சிறிய மட்டு உலைகள் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• ஒரு மூத்த RVNL அதிகாரியின் கூற்றுப்படி, இது தொடர்பாக வியாழன் அன்று ரஷ்ய நிறுவனத்துடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. புதைபடிவ எரிபொருள்களின் மீதான சார்பை குறைக்க சிறிய மட்டு உலைகளை (Small Modular Reactors (SMRs)) உருவாக்குவதற்கான இந்த ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின் ஒரு பகுதியாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்யத்தை (net-zero) அடைவதற்கான இந்திய ரயில்வேயின் இலக்காகவும் அணு ஆற்றலுக்கான உந்துதல் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.


• சிறிய மட்டு  உலைகள்கள் ஒரு யூனிட்டுக்கு 300 MW வரை மின் திறன் கொண்ட மேம்பட்ட அணு உலைகள் மற்றும் நிறுவலுக்கு குறைந்த பரப்பளவு தேவைப்படுகிறது. சிறியமட்டு உலைகள் ஆற்றல் துறையில் RVNL-ன் ஆர்வத்தையும் வேலையையும் விரிவுபடுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது என்று அதிகாரி கூறினார்.


• "எல்லாம் வேலை செய்தால், ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் (Rishikesh-Karnaprayag) வழித்தடம், பானுபாலி-பிலாஸ்பூர் (Bhanupali-Bilaspur) ரயில்வே வழித்தடம், யவத்மால்-நாந்தேத் (Yavatmal-Nanded) ரயில்வே வழித்தடம் மற்றும் இந்தூர்-பூத்னி (Indore-Budni) ரயில்வே வழித்தடம் ஆகியவற்றிற்கு சிறிய மட்டு உலைகளை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று அந்த அதிகாரி கூறினார்.


• ஒன்றிய அரசின் பட்ஜெட் 2025-26 ஒரு அணு ஆற்றல் திட்டத்தை (Nuclear Energy Mission) தொடங்கியது. இது சிறிய மட்டு உலைகளின் (Small Modular Reactors) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிக்காக அரசு ரூ.20,000 கோடி ஒதுக்கியுள்ளது, 2033-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஐந்து உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் இயக்கக்கூடிய சிறிய மட்டுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2047-ஆம் ஆண்டிற்குள் 100 GW அணு மின் திறனின் லட்சிய இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் ஆற்றல் கலவையில் அணு ஆற்றலை ஒரு முக்கிய தூணாக நிலைநிறுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணு மின் உற்பத்தியின் மூன்று-கட்ட திட்டத்தின் பார்வையை இந்தியா இந்திய அணு திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி J. பாபா மற்றும் டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்கு கடன்பட்டிருக்கிறது. அவர்கள் வேக பெருக்கி உலைகளை (Fast Breeder Reactors) உருவாக்குவதன் அவசியத்தை அங்கீகரித்தனர், ஏனென்றால் இந்த உலைகள் வளமான ஐசோடோப்புகளை பிளவுபடக்கூடிய பொருளாக பயனுள்ள மாற்றத்தின் காரணமாக அவை பயன்படுத்துவதை விட அதிக அணு எரிபொருளை உருவாக்குகின்றன.


கட்டம் 1: அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)) இயற்கை யுரேனியம் அடிப்படையிலான எரிபொருள்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. அதே நேரத்தில் பிளவுபடக்கூடிய புளூட்டோனியம் (Pu239) உற்பத்தி செய்கின்றன. இது செலவழிக்கப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிரித்தெடுக்கப்படலாம். இது கனநீரை (டியூட்டீரியம் ஆக்சைடு) குளிரூட்டியாகவும் மதிப்பீட்டாளராகவும் பயன்படுத்துகிறது. இந்த திட்டம் இறக்குமதி செய்யப்பட்ட லேசான நீர் உலைகளின் (Light Water Reactors (LWRs)) கட்டுமானத்தால் கூடுதலாக வழங்கப்பட்டது.


கட்டம் 2: இது கல்பாக்கத்தில் உள்ள வகையின் வேக பெருக்கி உலைகளை (Fast Breeder Reactors (FBRs)) நிறுவுவதை உள்ளடக்குகிறது. புளூட்டோனியம் அடிப்படையிலான எரிபொருள்களைப் பயன்படுத்தி, இது அணு மின் திறனை மேம்படுத்தலாம், மற்றும் வளமான தோரியம் பிளவுபடக்கூடிய யுரேனியமாக (U233) மாற்றலாம். புளூட்டோனியம் இருப்பின் திறமையான பயன்பாட்டிற்கு செலவழிக்கப்பட்ட எரிபொருளின் மறுசுழற்சி முக்கியமானது.


கட்டம் 3: மூன்றாம் கட்டம் ThU233 சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட U233 மின் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு பயன்படுத்தப்படலாம், இது நீண்டகால ஆற்றல் பாதுகாப்பிற்காக மேம்பட்ட வெப்ப மற்றும் வேகமான இனப்பெருக்க உலைகளைக் கொண்டுள்ளது. இதற்காக மேம்பட்ட கனநீர் உலை (Advanced Heavy Water Reactor (AHWR)) முன்மொழியப்பட்டுள்ளது. இப்போது, உருகிய உப்பு உலைகளின் பயன்பாடும் ஒரு விருப்பமாக பார்க்கப்படுகிறது.

Original article:
Share:

இடைவெளியைக் கவனியுங்கள்: இந்தியா மற்றும் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கை பற்றி…

 பொதுக் கொள்கை வகுப்பில் பெண்களின் பங்களிப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் (Global Gender Gap Index report) இந்தியா கடந்த ஆண்டு தனது நிலைமையிலிருந்து இரண்டு புள்ளிகள் குறைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 148 நாடுகளில் 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. சமத்துவ மதிப்பெண் வெறும் 64.1% மட்டுமே. இது கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தெற்காசியாவில் மிகக் குறைந்த தரவரிசை நாடுகளில் ஒன்றாக உள்ளது. பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு; கல்வி சாதனை; சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகிய நான்கு அம்சங்களில் ஒரு நாட்டில் பாலின சமத்துவத்தை இந்த குறியீடு அளவிடுகிறது. நான்கு பரிமாணங்களில் மூன்றில் இந்தியாவின் செயல்திறன் நிலையானதாக இருக்கிறது அல்லது ஓரளவு மேம்பட்டிருந்தாலும், நான்காவது பரிமாணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையின்மை ஒட்டுமொத்த முடிவைக் குறைக்கிறது. பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு வகையில், இந்தியா +0.9 சதவீத புள்ளிகள் மேம்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. மதிப்பிடப்பட்ட வருவாய் வருமானத்தில் சமத்துவம் 28.6%-லிருந்து 29.9% ஆக உயர்ந்து, துணைக்குறியீட்டு மதிப்பெண்ணை நேர்மறையாக பாதித்துள்ளது என்று அறிக்கை கூறியது. தொழிலாளர்வள பங்கேற்பு (labour force participation) விகிதத்தில் மதிப்பெண்கள் கடந்த ஆண்டு போலவே 45.9% இருந்தன - இது இந்தியா இன்றுவரை அடைந்த மிக உயர்ந்த அளவாகும். கல்வி சாதனை (educational attainment),  சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு வகைகளில், நேர்மறையான மாற்றங்களால் மதிப்பெண்கள் உயர்ந்துள்ளன. கடந்த மதிப்பீட்டிலிருந்து, இந்தியா பெண்களுக்கு அரசியல் அதிகாரமளிப்பதில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை 14.7%-லிருந்து 13.8% ஆகக் குறைந்துள்ளது. அமைச்சர் பதவிகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் 6.5%-லிருந்து 5.6%-ஆகக் குறைந்துள்ளது. இந்த சரிவு 2023 முதல் தொடர்ந்து வருகிறது.

முன்னேறுவதற்கான பாதை தெளிவாக உள்ளது - வலுவான கொள்கைகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்புடன் (political will) ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் இடைவெளிகளை சரிசெய்து, பெண்களுக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் இந்தியா நீண்டகாலமாக போராடி வருகிறது. சர்ச்சைக்குரிய பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா (Women's Reservation Bill) 1996-ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு பல தாமதங்களையும் தடைகளையும் சந்தித்தது. இப்போது இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குகிறது. இருப்பினும், இது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு 2029-ல் மட்டுமே நடைமுறைக்கு வரும். உலகளாவிய தரவரிசையில் இந்தியா முன்னேறுவது நல்லது என்றாலும், நாட்டில் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள பாலின சமத்துவத்தை உருவாக்குவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். சட்டம் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பே, தேர்தல் செயல்பாட்டில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் இருந்து அரசியல் கட்சிகளைத் தடுக்க எதுவும் இல்லை.


Original article:
Share:

குறைந்தபட்சம் 6 ஒன்றிய திட்டங்களுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கு ஒன்றிய அரசை விட அதிகம். -டி. ராமகிருஷ்ணன்

 இந்த திட்டங்களில் மூன்று தேசிய சமூக உதவி திட்டத்தின் (National Social Assistance Programme) கீழ் வரும் திட்டங்களாகும். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme), இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Widow Pension Scheme), மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme) போன்றவைகளாகும். மற்றவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Rural), பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana), மற்றும் ஜல் ஜீவன் திட்டம் ஆகும் (Jal Jeevan Mission) ஆகும். 


ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், குறைந்தது ஆறு ஒன்றிய திட்டங்களின் செயல்பாட்டிற்கு ஒன்றிய அரசுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசு பணம் அதிகமாக வழங்குகிறது என்று தெரியவந்துள்ளது.


இவற்றில் தேசிய சமூக உதவி திட்டத்தின் (National Social Assistance Programme (NSAP)) கீழ் மூன்று திட்டங்கள் அடங்கும் - இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (indira Gandhi National Old Age Pension Scheme (IGNOAPS)), இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Widow Pension Scheme (IGNWPS)) மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme (IGNDPS))  போன்றவைகளாகும். இவற்றுடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY))-கிராமப்புற, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY)), மற்றும் ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission (JJM)) ஆகியவையும் அடங்கும்.


வியாழன் அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தனது உரையில், இந்த திட்டங்களைக் குறிப்பிட்டு, ஒன்றிய அரசின் பங்களிப்புடன், வீட்டுவசதி அல்லது தண்ணீர் வழங்கல் என எதுவாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார். "பிரதம மந்திரியின் பெயரால் உள்ள திட்டங்களின் விவாகரத்தில்கூட மாநில அரசு, 50%-க்கும் மேல் திட்ட செலவில் வழங்கி, அவற்றை செயல்படுத்தி வருகிறது" என்று கூறினார்.


ஒன்றிய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் தேசிய சமூக உதவி திட்டம் (National Social Assistance Programme (NSAP)) ஆகஸ்ட் 1995-ல் தொடங்கப்பட்டது. இருப்பினும், மாநில அரசு இந்த பகுதியில் முன்னோடியாக இருந்து, ஜனவரி 1962 முதல் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை (old age pension scheme) செயல்படுத்தி வருகிறது. இது 1974 மற்றும் 1984-ஆம் ஆண்டிற்கு இடையில், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் திருமணத்திற்குப் பிறகு ஆதரவற்ற அல்லது கைவிடப்பட்ட பெண்கள் என நான்கு வகை ஆதரவற்ற நபர்களுக்கு நலத்திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியது. இவை அனைத்தும் நவம்பர் 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு அகில இந்திய திட்டத்தில் (all-India programme) இணைக்கப்பட்டன.


தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் உள்ள முதியோர் மற்றும் விதவைகள் ஓய்வூதியத் திட்டங்களில், ஒன்றிய அரசின் பங்கு 79 வயது வரை உள்ளவர்களுக்கு ₹200 அல்லது ₹300 மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ₹500 ஆகும். பயனாளி இறுதியில் ₹1,200 பெறுவதற்காக, மாநில அரசுதான் மேம்படுத்தப்பட்ட கூடுதல் தொகையை - ₹1,000 அல்லது ₹900 அல்லது ₹700, சூழ்நிலைக்கேற்ப - வழங்குகிறது. இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் (Indira Gandhi National Disability Pension Scheme (IGNDPS)) கீழ் உள்ள பயனாளிகளைப் பொறுத்தவரை, அவர்கள் ₹1,500 பெறுகிறார்கள். அதில் வயது குழுவைப் பொறுத்து ₹300 அல்லது ₹500 ஒன்றிய அரசிடமிருந்து வருகிறது. மீதமுள்ளது மாநில அரசால் வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனது சொந்த திட்டத்திற்கு தமிழ்நாடு நிதி வழங்குகிறது. அதன் கீழ் பயனாளிகளுக்கு ₹1,500 வழங்கப்படுகிறது.


பிரதம மந்திரி அவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தை (PRADHAN MANTRI AWAS YOJANA-GRAMIN (PMAY-G)) பற்றி ஆராயும் போது, சமவெளி பகுதிகளில் ஒரு வீட்டின் யூனிட் செலவு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் சுட்டிக்காட்டியபடி, மாநில அரசின் பங்கு ஒன்றிய அரசைவிட கணிசமாக அதிகமாக உள்ளது. மாநிலத்தில், PMAY-R கீழ் ஒரு வீட்டின் யூனிட் செலவு ₹2,83,900 ஆகும். இது வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் (Reinforced Cement Concrete (RCC)) கூரைக்கான மாநில ஆதரவு செலவு மற்றும் கழிப்பறை கட்டுமானத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) மற்றும் கிராமப்புற தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission (Rural)) உடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த தொகையில், ஒன்றிய அரசின் பங்கு ₹1,11,100 மற்றும் மாநில அரசின் பங்கு ₹1,72,800. வகையில், செலவு பகிர்வின் விகிதம் 39:61 ஆகும்.


பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY))) பற்றி, இது வெவ்வேறு நிதி வழங்கல் முறைகளைப் பின்பற்றுகிறது, செலவில் 60% ஒன்றிய அரசால் ஏற்கப்பட வேண்டும் மற்றும் மீதமுள்ளது மாநிலத்தால் ஏற்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில், ஒன்றிய அரசின் பங்கு 27% மற்றும் மாநிலத்தின் பங்கு 73% ஆகும். ஜல் ஜீவன் திட்ட (Jal Jeevan Mission (JJM)) விவகாரத்தில், செலவு பகிர்வு இருவருக்கும் இடையே சமமாக செய்யப்பட வேண்டும். இருப்பினும், செயல்படுத்தலைப் பொறுத்தவரையில், மாநிலத்தின் பங்களிப்பு 55% ஆக உள்ளது.



Original article:

Share:

வேளாண் கல்வியானது (Agri education) ஏற்றுமதி சிக்கல்களில் கவனம் செலுத்த வேண்டும். -ஸ்மிதா சிரோஹி

 உற்பத்தியை அதிகரிப்பது இதுவரை வேளாண் கல்வியின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. ஏற்றுமதிக்கான நிலையான நடைமுறைகளும் கவனம் செலுத்த வேண்டியவை ஆகும்.


2047 வரை உள்நாட்டு உணவுத் தேவை (domestic food demand) ஆண்டுதோறும் சுமார் 2.5 சதவீதமாக வளரும் என்று நிதி ஆயோக் ஆய்வு கணித்துள்ளது. அதே நேரத்தில், விவசாய உற்பத்தி 3-4 சதவீதமாக வளரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் விவசாய விளைபொருட்கள் உபரியாக இருக்கும். இந்த கூடுதல் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இருப்பினும், ஏற்றுமதிகள் தற்போது விவசாய உற்பத்தியின் மொத்த மதிப்பில் 6% முதல் 7% வரை மட்டுமே உள்ளன.


தேசிய வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் கல்வி அமைப்பானது (National Agricultural Research, Extension and Education System (NAREES)) இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research (ICAR)) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களால் (State Agricultural Universities (SAU)) வழிநடத்தப்படுகிறது. இந்த அமைப்பு இந்தியா உணவு தானியங்கள் மற்றும் பாலில் தன்னிறைவு பெற உதவியுள்ளது.


இருப்பினும்கூட, வர்த்தகம் இன்னும் நமது விவசாய ஆராய்ச்சி அமைப்பில் ஒரு விடுபட்ட பகுதியாகும். ICAR மற்றும் SAU-க்களின் திட்டங்களைப் பார்க்கும்போது, ​​அவை முக்கியமாக உற்பத்தித்திறன் பண்புகளில் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம். இந்த பண்புகளில் மகசூல் (yield), தடை (resistance) மற்றும் வறட்சி சகிப்புத்தன்மை (drought tolerance) ஆகியவை அடங்கும். இருப்பினும், சந்தை அறிகுறிகள், ஏற்றுமதி தரநிலைகள் மற்றும் நுகர்வோர்க்கான விருப்பத்தேர்வுகள் மிகக் குறைந்த கவனத்தைப் பெறுகின்றன.



இணக்க இடைவெளி


தங்களின் பெரிய ஆராய்ச்சி வலையமைப்பு இருந்தபோதிலும், அதிக மதிப்புள்ள சந்தைகளில் இந்தியா இணக்கத்துடன் போராடுகிறது.


UNIDO தரவு (HS அத்தியாயங்கள் 1–23) 2020 மற்றும் 2022-க்கு இடையில் ஆஸ்திரேலியா, EU மற்றும் அமெரிக்கா 3,553 இந்திய சரக்குகளை நிராகரித்ததாகக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை வியட்நாம் (789) மற்றும் தாய்லாந்து (702) எதிர்கொள்ளும் நிராகரிப்புகளைவிட மிக அதிகம். இந்த நிராகரிப்புகளுக்கான முக்கிய காரணங்கள் பூச்சிக்கொல்லி எச்சங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூஞ்சை நச்சுகள் மற்றும் பிற சுகாதார மற்றும் தாவர சுகாதார (Sanitary and Phytosanitary)SPS)) மீறல்கள் ஆகும்.


நல்ல விவசாய நடைமுறைகள் (Good Agricultural Practices (GAP)) உள்நாட்டு தேவைகள் மற்றும் சர்வதேச தரநிலைகள் இரண்டையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பொருந்தவில்லை என்றால், அது அதிக செலவுகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, குளோர்பைரிஃபோஸ் (chlorpyrifos) ஒரு பூச்சிக்கொல்லி. இது EU, UK, கனடா மற்றும் அர்ஜென்டினாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் சில பயிர்களில் இதைப் பயன்படுத்த இன்னும் அனுமதிக்கப்படுகிறது.


2025-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் பழங்கள் குறித்து 18 எச்சரிக்கைகளை வெளியிட்டது. இதில் சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் மற்றும் குளோர்பைரிஃபோஸ் எச்சங்களைக் (chlorpyrifos residues) கொண்ட மாம்பழங்கள் அடங்கும். அரிசியில் குளோர்பைரிஃபோஸ் பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அரிசியில்கூட வரம்புகளை மீறுவதற்கான எச்சரிக்கைகள் இருந்தன.


இது ஒரு முறையான தோல்வியைக் காட்டுகிறது. குளோர்பைரிஃபோஸ் இன்னும் நல்ல விவசாய நடைமுறைகளின் (Good Agricultural Practices (GAP)) ஒரு பகுதியாக இருந்தால், இணக்கமின்மை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது அனுமதிக்கப்படாவிட்டால், அதன் தொடர்ச்சியான பயன்பாடு பலவீனமான ஆதரவையும் அமலாக்கத்தையும் காட்டுகிறது. இந்தியாவிற்குள் "நல்லது" (good) என்று கருதப்படுவது இனி உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். தங்களின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகள் மாற மெதுவாக உள்ளன. இது விவசாயிகளை புதிய மற்றும் கடுமையான விதிகளுக்குத் தயாராக இல்லை.


உலகளாவிய சந்தைகள் உணவுப் பாதுகாப்பைவிட அதிகமாக விரும்புகின்றன. அவை நுகர்வோர் தேவைகள், பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் பற்றியும் அக்கறை கொண்டுள்ளன.


எடுத்துக்காட்டாக, EU மற்றும் US-ல், மக்கள் நார்ச்சத்து குறைவாகவும் 16 சதவீதத்திற்கும் குறைவான சர்க்கரை அளவீடு (Brix levels) கொண்ட மாம்பழங்களை விரும்புகிறார்கள்.


பெரும்பாலான இந்திய மாம்பழ வகைகளில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சர்க்கரை அளவீடு (Brix levels) (20 சதவீதத்திற்கு மேல்) உள்ளன. இவை இந்திய சந்தைக்கு நல்லது, ஆனால் ஏற்றுமதிக்கு ஏற்றவை அல்ல. மாம்பழ வகைகள் குறித்த ஆராய்ச்சி வெளிநாட்டு சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவில் 730-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்கள் (Krishi Vigyan Kendras (KVK)) உள்ளன. இவை முக்கியமாக பூச்சிகள், மழைப்பொழிவு மற்றும் விதைப்பு போன்ற உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன. அவை அதிகபட்ச எச்ச வரம்புகள் (Maximum Residue Limits(MRL)), சான்றிதழ்கள் அல்லது கண்டறியக்கூடிய தன்மை போன்ற ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைகளில் கவனம் செலுத்துவதில்லை. தனியார் ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சில இடைவெளிகளை நிரப்ப உதவுகின்றன. ஏற்றுமதிக்கான விதிகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்து அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.


இருப்பினும், இந்த முயற்சிகள் சீரானவை அல்ல, மேலும் திட்டவட்டமானவை. மேம்படுத்த, ஒரு பொது-தனியார் கூட்டாண்மை மாதிரி தேவை. இந்த மாதிரி இந்த முயற்சிகளின் அளவையும் வரம்பையும் அதிகரிக்க உதவும்.


இந்த இடைவெளிக்கான முக்கிய காரணம் "பழமையான கல்வி" (outdated education) ஆகும். வர்த்தகம், மதிப்புச் சங்கிலிகள், வரி அல்லாத தடைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் போன்ற பாடங்கள் விவசாயப் படிப்புகளில் அரிதாகவே சேர்க்கப்படுகின்றன. சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம் குறித்த ஒரே ஒரு இளங்கலைப் படிப்பு மட்டுமே உள்ளது. இந்தப் பாடநெறி மாறிவரும் உலகளாவிய விதிகளை உள்ளடக்குவதில்லை. வேளாண் வணிகத்தில் சில முதுகலை திட்டங்கள் சில வெளிப்பாட்டை வழங்குகின்றன. ஆனால், பெரும்பாலான பிற வேளாண் துறைகள் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.


விளைவு : ஆசிரியர்கள் பயிற்சி பெறாததால், மாணவர்களுக்கு வர்த்தகம் தொடர்பாக கற்பிக்கப்படுவதில்லை. மேலும், வர்த்தக சிக்கல்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு காரணமாக ஆராய்ச்சியாளர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறார்கள்.


இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவில் உள்ள நிலம்-மானியப் பல்கலைக்கழகங்களும், நெதர்லாந்தில் உள்ள வாகனிங்கென் (Wageningen) பல்கலைக்கழகமும் வர்த்தகம் மற்றும் நிலைத்தன்மையை அவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மையமாக்குகின்றன.


இந்தியாவின் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (SAUs) அமெரிக்க அமைப்பை மாதிரியாகக் கொண்டிருந்தன. இருப்பினும், அவை இந்த முன்னேற்றங்களைத் தொடரவில்லை.


இப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உதாரணமாக, ஏற்றுமதி கொள்கையை ஆதரிக்க இந்திய தூதரகங்களில் விவசாய விஞ்ஞானிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். இது கடந்த கால ICAR தலைமையின் கீழ் தொடங்கியது. தற்போதைய தலைமையும் உலகளாவிய வர்த்தக தேவைகளுடன் ஆராய்ச்சியை சீரமைக்க செயல்பட்டு வருகிறது. ஆனால், உண்மையான முன்னேற்றத்திற்கு NAREES -ல் ஆழமான சீர்திருத்தங்கள் தேவை.




மூன்று அவசர படிகள்


ஆராய்ச்சியை மறுபரிசீலனை செய்தல் : ஆராய்ச்சிக்கான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தல். ஏற்றுமதி சார்ந்த திட்டங்களைத் தொடங்குதல். ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுதல். இணக்கம், வேறுபாடு மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


நீட்டிப்பை மேம்படுத்துதல் : ஏற்றுமதி ஆலோசனைகளை வழங்க KVK-களை அனுமதிக்கவும், இந்த ஆலோசனைகள் MRLகள், SPS விதிமுறைகள், சான்றிதழ்கள் மற்றும் உலகளாவிய போக்குகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


கல்வியை மறுபரிசீலனை செய்தல் : கல்வி பாடத்திட்டத்தில் உலகளாவிய வர்த்தகம், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதாரம் (Sanitary and Phytosanitary(SPS)) மற்றும் வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப தடைகள் (Technical Barriers to Trade(TBT)) விதிமுறைகள் மற்றும் சந்தை நுண்ணறிவைச் சேர்க்கவும். இந்த பகுதிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும். மேலும், உலகளாவிய இணைப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கவும் முக்கிய பணியாக கொள்ள வேண்டும்.


ஏற்றுமதி சார்ந்த விவசாய வளர்ச்சி விவசாய வருமானத்தை அதிகரிப்பதை விட அதிகம். உணவு உற்பத்தியில் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்கான ஒரு இராஜதந்திர வழி இது. இந்தியாவின் வளர்ச்சியை விவசாயம் இயக்க வேண்டுமென்றால், விவசாயத்தை ஆதரிக்கும் நிறுவனங்கள் முதலில் நவீனமயமாக்கப்பட வேண்டும். வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) அடைய, தேசிய வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்க அமைப்பு (National Agricultural Research, Education and Extension System(NAREES)) மீண்டும் தொடங்குவது அவசியம்.


எழுத்தாளர் ICAR வேளாண் கல்விப் பிரிவில் விவசாய பொருளாதார நிபுணர்.



Original article:

Share:

எப்படி பெரிய மொழி மாதிரிகள் (LLM) இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பாய்ச்சலுக்கு வழிவகுக்கும்? -சார்லஸ் அசிசி

 தொழில்நுட்பத்தில் அடுத்த பெரிய அதிகாரப் போராட்டம் வேகம் அல்லது அளவைப் பற்றியதாக இருக்காது. இது AI பயன்படுத்தும் மொழியைப் பற்றியதாக இருக்கும். தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகவும் மனிதாபிமானமான ஒன்றிலிருந்து தொடங்குகிறது. அவை, புரிந்து கொள்ளப்பட்ட உணர்வு (being understood) ஆகும்.


உங்கள் மொழியைப் பேசும் ஒரு மருத்துவரை நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் சூழ்நிலையை அறிந்த ஒரு வங்கியாளரை நீங்கள் நம்புகிறீர்கள். எனவே, நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், அல்லது உங்கள் வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன என்று தெரியாத ஒரு வழிமுறையை ஏன் நம்ப வேண்டும்?


உலகளாவிய தெற்கு முழுவதும் உள்ள அரசாங்கங்கள், உருவாக்குபவர்கள் (developers) மற்றும் சமூகங்கள் (communities) இந்தக் கேள்வியைக் கேட்கின்றன. பெரிய மொழி மாதிரிகள் (LLMகள்) எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரிகள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசத் தெரியாத அல்லது சிலிக்கான் பள்ளத்தாக்கில் வசிக்காத மக்களுக்குப் பொருத்தமற்றவை என்பதையும் அவர்கள் காண்கிறார்கள்.


இந்தியாவில், இதுவரை முக்கிய பதில் BharatGPT ஆகும். இது CoRover.ai போன்ற புத்தொழில் நிறுவனங்கள், பாஷினி (Bhashini) போன்ற அரசாங்க ஆதரவு தளங்கள் மற்றும் IITகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும். உலகளாவிய தரத்தில் ChatGPT உடன் போட்டியிடுவது இதன் குறிக்கோள் அல்ல. மாறாக, இது நாட்டிற்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குடிமக்கள் இந்தியில் அரசாங்க படிவங்களை நிரப்ப உதவுகிறது. இது தமிழில் இரயில்வே தொடர்பான கேள்விகளை தானியங்குபடுத்துகிறது. இது பிற பிராந்திய மொழிகளிலும் குரல் உதவியாளர்களை செயல்படுத்துகிறது. CoRover ஏற்கனவே இரயில்வே, காப்பீடு மற்றும் வங்கி போன்ற துறைகளில் பன்மொழி தானியங்கி பதிலுரைப்பான்களை (multilingual chatbots) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய மதிப்பு தானியங்கியில் (automation) மட்டுமல்ல. இது முக்கியமான புரிதலில் உள்ளது.


இது இந்தியாவில் மட்டும் நடக்கும் ஒன்று அல்ல. தென்னாப்பிரிக்காவில், லெலாபா AI InkubaLM-ஐ உருவாக்குகிறது. இது ஆப்பிரிக்க மொழிகளில் பயிற்சி பெற்ற ஒரு சிறிய மொழி மாதிரி (small language model) ஆகும். லத்தீன் அமெரிக்காவில், ஒரு குழு LatAm GPT ஐ உருவாக்குகிறது. இது ஸ்பானிஷ், போர்த்துகீசியம் மற்றும் பூர்வீக பேச்சுவழக்குகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஒரு வகையான கிளர்ச்சியாகும். அவை கண்ணுக்குத் தெரியாததை எதிர்த்துப் போராடுகின்றன. அவை, ஒரு அளவு பொருந்தக்கூடிய தொழில்நுட்பத்திற்கு எதிராகவும், தொழில்நுட்பம் ஒரு உச்சரிப்பை மட்டுமே பேசும் உலகக் கண்ணோட்டத்திற்கு எதிராகவும் உள்ளனர்.


இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? பெங்களூரைச் சேர்ந்த தயாரிப்பு பயிற்சியாளரும், புத்தொழில் நிறுவனங்களுக்கான கூகிளின் (Google for Startups) வழிகாட்டியுமான ஸ்ரீநாத் வி விளக்குகிறார். தற்போதைய, பெரிய மொழி மாதிரிகள் (large language models) பல பகுதிகளின் மொழி, கலாச்சாரம் அல்லது குடிமை யதார்த்தங்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று அவர் கூறுகிறார். கல்வி, சட்ட உதவி மற்றும் குடிமக்கள் ஆதரவு போன்ற பொது சேவைகளை வழங்க அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, ​​உள்ளூர் மொழிகள், தரவு மற்றும் சமூக சூழல்களைப் புரிந்துகொள்ளும் மாதிரிகளின் தேவையை அவர்கள் காண்கிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பிராந்திய பெரிய மொழி மாதிரிகள் (large language models (LLM)) உருவாக்கப்படுகின்றன.


சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான ட்விம்பிட்டின் நிறுவனர் மனோஜ் மேனன், ஸ்ரீநாத்துடன் அவர் உடன்படுகிறார். மேலும், அவர் குறிப்பிட்டதாவது, "AI உடன், கருத்தில் கொள்ள வேண்டிய பல முக்கியமான விவரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நமது உள்ளூர் மற்றும் தேசிய தேவைகளுக்கு ஏற்ப AI ஐ எவ்வாறு பயிற்றுவிப்பது என்பதுதான்."


இந்தப் பிரச்சினையின் மையத்தில் அரசியல் சார்ந்த ஒன்று உள்ளது. இது டிஜிட்டல் இறையாண்மை (digital sovereignty) என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீநாத் இதை மேலும் குறிப்பிடுவதாவது, "தரவு இறையாண்மை இனி ஒரு யோசனை மட்டுமல்ல. அது இப்போது ஒரு உண்மையான கவலை. நாடுகள் தங்களால் கட்டுப்படுத்த முடியாத தரவுகளில் பயிற்சி பெற்ற AI மாதிரிகளை நம்பியிருக்க விரும்பவில்லை. உள்ளூர் மாதிரிகளை உருவாக்குவது அவர்களின் தரவுகளின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவுகிறது."


இதெல்லாம் புவிசார் அரசியல் சக்திக்குக் கீழே வருகிறது. தங்கள் சொந்த AI மாதிரிகளை உருவாக்கும் நாடுகள் தங்கள் கலாச்சாரத்தை மட்டும் பாதுகாக்காது. அவை AI யுகத்தில் வர்த்தகம், இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு விதிகளையும் பாதிக்கும் என்று மேனன் கூறுகிறார், "இது ஒரு நியாயமான வாதம்" ஆகும். ஒரு தலைப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது முற்றிலும் சூழலைப் பொறுத்தது என்று அவர் மேலும் கூறுகிறார். எனவே, புவிசார் அரசியல் ஒரு பெரிய நிலைமையை வகிக்கிறது. உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் சூழலைப் பயன்படுத்தி AI-ஐப் பயிற்றுவிக்கும் திறனும் முக்கியமானது.


இந்த வழியில் பார்க்கும்போது, ​​சிக்கனமான AI-ஐ நோக்கி நகர்வது பலர் நினைப்பதை விட முக்கியமானது. இந்த AI மாதிரிகளுக்கு பெரிய GPUகள் அல்லது மிக வேகமான இணையம் தேவையில்லை. அவை சிறியவை, விரைவானவை, மேலும் சூழலை நன்கு புரிந்துகொள்கின்றன. இதை விளக்க, ChatGPT ஆறு வழி நெடுஞ்சாலையில் ஒரு டெஸ்லாவைப் போல இருந்தால், BharatGPT என்பது கரடுமுரடான, குறுகிய சாலைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் போன்றது. அது அழகாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது இன்னும் அதன் இலக்கை அடைய முடியும்.


பெரும்பாலான நாடுகள் தங்கள் சொந்த எல்லைகளுக்குள் AI எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதில் ஒரு பங்கை வகிக்க விரும்புவதாக ஸ்ரீநாத் கூறுகிறார். சுகாதாரம், சட்ட ஆலோசனை மற்றும் நலன்சார்ந்தவை போன்ற பொது சேவைகளுக்கான அணுகலை AI கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளதால் இது முக்கியமானது. இந்த சூழ்நிலையில், ஒரு AI மாதிரி ஒரு குடிமகனின் மொழியைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அது பயனற்றது மட்டுமல்ல, ஆபத்தானது கூட. இது தவறான தகவல்களைத் தரலாம், மக்களை விலக்கலாம் மற்றும் விழிப்புணர்வு எச்சரிக்கை இல்லாமல் தோல்வியடையலாம்.


ஆம், சிலிக்கான் பள்ளத்தாக்கு இன்னும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறது. ஆனால், சத்தத்திலிருந்து விலகி, ஆழமான ஒன்று நடக்கிறது. நுண்ணறிவை யார் வரையறுக்க வேண்டும் என்பதில் ஒரு மாற்றம் உள்ளது. AI-ன் மொழி யாரிடம் பேசுகிறது, யாருடைய பிம்பத்தில் AI கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இது மாற்றுகிறது. பிராந்திய AI "சிலிக்கான் பள்ளத்தாக்கில் கட்டமைக்கப்பட்டவற்றுடன் நேரடியாகப் போட்டியிடாது" என்று மேனன் கூறுகிறார். அதற்கு பதிலாக, அவர்கள் அதை பூர்த்தி செய்வார்கள். இது உள்ளூர் பகுதிகளில் AI மிகவும் பொருத்தமானதாக மாற உதவும்.


இந்த பிராந்திய AI முயற்சிகள் பாராட்டுதலைத் தேடுவதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டையும், செல்வாக்கையும் விரும்புகிறார்கள். அதேபோல், விரைவாக பெரிதாக வளர்வதில் கவனம் செலுத்துவதில்லை.



Original article:
Share:

இந்தியாவில் பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index (CPI)) அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய பணவீக்க விகிதம் 2.82% ஆகும். இது நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட சற்று குறைவு. இது சுமார் 3% ஆகும். ஏப்ரல் 2025-ல், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் 3.16% ஆகவும், மே 2024-ஆம் ஆண்டு, இது 4.80% ஆகவும் இருந்தது. கடைசியாக பணவீக்கம் பிப்ரவரி 2019ஆம் ஆண்டு இதை விடக் குறைவாக இருந்தது, 2.57%-ஆக இருந்தது.


  • அரசாங்க தரவுகளின்படி, உணவுப் பணவீக்கம் (நுகர்வோர் உணவு விலைக் குறியீடு அல்லது CFPI மூலம் அளவிடப்படுகிறது) மே 2025-ல் 43 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.99% ஆகக் குறைந்தது. ஏப்ரல் 2025-ல் இது 1.78% ஆக இருந்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது பழங்களின் விலைகள் 2% குறைந்ததாலும், பருப்பு வகைகளின் விலைகள் 1.7% குறைந்ததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. தானிய விலைகளும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.6% குறைந்ததாலும், உணவுப் பணவீக்கத்தைக் குறைக்க உதவியது.


  • ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே 2025-ல் காய்கறி விலைகள் சற்று அதிகரித்தன. இருப்பினும், கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​காய்கறி விலைகள் 13.7% குறைந்துள்ளன. இது டிசம்பர் 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய சரிவு என்று இந்தியா மதிப்பீடுகள் & ஆராய்ச்சியின் பொருளாதார நிபுணர் பராஸ் ஜஸ்ராய் கூறுகிறார்.


  • புரதம் நிறைந்த உணவுகள் மே 2025-ல் விலை உயர்ந்தன. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இறைச்சி மற்றும் மீன் விலைகள் 1.5%, முட்டை விலை 2.5% மற்றும் பால் விலைகள் 0.7% அதிகரித்துள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?:


  • உணவு மற்றும் எரிபொருளின் விலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், முக்கிய பணவீக்கம் இதில் சேர்க்கப்படவில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தரவுகளின் அடிப்படையில், சுமார் 4.2 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முக்கிய பணவீக்கத்தில் மெதுவான மற்றும் நிலையான உயர்வு பொருளாதாரத்தில் நிலையான தேவை இருப்பதைக் காட்டுகிறது என்று இந்தியா ரேட்டிங்ஸின் ஜஸ்ராய் கூறினார்.


  • பல்வேறு பிராந்தியங்களைப் பார்க்கும்போது, ​​நகரங்களில் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.36 சதவீதத்திலிருந்து மே 2025-ல் 3.07 சதவீதமாகக் குறைந்தது. கிராமங்களில், பணவீக்கம் 2.92 சதவீதத்திலிருந்து 2.59 சதவீதமாகக் குறைந்தது. மே 2025-ல், பணவீக்கம் கேரளாவில் 6.46 சதவீதமாகவும், தெலுங்கானாவில் 0.55 சதவீதமாகவும் மிகக் குறைவாக இருந்தது.


Original article:
Share:

ஈரான்-இஸ்ரேல் மோதல் -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • "ரைசிங் லயன்" என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, முக்கியமான அணுசக்தி மற்றும் இராணுவத் தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், புரட்சிகர காவல்படை தளபதி ஹொசைன் சலாமி மற்றும் இரண்டு பிரபலமான அணு விஞ்ஞானிகள் உட்பட ஈரானிய உயர்மட்டத் தலைவர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. ஈரானின் அரசு ஊடகங்கள் சலாமியின் மரணத்தை உறுதிப்படுத்தின.


  • அமெரிக்கா இதில் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தாலும், ஈரானின் யுரேனியம் திட்டம் தொடர்பாக அதிகரித்துவரும் பதட்டங்களின் போது, ​​டொனால்ட் டிரம்ப் அந்தப் பகுதி அமெரிக்கப் படைகளுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் நடந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிய ஒரு பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



  • 1979ஆம் ஆண்டு  புரட்சி


மேற்கத்திய நாடுகளை ஆதரித்த ஈரானின் மன்னர் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுகிறார். புதிய இஸ்லாமிய அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்து, இஸ்ரேலுக்கு எதிராக இருப்பதை அதன் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக ஆக்குகிறது.


  •  1982 – ஈரானின் உதவியுடன் ஹெஸ்பொல்லா உருவாக்கப்பட்டது


லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது, ​​ஷியா போராளிகளின் குழுவான ஹெஸ்பொல்லாவை உருவாக்க ஈரானின் இராணுவம் உதவுகிறது. காலப்போக்கில், ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் வலிமையான எதிரிகளில் ஒன்றாக மாறுகிறது.


  • 1983 ஆம் ஆண்டு– தற்கொலைத் தாக்குதல்கள் லெபனானில் நிலைமையை மாற்றுகின்றன


ஈரானால் ஆதரிக்கப்படும் போராளிகள் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய துருப்புக்களை விரட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். நவம்பரில், லெபனானில் உள்ள இஸ்ரேலின் இராணுவ அலுவலகத்தைத் தாக்கும் ஒரு கார் குண்டு செலுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, இஸ்ரேல் பெரும்பாலான பகுதிகளை விட்டு வெளியேறுகிறது.





  • 1992–1994ஆம் ஆண்டு – அர்ஜென்டினாவில் கொடிய தாக்குதல்கள்


ப்யூனஸ் அயர்ஸில் நடந்த குண்டுவெடிப்புகளில் இஸ்ரேலிய தூதரகம் மற்றும் ஒரு யூத மையம் தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இருவரும் இதை மறுத்தனர்.


  • 2002ஆம் ஆண்டு – ரகசிய அணுசக்தி வேலை கண்டுபிடிக்கப்பட்டது


ஈரானின் மறைக்கப்பட்ட யுரேனியம் செறிவூட்டல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது உலகளாவிய கவலையை எழுப்பியது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கக்கூடும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.


  • 2006ஆம் ஆண்டு – ஹெஸ்பொல்லாவுடனான போர்


இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் ஒரு மாத காலப் போரை நடத்தினர். இஸ்ரேல் கடும் படைபலத்தைப் பயன்படுத்தியது. ஆனால், ஹெஸ்பொல்லாவை தோற்கடிக்க முடியவில்லை. தெளிவான வெற்றியாளர் இல்லாமல் போர் முடிந்தது.


  • 2009ஆம் ஆண்டு – கமேனி இஸ்ரேலை புற்றுநோயுடன் ஒப்பிடுகிறார்


ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை "ஆபத்தான மற்றும் கொடிய புற்றுநோய்" என்று அழைத்தார். இது இஸ்ரேலுக்கு ஈரானின் வலுவான எதிர்ப்பைக் காட்டுகிறது.


  • 2010 ஆம் ஆண்டு- இணைய தாக்குதல் தொடங்கியது


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஸ்டக்ஸ்நெட் வைரஸ், ஈரானின் நடான்ஸ் அணுசக்தித் தளத்தை சேதப்படுத்தியது. இது ஒரு பெரிய தொழில்துறை அமைப்பின் மீது நடத்தப்பட்ட முதல் அறியப்பட்ட சைபர் தாக்குதலாகும்.



  • 2012ஆம் ஆண்டு - ஈரானிய விஞ்ஞானி கொல்லப்பட்டார்


ஈரானிய அணுசக்தி விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி-ரோஷன், அவரது காரில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். ஒரு ஈரானிய அதிகாரி இஸ்ரேலிய முகவர்களைக் குற்றம் சாட்டினார்.


  • 2018ஆம் ஆண்டு - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியது; இஸ்ரேல் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறது


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2015ஆம் ஆண்டு ஏற்படுத்திய ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகினார். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அதை ஒரு "வரலாற்று நடவடிக்கை" (“a historic move”) என்று அழைத்தார். அதே மாதத்தில், கோலான் ஹைட்ஸ் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்குப் பிறகு சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது.


  • 2020ஆம் ஆண்டு - சுலைமானி கொல்லப்பட்டார் மேலும் பதட்டங்கள் அதிகரித்தன


பாக்தாத்தில் ஈரானின் குட்ஸ் படையின் தலைவர் ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்க ட்ரோன் கொன்றது. இஸ்ரேல் தாக்குதலை ஆதரித்தது. ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களுடன் ஈரான் பதிலளித்தது, சுமார் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.


  • 2021ஆம் ஆண்டு– ஈரான் மற்றொரு கொலைக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டியது


ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டார். இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் கூறியது. இஸ்ரேல் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.



  • 2022ஆம் ஆண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணு ஆயுதங்களை நிறுத்த ஒப்புக்கொண்டன


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்து இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட் உடன் "ஜெருசலேம் பிரகடனத்தில்" (“Jerusalem Declaration”) கையெழுத்திட்டார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இராணுவ நடவடிக்கை ஒரு கடைசி வழி என்றும் பைடன் கூறினார்.


  • ஏப்ரல் 2024 – தூதரகத் தாக்குதல் ஈரானின் முதல் நேரடித் தாக்குதலுக்கு வழிவகுக்கிறது


இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வான்வழித் தாக்குதல், டமாஸ்கஸில் உள்ள ஈரானின் துணைத் தூதரகத்தைத் தாக்கியது. ஏழு IRGC அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பி ஈரான் பதிலளித்தது. முதல் முறையாக ஈரான் இஸ்ரேலிய நிலத்தைத் தாக்கியது.


  • அக்டோபர் 2024 – ஈரான் 180 ஏவுகணைகளை ஏவியது


ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் மரணத்திற்கு பழிவாங்குவதாகக் கூறி ஈரான் ஏராளமான ஏவுகணைகளை வீசியது. ஈரானிய இராணுவ இலக்குகளைத் தாக்குவதன் மூலம் இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சேதம் சிறியது என்று ஈரான் கூறியது.


  • ஜூன் 2025 - ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் தாக்கியது


ஈரானின் அணுசக்தி தளங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் உயர்மட்ட விஞ்ஞானிகள் மீது பெரிய தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. ஈரான் திருப்பித் தாக்கும் என்று எதிர்பார்த்து, உள்நாட்டில் அவசரநிலையை அறிவித்தது. கமாண்டர் ஹொசைன் சலாமி மற்றும் இரண்டு அணு விஞ்ஞானிகள், ஃபெரிடவுன் அப்பாஸி-தவானி மற்றும் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.


Original article:

Share:

பேச்சு மற்றும் கருத்துரிமை என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • பேச்சு சுதந்திர அமைப்புகள் முக்கியமாக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. அவை அரசாங்கத்தின் அதிகாரத்தை முழுமையாக நம்பாத மக்களைச் சார்ந்துள்ளது. கடந்த காலத்தில், தகவல்களைத் தடுப்பதன் மூலம் அரசாங்கம் விரும்புவதை மக்களை நம்ப வைக்க முடியும் என்று தணிக்கையாளர்கள் ஒருபோதும் உண்மையிலேயே நம்பியது இல்லை.


  • தணிக்கை என்பது மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகும். பேச்சு சுதந்திரத்திற்கான வலுவான ஆதரவு உண்மை, ஜனநாயகம் அல்லது முன்னேற்றம் பற்றியது மட்டுமல்ல. இது மிகவும் அடிப்படையான ஒன்றை அடிப்படையாகக் கொண்டது: நாம் என்ன நினைக்கிறோம் அல்லது சொல்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. நான் என்ன நினைக்கலாம் அல்லது சொல்லலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை யாருக்கு யார் கொடுத்தது?


  • நம்பிக்கை இருக்கும்போது மட்டுமே பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரு அமைப்பு செயல்படும். மற்றவர்கள் எளிதில் தூண்டப்படவோ, தவறாக வழிநடத்தப்படவோ அல்லது செல்வாக்கு செலுத்தப்படவோ மாட்டார்கள் என்று மக்கள் நம்ப வேண்டும்.


  • சிலர் இது மிகவும் இலட்சியவாதம் என்று கூறலாம். சில வகையான பேச்சு மற்றும் வெளிப்பாடுகள் தீங்கு விளைவிக்கும். சில வகைகள் மற்றவர்களை காயப்படுத்துவதற்காகவே உள்ளன. வன்முறையை ஊக்குவிப்பதற்கும் வெறுப்பைப் பரப்புவதற்கும் எதிரான சட்டங்களால் இந்த தீங்கு விளைவிக்கும் செயல்களில் பலமுறை ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன.


  • நாம் இப்போது தொடர்பு கொள்ளும் விதம், உண்மை மற்றும் புரிதலைவிட சந்தேகமும் வெறுப்பும் வேகமாகப் பரவ அனுமதிக்கிறது. இது பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மையான பிரச்சனை என்னவென்றால், மக்கள் ஒருவரையொருவர் நம்புவதில்லை. புதிய சட்டங்களை இயற்றுவதன் மூலம் இதை சரிசெய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் ஏதாவது சட்டத்தால் தடை செய்யப்படும்போது, ​​அரசாங்கம் உங்களையும் என்னையும் போன்றவர்களை நம்பவில்லை என்பதையும் இது காட்டுகிறது. சோகமான விஷயம் என்னவென்றால், மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பது, நம்மை நாமே சிந்திக்க முடியாத குழந்தைகளைப் போல நடத்துவதை விட கடினமானதாகக் கருதப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


  • இந்திய அரசியலமைப்பை எழுதும் போது, ​​நவீன இந்தியாவின் தலைவர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசியலமைப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசியலமைப்பு சபையின் பல உறுப்பினர்கள், பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் கடுமையான தேசத்துரோக எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி சுதந்திர இயக்கத்தைத் தடுக்க முயன்றதை நினைவு கூர்ந்தனர். இதன் காரணமாக, அரசியலமைப்பு சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


  • எனவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (1)(a) அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரமாகப் பேசவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உரிமையை வழங்குகிறது. இந்த உரிமையைச் சேர்ப்பதில் பெரும்பாலான மக்கள் உடன்பட்டாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு, உண்மையில் மாற்றப்பட்ட அரசியலமைப்பின் முதல் பகுதியாகும்.

  • இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தம் இன்னும் மிகவும் வலுவாக விவாதிக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்றாகும். இது 16 நாட்கள் விவாதிக்கப்பட்டது. பிரதமர் நேரு மே 16, 1951 அன்று இந்தத் திருத்தத்தை அறிமுகப்படுத்தினார், "நாங்கள் உருவாக்கிய இந்த மகத்தான அரசியலமைப்பு பின்னர் வழக்கறிஞர்களால் கையகப்படுத்தப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை எப்படியோ கண்டறிந்துள்ளோம்" என்று சத்தமாகக் கூறினார்.


Original article:
Share: