டிரம்ப் அரசாங்கம் ஏன் இந்தியாவின் சிறிய மட்டு உலைகளின் உந்துதலுக்கு சாதகமாக செயல்படலாம். -அனில் சசி

 புது தில்லி சிறிய மட்டு உலைககளை (Small Modular Reactors) முக்கிய பகுதியாகக் கருதுகிறது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் சிறிய மட்டு உலைகள் மீது ஆர்வம் காட்டுகிறார்.


வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில், இந்தியாவின் வணிக நலன்களும், டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளும் சீரமைக்கத் தொடங்கியுள்ளன. இந்த பரஸ்பர ஆர்வத்தின் முக்கியமான பகுதியாக சிறிய மட்டு உலைகள் உள்ளது.  புது தில்லி ஒரு ராஜதந்திர முன்னுரிமையாக இதில் அதிக கவனம் செலுத்துகிறது. சிறிய மட்டு உலைகள் மீது டிரம்ப் அதிக  ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.


ஜோ ரோகனுடனான தேர்தலுக்கு முந்தைய உரையாடலில், பெரிய அணு உலைகள், "மிகவும் சுத்தமாக" இருக்கும் அதே வேளையில், தற்போது உள்ள காலகட்டத்தில் ​​சிக்கலானதாகவும், பட்ஜெட்டை மீறுவதாகவும் டிரம்ப் கூறினார். அதற்கு தீர்வாக மட்டு உலைகள் இருக்கும் என்று அவர் பரிந்துரைத்தார். தொழிற்சாலைகளில் உருவாக்கக்கூடிய மட்டு உலைகள், பெரிய அணு உலைகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று டிரம்ப் நம்புகிறார்.


சிறிய மட்டு உலைகளின் (small reactors) உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் நுழைய இந்தியா செயல்படும் நேரத்தில் இது நடந்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் மாசு இல்ல ஆற்றல் மாற்றம் இலக்குகள் மற்றும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை ஆகிய இரண்டிற்கும் உதவுகிறது.


சிறிய மாட்டு உலைகள் (Small Modular Reactors)


சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)) என்பது தூய்மையான ஆற்றல் குறித்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும். உலகம் நிகர பூஜ்ஜியத்தை அடைய அணுசக்தி 2050-ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று இவ்வமைப்பு கூறுகிறது. இருப்பினும், அணுசக்தி தற்போது பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இது விலை உயர்ந்தது, மாற்றம் ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும்.  ஏதேனும், தவறு நடந்தால் பேரழிவு பேரழிவை ஏற்படுத்தலாம்.


சிறிய மட்டு உலைகள் (SMRs) இதற்கு ஒரு தீர்வை வழங்குகின்றன. SMR என்பது ஒரு யூனிட்டுக்கு 30MWe முதல் 300 MW வரை திறன் கொண்ட சிறிய அணுஉலைகள் ஆகும். தற்போதைய, அணுசக்தி பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றை அவர்களால் தீர்க்க முடியும். தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் மற்றும் தரவு மையங்களில் இருந்து வளர்ந்து வரும் மின்சார தேவை அதிகரித்து வருவதால் இது முக்கியமானது.


பல வகையான சிறிய மட்டு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அணுக்கரு வினைகளின் தீவிர வெப்பத்தை நிர்வகிக்க ஒவ்வொன்றும் வெவ்வேறு குளிரூட்டியைப் பயன்படுத்துகின்றன. அதில் இலகு நீர், அதிக வெப்பநிலை வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு போன்றவை பயன்படுத்தப்டுகின்றன.


மிகவும் பொதுவான வகை இலகு நீர் உலை (light water reactors) ஆகும். இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே இருக்கின்றன. இவை அனைத்தும் குளிரூட்டப்பட்டவை. இலகு நீர் உலைகள் வடிவமைத்து ஒப்புதல் அளிப்பது எளிது. ஏனெனில், பெரும்பாலான அணுக்கரு விதிமுறைகள் நீர்-குளிரூட்டப்பட்ட உலைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஜோ ரோகனுடனான தனது உரையாடலில் டிரம்ப் பரிந்துரைத்தபடி, ஒரு பெரிய பாரம்பரிய அணுமின் நிலையத்தை சுருக்கி அதை ஒரு தொழிற்சாலையில் அளவில் உருவாக்கி, அதில் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்வது முக்கிய யோசனையாகும்.


நியூஜெர்சியில் உள்ள கேம்டனில் உள்ள ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இந்திய அணுசக்தித் துறை (India’s Department of Atomic Energy) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹோல்டெக் உலகின் மிகப்பெரிய அணுசக்தி கூறுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த கலந்துரையாடல்கள் சாத்தியமான ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்துகின்றன.


ஹோல்டெக் அதன் SMR-300 உலையை மையமாகக் கொண்ட ஒரு பொது-தனியார் முயற்சியை முன்மொழிகிறது. இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகளாக இருந்து வரும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஈடுபாட்டின் முட்டுக்கட்டை உடைப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹோல்டெக்கின் சிறிய மட்டு உலை திட்டங்களுக்காக இந்தியாவில் இருக்கும் நிலக்கரி ஆலை தளங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் உற்பத்தியில் இணைந்து செயல்படுவதும் ஒரு திட்டமாகும்.


தற்போது, ​​இரண்டு சிறிய மட்டு உலை திட்டங்கள் உலகளவில் செயல்படுகின்றன. ஒன்று ரஷ்யாவில் உள்ள அகாடமிக் லோமோனோசோவ், தலா 35 மெகாவாட் இரண்டு தொகுதிகள் கொண்ட மிதக்கும் மின் அலகு கொண்டது. இது மே 2020-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. மற்றொன்று சீனாவில் HTR-PM ஆகும். இது டிசெம்பர் 2021-ஆம் ஆண்டில் கட்டத்துடன் இணைக்கப்பட்டு, டிசம்பர் 2023-ஆம் ஆண்டில் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.


சிறிய மட்டு உலை (SMR) பிரிவில் உள்ள மற்ற போட்டியாளர்களில் Rolls-Royce SMR, NuScale இன் VOYGR SMR, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக்ஸ் AP300 SMR மற்றும் GE-ஹிட்டாச்சியின் BWRX-300 ஆகியவை அடங்கும்.


ஹோல்டெக்கின் SMR-300 என்பது அமெரிக்க எரிசக்தித் துறையின் மேம்பட்ட உலை விளக்கத் திட்டத்தால் ஆதரிக்கப்படும், ஏழு மேம்பட்ட உலை வடிவமைப்புகளில் ஒன்றாகும். 2020-ஆம் ஆண்டில், வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உரிமத்தை துரிதப்படுத்த ஹோல்டெக் $116 மில்லியன் பெற்றுள்ளது.  இந்த திட்டம் இங்கிலாந்து மற்றும் கனடாவில் சிறிய அணு உலையைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப திட்டம் மற்றும் மறுஆய்வு நிலைகளில் உள்ளது.


இரண்டு சட்ட தடைகள்


சில சிக்கல்கள் உள்ளன. இந்தியாவில், 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான பொறுப்புச் சட்டம் (Civil Liability for Nuclear Damage Act, 2010) அணுசக்தி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கும், இழப்பீட்டு நடைமுறைகளைக் குறிப்பிடுவதற்கும் ஒரு அமைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், GE-ஹிட்டாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் அரேவா இப்போது Orano போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த சட்டத்தை ஒரு தடையாகக் குறிப்பிட்டுள்ளன. சட்டம் ஆபரேட்டர்களின் பொறுப்பை உபகரணங்கள் சப்ளையர்களுக்கு மாற்றுகிறது. இதனால் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து வெளிநாட்டு விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில், '10CFR810' அங்கீகாரம், ஹோல்டெக் போன்ற அமெரிக்க நிறுவனங்களை கடுமையான பாதுகாப்புகளின் கீழ் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், இந்தியாவில் அணுசக்தி சாதனங்களைத் தயாரிக்கவோ அல்லது அணுசக்தி வடிவமைப்புப் பணிகளைச் செய்யவோ அனுமதிக்கவில்லை. SMR-களை தயாரிக்கவும், அணு உதிரிபாகங்களை தனது சொந்த தேவைகளுக்கு இணை உற்பத்தி செய்யவும் விரும்பும்  இந்தியாவிற்கு இந்த கட்டுப்பாடு சிக்கலாக உள்ளது.


அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் தேவைப்படலாம். 2010-ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாவிட்டாலும், புது தில்லி தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 810 அங்கீகாரத்தை அமெரிக்கா சரிசெய்யும் என புது தில்லி நம்புகிறது. அதிபர் ஜோ பைடனின் கீழ் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் இந்த பிரச்சினை சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், அதிபர் டிரம்பின் அணுகுமுறையில், இந்தியாவில் இருந்து சில சமரசம் ஏற்பட்டால், சில சலுகைகள் கிடைக்கும் என்று புதுடெல்லி நம்புகிறது.


சிறிய மட்டு உலைகள் (SMR) துறையில் நிலையான இடத்தை தன்னைக் காட்டிக்கொள்ள இந்தியா விரும்புகிறது.  இது சிறிய உலைகளை இயக்குவதில் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் அணு உலைகளை செலவு குறைந்த அளவிலும் தயாரிக்கும் திறனையும் கொண்டுள்ளது.


உலகளாவிய சிறிய மட்டு உலைகள் (SMR) சந்தையை வழிநடத்த பெய்ஜிங் ஒரு லட்சியத் திட்டத்தைத் தொடரும் நேரத்தில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவைப் போலவே, பெய்ஜிங்கும் சிறிய மட்டு உலைகள் (SMR) உற்பத்தியை உலகளாவிய தெற்கில் அதன் இராஜதந்திர வெளிப்பாட்டின் ஒரு கருவியாகப் பார்க்கிறது. மின்சார வாகனத் துறையை எப்படி மாற்றியதோ அதேபோன்று சிறிய மட்டு உலைகள் (SMR)  தொழிற்துறையிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஊக்கமான ஒத்துழைப்பு 


இந்தியாவின் அணுசக்தித் திட்டமானது 220MWe அழுத்தம் கொண்ட கனரக நீர் உலைகள் (pressurized heavy water reactors(PHWR)) மற்றும் அதற்கு மேல் போன்ற சிறிய உலை வகைகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியா தனது உலை தொழில்நுட்பத்தில் சவால்களை எதிர்கொள்கிறது.  கனரக நீர் உலைகள் (PHWR) கன நீர் மற்றும் இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன.  உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இலகு நீர் உலைகளுடன் ஒப்பிடும்போது இந்த உலைகள் அதிக செறிவு கொண்டதாக உள்ளது .


ஹோல்டெக் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு கூட்டு அணுகுமுறையை பரிந்துரைக்கிறது. இது, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். ஏனெனில், அவை சீனாவுடன் தனித்து போட்டியிடும் நிலையில் இல்லை. இந்தியா அதன் காலவரம்பு முடிவாக PHWR தொழில்நுட்ப வரம்புகளை எதிர்கொள்கிறது. அதிக தொழிலாளர் செலவுகள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்புவாத உணர்வு ஆகியவற்றால் அமெரிக்கா தடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கொள்கை வட்டாரங்களில் விரிவான தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெற்று வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவாதங்கள் அத்தகைய உலைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யாவும் ஆர்வமாக உள்ளது. அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இது அணுசக்தி சட்டம், 1962-ஆம் ஆண்டின் கட்டமைப்பிற்குள் இருக்கும். இதில் தனியார் துறை மற்றும் புத்தொழில்களை ஈடுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.




Original article:

Share:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - குஷ்பு குமாரி

 1.   நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான 74-வது அரசியலமைப்பு திருத்தம் (1993) நடைமுறைக்கு வந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகும், 18 மாநிலங்கள் இன்னும் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அமைப்பு கண்டறிந்துள்ளது. 

 

2. 74-வது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்த இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) வெளியிட்ட தணிக்கை அறிக்கைகளின் தொகுப்பை திங்களன்று வெளியிட்டது. 


3. சராசரியாக, நகர்ப்புற அமைப்புகள் தங்கள் சொந்த மூலங்களிலிருந்து 32% வருமானத்தை ஈட்டுகின்றன என்று CAG கண்டறிந்துள்ளது. மீதமுள்ள 68% வருமானம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  தங்களின் சொத்து வரியில் 56% வசூலிக்க முடிந்தது.


4. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய செலவினங்களில் 29 சதவீதம் மட்டுமே திட்ட மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு எதிராக சராசரியாக 37 சதவீதம் காலியிடங்கள் உள்ளன. மறுபுறம், 16 மாநிலங்களின் நகர்ப்புற அமைப்புகளுக்கு வேலைவாய்ப்பு மீது வரையறுக்கப்பட்ட அல்லது எந்த அதிகாரமும் இல்லை. 


5. 74-வது திருத்தத்தின்படி, நகர்ப்புற திட்டமிடல், நில பயன்பாடு மற்றும் கட்டுமானத்தை ஒழுங்குபடுத்துதல், நீர் வழங்கல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான திட்டமிடல் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட 18 செயல்பாடுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநிலங்கள் வழங்க வேண்டும். சராசரியாக, 18 செயல்பாடுகளில் 17 செயல்பாடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று CAG அறிக்கை கண்டறிந்துள்ளது.


6. 74-வது திருத்தத்தின் உண்மையான நோக்கத்தை மாநிலங்கள் முழுமையாக கடைப்பிடிக்கவில்லை என்று CAG அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நான்கு பணிகள் மட்டுமே முழு சுயாட்சியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டன. திட்டமிடல் போன்ற முக்கியமான பணிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மாநிலங்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று CAG பரிந்துரைத்தது.


7. 2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் 50% நகர்ப்புறமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வலுவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULSG) அவசியத்தை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், இதை அடைய, மாநிலங்கள் தங்கள் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். 


தெரிந்த தகவல்கள் பற்றி :


1. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban local bodies (ULB)), அதாவது மாநகராட்சிகள், நகராட்சிகள் அல்லது நகர பஞ்சாயத்துகள் நமது நகரங்களில் நகர்ப்புற நிர்வாகத்தின் அடிப்படை அலகு ஆகும்.  அவை, குடிமக்களுக்கான முதல் தொடர்பு வழியாகும் மற்றும் கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பாகும். 


2. நகராட்சி அமைப்புகள் கடினமாக இல்லாமல் எளிமையாக நீட்டிக்கப்பட்டுள்ளன. கழிவு சேகரிப்பு முதல் நகர திட்டமிடல் வரை அனைத்தையும் நிர்வகிக்கின்றன. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு வகையான சிக்கலான நகர்ப்புற பிரச்சனைகளுக்கு தீர்வு காண போதுமான நிதி ஆதாரங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பணியாளர்கள் இல்லை. வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள், கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் தன்னாட்சி மற்றும் குறைந்த மாநில திறன் ஆகியவை நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறனைத் தடுக்கும் முக்கிய சவால்களாகும். 


3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) தங்களுக்கு வேண்டிய நிதிகளைப் பெறுவதில் போராடுகின்றன. நகராட்சி வருவாயின் முக்கிய ஆதாரம் சொத்து வரிகள் ஆகும். மீதமுள்ள நிதி மாநில அரசிடமிருந்து வருகிறது.  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) பத்திரங்கள் அல்லது பிற காப்பாவணங்கள் மூலமாகவும் வருவாயை உயர்த்த முடியும். எடுத்துக்காட்டாக, அகமதாபாத் நகராட்சி பத்திரங்கள் 1994-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இருப்பினும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது மேலும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது.


4. பார்க்கிங் கட்டணம் அல்லது வணிக வரிகள் போன்ற குறைந்த பயனர் கட்டணங்களையும்  வசூலிக்கிறார்கள். குறிப்பாக நகரத்தின் முக்கிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



Original article:

Share:

காலநிலை மாற்றத்தின் முதன்மை இயக்கியாக கார்பன் டை ஆக்சைடு ஏன் செயல்படுகிறது? -அலிந்த் சௌஹான்

 கார்பன் டை ஆக்சைடு (CO2) வளிமண்டலத்தின் மிக முக்கியமான பசுமை இல்ல வாயுக்களில்  (greenhouse gas) ஒன்றாகும். இது சமூகத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் (anthropogenic)  முக்கிய இயக்கி ஆகும்.


இந்தியாவில், புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வு 2024-ஆம் ஆண்டில் 4.6% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய, பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பான உலகளாவிய கார்பன் திட்டத்தின் (Global Carbon Project) புதிய அறிக்கையின்படி, பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவின் உமிழ்வு மிக அதிகமாக உள்ளது என்று  குறிப்பிட்டுள்ளது.


உலகளவில், புதைபடிவ அடிப்படையிலான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு இந்த ஆண்டு 37.4 பில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது 2023-ஆம் ஆண்டை விட 0.8% அதிகரிக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.  இந்த விகிதம் தொடர்ந்தால், கடந்த  ஆறு ஆண்டுகளை போலவே, புவி வெப்பமடைதல் தொடர்ந்து 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வாய்ப்பு 50% உள்ளது.


கார்பன் டை ஆக்சைடு என்பது வளிமண்டலத்தில் ஒரு முக்கிய பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றாகும். இது சமூகத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் (anthropogenic)  முக்கிய இயக்கி ஆகும்.


பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன? 


பசுமை இல்ல வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்தில் வெப்பத்தை உள்வாங்கும் வாயுக்கள் ஆகும்.  சூரியன் சூரிய ஒளியை வெளியிடுகிறது. இது வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது மற்றும் கோள்களின் மேற்பரப்பால் உறிஞ்சப்பட்டு வெப்பமடைகிறது.  இருப்பினும், இந்த சூரிய ஒளியில் சில அகச்சிவப்பு கதிராக (வெப்பம்) மேற்பரப்பில் பிரதிபலிக்கிறது. இது நீண்ட அலைநீளம் கொண்டது.


கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் (CH4) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் குறுகிய அலைக் கதிர்வீச்சை உறிஞ்சாது. ஆனால், அவை அகச்சிவப்பு கதிர்வீச்சைப் உள்வாங்குகின்றன. ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் மூலக்கூறுகள் போல்  இல்லாமல், கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. இந்த அமைப்பு இவ்வாயுகளுக்கு நேராக செல்லுதல் மற்றும் வளைந்து செல்லுதல் போன்ற பல வழிகளை வழங்குகிறது. 


இதன் விளைவாக, இவ்வாயுக்கள் அகச்சிவப்பு கதிர்வீச்சு உட்பட பரந்த அளவிலான அலைநீளங்களை உறிஞ்ச முடியும். இதை  கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ஜேசன் ஸ்மெர்டன், கொலம்பியா காலநிலை பள்ளியின் செய்தித் தளமான ஸ்டேட் ஆஃப் தி பிளானட்டிடம் இதை விளக்கி உள்ளார்.


பசுமை இல்ல வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு போர்வையைப் போல செயல்படுகின்றன. இவை, இந்த வாயுக்களை வெப்பமாக வைத்திருக்கின்றன.  இந்த செயல்முறை பசுமை இல்ல வாயு விளைவு (greenhouse effect) என்று அழைக்கப்படுகிறது.  கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) மற்றும் நீராவி போன்ற பசுமை இல்ல வாயுக்கள் இயற்கையாகவே உருவாகின்றன மற்றும் அவை கிரகத்திற்கு முக்கியமானவை. அவை இல்லாமல், பசுமை இல்ல வாயு  விளைவு, நீர்   மற்றும்  மனித வாழ்வு இருக்க முடியாது.


பிரச்சனை பசுமை இல்ல வாயுக்களின் இருப்பு அல்ல, மாறாக அவற்றின் செறிவு. அதாவது வளிமண்டலத்தில் உள்ள அதன்  அளவு ஆகும். தொழிற்புரட்சிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பசுமை இல்ல வாயுக்களின் செறிவு மிகவும் நிலையானதாக இருந்தது.  அப்போதிருந்து, சில  பசுமை இல்ல வாயுக்களின் அளவு, குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு (CO2), புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் படிப்படியாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, வளிமண்டலத்தில் அதிக வெப்பம் அதிகரித்துள்ளது.  இதனால் உலகில் வெப்பநிலை உயர்கிறது.


கார்பன் டை ஆக்சைடு (CO2) ஏன் புவி வெப்பமடைதலின் பெரும்பகுதியை ஏற்படுத்தியது?


காலநிலை மாற்றத்திற்கு மற்ற காரணிகளை விட கார்பன் டை ஆக்சைடு (CO2) அதிக பங்களிப்பை அளித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், செக் குடியரசை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன சிந்தனைக் குழுவான காலநிலை மாற்றம் குறித்த உண்மைகளின் பகுப்பாய்வின்படி, சுமார் 70% புவி வெப்பமடைதலுக்கு கார்பன் டை ஆக்சைடு (CO2)  முக்கிய காரணியாக உள்ளது.

2013-ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகளின் அமைப்பான காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IIntergovernmental Panel on Climate Change (IPCC)) - மூன்று காலநிலை இயக்கிகளின் வெப்ப விளைவு அல்லது "கதிரியக்க சக்தி" (‘radiative forcing’) ஆகியவற்றை ஒப்பிட்டது: பசுமை இல்ல வாயுக்கள், வளிமக்கரைசல் (aerosols) மற்றும் நில பயன்பாட்டு மாற்றம் போன்றவை 1750 மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு இடையில், கார்பன் டை ஆக்சைடு (CO2) அதிக நேர்மறை கதிரியக்க சக்தியை கொண்டிருந்தது.  இது கிரகத்தில் அதிக வெப்பமயமாதலை ஏற்படுத்தியது.


மீத்தேன் (CH4) மற்றும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் போன்ற பிற பசுமை இல்ல வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு (CO2) விட மிகவும் ஆற்றல் வாய்ந்தவை என்பதையும் பகுப்பாய்வு காட்டுகிறது. மீத்தேன் (CH4),  கார்பன் டை ஆக்சைடு (CO2)  வாயுவை விட 80 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. மேலும், ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இருப்பினும், இந்த வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு (CO2)  வாயுவை விட சிறிய வெப்ப  விளைவைக் கொண்டிருந்தன.


இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மீத்தேன் (CH4) மற்றும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களுடன் ஒப்பிடும்போது வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு (CO2) அதிகமாக உள்ளது. 18-ஆம் நூற்றாண்டிலிருந்து, தொழில்துறை நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து, மனித நடவடிக்கைகள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை (CO2)   50% அதிகரித்துள்ளது. தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (National Aeronautics and Space Administration (NASA)) அறிக்கையின்படி, கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவு 1750-ஆம் ஆண்டு இருந்ததை விட 150%  தற்போது அதிகரித்துள்ளது.


பனிக்கட்டிகள் மற்றும் சமீபத்திய நேரடி அளவீடுகளிலிருந்து வளிமண்டல மாதிரிகளை ஒப்பிடும் வரைபடம், தொழில்துறை புரட்சிக்குப் பின்னர் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு (CO2)   உயர்வைக் காட்டுகிறது.


இரண்டாவதாக, மனித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் மற்ற முக்கிய பசுமை இல்ல வாயுக்களை விட. கார்பன் டை ஆக்சைடு (CO2)   வளிமண்டலத்தில் நீண்ட காலம் இருக்கும். மீத்தேன்  (CH4), கார்பனாக (CO2)  மாறுவதால், மீத்தேன் உமிழ்வுகள் வளிமண்டலத்தை விட்டு வெளியேற சுமார் பத்தாண்டுகள் ஆகும். நைட்ரஸ் ஆக்சைடு (N2O) வெளியேற நூற்றாண்டு காலம் ஆகும்.


அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான யூனியன் ஆஃப் கன்சர்ன்டு சயின்டிஸ்ட்ஸ் (Union of Concerned Scientists (UCS)) அறிக்கையின்பட, " வளிமண்டலத்தில் கார்பன், 40%  100 ஆண்டுகளுக்கும், 20% 1000 ஆண்டுகளுக்கும், மற்றும் 10,000 ஆண்டுகளுக்கு 10%." தங்கியிருக்கும் என்று குறிப்பிடுகிறது. 


நீராவி (vapour) வளிமண்டலத்தில் மிக அதிகமான பசுமை இல்ல வாயு ஆகும். இருப்பினும், இது ஒரு குறுகிய சுழற்சியைக் கொண்டுள்ளது. சராசரியாக சுமார் 10 நாட்கள் நீடிக்கும். இது கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்று வளிமண்டலத்தில் நிலைத்து இருக்காது. இதன் விளைவாக, நீராவி கார்பன் டை ஆக்சைடு (CO2) போல அதிக வெப்ப விளைவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், புவி வெப்பமடையும் போது, ​​அதிகமான நீர் வளிமண்டலத்தில் ஆவியாகிறது. இது அதிக வெப்பமடைவதற்கு வழிவகுக்கிறது.




Original article:

Share:

கேரளாவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஏன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர் ? -ரங்கராஜன் ஆர்.

 நடத்தை விதிகள் என்ன கூறுகின்றன? இது சமூக ஊடகங்களின் பயன்பாட்டை போதுமான அளவு உள்ளடக்குகிறதா? குடிமை பணி விதிகள் மறுஆய்வு செய்ய வேண்டுமா?  “தகுதியற்றவர்” என்றால் என்ன? 


 குற்றச்சாட்டுகள் என்ன?

 

கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் “அவதூறான அறிக்கைகளை” (‘derogatory statements’) பதிவிட்டதாக இந்திய ஆட்சிபணி  அதிகாரி என்.பிரசாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அறிக்கைகள் மாநில நிர்வாகத்தின் மதிப்பை குறைப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த கருத்துக்கள் இந்திய ஆட்சிப் பணிக்குத் தகுதியற்றவர் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயதிலக் தனக்கு எதிராக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டதாக பிரசாந்த் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை ஜெயதிலக் மறுத்தார். 


‘மல்லு இந்து அதிகாரிகள்’ (‘Mallu Hindu Officers’) என்ற மத அடிப்படையிலான வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதற்காக கே. கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தக் குழு, ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு இடையே  ஒற்றுமையை குலைப்பதாகவும், வகுப்புவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது.


கோபாலகிருஷ்ணன் தனது கைப்பேசியை ஹேக் செய்த பின்னர் இந்த குழு உருவாக்கப்பட்டதாக கூறினார். இருப்பினும், இதை அரசாங்கம் நிராகரித்தது. காவல்துறை விசாரணையில் ஹேக்கிங் செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ணன் தனது கைப்பேசியில் “அனைத்து தரவுகள் மற்றும் பயன்பாட்டினை”  (‘factory reset’) அழித்து இருப்பதாகவும் காவல்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விதிகள் என்ன கூறுகின்றன? 


1968-ஆம் ஆண்டு  அகில இந்திய பணி (நடத்தை) விதிகள், இந்திய ஆட்சி பணி, இந்திய காவல்  பணி மற்றும் இந்திய வனப்பணி அதிகாரிகளுக்கான விதிகளை அமைத்தது. இந்த விதிகள் அவர்களின் நடத்தைக்கான நடத்தை நெறிமுறையை கோடிட்டுக் காட்டுகின்றன. சில விதிகள்: 


அதிகாரிகள் உயர்ந்த நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் அரசியல் ரீதியாக நடுநிலையாகவும், பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளில் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டும்.  அதிகாரிகள் பொது ஊடகங்களில் உத்தியோகபூர்வ கடமைகளின் ஒரு பகுதியாக மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.  


எந்த ஒரு பொது மேடையிலும் அரசின் கொள்கைகளை விமர்சிக்க அதிகாரிகள் பொது ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது. அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை விமர்சித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவோ அல்லது பத்திரிகைகளை அணுகவோ முடியாது.  அத்தகைய நடவடிக்கைகளுக்கு அவர்கள் அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும்.  ஆட்சிபணியில் இருந்து கொண்டு   பொருத்தமற்ற வகையில், அதிகாரிகள் செயல்படக்கூடாது என்ற பொது விதியும் இதில் அடங்கும்.

 

பிரச்சனைகள் என்ன ? 


முதலாவதாக, சமூக ஊடகங்களை அதிகாரிகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விதிகள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இரண்டாவதாக, அதிகாரிகளின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் பல்வேறு புதிய நடத்தை வழிகாட்டுதல்களைச் சேர்ப்பதன் மூலம் விதிகள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டுள்ளன.  எவ்வாறாயினும், ‘ஆட்சிபணியில் இருப்பதற்கு தகுதியற்றவர்’ என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எல்லா சூழல்களிலும், ஜூனியர் அதிகாரிகளுக்கு எதிராக இந்த விதிகளை செயல்படுத்துவது மூத்த அதிகாரிகள் தான். எனவே, இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து ஜூனியர்  அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.


எதை மறுபரிசீலனை செய்யலாம்? 


முதலாவதாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தெளிவான விதிகள் உருவாக்கப்படலாம். இந்த விதிகள் எந்த வகையான அதிகாரப்பூர்வ தகவல்களை பகிரலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.  இதில் அதிகாரிகள் தங்கள் பணி தொடர்பான அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள அனுமதிக்கலாம். 


இரண்டாவதாக, கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில், ‘ஆட்சிபணியில் இருப்பதற்கு தகுதியற்றவர்’ என்ற சொல்லை விளக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு பட்டியலை உருவாக்கலாம்.  இந்தப் பட்டியல் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்  அடிப்படையில் இருக்கலாம். குறிப்பாக, ஜூனியர் அதிகாரிகள், அரசு ஊழியர் என்று தங்களது பெயரை வெளியிடாமல் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்கள் பல்வேறு அரசாங்க முயற்சிகளுக்கு விளம்பரம் செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்தினால் குடிமக்களுக்கு தங்களின் சிறந்த முயற்சியை வெளிப்படுத்த முடியும். அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போதும் பெயர் தெரியாமல் (anonymity) பார்த்து கொள்ள வேண்டும்.

 

ரங்கராஜன். ஆர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.




Original article:

Share:

COP29 : இந்தியா உலகளாவிய தெற்கின் முக்கியத் தருணத்தை நோக்குகிறது - ஜெயஸ்ரீ நந்தி

 ஆப்பிரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் குழு (African Group of Negotiators (AGN)) இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்தது. இது, வளரும் நாடுகளிடையே ஒரு ஐக்கிய முன்னணியை பிரதிபலித்துள்ளது. 


COP29 காலநிலை பேச்சுவார்த்தைகள் உலகளாவிய தெற்கிற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இந்தப் பகுதியில், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள், காலநிலை தணிப்பு நடவடிக்கைக்கு உறுதியளிக்க, இந்தியா ஒரு முக்கியமான சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவின் முன்னணி பேச்சுவார்த்தையாளர்கள், உலக நாடுகளில் குறைந்தபட்சம் $1.3 டிரில்லியன் திரட்ட உறுதியளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


வியாழக்கிழமை அன்று, காலநிலை நிதி தொடர்பான உயர்மட்ட அமைச்சர்களின்போது, ​​இந்தியாவின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் நரேஷ் பால் கங்வார் ஒரு எச்சரிக்கையை எழுப்பினார். இதில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ந்த நாடுகளின் நிதிக் கடமைகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னோடியில்லாத வகையில் புதைபடிவ எரிபொருள் நலன்களின் முன்னிலையில் இது வந்தது.


2030-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது $1.3 டிரில்லியன் டாலர்கள் செலவழிக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளை கங்வார் வலியுறுத்தினார். இந்த ஆதரவு வளரும் நாடுகளுக்கு மானியங்கள், சலுகை நிதி மற்றும் கடனைத் தூண்டாத உதவி மூலம் வர வேண்டும். வளரும் நாடுகள் காலநிலை தாக்கங்களால் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தணிப்பு மற்றும் தழுவல் (mitigation and adaptation) நடவடிக்கைகள் ஆகிய இரண்டிற்கும் நிதியளிக்க அவர்கள் போராடுகின்றனர்.


"காலநிலை மாற்றத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இங்கு நாம் எடுக்கும் முடிவுகள் நம் அனைவருக்கும் குறிப்பாக உலகளாவிய தெற்கில் உள்ளவர்களுக்கு உதவும். இந்த முடிவுகள், காலநிலை தாக்கத்தை குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும்,” என்றார் நரேஷ் பால் கங்வார். வளரும் நாடுகளை பாதிக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் தீவிரத்தை அவர் எடுத்துரைத்தார்.


காலநிலை நிதி தொடர்பான, புதிய கூட்டு அளவுகோலை (New Collective Quantified Goal (NCQG)) மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. இந்த இலக்கு பாரிஸ் ஒப்பந்தத்தின் $100 பில்லியன் ஆண்டு இலக்கை மாற்றுவதாகும். 100 பில்லியன் டாலர் இலக்கு 2009-ம் ஆண்டில் வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பூர்த்தியடையவில்லை. NCQG-யை முதலீட்டுக்கான இலக்காக மாற்றக் கூடாது என்று கங்வார் வலியுறுத்தினார். இது ஒரு நிதிக்கான இலக்காக இருக்க வேண்டும். அங்கு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு ஆதரவை வழங்குகின்றன. மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் ஆணைக்கு அப்பாற்பட்ட விதிமுறைகளை இலக்கில் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.


இந்த தலையீடு இரண்டு முக்கிய கவலைகளை எடுத்துரைத்தது. முதல் கவலை காலநிலை நிதிக் கடமைகளை மாற்றும் முயற்சியாகும். இது வளர்ந்த நாடுகளில் உள்ள பொது ஆதாரங்களில் இருந்து சந்தைக்கான வழிமுறைகள் மற்றும் தனியார் முதலீட்டிற்கு நிதிக்கான பொறுப்பை மாற்றும். இரண்டாவது கவலை, பாரம்பரிய பொறுப்பை அங்கீகரிக்க வேண்டும். பாரீஸ் ஒப்பந்தம் இந்த பொறுப்பை வளர்ந்த நாடுகள் மீது தெளிவாக சுமத்தியுள்ளது.


ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை குழு (African Group of Negotiators (AGN)) இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்துள்ளது. இது வளரும் நாடுகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணியைக் காட்டுகிறது. ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை குழு (AGN) தலைவர் அலி டி முகமது, “பாரிஸ் ஒப்பந்தத்தின் கடமைகளை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். வளர்ந்த நாடுகளால் செய்யப்பட்ட நிதியுதவி உறுதிமொழிகள் இன்னும் இணைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு, $1.3 டிரில்லியன் நிதியை காலநிலை தழுவல், மீள்தன்மை மற்றும் உமிழ்வு குறைப்புகளை அடைவதற்கு இது முக்கியமானது.


இந்தியாவின் அறிக்கை COP29-ல் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த முன்னேற்றம் பிரேசிலில் COP-30 நோக்கிய வேகத்தைத் தக்கவைக்க முக்கியமானது. COP30-ல், நாடுகள் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDC)) சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதுள்ள உறுதிமொழிகளில், குறிப்பாக 2009-ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்படாத 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள உறுதிமொழியில் வளர்ந்த நாடுகளின் செயல்திறன் குறித்து கங்வார் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். "ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இதற்கான இலக்குகளை வெளிப்படுத்துவதற்கான பொதுவான காலக்கெடு எங்களிடம் உள்ளது. இங்கு, காலநிலை நிதியைப் பொறுத்தவரையிலும் இதேபோன்ற தேவை உள்ளது. மேம்பட்ட இலக்குகளை செயல்படுத்துவதற்கும் இந்த COP29-ஐ வெற்றிகரமாக மாற்றுவதற்கும் வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்பை உணரும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம், "என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 


இந்த நிதி விவாதங்களின் விளைவு பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய சமூகத்தின் திறனை கணிசமாகப் பாதிக்கும். குறிப்பாக, சமீபத்திய மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகள் உலகம் ஏற்கனவே 1.3 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. இது பாரிஸ் ஒப்பந்தத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிகிரி செல்சியஸ் இலக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 


தனியார் துறையின் நிதி போதுமானதாக இல்லை


ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனலின் (Oil Change International) புதிய பகுப்பாய்வு, வளர்ந்த நாடுகள் தனியார்துறை நிதி திரட்டலுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உலக மக்கள்தொகையில் 42%ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்த மற்றும் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், 2022-ம் ஆண்டில் சுத்தமான எரிசக்தி முதலீட்டில் வெறும் 7% மட்டுமே பெற்றன என்று அறிக்கை வெளிப்படுத்தியது. இந்த ஆய்வு, வளர்ந்த நாடுகளின் காலநிலை நிதியத்திற்கான அணுகுமுறையில் ஒரு முக்கிய அடிப்படையான அனுமானத்தை ஆய்வு கேள்விக்குள்ளாக்கியது. அதாவது, பொதுநிதியின் ஒவ்வொரு டாலரும் தனியார் முதலீட்டில் $5-7 ஈர்க்க முடியும். உண்மையில், ஒவ்வொரு டாலரும் தனியார் நிதியில் 85 சென்ட் மட்டுமே ஈர்த்தது என்றும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வெறும் 69 சென்ட் மட்டுமே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


நெருக்கடியில் புதைபடிவ எரிபொருள் பரப்புரையாளர்கள்


பேச்சுவார்த்தையில் புதைபடிவ எரிபொருள் துறையின் செல்வாக்கு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. குறைந்தபட்சம் 1,773 புதைபடிவ எரிபொருள் பரப்புரையாளர்கள் COP29-ல் கலந்து கொள்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். Kick Big Polluters Out (KBPO) கூட்டணியின் விரிவான பகுப்பாய்விலிருந்து இந்தத் தகவல் வெளியாகிறது.


பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைவிட தொழில் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஹோஸ்ட் அஜர்பைஜான் (2,229), COP30 ஹோஸ்ட் பிரேசில் (1,914), மற்றும் Türkiye (1,862) மட்டுமே பெரியளவில் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.


"காலநிலை பேச்சுவார்த்தைகளில் புதைபடிவ எரிபொருள் பரப்புரையின் பிடியானது நமது கிரகத்தின் எதிர்காலத்தை சுற்றி வரும் ஒரு விஷ பாம்பு போன்றது" என்று KBPO வில் இருந்து Nnimmo Bassey கூறினார். அவர் பேச்சுவார்த்தைகளில் இருந்து தொழில்துறை செல்வாக்கை அகற்ற அழைப்பு விடுத்தார். KBPO பகுப்பாய்வு நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட UNFCCC இன் தற்காலிக பங்கேற்பாளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது, முந்தைய COPகளின் புதைபடிவ எரிபொருள் லாபி பதிவுகள் மற்றும் வெளிப்புற பரப்புரை பதிவுகளுக்கு மேற்கோள் காட்டப்பட்டது.




Original article:

Share:

இந்திய-அமெரிக்க எரிசக்தி உறவுகளில் அதிபர் டிரம்பின் தாக்கம் -ரிச்சா மிஸ்ரா

 புதைபடிவ எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied natural gas (LNG)) ஏற்றுமதிக்கான நிலையான மற்றும் முக்கியமான சந்தையாக டிரம்ப் நிர்வாகம் இந்தியாவைப் பார்க்கும். 


உடனடியாக மனதில் எழும் ஒரு கேள்வி – நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்கள் இந்திய-அமெரிக்க எரிசக்தி உறவுகளுக்குள் எதைக் குறிக்கின்றன? டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புவது எரிசக்தி முன்னணியில் இருவருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு மறுநோக்குநிலைக்கு வழிவகுக்கும். 


புதுடெல்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர் அதிகாரி ஒருவர் "டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்திற்கும் இப்போது நடைபெற உள்ள ஆட்சிக் காலத்திற்கும்  இடையில் நிறைய மாற்றம்  நடந்துள்ளது" என்று கூறினார். 


மேற்கத்திய ஊடக அறிக்கைகளின்படி, டிரம்பின் எரிசக்தி நிகழ்ச்சி நிரல் எரிசக்தி சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் விரிவாக்கப்பட்ட உற்பத்தியை வலியுறுத்தக்கூடும். 


அமெரிக்கா-இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பு தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் இருதரப்பு சார்ந்தது. இந்தியாவுக்கு புதைபடிவ எரிபொருள் வழங்குநர்களில் முதல் ஐந்து இடங்களில் அமெரிக்காவும் உள்ளது.  டிரம்ப் ஆட்சியால் இந்தியாவை புறக்கணிக்க முடியாது. 


கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, இருநாடுகளுக்கும் இடையிலான ஹைட்ரோகார்பன் வர்த்தகம் 2018-19ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 2023-24ஆம் ஆண்டில் 13.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 2025 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு ஹைட்ரோகார்பன் வர்த்தகத்தின் மதிப்பு 2.43 பில்லியன் டாலராக உள்ளது. 


நவம்பர் 2009-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் தூய எரிசக்தியை மேம்படுத்துவதற்கான கூட்டாண்மையைத் தொடங்கின. இது ஆராய்ச்சி மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் உள்ளடக்கிய, குறைந்த கார்பன் வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. 


பசுமை முயற்சிகள் 


அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அமெரிக்க-இந்தியா காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி நிகழ்ச்சி நிரல் (US-India Climate and Clean Energy Agenda ) 2030 கூட்டாண்மையைத் தொடர்ந்து இரு நாடுகளின் காலநிலை மற்றும் சுத்தமான எரிசக்தி இலக்குகளை முன்னேற்றுவதற்காக 2021-ஆம் ஆண்டில் இருவரும் அமெரிக்க-இந்தியா இராஜதந்திர சுத்தமான எரிசக்தி கூட்டாண்மையை (Strategic Clean Energy Partnership (SCEP)) புதுப்பித்தனர். இது வரவிருக்கும் தீர்க்கமான காலகட்டத்தில் காலநிலை நடவடிக்கையை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. 


SCEP-ன் கீழ், இரு நாடுகளும் ஐந்து தூண்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன. அவை, மின்சாரம் மற்றும் எரிசக்தி திறன்; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி; பொறுப்பான எண்ணெய் மற்றும் எரிவாயு; நிலையான வளர்ச்சி; வளர்ந்து வரும் எரிபொருட்கள் போன்றவை ஆகும். 


கூடுதலாக, இருவரும் நீண்டகால சிவில் அணுசக்தி பணிக்குழு (Civil Nuclear Energy Working Group (CNEWG)) உட்பட பல்வேறு கூட்டுத் திட்டங்கள் மூலம் நிகர பூஜ்ஜிய தீர்வாக சிவில் அணுசக்தியில் புதுமைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். 


தூய்மையான எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்த, தூய்மையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த உதவுவதற்காக இரு நாடுகளும் தொழில்நுட்ப பகுதிகளில் தனியார் துறை மற்றும் பிற பங்குதாரர்களை ஈடுபடுத்த வேண்டும். 


அமெரிக்க-இந்திய எரிசக்தி கொள்கையின் நிபுணர் பீட்டர் ஜே. ஜார்கா-செல்லர்ஸ் கருத்துப்படி, "எரிசக்தி மற்றும் காலநிலை மீதான ட்ரம்பின் அடிப்படை நோக்குநிலை அவரது முதல் பதவிக்காலத்தில் இருந்ததைப் போலவே இருக்கும் என்பதற்கான ஒவ்வொரு அறிகுறியும் உள்ளது. புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும், நுகர்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அகற்றவும், காலநிலை தணிப்பை ஒரு கொள்கை கட்டாயமாக முழுமையாக நிராகரிக்கவும் அவர் முயல்வார். இது குறித்து அவர் குரல் கொடுத்தார். அவரது பிரச்சாரத்திற்கு புதைபடிவ எரிபொருள் தொழில்துறை ஆதரவளித்தது. 


"நிலக்கரி மற்றும் எரிவாயு மின் நிலையங்களில் உமிழ்வு வரம்புகளை நிர்ணயித்தல், வாகனங்களுக்கான எரிபொருள் திறன் தரநிலைகள் (மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது உட்பட), மற்றும் மத்திய அரசு குறிப்பாக முக்கியப் பங்கு வகிக்கும் கடல் காற்று போன்ற சுத்தமான எரிசக்தி தொழில்களை ஆதரிக்கும் விதிமுறைகள் போன்ற பைடன் விதிமுறைகளை அவர் கிட்டத்தட்ட நிச்சயமாக தவிர்க்க நடவடிக்கை எடுப்பார்" என்று அவர் கூறினார். 


"உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது, அவர் LNG போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கான புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட ஏற்றுமதி சந்தைகளைத் தேடுவார். இதன் விளைவாக ஆற்றல் மாற்றம் மெதுவாகிறது மற்றும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வது தேசியக் கொள்கையை விட சந்தை சக்திகள் மற்றும் மாநில / உள்ளூர் கொள்கையால் இயக்கப்படும், "என்று அவர் கூறினார். 


ஆனால், 2016-2020-ஆம் ஆண்டு முதல் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். "ஒருவருக்கு சுத்தமான எரிசக்தி தொழில் பெரியது / மிகவும் முதிர்ச்சியடைந்தது. நல்ல தொழில்நுட்பங்கள் விரைவாகவும் மற்றும் அதிக அளவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அந்தத் தொழில் நீட்டிப்பால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு செலுத்துகிறது," என்று அவர் கூறினார். 


ஒபாமாவின் நிர்வாக நடவடிக்கைகளை அகற்றுவது டிரம்புக்கு எளிதானது என்றாலும், சட்டங்கள் மூலம் பைடனின் நடவடிக்கைகளை செயல்தவிர்க்க எளிதானது அல்ல. எனவே, டிரம்ப் மிகவும் கட்டமைக்கப்பட்ட முறையில் நடக்கலாம். 


ரஷ்ய கோணம் 


இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், ரஷ்ய எண்ணெய் குறித்த டிரம்பின் நிலைப்பாடு. ரஷ்ய எண்ணெய் மீதான இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மலிவான எண்ணெய் கிடைப்பதுதான் முக்கியம். 


ஜர்கா-செல்லர்ஸின் கூற்றுப்படி, "ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளின் எதிர்காலம் தெளிவாக இல்லை. இருப்பினும், பைடன் ஆட்சியில் ஏற்பட்ட கொள்கையில் மாற்றங்கள் ஒரு கட்டத்தில் இருக்கலாம் என்று தெரிகிறது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தடையாணை கொள்கை எப்படி மாறும் என்று சொல்வது கடினம். ரஷ்ய எண்ணெய் மீதான தடையாணைகளின் எதிர்காலம் அநேகமாக அமெரிக்க-ரஷ்ய உறவையும் உக்ரைன் போரையும் ட்ரம்ப் எவ்வாறு அணுகுகிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும்" என்று குறிப்பிட்டுள்ளார். 


எவ்வாறாயினும், உக்ரைனின் போர் முயற்சி மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான காரணத்தில் டிரம்ப் குறைந்த உறுதியுடன் இருப்பதாகத் தெரிகிறது. "உக்ரைனின் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்போவதாக டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். மேலும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அந்த தடைகளை நீக்குவது மிகவும் தர்க்கரீதியானதாக இருக்கும். இவை அந்த  ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ரஷ்யா அநேகமாக அதை ஒரு ஒப்பந்தத்திற்கான நிபந்தனையாக ஆக்கக்கூடும். ட்ரம்ப் அதுபோன்றவொரு உடன்படிக்கைக்கு முன்னோக்கி சென்றால், அவர் அநேகமாக அந்த நிபந்தனையை ஏற்க வேண்டியிருக்கும்" என்றார். 


தூய்மையான எரிசக்தி திட்டங்கள் குறித்த தனது நிலைப்பாட்டில் டிரம்ப் தெளிவாக இருந்தாலும், அமெரிக்க வணிகம் முற்றிலும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதும் தெளிவாகிறது. ஆனால், டிரம்பின் முதல் பதவிக்காலத்திற்கும் இப்போது இந்தியாவிற்கும் இடையில் வெளிப்பட்ட ஒரு அம்சம் என்னவென்றால், புதைபடிவ எரிபொருள் தொழிலுக்கு நிலையான சந்தையாக இந்தியா இருப்பதால் இந்தியாவை புறக்கணிக்க முடியாது. 


இந்தியா அமெரிக்காவுடனான வர்த்தகத் திறன்களை கூர்மைப்படுத்த வேண்டும். 




Original article:

Share: