பாதுகாப்பு அமைச்சகம் தனது நிதிநிலை அறிக்கையில் 90% செலவழித்த பிறகு, புதுமைகளுக்கான அதன் முதன்மைத் திட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் நிதியை நாடுகிறது - அம்ரிதா நாயக் தத்தா

 இந்த திட்டத்திற்கு (2021-2026) ஒப்புதல் அளிக்கப்பட்ட 90% நிதியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 


பாதுகாப்பு அமைச்சகம் அதன் முதன்மையான, பாதுகாப்பு சிறப்புக்கான புதுமைகள் (Innovations for Defence Excellence (iDEX)) திட்டத்தை விரிவுபடுத்த விரும்புகிறது. இதை தொடர, நிதி அமைச்சகத்திடம் கூடுதல் நிதி கோரியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளது.


2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டு திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட மொத்த ரூபாய் 498.78 கோடியில் 90% பாதுகாப்புத் துறை (Department of Defence Production (DDP)) ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். iDEX திட்டம் கிட்டத்தட்ட 300 புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் தனிப்பட்ட முறையில் புதுமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், முக்கிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சுமார் 20 பங்குதாரர்களின் காப்பகங்களை இது ஆதரிக்கிறது.


அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, ரூ.2,370 கோடி மதிப்புள்ள iDEX திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட 37 தயாரிப்புகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.800 கோடி மதிப்புள்ள 21 தயாரிப்புகளின் கொள்முதலுக்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன. iDEX திட்டத்தின் கீழ் மேலும் பல சவால்கள் தொடங்கப்படுகின்றன. இந்த தரவுகளின்படி, இந்த திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சவால்கள் iDEX திட்டத்தின் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நிகழ்ச்சியில், iDEX திட்ட முன்முயற்சியின் கீழ் 26 தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1,000 கோடிக்கும் அதிகமான கொள்முதலுக்கான தேவைகளை உருவாக்கப்பட்டுள்ளன என்றார். 


இந்த திட்டத்தின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சியுடன் நிதி குறைந்துபோகிறது என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் வெற்றியானது, மனிதவளம் உட்பட, கூடுதல் நிதி மற்றும் வளங்கள் தேவைப்படுவதற்கு, அதன் அளவை அதிகரிக்க ஊக்குவித்துள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சுமார் 90% ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டார். iDEX திட்டத்தின் வெற்றியுடன் மேலும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட, கூடுதலாக ரூ.497.15 கோடி தேவைப்படுகிறது.


iDEX திட்டத்தின் கீழ் புத்தொழில்களுடன் ஈடுபாட்டைப் பேணுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் நிதியைப் பெறுவது மிகவும் முக்கியமானது என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார். பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனே நிதியமைச்சகத்துக்கு அண்மையில் அனுப்பிய செய்தியில் இந்தத் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதலாக, திருத்தப்பட்ட செலவுக் குழு (Revised Cost Committee (RCC) ) 2023-ல் அதிக நிதி தேவை என்று பரிந்துரைத்ததாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டிற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இது நடப்பு நிதியாண்டிற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய துறை திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.996 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆரம்பத்தில், iDEX திட்டத்திற்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.1.5 கோடியாக இருந்தது. ஆனால், iDEX திட்டம் பின்னர் iDEX Prime-க்கு விரிவுபடுத்தப்பட்டது.  இதற்கான நிதி உதவி ரூ.1.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரித்துள்ளது. ஏனென்றால், திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு இருந்தபோதிலும், பாதுகாப்பு மற்றும் விண்வெளியின் முக்கிய களத்தில் மேம்பட்ட மற்றும் சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதில் ரூ.1.5 கோடி உச்சவரம்பு ஒரு தடையாக இருப்பதாக பல பங்குதாரர்கள் உணர்ந்தனர். 


இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாதுகாப்பு அமைச்சர் iDEX திட்டத்தை ADITI திட்டத்துடன் புதுமையான தொழில்நுட்பங்களின் ஏசிங் டெவலப்மென்ட் என்ற புதிய முயற்சியைத் தொடங்கினார். இந்த முயற்சியானது முக்கியமான மற்றும் இராஜதந்திர ரீதியில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ADITI திட்டத்தின் கீழ், புத்தொழில்கள் (start-ups) தங்கள் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்காக ரூ.25 கோடி வரை மானியம் பெற அனுமதிக்கிறது. 


2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ரூ.750 கோடி மதிப்புடைய ADITI திட்டம், iDEX கட்டமைப்பின் கீழ் வருகிறது. இதற்கு முன்மொழியப்பட்ட காலக்கெடுவுக்குள் சுமார் 30 முக்கியமான ஆழமான தொழில்நுட்பம் (deep-tech critical) மற்றும் இராஜதந்திர ரீதியில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். நவீன ஆயுதப் படைகளின் தேவைகள் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


அரசாங்க அறிக்கையின்படி, ADITI திட்டத்தின் முதல் பதிப்பு 17 சவால்களான இதில் இந்திய ராணுவத்திற்கு மூன்று, கடற்படைக்கு ஐந்து, இந்திய விமானப்படைக்கு ஐந்து மற்றும் பாதுகாப்பு விண்வெளி முகமைக்கு நான்கு சவால்கள் தொடங்கப்பட்டது.

 

இந்த மாத தொடக்கத்தில், ராஜ்நாத் சிங் ADITI-2.0 ஐ அறிமுகப்படுத்தினார். இந்த பதிப்பில் ஆயுதப்படைகள் மற்றும் அது சார்ந்த முகமைகளின் 19 சவால்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம் (quantum technology), இராணுவத் தொடர்பு (military communication), இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் (anti-drone systems for military use) மற்றும் தகவமைப்பு உருமாற்றம் (adaptive camouflage) போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன.


இந்த திட்டம் iDEX திட்டம் வகுப்பதற்கு ரூ.25 கோடி வரை மானியங்களை வழங்குகிறது. நாட்டின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுதிகளுக்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆளில்லா வான்வழி விமானங்கள் (unmanned aerial vehicles (UAV)), செயற்கை நுண்ணறிவு, இணைய வலையமைப்பு (networking) மற்றும் தகவல் தொடர்பு (communication) உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப களங்களில் 41 செயல்பாடுகளை முன்வைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு, இந்தியா புத்தொழில் திட்டத்தால் இந்த செயல்பாடுகளின் 12வது பதிப்பையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த செயல்பாடுகளுக்கு ரூ.1.5 கோடி வரை மானியம் கிடைக்கிறது.

 

iDEX திட்டத்தின் முன்முயற்சியை அதிகரிக்க, பாதுகாப்பு கண்டுபிடிப்பு தொடக்க சவால் (Defence Innovation Startup Challenge (DISC)) அடல் புத்தாக்கத் திட்டத்துடன் (Atal Innovation Mission) இணைந்து தொடங்கப்பட்டது. இந்த முன்முயற்சியானது புத்தொழில்கள் (start-ups), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் கண்டுபிடிப்பாளர்களை முன்மாதிரிகளாக உருவாக்கி, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுப்படி, iDEX திட்டம் இதுவரை 9,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இது தற்போது 450-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் (start-ups) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (MSME) ஒத்துழைத்து வருகிறது.




Original article:

Share:

இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் தாட் (THAAD) என்றால் என்ன? ஏன் இது முக்கியமானது? -யாஷி

 மிகவும் மேம்பட்ட அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான தாட் (THAAD) இப்போது இஸ்ரேலில் இருக்கும். இந்த அமைப்பை இயக்க அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். மேற்கு ஆசியாவில் நடந்த வன்முறைக்கு இந்த அமைப்பின் நிலை என்ன?


THAAD - Terminal High Altitude Area Defense (THAAD) : டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் அல்லது THAAD என்பது அமெரிக்க இராணுவத்தின் ஒரு பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பாகும். இது குறுகிய, இடைநிலை மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை அவற்றின் முனைய கட்டத்தில் சுட்டு வீழ்த்த முடியும்.


தாட் அமைப்பு பாதுகாப்பு பேட்டரி அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா :    


லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி படையினரை (UN peacekeepers) குறிவைத்ததற்காக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டாலும், இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவைப் பெறும். அமெரிக்கா தனது மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸை (Terminal High Altitude Area Defense (THAAD)) இஸ்ரேலுக்கு அனுப்பும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்காவின் வலுவான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.


THAAD என்பது டெர்மினல் ஹை-ஆல்டிட்யூட் ஏரியா டிஃபென்ஸ் என்பதைக் குறிக்கிறது. மேலும், எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலின் வான் பாதுகாப்பை THAAD பலப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13-ம் தேதியும், அக்டோபர் 1-ம் தேதியும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை, இஸ்ரேலைப் பாதுகாப்பதிலும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை ஈரானின் மேலும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதிலும் அமெரிக்காவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.


THAAD என்றால் என்ன?


ஒரு THAAD அமைப்பானது, 95 வீரர்களை உள்ளடக்கியது. இது ஆறு டிரக்-மவுண்டட் லாஞ்சர்கள் மற்றும் 48 இன்டர்செப்டர்களைக் கொண்டுள்ளது. ஒரு லாஞ்சருக்கு எட்டு இன்டர்செப்டர்கள் உள்ளன. அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் அறிக்கையின்படி, இந்த THAAD அமைப்பின் ரேடார் கண்காணிப்பு கருவி மற்றும் உத்திக்கான தீ தொடர்பான கருவிகளை கொண்டுள்ளன.


THAAD பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக விரைவாக பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பை வழங்குகிறது. இது குறுகிய தூர ஏவுகணைகள் (1,000 கிமீ வரை), நடுத்தர தூர ஏவுகணைகள் (1,000-3,000 கிமீ), மற்றும் வரையறுக்கப்பட்ட இடைநிலை ஏவுகணைகள் (3,000-5,000 கிமீ) ஆகியவற்றை குறிவைக்க முடியும். இந்த பாதுகாப்பு விமானத்தின் இறுதி கட்டத்தில் வளிமண்டலத்திற்கு உள்ளே அல்லது வெளியே செயல்படுத்தும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அச்சுறுத்தும் ஏவுகணைகளை (threat missiles) அழிக்க THAAD அமைப்பு "ஹிட்-டு-கில்" (hit-to-kill) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது பழைய பேட்ரியாட் ஏர் (older Patriot Air) மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை (Missile Defense System) விட பெரிய பகுதியை பாதுகாக்க முடியும். லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் (Lockheed Martin Corporation) எனும் நிறுவனம் THAAD அமைப்பை உருவாக்கியது.


அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்திக்குறிப்பின்படி, THAAD அமைப்பை நிலைநிறுத்துவதற்கான சமீபத்திய முடிவு, அமெரிக்க இராணுவம் சமீபத்திய மாதங்களில் செய்த பரந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகும். இந்த மாற்றங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிப்பதையும், ஈரான் மற்றும் ஈரானுடன் இணைந்த வீரர்களின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


இதன் பொருள் அமெரிக்க இராணுவ வீரர்களின் குழுவுடன் மிகவும் மேம்பட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு நேரடியாக இஸ்ரேலில் நிறுத்தப்படும். மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த வரிசைப்படுத்தல் நிகழ்கிறது.


மேற்கு ஆசியாவில் மோதலில் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வரலாறு காணாத அளவு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இஸ்ரேலில் அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இயக்குவதற்கு தனது வீரர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த பிராந்தியத்தில் ஒரு முழுமையான போரைத் தடுக்க ஈரான் சமீபத்திய நாட்களில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், தங்கள் மக்களையும் நலன்களையும் பாதுகாப்பதில் தடை இல்லை (no red lines) என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெளிவாகக் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழமை X வலைதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டார்.


அக்டோபர் 1-ம் தேதி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பழிவாங்கும் திட்டத்தை தயாரித்து வருகிறது. போரில் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இருப்பது ஈரானைத் தடுக்கும் மற்றும் இஸ்ரேலுக்கு உறுதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த ஆண்டு அக்டோபரில் காசா போர் தொடங்கியதில் இருந்து ஈரான் இரண்டு முறை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இந்த நேரத்தில் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உதவியுள்ளன.இஸ்ரேலில் THAAD அமைப்பை நிலைநிறுத்துவது மிகவும் குறிப்பிடத்தக்க நிலையாகும். ரஷ்யாவிற்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் நீண்ட காலமாக THAAD அமைப்பை உதவி கோரியது. ஆனால் அது மறுக்கப்பட்டது.


THAAD பயன்படுத்த மிகவும் விலை உயர்ந்தது மட்டுமல்ல, அதை இயக்க பயிற்சி பெற்ற அமெரிக்க பணியாளர்கள் தேவை. ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கட்டுரையின்படி, "PATRIOT-ன் ஏற்றுமதி மாதிரி கிட்டத்தட்ட USD 1 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. THAAD-ன் ஒரு அமைப்புக்கான விலை சுமார் USD 2.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது."


இஸ்ரேல் ஏற்கனவே மேம்பட்ட, பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. THAAD இந்த அமைப்பை கணிசமாக பலப்படுத்துகிறது. இருப்பினும், ஈரானுக்கு ஒரு நன்மை உள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடைமறித்து ஏவுகணைகளை ஏவுவதற்கு செலவழிப்பதை விட மிகக் குறைவாகவே செலவிடுகிறது.




Original article:

Share:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்காக வெளியுறவுத்துறை அமைச்சரின் இஸ்லாமாபாத் பயணத்திலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்? -சுபாஜித் ராய்

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில் ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க அழைப்பு விடுத்த பின்னர், பிலாவல் பதிலளித்ததாவது, "இராஜதந்திர நிலையைப் பெறுவதற்கு பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.


மே 2023-ல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை "பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத் தொழிலை ஊக்குவிப்பவர், நியாயப்படுத்துபவர் மற்றும் செய்தித் தொடர்பாளர்" என்று விமர்சித்துள்ளார். 


எஸ்.ஜெய்சங்கர் மேலும் விமர்சித்ததாவது, "பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதத்தை பற்றி விவாதிக்க பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுடன் சேர்ந்து அமர்ந்து பேசுவதில்லை. இந்த விஷயத்தில் மிக, மிக தெளிவாக இருப்போம்... பாகிஸ்தானின் நம்பகத்தன்மை அதன் அந்நிய செலாவணி இருப்புக்களைவிட வேகமாக குறைந்து வருகிறது" என்று ஜெய்சங்கர் செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார். 


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organisation (SCO)) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்திற்காக இந்தியா வந்திருந்த பிலாவல் ஊடக உரையாடல்களில் இருதரப்பு பிரச்சினைகளை இந்த அமைப்பில் கவனத்தை திருப்ப முயன்றார். இதன்படி, அவர் பாதிக்கப்பட்ட பகுதியான பிரிவு 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் பற்றிய கவலைகளை வாசிக்கத் தொடங்கினார். 


ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க அழைப்பு விடுத்த பின்னர், பிலாவல் பதிலளித்ததாவது, "இராஜதந்திர நிலையைப் பெறுவதற்கு பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.


SCO கூட்டத்தில் ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க அழைப்பு விடுத்த பின்னர், பிலாவல் பதிலளித்ததாவது, "இராஜதந்திர நிலையை பெறுவதற்கு பயங்கரவாதத்தை கருவியாகப் பயன்படுத்துவதில் சிக்கிக் கொள்ளக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார். 


அன்றிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும்:


கோவாவில் நடந்த வாய்மொழி மோதலுக்கு ஒரு வருடம் மற்றும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 15-16 தேதிகளில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) அரசாங்கத் தலைவர்களின் குழு கூட்டத்திற்காக ஜெய்சங்கர் செவ்வாய்கிழமை இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிலாவல் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக இல்லை. இருப்பினும், அவரது கட்சி இன்னும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தை ஆதரிக்கிறது.


பாகிஸ்தானில், பிப்ரவரியில் தேசியளவில் நடைபெற்ற தேர்தல்களில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf (PTI)) வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர். இருப்பினும், சமீபத்தில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான தனது விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளது.


இந்தியாவில், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு குறைந்த ஆதரவு கிடைத்திருப்பது அரசாங்கத்தில் அதன் கூட்டணி கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த கட்சிகள் பாகிஸ்தான் குறித்த தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. மேலும், இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை பாஜக தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, மே 2020 முதல் சீனாவுடனான எல்லைப் பிரச்சனை ஒரு பெரிய கவலையாக உள்ளது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு இராணுவ வீரருக்கு எதிராக குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு நிலைமை சிக்கலானதாகவே உள்ளது. 


'எல்லாவற்றிற்கும்' திட்டமிடுங்கள் (Plan for 'Everything')


ஜெய்சங்கர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொண்ட தனது பயணம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்துக்காகவே மட்டும். மேலும், இது ஒரு "பல்தரப்பு நிகழ்வுக்காக" (multilateral event) தவிர, பாகிஸ்தானுக்கான இருதரப்பு பயணம் அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பொறுப்பான உறுப்பினர் என்ற அடிப்படையில் அங்கு செல்கிறேன் என்றும், மேலும் ஒரு மரியாதையான நபர் என்பதால், அதன்படி செயல்படுவேன், ”என்று ஜெய்சங்கர் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். 


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் குழு (Council of Heads of Government), மாநிலத் தலைவர்கள் குழுக்குப் பிறகு (Council of Heads of State), இந்த அமைப்பில் இரண்டாவது மிக முக்கியமான குழுவாகும். மிக உயர்ந்த அமைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் விளாடிமிர் புதின் போன்ற தலைவர்கள் உள்ளனர்.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இந்தியா முழு உறுப்பினரான 2017 முதல், வெளியுறவு அல்லது பாதுகாப்பு அமைச்சர் நிலையில் அரசுத் தலைவர்கள் குழுவில் இந்தியா பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது. ஜெய்சங்கர் கடந்த ஆண்டு பிஷ்கெக்கில் (Bishkek) நடந்த அரசாங்கத் தலைவர்கள் குழு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 


முன்னதாக இந்த உச்சி மாநாடுகளில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 2020-ம் ஆண்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அரசாங்கத் தலைவர்களின் நிலையிலான கூட்டத்தை இந்தியா மெய்நிகர் முறையில் (virtually) நடத்தியபோது, பாகிஸ்தான் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.


ஜெய்சங்கர் இஸ்லாமாபாத்தில் குறிப்பிடத்தக்க ஒருவரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. எவ்வாறாயினும், இந்தியா-பாகிஸ்தான் சூழலில் பலதரப்பு பயணமானது சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. அக்டோபர் 5 அன்று, வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பாகிஸ்தான் பயணத்தை "திட்டமிடுவதாக" (planning) கூறினார். மேலும், "என் தொழிலில், நீங்கள் செய்யப்போகும் அனைத்திற்கும் நீங்கள் திட்டமிடுகிறீர்கள். நீங்கள் செய்யப்போவதில்லை, ஆனால் நடக்கக் கூடும். அதற்கும் நீங்கள் தயாராகுங்கள்" என்று அவர் கூறினார்.


பின்னோக்கி மற்றும் முன்னோக்கி ஆராய்தல்


2014-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்து பதவியேற்றார். 2015 டிசம்பரில், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது. அதே மாதத்தின் பிற்பகுதியில், நவாஸ் ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி லாகூர் பயணம் மேற்கொண்டிருந்தார்.


இருப்பினும், பல நிகழ்வுகளுக்குப் பிறகு இரு நாடுகளின் உறவு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. ஜனவரி 1, 2016 அன்று, பதன்கோட் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. மார்ச் 2016 இல், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை உளவு பார்த்ததாகவும், தீவிரவாதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி பாகிஸ்தான் கைது செய்தது. செப்டம்பர் 2016-ல், உரி பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது.


பிப்ரவரி 2019-ல், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இது பாலகோட்டில் இந்தியாவின் வான்வழித் தாக்குதலுக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு & காஷ்மீரில் அரசியலமைப்பு மாற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவுடனான தூதரக உறவுகளை பாகிஸ்தான் குறைத்து கொண்டது. இதில், இருதரப்பு வர்த்தகம், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.


பிப்ரவரி 2021 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவை ஜம்முவில் நிலைமையை மோசமாக்கியுள்ளன. கடந்த மாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியது.


இந்த பின்னணியில் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகை மேலும் இருநாடுகளுக்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை திறக்கிறது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு கோவாவிலும், இந்த ஆண்டு ஐநா பொதுச் சபையிலும் இந்தியாவின் ஆக்ரோஷமான பதிலடி, காஷ்மீர் அல்லது பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானின் எந்த ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் அவர் புறக்கணிக்க மாட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது.


இந்த நெருக்கடியான தருணத்தில் பாகிஸ்தான் முன்னெப்போதும் இல்லாத உள்நாட்டு சவால்களை எதிர்கொள்கிறது. அரசியல் விஞ்ஞானியும் தெற்காசிய அறிஞருமான ஸ்டீபன் பி. கோஹன் குறிப்பிட்டது போல், அதன் "சிறந்த இராணுவம்" தோல்வியடைந்த பொருளாதாரம், பிளவுபட்ட சமூகம் மற்றும் நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதிகளை நம்பியுள்ளது. பாகிஸ்தான் நிலைமை சாதகமான தேர்தல் முடிவைப் பெற இயலாமை மற்றும் PTI மற்றும் பிற குழுக்களின் தற்போதைய எதிர்ப்புகள் குறிப்பிடத்தக்க வரம்புகளை வெளிப்படுத்துகின்றன.




Original article:

Share:

நாடுகள் ஏன் வெற்றி பெறுகின்றன அல்லது தோல்வியடைகின்றன என்பதை விளக்குவதற்கான ஒரு நோபல் பரிசு -பிரசாந்த் பெருமாள் ஜெ

 2024-ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களான டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிறுவனங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்ததற்காக திங்களன்று ராபின்சனுக்கு பரிசு வழங்கப்பட்டது. நாடுகள் ஏன் வெற்றி பெறுகின்றன அல்லது தோல்வியடைகின்றன என்பதைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காக அவர்களின் பணியை பரிசுக் குழு அங்கீகரித்துள்ளது.


இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களின் பணியின் முக்கியத்துவம் என்ன? 


சில நாடுகள் பணக்காரர்களாக இருக்கின்றன மற்ற சில நாடுகள் ஏழை நாடுகளாக ஏன் இருக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர். 20% பணக்கார நாடுகளின் சராசரி வருமானம் 20% ஏழைகளை விட 30 மடங்கு அதிகம் என்று நோபல் பரிசு குழு குறிப்பிட்டது. தொழில்துறை புரட்சியானது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே வாழ்க்கைத் தரத்தில் ஒரு பெரிய இடைவெளியை (Great Divergence) உருவாக்கியது என்பதால், பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையேயான வாழ்க்கை நிலைமைகளில் உள்ள பெரிய வேறுபாடுகளை விளக்குவதற்கு பல கோட்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 


மேற்கத்திய நாடுகள் இன்றும் செல்வந்தராக இருப்பதற்கு மேற்கத்திய காலனித்துவமே (Western colonialism) முக்கியக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இயற்கை வளங்களில் உள்ள வேறுபாடுகள் சில நாடுகள் ஏன் மற்ற நாடுகளை விட வளமானவை என்பதை விளக்குகின்றன என்று மற்றவர்கள்  கூறுகின்றனர். கூடுதலாக, உளவுத்துறை மற்றும் சீரற்ற வரலாற்று நிகழ்வுகளும் ஒரு நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

 

எவ்வாறாயினும், 2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர்கள், நாடுகளுக்கிடையேயான பொருளாதார வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் நிறுவனங்களின் தரம் என்று நம்புகிறார்கள். இந்த யோசனை 2012-ஆம் ஆண்டில் டேரன் அசெமோக்லு மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் எழுதிய நாடுகள் ஏன் தோல்வியடைகின்றன. சக்தி, செழிப்பு மற்றும் வறுமையின் தோற்றம் (Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty) என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் இணைந்து எழுதிய நீண்ட கால வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணமான நிறுவனங்கள் என்ற 2004-ஆம் ஆண்டு  கட்டுரையிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.


நிறுவனங்களின் தரம் ஏன் மிகவும் முக்கியமானது? 


நோபல் பரிசு பெற்றவரும் புதிய நிறுவன பொருளாதாரத்தின் முன்னோடியுமான டக்ளஸ் நோர்த்தின் கூற்றுப்படி, நிறுவனங்கள் என்பது மனிதர்கள் ஒருவருக்கொருவர் கையாளும் போது எதிர்கொள்ளும் ஊக்கங்களை வரையறுக்கும் முக்கிய விதிகள் ஆகும். எடுத்துக்காட்டாக, நேர்மையான குடிமக்களின் சொத்துக்களை அரசு கைப்பற்றுவதைத் தடுக்கும் நிறுவனங்கள், சாதாரண குடிமக்களுக்கு அபகரிப்பு பயம் இல்லாமல் கடினமாக உழைக்க ஊக்கமளிக்கும். மேலும், இது பொதுவான பொருளாதார செழுமைக்கு வழிவகுக்கும்.  மறுபுறம், அபகரிப்பை சட்டப்பூர்வமாக்கும் நிறுவனங்கள் தனிநபர் ஊக்குவிப்புகளை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும்.

 

அசெமோக்லு மற்றும் ஜான்சன் ஆகியோர் தங்கள் புத்தகத்தில் நிறுவனங்கள் "உள்ளடக்கியதாக" (‘inclusive’) அல்லது "பிரித்தெடுக்கக் கூடியதாக" (‘extractive’) இருக்கலாம் என்று குறிப்பிட்டனர். உள்ளடக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பான தனியார் சொத்துரிமை மற்றும் ஜனநாயகத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் (Extractive institutions) பாதுகாப்பற்ற தனியார் சொத்து உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. 


டேரன் அசெமோக்லு மற்றும் சைமன் ஜான்சன் ஆகியோர் உள்ளடக்கிய நிறுவனங்கள் (inclusive institutions) நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் வாழ்க்கைத் தரங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கு நேர்மாறாக, பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வறுமையை உருவாக்குவதாக அவர்கள் கண்டறிந்தனர்.


இதைப் புரிந்து கொள்ள, நீண்ட கால பொருளாதார விளைவுகளில் காலனித்துவ நிறுவனங்களின் தாக்கத்தை ஆய்வு செய்ய, டேரன் அசெமோக்லு மற்றும் சைமன் ஜான்சன் ஆகியோர் பல்வேறு காலனிகளில் காலனித்துவவாதிகள் எந்த வகையான நிறுவனங்களை நிறுவியுள்ளனர் என்பதை ஆய்வு செய்தனர்.  ஒரு காலனித்துவ சக்தி ஒரு நாட்டில் குடியேற விரும்புவது இல்லை. 


பெரும்பாலும் மோசமான புவியியலில் இருந்து அதிக இறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அது பிரித்தெடுக்கும் நிறுவனங்களை உருவாக்கியது. இந்த நிறுவனங்கள் வளங்களை விரைவாக எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. இந்தியாவில், ஆங்கிலேயர்கள் முக்கியமாக நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கு பதிலாக வளங்களை விரைவாக பிரித்தெடுக்க வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களை நிறுவினர். இருப்பினும், காலனித்துவவாதிகள் நீண்ட காலத்திற்கு குடியேறுவதை நோக்கமாகக் கொண்ட நாடுகளில், அவர்கள் உள்ளடக்கிய நிறுவனங்களை உருவாக்கினர்.


 இந்த நிறுவனங்கள் முதலீட்டை ஊக்குவித்தது மற்றும் குறுகிய கால சுரண்டலை விட நீண்ட கால பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. உதாரணமாக, அமெரிக்கா நீண்ட கால பொருளாதார வெற்றியை வளர்க்கும் உள்ளடக்கிய நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.


நிறுவனங்கள் கலாச்சார காரணிகளை கொண்டிருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கலாச்சார அம்சங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களால் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட விதிகளை பாதிக்கலாம்.


உள்ளடக்கிய நிறுவனங்கள் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்தால், ஏன் அவை அதிகமாக இல்லை?


நோபல் பரிசு பெற்றவர்கள், நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான, உள்ளடக்கிய நிறுவனங்களை ஏன் பல நாடுகள் ஏற்கவில்லை என்பதை விளக்குகிறார்கள். ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளில் எதிர்கொள்ளும் தேர்வுகள் இதற்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் மூலம் ஆட்சியாளர்கள் தங்களுக்குப் தேவையான ஆதாரங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும்போது, ​​அனைவருக்கும் பயன் தரக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்க வேண்டிய தேவை  அவர்களுக்கு இல்லை. 


இதன் விளைவாக, சில ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அழுத்தம் கொடுக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் தயக்கத்துடன் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் மேலும் உள்ளடக்கிய நிறுவனங்களை உருவாக்கலாம்.


நோபல் பரிசு 2024 : அசெமோக்லு, ஜான்சன் மற்றும் ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசின் சிறப்பு என்ன?


பொருளாதார நோபல் பரிசு முக்கியமான நிகழ்காலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆராய்ச்சிக்காக வழங்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலின ஊதிய இடைவெளி மற்றும் வங்கி முறையின் பலவீனங்களைப் ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 


இந்தத் தலைப்புகள் பொருளாதார வல்லுநர்களுக்கு முக்கியமானவை என்றாலும், பொருளாதாரம் முதலில் ஆராய வேண்டிய அடிப்படைக் கேள்விகளை அவை தீர்க்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசு, எந்தவொரு பொருளாதாரத்திலும் விதிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களின் முக்கிய தலைப்பில் உலகின் கவனத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்கிறது.  இதனால்  அதில் நடக்கும் அனைத்தையும் உண்மையில் பாதிக்கிறது.




Original article:

Share:

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான திட்ட வரைவு - பவன் ரிபு

 சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வதும் ஒரு கடுமையான குற்றமாக வகைப்படுத்துகிறது.


குழந்தைகள் மீதான இணைய வழி பாலியல் குற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு, குழந்தைகளுக்கான நியாயமான உரிமைகள் கூட்டணியின் (Just Rights for Children Alliance) மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு சமூகம், குற்றம் மற்றும் குழந்தை உரிமைகள் ஆகியவற்றில் நீடித்த உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். 


ஜனவரி 2024-ல், சென்னை உயர் நீதிமன்றம் சிறுவர் ஆபாசப் படங்களைப் பதிவிறக்குவது அல்லது பார்ப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது. இந்த முடிவு 28 வயதான ஒருவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது பல்வேறு கேள்வியை எழுப்பியது: ஒரு குழந்தையை பாலியல் வன்முறை செய்வதைத் தேடிப் பார்த்து, அதன் மூலம் அதற்கான தேவையை உருவாக்குபவர் எப்படி தண்டிக்கப்படாமல் இருக்க முடியும்? இந்தத் தீர்ப்பு 2012-ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (Protection of Children from Sexual Offences (POCSO) Act) நோக்கத்திற்கு எதிரானது மற்றும் குழந்தைகள் சுரண்டப்படும் ஆபத்துகளை அதிகரிக்கும்.


கடந்த செப்டம்பர் 23 அன்று, உச்ச நீதிமன்றம் தவறைத் திருத்தியது. குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான பொருட்களை (Child Sexual Exploitative and Abuse Material (CSEAM)) பதிவிறக்கம் செய்து சேமிப்பதை குற்றமாக கருதி குற்றத்தின் வரையறையை நீதிமன்றம் விரிவுபடுத்தியது. நீதிமன்றம் CSEAM-ஐ எதிர்த்துப் போராட ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியது மற்றும் இந்திய சட்டத்தை பின்பற்றுவதற்கு சமூக ஊடகத் தளங்களில் கடுமையான பொறுப்புகளை குறிப்பிட்டது.


குழந்தை ஆபாசத்திலிருந்து குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் பொருள்  என மாற்றுவதன் மூலம், தீர்ப்பு இந்த பிரச்சினையை வயது வந்தோருக்கான நடத்தைக்கு பதிலாக கடுமையான குற்றமாக கருதுகிறது. இந்த உள்ளடக்கத்தைத் தேடும் அல்லது பதிவிறக்கம் செய்பவர்கள் குழந்தைகளை பாலியல் வன்முறை மற்றும் சுரண்டலை ஆதரிக்கும் கோரிக்கையை உருவாக்குகிறார்கள் என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது. 


இந்தக் குற்றச் செயல்கள் நடந்துகொண்டிருப்பது கவலையளிக்கிறது. இந்த படங்கள் ஆன்லைனில் இருக்கும், குற்றம் நடந்து நீண்ட காலத்திற்குப் பிறகு குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.  பல குழந்தைகள் தங்கள் படங்கள் ரகசியமாகப் பகிரப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதை உணராமல் இருப்பது இன்னும் கவலை அளிக்கிறது. 


தேவையான நடவடிக்கைகள் 


இந்த தீர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்றாலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே. அதன் தாக்கத்தை முழுமையாக உணர, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வை உறுதி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய அணுகுமுறைகள் பெரும்பாலும் CSEAM வைத்திருப்பவர்களைத் தண்டிப்பதில் கவனம் செலுத்துகின்றன. 


அதே, நேரத்தில் இந்த படங்களின் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். குழந்தைகளை பாதுகாக்கும் உலகளாவிய ஒருங்கிணைந்த திட்டத்தின் அவசரத் தேவை உள்ளது. இத்திட்டம் குற்றவாளிகளை மட்டும் குறிவைக்காமல், சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை சுரண்டலின் தன்மையை மாற்றியமைக்க வேண்டும்.

 

முதலாவதாக, சைபர் குற்றம் என்பது இந்திய சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். மேலும், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் குற்றப்பொருள் ஒரு வகை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக சேர்க்கப்பட வேண்டும். டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் குழந்தைகளை சேர்ப்பது மற்றும் கட்டாய வேலை அல்லது பாலியல் சுரண்டலுக்காக கடத்துவது போன்ற புதிய குற்றங்களும் வெளிப்படையாக தடை செய்யப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களின் அதிகரிப்பு சிக்கலை மோசமாக்குகிறது. இது உண்மையான மற்றும் போலியான படங்களுக்கு இடையிலான வேறுபாட்டை குறைகிறது. இந்த காரணிகள் அதிகாரிகளுக்கு நீதியை உறுதி செய்வதில் சிக்கலை உருவாக்குகிறது. 


செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய ஆழமான போலிகள் உட்பட குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான பொருட்களை (Child Sexual Exploitative and Abuse Material (CSEAM))-ஐ உருவாக்குவதை உண்மையான குழந்தை எதிரான குற்றங்களை  போலவே கருத சட்ட மாற்றங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு மூலம் குழந்தைகளுக்கு எதிராக உருவாக்கப்படும் குற்றங்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது இன்னும் பெரிய அச்சுறுத்தலாக மாறும்.


இரண்டாவதாக, நிகழ்நேரத்தில் சட்ட அமலாக்கத்திற்கு CSEAM-ஐப் புகாரளிப்பதற்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பேற்க வேண்டும். தீர்ப்பின்படி, இடைத்தரகர்கள் அத்தகைய உள்ளடக்கத்தை உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.


மூன்றாவதாக, இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து வரும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகப் பொருட்கள் பற்றி அதிகரித்து வரும் அறிக்கைகளைக் கையாள மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தடயவியல் ஆய்வகத்தை இந்தியா அமைக்க வேண்டும். தற்போது, ​​இன்டர்போல் போன்ற சர்வதேச முகமைகள் இந்திய ஐபி முகவரிகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு (National Crime Records Bureau (NCRB)) தெரிவிக்கின்றன.  


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த தகவலை மாநில அதிகாரிகளுக்கு அனுப்புகிறது. இந்தியாவுக்கு அதன் சொந்த ஆய்வகம் இருந்தால், செயல்முறை வேகமாக இருக்கும். இந்த ஆய்வகம் நாட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்காணிக்கலாம். இந்திய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நிகழ்நேர தகவல்களை அனுப்பலாம் மற்றும்  தாமதங்களைக் குறைக்கலாம்.

 

நான்காவதாக, குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான பொருட்களை தேடுவது அல்லது பதிவிறக்கம் செய்ததற்காக தண்டனை பெற்றவர்களின் பெயர்கள் பாலியல் குற்றவாளிகள் குறித்த தேசிய தரவுத்தளத்தில் சேர்க்கப்பட வேண்டும். இந்த நபர்கள் குழந்தைகளை உள்ளடக்கிய வேலைகளில் பணியாற்றுவதையும் தடை செய்ய வேண்டும்.


எல்லை இல்லாத பதில் 


மிக முக்கியமாக, எல்லை இல்லாத குற்றத்திற்கு பதில் தேவைப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் எதிர்கால உச்சி மாநாடு 2024 குழந்தைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை தவறவிட்டது. குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகப் பொருட்கள் (CSEAM) என்பது பல பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய தொழில்துறையாக மாறிவிட்டது.


 இது தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த குற்றத்தை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். CSEAM-ஐ எதிர்த்துப் போராட, சட்டப்பூர்வமாக அதை கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கை (international convention) தேவை. 


சட்ட அமலாக்கம், அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்த தொடர்புகளை உடைத்து, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் சர்வதேச தரவுத்தளத்தை உருவாக்குவது இந்த சிக்கலைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும். இந்த இணையத் தளங்களை கண்காணிப்பதிலும் சீர்குலைப்பதிலும் நிதி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.


 உலக நாடுகளின்  ஒத்துழைப்பு இல்லாமல், இந்த அமைப்புகளின் தொடர்புகளை உடைப்பது கடினம். எனவே, அரசு மற்றும் அரசு சாரா குழுக்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச ஒப்பந்தம் தேவைப்படுகிறது. குற்றத்தின் நிதி அம்சங்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த பதிலை உறுதிப்படுத்த இந்த ஒப்பந்தம் அவசியம். இது குற்றவாளிகள் மற்றும் அவர்களின் தொடர்புகளை அடையாளம் காண உதவும் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும். 


குழந்தைகளைப் பாதுகாக்க நாடுகள் எவ்வாறு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டிய முக்கியமான தருணம் இது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, ​​இந்தியாவின் அணுகுமுறையை மாற்றி, குழந்தை சுரண்டலை (child exploitation) எதிர்த்துப் போராடுவதில் இது உலகிற்கும் ஒரு முன்மாதிரியாக அமையும்.




Original article:

Share:

கிக் தொழிலாளர்களுக்கு சரியான சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் - கிங்சுக் சர்க்கார்

 கிக் வேலையில் 'வேலைவாய்ப்பு உறவை' வரையறுப்பது மிகவும் முக்கியமானது. 


ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமூக பாதுகாப்பு திட்டங்களில் கிக் தொழிலாளர்களை சேர்க்கும் தேசிய சட்டத்தை உருவாக்கி வருகிறது. இது கிக் தொழிலாளர்களுக்கு சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வூதிய சேமிப்பு போன்ற பலன்களை வழங்கும். சவாரி-பகிர்வு (ride-sharing) அல்லது உணவு விநியோக சேவைகள் போன்ற நிறுவனங்களை சமூக பாதுகாப்பு நிதிக்கு தங்கள் வருவாயில் 1%-2% பங்களிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


இந்த நிதி கிக் தொழிலாளர்களுக்கு உடல்நலக் காப்பீடு போன்ற பலன்களை வழங்கும். கிக் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரையறைகளை இன்றைய பணிச்சூழலுக்கு ஏற்றவாறு அரசாங்கம் புதுப்பித்து வருகிறது மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது.


புதிய சட்டம் கிக் தொழிலாளர்களுக்கான நல வாரிய மாதிரியை உருவாக்கும். இந்த வாரியம் அவர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒரு நிதியை உருவாக்கும். நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் சரியான காரணங்களுடன் 14 நாட்களுக்கு முன்னர் முன்னறிவிப்பை தொழிலாளர்களுக்கு தெரிவிக்க  வேண்டும். பணிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன அல்லது ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது போன்ற அவற்றின் தானியங்கு அமைப்புகள் (automated systems work) எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் நிறுவனங்கள் தெளிவாக இருக்க வேண்டும். கூடுதலாக, கிக் தொழிலாளர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு அமைப்பு அமைக்கப்படும்.


கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை அரசாங்க வலைத்தளத்தில் பதிவு செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சர் கூறினார். தொழிலாளர் அமைச்சகத்தின் e-Shram வலைத்தளத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள், ஆயுள்காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் பிற நன்மைகளைப் பெறலாம்.


தொழிலாளர் குறியீடுகள்  (Labour codes)


இந்த சூழலில், இந்தியா அரசு 2019 மற்றும் 2020-ல் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை உருவாக்கியது. இந்தக் குறியீடுகள் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்தி மேம்படுத்தியது. 29 ஒன்றிய தொழிலாளர் சட்டங்களை நான்கு முக்கிய வகைகளாக அரசு இணைத்தது அவை: 


1.ஊதியங்கள் 

2.சமூகப் பாதுகாப்பு

3.தொழில்துறை உறவுகள் 

4.தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்.


கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களைக் குறிப்பிடும் ஒரே குறியீடு சமூகப் பாதுகாப்புக் குறியீடு (Social Security Code) 2020 ஆகும்.


இந்த குறியீட்டில், கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்கள் முறைசாரா துறையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள். அதன்படி, கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்க இந்த குறியீடு வழிவகுத்தது. மேலும், முறைசாரா தொழிலாளர்களைப் போலவே, கிக் தொழிலாளர்களும் சுய அறிவிப்பு மூலம் e-Shram வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 


பணியாளர் வரையறை 


சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ல் கிக் தொழிலாளர்களின் வரையறையிலிருந்து இந்த பிரச்சினை எழுகிறது. இது அவர்களை பாரம்பரிய முதலாளி-பணியாளர் உறவுக்கு வெளியே வைக்கிறது. பல கிக் முதலாளிகள், நன்கு அறியப்பட்ட நிறுவனங்களைப் போலவே, முறையான துறையில் முறையான வணிகங்களாக போல செயல்படுவதால் பிரச்சனையாக உள்ளது. பாரம்பரிய வேலைவாய்ப்பு கட்டமைப்பிலிருந்து கிக் தொழிலாளர்களை விலக்குவது பிரச்சனையாக  உள்ளது.


“திரட்டிகள்” (‘aggregator’) என்று அழைக்கப்படும் சில நிறுவனங்கள், கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர் பொருளாதாரங்களில் வேண்டுமென்றே வேலைவாய்ப்பு உறவுகளை தெளிவற்றதாக மாற்ற முயற்சிக்கின்றன. இந்த அணுகுமுறை தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை தங்கள் தொழிலாளர்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிக் பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பின் தன்மை தெளிவாக இல்லை. கிக் தொழிலாளர்கள் பெரும்பாலும் பணியாளர்களுக்கு பதிலாக சுயாதீன தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

 

வேலை உறவுகளை தெளிவில்லாமல் செய்வது கிக் தொழிலாளர்கள் சுதந்திரமான தொழிலாளர்கள் என்ற தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020 இந்த தவறான புரிதலை ஏற்றுக்கொண்டு, கிக் தொழிலாளர்களை முறைசாரா துறையின் ஒரு பகுதியாக வகைப்படுத்துகிறது. இருப்பினும், கிக் பொருளாதாரத்தில் உண்மையான வேலைவாய்ப்பு உறவை இந்த குறியீடு தெளிவுபடுத்தவில்லை.


நிறுவன சமூக பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, 1961-ஆம் ஆண்டின் மகப்பேறு நன்மைச் சட்டத்தின் (Maternity Benefit Act, 1961) கீழ் முறையான தொழிலாளர்கள் 26 வார ஊதிய விடுப்பு மற்றும் பணிப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.


சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், பதிவுசெய்யப்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் ₹5,000 முதல் ₹10,000 வரை மகப்பேறுக்கான பணப் பலன்களைப் பெறுகிறார்கள். இது நிறுவன சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு இடையே தெளிவான இடைவெளியை காட்டுகிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020 கிக் தொழிலாளர்களுக்கு சில சமூகப் பாதுகாப்பு திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. ஆனால், முழு நிறுவன சமூகப் பாதுகாப்பு இல்லை.


கிக் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய சட்டங்கள் போன்ற பிற பாதுகாப்புகளையும் இழக்கிறார்கள். அவர்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. கூடுதலாக, கிக் தொழிலாளர்கள் தொழில்துறை உறவுகள் குறியீடு  2020-லிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.


தொழிலாளர் சட்டங்களின் கீழ் பாதுகாப்பின் அடித்தளம் ஒரு தெளிவான வேலை உறவாகும். இருப்பினும், இந்த உறவு இந்தியாவில் கிக் வேலைக்காக வரையறுக்கப்படவில்லை. ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சட்டங்களும் கிக் தொழிலாளர்களுக்கு இந்த முக்கியமான வரையறையைக் கொண்டிருக்கவில்லை.


முக்கிய பிரச்சினை 


 ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தியாவில் வவளர்ந்து வரும் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க விரும்பினால், அது கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களின் வேலைகளில் உள்ள வேலைவாய்ப்பு உறவை தெளிவாக வரையறுக்க வேண்டும். இதன் பொருள் "திரட்டுபவர்களை" முதலாளிகளாக அங்கீகரிப்பது மற்றும் வேலைவாய்ப்பு உறவை தெளிவுபடுத்துவது முக்கியமான முன்னேற்றமாகும்.


 2021-ஆம் ஆண்டு உபெர் நிறுவன வழக்கில், U.K உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு முக்கியமான உதாரணம். Uber ஒரு முதலாளி என்றும், Uber டிரைவர்கள் "தொழிலாளர்கள்" என்றும், Uber நாட்டின் தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


வேலைவாய்ப்பு உறவு தெளிவாக வரையறுக்கப்பட்டவுடன், முன்மொழியப்பட்ட நான்கு தொழிலாளர் குறியீடுகளில் கிக் தொழிலாளர்கள் சேர்க்கப்படலாம். இது தனி சட்டங்களின் தேவையை நீக்கும். ஒன்றிய அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நல வாரிய மாதிரி கடந்த காலங்களில் பயனுள்ளதாக இல்லை. குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, முறையான முதலாளிகளிடம் பணிபுரிந்தாலும் முறைசாரா என வகைப்படுத்தப்பட்டது. கிக் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உறவை தெளிவுபடுத்துவது இத்துறையில் அவர்களின் நிலையை முறைப்படுத்த உதவும்.


கூடுதலாக, தற்போதுள்ள சட்டங்களை எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் தொழிலாளர் குறியீடு உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட தொழிலாளர் குழுக்களுக்கு தனியான சட்டங்களை உருவாக்குவது இந்த இலக்கிற்கு எதிரானது. கிக் வேலையில் வேலைவாய்ப்பு உறவை அங்கீகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இது முடிந்ததும், மற்ற சிக்கல்களைத் தீர்க்க முடியும். 


கிங்ஷுக் சர்க்கார் கோவா மேற்கு வங்க அரசாங்கத்தின் முன்னாள் தொழிலாளர் நிர்வாகியாக உள்ளார்.




Original article:

Share: