இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை: கொந்தளிப்புக்கு நடுவில், ஒரு நிலைப்படுத்தும் சக்தி

 இன்றைய மாறிவரும் உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வரும் ஒரு வலுவான கூட்டாண்மையை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) உருவாக்கி வருகின்றன. இந்த உறவை வலுப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸுக்கு பயணம் செய்தார். மேலும், பிரதமர் மோடியின் சைப்ரஸ் (Cyprus) பயணம் ஐரோப்பாவில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.


இந்த நெருக்கமான ஒத்துழைப்பு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றபோது காணப்பட்ட கணிக்க முடியாத கொள்கைகளுக்கு ஒரு பிரதிபலிப்பாகும். இதில் பாதுகாப்புவாதம் மற்றும் கூட்டணிகள் குறித்த சந்தேகங்கள் அடங்கும். இதன் காரணமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு நிலையான, விதிகள் சார்ந்த சர்வதேச அமைப்பை ஆதரிக்க இணைந்து செயல்பட விரும்புகின்றன.


இருப்பினும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கின்றன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அமெரிக்கா இன்னும் அவர்களின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் இராஜதந்திர ரிதீயான நட்பு நாடாகும். அவர்கள் அந்த வலுவான உறவை வைத்திருக்க விரும்புகிறார்கள்.  அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளையும் வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.


கடந்த ஒரு வருடமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உறவை மேம்படுத்தியுள்ளன. அவர்கள் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement (FTA),) பணியாற்றி வருகின்றனர். இதை 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க அவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒப்பந்தம் வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


பல வருட மெதுவான முன்னேற்றத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும் இப்போது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவாக நகர்கின்றனர். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) போன்ற பெரிய திட்டங்கள் பிராந்திய இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் புதுமைகளை அதிகரிப்பதற்கும் தங்கள் இலக்கைக் காட்டுகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதிலும், பாதுகாப்பில் கூட்டாளராக இருப்பதற்கான வழிகளை ஆராய்வதிலும் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) தங்கள் உறவில் சில சவால்களை கவனமாகக் கையாள வேண்டும். முக்கிய பிரச்சினைகளில் ஒன்று ரஷ்யா. இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் உக்ரைனில் அதன் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. மறுபுறம், ஐரோப்பா ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற போதிலும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சித்தாந்தங்கள் குறித்து வாதிடுவதற்குப் பதிலாக நடைமுறையில் இணைந்து செயல்படத் தேர்ந்தெடுத்துள்ளன. ரஷ்யா மீதான தனது நிலைப்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, மாறாக, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சீனா பற்றிய கவலைகளில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது.


குறிப்பாக காஷ்மீரில் சமீபத்திய பதட்டங்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பிரஸ்ஸல்ஸ் பயணத்தின்போது பாகிஸ்தான் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தெற்காசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை EU ஆதரிக்கிறது, ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையையும் மதிக்கிறது. எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அது பேசியுள்ளது.


பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் தங்கள் வளர்ந்துவரும் உறவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) விரும்புகின்றன. பல சக்திவாய்ந்த நாடுகளுடன் ஒரு உலகத்தை வடிவமைப்பதில் அவர்களின் கூட்டாண்மை மிகவும் முக்கியமானதாகி வருகிறது. இது ஒரு தற்காலிகத் திட்டம் மட்டுமல்ல, பொதுவான பொருளாதார இலக்குகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் வலுவான பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீண்டகால உத்தி ஆகும்.


Original article:
Share:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒரு சமூக பாதுகாப்புத் திட்டம் -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்திகளில் ஏன்?


2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGS)) கீழ் எவ்வளவு பணம் செலவிடப்படலாம் என்பதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது. இப்போது, ​​மொத்த ஆண்டு பட்ஜெட்டில் 60% மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்த முடியும். முன்னதாக, அத்தகைய வரம்பு இல்லை. தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பொது சமூகக் குழுக்கள் இந்த முடிவைப் பற்றி கவலை கொண்டுள்ளன.


MGNREGS என்றால் என்ன?, இந்த செலவு வரம்பைப் பற்றி மக்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. MGNREGA என்பது உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது மக்களுக்கு வேலைகளை வழங்குவதன் மூலமும் வறுமையைக் குறைப்பதன் மூலமும் கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. இது 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) அடிப்படையாகக் கொண்டது.


2. MGNREGA மக்களுக்கு வேலை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. முன்னதாக, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், மக்கள் தங்கள் வாழ்க்கையை சம்பாதிப்பதைத் தடுக்காமல் இருப்பதை மட்டுமே அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம், வேலை கேட்பவர்களுக்கு வேலை வழங்குவது அரசாங்கத்தின் தெளிவான கடமையாகும்.


3. குடும்பத்தில் பெரியவர்கள் எளிய உடல் உழைப்பைச் செய்யத் தயாராக இருந்தால் கிராமப்புற குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் வேலை வழங்குவதாக இது உறுதியளிக்கிறது.


4. இச்சட்டம் 15 நாட்களுக்குள் வேலை வழங்குவதை உறுதி செய்கிறது. இது கடினமான காலங்களில் ஏழை மக்களைப் பாதுகாக்கிறது. மேலும், தொழிலாளர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டும்.


5. இச்சட்டம் 100 நாட்களுக்கு மேல் வேலை வழங்க அனுமதிக்கிறது. ஆனால், உண்மையில், பெரும்பாலான குடும்பங்களுக்கு 100 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. சிறப்பு கோரிக்கை விடுக்கப்படாவிட்டால் அதிகாரப்பூர்வ NREGA கணினி அமைப்பு அதிக நாட்கள் நுழைய அனுமதிக்காது.


6. சில குடும்பங்களுக்கு 150 நாட்கள் வேலை கிடைக்கும். உதாரணமாக, வேறு எந்த தனியார் நிலமும் இல்லாத (வன உரிமைகள் தவிர) வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி குடும்பங்களுக்கு 2016ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் வேலை கிடைக்கும்.


7. உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டபடி, வறட்சி அல்லது இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க முடியும்.


MGNREGS செலவின வரம்பில் உள்ள சிக்கல்கள்


1. MGNREGS-க்கான செலவு கட்டுப்பாடுகள்


செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சகத்தால் 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாதாந்திர/காலாண்டு செலவுத் திட்டம் (MEP/QEP) எனப்படும் அமைப்பின் கீழ் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS) இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, MGNREGS இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. ஏனெனில், இது தேவை அடிப்படையிலான திட்டம். இதன் பொருள் மக்களுக்குத் தேவைப்படும்போது வேலை கிடைக்கும் என்பதாகும்.


2. செலவு வரம்பில் உள்ள சிக்கல்கள்


(i) வேலையின் தேவையை மாற்றுதல்


MGNREGS என்பது கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக, குறிப்பாக மோசமான அறுவடைகள் அல்லது மோசமான வானிலை போன்ற கடினமான காலங்களில் மக்களுக்கு உதவுகிறது. ஆனால், MGNREGS-ன் கீழ் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். இது பெரும்பாலும் விவசாய பருவங்கள் மற்றும் வானிலையைப் பொறுத்தது.


எடுத்துக்காட்டாக, வேலைக்கான தேவை பொதுவாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அதிகமாக இருக்கும். மேலும் செப்டம்பரில் பருவமழை நடவு பருவத்திற்குப் பிறகும் அதிகமாக இருக்கும்.


இருப்பினும், அசாதாரண வானிலை, தாமதமான மழை போன்றவை  ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில்கூட அதிகமான மக்கள் வேலை தேட வழிவகுக்கும்.


2023ஆம் ஆண்டில், குறைந்த மழைப்பொழிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வேலை தேவையை 20% அதிகரிக்க வழிவகுத்தது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகா தனது வருடாந்திர MGNREGS பட்ஜெட்டில் 70%-க்கும் அதிகமாக ஆறு மாதங்களில் பயன்படுத்தியது.


தற்போதைய செலவு வரம்பு இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு காரணமல்ல.


(ii) சட்ட கவலைகள்


செலவு மீதான இந்த வரம்பில் சட்ட சிக்கலும் உள்ளது.


சில அரசு திட்டங்கள் (PM-Kisan அல்லது LPG மானியம் போன்றவை) அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்றன. மேலும், அவை புதிய அரசாங்கத்தால் மாற்றப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.


ஆனால், MGNREGS போன்ற பிற திட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சட்டங்கள் மக்களுக்கு சில உரிமைகளை வழங்குகின்றன. MGNREGS-ன் கீழ் வேலை கோரும் உரிமை போன்றவை இதில் உள்ளன.


இந்தத் திட்டங்களை எப்படி நடத்துவது? என்பதை அரசாங்கம் முடிவு செய்ய முடியும் என்றாலும், சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்ட உரிமைகளை அது புறக்கணிக்க முடியாது.


ஆனால், நிதி அமைச்சகத்தின் 60% செலவு வரம்பு, அந்த வரம்பை அடைந்தவுடன் MGNREGS-ன் கீழ் வேலை வழங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 



அரசு திட்டங்களில் காந்தியின் தத்துவம்


கடந்த ஆண்டுகளில், மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள், திட்டங்கள், விதிமுறைகள் மற்றும் செயல்களை மேற்கொண்டுள்ளன. MGNREGA, தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) ஆகியவை காந்தியின் தத்துவத்தை எவ்வாறு உள்ளடக்கியது என்பதை அறிந்து கொள்வோம்.





1. தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission): 


ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் சிறந்த சமூகத்திற்கும் தூய்மை முக்கியம் என்று மகாத்மா காந்தி நம்பினார். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது சாதி பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி என்று அவர் உணர்ந்தார். காந்தி, "ஒவ்வொருவரும் அவரவருக்கு துப்புரவாளர்" (Everyone is his own scavenger) என்று கூறினார். அதாவது, ஒவ்வொரு நபரும் தூய்மைக்கு பொறுப்பேற்க வேண்டும். நாகரிகமாக மாறுவதற்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து உதவி தேவை என்ற எதிர்மறை பிம்பத்தை சரியான சுகாதாரம் அகற்ற உதவும் என்றும் அவர் நம்பினார்.


காந்தி, "சுயராஜ்யம் (Swaraj ) சுத்தமான, துணிச்சலான மக்களால் மட்டுமே அடைய முடியும்" என்றார்.


அவரது கருத்துக்களின் அடிப்படையில், இந்திய அரசாங்கம் அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியது.  இந்த மிஷன் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மையில் கவனம் செலுத்துகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகர்ப்புற பகுதியைக் கையாளுகிறது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் கிராமப்புற பகுதியை நிர்வகிக்கிறது.


2. MGNREGA: கிராமப்புறங்களை மேம்படுத்துவதில் காந்தியின் நம்பிக்கையை இது உள்ளடக்கியது. இந்த முதன்மையான திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் கிராமங்களில் தன்னிறைவை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது.


3. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India): சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தி “சுதேசி” பற்றி பேசினார். இன்று, உலகமயமாக்கலின் காலக்கட்டத்தில், அரசாங்கத்தின் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சியானது இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்துவதையும், நாட்டை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி காந்தியின் சுயசார்பு மற்றும் சுதேசியின் யோசனையை அடிப்படையாகக் கொண்டது. தூய்மையில் இருந்து உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் உலகளாவிய வங்கியியல் வரையிலான அரசு திட்டங்கள் அனைத்தும் காந்தியின் உணர்வில் உள்ளன.



Original article:
Share:

டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் (DNA) என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • ஒரே மாதிரியான இரட்டையர்களைத் தவிர, ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான DNA உள்ளது. இது அவர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. இறந்த உடல்களை அடையாளம் காண DNA மிகவும் துல்லியமான வழியாகும். குறிப்பாக, பெரிய விபத்துகளுக்குப் பிறகு அடையாளம் காண கடினமாக இருக்கும்போது பயன்படுகிறது.


  • ஒருவர் இறந்த பிறகு, அவர்களின் DNA உடைந்து போகத் தொடங்குகிறது. அதிக நேரம் கடந்துவிட்டால், DNAவைச் சோதிப்பது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோகூட மாறக்கூடும். DNA எவ்வளவு விரைவாக உடைகிறது என்பது DNA எடுக்கப்பட்ட உடல் பகுதி மற்றும் உடல் வைக்கப்படும் நிலைமைகளைப் பொறுத்தது.


  • வெப்பமான மற்றும் ஈரப்பதமான இடங்களை விட குளிர் மற்றும் வறண்ட இடங்களில் DNA நீண்ட காலம் நீடிக்கும். எனவே, மாதிரிகளை விரைவாகச் சேகரித்து குளிர்ச்சியாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். -20°C இல் உறைதல் சிறந்தது. தோல் அல்லது தசை போன்ற மென்மையான திசுக்களையும் 95% எத்தனாலில் சேமிக்க முடியும்.


  • எலும்புகள் மற்றும் பற்கள் போன்ற கடினமான திசுக்களைவிட மென்மையான திசுக்களில் DNA வேகமாக உடைகிறது. கடினமான திசுக்கள் DNAவை சிறப்பாகப் பாதுகாக்கின்றன. எனவே, புலனாய்வாளர்கள் பொதுவாக எலும்புகள் அல்லது பற்களிலிருந்து DNAவை எடுக்கிறார்கள்.


  • விமான விபத்துகளுக்குப் பிறகு, இடிபாடுகளிலிருந்து உடல் பாகங்களை சேகரிக்க வாரங்கள் ஆகலாம். ஆனால், 9/11 தாக்குதல்கள் போன்ற பெரிய பேரழிவுகளில், கிட்டத்தட்ட 3,000 பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து DNA மாதிரிகளைச் சேகரிக்க கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆனது.


  • DNA யாருடையது என்பதைக் கண்டறிய, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. பெற்றோரும் குழந்தைகளும் தங்கள் DNAவில் பாதியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் மாதிரிகள் பெறப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


  • மாதிரிகளைச் சேகரித்த பிறகு, அடுத்த படி அவற்றிலிருந்து DNAவை எடுப்பதாகும். DNA எவ்வளவு சிறந்தது என்பதைப் பொறுத்து, விஞ்ஞானிகள் அதைப் பிரிக்க  பொருத்தமான முறையைத் தேர்வு செய்கிறார்கள்.


  • Short Tandem Repeat (STR)  பகுப்பாய்வு: இந்த முறை டிஎன்ஏவின் குறுகிய, மீண்டும் மீண்டும் வரும் பகுதிகளைப் பார்க்கிறது. இந்த மறுநிகழ்வுகள் ஒவ்வொரு நபரிடமும் வேறுபடுகின்றன. எனவே, அவை தனிநபர்களை அடையாளம் காண உதவுகின்றன. விஞ்ஞானிகள் இந்த பகுதிகளில் 15 அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் காண்பதால், அவர்கள் குடும்ப உறவுகளை அதிக நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

  • STRகள் நியூக்ளியர் DNAவில் (nuclear DNA) காணப்படுகின்றன. எனவே, இந்த சோதனை செயல்பட மாதிரியின் நியூக்ளியர் DNA நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


  • மைட்டோகாண்ட்ரியல் DNA ((mtDNA)) பகுப்பாய்வு: DNA சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போனாலோ, இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. mtDNA மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படுகிறது. இவை ஆற்றலை உற்பத்தி செய்யும் செல்லின் பாகங்கள் ஆகும். mtDNA மீட்டெடுப்பது எளிது. குறிப்பாக, பழைய அல்லது மோசமாகப் பாதிக்கப்பட்ட  ஒவ்வொரு செல்லிலும் இது பல பிரதிகளில் உள்ளது.


  • Y குரோமோசோம் பகுப்பாய்வு: மனிதர்களுக்கு X மற்றும் Y குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு பொதுவாக ஒரு X மற்றும் ஒரு Y இருக்கும். பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும். இந்த முறை Y குரோமோசோமில் கவனம் செலுத்துகிறது. எனவே, ஆண் நபர்களை அடையாளம் காண இது பயனுள்ளதாக இருக்கும்.


  • ஒற்றை நியூக்ளியோடைடு பாலிமார்பிசம் (Single Nucleotide Polymorphism(SNP)) பகுப்பாய்வு: இந்த முறை பொதுவாக DNA மோசமாக சேதமடைந்திருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் DNAவில் ஒரு எழுத்தில் (A, C, G, அல்லது T) ஏற்படும் மாற்றமே SNP ஆகும். மேலும், இந்த மாற்றம் ஒவ்வொரு நபரிடமும் வேறுபடும். SNPகள் ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமானவை என்பதால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் பல் துலக்குதல் அல்லது ஹேர் பிரஷ் போன்ற குறிப்பு மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஒருவரை அடையாளம் காண உதவும்.


Original article:

Share:

இந்தியா எப்படி தனது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது மற்றும் 2027-ல் புதிதாக என்ன இருக்கிறது? -தீப்திமான் திவாரி

 மொத்தம் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் மட்டுமின்றி அனைத்து தனிநபர்களுக்குமான ஜாதி கணக்கெடுப்பு 90 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பகுதிக்கு மார்ச் 1, 2027 மற்றும் லடாக், ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் போன்ற பனி நிறைந்த மற்றும் தொலைதூர பகுதிகளிலும் கணக்கெடுப்பு அக்டோபர் 1, 2026 என்று தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு முக்கியமான சாதனையை குறிக்கிறது: 1931-க்குப் பிறகு முதல் நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு இதுவாகும்.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டம், 1948-ன் பிரிவு3-ன் கீழ் அறிவிப்பு திங்கள்கிழமை ஜூன் 16 அரசிதழில் வெளியானது. வீட்டு பட்டியல் (house-listing) மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு (housing enumeration) 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு பல மாதங்களுக்கு வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கிறது. இது அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. எதிர்காலத்தில் வாக்களிக்கும் பகுதிகளை தொகுதி மறுவரையறை செய்வதையும் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பகிர்ந்து கொள்வதையும் எவ்வாறு பாதிக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.





மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏன் முக்கியம்?


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்கிறது. தேர்தல் தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதற்கும் இதுவே அடிப்படையாகும். மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான ஒன்றிய மானியங்கள் பெரும்பாலும் மக்கள்தொகை அடிப்படையிலானவை. மானியங்கள் மற்றும் பொது விநியோக திட்ட ஒதுக்கீடுகளும் இதில் அடங்கும். கல்வி முதல் கிராமப்புற மேம்பாடு வரையிலான அமைச்சகங்கள் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைக் கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துகின்றன.


இது நீதித்துறை, திட்டமிடுபவர்கள் மற்றும் அறிஞர்கள் இடம்பெயர்வு, நகரமயமாக்கல், வேலைவாய்ப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் போக்குகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அரசியலமைப்பு விதிகளின் நடைமுறைக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முக்கியமானது. அரசியலமைப்பு விதிகளை செயல்படுத்துவதற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக முக்கியமானது. அரசியலமைப்பின் பிரிவு 82, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 330 மற்றும் 332, மக்கள்தொகையில் அவர்களின் பங்கின் அடிப்படையில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறுகிறது.


ஆனால், நிர்வாகத்தை தாண்டி, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு தேசிய கண்ணாடியாகவும் மாறியுள்ளது. அடையாளம், தொழில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் குடும்ப அமைப்பின் மாறிவரும் முறைகளைப் பிரதிபலிக்கிறது. பொருளாதார சீர்திருத்தங்களின் தாக்கத்தைப் பிடிப்பதிலிருந்து பாதிக்கப்படக்கூடிய அல்லது சேவை இல்லாத சமுதாயங்களைக் கண்டறிவது வரை, இது அரசாங்கங்களுக்கு நலன்புரி மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டத்தை வழங்க உதவுகிறது.




மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது?


இந்த செயல்முறை இரண்டு பரந்த கட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது: வீட்டு பட்டியல் மற்றும் வீட்டுவசதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (House-listing and Housing Census), அதைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு (Population Enumeration) ஆகும். இந்த கட்டங்கள் பல மாதங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலங்களால் நிர்வாக எல்லைகள் (மாவட்டங்கள்) முடக்கம், ஆயத்த வரைபடப் பயிற்சி மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி ஆகியவற்றால் முன்னதாகவே மேற்கொள்ளப்படுகின்றன.


மொத்தம் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், முதன்மையாக பள்ளி ஆசிரியர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, மாவட்ட மற்றும் துணை மாவட்ட மட்டங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை நிர்வகிக்கும், மேற்பார்வையிடும் அல்லது ஆதரிக்கும் கிட்டத்தட்ட 1,20,000 பணியாளர்கள் தேவைப்படுவார்கள். மேலும், பயிற்சியை நடத்த 46,000 பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.


வீட்டு பட்டியல் கட்டம்: இங்கே, நாட்டிலுள்ள ஒவ்வொரு கட்டமைப்பும் கட்டிடங்கள் மற்றும் குடும்பங்களின் பண்புகளைப் பதிவு செய்ய பார்வையிடப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் குடும்பத் தலைவர், உறுப்பினர்களின் எண்ணிக்கை, கட்டிடத்தின் பயன்பாடு (குடியிருப்பு, வணிகம், போன்றவை), அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அறைகளின் எண்ணிக்கை, உரிமை நிலை, தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் ஆதாரங்கள், கழிப்பறையின் வகை, சமைப்பதற்கு பயன்படுத்தும் எரிபொருள், மற்றும் டிவி, தொலைபேசி, வாகனம் போன்ற சொத்துகளின் கிடைக்கும் தன்மை பற்றிய தரவுகளைச் சேகரிக்கின்றனர். இந்த தகவல் வீட்டுவசதி இருப்பு, வசதிகளுக்கான பயன்பாடு மற்றும் இந்தியா முழுவதும் வாழ்க்கை நிலைமைகளின் விவரணையை உருவாக்க உதவுகிறது.


பொதுவாக, இந்த கட்டம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆண்டுக்கு முந்தைய ஆண்டின் மார்ச் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள், தங்கள் வசதியைப் பொறுத்து, வீட்டு பட்டியல் பயிற்சியை நடத்தும் மாதங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 2026-ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Population enumeration): இது வீட்டுவசதி மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, குடும்பத் தலைவருடனான உறவு, திருமண நிலை, கல்வி, தொழில், மதம், சாதி/இனம், இயலாமை நிலை மற்றும் இடம்பெயர்வு வரலாறு போன்ற தனிப்பட்ட தரவுகளில் கவனம் செலுத்துகிறது. கணக்கெடுப்பாளர்கள் வீடில்லாதவர்கள் உட்பட ஒவ்வொரு நபருக்கும் ஒரு அட்டவணையை நிரப்புகிறார்கள். மேலும், இந்த செயல்முறை மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார விவரங்களைக் கைப்பற்றுகிறது. இது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுத்தளத்தின் மையத்தை உருவாக்குகிறது.


தரவு மையமாக செயலாக்கப்பட்டு கட்டங்களில் வெளியிடப்படுகிறது — முதலில் தற்காலிக மக்கள்தொகை மொத்தங்கள், பின்னர் பல்வேறு குறிகாட்டிகளால் பிரிக்கப்பட்ட விரிவான அட்டவணைகள் வெளியிடப்படுகின்றன. மீண்டும் சோதனைகள் மற்றும் தணிக்கைகள் உட்பட வலுவான தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.


இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், கணக்கெடுப்பு செயல்முறை பிப்ரவரி 2027 மாதத்தில் 20-21 நாட்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆதாரங்கள் தெரிவித்தன. கணக்கெடுப்பு பயிற்சி நிறைவடைந்த 10 நாட்களுக்குள் தற்காலிக தரவு வெளியாகும் என்றும், அடுத்த ஆறு மாதங்களில் இறுதி தரவு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


முன்மொழியப்பட்ட  2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட உள்ளது?


2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் வரலாற்றில் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பாக இருக்கும். மொபைல் செயலிகள், ஆன்லைன் சுய-கணக்கெடுப்பு மற்றும் நெருங்கிய நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றின் பயன்பாட்டுடன் நடத்தப்படவுள்ளது. 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்து சமூகங்களிடமிருந்தும் சாதி தகவல்களைச் சேகரிக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும்.


2011-லிருந்து ஒரு முக்கிய மாற்றமாக, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக சுய-கணக்கெடுப்பை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இதில், குடும்பங்கள் ஒரு அரசாங்க இணையதளத்தில் உள்நுழைந்து அல்லது ஒரு செயலி மூலம் தங்கள் விவரங்களை தாமே பூர்த்தி செய்யலாம். சுய-கணக்கெடுப்பு முடிந்தவுடன், அமைப்பு ஒரு தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்கும். சுய-கணக்கெடுப்பு செய்தவர்கள், கணக்கெடுப்பாளர் அவர்களின் வீட்டிற்கு வரும்போது இந்த அடையாள எண்ணை மட்டும் காண்பிக்க வேண்டும்.


கணக்கெடுப்பாளர்களும் கையடக்க சாதனங்கள் அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலி முன்பே ஏற்றப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவார்கள். காகித கணக்கெடுப்பு உள்ளிட்ட இரட்டை முறைமை எதிர்பார்க்கப்பட்டாலும், ஸ்மார்ட்ஃபோன்கள் இப்போது பரவலாக இருப்பதால், அனைத்து கணக்கெடுப்பாளர்களும் டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு ஊதியம் அதிகமாக இருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவித்தன. இந்த டிஜிட்டல் மயமாக்கல் பிழைகளைக் குறைக்கவும், செயலாக்கத்தை விரைவுபடுத்தவும், மற்றும் கடுமையான தரக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும் உதவும்.


இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் (RGI) இந்த மாற்றத்திற்கு முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஏற்கனவே அமைத்துள்ளார். கணக்கெடுப்பாளர்கள் மொபைல் செயலிகள், புவியிட அடையாளக் கருவிகள் மற்றும் கிளவுட் அடிப்படையிலான தரவு பதிவேற்ற அமைப்புகளைப் பயன்படுத்த பயிற்சி பெற்றுள்ளனர். முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், முரண்பாடுகளைக் குறிக்கவும், புதுப்பிப்புகளை அனுப்பவும் நிகழ்நேர டாஷ்போர்டுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) புலத்தில் உள்ள பிரச்சினைகளை தாமதமின்றி மேற்பார்வை செய்யவும் தீர்க்கவும் உதவும்.


இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து எப்படி வேறுபடும்?


வழிமுறை மற்றும் உள்ளடக்கம் இரண்டின் அடிப்படையிலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, 2011-லிருந்து வேறுபடும்.


செயல்முறை மற்றும் தொழில்நுட்பம்


செயல்முறை டிஜிட்டலாக இருப்பதும் சுய-கணக்கெடுப்பை அனுமதிப்பதும் தவிர, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 இவற்றை உள்ளடக்கும்:


புவியிடங்காட்டி ஒருங்கிணைப்பு (GPS integration): 2011 உடல் வரைபடங்கள் மற்றும் பகுதி பட்டியல்களைப் பயன்படுத்தியது, 2027 குடும்பங்களின் புவியிடங்காட்டி குறியிடல் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளைத் தவிர்க்க டிஜிட்டல் புவி வேலி (geofencing) அறிமுகப்படுத்துகிறது.


மொபைல் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு (Mobile tracking and validation): 2027-ல் கணக்கெடுப்பாளர்கள் சீரற்ற வயது அல்லது நம்பமுடியாத குடும்ப அளவு போன்ற பிழைகளுக்கான எச்சரிக்கைகளைப் பெறுவார்கள், நிகழ்நேர திருத்தங்களை செயல்படுத்துவார்கள். இத்தகைய சோதனைகள் 2011-ல் இல்லை.


குறியீட்டு அமைப்பு (Coding System): 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக, இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் தரவு சேகரிப்பை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் செய்ய ஒரு புதிய குறியீட்டு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதி, தொழில் அல்லது தாய்மொழி போன்ற தகவல்கள் கையால் எழுதப்பட்டன. பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் மற்றும் தரவு செயலாக்கத்தின்போது குழப்பத்திற்கு வழிவகுத்தது.


இந்த விளக்கமான பதில்களின் தரவு செயலாக்கத்திற்கு மனித தலையீடு தேவைப்பட்டது. சில சமயங்களில் சில கேள்விகளுக்கு பல ஆண்டுகள் ஆனது. தரவு பரவலை தாமதப்படுத்தியது. கணக்கெடுப்பாளர்களின் மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக தரவு சார்பு மற்றும் பிழைகள் ஏற்படும் அபாயமும் இதில் அடங்கும்.


இதை சரிசெய்ய, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒரு டிஜிட்டல் அமைப்பைப் பயன்படுத்தும், அங்கு கணக்கெடுப்பாளர்கள் மொபைல் செயலியில் முன்பே ஏற்றப்பட்ட பட்டியல்களிலிருந்து விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் - சாத்தியமான பதில்களுக்கான தனி குறியீட்டைக் கொண்ட குறியீடு கோப்பகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பட்டியல்களில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர், வெவ்வேறு மொழிகள், வேலைகள் மற்றும் பிறந்த இடங்கள் போன்றவற்றிற்கான தரப்படுத்தப்பட்ட குறியீடுகள் அடங்கும்.


கணக்கெடுப்பாளர்கள் இப்போது அமைக்கப்பட்ட கீழ்தோன்றும் மெனுக்களிலிருந்து (drop-down menus) பதில்களைத் தேர்வு செய்கிறார்கள். இது எல்லா இடங்களிலும் தரவை ஒரே மாதிரியாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கணினிகள் செயலாக்குவதை எளிதாக்குகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நவீனமயமாக்குவதற்கும் கையால் எழுதுவதிலிருந்து தவறுகளைக் குறைப்பதற்கும் இது ஒரு முக்கியபடியாகும்.


2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேட்புத்தாளில் புதிய கேள்விகள்


2018-ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டு கட்டங்களுக்கும் விரிவான கேள்வித்தாளை RGI தயாரித்திருந்தது. கணக்கெடுப்பின் ஒரு சோதனை 2019-ல் நடத்தப்பட்டது. சாதி கணக்கெடுப்புடன் 2027-ஆம் ஆண்டிற்கான கேள்வித்தாள் கிட்டத்தட்ட அப்படியே இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


வீடு-பட்டியல் செயல்பாடு 34 நெடுவரிசைகளின் கீழ் தரவைச் சேகரிக்கும். அதே நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் 28 நெடுவரிசைகள் இருக்கும். விரிவான மக்கள்தொகை, சமூக மற்றும் பொருளாதாரத் தரவுகளைப் பிடிக்கும்.


வீடு-பட்டியல் கட்டம்


புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன அதன் படி:


வீட்டில் இணைய இணைப்பு கிடைப்பது.


மொபைல் போன் மற்றும் திறன்பேசிகளின் உரிமை.


குடியிருப்பின் உள்ளே குடிநீர் ஆதாரத்தை அணுகுவது.


எரிவாயு இணைப்பு வகை: குழாய் இயற்கை எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas) இடையேயான வேறுபாடுகளை குறிக்கும்.


வாகன உரிமை: இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை குறிக்கும்.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பின்தொடர்தல்கள் அல்லது தகவல் பரப்புதலுக்கு பயன்படுத்தப்படும் மொபைல் என்னை குறிக்கும்.


வீட்டில் நுகரப்படும் தானிய வகை பதிவு செய்யப்பட உள்ளது.


இந்த சேர்த்தல்கள் முக்கிய வளர்ச்சி குறிகாட்டிகளாக டிஜிட்டல் இணைப்பு, சுத்தமான எரிசக்தி அணுகல் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டம்


மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று:


பட்டியல் சாதி/ பழங்குகுடியினர்களுக்கு பிரிவினருக்கு மட்டுமல்ல - அனைத்து தனிநபர்களுக்கும் சாதி கணக்கெடுப்பு 90 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (கடைசியாக 1931-ல் செய்யப்பட்டது).


காலநிலை நிகழ்வுகள் அல்லது இயற்கை பேரழிவுகள் காரணமாக இடம்பெயர்வு போன்ற இடம்பெயர்வுக்கான காரணங்களின் கீழ் புதிய பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளன.


தொழில்நுட்ப பயன்பாடு - தனிநபர்கள் இணையம் அல்லது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தினரா என்பது குறித்த கேள்விகள் இடம் பெறவுள்ளன.


பாலின சேர்க்கை - திருநங்கை அடையாளத்தைக் குறிக்க வெளிப்படையான விருப்பங்கள் இடம் பெறவுள்ளன.


துறையில் உள்ள சவால்கள் மற்றும் அவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன


கணக்கெடுப்பு அலுவலர்களிடையே டிஜிட்டல் எழுத்தறிவு ஒரு முக்கிய கவலையாக உள்ளது. இதைத் தீர்க்க, விரிவான பயிற்சி தொகுதிகள் (training modules), உருவகப்படுத்தல்கள் (simulations), மற்றும் பிராந்திய மொழி இடைமுகங்கள் (region-specific language interfaces) வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த செயலி பயனர் நட்பு அறிவுறுத்தல்கள், கீழிறங்கும் பட்டியல்கள் (drop-down menus) மற்றும் இணையமில்லா ஒத்திசைவு (offline sync) ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


  • தொலைதூர பகுதிகளில் இணைப்பு (Connectivity in remote areas): இந்த செயலி இணையமில்லாமல் செயல்படவும், சிக்னல் திரும்பியதும் தானாக ஒத்திசைக்கவும் (auto-synchronise) கட்டமைக்கப்பட்டுள்ளது.

  • செயலி பிழைகள் மற்றும் புதுப்பிப்புகள் (App glitches and updates): கணக்கெடுப்பாளர்களுக்கு கள ஆதரவு மற்றும் சிக்கல்களை நிகழ்நேரத்தில் சரிசெய்வதற்கான கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.

  • GPS வழுவல் (GPS drift) அல்லது குறியிடல் சிக்கல்கள் (tagging issues): மேற்பார்வையாளர்கள் தேவையான இடங்களில் ஆய்வுருக்களை சரிபார்த்து சரிசெய்வார்கள்.

  • பதிலளிப்பவர்களிடையே தயக்கம் அல்லது பயம்: கணக்கெடுப்பாளர்களுக்கு மென் திறன்கள் மற்றும் சட்ட விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அணுகல் மறுப்பு அல்லது தாமதத்தை ஆவணப்படுத்த மொபைல் எச்சரிக்கைகள் உள்ளமைக்கப்பட்டுள்ளன.

தர கட்டுப்பாட்டில் (Quality control) மேற்பார்வையாளர்கள் குறியிடப்பட்ட படிவங்களை (flagged forms) மறுபரிசீலனை செய்தல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்களால் (Census officers) குறிப்பிட்ட இடைவெளியில் சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். நம்பகத்தன்மையற்ற வயது வரம்புகள் அல்லது போலியான பதிவுகள் போன்ற பிழைகள் சமர்ப்பிப்புக்கு முன்பே கண்டறியப்பட்டு திருத்தப்படலாம்.



Original article:
Share:

எல்லா பக்கமும் தண்ணீர், ஆனால் ஒரு துளி கூட குடிப்பதற்கில்லை -ஜேம்ஸ் காட்பர்

 தண்ணீரின் தரம் பற்றிய தரவு இருந்தால், பலர் பாட்டில் தண்ணீருக்கு மாற்றாக வேறு வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.


இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் (Beat Plastic Pollution) என்பதாகும். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி ஆண்டுக்கு $300 பில்லியன் முதல் $600 பில்லியன் வரை செலவாகிறது. ஆனால், இது நாம் எதிர்கொள்ளும் மிகவும் சரிசெய்யக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும்.


உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கொண்டாடப்பட்டது. இது நமது பூமியின் உடையக்கூடிய தன்மையையும், கூட்டு நடவடிக்கை அதைப் பாதுகாக்க எப்படி உதவும் என்பதையும் சிந்திக்கும் ஒரு தருணமாக இருந்தது. இந்த ஆண்டின் கருப்பொருள் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் என்பதாக இருந்தது. இது ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி ஆண்டுக்கு $300 பில்லியன் முதல் $600 பில்லியன் வரை செலவாகிறது, ஆனால் இது நாம் எதிர்கொள்ளும் மிகவும் சரிசெய்யக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகவும் இருக்கலாம். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 400 மில்லியன் டன்களுக்கும் மேல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 10%-க்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மதிப்பீட்டின்படி, 11 மில்லியன் டன்கள் ஆண்டுதோறும் ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல்களில் கலந்துவிடுகின்றன. நுண்ணிய பிளாஸ்டிக் (Microplastics) துகள்கள் உணவு, தண்ணீர் மற்றும் காற்றில் கலந்துவிடுகின்றன. மறுசுழற்சியின் அளவை நாம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான எளிய வழி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க முயற்சிப்பதுதான்.


கடந்த ஆண்டு, நான் ஒரு தொடர்புடைய சவாலை ஆராயத் தொடங்கினேன்: பெங்களூரின் நுகர்வோர் மாற்று ஆதாரங்களின் தரத்தில் அதிக நம்பிக்கை வைத்தால், பாட்டில் குடிநீரின் மீதான அவர்களின் சார்பை குறைக்க முடியுமா? என்று ஆராய்ந்து பார்த்தேன். இந்த திட்டத்திற்கான யோசனை ஒரு காலை, கூட்டத்திற்கு காரில் செல்லும்போது வந்தது, அப்போது என் தண்ணீர் பாட்டில் காலியாக இருப்பதையும், மாற்று வழியில் செல்லாமல் அதை எங்கும் நிரப்ப முடியாது என்பதையும் உணர்ந்தேன். ஒரு காலத்தில் ஏரிகளுக்கு பெயர் பெற்ற ஒரு நகரில், பிளாஸ்டிக் பாட்டிலை நாடாமல் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பான குடிநீரை அணுகுவது எப்படி சில சமயங்களில் விகிதாசாரமற்ற முறையில் கடினமாக தோன்றுகிறது என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்.


உலகம் முழுவதும், பாட்டில் தண்ணீர் நுகர்வு வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கையின்படி, பாட்டில் தண்ணீர் விற்பனை இப்போது ஆண்டுக்கு அரை டிரில்லியன் லிட்டரைத் தாண்டியுள்ளது. இது பெரும்பாலும் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மாற்றுகளின் நம்பகத்தன்மை பற்றிய கவலைகள் காரணமாகும். இருப்பினும், இந்த வசதிக்கு ஒரு குறையும் உண்டு: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு. இந்தப் பிரச்சினையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பெங்களூருவில் உள்ள அற்புதமான திறமைகளைப் பற்றி சிந்திக்கவும் தொடங்கியபோது, ​​தொழில்நுட்பம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவுமா என்று யோசிக்கத் தொடங்கினேன்.


இங்கிலாந்து-இந்தியா உறவு பரஸ்பர நலனின் அடிப்படையில் அமையலாம். நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக காலநிலை மற்றும் நிலையான வளர்ச்சியில் இணைந்து செயல்படுதல். நிகழ்ச்சிகள் மூலம் நிபுணத்துவத்தை வழங்குதல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுதல்; காலநிலை நிதிக்கு ஆதரவை வழங்குதல்; மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை மின் இணைப்பு மற்றும் தகவமைப்பு (adaptation) தொடர்பான முன்முயற்சிகளில் ஒத்துழைத்தல் ஆகியவற்றில் இங்கிலாந்து இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.


கடந்த ஆறு மாதங்களாக, குறிப்பாக பெங்களூருவில், இந்தப் பிரச்சினையை நன்கு புரிந்துகொள்ள, ஐக்கிய ராச்சியம், அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆரம்பத்தில் உணவகங்களில் உள்ள நீர் ஆதாரங்கள், நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் சோதனை மூலம் கவனம் செலுத்திய நாங்கள், மற்ற ஆதாரங்களின் தரத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக சில நுகர்வோர் பாட்டில் தண்ணீரைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஆதாரத்தை இப்போது பெற்றுள்ளோம். எங்கள் ஆராய்ச்சி எப்படி, நுகர்வோர் தண்ணீரின் தரம் பற்றிய நம்பகமான தரவுகளை அணுகினால், பலர் பாட்டில் தண்ணீருக்கு மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பதில் அதிக நம்பிக்கை கொள்வார்கள் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. பாட்டில் அல்லாத தண்ணீரைக் குடிப்பதன் தரம் மற்றும் விளைவுகள் பற்றிய நுகர்வோர் பயம் நியாயமானது. ஏனெனில், இந்த ஆராய்ச்சியின் போது சோதிக்கப்பட்ட பல தண்ணீர் மாதிரிகள் பாதுகாப்பான குடிநீருக்கான தரங்களை எட்டவில்லை.


இதன் அர்த்தம் என்ன? உலகம் முழுவதும், பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம் — நாம் அதை நம் தெருக்களிலும், நம் தேசிய பூங்காக்கள் போன்ற பகுதிகளிலும் கூட நாம் காண்கிறோம். நாம் வீட்டில் வடிகட்டிய தண்ணீரை வழக்கமாக குடிக்கிறோம். ஏனெனில், அந்த அமைப்பு திறம்பட பராமரிக்கப்படுகிறது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். போதுமான தண்ணீர் குடிப்பதும் நீரேற்றத்தை பராமரிப்பதும் நமது நீண்டகால ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியம் என்பதை நாம் அறிவோம். மேலும், பயன்பாட்டின் இடத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்ட வடிகட்டி அமைப்புகளின் உற்பத்தியாளர்கள் எவ்வாறு தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்தி நுகர்வோர் தங்கள் தண்ணீர் நுகர்வைக் கண்காணிக்க அனுமதிக்கிறார்கள் மற்றும் அவர்களின் வடிகட்டிகள் எப்போது சேவை செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய தரவுகளை வழங்குகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்.


இதே தகவலை வீட்டிற்கு வெளியே கிடைக்கச் செய்வது — எடுத்துக்காட்டாக, வடிகட்டிகளின் பராமரிப்பு நிலையைத் தெரிவித்து, அதை உணவகங்கள், வணிக வளாகங்கள் அல்லது அலுவலகங்களில் காண்பிப்பதன் மூலம் — நுகர்வோர் வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கும்போது மன அமைதியைப் பெறுவதை உறுதி செய்யும். நம்பிக்கையில் இந்த இடைவெளியைக் குறைப்பதன் மூலம், புதுமைக்கு பெயர் பெற்ற பெங்களூரு, பிளாஸ்டிக் மீதான நமது சார்பைக் குறைப்பதில் முன்னணியில் இருக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் பிளாஸ்டிக் கழிவின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் தீர்வுகள் எப்படி உலகளாவிய முன்னேற்றத்திற்கு எவ்வாறு ஊட்டமளிக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருப்போம்.


ஜேம்ஸ் காட்பர், பெங்களூரில் உள்ள பிரிட்டிஷ் துணை உயர் ஆணையத்தில் துணைத் தலைவர் ஆவார்.



Original article:
Share: