ஏன் நகர்ப்புற வளர்ச்சியானது, உள்ளடக்கியதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும்? -ரித்விகா பத்கிரி

 தாராளமயமாக்கலுக்குப் பிறகு, பொருளாதார சீர்திருத்தங்கள் பெரும்பாலும் முறையான துறையில் மேற்கொள்ளப்பட்டன. நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திய, முறைசாரா துறை ஓரங்கட்டப்பட்டது. நகரங்கள் சீரற்ற முறையில் விரிவடைந்ததால், முறைசாரா தொழிலாளர்களின்  அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், அடிக்கடி இடம்பெயர்வு மற்றும் அதிக பாதிப்பு எதிர்கொள்கின்றன. இந்த நிலைமை 'வறுமை முரண்பாடு' (poverty paradox) என்று அழைக்கப்படுகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், இந்திய நகரங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் செய்திகள் வழக்கமாகி வருகின்றன. இத்தகைய அறிக்கைகள் நகர்ப்புற உள்கட்டமைப்பு, குறிப்பாக அவற்றின் வடிகால் அமைப்புகளை மோசமாக பிரதிபலிக்கின்றன. சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற நகர்ப்புற உள்கட்டமைப்பின் மற்ற அம்சங்களைப் பற்றியும் கவலைகள் உள்ளன. 


இந்தியாவின் நகர்ப்புற மக்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குடிசைப்பகுதிகளில் வாழ்கிறார்கள் (lives in slums) என்று தரவு வெளிப்படுத்துகிறது. அவை, பெரும்பாலும் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள் அல்லது நீடித்த வீட்டுவசதி கிடைக்காதவை ஆகும். எனவே, நகர்ப்புற வறுமை (Urban poverty) என்பது வருமானத்தை இழப்பது மட்டுமல்ல, பாதுகாப்பான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை சேவைகளை இழப்பதும் ஆகும்.


இந்தியாவில் நகர்ப்புற வறுமை மற்றும் சமத்துவமின்மை


இந்தியாவில் நகர்ப்புற வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டும் குறைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த எண்ணிக்கைக்கான தரவுகளை ஒரு தெளிவாக ஆராய வேண்டும். உதாரணமாக, 1955 மற்றும் 1975-க்கு இடையில், கினி குணகத்தால் அளவிடப்பட்ட நகர்ப்புற சமத்துவமின்மை 0.392-லிருந்து 0.416-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில், கிராமப்புற வருமான கினி 0.341-லிருந்து 0.388 ஆக உயர்ந்தது.


1995 காலகட்டத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வருமான சமத்துவமின்மை குறைந்தது. கிராமப்புற கினி 0.376 ஆகவும், நகர்ப்புற கினி 0.390 ஆகவும் கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைந்த சரிவாக உள்ளது. 1990களின் முற்பகுதியில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு, நகர்ப்புற கினி குணகம் 2005-ல் 0.455 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் சமத்துவமின்மையின் இதேபோன்ற உயர்வைக் குறிக்கிறது. 2023-ம் ஆண்டில், கிராமப்புற கினி குணகம் 0.405 ஆகவும், நகர்ப்புற கினி குணகம் 2020-ல் 0.532 ஆகவும் உயர்ந்த பின்னர் 0.382 ஆகக் கடுமையாகக் குறைந்தது.


இரண்டு முக்கியமான நிலைமைகளை இங்கே கவனிக்க வேண்டும். முதலாவதாக, 1990களின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு நகர்ப்புற சமத்துவமின்மை கடுமையாக உயர்ந்தது. மேலும், பொருளாதார சீர்திருத்தங்கள் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ச்சியை தூண்டியது. மேலும், வறுமையைக் குறைக்க 1993-94ல் 36 சதவீதத்தில் இருந்து 1999-2000ல் 26.1 சதவீதமாக குறைந்துள்ளது. 


இருப்பினும், இந்த சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தின் முறையான துறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்திய நகர்ப்புற முறைசாரா துறை, இந்த சீர்திருத்தங்களால் பயனடைய முடியவில்லை. சீரற்ற நகர்ப்புற வளர்ச்சி தொடர்ந்து நீடித்ததால், முறைசாரா தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டனர்.


இரண்டாவதாக, 2005 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நகரமயமாக்கலில் மிகப்பெரிய வளர்ச்சியானது, கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வு அதிகரிப்பு மற்றும் குடிசைப்பகுதிகள் (slums) மற்றும் குடிசைவாசிகளின் (slum dwellers) எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை காணப்பட்டன. கட்டுமானத் துறை செழித்து, பெரும்பாலான வேளாண் அல்லாத வேலைகளை உருவாக்கியது. இருப்பினும், அத்தகைய வேலைகள் நிலையற்றவை, குறைந்த ஊதியம் மற்றும் நிச்சயமற்றவையாகும்.


இதனால், தனியார் முதலீடு, வங்கி, டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றின் மூலம் சமூகத்தின் சில பிரிவினருக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தெருவோர வியாபாரிகள் போன்ற முறைசாரா தொழிலாளர்களும் இடப்பெயர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.


நகரங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி கிடைக்காது. இதனால் இவர்களை வறுமைக்கு ஆளாக்குகிறது. உதாரணமாக, பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் வேலை தேடுகிறார்கள். அவர்கள் முறைசாரா குடியிருப்புகளிலும் வசிக்கிறார்கள்.


நேஹா தீட்சித்தின் ”தி மெனி லைவ்ஸ் ஆஃப் சையதா எக்ஸ்” (The Many Lives of Syeda X) என்ற புத்தமானது, முறைசாரா புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதிப்புகளைக் காட்டுகிறது. இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆபத்தான பல ஒற்றைப்படை வேலைகளுக்குள் (many odd jobs) தள்ளப்படுகிறார்கள். இத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏழைகளாகவோ அல்லது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 


இதை 'வறுமை முரண்பாடு' (poverty paradox) என்ற கருத்தைப் பயன்படுத்தி இதை விளக்கலாம். வறுமை முரண்பாடு என்பது நாடுகள் பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்கும் சூழ்நிலையை விவரிக்கிறது, ஆனால் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியா மற்றும் சீனா போன்ற நடுத்தர வருமான நாடுகளில் இது பொதுவானது. இந்த நாடுகளில், தனிநபர் வருமானம் அதிகரிப்பது ஏழை மக்களுக்கு வறுமையை தானாகவே நீக்குவதில்லை.


நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொலிவுறு நகரங்கள்


எனவே, நகர்ப்புற வளர்ச்சி என்பது உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும். 2019 மற்றும் 2023-க்கு இடையில் நாடு முழுவதும் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்கும் இலக்குடன் பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) 2015-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச் 2025-ல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. 


பொலிவுறு நகரம் என்பது (smart city) நகர்ப்புறம் அல்லது அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தரவு சார்ந்த தீர்வுகள் மற்றும் திறமையான வள மேலாண்மை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இது "புத்திசாலி நகரம்" (intelligent city), "மின்னணு நகரம்" (digital city) அல்லது "அறிவு நகரம்" (knowledge city) என்றும் குறிப்பிடப்படுகிறது.


பொலிவுறு நகரங்கள் நிலையானதாகக் கருதப்படுகின்றன மற்றும் நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்கின்றன. அவை, வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கின்றன.


ஒரு பொலிவுறு நகரம் (smart city) டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் சமூக நீதியை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐக்கிய நாடுகளின் சபையின், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நுழைவாயிலாக பொலிவுறு நகரங்கள் காணப்படுகின்றன. அவை,


  • நீடித்த மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்.


  • நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளை உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீள்தன்மை மற்றும் நிலையானதாக மாற்றுதல்.


  • நிலையான வளர்ச்சிக்காக அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை ஊக்குவித்தல். 


பொலிவுறு நகர திட்டம் (Smart Cities Mission) தற்போதுள்ள நகரங்களை புதுப்பித்து, வீடு, சுத்தமான தண்ணீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளை வழங்க முயல்கிறது.  


பொலிவுறு நகரங்களின் யோசனை உள்ளடக்கியதாக இருந்தாலும், நகர்புற நெடுஞ்சாலைகள் அல்லது மேம்பாலங்கள் போன்ற கனரக உள்கட்டமைப்பை உருவாக்குவது எப்போதும் வறுமையைக் குறைக்காது. எடுத்துக்காட்டாக, சீனாவில் உள்ள இரண்டு மாகாணங்களை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு ஆய்வில், ஏழை மற்றும் தொலைதூர மக்களுக்கான அணுகக்கூடிய சாலைகளை உருவாக்கிய மாகாணம் அதிக வறுமைக் குறைப்பை அடைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சாலை வலையமைப்புகள் மற்றும் பேருந்து வழித்தடங்கள் ஏழை மக்கள் நகர்ப்புறங்களுடன் சிறப்பாக இணைவதற்கு உதவியது. அவர்கள் வேலைகளை ஆராய்வதற்கும், இடம்பெயர்வதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும் உதவியது. 


மறுபுறம், நெடுஞ்சாலைகள் மற்றும் தனிவழிச்சாலைகளை அமைப்பதில் அதிக முதலீடு செய்த மாகாணம் வறுமையைக் குறைப்பதில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்த மாகாணம் பெரிய ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுலாவில் கவனம் செலுத்தியது. ஆனால், சமூகம் சார்ந்த சுற்றுலாவை புறக்கணித்தது. நகர்ப்புற நெடுஞ்சாலைகள் மற்றும் தனிவழிப்பாதைகள் மாகாணத்தின் தலைநகரை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் அதே வேளையில், அவை மக்கள் தொகையில் ஏழைப் பிரிவினரை ஒதுக்கிவிட்டன. மாகாணம் பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. ஆனால் வறுமை ஒழிப்பு இல்லாமல் இருந்தது.


நிலையான நகர்ப்புற வளர்ச்சியை நோக்கி 


இந்தியா தனது பொலிவுறு நகர திட்டத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் விரும்பிய பலனைத் தரவில்லை. அதாவது, 100 நகரங்களில் 18 நகரங்கள் மட்டுமே அனைத்து திட்டங்களையும் முடித்துள்ளன. இருப்பினும், அனைத்து 100 நகரங்களிலும், தரவுகளின்படி, முழுமையாக செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. அவை நிகழ்நேர பொலிவுறு முடிவுகளை எடுப்பதில் நகர அதிகாரிகளுக்கு உதவுகின்றன. பொது இடங்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் இந்த நகரங்களில் 84,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. நீர்க் குழாய்கள் நீர் கசிவைக் குறைப்பதற்காக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து, சிறந்த வகுப்பறைகள் மற்றும் மின்-சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் (e-health centres and clinics) ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. 


இந்திய அரசாங்கம் நகர்ப்புற மக்களை இலக்காகக் கொண்டு பல கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், அடல் மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற உருமாற்றத்திற்கான பணி (Atal Mission for Rejuvenation and Urban Transformation(AMRUT)), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்புறம் (Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY-U)), மற்றும் தேசிய நகர்ப்புற கற்றல் தளம் (National Urban Learning Platform) ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் வீட்டுவசதி, நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் முறையான வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் மற்றும் பொலிவுறு நகர திட்டம் (Smart Cities Mission) உடனான அவற்றின் ஒருங்கிணைப்பு தெளிவாக இல்லை. 


டிஜிட்டல் மயமாக்கல், தகவல் தொழில்நுட்பம், தனியார் முதலீடு, வங்கி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தனிவழிகள் ஆகியவை பெரும்பாலும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டின் முக்கிய திட்டமாக அறியப்படுகிறது. இருப்பினும், சமூகத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பைப் புரிந்துகொள்வது கொள்கை வகுப்பாளர்களுக்கும் முக்கியமானது. ஏழைகளுக்கு சிறந்த வேலைகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அணுகக்கூடிய சாலைகள், மலிவு விலை சுகாதாரம் மற்றும் கல்வி, மற்றும் உள்ளடக்கிய போக்குவரத்து ஆகியவை நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு சமமாக அவசியம். கூடுதலாக, இந்த திட்டங்களில் நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நகர்ப்புறங்கள் பற்றிய துல்லியமான தரவு மற்றும் ஆய்வுகள் முக்கியமானதாக இருக்கும்.



Original article:

Share:

ஐநா பொதுச் சபை வாரத்தில், இந்தியா உலகளாவிய தெற்கு நாடுகளுடன் மறு ஒருங்கிணைப்பை குறிப்பால் உணர்த்துகிறது. -சுஹாசினி ஹைதர்

 அமெரிக்காவுடனான பிரச்சனைகள், இஸ்ரேலை விமர்சிப்பதில் மாற்றம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஐ.நா பொதுச் சபை (UN General Assembly (UNGA)) கூட்டங்கள் போன்றவை வளரும் நாடுகளில் இந்தியாவின் கவனத்தைக் காட்டுகின்றன.


ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது உயர்மட்ட கூட்ட வாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பரபரப்பான அறிக்கைகளின் போது, ​​உலகளாவிய தெற்குடனான தனது ஈடுபாட்டை இந்தியா மிகவும் தெளிவாகத் தெரிவித்தது. அதில், காசா மீதான இஸ்ரேலின் போர், அமெரிக்கா தலைமையிலான கடுமையான வர்த்தக நிலை மற்றும் ஐ.நா. சீர்திருத்தம் இல்லாதது குறித்து அறிக்கைகளில் கடுமையான விமர்சனங்களை எடுத்துரைத்தார்.


வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான, சந்திப்பு சுமார் 30 முறை நேரடியான இருதரப்பு சந்திப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை வளரும் நாடுகளுடன் இருந்தன. அதே சமயம், இந்தியா நடத்திய அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய அனைத்து பலதரப்பு சந்திப்புகளும் உலகளாவிய தெற்கின் பிரச்சினைகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் அல்லாத குழுக்களை மையமாகக் கொண்டிருந்தன.


BRICS :  Brazil, Russia, India, China, South Africa, Egypt, Ethiopia, Iran, UAE and Indonesia.


IBSA :  India-Brazil-South Africa (IBSA)


India-CELAC : Community of Latin American and Caribbean States


India-SICA : India and Central American Integration System (India-SICA)


FIPIC : Forum for India–Pacific Islands Cooperation (FIPIC)


பலதரப்பு கூட்டங்களில், BRICS, IBSA (இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா), இந்தியா-CELAC (தென் அமெரிக்க நாடுகள்), இந்தியா-SICA (மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு) மற்றும் FIPIC (பசிபிக் தீவு நாடுகளுடன்) பல நாடுகள் அடங்கும். அவற்றில் L-69 (உலகளாவிய தெற்கிலிருந்து வளரும் நாடுகள்), C-10 (ஆப்பிரிக்க ஒன்றிய பிரதிநிதிகள்) மற்றும் "உலகளாவிய தெற்கின் உயர் மட்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள்" (High-Level Like-Minded countries of the Global South) ஆகியவையும் அடங்கும்.





மருந்து வரிவிதிப்புகள்


உலகளாவிய தெற்கில் இந்தியாவின் கவனமானது, இந்த வாரம் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர். அதாவது வாரத்தின் தொடக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். ஆனால், அமெரிக்காவின் அறிக்கை மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த குறைவும் இல்லை என்பது தெளிவாகிறது. இந்தச் சந்திப்புக்கு ஒரு நாள் கழித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் சீனாவுடன் இணைந்து இந்தியாவை "போரின் முதன்மையாக நிதியளிப்பவர்கள்" (primary funders of the war) என்று அழைத்தார். மேலும், அவர் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக மீண்டும் கூறினார். இந்தியப் பொருட்களுக்கு 50% வரிவிதிப்பு, மற்றும் விசா மற்றும் குடியேற்ற வாசிகள் குறைப்புக்கள் இந்திய தொழில் வல்லுநர்களைப் பாதிக்கும். கூடுதலாக, அமெரிக்க நிர்வாகம் மருந்துத் தொழில்கள் மீதான புதிய வரிவிதிப்புகளையும் இந்த வாரம் குறைத்தது. வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்கா தனது சந்தைகளைத் திறப்பதை உறுதிசெய்யவும், அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளைக் குறைக்கவும் "இந்தியாவை சரிசெய்யும்" என்று கூறினார். இது, இந்திய மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் இன்னும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தப் (FTA) பேச்சுவார்த்தைகளில் கடினமான பாதையை எதிர்கொண்டுள்ளனர்.


இதற்கிடையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மற்றும் அவரது ஜப்பானிய பிரதிநிதியை மற்ற குழு கூட்டங்களின் நிகழ்வில் சந்தித்தார். இருப்பினும், குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டம் எதுவும் இல்லை. இந்த ஆண்டு இந்தியா நடத்தவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டிற்கான தேதியை இன்னும் ஒப்புக் கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. தெற்காசிய அண்டை நாடுகளுடனான வலுவான ஈடுபாட்டுடன் வாஷிங்டன் இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்கியது. வங்காளதேசம், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களை நியூயார்க்கில் அமெரிக்கத் தூதுவராக நியமித்துள்ள செர்ஜியோ கோர் சந்தித்தபோதும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருடன் அதிபர் டிரம்ப் 80 நிமிட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதற்கு நேர்மாறாக, பொது விவாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்ட நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் அந்த வாரத்தில் இலங்கை மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சரை மட்டுமே சந்தித்தார்.


காசாவின் நிலைமை


ஐ.நா பொதுச் சபை (UNGA) வாரத்தில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காசா மீதான இஸ்ரேல் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டால் சுட்டிக்காட்டப்பட்டது. இதுவரை மற்ற உலகளாவிய தெற்கு நாடுகளில் இருந்து வெளியேறி, போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களில் இருந்து விலகிய இந்தியா, அதற்கு பதிலாக UNGA-வின் போது இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்கும் பல அறிக்கைகளை ஆதரிப்பதைக் காண முடிந்தது. BRICS வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) முத்தரப்பு ஆணையத்தின் அறிக்கைகள் இதில் அடங்கும். இதில் “அமைச்சர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தின் நிலைமை குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தினர் மற்றும் காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்தன. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாடுகளின் குடிமக்களுக்கு முன்னோடியில்லாத வகையில் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலைப்பாடுகள் இந்தியா ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்ட முந்தைய நிலைப்பாடுகளைவிட மிகவும் கடினமானவை. இந்தப் பிரச்சினையில் உலகளாவிய தெற்கின் நிலைப்பாட்டிற்கு இந்தியா நெருக்கமாகச் செல்வதை அவை காட்டுகின்றன. இருப்பினும், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் ஐ.நா. உரையின்போது எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்த 80 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இந்தியா சேரவில்லை.


பொது விவாதத்தில் இந்தியாவின் அறிக்கையின்போது "குறிப்பாக கடுமையான" "உலகளாவிய தெற்கின் இக்கட்டான நிலையை" கையாள்வதில் இந்தியாவின் அர்ப்பணிப்பைக் குறிப்பிட்டு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் எதிர்கொண்ட பல சிக்கல்களைப் பட்டியலிட்டார். உக்ரைன் மற்றும் காஸாவில் உள்ள மோதல்கள், ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பு, "சந்தை அல்லாத வர்த்தக நடைமுறைகள்", சந்தை அணுகல் மற்றும் விலை நிச்சயமற்ற நிலை ஆகியவை இதில் அடங்கும்.


"வளங்கள் நெருக்கடியில் இருந்த நாடுகள் உயிர்வாழப் போராடின. பின்னர், அவர்கள் தார்மீக ரீதியில் உரைகளை மட்டுமே கேட்டனர்," என்று அவர் கூறினார். உலகளாவிய தெற்கிற்கு போதுமானதைச் செய்யாததற்காக உலகளாவிய வல்லரசுகள் மீதான கடுமையான விமர்சனம் இது.


இந்தியாவின் நிரந்தரத் தூதுக்குழு (India’s Permanent Mission (PMI)), அதன் வலைத்தளத்தில் 48 அம்ச “முன்னுரிமைக் கட்டுரையை” வெளியிட்டது. அதில், முந்தைய அமர்வில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தில் முன்னேற்றம் இல்லாதது குறித்து PMI ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. உலகளாவிய தெற்கின் முன்னணி குரலாக இந்தியாவின் பங்கையும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டியது. காலநிலை நிதி, மேம்பாட்டு நிதி மற்றும் பிற முக்கிய பகுதிகளின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்தியது. நிலத்தால் சூழப்பட்ட வளரும் நாடுகள் (Landlocked Developing Countries (LLDCs)), குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (Least Developed Countries (LDCs)) மற்றும் சிறிய தீவு வளரும் நாடுகள் (Small Island Developing States (SIDs)) ஆகியவற்றுடன் வலுவான ஒருங்கிணைப்புக்கும் இது அழைப்பு விடுத்தது.



Original article:

Share:

வெறுமையான உணவுத் தட்டு எதைக் குறிக்க வேண்டும்? -தகாயுகி ஹகிவாரா

 உணவு இழப்பு மற்றும் வீணாக்கம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் உணவு மற்றும் காலநிலை பாதுகாப்பைப் பாதிக்கும் கடுமையான பிரச்சனையான அதிக அளவு உணவு வீணாக்கப்படுவது  மீது கவனம் செலுத்த வேண்டும்.


உணவு மற்றும் காலநிலை பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும் ஒரு அமைதியான நெருக்கடியை முன்னிலைப்படுத்த செப்டம்பர் 29 அன்று, உலகம் முழுவதும் உணவு இழப்பு மற்றும் வீணாக்கம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் (International Day of Awareness of Food Loss and Waste (IDAFLW)) அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு இழக்கப்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது.


மிகப்பெரிய உணவு உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா, பல துறைகளில் குறிப்பிடத்தக்க இழப்புகளை எதிர்கொள்கிறது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் (MoFPI) நியமிக்கப்பட்ட நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வேளாண் துறையில் இந்த இழப்புகள் மிக அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


பொருளாதார தாக்கம் மிகப்பெரியது. இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ₹1.5 டிரில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது. இது வேளாண் சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.7% ஆகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் 10%-15% என்ற அளவில் வீணாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் நெல் (4.8%) மற்றும் கோதுமை (4.2%) போன்ற முக்கிய உணவுகளும் குறிப்பிடத்தக்க வீணாக்கத்தை எதிர்கொள்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்புகள் அழுத்தப்பட்டு, காலநிலை மாற்றம் மோசமடைந்து வரும் நேரத்தில், ஒவ்வொரு டன் உணவும் ஊட்டச்சத்து இழப்பை மட்டுமல்ல, நீர், ஆற்றல் மற்றும் உழைப்பையும் வீணாக்குகிறது. இந்தியாவின் பெரிய உற்பத்தி அளவுகளில், இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் உணவை இழக்கச் செய்கிறது. இது விவசாயிகளின் வருமானம், தேசிய உணவு வழங்கல், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் காலநிலை நிலைத்தன்மையை பாதிக்கிறது.


உணவு இழப்பு பயிர், விநியோகச் சங்கிலி நிலை மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. இழப்புகள் எங்கு நிகழ்கின்றன மற்றும் அவற்றின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அறிவது பயனுள்ள தீர்வுகளுக்கு அவசியம். இந்த இழப்புகளைக் குறைப்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதற்கும் முக்கியமானது.


காலநிலை இணைப்பு


இந்தச் சவாலை எதிர்கொள்ள, இந்திய அரசு 50-க்கும் மேற்பட்ட பயிர்களை உள்ளடக்கிய மூன்று நாடு தழுவிய அறுவடைக்குப் பிந்தைய கணக்கெடுப்புகளை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்புகள் உலக அளவில் மதிப்புச் சங்கிலியில் ஏற்படும் இழப்புகள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கின. தேசிய குறிகாட்டி கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) காட்டி 12.3.1 (உலகளாவிய உணவு இழப்பு மற்றும் கழிவு) உட்பட, வழக்கமான கண்காணிப்பை அனுமதித்தல், சர்வதேச இலக்குகளுடன் சீரமைத்தல் மற்றும் உணவு முறைகளை மாற்றுவதற்கான அறிவை விரிவுபடுத்துதல் மூலம் பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது.


இதன் அடிப்படையில், பசுமை காலநிலை நிதியத்தால் (Green Climate Fund (GCF)) ஆதரிக்கப்படும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) மற்றும் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)) ஆகியவற்றின் சமீபத்திய ஆய்வு, இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் மற்றும் சில்லறை கழிவுகளிலிருந்து பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) வெளியேற்றத்தின் முதல் விரிவான மதிப்பீடுகளை வழங்குகிறது. இந்த ஆய்வு 30 பயிர்கள் மற்றும் கால்நடை தயாரிப்புகளை பகுப்பாய்வு செய்து, துறை, மாநிலம் மற்றும் செயல்பாட்டு வகை வாரியாக தரவை வழங்குகிறது.


கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தானியங்களில், குறிப்பாக அரிசியில் ஏற்படும் சிறிய இழப்புகள்கூட, ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் டன்களுக்கு மேல் கார்பன்-டை-ஆக்சைடு (CO2)-க்கு சமமான உமிழ்வை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், அரிசி அதிக மீத்தேன் உற்பத்தி செய்கிறது. கால்நடைப் பொருட்களின் இழப்புகளும் அவற்றின் அதிக வள பயன்பாடு காரணமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த 30 பொருட்களிலிருந்து வரும் உணவு இழப்புகள் ஆண்டுதோறும் 33 மில்லியன் டன்களுக்கு மேல் CO2-க்கு சமமான உமிழ்வை உருவாக்குகின்றன. இது தடுக்கக்கூடிய நடவடிக்கை ஆகும். இது சிறந்த மற்றும் திறமையான உணவு அமைப்புகளால் குறைக்கப்படலாம்.


இந்தியாவில், பெரும்பாலான இழப்புகள் விநியோகச் சங்கிலியின் ஆரம்பத்தில் நிகழ்கின்றன. அவை கையாளுதல், பதப்படுத்துதல் மற்றும் விநியோகத்தின்போது  அதிக வருமானம் கொண்ட நாடுகளைப் போலல்லாமல், நுகர்வோர் மட்டத்தில் பெரும்பாலும் இழப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு காட்டுகிறது. பலவீனமான உள்கட்டமைப்பு, வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சிதறிய விநியோகச் சங்கிலிகள் போன்ற இந்தியாவின் முக்கிய சவால்களை சுட்டிக்காட்டுகிறது.


நடைமுறை தீர்வுகள்


உணவு இழப்புடன் இந்தியா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஆனால், தீர்வுகள் அடையக்கூடிய அளவில் உள்ளது. தொழில்நுட்பம், கூட்டாண்மைகள், தனியார் துறை ஈடுபாடு மற்றும் வட்டப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வது ஆகியவற்றின் கலவையானது உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.


பெரும்பாலான உணவு இழப்பு பலவீனமான உள்கட்டமைப்பு காரணமாகவே நிகழ்கிறது. பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் இறைச்சி போன்ற அழுகும் பொருட்களுக்கு முன் குளிர்விப்பு முதல் குளிர்பதன போக்குவரத்து மற்றும் நவீன சேமிப்பு வரை குளிர்பதன சங்கிலிகளை வலுப்படுத்துவது அவசியம். பிரதான் மந்திரி கிசான் சம்பாத யோஜனா (Pradhan Mantri Kisan SAMPADA Yojana (PMKSY)) போன்ற திட்டங்கள் ஏற்கனவே உணவு தளவாடங்களை நவீனமயமாக்க உதவுகின்றன.


மலிவு விலை தொழில்நுட்பங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சூரிய ஆற்றல் குளிர் சேமிப்பு, குறைந்த விலை குளிரூட்டும் அறைகள், அழுகும் பொருட்களுக்கான பெட்டிகள் மற்றும் தானியங்களுக்கான ஈரப்பதம்-தடுப்பு குழிகள் கெட்டுப்போவதைக் குறைக்க சிறு விவசாயிகளுக்கு உதவும்.


IoT சென்சார்கள் மற்றும் AI- இயக்கப்படும் முன்னறிவிப்பு போன்ற டிஜிட்டல் கருவிகள் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகத்தை மேம்படுத்தலாம், தடைகள் மற்றும் இழப்புகளைக் குறைக்கலாம். 2023இல் தொடங்கப்பட்ட FAO உணவு இழப்பு செயலி (FAO Food Loss App (FLAPP)), விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் மதிப்புச் சங்கிலி முழுவதும் இழப்புகளைக் கண்காணிக்க உதவுகிறது.  இது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.


சில்லறை விற்பனை மட்டத்தில், உபரி உணவை உணவு வங்கிகள் மற்றும் சமூக சமையலறைகளுக்கு அனுப்பலாம். அதே நேரத்தில், தவிர்க்க முடியாத கழிவுகளை உரம், கால்நடை தீவனம் அல்லது உயிரி ஆற்றலாக மாற்றலாம். இந்த வட்ட தீர்வுகளை விரிவுபடுத்துவதற்கு மானியங்கள், கடன் உத்தரவாதங்கள் மற்றும் குறைந்த வட்டி கடன்கள் உள்ளிட்ட வலுவான கொள்கை ஆதரவு தேவை.


பகிரப்பட்ட பொறுப்பு


உணவு இழப்பு முழு விநியோகச் சங்கிலியிலும் நிகழ்கிறது. எனவே அனைவருக்கும் பங்கு உண்டு. அரசாங்கங்கள் காலநிலைத் திட்டங்களில் இழப்புக் குறைப்பைச் சேர்க்க வேண்டும் மற்றும் வலுவான உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டும். வணிகங்கள் வட்ட நடைமுறைகளைக் கடைப்பிடித்து புதுமைகளை விரிவுபடுத்த வேண்டும். சமூகமும் ஆராய்ச்சியாளர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் தீர்வுகளைப் உருவாக்கலாம். அதே நேரத்தில் நுகர்வோர் கவனமாகத் தேர்வுகளைச் செய்து உணவு மறுபகிர்வை ஆதரிப்பதன் மூலம் கழிவுகளைக் குறைக்கலாம்.


உணவு இழப்பு மற்றும் வீணாக்கம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் (International Day of Awareness of Food Loss and Waste (IDAFLW)) கடைபிடிப்பது என்பது வெறும் அடையாளச் சின்னம் மட்டுமே. இது நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு. இதில் உள்ள சவால் பெரியது. ஆனால், நன்மைகள் அதிகம். உணவைச் சேமிப்பது காலநிலையைப் பாதுகாக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. ஒரு காலியான தட்டு வீணான உணவைக் குறிக்காமல், நுகர்வுக்கு எடுத்துக்கொண்ட உணவைக் குறிக்க வேண்டும்.


தகாயுகி ஹகிவாரா ஐக்கிய நாடுகள் சபையின் (FAO) இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி ஆவார்.



Original article:

Share:

நிலப்பரப்புகள் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை மறுவரையறை செய்தல் -நீரஜ் குத்ரமோட்டி

 பசுமைப் பொருளாதார மாற்றத்திற்கு சுற்றுச்சூழலைப் பற்றிய தெளிவான மற்றும் பகிரப்பட்ட புரிதல் அவசியம். இது காற்று மற்றும் நீர் தரம், வாழ்விட ஆதரவு மற்றும் காலநிலை ஒழுங்குமுறை போன்ற சுற்றுச்சூழல் செயல்பாடுகளை மதிப்பிடவும் மேம்படுத்தவும் உதவுகிறது.


இந்தியா ஒரு திருப்புமுனையில் உள்ளது. பாரம்பரிய வளர்ச்சி மாதிரிகளுக்கு அப்பால் நகர்ந்து பசுமையான, மேலும் மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் உயிரியல் பொருளாதாரம் 2014-ல் $10 பில்லியனில் இருந்து 2024-ல் $165.7 பில்லியனாக கணிசமாக வளர்ந்தது. இது 10 ஆண்டுகளில் 16 மடங்கு அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.25% பங்களித்தது. இந்த வளர்ச்சிக்கு 10,000-க்கும் மேற்பட்ட உயிரியல் பொருளாதார தொடக்க நிறுவனங்கள் துணைபுரிகின்றன.


உயிரியல் எரிபொருள்கள் மற்றும் உயிரியல் நெகிழிகள் உள்ளிட்ட தொழில்துறை உயிரியல் பொருளாதாரம் சுமார் 47% உடன் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து மருந்துகள் 35% உடன் உள்ளன. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உயிரியல் தகவலியல் உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்துவரும் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. பெட்ரோலில் 20% எத்தனாலை கலப்பது மற்றும் உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக மாறுவது போன்ற முக்கிய மைல்கற்களை இந்தியா அடைந்துள்ளது.


இந்திய உயிரி பொருளாதார அறிக்கை, உயிரி பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் 35 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று கணித்துள்ளது. கிராமப்புற இந்தியா நகர்ப்புறங்களை விட நுகர்வோர் செலவினத்தில் வேகமாக வளர்ச்சியைக் காண்கிறது, கிராமப்புற தனிநபர் செலவினம் நகரங்களில் 8.3% உடன் ஒப்பிடும்போது 9.2% அதிகரித்துள்ளது (ஆகஸ்ட் 2023 முதல் ஜூலை 2024 வரை). கிராமப்புற மக்கள் அதிகமாக சம்பாதித்து, தங்கள் வாங்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. 


பசுமை பொருளாதாரம் இனி ஒரு தொலைதூர அல்லது சுருக்கமான யோசனை அல்ல; அது உண்மையானதாகவும் அவசியமாகவும் மாறி வருகிறது. இந்தியாவின் காலநிலை சவால்கள் மற்றும் கார்பன் வரிகள் மற்றும் நிலையான பொருட்களுக்கான அதிக தேவை போன்ற உலகளாவிய சந்தை மாற்றங்கள் காரணமாக, வேலைகளை உருவாக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, போட்டித்தன்மையுடன் இருக்க மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்த இந்த மாற்றம் தேவைப்படுகிறது. பசுமை பொருளாதாரம் வளரும்போது, ​​வறுமை மற்றும் காலநிலை அபாயங்களால் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற சமூகங்கள், பயனாளிகளாக மட்டுமல்ல, காலநிலை முன்னணியில் உள்ள தலைவர்களாகவும் பார்க்கப்பட வேண்டும்.


இடையூறுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள்


இந்தியாவின் பசுமைப் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதார அழுத்தங்களால் சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால், எரிசக்தி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியமானது. உலகப் பொருளாதாரம் 2.5%-ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.9% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை சீர்குலைவுகள் பணவீக்கத்தைப் பாதித்து கிராமப்புற உயிரியல் பொருளாதாரத்தை மோசமாக்குகின்றன. இதனால் விவசாயத்தில் இழப்புகள், எரிசக்தி தேவையில் மாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் ஏற்படுகின்றன. கவனம் செலுத்த வேண்டிய குறிப்பிடத்தக்க மறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வும் உள்ளது. 2024-ல் தொடங்கப்பட்ட BioE3 கொள்கை, உயிரியல் பொருளாதாரத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், விதிமுறைகள் இன்னும் சிதறிய முறையில் உள்ளன. மேலும் பொருளாதாரம் பெரும்பாலும் நகர்ப்புற, தொழில்துறை அளவிலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவின் உயிரி பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் ஒன்றாக 6%-க்கும் குறைவாகவே பங்களிக்கின்றன. விவசாயம், காடுகள், கனிமங்கள் மற்றும் மரம் அல்லாத வனப் பொருட்கள் நிறைந்த மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், பழங்குடியினர் தலைமையிலான உயிரி பொருளாதார முயற்சிகளுக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மிகப்பெரிய கரும்பு உற்பத்தியாளரான உத்தரப் பிரதேசம், எத்தனால், உயிரி எரிபொருள்கள் மற்றும் உயிரி எரிபொருள் சக்தியில் வாய்ப்புகளைக் காண்கிறது. பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை சிறிய தொழில்துறை உயிரி பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. இது சரக்கு சமநிலைக் கொள்கையின் குறைந்த முதலீடு காரணமாக இருக்கலாம். ஆனால், அவை பயன்படுத்தக்கூடிய விவசாயக் கழிவுகள் மற்றும் வனப் பொருட்களை ஏராளமாகக் கொண்டுள்ளன.


2047ஆம் ஆண்டு வாக்கில், இந்தியா 35 மில்லியன் பசுமை வேலை வாய்ப்புகளைச் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது பெண்கள் சூரிய சக்தித் துறையில் 11% வேலைகளை மட்டுமே வகிக்கின்றனர். இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2015 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கு இடையில் 250% அதிகரித்துள்ளது. முக்கிய செயல்முறைகளில் பெண்களின் பங்கு மிகக் குறைவாக உள்ளது.


பசுமைப் பொருளாதாரத்தில் தெளிவான கிராமப்புற-நகர்ப்புற பிளவு உள்ளது. நகர்ப்புறங்களில் அதிக பசுமை முதலீடுகள், மின்சார உள்கட்டமைப்பு, பசுமை வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் சுத்தமான ஆற்றல், நீர் சேமிப்பு நீர்ப்பாசனம் மற்றும் நிலையான வாழ்வாதாரங்கள் குறைவாகவே உள்ளன. கிராமப்புறங்களில் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மெதுவாகவும் சமமற்றதாகவும் உள்ளது. smart grids மற்றும் கார்பன் சந்தை அறிக்கையிடல் போன்ற தொழில்நுட்ப தீர்வுகள் பெரும்பாலும் குறைந்த டிஜிட்டல் அணுகல் கொண்ட சமூகங்களை விலக்குவதால், ஒரு பெரிய டிஜிட்டல் பிளவு இடைவெளியை மோசமாக்குகிறது.


கழிவு மேலாண்மையில், அதிக நுகர்வு மற்றும் வணிக செயல்பாடு காரணமாக நகரங்கள் இந்தியாவின் திடக்கழிவுகளில் கிட்டத்தட்ட 75% ஐ உற்பத்தி செய்கின்றன. கிராமப்புறங்களில் நெகிழி, மின் கழிவுகள் மற்றும் உயிரி கழிவுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பிரிக்கப்படாமல், எரிக்கப்படுகின்றன அல்லது கொட்டப்படுகின்றன.


500 மில்லியன் டன் பயிர் எச்சங்கள், வனப்பகுதி கிராமப்புறங்களில் இருந்து 3,500 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவர இனங்கள், 7,50,000 கிராமப்புற சந்தைகள் மற்றும் வேளாண் மண்டிகள் மற்றும் MGNREGA-ஆதரவு பெற்ற பசுமை உள்கட்டமைப்பு போன்ற வளங்கள் இருந்தபோதிலும், உயிரி பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புறங்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.


பசுமைப் பொருளாதாரம் வர்த்தகம்


இந்தியா பொருளாதார வளர்ச்சி, சமூக நியாயம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கும்போது, ​​பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் பல சமரசங்களை எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பது ஒரு பெரிய சவாலாகும். அதே நேரத்தில் புதைபடிவ எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவதும் ஆகும். இது 40% வரை இருக்கலாம். 


சூரிய சக்தி பம்புகள் போன்ற புதுப்பிக்கத்தக்க தீர்வுகளை ஆதரிக்கும் அதே வேளையில், நிலத்தடி நீர் பயன்பாட்டில் அவற்றின் தாக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எஃகு, சிமென்ட், மின்சாரம் மற்றும் பயன்பாடுகள் போன்ற கார்பனைஸ் செய்ய கடினமாக உள்ள துறைகளில் பெரிய தொழில்துறை வளர்ச்சி இந்தியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 23.2%-க்கு பொறுப்பானது. இது பசுமை தொழில்நுட்பங்களில் முதலீடுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இது பாரம்பரிய விருப்பங்களைவிட நான்கு மடங்கு அதிகமாக செலவாகும். உலகளவில், சுத்தமான எரிசக்தி முதலீடுகளில் 85% மேம்பட்ட பொருளாதாரங்களுக்குச் செல்கிறது, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு 15%  என்ற அளவில் உள்ளது.


பசுமை ஆற்றலுக்கு விரைவாக மாறுவது, கவனமாக நிர்வகிக்கப்படாவிட்டால், கிராமப்புறங்கள் மற்றும் நிலக்கரி தொழிலாளர்கள், சிறு வணிகங்கள் மற்றும் பாரம்பரிய ஆற்றலைச் சார்ந்திருக்கும் உற்பத்தியாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பெரிதும் பாதிக்கும். விவசாயம் 58% கிராமப்புற வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. ஆனால், பருவகால மாற்றங்கள் மற்றும் காலநிலை மாறுபாடுகள் பெரும்பாலும் வருமானத்தை நிலையற்றதாக ஆக்குகின்றன மற்றும் பொது அமைப்புகள் அல்லது சந்தைகளை நம்பியிருப்பதை அதிகரிக்கின்றன.


மத்தியப் பிரதேசத்தின் பெல்கெடியைச் சேர்ந்த ஒரு பெண், சந்தைகள் குறிப்பாக ஹோலி போன்ற பண்டிகைகளின் போது பொருளாதார வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால், அவை செயற்கை பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் வளங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார். ஒரு நியாயமான மாற்றத்திற்கு இலக்கு வைக்கப்பட்ட திறன் மேம்பாடு, பணியாளர்களை மறுதிறன் செய்தல் மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க உள்ளூர் உயிரி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவை தேவை.


சாலைப் போக்குவரத்து நாட்டின் பெரும்பாலான பொருட்களையும் பயணிகளையும் கொண்டு செல்கிறது. மேலும், உணவுப் போக்குவரத்து இப்போது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 ஜிகா டன் கார்பன்-டை-ஆக்சைடை உருவாக்குகிறது. இது உமிழ்வு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு இடையில் சமநிலையை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, சத்தீஸ்கரில் உள்ள பீஜாப்பூர் மற்றும் சுக்மா இன்னும் 400 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை நம்பியுள்ளன. மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் அதிக விகிதங்களில் சில உள்ளன.

இந்தியாவின் முக்கிய பொருளாதாரத் துறைகளான விவசாயம், வனவியல், மீன்வளம் மற்றும் சுற்றுலாவை பல்லுயிர் பெருக்கம் ஆதரிக்கிறது. இது 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான மதிப்புள்ள வளங்களையும் வழங்குகிறது. பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக கோதுமை மற்றும் நெல்லுக்கு ஒற்றைப் பயிர் சாகுபடியை ஆதரிக்கும் கொள்கைகள் அல்லது சந்தை ஊக்குவிப்புகளுக்கும் இடையே மோதல்கள் உள்ளன. எத்தனால் கலப்பதற்கான இந்தியாவின் வலுவான உந்துதல், மக்காச்சோளத்தை எத்தனாலுக்கு அல்லது கால்நடை தீவனமாகப் பயன்படுத்துவதற்கு இடையே ஒரு சமரசத்தை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு உத்திகளின் நன்மைகள் மற்றும் இழப்புகள் இரண்டையும் கருத்தில் கொண்டு, முரண்பட்ட கொள்கைகளைத் தீர்க்கிறது, பல பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் உலகளாவிய வாய்ப்புகளுடன் உள்ளூர் யதார்த்தங்களை சமநிலைப்படுத்தும் விரிவான, துறை வாரியான உள்ளூர் அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது முக்கியம்.


பசுமைப் பொருளாதாரத்திற்கான இயற்கை அணுகுமுறை


நிலைத்தன்மை, காலநிலை நடவடிக்கை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு வளர்ச்சி மாதிரி தேவை, அதே நேரத்தில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து, குறைந்த வளர்ச்சியடைந்த, அதிக திறன் கொண்ட மாநிலங்களை ஆதரிக்கிறது. இது வலுவான பசுமை பொருளாதார அமைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும். பசுமை வளர்ச்சியை அடைவதில் ஏற்படும் வர்த்தக பரிமாற்றங்கள், இடையூறுகள் மற்றும் அழுத்தங்களை நிர்வகிக்க, நிலப்பரப்புகளை மதிப்பிடுவது முக்கியம்.


நிலப்பரப்புகள், நீர்வளங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள், எரிசக்தி அமைப்புகள், உள்ளூர் சந்தைகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளாக நிலப்பரப்புகளைப் பார்க்க வேண்டும். இந்த நிலப்பரப்புகளைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு வழிகாட்ட வேண்டும்.


இந்த அணுகுமுறை காற்று மற்றும் நீர் தரம், வாழ்விடங்கள் மற்றும் காலநிலை ஒழுங்குமுறை போன்ற சுற்றுச்சூழல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் சிறந்த சுகாதாரம், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்வாதாரங்கள் மூலம் மக்களுக்கு பயனளிக்கிறது. நிலப்பரப்புகள் மீண்டும் உருவாக்கப்படுவதையும் நிலையானதாக இருப்பதையும் இது உறுதி செய்கிறது.


கிராம மட்டத்திலிருந்து பெரிய நிலப்பரப்பு நிலைக்கு பங்கேற்பு நிலப்பரப்பு மதிப்பீடுகளை நோக்கி நகர்வது ஒரு முக்கியப் படியாகும்.


முதலாவதாக, இந்தத் திட்டம் திட்டமிடல் முதல் கண்காணிப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் 2.5 லட்சம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (PRI), 12 மில்லியன் பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளைப் பயன்படுத்துகிறது. இது பெண்களின் தலைமை மற்றும் தொழில்நுட்பப் பாத்திரங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், வட்டப் பொருளாதாரம், பசுமை ஆற்றல் மற்றும் உயிரி பொருளாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. உள்ளடக்கிய நிர்வாகம், பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் பசுமை உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகளில் முதலீடுகள் நீண்டகால நன்மைகளைத் தருகின்றன.


உதாரணமாக, சத்தீஸ்கரில் உள்ள குல்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கிராமத்திற்கு வழங்க குளிர் அழுத்தப்பட்ட (cold-pressed)  முறையில் சுரைக்காய் அல்லது பீர்கங்காய் விதைகளிலிருந்து (Tori seeds) எடுக்கப்பட்ட எண்ணெய் வணிகத்தைத் தொடங்க விரும்புகிறார். இது சிறந்த சுகாதாரம், மூலப்பொருள் கிடைக்கும் தன்மை, உள்ளூர் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஆதரிக்கிறது. வறுமையைக் குறைப்பதிலும் வேலைகளை உருவாக்குவதிலும் மட்டுமல்லாமல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளிலும் கவனம் செலுத்துவதன் மூலம் ஒரு ஆதரவான அமைப்பை உருவாக்க முடியும். நிலப்பரப்புகள், தெளிவான பொறுப்புகள் மற்றும் கொள்கைகள் மற்றும் பொருளாதார உத்திகளில் சுற்றுச்சூழல் அமைப்பு மதிப்பைச் சேர்ப்பதன் அடிப்படையில் திட்டமிடுதல் சரியான திசையை வழிநடத்தும். பசுமை பட்ஜெட், தெளிவான அமலாக்கப் பாத்திரங்கள், இலக்கு ஊக்கத்தொகைகள், பசுமை அரசாங்க கொள்முதல், கிராம பஞ்சாயத்துகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகக் குழுக்களின் ஈடுபாடு, அத்துடன் திறன்கள், பாலின உள்ளடக்கம் மற்றும் உள்ளூர் திறன் மேம்பாடு போன்ற எளிய நடவடிக்கைகள் அனைத்துத் துறைகளையும் பசுமையாக்க உதவும்.


சிறந்த கழிவு மேலாண்மை, பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முறையான நிதி மற்றும் செயல்பாடுகள், துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களை பசுமையாக்குதல் போன்ற சவால்களை எதிர்கொள்வது, உயிரி-பொருளாதார திறன் கொண்ட துறைகளை மேம்படுத்தும். இந்த அணுகுமுறைகள் மூலம், இந்தியா தனது மக்கள் மற்றும் நிலப்பரப்புகளுக்கு புதிய வளர்ச்சி, மீள்தன்மை மற்றும் நல்வாழ்வை உருவாக்கும் அதே வேளையில், காலநிலை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய முடியும்.


நீரஜ் குத்ரமோட்டி இணை இயக்குனர், காலநிலை நடவடிக்கை, Transform Rural India Foundation (TRI);



Original article:

Share:

இந்திய மாநிலங்களின் பேரியல் நிதி ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்தல் -தீபன்சு மோகன்

 2010ஆம் ஆண்டு, சீர்திருத்தங்கள், சிறந்த வரி வசூல் மற்றும் வலுவான வளர்ச்சி மூலம் மாநிலங்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்தன. சில மாநிலங்கள் உபரிகளையும் அறிவித்தன. ஆனால், தொற்றுநோய் காலத்தில் இதை மாற்றியது. அவசரகால செலவுகள் அதிகரித்தபோது வரி வருவாய் குறைந்தது, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்தையும் பின்னோக்கித் தள்ளியது.

இந்தியாவின் தேசிய தணிக்கையாளரான தலைமை தணிக்கையாளர் (CAG), மாநிலங்களின் நிதிநிலை குறித்த 10 ஆண்டு பகுப்பாய்வை வெளியிட்டபோது, ​​ஒரு தலைப்புச் செய்தி விரைவாகப் பரவியது. இதில் நிதி அடிப்படையில் பின்தங்கிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசம், ₹37,000 கோடி வருவாய் உபரியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குஜராத்தின் உபரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் இந்த எண்ணிக்கை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் மேம்பட்டுள்ளது என்பதற்கான சான்றாகக் கொண்டாடப்பட்டது.  இருப்பினும், இந்த எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்துவது பெரிய மாற்றத்தை மறைக்கிறது. வருவாய் உபரிகளை மட்டும் பார்ப்பது மாநிலத்தின் கொள்கைகள், செயல்பாடு மற்றும் நிர்வாகத் தேர்வுகளுடன் சேர்த்து ஆராயப்படாவிட்டால் இது தவறாக வழிநடத்தும்.

வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் வழக்கமான செலவுகளைக் கட்டுப்படுத்துவதை பொருளாதார வல்லுநர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். இந்தச் செலவின முடிவுகள், ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு புதிய சுவாச ஆதரவுக் கருவிகள் கிடைக்கிறதா, ஒரு பள்ளி போதுமான ஆசிரியர்களை நியமிக்கிறதா, அல்லது ஒரு வருடத்தில் கிராமச் சாலைகள் பழுதுபார்க்கப்படுகிறதா என்பதை தீர்மானிக்கின்றன. இந்தியாவின் மாநிலங்கள் உலகின் மிகப்பெரிய நிதிநிலை அறிக்கைகள் சிலவற்றை நிர்வகிக்கின்றன. ஏனெனில், மாநிலங்களில் பல நாடுகளைவிட பெரியவை. அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வின் காரணமாக, அவை மத்திய அரசை விட சுகாதாரம் மற்றும் நலனுக்காக அதிகமாகச் செலவிடுகின்றன. ஆனால், ஒரு முக்கியமான கேள்வி எஞ்சியுள்ளது: மாநிலங்கள் தங்கள் செலவுகளை ஈடுகட்ட போதுமான அளவு வருவாய் ஈட்டுகிறாதா? அல்லது கடன் வாங்குவதை நம்பியுள்ளனவா?

சீரற்ற வருவாய்

2000ஆம் ஆண்டின் முற்பகுதியில், பல மாநிலங்கள் பெரிய பற்றாக்குறையை எதிர்கொண்டன. அவர்களின் வருவாயைவிட அதிகமாக செலவிட்டன. சீர்திருத்தங்கள், வலுவான வரிவசூல் மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை 2010-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சில பதிவு செய்யப்பட்ட உபரிகளையும் கூட மேம்படுத்த உதவியது. ஆனால், தொற்றுநோய் இந்தப் போக்கை மாற்றியது. அவசரகாலச் செலவுகள் அதிகரித்தபோது வரி வருவாய் சரிந்தது, பெரும்பாலான மாநிலங்களை மீண்டும் சிக்கலில் தள்ளியது. இன்று, நிலைமை மாறுகிறது. சில மாநிலங்கள் நிலையானதாகத் தோன்றுகின்றன. ஆனால், அவற்றின் வருமானத்தில் பெரும்பகுதி லாட்டரிகள், சுரங்கங்கள் அல்லது நில விற்பனை போன்ற நிச்சயமற்ற ஆதாரங்களைச் சார்ந்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்கள் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பது போலவே, மிகவும் மாறுபட்ட நிதி நிலைமைகளையும் கொண்டுள்ளன. 2022-23-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அதன் வருமானத்தில் கிட்டத்தட்ட 70%  சொந்தமாக திரட்டியது. அதே நேரத்தில், அருணாச்சலப் பிரதேசம் 9% மட்டுமே நிர்வகித்தது. உத்தரப் பிரதேசம் உபரியைக் கொண்டிருந்தது. ஆனால், அதன் வருவாயில் 42% மட்டுமே உள்நாட்டில் ஈட்டியது. இது மத்திய அரசின் நிதியை பெரிதும் சார்ந்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள் இதை செங்குத்து ஏற்றத்தாழ்வு (vertical imbalance) என்று அழைக்கிறார்கள். பணக்கார மாநிலங்கள் தாங்களாகவே நிதி திரட்டுகின்றன, அதே நேரத்தில் ஏழை மாநிலங்கள் டெல்லியை நம்பியுள்ளன.

2022-23ஆம் ஆண்டில் கேரளா தனது லாட்டரி தொழிலில் இருந்து கிட்டத்தட்ட ₹12,000 கோடியை ஈட்டியது. ஒடிசா அதன் வரி அல்லாத வருமானத்தில் 90% சுரங்க பங்குவீத உரிமை மூலம் பெற்றது.  மேலும், தெலுங்கானா ₹9,800 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்றது. ஆனால், இந்த ஆதாரங்கள் ஆபத்தானவை: இருப்பினும், லாட்டரிகள் விற்பனையையும், பங்குவீத உரிமைகள் உலகளாவிய விலைகளையும் சார்ந்துள்ளது. மேலும், நிலத்தை இரண்டு முறை விற்க முடியாது.

மொத்த வராக் கடன்கள்


CAG-யின் 10 ஆண்டு பகுப்பாய்வு அறிக்கையின் எண்களைப் பார்ப்போம். மாநிலங்கள் தங்கள் வருவாயைவிட அதிகமாகச் செலவிடும்போது, ​​அந்த இடைவெளியை ஈடுகட்ட கடன் வாங்குகின்றன. அவை முக்கியமாக கடன்கள் அல்லது பத்திரங்களைப் பயன்படுத்துகின்றன. அவை வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். CAG-யின் தணிக்கை செய்யப்பட்ட மாநில நிதி அறிக்கைகள் ஒருங்கிணைந்த தேசிய படத்தைக் கொடுக்கின்றன, அதே நேரத்தில் RBI-யின் மாநில நிதி: பட்ஜெட்டுகள் பற்றிய ஆய்வு அறிக்கை தரவை ஒப்பிடுவதற்கான ஒரு நிலையான வழியை வழங்குகிறது. இந்த அறிக்கைகள் அனைத்தும் சேர்ந்து, 2016-17 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் கடன் வாங்கும் முறைகள் கடுமையாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

அட்டவணை 1 ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் கோவா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது. ஆந்திரா தனது கடன்களை மூன்று மடங்கு அதிகரித்து ₹1.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பீகார் தனது கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளது. இது ஏழை மாநிலங்கள்கூட இப்போது கடனை ஒரு வழக்கமான கருவியாகப் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, கோவா தனது கடன்களைக் கட்டுப்படுத்தி எச்சரிக்கையாக இருந்தது. இருப்பினும், பொறுப்புகள் தரவு இந்த தேர்வுகளின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது: ஆந்திராவின் கடன் 2023ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 35% ஆக உயர்ந்தது. மேலும், பீகாரின் கடன் 39%-ஆக இருந்தது. இது இந்தியாவின் மிக உயர்ந்த கடன்களில் ஒன்றாகும். அசாமின் வேகமான கடன் வளர்ச்சியால் சமநிலைப்படுத்தப்பட்டது, அதன் பொறுப்புகள் GSDP-ல் 22%ஆகக் குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் கோவா 27% என்ற அளவில் இருந்தது. எனினும் இது ஒரு சிறிய மாநிலத்திற்கு  அதிகமானதாகும்.


அட்டவணை 2 குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கியது. இந்த மாநிலங்களில், கடன்கள் பல ஆண்டுகளாக சீராக அதிகரித்தன.


ஹரியானாவின் கடன்கள் 2016-17 ஆம் ஆண்டில் ₹28,170 கோடியிலிருந்து 2022-23-ஆம் ஆண்டில் ₹80,649 கோடியாகக் கடுமையாக உயர்ந்தன, இது பணக்கார மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். அதன் கடன்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 31% ஆக உயர்ந்தன. குஜராத்தின் கடன்கள் படிப்படியாக ₹27,668 கோடியிலிருந்து ₹52,333 கோடியாக உயர்ந்தன. அதே நேரத்தில் அதன் கடன் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 19-20% ஆக நிலையானதாக வைத்திருந்தன. மத்தியப் பிரதேசம் அதன் கடன்களை ₹29,847 கோடியிலிருந்து ₹58,867 கோடியாக இரட்டிப்பாக்கியது, கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 29% ஆக அதிகரித்தன.


தொற்றுநோய் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியது. 2020-21ஆம் ஆண்டில் கர்நாடகாவின் கடன்கள் ₹84,828 கோடியாக உயர்ந்தன. பின்னர் ₹44,549 கோடியாகக் குறைந்தன. ஆனால், அதன் பொறுப்புகள் இன்னும் GSDPயில் 28% க்கு அருகில் இருந்தன. கேரளாவின் கடன்கள் ₹69,735 கோடியாக உயர்ந்தன. பின்னர் ₹54,007 கோடியாகக் குறைந்தன. ஆனால், அதன் கடன் சுமை GSDPயில் சுமார் 37% ஆக அதிகமாகவே இருந்தது. சிறிய மாநிலங்கள் மிதமான எண்ணிக்கையைக் காட்டின. இமாச்சலப் பிரதேசத்தின் கடன்கள் GSDPயில் கிட்டத்தட்ட 48%-ஐ எட்டின. அதே நேரத்தில் ஜார்க்கண்டின் கடன்கள் ₹7,000 முதல் ₹13,500 கோடி வரை இருந்தன. இது நிலையான கடன் அளவு GSDPயில் சுமார் 27% ஆகும்.

இந்தக் குழுவில் உயர்ந்த மற்றும் குறைந்த போக்குகள் இரண்டும் உள்ளன. மகாராஷ்டிராவின் கடன்கள் 2018-19ஆம் ஆண்டில் ₹26,025 கோடியிலிருந்து 2020-21-ஆம் ஆண்டில் ₹1,18,516 கோடியாகக் கடுமையாக உயர்ந்தன. பின்னர் 2022-23-ஆம் ஆண்டில் ₹94,702 கோடியாகக் குறைந்தது. ஆனால் அதன் பெரிய பொருளாதாரம் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆக வைத்திருந்தது. பஞ்சாப் கடுமையான அழுத்தத்தில் இருந்தது. 2016-17ஆம் ஆண்டில் ₹83,627 கோடிக்கும் 2022-23ஆம் ஆண்டில் ₹89,544 கோடிக்கும் இடையில் கடன்கள் இருந்தன. மேலும், பொறுப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 45% ஆக உயர்ந்தன. ஒடிசா விதிவிலக்காக இருந்தது, சுரங்க வருமானம் காரணமாக கடன்கள் ₹11,223 கோடியிலிருந்து ₹5,347 கோடியாகக் குறைக்கப்பட்டன. இதனால் பொறுப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15% ஆகக் குறைக்கப்பட்டன. இது இந்தியாவின் மிகக் குறைவான சதவீதமாகும்.

மணிப்பூரின் கடன் ₹1,551 கோடியிலிருந்து ₹11,116 கோடியாகவும்; மேகாலயா ₹1,210 கோடியிலிருந்து ₹6,221 கோடியாகவும்; மிசோரம் ₹756 கோடியிலிருந்து ₹4,019 கோடியாகவும்; நாகாலாந்து ₹5,444 கோடியிலிருந்து ₹7,159 கோடியாகவும் அதிகரித்துள்ளது. தொகைகள் சிறியதாக இருந்தாலும், இந்த மாநிலங்கள் அதிக சுமைகளை எதிர்கொள்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% முதல் 60% வரை பொறுப்புகள் உள்ளன. இது அதிகரித்து வரும் நிதி சார்புகளைக் காட்டுகிறது.

அட்டவணை 4 ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை முக்கிய கடன் வாங்குபவர்களாக இருந்தன. ராஜஸ்தானின் கடன்கள் நான்கு மடங்கு உயர்ந்தன. அவை 2016-17-ஆம் ஆண்டில் ₹43,889 கோடியிலிருந்து 2022-23-ஆம் ஆண்டில் ₹1,60,565 கோடியாக உயர்ந்தது. இது நாட்டின் மிகப்பெரிய அதிகரிப்புகளில் ஒன்றாகும். மேலும், அதன் பொறுப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40%-ஆக உயர்ந்தன. தமிழ்நாட்டின் கடன்கள் ₹66,143 கோடியிலிருந்து ₹1,01,062 கோடியாக படிப்படியாக உயர்ந்தன. அதன் கடன் விகிதம் சுமார் 33% ஆக உயர்ந்தது. தெலுங்கானாவின் கடன்கள் ₹44,819 கோடியிலிருந்து ₹1,26,884 கோடியாக வளர்ந்தன. ஆனால், வலுவான வளர்ச்சி அதன் கடன்களை சுமார் 28%-இல் மிதமாக வைத்திருந்தது.

மேற்கு வங்கம் மிதமான வளர்ச்சியைக் காட்டியது. கடன்கள் ₹37,524 கோடியிலிருந்து ₹70,243 கோடியாக உயர்ந்தன. ஆனால், அதன் பொறுப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37% ஆக உயர்ந்தன. உத்தரப் பிரதேசம் 2016-17 ஆம் ஆண்டில் ₹67,685 கோடியிலிருந்து 2022-23-ஆம் ஆண்டில் ₹66,847 கோடியாகக் கடன்களைக் குறைத்து. கடன்களை சுமார் 31%-ல் நிலையாக வைத்திருந்தது. உத்தரகாண்டின் கடன்களும் ₹10,592 கோடியிலிருந்து ₹9,431 கோடியாகக் குறைந்தன. இருப்பினும், அதன் கடன்கள் GSDPயில் 32%-க்கும் அதிகமாக இருந்தன. திரிபுரா கடன்களை ₹1,140 கோடியிலிருந்து ₹877 கோடியாகக் குறைத்தது. ஆனால், இன்னும் கடன் சுமையை 30%-க்கும் அதிகமாகக் கொண்டிருந்தது. சிக்கிம் சிறியதாகவே இருந்தது, ₹2,100 கோடிக்கும் குறைவான கடன்களும் GSDP-ல் 24% கடன்களும் இருந்தன.

தொற்றுநோய் காலத்தில் எல்லா இடங்களிலும் கடன்கள் கடுமையாக உயர்ந்தன. ஆனால் அதன் பிறகு, போக்குகள் வேறுபட்டன: ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் கடன்களை அதிகரித்துக்கொண்டே இருந்தன; கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா அவற்றைக் குறைத்தன; மேலும் ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா போன்ற சில மாநிலங்கள் அவற்றை இன்னும் குறைத்தன. இது மிகவும் மாறுபட்ட நிதி உத்திகளைக் காட்டுகிறது.


பொதுநல முரண்பாடு

சில மாநிலங்கள் பட்ஜெட் உபரியைக் காட்டுகின்றன. ஆனால் உண்மையில், அவை மத்திய இடமாற்றங்கள், பட்ஜெட்டிற்கு வெளியே கடன்கள் மற்றும் தாமதமான ஜிஎஸ்டி இழப்பீடு ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளன. இந்த மாநிலங்களில் பல நலத்திட்டங்களுக்கு போதுமான அளவு செலவிடுவதில்லை. எனவே, அறிவிக்கப்பட்ட உபரிகள் உண்மையான வளர்ச்சி இல்லாமல் கணக்கியல் லாபங்களாக மட்டுமே இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பஞ்சாப் நீண்டகால கடனுடன் போராடுகிறது. கேரளா நிலையற்ற லாட்டரி வருவாயைச் சார்ந்துள்ளது. மேலும், ஆந்திரா மற்றும் உத்தரபிரதேசம் இலவச மின்சாரம், விவசாய தள்ளுபடிகள், உத்தரவாதங்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்கள் மூலம் செலவுகளை மறைக்கப்பட்ட அமைப்புகளுக்குள் தள்ளுகின்றன.

பெருநிறுவன வரி குறைப்புக்கள், ஜிஎஸ்டி கூடுதல்வரி மற்றும் சமூக செலவினங்கள்  போன்றவை உண்மையான சுமையை மறைத்து, நிதி ஒழுக்கத்தை பொய்யாகக் காட்டுகின்றன. சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றங்கள் மற்றும் அதிக வருவாய் இழப்புகள் எதிர்பார்க்கப்படுவதால், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கான மாநில செலவினங்களை இது எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இதில் பலவீனம் இருந்தபோதிலும், ஒன்றியத்தால் நிதியளிக்கப்படும் நலத்திட்டங்கள் பரவலாகப் பரவியுள்ளன: பிஎம்-கிசான் வைப்புத்தொகைகள், உஜ்வாலா எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் போன்றவை அரசியல் மேம்பாட்டின் சின்னங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆளும் கட்சியையும் அதன் தலைவரையும் நலத்திட்டங்களின் ஆதரவாளர்களாகக் காட்டுகின்றன.

இது இந்தியாவின் நலத்திட்ட முரண்பாட்டைக் காட்டுகிறது. அதன் வருவாய் அழுத்தத்தில் இருந்தாலும் நலத்திட்டங்களுக்கு மாநிலம் பெரிதும் செலவிடுகிறது. உலகின் மிகப்பெரிய நலன்புரி அமைப்புகளில் ஒன்றை இந்த நாடு கட்டமைத்துள்ளது. ஆனால், இது நடுத்தர வருமான நாடுகளில் பலவீனமான நிதி அடிப்படைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் கடன்களை அதிகமாகச் சார்ந்துள்ளது. இந்த முரண்பாடு, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தடுக்கும் நிதித் திறனுடன், அசாதாரண வாக்குறுதியை முன்வைக்கும் ஒரு தேசிய அரசை பிரதிபலிக்கிறது. மேலும், நிதிப் பற்றாக்குறையின் விளிம்பில் ஒரு பராமரிப்பு அமைப்பை உருவாக்க முயல்கிறது.

தீபன்சு மோகன் பேராசிரியர் மற்றும் தலைவர், O.P. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் (JGU), LSE மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர். கீதாலி மல்ஹோத்ரா மற்றும் அதிதி லாசரஸ், முறையே CNES, JGU உடன் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் இந்த கட்டுரைக்கு பங்களித்தனர்.

Original article:

Share: