ஹரிமௌ சக்தி (Harimau Shakti) மற்றும் கடல்சார் நிலைநிறுத்தங்கள் போன்ற கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடர்வதன் மூலம், இந்தியாவும் மலேசியாவும் மலாக்கா ஜலசந்தி (Malacca Strait) மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள கப்பல் வழித்தடங்களின் பாதுகாவலர்களில் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிக்கின்றன.
பிப்ரவரி 7-8 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசியா வருகை ஒரு வழக்கமான இராஜதந்திர பயணப் பயிற்சியைவிட அதிகமாக இருந்தது. இது இருதரப்பு நாடுகளின் உறவின் தெளிவான ’மறுதொடக்கம்’ என்பதைக் குறித்தது. புத்ராஜெயாவின் வழித்தடங்களில், மோடியும் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் பகிரப்பட்ட வரலாற்றின் மகிழ்ச்சியைத் தாண்டி, மன்னிப்பு கேட்காமல் மின்னணு, தொழில்துறை மற்றும் இராஜதந்திரரீதியாக சீரமைக்கப்பட்ட எதிர்கால உறவை வெளிப்படுத்தின. இந்த வருகையின் நேர்மறையான விளைவுகளை மூன்று முக்கிய காரணிகளாக தொகுக்கலாம். அவை, பொருளாதார எதிர்கால-சரிபார்ப்பு (Economic future-proofing), நிதி இறையாண்மை (financial sovereignty) மற்றும் மூலோபாய பாதுகாப்பு (strategic security) ஆகும்.
மலேசியா-இந்தியா மின்னணு கவுன்சிலின் (Malaysia-India Digital Council (MIDC)) முறைப்படுத்தல் மற்றும் குறைக்கடத்திகள் குறித்த குறிப்புகள் பரிமாற்றம் ஆகியவை மிக முக்கியமான விளைவு ஆகும். பல ஆண்டுகளாக, உலகம் "சீனா பிளஸ் ஒன்" (China Plus One) உத்திகளைப் பற்றி பேசியிருந்தாலும், இந்த வருகை அதை நடைமுறைக்குக் கொண்டுவருகிறது. மலேசியா ஒரு உலகளாவிய பேக்கேஜிங் மற்றும் சோதனை சக்தியாக உள்ளது. அதேநேரத்தில், இந்தியா அதன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை விரைவாக விரிவுபடுத்துகிறது.
இந்த விளைவுகள் "திறமைக்கு முன்னுரிமை" அணுகுமுறை (talent-first approach) மூலம் உணரப்படும். மலேசியாவின் மேம்பட்ட குறைக்கடத்தி அகாடமியை ஐஐடி-மெட்ராஸ் குளோபல் (IIT-Madras Global) உடன் இணைப்பதன் மூலம், இரு நாடுகளும் ஒரு பகிரப்பட்ட பணியாளர்களை உருவாக்குகின்றன. இது குறைகடத்திகளை உருவாக்குவது மட்டுமல்ல, சென்னை மற்றும் பினாங்கில் உள்ள அடுத்த தலைமுறை பொறியாளர்கள் ஒரே தொழில்நுட்பக் கட்டமைப்பில் பணியாற்றுவதை உறுதி செய்வது பற்றியது.
இது சைபர்ஜெயாவில் ஒரு மாணவராக இருந்தாலும் சரி, கோலாலம்பூரில் ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனுக்கு உடனடி நன்மை NIPL (UPI) மற்றும் PayNet மலேசியாவின் ஒருங்கிணைப்பு ஆகும். தடையற்ற மின்னணு இணைப்பு மூலம் எல்லை தாண்டிய கட்டணங்களை அனுமதிப்பதன் மூலம், இரு நாடுகளும் விலையுயர்ந்த வழக்கமான பணம் அனுப்பும் வழிகளைத் தவிர்க்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவை உள்ளூர் நாணயங்களில், அதாவது இந்திய ரூபாய் (INR) மற்றும் மலேசிய ரிங்கிட் (MYR) வர்த்தகத்தை ஊக்குவிக்க உறுதிபூண்டுள்ளன. உலகளாவிய சந்தைகள் தற்போது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்வதால், இந்த முடிவை உணர்ந்து இந்திய மற்றும் மலேசிய வணிகங்கள் "டாலர்-அடிப்படைநிலை" (dollar-default) விலைப்பட்டியலில் இருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும். இந்த மாற்றம் வெற்றிகரமாக இருந்தால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை செலவுகளைக் குறைக்கும். இதன் விளைவாக, இந்திய ஜவுளிகளை மலேசியாவில் மிகவும் மலிவு விலையில் விற்கவும், மலேசிய பாமாயிலை இந்தியாவில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றும்.
இந்தப் பயணமானது, பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இரு நாடுகளும் ரஷ்யாவைச் சேர்ந்த சுகோய் Su-30 ஜெட் விமானங்களை இயக்குவதால், ஒரு உத்தியின் விவகார பணிக்குழு (Strategic Affairs Working Group (SAWG)) மற்றும் ஒரு பிரத்யேக Su-30 மன்றத்தை நிறுவுவது ஒரு நடைமுறை மற்றும் யதார்த்தமான இராணுவ கூட்டாண்மையைக் காட்டுகின்றன. இந்த பாதுகாப்பு இலக்குகளை அடைவது 2026-ல் மலேசியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் பணிக்குழு மூலம் காணப்படும்.
ஹரிமாவ் சக்தி மற்றும் கடல்சார் நிலைநிறுத்தங்கள் போன்ற கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடர்வதன் மூலம், இந்தியாவும் மலேசியாவும் மலாக்கா ஜலசந்தி மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் கப்பல் வழித்தடங்களைப் பாதுகாப்பதில் தங்கள் பங்கைக் குறிக்கின்றன. வழக்கமாக, எச்சரிக்கையாக இருக்கும் மலேசியாவிற்கு, இது ஒரு முன்னேற்றமான படியாகும். ஒருவேளை அவர்கள் இந்திய பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்குவதை பரிசீலிக்க வழிவகுக்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அப்பால், மலாயாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையத்தை (Thiruvalluvar Centre) நிறுவுவதும், மலேசிய நாட்டினருக்கான பிரத்யேக உதவித்தொகைகளை அறிவிப்பதும் உயர் தொழில்நுட்ப ஒப்பந்தங்களுக்கு ஒரு கலாச்சாரத்தை வலுப்படுத்த வழங்குகின்றன. இந்த உறவுகள் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு பரிவர்த்தனை மட்டுமல்ல, இரண்டு மக்களுக்கு இடையிலான உரையாடல் என்பதை இது உறுதி செய்கிறது. மாணவர் பரிமாற்றங்கள் தற்போது மிகக் குறைவு. மேலும், அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது. விமான இணைப்பில் இரண்டாம் நிலை நகரங்கள் சேர்க்கப்பட்டதன் காரணமாக சுற்றுலா செழித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் ஒரு மில்லியன் இந்தியர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். அதே ஆண்டில், 30,000 மலேசியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
எந்தவொரு கூட்டு அறிக்கையின் உண்மையான சோதனை, அது கையெழுத்திட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதுதான். இந்த முடிவுகள் நடைமுறையில் செயல்படுதுவதை உறுதிசெய்ய, இந்த வருகை இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்திற்கு அதிகாரம் அளித்தது. தனியார் துறைக்கு ஒரு முன்னணி பங்கு வழங்குவதன் மூலம், குறிப்பாக பசுமை ஹைட்ரஜன் (ஜென்டாரி) மற்றும் மலிவு சுகாதாரப் பராமரிப்பு போன்ற பகுதிகளில் தலைவர்கள் அதிகாரத்துவத்தைவிட சந்தை சக்திகள் கூட்டாண்மையை இயக்கும் என்பதை உறுதி செய்துள்ளனர். அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான (G2G) கூட்டாண்மை செயல்படுத்தும் ஒப்பந்தங்களை நிறுவியுள்ளது. இப்போது, தொழில்துறை மற்றும் கல்வித்துறை முன்னேற வேண்டும். பிரதமர் மோடி கோலாலம்பூரை விட்டு வெளியேறியபோது, அவர் இனி "கிழக்கே செயல்படும் கொள்கை" அல்ல, "கிழக்கில் வளர்ச்சி" என்ற கூட்டாண்மைக்கான ஒரு திட்டத்தை விட்டுச் சென்றார்.
சிங் ஜெர்மனி, இந்தோனேசியா, ஆசியான், எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான முன்னாள் தூதர் ஆவார். அவரது சமீபத்திய புத்தகம் ”The Durian Flavour: India and ASEAN after a decade of the Act East Policy”.
Original article : PM Modi in Malaysia: Future-proofing an ‘Act East’ partnership -Gurjit Singh