பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் - குஷ்பு குமாரி

 பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களான - பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா  (Pradhan Mantri Fasal Bima Yojana) மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (Restructured Weather Based Crop Insurance Scheme (RWBCIS)) விவசாயிகள் தங்கள் பயிர்களை இயற்கை பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க உதவும் வகையில், இரண்டு பயிர் காப்பீட்டு திட்டங்களை அரசாங்கம் 2025-26 வரை நீட்டித்துள்ளது. எனவே, PMFBY மற்றும் RWBCIS என்றால் என்ன?


ஜனவரி 1, 2025 அன்று, ஒன்றிய அமைச்சரவை இரண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களைத் தொடர ஒப்புதல் அளித்தது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) 2025-26 வரை நீட்டித்துள்ளது.. ரூ.824.77 கோடியில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியை (Fund for Innovation and Technology (FIAT)) உருவாக்குவதற்கும் ஒப்புதல் அளித்தது.


முக்கியமான அம்சங்கள் :


1. தற்போதுள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் (NAIS) மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் (Modified National Agricultural Insurance Scheme (MNAIS)) ஆகியவற்றை மாற்றுவதற்காக பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2016-ல் தொடங்கப்பட்டது. இது ஒரு நாடு, ஒரு பயிர், ஒரு காப்பீடு என்று பணி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், "அறிவிக்கப்பட்ட பகுதிகளில்" "அறிவிக்கப்பட்ட பயிர்களை" பயிரிடும் பங்குதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் பாதுகாப்புக்கு தகுதியுடையவர்கள்.


2. ஆரம்பத்தில், கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. பிப்ரவரி 2020-ல், அரசாங்கம் அனைத்து விவசாயிகளுக்கும் விருப்பமானதாக மாற்றியது.


3. விவசாயிகளின் வருவாயை நிலைப்படுத்துவது, அவர்களை விவசாயத்தில் வைத்திருப்பது, புதிய விவசாய முறைகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களுக்கு கடன் வழங்குவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். இயற்கை பேரழிவுகள், பூச்சிகள் அல்லது நோய்களால் பயிர்கள் பாதிக்கப்படுவதால் காப்பீடு வழங்கப்படுகிறது.


4. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ், ஒரு விவசாயி அனைத்து காரீஃப் உணவு தானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் 2% தவணைத் தொகையாக செலுத்த வேண்டும். அனைத்து ரபி உணவு தானியம் மற்றும் எண்ணெய்வித்து பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 1.5% அல்லது உண்மையான விகிதத்தில் எது குறைவாக இருந்தாலும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5% காப்பீடு வழங்கப்படுகிறது.


5. தொடக்கத்தில், அரசாங்கமும் மாநிலங்களும் உண்மையான காப்பீடு விகிதத்திற்கும் விவசாயிகள் செலுத்திய தவணைத் தொகைக்கும் இடையிலான செலவு வேறுபாட்டைப் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இப்போது தங்கள் சொந்த வரவு செலவு அறிக்கையில் (budgets) இருந்து கூடுதல் மானியங்களை விரும்பினால் சேர்க்கலாம்.


6. பிப்ரவரி 2020இல், அதன் காப்பீடு மானியத்தை பாசனம் இல்லாத பகுதிகளுக்கு 30% ஆகவும், பாசனப் பகுதிகளுக்கு 25% ஆகவும் தற்போதுள்ள வரம்பற்றவற்றிலிருந்து கட்டுப்படுத்த முடிவு செய்தது. முன்னதாக, ஒன்றிய மானியத்திற்கு உச்ச வரம்பு இல்லை.


தோட்டக்கலை காப்பீட்டிற்கு, விவசாயிகள் தவணை தொகையாக 5% செலுத்துகிறார்கள். மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலுத்துகின்றன.


7. பிப்ரவரி 2020-ல், வழிகாட்டுதல்கள் மாற்றப்பட்டன. ஒரு மாநிலம் தவணைத்தொகை மானியத்தில் அதன் பங்கை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், அடுத்த பருவத்தில் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.


8. பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களான - பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா  (Pradhan Mantri Fasal Bima Yojana) விளைச்சலை அடிப்படையாகக் கொண்டது. மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (Restructured Weather Based Crop Insurance Scheme (RWBCIS)) என்பது விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க மறைமுக நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிக மழை, காற்று மற்றும் வெப்பநிலை போன்ற வானிலைக்கு எதிராக விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. RWBCIS-ன் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளனர்.


புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியின் (Fund for Innovation and Technology (FIAT))  நோக்கம்


1. FIAT தொழில்நுட்பம் (YES-TECH), வானிலை தகவல் நெட்வொர்க் தரவு அமைப்பு (Weather Information and Network Data Systems (WINDS)) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மகசூல் மதிப்பீட்டு முறை போன்ற திட்டங்களின்கீழ் தொழில்நுட்ப முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தப்படும்.


2. YES-TECH ஆனது பரந்த பொருளில் தொலையுணர்தல் (Remote Sensing) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர் விளைச்சலைக் கணக்கிடுகிறது. குறைந்தபட்சம் 30% தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற ஒன்பது மாநிலங்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.


3. தொகுதி அளவில் தானியங்கி வானிலை நிலையங்கள் (Automatic Weather Stations (AWS)) மற்றும் பஞ்சாயத்து அளவில் தானியங்கி மழை அளவீடுகள் (Automatic Rain Gauges (ARGs)) அமைக்க திட்டமிடுகிறது. "WINDS-ன் கீழ், தற்போதைய நெட்வொர்க் அடர்த்தியில் 5 மடங்கு அதிகரிப்பு உயர்-உள்ளூர் வானிலை தரவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், தரவு வாடகை செலவுகளை மட்டுமே ஒன்றிய  மற்றும் மாநில அரசுகள் செலுத்த வேண்டும்  என்று  WINDS கூறியது.


1. டிசம்பர் 31 அன்று முடிவடைய இருந்த டை-அம்மோனியம் பாஸ்பேட் (di-ammonium phosphate (DAP)) மீதான டன்னுக்கு ரூ.3,500 சிறப்பு மானியத்தை ஜனவரி 1, 2025 முதல் மேலும் ஒரு வருட காலத்திற்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.


2. டை-அம்மோனியம் பாஸ்பேட்டில் 46 சதவீதம் பாஸ்பரஸ் உள்ளது.  டை-அம்மோனியம் பாஸ்பேட் பயிர்களுக்கு வேர் பரவல் மற்றும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. விவசாயிகள் விதைப்பு நேரத்தில் விதைகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.


3. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் வழக்கமான சிறுதானிய டை-அம்மோனியம் பாஸ்பேட் வழங்கல் நம்பகத்தன்மையற்றதாக இருப்பதால் விவசாயிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் உருவாக்கிய நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட் போன்ற மாற்று வழிகளை விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தேடி வருகின்றனர்.


4. நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட் என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு திரவமாகும். நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட்டை விட இது கையாள எளிதானது மற்றும்  குறைவானது.


5. 2021-ல் நானோ யூரியா அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2023-ல் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (Indian Farmers Fertilizer Cooperative Limited  (IFFCO)) நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட்டை அறிமுகப்படுத்தியது. இந்த கண்டுபிடிப்புகள், இறக்குமதி செய்யப்படும் உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.




Original article:

Share:

காடுகளின் நிலை அறிக்கை 2023-ன் கண்டுபிடிப்புகள் எதைக் காட்டுகின்றன? -பிரியாலி பிரகாஷ்,வாசுதேவன் முகுந்த்

 வனப் பரப்பில் சேர்க்கப்பட்ட காடுகளின் தரம் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வனச் சீரழிவுக்கான ( forest degradation) காரணங்களையும் அறிக்கை விரிவாக விளக்கவில்லை.


2023ஆம் ஆண்டு வன நிலை அறிக்கையை (State of Forest Report (SFR)), ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் டிசம்பர் 21, 2024 அன்று டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளியிட்டார். மரம் மற்றும் காடுகளின் பரப்பு, கார்பன் அளவுகள், காட்டுத் தீ மற்றும் பிற பசுமை அட்டை விவரங்களைக் கண்காணிக்க இந்திய அரசாங்கத்தால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வன நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.


2023ஆம் ஆண்டு வன நிலை அறிக்கை என்ன கண்டறிந்தது?


2023ஆம் ஆண்டு காடுகளின் நிலை அறிக்கையின் படி (State of Forest Report (SFR)), இந்தியாவின் பரப்பளவில் 25.17% காடுகள் மற்றும் மரங்களின் கீழ் உள்ளது. இதில், காடுகள் 21.76% நிலத்தையும், மரங்கள் 3.41% ஆகவும் உள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் SFR 2021-ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த எண்கள் 2021ஆம் ஆண்டு காடுகளின் நிலை அறிக்கை 21.71% மற்றும் 2.91%-ல் இருந்து சிறிய அதிகரிப்பைக் காட்டுகின்றன. மொத்த அதிகரிப்பு 1,445 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.


தேசிய வனக் கொள்கை (National Forest Policy 1988), இந்தியாவில் பசுமைப் பரப்பை நிர்வகிக்கிறது. நாட்டின் புவியியல் பகுதியில் 33% மரம் அல்லது காடுகளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.


சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவை காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்த மாநிலங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, லடாக்  மற்றும் நாகாலாந்து ஆகியவை காடு மற்றும் மரங்களின் பரப்பளவு குறைந்த முதல் நான்கு மாநிலங்களாகும்.


பசுமை பரப்பு என்றால் என்ன?


இந்தியாவில், வனப்பகுதி என்பது ஒரு ஹெக்டேர் அல்லது அதற்கு உரிமை அல்லது சட்ட அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், 10% அல்லது அதற்கு மேற்பட்ட மர விதானத்தை (canopy) வைத்திருத்தல் " என்று அறிக்கை கூறுகிறது.


காடுகளுக்கு வெளியே காணப்படும் சிறிய மரத் திட்டுகள் (ஒரு ஹெக்டேருக்கும் குறைவானது) மரங்களின் பரப்பில் இருக்கும். வனப் பரப்பு மதிப்பீட்டில் கணக்கிடப்படாத கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மரங்களும் இதில் அடங்கும்.


SFR செயற்கைக்கோள் தரவு, தேசிய வன இருப்பு (National Forest Inventory (NFI)) விவரங்கள் மற்றும் துல்லியத்திற்கான தரை சரிபார்ப்பு (ground-truthing) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. செயற்கைக்கோள் தரவு வனப்பகுதி மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் NFI வளர்ச்சி மற்றும் கார்பன் பங்குத் தரவை வழங்குகிறது. 2023 அறிக்கை அக்டோபர் முதல் டிசம்பர் 2021 வரையிலான செயற்கைக்கோள் தரவுகளையும் 2017 முதல் 2022 வரை சேகரிக்கப்பட்ட NFI தரவையும் பயன்படுத்துகிறது.


உணர்திறன் பகுதிகள் (sensitive areas) எவ்வாறு செயல்பட்டன?


2014 இல், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியின் (Western Ghats Eco-Sensitive Area (WGESA)) சிறப்பை பாதுகாப்பிற்காக அரசாங்கம் அறிவித்தது. 2023ஆம் ஆண்டு வன நிலை அறிக்கையின்படி (State of Forest Report (SFR)) இந்தப் பகுதி கடந்த பத்தாண்டுகளில் 58.22 சதுர கி.மீ காடுகளை இழந்துள்ளது. "மிகவும் அடர்ந்த" காடுகள் அதிகரித்தாலும், "மிதமான அடர்ந்த" மற்றும் "திறந்த" காடுகளாக குறைந்தன.


"மிகவும் அடர்ந்த" காடுகள் குறைந்தது 70% மர விதான அடர்த்தியையும் (canopy density), "மிதமான அடர்ந்த" காடுகள் 40-70% மற்றும் "திறந்த" காடுகள் 10-40% அடர்த்தியையும்  கொண்டுள்ளன.


மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உயிர்க்கோளத்தின் ஒரு பகுதியான நீலகிரி காடுகள் 2013 மற்றும் 2023க்கு இடையில் 123.44 சதுர கி.மீ காடுகளை இழந்துள்ளன. இப்பகுதியில் 2022-2023 முதல் 2023-2024 வரை நான்கு மடங்கு காட்டுத் தீ அதிகரித்துள்ளது.


கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் (Mangroves) சுருங்கி வருகின்றன. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 0.15% சதுப்பு நிலப்பரப்பு இருப்பதாக அறிக்கை மதிப்பிடுகிறது. 2021-ல் 7.43 சதுர கி.மீ. குறைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா சதுப்புநிலப் பரப்பை அதிகரித்த நிலையில், குஜராத்தின் கட்ச் பகுதி பெரிய இழப்பைக் கண்டது.


இந்த மரங்கள் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், கடல் அரிப்பைக் குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும், கடல் மட்டம் உயராமல் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், சூறாவளிகளின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.


இந்தியாவின்,  நிலப்பரப்பில்  வடகிழக்கு பகுதி 8%க்கும் குறைவாக உள்ளது. ஆனால், அந்த பகுதிகளில் மரம் மற்றும் காடுகள் 21%க்கும் அதிகமாக உள்ளன. 2023 ஆம் ஆண்டு காடுகளின் நிலை அறிக்கையின் படி, இப்பகுதி 327.3 சதுர கிலோமீட்டர் காடுகளை இழந்தது, விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்பட்டதால் சரிவின் ஒரு பகுதி ஏற்படுகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.


காடுகளின் நிலை அறிக்கையின் (State of Forest Report (SFR)) பொருந்தக்கூடிய தன்மை என்ன?


பசுமை பரப்பு குறித்த வரையறைகள் தெளிவாக இருந்தாலும், உள்ளடக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்டவை கவலைகளை எழுப்பியுள்ளன. உதாரணமாக, மரங்கள் கார்பனை உறிஞ்சும் என்பதால், அவை காலநிலை மாற்றத்திற்கான முக்கிய தீர்வாக மாறின. இதன் விளைவாக, பல சட்டமியற்றுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மரம் நடுவதை ஒரு எளிய தீர்வாக ஊக்குவிக்கத் தொடங்கினர்.


இருப்பினும், இந்த யோசனையில் சிக்கல்கள் விரைவில் தோன்றின. அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளும் மரங்களுக்கு ஏற்றவை அல்ல, தவறான இடங்களில் அவற்றை நடுவது தீங்கு விளைவிக்கும். இது உண்மையான நோக்கத்தை தோற்கடிக்கும். மேலும், சரியான சூழ்நிலையில் உள்ள பூர்வீக மற்றும் முதிர்ந்த மரங்கள் மட்டுமே கார்பனை நன்றாக உறிஞ்சும். இளம் மரங்கள் அல்லது தவறான சூழலில் இருக்கும் மரங்கள் அதிகம் உதவாது.


பழத்தோட்டங்கள், மூங்கில் மற்றும் பனை மரங்களை உள்ளடக்கிய காடுகளை SFR வரையறுக்கிறது. நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் பேராசிரியரான திவ்யா குப்தா, இது தவறான புள்ளிவிவரம் என்று கூறினார்.


மேலும் அவர் பழத்தோட்டங்கள், பனைகள் மற்றும் பூர்வீகமற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ப்பதன் மூலம், இயற்கை காடுகள் மற்றும் ஒற்றைப் பயிர்களுக்கு இடையிலான வேறுபாட்டை இவை அளிக்கின்றன என்று கூறினார். இந்த ஒருங்கிணைப்பு காடுகளின் ஆரோக்கியத்தை சித்தரிக்கிறது. காடழிப்பு மற்றும் சீரழிவை மறைக்கிறது. மேலும், நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற சிதைந்த பார்வையை (distorted view) இது அளிக்கிறது.


வடக்கு வங்காள வன முதன்மை தலைமை அலுவலகத்தின் துணை வனப் பாதுகாவல் அதிகாரியான சுதீப் புதாதித்யா டெப், அறிக்கையில் கூறப்பட்டுள்ள 1,445 சதுர கி.மீ அதிகரிப்பைவிட காடுகள் பரப்பின் உண்மையான அதிகரிப்பு மிகக் குறைவாக  உள்ளது என்று சுட்டிக்காட்டினார். 


காட்டுத் தீயை இந்தியா எவ்வாறு கண்காணிக்கிறது?


2023-2024 நெருப்புப் பருவத்தில், இந்திய வன ஆய்வு 112.67 லட்சத்திற்கும் அதிகமான குறுஞ்செய்தி விழிப்பூட்டல்களை சந்தாதாரர்களுக்கு அனுப்பியதாக  2023ஆம் ஆண்டு காடுகளின் நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அமைப்பு புனேவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ட்ராபிகல் மெட்டியோராலஜியின் வானிலை தரவுகளைப் பயன்படுத்துகிறது.


இந்தியாவின் காட்டுத் தீ எச்சரிக்கை அமைப்பு (fire alert system), இந்தியாவின் தொலை உணர்திறன் திட்டம் (Indian Remote Sensing Agency) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பாராட்டத்தக்க வழிமுறையாகும்" என்று டெப் கூறினார். (இந்தியாவின் தொலை உணர்திறன் திட்டம் இப்போது தேசிய தொலையுணர்வு மையத்தின் (National Remote Sensing Centre) ஒரு பகுதியாக உள்ளது.)


நாசாவின் அக்வா மற்றும் டெர்ரா செயற்கைக்கோள்கள் மற்றும் NOAA-ன் Suomi-NPP செயற்கைக்கோள் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்நேர விழிப்பூட்டல்களை வழங்குகிறது.


சமீபத்தில், இந்த செயற்கைக்கோள்களின் தரவுகள் இந்தியாவில் சர்ச்சையில் சிக்கியது. தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது போல், தேசிய தலைநகர் பகுதிக்கு அருகில் உள்ள நெல் விவசாயிகளிடம், அக்வா மற்றும் Suomi-NPP செயற்கைக்கோள்கள் கடந்து செல்லும் வரை, காடுகளை எரிப்பதை தாமதப்படுத்துமாறு அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். எரிவதைக் குறைப்பதற்கான மாநிலங்களின் முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைப் போல தோற்றமளிக்க இது செய்யப்பட்டது.


காடுகளின் நிலை அறிக்கை 2023-ன் படி, VIIRS செயற்கைக்கோள் 203,000 தீ எரிப்புப் பகுதிகளைக் கண்டறிந்தது. இது 2021-2022-ல் 223,000 ஆகவும், 2022-2023-ல் 212,000 ஆகவும் இருந்தது.


காடுகளை சேதப்படுத்தும் தீயில் இருந்து வளர உதவும் "நல்ல தீ"களை காடுகளின் நிலை அறிக்கை  பிரிக்கவில்லை.


வன நிலை அறிக்கை காலநிலை நடவடிக்கையுடன் தொடர்புடையதா?


எவ்வளவு கார்பனை உறிஞ்ச முடியும் என்பதைப் பார்க்கும் போது, ​​"கார்பன் பங்கு" என்பது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் உயிருள்ள மற்றும் உயிரற்ற பகுதிகளில் சேமிக்கப்பட்ட அனைத்து கார்பனையும் குறிக்கிறது. ஒரு முதிர்ந்த காட்டில், கார்பன் மரங்கள், மண், இலை குப்பைகள் மற்றும் இறந்த மரங்களில் சேமிக்கப்படுகிறது.


2022 ஆம் ஆண்டில், இந்தியா தனது கார்பன் இருப்பை 2030ஆம் ஆண்டளவில் 2.5-3 பில்லியன் டன்கள் வரை அதிக காடுகள் மற்றும் மரங்கள் மூலம் அதிகரிப்பதாக உறுதியளித்தது. தற்போதைய, கார்பன் இருப்பு சுமார் 30.4 பில்லியன் டன்கள் ஆகும்.


2021 முதல் 2023 வரை இந்தியா தனது கார்பன் இருப்பை 81.5 மில்லியன் டன்கள் மற்றும் அதன் வளர்ந்து வரும் பங்கு (உயிருள்ள மரங்களின் மொத்த அளவு) 4.25% அதிகரித்துள்ளது என்று 2023ஆம் ஆண்டு வன நிலை அறிக்கை  தெரிவிக்கிறது.


எவ்வாறாயினும், இந்த அறிக்கையில் காடுகளின் தரம் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் அல்லது காடுகளின் சேதத்திற்கு வாய்ப்பளிக்கும் காரணங்களை குறிப்பிடவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


"காடு கூறுபடுத்துதல் மற்றும் பல்லுயிர் ஆரோக்கியம் போன்ற முக்கிய குறிகாட்டிகள் இல்லாமல், அறிக்கையிடப்பட்ட புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தை முழுமையாக மதிப்பிடுவது சாத்தியமில்லை. நில பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்களைக் கண்காணிப்பதற்கான வழியும் அறிக்கையில் இல்லை." என்று குப்தா கூறினார்.




Original article:

Share:

புத்திசாலித்தனமான தலைமையின் செல்வாக்குமிக்க மரபை நினைவு கூர்தல் -சந்தோஷ் மெஹ்ரோத்ரா

 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றும் மாற்றங்கள் எதுவும் நிலைத்திருக்கவில்லை.


மன்மோகன் சிங்கின் மறைவு, 1991-ல் நிதியமைச்சராக அவர் முன்னின்று நடத்திய பொருளாதார சீர்திருத்தங்கள், மேலும் அவர் பிரதமராக இருந்த காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் (மான்டெக் சிங் அலுவாலியா, சி. ரங்கராஜன், ப. சிதம்பரம், சங்கர் ஆச்சார்யா மற்றும் பலர்) குழுவுடன் இணைந்து மேலும் முன்னேறிய  நீடித்த பாரம்பரியத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். 


1991 சீர்திருத்தங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொருளாதார வளர்ச்சி பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், 2004 முதல் 2014 வரையிலான காலகட்டம், அதைத் தொடர்ந்து வந்த காலகட்டம், குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது. தனிப்பட்ட கருத்தியல் கருத்துக்களுக்குப் பதிலாக சரிபார்க்கப்பட்ட அரசாங்கத் தரவைப் பயன்படுத்தி இந்த முரண்பாடுகளை ஆராய்வது அவசியம்.


இந்தக் காலகட்டத்திலிருந்து ஐந்து முக்கிய முடிவுகள் தனித்து நிற்கின்றன. அவை குடிமக்களின் வாழ்க்கையை பாதித்து, விரைவான கட்டமைப்பு மாற்றங்களுக்கு அடித்தளமிட்டன. இந்த மாற்றங்கள் 2040களில் இந்தியா உயர் மனித வளர்ச்சிக் குறியீட்டுடன் உயர் வருமானம் கொண்ட நாடாக மாற உதவியிருக்கும்.


பொருத்தமான பேரியல் பொருளாதாரக் கொள்கைகள்


முதலாவதாக, 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மக்கள்தொகை ஈவுத்தொகை தொடங்கியபோது சேமிப்பு விகிதம் உயரத் தொடங்கியது. சேமிப்பு-ஜிடிபி விகிதத்தில் அதிகரிப்புடன், அதிக முதலீடு-ஜிடிபி ஆகியவை, ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியது. 2003-2004 காலகட்டத்தில், சேமிப்பு விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23%-ஐ எட்டியதுடன், முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24%-ஐ எட்டியது. 


பேரியல் பொருளாதாரக் கொள்கைகள் இதை மேலும் அதிகரித்தன. அடுத்த ஆறு ஆண்டுகளில் முதலீடு-மொத்த உள்நாட்டு உற்பத்தி 24% லிருந்து 38% ஆக அதிகரித்தது. இது இந்தியா இதுவரை எட்டிய மிக உயர்ந்த முதலீட்டு விகிதமாகும். இது சீனாவின் விகிதத்தைவிட இன்னும் சற்று குறைவாக உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA I) முதல் ஆட்சிக் காலத்தில் 2004-05 முதல் 2008-09 வரை ஆண்டுக்கு சராசரியாக 8.5% வளர்ச்சி இருந்தது. இந்த வளர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியால் ஆதரிக்கப்பட்டது. ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு 15%-18%. எவ்வாறாயினும், உண்மையான பயனுள்ள மாற்று விகிதங்களை நிலையானதாக வைத்திருக்காமல் இந்த வளர்ச்சி நீடித்திருக்க முடியாது.


2008-09 உலகப் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், GDP வளர்ச்சி சில காலாண்டுகளுக்கு வீழ்ச்சியடைந்தது. ஆனால், விரைவாக மீண்டது. நன்கு வடிவமைக்கப்பட்ட நிதி மற்றும் பணவியல் கொள்கையின் தூண்டுதலால் 2009-14ஆம் ஆண்டில் 7.5% ஆண்டு வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, 2004-14 முதல் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 7.8% ஆக இருந்தது. இது இந்தியாவின் வரலாற்றில் முன்னோடியில்லாதது.


இரண்டாவதாக, அமைப்புசாரா மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, பொது மற்றும் தனியார் முதலீடு, இறுதிகட்ட நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசாங்க செலவுகள் ஆகியவை அடங்கும். அனைத்து வளர்ச்சி இயக்கிகளும் செயலில் இருந்ததால், இது நிலையான மொத்த தேவைக்கு வழிவகுத்தது. 


இதன் விளைவாக, வேளாண் அல்லாத வேலைகள் ஆண்டுக்கு 7.5 மில்லியன் என்ற முன்னோடியில்லாத விகிதத்தில் வளர்ந்தன. விவசாயம் தொழிலாளர்களின் வீழ்ச்சியைக் கண்டது, இது நேர்மறையானது. மற்ற அனைத்து துறைகளும் வேலை வாய்ப்புகளை உருவாக்கின. கட்டுமான வேலைகள் 2004-ல் 26 மில்லியனிலிருந்து 2012-ல் 51 மில்லியனாக உயர்ந்தது. இந்த விகிதம்  கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். 


உற்பத்தி வேலைகள் 8 மில்லியனாக அதிகரித்துள்ளன. முக்கியமாக உழைப்பு மிகுந்த துறைகளில், 52 மில்லியனிலிருந்து 60 மில்லியனாக உயர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு, கார் விற்பனை மற்றும் விநியோகம், வங்கி, காப்பீடு, ஓய்வூதியம், விமான நிறுவனங்கள், இரயில்வே, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற நவீன சேவைகளிலும் வேலைகள் வளர்ந்தன. அரை நூற்றாண்டு காலமாக மெதுவான கட்டமைப்பு மாற்றத்தைக் கண்ட பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்றது.


மூன்றாவதாக, 2004-05 வரை, விவசாயம் அல்லாத வேலைகள் மிக மெதுவாக வளர்ந்தன. இதன் விளைவாக, மக்கள் விவசாயத்திலிருந்து விவசாயம் அல்லாத துறைக்கு மாறினாலும், விவசாயத்தில் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. 


இருப்பினும், 2004க்குப் பிறகு, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் முதன்முறையாக, விவசாயத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை உண்மையில் குறைந்துள்ளது. விவசாயம் அல்லாத துறைகள் வேகமாக வளர்ந்ததே இதற்குக் காரணம். இந்த மாற்றம் 2014 வரை கிராமப்புறங்களில் தொழிலாளர் சந்தையை இறுக்கமாக்கியது. 2005-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) மூலம் அரசாங்கம் கடைசி முயற்சியாக வேலை வழங்குவதற்கு உதவியது.


நான்காவதாக, விவசாயம் அல்லாத வேலைகளின் வளர்ச்சியும், இறுக்கமான கிராமப்புற தொழிலாளர் சந்தையும் சேர்ந்து அதிக ஊதியத்திற்கு வழிவகுத்தது. உண்மையான ஊதியம் 2015 வரை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது சாதாரண ஊதிய வேலை மற்றும் வழக்கமான சம்பள வேலைகள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.


இறுதியாக, உண்மையான ஊதியங்கள் உயர்ந்ததால், தனியார் இறுதி நுகர்வு செலவு அதிகரித்தது. குறிப்பாக, எளிய நுகர்வோர் பொருட்கள் அடங்கும். இந்திய வரலாற்றில் முதன்முறையாக, வறுமையின் அளவு சற்று எண்ணிக்கையில்  குறைந்துள்ளது. இது 1950க்குப் பிறகு நடக்காத ஒன்று. 


1973-74ல் வறுமையின் தாக்கம் குறையத் தொடங்கியபோது, ​​2004 வரை மக்கள்தொகைப் பெருக்கத்தால் வறுமையின் அளவு அதிகமாகவே இருந்தது. 2004-05 மற்றும் 2011-12 க்கு இடையில், 138 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்ந்துள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். கிட்டத்தட்ட சீனாவின் முன்னேற்றத்தைப் போலவே ஈர்க்கக்கூடியதாக இருந்தது.


கொள்கையால் தூண்டப்பட்ட அதிர்ச்சிகள்


2015-ம் ஆண்டுக்குப் பிறகு சாதாரண மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய மாற்றங்கள் எதுவும் இல்லை. முதலாவதாக, கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 5.8% வளர்ச்சி விகிதம் உள்ளது. கொள்கையால் தூண்டப்பட்ட மூன்று அதிர்ச்சிகளால் இது ஆச்சரியப்படுவதற்கில்லை. 


முதலாவதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா துறை மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டது. இது பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (Micro, Small, and Medium Enterprises (MSMEs)) மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இது 2023-ம் ஆண்டின் ஒழுங்கமைக்கப்படாத துறை நிறுவனங்களின் தாமதமான தேசிய மாதிரி கணக்கெடுப்புகள் (NSS) வருடாந்திர கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ளது.

மோசமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் மோசமாக செயல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) மற்றொரு அதிர்ச்சி ஆகும். MSME-கள் மற்றும் அமைப்புசாரா துறைகள் அதற்குத் தயாராக இல்லை.


 அடுத்த ஒன்பது காலாண்டுகளில், GDP வளர்ச்சி விகிதம் சரிந்தது. கடைசியாக, கடுமையான அளவில் அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு தேவையற்றது. இது FY21 இல் இந்தியப் பொருளாதாரம் 5.8% சுருங்குவதற்கு வழிவகுத்தது. அதே நேரத்தில் உலகப் பொருளாதாரம் COVID-19 தொற்றுநோய்களின் போது 3.1% மட்டுமே சுருங்கியது.


இரண்டாவதாக, இந்தியாவில் வேலையின்மை 2011-12-ல் 2.2% ஆக இருந்து 2017-18-ல் 45 ஆண்டுகளில் 6.1% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது என்று NSSO தெரிவித்துள்ளது. 2011-12ல் ஒரு கோடியாக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2017-18ல் மூன்று கோடியாக உயர்ந்துள்ளது. 2022ல், எண்ணிக்கை குறைந்தது 70 லட்சமாக அதிகரித்துள்ளது. 


2004 மற்றும் 2013-க்கு இடையில், தொழில் மற்றும் சேவைகளில் வேலை வாய்ப்புகள் ஆண்டுக்கு 75 லட்சம் அதிகரித்தன. இருப்பினும், 2013 முதல் 2019 வரை, வேலை வளர்ச்சி ஆண்டுக்கு 29 லட்சமாக மட்டுமே குறைந்தது. இது வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 61% குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 10% அதிகரித்துள்ளது. 


2011-12ல் 6% ஆக இருந்த இளைஞர்களின் வேலையின்மை 2022-23ல் 11% ஆக உயர்ந்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் சுமார் 33% ஆகும். அதாவது மூன்றில் ஒரு பட்டதாரிக்கு வேலை கிடைக்காது. இதன் விளைவாக, பொறியாளர்கள் கூலி வேலை செய்கின்றனர். மேலும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த அளவிலான இரயில்வே வேலைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர்.


மூன்றாவதாக, வேகத்தைத் திரட்டிய கட்டமைப்பு மாற்றத்தின் செயல்முறை தலைகீழாக மாற்றப்பட்டு, இந்தியாவின் இளைஞர்களை மீண்டும் விவசாயத்திற்குத் தள்ளியது. 15 ஆண்டுகளாக (2004-19), 2004-05 மற்றும் 2017-18 இடையே விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.7 கோடி குறைந்துள்ளது. இருப்பினும், 2020 முதல் 2024 வரை, இந்த முன்னேற்றம் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது, எட்டு கோடி தொழிலாளர்கள் விவசாயத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்வளவு பெரிய அளவிலான தலைகீழ் இடம்பெயர்வு உலக வரலாற்றில் பார்த்ததில்லை.


உற்பத்தி, குறிப்பாக அமைப்புசாரா துறைகள், வேலை இழப்பில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. "மேக் இன் இந்தியா" முயற்சி தோல்வியடைந்தது. பொருளாதாரத்தில் உற்பத்தியின் பங்கு 2015 முதல் குறைந்து வருகிறது. 


25 ஆண்டுகளாக, இது மொத்த கூட்டு மதிப்பில் (GVA) 17% ஆக இருந்தது, ஆனால் 2022 இல், இது 13% என்ற வரலாற்றுக் குறைந்த அளவிற்குக் குறைந்தது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களுடன் விலையுயர்ந்த ஐபோன்களை அசெம்பிள் செய்வது அதிக வேலைகளை உருவாக்காது. 


இருப்பினும், ஆடைகள், ஜவுளிகள், தளவாடங்கள், தோல் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற உழைப்பு மிகுந்த தொழில்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. இந்தத் தொழில்கள் வேலைகளையும் ஏற்றுமதியையும் இழந்தன. 2012ல் உற்பத்தித் துறையில் 600 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 


2019-ம் ஆண்டில், இது கோவிட்-19க்கு முந்தைய ஆண்டைவிட 567 லட்சமாக குறைந்துள்ளது. 2022ல், "மேக் இன் இந்தியா" என்பதில் கவனம் செலுத்திய போதிலும், உற்பத்தித் தொழிலாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து 629 லட்சமாக இருந்தது.


மன உளைச்சல் மற்றும் ஊதியம் இல்லாத வேலை


ஏற்றுமதியை மோடி அரசு புறக்கணித்துள்ளது. 2004-ல் $77 பில்லியனில் இருந்து 2014-ல் $323 பில்லியனாக வணிகப் பொருட்களின் ஏற்றுமதி நான்கு மடங்கு வளர்ச்சியடைந்தது. 2014 மற்றும் 2022-க்கு இடையில் அவை $454 பில்லியனாக ஒன்றரை மடங்கு மட்டுமே வளர்ந்தன. உலகளாவிய சந்தைகளில் உற்பத்தி குறைவாக இருப்பதால், குறைவான வேலைகள் இருந்தன.


நான்காவதாக, ஊதிய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19க்கு முன் 2019-ல் 23.8% ஆக இருந்த மொத்த வேலைவாய்ப்பில் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களின் பங்கு 20.9% ஆகக் குறைந்தது. 2004-ல் 11.1 கோடியாக இருந்த குடும்பத் தொழிலாளர்கள், 2012-ல் 8.5 கோடியாகவும், பின்னர் 2017-ல் 6.2 கோடியாகவும், 2023-க்குள் 10.4 கோடியாகக் கடுமையாக உயர்ந்துள்ளனர். இந்த குடும்ப உறுப்பினர்களை (பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள்) மன உளைச்சல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.


 குடும்பத்தை ஆதரிப்பதற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை உருவானது. ஆனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இது வேலையின்மை விகிதத்தை முன்பைவிட சிறப்பாக தோற்றமளிக்கிறது. இது உண்மையில் இருப்பதைவிட சிறப்பாக உள்ளது. கூடுதலாக, தங்கம் சார்ந்த கடன்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தாதது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்த தலைகீழ் மாற்றங்கள் முந்தைய சாதனைகளை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. 2040-க்கு முன் இந்தியா அதன் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பெறுமா என்பது பற்றிய சரியான கவலைகளை அவர்கள் எழுப்பியுள்ளனர். அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் வரையறுக்கப்பட்ட மொத்த தேவை ஆகியவை இப்போது இந்தியாவின் "வளர்ந்த இந்தியா” (Viksit Bharat) ஆவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கலாம்.


சந்தோஷ் மெஹ்ரோத்ரா 2006 முதல் 2014 வரை திட்டக் கமிஷனில் பிரிவுகளை வழிநடத்தினார். அவர் 11 மற்றும் 12வது திட்டங்களை எழுதியவர் மற்றும் புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்தார்.




Original article:

Share:

கொடுக்கும் விலையும் நன்மையையும் : வங்காளதேசம், இந்தியா மற்றும் ஷேக் ஹசீனா குறித்து…

 ஷேக் ஹசீனாவை, தேர்ந்தெடுக்கப்படாத யூனுஸ் அரசிடம் இந்தியா ஒப்படைக்க முடியாது. 


புது தில்லிக்கும், டாக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அதாவது, ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்று வங்காளதேசத்தின் கோரிக்கை ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதனால், இருநாட்டு தரப்பு உறவுகளிலும் சமரசத்திற்கு எந்தவிதத்திலும் தயாராக இருப்பதாக தெரியவில்லை.


டிசம்பரில், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி டாக்காவின் பயணத்தின் போது, ​​வங்காளதேசத்தை நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் வர்த்தகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் நாடுகளின் இணைப்பு போன்ற திட்டங்களைத் தொடர்ந்து ஒத்துழைப்பை அவர் வலியுறுத்தினார். இதனால், இருதரப்பு நாடுகளின் எல்லையில் பதற்றம் தணிந்துள்ளதாகவும் தெரிகிறது.


கூடுதலாக, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தது. இந்தியாவின் விருந்தினராக ஹசீனா டெல்லியில் இருந்தபோது, ​​அவரது அரசியல் அறிக்கைகளை அது ஆதரிக்கவில்லை என்று அது தெளிவுபடுத்தியது. யூனுஸை இலக்காகக் கொண்ட அவரது செய்திகளும் இதில் அடங்கும்.


ஆனால், கடந்த வாரம் நிலைமை மாறியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி, வங்காளதேசம் இந்தியாவுக்கு "குறிப்பு வாய்மொழி" (note verbale), முறையான இராஜதந்திர செய்தியை அனுப்பியது. ஹசீனாவை நாடு கடத்த வங்காளதேசம் கோரியது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். கூடுதலாக, டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவர் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை" (crimes against humanity) செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் மாணவர் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் அடக்குமுறைக்கு உத்தரவிடுவதில் அவரது கூறப்படும் பங்கு தொடர்பானது.


இந்தியா-வங்காளதேசம் நாடு கடத்தல் ஒப்பந்தம் (India-Bangladesh extradition treaty), 2013-ம் ஆண்டில் கையெழுத்தானது மற்றும் 2016-ம் ஆண்டில் திருத்தப்பட்டது. நாடு கடத்துவதற்கான தெளிவான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், வங்காளதேசம் இந்த முறையான நடவடிக்கைகளை இன்னும் பின்பற்றவில்லை. வங்காளதேசத்தின் உள்நாட்டு அரசியல் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த குறிப்பு வாய்மொழி அறிக்கையாகத் தெரிகிறது. இந்தக் கோரிக்கையை முழுவதுமாக நிராகரிக்காத இந்தியாவின் பதில், பதற்றத்தை அதிகரிக்காமல் பிரச்சினையைக் கையாளும் விதமாகத் தோன்றுகிறது.


கோரிக்கையின் சட்ட அம்சங்கள் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், இந்த பிரச்சினை இந்தியா-வங்காளதேச உறவுகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது முக்கியம். இந்தியாவுக்கும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்துக்கும் இடையிலான நெருக்கமான வரலாற்றை யூனுஸ் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். வங்காளதேசத்தின் விடுதலையின் போது தியாகங்களின் வெளிப்பாடால் இந்த பிணைப்பு உருவானது.


1975-ம் ஆண்டில் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டதோடு, அவர் இந்தியாவில் நாடுகடத்தப்பட்டதும் இந்த தொடர்பை மேலும் வலுப்படுத்தியது. குறிப்பாக ஹசீனா அங்கு தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இந்தியா அவரை ஒப்படைக்கும் என எதிர்பார்ப்பது உண்மைக்கு புறம்பானது. எத்தனை வற்புறுத்தினாலும் இந்திய அரசை அத்தகைய கோரிக்கைக்கு இணங்க வைக்க முடியாது.


உதாரணமாக, 1959-ம் ஆண்டில் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த பிறகு சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய இந்தியா மறுத்தது. அதேபோல, ஷேக் ஹசீனாவை பொறுப்புவகிக்க வைப்பது இடைக்கால அரசாங்கத்தின் வேலை அல்ல. இதை வங்காளதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கையாள வேண்டும்.


டெல்லியில், வங்கதேசத்தில் ஹசீனாவின் அரசாங்கத்தின் தாக்கத்தை அங்கீகரிப்பது அவசியம். இந்திய மண்ணில் இருந்து அவரது அரசியல் அறிக்கைகள் உறவுகளை மோசமாக்கலாம். இந்த அறிக்கைகள் பயனுள்ளதா என்பதை இந்தியா கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.


எல்லைப் பதற்றம் மற்றும் புவிசார் அரசியல் நிலையின்மை போன்ற அபாயங்கள் இருப்பதால், இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் முக்கியமான உறவின் மற்ற அம்சங்களிலிருந்து தனித்தனியாக இந்த விசயத்தை நிர்வகிக்க வேண்டும்.




Original article:

Share:

சிறை கையேடு விதிகளில் திருத்தம்: சாதி அடிப்படையிலான பாகுபாடு பிரச்சினையை தீர்க்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், கைதிகளின் சாதி அடிப்படையிலான பாகுபாடு பிரச்சினைகளைத் தீர்க்க, 'மாதிரி சிறை கையேடு, 2016' மற்றும் 'மாதிரி சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம், 2023' ('Model Prison Manual, 2016' and the 'Model Prisons and Correctional Services Act, 2023') ஆகியவை திருத்தப்பட்டுள்ளன. 


கைதிகளின் சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்து உச்சநீதிமன்றம் அக்டோபர் 3, 2024 அன்று பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 


கையேட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளபடி, சிறை அதிகாரிகள் கைதிகளை அவர்களின் சாதியின் அடிப்படையில் பாகுபாடு, வகைப்படுத்தல், பிரித்தல் இல்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். 


"சிறைச்சாலைகளில் எந்தவொரு கடமையையும் அல்லது வேலையையும் ஒதுக்குவதில் கைதிகளுக்கு அவர்களின் சாதியின் அடிப்படையில் பாகுபாடு இல்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியது. 


மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் (2023) (Model Prisons and Correctional Services Act) 'பல்வகை' பிரிவில் 'சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை' என்ற புதிய தலைப்புடன் பிரிவு 55 ஆக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 


'கையால் கழிவுகளை அகற்றுபவர்களை பணியமர்த்தல் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013' ('The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013' )-ன் விதிகள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த நிறுவனங்களில்கூட கட்டுப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

"ஒரு சிறைக்குள் ஒரு கழிவுநீர் அல்லது கழிவுநீர் தொட்டியை கையால் மலம் அள்ளுவது அல்லது அபாயகரமான முறையில் சுத்தம் செய்வது அனுமதிக்கப்படாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், "வழக்கமான  குற்றவாளிகள்" தொடர்பாக வழிகாட்டுதல்களை வழங்கியதோடு, சிறை கையேடுகள் மற்றும் மாதிரி சிறை கையேடு ஆகியவை அந்தந்த மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட பழக்கமான குற்றவாளிகள் சட்டத்தில் வழங்கப்பட்ட வரையறைக்கு ஏற்ப இருக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டத்திற்கு எதிராக எந்தவொரு அரசியலமைப்பு சவாலுக்கும் உட்பட்டது. 


மாநிலத்தில் வாடிக்கையான குற்றவாளிகள் சட்டம் இல்லை என்றால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மூன்று மாத காலத்திற்குள் தங்கள் தீர்ப்புக்கு ஏற்ப தங்கள் கையேடுகள் மற்றும் விதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மேலும் அறிவுறுத்தியது. 


பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் அதிகார வரம்புகளில் பழக்கமான குற்றவாளிகள் சட்டத்தை இயற்றவில்லை என்பதாலும், பல்வேறு மாநிலங்களில் கிடைக்கக்கூடிய பழக்கமான குற்றவாளிகள் சட்டங்களில் வழக்கமான  குற்றவாளிகளின் வரையறையை ஆராய்ந்த பின்னர், மாதிரி சிறை கையேடு, 2016 மற்றும் மாதிரி சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டத்தில் தற்போதுள்ள 'வழக்கமான குற்றவாளி' என்பதற்கான வரையறையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  


உள்துறை அமைச்சகம் பின்வருவனவற்றைச் சேர்த்து உள்ளது. அவை: "வழக்கமான குற்றவாளி என்பது எந்தவொரு தொடர்ச்சியான ஐந்து ஆண்டு காலப்பகுதியிலும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களுக்காக இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், ஒரே பகுதிகளாக இல்லாமல் இருக்கும் நிலையில், மேல்முறையீடு அல்லது மறுபரிசீலனைக்குப் பிறகு தண்டனை மாற்றப்பட்டிருக்கக்கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


"மேலே குறிப்பிடப்பட்ட தொடர்ச்சியான ஐந்து ஆண்டுகளின் காலத்தைக் கணக்கிடும்போது, சிறையில் கழித்த எந்தவொரு காலமும் சிறைத்தண்டனையின்கீழ் அல்லது தடுப்புக்காவலில் கழித்த எந்தவொரு காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 




Original article:

Share:

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உடனடி நடவடிக்கை - ஹேமா யாதவ்ஸ் தர்மராஜ்

 கடுமையான விதிகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்பு அவசியம்.


நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (Urban cooperative banks (UCBs)) நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற சமூகங்களுக்கு சேவை செய்வதன் மூலம் நிதி உள்ளடக்கத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியாவில் சுமார் 1,470 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளன, இது 2004-ஆம் ஆண்டில் 1,926 என்ற எண்ணிக்கையில் இருந்தது. 


2023 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) ₹40 கோடி மதிப்புள்ள 211 அபராதங்களை விதித்தது. இது மற்ற வங்கி குழுக்களைவிட மிக அதிகம். 2014-ஆம் ஆண்டு முதல், வைப்புத்தொகையாளர்கள் மற்றும் பொது மக்களின் நலன்களுக்காக பாதுகாப்பற்ற செயல்பாடுகள், போதுமான மூலதனம் மற்றும் குறைந்த வருவாய் ஆகியவற்றைக் காரணம் காட்டி 78 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் துறையில் உள்ள பாதிப்புகளை வெளிப்படுத்துகின்றன. வலுவான கட்டுப்பாடானது மேற்பார்வைக்கான அவசர தேவையை எடுத்துக்காட்டுகிறது. 


நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், குறிப்பாக திட்டமிடப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (scheduled urban cooperative banks (SUCBs)), இணக்கம், இடர் மேலாண்மை மற்றும் உள் தணிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  உள் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது அதன் திறனை மேம்படுத்தலாம் மற்றும் நிதி மற்றும் அதன் அபாயங்கள் வெளிப்படுவதைக் குறைக்கலாம். சொத்து தரம், அழுத்தப்பட்ட சொத்துக்கள், பெரிய கடன் வெளிப்பாடுகள் மற்றும் துறை வாரியான முன்பணங்கள் உள்ளிட்ட நிதி அறிக்கைகளை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கிறது. செயல்படாத சொத்துக்கள் (NPAs) பற்றிய அறிக்கை,  வழங்கல் மற்றும் முதல் 50 கடன் வாங்குபவர்களுக்கான வெளிப்பாடு சொத்து தரத்தில் தெளிவைப் பராமரிக்க அவசியம். 


ஒழுங்குமுறை, மேற்பார்வை 


இந்தத் துறையை வலுப்படுத்த, ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 2025-ஆம் ஆண்டு  முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உடனடி திருத்த நடவடிக்கை (PCA) கட்டமைப்பை செயல்படுத்தும் மற்றும் தற்போதைய மேற்பார்வை செயல் கட்டமைப்பை (SAF) மாற்றும். 


PCA கட்டமைப்பு அடுக்கு 2 (₹100 கோடிக்கு மேல் மற்றும் ₹1,000 கோடி வரை வைப்புத்தொகை), அடுக்கு 3 (₹1,000 கோடிக்கு மேல் மற்றும் ₹10,000 கோடி வரை வைப்புத்தொகை), மற்றும் அடுக்கு 4 (₹10,000 கோடிக்கு மேல் வைப்புத்தொகை) போன்றவை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தும். 


அடுக்கு 1 பிரிவில் உள்ள நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் (₹100 கோடி வரையிலான வைப்புத்தொகை) இப்போதைக்கு விலக்கப்பட்டுள்ளன. மூலதன தன்மை, சொத்து தரம் மற்றும் லாபம் ஆகியவற்றிற்கான ஆபத்து வரம்புகளை கட்டமைப்பானது நிறுவுகிறது. 


மூலதனத்தின் போதுமான அளவு (capital adequacy), தேவையான குறைந்தபட்ச அளவைவிட அளவுகள் எவ்வளவு குறைகின்றன என்பதன் அடிப்படையில் மீறல்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைகள்: 250 அடிப்படைப் புள்ளிகள் வரை, 250 முதல் 400 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 400 அடிப்படைப் புள்ளிகளுக்கு மேல் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.


சொத்தின் தரம் நிகர செயல்படாத சொத்துகளின் (NNPAs) அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. NNPAகளின் சதவீதத்தின் அடிப்படையில் பல்வேறு வகைகள் உள்ளன: அவை, 6% அல்லது அதற்கு மேல் ஆனால் 9%க்குக் கீழே,  9% மற்றும் 12% இடையே மற்றும் 12% அல்லது அதற்கு மேல் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஒரு நகர்ப்புற கூட்டுறவு வங்கியானது தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளுக்கு ஆபத்து அளவுகளில் எந்த மீறல்களையும் புகாரளித்தால் உடனடி திருத்த நடவடிக்கை (PCA) கட்டமைப்பிலிருந்து வெளியேறலாம். 


மீள்தன்மையை உருவாக்குதல்


இணக்க சவால்களை எதிர்கொள்ள, நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் பின்வரும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் : 

கடுமையான வாடிக்கையாளர் காசோலைகளைப் பின்பற்றுவது மற்றும் நல்ல கடன் மற்றும் கடன் நடைமுறைகளை உறுதி செய்வது முக்கியம். இதில் கவனமாக கடன் மதிப்பீடுகள், முறையான ஆவணங்கள் மற்றும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றுதல் ஆகியவை அடங்கும். உறுதிமொழிகள், அடமானங்கள், உரிமைகள் மற்றும் பிணையங்கள் போன்றவற்றைத் திறம்பட நிர்வகிப்பது, வழக்கமான இணக்கச் சரிபார்ப்புகளுடன், அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.


ஒரு பிரத்யேக தலைமை இணக்க அதிகாரியுடன் (chief compliance officer (CCO)) நன்கு வடிவமைக்கப்பட்ட இணக்கத் திட்டம் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ஒழுங்குமுறை சிக்கல்களைக் கடைப்பிடிக்கவும் செயல்பாட்டு நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் உதவும். 


கடன் மற்றும் செயல்பாட்டு அபாயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை, இடர் மேலாண்மை குழுக்கள் உட்பட வலுவான நிர்வாக நிகழ்ச்சி நிரல்களை மேற்பார்வையிட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீண்டும் நிறுவ வேண்டும். கடன் இடர் மேலாண்மை திறமையான மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் அபாயங்களை அடையாளம் காணுதல், மதிப்பிடுதல் மற்றும் தணித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 


உடனடி திருத்த நடவடிக்கை (PCA) கட்டமைப்பு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்  கடன் மற்றும் செறிவு அபாயங்களை திறம்பட நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இது கடன் முறைகளை பல்வகைப்படுத்துதல், ஆபத்தான துறைகளுக்கான வெளிப்பாட்டைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான சொத்து தரத்தை பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 


இணங்குதல் மற்றும் இடர் மேலாண்மை குறித்த வழக்கமான பணியாளர் பயிற்சி, பயனுள்ள தணிக்கைகள், ஒழுங்குமுறை தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்தல் போன்றவை வைப்பாளர் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.


ஹேமா யாதவ்ஸ் இயக்குநர் மற்றும் தர்மராஜ், உதவி பேராசிரியர் வேம்னிகாம் (VAMNICOM) புனே.




Original article:

Share: