முக்கிய அம்சங்கள்:
• திங்களன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு நிதி மசோதாவாக (Money Bill) நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்ட 2019-ஆம் ஆண்டிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. 2018-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்ட ஒரு மாறுபட்ட கருத்து, இந்த நடைமுறையை "அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி" (fraud on the Constitution) என்று வர்ணித்திருந்தது.
• இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், கூடுதலாக நான்கு நீதிபதி பதவிகளை உருவாக்குவதற்குத் தேவையான செலவுகள், பணியாளர்கள், குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
• தேவையான பணியாளர்களுடன் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக நான்கு நீதிபதி பதவிகளை உருவாக்குவதன் மூலம், நீதிபதிகளின் ஊதியம் மற்றும் படிகள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நீதிபதிகள் வாடகை இல்லாத அதிகாரப்பூர்வ குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கும் உரிமை பெறுவார்கள். ஒவ்வொரு நீதிபதிக்கும் அவர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக தனிப்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட வேண்டும். நீதிபதிகளுக்கான பாதுகாப்புப்பணியாளர்களை நியமிப்பதற்கும் செலவு ஏற்படும். நான்கு நீதிபதிகள் மற்றும் அவர்களது பணியாளர்களின் ஊதியம், போக்குவரத்து மற்றும் இதர பல்வேறு செலவுகளுக்கான மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான ஆண்டு செலவு ரூ.10,56,81,648 ஆகும். மேலும், நான்கு சக்கர வாகனம், அதிகாரப்பூர்வ குடியிருப்பைத்தயார் செய்தல் மற்றும் இதர பல்வேறு செலவுகளுக்கான ஒருமுறை செலவு (non-recurring expenditure) ரூ.3,47,36,000 ஆகவும் இருக்கும். எனவே, இந்திய உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக நான்கு நீதிபதி பணியிடங்களை உருவாக்குவதற்கான மொத்தச் செலவு ரூ. 14,04,17,648 ஆக இருக்கும்" என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• அரசியலமைப்புச்சட்டத்தின் 110(1)-வது பிரிவின்கீழ், பின்வரும் விவகாரங்களில் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை மட்டுமே கையாளும் விதிகள் கொண்டிருந்தால், அது ஒரு மசோதா நிதி மசோதாவாக (Money Bill) கருதப்படும்:
(a) எந்தவொரு வரியையும் விதித்தல், நீக்குதல், தள்ளுபடி செய்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;
(b) அரசாங்கத்தின் கடன் வாங்கும் நடவடிக்கைகளைஒழுங்குபடுத்துதல்;
(c) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியம் (Consolidated Fund of India) அல்லது அவசரநிலை நிதியம் (Contingency Fund of India) ஆகியவற்றின் பாதுகாப்பு, இந்த நிதிகளுக்கு பணம் செலுத்துதல் அல்லது அவற்றிலிருந்து பணம் எடுத்தல்,
(d) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து (Consolidated Fund of India) பணத்தை ஒதுக்கீடு செய்தல்,
(e) ஏதேனும் ஒரு செலவை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்தின் மீது சார்ஜ் செய்யப்பட்ட செலவாக (charged expenditure) அறிவித்தல் அல்லது அத்தகைய செலவின் தொகையை அதிகரித்தல்;
(f) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியம் அல்லது இந்தியாவின் பொதுக்கணக்கில் (Public Account of India) இருந்து பணத்தைப் பெறுதல் அல்லது பணத்தைப் பாதுகாத்தல் அல்லது வெளியிடுதல் அல்லது மத்திய அல்லது மாநிலத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் அல்லது
(g) உட்பிரிவுகள் (a) முதல் (f) வரை குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பான ஏதேனும் ஒரு விவகாரமாக இருத்தல். அபராதம் அல்லது பிற பண தொடர்பான தண்டனைகளை விதிப்பதற்கான விதிகள், உரிமங்கள் அல்லது சேவைகளுக்கான கட்டணங்களைக் கோருதல் அல்லது செலுத்துதல் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக ஏதேனும் உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது அமைப்பால் வரி விதித்தல், நீக்குதல், தள்ளுபடி செய்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான விதிகளைக் கொண்டிருப்பதன் காரணமாக மட்டும் ஒரு மசோதா 'நிதி மசோதா' (Money Bill) என்று கருதப்படாது.
• ஒரு நிதி மசோதாவை (money Bill) மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். மேலும், ஒரு மசோதாவை “நிதி மசோதா” என மக்களவைத்தலைவர் வகைப்படுத்துவது, அந்த மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவை இல்லை. மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை ஒரு நிதி மசோதா ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 110(1)(g)-வது பிரிவு, 110(1)(a) முதல் (f) வரை குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விவகாரத்துடனும் தொடர்புடைய துணை விவகாரங்களும் நிதி மசோதாவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. மோடி அரசாங்கம் தனது முந்தைய பதவிக்காலங்களில் முக்கியச்சட்ட மசோதாக்களை 'நிதி மசோதாக்களாக' நிறைவேற்றுவதற்கு இந்த கூடுதல் பிரிவே முக்கிய காரணியாக அமைந்தது. மாநிலங்களவையில் இது போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவு அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறு செய்யப்பட்டது என்று அப்போது எதிர்க்கட்சிகள் கூறின.
• அரசியலமைப்புச்சட்டத்தின் 109(1)-வது பிரிவின்கீழ், ஒரு நிதி மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது நிதி மசோதா என்பதற்கான மக்களவைத்தலைவரின் சான்றிதழுடன் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்காக அனுப்பப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களவையால் அந்த மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது. மேலும், 14 நாட்களுக்குள் அதை மக்களவைக்குத்திருப்பி அனுப்ப வேண்டும். அதன் பின்னர், மாநிலங்களவை செய்துள்ள பரிந்துரைகளில் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை மக்களவை முடிவு செய்யலாம். எந்தச்சூழ்நிலையிலும், அந்த மசோதா இரண்டு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின் 109(5)-வது பிரிவின்படி, மாநிலங்களவை 14 நாட்களுக்குள் மசோதாவை மக்களவைக்குத் சரிபார்த்து அனுப்பத்தவறினால், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
Original articles: Article 110 of the Constitution deals with what? -Priya Kumari Shukla