இந்தியாவின் புள்ளியியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதுப்பிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை. இருப்பினும், புதுப்பிப்புகள் நீண்டகால தாமதத்திற்குப் பிறகே வந்துள்ளன.
கடந்த சில மாதங்களில், அரசாங்கம் இந்தியாவின் புள்ளிவிவரத் தரவுத்தளங்களில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த, வரவேற்கத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. பரந்த அளவிலான இந்த மேம்படுத்தல்கள், நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)), தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லறை, மொத்த விற்பனை, உற்பத்தியாளர் மட்டங்களில் ஏற்படும் விலை மாற்றங்களை அளவிடும் முறைகளை கொண்டுள்ளன. இந்த மேம்படுத்தல்கள் இந்தியாவின் முக்கியப் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை வெளி உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் மாற்றியது மட்டுமல்லாமல், அவற்றை சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றதாகவும் கொண்டுவந்துள்ளன. அனைத்துக் குறியீடுகளிலும் செய்யப்பட்ட அடிப்படையான மாற்றம், அடிப்படை ஆண்டுகளைப் (Base Year) புதுப்பித்ததே ஆகும். சில காலம் வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)), மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)) மற்றும் தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIndex of Industrial Production (IIP)) ஆகியவற்றின் அடிப்படை ஆண்டுகள் 2011 அல்லது 2012-ஆக இருந்தன. இதன் காரணமாக, இந்த அளவீடுகள் ஒவ்வொரு ஆண்டும் கலவாதியானதாகவும் உண்மையை வெளிக்காட்டுவதாகவும் இருந்தன. பிப்ரவரி மாதத்தில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI), 2022-23-ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி உட்பட தேசியக் கணக்குத் தரவுகளின் (national accounts data) புதிய தொடரை வெளியிட்டது. இந்த புதிய தொடரில் மேம்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைகள், புதிய தரவு ஆதாரங்கள்,விரிவான (granular) மற்றும் வலுவான (robust) தரவமைப்பு போன்றவை சேர்த்திருப்பதால், இது கூடுதல் நுணுக்கமும் வலுகொண்டதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, இரட்டை பணவாட்டக் கணக்கீட்டு முறை (Double-Deflator Approach) போன்ற சில மேம்பாடுகள், புள்ளியியலாளர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) போன்ற சர்வதேச அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த முக்கிய மாற்றங்களாகும்.
இதேபோல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் பிப்ரவரி மாதத்தில், 2024-ஐ அடிப்படை ஆண்டாகப் புதுப்பித்து, அளவிடப்படும் பொருட்களின் விரிவான தொகுப்பு மற்றும் மிகவும் துல்லியமான எடைகளுடன் கூடிய புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொடரை வெளியிட்டது. இது, வட்டி விகித முடிவுகளில் ஒரு முக்கிய அளவீடாக விளங்கும் சில்லறைப் பணவீக்கத்தை தற்போதைய சூழலிற்கு ஏற்ப மதிப்பீடு செய்ய வழிவகுத்துள்ளது. ஜூன் மாதத் தொடக்கத்தில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தொழில்துறை விலைக் குறியீட்டின் (Index of Industrial Production (IIP)) புதிய தொடரையும் வெளியிட்டது. அடிப்படை ஆண்டு 2022-23 ஆகப் புதுப்பிக்கப்பட்டதுடன், குறியீட்டின் தரவு சேகரிப்பும் வலுப்படுத்தப்பட்டது. இந்த மாற்றமும், இறுதியில் மிகவும் துல்லியமான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகளுக்கு வழிவகுக்கிறது. சிறப்பித்துக் கூறப்பட வேண்டிய மற்றொரு காரணி என்னவென்றால், இந்தத் தரவு மேம்பாடுகள் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமும் தனது மொத்த விலைக் குறியீட்டைப் (WPI) புதுப்பித்து, திங்கட்கிழமை அன்று புதிய தொடரை வெளியிட்டது. மிகவும் துல்லியமான மொத்த விலைக் குறியீடு மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு போன்றவை, மிகவும் துல்லியமான மொத்த உள்நாட்டு உற்பத்தி விலைக் குறைப்பை (GDP deflator) அளிக்கின்றன. இது, பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு, புள்ளிவிவரவியலாளர்கள் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பெறும் முறையை வலுப்படுத்துகிறது. வர்த்தக அமைச்சகம் புதிய உற்பத்தியாளர் விலைக் குறியீட்டையும் (Producer Price Index (PPI)) வெளியிட்டது, இது ஐந்து ஆண்டுகளில் மொத்த விலைக் குறியீட்டிற்கு மாற்றாக வரவிருக்கிறது. உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) என்பது வளர்ந்த பொருளாதார நாடுகளில் ஒரு தரநிலையாக இருந்து வருகிறது. இது உற்பத்தியாளர் மட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிலைகள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவின் தேசிய கணக்கியல் தரவுகளின் தரத்தை மேம்படுத்தி, (சர்வதேச நாணய நிதியம் (IMF)) வழங்கிவரும் குறைந்த ‘C’ தரத்தை மேம்படுத்தும். மேலும், எந்த விதமான தாமதமும் இல்லாமல் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Original article : Essential upgrades: On upgrades to India’s statistical databases.