இந்தியா ஏன் காற்றை சுத்தம் செய்ய வேண்டும்? -அஜய் சிங் நாக்புரே

 இந்தியாவின் எதிர்காலத்திற்கான சுத்தமான காற்று, காற்றின் தர புள்ளிவிவரங்கள், அறிக்கைகளால் (dashboards) மட்டும் வடிவமைக்கப்படாது.  அது கூட்டாண்மைகள் மற்றும் தெளிவான நோக்கத்தைப் பொறுத்தது. நீடித்த தீர்வுகளுக்கு களத்தில் பணிபுரிபவர்களின் முயற்சிகள் தேவை. கொள்கைகளை செயல்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். காற்றின் தரத்தை மேம்படுத்த திட்டமிடுபவர்கள் உத்திகளை வடிவமைக்கிறார்கள். மாசுபாட்டைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை பொறியாளர்கள் உருவாக்குகிறார்கள். சமூக செயல்பாட்டாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாற்றத்தை ஏற்படுத்தவும் மக்களுடன் ஈடுபடுகிறார்கள்.


இந்தியாவின் காற்று மாசுபாடு குளிர்காலத்தில் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல; அது ஆண்டு முழுவதும் நீடிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு குளிர்காலத்திலும், மாசுபாடு ஏற்படுவதால் மக்கள் சுவாசிப்பதைக்  கடினமாக்குகிறது. மருத்துவமனைகளில் சுவாசப் பிரச்சினைகளால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது மற்றும்  நகரங்கள் அடர்த்தியான புகைமூட்டத்தால் மூடப்படுகின்றன. இந்திய நகரங்கள் பெரும்பாலும் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


இந்தியா தனது காற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதன் முன்னேற்றம் மெதுவாகவும் ஒருங்கிணைக்கப்படாமலும் உள்ளது. தேசிய தூய்மையான காற்று திட்டம் (National Clean Air Programme (NCAP)), பாரத் VI, மற்றும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) போன்ற திட்டங்கள் இதற்கு உதவுகின்றன. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நிலக்கரி பயன்பாடு சார்ந்த தொழில்களை நிறுத்துவதற்கான முயற்சிகளும் இதில் அடங்கும். இருப்பினும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான நடவடிக்கை இல்லாமல், பெரிய முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகலாம்.


கள யதார்த்தங்களுடன் ஒத்துப்போதல்


இந்தியா பெரும்பாலும் காற்று மாசுபாட்டை ஒரு தொழில்நுட்பப் பிரச்சினையாகவே பார்க்கிறது. ஆனால், உண்மையில் இது அரசாங்கத்தின் செயல்திறன், மக்கள்தொகை வளர்ச்சி, பொருளாதார சமத்துவமின்மை, சமூக நடத்தைகள் மற்றும் நீண்டகால பொருளாதார அமைப்புகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.


மருத்துவர்கள் அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள் என்பதைப் போலவே, காற்றின் தரத்தைப் படிப்பதன் மூலம் விஞ்ஞானிகள் உதவுகிறார்கள். இருப்பினும், உண்மையான தீர்வுகள் உள்ளூர் அதிகாரிகள், திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோரைப் பொறுத்தது. இவர்கள் வரையறுக்கப்பட்ட நிதி, உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் வேலை செய்கிறார்கள்.


நீடித்த மாற்றத்தைக் கொண்டுவர, அவர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்களின் இலக்குகள் காற்றின் தர முயற்சிகளுடன் ஒத்துப்போக வேண்டும்.


இந்தியா 2026ஆம் ஆண்டுக்குள் PM2.5 அளவை 2017ஆம் ஆண்டில் இருந்ததைவிட 40%-ஆகக் குறைக்க விரும்புகிறது. இது ஒரு பெரிய மற்றும் முக்கியமான குறிக்கோள் ஆகும்.  ஆனால், நிஜ உலக சவால்களை புறக்கணித்தால் அது வெற்றிபெறாமல் போகலாம்.


போக்குவரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். "வாகனங்கள் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன" என்று சொல்வது மட்டும் போதாது. நாம் கேட்க வேண்டியது:


- சாலையில் என்ன வகையான வாகனங்கள் உள்ளன?

- அவை என்ன எரிபொருளைப் பயன்படுத்துகின்றன?

- அவை எவ்வளவு பழையவை?

- அவை எவ்வளவு தூரம் பயணிக்கின்றன?

- போக்குவரத்து எவ்வளவு மோசமாக உள்ளது?


இந்த விவரங்கள் இல்லாமல், உள்ளூர் அரசாங்கங்கள் பயனுள்ள திட்டங்களை உருவாக்க முடியாது. தேசிய இலக்குகளை அடைய, மாசுபாட்டை ஏற்படுத்தும் அன்றாட நடவடிக்கைகளுடன் அவற்றை இணைக்க வேண்டும்.


செயலில் உள்ள திட்டங்கள்


சீனா தனது காற்றின் தரத்தை மேம்படுத்தியது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் அதன் நகரங்களுக்காக மிகப்பெரிய தொகையை ₹22 லட்சம் கோடியை  செலவிட்டது. ஒப்பிடுகையில், இந்தியாவின் NCAP பட்ஜெட் அதில் 1%-க்கும் குறைவாகவே உள்ளது.


இருப்பினும், தொடர்புடைய திட்டங்களைச் சேர்க்கும்போது, ​​காற்று தர முயற்சிகளுக்கான மொத்த நிதி மிக அதிகம். இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும்.


- PMUY (₹18,128 கோடி)

- மின்சார வாகனங்களுக்கான ஃபேம் II (₹10,795 கோடி)

- ஸ்வச் பாரத் மிஷன்-நகர்ப்புறம் (₹1.4 லட்சம் கோடி)

- NCAP தானே (₹11,542 கோடி)


இந்தத் திட்டங்கள் மாசுபாட்டின் மூலங்களை நிவர்த்தி செய்கின்றன மற்றும் இந்தியாவின் சுத்தமான காற்று உத்தியின் முக்கியப் பகுதிகளாகும்.


NCAP அதன் நிதிகளை நிர்வகிப்பதிலும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலும் சவால்களை எதிர்கொள்கிறது. இது முக்கியமாக காற்றின் தரத் தரவைப் பயன்படுத்துகிறது. ஆனால், இவை வானிலை மற்றும் புவியியல் போன்ற காரணிகள் முடிவுகளைப் பாதிக்கலாம். இது குறுகியகால மேம்பாடுகளைக் காண்பதை கடினமாக்குகிறது.


எடுத்துக்காட்டாக, PMUY மற்றும் கழிவு எரிப்பு கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்கள் சில பகுதிகளில் உமிழ்வைக் குறைக்க உதவியுள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்கள் மாசு தரவுகளில் காட்டப்படாமல் போகலாம். இதனால், எதுவும் முன்னேறவில்லை என்ற தவறான எண்ணம் ஏற்படுகிறது.


முன்னேற்றத்தை அளவிடுவதற்கான சிறந்த வழி, மாற்றப்பட்ட அடுப்புகளின் எண்ணிக்கை அல்லது டீசல் பேருந்துகள் அகற்றப்பட்டவை போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாகும். இந்த அணுகுமுறை தாக்கத்தின் தெளிவான வரைவைக் கொடுக்கும் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும்.


அளவீடுகளை மாற்றுவது மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது. மாசுபாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த விரிவான, பொதுவில் கிடைக்கக்கூடிய தரவு உள்ளூர் அரசாங்கங்களுக்கும் தேவை. இதில் கழிவுகள் எங்கு எரிக்கப்படுகின்றன, எந்த வீடுகள் திட எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன, கட்டுமானம் எங்கு நடைபெறுகிறது, எந்த சாலைகளில் அதிக போக்குவரத்து உள்ளது என்பதும் அடங்கும். இந்தத் தகவல் இல்லாமல், காற்று மாசுபாடு ஒரு தெளிவற்ற பிரச்சினையாகவே உள்ளது.  


இந்தத் தரவு இல்லாதது NCAP நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பதைப் பாதிக்கிறது. 2019ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடையில், வெளியிடப்பட்ட நிதியில் 60% மட்டுமே பயன்படுத்தப்பட்டன. காற்றின் தரம் இன்னும் உள்ளூர் அரசாங்கங்களின் முக்கியப் பொறுப்பாக இல்லாமல் ஒரு தனிப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.


நோக்கத்தை உண்மையான தாக்கமாக மாற்ற, இந்தியாவிற்கு படிப்படியான, தரவு சார்ந்த திட்டம் தேவை.


  • நிலை I: மிகப்பெரிய பங்களிப்பாளர்களைக் கண்டறிய உள்ளூர் மாசு மூலங்களின் தரவைச் சேகரிக்கப் பயன்படுகிறது.


  • நிலை II: மாசுபாட்டைக் குறைக்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நிதியை இயக்க இந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது.


  • நிலை III: காற்றில் மாசு அளவுகளை மட்டுமல்லாமல், உண்மையான உமிழ்வு குறைப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் வெற்றியை அளவிடலாம்.


இந்த அணுகுமுறை மாசுபாட்டைக் கண்காணிப்பதில் இருந்து அதை தீவிரமாக நிர்வகிப்பது மற்றும் குறைப்பது வரை நகர்கிறது.


மேலோட்டமான தீர்வுகளுக்கு எதிரான பாதுகாப்பு


இந்தியா அதிக டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதால், அது "மேற்கத்திய பொறியை" தவிர்க்க வேண்டும். முக்கிய மாசு மூலங்களைப் புறக்கணிக்கும் அதே வேளையில் உயர் தொழில்நுட்பம், நகரத்தை மையமாகக் கொண்ட தீர்வுகளை அதிகம் சார்ந்துள்ளது. புகைமூட்ட கோபுரங்கள், AI டேஷ்போர்டுகள் மற்றும் நிகழ்நேர தரவு மேம்பட்டதாக இருக்கலாம். ஆனால், உயிரி எரிப்பு, காலாவதியான தொழில்கள் மற்றும் மாசுபடுத்தும் வாகனங்கள் போன்ற சிக்கல்கள் தொடர்ந்தால் அவை பயனற்றவை. இலண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்கள் பல வருட அடிப்படை சீர்திருத்தங்களுக்குப் பிறகுதான் உயர் தொழில்நுட்ப தீர்வுகளை ஏற்றுக்கொண்டன. இந்தியா அதன் அணுகுமுறையில் சரியான வரிசையைப் பின்பற்ற வேண்டும்.


இந்த தவறான சீரமைப்பு உயரடுக்குகளின் கையகப்படுத்தலுக்கு வழிவகுக்கும். நகரங்கள் மேம்பட்ட கருவிகளைப் பெறக்கூடும், அதே நேரத்தில் உமிழ்வுக்கு அதிக பங்களிக்கும் கிராமப்புற மற்றும் முறைசாரா துறைகள் விடுபட்டுள்ளன. இன்னும் மோசமாக, இந்த கருவிகள் உண்மையான சீர்திருத்தங்களிலிருந்து தோற்றங்களுக்கு கவனத்தை மாற்றக்கூடும். உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் அல்லது அதைப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லாவிட்டால் அது அதிக நடவடிக்கைக்கு சமமாகாது.


கல்வி ஆராய்ச்சியை நடைமுறை தீர்வுகளிலிருந்து பிரிப்பது முக்கியம். ஆராய்ச்சி நீண்டகால புதுமைகளை இயக்குகிறது. ஆனால், கொள்கை வகுப்பாளர்களுக்கு விரைவான, அளவிடக்கூடிய தீர்வுகள் தேவை. இந்தியாவிற்கு தனித்தனி நிதி பிரிவுகள் இருக்க வேண்டும். ஒன்று ஆராய்ச்சிக்கும் மற்றொன்று உலக நடவடிக்கைக்கும் தேவை. இவை இல்லாமல், உண்மையான முன்னேற்றத்தை விட குறைவான முன்னேற்றம்  மட்டுமே ஏற்படும்.

மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?


உலகளாவிய எடுத்துக்காட்டுகள் சில வழிகாட்டுதலை வழங்குகின்றன. சீனா நிலக்கரி ஆலைகளை மூடியது. பிரேசில் சமூகத்தால் நடத்தப்படும் கழிவு அமைப்புகளைப் பயன்படுத்தியது. கலிபோர்னியா மாசுபாட்டின் வருவாயை ஏழை சமூகங்களுக்கு செலவிட்டது. சென்சார்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு லண்டன் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்தது. ஒவ்வொரு நாடும் அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு பாதையைப் பின்பற்றி வெற்றி பெற்றன. இந்தியா அதன் கூட்டாட்சி அமைப்புடன் செயல்பட்டு முறைசாரா பொருளாதாரத்திற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அதையே செய்ய வேண்டும்.


இந்தியாவின் எதிர்காலத்திற்கான சுத்தமான காற்று, காற்றின் தர புள்ளிவிவரங்கள், அறிக்கைகளால் (dashboards) மட்டும் வடிவமைக்கப்படாது.  அது கூட்டாண்மைகள் மற்றும் தெளிவான நோக்கத்தைப் பொறுத்தது. அதற்கு நாம் அடிப்படைக் கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும். சுத்தமான காற்று என்பது ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு உரிமையாக இருக்க வேண்டும். இதை அடைய, வெறும் வாக்குறுதிகளைவிட ஒருங்கிணைப்பு, துணிச்சல் மற்றும் உண்மையான செயல்பாடு போன்றவை  தேவை.


அஜய் எஸ். நாக்புரே நகர்ப்புற அமைப்புக்கான ஆராய்ச்சி அறிஞர் ஆவார் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள அர்பன் நெக்ஸஸ் ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.


Original article:
Share:

ஓய்வூதிய துயரங்கள் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ​​உறுப்பினர் - ஓய்வூதியதாரர்கள் பற்றி . . .

 ஓய்வூதிய கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்யும்போது ஒன்றிய அரசு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.


தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைக்குழு, ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான 2025–26 கோரிக்கைகள் குறித்த தனது அறிக்கையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (Employees’ Provident Fund Organisation (EPFO)) கீழ் உறுப்பினர் ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ₹1,000-ஐ திருத்த வேண்டியதன் அவசரத் தேவையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 1995-ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees’ Pension Scheme (EPS)) கீழ் ஆகஸ்ட் 2014-ல் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகை, ஒரு பத்தாண்டுகளுக்கு மேலாக மாறாமல் உள்ளது. முரண்பாடாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance (UPA)) ஆட்சியில் முன்னர் அறிவிக்கப்பட்ட ஒரு முடிவை மட்டுமே செயல்படுத்திய போதிலும், 2014-ஆம் ஆண்டு ஓய்வூதிய உயர்வுக்கான பெருமையை பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து பெற்று வருகிறது. 2014-ஆம் ஆண்டில், UPA ₹1,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முன்மொழிந்தபோது, ​​எதிர்க்கட்சியில் இருந்த பாஜக, இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று விமர்சித்தது. அதன் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் இதை "அற்பமானது" என்று கூறி குறைந்தபட்சம் ₹3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரினார்.

 

தற்போது, ​​குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகைக்காக ஆண்டுதோறும் சராசரியாக ₹980 கோடியை அரசு ஒதுக்குகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிப்புக்கு மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும். கூடுதலாக, ஊழியர் ஓய்வூதியத் திட்ட நிதிக்கு 1.16% ஊதியத்தை (மாதாந்திர ஊதிய உச்சவரம்பு ₹15,000) ஒன்றிய அரசு வழங்குகிறது. இது 2024-25ல் ₹9,250 கோடியாக மாற்றப்பட்டு 2025-26ல் ₹10,000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிச் சுமையைத் தாங்க முடியாது என்பது அரசாங்கத்தின் வாதம். ஆனால், கூடுதல் செலவினங்களை நிர்வகிப்பதற்கான சாத்தியமான பரிந்துரைகள் தொழிலாளர் மற்றும் நிதி அமைச்சகங்கள் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி  அமைப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற விரும்புவோரின் விண்ணப்பங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கையாள்வதும் சமமாக உள்ளது. பல விண்ணப்பதாரர்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கான கோரிக்கை அறிவிப்புகளைப் பெறுகிறார்கள். ஆனால், அவர்களின் ஓய்வூதியத் தொகைகள் அல்லது நிலுவைத் தொகைகள் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. பல சூழல்களில், EPFO ​​அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை வழங்காததால், புதுப்பிப்புகளுக்கு அவர்கள் தங்கள் ஆன்லைன் கணக்குகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. தெளிவான வழிகாட்டுதலுக்குப் பதிலாக, அவர்கள் ஒரு மறுப்பு மற்றும் துல்லியத்திற்கான உத்தரவாதம் இல்லாத இணைய கணக்கிடும் கருவி (calculator) பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்கள் விளக்கம் இல்லாமல் நிராகரிக்கப்படுகின்றன. மேலும், முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அனைத்து உறுப்பினர் ஓய்வூதியதாரர்களும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


Original article:
Share:

தொகுதி மறுவரையறை பற்றிய தெற்கின் கவலைகள் ஏற்கக்கூடியவை -பழனிவேல் தியாக ராஜன்

 அரசியலமைப்பில் "மாநிலங்களின் ஒன்றியம்" (Union of States) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், உலகின் மிகவும் மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில், சமூகம் முன்னேறி பொருளாதாரம் வளரும்போது, ​​உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. இது பொறுப்புடைமை மற்றும் சுயாட்சியை (self-governance) மேம்படுத்துகிறது. இருப்பினும், குடியரசாக மாறியதிலிருந்து, இந்தியா அதிகாரப் பரவலுக்கு எதிரான திசையில் நகர்ந்துள்ளது. அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சி முன்பைவிட தீவிரமாகவும், ஆக்ரோஷமாகவும் உள்ளது. உண்மையில், இந்த அதிகாரக் கொள்ளை மிகவும் தீவிரமானதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் மாறிவிட்டதால், இது டெல்லியின் வழக்கமான கட்டுப்பாட்டு உத்தியா அல்லது இதில் பெரியதாக ஏதாவது இருக்கிறதா?


இந்தியா உலகளாவிய போக்குகளுக்கு எதிரான ஒரு அசாதாரண  பொருளாதார மற்றும் மக்கள்தொகை முறையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில், பொருளாதார ரீதியாக வலுவான பகுதிகள் இடம்பெயர்வு மூலம் அதிக மக்களை ஈர்க்கின்றன. அதே, நேரத்தில் ஏழ்மையான பகுதிகள் மக்கள் தொகை குறைவைக் காண்கின்றன. ஆனால் இந்தியாவில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) அதிக பங்களிக்கும் தென் மாநிலங்கள், சிறிய மக்கள்தொகையையும் குறைந்த பிறப்பு விகிதங்களையும் கொண்டுள்ளன. மாறாக, வட மாநிலங்கள் மிகப்பெரிய மக்கள்தொகையையும் அதிக பிறப்பு விகிதங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான வளர்ச்சி மற்றும் பொருளாதார குறியீடுகளில் தேசிய சராசரியை விட கணிசமாக பின்தங்கியுள்ளன.


பல ஆண்டுகளாக தென் மாநிலங்களிடமிருந்து அதிக வரிகளை வசூலித்து, அவற்றை ஏழை வட மாநிலங்களுக்கு மறுபகிர்வு செய்த போதிலும், அவற்றுக்கிடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. ஏழை மாநிலங்களை மேம்படுத்தத் தவறியது தற்போதைய அரசாங்கங்களின் தவறு மட்டுமல்ல, இது பல ஆண்டுகளாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.


தவிர்க்க முடியாத படிப்பினைகள்: முதலாவதாக, ஏழை மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், பணம் பின்தங்கிய மாநிலங்களுக்கு எந்த பரிமாணத்திலும் முன்னேற உதவாது. மேலும், பல ஆண்டுகளாக இந்த பிராந்தியங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தவறியது இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.



இந்தச் சூழலில்தான், 50 ஆண்டுகால தொகுதி மறுவரையறை முடக்கம் முடிவுக்கு வந்த நிலையில், தென் மாநிலங்கள் மக்களவையில் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்ற கடுமையான கவலைகள் உள்ளன. மூன்று முக்கிய பிரச்சினைகள் இதை மேலும் கவலையடையச் செய்கின்றன.


முதலாவதாக, தற்போதைய அரசாங்கம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் முக்கிய, சட்டப்பூர்வமாக கேள்விக்குரிய முடிவுகளை எடுக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. 370-வது பிரிவை நீக்குதல் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அரசாங்கம் நாடாளுமன்ற விவாதத்தை புறக்கணித்துள்ளது, விவசாயச் சட்டங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டபோது காணப்பட்டது போல, இந்த சர்வாதிகார முடிவெடுக்கும் முறை ஜனநாயகத்தின் மீதான பொறுமையின்மையை மட்டுமல்ல, அரசியலமைப்பை புறக்கணித்ததையும் காட்டுகிறது. தொகுதி மறுவரையறை காலக்கெடு நெருங்கி வருவதால், கடந்தகால நடவடிக்கைகள் மீண்டும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தை எழுப்புகின்றன.


இரண்டாவதாக, 2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரிக்க முடியாத தாமதம், தொற்றுநோய் கவலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. சரியான நேரத்தில், துல்லியமான மக்கள் தொகை தரவு கொள்கை வகுத்தல் மற்றும் நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமானது. தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு பொறுப்பான அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்கி முடித்திருக்க வேண்டும். இருப்பினும், ஒன்றிய அரசு எந்த தெளிவான காரணமும் இல்லாமல் அதைத் தொடர்ந்து தாமதப்படுத்துகிறது.


2002ஆம் ஆண்டு முடக்கம் தொடர்பான மசோதா, முடக்கம் முடிந்த பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து தொகுதி மறுவரையரை செய்யப்பட  வேண்டும் என்று கூறுகிறது. சாதாரண சூழ்நிலையில், அது 2031-ல் நடைபெற்றிருக்கும். இருப்பினும், முடக்கம் 2026-ல் முடிவடைந்தவுடன் மறுவரையறையை நடத்துவதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தியதாக கவலை உள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 2031 அல்லது அதற்குப் பிறகு வரை காத்திருப்பதற்குப் பதிலாக, 2029-ல் முடிவடைவதற்கு முன்பு மறுவரையறையை முடிக்க அனுமதிக்கும்.


மூன்றாவதாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது அரசாங்கத்தின் நீண்டகால நோக்கங்கள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.


அரசியலமைப்பு விதிமுறைகள், நடைமுறை அல்லது வெற்றிக்கான வாய்ப்புகளைக்கூட கருத்தில் கொள்ளாமல், சீர்குலைக்கும் முடிவுகளை எடுக்கும் வரலாற்றை ஒன்றிய அரசாங்கம் கொண்டுள்ளது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாக அமல்படுத்துதல் மற்றும் தயாரிப்பதற்கு சிறிது நேரம் அவகாசகம்கூட வழங்காத திடீர் நாடு தழுவிய ஊரடங்கு ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த முறை, மறுவரையறை மற்றொரு பெரிய கவனச்சிதறலாக இருக்கலாம். இது கொள்கை தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடும். கொள்கை தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அதே வேளையில், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு அரசியல் அதிகார சமநிலையை மாற்றும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு வேறு எந்தப் பிரச்சினையையும்விட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை மிக முக்கியமான பிரச்சினையாகும்.


நியாயமான பிரதிநிதித்துவம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய கொள்கையாகும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, விரைவான மக்கள்தொகை வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் அதிகரித்து வறுமையை அதிகரிக்கும் என்று இந்தியா கவலைப்பட்டது. சீனாவும் இதே கவலைகளைக் கொண்டிருந்தது. மேலும், கடுமையான அரசு அமல்படுத்திய ‘ஒரு குழந்தை’ கொள்கை மூலம் அவற்றை நிவர்த்தி செய்தது. ஒரு ஜனநாயக நாடாக, இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக, பிறப்பு விகிதங்களைக் குறைக்க கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைப் பயன்படுத்தியது. இருப்பினும், 1970-களின் நடுப்பகுதியில், சில மாநிலங்கள் மற்றவற்றைவிட வேகமாக மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைத்து வருகின்றன. இந்த வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வை உணர்ந்த அரசாங்கம், முதலில் 1976-ல் 42வது திருத்தம் மற்றும் மீண்டும் 2002-ல் 84-வது சட்டத் திருத்தம் மூலம் தொகுதி மறுவரையறையை முடக்கி வைத்தது. 2026-ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், இந்த வேறுபாடு 1976 அல்லது 2002-ல் இருந்ததை விட மோசமாக உள்ளது.


தொகுதி மறுவரையறை இந்தியாவின் அரசியல் சமநிலையை பெரிதும் மாற்றக்கூடும். இது இருக்கை பங்கீட்டைவிட அதிகமாக பாதிக்கும். தற்போது, மாநிலங்களில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் நாட்டை திறம்பட கட்டுப்படுத்துகிறார்கள். தொகுதி மறுவரையறை இந்த ஏற்றத்தாழ்வை தீவிரப்படுத்தும். இது இந்த மாநிலங்களின் மேலாதிக்க நிலையை பல தலைமுறைகளாக உறுதிப்படுத்தும். ஒரு மொழி மற்றும் கலாச்சாரப் பகுதி தனியாக நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடிந்தால், அது ஒரு நியாயமற்ற அரசியல் அமைப்பை உருவாக்குகிறது. இது ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட பகுதிகளை மேலும் பலவீனப்படுத்தி ஓரங்கட்டும்.


மக்கள்தொகை தரவுகளும் சமீபத்திய தேர்தல் முடிவுகளும் ஒரு கவலையான படத்தை வெளிக்காட்டுகின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பாஜக வட மாநிலங்களில் இன்னும் அதிகமான இடங்களை வென்றிருக்கும். ஒரு கட்சி வட மாநிலங்களில் 65% சதவீதத்தை மட்டுமே வென்று, தென் மாநிலங்களில் வெறும் ஐந்து சதவீதத்தை மட்டுமே கைப்பற்றுவதன் மூலம் ஒன்றிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற சூழ்நிலையில், தெற்கு கவலைகளை நிவர்த்தி செய்ய தேசிய கட்சிகளுக்கு என்ன ஊக்கம் உள்ளது?


தேர்தல் புவியியலில் ஏற்பட்ட இந்த மாற்றம், முழு பிராந்தியங்களையும் புறக்கணித்து நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தால், அது ஒன்று வட மாநில வாக்குகள் தேர்தல்களை தீர்மானிக்கின்றன. மற்றொன்று தென் மாநில செல்வாக்கு பலவீனமடைகிறது. தென் மாநிலங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளித்த போதிலும், இந்த வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடும். 


அதிக மக்கள்தொகை கொண்ட, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் அதிக நாடாளுமன்ற இடங்களால் என்ன லாபம் அடைகின்றன? இந்த வட மாநிலங்கள் ஏற்கனவே அதிக பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. மேலும், ஒன்றிய அரசின் நிதியில் மிகப்பெரிய பங்கைப் பெறுகின்றன. அதே, நேரத்தில் தேசிய வருவாய்க்கு மிகக் குறைவாகவே பங்களிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை பங்களிப்பதை விட மிக அதிகமான நிதி உதவியைப் பெறுகின்றன. ஆயினும், பல ஆண்டுகளாக கூடுதல் நிதி மற்றும் வளங்கள் இருந்தபோதிலும், இந்த மாநிலங்கள் நாட்டில் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளன. அதிக வளங்களை வழங்குவது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்பதை இது காட்டுகிறது.


அவர்களின் வளர்ச்சி சவால்கள் போதுமான நாடாளுமன்றக் குரல் இல்லாததால் உருவாகவில்லை. மாறாக, அடிப்படை நிர்வாகத் தோல்விகள், வேரூன்றிய சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகரித்து வரும் வளங்களை உறுதியான மனித வளர்ச்சியாக மாற்றத் தவறிய அரசியல் தலைமை ஆகியவற்றின் காரணமாக உருவாகின்றன. அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சேர்ப்பது முன்னேற்றத்தைக் கொண்டுவராத அதே குறைபாடுள்ள அரசியல் அமைப்பை வலுப்படுத்தும்.


மக்கள்தொகைக் கொண்ட மாநிலங்களில் அதிக நாடாளுமன்ற இடங்களைச் உருவாக்குவது ஜனநாயகத்தை மேம்படுத்துமா? இல்லை என்று சான்றுகள் கூறுகின்றன. மறுவரையறைக்குப் பிறகும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 1.5 முதல் 2.5 மில்லியன் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இந்த அளவிலான தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு வலுவான கட்சி ஆதரவு தேவைப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களைவிட தங்கள் கட்சித் தலைவர்களுக்கு அதிக விசுவாசமாக இருப்பார்கள். தொகுதி மறுவரையறை அதிக தன்னாட்சியான தலைவர்களை உருவாக்காது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி முடிவுகளைச் சார்ந்து வைத்திருக்கும். பொதுத் தேவைகள் மற்றும் கட்சி உத்தரவுகளுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, ​​அவர்கள் ஒவ்வொரு முறையும் கட்சி கொள்கையை பின்பற்றுவார்கள். மேலும், கட்சி தாவல் தடைச் சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களை வெறும் வாக்குப்பதிவு இயந்திரங்களாக மாற்றிவிட்டது. ஜனநாயகத்திற்கு மிக முக்கியமான நாடாளுமன்ற விவாதங்கள் பலவீனமடைந்துள்ளன. முக்கியமான, மசோதாக்கள் குழுக்களால் மறுஆய்வு செய்யப்படாமலேயே நிறைவேற்றப்படுகின்றன. குறைவான அமர்வு நாட்கள், விவாத நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலங்களவை ஆய்வைத் தவிர்ப்பதற்காக முக்கியமான சட்டங்களை "பண மசோதாக்கள்" என்று வகைப்படுத்துகின்றன. உண்மையில், ஒரு அரசாங்கத்தின் கொள்கையை எண்ணிக்கையில் அதிக முத்திரைகளைச் சேர்ப்பது ஜனநாயக பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துகிறதா?


தேசிய கட்சிகள் தங்கள் பரந்த வாக்காளர் தளத்தின் காரணமாக முரண்பாடுகளை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, பாஜக வட மாநிலங்களில் மாட்டிறைச்சியைத் தடை செய்கிறது. ஆனால், கேரளா, கோவா மற்றும் வடகிழக்கில் அதை அனுமதிக்கிறது. இதேபோல், காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளது, ஆனால், கேரளாவில் அவற்றை எதிர்க்கிறது. இருப்பினும், பிராந்தியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன மற்றும் மாநில உரிமைகள் மற்றும் பரவலாக்கத்தை வலுவாக ஆதரிக்கின்றன. தொகுதி மறுவரையறை அதிகாரத்தை ஒரு மொழியியல்-கலாச்சாரக் குழுவிற்கு மாற்றுவதன் மூலம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதால், பிராந்தியக் கட்சிகள் அதை எதிர்ப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும்.


தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுக தொகுதி மறுவரையறைக்கு எதிரான எதிர்க்கட்சியை வழிநடத்த நல்ல நிலையில் உள்ளது. இது 1930-களில் இருந்து இந்தி திணிப்பு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகப் போராடி வரும் திராவிட இயக்கத்திலிருந்து வருகிறது. இந்தப் போராட்டம் திமுக ஆதரவாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தமிழ் மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு தனித்துவமானது. வலுவான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக 1976-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்திலிருந்து (Official Languages Act) அதிகாரப்பூர்வமாக விலக்கு பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். இந்த வரலாறு அதன் தலைவர்களுக்கு அதிகாரத்தை மையப்படுத்துவதை எதிர்க்க வலுவான தார்மீக அதிகாரத்தை வழங்குகிறது.


முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகப்படியான மத்திய கட்டுப்பாட்டை எதிர்க்கும் ஒரு வலுவான அரசியல் மரபைத் தொடர்கிறார். இந்த எதிர்ப்பு, இந்தியா ஒரு மத்திய கட்டுப்பாட்டில் உள்ள நாடு அல்ல, மாறாக "மாநிலங்களின் ஒன்றியம்" என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. திமுக எப்போதும் கூட்டுறவு கூட்டாட்சியை ஆதரித்து வருகிறது. அதே, நேரத்தில் தேசிய முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்களிப்பை அளித்து வருகிறது. தொகுதி மறுவரையறையின் தாக்கத்தை எதிர்கொள்ள, ஸ்டாலின் பல மாநிலங்களுடன் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை (Joint Action Committee (JAC)) உருவாக்கி, முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரியுள்ளார்.


முரண்பாடாக, தொகுதி மறுவரையறை நியாயமான பிரதிநிதித்துவத்திற்காக இப்போது வாதிடும் அதே தேசிய ஜனநாயக அரசாங்கம், சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் "ஒரு மாநிலம், ஒரு வாக்கு" (One State, One Vote) விதியை முன்பு அமல்படுத்தியது. இந்த விதி மக்கள்தொகை அளவு அல்லது பொருளாதார பங்களிப்பைப் பொருட்படுத்தாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தம், ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாக்களிக்கும் அதிகாரத்தை வழங்கியது. அரை மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட சிக்கிம் போன்ற ஒரு சிறிய மாநிலம், 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட தமிழ்நாடு அல்லது 240 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உத்தரபிரதேசம் போன்ற அதே வாக்குரிமையைக் கொண்டுள்ளது. மே 2021-ல் கோவிட்-க்குப் பிறகு நடந்த முதல் சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் தொடங்கி, பல சூழல்களில், பல பரிமாணங்களில் இருந்து இந்த வாக்கு ஒதுக்கீட்டின் அபத்தத்தை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். இது ஒரு தவறு அல்ல, மாறாக பெரிய மற்றும் பணக்கார மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அதே நேரத்தில் அதன் நிதி ஆதரவை நம்பியிருக்கும் ஒன்றிய மற்றும் சிறிய மாநிலங்களின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். வரிக் கொள்கைகளை உருவாக்கும் போது, ​​அரசாங்கம் மக்கள் தொகை அளவையும் பொருளாதார பங்களிப்பையும் புறக்கணித்தது. ஆனால், இப்போது ​​அதன் தேர்தல் பிடியை வலுப்படுத்த, அது திடீரென்று அவற்றை முக்கியமானதாகக் கருதுமா?


தொகுதி மறுவரையறை என்பது அரசியல் ஆதாயத்திற்காக மக்கள்தொகையை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதாகும். நமது அமைப்புகள் கற்பனை செய்த பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாப்பதா அல்லது கலாச்சார மற்றும் பிராந்திய வேறுபாடுகளைப் புறக்கணிக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட, பெரும்பான்மை ஆட்சியை அனுமதிப்பதா என இந்தியா இப்போது ஒரு தேர்வை எதிர்கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குரிமை பறிப்பு ஆபத்து உண்மையானது மற்றும் அவசரமானது.


திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு, கடந்த காலத்தைப் போலவே எதிர்ப்பை வழிநடத்தும்.


நாம் நமக்காக பேசும்போது, ​​அனைவருக்காகவும் பேசுகிறோம். அரசியலமைப்பு, கூட்டாட்சி அமைப்பு மற்றும் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய குடிமக்களின் எதிர்ப்பையும் இது பிரதிபலிக்கிறது.


நாம் வெல்வோம்


பழனிவேல் தியாக ராஜன் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார். அவர் முன்பு நிதியமைச்சர் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.


Original article:
Share:

வருமான சமத்துவமின்மை விரிவடைகிறதா? -ஆஷிமா கோயல்

 நுகர்வு மற்றும் சொத்துக்கள் குறித்த சமீபத்திய ஆய்வுகள் சமத்துவமின்மை (inequality) குறைந்து வருவதைக் காட்டுகின்றன.


சுதந்திரம் அடைந்த முதல் 50 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமை அதிகமாகவே இருந்தது. இது மெதுவான வளர்ச்சி மற்றும் சோசலிச வழியில் வருமானத்தை மறுபகிர்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட அதிக வரிகள் இருந்த காலமாகும். 1990களின் தாராளமயமாக்கல் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, வளர்ச்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 6% ஆக அதிகரித்தது. இது 400 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்க உதவியது. வறுமையை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. உலக வங்கியின் அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு $2.15 (2017 PPP) என்ற அளவுகோலை வறுமைக் கோடாகப் பயன்படுத்தி, வறுமைக்கோடு 2000-ம் ஆண்டில் மக்கள் தொகையில் 40 சதவீதத்திலிருந்து 2021-ல் 13 சதவீதமாகக் குறைந்தது. 2022-23 வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின் மதிப்பீடுகள் (household consumption expenditure survey), நகர்ப்புறங்களுக்கு வறுமையின் தலை எண்ணிக்கை விகிதம் 10 சதவீதமாகவும், கிராமப்புறங்களுக்கு 5 சதவீதமாகவும் இருப்பதைக் காட்டுகிறது. வளர்ச்சி இல்லாமல் மறுபகிர்வு செய்ய முடியாததை அதிக வளர்ச்சியின் மூலம் அடைந்தது.


மதிப்பீடுகளின் நிலைத்தன்மை


ஆனால், இன்றைய விவாதம் சமத்துவமின்மையை மையமாகக் கொண்டுள்ளது. டி. பிக்கெட்டியுடன் இணைக்கப்பட்ட உலக சமத்துவமின்மை ஆய்வகம், இந்தியாவில் அதிகரித்துவரும் சமத்துவமின்மையைக் காட்டுகிறது. இந்தியாவை 50 ஆண்டுகளாக ஏழைகளாக வைத்திருந்த ஒரு தீர்வை அவர்கள் பரிந்துரைக்கின்றனர். வருமானத்தின் மீதான அதிக வரிகள் மற்றும் செல்வத்தை உருவாக்குபவர்களின் செல்வம் ஆகும்.


அவர்களின் மதிப்பீடுகள் நம்பகமானவையா? அவர்களின் மதிப்பீடுகள் வருமான வரித் தரவை பெரிதும் நம்பியுள்ளன. ஆனால் வருமான வரி செலுத்துவோர் இன்னும் இந்தியாவில் ஒரு சிறிய குழுவாக உள்ளனர். 2022-23ஆம் ஆண்டில், மேல்நிலையில் உள்ள 1% பேர் செலவழிக்கக்கூடிய வருமானத்தில் 21% சம்பாதித்ததாகவும், கீழ்நிலையில் உள்ள 50% பேர் 13% மட்டுமே சம்பாதித்ததாகவும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், முறைசாரா துறை உள்ளிட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில், PRICE மற்றும் NCAER-ன் மதிப்பீடுகள் வெவ்வேறு முடிவுகளைக் காட்டுகின்றன. மேல்நிலையில் உள்ள 1% பேர் வருமானத்தில் 8.8% சம்பாதித்ததாகவும், கீழ்நிலையில் உள்ள 50% பேர் 22.8% சம்பாதித்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள். நுகர்வு மற்றும் சொத்துக்கள் குறித்த பிற சமீபத்திய ஆய்வுகளும் சமத்துவமின்மை குறைந்து வருவதைக் காட்டுகின்றன.


பணக்காரர்கள் கணக்கெடுப்புகளில் பங்கேற்பதில்லை என்று வாதிடப்படுகிறது. ஆனால், உலக சமத்துவமின்மை ஆய்வக (WIL) முடிவுகள் பல வகையான தரவுகளுடன் சீரான சோதனைகளில் தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக, வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10 சதவீதத்தில் இருப்பதற்கு ₹2.9 லட்சம் வருமானம் போதுமானது என WIL முடிவுகள் குறிப்பிடுகின்றன. ஆண்டுக்கு ₹5 லட்சம் முதல் ₹31 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினர், மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் என்று கல்வி மற்றும் சந்தை அடிப்படையிலான மதிப்பீடுகளுடன் இது முரணாக உள்ளது. அல்லது கடந்த ஆண்டு வருமான வரித் தரவுகளுடன் சராசரியாக வரி செலுத்துவோரின் வருமானம் சுமார் ₹13 லட்சத்தை வழங்குகிறது. இது, சுமார் 7 சதவீத மக்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்கிறார்கள்.


சமீபத்திய தரவுகள், நுகர்வானது பரந்த அளவில் அதிகரிப்பதைக் காட்டுகின்றன. இது K- வடிவ மீட்சி மற்றும் நுகர்வில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை மீதான நம்பிக்கைக்கு முரணானது. பல பெரிய நிறுவனங்கள் இந்த நம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டன. அவை உயர்நிலை நுகர்வில் கவனம் செலுத்தின. ஆனால், அளவுக்கான வளர்ச்சி குறைவாக இருந்தது. விலை உணர்வுள்ள நுகர்வோரை குறிவைத்த சிறிய FMCG நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களைவிட மிக வேகமாக வளர்ந்ததாக சமீபத்திய காந்தர் அறிக்கை (Kantar report) காட்டுகிறது.


உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் (WIL) எண்ணிக்கைகளுக்கு வலுவான ஆதரவு இல்லாததால், அவர்களின் கொள்கை பரிந்துரைகள் கேள்விக்குரியவை. இந்தியாவின் விரைவு வளர்ச்சி செயல்முறையைக் குறைத்து, தேக்க நிலைக்குத் திரும்புவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக, பல வெளிநாட்டு விமர்சகர்கள் இந்த மதிப்பீடுகளை நம்பியுள்ளனர்.


ஆனால் வளர்ச்சி நிலையானதாக இருப்பதற்கு வருமானம் மற்றும் நுகர்வு பரந்த அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். இந்தியாவில் உண்மையான பிரச்சினை வருமானப் பகிர்வு மூலம் வேகமாக மேல்நோக்கி நகர்வதுதான். இது ஏழ்மை அல்லது சமத்துவமின்மை அல்ல, ஆராய்ச்சி எதைக் கண்காணிக்க வேண்டும், தற்போதைய விவாதம் எங்கே இருக்க வேண்டும் என்பதுதான்.


தேக்கமடைந்த உண்மையான ஊதியங்கள் முக்கியப் பிரச்சினை அல்ல. மக்கள் அதிக ஊதியம் தரும் வேலைகளுக்குச் செல்லும்போது, ​​குறிப்பாக அவர்களின் திறன்கள் மேம்படும்போது வருமான வளர்ச்சி ஏற்படும். ஒட்டுமொத்த தொழிலாளர் உபரி குறையும் வரை இது தொடரும்.


வருவாய் இயக்கம்


பொதுவில் கிடைக்கும் பல தரவு புள்ளிகள், வேகமான வளர்ச்சியுடன் இயக்கம் நடைபெற்று வருவதைக் காட்டுகின்றன. 2000 மற்றும் 2012-க்கு இடையில், சுமார் 450 மில்லியன் மக்கள் $2 வருமானக் கோட்டைத் தாண்டினர். சுகாதாரக் காப்பீடு, வீட்டுவசதி, கல்வி மற்றும் பொது சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது மக்கள் மீண்டும் வறுமையில் விழும் வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது. பல பரிமாண வறுமையும் குறைந்தது. எடுத்துக்காட்டாக, சுகாதாரம், மின்சாரம் மற்றும் பிற சேவைகள் 2015 முதல் 2020 வரை 135 மில்லியன் மக்களைச் சென்றடைந்தன.


சொத்துக்கள் வருமானத்தை உருவாக்குகின்றன அல்லது எதிர்கால வழங்களைச் சேமிக்கின்றன. இது வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. இது போன்ற அதிகாரமளித்தல் மக்கள் வளர்ச்சி வாய்ப்புகளில் பங்கேற்க உதவுகிறது. இது புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது, தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் FY18-ல் 34.7 சதவீதத்திலிருந்து FY24-ல் 43.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.


2021 முதல் 2024 வரை சிறந்த தரமான வேலைகள் அதிகரித்தன. இது ஆண்டுக்கு 8.8 சதவீத உயர் மற்றும் நிலையான வளர்ச்சியின் காலகட்டத்தில் இருந்தது. FY24-ல் சராசரி தனிநபர் வருமானம் சுமார் ₹2 லட்சமாக உயர்ந்தது. பாதிக்கப்படக்கூடியவர்களும் குறைந்தபட்ச வெளியீடுகளுடன் பாதுகாக்கப்பட்டனர். FY23-ல், $45 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் இலக்கு குழுக்களுக்கு அனுப்பப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தில் இலவச தானியங்கள் பலருக்கு வருமானத்தை அதிகரிக்க உதவியது.


ஆனால், மூன்றாம் நிலைக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது பலவீனமாகவே உள்ளது. நகரமயமாக்கல் அதிகரிக்கும் போது இந்தப் பிரச்சினை மேலும் அவசரமாகி வருகிறது. பெருநகரப் பகுதிகள் அல்லாத பகுதிகளில் வளர்ச்சி இப்போது பெருநகரப் பகுதிகளில் வளர்ச்சியைவிட அதிகமாக உள்ளது. முக்கிய சவால் நிதி அல்ல, மாறாக நிர்வாகத்தை மேம்படுத்துவதாகும்.


இருப்பினும், வளர்ச்சி வாய்ப்புகள் தினசரி $17 முதல் $100 வரை (வருடத்திற்கு ₹5 லட்சம் முதல் ₹31 லட்சம் வரை) சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தன. இந்தக் குழு 2005-ல் 14% ஆக இருந்து 2021-ல் 31% ஆக (432 மில்லியன் மக்கள்) வளர்ந்தது. வேகமான, நிலையான வளர்ச்சியுடன், ஆண்டுக்கு ₹5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை FY24-ல் 35% இலிருந்து FY30-ல் 61% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில், வசதியான குழு 10% -லிருந்து 19% ஆக இரட்டிப்பாகும்.


ஆனால், சமத்துவமின்மையை முன்னிலைப்படுத்துபவர்கள், 2022-க்கு முந்தைய பத்து ஆண்டுகளில் டாலர் மில்லியனர்கள் (₹7 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளவர்கள்) இரட்டிப்பாக்கப்பட்டது போன்ற புள்ளிவிவரங்களை அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த அதிகரிப்பு உலகிலேயே மிக வேகமாக இருந்தது. இருப்பினும், உலகளவில் 60 மில்லியனுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 0.85 மில்லியன் என்பதை அவர்கள் குறிப்பிடத் தவறிவிட்டனர்.


உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 17.2% ஆகும். ஆனால், உலக மில்லியனர்களில் அதன் பங்கு வெறும் 1.4% மட்டுமே. உலகளாவிய சமத்துவத்திற்கு, இந்த எண்கள் அதிகரிக்க வேண்டும். இது விரைவு வளர்ச்சி செயல்முறையின் (catch-up growth process) ஒரு பகுதியாகும்.


இந்தியாவில் செல்வத்தை உருவாக்குவது சமமானது. பலர் இந்த செயல்பாட்டில் நுழைகிறார்கள். ஏராளமான புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. MSME-களுக்கான கடன் மிக உயர்ந்த விகிதத்தில் வளர்ந்துள்ளது. 2000-ம் ஆண்டிலிருந்து $1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள புதிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு சில சிறந்த நிறுவனங்களில் குவிந்திருந்த இலாபங்கள், இப்போது மிகவும் பரவலாகப் பகிரப்படுகின்றன.


மேலும், பெரும் பணக்காரர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதில், சீனா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக, உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அவர்களில் பலர் வருமான வரி இல்லாத ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்கிறார்கள். ஆனால், இங்கு நிலைமைகள் மேம்படுவதால் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


இதற்கான முக்கிய கொள்கைப் பாடம் தெளிவாக உள்ளது. ஒவ்வொரு வருமான வரம்பிலும் உள்ள மக்கள் செழித்து பொருளாதாரப் படியில் முன்னேறுவதை அரசாங்கம் எளிதாக்க வேண்டும்.


எழுத்தாளர் எமரிட்டஸ் பேராசிரியர், IGIDR


Original article:
Share:

டிரம்பின் வரி விதிப்புகளுக்கு யார் அஞ்சுகிறார்கள்? -சிபி சந்திரசேகர், ஜெயதி கோஷ்

 டிரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் வலுவாக செயல்பட வேண்டும்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்புகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது உலகளவில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் முற்றிலும் செயல்திறன் மிக்கவையும், வெறும் பரிவர்த்தனை இயல்புடையவையும் அல்ல என்பதை குறிப்பிடுகிறது.


இந்த வரி அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் உள்ள காரணம் பெரும்பாலும் கேள்விக்குரியது. அவற்றின் பின்னால் உள்ள இலக்குகள் வேறுபடுகின்றன. உதாரணமாக, வர்த்தகக் கூட்டணி நாடுகளுக்கான வரிகள், அவர்களின் வளர்ச்சி நிலை எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் கோருகிறார். மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறையையும் அவர் ஒரு பிரச்சனையாகக் கருதுகிறார். கூடுதலாக, வரி அச்சுறுத்தல்களை மற்ற நாடுகளை கொள்கை மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தும் ஒரு வழியாக அவர் கருதுகிறார்.


அதற்கு, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் எந்தவொரு நாட்டிற்கும் 25% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகச் சமீபத்திய உதாரணம் ஆகும். இது பல தீவிர நிகழ்வுகளில் ஒன்றாகும்.


எவ்வாறாயினும், இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், டிரம்ப் II -ன் கீழ் வர்த்தகக் கொள்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டாலும், இந்த அச்சுறுத்தல்களைப் புறக்கணிக்க முடியாது என்பது தெளிவாகிறது. அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அச்சுறுத்தல்களுக்கு உலகின் பிற பகுதிகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பது மிகவும் முக்கியமானது.


அமெரிக்காவின் பல பணக்கார நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள், குறிப்பாக ஐரோப்பாவில், அமெரிக்காவின் புவிசார் இராஜதந்திர ரீதியில் மற்றும் வணிகக் கொள்கைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் அதிர்ச்சியடைந்து குழப்பமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது. இருப்பினும், வளரும் நாடுகளில் இது பற்றிய மிகப்பெரிய கவலைகள் இருக்கலாம்.


பெரும்பாலான குறைந்த வருமான நாடுகள் இன்னும் தங்கள் சமூக-பொருளாதார மற்றும் மேம்பாட்டு இலக்குகளை (socio-economic and development goals) அடைவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. அவை ஏற்கனவே பல சவால்களை எதிர்கொள்கின்றன. இவற்றில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் வெளிப்புற கடன் அழுத்தத்தை கையாள்வது ஆகியவை அடங்கும். இப்போது, ​​அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் குறைக்கப்படுவதால் ஏற்படும் சாத்தியமான தாக்கத்தையும் அவர்கள் நிர்வகிக்க வேண்டும். இது வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் பரந்த இடையூறுகளுக்கு வழிவகுக்கும். வர்த்தகம் (trade), நிதி ஓட்டங்கள் (financial flows) மற்றும் வருமான உருவாக்கம் (income generation) குறித்து மிக அதிக நிச்சயமற்ற தன்மை உள்ளது. இந்த காரணிகள் தங்கள் நாடுகளில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்த அரசாங்கங்கள் அதிக அக்கறை மற்றும் பதட்டம் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.





பீதி மிகைப்படுத்தப்பட்டது (Panic overdone)


எவ்வாறாயினும், சாத்தியமான வரி விதிப்புகள் மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய அச்சமானது குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பல நாடுகளில் பிரபலமான ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குக்கூட, ஒரு முக்கிய இறக்குமதியாளராக அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை முன்னோக்கில் வைத்திருப்பது முக்கியம்.


அதாவது, உலகளாவிய நிதி நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட உலக வர்த்தகத்தை இயக்குவதில் அமெரிக்கா மிகக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இது உலகெங்கிலும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் தொகுப்பை திறம்பட உள்ளடக்கிய வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு (Emerging Market and Developing Economies (EMDE)) குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது.


இலக்கின் அடிப்படையில் அனைத்து EMDE சரக்கு ஏற்றுமதிகளின் மொத்தத்தை விளக்கப் படம் 1 காட்டுகிறது. இது, 2022-ல் 1.6 டிரில்லியன் டாலர்களை எட்டிய ஒரு பெரிய மதிப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. ஆனால் அந்த ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மதிப்பு அரை டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது. மற்ற EMDE-களுக்கான ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தன.


உண்மையில், விளக்கப்படம் 2 தெளிவுபடுத்துவது போல், EMDE-களின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பங்கு பரந்த அளவில் 15-16 சதவீதமாக உள்ளது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்திய மதிப்பீடுகள் 2023-ல் EMDE ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது புறக்கணிக்கத்தக்கது அல்ல. ஆனால், பல நாடுகளில் குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தும் அளவுக்கு இது பெரியதாக இல்லை.


          மெக்ஸிகோ போன்ற விதிவிலக்குகள் உள்ளன. அங்கு கிட்டத்தட்ட 80% ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்குச் செல்கின்றன. இருப்பினும், இவை அரிதான நிகழ்வுகள் மற்றும் பெரும்பாலான EMDE-களுக்கான ஒட்டுமொத்த போக்கைப் பிரதிபலிக்கவில்லை.


சீனா இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது


`தற்போது சுங்கவரி அச்சுறுத்தல்கள் மட்டுமல்ல, மற்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வர்த்தகத் தடைகளின் முக்கிய இலக்கான சீனாவைப் பற்றி என்ன? விளக்கப்படம் 3, சீனாவிற்கும், டிரம்ப் II-க்கு முன்பே, சரக்கு ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாகவும் சரிந்தும் இருந்தது. இந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் பங்கு 16 சதவீதமாக நிலையானதாக இருந்தது. ஆனால், சமீபத்திய அறிக்கைகள் 2023 மற்றும் 2024-ல் 13-14 சதவீதமாக குறைந்திருக்கலாம் என்று கூறுகின்றன.


இது ஒரு கட்டத்தில் ஆச்சரியமல்ல. ஏனெனில், 2017 முதல் டிரம்ப் தனது முதல் நிர்வாகத்தில் கொண்டு வந்த ஆக்கிரமிப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து ஜோபைடனால் விரிவுபடுத்தப்பட்டன.


ஆனால் இந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், சீனாவின் மொத்த ஏற்றுமதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மிகப்பெரிய அதிகரிப்புகள் பிற வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு (EMDEs) ஏற்றுமதி செய்யப்பட்டதிலிருந்து வந்துள்ளன. மற்ற EMDE-களுக்கான இத்தகைய ஏற்றுமதிகளின் பங்கு 2014-ல் 34 சதவீதத்திலிருந்து 2022-ல் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு 13.4 சதவீதத்திலிருந்து 15.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.


சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி இப்போது முக்கியமாக மற்ற EMDEs-க்கான ஏற்றுமதிகளால் இயக்கப்படுகிறது. சீனாவின் தலைவர்கள் அமெரிக்காவிற்கு ஏன் கடுமையாக பதிலளித்துள்ளனர் என்பதை இது விளக்கலாம். தற்போதைய அமெரிக்கத் தலைவரின் கோரிக்கைகளுக்கு அவர்கள் அச்சமடையவோ அல்லது அடிபணியவோ மறுக்கிறார்கள்.


இதற்கு நேர்மாறாக, இதுவரை இந்திய அரசாங்கத்தின் பதில் மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. படம் 4-ல் காட்டப்பட்டுள்ளபடி, சீனா மற்றும் பிற EMDEகளைப் போலவே இந்தியாவும் 2022-ல் அதன் வணிகப் பொருட்கள் ஏற்றுமதியில் 18% க்கும் குறைவாக அமெரிக்காவை நம்பியுள்ளது.


ஆயினும்கூட, டிரம்ப் நிர்வாகத்தை பல்வேறு வழிகளில் சமாதானப்படுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சிகளின் அறிகுறிகள் உள்ளன. இதில், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியர்களுக்கு அதிகளவில் அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கான அறிவுரைகள், குறிப்பாக அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரிவிதிப்புக் குறைப்புகளின் வெளிப்படையான வாக்குறுதிகள் மற்றும் எலோன் மஸ்க்கின் இந்திய சந்தையில் நுழைவதை செயல்படுத்துவது போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கும் வாக்குறுதிகள் உள்ளன.


தற்போதைய சவாலைக் கையாள்வதில் இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். விரைவாக அடிபணிபவர்களால் கொடுமைப்படுத்துபவர்கள் பெரிதும் தைரியமடைகிறார்கள். பொதுவாக, அவர்கள் பொதுவாக அடிபணிபவர்களை மதிக்க மாட்டார்கள், ஆனால் அவர்களை மேலும் தள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். டிரம்பை எதிர்த்து நின்று தங்கள் கண்ணியத்தை காத்துக்கொள்ளும் தலைவர்கள் பெரும்பாலும் உள்நாட்டில் அதிக ஒப்புதல் மதிப்பீடுகளையும் வெளிநாட்டில் அதிக மரியாதையையும் பெறுகிறார்கள்.


மெக்சிகோவின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், மெக்சிகோ அமெரிக்க சந்தையில் அதிக நம்பிக்கை வைத்திருந்தாலும், பலவீனமாகத் தோன்றாமல், நியாயமான கோரிக்கைகளுக்கு கண்ணியத்துடன் பதிலளிப்பதில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். மாறிவரும் இன்றைய புவிசார் அரசியலில், நமது தலைவர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.


Original article:
Share: