இந்தியாவில் வறுமை மதிப்பீடு - இந்தியாவில் வறுமை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— ஜூன் 2014-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்த குழு, நகர்ப்புறங்களுக்கு மாதாந்திர தனிநபர் செலவினத்தின் அடிப்படையில் தேசிய வறுமைக் கோட்டை  (national poverty line) ரூ.1,407 ஆகவும், கிராமப்புறங்களுக்கு ரூ.972 ஆகவும் மதிப்பிட்டபோது பரபரப்பை ஏற்படுத்தியது.


— இதன் பொருள், நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.47-க்கும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32-க்கும் அதிகமாகச் செலவிடும் மக்கள் அனைவரும் 'ஏழைகள்' இல்லை என்பதாகும். இந்த வரம்புகள் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகையில் 29.5 சதவீதமாகக் குறைக்க வழிவகுத்தன. அப்போதிருந்து, அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் குறைந்தபட்சம் ஒரு புதிய வறுமைக் கோடு உருவாக்கப்படவில்லை.


— கடந்த வாரம், ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள், 2022-23ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பை (Household Consumption Expenditure Survey (HCES)) பயன்படுத்தி, இந்தியாவின் 20 முக்கிய மாநிலங்களுக்கான ரங்கராஜன் வறுமைக் கோட்டின் வரம்பை ‘புதுப்பித்து’ வெளியிட்டுள்ளனர்.


—2011-12 மற்றும் 2022-23-ஆம் ஆண்டிற்கு இடையில் ஒடிசா மற்றும் பீகார் வறுமை அளவுகளில் மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. ரங்கராஜன் வறுமைக் கோட்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பிற்குக் கீழே உள்ள மக்கள்தொகை விகிதம் 40 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.


— மறுபுறம், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள்தொகை சதவீதத்தில் ஏற்பட்ட சரிவு கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மிகவும் குறைவாக இருந்தது.


— ஒட்டுமொத்தமாக, 2022-23-ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை இமாச்சலப் பிரதேசத்தில் மிகக் குறைவாகவும் (0.4 சதவீதம்) சத்தீஸ்கரில் அதிகமாகவும் (25.1 சதவீதம்) இருந்தது. இதற்கிடையில், நகர்ப்புற வறுமை, தமிழ்நாட்டில் குறைந்த அளவில் (1.9 சதவீதம்) இருந்தது. அதேசமயம், சத்தீஸ்கர் மீண்டும் அதிக நகர்ப்புற வறுமையைக் (13.3 சதவீதம்) கொண்ட மாநிலமாக இருந்தது.


— ரங்கராஜன் குழு ஆய்வில் நிர்ணயித்த இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை வரம்புகளை ரிசர்வ் வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் புதுப்பிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


— மற்றவர்களைப் போல் இல்லாமல், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் ஆய்வு நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) பணவீக்கத்தைப் பயன்படுத்தி பழைய வறுமைக் கோடுகளை மாற்றவில்லை. ஏனெனில், அது துல்லியமாக இல்லை. நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் வறுமைக் கோடுகளைக் கணக்கிடப் (poverty line basket (PLB)) பயன்படுத்தப்படும் காரணிகள் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். எடுத்துக்காட்டாக, உணவு கிராமப்புற வறுமைக் கோட்டில் 57% ஆகும். ஆனால், கிராமப்புற நகர்ப்புற நுகர்வோர் விலைக் குறியீட்டில் 54% மட்டுமே; நகரங்களில், உணவு வறுமைக் கோட்டில் 47% ஆகும். ஆனால், நகர்ப்புற நுகர்வோர் விலைக் குறியீட்டில் இது 36% மட்டுமே.


— வழக்கமான விலைக் குறியீட்டை (CPI) பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரங்கராஜன் வறுமைக் கோட்டில் உள்ள பொருட்களின் எடையுடன் பொருந்தக்கூடிய ஒரு புதிய விலைக் குறியீட்டை உருவாக்கினர்.


— இந்தியாவில் வறுமையின் அளவு பல ஆண்டுகளாக தீவிர விவாதத்திற்குரிய விவகாரமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆராய்ச்சி 2023-24 வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) தரவைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் வறுமை 4.86 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 4.09 சதவீதமாகவும் இருப்பதாக மதிப்பிட்டது. இந்த மதிப்பீடுகள் கிராமப்புறங்களுக்கு ரூ.1,632 மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.1,944 என்ற பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட 2023-24 வறுமைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.


— அரசாங்கத்தைப் பொறுத்தவரை, வறுமைக் கோடுகள் கடந்த காலத்தின் ஒரு விவகாரமாகத் தெரிகிறது. இப்போது, முக்கியமானது பல பரிமாண வறுமை, இது பணம் மற்றும் நுகர்வுக்கு அப்பாற்பட்டது. — — உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீட்டின் (Multidimensional Poverty Index (MPI) அடிப்படையில், இந்திய MPI வறுமையை மூன்று அம்சங்களில் பார்க்கிறது: அவை சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகும். இவை 12 குறிகாட்டிகளால் குறிப்பிடப்படுகின்றன: அவை ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் இளம் பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், வீட்டுவசதி, மின்சாரம், சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்கு போன்றவையாகும்.


— உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீடு வறுமையை அளவிடும்போது தாய்வழி சுகாதாரம் மற்றும் வங்கிக் கணக்குகளை கருத்தில் கொள்வதில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


- வறுமை (Poverty) என்பதை ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்கு அடிப்படை குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை வாங்குவதற்கு நிதி ஆதாரங்கள் இல்லாத ஒரு நிலை என்று வரையறுக்கலாம்.


— பொருளாதார வல்லுநர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ‘வறுமைக் கோடு’ (poverty line) என்று அழைக்கப்படும் ஒரு வரம்பிலிருந்து நுகர்வு செலவினத்தில் ஏற்படும் பற்றாக்குறையாக ‘முழுமையான’ வறுமையை மதிப்பிடுகின்றனர்.


— வறுமைக் கோடு என்பது ஒரு நபர் அல்லது குடும்பம் வறுமையில் உள்ளாரா இல்லையா என்று வருமானம் அல்லது செலவுகளின் அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு வரம்பு ஆகும். இந்த வரம்பு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய குறைந்தபட்ச வருமான நிலையை குறிக்கிறது. நாடுகளுக்கு நாடு ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து வறுமைக் கோட்டின் அளவு மாறுபடும்.



Original article:

Share:

தெலங்கானாவின் 42% இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் தடை, விரிவான சீர்திருத்தத்தின் தேவையை உணர்த்துகிறது -சாய் கணேஷ் அகராபு

 மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த முதல் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறது. இருப்பினும், நீதிமன்றங்கள் 50 சதவீத உச்சவரம்பை முழுமையானதாகக் கருதி, மக்கள்தொகை உண்மைகளை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றன.


செப்டம்பர் மாதம், தெலுங்கானா அரசு, அதன் சாதி கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBCs)) ஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்துவதற்காக அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர் மாநில மக்கள்தொகையில் 56.33 சதவீதம் உள்ளனர் என்று கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. இது விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கான தெளிவான நியாயத்தை நிறுவுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கை நீதித்துறை எதிர்ப்பை (judicial resistance) சந்தித்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அக்டோபர் 16 அன்று உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்க  மறுத்துவிட்டது. முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி 50 சதவீத உச்சவரம்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த சட்டத் தடை, சாதி, சமத்துவம் மற்றும் உறுதியான நடவடிக்கையின் அரசியலமைப்பு வரம்புகள் குறித்த அடிப்படை விவாதத்தை மீண்டும் உருவாக்குகிறது.


இந்த உச்சவரம்பு 1992-ல் இந்திரா சாவ்னி vs இந்திய ஒன்றிய அரசு (Indra Sawhney v. Union of India) வழக்கில் தொடங்குகிறது. இந்த வழக்கில் சமத்துவத்தை (equality) பாதுகாக்க ஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் இடஒதுக்கீட்டை முறையான சமத்துவம் என்ற பொதுவான கொள்கைக்கு விதிவிலக்காக வடிவமைத்தது. இந்தக் கட்டமைப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  நீதித்துறையை (jurisprudence) வடிவமைத்து வருகிறது.  சாதி அடிப்படையிலான விலக்கை அகற்றுவதற்கான அரசியலமைப்பு உறுதிப்பாட்டைவிட உறுதியான நடவடிக்கையை ஒரு விதிவிலக்காகக் கருதுகிறது.


ஆனால், இடஒதுக்கீடு ஒரு சலுகை அல்ல. இது உண்மையான சமத்துவத்தின் (substantive equality) அரசியலமைப்பு கருவியாகும். காலம் காலமாக தொடர்ந்துவரும் சமூக படிநிலைகளை அகற்றி சம வாய்ப்பை ஊக்குவிக்க இடஒதுக்கீடு வடிவமைக்கப்பட்டது. சட்டபிரிவுகள் 15 மற்றும் 16 உறுதிமொழி நடவடிக்கையை விலகலாகக் கருதவில்லை. சாதியால் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் உண்மையான சமத்துவத்தை அடைவதற்கான கட்டமைப்பு கருவியாக அவை இதை கருதுகின்றன. இருப்பினும், நீதித்துறை விளக்கங்கள் (judicial interpretations) பெரும்பாலும் இந்த விதிகளை முறையான நடவடிக்கைகளாகவே குறைக்கின்றன.


கே. கிருஷ்ணமூர்த்தி vs இந்திய ஒன்றிய அரசு (K Krishnamurthy v. Union of India) வழக்கில், அளவிடக்கூடிய தரவுகள் (quantifiable data) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. விகாஸ் கிஷன்ராவ் கவாலி vs மகாராஷ்டிரா மாநில அரசு (Vikas Kishanrao Gawali v. State of Maharashtra) வழக்கில், இது மூன்று சோதனைகளை முன்வைத்தது: தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒரு ஆணையம், போதுமான பிரதிநிதித்துவத்தின் மதிப்பீடு, மற்றும் 50 சதவீத உச்சவரம்பை கடைபிடிப்பது, இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளும் கொள்கைகளை உருவாக்குவதற்கு தரவுகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, ஆனால் அவை சாதி பாகுபாட்டின் உண்மையான பிரச்சினைகளுடன் பொருந்தாத இடஒதுக்கீடுகளுக்கு இன்னும் ஒரு வரம்பை வைத்திருக்கின்றன. இடஒதுக்கீட்டை ஒரு குறுகிய கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்துவது, சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அரசியலமைப்பின் வாக்குறுதியை புறக்கணிப்பது போன்றதாகும்.


தெலங்கானாவின் கொள்கை கவாலி மற்றும் கிருஷ்ணமூர்த்தி வழக்குகளில் அமைக்கப்பட்ட கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு மூன்று சோதனை நிபந்தனைகளில் முதல் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறது. இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள்தொகை உண்மைகளை புறக்கணித்து, நீதிமன்றங்கள் 50 சதவீத உச்சவரம்பை ஏறக்குறைய முழுமையானதாக கருதுகின்றன. இதற்கிடையில், பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர்களுக்கான (Economically Weaker Sections (EWS)) ஒதுக்கீடு நீதித்துறை எதிர்ப்பு இல்லாமல் இந்த உச்சவரம்பை மீறுகிறது. நியாயமற்ற முறையில் விதிகளைப் பயன்படுத்துவது, இந்த அமைப்பு உயர் சாதியினருக்கு சாதகமாக இருப்பதைக் காட்டுகிறது.


தமிழ்நாடு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. மாநிலம் நீண்டகாலமாக 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கையை பாதுகாத்து வருகிறது. சட்டத்தை 9-வது அட்டவணையில் (Ninth Schedule) வைப்பதன் மூலம் இடஒதுக்கீடு பாதுகாக்கப்படுகிறது. இந்த சட்டத்தை நீதித்துறை ஆய்வில் இருந்து பாதுகாக்கிறது. தெலங்கானாவும் அதன் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படுவதைப் பாதுகாக்க இதேபோன்ற நடவடிக்கையை முயற்சிக்கலாம். இருப்பினும், இதற்கு ஒன்றிய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது, ஒன்றிய அரசு நினைத்தால் மட்டுமே நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை 9-வது அட்டவணையில் வைக்க முடியும். கேசவானந்த பாரதி மற்றும் ஐ.ஆர். கோயல்ஹோ (Kesavananda Bharati and I R Coelho) வழக்குகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இத்தகைய பாதுகாப்பு முழுமையானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றன.


 ஒரு சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறினால், அது தள்ளுபடி செய்யப்படும் அபாயம் உள்ளது. கோட்பாட்டின் தெளிவற்ற தன்மை, மீறல் என்ன என்பதை தீர்மானிக்க நீதிமன்றத்தின் விளக்கத்திற்கு விடப்படுகிறது. சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்ப்பது எப்போதும் அவற்றைப் பாதுகாக்காது. ஏனெனில், நீதிமன்றம் அத்தகைய சட்டங்கள் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக இன்னும் தீர்ப்பளிக்க முடியும். இது அரசியலமைப்பில் பெரிய மாற்றங்களின் அவசியத்தைக் காட்டுகிறது. மாநில சட்டங்களைப் பாதுகாக்கவும், நியாயமான, நெகிழ்வான அமைப்பை உருவாக்க ஒன்றிய அரசின் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்


சீர்திருத்தங்களில், வெளிப்படையான சமூக-பொருளாதார தரவுகளால் பொருளாதார தரவுகளின் ஆதரவுடன், மாநிலங்கள் தங்கள் உண்மையான மக்கள்தொகைகளுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் சேர்க்கப்பட வேண்டும் சட்ட சீர்திருத்தம் மட்டும் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் நீதித்துறை ஆழமாக சமமற்றதாக உள்ளது. உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடுமையாக குறைவாக பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு, நீதிபதிகளை சாதிப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை குறைக்கச் செய்கிறது மற்றும் உண்மையான சமூக பன்முகத்தன்மையுடன் பொருந்தாத கடுமையான வரம்புகளை வைத்திருக்கிறது. நீதித்துறையை ஜனநாயகமயமாக்குவது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். நியாயமான தீர்ப்புகளுக்காக மட்டும் மட்டுமல்ல, பயனுள்ள சமத்துவத்தின் குறிக்கோள்களுடன் விளக்கத்தை சீரமைப்பதாகும்.


நீதித்துறையை மட்டுமல்ல, அரசியல், சட்டம் மற்றும் ஊடகங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த நிறுவனங்கள்மீது கட்டுப்பாடு இல்லாமல், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் அரசியல்ரீதியாக பின்தங்கியே இருக்கும். மேலும், இடஒதுக்கீடு மட்டுமே முறையான விலக்கை அகற்ற முடியாது. அனைத்து மட்டங்களிலும் அரசு அதிகாரத்தின்மீது பின்தங்கிய வகுப்புகள் உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்போது மட்டுமே, அவர்கள் தங்கள் நலன்களைப் பிரதிபலிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.


பி.ஆர். அம்பேத்கர், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை திறப்பதற்கான முதன்மைத் திறவுகோல் அரசியல் அதிகாரமாகும் (political power) என்று கூறினார். தெலுங்கானாவின் இடஒதுக்கீடு மோதல் என்பது, கடினமான சட்ட மரபுகள் மற்றும் வேரூன்றிய படிநிலைகளை சவால் செய்யும், சேர்க்கைக்கான பரந்த ஜனநாயக போராட்டமாகும்.


தெலங்காணாவில் உள்ளூர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது இந்த முட்டுக்கட்டையை தீர்க்க வேண்டிய அவசரத்தை வலியுறுத்துகிறது. மாநிலத்தின் 42 சதவீத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, தரவுகளால் ஆதரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் தடைபட்டுள்ளது, இது ஒரு கொள்கை முன்மொழிவுக்கு மேல் உள்ளது. இது வரலாற்று நீதியில் வேரூன்றிய அரசியல் உறுதிமொழி ஆகும். இந்த முட்டுக்கட்டை, அரசியலமைப்பின் கடுமையான தன்மைக்கும் இந்தியாவின் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் சமூக யதார்த்தங்களுக்கும் இடையே விரிவடையும் இடைவெளியை வெளிப்படுத்துகிறது.


சுருக்கமாக, உண்மையான சமத்துவத்திற்கு ஒரு விரிவான உத்தி தேவைப்படுகிறது. இதில் சமூக-மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள்; தன்னிச்சையான நிபுணர் ஆணையங்களால் மேற்பார்வை செய்யப்படும் வெளிப்படையான கொள்கை உருவாக்கம்; இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் நீதித்துறை நியமனங்களை ஜனநாயகமாக்குதல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உறுதியான அரசியல் எழுச்சி மற்றும் மாநில அதிகாரத்தை கைப்பற்றுதல் ஆகியவை அடங்கும்.


இந்த முழுமையான அணுகுமுறையின் மூலம் மட்டுமே நமது நாட்டின் நீதி மற்றும் சமத்துவத்தின் தனது அரசியலமைப்பு வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். வரலாற்று ரீதியாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார சேர்க்கை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியும்.


எழுத்தாளர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share:

பல கண்ணோட்டங்கள், ஒரு முடிவு -பி. சிதம்பரம்

 கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு கட்டப்பட்ட அளவு மிகப்பெரியதாக இருந்தாலும் (மற்றும் செலவு செய்யப்பட்ட தொகைகள் மகத்தானவை), தரம் மிகவும் மோசமாக இருந்தது — பழைய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், விழும் பாலங்கள், இடிந்து விழும் கட்டிடங்கள், மற்றும் முதல் மழைக்குப் பிறகு அழிந்து போகும் புதிய நெடுஞ்சாலைகள். தரமான வேலைகளில், குறைவாகச் சொன்னால் நல்லது.


93 வயதிலும், டாக்டர் சி ரங்கராஜன் இன்னும் திறந்த பொருளாதாரத்தையும் கவனமான நிதி நிர்வாகத்தையும் தீவிரமாக ஊக்குவித்து வருகிறார். அவர் பல ஆண்டுகள் மத்திய வங்கியாளராகப் பணியாற்றினார் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் 19வது ஆளுநராக இருந்தார் (1992–97). அக்டோபர் 14, 2025 அன்று, திரு. டி. கே. ஸ்ரீவஸ்தவாவுடன் இணைந்து ஒரு தலையங்கக் கட்டுரையை எழுதினார். இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 6.5% என மதிப்பிட்டார். இன்றைய உலகளாவிய சூழலில் இந்த விகிதத்தை "நியாயமான அளவு அதிகமானது" (“reasonably high”) என்று அவர் அழைத்தார். ஆனால், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க, இந்தியா அதன் வளர்ச்சித் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.


இருப்பினும், பல ஆண்டுகளில் 6.5% என்ற சராசரி வளர்ச்சி விகிதம் உண்மையில் குறைவாகவே உள்ளது. இந்த விகிதத்தில், இந்தியா 'குறைந்த-நடுத்தர வருமானம்' பிரிவில் உள்ளது. இது தனிநபர் மொத்த தேசிய வருமானம் (Gross National Income (GNI)) 1,146–4,515 (2024–25) மூலம் வரையறுக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GNI) 2,650 அமெரிக்க டாலர்கள் (2024) எகிப்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. இந்தியாவை குறைந்த-நடுத்தர வருமானக் குழுவிலிருந்து மீட்டெடுக்க தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி (GNI) இரட்டிப்பாக்கப்பட வேண்டும். இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி விகிதம் நீடித்தால், அந்த இலக்கை அடைய ஒன்பது ஆண்டுகள் ஆகும், மேலும் வேலையின்மை நிலைமை மோசமடையக்கூடும்.


மதிப்பீடுகள் குறித்த ஒருமித்த கருத்து

ரிசர்வ் வங்கி 2025-26 நிதியாண்டிற்கான வளர்ச்சி மதிப்பீட்டை 6.5% இருந்து 6.8% ஆக உயர்த்தியுள்ளது. ஆனால், அது வேலையின்மை குறித்து மிகக் குறைந்த தகவல்களை மட்டுமே அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கை (செப்டம்பர் 2025, பொருளாதாரத்தின் நிலை) படி, ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பு குறிகாட்டிகள் கலவையான முடிவுகளைக் காட்டின. அகில இந்திய வேலையின்மை விகிதம் 5.1% ஆகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி அதன் ஆணையின்படி, வேலைவாய்ப்பில் அல்ல, பணவியல் மற்றும் விலை நிலைத்தன்மையில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. நிதி அமைச்சகம், அதன் ஆகஸ்ட் மாத பொருளாதார மதிப்பாய்வில், அதன் வளர்ச்சி கணிப்பை 6.3-6.8%-ஆக வைத்திருந்தது மற்றும் வேலையின்மை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


உலக வங்கி ஆரம்பத்தில் 2025-26 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டது. ஆனால், 2026-27-ஆம் ஆண்டிற்கான விகிதத்தை 6.3%-ஆகக் குறைத்தது. IMF இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 2025-ஆம் ஆண்டிற்கு 6.6%-ஆக உயர்த்தியது. 2026-ஆம் ஆண்டில் 6.2% ஆகக் குறையும் என்று கணித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organization for Economic Co-operation and Development (OECD)) 2025-26-ஆம் ஆண்டில் 6.7%-ஆகவும், 2026-27-ஆம் ஆண்டில் 6.2%-ஆகவும் வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளது.


மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation (GFCF)), முடிவை முன்கூட்டியே  வெளிப்படுத்தும் காரணி


இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 6.5% ஆகவும், அடுத்த ஆண்டு 0.2% சற்று குறைவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் டாக்டர் ரங்கராஜனின் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கின்றன. மிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) விகிதம் என்று அவர் விளக்கினார். இது பல ஆண்டுகளாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது.


GFCF 2007-08-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35.8%-லிருந்து 2024-25 நிதியாண்டில் 30.1% ஆகக் குறைந்துள்ளது மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் 28% முதல் 30% வரை உள்ளது.


தனியார் நிலையான மூலதன உருவாக்கம் (PFCF) — மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தின் (GFCF) ஒரு பகுதி — 2007-08-ல் ஜிடிபியில் 27.5 சதவீதமாக இருந்தது, 2022-23-ல் (கடைசியாகக் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவு) 23.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. டாக்டர் ரங்கராஜன் கூடுதல் கடன் உற்பத்தி விகிதத்தையும் (ICOR) குறிப்பிட்டார், ஆனால் அது ஒரு பெறப்பட்ட எண்ணிக்கை என்பதால் அதை நான் விட்டுவிட்டேன். டாக்டர் ரங்கராஜன் முடிவு செய்தபடி, GFCF/PFCF மேம்படவோ அல்லது ICOR குறையவோ இல்லையெனில், இந்தியா 6.5 சதவீத வளர்ச்சி விகிதத்தில் மட்டுமே தொடரும்.


தனியார் முதலீடு இந்தியாவை ஏன் தவிர்க்கிறது? அரசாங்கத்திற்கும் வணிகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையின்மையே முக்கியக் காரணம் ஆகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க பல முறைகளை முயற்சித்துள்ளார். ஆனால், முதலீட்டாயர்கள் நம்பிக்கையுடன் இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் பணத்தை வைத்திருக்கவும், காத்திருந்து கவனிக்கவும், தோல்வியுற்ற நிறுவனங்களை வாங்கவும் அல்லது பிற நாடுகளில் முதலீடு செய்யவும் விரும்புகிறார்கள்.


டாக்டர் சிங் போன்ற துணிச்சல்


வளரும் நாட்டில், அரசாங்கத்தின் வெற்றி, அது தரமான உள்கட்டமைப்பை எவ்வளவு சிறப்பாக உருவாக்குகிறது மற்றும் நல்ல வேலைகளை உருவாக்குகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், ஏராளமான உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டன. மேலும், அதிக அளவு பணம் செலவிடப்பட்டது. ஆனால், தரம் மிகவும் மோசமாக உள்ளது. காலாவதியான வடிவமைப்புகள், இடிந்து விழும் பாலங்கள், இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் முதல் மழைக்குப் பிறகு அடித்துச் செல்லப்படும் புதிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் வேலை உருவாக்கம் இன்னும் மோசமாக உள்ளது. படித்தவர்கள் வேலை தேட போராடுகிறார்கள், வேலையின்மை 29.1% உள்ளது. அதில் படித்த இளைஞர்களின் வேலையின்மை 45.4% உள்ளது. பள்ளிக் கல்வி மட்டுமே உள்ளவர்கள் அல்லது பள்ளியைவிட்டு வெளியேறியவர்கள் ஒழுங்கற்ற அல்லது குறைந்த ஊதியம் தரும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் அல்லது அவர்கள் வேலைவாய்ப்புக்காக  இடம்பெயர்கிறார்கள். செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாக உள்ள அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம், 1.54 சதவீதமாக உள்ள அதிகாரப்பூர்வ சில்லறை பணவீக்க விகிதம் போலவே ஒரு நகைச்சுவையாகும்.


6.5 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதம் கொண்டாட்டத்திற்கு உரிய தருணம் அல்ல. இது இந்தியா கீழ்-நடுத்தர வருமானப் பொறியில் சிக்கியிருப்பதைக் குறிக்கிறது, அதிலிருந்து வெளியேறுவதற்கான யோசனைகளோ அல்லது தைரியமோ இல்லாமல் உள்ளது. இது மன்மோகன் சிங் போன்ற தைரியத்தை வரவழைக்க வேண்டிய நேரம்.



Original article:

Share:

பிரதமர் மோடி அடுத்த வாரம் ஆசியான் மாநாட்டில் குவாட், பிரிக்ஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளார் -சுஹாசினி ஹைதர்

 பிரதமர் ஆசியான்-கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பதை புது தில்லி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிரதமர் செல்வார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.


குவாட் மற்றும் பிரிக்ஸ் ஆகிய இரு நாடுகளுடனும் தனது உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள், அக்டோபர் 26–28 வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சி மாநாட்டில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் (East Asia Summit (EAS)) கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள். இதற்கிடையில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் ASEAN தொடர்பான கூட்டங்களில் பார்வையாளர்களாக கலந்து கொள்வார்கள்.


இதன் பொருள், அடுத்த ஆண்டு இந்தியா இரண்டு உச்சிமாநாடுகளையும் நடத்தத் தயாராகி வருவதால், குவாட் மற்றும் பிரிக்ஸ் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க பிரதமர் மோடிக்கு வாய்ப்பு கிடைக்கும். வெளியுறவு அமைச்சகம் அவரது பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உட்பட ASEAN தொடர்பான கூட்டங்களில்  பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன் கடந்த வாரம் கூறினார். அவரது வருகை "சாத்தியமானது" என்று அரசாங்க அதிகாரிகளும் குறிப்பிட்டனர்.


இந்த ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தவிருந்தது. இருப்பினும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்கள் காரணமாக, உச்சிமாநாடு 2026-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026ஆம் ஆண்டில், இந்தியா பிரிக்ஸ் தலைவராகவும் மாறும், மேலும் இந்த 11 நாடுகளின் வளர்ந்துவரும் பொருளாதாரக் குழுவின் உச்சிமாநாட்டை நடத்தும். குவாட் மற்றும் பிரிக்ஸ் இரண்டிலும் அங்கம் வகிக்கும் ஒரே நாடு இந்தியா ஆகும். குவாட் குழு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை உள்ளடக்கியது. அதே நேரத்தில் பிரிக்ஸ் ரஷ்யா மற்றும் சீனாவை உள்ளடக்கியது.


அதிபர் டிரம்பின் வர்த்தக வரிகள், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அவர் அளித்த எச்சரிக்கைகள், ஈரான் (சமீபத்தில் பிரிக்ஸில் இணைந்தது) மீதான தடைகள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு பொதுவான நாணயத்தை ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டும் பிரிக்ஸ் உறுப்பினர்கள்மீது 100% வரிகளை விதிக்கப் போவதாக அவர் விடுத்த அச்சுறுத்தல்கள் ஆகியவை பதற்றத்தை அதிகரிக்கின்றன.


வெளியுறவு அமைச்சக செயலாளர் (பொருளாதார உறவுகள்) சுதாகர் தலேலாவின் கூற்றுப்படி, தற்போதைய உலகப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி, நிச்சயமற்ற முதலீடுகள், நிலையற்ற வட்டி விகிதங்கள், ஒருதலைப்பட்ச வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. கடந்த வாரம் CUTS இன்டர்நேஷனல் மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்த டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.


"உலகம் பல சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளில், இந்தியா பிரிக்ஸை வழிநடத்துகிறது," என்று அவர் கூறினார், பிரிக்ஸின் 20வது ஆண்டில் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான இந்தியாவின் திட்டங்களை விளக்கினார்.

ஆசியான் உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடிக்கும் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்யும் அதே வேளையில், குவாட் உச்சிமாநாட்டையும் திட்டமிட இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு அமெரிக்கா-இந்தியா-ஆஸ்திரேலியா-ஜப்பான் உச்சிமாநாடு நடக்கவில்லை என்றால், இந்தியா-அமெரிக்கா இடையேயான பதட்டங்கள் புது தில்லியின் திட்டங்களை சீர்குலைக்கும் தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக இது இருக்கும்.


ஜனவரி 2024-ல் குடியரசு தினத்தன்று, பிரதமர் மோடி குவாட் தலைவர்களை ஒரு உச்சிமாநாட்டிற்கு அழைத்திருந்தார். ஆனால், அப்போதைய அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்காவில் நடந்த ஒரு கொலை சதித்திட்டத்தில் இந்திய அதிகாரிகள் தொடர்புடையவர்கள் என்ற பன்னுன் வழக்கு (Pannun case) தொடர்பான பதட்டங்கள் காரணமாக மறுத்துவிட்டார். பின்னர், பைடன் செப்டம்பர் 2024-ல் அமெரிக்காவில் குவாட் உச்சிமாநாட்டை நடத்தினார்.


2025-ல் ஒரு புதிய அமெரிக்க நிர்வாகத்துடன், இந்த ஆண்டு உச்சிமாநாட்டிற்கான தேதியை நிர்ணயிக்க இந்தியா நம்பியது. ஆனால், டிரம்பின் கட்டணங்கள் குறித்த கணிக்க முடியாத முடிவுகள், இந்தியா-அமெரிக்கா. வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அவரது பங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கான அவரது அழுத்தம் ஆகியவை பேச்சுவார்த்தைகளை முடக்கியுள்ளன.


இந்த வாரம் டெல்லியில் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட ஒரு தனியார் குவாட் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" (“America First”) கொள்கை இப்போது குவாட்டின் வலிமையை சோதிக்கிறது என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். மருந்துகள் மற்றும் கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலிகளை மிகவும் பாதுகாப்பானதாக்குவது போன்ற குவாட் இலக்குகளுக்கு வரிகளும் வர்த்தகப் போர்களும் தீங்கு விளைவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். சாத்தம் ஹவுஸ் விதிகளின் (Chatham House Rules) கீழ் நடைபெற்ற விவாதத்தின்படி, காலநிலை உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்குதல், தடுப்பூசி ஆராய்ச்சி நிதியைக் குறைத்தல் மற்றும் குறிப்பிட்ட குவாட் முயற்சிகளுக்கான ஆதரவைக் குறைத்தல் போன்ற அமெரிக்க முடிவுகளிலிருந்து வரும் சவால்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


இதன் விளைவாக, மோடியின் கோலாலம்பூர் பயணம் முதன்மையாக ஆசியான் தொடர்பான கூட்டங்களுக்காக, தென்கிழக்கு ஆசியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆசியான்-இந்தியா பொருட்கள் வர்த்தக ஒப்பந்தத்தை (AITIGA) மறு ஆய்வு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது அட்டவணையில், இந்தியா வரவிருக்கும் மாதங்களில் நடத்தவுள்ள இரண்டு முக்கியமான குழுக்களான குவாட் மற்றும் பிரிக்ஸ் குறித்து முன்னோக்கிச் செல்ல வழிகள் குறித்த விவாதங்களும் நிரம்பியிருக்கலாம்.



Original article:

Share:

இந்தியா ஏன் தலிபானுடன் உறவு மேற்கொள்கிறது? -ஸ்டான்லி ஜானி

 1990ஆம் ஆண்டுகளில் தாலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது தவிர, இந்தியா பொதுவாக ஆப்கானிஸ்தானுடன் நட்புறவைக் கொண்டிருந்தது. இந்தியா-பாகிஸ்தான் மோதல்களின்போது, ​​ஆப்கானிஸ்தான் முடியாட்சி நடுநிலை வகித்தது மற்றும் இரு நாடுகளிலிருந்தும்  இடைவெளியைப் பராமரித்தது. 1973ஆம் ஆண்டில், தாவூத் கானின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் ஒரு குடியரசாக மாறியது மற்றும் இந்தியாவுடன் நெருக்கமாக மாறியது. 1978-ல் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (People’s Democratic Party of Afghanistan (PDPA)) ஆட்சியைப் பிடித்தபோது, ​​அது வன்முறை, சோவியத் தலையீடு மற்றும் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. எனினும், சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிய அரசாங்கத்தை அங்கீகரித்த ஒரே கம்யூனிஸ்ட் அல்லாத நாடு இந்தியாவாகும்.


பின்னர், ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிறகு முஜாஹிதீன்கள் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபோது, ​​அவர்களும் சில ஆரம்ப தயக்கங்களுக்குப் பிறகு இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டனர். 2001-ல் தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலமும் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஒரு முக்கியமான பங்காளியாக மாறியது. ஆனால், இருபது ஆண்டுகள் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 2021-ல் தாலிபானின் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பிராந்திய சவாலாக அமைந்தது.


கடந்த வாரம், இந்தியா தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியை வரவேற்றது, காபூலில் உள்ள அதன் 'தொழில்நுட்ப திட்டத்தை' (‘technical mission’) மேம்படுத்தவும் முடிவு செய்தது போன்றவை தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு இந்தியா நெருங்கி வருவதைக் காட்டுகிறது.


பாகிஸ்தான் ஆட்சியின் ஆதரவுடன் தாலிபான்கள் 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானியர்கள் “அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறிந்துள்ளனர்” (“have broken the shackles of slavery”.) என்று கூறினார். பலர் இதை பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய இராஜதந்திர வெற்றியாகக் கருதினர். ஏனெனில், அது நீண்டகாலமாக ஆப்கானிஸ்தானில் அதன் பாதுகாப்பு நலன்களுக்காக அதிக செல்வாக்கை விரும்பியது.


இருப்பினும், இந்தியா கவலைப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவுபெற்ற இஸ்லாமியக் குழு அதிகாரத்திற்கு வருவது, கடந்த 20 ஆண்டுகளில் அது கட்டியெழுப்பிய ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கக்கூடும்.


ஆப்கானிஸ்தானைக் கையாள்வதில் இந்தியா மூன்று முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது:


1.  தனது முதலீடுகளைப் பாதுகாத்தல் - 2001 மற்றும் 2021=ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியா ஆப்கானிஸ்தானில் சுமார் 3 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.


2. பாதுகாப்பை உறுதி செய்தல் - இந்தியா ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை இந்திய எதிர்ப்பு போராளிகள் பயன்படுத்துவதை இந்தியா விரும்பவில்லை.


3. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துதல் - தாலிபான்கள் பாகிஸ்தானின் ஒரு கருவியாக மாறுவதை இந்தியா தடுக்க விரும்புகிறது. மேலும் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகிறது.


இந்த இலக்குகளை அடைய, தாலிபானுடன் உறவுகள் மேற்கொள்வதை மட்டுமே நடைமுறை விருப்பமாக இந்தியா பார்க்கிறது. 2021-ஆம் ஆண்டு முதல், தாலிபான்களுடன் பேசவும் பணியாற்றவும் இந்தியா தனது விருப்பத்தைக் காட்டியுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவுகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன. காபூலில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தான் தலிபான் என்றும் அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan (TTP)) வலுவடைந்து பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை அதிகரித்தது. பாகிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் திறந்த ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தலிபான்கள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்க்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றன. இது பதட்டங்களையும் வெளிப்படையான எல்லை தாண்டிய மோதல்களையும் ஏற்படுத்தியது. இது முன்னர் அவர்களுக்கு ஆதரவளித்த தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பழைய உறவை முறித்தது.

இந்த சூழ்நிலையை தாலிபான்களுடனான தனது சொந்த உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பாக இந்தியா கருதியது. தாலிபான் தலைவர் முத்தாகியின் இந்திய வருகையின்போது, ​​பாகிஸ்தான் காபூலில் குண்டுவீச்சு நடத்தியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பல நாட்கள் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்தது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிராந்திய உறவுகள் எவ்வாறு மாறிவிட்டன என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.


தாலிபான்களுடனான உறவுகளை மேம்படுத்துவது சில இராஜதந்திர நன்மைகளைத் தரக்கூடும். இருப்பினும், இந்தியாவின் முக்கிய கேள்வி என்னவென்றால், அது இப்போது தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தாலிபான் மற்றும் ஐ.நா. அல்லது பிற முக்கிய நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டுமா என்பதுதான்.


சர்வதேச சமூகம், தாலிபான்களை ஆப்கானிஸ்தான் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்குமாறு இன்னும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏனெனில் தாலிபான்கள் பெண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதைத் தடை செய்துள்ளனர். மேலும், பெண்கள் வேலை செய்வதையும் தடை செய்துள்ளனர். தாலிபான்கள் எந்த மாற்றங்களையும் செய்யாமல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றால், சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அவர்களை கட்டாயப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்.


முதல் ஐந்து 


1.  இந்தியாவின் வருகைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கான அடுத்த படிகள்


இந்தியா ஆப்கானிஸ்தானுடனான தனது உறவை படிப்படியாகவும் கவனமாகவும் கட்டியெழுப்ப வேண்டும். அது தன்னை ஒரு வலுவான மனிதாபிமான  நட்பு நாடாக காட்ட வேண்டும் என்று தாரா கர்த்தா எழுதுகிறார்.


2. நிலையற்ற வங்கதேசத்தில் அரசியலை மாற்றுதல்


வங்கதேசம் அதன் பிப்ரவரி 2026 பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், மாணவர் ஆர்வலர்கள் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி முக்கிய கட்சிகளான வங்காளதேச தேசியவாதக் கட்சி மற்றும் அவாமி லீக்கின் திட்டங்களை சீர்குலைக்கக்கூடும் என்று கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.


3. ஆஷ்லே ஜே. டெல்லிஸ்: சீன கிசுகிசுக்கள்


தெற்காசிய நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ், 'TOP SECRET' மற்றும் 'SECRET' என்று பெயரிடப்பட்ட சுமார் 1,000 பக்க ரகசிய ஆவணங்களை தனது தனிப்பட்ட உடைமையில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக வர்கீஸ் கே. ஜார்ஜ் எழுதுகிறார்.


4. சபை கலைப்பு மற்றும் இடைக்கால அரசாங்கத்தை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்


நேபாள உச்ச நீதிமன்றம் அக்டோபர் 29 முதல் மனுக்களை விசாரிக்கும். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்), இடைக்கால அரசாங்கம் தேர்தலுக்குத் தயாராகத் தவறிவிட்டதாகக் கூறி, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீட்டெடுக்கக் கோருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒற்றுமைக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளதாக காத்மாண்டுவைச் சேர்ந்த சஞ்சீவ் சத்கைன்யா தெரிவித்துள்ளார்.


5. இந்தியா-ஆஸ்திரேலியா ஒத்துழைப்பில் புதிய திசை 


இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் வலுவான, நிலையான மற்றும் வழக்கமான ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்று ஹர்ஷ் வி. பந்த் மற்றும் பிரத்னஸ்ரீ பாசு எழுதுகிறார்கள்.



Original article:

Share:

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


* தேசிய சுகாதார ஆணையத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து சிகிச்சைகளிலும் பாதிக்கும் மேற்பட்டவற்றை தனியார் மருத்துவமனைகள் வழங்குகின்றன. மேலும், மொத்த சிகிச்சைச் செலவுகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைப் பெறுகின்றன.


* இந்தத் திட்டம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ₹1.29 லட்சம் கோடி மதிப்புள்ள 9 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.


* இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 31,005 மருத்துவமனைகளில், 45% மட்டுமே தனியார் துறையால் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் 9.19 கோடி மருத்துவமனை நோயாளிகள் சேர்க்கைகளில் 52% தனியார் துறை மருத்துவமனைகளில் நடந்தவை என அறிக்கை வெளிப்படுத்தியது.




* இந்தத் திட்டத்தின் கீழ் மிகவும் பொதுவான சிகிச்சைகள் ஹீமோடையாலிசிஸ் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்கள் உள்ளன.


* காய்ச்சல் (4%), இரைப்பை குடல் அழற்சி (3%) போன்ற வயிற்றுத் தொற்றுகள் மற்றும் விலங்கு கடித்தல் (3%) ஆகியவை அடங்கும்.


* உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சிகிச்சைக்காக வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


* மருத்துவமனைகள் முழுவதும் சுகாதாரப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்ள அரசாங்கம் ஒரு டிஜிட்டல் அமைப்பையும் உருவாக்கி வருகிறது. 2021-ஆம் ஆண்டு முதல், இந்த முயற்சியின்கீழ் 50 கோடி சுகாதாரப் பதிவுகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


— அனைவருக்கும் சுகாதார காப்பீட்டை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டது. இது முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான மருத்துவமனை பராமரிப்பு நகரங்களில் 60% மற்றும் கிராமப்புறங்களில் 52%  தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படுகிறது.


— இந்தத் திட்டம் மக்கள் தங்கள் சேமிப்பைச் செலவிடுவதையோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கடனில் சிக்குவதையோ தவிர்க்க உதவுகிறது. அரசாங்கம் அதிகமாகச் செலவழித்தாலும், குறைக்கப்பட்ட செலவினங்களால் இது காட்டப்படுகிறது.


— PMJAY இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் உள்நோயாளி பராமரிப்பை உள்ளடக்கியது. இது வெளிநோயாளி பராமரிப்பை உள்ளடக்காது. முன்னர் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக இருந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் (Ayushman Arogya Mandirs (AAMs)) மூலம் வெளிநோயாளி பராமரிப்பு வழங்கப்படுகிறது. இலவச ஆலோசனைகள், பல இலவச மருந்துகள் (172 வரை) மற்றும் இலவச நோயறிதல் சோதனைகள் (63 வரை) வழங்கும் 1,75,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் உள்ளன.


— AB PM-JAY என்பது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இது தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை வழங்குகிறது, இது வயதைப் பொருட்படுத்தாமல், ஏழ்மையான 40% மக்களை உள்ளடக்கியது.



Original article:

Share:

ஸ்டேபிள்காயின்கள் மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் பற்றி... -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்திகளில் ஏன்?


சர்வதேச பணப்பரிமாற்றங்களை எளிதாக்க, ஸ்டேபிள்காயின்களுக்கு பதிலாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை (Central Bank Digital Currencies (CBDCs)) பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா மற்ற மத்திய வங்கிகளை வலியுறுத்தினார்.


வாஷிங்டன்னில் நடந்த உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) வருடாந்திர கூட்டத்தில் பேசிய மல்ஹோத்ரா, கிரிப்டோகரன்சிகள் குறித்த இந்திய மத்திய வங்கியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அவற்றின் பயன்பாடு பணவியல் கொள்கை, மூலதனக் கணக்கு ஓட்டங்கள் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறினார்.


முக்கிய  அம்சங்கள்:


1. ஸ்டேபிள்காயின்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சொத்து அல்லது சொத்துக்களின் குழுவுடன் ஒப்பிடும்போது அவற்றின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள் ஆகும். அவை ஒரு பிளாக்செயினில் உள்ள டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் காலப்போக்கில் நிலையான மதிப்பை வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை வழக்கமான பணம், பொருட்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றால் ஆதரிக்கப்படுகின்றன.


2. ஜேபி மோர்கனின் கருத்துப்படி, ஸ்டேபிள்காயின்கள் இரண்டு வகைகளில் வருகின்றன :


  • முழுமையாக ஒதுக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்கள் – இவை வழக்கமான பணம் அல்லது குறுகியகால அரசாங்க பத்திரங்கள் போன்ற உயர்தர சொத்துக்களால் 1:1 என்ற விகிதத்தில் ஆதரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளியிடப்பட்ட நாணயமும் ஒரு அடிப்படை சொத்தால் ஆதரிக்கப்படுவதால், நிலையான விலையை வழங்குகிறது.


  • அல்காரிதமிக் (Algorithmic) ஸ்டேபிள்காயின்கள் – இவை அவற்றின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகின்றன. வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்து அமைப்பு நாணயங்களைச் சேர்க்கிறது அல்லது நீக்குகிறது. விலை மிக அதிகமாக இருந்தால், அது அதிக நாணயங்களை உருவாக்குகிறது. விலை மிகவும் குறைவாக இருந்தால், அது சில நாணயங்களை அழிக்கிறது.


3. ஜூன் மாதத்தில், அமெரிக்க ஸ்டேபிள்காயின்களை வழிநடத்தவும் விதிகளை அமைக்கவும் அமெரிக்க செனட் GENIUS சட்டத்தை அங்கீகரித்தது. அதே மாதத்தில், தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் தென் கொரிய வோன் (KRW) ஸ்டேபிள்காயின்களை சட்டப்பூர்வமாக்க டிஜிட்டல் சொத்து அடிப்படைச் சட்டத்தை நிறைவேற்றியது. மே மாதத்தில், ஹாங்காங்கின் சட்டமன்றம் உள்ளூர் ஃபியட் ஆதரவு பெற்ற ஸ்டேபிள்காயின்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை அங்கீகரித்தது.


4. உலகளவில், அமெரிக்க டாலர் ஸ்டேபிள்காயின்கள் $300 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன. CoinGecko-ன் படி, அனைத்து கிரிப்டோ டோக்கன்களின் மொத்த சந்தை மதிப்பு $4 டிரில்லியனுக்கும் அதிகமாகும். தற்போது, ​​டெதர் மற்றும் USDC இரண்டு பெரிய ஸ்டேபிள்காயின்கள் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு $285 பில்லியன் உலகளாவிய ஸ்டேபிள்காயின் சந்தையில் சுமார் 90% ஆகும்.


5. RBI  கூற்றுப்படி, "CBDC என்பது ஒரு மத்திய வங்கியால் வழங்கப்படும் டிஜிட்டல் பணம் ஆகும். இது வழக்கமான நாணயத்தைப் போன்றது மற்றும் அதனுடன் ஒன்றுக்கு ஒன்று பரிமாறிக்கொள்ளலாம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் அதன் டிஜிட்டல் வடிவம் ஆகும்." இவற்றை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் டிஜிட்டல் வாலட்களுடன் பயன்படுத்தலாம்.


6. டிசம்பர் 2022–ல், சில்லறை விற்பனையாளர்களுக்காக சோதனை அடிப்படையில், டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் எனப்படும் இந்தியாவின் CBDC-யை RBI அறிமுகப்படுத்தியது. தற்போது, ​​RBI சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை போன்ற இரண்டு வகையான CBDCகளை சோதித்து வருகிறது.


7. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies (CBDCs)) பிட்காயின் மூலம் ஈர்க்கப்பட்டன. ஆனால், அவை கிரிப்டோகரன்சிகளிலிருந்து வேறுபட்டவை. கிரிப்டோகரன்சிகள் அரசாங்கத்தால் வெளியிடப்படுவதில்லை, மேலும் அவை சட்டப்பூர்வமானவை அல்ல. CBDCகள், வங்கி அல்லது இடைத்தரகர் தேவையில்லாமல் நாட்டிற்குள்ளும் எல்லைகளுக்கு அப்பாலும் பரிவர்த்தனைகளைச் செய்ய மக்களை அனுமதிக்கின்றன.


8. மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies (CBDCs)) என்பவை அரசாங்கப் பணம் ஆகும். அவை சில நன்மைகளைக் கொண்டுள்ளன. டோக்கனைஸ் செய்யப்படலாம், மேலும் பணத்தைப் பாதுகாப்பாகவும் ஒன்றிணைக்கவும் வைக்கின்றன. அவற்றை பெரிய அளவில் பயன்படுத்த அனைவரும் அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


9. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களுக்கும் (CBDC) கிரிப்டோகரன்சிக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் ஒரு மத்திய வங்கியால் வழங்கப்படுகிறது என்பதே உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. இது மத்திய வங்கியின் "நேரடிப் பொறுப்பாகவும்" அமைகிறது.


10. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் காகிதப் பணத்தைப் போன்றவை என்று ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ கூறுகிறது. ஏனெனில், அவை மத்திய வங்கியின் நேரடிப் பொறுப்புகளாக உள்ளது. இது வணிக வங்கிகளால் வழங்கப்படும் டிஜிட்டல் பணத்தைவிட அவற்றைப் பாதுகாப்பானதாக்குகிறது.


ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள்காயின்கள் நன்மைகள்


நிலேஷ் ஷா, எக்ஸ்பிரஸ் ஒப்பீனியனில், ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று எழுதினார். இது வெளிநாட்டு நாணய விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து இந்திய பயனர்களைப் பாதுகாக்கும் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். இந்தியாவின் பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் இதை இணைப்பது ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயங்களுக்கான தேவையை அதிகரிக்கும். ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயம் பல பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கும் மற்றும் இந்தியாவின் நிதி அமைப்பை மேம்படுத்தும்.


1. பணம் அனுப்புதல்: 


இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிகப் பணத்தைப் பெறுகிறது (ஒவ்வொரு ஆண்டும் $125 பில்லியன்). ஸ்டேபிள்காயின்களைப் பயன்படுத்துவது பணம் அனுப்புவதை 90% வரை மலிவாகவும் வேகமாகவும் மாற்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும்.


2. எல்லை தாண்டிய வர்த்தகம்: 


பிளாக்செயினில் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பணம் செலுத்துவதை எளிதாக்கும், இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்தும்.

3. நிதி உள்ளடக்கம்: 


ஸ்டேபிள்காயின்கள் e-rupee உடன் இணைந்து, குறிப்பாக கிராமங்களில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் நிதியை அணுக உதவும்.

4. உலகளாவிய செல்வாக்கு: 


இந்திய (INR) ஆதரவுபெற்ற ஸ்டேபிள்காயின், ரூபாயை உலகளவில் பரவலாகப் பயன்படுத்தச் செய்யலாம், USD ஸ்டேபிள்காயின்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம் மற்றும் இந்தியாவின் ஃபின்டெக் இருப்பை வலுப்படுத்தலாம்.


5. குறைந்த கடன் செலவு: 


ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயங்களை வெளியிடும் நிறுவனம் பூஜ்ஜியம் முதல் குறைந்தவட்டி விகிதங்களில் கடன் வாங்கும். இது வழங்கும் வங்கிகள் அல்லது இந்திய அரசாங்கத்துடன் அதன் பலனைப் பகிர்ந்துகொள்ளலாம்.



Original article:

Share: