2026-ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள் Foreign Contribution (Regulation) Amendment Rules, 2026), தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த ஒரு வாதத்தின் அடிப்படையில் சட்டபூர்வத் தன்மையைப் பெறுகின்றன. ஒன்றிய அரசு முன்வைத்த வாதம், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை உருவாக்கும் சுதந்திரம் என்பது வரம்பற்ற வெளிநாட்டு நிதியைப் பெறும் உரிமையையோ அல்லது அந்த நிதியை அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை தவிர மாற்ற செயல்முறைகளுக்கு பயன்படுத்தும் உரிமையை (permissible activities’) கொண்டிருக்கவில்லை.
ஜூன் 22 அன்று உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தத் திருத்தங்களும், இதற்கு முந்தைய திருத்தங்களும், உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த வாதத்தின் அடிப்படையிலேயே சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. நிறுவனங்களை அமைப்பதற்கான சுதந்திரத்திலோ அல்லது தொண்டு சார்ந்த 'செயல்பாடுகளில்' ஈடுபடுவதிலோ, கட்டுப்பாடற்ற வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான உரிமையோ அல்லது 'அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை' தாண்டி மாற்ற செயல்பாடுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கபடாது என்பதே ஒன்றிய அரசின் வாதமாகும்.
மற்ற மாற்றங்களுடன், விதி 9(1B)-ன் படி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) பெறும் பதிவுச் சான்றிதழில், அந்த அமைப்பின் நோக்கம் அல்லது நோக்கங்கள் மற்றும் அது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இந்த விதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை, மதமாற்றம் மற்றும் புவியியல் எல்லைகளைத் தவிர்த்து, குறிப்பிட்ட நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பிருக்குள் கொண்டு வருகின்றன.
நீதிமன்றத் தீர்ப்புகளால் பலப்படுத்தப்பட்டது
வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒன்றிய அரசின் விரிவான அதிகாரங்களுக்கு, கடந்த சில ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் மூலம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 2022-இல் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 'நோயல் ஹார்பர் எதிர். இந்திய அரசு' (Noel Harper vs Union of India) வழக்கில், "வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது யாருடைய நிலைநிறுத்தப்பட்ட உரிமை (vested right) என்றும், அதிலும் குறிப்பாக முழுமையான உரிமை (absolute right) என்றும் எந்த ஒரு நபரலும் அதற்கு உரிமை கோர முடியாது" என்ற தீர்ப்பை வழங்கியது.
நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளிடமிருந்து நிதி திரட்டும் போக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஏனெனில், அது “தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்ய இயலாத நாடு” என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அந்தத் தீர்ப்பு ஒழுக்கநெறி சார்ந்த (moralistic tenor) அணுகுமுறையைக் கொண்டதாக இருந்தது. ஒரு நாட்டின் முன்னேற்றமும் உயர்வும் அதன் குடிமக்களின் கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் முயற்சிகளின் அடிப்படையில்தான் அமைய வேண்டும்; வெளிநாடுகளின் நன்கொடைகள் அல்லது தாராள உதவிகளை சார்ந்தது அல்ல என்று நீதிமன்றம் கூறியது.
மார்ச் 2020-ல் இந்திய சமூக செயல் மன்றம் (Indian Social Action Forum (INSAF)) vs இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, "வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவது தேசிய நலனைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே" என்ற ஒன்றிய அரசின் கருத்தை ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், சட்டத்தின் நோக்கத்திற்கும் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான தன்னார்வ அமைப்புகளின் உரிமைகளுக்கும் இடையில் ஒரு "சமநிலையை" ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. தீவிர அல்லது கட்சி அரசியலில் பங்கு வகிக்கும் அமைப்புகள் மட்டுமே வெளிநாட்டு நிதியைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாக INSAF குறிப்பிட்டது.
தொண்டுப் பணிகள் தொடரலாம்: அரசு.
FCRA, அதன் விதிகள் மற்றும் திருத்தங்கள் ஆகியவை வணிகம் செய்யும் முறையை, குறிப்பாக வெளிநாட்டுப் பங்களிப்புகள் தொடர்பானவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டன என்று அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறியது. FCRA-ன் நோக்கம் தொண்டுப் பணிகளை நிறுத்துவது அல்ல.
அரசியலமைப்பின் 19(1)(c) மற்றும் 19(1)(g) பிரிவுகளின்கீழ், நிறுவனங்களை அமைப்பதற்கோ, ஒரு தொழிலை மேற்கொள்வதற்கோ அல்லது ஒரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை நடத்துவதற்கோ தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை ஒழுங்குமுறை பாதிக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலனுக்காகவோ அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காகவோ, சட்டப்பிரிவு 19(1)(c)-ன் கீழ் நிறுவனங்களை அமைப்பதற்கான அடிப்படை சுதந்திரத்தை நியாயமான முறையில் கட்டுப்படுத்த சட்டங்களை இயற்ற (fundamental freedom to form associations) முடியும் என்பதை நிரூபிக்க, ஒன்றிய அரசு சட்டப்பிரிவு 19(4)-ஐ மேற்கோள் காட்டியுள்ளது. அதேபோல, பிரிவு 19(1)(g)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வர்த்தகம், தொழில் அல்லது பணிபுரியும் உரிமை பொது நலனுக்கு எதிரானது என்று அரசு நிரூபிக்கும் பட்சத்தில், அந்த உரிமையின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை (impose reasonable fetters) விதிக்க பிரிவு 19(6) அரசுக்கு அனுமதி அளித்தது.
வெளிநாட்டு நிதியுதவியை (Foreign Contribution) பெறுவது எந்த நபருக்கும் முழுமையான உரிமையாக இல்லை என்பதில் உச்சநீதிமன்றமும் அரசும் ஒரே கருத்துடன் உள்ளன.
Original Link: As FCRA restricts NGOs, Supreme Court had agreed that right to associate is not carte blanche for foreign funds.