விண்வெளி வீரர்கள் அழுத்தப்பட்ட உடைகளை ஏன் அணிகிறார்கள்? -உன்னிகிருஷ்ணன் நாயர் எஸ்.

 விண்கலத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஏன் வாகனங்களுக்கு இடையிலான செயல்பாட்டு உடைகளை (Inter vehicular activity (IVA)) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது?


பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன் திரள்களால் நிரம்பிய பரந்த பகுதியே விண்வெளி ஆகும். இந்த காற்றற்ற சூழலில், இங்குள்ள வாழ்க்கையிலிருந்து மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று வளிமண்டல அழுத்தம் இல்லாதது ஆகும்.


அழுத்தம் ஏன் முக்கியமானது?


வளிமண்டலம் என்பது பூமியைச் சுற்றி அதன் ஈர்ப்பு விசையால் பிடிக்கப்பட்ட ஒரு தடிமனான வாயு அடுக்காகும். இது தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. வெப்பநிலையை நிலையாக வைத்திருக்கிறது மற்றும் சுவாசிக்க தேவையான வாயுக்களை வழங்குகிறது. வளிமண்டல அழுத்தமானது சுமார் 20 டன் விசைக்குச் சமமாக நம் உடலை அழுத்துகிறது. ஆனால்,  நம் உடல் சமமான விசையுடன் மீண்டும் தள்ளுவதற்குப் பரிணாமம் அடைந்திருப்பதால், அதைச் சமன்செய்வதால் நமக்கு அது தெரிவதில்லை. நாம் மேலே செல்லச் செல்ல, வளிமண்டலம் மெல்லியதாகி அதன் அழுத்தம் குறைகிறது.


ஒரு மனித உடல் திடீரென வெற்றிடத்திற்கு ஆளாகும்போது, கொடிய விளைவுகளின் தொடர் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவற்றில் நீர்க் கொதிப்பு (குறைந்த அழுத்தத்தில் உடல் திரவங்கள் கொதித்தல்), அழுத்தம் தணிப்பு (விண்கலத்தில் வளிமண்டல அழுத்தம் விரைவாக இழக்கப்படுதல்), மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (ஹைபோக்ஸியா) ஆகியவை அடங்கும். வளிமண்டல அழுத்தம் இல்லாததால், நுரையீரல்களிலும் திசுக்களிலும் வாயுக்கள் வேகமாக விரிவடைந்து, சில வினாடிகளில் மயக்கத்தையும் சில நிமிடங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. 


விண்வெளி வீரர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள்?


விண்வெளிப் பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகச் சிறப்பு உடைகளை அணிவார்கள். விண்கலத்திற்கு வெளியே நடப்பதற்கும், வெளிப்புற பாகங்களைச் சரிசெய்வது மற்றும் பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கும் வெளி வாகனச் செயல்பாட்டு (Extra-vehicular activity (EVA)) உடைகள் அல்லது விண்வெளி உடைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 12-14 அடுக்குகளைக் கொண்டுள்ளன மற்றும் ஒரு தனிப்பட்ட விண்கலமாக செயல்படுகின்றன.  இது அணிந்திருப்பவரை விண்வெளியின் வெற்றிடம், கடுமையான வெப்பநிலை, கதிர்வீச்சு மற்றும் விண்வெளிக் குப்பைகளிலிருந்து பாதுகாக்கின்றன. ஒவ்வொரு வெளி வாகனச் செயல்பாட்டு உடையும் 100-130 கிலோ எடையுள்ளதாக இருக்கும் என்கின்றனர். அதேபோல், உள் வாகனச் செயல்பாட்டு (Inter vehicular Activity (IVA)) உடைகள் விண்கலத்திற்கு உள்ளே அணியப்படுகின்றன. மேலும், இதில் ஒரு விமான உடை (flight suit) மற்றும் ஒரு அழுத்த உடை (pressure suit) ஆகியவை அடங்கும். விமான உடை என்பது விமானிகள் மற்றும் விண்வெளி வீரர்களால் பொதுவாக அணியப்படும் ஒரு ஆடை ஆகும். இது முதன்மையாக தீயைத் தாங்கும் பண்புக்காகவும், அதிக உயரத்தில் ஏற்படும் கடுமையான வெப்பநிலை அல்லது குறைந்த அழுத்தம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. விண்வெளி வீரர்கள் பயிற்சியின் போது அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்திலோ பணிபுரியும் போது, விமான உடைகளைத் தங்கள் தினசரி சீருடையாக அணிந்து கொள்கிறார்கள்.


அழுத்த உடை என்பது அதிக உயரத்திலோ அல்லது விண்வெளியிலோ உள்ள மிகவும் குறைந்த அழுத்தச் சூழலிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு உடை ஆகும். இது முழு உடலையும் அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது, ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது. எனவே, இது ஒரு சாதாரண விமான உடையை விடவும் அதிக வலிமையானது. விண்கலன் ஏவுதல் மற்றும் மீண்டும் உள்நுழைதல் போன்ற அதிக ஆபத்துள்ள விண்வெளிப் பயணங்களின் போது, சாத்தியமான விண்கல அறை அழுத்தக் குறைவு (cabin depressurisation) மற்றும் அவசரநிலைகளிலிருந்து பாதுகாப்பதற்காக விண்வெளி வீரர்கள் அழுத்த உடைகளை அணிகிறார்கள். அழுத்த உடையானது மாதிரிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டது. மேலும், இதன் எடை சுமார் 8-10 கிலோகிராம் ஆகும். இது அடிப்படை அழுத்தம், சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன், காற்றோட்டம் மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை வழங்குகிறது.


1961-ஆம் ஆண்டில், விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரின், SK-1 எனப்படும் சிறப்பு உள் வாகனச் செயல்பாட்டு உடையை அணிந்திருந்தார். அமெரிக்காவும் ரஷ்யாவும் 8 முதல் 10 உள் வாகனச் செயல்பாட்டு உடை வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளன.


உள் வாகனச் செயல்பாட்டு உடை அணிவது கட்டாயமா?


1971-ஆம் ஆண்டு மேற்கொள்பட்ட சோயுஸ் 11 (Soyuz 11) பயணத்தில், பூமிக்குத் திரும்பும்போது மூன்று விண்வெளி வீரர்கள் இறந்தனர். குழுவின் இறங்கு கலமானது சுற்றுப்பாதை கலத்திலிருந்து பிரிந்தபோது, சுமார் 168 கி.மீ. உயரத்தில், அறையின் அழுத்தத்தைச் சமன் செய்ய வேண்டிய ஒரு காற்றோட்ட (vent) வால்வை விரைவில் திறந்துவிட்டது.  அது சரியாக மூடப்படாததால், காற்று வேகமாக வெளியேறி, விண்வெளி வீரர்களை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்தப் பேரழிவு சோவியத் விண்வெளி திட்டத்தில் பெரிய பாதுகாப்பு மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இதில் விண்கலங்களில்  ஏறும் போதும் இறங்கும் போதும் உட்புற வாகன செயல்பாட்டு உடைகள் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. இந்தப் பயணக் கட்டங்கள் துடிப்புமிக்கவை மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் அதிக புவி ஈர்ப்பு விசை (G-forces), திடீரென அறையின் அழுத்த இழப்பு, தீவிர வெப்பம் மற்றும் அதிர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதால் இவை அனைத்தும் தீவிர ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியன. 


2018ஆம் ஆண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோயுஸ் விண்கலம் ஏவப்பட்டபோது ஏற்பட்ட பூஸ்டர் பிரிப்பு தோல்வி ஏற்பட்டது. இதனால் ராக்கெட் கடுமையாகச் சுழன்றது. இதனால் அவசரகால நிறுத்தம் நிலை ஏற்பட்டது. சோகோல் கே.வி.-2 (Sokol KV-2) உடைகளை அணிந்திருந்த நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் (Nick Hague) மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினின் (Aleksey Ovchinin) ஆகியோர் அதிக புவி ஈர்ப்பு விசையைத் தாங்கிக்கொண்டு கஜகஸ்தான் ஸ்டெப்பிப் (Kazakh steppe) பகுதியில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர். அந்த உடைகள் அவர்கள் உயிர் பிழைப்பில் முக்கியப் பங்கு வகித்தன என்று கூறப்படுகிறது.


ககன்யான் எந்த உள்வாகனச் செயல்பாட்டு உடையை  பயன்படுத்துகிறது?



இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானில், 'ககன்யாத்ரிகள்' (விண்வெளி வீரர்கள்) ரஷ்யாவின் ஸ்வெஸ்டா (Zvezda) தயாரித்த சோகோல் கேவி2 (Sokol KV2) உடையைப் பயன்படுத்தவுள்ளனர். இந்த உடையானது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. காற்றினை அடைத்து வைக்கும் வகையிலான இரப்பராலான பாலிகப்ரோலாக்டம் (polycaprolactam) உள் அழுத்தக் குமிழி (inner pressure bladder) மற்றும் கட்டமைப்பு ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்காக வெள்ளை நைலான் கேன்வாஸ் கொண்ட வெளித் தடுப்பு அடுக்கு (outer restraint layer). பல விண்வெளி வீரர்கள் சோகோல் உடையை அணிந்துள்ளனர். மேலும், இது 128-க்கும் மேற்பட்ட சோயுஸ் (Soyuz) குழுப் பயணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரஞ்சு போன்ற பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்தும் சில உள்வாகனச் செயல்பாட்டு (Intravehicular Activity) உடைகளைப் போலன்றி, சோகோல் உடையானது மிகவும் நடுநிலையான வண்ணத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரதிபலிக்கும் அல்லது மாறுபட்ட கூறுகள் உள்ளன.  நீர் அல்லது நிலம் போன்ற பல்வேறு சூழல்களில் தரையிறங்கிய பின் மீட்பு போன்ற அவசர காலங்களில், விண்வெளி வீரர்கள் தெளிவாகத் தெரியும்படி செய்கிறது. 


ககன்யாத்ரிகள் விண்வெளியில் உள்ளதைப் போன்ற உருவகப்படுத்தப்பட்ட நுண்-ஈர்ப்பு (simulated microgravity) நிலைமைகளில் சோகோல் உடையை அணிவதற்கும் கழற்றுவதற்கும் விரைவாகப் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த எடையற்ற சூழலானது ஒரு விமானத்தை பரவளையப் பாதையில் (parabolic trajectory) பறக்கவிடுவதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த விமானப் பாதை குறுகிய கால இடைவெளிகளை (free fall) உருவாக்குகிறது. அப்போது பயணிகளால் ஒவ்வொரு பரவளையப் பாதைக்கும் 20-30 வினாடிகளுக்கு எடையற்ற தன்மையை உணர முடியும். இந்த 'சோகோல்' விண்வெளி உடை (Sokol suit) அத்தியாவசியமான பாதுகாப்பை உறுதி செய்தாலும், இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் உள்ள ஒரு முக்கிய கட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது, இந்தியா தற்சார்பான மனித விண்வெளிப் பயணத் திறனை அடையும் இலக்கைத் தொடரும் அதே வேளையில், உலகளாவிய நிபுணத்துவத்தையும் அறிவையும் பயன்படுத்துகிறது.



உன்னிகிருஷ்ணன் நாயர் எஸ். அவர்கள் விக்ரம் சாறாபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre (VSSC)) முன்னாள் இயக்குநராகவும், மனித விண்வெளிப் பயண மையத்தின் (Human Space Flight Centre (HSFC))  நிறுவன இயக்குநராகவும் இருந்தவர்.



Original article:

Share:

அரிதான பூமி கருதுகோளின் நிலை என்ன? -வாசுதேவன் முகுந்த்

 கெப்ளர் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள், வாழக்கூடிய மண்டலங்களில் உள்ள பூமி அளவுள்ள கோள்கள் முன்பு நினைத்ததை விட அரிதானவை அல்ல என்று குறிப்பிட்டாலும், சிக்கலான வாழ்க்கைக்குத் தேவையான நிலைமைகள் இன்னும் அசாதாரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.


அரிய பூமி கருதுகோள் (The Rare Earth Hypothesis) புதைபடிவவியல் அறிஞர் பீட்டர் வார்ட் மற்றும் வானியலாளர் டொனால்ட் பிரவுன்லீ ஆகியோரால் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தில் முன்மொழியப்பட்டது. பிரபஞ்சத்தில் எளிமையான, நுண்ணுயிர் வாழ்க்கை பொதுவானதாக இருக்கலாம். ஆனால், சிக்கலான, பல செல் உயிர்கள் அரிதானதாகவே இருக்கும் என்று வாதிடுகிறது. விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியான பல நிலைமைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமே இந்த யோசனை வேரூன்றியுள்ளது என்கின்றனர்


வாழ்க்கையைப் பற்றி நாம் அடிக்கடி எளிமையான (எ.கா. பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்) முதல் சிக்கலான (எ.கா. மனிதர்கள் மற்றும் ஆக்டோபஸ்கள்) வரை பேசினாலும், வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான நிகழ்வு மற்றும் பல காரணிகள் சரியான இடத்தில் இருப்பதன் விளைவாகும். பூமியிலேயே இந்தக் காரணிகளைப் படிப்பது கடினமானது மற்றும் இப்போதும் முடிக்கப்படாத பணியாக உள்ளது.  மேலும், பல ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கிரகங்களில் அவற்றைத் தேடுவது சவாலான ஒன்றாகவே உள்ளது. மற்ற கிரகங்களில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் படிக்கும் விஞ்ஞானிகள் காலப்போக்கில் குறிப்பிட்ட அம்சங்களில் அம்சங்களில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். சிலர், புரவலன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் மேற்பரப்பு நீரைக் கொண்ட பாறை உலகம் போன்ற கிரக கூறுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்ற விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ராட்சத கிரகங்கள் போன்ற அமைப்பு-நிலை கட்டமைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் நீண்டகால காலநிலை ஒழுங்குமுறை மற்றும் நிலையான வளிமண்டலத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


2000-ஆம் ஆண்டு முதல், வெளிப்புறக் கோள்கள் மற்றும் கோள் அறிவியல் பற்றிய கணிசமான அளவு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.  வாழ்க்கைக்குத் தேவையான பல நிலைமைகள் விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் அஞ்சியதை விடக் குறைவான கட்டுப்பாடுகளைக் கொண்டதாகத் தோன்றுகின்றன. அதே நேரத்தில், மற்ற பல நிபந்தனைகள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் கடினமானதாகத் தோன்றுகின்றன.


ஒரு  கோளைப் புரிந்துகொள்வது


உயிர்கள் வாழ்வதற்கு உகந்த பூமி அளவுள்ள கோள்கள் எவ்வளவு அடிக்கடி உருவாகின்றன என்று பார்க்கலாம். நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி 2009-2018 காலக்கட்டத்தில் வழங்கிய ஆரம்பத் தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகள், பால்வெளி மண்டலத்தில் உள்ள சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் குறிப்பிடத்தக்க பகுதியானது, பூமி பெறும் சூரிய ஒளியுடன் ஒப்பிடக்கூடிய ஒளியைப் பெறும் சிறிய கோள்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. ஒரு ஆய்வில், சூரியனைப் போன்ற நட்சத்திரங்களில் ஐந்தில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் தங்கள் வாழ்விட மண்டலங்களில் (habitable zones) பூமி அளவுள்ள கோள்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்தத் தரவுகளில் பல நிச்சயமற்ற தன்மைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


சமீபத்திய ஆய்வுகள், கெப்ளர் தரவுகளின் அடிப்படையில், GK dwarf நட்சத்திரங்கள் எனப்படும் நட்சத்திரங்களின் வாழ்விட மண்டலங்களில் பாறைக் கோள்கள் உருவாகும் விகிதம் புறக்கணிக்க முடியாதது என்கிற முடிவுக்கு வந்துள்ளன. அது போன்ற பிற கண்டுபிடிப்புகளும், பொருத்தமான நட்சத்திரத்திலிருந்து ஏறக்குறைய சரியான தூரத்தில், சரியான அளவில் உள்ள உலகங்கள் அரிதானவை அல்ல என்று முடிவுக்கு வந்துள்ளன. இதனால், இந்தக் கருதுகோளில் உள்ள மிக ஆழமான கூற்றும் பலவீனமடைகிறது. எனவே, கேள்வி 'ஒரு கோள் எங்கே இருக்கிறது' என்பதில் இருந்து 'ஒரு கோள் எப்படிப்பட்டது' என்பதற்கு மாறியுள்ளதாகத் தெரிகிறது. சூரிய குடும்பத்தில், புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ்வதற்கேற்ற தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதே சமயம், புளூட்டோ (Pluto) மிகத் தொலைவில் உள்ளது. பூமி மற்றும் வெள்ளி (Venus) ஆகிய இரண்டும் சூரியனின் வாழ்விட மண்டலத்தில் இருந்தாலும், வெள்ளியின் வளிமண்டலம், பூமியைப் போன்று உயிர்கள் அங்கு வாழ்வதற்கு ஆபத்தானதாக ஆக்குகிறது.


குளிர்ந்த மற்றும் சுறுசுறுப்பான M-dwarf நட்சத்திரங்களைச் சுற்றி வரும் சிறிய கோள்கள் தங்கள் வளிமண்டலத்தையும் மேற்பரப்பு நீரையும் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக வைத்திருக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான பதிலளிக்கப்படாத கேள்வியாகும். M-dwarf நட்சத்திரங்களின் வலுவான கதிர்வீச்சுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளாக வெளிப்படும் கோள்கள் பெரும்பாலும் தங்கள் தண்ணீரை இழந்து ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலங்களை உருவாக்குகின்றன.


M-dwarf நட்சத்திரத்தில் இருந்து வரும் தீவிர புற ஊதா கதிர்வீச்சு (ultraviolet radiation) கோளின் மீதுள்ள நீர் மூலக்கூறுகளை உடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்: H2O → H+ + OH–. மேலும், உடைவதால் O மற்றும் H அணுக்கள் வளிமண்டலத்தில் குவிகின்றன. காலப்போக்கில், O அணுக்களை விட H அணுக்கள்  விண்வெளிக்கு எளிதாகத் தப்பிச் செல்கின்றன. மீதமுள்ள O அணுக்கள் இணைந்து O2 அணுக்களை உருவாக்குகின்றன. இந்த ஆக்ஸிஜனை விரைவாக உறிஞ்சக்கூடிய மேற்பரப்பு 'உறிஞ்சிகள்' (surface 'sinks') போதுமான அளவில் இல்லாவிட்டால் — பூமியில் பாறைகள் மற்றும் கடல்கள் செய்வது போல O2 குவியும். ஒரு தொலைநோக்கி இந்த கோளைப் பார்த்து, அதன் வளிமண்டலத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜனைக் கண்டால், அந்தக் கோளின் மேற்பரப்பில் ஒளிச்சேர்க்கை (photosynthesis) இருப்பதாக விஞ்ஞானிகள் நினைக்க வாய்ப்புள்ளது. இதுதான் பூமியின் வளிமண்டலத்தில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதற்கான காரணம். ஆனால் உண்மையில் இது M-dwarf நட்சத்திரத்தின் கதிர்வீச்சால் நிகழ்கிறது என்பதை அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்துகின்றனர். 


மறுபுறம், பெரும்பாலான கோள்களால் முடியாவிட்டாலும், M-dwarf நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள சில கோள்கள் தங்கள் காற்றை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்கின்றன. நட்சத்திரத்தின் காந்தப் பாய்வுகள் (magnetic outflows) அதன் காந்தப்புலத்தால் நட்சத்திரத்திலிருந்து வீசப்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களின் நீரோடைகள்  பலவீனமாகவோ அல்லது கோளைக் கடுமையாகத் தாக்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தாலோ, கோள் தொலைவில் மற்றும் குளிர்ச்சியாக இருந்தாலோ, அதன் வளிமண்டலம் மெதுவாக அரிக்கப்படும் வாய்ப்புள்ளது.  ஒரு வலுவான கோள் காந்தப்புலமும் நட்சத்திரக் காற்றின் ஒரு பகுதியைத் திசை திருப்பலாம். அதே சமயம், தொடர்ச்சியான எரிமலை செயல்பாடு கொண்ட ஒரு பெரிய கோள் இழந்த சில வாயுக்களை மாற்றீடு செய்யவும்  வாய்ப்புள்ளது என்கின்றனர்.


இவை அனைத்தும் கோள் மண்டலத்திற்குத் தனித்துவமான நிலைமைகளாகும். இதற்கு நட்சத்திர செயல்பாடு, காந்தப்புலங்கள், சுற்றுப்பாதை, கோளின் நிறை, சுழற்சி மற்றும் உள் வெப்பம் ஆகியவற்றின் ஒரு குறிப்பிட்ட கலவை தேவைப்படுகின்றது. அவை அனைத்தும் சரியாக இணையும் போது, ஒரு கோள் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குத் தனது வளிமண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்கின்றனர். இருப்பினும், இதுபோன்ற கோள்கள் கண்டறிந்த வரையில் சிறிய அளவிலேயே உள்ளன. ஏனெனில் M-dwarf  நட்சத்திரங்கள் பெரும்பாலும் வலுவான தீப்பிழம்புகளை உருவாக்குகின்றன. மேலும், அருகில் உள்ள பல கோள்களுக்கு வலுவான காந்தக் கேடயங்கள் வலுவானதாக இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


விஞ்ஞானிகள் இந்த அவதானிப்புகளை இன்று நேரடியாகச் சோதிக்க முடியும். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் (James Webb Space Telescope (JWST)) பயன்படுத்தி, வானியலாளர்கள் அருகிலுள்ள பாறைக் புறக்கோள்களிலிருந்து (exoplanets) வெளியாகும் வெப்பத்தை அளவிடத் தொடங்கியுள்ளனர். 40.7-ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, அதன் மண்டலத்தின் வாழ்விட மண்டலத்தின் உள் விளிம்பிற்கு அருகில் அமைந்துள்ள இடமாற்றம் செய்யும் கோள்கள் மற்றும் சிறிய கோளவிடுக்களின் சிறிய தொலைநோக்கியில் ((TRAnsiting Planets and PlanetesImals Small Telescope (TRAPPIST-1c)), கார்பன் டை ஆக்சைடு நிறைந்த தடிமனான வளிமண்டலத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope (JWST)) நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வழங்கிய தரவைப் பயன்படுத்திய விஞ்ஞானிகள், உள் விளிம்பில் உள்ள இடமாற்றம் செய்யும் கோள்கள் மற்றும் சிறிய கோளவிடுக்களின் சிறிய தொலைநோக்கி (TRAnsiting Planets and PlanetesImals Small Telescope (TRAPPIST-1b)) கோளுக்கு கணிசமான வளிமண்டலம் இல்லாதிருப்பதைக் கண்டறிந்தனர்.


இவை, ஒரே மண்டலத்தில் உள்ள இரண்டு உலகங்கள் மட்டுமே. ஆயினும், அவை 'பூமி அளவுள்ள' என்பது 'பூமி போன்றது' என்பதற்கு ஒத்ததாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. பூமி போன்ற உயிர்கள் நிலைத்திருக்கக்கூடிய இடங்களில், வளிமண்டலங்கள் எவ்வளவு அடிக்கடி நிலைத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, விஞ்ஞானிகளுக்கு இன்னும் குளிர்ச்சியான, மிதமான கோள்களின் அளவீடுகள் தேவைப்படுகிறது. 


காலநிலை நிலைப்படுத்தல்


அரிய பூமி கருதுகோளின் (rare earth hypothesis) மற்றொரு தூண் நீண்ட கால காலநிலை நிலைப்படுத்தல் ஆகும். பூமியில், கண்டப் பாறைகளின் சிதைவு மற்றும் பூமியின் உட்பகுதிக்கும் வளிமண்டலத்திற்கும் இடையில் உள்ள கார்பன் சுழற்சி ஆகியவை புவியியல் காலத்தில் காலநிலையைப் பாதுகாத்து வந்துள்ளன. இந்தக் காப்பீட்டுக்கு (buffering) பல ஆராய்ச்சியாளர்கள், கார்பனேற்றப்பட்ட மேலோட்டைக் கீழே தள்ளி புதிய மேற்பரப்புப் பாறைகளை உருவாக்கும் தட்டுப் புவிப்பொறையியலை (plate tectonics) காரணமாகக் கூறுகின்றனர். இருப்பினும், கோள்களின் உட்புறங்கள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. பாறைக் கோள்கள் (Rocky planets) அரிதாகவே அசையும் ஒரு கடினமான ஓட்டைக் கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலங்களுக்குப் பிறகு மேலோட்டு அசைவின் குறுகிய வெடிப்புகள் இருக்கலாம், அல்லது (பூமியில் உள்ளது போல) தட்டுப் போன்ற புவிப்பொறையியலைக் கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். ஒரு கோள் காலப்போக்கில் இந்த முறைகளுக்கு இடையில் கூட மாற வாய்ப்புள்ளது.  நவீன தட்டுப் புவிப்பொறையியல் இல்லாவிட்டாலும் கூட, எரிமலைச் செயல்பாடு (வாயுக்களைச் சேர்க்கிறது), சிதைவு (வாயுக்களை நீக்குகிறது), புதைப்பு (பொருட்களைப் பிடித்து வைக்கிறது), மற்றும் மேலோட்டுக் கரைதல் (crustal foundering - மேலோட்டைக் கீழே மூழ்குதல்) ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதன் மூலம் ஒரு கோள் உயிர்கள் வாழக்கூடிய காலநிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சில மாதிரிகள் காட்டுகின்றன. இது குறித்து,  விஞ்ஞானிகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. தட்டுப் புவிப்பொறையியல் நிலையான காலநிலையைப் பராமரிக்க உதவகின்றன. இது சிக்கலான உயிர்களை ஆதரிக்க முடியும் என்றாலும், அது உயிர்கள் தோன்ற கண்டிப்பாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கவும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர். 




பூத கோள்களின் பங்கு


மூன்றாவது விவாதம், வியாழன் போன்ற பிரமாண்டமான கோள்களின் பங்கைப் பற்றியதாக உள்ளது. பூர்வீகமாக, வியாழன் போன்ற கிரகங்கள் வால்மீன்கள் மற்றும் சிறுகோள்களைத் திசைதிருப்பி பூமியைப் ‘பாதுகாக்கின்றன’ என்ற கருத்து நிலவியது.  இருப்பினும், பிற்கால ஆய்வுகள் இந்தக் கதையைச் சிக்கலாக்கியுள்ளன. ஒரு ராட்சத கிரகத்தின் நிறை (mass) மற்றும் சுற்றுப்பாதையைப் (orbit) பொறுத்து, அது உள் அமைப்பை நோக்கி வரும் மோதல்களின்  வேகத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும் என்றும், மேலும் ஆரம்ப காலத்தில் நீர்த்தன்மை நிறைந்த விண்கலங்களைத் (water-rich bodies) தரவும் முடியும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முன்னணியில் உலகளாவிய 'பொதுவான ‘வடிகட்டி’ (universal ‘filter’) இல்லை என்று தெரிகிறது. இவை அனைத்தும் அமைப்பின் கட்டமைப்பைப் பொறுத்தது. இந்த முடிவு, ஒரு அமைப்பில் பாறையாலான கோளில் சிக்கலான உயிர் உருவாக, வியாழன் போன்ற கிரகம் அத்தியாவசியமான ஒன்று  என்ற கூற்றை பலவீனப்படுத்தியுள்ளது.


இதன் விளைவாக, சிறிய, மிதமான வெப்பநிலைக் கோள்களைக் கண்டறிவது என்ற கேள்விக்கு, இன்று பல விஞ்ஞானிகள் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் வாழக்கூடிய மண்டலங்களில் பூமி அளவுள்ள கோள்கள் தோன்றும் வீதம் (occurrence rate) முற்றிலும் இல்லை என்றில்லாமல், கெப்ளர் தரவுகளின்படி, வரையறைகள் மற்றும் விரிவாக்கங்களைப் பொறுத்து,  பத்து சதவீதமாக இருக்கலாம் என்றும் வாதிடுகின்றனர். இது, பூமியின் அடிப்படை சுற்றுப்பாதை மற்றும் அளவு கட்டமைப்பு மிகமிக அசாதாரணமானது  என்ற கருத்தை தகர்க்கிறது. மறுபுறம், கோள்களின் வளிமண்டலங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன், நீண்ட காலநிலைக் காலச்சுழற்சிகளைக் கொண்டிருத்தல், பேரழிவு தரும் நிகழ்வுகளைத் தவிர்க்கும் திறன் போன்ற கேள்விகளுக்கு, தரவுகள் மிகவும் நம்பிக்கையுள்ளதாக மாறியுள்ளன. சிக்கலான உயிர்க்கோளங்களை (complex biospheres) ஆதரிக்கும், உண்மையான, பூமி போன்ற மேற்பரப்புச் சூழல்கள், வாழக்கூடிய மண்டலத்தில் உள்ள பூமி அளவுள்ள கோள்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை இந்த முடிவுகள் ஏற்படுத்துகின்றன. 


உறுதியானதல்ல


அரிய மற்றும் பொதுவான விவாதத்தில் இன்னும் இரண்டு கருத்துகள் உள்ளன. முதலாவதாக, பூமி போன்ற கோள்களின் எண்ணிக்கைக்கு ஓர் உச்ச வரம்பை நிர்ணயிக்க சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி, விஞ்ஞானிகளால் இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்ய முடியாத வளிமண்டல செயல்முறைகளைச் சார்ந்து நிறைய உள்ளது என்பதை வலியுறுத்தியது. 


இரண்டாவதாக, தொழில்நுட்ப அடையாளங்களுக்கான (technosignatures) தேடல்கள், வேற்று கிரக உயிரினங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அறிகுறிகள், குறிப்பாக இயற்கை தானாகவே உருவாக்க வாய்ப்பில்லாத விஷயங்கள் - ரேடியோ அலைகளை வெளியிடும் செயல்பாடுகளின் நாகரிகங்களின் பரவலின் வரம்புகளைக் கூர்மைப்படுத்தியுள்ளன. இதில் பூமியில் 'ரேடியோ-சத்தமான' செயல்பாடுகளில் டிவி மற்றும் வானொலி மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கான ஒளிபரப்பு அடங்கும். 


பிரேக்த்ரூ லிசன் திட்டத்தின் (Breakthrough Listen project) மூலம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் பல ஆண்டு ஆய்வுகள் இதுவரை எந்த தெளிவான சமிக்ஞைகளையும் கண்டுபிடிக்கவில்லை.  ஒன்றும் கண்டறியப்படவில்லை என்பதனால் அது இல்லை என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், அது அண்டத்தில் எவ்வளவு பொதுவானதாக இருக்க முடியும் என்பதற்கான உச்ச வரம்புகளை இது நிர்ணயிக்கிறது என்கின்றனர்.


இவற்றை ஒருங்கே எடுத்துக்கொண்டால், அரிய பூமி கருதுகோள் (Rare Earth Hypothesis) சிக்கலான உயிரினங்களுக்கு இன்றும் சாத்தியமானதாகவே உள்ளது. ஆனால், அது நிரூபிக்கத்தக்க வகையில் உண்மை என்று கூற முடியாது. இந்தத் தருணத்தில், மூன்று வளர்ச்சிகள் இந்த நிலையை மாற்றக்கூடும்:


(i) பாறை நிறைந்த, மிதமான கோள்களின் வளிமண்டலங்களில், முன்னுரிமையாக சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றி, செயலில் உள்ள மேற்பரப்பு நீர் சுழற்சிகளுக்கு இசைவான வாயுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தால்; 


(ii) விஞ்ஞானிகள், புறக்கோள்களில் உள்ள புவி ஓடு நகரும் அமைப்புகள் (tectonic regimes) குறித்து (மறைமுகமாக இருந்தாலும்) மேலும் வலுவான, சிறந்த கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால், இதன் மூலம் நீண்ட கால காலநிலை நிலைப்படுத்திகள் பரவலாக உள்ளதா அல்லது அரிதாக உள்ளதா என்பதைக் குறிக்கும்; மற்றும்


(iii) விஞ்ஞானிகள் உயிர் அடையாளங்கள் (biosignatures) அல்லது தொழில்நுட்ப அடையாளங்களைக் (technosignatures) கண்டறிந்தால். 


முதல் கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தற்போது கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய நிலத்தொலைநோக்கிகள் மற்றும் எதிர்கால விண்வெளிப் பயணங்கள் மிதமான வளிமண்டலம் கொண்ட கோள்களையே  நேரடி இலக்காகக் கொண்டுள்ளன.


இருப்பினும், அவர்களின்ஆய்வுகள் முதிர்ச்சியடையும் வரை, ஒரு நியாயமான சுருக்கம் இதுதான்: நுண்ணுயிர் வாழ்க்கை பொதுவானதாக இருந்தாலும், நிலம் மற்றும் கடலைத் தழுவி, சிக்கலான உயிரினங்களை உருவாக்கக்கூடிய நீண்ட கால சுற்றுச்சூழல் அமைப்புகள் இன்னும் அரிதான ஒன்றாகவே இருக்கலாம். இந்த தரவுகளால் இன்று நாம் அறியக்கூடிய மிக அதிகபட்ச தகவல் இதுதான் என்றும் தெரிவிக்கின்றனர்.



Original article:

Share:

குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தடயவியல் நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்? -ஷமிம் ஹக் மொண்டல்

 குண்டுவெடிப்பு அல்லது வெடிப்புச் சம்பவங்களில் தடயவியல் நிபுணர்களின் முதன்மையான பணி என்ன? ஒரு வெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது விபத்தா என்பதை அவர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்? சம்பவ இடத்திலிருந்து அவர்கள் சேகரிக்கும் மாதிரிகளில் அவர்கள் மேற்கொள்ளும் சில சோதனைகள் யாவை? தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் பல பிரிவுகள் இணைந்து செயல்படுகின்றனவா?


கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  புது டெல்லியில் உள்ள செங்கோட்டை வளாகம் அருகே ஒரு பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. வளாகத்தின் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  i20  கார் வெடித்ததில், அருகில் இருந்த பல கார்கள், பேருந்துகள் சேதமடைந்தன. மேலும், தற்போது வரை, 13 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


தடயவியல் நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்?


டெல்லி தடயவியல் ஆய்வகத்தின் வெடிபொருள் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், காவல்துறையினருடன் சம்பவ இடத்துக்கு அரை மணி நேரத்திற்குள் வந்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் தடயவியல் நிபுணர்களின் முதன்மையான வேலை, அறிவியல் கண்ணோட்டத்தில் காரணத்தை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்கின்றனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளத்தை அறிவியல் அடிப்படையில் சரிபார்க்கவும், அவர்கள் தேவையான மாதிரிகளைச் சேகரித்து, விரைவான ஆய்வக சோதனைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.


தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரிப்பதாகப் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எந்தவொரு திறமையான தடயவியல் நிபுணருக்கும், அந்த இடம் ஏராளமான தகவல்களை வழங்குகிறது. இருப்பினும், ஒரு வெடிப்பு என்பது மற்ற குற்றங்களிலிருந்து வேறுபட்டது. இங்கு அனைத்தும் ஒரு நொடியில் சிதறுண்டு போகிறது. வெடிப்புகள் தீவிரமான அழுத்தம் மற்றும் வெப்பத்தை உருவாக்குவதால், சம்பவ இடத்தில் உள்ள அனைத்தும் சாம்பலாகிவிடுகின்றன. இதனால், நிபுணர்களின் பணி மேலும் கடினமாகிறது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்கிறார்கள். லோக்கார்ட்டின் கொள்கை (Locard’s principle) என்ன கூறுகிறது என்றால், ஒரு குற்றவாளி சம்பவ இடத்தில் ஏதோ ஒன்றை விட்டுச் செல்வான், மற்றும் வரும்போது ஏதோ ஒன்றைத் தன்னுடன் எடுத்து வருவான் என்று குறிப்பிடுகிறது. தடயவியலில் இவை இரண்டும் சாட்சியங்களாகச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சந்தேக நபரைச் சம்பவ இடத்துடன் இணைக்கும் ஒரு மாதிரி இருக்க வேண்டும். அதன் மூலம் வெடிப்பின் தீவிரம், ஆதாரம், மற்றும் என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் ஊகிக்க முடியும் என்கின்றனர்


புகைப்படக் கலைஞர்களும் சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் இருந்து தளத்தின் படங்களை எடுக்கிறார்கள். மேலும், நிபுணர்கள் அதற்கான ஒரு வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். இவை பல்வேறு பகுப்பாய்வு நிலைகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகின்றன. இவற்றுடன், சம்பவ இடத்தில் இருந்து எரிந்த பல்வேறு துண்டுகள் (இவற்றை நிபுணர்கள் எச்சங்கள் (debris) என்று அழைக்கிறார்கள்), உடைந்த காரின் பாகங்கள், கார்பன் தூள் போன்றவையும் சேகரிக்கப்படுகின்றன. இந்த மாதிரிகள் பின்னர் வெடிபொருள் நிபுணர்களால் ஆய்வகத்தில், பயன்படுத்தப்பட்ட வெடிபொருளுக்கான இரசாயனங்களின் வகையைத் தீர்மானிக்க, ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் (spectroscopic) மற்றும் குரோமடோகிராஃபிக் (chromatographic) நுட்பங்களைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.


சம்பவம் நிகழந்த இடத்தை ஆய்வு செய்யும்போது, ஏதேனும் மின்னணு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிவது அவசியமாகிறது.  ஏனெனில், ரிமோட் கண்ட்ரோல் வெடிப்புகளில், பொதுவாகச் சிறந்த செயல்பாட்டு நுட்பமான ஆட்டோ-டைமர் (auto-timer) பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், டெல்லி சம்பவத்தில் டைமர் (timer) அல்லது மின்னணு சுற்றோ (electronic circuit) எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.


என்ன மாதிரியான சோதனைகள் செய்யப்படுகின்றன?


ஆரம்பத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்த பிறகு, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த நேரத்தை நன்கு புரிந்துகொள்ள நிபுணர்கள் குற்றம்  நிகழந்த இடத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக, நிபுணர்கள் Fourier Transform Infrared Spectroscopy (FTIR) ஆய்வு மற்றும் Attenuated Total Reflectance – Fourier Transform Infrared Spectroscopy (ATR-FTIR) ஆய்வு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இந்தச் சோதனைகளில், தடயவியல் நிபுணர்கள் (forensic experts) சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எவ்வாறு அகச்சிவப்பு ஒளியுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைக் கண்டறிய spectrum of the absorbed light பகுப்பாய்வு செய்கின்றனர்.


வெடிபொருட்களின் இரசாயன கலவை குறிப்பிட்ட துறைக்குரிய ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பியைப் (Raman spectroscopy) பயன்படுத்தி கண்டறியப்படுகிறது. வெடிப்புக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட துண்டுகளின் உருவ அமைப்பைப்  பகுப்பாய்வு செய்ய Advanced Scanning Electron Microscopy SEM பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம், எச்சங்களின் அடிப்படை பகுப்பாய்விற்காக Energy Dispersive X-ray - EDX நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிபொருட்கள் பற்றிய இரசாயன செயல்பாடு மற்றும் நிலைத்தன்மை போன்ற தகவல்களைத் தீர்மானிக்க விஞ்ஞானிகள் வெப்பப் பகுப்பாய்வையும் (thermal analysis) பயன்படுத்துகின்றனர்.


கூடுதலாக, எந்தவொரு வெடிப்பிலும் தீ ஒரு முக்கிய காரணியாகின்றது. அது எவ்வாறு பரவுகிறது, எவ்வளவு தூரம் பரவுகிறது, மற்றும் தீயினால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஆகியவை அனைத்தும் புள்ளிவிவரத் தரவுகளைச் சார்ந்துள்ளன. அதனால் தான், தீயின் மூலத்தையும், தீ இவ்வளவு அதிகமாகப் பரவக் காரணமான எந்தவொரு எரியக்கூடிய பொருளின் இருப்பையும் கண்டறிய நிபுணர்கள் லேசர் அடிப்படையிலான நிகழ்விட வரைபடமாக்கம் (laser-based scene mapping), flashpoint testing போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அது ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா  என்பதை நிபுணர்கள் தீர்மானிக்கின்றனர்.


வெடிபொருள் நிபுணர்கள் மட்டும்தான் இதில் ஈடுபட்டுள்ளார்களா?


தற்போதைய சம்பவத்தில், வாகனங்களின்  பங்கு மிக முக்கியமானது. எனவே, தாக்குதலில் ஈடுபட்டவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர, காரில் யாரேனும் ஏறியுள்ளார்களா அல்லது இறங்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, காரின் சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்ய ஒரு சைபர் தடயவியல் நிபுணரின் பங்கு அவசியாமகிறது.


மீண்டும், ஏதேனும் ஒரு விபத்தில், குறிப்பாக வெடிகுண்டு போன்ற திட்டமிட்ட கொடூரமான குற்றங்களில், குற்றச் செயலுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் கார்களின் எஞ்சின் எண் மற்றும் சேஸ் (வாகனத்தின் மற்ற பாகங்கள் பொருத்தும் உலோகச் சட்டகம்) எண் மாற்றப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.  எனவே, பொதுவாக எட்சிங் (etching) என்று அழைக்கப்படும் ‘வெப்ப வேதியியல் பரிசோதனையின்’ (‘thermochemical examination,’) உதவியுடன் காரின் உண்மையான எஞ்சின் எண் மற்றும் சேஸ் எண்ணைக் கண்டறிவது அவசியமாகிறது. பொதுவாக, புலனாய்வு நிறுவனம் இதற்காக ஒரு தடயவியல் இயற்பியலாளரைப் பயன்படுத்துகிறது. மேலும், குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ பகுப்பாய்வு கட்டாயமாகின்றது. ஏனெனில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.


எனவே, ஒரு வெடிப்புச் சம்பவம் நடந்தால், புலன்விசாரணையாளர்களுக்குக் குற்றத்தைக் கண்டறிய உதவுவதற்கும் பல்வேறு ஆதாரங்களின் அறிவியல் பகுப்பாய்வு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஒரு தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் பல்வேறு பிரிவுகள் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகின்றது. 


ஷமீம் ஹக் மொண்டல், கொல்கத்தா மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் இயற்பியல் பிரிவில் ஆராய்ச்சியாளர் ஆவார்.



Original article:

Share:

சுரண்டப்படும் தொழிலாளர்கள், தொழிலாளர் கொள்கையின் வெற்று வாக்குறுதிகள் -ரெஜிமோன் குட்டப்பன்

 ஷ்ரம் சக்தி நிதி 2025 வரைவு (draft Shram Shakti Niti) இந்தியாவின் தொழிலாளர் அமைப்பில் உள்ள குறைபாடுகளை மேலும் வெளிப்படுத்துகிறது.


ஜூலை மாதத்தில், இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கடல் உணவுத் தொழிலில் கட்டாய உழைப்பு தொடர்பான சம்பவங்களை ஆராயும் போது, ​​விவசாயம் தங்கள் குடும்பங்களை நலிவடையச் செய்ததால், மிகக் குறைந்த கூலிக்காக, கையுறைகள் இல்லாமல் குளிர் மேசைகளில் மீன் தலைகளை உரித்து, விரக்தியில் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களை இந்த எழுத்தாளர் சந்தித்தார். பணியாளர்களின் அரசு காப்பீடு (Employees’ State Insurance (ESI)) மற்றும் வருங்கால வைப்பு நிதி சலுகைகள் (Provident Fund benefits) வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட அவர்களுக்கு, எனது வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு "தினசரி கூலிகள்" (“daily wagers”) என மறுவகைப்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய ஊதிய உயர்வு இருந்தது. ஆனால், நிறுவனம் பங்களிப்புகளை நிறுத்தியதால் அவர்கள் இரண்டு சலுகைகளையும் இழந்தனர்.அவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், சுரண்டலில் சிக்கிக் கொள்கிறார்கள், இது இந்தியாவின் தொழிலாளர் அமைப்பில் அவர்களின் சட்டப் பாதுகாப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.


உலகின் மிக உயர்ந்த நாடான இந்தியாவில் 11 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தை தாங்கிக் கொண்டிருக்கும் இந்த மோசமான பின்னணியில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் ஷ்ரம் சக்தி நிதி-2025 வரைவை (draft Shram Shakti Niti) வெளியிட்டது. இது மனுஸ்மிருதி போன்ற நூல்களிலிருந்து "பண்டைய இந்திய அறநெறிகள்" (ancient Indian ethos) மறைக்கப்பட்ட "எதிர்காலத்திற்குத் தயாரான" (future-ready) கொள்கை என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான யதார்த்தங்களை புறக்கணிக்கிறது.



'முதலாளி எளிமை'க்கான ஒரு வழக்கு


2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, மேற்கு, வடமேற்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் எஃகு தொழிற்சாலைகள், மணற்கல் குவாரிகள், கடல் உணவு ஆலைகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் எழுத்தாளர் உரையாடியுள்ளார். இந்தத் தொழிலாளர்கள் முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல், தினசரி ஊதியத்தில் இடைத்தரகர்களால் பணியமர்த்தப்படுகிறார்கள், அவர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை. அவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது, மேலும் எந்த சட்டப்பூர்வ சலுகைகளும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, அவர்கள் இந்தியாவின் முறைசாரா முறையில் பணிபுரியும் 90% தொழிலாளர்களில் ஒரு பகுதியாகவே உள்ளனர் என்று 2024 சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) அறிக்கை தெரிவிக்கிறது.


இந்த அமைப்பு தொழிலாளர் சட்டங்களை மீறுகிறது. இது ஊதியத் திருட்டை செயல்படுத்துகிறது மற்றும் தொழிலாளர் கண்ணியத்தைப் பறிக்கிறது. இது அரசியலமைப்புப் பிரிவுகள் 14, 16 மற்றும் 23 இன் கீழ் அரசியலமைப்பு பாதுகாப்புகளுக்கும் எதிரானது. இந்தக் கொள்கை தொழிலாளர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக முதலாளியின் ஆறுதலையும் கலாச்சார ஏக்கத்தையும் ஊக்குவிக்கிறது.


இந்தக் கொள்கை ஒரு சிறிய உலகளாவிய சமூகப் பாதுகாப்புக் கணக்கை அறிமுகப்படுத்துகிறது. இது பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation), பணியாளர்களின் அரசு காப்பீட்டுக் கழகம் (Employees’ State Insurance Corporation), பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana), இ-ஷ்ராம் (e-SHRAM) மற்றும் வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் (State welfare boards), ஓய்வூதியம் (pension), மகப்பேறு (maternity), விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான (accident and life insurance) மாநில வாரியங்களை இணைக்கிறது. மேலும் வேலை, கல்வி மற்றும் பொது உதவிக்கான உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்புப் பிரிவு 41-ஐ நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்தக் கொள்கை முன்வைக்கப்படுகிறது.


இருப்பினும், இது முறையான நிதியை வழங்குவதைத் தவிர்க்கிறது. கிக் நிறுவன முதலாளிகள் பங்களிக்க எந்த விதிகளும் இல்லை. மேலும், அரசு பங்களிப்புகளுக்கு எந்த விதிகளும் இல்லை. e-SHRAM பணப் பறிமாற்றங்களை மிக குறைந்ததாக மாற்றுகிறது. 38% குடும்பங்கள் மட்டுமே கல்வியறிவு பெற்ற ஒரு நாட்டில் டிஜிட்டல் ஐடிகளைப் பயன்படுத்துவது பெண்கள், முதியவர்கள் மற்றும் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களை விலக்குவதற்கு வழிவகுக்கிறது. இது பிரிவு 15 மீறுகிறது. மேலும், தொழிற்சங்க பாதுகாப்புகள் இல்லாமல், தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை இழக்கிறார்கள். எனவே, முதல் கட்டத்தில் இணையவழி அல்லாத அணுகல் மற்றும் தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசால் பகிரப்பட்ட நிதி ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், அது சுரண்டலுக்கு வழிவகுக்கும்.


இந்தக் கொள்கை 2020ஆம் ஆண்டின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டை கண்டிப்பாக அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறது. இதில் ஆபத்து தணிக்கைகள் மற்றும் பாலின உணர்திறன் பாதுகாப்பு தரநிலைகள் அடங்கும். இது நியாயமான மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகள் மற்றும் மகப்பேறு நிவாரணத்தை உறுதி செய்ய அரசை அனுமதிக்கும் 42வது பிரிவு மற்றும் பெண்களின் பராமரிப்பு தொடர்பான அபாயங்களைக் கையாளும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)155வது பிரிவை   பின்பற்றுகிறது.


கடுமையான தண்டனைகள் மற்றும் போதுமான ஆய்வாளர்கள் இல்லாமல் 2047ஆம் ஆண்டுக்குள் “near-zero fatalities” அடைவதற்கான இலக்கு சாத்தியமற்றதாகத் தெரிகிறது. டிஜிட்டல் கருவிகள் முறைசாரா தொழிலாளர்களை ஒதுக்கி வைக்கின்றன. இது சமத்துவத்தைக் குறைக்கிறது. கிக் தொழிலாளர்களின் மனநலப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், தொழிற்சங்க தணிக்கைகள் பிரிவு 19இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பலவீனப்படுத்துகின்றன.


கவலைக்குரிய பகுதிகள்


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) வேலைவாய்ப்பு வசதியளிப்பவராக செயல்பட திட்டமிட்டுள்ளது. இது வேலை பொருத்தம், நற்சான்றிதழ் சரிபார்ப்புகள் மற்றும் திறன் சீரமைப்பு ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தேசிய தொழில் சேவையை (National Career Service (NCS)) பயன்படுத்தும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் கவனம் செலுத்தப்படும். இந்த அணுகுமுறை திறன் இந்தியா முன்முயற்சிகளை இணைப்பதன் மூலம் 91.75% பட்டதாரி-வேலை பொருத்தமின்மையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், AI சார்புக்கு எதிரான பாதுகாப்புகள் இல்லாமல், சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டின் ஆபத்து உள்ளது. இது பிரிவு 15 ஐ மீறக்கூடும்.


12 மில்லியன் கிக் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் புறக்கணிக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், "நெகிழ்வுத்தன்மை" என்பது சுரண்டலுக்கான ஒரு மறைப்பாகும். தெளிவான மாற்ற சலுகைகள் இல்லாதது அவர்களின் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் தொழில்நுட்பம் சார்ந்த சமத்துவமின்மையைக் குறைக்க அறநெறி தணிக்கைகள் மற்றும் தொழிற்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் தேவை.


இந்தக் கொள்கை 2030-ம் ஆண்டுக்குள் மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு, நெகிழ்வான நிகழ்ச்சிகள், சம ஊதியம் மற்றும் பயிற்சிகள் மூலம் 35% பெண் தொழிலாளர் பங்களிப்பை (33.7% இலிருந்து) இலக்காகக் கொண்டுள்ளது. இது பிரிவு-15 இன் பாலின சமத்துவம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மாநாடு 195 இன் இயக்கம் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், முறைசாரா தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடுகள், அபராதங்கள் அல்லது போதுமான மகப்பேறு ஆதரவு இல்லாமல், வெற்றி பெறுவது அரிது. இளைஞர்களின் மனநலம் மற்றும் சாதி-பாலின தரவு இடைவெளிகளைக் கவனிக்காமல் இருப்பது, தலித் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை மறைக்கிறது. எனவே, கண்ணியம், சமத்துவம் மற்றும் உண்மையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு தொழிற்சங்கங்கள் தலைமையிலான தணிக்கைகள் மிக முக்கியமானவை.


இந்தக் கொள்கையின் பசுமை தொழில்நுட்பத் திட்டம், நிலக்கரித் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் மறுதிறன் வழங்குவதற்கும் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதை ஆதரிக்கிறது. இது காலநிலை நடவடிக்கை குறித்த நிலையான வளர்ச்சி இலக்கு 13 மற்றும் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கும் பிரிவு 21 உடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், வருமான ஆதரவு அல்லது தொழிற்சங்க ஈடுபாடு இல்லாமல் "நியாயமான மாற்றங்கள்" பொருளற்றவை மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மாநாடு 29 ஐ மீறும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. நகரத்தை மையமாகக் கொண்ட பசுமை வேலைகளுடன் சேர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) அணுகலில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே வளர்ந்து வரும் இடைவெளி, 400 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களை விலக்குகிறது. இதைத் தடுக்க, முத்தரப்பு நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) அளவிலான பாதுகாப்புகள் தேவை. இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களின் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சுரண்டல் பசுமை பொருளாதாரத்தின் எழுச்சியைத் தடுக்கலாம்.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை மதிப்பீட்டு குறியீட்டு (Labour and Employment Policy Evaluation Index (LEPEI) தரவுத்தளங்கள் மூலம் ஒன்றிணைவதைக் குறிக்கும் இந்தக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை டிஜிட்டல் இந்தியாவுடன் இணைப்பதன் மூலம் பிரிவு 12 இன் தொலைநோக்கு பார்வையை, நியாயமான நிர்வாக இலக்கை அடைய இது முயல்கிறது. இருப்பினும், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பலவீனமான அமலாக்கம் கண்காணிப்பை செயல்படுத்துவதற்கும் பிரிவு 19 இன் சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் ஆபத்தை விளைவிக்கிறது.


சுரண்டல் மற்றும் டிஜிட்டல் நம்பிக்கைக்கு மத்தியில், ஷ்ரம் சக்தி நிதி-2025, வளர்ந்த இந்தியாவுக்கான "உரிமைகள் சார்ந்த, எதிர்காலத்திற்குத் தயார்" (rights-driven, future-ready) என்ற தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கிறது. இருப்பினும், அதன் லட்சிய வார்த்தைகளுக்குக் கீழே பலவீனமான ஒழுங்குமுறை மேற்பார்வை, டிஜிட்டல் விலக்கு, செயல்படுத்தப்படாத தண்டனைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மரபுகளை பலவீனமாகப் பின்பற்றுதல் போன்ற இடைவெளிகள் உள்ளன. இவை அனைத்தும் விரிவடைந்து வரும் கிக் பொருளாதாரத்தில் தொழிற்சங்கங்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தும்.


இந்த பிரச்சினை கண்ணியம், உரிமைகள் மற்றும் நீதி பற்றியது


சரியான நிதி மற்றும் வலுவான நிறுவனங்கள் இல்லாமல், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு என்ற இலக்கு தோல்வியடையக்கூடும். முறைசாரா அல்லது கட்டாய உழைப்பில் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு, கொள்கையின் உண்மையான வெற்றி டிஜிட்டல் அறிக்கைகளைச் சார்ந்தது அல்ல, மாறாக இந்தியாவின் உழைக்கும் ஏழைகளுக்கு கண்ணியம், உரிமைகள் மற்றும் நீதியை எவ்வளவு சிறப்பாக மீட்டெடுக்கிறது என்பதைப் பொறுத்தது.


2025–47 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த நடைமுறை விரைவாக முன்னோடித் திட்டங்களுடன் தொடங்கப்பட வேண்டும். பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக இந்த முன்னோடித் திட்டங்களில் உரிமைகள் தணிக்கைகளுடன் சேர்க்கப்பட வேண்டும். முத்தரப்பு அமலாக்கம், டிஜிட்டல் விலக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான இணையவழி அணுகல் மற்றும் வெளிப்படையான குறை தீர்க்கும் பணிகள் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் இல்லாமல், இந்தக் கொள்கை இந்தியாவின் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு உண்மையான நீதி வழங்குவதற்குப் பதிலாக குறியீட்டு சொல்லாட்சியாக மாறும் அபாயம் உள்ளது.


ரெஜிமோன் குட்டப்பன் ஒரு கட்டாய தொழிலாளர் புலனாய்வாளர்.



Original article:

Share:

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் குறைபாடுகள்… -பி.டி.டி. ஆச்சாரி

 வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால கருத்துகணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட சிறப்பு தீவிர திருத்தமானது (Special Intensive Revision (SIR)) சில மாநில அரசுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. சிலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். முன்னதாக, ஜூன் மாதம் தொடங்கி பீகாரில் இதேபோன்ற ஒரு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு சட்டமன்றத் தேர்தல் தற்போது தான் நிறைவடைந்துள்ளது.


இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் நடவடிக்கையை அவசரமாகச் செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்தன. 2024-ம் ஆண்டு சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு சுருக்கமான திருத்தத்திற்குப் பிறகு, விரைவில் மற்றொரு விரிவான திருத்தத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு (ECI) உள்ள அதிகாரம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் சில இடைக்கால கருத்துகணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், அரசியலமைப்பு சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை.


பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நியாயப்படுத்தும் அதே வேளையில், கடைசி திருத்தம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 2002-03 ஆண்டில் பெரிய அளவிலான நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் இறப்பு காரணமாக மக்கள்தொகை மாற்றங்களுடன் நடத்தப்பட்டது. எனவே, மாநிலத்தின் தற்போதைய மக்கள்தொகை விவரக்குறிப்பை துல்லியமாகக் காட்ட ஒரு விரிவான திருத்தம் தேவை என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கூறியது.


நேரத்தின் பிரச்சினை


வாக்காளர் பட்டியலை விரிவாகத் திருத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திருத்தம் ஏன் செய்யப்படுகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. தீவிர திருத்தம் என்பது ஒரு பெரிய அளவிலான கணக்கெடுப்பை உள்ளடக்கியது. இதற்கு கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தரவுகளைச் சேகரித்து, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைக் கையாள்வது மற்றும் மேல்முறையீடுகள் குறித்து முடிவு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள். உண்மையில், 2003 மற்றும் 2024 ஆண்டுக்கு இடையில், மக்களவைக்கு ஐந்து பொதுத் தேர்தல்களும், மாநிலங்கள் மற்றும் ஓன்றியப் பிரதேசங்களில் பல தேர்தல்களும் நடந்துள்ளன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்தவில்லை. இது விவரிக்க முடியாதது. எனவே, பீகார் தேர்தலுக்கு சற்று முன்பும், இப்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பும் இந்திய தேர்தல் ஆணையம் ஏன் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்தத் தேர்ந்தெடுத்தது என்பது புதிராக உள்ளது.


நாட்டில் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் ஆகியவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950 இன் (Representation of the People (RP) Act) பிரிவு 21 இன் கீழ் கையாளப்படுகின்றன. இந்தப் பிரிவு மக்களவை அல்லது மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தலுக்கு முன் பட்டியலைத் திருத்துவதற்கும், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் "எந்த வருடத்திலும்" திருத்துவதற்கும் ஆணையை வழங்குகிறது.


திருத்தங்கள் மற்றும் வாக்காளர் குடியுரிமை குறித்து


இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எந்தத் தொகுதியிலோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ சிறப்புத் திருத்தத்தை உத்தரவிட சட்டம் அனுமதிக்கிறது. இந்த விதியை கவனமாகப் படித்தால், பொதுத் தேர்தலுக்கு முன் திருத்தம் கட்டாயமாகும் என்பதைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் வழிகாட்டும் போது மட்டுமே மற்ற திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தேர்தல் ஆணையம் அத்தகைய திருத்தங்களை உத்தரவிடுவதற்கான காரணங்களையும் பதிவு செய்ய வேண்டும்.


மேலும், 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் (Registration of Electors Rules) விதி 25 ஐ கவனித்தால், பிரிவு 21(2)(a) இன் கீழ் தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட பட்டியல் திருத்தம் சுருக்கமான தன்மை கொண்டது. ஆனால், பிரிவு 21(2)(b) இன் கீழ் எந்த வருடத்திலும் செய்யப்படும் திருத்தம் ஒரு புதிய பட்டியலைத் தயாரிப்பது போன்ற விரிவான அல்லது தீவிரமான செயல்முறையாகும்.


தீவிர திருத்தம் என்பது ஒரு விரிவான மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும். இது பொதுவாக பொதுத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படாத ஆண்டுகளில் செய்யப்படுகிறது. ஏனெனில் தேர்தலுக்கு முன் செய்யப்படும் திருத்தம் அந்தத் தேர்தலுடன் தொடர்புடையது. எனவே, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்வது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் கீழ் அனுமதிக்கப்படவில்லை.


சிறப்பு தீவிர திருத்த (SIR) சூழலில் எழுந்துள்ள மற்றொரு முக்கியமான பிரச்சினையானது, வாக்காளர்களின் குடியுரிமையை நிரூபிக்க இந்திய தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களின் தன்மையாகும். அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், ஒரு வாக்காளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். எனவே, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்கும் நேரத்தில் குடியுரிமை பிரச்சினை முக்கியமானது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக இல்லை என்று ECI கருதுவதால், விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் கோரிய ஆவணங்களில் ஆதார் சேர்க்கப்படவில்லை.


இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவின் மூலம், வாக்காளரின் அடையாளத்தை நிறுவுவதற்கான ஆவணமாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதன் மூலம் தீர்த்து வைத்தது. உண்மையில், இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்திய குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தீர்மானிக்க அவற்றிற்கான அதிகாரங்கள் என்ன என்பதுதான்.


அரசியலமைப்பின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகள் மற்றும் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் (Citizenship Act) ஆகியவற்றால் குடியுரிமை நிர்வகிக்கப்படுகிறது. இவற்றின் கீழ், இந்திய குடியுரிமை பிறப்பு, வம்சாவளி, பதிவு மற்றும் இயற்கைமயமாக்கல் மூலம் பெறப்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) சூழலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குடியுரிமை தொடர்பான சட்டம் உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) அல்ல. அரசியலமைப்புப் பிரிவு 326, ஒரு குடிமகன் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்று கூறுகிறது. எனவே சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலுக்கான பட்டியலைத் தயாரிக்க பிரத்யேக அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்போது வாக்காளரின் குடியுரிமை பற்றிய கேள்வி மிக முக்கியமானது. ஆனால், தேர்தல் ஆணையம் குடியுரிமையை எவ்வாறு தீர்மானிக்கிறது? மேலும், குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியுமா?


குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைக் குறிப்பிடும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அல்ல. இதை, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். உண்மையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால்  சரிபார்க்க முடியும். குடியுரிமை தொடர்பான கேள்விகளை தீர்க்கவும் அல்லது இந்த நோக்கத்திற்காக சில ஆவணங்களை நிராகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுவது சட்டப்பூர்வமாக சரியானதல்ல. ஆனால் பிரச்சனை என்னவென்றால், உள்துறை அமைச்சகம் இதுவரை வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களின் விரிவான பட்டியலை அறிவிக்கவில்லை. உண்மையில், அரசியலமைப்புப் பிரிவு 326 மறைமுகமாக அரசாங்கம் அத்தகைய ஆவணங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கோருகிறது. அத்தகைய பட்டியல் இல்லாத நிலையில், வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்கிறது. உள்துறை அமைச்சகத்திடம் உள்ள அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்த முடியும்?


ஒரு முக்கிய முடிவு


சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு (SIR) பீகாரில் எத்தனை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது இன்னும் தெரியவில்லை. இவர்கள் 2024ஆம் ஆண்டு வரை ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள். ஆனால், பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேவைப்படும் ஆவணங்களைக் காட்ட முடியாததால் குடிமக்கள் அல்லாதவர்களாகக் குறிக்கப்பட்டனர். இந்த சூழலில், லால் பாபு ஹுசைன் மற்றும் பிறர் vs தேர்தல் பதிவு அதிகாரி மற்றும் பிறர்-1995 (Lal Babu Hussein and Others vs. Electoral Registration Officer and Others) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது. ஒரு நபரின் பெயர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தால், அந்தப் பெயரைச் சேர்ப்பதற்கு முன்பு ஒர் அதிகாரி அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றியதாகக் கருத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


அரசியலமைப்புப் பிரிவு 14, அரசு அல்லது அதன் நிறுவனங்களின் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையையும் தடை செய்கிறது. பிரிவு 21, எந்தவொரு தனி  நபரின் சுதந்திரத்தையும் பறிப்பதைத் தடை செய்கிறது. எனவே, சட்ட மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகள் இந்த அரசியலமைப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.


P.D.T. ஆச்சாரி, மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.



Original article:

Share: