உலகளாவிய மின்னணு ஒப்பந்தம் (Global Digital Compact (GDC)) : நிலையான முறையில் மின்னணு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல் - நீது ராஜம், கிருஷ்ணா ரவி ஸ்ரீனிவாஸ்

 உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (Global Digital Compact(GDC)) என்பது ஒரு இராஜதந்திர கருவியாகும். இது மின்னணு தொழில்நுட்பங்களின் திறனில் கவனம் செலுத்துகிறது. இவை, பொதுவாக  குறிப்பிட்ட நோக்கத்துடன் அவற்றைப் பொது நலனுக்காகப் பயன்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அமைய செயல்படுத்துகிறது. மின்னணு தொழில்நுட்பங்கள் நம் உலகத்தை வியத்தகு முறையில் மாற்றுகின்றன என்ற கருத்தை உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) கொண்டுள்ளது. 


சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ (‘Summit of the Future’) உறுப்பு நாடுகள் ‘உலகளாவிய மின்னணு ஒப்பந்தத்தை’ (GDC) ஏற்றுக்கொண்டன. இது ஒரு லட்சிய ஒப்பந்தமாகும்.  சர்வதேச அளவில் இதுவே முதல்முறையாக இருக்கலாம். உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC)  மின்னணு தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறது. பொது நலனுக்காக இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துவதே இதன் குறிப்பிட்ட முக்கிய குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. 


உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) என்றால் என்ன? 


GDC ஒரு கட்டுப்படுத்தும் சட்டம் அல்ல. இது அரசாங்கங்கள், நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பகிரப்பட்ட இலக்குகளை அமைக்கும் ஒரு இராஜதந்திர கருவியாகும். இந்தக் கட்சிகள் இந்த இலக்குகளை மனதில் கொள்ள வேண்டும். GDC-க்கு அதிகக் கட்டுப்பாடாக இருந்தால், அதன் விதிமுறைகள் ஒவ்வொரு நாட்டிலும் நெகிழ்வான சட்டங்களாக உருவாகலாம்.


முன்னதாக, மற்ற இரண்டு ஒப்பந்தங்களை உருவாக்க மற்றும் சட்டப்பூர்வமாக்க ஐ.நா. இதில் முதலாவதாக ‘உலகளாவிய ஒப்பந்தமாக’ (Global Compact) மாற்றியது. இது உலகளாவிய நிலைத்தன்மை கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் ஐ.நா இலக்குகளை ஆதரிப்பதற்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் உறுதிமொழிகளின் அடிப்படையில் ஒரு தன்னார்வ முன்முயற்சியாகும். இரண்டாவது, ‘பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தம்’ என்ற விதிமுறைகளைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது சர்வதேச இடம்பெயர்வின் அனைத்து அம்சங்களையும் ஒரு முழுமையான மற்றும் விரிவான முறையில் எடுத்துரைக்கிறது.


உலகளாவிய மின்னணு  ஒப்பந்தமானது (GDC) மின்னணு தொழில்நுட்பங்கள் நம் உலகத்தை வியத்தகு முறையில் மாற்றுகின்றன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த தொழில்நுட்பங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDG)) அடைய உதவுவதன் மூலம் சமூகங்களுக்கும் உலகத்திற்கும் பயனளிக்கும். இருப்பினும், அவை கடுமையான சவால்களையும் கவலைகளையும் முன்வைக்கின்றன.


உலகளாவிய மின்னணு  ஒப்பந்தத்தை (GDC) உணர்தல் 


உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC)  என்பது நிலையான வளர்ச்சியை முன்னேற்றும் வழிகளில் தொழில்நுட்பங்களின் மனித மேற்பார்வையை உறுதி செய்யும் நோக்கத்துடன் ஒரு கூட்டுத் திட்டமாகும். சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் (norms of international law), மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் (Universal Declaration of Human rights) மற்றும் ஐ.நா 2030 செயல்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தரவு மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களின் நிர்வாகத்தில் உலகளாவிய ஒத்துழைப்பை உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC)  முன்மொழிகிறது 


இந்த ஒப்பந்தத்தின் இலக்குகளை பூர்த்தி செய்ய, ஐ.நா உறுப்பு நாடுகள் இரண்டு குழுக்களை நிறுவ உறுதியளித்துள்ளன. ஒன்று, செயற்கை நுண்ணறிவு குறித்த சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழு மற்றும் இரண்டாவது செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த உலகளாவிய உரையாடல் ஒரு குழு ஆகியவை ஆகும். 


இந்த இலக்குகளில் மின்னணு பொருளாதாரத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய மின்னணு பிளவை மூடுதல் (close the digital divide), தரவுக்கான அணுகலை மேம்படுத்துதல் (improving access to data) மற்றும் பொறுப்பான மற்றும் சமமான தரவு நிர்வாகத்தை மேம்படுத்துதல் (responsible and equable data governance) ஆகியவை அடங்கும். அதே கட்டத்தில், ஒப்பந்திற்கான கொள்கைகள் உள்ளடக்கிய பங்கேற்பு, தரவு மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களுக்கான அணுகல், நிலைத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் போட்டி சந்தையில் செயல்படும் நம்பகமான தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. 


மின்னணு பொருட்கள் மற்றும் சேவைகள் 


மின்னணு பிளவை நிவர்த்தி செய்ய, உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) மின்னணு பொது பொருட்களை (digital public goods) பயன்படுத்த முன்மொழிகிறது. இதில் திறந்த மூல மென்பொருள், திறந்த தரவு மற்றும் திறந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் தனியுரிமை மற்றும் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவை அடங்கும். 


மின்னணு பொதுப் பொருட்கள் சமூக மாற்றத்தை உண்டாக்கும் என்பதை இந்த முன்மொழிவு அங்கீகரிக்கிறது. சேவைகளை வழங்கும் "மின்னணு பொது உள்கட்டமைப்பின்" ஒரு பகுதியாக அவை சேவை செய்கின்றன. இந்த உள்கட்டமைப்புக்கு பகிரப்பட்ட மின்னணு அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். இந்த அமைப்புகள் பங்குதாரர்களின் குறிப்பிட்ட முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுடன் ஒத்துப்போக வேண்டும். இதை அடைய, உலகளாவிய மின்னணு  ஒப்பந்தமானது (GDC) தனியார் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு உட்பட கூட்டாண்மைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலகளாவிய மின்னணு  ஒப்பந்தத்தின் (GDC) குறைபாடுகள் என்ன? 


முதலாவதாக, மின்னணு திட்டங்களில் பொது-தனியார் கூட்டாண்மைப்புடன் ஐரோப்பிய அனுபவம் இந்த கூட்டாண்மைகளுக்குள் வெளிப்படைத்தன்மை பெரும்பாலும் குறைவாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது தேவைப்படும் அளவுக்குத் திறந்திருக்கும்' மற்றும் 'அத்தியாவசியமாக மூடப்பட்டது' ஆகியவற்றுக்கு இடையே கட்டுப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. இதன் பொருள், மின்னணு பொது உள்கட்டமைப்பில் வெளிப்படையானது வெளிப்படுத்தாதது, இரகசியத்தன்மை மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற ஒப்பந்தக் கடமைகளால் கட்டுப்படுத்தப்படலாம்.


இரண்டாவதாக, இணைய நிர்வாகத்திற்கான தற்போதைய கட்டமைப்பில் GDC கணிசமாக சேர்க்கவில்லை. இருப்பினும், பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயனர் நம்பிக்கையைப் பேணுவதற்கும் சுய-ஒழுங்குபடுத்திக்கொள்ள மின்னணு தொழில்நுட்ப நிறுவனங்களை இது வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை சிறந்ததல்ல. ஏனெனில், சுய கட்டுப்பாடு நடைமுறையில் பயனற்றது என்று காட்டப்பட்டுள்ளது.


மூன்றாவதாக, புதுமைகளை வளர்ப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய தரவு நிர்வாகம் முக்கியமானது என்பதை GDC அங்கீகரிக்கிறது. ஆயினும்கூட, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை என்றால், அதிகரித்து வரும் தரவு சேகரிப்பு, பகிர்வு மற்றும் செயலாக்கம்-குறிப்பாக செயற்கை நுண்ணறிவுக்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


நான்காவதாக, இந்த ஒப்பந்தமானது நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதை வலியுறுத்துகிறது. முன்னேற்றத்தை அளவிடுவதற்கு அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் தரவுகளைக் கண்காணிக்கும். இது சேகரிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் ஒரு கட்டமைப்பிற்கு பரிந்துரைக்கிறது. பொது நலனுக்காக தரவுகளை நிர்வகிப்பதற்கான முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. இதை அடைவதற்கு, பெரு நிறுவனங்களுக்கு தரவு மற்றும் இணைய நிர்வாகத்தில் அதிக அதிகாரம் வழங்குவதை இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது. இருப்பினும், ஏகபோகக் கட்டுப்பாட்டைத் தடுக்கத் தேவையான எதிர் நடவடிக்கைகளை அது வலியுறுத்தவில்லை.


உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) மற்றும் ஐக்கிய நாடு (UN) 


பல பிரிவுகளில் உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) அதன் நோக்கங்களை அடைய நாடுகளின் ஒற்றுமை போதுமானதாக இருக்கும் என்று கருதி, அடிப்படை பிரச்சினைகளின் சிக்கலான தன்மையைத் தவிர்த்து விருப்பமான அறிக்கைகளை வெளியிடுகிறது. ஆனால், இந்த நிலைப்பாடு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை நிர்வகிப்பதில் ஒரு முக்கிய நபராக இருக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் விருப்பத்தையும் பிரதிபலிக்கக்கூடும். 


எடுத்துக்காட்டாக, 21-ம் நூற்றாண்டில், எண்ணெய் தரவை போன்றது. இது மிகவும் மதிப்புமிக்கது. குறிப்பாக, பிரித்தெடுக்கும் தொழில்களில், இது மாசுபடுத்தும் விளைவுகளை ஏற்படுத்தும். உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் விரைவான வளர்ச்சி இதை எடுத்துக்காட்டுகிறது. இந்த மாதிரிகள் பயிற்சிக்காக சேகரிக்கப்பட்ட பரந்த அளவிலான தரவுகளை நம்பியுள்ளன. செயற்கை நுண்ணறிவு  நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) அங்கீகரிக்கிறது. இருப்பினும், இந்த சிக்கல்களைத் தீர்க்க சில உறுதியான தீர்வுகள் அல்லது உத்திகளைக் கொண்டுள்ளது.


இதேபோல், உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) "நம்பிக்கையுடன் தரவு ஓட்டம்" (data flow with trust) என்ற கருத்தை ஆதரிக்கிறது. ஆனால், பல நாடுகள் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டன. ஏனெனில், இது மின்னணு இறையாண்மைக் கொள்கையுடன் முரண்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். சில நாடுகளில் தங்கள் குடிமக்களின் தரவுகள் தங்கள் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று சட்டங்கள் உள்ளன.


இறுதியாக, உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) பல்வேறு நோக்கங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட செயல்களை தொடர்புடைய நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஏனெனில், இது SDGகளை உணர்ந்து கொள்வதில் மின்னணுமயமாக்கல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற பார்வையை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், 2015-ஆம் ஆண்டில் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தற்போதைய செயற்கை நுண்ணறிவு  புரட்சி தொடங்கவில்லை. SDGகளை உணர்ந்து கொள்வதில் நாடுகளின் சுவாரஸ்யமற்ற பதிவைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) போன்ற ஒரு கூடுதல் ஒப்பந்தம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. 


பிக் டெக் (Big Tech) நிறுவனத்துடன் ஒத்துழைத்து ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஐநா உறுப்பு நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் தங்கள் மின்னணுக்கான இறையாண்மையை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். மின்னணு தொழில்நுட்பங்களின் உலகளாவிய நிர்வாகமானது GDC போன்ற ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு சிக்கலானது. அதிகார வரம்பு, பிராந்திய மற்றும் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்ய எங்களுக்கு பலதரப்பு மற்றும் பிராந்திய பேச்சுவார்த்தைகள் தேவை.


தற்போதுள்ள மின்னணு ஆளுகை முறைகளை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைப்பதை GDC நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறிப்பிட்ட திட்டங்களை வழங்குபவராக இல்லாமல் மூளைச்சலவை செய்வதற்கான ஒரு தளமாக தன்னை நிலைநிறுத்துகிறது. எவ்வாறாயினும், உலகளாவிய மின்னணு  ஒப்பந்தமானது (GDC) திறன் மேம்பாட்டை ஆதரிக்கலாம் மற்றும் மின்னணு பொது பொருட்களை மேம்படுத்துவதில் உலகளாவிய தெற்கு மற்றும் உலகளாவிய வடக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்க முடியும்.


சுருக்கமாக, உலகளாவிய மின்னணு  ஒப்பந்தம் (GDC) மின்னணு தொழில்நுட்பங்களின் நிர்வாகத்தை அடிப்படையாக மாற்றாமல் இருக்கலாம். உறுப்பு நாடுகள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டால் அது அர்த்தமுள்ள மற்றும் நடைமுறை விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


நீத்து ராஜம் டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்ப சட்டத்தின் இணை பேராசிரியர். 


கிருஷ்ணா ரவி ஸ்ரீனிவாஸ் ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.




Original article:

Share:

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் அறிக்கை இந்தியாவைப் பற்றி குறிப்பிடுவது என்ன? -ஜி. சம்பத்

 சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை (United States Commission on International Religious Freedom (UNSCIRF)) எவ்வாறு ஒரு நாட்டை ”சிறப்பு அக்கறை கொண்ட நாடு” என்று குறிப்பிடுகிறது? இந்த அறிக்கையை இந்திய அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டது?


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை அக்டோபர் 2 அன்று இந்தியாவைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாகி வருகிறது. 2024-ஆம் ஆண்டில் சிறுபான்மைக் குழுக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும், மதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசாங்கம் USCIRF அமைப்பின்  பாரபட்சமானது என்று கூறி, அறிக்கையை நிராகரித்தது.


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை (United States Commission on International Religious Freedom (UNSCIRF)) என்றால் என்ன?


சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் அறிக்கை  என்பது 1998-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க அரசு நிறுவனம் ஆகும். இது மற்ற நாடுகளில் மத சுதந்திரத்தை சுதந்திரத்தை கண்காணித்து அறிக்கையிடுவதே இதன் பணியாகும், USCIRF சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகள், குறிப்பாக மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனத்தின் (Universal Declaration of Human Rights) பிரிவு 18 ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை தேர்ந்தெடுத்து பின்பற்றலாம் என்று இந்த கட்டுரை கூறுகிறது. ஒருவரின் மதத்தை மாற்றி, அதைத் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன், பொது அல்லது தனிப்பட்ட முறையில் சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமையும் இதில் அடங்கும்.


USCIRF என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஒரு பகுதியாக உள்ள சர்வதேச மத சுதந்திர அலுவலகத்திலிருந்து (International Religious Freedom (IRF)) வேறுபட்டது. மத சுதந்திரம் பற்றிய ஆண்டு அறிக்கைகளையும் IRF வெளியிடுகிறது. USCIRF அறிக்கைகள் ஒரு நாடு எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பாதிக்கும் என்றாலும், நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கு IRF-ன் நிலை மிகவும் முக்கியமானது.


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை (United States Commission on International Religious Freedom (UNSCIRF))  என்ன செய்கிறது?


USCIRF ஆனது, சர்வதேச மனித உரிமைக் குழுக்கள், துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுடன் பயணம் மற்றும் ஆய்வு செய்து, அதை கண்காணிப்பதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மத சுதந்திரத்தை கண்காணிக்கிறது. அமெரிக்கா துறைகளின் மூலம் “சிறப்பு அக்கறை கொண்ட நாடு" (Country of Particular concern” ((CPC) என தகுதி பெற்ற நாடுகளின் வருடாந்திர அறிக்கையை உருவாக்குவதே இதன் இலக்காகும். USCIRF, வெளியுறவுத் துறையின் 'சிறப்பு கண்காணிப்பு பட்டியலில்' (‘Special Watch List’ (SWL)) சேர்க்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலையும் வழங்குகிறது.


மத சுதந்திரத்தை மீறும் இந்திய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. முறையான, நடந்துகொண்டிருக்கும் மற்றும் மத சுதந்திரத்தின் தீவிர மீறல்களை கொண்ட நாடுகள் குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடுகள் (Country of Particular concern” (CPC)) என்று பெயரிடப்படுகின்றன. 


கடுமையான மத சுதந்திர மீறல்களை அரசாங்கங்கள் அனுமதிக்கும் அல்லது பொறுத்துக்கொள்ளும். ஆனால், CPC தரநிலையை பூர்த்தி செய்யாத நாடுகள் சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா அரசு துறை USCIRF-ன் பரிந்துரையுடன் ஒரு நாட்டை CPC என குறிப்பிட்டால், அது சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் (International Religious Freedom Act (IRFA)) கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.


இந்தியா குறித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை என்ன சொல்கிறது?


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் மூத்த கொள்கை ஆய்வாளரான செமா ஹசன் எழுதிய அறிக்கையில், 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாகி வருகிறது என்றும் குடியுரிமை (திருத்தம்) சட்டம் (Citizenship (Amendment) Act) 2019 மற்றும் பாரபட்சம் போன்ற சட்டங்களை இந்திய அரசாங்கம் செய்யலப்படுத்துவதாக குறிப்பிடுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க, மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் பசு வதைச் சட்டங்கள் போன்ற சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சிறுபான்மையினரைப் (minorities) பற்றி தவறான தகவல்களை பரப்படுவதாகவும் தவறான அறிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது வன்முறை, ஆணவக் கொலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. USCIRF அமைப்பின் 2024 ஆண்டு அறிக்கையில், இந்தியாவை ”சிறப்பு அக்கறை கொண்ட நாடு” என்று பெயரிட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது ஒரு அரசியல் ரீதியாக வெளியிடப்பட்ட  அறிக்கை என்று நிராகரித்தார். இது உண்மைகளை தவறாக சித்தரிக்கிறது மற்றும் இந்தியாவைப் பற்றி தவறாக குறிப்பிடுகிறது என்றும் இது போன்ற இந்த தீங்கு விளைவிக்கும் அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். மேலும் "இது போன்ற முயற்சிகளை நிறுத்துமாறு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறினார்.


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைய அறிக்கை ஒரு ”சார்பு” மற்றும் இது போன்ற கொள்கைகளால்  இயக்கப்பட்டதா?


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் நேரடி சாட்சியங்களுடன் நம்பகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களின் பல மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவைப் பற்றிய நாட்டின் புதுப்பிப்பு விஷயத்தில், ஒவ்வொரு உரிமைகோரலும் பொதுவில் சரிபார்க்கக்கூடிய ஆவணங்களால் ஆதரிக்கப்படுவதால், தவறான உண்மைகளுக்கு தெளிவான ஆதாரம் இல்லை. 


பல நாடுகள் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைய அறிக்கை சுதந்திரமாக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அதனை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகக் கருதுகின்றன. ஏனெனில், அது அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயல்படுகிறது.


சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை (United States Commission on International Religious Freedom (UNSCIRF)) பரிந்துரைகள் கட்டுப்படுமா?


இல்லை, அவற்றை ஏற்பதா என்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, முடிவுகள் இருதரப்பு உறவுகள் மற்றும் பரந்த வெளியுறவுக் கொள்கை இலக்குகள் தொடர்பான காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.




Original article:

Share:

நிலக்கரி ஆற்றல் உற்பத்தியிலிருந்து இங்கிலாந்து விலகல்: இந்தியாவிற்கான பாடங்கள் -குணால் சங்கர்

 இங்கிலாந்து செய்த மாற்றங்களில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்து செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இந்திய தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.


நாட்டிங்ஹாம்ஷையரில் அமைந்துள்ள பிரிட்டனின் கடைசி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. இது உலகளாவிய ஆற்றல் உற்பத்தியில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஊடகங்கள் அதை அதை பற்றி அடிக்கடி பேசினாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இங்கிலாந்து செய்ததைப் போலவே உலகளவில் நிலக்கரி பயன்ப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அணுகுமுறை சில வளர்ந்த நாடுகளுக்கு பயனளிக்கும் என்றாலும், வளரும் மற்றும் குறைந்த-வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வேறுபட்ட உத்தி தேவைப்படும்.

 

இங்கிலாந்து நிலக்கரி சக்தியை 2025-ஆம் ஆண்டிற்குள் நிறுத்துவதாக 2015 பாரிஸ் காலநிலை மாநாட்டில் உறுதி அளித்தன் காரணமாக நிலக்கரியை படிப்படியாக குறைக்கத் தொடங்கவில்லை. மாறாக, இது 1952-ஆம் ஆண்டில் லண்டனின் பேரழிவு தரும் பெரும் புகைமூட்டத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வு 1956 ஆண்டில் இயற்றப்பட்ட தூய்மையான காற்று சட்டம் (Clean Air Act ) போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு வழிவகுத்தது.  சுமார் 70 ஆண்டுகள் நீடித்த அரசியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக அழுத்தங்கள் உட்பட பல காரணிகளை உள்ளடக்கியது. 1965-ஆம் ஆண்டில் வட கடலில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பனிப்போரின் போது சோவியத் ஒன்றியத்திலிருந்து நிலக்கரி இறக்குமதியிலிருந்து விலகிச் செல்ல விரும்பியது. 


ஏனெனில், உள்நாட்டு இருப்புக்கள் குறைந்து வருவது சுரங்கத்தை அதிக விலை உடையதாக மாற்றியது. இதனால் நிலக்கரி எரிசக்தி உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்தன, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலக்கரியிலிருந்து விலகிச் செல்வதை கூட்டாக துரிதப்படுத்தியது. 


1980-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் மார்கரெட் தாட்சர் அரசாங்கத்தால் சுமார் 20 சுரங்கங்கள் மூடப்பட்டன. ஒரு வருட கால சுரங்கத் தொழிலாளர்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், இங்கிலாந்தின் முந்தைய நிலக்கரி சார்ந்த பிராந்தியங்களின் சில பகுதிகள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வறுமை மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான வறுமைக்கு வழிவகுத்தது. அடுத்த 20 ஆண்டுகளில் கார்பன் வெளியேற்றத்தை விரைவாகக் குறைக்க வேண்டிய நாடுகளின் முக்கியத்துவத்தை இது புறக்கணிக்கவில்லை. மாறாக, இந்த இலக்கை அடைய வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு பாதைகள் மற்றும் திட்டங்கள் தேவைப்படும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 


நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net zero emissions) அடைவதற்கான அவர்களின் பாதைகள் குறித்து இந்தியாவை இங்கிலாந்துடன் ஒப்பிடுவோம். 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற கிளாஸ்கோ கட்சிகளின் மாநாட்டில், இந்தியாவும் சீனாவும் கிளாஸ்கோ கட்சிகளின் மாநாட்டில் இறுதி அறிவிப்பை மாற்ற விரும்பின. நிலக்கரியை  முழுமையாக வெளியேற்றுதல் (‘phasing down’) என்பதற்குப் பதிலாக படிப்படியாகக் குறைத்தல் (‘phasing out’) என்று  கூறினார். 


2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதாகவும், 2050-ஆம் ஆண்டளவில் அதன் ஆற்றலில் பாதியை புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெற இருப்பதாகவும் இந்தியா உறுதியளித்தது 

ஒட்டுமொத்த உமிழ்வுகள் (Cumulative emissions) 


அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது பெரிய கார்பன் உமிழ்ப்பாளராக உள்ளது.  2023-ஆம் ஆண்டில் சுமார் 2.9 ஜிகா டன்களை வெளியேற்றியது. இது இங்கிலாந்தின் 384 மில்லியன் மெட்ரிக் டன்களை விட மிக அதிகமாகும். ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை இங்கிலாந்தை விட 20 மடங்கு அதிகம். மேலும், இந்தியாவின் தனிநபர் உமிழ்வு 2023-ஆம் ஆண்டில் இரண்டு டன்களாக இருந்தது. இது உலகளாவிய சராசரியான 4.6 டன்களில் பாதிக்கும் குறைவாகவும், அதே ஆண்டில் இங்கிலாந்தின் 5.5 டன்களில் மூன்றில் ஒரு பங்காகவும் இருந்தது. 


1850 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் நாடுகளின் வரலாற்று உமிழ்வுகளை கார்பன் ப்ரீஃப் (Carbon Brief) பரிசீலித்தது. 


கார்பன் ப்ரீஃப் (Carbon Brief) என்றால் என்ன ?


கார்பன ப்ரீஃப் என்பது இங்கிலாந்து அடிப்படையிலான இணையதளம். இது காலநிலை மாற்றத்தின் அறிவியல் மற்றும் கொள்கையில் கவனம் செலுத்துகிறது. புலனாய்வு இதழியல் மற்றும் தரவு காட்சிப்படுத்தல் பணிகளுக்காக இது விருதுகளைப் பெற்றுள்ளது.

      இதன் பின்னர் நாட்டிங்ஹாம்ஷயர் ஆலையை மூடியது. பகுப்பாய்வு இந்த நாடுகளின் காலனித்துவ சக்திகளின் கார்பன் தடம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பகுப்பாய்வு 10.4 பில்லியன் டன்களை எட்டிய உமிழ்வுகளுடன் இங்கிலாந்து நான்காவது இடத்தில் உள்ளது. கார்பன் ப்ரீஃப் இந்தத் தொகையானது "பெரும்பாலான நாடுகளின் அனைத்து மூலங்களிலிருந்தும் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதை விட அதிகம்." என்று கூறியது. 


இங்கிலாந்து 1882-ஆம் ஆண்டில் லண்டனில், ஃப்ளீட் ஸ்ட்ரீட் (Fleet Street) அருகே தனது முதல் பொது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டியது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலக்கரி பிரிட்டனில் முக்கிய ஆற்றல் மூலமாக இருந்தது, 1960-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரை வீடுகள், தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு சக்தி அளித்தது. 1920-ஆம் ஆண்டில், நிலக்கரி வேலைவாய்ப்பு உச்சத்தை அடைந்தது, நாடு முழுவதும் சுமார் 3,000 சுரங்கங்களில் 1.2 மில்லியன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்தனர். 


அந்த நேரத்தில், சுமார் 100 சிறிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கின. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரிட்டன் நிலக்கரி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது, 1913-ஆம் ஆண்டில் உலகளாவிய ஏற்றுமதியில் 30% பங்கு வகித்தது. 1950 மற்றும் 1960-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அதன் அதிகபட்ச வெப்ப மின் நுகர்வுகளைக் கொண்டிருந்தது. அப்போது நிலக்கரி அதன் ஆற்றலில் 90% உற்பத்தி செய்தது. அதன் பிறகு, எரிசக்தி ஆதாரங்கள் படிப்படியாக இயற்கை எரிவாயு, அணுசக்தி மற்றும் சமீபத்தில், காற்று மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றிற்கு மாறியது.

 

இந்தியாவின் நிலக்கரி கதை (India’s coal story) 


இந்தியாவின் முதல் நிலக்கரி சுரங்கம், ராணிகஞ்ச் நிலக்கரி வயல் (Raniganj coalfield), இன்றைய மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டில் அமைந்துள்ளது. இது 1774-ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களான ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து பெரிய அளவில் நிலக்கரி பிரித்தெடுக்க வழிவகுத்தது. இந்தியாவின் முதல் நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையம் ஹுசைன் சாகர் அனல் மின் நிலையம் (Hussain Sagar Thermal Power Station) ஆகும். இது நிஜாம் ஆட்சியின் போது ஹைதராபாத்தில் 1920-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது 1980-ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களுக்கு மின்சாரம் வழங்கியது. 


இருப்பினும், 1956-ஆம் ஆண்டு வரை மும்பைக்கு அருகில் உள்ள டிராம்பே மின் நிலையம் கட்டப்பட்டது. இது அனல் மின்சாரத்தை இந்தியாவின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக மாற்றியது. மேலும், இந்தியாவின் நிலக்கரி எரிசக்தி ஆலைகளின் சராசரி 12 ஆண்டுகள் ஆகும். அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் இலங்கைக்கு இந்தியா நிலக்கரியை ஏற்றுமதி செய்தாலும், அதன் இருப்புக்களை உள்நாட்டு மின் உற்பத்திக்கு பெருமளவில் பயன்படுத்தியுள்ளது. சமீப காலமாக, மின் தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவும் நிலக்கரியை இறக்குமதி செய்யத் தொடங்கியது.

 

இந்தியா இன்னும் அதன் உச்ச நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வை எட்டவில்லை. இது 2030 மற்றும் 2035-ஆம் ஆண்டுக்கு இடையில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் அதன் உச்சத்தை அடைய 80 ஆண்டுகள் ஆனது. தற்போது, ​​இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியில் சுமார் 70% நிலக்கரியில் இருந்து வருகிறது. இது 218 GW நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 


சுமார் 120 புதிய சுரங்கங்கள்  புதிதாக உருவாக்கப்பட உள்ளன. குளோபல் ஆற்றல் ஆய்வின்படி, இந்த சுரங்கங்கள் கிட்டத்தட்ட 340,000 சுரங்கத் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைகளை வழங்குகின்றன. விவசாயத் துறையைச் சேர்ந்த பல பருவகால தொழிலாளர்களும் சுரங்கங்களில் வேலை செய்வதால் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.


 எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (Council on Energy, Environment and Water (CEEW)) ஆய்வின்படி, இந்தியாவின் அனல் மின் நிலையங்களில் சுமார் 4,00,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்த ஆலைகளில் முறைசாரா வேலைகள் அதிகம் இருப்பதால் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். 10 ஆண்டுகளில், நிலக்கரித் துறை ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் பணிபுரிந்த சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் போன்றது.


மேலும், 2022-ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் தனிநபர் ஆற்றல் நுகர்வு இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிசக்தி பற்றாக்குறையின் போதும், உலகம் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும்போதும் இது உண்மையாக இருந்தது. 


இரு நாடுகளுக்கும் இடையே நிலக்கரி வெளியேற்றத்தை நேரடியாக ஒப்பிட்டுப் பார்ப்பது சாத்தியமில்லை என்றாலும், கடந்த பத்தாண்டுகளில்  இங்கிலாந்தில், ஏற்பட்ட மாற்றத்தில் இருந்து இந்தியா பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 1980 மற்றும் 1990-ஆம்  ஆண்டுகளில் பிரிட்டன் செய்த தவறுகளை இந்தியா மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்.



பிரிட்டனின் மாற்றம் 


2025-ஆம் ஆண்டுக்குள் நிலக்கரியை படிப்படியாக குறைப்பதாக உறுதியளித்த பின்னர், இங்கிலாந்து ஏற்கனவே அதன் நிலக்கரி பயன்பாட்டை அதன் ஆற்றல் தேவைகளில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது. நிலக்கரித் துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அதை நம்பியிருக்கும் பகுதிகள் மற்றும் சமூகங்கள் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும் ஒரு விரிவான மாற்றத்தை அது தொடர்ந்தது. மறுபயிற்சி திட்டங்கள் நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி போன்ற திறன்கள் தேவைப்படும் துறைகளை இலக்கு வைத்தன. 


இந்த துறைகளில் பொறியியல் மற்றும் கனரக இயந்திர செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இந்த மாற்றத்தில் முன்கூட்டிய ஓய்வு மற்றும் பணிநீக்கம் செலுத்துதல்கள், புதிய கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகியவை அடங்கும். வரலாற்று ரீதியாக நிலக்கரியை நம்பியிருந்த சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களை மீண்டும் அபிவிருத்தி செய்ய அல்லது அந்த பகுதிகளில் புதிய தொழில்களை நிறுவுவதை ஊக்குவிக்கும் முயற்சியும் இருந்தது. 


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், குறிப்பாக யார்க்ஷயருக்கு வெளியே வடக்கு கடல் போன்ற நிலக்கரி உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளுக்கு அருகில் உள்ள கடல் காற்றாலைகள் தொடங்கப்பட்டன. காற்றாலை ஆற்றலை கடத்துவதற்காக தற்போதுள்ள கிரிட் உள்கட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது, மேலும் பழைய நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் டிராக்ஸில் உள்ள பயோமாஸ் போன்ற பிற ஆற்றல் உற்பத்திக்காக மறுவடிவமைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் வேலை இழப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை பற்றிய சில கவலைகளை எளிதாக்க உதவியது. 


இதில் இன்னும் பிரச்சனைகள்  இருக்கும் போது, ​​நிலக்கரியின் படிப்படியான சரிவு, காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மாற்றத்திற்கான தெளிவான காலக்கெடு ஆகியவற்றுடன், பிரிட்டனின் நிலக்கரியை வெளியேற்றுவதற்கு உதவியது. இப்போது மூடப்பட்ட டால்போட் எஃகு ஆலையில் நடந்த எதிர்ப்புகளைப் போலவே சில வெளிப்புறங்கள் உள்ளன, அங்கு டாடாவுக்குச் சொந்தமான ஆலை கோக்கிங் நிலக்கரியிலிருந்து மின்சார உலைகளுக்கு மாற முயற்சிக்கிறது. இருப்பினும், இது ஒரு தற்காலிக மூடலாக இருக்கலாம்.


நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net zero emissions) அடைய இந்தியா 45 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளது. இந்த நேரத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் நிலையான மற்றும் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிலக்கரி எரிசக்தியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. நிலக்கரி ஆலைகளை செயலிழக்கச் செய்வதற்கும், பிராந்திய மறுவளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கும், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மின்நிலையத் தொழிலாளர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதற்கும் இந்தியா செயல்பாடுகளை தொடங்க வேண்டும். 


இந்த தொழிலாளர்களில் பலர் வரலாற்று ரீதியாக நிலக்கரி சார்ந்த பகுதிகளில் இருந்து வருகிறார்கள், அவை நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் தொழிலாளர்கள் விவசாயத்திலிருந்து சுரங்க பணிக்கு மாறினார். நியாயமான மாற்றத்தை உறுதி செய்ய, இந்தியாவிற்கு விரிவான, வெளிப்படையான அணுகுமுறை தேவைப்படுகிறது.




Original article:

Share:

புகையிலை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அரசின் நிகழ்ச்சி நிரலில் ஏன் இடம் பெற வேண்டும்? -ரிதம் கவுல்

 புகையிலை பயன்பாடு குறித்த ஒரு புதிய பகுப்பாய்வு, 2022-ஆம் ஆண்டு முதல் 2050-ஆம் ஆண்டு வரை, வயது மற்றும் பாலினத்தால் வகைப்படுத்தப்பட்ட 204 நாடுகளின் சுகாதாரச் சுமை குறித்த ஆழமான கணிப்புகளை வழங்குகிறது. 


உலகளவில் புகையிலை புகைத்தலின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதன் மூலம், புகைபிடிக்கும் பாதிப்பை தற்போதைய அளவிலிருந்து எல்லா இடங்களிலும் 5% குறைப்பதன் மூலம், ஆயுட்காலம் அதிகரிக்கும் மற்றும் 2050-ஆம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான அகால மரணங்களைத் தடுக்கும் என்று தி லான்செட் பொது சுகாதார இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட உலகளாவிய நோய், காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் (Global Burden of Disease, Injuries and Risk Factors (GBD)) புகையிலை முன்கணிப்பு ஒத்துழைப்பாளர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புகைபிடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது மக்களுக்கு கணிசமான சுகாதார நன்மைகளை வழங்கக்கூடும் என்று உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வந்ததை ஆசிரியர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர். ஆசிரியர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு  கவனம் செலுத்தினர். 


தற்போதைய நிலைகளின் அடிப்படையில், உலகளாவிய ஆயுட்காலம் 2050-ஆம் ஆண்டில் 78.3 ஆண்டுகளாக உயரக்கூடும் என்று ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். இது 2022-ஆம் ஆண்டில் 73.6 ஆண்டுகளாக இருந்தது. இருப்பினும், புகையிலை புகைத்தல் தற்போதைய மட்டத்திலிருந்து 2050-ஆம் ஆண்டில் 5% என்ற விகிதத்திற்கு படிப்படியாகக் குறைந்தால், இதன் விளைவாக ஆண்களில் ஒரு வருடம் கூடுதல் ஆயுட்காலம் மற்றும் பெண்களில் 0.2 ஆண்டுகள் கூடுதல் ஆயுட்காலம் ஏற்படும். 


2023-ஆம் ஆண்டு புகையிலை புகைத்தல் அகற்றப்பட்ட ஒரு சூழ்நிலையில், இது 2050-ஆம் ஆண்டில் ஆண்களிடையே 1.5 கூடுதல் ஆண்டுகள் மற்றும் பெண்களிடையே 0.4 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் ஏற்படக்கூடும்.  இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், மில்லியன் கணக்கான அகால மரணங்களும் தவிர்க்கப்படும். 


புகைபிடித்தல், உலகளவில் தடுக்கக்கூடிய மரணம் மற்றும் உடல்நலக் குறைவுக்கு ஒரு முன்னணி ஆபத்து காரணியாகும். கடந்த 30 ஆண்டுகளில் புகைபிடிக்கும் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், வீழ்ச்சியின் வேகம் மாறுபடுகிறது மற்றும் பல நாடுகளில் குறைந்துள்ளது. 


புற்றுநோய்கள், இஸ்கிமிக் இதய நோய் மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவை புகைபிடிப்பதால் ஏற்படும் அகால மரணங்களுக்கு முக்கிய காரணங்கள் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 


பல நாடுகள் வரும் ஆண்டுகளில் புகைபிடிக்கும் விகிதங்களை 5% க்கும் குறைவாக குறைக்க லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளன. எவ்வாறாயினும், இந்த இலக்குகளை அடைவதற்கான நிரூபிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் தலையீடுகளை விரிவுபடுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் இன்னும் குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். 


உலகெங்கிலும் புகைபிடிப்பதைக் குறைப்பதற்கும், இறுதியில் அகற்றுவதற்கும் எடுக்கப்படும் முயற்சிகளில் நாம் வேகத்தை இழக்கக்கூடாது. புகைபிடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் மில்லியன் கணக்கான அகால மரணங்களைத் தவிர்க்க முடியும் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன" என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஸ்டீன் எமில் வோல்செட் கூறினார். 


புதிய பகுப்பாய்வு 2022-ஆம் ஆண்டு முதல் 2050-ஆம் ஆண்டு வரை வயது மற்றும் பாலினத்தால் வகைப்படுத்தப்பட்ட 204 நாடுகளுக்கான சுகாதாரச் சுமை குறித்த ஆழமான கணிப்புகளை வழங்குகிறது. அனைத்து நாடுகளுக்கும் மற்றும் அனைத்து காரணங்களுக்கும், அத்துடன் 365 நோய்கள் மற்றும் காயங்களுக்கும் புகைபிடித்தலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை விரிவாக முன்னறிவிக்கும் முதல் ஆய்வு இதுவாகும். ஆய்வு செய்யப்பட்ட முக்கிய அளவீடு அல்லது இயர்ஸ் ஆஃப் லைஃப் லாஸ்ட், அகால மரணங்களின் அளவீடு, ஒவ்வொரு இறப்பையும் மரண வயதில் மீதமுள்ள ஆயுட்காலம் மூலம் கணக்கிடுகிறது. 


2050-ஆம் ஆண்டு ஆண்டளவில் நாடுகள் புகைபிடிக்கும் விகிதங்களை 5% ஆகக் குறைக்கும் சூழ்நிலையில், எதிர்கால சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது 876 மில்லியன் குறைவான வாழ்க்கை இருக்கும். 2050-ஆம் ஆண்டில் ஆயுட்காலம் ஆண்களில் 77.1 ஆண்டுகளாகவும் பெண்களில் 80.8 ஆண்டுகளாகவும் இருக்கும். ஆண்களிடையே ஆயுட்காலத்தின் மிகப்பெரிய ஆதாயங்கள் கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும், 1.2 முதல் 1.8 கூடுதல் ஆண்டுகள் ஆயுட்காலம் பெறப்படும். பெண்களிடையே, ஆயுட்காலம் கிழக்கு ஆசியா, உயர் வருமானம் கொண்ட வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் மிகவும் அதிகரிக்கும், 0.3 முதல் 0.5 கூடுதல் ஆண்டுகள் வரை அதிகரிக்கும். 


2023-ஆம் ஆண்டில் உலகளவில் புகைபிடித்தல் முடிவடைந்திருக்கும் சூழ்நிலையில், எதிர்கால சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது 2050-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2.04 பில்லியன் இழப்புகளைத்  தவிர்க்க முடியும் என்று மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், 2050-ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 77.6 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 81 ஆண்டுகள் ஆயுட்காலம் இருக்கும்.




Original article:

Share:

நிதி சேர்க்கையின் புதிய சகாப்தம் - ஷாம்பவி சௌத்ரி

 முன்னோக்கிச் செல்லும்போது, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கும் வகையில் திட்டங்கள் குறிப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். 


நிதிச் சேவைகளுக்கான அணுகல் ஒரு அடிப்படைத் தேவையாகும். இது சமூக மற்றும் பொருளாதாரத்தை வலுவாக வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, பெண்களுக்கு ஆகும். குறிப்பாக, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில், நிதிச் சேவைகளை அணுகுவது என்பது தொலைதூரக் கனவாகவே உணரப்படுகிறது.


உலக அளவில் வங்கி கணக்கு இல்லாத  நபர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள் ஆவார். இந்தியாவில், பெண்களுக்கான நிதி உள்ளடக்கம் மேம்பட்டுள்ளது. தற்போது ​​15 முதல் 49 வயதுடைய பெண்களில் 79 சதவீதம் பேர் தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இருப்பினும், முழுமையான நிதி உள்ளடக்கத்தை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.


அரசு முயற்சிகளின் பங்கு 


வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana(PMJDY)) அறிமுகம் முக்கிய பங்கு வகித்தது. இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இது, 2015-ஆம் ஆண்டில் 147.2 மில்லியனிலிருந்து 2022-ஆம் ஆண்டில் 462.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. 


இதில் 55.59 சதவீத வங்கி கணக்குகள் பெண்களால் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நேரடி வங்கிப் பரிமாற்றம் (direct bank transfers), பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) போன்ற திட்டங்களும் பெண்களின் வங்கி கணக்கு தொடங்குவதற்கு உதவியுள்ளன. 


மேலும், நிதி உருவாக்கம், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் அடிப்படை நிதி மேலாண்மை பற்றி பெண்களுக்கு கல்வி கற்பதற்கான கல்விக்கான நிதி முயற்சிகள் முக்கிய கருவியாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் குறுநிதி நிறுவனங்கள் (Microfinance institutions) மற்றும் சுய உதவிக் குழுக்கள் (Self-Help Groups) முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோருக்கு சிறிய கடன்களை வழங்குகின்றன. அவை தங்கள் தொழில்களைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த உதவுகின்றன. 


டிஜிட்டல் பேமெண்ட் இன்டெக்ஸ் (Digital public infrastructure (DPI)) -களின் பங்கு 


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, குறிப்பாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)), நிதி சேர்க்கை நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மத்தியில் UPI இன் பயன்பாடு விகிதமும் மேல்நோக்கிய போக்கைக் கண்டுள்ளது. இருப்பினும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. தற்போது, ​​30 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் UPI பயன்படுத்துகின்றனர். இலக்கு கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை நாம் கணிசமாக உயர்த்த வேண்டும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடுத்த கட்டம், பின்தங்கிய பெண்களுக்கு நிதி சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.


சுற்றுச்சூழல் பொறுப்பு 


நிதி கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சி அவசியம். இந்த திட்டங்கள் நிதிச் சேவைகளை பெண்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல்வேறு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளால் வழங்கப்படும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி தனியார் துறை புதுமைகளை உருவாக்க முடியும். இது பாலின அடிப்படையிலான நிதி உள்ளடக்கத்தை குறிவைக்கும் தயாரிப்புகளை உருவாக்க அவர்களை நிலைநிறுத்துகிறது.


முடிவு 


பெண்களின் நிதி உள்ளடக்கம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது, ​​கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சேர்க்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக, நிதி நிறுவனங்கள் பாலின-உணர்திறன் கடன் வழங்கும் (gender-sensitive lending) நடைமுறைகளை பின்பற்றலாம். 


பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பொருட்களையும் வழங்க வேண்டும். இது பெண்கள் நிதி அதிகாரத்தை அடையக்கூடிய உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும். பொது மற்றும் தனியார் துறைகளின் தொடர்ச்சியான முயற்சிகளால், அதிகமான பெண்கள் நிதி ரீதியாக அதிகாரம் பெறுவார்கள்.




Original article:

Share:

அதிக வெற்றிக்கு எத்தனால் கலவையை மேம்படுத்த வேண்டிய தருணம் - ரவி குப்தா

 ஒன்றிய அரசின், மாறும் எத்தனால் கொள்கை (dynamic ethanol policy) பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட வேகத்தை உருவாக்க வேண்டும். 


இந்தியா ஒரு காலத்தில் சவாலான சர்க்கரை சுழற்சியை எதிர்கொண்டது. உபரி உற்பத்தியின் போது, ​​மலிவான சர்க்கரையை ஏற்றுமதி செய்தது. மாறாக, பற்றாக்குறை காலங்களில், அது விலை உயர்ந்த சர்க்கரையை இறக்குமதி செய்தது. இந்த நிலைமை கருவூலத்திற்கு சுமையை ஏற்படுத்தியது மற்றும் குறிப்பிடத்தக்க கரும்பு நிலுவைத் தொகைக்கு வழிவகுத்தது. இருப்பினும், ஒரு புதுமையான எத்தனால் கலவை கொள்கை இந்த சுழற்சியை சிறப்பாக மாற்றியுள்ளது.


புதிய திட்டம் பல முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. முதலில், இது எத்தனால் மூலப்பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை நிர்ணயிக்கிறது. இரண்டாவதாக, இது ஒரு கட்டாய எத்தனால் கலப்புத் தேவையை அமைக்கிறது. மூன்றாவதாக, இந்த திட்டத்தின் புதிய ஆணையின்படி எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எத்தனாலை வாங்குவதை இது உறுதி செய்கிறது. நான்காவதாக, வழங்கப்பட்ட அளவுகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இறுதியாக, எரிபொருள் எத்தனாலின் உற்பத்தி திறனை அதிகரிக்க வட்டி மானியத் திட்டங்களை வழங்குகிறது.


எத்தனால் கலக்கும் திட்டத்தின் (EBP) கீழ் எத்தனால் கொள்முதல் மற்றும் கலவை 2013-14 ஆண்டில் எத்தனால் விநியோகம் (நவம்பர் தொடங்கி) 38 கோடி லிட்டரிலிருந்து 2023-24 ஆண்டில் (செப்டம்பர் நடுப்பகுதி வரை) 575 கோடி லிட்டராக வளர்ந்தது. 2013-14 ஆண்டில் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு சதவீதமும் 2023-24 ஆண்டில்(செப்டம்பர் நடுப்பகுதி வரை) 13.6% ஆக அதிகரித்துள்ளது.


சர்க்கரைத் தொழில் மேம்பட்டு, கரும்பு விவசாயம் மற்றும் பதப்படுத்துதலில் மிகவும் திறமையானது. இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியது மற்றும் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த அனுமதித்தது. 2023-24-ஆம் ஆண்டின் இறுதிக்குள் விவசாயிகளின் செலுத்தப்படாத நிலுவைத் தொகை 4% க்கும் கீழ் மிகக் குறைந்த அளவிலேயே குறைந்துள்ளது. எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்துறையின் முயற்சிகள், சாதகமான கொள்கைகளால் ஆதரிக்கப்படுகின்றன. 


எத்தனால் கலப்படத்தின் சதவீதத்தின் அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க நாடு உதவுகிறது. சுமார் பத்தாண்டுகளில் இருந்து ஜூலை 2024 வரை, 17.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் இந்தியா ₹99,014 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. அடுத்த ஆண்டு 20% எத்தனால் கலப்படத்தை நாடு அடைய உள்ளது.


ஜிஎஸ்டி குறைப்பு


எத்தனால் விநியோகத்தை அதிகரித்த பிறகு, அதற்கான தேவைக்கு கவனம் செலுத்த வேண்டும். நெகிழ்வு எரிபொருள்(Flexi fuel) கார்கள் ஒரு தீர்வாகும். மேலும், இந்த கார்களை போட்டித்தன்மையுடன் மாற்ற ஜிஎஸ்டி குறைப்பு தேவைப்படுகிறது. கூடுதலாக, 20% எத்தனால் கலப்புக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். 


அடுத்த கட்டமாக கரும்பு விலையை சர்க்கரை ஆலை வருவாயுடன் இணைப்பது. சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை (Minimum Selling Price (MSP)) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது முதலில் ஜூன் 2018-ஆம் ஆண்டில் கிலோவுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டில்  ரூ.31/கிலோவாக திருத்தப்பட்டது. அப்போதிருந்து, இந்த திருத்தம் அப்படியே உள்ளது. உண்மையான உற்பத்தி செலவுகள் மற்றும் உயரும் கரும்பு விலைகளை பிரதிபலிக்கும் வகையில் குறைந்தபட்ச விற்பனை விலையை (Minimum Support Price (MSP)) புதுப்பிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டுக்கான எத்தனால் மற்றும் 2024-25-ஆம் ஆண்டில்  பி-மொலாசஸ் (B-molasses) மற்றும் கரும்பு சாற்றுக்கான எத்தனால் விலைகளும் அறிவிக்கப்பட வேண்டும். 


எத்தனாலுக்கு நிலையான திசைதிருப்பலை ஊக்குவிப்பதன் மூலம் சர்க்கரை மற்றும் அதனுடன் இணைந்த விவசாயத் துறைகளுக்கு ஒன்றியம் ஆதரவு அளித்துள்ளது. இந்த அணுகுமுறை சர்க்கரை விலையை ஆதரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் சர்க்கரை கிடைப்பதில் ஏற்ற இறக்கத்தை குறைக்கவும் உதவியது. இருப்பினும், 2023-24 நிதியாண்டில், கரும்பு உற்பத்தி மதிப்பீடுகள் குறைவாக இருப்பதால், சர்க்கரையிலிருந்து எத்தனால் மாற்றுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது.


இதற்கான, பங்குகள் இப்போது வசதியாக உள்ளது. இதன் விளைவாக, 2024-25 நிதியாண்டில் எத்தனால் மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது மாறும் கொள்கை உருவாக்கத்தை நிரூபிக்கிறது.


கூடுதலாக, தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கி மாறுவது முக்கியம். இந்த பகுதியில் ஒன்றியம் கவனம் செலுத்துகிறது. எத்தனால் கொள்கை பல ஆண்டுகளாக அது உருவாக்கிய வேகத்தில் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.


 ரவி குப்தா, சர்க்கரைத் தொழிலில் நிபுணராகவும், பல தொழில் சங்கங்களில் உறுப்பினர்.




Original article:

Share: