நெகிழி (Plastic) மாசுபாடு மற்றும் உலகளாவிய நெகிழி ஒப்பந்தம் -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி:


உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரிய குடியரசு Plastic Pollution-ஐ வெல்லுங்கள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வை நடத்துகிறது. பிளாஸ்டிக் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது மற்றும் அகற்றப்படுகிறது, மேலும் அவை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மக்களுக்குக் கல்வி கற்பிப்பதே இந்த கருப்பொருளின் நோக்கமாகும். பயனுள்ள தீர்வுகளை ஆதரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் உலகளவில் சமூகங்களை ஈடுபடுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.


2022-ல், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபை (United Nations Environment Assembly (UNEA)) 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் குறித்த 5-வது மற்றும் இறுதி சுற்று விவாதம் எந்தவொரு உடன்பாடும் இல்லாமல் முடிந்தது. ஒப்பந்தம் முடிவடையவில்லை என்றாலும், ஒப்பந்தத்தின் வரைவு உரை குறித்த விவாதங்கள் அடுத்த ஆண்டு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022-ல், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவை (UNEA - United Nations Environment Assembly) 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் குறித்த ஐந்தாவது மற்றும் இறுதிச் சுற்று விவாதம் எந்தவொரு உடன்பாடும் இல்லாமல் முடிந்தது. ஒப்பந்தம் முடிவடையவில்லை என்றாலும், ஒப்பந்தத்தின் வரைவு உரை குறித்த விவாதங்கள் அடுத்த ஆண்டு தொடரும்.


முக்கிய விஷயங்கள்:


1. 2015-ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கைக்குப் பிறகு மிக முக்கியமான சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் (Intergovernmental Negotiating Committee (INC-5) ஐந்தாவது மற்றும் இறுதிக் கூட்டத்தில் தென் கொரியாவின் புசானில் 170-க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தன. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய விதிகளை உருவாக்குவதற்கும் 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதைச் செய்வதற்கும் ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது 2022-ல் நைரோபியில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவையில்.


2. வரைவு உரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் தெளிவான வரையறைகளை வழங்கியது, ஆனால் அது மைக்ரோபிளாஸ்டிக், நானோபிளாஸ்டிக், முதன்மை பிளாஸ்டிக் பாலிமர்கள் (primary plastic polymers), மற்றும் மறுசுழற்சி (recycling) போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகளின் வரையறைகளை பிரதிபலிக்கவில்லை. உடன்படிக்கையில் கையெழுத்திடுவதைத் தடுத்த மூன்று மிக முக்கியமான பிரச்சினைகள் பாலிமர் உற்பத்தியில் உலகளாவிய வரம்பு நிர்ணயம், பிளாஸ்டிக் உற்பத்தியில் இருந்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அகற்றுதல், மற்றும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை படிப்படியாக நிறுத்துதல் ஆகியவை அடங்கும். இரண்டு முக்கிய கூட்டணிகளான - உயர் லட்சிய கூட்டணி (High Ambition Coalition (HAC)) மற்றும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட குழு, முக்கியமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை உள்ளடக்கிய குழுகளுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க பிளவு தோன்றியது.


3. Earth.org-ன் வலைத்தளத்தின்படி, உயர் லட்சியக் கூட்டணி தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகள் மற்றும் இரசாயனங்களை படிப்படியாக நிறுத்துவதற்கான கட்டுப்படுத்தும் உடன்படிக்கைகளை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட குழு, கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சியில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறது. இது கருத்து வேறுபாட்டின் புள்ளிகளில் ஒன்றாக மாறியது.


4. இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. எந்தவொரு சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் வளரும் நாடுகளுக்கு ஆதரவின் தேவையை அங்கீகரிக்க வேண்டும். தொடக்கத்தில், உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது சுற்றிலும் விவாதங்களைக் குறிப்பிடும் "வழங்கல்" (supply) குறித்த எந்தவொரு பிரிவையும் அது ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாகக் கூறியது. முதன்மை பாலிமர்களின் உற்பத்தி பிளாஸ்டிக் மாசுபாட்டுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை என்றும், பாலிமர் அல்லது பிளாஸ்டிக் உற்பத்தி தொடர்பான இலக்குகள் இருக்கக் கூடாது என்றும் இந்தியா கூறியது. மாறாக, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.



உலகிற்கு ஏன் ஒரு உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் தேவை?


1. அதன் தகவமைப்பு பண்புகள் மற்றும் பல்துறை பயன்பாட்டின் காரணமாக, பிளாஸ்டிக் மனிதர்களுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்தி உயர்ந்துள்ளது. 1950-களில் இருந்து, உலகம் முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்தி உயர்ந்துள்ளது. இது 1950-ல் வெறும் 2 மில்லியன் டன்களில் இருந்து 2019-ல் 450 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், உற்பத்தி 2050-க்குள் இரட்டிப்பாகவும், 2060-க்குள் மூன்று மடங்காகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2. 2023-ஆம் ஆண்டு தி லான்செட் வெளியிட்ட ஆய்வின்படி, பிளாஸ்டிக் சிதைவதற்கு (decompose) 20 முதல் 500 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், இதுவரை 10%-க்கும் குறைவானது மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது என்பதால் இது ஒரு நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. நெகிழிக் கழிவுகளில் பெரும்பாலானவை சுற்றுச்சூழலில், குறிப்பாக ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் கசிந்து, சிறிய துகள்களாக (மைக்ரோபிளாஸ்டிக் அல்லது நானோபிளாஸ்டிக்) உடைகின்றன.


3. பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனங்களுக்கு வெளிப்படுவது உட்சுரப்பு சீர்குலைவையும் புற்றுநோய், நீரிழிவு, இனப்பெருக்கக் கோளாறுகள் (reproductive disorders) மற்றும் நரம்பு வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு மனித நோய்களையும் ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக் கடல், நன்னீர், மற்றும் நில சுற்றுச்சூழல் அமைப்புகளில் வாழும் உயிரினங்களையும் தீங்கு விளைவிக்கிறது.


4. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அகற்றல் காலநிலை மாற்றத்திற்கும் பங்களிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) அறிக்கையின் படி, 2019-ல், பிளாஸ்டிக்குகள் 1.8 பில்லியன் டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை உருவாக்கின. உலகளாவிய வெளியேற்றத்தில் 3.4%. இந்த வெளியேற்றங்களில் சுமார் 90% பிளாஸ்டிக் உற்பத்தியிலிருந்து வருகிறது. இது கச்சா பொருளாக புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துகிறது.


5. கடந்த ஆண்டு நேச்சர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்தியா உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டில் ஐந்தில் ஒரு பங்கிற்கு பங்களிக்கிறது. இந்தியா ஆண்டுதோறும் சுமார் 5.8 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை எரிக்கிறது. மேலும் 3.5 mt பிளாஸ்டிக்குகளை குப்பையாக சுற்றுச்சூழலில் (நிலம், காற்று, நீர்) வெளியிடுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்தியா உலகில் வருடத்திற்கு 9.3 mt பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு பங்களிக்கிறது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த நாடுகளான நைஜீரியா (3.5 mt), இந்தோனேசியா (3.4 mt) மற்றும் சீனா (2.8 mt) ஆகியவற்றைவிட கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் முந்தைய மதிப்பீடுகளைவிட இது மிகவும் அதிகமானதாகும்.


பிளாஸ்டிக் வகைகள்


1. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2021 (Plastic Waste Management Rule 2021) 2022-ல் 19 வகைகளை உள்ளடக்கிய ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டை தடை செய்தது. ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் என்பது ஒருமுறை பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறிக்கிறது. ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளில் மிக உயர்ந்த பங்குகளில் ஒன்றைக் கொண்டுள்ளது — பொருட்களின் பேக்கேஜிங், பாட்டில்கள் (ஷாம்பு, சோப்பு, அழகு சாதனப்பொருட்கள்), பாலிதீன் பை, முகக் கவசங்கள், காபி கப்புகள், ஒட்டும் படலம், குப்பை பைகள், உணவு பேக்கேஜிங் போன்றவை.


2. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Plastic Waste Management Rules, 2016)-ன் படி, அவற்றின் மறுசுழற்சி திறனின் அடிப்படையில் பிளாஸ்டிக்குகளின் 7 வகைகள் உள்ளன.


குறியீடு

அறிவியல் பெயர்

பயன்பாடுகள்

1

பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (Polyethylene Terephalate (PET))

தண்ணீர் பாட்டில்கள், PET பாட்டில்கள் போன்றவற்றில் பயன்ப்படுத்தப்படுகிறது.

2

அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலீன் (High Density Polyethylene (HDPE))

பால்/சோப்பு பைகள், கேரி பேக்குகள், கொள்கலன்கள் போன்றவற்றில் பயன்ப்படுத்தப்படுகிறது.

3

பாலி வினைல் குளோரைடு (Poly Vinyl Chloride (PVC))

குழாய்கள், கேபிள்கள், தரைகள் பயன்ப்படுத்தப்படுகிறது.

4

Low density polyethylene குறைந்த அடர்த்தி கொண்ட பாலிஎத்திலீன் (LDPE))

கேரி பேக்குகள், பிலிம்கள் போன்றவை.

மருந்து பாட்டில்கள், தானிய லைனர்கள் போன்றவற்றில் பயன்ப்படுத்தப்படுகிறது.

5

பாலிபுரோப்பிலீன் (Polypropylene (PP)

மருந்து பாட்டில்கள், தானிய லைனர்கள், போன்றவற்றில் பயன்ப்படுத்தப்படுகிறது

6

பாலிபுரோப்பிலீன் (Polystyrene resins (PS))

நுரை பேக்கேஜிங், ஐஸ்கிரீம் கோப்பைகள், தேநீர் கோப்பைகள் போன்றவற்றில் பயன்ப்படுத்தப்படுகிறது

7

மற்றவை

தெர்மோசெட் பிளாஸ்டிக்குகள், பல அடுக்கு & லேமினேட்டட் பிளாஸ்டிக்குகள், PUF, பேக்கலைட், பாலிகார்பனேட், மெலமைன், நைலான் போன்றவற்றில் பயன்ப்படுத்தப்படுகிறது.




Original article:
Share:

பகுதி XVII – அதிகாரப்பூர்வ மொழி -ரோஷ்னி யாதவ்

 இந்திய அரசியலமைப்பின் பகுதி XVII, 343 முதல் 351 பிரிவு வரை அலுவல் மொழிகளைப் (official languages) பற்றி கூறுகிறது.


பிரிவு 343-ன் ("ஒன்றிய அரசின் அலுவல் மொழியின்") உப பிரிவு 1 "ஒன்றிய அரசின் அலுவல் மொழி தேவநாகரி எழுத்துருவில் உள்ள இந்தி மொழியாக இருக்கும்" மற்றும் "அலுவல் அரசின் அரசு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் இந்திய எண்களின் சர்வதேச வடிவமாக இருக்கும்." என்று கூறுகிறது.


அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய 15 ஆண்டுகளுக்கு, ஒன்றியத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பிரிவு 343(2) கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறை அல்லது அமலுக்கு வந்தது.


“15-ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக (அ) ஆங்கில மொழி அல்லது (ஆ) தேவநாகரி எண் வடிவத்தைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்று  பிரிவு 343(3) கூறுகிறது.


ஜனவரி 26, 1965 அன்று, 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் பிரிவு 3 நடைமுறைக்கு வந்தது. இது அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட 15 ஆண்டு காலம் காலாவதியான பிறகும், "ஒன்றியத்தின் அலுவல் நோக்கங்களுக்காகவும், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தவும் ஆங்கில மொழியைத் தொடர" வழிவகுத்தது.


உங்களுக்குத் தெரியுமா:


நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மொழிகளும் 270 தாய்மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழியையும் இந்தியாவின் "தேசிய மொழி" (national language) என்று பட்டியலிடவில்லை.


அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகும், அதன் பின்னர் 10 ஆண்டுகள் முடிந்த பிறகும், குடியரசுத்தலைவரால் ஒரு ஆணையத்தை அமைக்க பிரிவு 344 (1) அதிகாரம் வழங்குகிறது. ஆணையம் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி பல்வேறு மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.


மாநிலத்தின் அலுவல் மொழியைப் பற்றி 345-வது பிரிவு பேசுகிறது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், அந்த மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை அல்லது இந்தி மொழியை அந்த மாநிலத்தின் அனைத்து அல்லது எந்தவொரு அலுவல் நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படும் மொழியாகவோ அல்லது மொழிகளாகவோ சட்டப்படி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மாநில சட்டமன்றம் வேறுவிதமாக சட்டப்படி வழங்கும் வரை, இந்த அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பு உடனடியாகப் பயன்படுத்தப்பட்ட மாநிலத்திற்குள் அலுவல் நோக்கங்களுக்காக ஆங்கில மொழி விதிகளுக்கு உட்பட்டு  தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று  346 மற்றும் 347 பிரிவுகள் கூறுகின்றன.


குறைகளைத் தீர்ப்பதற்கான பிரதிநிதித்துவங்களில் பயன்படுத்த வேண்டிய மொழி


“ஒவ்வொரு நபரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஒன்றியத்திலோ அல்லது மாநிலத்திலோ பயன்படுத்தப்படும் எந்தவொரு மொழியிலும், எந்தவொரு அரசு அலுவலரிடமும் புகார் அல்லது கோரிக்கையை வைக்கலாம் என்று பிரிவு 350  கூறுகிறது.


தொடக்கக் கல்வி நிலையில் தாய்மொழியில் கற்பிப்பதற்கான வசதிகள்


மொழியியல் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியில் தாய்மொழியில் கற்பிப்பதற்கான போதுமான வசதிகளை (adequate facilities) வழங்க மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு பிரிவு 350A சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், அத்தகைய வசதிகளை வழங்குவதற்குத் தேவையான அல்லது சரியானதாகக் கருதும் எந்தவொரு மாநிலத்திற்கும் குடியரசுத் தலைவர் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.


அழிந்து வரும் மொழிகள் (endangered languages) யாவை?


உலகம் அதன் மொழிகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது. அவற்றில் பலமொழிகள் அழிந்து வரும் மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், மொழிகளின் இழப்பு கலாச்சார இழப்புக்கு சமமானதாகும். என்று டாக்டர் கே ஸ்ரீனிவாசராவ் சாகித்ய அகாடமியின் செயலாளர் தெரிவித்துள்ளர்.


நிபுணர்களின் கூற்றுப்படி, உலகின் 7,000 மொழிகளில் ஏறக்குறைய 40 சதவீத பழங்குடி மக்கள் குழுக்கள் பேசும் பேச்சு வழக்குகள் மொழிகள் உட்பட பல மொழிகள், ஏற்கனவே மறைந்துவிட்டன. மேலும், பல மொழிகள் அழிந்துபோகும் விளிம்பில் உள்ளன.


ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி, “ஒரு மொழியின் பேச்சாளர்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது, ​​தகவல் தொடர்பு களங்களில் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது, ​​ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அதைக் கற்பிப்பதை நிறுத்தும்போது அந்த மொழி ஆபத்தில் இருக்கும். இதனால், புதிய பேச்சாளர்கள், பெரியவர்கள் அல்லது குழந்தைகள் அந்த மொழியை பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல் உருவாகும்.


UNESCO மொழிகளை ஆபத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளது அதன் படி: (i) பாதிக்கப்படக்கூடியது (ii) நிச்சயமாக அழிந்து வருவது (iii) கடுமையாக அழிந்து வருவது (iv) மிகவும் ஆபத்தில் உள்ளது என்று வகைப்படுத்தியுள்ளது.


இந்தியாவில் அழிந்து வரும் மொழிகள்


இந்தியாவில் பல மொழிகள் எழுதப்படுகிறது. மேலும் பல குரல்களில் பேசப்படுகிறது. ஆனால், அனைத்து மொழிகளும் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படவில்லை அல்லது பாரம்பரிய மொழிகள் (classical languages) என்ற அடையாளம் பெறவில்லை இத்தகைய மொழிகள் பெரும்பாலும் அழிந்து போவதற்கான சவால்களை எதிர்கொள்கின்றன மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளான (endangered) மொழிகளாக மாறுகின்றன.


இலக்கிய விமர்சகரும் ஆர்வலருமான கணேஷ் நாராயண் தேவி, 2020-ஆம் ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அட்ரிஜா ராய்சௌத்ரிக்கு அளித்த பேட்டியில், 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழி அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்தியாவில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் எந்த மொழியையும் அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்தது. எனவே, இந்தியாவில், 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் அனைத்து மொழிகளையும் அரசு குறிப்பிடத் தகுதியற்றதாகக் கருதி, UNESCO-வால் அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகளாகக் கருதுகிறது. எனது கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறக்குறைய 780 மொழிகள் உள்ளன. அவற்றில் சுமார் 600 மொழிகள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. 1991 மற்றும் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 122 மொழிகளுக்கு மேல் இல்லை என்று தெரிவிக்கின்றன.  னவே, மற்ற மொழிகளை ஆபத்தில் உள்ளவை (potentially endangered) என்று அழைக்க வேண்டும்.


அத்தகைய மொழிகளின் எடுத்துக்காட்டுகள் வடரி, கோலாட்டி, கோலா, கிசாரி மொழிகளாகும். இவை நாடோடி மக்களின் மொழிகள். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பேசப்படுகின்றன. பின்னர் பவுரி, கோர்கு, ஹால்டி, மவ்ச்சி போன்ற பல பழங்குடி மொழிகளும் உள்ளன. அசாமில், மோரன், டாங்சா, ஐடன் உள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் 250 மொழிகள் மறைந்ததாகத் தெரிகிறது. அதூனி, டிச்சி, கல்லு, ஹெல்கோ, கட்டகி என்று அழைக்கப்படும் மொழிகள் இருந்தன. அந்தமானில் உள்ள போ மொழி 2010இல் மறைந்துவிட்டது. சிக்கிமில் உள்ள மாஜ்ஹி மொழி 2015-ல் மறைந்துவிட்டது. ஆனால், ஒரு மொழி கடைசி நேரத்தில் மறைந்து போவதைக் காட்டுவது சாத்தியமற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மொழி என்பது ஒரு தனி வாழ்க்கை முறை அல்ல. அது மிகப் பெரிய குறியீட்டு அமைப்பு. குறியீடுகள் முறிந்துவிடும் போது அது ஒரு நொடியிலல்ல, ஒரு நீண்ட காலத்தில் நிகழ்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


சர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் 1901 மற்றும் 1928-க்கு இடையில் இந்திய மொழியியல் கணக்கெடுப்பை நடத்தினார். 2011 மொழியியல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 121 தாய்மொழிகள் உள்ளன. அவற்றில் 8வது அரசியலமைப்பு அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் அடங்கும். இந்தி மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது. 52.8 கோடி தனிநபர்கள் அல்லது மக்கள் தொகையில் 43.6% பேர் இதை தங்கள் தாய்மொழியாக அறிவிக்கின்றனர். அடுத்த மிக உயர்ந்த மொழி பெங்காலி, 9.7 கோடி (8%) பேருக்கு தாய்மொழியாகும். இது இந்தியின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது. தாய்மொழியைப் பொறுத்தவரை, இந்தியாவில் 2011-ல் 2.6 லட்சம் மக்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுபவர்களாக இருந்தனர். அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்ட 121 கோடி மக்களில் ஒரு சிறிய பகுதியாகும்.


அழிந்து வரும் மொழிகளைக் காப்பாற்ற முடியுமா? அத்தகைய மொழிகளைப் பாதுகாக்க என்ன முயற்சிகள் உள்ளன?


ஒவ்வொரு மொழியின் அழிவும் தனித்துவமான சுற்றுச்சூழல், வரலாற்று மற்றும் கலாச்சார அறிவை நிரந்தரமாக இழக்கச் செய்கிறது. ஒவ்வொரு மொழியும் உலகின் மனித அனுபவத்தின் தனித்துவமான வெளிப்பாடாகும். கூடுதலாக, இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சமான மொழிகளைக் காக்கும் உரிமை (fundamental right) வழங்கப்பட்டுள்ளது. “இந்திய நிலத்தில் அல்லது அதில் உள்ள எந்த பகுதியிலும் வாழும் குடிமக்களின் எந்த ஒரு பிரிவு தங்களுடைய தனித்துவமான மொழி, எழுத்து அல்லது பண்பாட்டைக் கொண்டிருந்தால், அதனை பாதுகாக்க உரிமை உண்டு”என்று பிரிவு 29 கூறுகிறது.


அழிந்து வரும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (Scheme for Protection and Preservation of Endangered Languages (SPPEL)) 


இந்திய அரசு, அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல் திட்டத்தை (SPPEL) செயல்படுத்தி வருகிறது. இது 2013-ஆம் ஆண்டு கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.


இந்தியாவின் அழிந்து வரும் அல்லது எதிர்காலத்தில் அழிந்து போகும் வாய்ப்புள்ள மொழிகளை ஆவணப்படுத்தி காப்பகப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் கர்நாடகாவின் மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனம் (Central Institute of Indian Languages (CIIL)) மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த பணிக்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் CIIL ஒண்றிணைந்து செயல்படுகிறது.


போதுமான ஆவணங்கள் இல்லாமல், அழிந்துபோன ஒரு மொழியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று UNESCO  கூறுகிறது.

10,000-க்கும் குறைவான பேச்சாளர்களால் பேசப்படும் மொழிகள் அல்லது முன்னர் மொழியியல் ரீதியாக ஆய்வு செய்யப்படாத மொழிகள் இந்த திட்டத்தில் முக்கியமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ​​117 மொழிகள் ஆவணப்படுத்தலுக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.


பல்கலைக்கழக மானியக் குழு  (University Grants Commission (UGC)) முயற்சிகள்


அழிந்துவரும் மொழிகளின் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக மானியக் குழு அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாப்பதற்காக, ‘இந்தியாவில் உள்ள பூர்வீக மற்றும் அழிந்துவரும் மொழிகளில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி’ மற்றும் ‘மத்தியப் பல்கலைக்கழகங்களில் அழிந்துவரும் மொழிகளுக்கான மையங்களை நிறுவுதல்’ ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளது.


2022 முதல் 2032 வரையிலான பத்தாண்டு காலத்தை பூர்வீக மொழிகளின் பாதுகாப்பு மற்றும் பரப்புதலுக்காக யுனெஸ்கோ சர்வதேச பழங்குடி மொழிகளின் காலமாக அறிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


உலகளவில் எட்டு பில்லியன் மக்கள் சுமார் 7,000 மொழிகளைப் பேசுகிறார்கள். இந்த மொழிகள் சுமார் 140 குடும்பங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான பேச்சுவழக்குகள் ஆகிய இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய, நைஜர்-காங்கோ, ஆஃப்ரோ-ஆசிய மற்றும் ஆஸ்ட்ரோனேசியன் மொழிகள் ஐந்து முக்கிய குழுக்களைச் சேர்ந்தவை. இருப்பினும், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், பழைய நோர்ஸ் மற்றும் ஆங்கிலம் அனைத்தும் அவற்றின் வேர்களை மிகவும் பழமையான மொழியில் கொண்டுள்ளன. புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய, 'முதல்' என்று பொருள்படும் புரோட்டோவை, அது உருவாக்கிய மொழி குடும்பத்தின் பெயரான இந்தோ-ஐரோப்பியத்துடன் இணைக்கிறது.


UNESCO உலக மொழிகளின் வரைபடம்


UNESCO உலக மொழிகளின் அட்லஸ் என்பது ஒரு மாறும் மற்றும் ஊடாடும் ஆன்லைன் கருவியாகும். இது பயனர்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இது மொழி நிலை, உயிர்ச்சக்தி, ஆபத்து மற்றும் நிலைத்தன்மையின் பல்வேறு அம்சங்களையும் ஆவணப்படுத்துகிறது. இது மொழிகளின் விரிவான பதிவாகும். இது மொழிப் பாதுகாப்பு, கண்காணிப்பு, ஊக்குவிப்பு மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் குறித்த அறிவுப் பகிர்வுக்கான ஒரு தனித்துவமான வளமாகும். அத்துடன் மொழி கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான ஒரு கலந்துரையாடும் கருவியாகும்.


Original article:
Share:

நாடாளுமன்ற செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை -டெரெக் ஓ பிரையன்

 சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு தயங்குகிறது. இது நாடாளுமன்ற விதிகள் மற்றும் மரபுகள் மீதான அதன் ஒட்டுமொத்த அணுகுமுறையைக் காட்டுகிறது.


இந்த வாரம், 17 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதினர். விரைவில், வழக்கமான மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று அரசாங்கம் விரைவாக அறிவித்தது. இது சிறப்புக் கூட்டத்தொடருக்கான கோரிக்கையை நிராகரிப்பது போல் தோன்றியது. வழக்கமாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அறிவிப்பதற்கும் அது தொடங்கும் நேரத்திற்கும் இடையிலான நேரம் சுமார் 20 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். ஆனால் இந்த முறை, மழைக்கால கூட்டத்தொடர் 47 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.


இது எழுதப்பட்டபோது, ​​எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் 250 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தை ஆதரித்து வந்தனர். பஹல்காமில் நடந்த சோகத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, மரியாதைக்குரிய வழக்கறிஞரும் சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல், சிறப்பு கூட்டத்தொடருக்கான கோரிக்கையை முதலில் முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் அவரது வழியைப் பின்பற்றின.


நாடாளுமன்ற அமர்வுகளை அழைப்பது பற்றி: விதிகளின்படி, அரசியலமைப்பின் பிரிவு 85 (1), "குடியரசுத்தலைவர்  அவ்வப்போது நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையையும் அவர் பொருத்தமாக நினைக்கும் நேரத்திலும் இடத்திலும் கூடுமாறு கூட்டுவார்" என்று கூறுகிறது.


எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. சிறப்பு கூட்டத்தொடரை அழைப்பது மத்திய அரசின் முடிவாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தொடரைக் கோரும்போது, ​​நாடாளுமன்ற விவகார அமைச்சகம் நிலைமையை சரிபார்க்கிறது. கூட்டத்தொடர் தேவை என்று அவர்கள் ஒப்புக்கொண்டால், தேதிகள் மற்றும் கால அளவைக் குறிக்கும் குறிப்பைத் தயாரிக்கிறார்கள். இந்தக் குறிப்பு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிற்குச் செல்கிறது. பிரதமர் ஒப்புதல் அளித்தால், அமைச்சகம் அதை ஜனாதிபதிக்கு அனுப்புகிறது, அவர் கூட்டத்தொடரின் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிப்பார். இருப்பினும், அரசாங்கம் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள பயந்தால், அது கூட்டத்தொடரை அழைப்பதைத் தவிர்க்கலாம்.


அரசியலமைப்பில் சிறப்புக் கூட்டத்தொடர் பற்றி எந்த சிறப்புக் குறிப்பும் இல்லை. ஆனால், இதற்கு முன்பு பல சிறப்பு அமர்வுகள் நடந்துள்ளன. 1972ஆம் ஆண்டில், சுதந்திரத்தின் 25 ஆண்டுகளைக் கொண்டாட ஒரு அமர்வு நடைபெற்றது. 1992ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50 ஆண்டுகளைக் குறிக்க ஒரு நள்ளிரவு அமர்வு நடைபெற்றது. 1997ஆம் ஆண்டில், குடியரசின் 50 ஆண்டுகளைக் கொண்டாட ஒரு சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது. 2014 முதல், மூன்று சிறப்பு அமர்வுகள் நடந்துள்ளன: 2015ஆம் அண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளலுக்காகவும், 2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அறிமுகப்படுத்துவதற்காகவும், 2023ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பதற்காகவும் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா (The Women’s Reservation Bill) 2023 சிறப்பு அமர்வில் நிறைவேற்றப்பட்டது.


முக்கியமான மைல்கற்களைக் கொண்டாடும் இந்த அமர்வுகள் நல்லவை. ஆனால், பாராளுமன்றத்தின் பெரிய அரங்குகள் சிறப்பு நாட்கள் மற்றும் ஆண்டுவிழாக்களைக் குறிப்பதை விட அதிகமாகச் செய்ய வேண்டும்.


சில நேரங்களில், அரசாங்கங்கள் விஷயங்களை மாற்ற விரைவாக நடவடிக்கை எடுப்பதில்லை. 2006ஆம் ஆண்டு, மும்பை ரயில் குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்கு பதிலளிக்க பாராளுமன்றம் அதன் அடுத்த திட்டமிடப்பட்ட அமர்வு வரை காத்திருந்தது. 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு, திட்டமிடப்பட்ட அமர்வு தொடங்கியபோதுதான் பாராளுமன்றம் மீண்டும் கூடியது.


பஹல்காம், பூஞ்ச், உரி, ரஜோரி ஆகிய இடங்களில் என்ன நடந்தது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து நாடாளுமன்றம் விரைவாக விவாதிக்க வேண்டும். கடந்த காலத்திலிருந்து ஒரு தெளிவான உதாரணம் உள்ளது. 1962ஆம் ஆண்டு சீன-இந்தியப் போரின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவரும், அப்போது புதிய ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் அடல் பிஹாரி வாஜ்பாய், சிறப்புக் கூட்டத்தைக் கோரினார். பிரதமர் ஜவஹர்லால் நேரு அதற்கு ஒப்புக்கொண்டார். போர் நடந்து கொண்டிருக்கும்போதே அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வில், 165 உறுப்பினர்கள் போர் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் பற்றிய திறந்தவெளிப் பேச்சில் பங்கேற்றனர்.


கடந்த 15 ஆண்டுகளில், பல முக்கியமான நாடாளுமன்ற நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக: மக்களவையில் துணை சபாநாயகர் பதவி 2019ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. பத்து மசோதாக்களில், முந்தைய ஏழு மசோதாக்களுடன் ஒப்பிடும்போது, ​​சுமார் இரண்டு மட்டுமே குழுக்களுக்கு மறுஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. விவசாயச் சட்டங்கள் போன்ற முக்கியமான மசோதாக்களின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மின்னணு வாக்களிப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.


மத்திய அரசு சட்டமன்றத்தை புறக்கணித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. உதாரணமாக, 2001 முதல் 2012 வரை, குஜராத் சட்டமன்றம் முந்தைய எந்த முதல்வரின் ஆட்சிக் காலத்திலும் கூடியதை விடக் குறைவான முறையே கூடியது. இந்தக் காலகட்டத்தில், குஜராத் சட்டமன்றம் சராசரியாக 30 முறைக்கும் குறைவாகவே கூடியது. நம்ப முடிகிறதா?


இந்த அரசாங்கம் ஒரு சிறப்பு அமர்வை அழைப்பதை கிட்டத்தட்ட தவிர்த்துவிட்டது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் நடுநிலைப் பள்ளியில் எனது குடிமையியல் ஆசிரியரை நான் நினைவில் கொள்கிறேன். அவர் என்னிடம் கூறினார், “அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கிறது. நாடாளுமன்றம் மக்களுக்குப் பதிலளிக்கிறது.” எனவே நாடாளுமன்றம் புறக்கணிக்கப்படும்போது, ​​அரசாங்கம் யாருக்கு பதிலளிக்கிறது?


எழுத்தாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் ஆவார்.


Original article:
Share:

தாமதத்தில் அநீதி: அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து…

 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், தாமதமான அறிவிப்பு நியாயமற்றது.


கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தாமதமான இந்தியாவின் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தற்போது மார்ச் 2027ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை. இது அரசாங்கப் பணிகளை, குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகை தரவு சிறப்பாக செயல்பட சார்ந்துள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் பாதித்தது. 


முதல் முறையாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் செய்யப்படும். இது தரவை விரைவாகச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்வதை எளிதாக்கவும் உதவும். ஆனால், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தரவு திருட்டு மற்றும் தனியுரிமை பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறை மாறும் என்றாலும், ஒவ்வொரு அடியிலும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருப்பது பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முக்கியம். ஒவ்வொரு வீட்டையும் உள்ளடக்கிய இந்தப் பெரிய பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா அதன் மக்கள்தொகையில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இருவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும், முக்கியமான பகுதிகளில் பிராந்தியங்களுக்கிடையேயான வேறுபாடுகளாலும் சவால்களை எதிர்கொள்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புதிய தரவு பல சிக்கல்களைத் தீர்க்க உதவும். 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, சாதிக் குழுக்கள் கணக்கிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தக் குழுக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை பற்றிய சிறந்த தகவல்களைக் கொண்டிருப்பது வளர்ச்சியைத் திட்டமிட உதவும். ஆனால், சாதிகளைக் கணக்கிடுவதும் அதிக சமூகப் பிளவுகளை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு முக்கியப் பகுதி என்னவென்றால், இது மக்களவை மற்றும் சட்டமன்ற இடங்களின் தொகுதிகளை மறுவரையறை செய்வதோடு இணைக்கப்படும். இது இந்தியாவின் தேர்தல் முறையை மாற்றும். அடுத்த தொகுதி மறுவரையறை 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. தற்போது, ​​ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கை 1971ஆம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டது.


நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி மார்ச் 1, 2027 ஆகும். இது இந்த தொகுதி மறுவரையறை நடக்க அனுமதிக்கும். தெற்கில் உள்ள மாநிலங்கள் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி மெதுவாக உள்ள பிற பகுதிகள், மக்கள்தொகை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டால் இடங்களை இழக்க நேரிடும் என்று கவலைப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தனது திட்டங்களை விளக்கவில்லை.


மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், இடங்களை மறுசீரமைப்பது போன்ற இந்த முக்கியமான பிரச்சினையில் அனைத்து குழுக்களுடனும் இணைந்து பணியாற்றி ஒரு உடன்பாட்டை எட்டுவது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியம். இல்லையெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்படும் தாமதங்கள், இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக இடங்களைப் பெற ஆளும் கட்சியான பாஜகவுக்கு உதவும் முயற்சியாகக் கருதப்படலாம்.


Original article:
Share:

அணுசக்தி சட்டங்களை இந்தியா திருத்த வேண்டுமா? -குணால் சங்கர்

 அணுசக்தி சேதங்களுக்கான குடிமைப் பொறுப்புச் சட்டம் (Civil Liability for Nuclear Damages Act (CLNDA)), 2010 மற்றும் அணுசக்திச் சட்டம் (Atomic Energy Act (AEA)), 1962 ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் அணுசக்தி பொறுப்புக் கட்டமைப்பை, தனியார் நிறுவனங்களை அணுசக்தி உற்பத்தி வசதிகளை உருவாக்கவும் இயக்கவும் அனுமதிக்கும் வகையில் இந்தியாவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுசக்தித் திறனை தற்போதைய 8 GW-லிருந்து 100 GW ஆக விரிவுபடுத்துவதற்கான பரந்த ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாகும். இது நாட்டின் தூய்மையான ஆற்றல் இலக்குகளுடன் இணைந்துள்ளது. இந்தியா அதன் அணுசக்தி சட்டங்களில் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டுமா? குணால் சங்கர் தலைமையிலான ஒரு பேச்சில் ஆஷ்லே டெல்லிஸ் மற்றும் டி. ரகுநந்தன் இதைப் பற்றி விவாதிக்கின்றனர்.


இந்தியாவின் அணுசக்தி சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?


ஆஷ்லே டெல்லிஸ்: இந்தியா அணுசக்தி பயன்பாட்டை அதிகரிக்க விரும்பினால், நாட்டிற்குள் அதை உற்பத்தி செய்யும் திறனையும் அதிகரிக்க வேண்டும். ஆனால் 20 ஆண்டுகள் போன்ற நீண்டகால திட்டத்தைப் பார்த்தால், இந்தியாவுக்கு மற்ற நாடுகளின் உதவியும் தேவைப்படும். இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது.  தற்போதைய இந்திய சட்டம் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பை அனுமதிக்காது.


2008ஆம் ஆண்டு அமெரிக்க-இந்திய பொது அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ​​வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணுசக்தியை உருவாக்க உதவும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2000ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொறுப்புச் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த நம்பிக்கை தடுக்கப்பட்டது. எனவே, அந்தச் சட்டங்களில் மாற்றங்களைச் செய்வதில் பிரதமரை நான் ஆதரிக்கிறேன்.


டி.ரகுநந்தன்: இந்தியாவில் அணுசக்தி திறனை வளர்ப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவருவதற்காக சட்டத்தை மாற்றும் யோசனை இரண்டு தவறான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.


முதலாவதாக, அணுசக்தி திறனை வளர்ப்பதில் முக்கிய பிரச்சனை பணம் என்று அது கருதுகிறது.


இரண்டாவதாக, இந்தியா திட்டமிட்டுள்ளது போல, மற்ற பெரிய அணுசக்தி நாடுகள் தங்கள் அணுசக்தி திறனை விரைவாக அதிகரித்துள்ளன என்று அது கருதுகிறது. ஆனால், அமெரிக்கா அல்லது பிரான்ஸ் போன்ற நாடுகளில் இது நடக்கவில்லை. இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளிடம் அதிக அணுசக்தி திறன் இல்லை. அவை மெதுவாக தங்களின் திறனை வளர்க்கின்றன.


சீனா மட்டுமே அணுசக்தியை விரைவாக வளர்க்கும் திறனைக் கொண்டிருக்கலாம். ஆனால், சீனா இந்தியாவில் முதலீடு செய்யும் சாத்தியம் இல்லை.


ஆஷ்லே டெல்லிஸ்: இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டம் வெளிநாட்டு நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்க வைப்பதற்கு ஒரு உண்மையான தடையாக உள்ளது. இந்தச் சட்டம் மாறாமல் இருந்தால், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் சந்தையில் சேர முடியாது என்று கூறியுள்ளன.


ரஷ்யா ஒரு சிறப்பு வாய்ந்த நிறுவனத்தை கொண்டுள்ளது. ஏனெனில், அதன் நிறுவனமான ரோசாட்டம் (Rosatom) அரசாங்கத்திற்குச் சொந்தமானது. ரோசாட்டம் கூட இந்தியாவின் சட்டத்துடன் உடன்படவில்லை. சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, 2008ஆம் ஆண்டிலேயே இந்தியா ரோசாட்டமுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தால் இனி இதைச் செய்ய முடியாது. ஏனெனில், இதுபோன்ற தனியார் ஒப்பந்தங்களைச் செய்வது பாராளுமன்றம் தீர்மானித்ததற்கு எதிரானது.


இந்திய நிறுவனங்களையும் இந்த சட்டம் பாதிக்கிறது. ஒப்பந்தங்கள் மூலம் இந்திய தனியார் இறக்குமதியாளர்களைப் பாதுகாக்க அணுசக்தித் துறை (Department of Atomic Energy (DEA)) இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (Nuclear Power Corporation of India Ltd (NPCIL)) நிறுவனத்தை நியமித்தது. கோவ்வாடாவில் சிக்கல்கள் தொடங்கியது. சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்திய இறக்குமதியாளர்கள் பாகங்களை வழங்க மறுத்துவிட்டனர். எனவே, NPCIL முழுப் பழியையும் ஏற்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. ஏதேனும் ஒரு பகுதி தோல்வியடைந்து NPCIL விரும்பியபடி செய்யப்பட்டால், NPCIL தான் பொறுப்பு என்று வாதிட்டது. ஆனால், இந்த தர்க்கம் பலவீனமானது மற்றும் நீதிமன்றத்தில் சோதிக்கப்படவில்லை.


ரகு சொல்வது சரிதான். அரசியல் மற்றும் வணிக காரணங்களுக்காக அமெரிக்கா சட்டத்தில் மாற்றங்களை வலியுறுத்துகிறது. இந்தியா வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அது சட்டத்தை மாற்ற வேண்டும்.


தற்போது நம்மிடம் போதுமான விநியோக திறன் உள்ளதா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன. இருப்பினும், இந்தியாவில் இந்த முதலீடு நீண்ட காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கத்திய அணுசக்தி விநியோகஸ்தர்கள் பொதுவாக சந்தை தேவைகளுக்கு பதிலளிக்கின்றனர். மேலும், போதுமான தேவை இருந்தால் தங்கள் திறனை அதிகரிப்பார்கள்.


தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபடுவதில் ஒரு சிக்கல் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வது ஆகும். குறிப்பாக, இது பாதுகாப்பு அபாயங்களைக் கொண்ட ஒரு முக்கியமான பகுதி ஆகும். இந்தியா அணுசக்திச் சட்டத்தை (AEA) மாற்றினாலும், ரஷ்யாவுடனான கடந்த கால ஒப்பந்தங்களில் இருந்ததைப் போல எதிர்கால தொழில்நுட்பப் பகிர்வு அதிகமாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெரிய அணு உலைகளுடன் ஒப்பிடும்போது இப்போது பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படும் சிறிய அணுக்கரு உலைகளுக்கு (Small Modular Reactors (SMRs)) இது குறிப்பாக உண்மை.


ஆஷ்லே டெல்லிஸ்: இது ஒரு வணிக ரீதியான விஷயம். உங்கள் இறக்குமதியாளர்கள் தனியார் நிறுவனங்களாக இருந்தால், அது அவர்களுக்கு லாபம் ஈட்ட உதவினால் மட்டுமே அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களை தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. எந்த தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை தீர்மானிப்பதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் ஒரு பங்கை வகிக்கிறது. உதாரணமாக, வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) சில உலை வடிவமைப்பு தொழில்நுட்பத்தை சீனாவுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா அனுமதித்தது, ஆனால், பின்னர் வெஸ்டிங்ஹவுஸ் AP1000 தொழில்நுட்பத்தை சீனா நகலெடுத்ததால் வருத்தப்பட்டது.


இந்தியா தொழில்நுட்ப பரிமாற்றத்தைக் கேட்கும். மேலும், அதில் சிலவற்றைப் பெறக்கூடும். இது நிறுவனத்திற்கு எவ்வளவு லாபகரமானது மற்றும் அமெரிக்க அரசாங்கம் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்கிறது என்பதைப் பொறுத்து, குறிப்பாக தேசிய பாதுகாப்புக்காக அல்லது அணு தொழில்நுட்பத்தின் பரவலைத் தடுக்க. ரஷ்யாவின் ரோசாட்டம் கூட இந்தியாவுக்கு VVER-1000 தொழில்நுட்பத்தை முழுமையாக அணுக அனுமதிக்கவில்லை. அவர்கள் இந்தியா சில பகுதிகளை உருவாக்க அனுமதித்தனர். ஆனால், இன்னும் முக்கிய பாகங்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். 


இது முன்னேற்றத்தைத் தடுக்காது. உண்மையில், சிறிய அணு உலைகளில் (SMRs) பணிபுரியும் புதிய நிறுவனங்கள், சந்தையில் நுழைந்து, அதிக உற்பத்தி செய்து, லாபம் ஈட்ட விரும்புவதால், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அதிக விருப்பம் கொண்டுள்ளன. எனவே, இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கான அதிக செலவு மற்றும் இந்தியா அவற்றிற்கு எவ்வளவு பணம் செலவிட முடியும் என்பது முக்கிய சவால்கள்.


டி. ரகுநந்தன்: இந்த விவாதத்தின் பெரும்பகுதி யூகங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், யூகங்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்க முடியாது. 15 ஆண்டுகளாக, இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யவும், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும் முயற்சித்து வருகிறது. இது வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 25%-லிருந்து 100% ஆக உயர்த்தியது.  இருப்பினும், எந்த பெரிய வெளிநாட்டு நிறுவனமும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை அல்லது முதலீடு செய்யவில்லை.


ஏனெனில், அது அவர்களுக்குப் பயனளிக்காது. எனவே, இந்தியாவில் இல்லாத சிறிய அணு உலைகள் (SMRகள்) போன்ற புதிய எதிர்கால தொழில்நுட்பங்கள், இங்கு வருவதன் மூலம் அணுசக்தித் துறையை மாற்றும் என்று எனக்குத் தெரியவில்லை. 500 மெகாவாட் அணு உலைகளுக்குப் பதிலாக 200 மெகாவாட் அல்லது 60–70 மெகாவாட்கூட சிறிய உலைகளை உருவாக்க மக்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றனர். இந்தியா அதன் கடைசி பட்ஜெட்டில், ஏற்கனவே அறிந்த அழுத்தப்பட்ட கன நீர் முறையைப் பயன்படுத்தி ஐந்து சிறிய அணு உலைகளுக்கு நிதியை ஒதுக்கியது. இதை மேலும் விரிவுபடுத்த முதலீட்டை எவ்வாறு பெறுவது என்பது முக்கிய பிரச்சினை.


டாக்டர். டெல்லிஸ், இந்தியா மற்ற உறுதிப்பாடுகளைக் கொண்ட வளரும் நாடாகக் கருதி, இந்தப் புதிய SMR இறக்குமதியாளர்களுக்கு, இது சோதனை செய்யப்படாத தொழில்நுட்பம் என்பதால் இழப்பீடு கோருவது நியாயமாக இருக்குமல்லவா?


ஆஷ்லே டெல்லிஸ்: இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. துணை இழப்பீடு தொடர்பான மாநாடு (Convention on Supplementary Compensation (CSC)) என்பது அணுசக்தியின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும். அதே நேரத்தில் அதன் அபாயங்களையும் நிர்வகிக்கிறது. அணு விபத்தின் போது CSC-ன் குறிக்கோள் யார் தவறு என்பதை தீர்மானிப்பதல்ல. மாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக பணத்தை வழங்குவதாகும். 


இதற்கு மூன்று முக்கிய விதிகள் உள்ளன: முதலாவதாக, எந்தவொரு சேதத்திற்கும் ஆபரேட்டர் முழு பொறுப்பு. இரண்டாவதாக, எந்தவொரு விபத்தும் நிகழும் முன் பணம் ஒதுக்கி வைக்கப்படுகிறது (மாநாட்டில் மூன்று நிலை நிதிகள் உள்ளன). மூன்றாவதாக, ஒரு ஒப்பந்தம் இருந்தால் அல்லது அவர்கள் வேண்டுமென்றே மோசமாக செயல்பட்டால் மட்டுமே இறக்குமதியாளர்கள் பொறுப்பேற்க முடியும்; இழப்பீடு வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இறக்குமதியாளர்களை பொறுப்பேற்கச் செய்வதற்கான பொதுவான விதி எதுவும் இல்லை. இறக்குமதியாளரிடமிருந்து தனித்தனியாக ஒரு நியாயமான மற்றும் நல்ல ஒழுங்குமுறை இருக்கும்போது இந்த அமைப்பு சிறப்பாகச் செயல்படும்.


உண்மையான அணு விபத்து நடந்தால், அது நடக்கும் நாடு பாதுகாப்பிற்கு பொறுப்பாகும். பகிரப்பட்ட காப்பீட்டுத் தொகுப்பிலிருந்து பணத்தை விரைவாக அணுகக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதே சவாலாக இருந்தது. சிறிய அணு உலைகளைப் பற்றி (SMRகள்) பிரச்சினை அவற்றின் வடிவமைப்பு அல்ல. ஏனெனில், பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. முக்கிய பிரச்சனை செலவு; SMRகளை உருவாக்குவது இன்னும் மிகவும் விலை உயர்ந்தது. SMRகள் மிகவும் மலிவானதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பெரிய யோசனை என்னவென்றால், SMRகள் ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கும் தயாரிப்புகளைப் போல தயாரிக்கப்பட்டு, பின்னர் வெளித்தளத்திற்கு கொண்டு வரப்படும். இப்போதைக்கு, தொழிற்சாலை தயாரிப்புகளைப் போல உருவாக்கும் யோசனையை விட SMR தொழில்நுட்பத்தை நான் அதிகம் நம்புகிறேன்.


ஆஷ்லே ஜே. டெல்லிஸ், டாடாவின் இராஜதந்திர விவகாரங்களுக்கான தலைவராகவும், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினராகவும் உள்ளார். டி. ரகுநந்தன், டெல்லி அறிவியல் மன்றம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளார்.


Original article:
Share: