள்ளன. ஆய்வறிக்கையின்படி, 1960-61-ஆம் ஆண்டில், உத்தரபிரதேசம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.4% பங்களித்தது. 1990-91-ஆம் ஆண்டில், இந்த பங்கு 12.6% ஆக குறைந்தது. அதன் பிரிவினைக்குப் பிறகு, அது இன்னும் வீழ்ச்சியடைந்தது.  


இதேபோல், இந்த நேரத்தில் மேற்கு வங்கத்தின் பங்கு 10.5% முதல் 5.6% வரை குறைந்துள்ளது. தேசிய சராசரியைவிட அதிகமாக இருந்த அதன் தனிநபர் வருமானம் இப்போது அதற்கும் கீழே உள்ளது. பசுமைப் புரட்சியால் பயனடைந்த பஞ்சாப், அதன் ஒப்பீட்டு தனிநபர் வருமானம் 1960-61-ஆம் ஆண்டில் தேசிய சராசரியில் 119.6% ஆக இருந்து 1970-71 ஆம் ஆண்டில் 169% ஆக உயர்ந்தது. ஆனால் அதன்பிறகு அது சரிந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பஞ்சாபின் பங்கு 1970-71-ஆம் ஆண்டில் 4.4% ஆக இருந்து 2023-24ல் 2.4% ஆக குறைந்தது. 


இதற்கு மாறாக, தெற்கு பிராந்தியம் ஒரு வலுவான வளர்ச்சிப் பாதையைக் காட்டியுள்ளது. 1991-ஆம் ஆண்டின் சீர்திருத்தங்களுக்குப் பிறகு,  தென் மாநிலங்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு "முன்னணி நகரங்களாக" மாறின. 2023-24-ஆம் ஆண்டில், இந்த ஐந்து மாநிலங்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30% பங்களித்தன. இதேபோல், மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவும் இந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 


உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் இந்த பிராந்தியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியமாக தென் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. தொழில்துறை வருடாந்திர ஆய்வறிக்கையின்படி, இந்த மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் உள்ளன. 


பெரும்பாலான முக்கிய ஏற்றுமதி மாவட்டங்கள் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் அமைந்துள்ளன. அவர்களின் முன்னேற்றம் இருந்தபோதிலும், தென் மாநிலங்கள் பிரிக்கக்கூடிய வரித் தொகுப்பில் அவற்றின் பங்கு வீழ்ச்சியைக் கண்டன. இது 11-வது நிதி ஆணையத்தின் போது (2000 முதல் 2005 வரை) 21.1% ஆக இருந்து. ஆனால்,  15-வது நிதி ஆணையத்தின் (2021-26) போது 15.8% ஆக குறைந்தது. 


உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்கம் போன்ற குறைந்த வருவாய் மாநிலங்களில், மத்திய வரிகள் மற்றும் மானியங்களில் அவர்களின் பங்கு உட்பட மையத்திலிருந்து பரிமாற்றங்கள் அவற்றின் வருவாயில் பெரும் பகுதியை உருவாக்குகின்றன. நிதி இடமாற்றங்கள் என்பது பிராந்தியங்கள் முழுவதும் சீரான பொது சேவைகளை வழங்குவதாகும். இருப்பினும், வரி வருவாயில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவது சமீபத்திய ஆண்டுகளில் மத்திய-மாநில உறவுகளில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. 


தென் மாநிலங்களின் பிரச்சனைகள் நிதி ஆதாரங்களின் விநியோகத்திற்கு மேல் செல்கின்றன. எல்லை நிர்ணயம் (delimitation) செய்த பிறகு மக்களவையில் அதிக இடங்களை இழக்க நேரிடும் என்றும் இந்த மாநிலங்கள் அஞ்சுகின்றன. 


இது அவர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும். சிறந்த மற்றும் நீண்டகால அரசியல் தீர்வுகளுடன் தீர்க்கப்படாவிட்டால் இந்த பிரச்சினைகள் மிகவும் தீவிரமாகிவிடும். கூட்டாட்சி அமைப்பின் சமநிலை மற்றும் சீரான செயல்பாடு ஆபத்தில் சென்றுவிடும்.



Original article:

Share: