உணவு பணவீக்கம் -ரோஷினி யாதவ்

 உணவுப் பணவீக்கம் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது குடும்ப வருமானத்தை குறைக்கிறது மற்றும் பிற முக்கிய தேவைகளுக்கான செலவுகளை கட்டுப்படுத்துகிறது.


என்ன பிரச்சினை?


உணவு பணவீக்கம் 14 மாதங்களில் முதல் முறையாக இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உணவு விலைக் குறியீடு (Combined Food Price Index (CFPI)) அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 9.24 சதவீதமாகவும், இதே மாதத்தில் 6.61 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 இந்தியாவில் உணவு பணவீக்கத்திற்கான காரணங்கள் என்ன?  

 

உணவு பணவீக்கம் என்பது உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த நிகழ்வுக்கு பங்களிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வது முக்கியமானது. குறிப்பாக, அதிகரித்து வரும் உணவு பணவீக்கத்தின் பின்னணியில். இந்தியாவில், வழங்கல் மற்றும் தேவை (supply and demand) காரணிகள் இரண்டும் உணவு பணவீக்கத்தை பாதிக்கின்றன. இருப்பினும், இது முதன்மையாக வழங்கல் முறையின் சிக்கல்களால் இயக்கப்படுகிறது. 


இந்தியாவில் உணவு பணவீக்கத்திற்கான சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு: 

 




1. காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள்: 


வரலாற்று ரீதியாக, பருவமழை இந்தியாவில் உணவு பணவீக்கத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இருப்பினும், காலநிலை மாற்றம் மழைப்பொழிவைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது மற்றும் பயிர் விளைச்சலை நேரடியாக பாதிக்கும் கூடுதல் வானிலை நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி உயரும். 

 

கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ் தலைமை பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா,  "காய்கறிகளின் விலை உயர்வு, குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம், நாட்டின் சில பகுதிகளில் பருவம் தவறிய மழை மற்றும் நீடித்த பருவமழை ஆகியவை காரணமாக இருக்கலாம்..."  என்று குறிப்பிட்டுள்ளார். 

 

வெப்ப அலைகள் மற்றும் பருவம் தவறிய மழை போன்ற நிகழ்வுகள் உணவு உற்பத்தி மற்றும் விலை கணிப்புகளில் சிக்கலைச் சேர்த்துள்ளன. இது அதிக உணவு பணவீக்கத்தின் அபாயத்தை உயர்த்துகிறது. காலநிலை மாற்றம் காரணமாக இந்த அதிர்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது.  

 

தர்மகீர்த்தி ஜோஷி, பன்குரி டாண்டன், ஷார்வாரி ராஜாதிக்ஷா என்பவர்கள், "2022-23 ஆம் ஆண்டில், பருவமழை இயல்பாக மாறினாலும், வெப்ப அலைகள் மற்றும் பருவம் தவறிய மழை பணவீக்கத்தை அதிகரிக்க பங்களித்தன. 2023-24ஆம் ஆண்டில், எல் நினோ புவி வெப்பமடைதலால் மோசமடைந்தது. இது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இந்தியாவின் வறட்சிக்கு  வழிவகுத்தது. 

 

இத்கையை நிகழ்வுகள், இயற்கையில் மாறுபட்டவை என்றாலும், அவை ஒட்டுமொத்த உணவு பணவீக்கத்தை பிடிவாதமாக அதிகமாக வைத்திருக்கின்றன. வெப்ப அலைகள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கோதுமை தானியங்களின் உற்பத்தி குறைதல் மற்றும் பூச்சி தொற்று ஆகியவற்றால் பயிர் உற்பத்தியை பாதித்துள்ளன. இதனால், பால் மற்றும் கோழி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. மறுபுறம், அறுவடை மற்றும் போக்குவரத்து நிலைகளின்போது பருவம் தவறிய மழை பயிர்களை பாதித்தது. 


2. உலகளாவிய விலை ஏற்ற இறக்கம்: 

கேர்எட்ஜ் மதிப்பீடுகளின் தலைமை பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா, பல்வேறு உணவு இறக்குமதிகளை இந்தியா நம்பியிருப்பது உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு பாதிக்கப்படக்கூடியதாக மாற்றுகிறது.  இது உணவு பணவீக்கத்திற்கு பங்களிக்கிறது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலைகளின் உயர்வு மற்றும் பல்வேறு சமையல் எண்ணெய்களின் அடிப்படை சுங்க வரியின் சமீபத்திய உயர்வு போன்றவை அதிக பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

 ஏனெனில், அவை இறக்குமதியை சார்ந்துள்ளன. உணவு பணவீக்கத்தை நிர்வகிப்பது முக்கியம். ஏனெனில், இது வீட்டு பணவீக்க எதிர்பார்ப்புகளை நேரடியாக பாதிக்கிறது.  இந்த நிலைமை உணவு விலைகளை உறுதிப்படுத்த கூடுதல் விநியோக நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

3. உலகளாவிய விநியோக இடையூறுகள்: 

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற காரணிகள், உணவு பணவீக்கத்திற்கு பங்களிக்கும் உலகளாவிய விநியோக இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, அதிக உலகளாவிய விலைகள் ஏற்றுமதியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதன் மூலமும், உள்நாட்டு பற்றாக்குறையை மோசமாக்குவதன் மூலமும் பணவீக்கத்தை அதிகரிக்கின்றன. 

4. விநியோகச் சங்கிலிகளில் கட்டமைப்பு பலவீனங்கள்: 

உலகளாவிய காரணிகளுக்கு மேலதிகமாக, தளவாட சிக்கல்கள் போன்ற உள்நாட்டு பிரச்சினைகளும் அதிக பணவீக்கத்திற்கு பங்களிக்கின்றன. 

5. பிற காரணிகள்: 

குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (minimum support prices (MSP)), இறக்குமதி / ஏற்றுமதி கொள்கைகள் மற்றும் இடையக பங்கு மேலாண்மை போன்ற காரணிகளும் உணவு பணவீக்கத்தை கணிசமாக பாதிக்கின்றன. 


WPI vs CPI 

நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு பணவீக்க குறியீடுகள் ஆண்டுக்கு ஆண்டு மொத்த விற்பனை விலைக் குறியீடு (wholesale price index (WPI) ) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஆகும். இவை மொத்த பணவீக்க விகிதம் என்றும்,  சில்லறை பணவீக்க விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது. WPI மற்றும் CPI இரண்டும் விலைக் குறியீடுகள். CPI அடிப்படையிலான பணவீக்க தரவு புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் தொகுக்கப்படுகிறது மற்றும் WPI அடிப்படையிலான பணவீக்க தரவு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை  மூலம் ஒன்றாக இணைக்கப்படுகிறது. 


உணவு பணவீக்கம் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக உள்ளது. இது வீட்டு வருமானத்தை பாதிக்கிறது.  பிற பகுதிகளில் செலவினங்களைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. 

1. பணவீக்கம் மற்றும் வீட்டின் மீதான தாக்கம்: 

ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது நுகர்வோர் விலைக் குறியீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது மற்றும் அடிக்கடி நுகரப்படுகிறது. இது பணவீக்க எதிர்பார்ப்புகளை பாதிக்கும் மற்றும் ஊதியங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.  கூடுதலாக, அதிக உணவு பணவீக்கம் வீட்டு வரவு செலவுத் திட்டங்களை மேலும் கடினமாக்குகிறது. 

உங்களுக்கு தெரியுமா? 

நுகர்வோர் விலைக் குறியீட்டின் மொத்த பங்கில் உணவு மற்றும் பானங்கள் 45.86 சதவீதமாக உள்ளன. 

 

2. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏழைகள் மீதான தாக்கம்: 


உணவுப் பணவீக்கம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் வாழ்வாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், இது நாட்டின் ஏழை மக்களின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வியை மோசமாக பாதிக்கிறது. 

 

உங்களுக்கு தெரியுமா? 

  1. முதன்மை பணவீக்கம் (Headline inflation)  சந்தையில் உள்ள அனைத்து பொருட்களின் மதிப்பிலும் ஏற்படும் மாற்றத்தை முன்வைக்கிறது. 

  1. மைய பணவீக்கம் (Core inflation) என்பது உணவு மற்றும் எரிபொருள் விலைகளை அகற்றுவதன் மூலம் கணக்கிடப்படும் பணவீக்கத்தின் அளவீடாகும்.  ஏனெனில், உணவு மற்றும் எரிபொருள் விலைகள் பெருமளவில் ஏற்ற இறக்கமாக இருக்கும். 

  1. முக்கிய பணவீக்கத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை பணவீக்கத்தை நீக்குவதன் மூலம் சூப்பர் கோர் பணவீக்கம் (Super core inflation) கணக்கிடப்படுகிறது 

 

அதிக உணவு பணவீக்க பிரச்சினையை தீர்க்க, அரசாங்கம் பல நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. அவற்றில் பின்வருவன அடங்கும்: 

 

1. குறைந்தபட்ச ஆதரவு விலை: 


குறிப்பிட்ட பயிர்களின் போதிய உற்பத்தி இல்லாத விநியோக முறை சிக்கலை தீர்க்க, அவற்றின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இந்த உணவுப் பொருட்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும் அரசாங்கம் அதிக குறைந்தபட்ச ஆதரவு விலையை (minimum support price (MSP)) அறிவிக்கிறது.  இது விலைகளை உறுதிப்படுத்த உதவுகிறது. 

 

2. விலை நிலைப்படுத்தும் நிதி: 


வேளாண் பொருட்களின் விலை நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்த விலை நிலைப்படுத்தல் நிதி (Price Stabilization Fund (PSF)) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

3. பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைக்கு எதிரான ஆலோசனைகள்: 


பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அவ்வப்போது மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (Essential Commodities Act) 1955 மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் (Prevention of Black Marketing and Maintenance of Supplies of Essential Commodities Act) 1980 ஆகியவற்றை திறம்பட அமல்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

4. இருப்பு வரம்புகள் மற்றும் ஏற்றுமதி வரிகளை விதித்தல்: 


உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு சில பொருட்களின் இருப்பு வரம்புகளை அரசாங்கம் விதிக்கிறது. உள்நாட்டு சந்தைகளில் இந்த பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக சில பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. 

உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியிருந்தாலும், இந்த முயற்சிகள் தொடர்ந்து உயர்ந்த உணவு பணவீக்க விகிதங்களைக் குறைப்பதில் பயனுள்ளதாக இல்லை. இது சில்லறை பணவீக்கத்தை உயர்த்துவதற்கு கணிசமாக பங்களித்துள்ளது. இந்த சூழலில், சில கூடுதல் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படலாம். அவை: 

1. நெகிழக்கூடிய விவசாயக் கொள்கை: 

தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறுவது உணவு பணவீக்கத்துடன் தொடர்புடைய அபாயங்களில் நீண்டகால உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால், கொள்கை வகுப்பாளர்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும். 



2. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு: 


உணவுப் பணவீக்கத்துடன் தொடர்புடைய தளவாட சிக்கல்களை நிவர்த்தி செய்ய உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். 

பொருளாதார ஆய்வறிக்கை (economic survey ) 2023-24-ன் படி, தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளில் தொடர்ச்சியான பருவகால உயர்வுகளைக் கருத்தில் கொண்டு, அத்தகைய குறிப்பிட்ட பயிர்களுக்கு உகந்த நவீன சேமிப்பு வசதிகளை உருவாக்குவதில் முன்னேற்றத்தை மதிப்பிடுவது மற்றும் அதிக பருவகால தேவை உள்ள அத்தகைய வசதிகளின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்வது முக்கியம். 

3. வேளாண்மையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல்: 

வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக ஊக்கத்தொகை தேவைப்படுகிறது.  தற்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and development (R&D)) முதலீடுகள் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.5 சதவீதம் மட்டுமே உள்ளன. இவை ICRIER அமைப்பின் 2023 ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், அதிக காலநிலை-நெகிழ்திறன் கொண்ட பயிர் வகைகளை உருவாக்க முடியும். 

4. முக்கிய எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்தும் முயற்சிகள்:  

பொருளாதார ஆய்வறிக்கை 2023-24 சூரியகாந்தி மற்றும் ராப்சீட்/கடுகு போன்ற முக்கிய எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. கூடுதலாக, அரிசி தவிடு எண்ணெய் மற்றும் சோள எண்ணெய் போன்ற வழக்கத்திற்கு மாறான எண்ணெய்களின் திறனை ஆராய இது பரிந்துரைத்தது.  சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு நுகர்வு உற்பத்தியைவிட வேகமாக அதிகரித்து வருவதால் இது மிகவும் முக்கியமானது. இதன் விளைவாக இறக்குமதியை சார்ந்திருப்பது அதிகரித்து வருகிறது.


Original article:

Share:

MATES : ஆஸ்திரேலியாவில் பணிபுரிய இளம் இந்தியர்களுக்கான புதிய திட்டம் குறித்து . . . -ராக்கி ஜக்கா

 ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகத்தின்படி, MATES ஆனது இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் ஆரம்பகால தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.


இந்தியாவைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் அந்நாட்டில் சில காலம் பணியாற்ற அனுமதிக்கும் புதிய திட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டு வந்துள்ளது.


திறமையான ஆரம்ப-தொழில்முறை திட்டத்திற்கான மொபிலிட்டி ஏற்பாடு (Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES)) பற்றிய விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.





MATES என்றால் என்ன?


ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகத்தின்படி, MATES ஆனது இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் ஆரம்பகால தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.


மே 23, 2023 அன்று, ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இடம்பெயர்வு மற்றும் மொபிலிட்டி கூட்டாண்மை ஏற்பாட்டில் (Migration and Mobility Partnership Arrangement (MMPA)) கையெழுத்திட்டன. MMPA என்பது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் என்பது இரு நாடுகளிலும் குடியேற்றத்தை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் கொண்டுவரப்பட்டது. மேலும், இது சட்டவிரோத மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. MMPA-ன் கீழ் MATES திட்டம் நிறுவப்பட்டது.


இந்த திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் நிபுணர்களுக்காக திறக்கப்படும். லூதியானாவைச் சேர்ந்த கல்வி ஆலோசனை நிறுவனமான EDU Planet இன் குடியேற்ற ஆலோசகர் கௌரவ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.


MATES திட்டத்தின் கீழ் யார் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்?


MATES பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இந்திய குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது:


- விண்ணப்பத்தின் போது அவர்கள் 30 வயது அல்லது அதற்கு குறைவானவர்கள்.

- அவர்கள் இதற்கு முன்பு MATES-ல் பங்கேற்றிருக்க கூடாது.


- வலுவான ஆங்கில மொழித் திறன்களைக் கொண்டவர்கள். IELTS மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக குறைந்தது 6, மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 5.


- அவர்கள் தகுதியான கல்வி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள்.


- புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT), செயற்கை நுண்ணறிவு (AI), நிதித் தொழில்நுட்பம் (FinTech) அல்லது விவசாயத் தொழில்நுட்பம் (AgriTech) ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்றவர்கள் ஆகியவர்கள் தகுதி பெற்றவர்களாவர்.


தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (National Institutional Ranking Framework (NIRF)) தரவரிசை 2024-ம் ஆண்டின்படி இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். 


பஞ்சாபிலிருந்து, தகுதியான பல்கலைக்கழகங்கள்: பஞ்சாப் பல்கலைக்கழகம் (Panjab University), சண்டிகர் பல்கலைக்கழகம் (Chandigarh University), தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (Thapar Institute of Engineering and Technology) மற்றும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் (Lovely Professional University) ஆகும். இதில், ஆஸ்திரேலிய  முதன்மையானவர்களின் ஸ்பான்சர்ஷிப் தேவை இல்லை.


இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?


MATES பங்கேற்பாளர்கள் ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகள் வரை வசிக்கலாம் மற்றும் வேலை செய்யலாம். விசா வைத்திருப்பவர்கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட படிப்புத் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகள் எதுவும் இல்லை. 


இருப்பினும், இந்தத் திட்டம் இளம் தொழில் வல்லுநர்கள் தங்கள் திறன்களையும் நெட்வொர்க்குகளையும் விரிவுபடுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் இது குறிப்பாக உண்மை.


MATES ஒரு முன்னோடித் திட்டமாக ஒரு வருடத்திற்கு முதன்மை விண்ணப்பதாரர்களுக்கு 3,000 இடங்களை வழங்கும். பங்கேற்பாளர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற சார்ந்திருப்பவர்களை அழைத்து வர விண்ணப்பிக்கலாம். சார்ந்திருப்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய உரிமை உண்டு. மேலும், இவர்கள் வருடாந்திர வரம்பில் கணக்கிடப்பட மாட்டார்கள்.


தங்கியிருக்கும் காலம் என்ன?


விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் முதன்முறையாக நுழைவதற்கு 12 மாதங்கள் உள்ளன. அவர்கள் முதலில் நுழைந்த நாளிலிருந்து 24 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கலாம். விசா ஆஸ்திரேலியாவிற்குள் பல நுழைவுகளை (multiple entries) அனுமதிக்கிறது. பங்கேற்பாளர்கள் மற்றொரு விசாவிற்கு விண்ணப்பிப்பதன் மூலம் தங்கள் தங்குமிடத்தை நீட்டிக்க முடியும். இந்த விசா அனைத்து தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வரை, தற்காலிக அல்லது நிரந்தர வசிப்பிடத்தை அனுமதிக்கும்.


விசா எப்படி வழங்கப்படும்?


வாக்குச்சீட்டின் மூலம் விசா வழங்கப்படும். வாக்குச் சீட்டு, விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறது. வாக்குச் சீட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ஆஸ்திரேலியன் டாலர் (AUD) 25 ஆகும். அதன் பிறகு, பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என்று கௌரவ் சவுத்ரி கூறினார்.




Original article:

Share:

இந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் பனிமூட்டம் ஏன் முன்கூட்டியே தொடங்கியது? - அஞ்சு அக்னித்ரி சாபா

 ஒவ்வொரு குளிர்காலத்திலும் வட இந்தியா ஏன் புகையால் மூடப்படுகிறது? இந்த ஆண்டின் தொடக்கத்தில் பனிமூட்டம் ஏன் தோன்றியது? 


வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தொடங்கும் போது, ஒரு வழக்கமான ஆனால் சிக்கலான நிகழ்வாக பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களை புகைமூட்டம் மூடுகிறது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் மாசுபாட்டின் இந்த அடர்த்தியான அடுக்கு வழக்கமான பிரச்சினையாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு, பனிப்பொழிவு மிகவும் முன்னதாகவே, குளிர்காலத்தின் தொடக்கத்திலே தோன்றியது. இது காற்றின் தரத்தில் கடுமையான சரிவை ஏற்படுத்தியுள்ளதால், பொது சுகாதாரம், பயணம் மற்றும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக, குளிர்காலத்தின் தொடக்கத்தில் ஏன் புகை மூட்டம் பரவலாக உள்ளது? என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி விளக்குகிறது.


பனிமூட்டம் என்றால் என்ன? 


புகை என்பது ஒரு வகை காற்று மாசுபாடு ஆகும். இது, ஒரு மங்கலான அல்லது மூடுபனியால் வளிமண்டலத்தை உருவாக்குகிறது. தெரிவுநிலையைக் குறைத்து காற்றின் தரத்தை பாதிக்கிறது. "புகைப்பனி" (Smog) என்ற சொல் முதன்முதலில் 1900களின் முற்பகுதியில் பயன்படுத்தப்பட்டது. இது புகை மற்றும் மூடுபனியின் கலவையை விவரிக்கிறது. இந்த மாசுபாடு முக்கியமாக நிலக்கரி எரிப்பதால் ஏற்பட்டது, இது தொழில்துறை பகுதிகளில் பொதுவானது. இன்றும், தொழில்துறை மற்றும் வாகன உமிழ்வுகள் அதிகம் உள்ள நகரங்களில் பனிமூட்டம் இன்னும் பரவலாக உள்ளது.


தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் மின் நிலையங்கள் போன்ற மூலங்களிலிருந்து நைட்ரஜன் ஆக்சைடுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள் (volatile organic compounds (VOC)) மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் துகள்கள் போன்ற மாசுபடுத்திகள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும்போது புகை உருவாகிறது. இந்த மாசுபடுத்திகள் சூரிய ஒளியின் முன்னிலையில் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து தீங்கு விளைவிக்கும் கலவையை உருவாக்குகின்றன. மூடுபனி அல்லது அதிக ஈரப்பதத்துடன் இணைந்தால், இந்த எதிர்வினை ஒரு அடர்த்தியான மூடுபனியை உருவாக்குகிறது. மேலும், மூடுபனி தெரிவுநிலையை குறைக்கிறது மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது.





ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனிமூட்டம் வருமா? 


ஆம், இது ஒவ்வொரு ஆண்டும், பொதுவாக நவம்பர் மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் வடக்கு சமவெளிகளில் வருகிறது. குளிர்காலம் குறைந்த வெப்பநிலை மற்றும் பலவீனமான சூரிய ஒளியைக் கொண்டுவருகிறது. இது வளிமண்டல தலைகீழ் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இது வெப்பமான காற்றின் ஒரு அடுக்கு குளிர்ந்த காற்றை தரைக்கு அருகில் சிக்க வைக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இந்த தலைகீழ் அடுக்கு மாசுபடுத்திகளை மேற்பரப்பிற்கு அருகில் வைத்து அவற்றை சிதறவிடாமல் தடுக்கிறது.


வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் புகைமூட்டத்திற்கு பயிர்க்கழிவுகளை எரிப்பது ஒரு முக்கிய பரவலான காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 


பயிர்க்கழிவுகளை எரிப்பதிலிருந்து வரும் புகை அதிக அளவு துகள்கள், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை வெளியிடுகிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், சருகுகளை எரிப்பது புகைமூட்டத்திற்கு ஒரே காரணம் அல்ல, இருப்பினும் இது பிராந்தியம் முழுவதும் மாசு அளவை தீவிரப்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டுள்ளது. 


பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தாண்டி, வாகன உமிழ்வு, தொழில்துறை புகை மற்றும் கட்டுமான தூசி உள்ளிட்ட ஆண்டு முழுவதும் வளிமண்டலத்தில் மாசு நிலைமைகள் காரணமாக குளிர்காலத்தில் மோசமடைகின்றன. வாகன வெளியேற்றமாக, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் நுண்ணிய துகள்களை (பிஎம் 2.5) வெளியிடுகிறது. அவை, புகைமூட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும். அனல் மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் மாசுக்களை வெளியிடுவதால், பிரச்சனை இன்னும் மோசமாகிறது.


இந்த ஆண்டு வட இந்தியாவில் குறிப்பிட்ட வானிலை நிலைமைகள் ஆரம்பகால புகைமூட்டத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தீபாவளிக்குப் பிறகு குளிர்காலம் தொடங்கியபோது மணிக்கு ஒரு கி.மீ வேகத்தில் நீடித்த மெதுவான காற்றின் வேகம் காற்றில் மாசுபடுத்திகள் குவிவதற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, மோசமான காற்றின் தரம் மற்றும் ஆரம்பகால புகை மூட்டத்திற்கு வழிவகுத்தது.


சண்டிகர் இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) அலுவலகத்தின் இயக்குனர் சுரீந்தர் குமார், மேற்கு இமயமலைக்கு மழையைக் கொண்டுவரும் வானிலை அமைப்புகளான பலவீனமான மேற்கத்திய இடையூறுகள் முதன்மையாக மலைகளில் செயல்படுவதால், சமவெளிகளுக்கு ஈரப்பதத்தை கொண்டு வந்து, புகை மூட்டத்திற்கு பங்களித்துள்ளது. 


பொதுவாக, நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் வடக்கு சமவெளிகளில் புகை மூட்டம் தோன்றும். இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட மழைப்பொழிவு காற்றின் இயற்கையான சுத்திகரிப்பைக் குறைக்கிறது. இதனால், மாசுபடுத்திகள் நீண்ட நேரம் இடைநிறுத்தப்பட அனுமதிக்கிறது. இது ஆரம்பகால புகைமூட்டத்திற்கு வழிவகுக்கிறது என்று சுரீந்தர் குமார் கூறினார்.


மற்றொரு காரணம், தீபாவளி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12 நாட்கள் முன்னதாக இருந்தது. மேலும், ஜோதிட காரணிகளால் பலரால் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. பட்டாசுகள் பரவலாக வெடிப்பதால் அதிக அளவு மாசுக்கள் காற்றில் வெளியிடப்படுகின்றன. பட்டாசுகள் நச்சு உலோகங்கள் மற்றும் வாயுக்களை வெளியிடுகின்றன. இதனால், இங்கு மூடுபனிக்கு பங்களிக்கின்றன. இது காற்றின் தரத்தில் உடனடி மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை உருவாக்குகிறது. 


காலநிலை மாற்றத்தால், வானிலை அமைப்புகளை மாற்றி வருகிறது. இது பருவமில்லாத புகை மற்றும் நீடித்த மாசு போன்ற நிகழ்வுகளுக்கு பங்களிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். வட இந்தியாவில் புகை மூட்டம் ஒரு சிக்கலான பிரச்சினை. இது பருவகால முறைகள், விவசாய நடைமுறைகள், தொழில்துறை உமிழ்வுகள் மற்றும் மாறிவரும் காலநிலை இயக்கவியல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 


சில தீர்வுகள், மாற்று பயிர்தாள் மேலாண்மை நுட்பங்களை (stubble management techniques) ஊக்குவிப்பது மற்றும் உமிழ்வு தரங்களை (emission standards) இறுக்குவது போன்றவை வாக்குறுதியைக் காட்டுகின்றன.


புதன்கிழமை பஞ்சாபின் சராசரி வெப்பநிலை இயல்பை விட -2.9 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. மேலும், ஹரியானாவில் இது இயல்பை விட -2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. நவம்பர் 15-ம் தேதி வரை ஆழமற்ற மிதமான பனிமூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Original article:

Share:

ஜவஹர்லால் நேருவின் முக்கியமான மேற்கோள்கள் - குஷ்பு குமாரி

 குழந்தைகள் தினமாக நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், அவரது சில முக்கியமான மேற்கோள்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக (Children’s Day) கொண்டாடப்படுகிறது. இவர், நவம்பர் 14, 1889 இல் பிறந்தார். தற்போது பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் அலகாபாத்தில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தார்.


இவரது பிறந்தநாளில், ஜவஹர்லால் நேருவின் சில மேற்கோள்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு, தொலைநோக்குப் பார்வையும், முன்மாதிரித் தலைவரும் ஆவார்.


விதியுடன் முயற்சி  (Tryst with Destiny)


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவுக்கு சற்று முன்பு, நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சபையில் நேருவின் ‘விதியுடன் சந்திப்பு’ (Tryst with Destiny) என்ற உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், இது 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு சுதந்திர தேசமாக இந்தியாவின் முதல் சில காலங்களுக்கு அடித்தளத்தை அமைத்தது. கொள்கை உருவாக்கம் மற்றும் அதன் குடிமக்களின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கை இரண்டையும் பாதிக்கிறது.


1. அவர் தனது உரையில், "வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் வருகிறது. இதை நாம் பழையதிலிருந்து புதியதை நோக்கி அடியெடுத்து வைக்கும்போது, ஒரு நூற்றாண்டு முடிவடையும் போது, நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படுவதைக் காணும் போது, தேசத்தின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது மற்றும் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான முயற்சியை பிரதிபலிக்கிறது. 


2. அன்றாட மொழியில், 'சந்திப்பு’ (tryst) என்ற சொல் பொதுவாக ஒரு நெருக்கமான சந்திப்பு அல்லது உறவைக் குறிக்கிறது. இருப்பினும், இந்த சூழலில், நேரு பெரிய யதார்த்தத்தை முன்னிலைப்படுத்த இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். பல நூற்றாண்டுகள் அந்நிய ஆட்சிக்குப் பிறகு இந்தியர்கள் சுதந்திரம் பெற்றதை அவர் குறிப்பிடுகிறார்.


3. அவர் மேலும் கூறியதாவது, "ஒரு தருணம் வருகிறது, இது வரலாற்றில் அரிதாகவே வருகிறது, நாம் பழையதிலிருந்து புதுமைக்கு அடியெடுத்து வைக்கும்போது, ஒரு நூற்றாண்டு முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா பேசுவதைக் காண்கிறது." முதல் பார்வையிலேயே, நேருவின் வார்த்தைகள் வாழ்நாளில் ஒருமுறை நிகழும் ஒரு நிகழ்வை ("இது வரலாற்றில் அரிதாகவே வருகிறது") சுட்டிக்காட்டுகின்றன என்பதும், இந்த உரை தருணத்தின் முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் அறிந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. 


4. இந்த மேற்கோளான உரை, ஒரு புதிய தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் பிரதிபலிக்கிறது. சுதந்திரம் பெற கிட்டத்தட்ட அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை (ஒரு தேசத்தின் ஆன்மா, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டு, உச்சரிப்பைக் கண்டால்) இது பிரதிபலிக்கிறது . மேலும், எதிர்காலத்தை நோக்கி முன்னேறத் துடிக்கும் இளைஞர்களையும் (பழையதிலிருந்து புதிய நிலைக்கு நாம் வெளியேறும்போது, ​​ஒரு நூற்றாண்டு முடியும் போது) இது பிரதிபலிக்கிறது.


5. இன்று, நாடு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டிருப்பதன் மூலம் பயனடையக்கூடிய கட்டத்தில் ('மக்கள்தொகை ஈவுத்தொகை' என்று அழைக்கப்படுகிறது) உள்ளது. இந்த நிலைமை முன்னெப்போதையும்விட முக்கியமானது. இந்திய இளைஞர்கள் இப்போது நாட்டை முன்னேற்றும் ஆற்றல் பெற்றுள்ளனர். சமூக-பொருளாதார வளர்ச்சியின் உயர்மட்டங்களை இந்தியா அடைய அவர்கள் உதவ முடியும்.


6. “அந்தக் கனவுகள் இந்தியாவுக்கானவை. ஆனால், அவை உலகத்திற்குமானவை" என்று கூறியதன் மூலம், எகிப்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரவலான காலனித்துவத்திலிருந்து சுயராஜ்யத்திற்கு உலகம் மாறிக்கொண்டிருந்த காலம் இது. 


மேலும், இது இந்தியாவில் உள்ள நமக்கும், அனைத்து ஆசியாவிற்கும், உலகிற்கும் ஒரு அதிர்ஷ்டமான தருணமாகும். ஒரு புதிய தருணம் உதயமாகிறது. கிழக்கில் சுதந்திர தருணமானது, ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. நீண்ட நாள் கனவாக இருந்த இந்த புதிய பார்வை நனவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு புதிய தருணம் ஒருபோதும் மறையாமல் இருக்கட்டும், அந்த நம்பிக்கை ஒருபோதும் துரோகம் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


7. இது பின்னர் அணிசேரா இயக்கத்திற்கான (Non-Aligned Movement) நேருவின் ஆதரவில் பிரதிபலித்தது. இந்த இயக்கம் 20-ம் நூற்றாண்டின் இரண்டு பெரிய கூட்ட அமைப்புகளுடன் இணைந்திருக்காத நாடுகளின் மன்றமாக இருந்தது. ஒரு தொகுதிக்கு அமெரிக்கா தலைமை தாங்கியது, மற்றொன்று முன்னாள் சோவியத் ஒன்றியத்தால் வழிநடத்தப்பட்டது. இந்த மன்றத்தின் நிறுவன உறுப்பினராக இந்தியா இருந்தது. மற்ற நிறுவன உறுப்பினர்களில் யூகோஸ்லாவியா, இந்தோனேசியா, எகிப்து மற்றும் கானா ஆகியவை அடங்கும்.


ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது? 


இந்தியாவில் குழந்தைகள் தினம் 1956-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் நவம்பர் 20 அன்று 'உலகளாவிய குழந்தைகள் தினமாக' (Universal Children’s Day) அனுசரிக்கப்பட்டது. இருப்பினும், 1964-ம் ஆண்டில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மரணத்திற்குப் பிறகு, அவரது பிறந்த நாளையும், குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அப்போதிருந்து, நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 


பண்டித நேரு குழந்தைகளின் கல்வியை கடுமையாக ஆதரித்தார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)), இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institutes of Technology (IIT)), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (Indian Institutes of Management (IIM)), மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (National Institutes of Technology (NIT)) போன்ற முக்கியமான நிறுவனங்களை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளே சமூகத்தின் உண்மையான சொத்துக்கள் மற்றும் பலம் என்று நேரு நம்பினார்.




Original article:

Share:

கட்டாய அணுகல் தரநிலைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏன் முக்கியமானது? - நிகில் கானேகர்

 முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டாய அணுகல் தரங்களை (mandatory accessibility standards) வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்பதை தீர்ப்பு மீண்டும் உறுதி செய்தது.


மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான கட்டாய விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த வாரம் உத்தரவிட்டது. ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வுக்கு தலைமை தாங்கினார். 


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) மற்றும் அதன் கீழ் அறிவிக்கப்பட்ட விதிகள் கட்டாயமாக கருதப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்பதை தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. 

 

முதலில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (Rights of Persons with Disabilities (RPwD)) சட்டம் என்றால் என்ன? 


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (Convention on Rights of Persons with Disabilities (CRPD)) இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இந்தியா அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக ஊக்குவிக்க கடமைப்பட்டுள்ளது. பிரிவு 9-ன் படி, "மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வாழவும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்கவும், மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுடன் சமமான அடிப்படையில், போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை அணுகுவதை உறுதி செய்ய மாநிலங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சேவைகள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் இருக்க வேண்டும்.


2016ல் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் CRPDஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடன், பாகுபாடு இல்லாமல், சம வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 2017ன் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகள், குறிப்பிட்ட அணுகல் தரநிலைகளை வகுத்துள்ளன.

 

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) கட்டாய இணக்கத்திற்கான ஒரு அமைப்பை உருவாக்கியது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், 2017 விதிகள் சுய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்கியுள்ளன. சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் (National Academy of Legal Studies and Research (NALSAR)) உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆய்வு மையம் தயாரித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது.

 

இதுவரை, பல்வேறு அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 17 தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் வசதிகளை வழங்குவதற்காக இந்திய ரயில்வே வழங்கிய அணுகல் வழிகாட்டுதல்கள், அத்துடன் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இதில் அடங்கும். துறைமுகத் துறைக்காக (Ministry of Ports) வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் அவை இயற்கையில் விளக்கமானவை மற்றும் முழுமையானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 


வழிகாட்டுதல்களில் சீரான தன்மை இல்லாததால் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒரே அணுகல் தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களைக் கொண்டிருப்பது இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது. 


உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது? 


பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் அணுகலை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களைக் கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராஜீவ் ரதூரி 2005ஆம் ஆண்டில் தாக்கல் செய்த ரிட் மனு மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 


மாற்றுத்திறனாளிகள் உரிமை (Rights of Persons with Disabilities (RPwD)) விதிகள், இப்போது உள்ளதைப் போல, கட்டாயத் தரங்களை வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மாறாக, அவை நடைமுறைப்படுத்த முடியாத வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்குகின்றன. RPwD சட்டத்தின் விதி 15(1) நோக்கத்திற்கு எதிரானது. இது சட்டத்தின் அதிகாரங்களுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

 

இந்த விதியின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பரிந்துரை என்று கூறிய நீதிபதிகள், இந்த தீர்ப்பு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் தேவைப்படும் கட்டாய விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த செயல்பாட்டில் பங்குதாரர்கள் மற்றும் பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (National Academy of Legal Studies and Research (NALSAR)) ஊனமுற்றோர் ஆய்வுகள் மையத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. 


கட்டாய விதிகள் அமைக்கப்பட்டவுடன், அணுகல் தரத்தை மீறினால், ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நிறைவு சான்றிதழ்களை நிறுத்தி வைப்பது மற்றும் அபராதம் வசூலிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

 

பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவன (National Academy of Legal Studies and Research (NALSAR)) அறிக்கை என்ன கண்டுபிடித்தது? 


நவம்பர் 2023ல், உச்ச நீதிமன்றம் NALSAR-CDS அணுகல் தொடர்பான நிலைமையை மதிப்பிடுமாறு உத்தரவிட்டது. ஒன்றிய, மாநில அரசுகளின் முன்னேற்றம் இல்லாததைக் குறிப்பிட்டு இது நடந்தது. NALSAR-CDS ஆனது அணுகல் முயற்சிகள் பற்றிய தகவல்களை சேகரிக்க, ஒன்றிய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து கருத்துக்களை சேகரித்தது. 14 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் மட்டுமே பதிலளித்தன. மாற்றுத்திறனாளிகளின் நிஜ வாழ்க்கை அனுபவங்களில் கவனம் செலுத்தி அவர்களின் கருத்துக்களையும் சேகரித்தனர்.


கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு போக்குவரத்து அமைப்புகளுக்கான அணுகல் முக்கியமானது என்று அறிக்கை எடுத்துக்காட்டியது. டெல்லியில் 3,775 தாழ்தள எரிவாயு பேருந்துகள் (cng busses) அணுகக்கூடிய பயணத்திற்கு உள்ளன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 21,669 அணுகக்கூடிய பேருந்துகளில் 1,917 உள்ளன.


அணுகல் உரிமை (right to accessibility) என்பது சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் போன்ற பிற காரணிகளையும், இயலாமை இந்த காரணிகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளங்கள் பயன்படுத்த கடினமாக இருப்பது மற்றும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு சைகை மொழி அங்கீகாரம் இல்லாதது போன்ற குறிப்பிட்ட சவால்களை அது சுட்டிக்காட்டியது.




Original article:

Share:

வாக்கு எண்ணிக்கை நாளில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி.. - சீனிவாசன் ரமணி

 தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் முடிவுகளை வெளியிடும் இந்தியாவின் தேர்தல் அமைப்பு அமெரிக்க முறையை விட சிறப்பாக செயல்படுகிறது.


சமீபத்திய, அமெரிக்க அதிபர் தேர்தலில் பாப்புலர் வாக்குகள் மற்றும் எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் ஆகிய இரண்டிலும்  கணிசமான  வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நிருபர்கள் தேர்தல் முடிவுகளைச் சுலபமாகச் சேகரித்தனர். வாக்கு எண்ணிக்கையின் போது, ​​டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. அவர் முக்கிய 'ஸ்விங் ஸ்டேகளில்' முழுமையாக வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக இருப்பதாக முடிவுகள் காட்டின.


இந்தத் தேர்தல் 2020ல் இருந்து மிகவும் வித்தியாசமானது. 2020 தேர்தலில் பல சர்ச்சைகளும் சிக்கல்களும் இருந்தன. அந்தத் தேர்தலின் போது, ​​கோவிட்-19 பரவியது. தொற்றுநோய் காரணமாக பல அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை பல நாட்கள் ஆனது. டொனால்ட் டிரம்ப் ஜோ பைடனிடம் தோற்றார். ஆனால், தோல்வியை ஏற்கவில்லை. கருத்துக் கணிப்புகள் கணித்தவற்றுடன் உண்மையான முடிவுகள் பொருந்தவில்லை. வாக்கு எண்ணிக்கை மெதுவாக சென்றதால் செய்தி சேகரிப்பது கடினமாகிவிட்டது.


அமெரிக்காவில், வாக்கு எண்ணும் தரவு அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) மற்றும் பிற செய்தி நிறுவனங்களில் இருந்து வருகிறது. இந்தத் தரவின் போக்குகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றியாளர்களை ஊடகங்கள் கணிக்கின்றன. அமெரிக்க ஃபெடரல் தேர்தல் ஆணையம் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் விதிகளை மேற்பார்வை செய்கிறது. ஆனால், அது நேரடி தேர்தல் தரவுகளை வழங்கவில்லை. அசோசியேட்டட் பிரஸ் (AP) போன்ற ஏஜென்சிகளால் தேர்தல் தரவு சேகரிக்கப்படுகிறது. பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) மூலம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிடுகிறது அல்லது ஒவ்வொரு மாநிலத்தின் மாநிலச் செயலாளர் மூலம் தகவலை வெளியிடுகிறது.


இந்தியாவில், இந்த செயல்முறை வேறுபட்டது. இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதிக்கும், சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் நேரலை எண்ணும் தரவை வழங்குகிறது. ஊடகங்கள், குறிப்பாக டிவி பத்திரிகையாளர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து புகாரளிக்க ஏஜென்சிகள் அல்லது அவர்களின் சொந்த நிருபர்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த அறிக்கைகள் எப்போதும் துல்லியமாக இருக்காது.


தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மெதுவாக செயல்பட்டாலும் நம்பகமான தரவை வழங்குகிறது. இந்தத் தரவு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்குச் சாவடி முகவர்களால் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் போக்குகளின் தெளிவான முடிவை வழங்குகிறது. தேர்தல் ஆணைய முடிவுகளை வழங்கும் கட்டமைக்கப்பட்ட விதம், ஊடகங்கள் மற்றும் தரவு ஆய்வாளர்களுக்கு, தகவலை உடைக்க உதவுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாக்களிக்கும் போக்குகள் போன்ற விரிவான தரவை அவர்களால் வழங்க முடியும்.


அமெரிக்க செய்தி ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை சிறப்பாக வழங்குகின்றன. ஆனால், இந்தியாவின் அமைப்பு மிகவும் திறந்த நிலையில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அனைவருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. அவர்கள் பொது பயன்பாட்டிற்காக தரவை நேர்மையாக செய்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களை (‘deep-dive data’) வழங்குகிறது. 


நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தரவுகளையும் தேர்தல் ஆணையம் வழங்குகிறது. இந்தத் தகவல் இணையதளத்தில் தாமதத்துடன் பதிவேற்றப்படுகிறது. இதன் காரணமாக முடிவுகள் அறிவிக்கப்பட சில வாரங்கள் ஆகலாம். இருப்பினும், இந்த தரவு கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும். சமூக விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும் தேர்தல் முடிந்ததற்கு பின்னர் முடிவுகளை இன்னும் விரிவாக பகுப்பாய்வு செய்யலாம்.


ஒரு தரவு பத்திரிகையாளருக்கு, ஒரு பொது அதிகாரத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை வழங்கும் இந்திய மாதிரி அமெரிக்க மாதிரியை விட சிறப்பாக செயல்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய தேர்தல் ஆணையம் பல பிரச்சனைகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகப்பெரும் சர்ச்சையை எதிர்கொள்கிறது. மாதிரி நடத்தை விதிகள் பலவீனமான செயலாக்கம் பல்வேறு விமர்சங்களை (legitimate criticism) எதிர்கொள்கிறது. 


சில மாநிலங்களில் வாக்களிக்கும் செயல்முறையில் தாமதம் சில சூழல்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் பிரச்சார செலவினங்களின் தளர்வான கட்டுப்பாடு ஒரு பிரச்சனையாகி வருகிறது. எவ்வாறாயினும், இந்தியாவில் உள்ள பொதுமக்களால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் கட்டமைக்கப்பட்ட வாக்குப்பதிவு தரவை வெளியிடுகிறது. இந்த தரவு வெளிப்படையான, சரியான நேரத்தில் மற்றும் திறமையான முறையில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.




Original article:

Share: