“ஒரு வேட்பாளர், பல தொகுதிகள்” நடைமுறை குறித்து… - சந்தோஷ் குமார் தாஷ், சந்தோஷ் குமார் பாண்டா

 ஒரு நபர், ஒரு ஓட்டு" (‘one person, one vote’) என்பது வாக்காளர்களுக்கான முக்கிய கொள்கை என்றால், "ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" (‘one candidate, one constituency’) என்பது அரசியல்வாதிகளுக்கு விதியாக இருக்க வேண்டும்.


முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான “ஒரே நாடு ஒரே தேர்தல்” (‘One Nation One Election’) குழு, மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போதிருந்து, இந்த யோசனையின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள், நடைமுறை சவால்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியல் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அனைத்து அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு முக்கியமான பிரச்சினை கவனிக்கப்படாமல் உள்ளது. ஒரே வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting from multiple constituencies (OCMC)), ஒரே பதவிக்கு போட்டியிடுவதுதான் பிரச்சனையாக உள்ளது.


பின்னணி, சவால்கள் 


இந்திய அரசியலமைப்பு சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தின் கீழ்சபைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த அனுமதிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) நிறுவுவதைத் தவிர்த்து, இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான விதிகளை அமைக்கும் அதிகாரத்தையும் இது நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of the People Act 1951) "பல தொகுதிகளில் போட்டியிடுவது" என்ற பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில், ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதற்கு வரம்பு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70வது பிரிவின்படி, பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், சில சமயங்களில் இரண்டிற்கு மேல், அனைத்திலும் வெற்றி பெற்று, ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்திலும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் உருவானது. இதனால் அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 


1996ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மாற்றியது. பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், நடைமுறை தொடர்ந்தது. குறிப்பாக, அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நவம்பர் 2024-ல், மாநில சட்டசபைகளுக்கு 44 இடைத்தேர்தல்கள் நடந்தன. தற்போதைய, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்களால் அடிக்கடி இடைத்தேர்தல்கள் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. முதலாவதாக, அவர்கள் வரி செலுத்துவோரின் செலவுகளை அதிகரிக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான நிர்வாகச் செலவை ஒன்றிய அரசு ஏற்கிறது. அதே, நேரத்தில் மாநில அரசுகள் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்குப் பணம் செலுத்துகின்றன. 2014 பொதுத் தேர்தலில், ₹3,870 கோடி செலவானது. 6% ஆண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப, 2024 பொதுத் தேர்தலுக்கு ₹6,931 கோடி அல்லது ஒரு இடத்துக்கு ₹12.76 கோடி செலவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளில் 10 அரசியல்வாதிகள் வெற்றி பெற்றால், இடைத்தேர்தலுக்கான கூடுதல் செலவு ₹130 கோடியாகும். இது ஒட்டுமொத்த தேர்தல் செலவீனத்துடன் ஒப்பிடும் போது சிறியதாக இருந்தாலும், உண்மையான பிரச்சினை அரசியல் கட்சிகளின் பெரிய செலவினமாகும். சமீபத்திய, பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ₹1,35,000 கோடி அல்லது ஒரு தொகுதிக்கு ₹250 கோடி செலவிட்டதாக ஊடக ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. இந்தச் சுமை இறுதியில் பொதுமக்கள் மீதுதான் விழுகிறது. கறுப்புப் பணத்தில் இருந்து அதிக நிதி கிடைக்கிறது. இது நிதி வெளிப்படைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.


இரண்டாவதாக, வெற்றிபெறும் வேட்பாளர் முதல் ஆறு மாதங்களுக்குள் ராஜினாமா செய்யும்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலை ஆளும் கட்சிக்கு சாதகமாக மாறுகிறது. இது பல மாநிலங்களில் இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அதிக வளங்களைக் கொண்டுள்ளது மற்றும் அந்த கட்சி தனது தொண்டர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க முடியும். இத்தகைய சூழல் ஆளும் கட்சிக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 


மூன்றாவதாக, ஒரு இடைத்தேர்தலை ஏற்பாடு செய்வதற்கான நிதிச் சுமை ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் மற்றும் அவரது கட்சியின் மீது விழுகிறது. இது அவர்களை மீண்டும் செலவிட கட்டாயப்படுத்துகிறது. 


நான்காவதாக, "ஜனநாயகம் என்பது மக்களுக்காகவும் மக்களால் நடத்தப்படும் ஆட்சி" என்ற பழமொழி, தேர்தல்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. எவ்வாறாயினும், ஒரு வேட்பாளர் பல இடங்களில் போட்டியிடும் போது, ​​அவர்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். இது பெரும்பாலும் மக்களின் நலன்களைவிட தலைவரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு மேலாக அரசியலை வைக்கிறது.


ஐந்தாவது,  ஒரே வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting from multiple constituencies (OCMC)), சில நேரங்களில் தலைவர்களால் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற அவர்களின் பிரபலத்தை நம்பியிருக்கிறது. இது கட்சியின் மீது தலைவரின் கட்டுப்பாட்டை காட்டுகிறது. குறிப்பாக, குடும்பம் அல்லது தலைவர் இயக்கும் கட்சிகளில். இது குடிமக்களின் பேச்சு சுதந்திர உரிமைக்கு எதிரானது. 2023-ல் ஒரு மனு (அஷ்வினி குமார் உபாத்யாய் vs யூனியன் ஆஃப் இந்தியா) வாதிடப்பட்டது. மக்கள் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​அந்த நபர் தங்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதும், இடைத்தேர்தலுக்கு ஒன்றை விட்டுக் கொடுப்பதும் அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவை மீறுவதாகும். இந்த நடைமுறை வாக்காளர்களைக் குழப்பி ஏமாற்றமடையச் செய்கிறது. உதாரணமாக, 2024-ல் கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி ராஜினாமா செய்தபோது, ​​பொதுத் தேர்தலில் 72.92% ஆக இருந்த வாக்குப்பதிவு இடைத்தேர்தலில் 64.24% ஆகக் குறைந்தது.


சில நன்மைகள் 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் (OCMC) போட்டியிடும் நடைமுறை பல நாடுகளில் பொதுவானது மற்றும் சில நடைமுறை காரணங்களும் உள்ளன. முதலாவதாக, சில பகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியில்லாமல் வேட்பாளர்களுக்கு காப்புப்பிரதியை அளிக்கிறது. இரண்டாவதாக, இந்தியா போன்ற நாடுகளில், அரசியல் பெரும்பாலும் தலைவர் அல்லது குடும்பத்தைச் சுற்றியே சுழலும், அது தலைவர் அதிகாரத்தில் இருக்க அல்லது சுமுகமாக மாற உதவுகிறது. உதாரணமாக, 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தனது நந்திகிராம் தொகுதியை ராஜினாமாவேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், மற்றொரு தலைவர் பபானிபூரில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதேபோல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் 2022 தேர்தலில் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார்.


சர்வதேச அனுபவம் 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting multiple constituencies (OCMC)) போட்டியிடும் நடைமுறை இந்தியாவுக்கு தனித்துவமானது அல்ல. பாகிஸ்தானும் வங்களதேசமும் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கின்றன. ஆனால், அவர்கள் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ராஜினாமா வேண்டும். ஒரு வேட்பாளர் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தான் எந்த வரம்பையும் வைக்கவில்லை. 2018 தேர்தலில் முன்னாள் பிரதமர் ஐந்து இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களை ராஜினாமா செய்தார். இதேபோல் பங்களாதேஷ், வேட்பாளர்கள் 2008 வரை ஐந்து தொகுதிகள் வரை போட்டியிட அனுமதித்தது, ஆனால் இப்போது அதை மூன்று ஆக மட்டுப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை ஒரு காலத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK) பொதுவானதாக இருந்தது, ஆனால் 1983 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய ஜனநாயக நாடுகள் தெளிவான பிரதிநிதித்துவம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக அதை படிப்படியாக அகற்றியுள்ளன. 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் போட்டிடுவது நன்மைகளைவிட அதிக தீங்கு விளைவிக்கும். சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகள் உள்ளன. சாத்தியமான தீர்வுகள் பரிசீலிக்கப்படலாம். முதலாவதாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 33 (7)ஐ திருத்தி ஒரே பதவிக்கு பல தொகுதிகளில் இருந்து ஒரு வேட்பாளர் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும். 2004ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை தடை செய்ய அரசாங்கத்துக்கு பரிந்துரைத்தது. 2015 ஆம் ஆண்டில் 255வது சட்ட ஆணைய அறிக்கையும் இதே பரிந்துரையை அளித்தது. 


இரண்டாவதாக, இடைத்தேர்தலுக்கான முழு செலவையும், ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இது பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தடுக்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2004-ல் இதைப் பரிந்துரைத்தது. இருப்பினும், வெற்றி பெறும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் செலவை ஏற்க முடியும் என்பதால் இந்த நடைமுறை தொடரலாம்.


மூன்றாவதாக, ஓராண்டுக்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது வாக்காளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு அதிக அவகாசத்தை அளிக்கிறது மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர் மீண்டும் மற்றொரு போட்டிக்கு தயாராக அனுமதிக்கிறது. இது செயல்முறையை மிகவும் நியாயமானதாக மாற்றும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 151A ஐ மாற்றுவதன் மூலம் இதைச் செய்யலாம். தற்போதுள்ள சட்டத்தின்படி காலியாக உள்ள தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும்.


தேர்தலை நடத்துவதால் அரசுக்கு அதிக பணம் செலவாகிறது. இந்தியாவில், ஆண்டு முழுவதும் தேர்தல்கள் நடக்கின்றன. இடைத்தேர்தல் அடிக்கடி தேவைப்படுவதால் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறது. இந்த வளங்களை நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும். “ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" (‘one candidate, one constituency’ (OCOC)) பிரச்சினையை மாற்ற முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. “ஒரே நாடு ஒரே தேர்தல்” (‘One Nation One Election’) யோசனையைப் போல் பல அரசியல் கட்சிகள் “ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி”யை ஆதரிக்கவில்லை. "ஒரு நபர், ஒரு வாக்கு" என்பது முக்கிய ஜனநாயகக் கொள்கை என்றால், அரசியல்வாதிகளுக்கு "ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" என்பதை அமல்படுத்த வேண்டிய நேரம் இது.


சந்தோஷ் குமார் தாஷ், குஜராத்தின் ஆனந்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட், ஆனந்த் (Institute of Rural Management Anand (IRMA))-யில் உதவி பேராசிரியர். சந்தோஷ் குமார் பாண்டா ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி ஆய்வாளர்.




Original article:

Share:

உயர்கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் -சங்கீதா கந்தவேல், மேக்னா எம்.

 தமிழ்நாட்டு அரசின் மாதாந்திர உதவித்தொகைத் திட்டமான புதுமைப் பெண் (Pudhumai Penn) திட்டம், பல மாணவிகளுக்கு நற்பேறாக இருந்து வருகிறது. உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழந்த பெண் மாணவிகளுக்கு இந்தத் திட்டம்  பல்வேறு வழிகளில் உதவி புரிகிறது. சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. சங்கீதா கந்தவேல் மற்றும் M. மேக்னாஇத்திட்டம் இந்த மாணவர்களுக்கு எவ்வளவு பயனளித்தது என்பதை ஆராய்கின்றனர்.


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான S. பாண்டியம்மாள், சரியான நேரத்தில் உதவி பெறும் வரை உயர்கல்வி கிடைக்காது என்று நினைத்தார். 19 வயதில் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையுடன் கோவையில் வசித்து வரும் அவர், மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பகிர்ந்து கொண்டார். புதுமைப் பெண் திட்டத்தில் இருந்து ₹1,000 மாதாந்திர உதவித்தொகை கிடைத்ததால் அவரது மாமியார் அவருக்கு ஆதரவளித்தார்.


“இது போன்ற திட்டங்கள் இல்லாமல் நான் எனது பட்டப்படிப்பைத் தொடர்ந்திருக்க முடியாது. மேலும், நிதி ரீதியாக எனது கணவரைச் சார்ந்திருப்பேன்" என்று பாண்டியம்மாள் கூறினார். இந்தத் திட்டம் இப்போது அந்த பெண்ணின் கல்லூரிச் செலவுகள் அனைத்தையும் செலுத்துகிறது. இது அந்த பெண்ணின் தனிப்பட்ட தேவைகளுக்காக கூடுதல் பணத்தையும் வழங்குகிறது. தற்போது பாண்டியம்மாள்,கோவையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய  துறையில் மூன்றாம் ஆண்டு படித்து  வருகிறார்.


20 வயதான தேவதர்ஷினிக்கு பட்டயக் கணக்காளராக வேண்டும் (Chartered Accountant (CA)) என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இருப்பினும், அந்த பெண்  12ஆம் வகுப்பில் நுழைந்தபோது, அதிக தேர்வுச் செலவு காரணமாக அந்த பெண் தனது  கனவை நோக்கிய பயணம் பூர்த்தியாகாது என்பதை தெளிவாக உணர்ந்தார். அந்த பெண் தனது பெற்றோரிடம் உதவி கேட்டபோது, அவர்கள் ஒரு அடிப்படை பட்டப்படிப்புக்கு மட்டுமே நிதியளிக்க முடியும் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்தனர். அந்த பெண்ணினது தந்தை, மிதமான வருமானம் கொண்ட ஒரு ஓவியர் மற்றும் அவரது தாய் இல்லத்தரசியாக உள்ளர். இதன் காரணமாக அவர்களால் கூடுதல் நிதி உதவி வழங்க முடியவில்லை. பட்டப்படிப்பை முடித்த அந்த பெண்ணின் சகோதரன், குடும்பத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் இருந்ததால், அந்த பெண்ணினது கல்விக்கு உதவ முடியவில்லை. "நான் என் கனவை ஏறக்குறைய விட்டுவிட்டேன். 


ஆனால், நான் எனது கல்லூரி மூலம் புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றி அறிந்தேன் என்று தேவதர்ஷினி கூறினார். தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பெண் பட்டயக் கணக்காளர் தேர்வுக்கு பணம் சேமித்து வந்துள்ளார். மேலும், “என்னால் பயிற்சி பெற முடியாது, அதனால் நான் சுயமாக படிப்பேன். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தும்போது எனது குடும்பத்தை ஆதரிக்க பகுதி நேரமாகவும் வேலை செய்வேன்” என்று அந்த பெண் கூறினார்.


 புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn scheme) 


தமிழ்நாடு அரசு, புதுமைப் பெண் திட்டம் என்றழைக்கப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை (Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme) அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி பயிலும் பெண்களின் சேர்க்கையை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் இந்த திட்டத்தை அறிவித்தார். மார்ச் 18, 2022 அன்று சட்டசபையில் தனது நிதிநிலை அறிக்கை உரையின் போது இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, திட்டத்தில் இடம் பெற்றுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த பெண்கள் இளங்கலை, பட்டயம், தொழில்துறை பயிற்சி அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை நிதி உதவி வழங்கப்படும். நிதி உதவி அளிப்பதன் மூலம், இளம் வயது திருமணத்தை குறைப்பதன் மூலமும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலமும், மிக முக்கியமாக பெண் குழந்தைகளை உயர்கல்வியில் தக்க வைத்துக் கொள்வதன் மூலமும் சமூகத்தில் மாற்றம் கொண்டுவருவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.  தமிழ்நாடு அரசின், திட்டக்குழு மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வின் தரவுகளின்படி, மே 2023 நிலவரப்படி சுமார் 2,30,820 மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 


ஆய்வின்படி, 38 மாவட்டங்களில், சேலத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். சேலத்தில் 17,032 பயனாளிகள் உள்ளனர். சேலத்தைத், தொடர்ந்து நாமக்கல் 13,312 (5.77%) பயனாளிகள் உள்ளனர். தர்மபுரி 11,915 (5.16%) பயனாளிகள் உள்ளனர். சென்னை 11,468 (4.97%) பயனாளிகள் உள்ளனர். திருவண்ணாமலை 11,146 (4.83%) மற்றும் கோயம்புத்தூர் 10,777 (4.67%) பயனாளிகள் உள்ளனர்.

 

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறுகையில், இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள பெண் மாணவிகளுக்கு உதவுவதாக குறிப்பிட்டார். தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள்கூட இந்த திட்டத்தால் பயனடைந்ததாக தெரிவித்தார். மேலும், ஒற்றை பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புதுமைப் பெண் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  பள்ளிக் கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் அமைச்சர் கூறினார். “நாங்கள் பள்ளி மாணவிகளுக்காக கல்லூரிகளுக்கு களப்பயணத்தை ஏற்பாடு செய்கிறோம். இந்த வருகைகளின் போது, ​​ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய வசதிகளை மாணவிகளுக்கு காட்டுகிறோம். பள்ளிக்குப் பிறகு மாணவிகளின் விருப்பமான படிப்புகளைப் புரிந்து கொள்ள நாங்கள் அவர்களிடம் பேசுகிறோம். உயர்கல்வியை இலக்காகக் கொள்ள இது அவர்களை ஊக்குவிக்க உதவுகிறது”  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, உயர்கல்வியில் பெண் மாணவர்களின் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது.

 

பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், கல்விச் செலவுகளை நிர்வகிப்பது ஒரு போராட்டமாக இருந்தது. இருப்பினும், இப்போது என் மகளின் படிப்பு முடிந்துவிட்டதால், எனது குடும்பத்தை ஆதரிப்பதில் கவனம் செலுத்த முடியும் என்று சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் S. மணி தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் அவரது குடும்பத்தினர் பயனடைந்தனர். இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவி அனி விசாலினி, புதுமைப் பெண் திட்டத்தின் உதவி ஒரு வரம் என்றார். வீட்டுச் செலவுக்கும் இந்த பணம் உதவியது. அந்த பெண் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர முடியும் என்று நம்புகிறாள்.


நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மாணவியாக எப். சிந்துஜா மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறாள். அந்தப் பெண், ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் பணத்தை பெறுவதாகவும், அந்த பணத்தை தனது தாயிடம் வழங்குவதாகவும் தனது தாய் அதை தங்க சேமிப்புக்காக பயன்படுத்துவதாக தெரிவித்தார். சேலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி S. மலர் அந்தப் பணத்தை புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்தியதாகச் சொன்னாள்.  மதுரையில் M. திவ்ய பாரதி முதலாமாண்டு வணிக நிர்வாக இளங்கலை (BBA) மாணவி, மற்றும் K. அனுஷ்யா இரண்டாம் ஆண்டு இளங்கலை அறிவியல் மாணவி, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது அவர்களின் நிதியை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அவர்களின் செலவினங்களை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பதை கற்றுக் கொடுத்ததாக அந்த பெண்கள் கூறினர்.


வங்கிச் சேவைக்கான அணுகல் 


புதுமைப் பெண் திட்டம் மாணவிகளை மேம்படுத்த உதவியது. வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் வங்கி அமைப்பு பற்றிய அறிவைப் பெறுவதற்கும் இது பெண்களுக்கு உதவியது. பல மாணவிகள் புதிய கணக்கு துவங்கியதால் வங்கிகள் பயனடைந்துள்ளன. புதுமைப் பெண் திட்டத்தின் 74,700 பயனாளிகள் தங்களிடம் கணக்கு வைத்திருப்பதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பயனாளிகளுக்கு 50,000 ரூபாய் அட்டைகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது. சவால்கள் குறித்து வங்கியிடம் கேட்டபோது, ​​“பயனாளிகளின் கணக்கில் ஆதார் பதிவு செய்வது கடினமான பணி. ஆதார் கட்டண பால அமைப்பு (Aadhaar Payments Bridge System (APBS)) மூலம் நேரடி பணப்பரிவர்த்தனைகளுக்கு இது தடையாக உள்ளது. 


சில சூழல்களில், ஆதார் ஒரு கணக்கிற்கு விதைக்கப்பட்டாலும், பயனாளி அதே ஆதாரை மற்ற கணக்குகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். இதனால், பழைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது இலக்கு பணப் பரிமாற்றத்தின் இலக்கைத் தோற்கடித்தது. சில பயனாளிகள் சிறார்கள் என்றும், அவர்களின் கணக்குகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் பாதுகாவலர்களால் தொடங்கப்பட்டதாகவும் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த பயனாளிகள் தங்கள் கணக்குகளை மறுசீரமைக்க வங்கிகள் உதவ வேண்டும். அதனால், அவர்கள் பலன்களைப் பெற முடியும்.


காங்கயத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் நசீம் ஜான் கூறுகையில், இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டவர்களை மீண்டும் கல்லூரியில் சேரத் தூண்டியது. ஏனெனில், இது அவர்களின் நிதிச்சுமையைக் குறைத்தது. தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவாலா சுன்னன் செட்டியின் இந்துக் கல்லூரியின் முதல்வர் G. கல்விக்கரசி கூறுகையில், அதிக  மாணவிகள் தாங்கள் விரும்பும் சான்றிதழ் படிப்புகளில் சேருகின்றனர். கூடுதல் நிதி பல்வேறு விருப்பங்களை ஆராய அவர்களுக்கு உதவியது.


இருப்பினும், மாணவிகளுக்கு வழங்கப்படும் ₹1,000 போதாது என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். “1,000 ரூபாய் வழங்குவதற்கு பதிலாக முழு கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். பலருக்கு, மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து வராத பெரும்பாலான மாணவர்களுக்கு இது கைச்செலவுப்பணம் போன்றது" என்று தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷீலு பிரான்சிஸ் கூறினார். இருப்பினும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் பெண்களின் ஒட்டுமொத்த அதிகாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த திட்டம் கல்வி தடைகளை உடைத்து பாலின சமத்துவத்தை மேம்படுத்த உதவியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.


(சேலத்தைச் சேர்ந்த M. சபரி  கோயம்புத்தூரைச் சேர்ந்த T.C. சிபி ஸ்ரீவத்சன், மதுரையைச் சேர்ந்த B.திலக் சந்தர், நஹ்லா நயினார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த M. நச்சினார்க்கினியன் ஆகியோரின் உள்ளீடுகளுடன்)




Original article:

Share:

மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற பதவிக்காலங்களை ஒன்றாக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா

 மசோதாவின் விதிகளின்படி, ஒரே நாடு ஓரே தேர்தல் உண்மையான செயல்முறை 2034-ஆம் ஆண்டு வரை நடைபெறாது. 


மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வழி வகுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவானது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலங்களை ஒரே காலகட்டமாகும் திருத்தங்கள் மற்றும் புதிய பிரிவுகளைச் சேர்க்க முன்மொழிகிறது. இருப்பினும், மசோதாவின் விதிகளின்படி, ஒரே நேரத்தில் தேர்தல்களின் உண்மையான செயல்முறை 2034-ஆம் ஆண்டு வரை நடைபெறாது. 


வெள்ளிக்கிழமை இரவு விநியோகிக்கப்பட்ட மசோதாவின் நகலின்படி, மக்களவை அல்லது எந்தவொரு மாநில சட்டமன்றமும் அதன் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு கலைக்கப்பட்டால், அந்த சட்டமன்றம் அதன் மீதமுள்ள ஐந்தாண்டு காலத்தை முடிக்க மட்டுமே இடைக்கால தேர்தல்கள் நடத்தப்படும். 


இந்த மசோதா பிரிவு 82(A) (மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள்) சேர்க்கவும், பிரிவுகள் 83 (நாடாளுமன்ற அவைகளின் காலம்), 172 மற்றும் 327 (சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பாக ஏற்பாடுகளைச் செய்ய நாடாளுமன்றத்தின் அதிகாரம்) ஆகியவற்றைத் திருத்தவும் பரிந்துரைக்கிறது. 


வியாழக்கிழமை மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு (நூற்று இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024, திருத்தத்தின் விதிகள் "அறிவிக்கப்பட்ட தேதியில்" (“appointed date”) நடைமுறைக்கு வரும் என்று கூறுகிறது. இது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் அமர்வில் குடியரசுத்தலைவர் அறிவிப்பார். 


திங்களன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மசோதாவின்படி, இந்த நடைமுறை 2029-ஆம் ஆண்டில் அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே இருக்கும் என்றும், இச்செயல்முறை 2034-ஆம் ஆண்டு தேர்தல் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த மசோதா பின்வருமாறு கூறுகிறது: "பிரிவு 83 மற்றும் பிரிவு 172  எவ்வாறிருப்பினும், அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மற்றும் மக்களவையின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு நடத்தப்படும் எந்தவொரு பொதுத் தேர்தலிலும் அமைக்கப்பட்ட அனைத்து சட்டமன்றங்களின் பதவிக்காலமும் மக்களவையின் முழு பதவிக்காலம் முடியும் போது முடிவடையும்." 


மக்களவையின் பதவிக்காலம் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் என்றும், நியமிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்றங்களின் பதவிக்காலம் மக்களவையின் பதவிக்காலத்துடன் முடிவடையும் என்றும் இந்த மசோதா குறிப்பிடுகிறது. 


செப்டம்பர் 2, 2023 அன்று அமைக்கப்பட்ட கோவிந்த் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது. மக்களவை அல்லது சட்டமன்றம் அதன் முழு பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டால்,  புதிய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முந்தைய ஆட்சியின் எஞ்சிய காலத்தை மட்டுமே பூர்த்தி செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகளின் விதிமுறைகளை சீரமைக்க இரண்டாவது மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024, யூனியன் பிரதேசங்களின் அரசுச் சட்டம், (1963) பிரிவு 5 இல் தொடர்ச்சியான திருத்தங்களை முன்மொழிகிறது.  டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம், (1991) பிரிவு 5 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், (2019) பிரிவு 17, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுடன் தேர்தல்களை ஒருங்கிணைக்கிறது. 


முதல் கட்டமாக, மக்களவை மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோவிந்த் குழு பரிந்துரைத்தது.




Original article:

Share:

இந்தோ-பசிபிக் கட்டமைப்புகள் மற்றும் கூட்டணிகளை வழிநடத்துதல்

 இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் பல்வேறு இராஜதந்திரங்கள், கட்டமைப்புகள், குழுக்கள் மற்றும் கூட்டணிகளின் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தங்கள் உத்திகளை எவ்வாறு வடிவமைக்கின்றன. இந்தோ-பசிபிக் சூழலில் இராஜதந்திரம், கட்டமைப்புகள் மற்றும் கூட்டணிகளின் கருத்துக்களைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்? 


இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய புவிசார் அரசியலில் 21-ஆம் நூற்றாண்டின் இராஜதந்திர முடிவுகள் யதார்த்தமாக உருவெடுத்துள்ளது. அதன் அதிகரித்த முக்கியத்துவம் அதன் விரிவான புவியியல் பரப்பிலிருந்து பெறப்படுகிறது. இது உலக மக்கள்தொகை மற்றும் அதன் பொருளாதார பங்களிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டது, இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 62 சதவீதமும், உலகளாவிய வர்த்தகத்தில் பாதியும் ஆகும். 


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அதிகரித்த முக்கியத்துவம் பல்வேறு இராஜதந்திரங்கள், கட்டமைப்புகள், குழுக்கள் மற்றும் கூட்டணிகளின் பெருக்கத்திற்கு வழி வகுத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்(ASEAN)), ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் மிக சமீபத்தில் கனடா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் அனைத்தும் பிராந்தியத்தின் முன்னேற்றங்களில் செல்வாக்கு செலுத்த அந்தந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர முறைகளை உருவாக்க வழி வகுத்துள்ளன. 


இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய புவிசார் அரசியல் நிலைமையை ஆதரிக்கும் இராஜதந்திரம், கட்டமைப்புகள் மற்றும் கூட்டணிகளின் கருத்துகளைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். 


"இராஜதந்திரம்" என்பதன் வரையறை காலப்போக்கில் உருவாகியுள்ளது. முன்னதாக, சர்வதேச உறவுகளின் கோட்பாட்டாளர்கள் இராணுவ இராஜதந்திரங்களில் கவனம் செலுத்தினர். Modern Strategy (1999) என்ற புத்தகத்தில், "அரசியல் இலக்குகளை அடைய இராணுவ சக்தியைப் பயன்படுத்தும்" செயல்முறையே இராஜதந்திரம் என வரையறுத்தார்.


இருப்பினும், இராஜதந்திரத்தின் கருத்து "அதிகாரம்" மற்றும் "செயல்முறைகள்" ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது. ஜான் பேலிஸின் கூற்றுப்படி, "இராஜதந்திரம் இராணுவ வழிமுறைகளுக்கும் அரசியல் இலக்குகளுக்கும் இடையிலான இணைப்பை வழங்குகிறது".  இது தேசிய நலன்களை அடைவதற்கான நோக்கத்துடன் ஒரு பிராந்தியத்தை நோக்கிய தேசியக் கொள்கையை இணைக்கிறது. இது குறிப்பிட்ட தேசிய அல்லது கூட்டு நோக்கங்களை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட நீண்டகால திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கியது.  


இதற்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட விளைவை அடைய செயல்கள் அல்லது தொடர்புகள் எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டும் வழிகாட்டுதல்களை ஒரு கட்டமைப்பு குறிக்கிறது. அதேசமயம், அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வரையறுத்துள்ள, முறையான கூட்டணிகள், போர் அல்லது ஆக்கிரமிப்பு காலங்களில் ஒருவருக்கொருவர் பாதுகாக்க ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்பட்ட "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையிலான முறையான ஒப்பந்தங்கள்" ஆகும் என இராஜதந்திரத்தை வரையறை செய்துள்ளன. கூட்டணிகள் இரண்டு நாடுகளை (இருதரப்பு) அல்லது பல நாடுகளை (பலதரப்பு) உள்ளடக்கியிருக்கும். அதற்கு எடுத்துக்காட்டு வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) போன்றவை ஆகும்.


இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் (Free and Open Indo-Pacific (FOIP)) உத்தியானது 2016-ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற டோக்கியோ சர்வதேச ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான மாநாட்டில் (TICAD VI) ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே ஆசியான் ஒரு முக்கிய இணைப்பாக ஆசியா மற்றும் ஆபிரிக்கா இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் உள்ளடக்கிய சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. 


ஜப்பானின் பார்வை மூன்று தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை (i) சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தல்; (ii) பொருளாதார செழிப்பைப் பின்தொடர்தல்;       (iii)கடல்சார் சட்ட அமலாக்கத்தில் திறன் வளர்ப்பு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் (Humanitarian Assistance and Disaster Relief (HADR)) மீதான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாடு. 


இந்தோ-பசிபிக் (ASEAN Outlook on the Indo-Pacific (AOIP)) மீதான ஆசியான் கண்ணோட்டம் 2019-ஆம் ஆண்டு பாங்காக்கில் நடந்த 34-வது ஆசியான் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் நோக்கம் புதிய அமைப்புகளை உருவாக்குவதோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றை மாற்றுவதோ அல்ல.  ஆனால், ஆசியானின் சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை ஆதரிப்பதும், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் (ASEAN Defence Ministers Meeting Plus (ADMM-Plus)), ஆசியான் பிராந்திய மன்றம் (ASEAN Regional Forum (ARF)) மற்றும் விரிவாக்கப்பட்ட ஆசியான் கடல்சார் மன்றம் (Expanded ASEAN Maritime Forum (EAMF)) போன்ற ஆசியான் தலைமையிலான முயற்சிகளை வலுப்படுத்துவதும் ஆகும். 

இணைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற ஒத்துழைப்பின் பரந்த பகுதிகளையும் இது எடுத்துக்காட்டுகிறது. "பூஜ்ஜிய-தொகை முறை" ("zero-sum game") அணுகுமுறையால் ஏற்படும் அவநம்பிக்கை, தவறுகள் அல்லது பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களைத் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


குறிப்பாக இந்தோ-பசிபிக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களின் மத்தியில், பெரிய சக்திகளுக்கு இடையிலான உறவுகளை சமநிலைப்படுத்தும் ஒரு திறந்த, உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான பிராந்திய கட்டமைப்பை ஊக்குவிப்பதற்கான ஆசியானின் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது. 


அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் பிப்ரவரி 2022-ஆம் ஆண்டில் இந்தோ-பசிபிக் இராஜதந்திரத்தை வெளியிட்டது. இது ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீது கவனம் செலுத்துகிறது.  சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப நாடுகளின் இறையாண்மை முடிவுகளை எடுப்பதையும், கடல், வானம் போன்ற பகிரப்பட்ட களங்களில் சட்டபூர்வமான நிர்வாகத்தையும் இது வலியுறுத்தியது. சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக், பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இணைப்புகளை உருவாக்குதல், பிராந்திய செழிப்பை இயக்குதல், இந்தோ-பசிபிக் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் நாடு கடந்த அச்சுறுத்தல்களுக்கு பிராந்திய பின்னடைவை உருவாக்குதல் ஆகியவை அமெரிக்கா முன்னெடுக்க விரும்பும் முக்கிய நோக்கங்களாகும். 


அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உறுப்பினர்கள்  மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட உறுதியளித்துள்ளார். இந்தோ-பசிபிக் பரந்த மற்றும் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த இலக்குகளை அடைவதில் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue (Quad)), ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா (Australia, United Kingdom, United States (AUKUS)) போன்ற முக்கிய குழுக்களுக்கு இந்த பார்வை கவனத்தை ஈர்க்கிறது. 





குவாட் மற்றும் AUKUS  


மேற்கண்ட மூன்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இராஜதந்திர கட்டமைப்புகள் அல்லது பார்வைகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், பிராந்தியத்தில் குழுக்கள் அல்லது கூட்டணிகளாக செயல்படும் பிற வகைகளும் உள்ளன. அதில் ஒன்று குவாட் (Quad-Quadrilateral Security Dialogue) அமைப்பு ஆகும். இது  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இராஜதந்திர குழுவாகும். இவை அனைத்தும் பகிரப்பட்ட நலன்களுடன் ஜனநாயக ரீதியாக ஆளப்படும் நாடுகளாக உள்ளன.  


உள்கட்டமைப்பு மேம்பாடு, காலநிலை மாற்றம், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதாரம் (தடுப்பூசிகள்) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்த குவாட் முயல்கிறது. காலப்போக்கில், குவாட் பிராந்தியத்தில் அதன் செயல்பாட்டுப் பகுதிகளை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் குவாட் சுகாதார பாதுகாப்பு கூட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு, குவாட் இந்தோ-பசிபிக் தளவாட அமைப்புகள் போன்ற பல கூட்டாண்மைகளை அறிவித்துள்ளது.  மேலும், 2025-ஆம் ஆண்டில் அதன் முதல் குவாட்-அட்-சீ ஷிப் அப்சர்வர் திட்டத்தை (Quad-at-Sea Ship Observer Mission) அறிவித்தது. குவாட் அமைப்பின் ஆணை மிகவும் விரிவானது மற்றும் AUKUS போலல்லாமல் பல செயல்பாட்டு பகுதிகளை உள்ளடக்கியது. 


AUKUS என்பது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முதன்மை குறிக்கோளுடன், குறிப்பாக 2030-ஆம் ஆண்டின் முற்பகுதியில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவது உட்பட இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோள்.  கூட்டணியின் இரண்டாவது தூண் செயற்கை நுண்ணறிவு ஆகும். இதன் மூலம் சைபர் பாதுகாப்பு, மின்னணு போர் மற்றும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்கள் போன்ற பகுதிகளில் திறன்களை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த கூட்டணி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ திறன்களுக்கான நேரடி பதிலாக பரவலாக பார்க்கப்படுகிறது மற்றும் முதன்மையாக பாதுகாப்பு பரிமாணத்தில் கவனம் செலுத்துகிறது. 

வளர்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (The Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF)), 2022-ஆம் ஆண்டில் அமெரிக்காவால் மற்ற பதின்மூன்று நாடுகளுடன் தொடங்கப்பட்ட ஒரு பொருளாதார முயற்சியாகும். இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஆகும். இந்த  கட்டமைப்பானது வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், சுத்தமான பொருளாதாரம் மற்றும் நியாயமான பொருளாதாரம் ஆகிய நான்கு பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. வழக்கமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் போலல்லாமல், IPEF நெகிழ்வானதாக உள்ளது. மற்ற  நாடுகள் தங்கள் ஆர்வங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் எந்தெந்தப் பகுதிகளில் சேர வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.


இந்த கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் பாரம்பரிய வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய கடமைகளைத் தவிர்த்து பங்கேற்கும் வகையில், நாடுகளிடையே கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


முடிவில், மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட கட்டமைப்புகள், குழுக்கள் மற்றும் கூட்டணிகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வடிவமைக்கும் பல முன்முயற்சிகளின் சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்குகின்றன. நாடுகள் தங்கள் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்வதால், இப்பகுதி ஒன்றுடன் ஒன்று இராஜதந்திர கூட்டணிகள் மற்றும் கொள்கைகளின் சிக்கலான நிலப்பரப்பாக மாறியுள்ளது.  


பல முன்முயற்சிகள் பெரும்பாலும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் இலக்கு அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை சிக்கலாக்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று ஏற்படும் மோதல்கள் அல்லது தெளிவான குறிக்கோள்களின் பற்றாக்குறையின் சாத்தியத்தை அதிகரிக்கின்றன. எனவே, இந்த கட்டமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை கவனமாக புரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். பிராந்தியத்தின் வளர்ந்து வரும் இயக்கவியலை திறம்பட வழிநடத்துவதற்கு தகவலறிந்த மற்றும் நுணுக்கமான புரிதல்கள் முக்கியமானதாக இருக்கும். 




Original article:

Share:

லா நினா எங்கே? உலகளாவிய மாதிரிகள் ஏன் தங்கள் கணிப்பில் தவறின? - அஞ்சலி மரார்

 வானிலை மாதிரிகள் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே லா நினா தொடங்கும் என்று கணித்திருந்தன. ஆனால், அது நடக்கவில்லை. லா நினா ஏன் தாமதமாகிறது என்பது பற்றியும், உலகளாவிய மாதிரிகள் தங்கள் கணிப்பில் ஏன் தவறு செய்தன என்பதும் பற்றியும் காண்போம். 


  இந்த ஆண்டு முடிய சில நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், 2016-ஆம் ஆண்டை விஞ்சும் வகையில் 2024-ஆம் ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக இருக்கலாம் என்பதற்கு போதுமான காரணங்களும் தரவுகளும் உள்ளன. இதற்கு நேர்மாறான கணிப்புகள் இருந்தபோதிலும், லா நினா உருவாகவில்லை. 


காலநிலை நிகழ்வு ஏன் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டது ?


லா நினா என்றால் என்ன? 


லா நினா என்பது எல் நினோ தெற்கு அலைவு (El Niño Southern Oscillation (ENSO)) என்று அழைக்கப்படும் ஒரு நிலையாகும். இது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு காலநிலை நிகழ்வு ஆகும். வளிமண்டலத்தில் ஏற்ற இறக்க நிகழ்வுடன், ENSO உலகளாவிய வளிமண்டல சுழற்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது.  இதனால் இது உலகளவில் வானிலையை பாதிக்கிறது. 


ENSO மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. சூடான (எல் நினோ), குளிர் (லா நினா) இரண்டும் முதல் ஏழு ஆண்டுகள் ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கின்றன.  லா நினா கடைசியாக 2020-2023 ஆம் ஆண்டிலும், எல் நினோ 2023-24 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. 


நடுநிலை கட்டத்தில், பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) மேற்குப் பக்கத்தை (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு அருகில்) விட குளிராக இருக்கும். கிழக்கிலிருந்து மேற்காக நகரும் காற்று அமைப்புகள்,  இந்தோனேசிய கடற்கரையை நோக்கி வெப்பமான மேற்பரப்பு நீரை அடித்துச் செல்வதே இதற்குக் காரணம். இந்த இடம்பெயர்ந்த நீருக்கு பதிலாக கீழிருந்து ஒப்பீட்டளவில் குளிர்ந்த நீர் மேலே வருகிறது. 


எல் நினோ கட்டத்தில், இந்த காற்று அமைப்புகள் பலவீனமடைகின்றன. இது தென் அமெரிக்க கடற்கரையில் வெப்பமான நீரின் குறைந்த இடப்பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, கிழக்கு பசிபிக் வழக்கத்தைவிட வெப்பமாகிறது. லா நினா கட்டத்தில் இது இதற்கு நேர்மாறானது நிகழ்கிறது. இதனால் வியாபாரக் காற்றுகள் (trade winds) வழக்கத்தைவிட வலுவாகிறது. மேலும், அதிக அளவு தண்ணீரை மேற்கு பசிபிக் கடலை நோக்கி செலுத்துகிறது. 


இந்தியாவில், எல் நினோ குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பநிலையுடன் தொடர்புடையது. அதே நேரத்தில் லா நினா அதிகரித்த மழைப்பொழிவுடன் தொடர்புடையது மற்றும் குறைந்த வெப்பநிலையுடன் தொடர்புடையது. 


கடலின் தற்போதைய நிலை என்ன? இந்த ஆண்டு ENSO கணிப்புகள் என்ன? 


அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ( National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிவிப்பின் படி, டிசம்பர் 9 நிலவரப்படி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகை கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியைவிட குறைவாக இருந்தது. இதனால், நவம்பர் மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் லா நினா 'கண்காணிப்பு' தொடர்ந்ததால், ENSO நடுநிலை நிலைமைகளும் தொடர்ந்து நிலவின. 


கடந்த வாரம், நினோ 3.4 பகுதியில் ஓசியானிக் நினோ இன்டெக்ஸ் (ONI) மைனஸ் 0.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலின் நான்கு முக்கிய பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ENSO நிலையினை அறிவிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் மூன்று மாத சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியின், வெப்பநிலை கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இந்த பகுதியில் ONI மைனஸ் 0.5 டிகிரி அல்லது அதற்கும் கீழே வரும் போது லா நினா தொடக்கம் அறிவிக்கப்படுகிறது. 


இந்த ஆண்டு, சேகரிக்கப்பட்ட கடலின் தரவுகளின் அடிப்படையிலான வானிலை மாதிரிகள், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் லா நினா தோன்றக்கூடும் என்று பரிந்துரைத்தன.  பின்னர் அக்டோபர்-டிசம்பரில் லா நினா உருவாகும் என்று  இந்த கணிப்புகள் புதுப்பிக்கப்பட்டன.  இருப்பினும், சமீபத்திய கணிப்புகள், இப்போது டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் ஒரு குறுகிய மற்றும் பலவீனமான லா நினா உருவாகும் என்று கூறுகின்றன. 


ONI மதிப்புகள் தேவையான வரம்பு மதிப்பைத் தொட்டாலும், வெப்பநிலை சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இது லா நினா அத்தியாயத்தை சுருக்கமாகவும் லேசாகவும் மாற்றுகிறது. பலவீனமான லா நினா 2025-ஆம் ஆண்டு மார்ச்-மே மாதங்களில் ENSO-நடுநிலைக்கு மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் பொருள் லா நினா இந்த ஆண்டு இந்திய குளிர்காலத்தில் குறைந்தபட்ச தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 


லா நினா கணிப்புகள் இந்த ஆண்டு தவறியது ஏன்? 


பொதுவாக, கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் மாற்றங்களின் நிகழ்வுகளில், அதாவது வலுவான எல் நினோ அல்லது லா நினா இருக்கும்போது வானிலை மாதிரிகளின் துல்லியம் அதிகமாக இருக்கும். இந்த முறை இது சாத்தியமில்லை.  இது வானிலை மாதிரிகள் செய்திகளை சரியாகப் பெறாததற்கு வழிவகுத்தது. ஏனெனில், அவற்றின் உள்ளீடுகளில் நிமிட வெப்பநிலை மாறுபாடுகளை அவர்களால் ஒரு காரணியாக கருத முடியவில்லை. 


இதனால் காலநிலை தொடர்பான பிற காரணிகளும் அதன் மாதிரிகளும்  துல்லியமற்றதாக இருக்கக்கூடும்.


  1. கடல்-வளிமண்டல இணைப்பு 


இந்த ஆண்டு, கடலுக்கும் வளிமண்டலத்திற்கும் இடையிலான தொடர்பு எதிர்பார்த்தபடி இல்லை. இது பூமத்தியரேகை பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலையை அதிகமாகவோ அல்லது இயல்புக்கு அருகிலோ இருக்க வழிவகுத்தது. எல் நினோ நிலைமைகள் 2024ஆம் ஆண்டு வரை தொடர்ந்ததால் இது இருக்கலாம். அதாவது கடல் வெப்பநிலையின் அடிப்படையில் அதன் தாக்கம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. 


  1. மேற்கு காற்று முரண்பாடுகள் 


கடல் மேற்பரப்பு வெப்பநிலையை பராமரிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் வளிமண்டலம் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், லா நினா கட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், மேற்கு காற்று சில முரண்பாடுகளால் ஆதிக்கம் செலுத்ப்பட்டன. காலநிலை ரீதியாக, மேற்கு காற்று முரண்பாடுகள் லா நினாவின் வளர்ச்சிக்கு சாதகமற்றவையாக உள்ளன. 


  1. பருவமழை மற்றும் ENSO 


எல் நினோ கட்டம் முடிவடைந்து, ENSO நடுநிலை கட்டம் இந்திய கோடை பருவமழையின் தொடக்கத்துடன் ஒத்துப்போனதால், இந்த ஆண்டு ஜூன்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் ஏராளமான மற்றும் இயல்பான மழை பொழிவு இருந்ததது. இதன் மூலம் பருவமழையும் ENSO ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன.  ஒரு நல்ல பருவமழை மேற்கு காற்று முரண்பாடுகளை பாதிக்கும்.  இது லா நினாவின் தொடக்கத்தை தாமதப்படுத்தலாம் அல்லது  பாதிக்கலாம். 




Original article:

Share:

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. குறிப்பிடத்தக்க ஏற்றுமதி ஆதாயங்கள் எதிர்பார்க்கப்படும் நாடுகளில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதனால்தான், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதல் உள்ளது. பங்குதாரர்கள் நாட்டிற்கு அதிக சந்தைக்கான அணுகலை வழங்கினாலும், சிறிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை எந்த நாடும் பின்பற்றவில்லை.


2. இதற்கான முயற்சியை ஆதரிக்க, வணிக அமைச்சகம் ஒரு புதிய நிலையான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure (SOP)) உருவாக்குகிறது. எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான செயல்முறைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.


3. இது பிப்ரவரி 2022-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தம் (pact with the UAE) மற்றும் 2010-ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்புகளுடன் (ASEAN) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் உட்பட பல வர்த்தக ஒப்பந்தங்களைப் பின்பற்றுகிறது. இதன் விளைவாக ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக இறக்குமதியும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆரம்பகால விதிகளை மீறுவது குறித்த கவலைகளை எழுப்புகிறது. 


4. கரிம எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, நிலைத்தன்மை குறித்த எந்தவொரு விவாதமும் 'பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் (Common but Differentiated Responsibilities (CBDR))' கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்துவது பல்வேறு வளர்ச்சிப் பாதைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.


5. 2022-23ஆம் ஆண்டில், இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தகம் 16 சதவீதம் அதிகரித்து 20.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 11.4 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 10.5 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், அதன் இறக்குமதி 2021-22ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 2022-23ஆம் ஆண்டில் 8.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


உங்களுக்குத் தெரியுமா? 


1. இந்தியாவும் இங்கிலாந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஜனவரி 2022-ம் ஆண்டில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Free Trade Agreement (FTA)) பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளிட்ட 26 அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23ஆம் ஆண்டில் 20.36 பில்லியனிலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 21.34 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. 


2. கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)), அல்லது கார்பன் வரி (carbon tax), ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், எஃகு, சிமென்ட், உரம், அலுமினியம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற ஏழு கார்பன்-தீவிரத் துறைகளில் உள்ள நிறுவனங்கள், தரவைப் பகிர வேண்டும். அக்டோபர் 1, 2023 முதல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கார்பன் உமிழ்வு தொடங்குகிறது.


3. ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, இங்கிலாந்தும் கார்பன் உமிழ்வின் அடிப்படையில் உலோக இறக்குமதிக்கு வரி விதிக்க விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய பாணியிலான கரிம எல்லை சரிசெய்தல் செயல்முறை (carbon border adjustment mechanism (CBAM)) இந்தியா கணிசமான கட்டணங்களை நீக்கினாலும் இங்கிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும். இங்கிலாந்தின் கார்பன் வரி கடுமையானதாக இருக்கலாம். ஏனெனில், அதன் நோக்கங்களில் ஒன்று ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும். 


4. பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் எஃகு, கண்ணாடி மற்றும் உரம் போன்ற கார்பன்-தீவிரமான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட CBAM, வரி பற்றி இந்தியா கவலைகளை எழுப்பியது. இந்த வரியானது இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கும் இந்திய எஃகு உற்பத்தியாளர்களை பாதிக்கும்.


5. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டணி அமைப்பாகும். இது, 2021-ம் ஆண்டில், அவர்களுக்கு இடையேயான வர்த்தகம் 88 பில்லியன் யூரோக்கள் அல்லது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 10.8% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 10-வது பெரிய வர்த்தக நட்பு நாடாக இந்தியா உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த வர்த்தகத்தில் 2.1% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சேவைகளின் வர்த்தகம் 2020-ம் ஆண்டில் 30.4 பில்லியன் யூரோக்களை எட்டியது.


6. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)), பொருளாதார சிந்தனைக் குழுவானது, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற, அதன் ஒப்பந்தங்களை உலகளாவிய முதலீட்டு நடைமுறைகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தீவிரமான உடன்படிக்கை ரத்துகளால் ஏற்படும் எதிர்மறையான உணர்வை அது நிவர்த்தி செய்து அதன் பேச்சுவார்த்தை திறன்களை மேம்படுத்த வேண்டும். 2016-ம் ஆண்டிற்குள் இந்தியா தனது 80-க்கும் மேற்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் (Bilateral Investment Treaties (BIT)) 77 இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) தரவு குறிப்பிட்டது.



7. ஒரு தயாரிப்பின் தேசிய மூலத்தைத் தீர்மானிக்கும் தோற்ற விதிகள், இங்கிலாந்து உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுக்களில் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்த விதிகள் முக்கியமானவை. ஏனெனில், நாடுகள் அவற்றின் வளங்களின் அடிப்படையில் தயாரிப்புகளுக்கு வரிகள் அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. கூடுதலாக, இந்திய வர்த்தகம் மற்றும் வரித்துறை அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்து மதுபானம் மற்றும் விஸ்கி இறக்குமதிக்கான வரி குறைப்புகளை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகள் உள்ளூர் பாட்டில் தொழிலை பாதிக்கலாம். இதனால், பேச்சுவார்த்தை வேகம் குறைந்துள்ளது.


8. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக அமைப்பு (EFTA) நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பகுதியாக இல்லை. EFTA என்பது தடையில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் தீவிரப்படுத்தும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். ஐரோப்பிய சமூகத்தில் சேர விரும்பாத மாநிலங்களுக்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டது. ஏப்ரல்-பிப்ரவரி 2022-23ல் EFTA நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 1.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2021-22ல் 1.74 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2021-22ல் 25.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதிகள் 11 மாத காலப்பகுதியில் மொத்தம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வர்த்தக இடைவெளி EFTA குழுவிற்கு சாதகமாக உள்ளது.




Original article:

Share: