அரசாங்கம் நேரடி பண பரிமாற்றம் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல் உட்பட அதன் அனைத்து முக்கிய விவசாயத் திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் AgriStack பதிவேடுகளை படிப்படியாக ஒருங்கிணைக்க இலக்கு வைத்துள்ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி தனது வரவு செலவு அறிக்கை உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், AgriStack தரவுத்தளங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research (ICAR)) தொகுப்பு ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுடன் வேளாண் நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் பன்மொழி செயற்கை நுண்ணறிவு கருவியான Bharat-VISTAAR (Virtually Integrated System to Access Agricultural Resources) தொடங்கப்படுவதாக அறிவித்தார்.
டிஜிட்டல் அக்ரிஸ்டாக்கை "அடுத்த ஒருங்கிணைந்த கட்டண இடைமுக" முயற்சிகளில் ஒன்று" என்று விவரித்த அதே வேளையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு நேர்காணலில் இந்த கருவியின் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வேளாண் துறையில் தரவை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான மையத்தின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) திட்டத்தின் ஒரு பகுதியாக AgriStack 2024-ல் தொடங்கப்பட்டது.
இது பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்தும், உழவர்களுக்கு சிறந்த முடிவுகளை வழங்கும் மற்றும் தனித்துவமான ஆலோசனை வழங்குவதன் மூலம் ஆபத்தை குறைக்கும்.
AgriStack என்றால் என்ன?
AgriStack என்பது பண்ணைத் துறைக்கான ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) ஆகும். இது டிஜிட்டல் வேளாண்மைத் திட்டத்தின் (Digital Agriculture Mission (DAM)) கீழ் ஒரு முன்முயற்சியாகும். மேலும், இது செப்டம்பர், 2024-ல் ஒன்றிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
AgriStack வேளாண்துறையில் மூன்று அடிப்படை பதிவேடுகள் அல்லது தரவுத்தளங்களைக் கொண்டுள்ளது: உழவர்களுக்கான பதிவேடு, புவி-குறிப்பிடப்பட்ட ஊரக வரைபடங்கள் மற்றும் பயிர் விதைப்பு பதிவேடு, இவை அனைத்தும் மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு உழவருக்கும் அவர்களின் நில உடைமை மற்றும் ஒரு பகுதியில் வளர்க்கப்படும் பயிர்களின் விவரங்களுடன் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளம் (ஆதார் அட்டை போன்ற ஒன்று) வழங்கப்படுகிறது.
AgriStack கட்டமைக்கப்பட்ட மூன்று அடிப்படை பதிவேடுகள் எவை?
AgriStack கட்டமைக்கப்பட்ட அடிப்படை பதிவேடுகள் பின்வருமாறு:
1. உழவர்களுக்கான பதிவேடு
AgriStack-ன் கீழ், உழவர்களுக்கு ஆதாரைப் போன்ற ஒரு டிஜிட்டல் அடையாளம் (வேளாண் அட்டை) வழங்கப்படுகிறது. அவை மாநிலத்தின் நிலப் பதிவுகள், கால்நடை உரிமை, விதைக்கப்பட்ட பயிர்கள், மக்கள்தொகை விவரங்கள், குடும்ப விவரங்கள், திட்டங்கள் மற்றும் பெறப்பட்ட சலுகைகள் ஆகியவற்றுடன் மாறும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
11 கோடி உழவர்களுக்கு டிஜிட்டல் அடையாளங்களை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவற்றில் இதுவரை 8.62 கோடி உருவாக்கப்பட்டுள்ளன.
2024-25-ஆம் ஆண்டுக்கான மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், மாநிலங்களுக்கு அந்தந்த பதிவேடுகளை உருவாக்க ஒன்றிய அரசு நிதி உதவியை ஒதுக்கியுள்ளது. உழவர் அடையாள அட்டை உருவாக்கத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை அடங்கும்.
உழவர்கள் பதிவேட்டை உருவாக்குவதன் மூலம், ஒரு உழவர் சலுகைகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் முறையில் அணுக முடியும். இது சிக்கலான ஆவணங்களைத் தவிர்க்கிறது மற்றும் அலுவலகங்கள் அல்லது சேவை வழங்குநர்களை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை அல்லது தேவையில்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
உழவர்கள் பதிவேட்டை மார்ச் 2027-க்குள் மாறும் உரிமைகள் பதிவுகளுடன் (Records of Rights (RoR)) ஒன்றிணைத்து முடிக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், இலக்கு மார்ச் 2028-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
2. பயிர் விதைப்பு பதிவேடு (Crop Sown Registry)
உழவர்களால் பயிரிடப்பட்ட பயிர்கள் பற்றிய விவரங்கள் பயிர் விதைப்பு பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும். இது ஒவ்வொரு பருவத்திலும் மொபைல் (obile-based Digital Crop Surveys) அடிப்படையிலான டிஜிட்டல் பயிர் ஆய்வுகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. 2023-24-ஆம் ஆண்டில் பயிர் விதைப்பு பதிவேட்டை உருவாக்க 11 மாநிலங்களில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு குறித்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2026 காரீஃப் பருவத்திற்குள் நாட்டின் 604 மாவட்டங்களில் உள்ள 30 கோடி பண்ணை நிலங்களையும் உள்ளடக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. சத்தீஸ்கர், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மிசோரம், திரிபுரா, சிக்கிம், ஜம்மு & காஷ்மீர் ஆகிய 15 மாநிலங்களில் இலக்கு வைக்கப்பட்ட கிராமங்களில் 70%-க்கும் மேற்பட்ட நிலங்கள் ஏற்கனவே பயிர் விதைப்பு பதிவேடு முயற்சியின்கீழ் இடம் பெற்றுள்ளன.
3. புவி-குறிப்பு கிராம வரைபடத் தரவு (Geo-referenced Village Maps data)
புவி-குறிப்பு கிராம வரைபடப் பதிவேட்டில் அவற்றின் இருப்பிடங்களுடன் (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) இணைக்கப்பட்ட நிலப் பதிவுகளின் புவியியல் தகவல்கள் உள்ளன. இதுவரை, மொத்தமுள்ள 6.75 லட்சம் ஊரகப் பகுதிகளில் 5.4 லட்சம் கிராம வரைபடங்கள் புவிசார் குறிப்பு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 2027-க்குள் அனைத்து ஊரகப் பகுதிகளையும் இடம் பெற செய்வதே இதன் இலக்காக உள்ளது.
AgriStack-ஆல் இயக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் உழவர்களுக்கு எவ்வாறு உதவும்?
நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)), குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல், உர விநியோகம், கடன்கள், காப்பீடு, சேமிப்பு மற்றும் ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவசாயத் திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் AgriStack பதிவேடுகளை படிப்படியாக ஒருங்கிணைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
சில மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டன. உதாரணமாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் விவசாயி பதிவேடு/DCS-இணைக்கப்பட்ட தளங்கள் விரைவான ஒப்புதல்களை எவ்வாறு செயல்படுத்தியுள்ளன, குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல்/உர விநியோகத்திற்கான குறைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் கசிவு-தடுப்பு நேரடி பண பரிமாற்றம் ஆகியவற்றை எவ்வாறு செயல்படுத்தியுள்ளன என்பதை நிரூபித்துள்ளன.
இதேபோல், அரசாங்கம் இப்போது PM KISAN திட்டத்தின்கீழ் புதிய உழவர்களைப் பதிவு செய்ய உழவர் அட்டையைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சில மாநிலங்கள் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) உழவர்களைச் சேர்க்க இதைப் பயன்படுத்துகின்றன. மத்தியப் பிரதேசத்தில், AgriStack-இயக்கப்பட்ட உர விநியோக மாதிரி செயற்கை பற்றாக்குறை, சமத்துவமின்மை அணுகல் மற்றும் திசைதிருப்பும் முயற்சியைச் சமாளிக்கிறது. மகாராஷ்டிராவில், உழவர்களுக்கான கடன் அட்டை (Kisan Credit Card (KCC)) கடன்களை வழங்குவதற்காக AgriStack சோதனை முறையில் தொடங்கப்பட்டது.
Original article : What is AgriStack, which FM Nirmala Sitharaman has termed as the ‘next UPI’?