மானிய கோரிக்கையின் (Demand for grant) பொருள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: 


இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பங்கு மற்றும் முக்கியத்துவத்துடன் ஒப்பிடும்போது வெளியுறவு அமைச்சகத்திற்கான பட்ஜெட் மிகவும் குறைவாக இருப்பதாக ஒரு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


  • ஒதுக்கீட்டை அதிகரிக்க அழைப்பு விடுத்து, காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு, நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் எதிர்கால நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்னும் "முன்னோக்கிய அணுகுமுறையை" எடுக்குமாறு நிதி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டது.


  • விரிவடைந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மேலும் பயனுள்ள உலகளாவிய ஈடுபாட்டை உறுதி செய்வதற்கும் அடுத்த நிதியாண்டில் வெளியுறவு அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 20% அதிகரிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.


  • 2025-26ஆம் ஆண்டிற்கான வெளியுறவு அமைச்சகத்தின் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான ஐந்தாவது அறிக்கையை நிலைக்குழு திங்களன்று மக்களவையில் சமர்ப்பித்தது.


உங்களுக்குத்  தெரியுமா?:


  • மானிய கோரிக்கை என்பது, ஒருங்கிணைந்த நிதியிலிருந்து அரசாங்க செலவினங்களை அங்கீகரிப்பதற்கான கோரிக்கையாகும். இது ஆண்டு நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாகும். மேலும், அரசியலமைப்பின் 113வது பிரிவின்படி மக்களவையில் வாக்களிக்கப்பட வேண்டும்.


  • 2024-25ல் 7.39% குறைந்து, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீட்டின் அடிப்படையில், MEA 22வது இடத்தில் உள்ளது. உண்மையில், MEA-ன் செலவினம் மொத்த ஒதுக்கீட்டில் 0.4% மட்டுமே ஆகும், இது பாதுகாப்பு, உள்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வே ஆகியவற்றுக்கான மிகப்பெரிய பகுதி ஆகும்.

  • இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெளியுறவு அமைச்சகம் 22வது இடத்தில் உள்ளது. நிதி ஒதுக்கீடு ₹20,516.61 கோடியைப் பெறுகிறது. இது 2024-25 ஆண்டைவிட 7.39% குறைவு. இது மொத்த பட்ஜெட்டில் 0.4% மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான நிதிகள் பாதுகாப்பு, உள்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வேக்கு செல்கின்றன.


  • 0.4% பங்கு குறைவாகத் தோன்றினாலும், அமைச்சகம் இன்னும் அதன் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுகிறது என்று மிஸ்ரி கூறியதாக அறிக்கை மேற்கோள் காட்டியது. எவ்வாறாயினும், வெளியுறவுச் செயலர் மூன்று முன்னுரிமைப் பகுதிகளை எடுத்துக்காட்டினார். அதில் சிறந்த நிதி அளிப்பு, வளர்ச்சி மற்றும் உதவி இதில் அடங்கும். மேலும், வளர்ச்சி கூட்டாண்மைகளுக்கான இந்தியாவின் செலவு மதிப்புமிக்க இராஜதந்திர நன்மைகளையும் நல்லெண்ணத்தையும் தருகிறது என்றும் அவர் கூறினார்.


Original article:

Share:

பிரதம மந்திரி உள்ளகப் பயிற்சித் திட்டம் (PM Internship Scheme (PMIS)) -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : ஒன்றிய நிதி மற்றும் தனியார் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய நலனைக் சுட்டிக்காட்டி, பிரதம மந்திரி உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் (PM Internship Scheme (PMIS)) அதிக நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இப்போது, ​​அதன் இரண்டாவது சுற்றில் - இன்னும் முன்னோடி கட்டத்தில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு 327 நிறுவனங்களிடமிருந்து பயிற்சி இடுகை பதிவுகள் வந்துள்ளன. இது முதல் சுற்றில் சுமார் 280 ஆக இருந்தது.


முக்கிய அம்சங்கள்:


• கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஐந்து ஆண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


• கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற சோதனை முயற்சியின் முதல் சுற்றில், 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும், 82,000-க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், எதிர்பார்த்ததைவிட குறைவான விண்ணப்பதாரர்களே பயிற்சிகளை ஏற்றுக்கொண்டனர். பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள், சுமார் 8,000 பேர் மட்டுமே இந்த பயிற்சிகளை ஏற்றுக்கொண்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


• ஜனவரியில் தொடங்கிய இரண்டாவது சுற்றில், 735 மாவட்டங்களில் சுமார் 1.18 லட்சம் பயிற்சித் திட்ட வாய்ப்புகள் பெறப்பட உள்ளன. இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பச் செயல்முறை மார்ச் 31 அன்று முடிவடையும்.


• இரண்டாவது சுற்றில் இந்தத் திட்டத்திற்கான அணுகலை மேம்படுத்த அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதம மந்திரி உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் (PM Internship Scheme (PMIS)) தளம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. மேலும், வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் பாத்திரங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் (Rozgar Melas) போன்ற திட்டங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற 80-க்கும் மேற்பட்ட வெளிநடவடிக்கை நிகழ்வுகளில் தனியார் விவகாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் தொழில்துறை நட்பு நாடுகளின் அதிகாரிகள் இளைஞர்களுடன் கலந்துரையாடினர், என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?:


• இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய அரசால் நேரடிப் பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) மூலம் மாதந்தோறும் ரூ.4,500 வழங்கப்படும். கூடுதலாக, ரூ.500 நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு (corporate social responsibility (CSR)) நிதியிலிருந்து வழங்கப்படும்.


• பயிற்சியின்போது ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட, அரசாங்கம் ஆண்டுக்கு ₹6,000 ஒருமுறை மானியமாக வழங்கும்.


• இந்தப் பயிற்சித் திட்டம், 2025 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இதன் மொத்த நிதிநிலை அறிக்கையில் ₹2 லட்சம் கோடி ஆகும்.


• இந்த ஆண்டு, இந்தத் தொகுப்பு ₹12,000 கோடியைப் பெற்றது. இதில், ₹10,000 கோடி மூன்று வேலை ஊக்கத் திட்டங்களுக்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கும், ₹2,000 கோடி தனியார் விவகார அமைச்சகத்திற்கும் பயிற்சித் திட்டத்திற்காக வழங்கப்பட்டது.


• 2024-25-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், பயிற்சித் திட்டத்திற்கான நிதி ₹380 கோடியாகக் குறைக்கப்பட்டது. 2025-26-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கு ₹10,831 கோடியும், மூலதனச் செலவுகளுக்காக ₹59.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.



Original article:

Share:

உயர் அடிப்படை விளைவு: குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை, அதிகரித்து வரும் ஏற்றுமதிகள் குறித்து . . .

 பிப்ரவரியில் வர்த்தகப் பற்றாக்குறை குறைவாக இருப்பது ஒரு நல்ல அறிகுறி அல்ல.


இந்த பிப்ரவரியில் இந்தியாவின் சரக்கு வர்த்தகம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவைக் கண்டது. ஏற்றுமதி 10.9% குறைந்து $36.91 பில்லியனாகவும், இறக்குமதி 16.3% குறைந்து $50.96 பில்லியனாகவும் இருந்தது. இது மூன்று ஆண்டுகளில் (42 மாதங்கள்) மிகக் குறைந்த வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. இது $14 பில்லியனாக இருந்தது. பொதுவாக, அதிக ஏற்றுமதிகள் காரணமாக சிறிய வர்த்தக பற்றாக்குறை ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் சரிந்தன. இந்தநிலை கவலையளிக்கிறது. பிப்ரவரி 2023ஆம் ஆண்டு  (ஒரு லீப் ஆண்டு) $41.4 பில்லியனின் ஏற்றுமதியையும் $60.92 பில்லியனின் இறக்குமதியையும் கொண்டிருந்ததால், கடந்த ஆண்டின் அதிக எண்ணிக்கையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கும் புதிய அமெரிக்க வரிகள் காரணமாக அமெரிக்க இறக்குமதியாளர்கள் ஆர்டர்களை தாமதப்படுத்துவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு சற்று முன்பு, பிப்ரவரி 13ஆம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வரிகளை அறிவித்தார். அவர்களின் சந்திப்பின் போது, ​​2030ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்தவும், விரைவில் ஒரு வணிகப் பரிமாற்றம் ஒப்பந்தத்தை (Business Transfer Agreement (BTA)) இறுதி செய்யவும் அவர்கள் இலக்கை நிர்ணயித்தனர்.


வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், வணிக பரிமாற்றம் ஒப்பந்தம் (BTA) விவாதங்களைத் தொடர ஒப்புக்கொண்டதைத் தவிர, பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு 118.3 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன், அமெரிக்கா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நட்பாக இருப்பதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகிறார்கள். இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தகக் கூட்டு நாடுகளில், இந்தியா இறக்குமதி செய்வதைவிட அதிகமாக ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு இதுதான்.


கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தங்க இறக்குமதி 62% சரிந்ததால் இறக்குமதி கடுமையாகக் குறைந்தது. கடந்த வாரம் இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹87,886 ஆக உயர்ந்ததால் நுகர்வோர் தேவை குறைந்தது. ஜனவரி தொடக்கத்தில் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் டேங்கர்கள் மீது அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா புதிய சப்ளையர்களைத் தேடியதால் எண்ணெய் இறக்குமதியும் கிட்டத்தட்ட 30% குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ரஷ்யா இந்தியாவின் கச்சா எண்ணெயில் 40%க்கும் அதிகமாக வழங்கியது.  இது 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மாஸ்கோ மீதான மேற்கத்திய தடைகளுக்கு முன்பு 1%-க்கும் குறைவாக இருந்தது.


அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்தால், கடந்த ஆண்டு ஏற்பட்ட $241 பில்லியன் பற்றாக்குறையின் அடிப்படையில், இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 15% அதிகரிக்கக்கூடும். இதைத் தவிர்க்க, இந்தியா மற்ற நாடுகளுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும். சீனாவும் இங்கிலாந்தும் இரண்டு சாத்தியமான விருப்பங்களை கொண்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையில் மூன்றில் ஒரு பங்கை உருவாக்கியுள்ளது.  அதே நேரத்தில் இங்கிலாந்து உடனான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு 3%-க்கும் குறைவாக இருந்தது. இங்கிலாந்துடன் இந்தியா தொடர்ந்து நடத்திவரும் சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இந்த சமநிலையை இந்தியாவிற்கு சாதகமாக இருக்க உதவும்.



Original article:

Share:

பெண்களின் அரசியல் பங்கேற்பை என்னென்ன காரணிகள் பாதிக்கின்றன? -ரெபேக்கா ரோஸ் வர்கீஸ்

 தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பு பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் அவர்கள் வெற்றி பெறுவதை கடினமாக்கும் மற்றும் சமூக கலாச்சார சார்புகளில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், சாதாரண பெண்கள் தேர்தல் செயல்பாட்டில் எவ்வாறு பங்கேற்கிறார்கள் என்பதற்கு குறைவான கவனம் செலுத்தப்படுகிறது.


இந்திய அரசியலில் பெண்கள் இருப்பது குறித்து அறிஞர்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர். இந்தியாவில் பல சக்திவாய்ந்த பெண் தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் இன்னும் அரசியலில் தீவிரமாக பங்கேற்பதில்லை. பல நாடுகளில், அரசியலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி 1990ஆம் ஆண்டுகளில் குறையத் தொடங்கியது. இருப்பினும், இந்தியாவில், இந்த மாற்றம் 2010ஆம் ஆண்டு ஏற்பட்டது.


அரசியலில் பெண்கள் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் தேர்தல்களில் அவர்களின் வெற்றியைக் கட்டுப்படுத்தும் சமூக மற்றும் கலாச்சாரத் தடைகளில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், சாதாரண பெண்கள் வாய்ப்பு கிடைக்கும்போது வாக்களிக்கும் செயல்பாட்டில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதற்கு குறைவான கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களின் வாக்களிக்கும் தேர்வுகள் மற்றும் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் செல்வாக்கு ஆகியவை நன்கு ஆய்வு செய்யப்படவில்லை.


அரசியல் கட்சிகளும், மகளிர் குழுக்களும் தேர்தல்களின்போது பெண் வாக்காளர்களைப் புகழ்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் அவர்களை ஒரே குழுவாகக் கருதுகின்றன. பெண்கள் வாக்களிக்கும் விதத்தை வடிவமைக்கும் சாதி, வர்க்கம், மதம் மற்றும் பிராந்தியம் போன்ற வேறுபாடுகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.


2016ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல்களில் டொனால்ட் டிரம்பை ஆதரித்த பெண்கள் மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த கலவரங்களில் அவர்களின் பங்கு போன்ற உதாரணங்கள், பெண்களின் அரசியல் ஈடுபாடு சிக்கலானது மற்றும் ஆழமான பகுப்பாய்வு தேவை என்பதைக் காட்டுகின்றன.


இந்திய தேர்தல்களில் பெண் தொகுதியின் வடிவம்: NES தரவுகளிலிருந்து சான்றுகள் (Shaping of the Woman Constituency in Indian Elections: Evidence from the NES Data) என்ற ராஜேஸ்வரி தேஷ்பாண்டேவின் ஆய்வு இந்த சூழலில் முக்கியமானது. அதிகமான பெண்கள் வாக்களித்து அரசியலில் எவ்வாறு தீவிரமாக ஈடுபடுகிறார்கள் என்பதைக் காட்ட தேசிய தேர்தல் ஆய்வுகள் (NES) தரவை அவர் பகுப்பாய்வு செய்கிறார். பெண்கள் முக்கியமாக பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கிறார்களா அல்லது பிற சமூக காரணிகளை அடிப்படையாகக் கொண்டவர்களா என்பதை அவரது ஆராய்ச்சி ஆராய்கிறது. இந்தியா ஒரு வலுவான பெண்கள் வாக்களிக்கும் குழுவை உருவாக்குகிறதா என்பதைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது. இந்த ஆய்வு முக்கிய போக்குகள், சவால்கள் மற்றும் சமூகம் மற்றும் தேர்தல்களில் பெண்களின் அரசியல் பங்கேற்பின் தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.


செயலற்ற பயனாளிகளா அல்லது செயலில் பங்கேற்பாளர்களா?


2010ஆம் ஆண்டில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கத் தொடங்கினர். இந்த மாற்றத்தைக் கண்டு, அரசியல் கட்சிகள் பெண் வாக்காளர்களை ஈர்க்க கொள்கைகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தின. இருப்பினும், இந்தக் கொள்கைகள் பெரும்பாலும் பெண்களை அரசியலில் தீவிரமாக பங்கேற்பவர்களாகக் கருதுவதற்குப் பதிலாக செயலற்ற பெறுநர்களாகக் கருதுகின்றன. உஜ்வாலா (Ujjwala) மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) போன்ற நலத்திட்டங்கள் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற உதவியது. இதேபோல், 'அன்பு சகோதரி' (Ladli Behna) மற்றும் 'அன்புள்ள லட்சுமி'  (Ladli Laxmi) போன்ற திட்டங்கள் மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தன. இந்தத் திட்டங்கள் பெண்களை அரசியல் தலைவர்களை தன்னிச்சையாக முடிவெடுப்பவர்களாக அங்கீகரிப்பதற்குப் பதிலாக அவர்களைச் சார்ந்திருப்பதைப் போல தோற்றமளிக்கின்றன.


அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பது எப்போதும் உண்மையான அரசியல் அதிகாரத்தைக் குறிக்காது என்று தேஷ்பாண்டே கூறுகிறார். நீண்டகாலமாக, பெண்கள் அரசியலில் முக்கியமற்றவர்களாகக் கருதப்பட்டனர். மேலும், அவர்களின் பங்கை குறைவாக வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அதிகமான பெண்கள் வாக்களித்து வந்தாலும், அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பெரும்பாலும் நலன்புரி பயன்களுக்காகவே வாக்களிப்பதாகக் கூறுகின்றன. NES தரவின் படி, அதிகமான பெண்கள் வாக்களிப்பது என்பது அவர்களுக்கு உண்மையான அரசியல் செல்வாக்கு உள்ளதா அல்லது வெறும் குறியீட்டு இருப்பைக் கொண்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.


வாக்களிப்பதைத் தாண்டி


2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிகமான பெண்கள் வாக்களித்தனர். இது ஒரு நேர்மறையான மாற்றம். இருப்பினும், வாக்களிப்பது அரசியலில் பங்கேற்க ஒரு வழி மட்டுமே. பேரணிகள், பிரச்சாரங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கொள்கை விவாதங்களில் பங்கு பெறும்போது பெண்கள் இன்னும் ஆண்களைவிட பின்தங்கியிருக்கிறார்கள்.


14% பெண்கள் மட்டுமே தங்கள் கணவர்களிடம் வாக்களிக்கும் ஆலோசனையைக் கேட்பதாகக் கூறுகிறார்கள். இது அவர்கள் மிகவும் சுதந்திரமான முடிவுகளை எடுப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை இன்னும் ஆண்களைவிட அதிகமாக உள்ளது. இதன் பொருள் அதிகமான பெண்கள் வாக்களிக்கும் அதே வேளையில், சமூக மற்றும் கட்டமைப்பு தடைகளால் ஆழமான அரசியல் ஈடுபாடு இன்னும் வரையறுக்கப்பட்டுள்ளது.


சுய-அதிகாரமளிக்கும் நிலை என்பது பெண்களின் வாக்குப்பதிவில் அதிகரிப்பதற்கான ஒரு காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் பொருள் சிறந்த கல்வி மற்றும் அதிக வேலை வாய்ப்புகள் பெண்கள் சுதந்திரமாக வாக்களிப்பதில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அதிக பெண் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க உதவியுள்ளன.


இந்த விளக்கத்துடன் ஆசிரியர் உடன்படவில்லை. மேலும், இரண்டு முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறார். முதலாவதாக, தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது, எனவே பொருளாதார சுதந்திரம் அதிக வாக்காளர் வாக்குப்பதிவிற்கு காரணமாக இருக்காது. இரண்டாவதாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவான பெண்கள் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது வாக்காளர் பதிவில் ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது.


பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கு ஒரு காரணம், பல ஆண்கள் வேலைக்காக இடம்பெயர்வதுதான். இது பொதுவாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியதாகக் காணப்படும் மாநிலங்களில் அதிகமான பெண்கள் வாக்களிக்க வழிவகுத்துள்ளது.


வாக்குப்பதிவு அதிகரித்தாலும், பரந்த அரசியல் பங்கேற்பு குறைவாகவே உள்ளது என்பதை இந்தப் போக்குகள் எடுத்துக்காட்டுகின்றன.


மற்ற அடையாளங்கள்


இந்தியாவில் பெண்களின் வாக்களிக்கும் முறை பாலின அடையாளத்தால் மட்டுமே இயக்கப்படவில்லை. ஆனால், அவை பிராந்திய, சாதி மற்றும் வர்க்க இயக்கவியலால் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. NES தரவு, மாநில-குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூக சூழல்கள் தேர்தல் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள் இந்தியா முழுவதும் பெண் வாக்காளர்கள் என்ற ஒற்றைக் குழு இல்லை. மாறாக, அவர்களின் வாக்களிக்கும் முடிவுகள் அவர்களின் சமூகங்களால் வடிவமைக்கப்படுகின்றன.


மாநில அளவிலான மாறுபாடுகள் இந்த சிக்கலை நிரூபிக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், தேர்தல் அரசியல் வரலாற்று ரீதியாக வலுவான பிராந்தியக் கட்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் விருப்பத்தேர்வுகள் பெரும்பாலும் தேசிய பாலின அடிப்படையிலான வாக்குப் போக்குகளுக்குப் பதிலாக பிராந்திய அரசியல் இயக்கங்களுடனேயே இணைந்துள்ளன. சாதி மற்றும் வர்க்கப் பிரிவுகள் இந்தக் கதையை மேலும் சிக்கலாக்குகின்றன. பிஜேபியின் வாக்காளர் தளம் பாரம்பரியமாக நகர்ப்புற, உயர் வர்க்க மற்றும் உயர் சாதி குழுக்களை நோக்கி சாய்ந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் நகர்ப்புற ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களிலிருந்து அதிக ஆதரவைப் பெற்றுள்ளது. இருப்பினும், இது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர்கள் பல பெண்கள், பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தங்கள் சமூகத்தின் தேவைகளின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர்.


பல்வேறு கட்சிகளுக்கு பெண்களின் ஆதரவு


NES தரவு, காங்கிரஸ் வரலாற்று ரீதியாக பாலின நன்மையை பராமரித்து வருகிறது. ஆண்களைவிட பெண் ஆதரவை தொடர்ந்து பெறுகிறது. இந்தப் போக்கு 2024ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது.  2014ஆம் ஆண்டைத் தவிர, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சரிவை சந்தித்தது. இடதுசாரி கட்சிகளும் பாலின நன்மையைக் கொண்டிருந்தன. ஆனால், அவற்றின் வீழ்ச்சியடைந்த செல்வாக்கு தேசிய அரங்கில் இந்த விளைவைக் குறைத்துள்ளது.


மாறாக, பா.ஜ.க  பாலின வேறுபாட்டை எதிர்கொண்டுள்ளது. ஆண்களைவிட குறைவான பெண்களே கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், இந்த இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. முன்னதாக, பாஜக ஆதரவில் பாலின இடைவெளி 20% ஐத் தாண்டியது. 2024ஆம் ஆண்டு அது தோராயமாக 7% ஆகக் குறைந்தது. பா.ஜ.கவின் பெண்களுக்கான இலக்கு இந்த மாற்றத்திற்கு பங்களித்துள்ளது. இருப்பினும் அதன் பெரும்பகுதி இன்னும் நலன்சார் பயனாளிகளிடமிருந்து மட்டுமே வருகிறது. இந்தக் குழுவிற்குள்ளும் பெண்களைவிட ஆண்களே பாஜகவை ஆதரிக்கின்றனர்.


பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும். பாஜக ஆட்சி செய்யாத சில மாநிலங்களில், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், ஆண்களைவிட அதிகமான பெண்கள் கட்சிக்கு வாக்களித்தனர். மற்ற மாநிலங்களில், பெண்கள் எதிர்க்கட்சிகளை விரும்பினர்.  இது சமமற்ற பாலின இடைவெளிக்கு வழிவகுத்தது. பாஜக பெண் வாக்காளர்களைப் பெற்றிருந்தாலும், பெண்களின் வாக்களிப்புத் தேர்வுகளில் பாலினம் மட்டுமே காரணியாக இல்லை என்பதை இது காட்டுகிறது. பிற அடையாளங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பில் மூன்று முக்கிய போக்குகளை கடந்த தேர்தல் தரவுகள் காட்டுகின்றன:


1. அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர். ஆனால், ஆண்களுடன் ஒப்பிடும்போது வாக்களிப்பதைத் தாண்டி அரசியலில் அவர்கள் இன்னும் குறைவாகவே ஈடுபடுகிறார்கள்.


2. பெண்களின் அரசியல் தேர்வுகள் பாலினத்தால் மட்டுமல்ல, சாதி, வர்க்கம் மற்றும் பிராந்தியத்தாலும் பாதிக்கப்படுகின்றன.


3. பெண் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாஜக வரலாற்று ரீதியாக பெண்களைவிட ஆண்களிடமிருந்து அதிக ஆதரவைப் பெற்றுள்ளது.


இந்தப் போக்குகள் இந்தியாவில் பெண்கள் இன்னும் ஒரு தனி அரசியல் குழுவை உருவாக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. ஏனெனில், அவர்களின் வாக்களிக்கும் முடிவுகள் பெரிய சமூக மற்றும் அரசியல் காரணிகளால் வடிவமைக்கப்படுகின்றன.


ரெபேக்கா ரோஸ் வர்கீஸ், எப்பத்திரிகையையும் சாராத பொது எழுத்தாளர் (freelance journalist).



Original article:

Share:

தமிழ்நாடு பட்ஜெட் : ஒரு கலவையான தொகுப்பு

 மூலதனச் செலவினத்தில் (capital expenditure (Capex)) கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், வருவாய் செலவினத்தை அதிகரிப்பது ஒரு பிரச்சினையாகும்.


2026 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டும் உள்ளன. இதனால், மூலதனச் செலவினங்களில் (capital expenditure) கவனம் செலுத்துவது நேர்மறையானது. இருப்பினும், அதிக மானிய மசோதா மற்றும் தெளிவற்ற பற்றாக்குறை மதிப்பீடுகள் கவலைக்குரியவை ஆகும். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான வலுவான உந்துதல் ஒரு பெரிய நேர்மறையான அம்சமாகும். அரசாங்கம் நிதியாண்டு 26-க்கு ₹57,231 கோடியை ஒதுக்கியுள்ளது. இது நிதியாண்டு 25-க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 22% அதிகம். இந்தத் தொகை மொத்த பட்ஜெட்டான ₹4.39 லட்சம் கோடியில் 13% ஆகும்.


சென்னைக்கு அருகில் ஒரு புதிய உலகளாவிய நகரம், சாலைகள் மற்றும் பாலங்கள், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் எரிசக்தி, நீர் வழங்கல் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான செலவு வரவேற்கத்தக்கது. ஏனெனில், சிறந்த உள்கட்டமைப்பு மாநிலத்திற்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதால், இந்த முதலீடு ஒரு நேர்மறையான படியாகும். இருப்பினும், நிதியாண்டு 2026-க்கான அதன் மூலதனச் செலவு (மூலதனம்) இலக்கை அடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நிதியாண்டு 24 மற்றும் நிதியாண்டு 25-ல் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.


தொற்றுநோய்க்குப் பிறகு இத்தகைய முதலீடுகள் குறைந்ததால் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவது முக்கியம். இருப்பினும், அதிகரித்து வரும் வருவாய்ச் செலவு ஒரு கவலையாக உள்ளது. நிதியாண்டு 2026-ல், வருவாய்ச் செலவு ₹3,73,204 கோடி, இது மூலதனத்தை விட 6.5 மடங்கு அதிகம். இது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, நிதியாண்டு 2025-ஆம் நிதியாண்டில் அனைத்து மாநிலங்களுக்கும் வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் (revenue expenditure to capital outlay (RECO)) விகிதமான 5.2%-ஐ விட மிக அதிகம்.


இந்த செலவினத்தில் பெரும் பகுதி நிலையானது, சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் வருவாய் செலவினத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். இதற்கு வட்டி செலுத்துதல்கள் 19% ஆகும். கூடுதலாக, மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிதியாண்டு 26-ஆம் நிதியாண்டில் மொத்தம் ₹1,53,724 கோடியாகும். இதில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 1.15 கோடி பெண்களுக்கு ₹1,000 மாதாந்திர பரிமாற்றம், மதிய உணவு, பள்ளி காலை உணவு மற்றும் திறன் பயிற்சி திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்களில் பல சமூக நலன்களை வழங்கினாலும், அரசாங்கம் அவ்வாறு செய்யாதவற்றைக் குறைக்க வேண்டும்.


நிதியாண்டு 2026-க்கான நிதிப் பற்றாக்குறை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது FY25-ல் 3.26% ஆக இருந்தது. இந்தக் குறைப்பு சில கேள்விகளை எழுப்பக்கூடும். 2024-25ஆம் ஆண்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு மிக அதிக நிலுவையில் உள்ள கடன்களைக் கொண்டிருந்தது என்று RBI தெரிவித்துள்ளது. FY26-க்கான மாநிலத்தின் கடன்-GSDP விகிதம் 26.07% ஆகும். இது நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management(FRBM)) ஆணைக்கு அருகில் உள்ளது. இருப்பினும், தமிழ்நாடு TANGEDCO போன்ற போராடும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விகிதத்தை அதிகரிப்புக்கான உத்தரவாதங்களை வழங்கியுள்ளது. மார்ச் 2024-ன் இறுதியில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.49% என்று பட்ஜெட் கூறுகிறது. ரிசர்வ் வங்கியின் மாநில நிதி அறிக்கையின்படி, FY25 பட்ஜெட் மதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 30.3%-ஆக இருந்தது.


நிதியாண்டு 2026-க்கான உண்மையான GSDP வளர்ச்சி 9% ஆகவும், பெயரளவு வளர்ச்சி 14.5% ஆகவும் இருக்கும் என்று மாநிலம் எதிர்பார்க்கிறது. இருப்பினும், இது மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கலாம். FY26-க்கான 10.1% குறைந்த பெயரளவு GDP வளர்ச்சியை மத்திய பட்ஜெட் கணித்துள்ளது. கூடுதலாக, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஒட்டுமொத்த வளர்ச்சியை மெதுவாக்கலாம். மாநிலத்தின் வரி வருவாய் வளர்ச்சி மதிப்பீடுகளும் அதிகமாகத் தெரிகிறது. இதன் காரணமாக, FY26-க்கான நிதிப் பற்றாக்குறை கணிப்புகளைவிட அதிகமாக இருக்கலாம். அதன் மதிப்பீடுகள் உண்மையான விளைவுகளுடன் எவ்வளவு துல்லியமாக பொருந்துகின்றன என்பதன் அடிப்படையில் ஒரு பட்ஜெட்டை மதிப்பீடு செய்ய வேண்டும்.



Original article:

Share:

பணவீக்க விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு செய்தி

 இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 4% இலக்குடன் மொத்த பணவீக்க விகிதம் பொருந்துமா என்பது பெரும்பாலும் உணவுப் பொருட்களின் விலையைப் பொறுத்தது.


பிப்ரவரி மாத பணவீக்க விகிதம் 3.6% ஆக இருந்தது. இது பெரும்பாலான ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்தது. இது முக்கியமாக, காய்கறி விலைகளில் ஏற்பட்ட சரிவுதான் பணவீக்கம் குறைவதற்கு முக்கிய காரணமாகும். உணவு அல்லாத மற்றும் எரிபொருள் அல்லாத பொருட்களின் விலைகள் உயர்ந்த போதிலும் இது நடந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டில் (consumer price index (CPI)) உணவு அல்லாத மற்றும் எரிபொருள் அல்லாத பொருட்களை மட்டுமே கண்காணிக்கும் முக்கிய பணவீக்கம், பிப்ரவரியில் 4% ஐ எட்டியது. இது நவம்பர் 2023 க்குப் பிறகு மிக உயர்ந்த நிலையாகும்.


பணவீக்க விகிதங்களுக்குப் பின்னால் உள்ள பெரிய செய்தி என்ன? இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4% உடன் மொத்த பணவீக்க விகிதம் தன்னை இணைத்துக் கொள்ளுமா இல்லையா என்பது உணவு விலைகளின் செயல்பாட்டைப் பொறுத்து மாறியுள்ளது. இது பெரும்பாலும் பருவகால அதிர்ச்சிகளால் இயக்கப்படுகிறது. சமீபத்திய விகித எண்களில் முக்கிய பணவீக்கத்தில் அதிகரித்து வரும் போக்கு, முக்கியமாக தங்கத்தின் விலை அதிகரிப்பு போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. இது பொருளாதாரத்தில் எந்த பெரிய வெப்பமடைதலையும் குறிக்கவில்லை. ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கை நெருங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உணவுத் துறையில் பெரிய விநியோக அதிர்ச்சிகள் எதுவும் இல்லை என்று இது கருதுகிறது. சீனாவில் குறைந்த எண்ணெய் விலைகள் மற்றும் அதிகப்படியான உற்பத்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். இந்த காரணிகள் இறக்குமதியை அதிக விலை கொண்டதாக மாற்றும் பலவீனமான ரூபாயின் தாக்கத்தை ஈடுசெய்யக்கூடும்.


பணவியல் கொள்கைக் குழு (MPC) பிப்ரவரியில் கொள்கை விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்தது. ஒரு அடிப்படைப் புள்ளி ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்குக்கு சமம். இது ஐந்து ஆண்டுகளில் முதல் விகிதக் குறைப்பாகும். பிப்ரவரி மாதத்தின் எதிர்பார்த்ததைவிடக் குறைவான பணவீக்கம் மற்றொரு விகிதக் குறைப்பை ஊக்குவிக்க வேண்டும். பெரும்பாலான ஆய்வாளர்கள் இது நடக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், நுகர்வோர் கடன் விகிதங்களில் ஏற்படும் தாக்கம் நேரம் எடுக்கும். இந்த தாமதம் வங்கி அமைப்பின் பரிமாற்ற தாமதத்தால் ஏற்படுகிறது. இருப்பினும், முக்கிய செய்தி என்னவென்றால், பணவியல் கொள்கை இப்போது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.



Original article:

Share:

நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும் -பாலாஜி சீனிவாசன், ரோகன் திவான்

 நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதிமன்றங்களின் கவனிப்பு எவ்வாறு தெரிவிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை சமீபத்திய வழக்குகளின் உள்ளடக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்களை பரபரப்பாக்குதல் மற்றும் சூழல் ஆபத்து இல்லாமல் அவற்றின் கருத்துகளை புகாரளித்தல், சுதந்திரமான மற்றும் நியாயமான நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவது, மக்களின் நம்பிக்கையையும் பலவீனப்படுத்தக்கூடும்.


இப்போதெல்லாம், ஒருவர் சொல்லும் அனைத்து கருத்துகளும் முதலில் இணையவழியில் தெரிவிக்கப்பட்டு அதன் பிறகுதான் அச்சு ஊடகங்களில் "மீளறிக்கை" (re-reported) செய்யப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், இந்த ஆரம்பகாலத்தில் இணையவழியில் அறிக்கையானது பகுதிகளாகவும், ஒரு சார்புடைய முறையிலும் செய்யப்படுகிறது. இது வாசகர்களுக்கு நியாயமற்ற முடிவுகளையும், கருத்துகளையும் விட்டுவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நீதியை வழங்க வேண்டிய நமது நீதிபதிகள்கூட இந்த இணையவழியின் கூற்றுகளால் விடுபடவில்லை. இன்று, கிட்டத்தட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் இணையவழியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. இருப்பினும், இது வழக்குதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தொலைதூரத்தில் ஆஜராவதற்கான ஒரு விருப்பத்தை முன்வைக்கிறது.


சமீபத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தேர்தல்களின் போது வழங்கப்படும் "இலவசங்கள்" என்ற போக்கை வாய்மொழியாக ஏற்கவில்லை என்றும், பிற்படுத்தப்பட்டவர்களை சமூகத்தில் இணைப்பது சிறந்ததா என்றும் கேள்வி எழுப்பியதாக பல செய்திகள் கூறுகின்றன. இதன் கேள்விக்குரிய வழக்கானது, வீடற்றவர்களுக்கு நகர்ப்புற வீடுகள் அல்லது தங்குமிடம் வழங்குவது பற்றியது. உச்சநீதிமன்றமும் ஒரு தனி பிரச்சினையை ஆராய்ந்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் ஊழல் அல்லது தடைசெய்யப்பட்ட நடைமுறைகளுக்குச் சமமா என்பதுதான் இதன் பிரச்சினையாக உள்ளது.


இதுபோன்ற மற்றொரு நிகழ்வில், யூடியூபரின் (YouTuber) முன் ஜாமீன் மனுவை தீர்ப்பளிக்கும் நீதிபதியின் வாய்மொழியான கருத்துகணிப்புகளை பரபரப்பான மற்றும் மேற்கோள் காட்டி பல அறிக்கைகள் வந்தன. நீதிமன்றம் தனது உத்தரவில் விண்ணப்பதாரருக்கு நிவாரணம் வழங்கியிருந்தாலும், அறிக்கையிடுவதில் கவனம் செலுத்துவது உண்மையான உத்தரவைவிட நீதிமன்றத்தில் நீதிபதிகளின் கருத்துகளின் கவனம் செலுத்தின. இது ஒருபுறம் இருக்க, ஆரம்பத்தில் யூடியூபரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், அடுத்த சந்தர்ப்பத்தில், ஒழுக்கம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் தரங்களுக்கு உட்பட்டு மீண்டும் தொடங்க நீதிமன்றம் அனுமதித்தது. ஒழுக்கம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் தரநிலைகள் மாறுபடலாம். இருப்பினும், நீதிமன்றம் நிபந்தனைகளை தளர்த்த முடிவு செய்தது. ஏனெனில், சம்பந்தப்பட்ட நபரும் அவரது ஊழியர்களும் நிகழ்ச்சிகளிலிருந்து வரும் வருமானத்தை நம்பியிருந்தனர். மீண்டும் ஒருமுறை, நீதிபதி கூறிய சில வாய்மொழிக் கருத்துகளில் அறிக்கைகள் அதிக கவனம் செலுத்தின. இந்தக் கருத்துக்கள் சுருக்கமானவை, முழு நடவடிக்கைகளின் பின்னணியில் சுமார் 10 வினாடிகள் நீடித்தன. கனடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஒரு சக குற்றவாளி கேலி செய்வது பற்றியவை அவை. குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதரிக்கும் பொது ஊடகங்களையும் அவை குறிப்பிட்டன. இருப்பினும், ஒரு முக்கியமான உண்மை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. தணிக்கைக்கு வழிவகுக்காத வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்த நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. ஒருவேளை உண்மையான விவாதம் எந்த வகையான விதிமுறைகள் நியாயமான கட்டுப்பாடுகளுடன் கருத்து சுதந்திரத்தை சமநிலைப்படுத்த முடியும் என்பது பற்றியதாக இருக்க வேண்டும்.


இந்த கருத்துகணிப்புகள் ஏறக்குறைய "கிளிக்-பெயிட்" (click-bait) முறையில் ஹைலைட் செய்யப்பட்ட சில "மேற்கோள்களுடன்" இணையவழியில் புகாரளிக்கப்படுகின்றன. இதன் கடுமையான விஷயம் என்னவென்றால், சில சமயங்களில், அத்தகைய அறிக்கையை முழுமையாகப் படிப்பதுகூட, நடவடிக்கைகளின்போது என்ன நடந்தது, என்ன உத்தரவு நிறைவேற்றப்பட்டது மற்றும் கேள்வியின் முழு சூழல் என்ன என்பது பற்றிய முழு விவரத்தையும் வழங்காது. இந்த வகையான துண்டிக்கப்பட்ட அறிக்கை பொதுவாக ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால், நீதித்துறை நடவடிக்கைகளைப் புகாரளிக்கும் போது, ​​அது குறிப்பாக தீங்கு விளைவிக்கும். இது பல சட்ட வல்லுநர்கள், நிபுணர்கள் போன்றவர்கள், கூறப்பட்ட கருத்துகணிப்புகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதற்கான மதிப்பைப் பொறுத்து தொடங்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது. இது தொடர்ந்தால், பொதுவாக, நீதிபதிகள், நீதித்துறை நடவடிக்கைகளின் போது தங்கள் மனதை வெளிப்படுத்த தயங்குவார்கள். அத்தகைய வெளிப்பாடு சுதந்திரமாக இருப்பது, சுதந்திரமான நீதித்துறை செயல்முறைக்கு அவசியம் என்பது நம்முடைய கருத்தாகும். இது நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் வெளிப்பாட்டின் மீது தீவிரமான "குளிர்விக்கும் விளைவை" (chilling effect) ஏற்படுத்தும். குறிப்பாக, ஒரு நீதிபதி அத்தகைய அறிக்கைக்கு பதிலளிக்கக்கூட வாய்ப்பில்லை.


நீதிமன்றத்தின் கருத்துகணிப்புகளுடன் கருத்து வேறுபாடு கொண்ட "திறந்த கடிதங்கள்" (open letters) கூட தனித்தனியாக அறிவிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இது நீதிமன்றத்தின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. இது தவிர, பொது மக்களுக்கு நீதித்துறை அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமாக அந்த புனித நம்பிக்கையை பலவீனப்படுத்துகின்றன.


இவை நீதிமன்றத்தின் "கவனிப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், ஒரு உண்மையான வழக்காடுபவரை வழக்கறிஞர் கவனிக்க வேண்டிய கேள்விகளாகப் பார்ப்பார். வழக்கறிஞர் நீதிமன்றத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த வேண்டும். நீதித்துறை சட்டத்தை மிகவும் மனிதாபிமானமாக்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அறிக்கையிடப்பட்ட கருத்துகணிப்புகளைப் பார்த்தாலும், அவை நீதிமன்றம் பிறப்பித்த உண்மையான உத்தரவின் ஒரு பகுதியாக இல்லை. அவை உத்தரவுகளுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவைக் கூட பாதிக்காது. இந்த கருத்துகணிப்புகள் நீதிபதியின் எண்ணங்களைப் பற்றிய நுண்ணறிவைத் தருகின்றன. சில சமயங்களில் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் தெரிவிக்கின்றன. இவற்றைப் பகிர்ந்து கொள்வது நீதிபதியின் உரிமை. மேலும், அவை நீதித்துறை செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விசாரணைகளின் போது எழுப்பப்படும் கேள்விகள், தங்கள் வாடிக்கையாளருக்கு சிறப்பாகச் சேவை செய்ய என்ன வாதிட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வழக்கறிஞர்களுக்கு உதவுகின்றன. ஒரு மூத்த வழக்கறிஞருக்கு உதவும் எந்தவொரு இளம் வழக்கறிஞரும் (ஒருவேளை கண்டிக்கப்பட்ட பிறகு) ஒரு நீதிபதி வழக்கறிஞரிடம் அல்லது தங்களுக்குள் பேசும்போது, ​​முழுமையான அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டிருப்பார். இந்த வழியில், ஒருவர் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக் கொண்டு சரியான முறையில் பதிலளிக்க முடியும்.


மேலே விவாதிக்கப்பட்ட முதல் வழக்கில், அரசாங்கச் செலவினங்களின் கவனம் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி வாய்மொழி கருத்துகணிப்புகள் கேள்விகளை எழுப்புகின்றன. நகர்ப்புற வீட்டுவசதி போன்ற "முடிவுகளை" வழங்குவதா அல்லது கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற "வழிமுறைகளை" வழங்குவதா? அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் பலர் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை. நீண்டகால "வழிமுறைகளை" விட குறுகிய கால "முடிவுகளை" வழங்குவது அவர்களுக்கு எளிதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கலாம். இரண்டாவது வழக்கில், சில செயல்கள் ஆபாசமானவையா என்பது குறித்த கேள்விகளை கருத்துக் கணிப்புகள் எழுப்பின. இது வெளிப்புற அழுத்தங்களிலிருந்து விடுபட்ட ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டும்.


ஒருவர் கருத்துகள் அல்லது அவை வெளிப்படுத்தப்பட்ட விதத்துடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், அது நீதிபதிகளை ஊக்கப்படுத்தாத அல்லது சுதந்திரமான மற்றும் நியாயமான நீதித்துறை செயல்பாட்டில் தலையிடும் செயல்களை நியாயப்படுத்தாது. நிர்வாகத்தின் அதிகப்படியான செயல்களால் பத்திரிகைகள் பெரும்பாலும் குளிர்விக்கும் விளைவை எதிர்கொள்கின்றன. மேலும், பத்திரிகைகளைப் பாதுகாக்க நீதித்துறை நடவடிக்கை எடுக்கிறது என்பது முரண்பாடாக இருக்கிறது. ஆனால், பத்திரிகைகள் நீதித்துறையிலும் தீங்கு விளைவிக்க வழிவகுக்கும் என்று யாருக்குத் தெரியும்? பத்திரிகைகளின் சுதந்திரமான கருத்து நிலையானது அவசியம் என்றாலும், அது மற்றொரு நிறுவனம் அதன் கடமைகளைச் செய்யும்போது தைரியமாக, சுதந்திரமாக மற்றும் சாதகமான செயல்படுவதை தடுக்கும் செலவில் வரக்கூடாது.


சமீபத்தில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முடிவெடுப்பதில் நீதிபதிகள் அச்சமின்றி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். நீதித்துறை அதிகாரிகளின் 21-வது மாநில அளவிலான மாநாட்டில் ஜாமீன் வழங்கும் சூழலில் அவர் இதைப் பற்றி விவாதித்தார். பிரபல கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்தின் கூற்றுகளை மேற்கோள் காட்டி, ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையின் உதாரணத்தைக் கூறினார். கிளை முறிந்தால் பறவை விழுவதற்கு அஞ்சுவதில்லை. ஏனெனில், அது கிளையை அல்ல, அதன் சிறகுகளை நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக, நீதித்துறை நடவடிக்கைகளை பரபரப்பாக அறிக்கை செய்வதால், நீதிபதிகள் பெரும்பாலும் "கிளை" முறியும் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். நீதித்துறை தைரியமாக இருக்கும் என்று மட்டுமே நாம் நம்ப முடியும். "பறவை" அதன் இறக்கைகள் மற்றும் அதன் உயரும் திறன் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.


எழுத்தாளர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆவர்.



Original article:

Share:

இந்தியாவில் மின்னணுப் பாகங்கள் உற்பத்தித் துறை -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு என்ன : தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான ஒரு லட்சிய ஊக்கக் கொள்கைக்கான வரையறைகளை இறுதி செய்துள்ளது. இது சுமார் ரூ. 23,000 கோடி செலவில், ஆறு ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அரசாங்கமானது, நாட்டில் ஸ்மார்ட்போன் அசெம்பிளியை வெற்றிகரமாக உள்ளூர்மயமாக்கிய பிறகு, உள்நாட்டு உற்பத்திக்கான மதிப்பு கூட்டலை அதிகப்படுத்துவதாக எதிர்பார்க்கிறது.


முக்கிய அம்சங்கள் :


1. இந்தத் திட்டத்தின் மூலம் பல உதிரிபாகங்களை உருவாக்க இலக்காகக் கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இவற்றில் காட்சி தொகுதிகள் (display modules) மற்றும் துணை-அசெம்பிளி கேமரா தொகுதிகள் (sub-assembly camera modules) அடங்கும். இவற்றில், பிற பாகங்கள் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளிகள் (circuit board assemblies) மற்றும் லித்தியம் செல் உறைகள் (lithium cell enclosures) ஆகியவற்றின் மூலம், இந்தத் திட்டம் மின்தடையங்கள் (resistors), மின்தேக்கிகள் (capacitor) மற்றும் ஃபெரைட்டுகள் (ferrites) போன்றவற்றையும் உள்ளடக்கியது.


2. இந்தத் திட்டம் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான (direct job creation) ஆண்டு இலக்குகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளில் 91,600 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான வருடாந்திர ஊக்கத்தொகை ரூ.2,300 கோடி முதல் ரூ.4,200 கோடி வரை இருக்கும். நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் முதலீடு, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு இலக்குகளை அடைந்தால் மட்டுமே இந்த வழங்கல்கள் வழங்கப்படும்.


3. ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களை உள்ளூரில் சில அசெம்பிளி செயல்பாடுகளை (assembly operations) அமைக்க இந்தியா ஈர்த்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு மதிப்புக் கூட்டல் (domestic value addition) குறைவாகவே சுமார் 15-20% அளவில் உள்ளது. இதை குறைந்தது 30-40% ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதை அடைய, உதிரிபாகங்களுக்கான உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் ஒரு முக்கியமான அடுத்த படியாகக் கருதப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. மின்னணு பாகங்கள் ஊக்கத் திட்டம் (ELECTRONICS component incentive plan) இந்தியாவிற்கு ஒரு முக்கியமான அடுத்த படியாகும். ஸ்மார்ட்போன்களுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டம் அதன் முடிவை நெருங்கி வருவதால் இது வருகிறது. ஸ்மார்ட்போன் PLI திட்டம் வெற்றிகரமாக உள்ளது. இருப்பினும், மின்னணு உற்பத்தியில் உள்ளூர் மதிப்பு கூட்டல் இன்னும் 15-20% குறைவாகவே உள்ளது. பாகங்களுக்கான மானியத் திட்டத்தின் மூலம் இதை 40% ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.


2. இந்தத் திட்டம் மூன்று வகையான ஊக்கத்தொகைகளை வழங்கலாம். இவை செயல்பாட்டுச் செலவுகள் (operational expenses), மூலதனச் செலவுகள் (capital expenses) அல்லது இரண்டின் கலவையை (mix of both) அடிப்படையாகக் கொண்டிருக்கும். செயல்பாட்டுச் சலுகைகள் PLI திட்டங்களைப் போலவே நிகர அதிகரிக்கும் விற்பனையைப் பொறுத்தது. கேபேக்ஸ் ஊக்கத்தொகைகள் (Capex incentives) தகுதியான மூலதனச் செலவினத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.



Original article:

Share:

ரைசினா உரையாடல் மற்றும் உளவுத்துறைத் தலைவர்களின் சந்திப்பு ஏன்? -ரோஷ்னி யாதவ்

 பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று ரைசினா உரையாடலின் 10-வது பதிப்பைத் தொடங்கி வைத்தார். அது என்ன? ரைசினா உரையாடல் கொள்கையில் என்ன இருக்கிறது?


மார்ச் 17, திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி ரைசினா உரையாடல் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து கவனம் செலுத்துகிறது. இதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்திய மற்றொரு கூட்டத்தில் ஐந்து கண்கள் நாடுகளின் (Five Eyes nations) அமெரிக்கா, யுகே, நியூசிலாந்து ஆகிய மூன்று நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் பங்கேற்றனர்.


முக்கிய அம்சங்கள்:


1. ரைசினா உரையாடல் என்பது புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு வருடாந்திர மாநாடு ஆகும். இது இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது மற்றும் அரசியல், வணிகம், ஊடகம் மற்றும் குடிமை சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது.


2. ரைசினா உரையாடலின் வலைத்தளத்தின்படி, "இந்த உரையாடல் பல பங்குதாரர்கள், பலதுறை விவாதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் தலைவர்கள், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இவர்களுடன் தனியார் துறை, ஊடகம், கல்வியியல் நிபுணர்கள் ஆகியோர் இணைந்து முக்கியமான விவகாரங்களைப் பற்றிப் பேசுகின்றனர்.


3. இந்த உரையாடலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.


4. ரைசினா உரையாடலின் 10-வது பதிப்பு மார்ச் 17-19, 2025 வரை நடைபெறும். 2025 பதிப்பின் கருப்பொருள் "காலச்சக்ரா - மக்கள், அமைதி மற்றும் புவி” (Kālachakra – People, Peace and Planet) என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. மூன்று நாட்களில், உலக சிந்தனைத் தலைவர்கள் ஆறு கருப்பொருள் தூண்களில் பல்வேறு வடிவங்களில் உரையாடல்களில் ஒருவருக்கொருவர் ஈடுபடுவார்கள்: (i) அரசியல் குறுக்கீடு :  மணல் மாற்றம் மற்றும் உயரும் அலைகள்; (ii) பசுமை மூவழிச் சிக்கலைத் (trilemma) தீர்ப்பது: யார், எங்கே, & எப்படி; (iii) டிஜிட்டல் புவி: முகவர்கள், முகவர்கள் மற்றும் இல்லாமைகள்; (iv) போர்க்குணமிக்க வணிகவாதம்: வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் பரிமாற்ற வீத அடிமைத்தனம்; (v) புலியின் கதை: ஒரு புதிய திட்டத்துடன் வளர்ச்சியை மீண்டும் எழுதுதல்; மற்றும் (vi) அமைதியில் முதலீடு செய்தல்: இயக்கிகள், நிறுவனங்கள் மற்றும் தலைமைத்துவம், ”என்று செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.


6. 10-வது ரைசினா உரையாடல் மாநாட்டில் 125 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதில் அமைச்சர்கள், முன்னாள் அரசுத் தலைவர், இராணுவத் தலைவர்கள், தொழில் முனைவோர், தொழில்நுட்ப நிபுணர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனை நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.


டெல்லியில் உளவுத்துறை தலைவர்கள் கூட்டம்


1. மார்ச் 16 (ஞாயிற்றுக்கிழமை), டெல்லியில் நடைபெற்ற கூட்டம், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. இதில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், , இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோனாதன் பவல் மற்றும் நியூசிலாந்தின் உளவுத்துறைத் தலைவர் ஆண்ட்ரூ ஹாம்ப்டன் ஆகிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  உளவுத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.


2. இந்த மாநாட்டை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (R&AW) தலைவர் ரவி சின்ஹா, மற்றும் உளவுத்துறை இயக்குநர் டபன் டேக்கா நடத்தினர். இதில் ஐந்து கண்கள் கூட்டாளிகள் உள்ள மூன்று முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இது இந்தியா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு இடையிலான பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.


3. ரைசினா உரையாடலின் போது உளவுத்துறைத் தலைவர்கள் முறைசாரா முறையில் சந்திக்கத் தொடங்கிய 2022 முதல் இந்தியா இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.


ஐந்து கண்கள் கூட்டணி (Five Eyes Alliance)


1. "ஐந்து கண்கள்" என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவுத்துறை பகிர்வு கூட்டணியைக் குறிக்கிறது. இது இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது.


2. கனடா அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, "இந்த நட்புநாடுகள் உலகின் மிகவும் ஒருங்கிணைந்த பலதரப்பு ஏற்பாடுகளில் ஒன்றில் பரந்த அளவிலான உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்கின்றன. ஐந்து கண்கள் ஒப்பந்தம் மற்றவைகளிலிருந்து தனித்து நிற்கிறது. ஏனெனில், நாடுகள் பல்வேறு சமூகங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் வலுவான மனித உரிமைகளால் நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் ஒரு பொதுவான மொழியால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பண்புகள் நட்புநாடுகள் தங்கள் பகிரப்பட்ட தேசிய நலன்களைப் பாதுகாக்க தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் உதவுகின்றன.


ஆங்கில நாடுகள் (Anglosphere)


ஆங்கிலோஸ்பியர் என்பது ஒரு காலத்தில் ஆங்கிலேய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த, அரசியல், சட்டம் மற்றும் கலாச்சாரத்தில் பொதுவான மரபுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆங்கிலம் பேசும் நாடுகளைக் குறிக்கிறது.


3. ஐந்து கண்கள் கூட்டணியின் வரலாறு வாஷிங்டன் மற்றும் லண்டனுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தத்திற்கு முந்தையது. 1943ஆம் ஆண்டில், பிரிட்டன்-அமெரிக்கா (Britain-USA (BRUSA)) ஒப்பந்தம், பின்னர் UK-USA (UKUSA) ஒப்பந்தமாக மாறுவதற்கான அடித்தளத்தை அமைத்தது, இது UK கணினி விஞ்ஞானி ஆலன் டூரிங் வாஷிங்டனுக்கு பயணம் செய்து இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையேயான பல இருதரப்பு வருகைகளைத் தொடர்ந்து வந்தது.


4. அமெரிக்க போர்த் துறைக்கும் இங்கிலாந்தின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனமான அரசாங்கக் குறியீடு மற்றும் சைபர் பள்ளிக்கும் (Government Code and Cypher School (GC&CS)) இடையே BRUSA ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, 1946-ல் UK-USA ஒப்பந்தம் கையெழுத்தானது. கனடா 1949-ல் இதில் இணைந்தது, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 1956-ல் இணைந்து கூட்டணியை உருவாக்கின. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் அதன் இருப்பு 1980-களில் இருந்தே அறியப்பட்டது. ஆனால், 2010-ல் UK-USA ஒப்பந்தக் கோப்புகள் வெளியிடப்பட்டன.



Original article:

Share: