2024-25ஆம் ஆண்டிற்கான தூய்மைக் கணக்கெடுப்பு விருதுகள் -குஷ்பு குமாரி

 புதுப்பிக்கப்பட்ட தூய்மைக் கணக்கெடுப்பு 2024-25-ஆம் ஆண்டிற்கான விருதுகளில் நாட்டின் தூய்மையான பெரிய நகரமாக அகமதாபாத் அறிவிக்கப்பட்டது.


தற்போதைய செய்தி:


தூய்மைக் கணக்கெடுப்பு 2024-25-ஆம் ஆண்டிற்கான விருதுகளில் இந்தியாவின் தூய்மையான பெரிய நகரமாக அகமதாபாத் அறிவிக்கப்பட்டது. போபால் இரண்டாவது இடத்தையும், லக்னோ மூன்றாவது இடத்தையும் பிடித்தன. புது டெல்லியில் விஞ்ஞான் பவானில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதலிடம் பிடித்ததற்காக அகமதாபாத்திற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்.


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைக் கணக்கெடுப்பு விருதுகள் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதில் 73 நகரங்கள் மட்டுமே இருந்தன. இந்த ஆண்டு, ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4,589 நகரங்கள் சேர்க்கப்பட்டன.


முக்கிய அம்சங்கள்:


1. இந்த கணக்கெடுப்பின் நோக்கம், குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதும், சுத்தமான நகரங்கள் மற்றும் வசிப்பதற்கான நகரங்களை உருவாக்குவதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். இது தூய்மை இந்தியா திட்டத்தின் (நகர்ப்புறம்) வரம்பின் கீழ் நடத்தப்படுகிறது.


2. 9வது தூய்மைக் கணக்கெடுப்பு (Swachh Survekshan (SS)) விருதுகளை குடியரசுத்தலைவர் புதிய வடிவத்தில் அறிவித்தார். இந்தூர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தூய்மையான நகரத்திற்கான பட்டத்தை வென்ற நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் கடந்த ஆண்டு, அடுத்த சுற்று தூய்மை தரவரிசையில் கடந்த காலங்களில் முதலிடத்தில் உள்ள நகரங்களுக்கு தனிப்பிரிவு இருக்கும் என்றும் இதனால் புதிய வெற்றியாளர்களுக்கு போட்டி இருக்கும் என்று தெரிவித்தார்.


3. இதைச் சரிசெய்ய, தூய்மைக் கணக்கெடுப்பின் 9வது பதிப்பு, சிறந்த தூய்மை நகரங்கள் பிரிவு (Super Swachh League) என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்புக் குழுவில் கடந்த மூன்று ஆண்டுகளில் தூய்மைக்கான முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகரங்கள் அடங்கும். இது இந்த சிறப்பாகச் செயல்படும் நகரங்களுக்கு அவற்றின் சொந்தப் பிரிவை வழங்குகிறது மற்றும் புதிய நகரங்கள் முக்கிய போட்டியில் வெற்றி பெற இடமளிக்கிறது.


4. இந்தப் புதிய பிரிவில், சிறந்த தூய்மை நகரங்கள் பிரிவு, முந்தைய வெற்றியாளர்களான இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு, இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை கூட்டாக தூய்மையான நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.


5. முதல் முறையாக, நகரங்கள் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டன:


(i) மிகச் சிறிய நகரங்கள் என்பது 20,000-க்கும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


(ii) சிறிய நகரங்கள் என்பது 20,000 முதல் 50,000 மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்


(iii) நடுத்தர நகரங்கள் என்பது 50,000 முதல் 3 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


(iv) பெரிய நகரங்கள் என்பது 3 முதல் 10 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


(v) மில்லியனுக்கும் அதிகமான நகரங்கள் என்பது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


மேலும், குறிகாட்டிகள் எளிமைப்படுத்தப்பட்டு, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மையின் முழு வரம்பையும் உள்ளடக்கிய பத்து விரிவான பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பொது இடங்களில் சுகாதார தரத்தை பராமரிக்க, சுற்றுலா இடங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


6. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி (Reduce, Reuse and Recycle (3R)) என்ற கருப்பொருளுடன், குறைந்தபட்ச வளங்களை பயன்படுத்தி வீணாக்குவதை குறைப்பதிலும், அதே நோக்கத்திற்காக அல்லது பிற நோக்கங்களுக்காக அவற்றை மறுபயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 12-வது பிராந்திய 3R மற்றும் சுழற்சி பொருளாதார மன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெய்ப்பூர் பிரகடனத்துடனும் இது ஒத்துப்போகிறது.


ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் பிராந்திய 3R மற்றும் வட்டப் பொருளாதார மன்றம் என்றால் என்ன?


ஐக்கிய நாடுகள் பிராந்திய வளர்ச்சி மையத்தால் (United Nations Centre for Regional Development (UNCRD)) 2009-ல் தொடங்கப்பட்ட, பிராந்திய 3R மற்றும் சுழற்சி பொருளாதார மன்றம், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு 3R மற்றும் சுழற்சித்தன்மையை முக்கிய நீரோட்டமாக்குவதற்கு ராஜதந்திர கொள்கை உள்ளீடுகளை வழங்குவதையும், 3R-ல் சிறந்த நடைமுறைகளை பரப்புவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு மன்றமாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 12-வது மன்றம் ஜெய்ப்பூரில் 3 மார்ச் 2025 முதல் 5 மார்ச் 2025 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.


ஜெய்ப்பூர் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய கூட்டணியாக C-3 நகரங்களின் சுழற்சித்தன்மை கூட்டணி (Cities Coalition for Circularity)) என்ற கூட்டு அறிவுத் தளமும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் பிரகடனம் வெவ்வேறு கழிவு ஓட்டங்கள் மற்றும் அவை ஒவ்வொன்றிற்கும் சுழற்சி பொருளாதார இலக்குகளைப் பற்றி பேசுகிறது என்று தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. விருதுகள் நான்கு பிரிவுகளில் வழங்கப்பட்டன. சிறந்த தூய்மை நகரங்கள் பிரிவு (Super Swachh League) ஐந்து மக்கள் தொகை பிரிவுகளில் முதல் மூன்று சுத்தமான நகரங்கள், சிறப்பு வகை மற்றும் மாநில அளவிலான விருதுகள் - மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் உறுதியளிக்கும் சுத்தமான நகரம்.


சிறப்பு பிரிவில்:


தூய்மையான கங்கா நகர விருது பிரயாக்ராஜுக்கு வழங்கப்பட்டது.


மிகவும் சுத்தமான ராணுவப் பகுதிக்கான விருது செகந்திராபாத் ராணுவப் பகுதிக்கு வழங்கப்பட்டது.


சஃபைமித்ரா சுரக்ஷித் ஷெஹர் விருதுகள் ஜிவிஎம்சி விசாகப்பட்டினம், ஜபல்பூர் மற்றும் கோரக்பூருக்கு வழங்கப்பட்டன.


2025-ஆம் ஆண்டுக்கான தூய்மை மகா கும்பமேளாவின் சிறப்பு முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் சிறப்புப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தூய்மை இந்தியா இயக்கம்


1. கடந்த ஆண்டு, தூய்மை இந்தியா இயக்கம் அக்டோபர் 2 அன்று அதன் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்ற பிறகு அறிவித்த முதல் திட்டங்களில் ஒன்றாகும்.


2. இந்த பணி கிராமங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் (SBM-Gramin) மற்றும் நகரங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் (SBM-Urban) எனப் பிரிக்கப்பட்டு, குடிநீர் மற்றும் சுகாதாரம் அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அலுவல்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இதனுடன், "இந்த நோக்கத்தை நோக்கி நற்பணி நிதியுதவி மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகளை திட்டமிட்ட வழியில் பெறுவதற்கு ஸ்வச் பாரத் கோஷ் (Swachh Bharat Kosh) நிதியம் என்பதும் தொடங்கப்பட்டது.


3. தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியப் பகுதிகள் தனிநபர் கழிப்பறைகள், சமூக கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் நடத்தை மாற்றங்களை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களை வழிநடத்துதல் ஆகியவை ஆகும்.


4. அக்டோபர் 2, 2019-க்குள் இந்தியாவை "திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத" (Open defecation-free (ODF)) நாடாக மாற்றுவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்றும், இதற்காக கோடிக்கணக்கான வீடுகள் மற்றும் சமூகக் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவித்தார். அமைச்சகத்தின்படி, "ஒரு நபர்கூட திறந்தவெளியில் மலம் கழிக்கவில்லை என்றால், ஒரு நகரம்/வார்டு வெளிப்புற மலம் கழித்தல் இல்லாத நகரம்/ வெளிப்புற மலம் கழித்தல் இல்லாத வார்டாக அறிவிக்கலாம் என்று கூறியது.


5. 2021-ஆம் ஆண்டில், இந்த பணி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு, குப்பை இல்லாத நகரங்கள், மலக் கழிவுகள் (fecal sludge), நெகிழிக் கழிவுகள், திறன் மேம்பாடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தூய்மை இந்தியா திட்டம்- நகர்ப்புற 2.0-ஐ அரசாங்கம் தொடங்கியது.


6. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) நிலையை அடைந்த பிறகு, அரசாங்கம் 2020-21 முதல் மத்திய நிதியுதவி திட்டமான தூய்மை இந்தியா திட்டம் - கிராமீனின் இரண்டாம் கட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, SBM-G கட்டம் II-ன் நோக்கம் "முழுமையான தூய்மையை (Sampoorn Swachhata) அடைதல் என்பது, 2024-25ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பைத் தவிர்க்கும் நிலையை (ODF) தக்கவைத்து, திட மற்றும் திரவ கழிவுகளை நிர்வகித்து, எல்லா கிராமங்களையும் ODF நிலையிலிருந்து ODF Plus நிலைக்கு மாற்றுவதை குறிக்கிறது.



Original article:

Share:

உயிரி எரிபொருள் உண்மையில் புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாகுமா? -அருணாங்சு தாஸ்

 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான உலகளாவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதைபடிவ எரிபொருட்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக உயிரி எரிபொருள் உருவாகியுள்ளது. இருப்பினும், உயிரி எரிபொருள்கள் நிகர ஆற்றல் நுகர்வு அடிப்படையில் புதைபடிவ எரிபொருட்களுக்கு உண்மையிலேயே மாற்றாக முடியுமா மற்றும் கதிரியக்க சக்தியை முழுமையாக குறைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கும், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, உயிரி எரிபொருள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதில் உயிரி எத்தனால் (bioethanol) ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக வெளிப்பட்டுள்ளது. 


கரும்பு, பீட்ரூட் சாறு, சோளம், அரிசி, மக்காச்சோளம் மற்றும் பிற தானியங்களிலிருந்து பயோஎத்தனாலை எளிதில் உருவாக்க முடியும். உயிரி எரிபொருளுக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவது இந்தியாவை உபரி உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருந்து தீவன தானியங்களை இறக்குமதி செய்யும் நாடாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், எத்தனால் உற்பத்திக்காக மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


ஆனால், பயோ-எத்தனால் எந்த அளவிற்கு சுத்தமான ஆற்றலுக்கு மாறுவதற்கு பங்களிக்கும்? புரிந்து கொள்வோம்.   


உயிர்த்திரள் மற்றும் கார்பன் சுழற்சியில் அதன் பங்கு

சூழலைப் புரிந்து கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் உயிர்க்கோளத்தில் சுமார் 250 கிகாடன் (Gt) உலர் கரிமப் பொருட்கள் நகர்கின்றன, இதில் 100 கிகாடன் கார்பன் ஆகும், இது ஒளிச்சேர்க்கை, மூச்சுவிடுதல், உணவு உட்கொள்ளுதல் மற்றும் நுகர்வு போன்ற செயல்முறைகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த கார்பனில் பெரும்பகுதி ஒளிச்சேர்க்கை மூலம் பிடிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சூரிய ஒளியிலிருந்து 2 × 1021 ஜூல்ஸ் ஆற்றலைப் பிடிக்கிறது. மனிதர்கள் உலகளாவிய உயிர்த்திரளில் சுமார் 0.5 சதவீதத்தை உணவுப் பயிர்களாக நிர்வகிக்கின்றனர்.


பலருக்கு, உயிர்த்திரள் (தாவரங்கள் மற்றும் விலங்கு கழிவுகள்) ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். இது உலகின் மொத்த ஆற்றலில் 10%-க்கும் அதிகமாக வழங்குகிறது, பெரும்பாலும் வெப்பமாக்கலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் உயிர்த்திரள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை:


1. வெப்பவேதியியல் (Thermochemical) - எரித்தல் அல்லது வெப்பப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆற்றல்.


2. உயிர்வேதியியல் (Biochemical) - பாக்டீரியா அல்லது ஈஸ்ட் போன்ற உயிரினங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆற்றல்.


3. வேளாண் வேதியியல் (Agrochemical) - பண்ணை இரசாயனங்களிலிருந்து ஆற்றல்.


எத்தனால் என்பது உயிர்வேதியியல் எரிபொருளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக சுத்தமான மற்றும் நிலையான விருப்பமாக வளர்ந்து வருகிறது.


தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் காற்றில் இருந்து கார்பனை எடுத்து, பின்னர் சுவாசம் மற்றும் சிதைவு மூலம் அதை மீண்டும் வெளியிடுவதால், உயிரி எரிபொருட்கள் கவர்ச்சிகரமானவையாக உள்ளது. எனவே, இதில் கார்பன் சுழற்சி சமநிலையில் உள்ளது.


ஆனால், புதைபடிவ எரிபொருள்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பழைய கார்பனைச் சேர்க்கின்றன. மேலும், இது இந்த சுழற்சியின் ஒரு பகுதியாக இல்லை.


நாம் உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்தும்போது, சமநிலையை சீர்குலைக்காமல் இயற்கையின் வழியாக ஏற்கனவே நகரும் கார்பனில் சிலவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது காற்றில் கூடுதல் கார்பனைச் சேர்க்கிறது. அதிக வெப்பத்தைப் சேமிக்கிறது மற்றும் வெப்பப்படுத்துகிறது. இது இன்று வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


தூய்மையான எரிபொருள் மற்றும் உணவுப் பாதுகாப்பு


அமில நிலைமைகளின்கீழ் (pH 4-5) உணவை உடைக்கும் சிறிய நுண்ணுயிரிகளால் (ஈஸ்ட் போன்றவை) எத்தனால் தயாரிக்கப்படுகிறது. நுண்ணுயிரிகள் இரண்டு முக்கிய வழிகளில் ஆற்றலைப் பெறுகின்றன. அவை:

காற்றியல் சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் ஆகும்.


காற்றியல் சுவாசத்தில், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் சூரிய சக்தியைப் பிடித்து குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளில் சேமிக்கின்றன. நுண்ணுயிரிகள் (அல்லது உயிரினங்கள்) குளுக்கோஸை உடைக்க ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும்போது, ஆற்றல் மெதுவாக வெளியிடப்படுகிறது. இந்த செயல்முறை கார்பன்-டை-ஆக்சைடு (CO₂) மற்றும் தண்ணீரை உருவாக்குகிறது. மேலும், குளுக்கோஸிலிருந்து வரும் கிட்டத்தட்ட அனைத்து ஆற்றலும் செல் அல்லது உடலில் பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுகிறது.


காற்றில்லா சுவாசம் அவ்வளவு திறமையானது அல்ல. ஆனால், வேகமாக நிகழ்கிறது. இது மொத்த ஆற்றலில் ஒரு பகுதியை மட்டுமே வெளியிடுகிறது மற்றும் லாக்டிக் அமிலம் மற்றும் எத்தனால் போன்ற துணை தயாரிப்புகளை உருவாக்குகிறது. அவற்றில் நிறைய ஆற்றல் உள்ளது. உதாரணமாக, மக்கள் மிக வேகமாக ஓடும்போது போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, அவர்களின் தசைகள் காற்றில்லா சுவாசத்தைப் பயன்படுத்துகின்றன. இது தசைகளில் லாக்டிக் அமிலத்தை உருவாக்கி தசை சோர்வை ஏற்படுத்துகிறது.


பயோஎத்தனால் (ஒரு வகை எரிபொருள்) கரும்பு, பீட்ரூட் சாறு, சோளம், அரிசி அல்லது பிற தானியங்களிலிருந்து எளிதாக தயாரிக்கப்படலாம். இந்த எரிபொருள்கள் முதல் தலைமுறை உயிரி எரிபொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. சில விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உணவுப் பயிர்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது ஏழை மக்களுக்கு, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று வாதிடுகின்றனர்.


உலகெங்கிலும் உள்ள பலரை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை, பசி இன்னும் பாதிக்கிறது. உதவுவதற்காக, இரண்டாம் தலைமுறை உயிரி எரிபொருள் திட்டங்கள் (second generation biofuel projects) தண்டுகள், உமி, மரம் மற்றும் பாகாஸ் போன்ற கழிவு தாவரப் பொருட்களிலிருந்து எரிபொருளை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்த கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்றும் சர்க்கரைகளாக மாற்றலாம்.


ஆனால், ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. இந்தக் கடினமான தாவர இழைகளிலிருந்து சர்க்கரையை வெளியேற்றுவது கடினம். இதற்கு அமிலங்கள் அல்லது காரங்கள் போன்ற வலுவான, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்தி சிறப்பு சிகிச்சைகள் தேவை. இந்த இரசாயனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை அல்ல. மேலும், கழிவுகளிலிருந்து எத்தனால் தயாரிப்பதில் மிகவும் விலையுயர்ந்த பகுதி பெரும்பாலும் இந்த முன்னெச்சரிக்கை படியாகும்.


தாவரக் கழிவுகளை எரிபொருளாக மாற்றுதல்


செல்லுலேஸ் என்பது இயற்கையில் காணப்படும் நான்கு நொதிகளின் கலவையாகும். இது செல்லுலோஸை (ஒரு தாவரப் பொருள்) குளுக்கோஸாக (ஒரு எளிய சர்க்கரை) முழுமையாக உடைக்க முடியும். ஆனால் மூன்று முக்கிய சிக்கல்கள் உள்ளன:


1. செல்லுலோஸ்கள் மெதுவாக வேலை செய்கின்றன.

2. அவை சில வெப்பநிலையில் நிலையற்றதாக மாறும்.

3. செல்லுலோஸின் அமைப்பு மாறினால் அவை நன்றாக வேலை செய்யாது.


எத்தனால் நொதித்தல் ஈஸ்ட் (ஒரு பூஞ்சை) மற்றும் பாக்டீரியா (ஈ. கோலி போன்றவை) போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி சர்க்கரைகளை எத்தனால் (ஆல்கஹால்) ஆக மாற்றுகிறது. ஆனால் அதிக அளவு எத்தனால் (10%-க்கு மேல்) இந்த நுண்ணுயிரிகளைக் கொல்லும். எனவே, எரிபொருள் தர எத்தனாலை உருவாக்க, அதை சுத்திகரிக்க கூடுதல் படிகள் தேவை. மேலும், வெவ்வேறு நுண்ணுயிரிகள் வெவ்வேறு சர்க்கரைகளைப் பயன்படுத்துகின்றன, எனவே ஒரு வகை மட்டுமே பயன்படுத்தப்பட்டால், சில சர்க்கரைகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும்.


இதைத் தீர்க்க, இணை நொதித்தல் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் அதிக சர்க்கரைகள் எத்தனாலாக மாற்றப்படுவதை உறுதிசெய்ய வெவ்வேறு நுண்ணுயிரிகளை ஒன்றாகப் பயன்படுத்துவதாகும். இது கழிவுகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஒரு வட்டப் பொருளாதாரத்தை ஆதரிக்கிறது.


எரிபொருள் தர உயிரி எத்தனால் தயாரிப்பது ஆறு முக்கிய படிகளைக் கொண்டுள்ளது:


1. உயிரித் திரவத்தைத் தேர்ந்தெடுப்பது (மூலப்பொருள்)

2. முன் சிகிச்சை (அதைத் தயாரித்தல்)

3. சாக்கரைசேஷன் (அதை சர்க்கரைகளாக உடைத்தல்)

4. நொதித்தல் (சர்க்கரைகளை எத்தனாலாக மாற்றுதல்)

5. வடிகட்டுதல் மற்றும் நீரிழப்பு (எத்தனாலை சுத்திகரித்தல்)

6. பயனுள்ள துணைப் பொருட்களை மீட்டெடுத்தல்


உயிரியல் பொறியியலில் புதிய தொழில்நுட்பங்கள் உயிருள்ள செல்கள் தேவையில்லாமல் நொதிகளை மட்டுமே பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளன. மூலப்பொருட்கள் பாயும் போது நொதிகளை அசையாமல் (இடத்தில் நிலைநிறுத்த) முடியும், எனவே அவை தொடர்ந்து செயல்படுகின்றன. இது நுண்ணுயிரிகளை உயிருடன் வைத்திருக்க பயன்படுத்தப்படும் சர்க்கரைகளைச் சேமிக்கிறது.




திரவ எரிபொருளாக எத்தனால்


அசியோட்ரோபிக் எத்தனாலில் சுமார் 4.4% நீர் உள்ளது. இது -114°C மற்றும் 78°C-க்கு இடையில் திரவமாகவே இருக்கும். இது 9°C-ல் தீப்பிடித்து 423°C-ல் தானாகவே எரிகிறது. எத்தனால் திரவ எரிபொருளாகப் பயன்படுத்தத் தேவையான அனைத்து குணங்களையும் கொண்டுள்ளது.


ஒரு யூனிட் திரவ எத்தனாலில் உள்ள ஆற்றல் திரவ பெட்ரோலியத்தை விடக் குறைவு (எத்தனாலுக்கு 24 GJ/m³ மற்றும் பெட்ரோலியத்திற்கு 39 GJ/m³). ஆனால் எத்தனால் நன்றாக எரிகிறது. இது அதன் குறைந்த ஆற்றலை ஈடுசெய்கிறது. எனவே, வாகனங்கள் லிட்டருக்கு கிட்டத்தட்ட அதே தூரத்தை கடக்க முடியும்.


பெட்ரோலுடன் 5% எத்தனால் கலவையை சாதாரண வாகனங்களில் இயந்திரத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பயன்படுத்தலாம். எத்தனால் இயந்திரத் தட்டுதலையும் குறைக்கிறது, அதாவது குறைந்த அதிர்வு மற்றும் மென்மையான இயக்கத்தைக் குறிக்கிறது. 10% (E10) அல்லது 15% (E15) எத்தனால் கொண்ட பெட்ரோலை சாதாரண பெட்ரோல் எஞ்சின்களில் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தலாம், ஆனால் பொதுவாக பெரிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.

இருப்பினும், நீர் பெட்ரோலுடன் கலக்காது மற்றும் பொதுவாக வாகன எரிபொருள் தொட்டிகளின் அடிப்பகுதியில் கசடாக (அழுக்காக) தங்கிவிடுகிறது. அதிக எத்தனால் கலந்த எரிபொருள் சேர்க்கப்படும்போது, நீர் எத்தனால் பகுதியில் கரைந்து, மாற்றப்படாத இயந்திரங்களில் பயன்படுத்துவதற்கு எரிபொருளை பொருத்தமற்றதாக ஆக்குகிறது.


உலக எத்தனால் சந்தையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது


அமெரிக்கா உலகிலேயே அதிக எத்தனாலை உற்பத்தி செய்கிறது, 2024-ஆம் ஆண்டில் 16 பில்லியன் கேலன்களுக்கு மேல் உற்பத்தி செய்கிறது. பிரேசில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்காவில், எத்தனால் பெரும்பாலும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரேசிலில் இது முக்கியமாக கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில், இந்தியா முதல் முறையாக ஒரு பில்லியன் கேலன்களுக்கு மேல் எத்தனாலை உற்பத்தி செய்தது. இப்போது, உலகின் மொத்த எத்தனாலில் இந்தியா சுமார் 5 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.


அமெரிக்காவிலிருந்து வரும் எத்தனாலைவிட பிரேசிலில் இருந்து வரும் எத்தனால் சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. ஏனென்றால், பிரேசில் கரும்பின் மீதமுள்ள பகுதிகளை புத்திசாலித்தனமான வழிகளில் பயன்படுத்துகிறது: பாகாஸ் எனப்படும் கழிவுகள் டிஸ்டில்லரிகளுக்கு சக்தியை உருவாக்குகின்றன, மொலாசஸ் கால்நடைகளுக்கு உணவளிக்கின்றன, கூடுதல் பாகாஸ் பலகைகள் மற்றும் கட்டுமானப் பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது, மேலும் பாய்லர் சாம்பல் விவசாயத்திற்கு பாஸ்பேட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.


அமெரிக்கா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா அனைத்தும் 20 சதவீத எத்தனாலை திரவ எரிபொருட்களில் கலக்க விரும்புகின்றன. இந்தியாவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரிகள் கரும்பு, கனமான பி-மொலாசஸ் மற்றும் சி-மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து எத்தனாலை தயாரிக்கலாம். மேலும், அரசாங்கம் இப்போது எத்தனாலுக்கு கூடுதல் தானியங்களை விற்க அனுமதிக்கிறது. இந்த நோக்கத்திற்காக இந்திய உணவுக் கழகம் 2.3 மில்லியன் டன் அரிசியை விற்க முடியும்.


உயிரி எரிபொருள் விரிவாக்கத்தின் மறைக்கப்பட்ட செலவுகள்


இருப்பினும், பெரிய கேள்வி என்னவென்றால், உயிரி எரிபொருள்கள் மொத்த ஆற்றல் பயன்பாட்டிற்கான புதைபடிவ எரிபொருட்களை மாற்ற முடியுமா மற்றும் வளிமண்டலத்தில் கூடுதல் வெப்பத்தை முழுமையாக நிறுத்த முடியுமா என்பதுதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகிறது, ஆனால் பெரும்பாலான பிற உயிரி எரிபொருள்கள் இதைச் செய்வதில்லை.


மேலும், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை மாற்றுவது, நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவது மற்றும் மீதமுள்ள தாவரக் கழிவுகளை சிதைப்பது நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றை உருவாக்குகிறது. இந்த வாயுக்கள் கார்பன்-டை-ஆக்சைடைவிட அதிக வெப்பத்தை சிக்க வைக்கின்றன.


உயிரி எரிபொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவது ஏற்கனவே சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, அமேசான் மழைக்காடுகளின் சில பகுதிகளை எரிசக்தி பயிர்களை வளர்ப்பதற்காக அழிக்கும் திட்டங்கள் உள்ளன. இது பூர்வீக மக்களை வெளியேற்றி வானிலை மற்றும் காலநிலை முறைகளை மோசமாக்கும். இது பூமியின் எதிர்காலத்திற்கு ஒரு கெட்ட செய்தியாக உள்ளது.


வணிகத்திற்காக எரிசக்தி பயிர்களை வளர்ப்பது என்பது பெரும்பாலும் ஒரு வகை பயிரை மட்டுமே பயிரிடுவதாகும். இது உள்ளூர் பல்லுயிரியலை விரைவாகக் குறைக்கிறது மற்றும் பின்னர் சரிசெய்வது கடினம். மற்றொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், இந்த பயிர்களுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. இது நம்மிடம் உள்ள குறைந்த அளவு புதிய நீரைப் பயன்படுத்துகிறது.



Original article:

Share:

11 அமைச்சகங்களின் 36 திட்டங்களை ஒன்றிணைத்து 100 விவசாய மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டமான பிரதம மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனா (PMDDKY) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.24,000 கோடி ரூபாய் செலவாகும். மேலும், நடப்பு நிதியாண்டான 2025-26 முதல் ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

களத்தில் செயல்படுத்துதல்


விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை உள்ளடக்கிய PMDDKY-ஐ செயல்படுத்துவதற்கான பெரிய திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செயல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


இந்த மாவட்ட விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட தன்ய சமிதியால் தயாரிக்கப்பட்டு, முற்போக்கு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.


"பயிர் பல்வகைப்படுத்தல், நீர் மற்றும் மண் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தன்னிறைவு மற்றும் இயற்கை மற்றும் இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துதல் போன்ற தேசிய இலக்குகளுடன் மாவட்டத் திட்டங்கள் சீரமைக்கப்படும்" என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.


விரிவான ஆலோசனைகள் மற்றும் விவசாய-காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ப பயிர் முறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதன் அடிப்படையில் திட்டங்கள் இருக்கும். அவற்றை திறம்பட செயல்படுத்த மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும். கள ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக மத்திய பகுதி அதிகாரிகள் (CNOs) நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பம் சார்ந்த பங்குதாரர்களாக இருக்கும்.


PMDDKY மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்படும்


PMDDKY ஆனது, நாட்டின் மிகவும் வளர்ச்சியடையாத 112 மாவட்டங்களில் 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தப் பகுதிகளை விரைவாக மேம்படுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும்.


ADP 3 Cs என்ற கருத்தைப் பின்பற்றுகிறது:


1. ஒருங்கிணைப்பு - மத்திய மற்றும் மாநிலத் திட்டங்களை ஒன்றாக இணைத்தல்.


2. ஒத்துழைப்பு - மத்திய மற்றும் மாநில மட்டங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.


3. போட்டி - மாவட்டங்கள் ஒவ்வொரு மாதமும் ஐந்து முக்கிய தலைப்புகளின் கீழ் 49 பகுதிகளில் அவை எவ்வளவு முன்னேற்றம் அடைகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சுகாதாரம் & ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் & நீர்நிதி உள்ளடக்கம் & திறன்கள், உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.

ADP-ஐ இயக்கவும் சரிபார்க்கவும் உதவும் நிதி ஆயோக், PMDDKY-க்கான திறன்களை வழிநடத்தவும் வளர்க்கவும் உதவும்.


PMDDKY மாவட்டங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைகளும் வழங்கப்படும். 117 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (KPIகள்)-ஐப் பயன்படுத்தி அவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு மாதமும் சரிபார்க்கப்படும். இந்த முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு சிறப்பு ஆன்லைன்  இணையதளம் உருவாக்கப்படும்.




PMDDKY-ன் நோக்கம்


பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.


ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியால் உந்துதல் பெற்று, எங்கள் அரசாங்கம் மாநிலங்களுடன் இணைந்து ‘பிரதம மந்திரி தன்-தன்ய கிரிஷி யோஜனா’ திட்டத்தை மேற்கொள்ளும். தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மூலம், குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் சராசரிக்கும் குறைவான 100 மாவட்டங்களை இந்த திட்டம் உள்ளடக்கும்" என்று சீதாராமன் கூறினார்.


அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் ஐந்து நோக்கங்களைக் கொண்டுள்ளது. அவை:


(i) விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல்; 

(ii) பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது; 

(iii) பஞ்சாயத்து மற்றும் தொகுதி அளவில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பகத்தைப் பெருக்குதல்;

 (iv) நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல்; 

(v) நீண்டகால மற்றும் குறுகிய கால கடன் கிடைப்பதை எளிதாக்குதல்.


"இந்த 100 மாவட்டங்களில் இலக்கு முடிவுகள் மேம்படும்போது, நாட்டின் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளுக்கு எதிரான ஒட்டுமொத்த சராசரி உயரும். இத்திட்டத்தின் மூலம் அதிக உற்பத்தி, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மதிப்புக் கூட்டல், உள்ளூர் வாழ்வாதாரம் உருவாக்கம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் சுயசார்பை அடையும் என்றார்.


PMDDKY மாவட்டங்களின் தேர்வு


மூன்று விஷயங்களின் அடிப்படையில் 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அவை:


1. குறைந்த பண்ணை உற்பத்தித்திறன் (குறைந்த உற்பத்தி)

2. நடுத்தர அளவிலான பயிர் சாகுபடி (பயிர் தீவிரம்)

3. கடன் பெறுவதற்கான குறைந்த அணுகல் (கடன்கள் மற்றும் நிதி)


பயிர் அடர்த்தி (Cropping intensity) என்பது நிலம் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இது விதைக்கப்பட்ட உண்மையான பரப்பளவுடன் ஒப்பிடும்போது மொத்த பயிர் செய்யப்பட்ட பரப்பின் சதவீதமாகும். எளிமையாகச் சொன்னால், ஒரு வருடத்தில் (ஜூலை முதல் ஜூன் வரை) ஒரே நிலத்தில் எத்தனை பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. இந்தியா முழுவதற்கும், 2021–22-ல் பயிர் தீவிரம் 155%-ஆக இருந்தது. ஆனால், இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.


ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, அவர்கள் எவ்வளவு பயிர் செய்த நிலம் மற்றும் பண்ணை நிலங்களைக் கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்தது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு மாவட்டமாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.



Original article:

Share:

கங்கைச் சமவெளியை நோக்கிய ஒரு போர்ப்படை பயணம் ஒரு சோழத் தலைநகரை உருவாக்க உத்வேகம் அளித்தது -S.கணேசன்

 தனது படையெடுப்பின் போது, முதலாம் ராஜேந்திர சோழன் பல மன்னர்களையும் உள்ளூர் ஆட்சியாளர்களையும் தோற்கடித்தார். தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அவர் ‘கங்கைகொண்ட சோழன்’ (Gangaikonda Cholan) என்ற பட்டத்தை பெற்றார். இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரத்தைக் கட்டினார். மேலும், அங்கு கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்ற பிரமாண்டமான சிவன் கோயிலையும் கட்டினார்.


கல் மாளிகை (stone edifice) உள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்றும் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிறிய கிராமத்தில் தனித்து நிற்கும் ஒரு பிரமாண்டமான சிவன் கோயிலாகும். நீண்ட காலத்திற்கு முன்பு, இந்த கிராமம் சுமார் 250 ஆண்டுகளாக சோழப் பேரரசுகளின் பரபரப்பான தலைநகராக இருந்தது. நகரம், அதன் கோயில் மற்றும் சோழ கங்கம் என்ற பெரிய ஏரி ஆகியவை கி.பி 1012 முதல் 1044 வரை ஆட்சி செய்த முதலாம் ராஜேந்திர சோழனின் மகத்தான சாதனைகளை பிரதிபலிக்கின்றன.


முதலாம் ராஜேந்திர சோழன் தனது வீரதீரச் செயல்களுக்குப் பெயர் பெற்றவர். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கங்கைச் சமவெளிக்கு அவர் மேற்கொண்ட போர்ப்படைப் பயணம் சோழ வம்ச வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் ஒன்றாகத் தொடர்கிறது. அவரது வெற்றி மற்றும் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானம் திருவலங்காடு, எசலம் மற்றும் கரந்தை செப்புத் தகடுகள் போன்ற பண்டைய பதிவுகளிலும், கல்வெட்டுகள் மற்றும் எழுத்துக்களிலும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அங்கீகரிக்கப்பட்ட மூன்று பெரிய சோழ கோயில்களில் இந்தக் கோவிலும் உள்ளது. ராஜேந்திர சோழன் முதலாம் 'கங்கைகொண்ட சோழன்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு தனது வெற்றியைக் கொண்டாடினார். அவர் கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தையும், கங்கைகொண்ட சோழீவரம் கோயிலையும் கட்டினார் - இது அவரது பெருமைமிக்க படைப்பாகும். இது தஞ்சாவூரில் அவரது தந்தை கட்டிய புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலைப் போன்றது. சோழ கங்கம் என்பது அவரது வெற்றியைக் கொண்டாடுவதற்காக தோண்டப்பட்ட ஒரு பெரிய ஏரியாகும். இது அவரது வெற்றியை "தண்ணீரால் ஆன தூண்" போல அடையாளப்படுத்துகிறது.


கங்கையிலிருந்து தண்ணீர்


கங்கைச் சமவெளியில் தனது படையெடுப்பின்போது, முதலாம் ராஜேந்திர சோழன் கலிங்க அரசன் மற்றும் வங்காளத்தின் பால வம்ச அரசன் மகிபாலன் உட்பட பல அரசர்கள் மற்றும் சிற்றரசர்களைத் தோற்கடித்தார். திருவாலங்காடு செப்பேடுகளின்படி, தோற்கடிக்கப்பட்ட அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கங்கை நதி நீரைத் தங்கள் தலையில் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறுகின்றன. அந்த நீர் தற்போது பொன்னேரி என்று அறியப்படும் சோழ கங்கத்தில் ஊற்றப்பட்டது. தலாம் ராஜேந்திர சோழன் சாளுக்கிய மற்றும் கலிங்க ராஜ்ஜியங்களிலிருந்து பல அழகான சிற்பங்களையும் போர்க் கோப்பைகளாக கொண்டு வந்தார்.


இருப்பினும், முதலாம் ராஜேந்திர சோழன் ஏன் தஞ்சாவூரிலிருந்து தன் தலைநகரத்தை மாற்றினார்? பல வரலாற்று ஆசிரியர்கள் நம்புவது என்னவென்றால், அதற்கான காரணங்களில் ஒன்று முதலாம் ராஜேந்திர சோழனுடைய பிரம்மாண்டமான படையை இடமளிக்கவும் தன் வாணிக நலன்களை சிறப்பாக சேவை செய்யவும் ஒரு பெரிய நன்கு திட்டமிடப்பட்ட நகரத்தை விரும்பியிருக்கலாம் என்று நம்புகிறார்கள். இருப்பினும், தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குனரான ஆர்.நாகசாமி, ஒரு சுவாரஸ்யமான கருத்தை வைத்திருக்கிறார். முதலாம் ராஜேந்திர சோழனுக்கு அந்த இடத்தின் மீது ஒரு "உணர்ச்சிபூர்வமான பற்று" இருந்திருக்கலாம். அதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. இருப்பினும், அவர் மன்னரானபோது இந்த இடம் ஒரு கிராமமாகக் கூட அறியப்படவில்லை.


விஜயாலய சோழன் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றிய பிறகு, அது சோழர்களின் தலைநகராக மாறியது. தஞ்சாவூர் சோழர்களின் நலன்களுக்கு சிறப்பாக சேவை செய்தது. ஆனால் பெரிய கோயில் (ராஜராஜேஸ்வரம்) கட்டப்பட்ட சிறிது காலத்திலேயே, முதலாம் ராஜராஜன் இறந்த பிறகு, அவரது மகன் ராஜேந்திர சோழன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். தஞ்சாவூரின் வலுவான கோட்டைகள் மற்றும் இயற்கை நதித் தடைகள் இருந்தபோதிலும், ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருவேளை அங்கிருந்து கங்கை சமவெளிக்கு இராணுவப் படையெடுப்பைத் திட்டமிட்டிருக்கலாம் என்று நாகசாமியின் 1970-ஆம் ஆண்டு புத்தகமான கங்கைகொண்டசோழபுரம் (Gangaikondacholapuram) கூறுகிறது.


கங்கைகொண்ட சோழபுரம் 1025 CE முதல் சோழ வம்சத்தின் வீழ்ச்சி வரை, அதாவது 1279 CE வரை தலைநகரமாக இருந்தது. "சுமார் 1025 AD முதல் 250 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகரமாக இருந்த இந்த நகரம், வடக்கில் துங்கபத்திரை முதல் தெற்கில் இலங்கை வரை முழு தென்னிந்தியாவின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தியது," என்கிறார் நாகசாமி. 11-12ஆம் நூற்றாண்டுகளில் இது மதுரை (பாண்டியநாடு) மற்றும் கரூர் (சேரநாடு) போன்று இரண்டாவது பெரிய மற்றும் முக்கியமான நகரமாகவும், அரசியல், வணிகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்தது என்கிறார் முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் நடன காசிநாதன். இருப்பினும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில், சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலையின் அற்புதமான காட்சியகமாக இருந்த போதிலும், முதலாம் ராஜேந்திர சோழனின் எந்த கல்வெட்டும் இல்லை. அவரது மகன் வீர ராஜேந்திரனின் கல்வெட்டிலிருந்துதான் அவரது தந்தை இந்தக் கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது. அரண்மனை மற்றும் நகரத்தின் பிற பகுதிகள் பற்றிய விவரங்கள் ராஜேந்திரனின் வாரிசுகளின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்று காசிநாதன் தனது "The Metropolis of Medieval Cholas" என்ற புத்தகத்தில் கூறுகிறார்.  ராஜேந்திரனின் மூன்றாவது மகன் வீர ராஜேந்திரனின் கல்வெட்டு, கங்கைக்கொண்ட சோழபுரத்தில் உள்ள அரண்மனையை சோழ-கேரளன் திருமாளிகை என்று குறிப்பிடுகிறது, இது முதலாம் ராஜேந்திரனின் பட்டங்களில் ஒன்றின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது என தெளிவுற தெரிகிறது.


ஒரு காலத்தில் பரபரப்பான நகரம்


கங்கைகொண்ட சோழபுரம் ஒரு கோட்டை, அரண்மனைகள் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட தெருக்களுடன் கூடிய பரபரப்பான நகரமாக இருந்தது. "குலோத்துங்கனின் 49-ஆம் ஆண்டில் (1119 AD) பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், இந்த இடத்தில் கங்கைகொண்டசோழ மாளிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரச கட்டிடத்திற்கும் தனித்தனி பெயர்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், அரண்மனை மற்றும் கோட்டைச் சுவர்களின் பெயர்களுடன், சில பாதைகள் மற்றும் தெருக்களின் பெயர்களும் கல்வெட்டுகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன," என்று காசிநாதன் கூறுகிறார்.


இந்த நகரம் தமிழ் இலக்கியத்திலும் கொண்டாடப்படுகிறது. கோட்டையின் விரிவான விவரணை ஒட்டக்கூத்தரின் முவர் உலாவிலிருந்து வருகிறது. ராஜராஜ சோழன் உலா நகரத்தின் முக்கியமான இடங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட விவரிக்கிறது. ஜெயங்கொண்டாரால் இயற்றப்பட்ட கலிங்கத்துப்பரணியில் நகரம் கங்கபுரி (Gangapuri) என்று குறிப்பிடப்படுகிறது.


கடந்த காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தின் மகத்துவத்தை அகழ்ந்து காட்சிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த நகரத்தின் விதி முழு வட்டமாக மாறியிருக்கிறது. “ஒரு காலத்தில் ஆசியாவின் மிக சக்திவாய்ந்த பேரரசின் தலைநகராக இருந்த இந்த இடம் இப்போது பாழடைந்து கிடக்கிறது, கோயில் மட்டுமே எஞ்சியுள்ளது. சோழப் பேரரசின் பிரகாசமான வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது ஒரு துயரமாகும்,” என்கிறார் நாகசாமி. அவர் விளக்குவதுபோல, 13ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்த பாண்டியர்கள், தங்கள் தோல்விகளுக்கு பழிவாங்கியவர்களாக, “இந்த நகரத்தை முற்றிலுமாக தரைமட்டமாக்கியிருக்க வேண்டும்.” இந்த நகரத்திற்கு புனித கங்கை நீர் கொண்டுவரப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன, இந்த ஆயிரமாண்டு நிறைவை, இந்நகரத்தை நிறுவிய பேரரசருக்கு பொருத்தமான அஞ்சலியாக கொண்டாடப்பட வேண்டும் என்கிறார் ஆர். கோமகன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர்.



Original article:

Share:

இந்தியாவின் இணையத்தில் பொருள் வாங்கும் (online shopping) பழக்கங்கள் எவ்வாறு மாறியுள்ளன? -ஆஷிஷ் குமார் சாக்ஷி அப்ரோல்

 இணையவழியில் வாங்குவது அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் வரையறைகள் இடம், தயாரிப்பு வகை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையால் வரையறுக்கப்படுகின்றன.


இந்தியாவின் மின்-வணிகக் கதை (e-commerce story) பெரும்பாலும் பரந்த அளவில் கூறப்படுகிறது. இது வேகமான வளர்ச்சி, அதிக தள்ளுபடிகள் மற்றும் பெரும்பாலும் நகர்ப்புற வாடிக்கையாளர்களைப் பற்றி பேசுகிறது. இதில், மக்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் பெரிய, விரிவான ஆய்வுகள் எதுவும் இல்லை. நாடு தழுவிய அளவில் கிடைக்கும் ஒரே தரவு வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு (Household Consumer Expenditure Survey (HCES)) ஆகும். இந்த கணக்கெடுப்பு குறிப்பாக இணையத்தில் பொருள் வாங்குவதை (online shopping) அளவிடுவதற்காக செய்யப்படவில்லை என்றாலும், நுகர்வோர் நடத்தை எவ்வாறு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது இன்னும் உதவுகிறது.


ஒரு வருடத்திற்கு முன்பு, 2022–23 கணக்கெடுப்பு முதலில் இணையத்தில் பொருள் வாங்குவதை (online shopping) பொருட்கள் வாங்குவதற்கான ஒரு தனி வழியாக அங்கீகரித்தது. இந்த நடத்தை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க சமீபத்திய தரவு நமக்கு உதவுகிறது. 2023–24 தரவு ஒரு கலவையான படத்தைக் காட்டுகிறது. இணையத்தில் பொருள் வாங்கல் அதிகரித்து வருவதால் இடம், தயாரிப்பு வகை மற்றும் நுகர்வோர் எவ்வளவு நம்பிக்கையுடன் உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.


HCES மின் வணிகத்தை நேரடியாகக் கண்காணிக்கவில்லை. இருப்பினும், இது இணையத்தில் பொருள் வாங்கல் பற்றிய பயனுள்ள குறிப்புகளை வழங்குகிறது. இது இணையப்படும் செலுத்தும் பணப் பரிவர்த்தனையை பதிவு செய்கிறது. இது உண்மையான முழு இணையக் கொள்முதல்களைவிட அதிகமாக இருக்கலாம். இதற்கான போக்குகள் ஆண்டுதோறும் எவ்வாறு மாறி வருகின்றன என்பதை அட்டவணை காட்டுகிறது.


இதற்கான முக்கிய விஷயம் என்னவென்றால், இணையத்தில் பொருள் வாங்கல் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகையிலும், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் வளர்ந்துள்ளது. ஒரே விதிவிலக்கு மொபைல் போன்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களில் இணையம் மூலம் ஆடை கொள்முதல் 9.1%-லிருந்து 12% ஆக உயர்ந்துள்ளது. மேலும், இணையத்தில் பொருள் வாங்கல் ஏற்கனவே பிரபலமாக இருந்த நகர்ப்புற இந்தியாவில், இந்த எண்ணிக்கை 32.5%-லிருந்து 35.8% ஆக உயர்ந்துள்ளது.


      மற்ற பிரிவுகளும் இதேபோன்ற நிலையைக் காட்டுகின்றன. கிராமப்புறங்களில், மொபைல் ரீசார்ஜ்கள், சந்தாக்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவுகள் போன்ற சேவைகள் 16.2% இலிருந்து 28.2%-ஆக அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், ஆன்லைன் சேனல்கள் மூலம் 'எரிபொருள் மற்றும் விளக்கு' மீதான செலவு 17.4%-லிருந்து 28.6%-ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இது, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதையோ அல்லது எல்பிஜி நிரப்புதல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் அடிப்படையில், அதிகமான மக்கள் வசதியாகி வருவதைக் காட்டக்கூடும்.


சில மாற்றங்கள் சிறியதாக இருந்தன. எடுத்துக்காட்டாக, கிராமப்புறங்களில் கழிப்பறைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதில் சிறிது அதிகரிப்பு இருந்தது. இது அன்றாடப் பொருட்களுக்குக் கூட  இது பொருந்தும். இதில், டிஜிட்டல் ஷாப்பிங்கில் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது.


எவ்வாறாயினும், தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற பிரிவுகளில், ஆன்லைன் கொள்முதல்களின் பங்கு அப்படியே இருந்தது அல்லது கொஞ்சம் குறைந்துள்ளது. பெரிய அல்லது அரிதான கொள்முதல்கள் இன்னும் பெரும்பாலும் ஆஃப்லைனில் செய்யப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. உற்பத்தி தயாரிப்புகளைத் தொட்டுச் சரிபார்க்கவும், நிறுவலில் உதவி பெறவும், விற்பனையாளரை அதிகம் நம்பவும் மக்கள் ஆஃப்லைன் ஷாப்பிங்கை விரும்புகிறார்கள்.


இணையத்தின் வாங்குபவர்களின் பங்கு


ஒவ்வொரு தயாரிப்பு வகையிலும் எத்தனை நுகர்வோர் ஆன்லைனில் வாங்கினார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் பொருட்களின் குறியீடுகளைப் (item codes) பயன்படுத்தினோம் (படத்தைப் பார்க்கவும்). 2023-24-ஆம் ஆண்டில், நகர்ப்புற மொபைல் போன் வாங்குபவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் ஆன்லைனில் வாங்கினார்கள். கிராமப்புறங்களில், 8 சதவீதம் பேர் மட்டுமே வாங்கினார்கள். ஆடைகளைப் பொறுத்தவரை, நகரங்களில் இணையத்தின் பங்கு இன்னும் அதிகமாக இருந்தது. இது, கிராமப்புறங்களில் 12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் 36 சதவீதம் ஆகும்.


       கடிகாரங்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற தனிப்பட்ட மின்னணு சாதனங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டின. நகர்ப்புறங்களில், 9.3% வாங்குபவர்கள் இந்தப் பொருட்களை ஆன்லைனில் வாங்கினார்கள். கிராமப்புற இந்தியாவில், 3.7% பேர் மட்டுமே வாங்கினார்கள். மறுபுறம், பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்கள் பெரும்பாலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஆஃப்லைனில் வாங்கப்பட்டன. எனவே, சில வகைகளில் இணையத்தில் பொருள் வாங்கல் வளர்ந்து வந்தாலும், உண்மையான எண்கள் பெரும்பாலும் உற்சாகமான செய்தி விவாதங்கள் கூறுவதைவிட மிகக் குறைவு.


இந்த முறையை என்ன விளக்குகிறது?


முதலாவதாக, தயாரிப்பு வகை முக்கியமானது. தரப்படுத்தப்பட்ட, பிராண்டட் செய்யப்பட்ட மற்றும் திரும்பப் பெறக்கூடிய தயாரிப்புகள் ஆடை மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்றவை ஆன்லைன் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டன.


இரண்டாவதாக, இணையத்தில் பொருள் வாங்கலின் வளர்ச்சி கட்டண முறைகள் மற்றும் இணைய இணைப்பைப் பொறுத்தது. கிராமப்புற இந்தியாவில், UPI அடிப்படையிலான செயலிகள் பரவுவதால், அதிகமான மக்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். மக்கள் டிஜிட்டல் பணம் செலுத்துவதில் மிகவும் வசதியாகி வருகின்றனர்.


மூன்றாவதாக, நுகர்வுப் பழக்கங்கள் எளிதில் மாறாது. உள்ளூர் கிரானா கடைகளுடனான அவர்களின் தனிப்பட்ட உறவுகளை மக்கள் மதிக்கிறார்கள். பண அடிப்படையிலான பரிவர்த்தனைகளையும் அவர்கள் வசதியாகக் காண்கிறார்கள். கூடுதலாக, வாங்குவதற்கு முன் பொருட்களை நேரடியாக ஆய்வு செய்வதை அவர்கள் நம்புகிறார்கள். இந்தக் காரணிகள் நுகர்வோர் நடத்தையை தொடர்ந்து இயக்குகின்றன.


நான்காவதாக, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டவர்கள்கூட இணையத்தில் பொருள் வாங்கல் முறைக்கு முழுமையாக மாறாமல் இருக்கலாம். அவர்களுக்கு, இணையத்தில் பொருள் வாங்கல் பெரும்பாலும் அதை மாற்றுவதற்குப் பதிலாக நேரடி வாங்கலில் சேர்க்கிறது. உதாரணமாக, ஒருவர் வாங்குபவர் ஒரு தொலைபேசியைப் பற்றிய விவரங்களை ஆன்லைனில் சரிபார்த்து, கடையில் இருந்து அதை வாங்கலாம். சில நேரங்களில், அவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்து ஒரு கடையில் பார்த்த பிறகு அதை இணையத்தில் வாங்கலாம். ஒரே குடும்பம் தங்களுக்கான ஆடைகளை ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கலாம். அதேநேரம், அவர்கள் இன்னும் ஒரு சாலையோர விற்பனையாளரிடமிருந்தும் காய்கறிகளை வாங்கலாம்.


ஐந்தாவது, இணையத்தில் பொருள் வாங்கல் இனி நகர்ப்புற உயரடுக்கிற்கு கட்டுப்படுத்தப்படவில்லை. இது இப்போது இந்தியாவின் பரந்த நுகர்வு முறையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. இருப்பினும், இந்த மாற்றம் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமாக நடக்கிறது. நகர்ப்புற இந்தியா ஆன்லைனில் அதிக அளவிலான தயாரிப்புகளை முயற்சித்து வருகிறது. மறுபுறம், கிராமப்புற இந்தியா மெதுவாகவும் கவனமாகவும் டிஜிட்டல் வாங்கலில் மிகவும் வசதியாகி வருகிறது.


எதிர்பார்க்க வேண்டியது என்ன?


இந்தியாவில் சில்லறை விற்பனையின் எதிர்காலம் கலப்பினமாக இருக்கும். இது உள்ளூர் சுற்றுப்புற உறவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் டிஜிட்டல் வசதியால் மேம்படுத்தப்படும். பிராண்டுகள் மற்றும் தளங்களைப் பொறுத்தவரை, அவர்கள் பல்வழி உத்திகள் (omni-channel strategies) உருவாக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் டிஜிட்டல்-மட்டும் மாதிரிகளை (digital-only models) மட்டும் நம்பியிருக்கக்கூடாது. கொள்கை வகுப்பாளர்களுக்கு, இது அனைத்து சேனல்களையும் நியாயமாக நடத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அவர்கள் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைத்து வடிவங்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


புள்ளியியல் வல்லுநர்களுக்கு, இணையம் மற்றும் நேரடி இரண்டிலும் செய்யப்படும் கொள்முதல்களின் மதிப்பைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். இது நுகர்வோர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது. வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பின் (Household Consumer Expenditure Survey (HCES)) எதிர்கால சுற்றுகளில் இந்தத் தரவு இருக்க வேண்டும். அவ்வாறு செய்வது பணவீக்கத்தை மிகவும் துல்லியமாக அளவிட அனுமதிக்கும். நுகர்வோர் விலைக் குறியீடுகளைக் கணக்கிடும்போது இணையம் மற்றும் நேரடி முறைகள் இரண்டிலிருந்தும் வாங்குதல்களை முழுமையாகச் சேர்க்கலாம்.


குமார் ஒரு சிறப்பு ஆய்வாளர், மற்றும் அப்ரோல் பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் ஒரு வருகைதரு ஆய்வாளர்.



Original article:

Share: