சத்தீஸ்கர் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS)) மீண்டும் தொடங்கிய பிறகு, தற்போது மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கே (National Pension Scheme (NPS)) மாறியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதாக அறிவித்த பஞ்சாப் மாநிலம், இன்னும் புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே பங்களிப்பைத் தொடர்கிறது என்று ராமன் கூறினார்.
மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) வழங்கலாம், ஆனால் அவை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) தலைவர் சிவசுப்ரமணியன் ராமன் கூறுகிறார். பழைய ஓய்வூதியத் திட்டம் எந்தவொரு மாநில அரசுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் இந்தத் திட்டம் தொடர்ந்து நீடிக்க முடியாதது என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அறிவித்துவிட்டு, அதனால் எனக்கு எந்தச் சுமையும் ஏற்படாது என்று என்னால் நினைத்துக்கொள்ள முடியாது என்று அவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். சத்தீஸ்கர் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்கிய பிறகு, இப்போது மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கே (NPS) மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக அறிவித்த பஞ்சாப் மாநிலம், இன்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (NPS) பங்களிப்பு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தான் இதற்கு முன்பு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India (SEBI)) செயல் இயக்குநராகவும், இந்தியச் சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் (Small Industries Development Bank of India (SIDBI)) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியதை ராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டங்களின் (Atal Pension Yojana (APY)) தற்போதைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றின்கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (Assets Under Management (AUM)) எவ்வளவு? மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தச் சொத்து மதிப்பு எந்த அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஓய்வூதிய நிதியத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு (AUM) சுமார் ₹17 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த மொத்தத் தொகையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) பங்கு மிகக் குறைவுதான் (சுமார் ₹1,300 கோடி). ஆனால், சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது: மொத்தச் சந்தாதாரர்கள்: சுமார் 9 கோடி பேர். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்: 7 கோடி பேர், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்: 2 கோடி பேர் என்று கூறப்படுகிறது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை (AUM) துல்லியமாகக் கணிப்பது கடினம் என்பதால், நாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு ஓய்வூதியக் கணக்கு இருக்க வேண்டும் என்பதே முக்கிய இலக்காகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய சவாலான இலக்கு என்றாலும், இப்படி ஒரு இலக்கை நிர்ணயிப்பதன் மூலமே அதை அடைய முடியும். இதற்காக, அமைப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: விவசாயத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), சுய உதவிக்குழுக்கள் (SHGs), டிஜிட்டல் தள பணியாளர்கள் (Platform workers), வழக்கமான பெருநிறுவன ஓய்வூதியப் பிரிவு ஆகியனவாகும்.
இளம் தனியார் துறை ஊழியர்களைக் கவரும் வகையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) வரிச் சலுகைகள், பணப்புழக்கம் அல்லது திட்டத்தின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் என்னென்ன மாற்றங்கள்/சீர்திருத்தங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன?
எங்களிடம் தயாரிப்புகளை மாற்றியமைக்கும் சிறந்த வசதி உள்ளது. சமீபத்திய சீர்திருத்தங்கள், அடுத்த மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாகச் சில காலம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கிடையில், நாங்கள் புதிய தயாரிப்புகளைச் சோதித்து வருகிறோம். நாங்கள் 'வாத்சல்யா' (Vatsalya) திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளோம், மேலும் 'என்.பி.எஸ் ஸ்வஸ்தியா' (NPS Swasthya) ஓய்வூதியத் திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்துகிறோம். ஓய்வூதியத் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வருவாயை மேம்படுத்துவது குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும், தற்போதைய 'ஆண்டுத்தொகை' (Annuity) திட்டங்களின் விலை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளதால், அவற்றுக்குப் போட்டியாக வெளிப்படையான ஓய்வூதியப் பணப்பட்டுவாடா விருப்பங்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மீண்டும் திரும்ப விரும்புகின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் (NPS) ஒப்பிடும்போது, இதன் நீண்டகால நிதி நிலைத்தன்மையை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எவ்வாறு கருதுகிறது?
புள்ளிவிவரங்கள் தெளிவாக உள்ளன: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) எந்தவொரு மாநில அரசுக்கும் நீண்ட காலத்திற்குச் சாத்தியமானது அல்ல. இதில் எப்போதும் ஒரு நிதிச் சுமை உண்டு என்கின்றனர். மாநிலங்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஏற்கனவே தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) பங்களித்து வருகின்றன, ஆனால் இப்போது மீண்டும் பழைய திட்டத்திற்கு (OPS) மாற விரும்புகின்றன. அவர்களுக்கு அவ்வாறு செய்ய உரிமை உண்டு, ஆனால் அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பை நிறுத்தக்கூடாது. தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு 'நிதி சார்ந்த அமைப்பு', இதில் ஒவ்வொரு ஓய்வூதியத்திற்கும் எனத் தனிப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் என்கின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் பொது நிதிஒதுக்கீட்டில் இருந்து நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மாநிலங்கள் விரும்பினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கலாம், ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒரு நிதி சார்ந்த கணக்காகத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் நிதிஒதுக்கீட்டில் இருந்து கூடுதல் நிதியுதவியைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு பாதுகாப்பான ஓய்வூதிய முறைக்கு 'நிதி ஆதார அமைப்பு' (Funded Pension System) என்பது மிகவும் அவசியமானது என்றும் அதைத் தவிர்க்க முடியாதது என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
மாநிலங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கின்றனவா?
பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கள் தரப்பு நியாயங்களை மிகத் தெளிவாகக் கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்ந்து பங்களிக்க விரும்பலாம், அதே சமயம், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் ஒரு வாய்ப்பாக வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்கிய மாநிலங்கள், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) நிறுத்திவிட்டனவா?
சத்தீஸ்கர் மாநிலம் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பிவிட்டது. பஞ்சாப் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மீது ஆர்வம் காட்டினாலும், இன்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே பங்களித்து வருவதாகக் கூறியுள்ளார்.
பயன்படுத்துபவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில், NPS (தேசிய ஓய்வூதியத் திட்டம்), அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இதர திட்டங்களை ஒன்றிணைத்துச் செயல்படுத்துவது குறித்து பொருளாதார ஆய்வு 2025–26 குறிப்பிட்டுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன, இதற்கான பணிகள் ஏதேனும் நடக்கிறதா?
அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகிய இரண்டிற்கும் இடையே நேரடித் தொடர்பு ஏதுமில்லை. மக்கள் இந்த இரண்டு கணக்குகளையும் எளிதாக வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அடல் ஓய்வூதியத் திட்டமானது அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்ட நிலையான வருமானத்தை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund (EPF)) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றுக்கு இடையே மாறிக் கொள்ளும் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சட்டம் யாரையும் கட்டாயமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரச் சொல்வதில்லை; மக்கள் நீண்டகாலப் பழக்கம் காரணமாகவே அதில் முதலீடு செய்கிறார்கள். வரி இல்லாத சிறந்த லாபத்தைத் தருவதால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது ஒரு வலிமையான திட்டமாக உள்ளது. நாம் இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, மக்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் இருக்காது என்பதால், சந்தையில் வெவ்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டிற்கான (நிதியாண்டு 26) ஓய்வூதிய நிதி முதலீடுகள் கடன் மற்றும் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களைத் தர முடியுமா?
பிப்ரவரி 1, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த முதலீடுகள் ரூ. 11.36 லட்சம் கோடியை எட்டியுள்ளன. இது மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டைவிட 17 சதவீதம் அதிகம் என்றும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 21 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme) எத்தனை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன?
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உட்பட எட்டு மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme (UPS)) அறிமுகப்படுத்தியுள்ளன.
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருடன் இணைந்து, அந்தத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைப்பதை அதிகரிக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பணியாற்றி வருகிறது. இதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organization (FPOs)), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் டிஜிட்டல் தள பணியாளர்கள் (Platform Workers) ஆகியோரிடையே ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், ஓய்வூதிய முகவர்களாகச் செயல்படவும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மக்கள் சேர உதவவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் புதிய தேசிய ஓய்வூதியச் சந்தாதாரர்களைச் சேர்க்கும் சேவை மையங்களுக்கு, ஒரு சந்தாதாரருக்கு ₹100 வரை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. ஊரகப் பகுதிகளில் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதையும், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளைப் பயன்படுத்தி வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதியைக் கொண்டு சேர்ப்பதையும் இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
original article : Old Pension Scheme unsustainable for states; concept of funded pension account essential: PFRDA Chairperson Sivasubramanian Ramann -Hitesh Vyas