கலந்தாய்வுக்கு அனுமதியுங்கள் : லடாக்கின் நியாயமான கோரிக்கைகள் குறித்து . . .

 லடாக்கில் சட்டமன்றம் மற்றும் பிராந்திய தன்னாட்சி இல்லாதது தற்போதைய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. 


லடாக் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு, தொகுதி உறுப்பினர்களின் வெளிப்படையான உடன்பாடு அல்லது அவர்களின் ஆலோசனை இல்லாமல் முடிவுகள் எடுக்கப்படும்போது, தொகுதி உறுப்பினர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் மாற்றங்களை வரவேற்றாலும் கூட ஒரு எதிர்மறையான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இதில், ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு தெளிவான உதாரணம் ஆகும். இந்த முடிவானது, லடாக் மாநிலத்தின் முந்தைய பகுதியை உள்ளடக்கிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகுத்தது. 


இந்த இரண்டு முடிவுகளாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அதிருப்தி நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், லோக்நிதி கணக்கெடுப்பின் (Lokniti survey) படி, ஜம்மு குடியிருப்பாளர்களில் பத்தில் நான்கு பேர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை எதிர்க்கிறார்கள் மற்றும் பெரும்பான்மையானவர்கள் மாநிலத்தின் அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோருகிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. லடாக் யூனியன் பிரதேசமாக மாறியதும், லடாக் குடியிருப்பாளர்களின் கோரிக்கையை இது பிரதிபலிப்பதாக கூறி அரசாங்கம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது. குறிப்பாக லே பகுதி வாசிகள், முந்தைய சட்டமன்றத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவின் ஆதிக்கம் குறித்து கவலைப்பட்டனர். 

ஆயினும்கூட, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், லடாக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் மாநில அந்தஸ்து அல்லது அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கோருகின்றனர். இந்த அட்டவணையில் சில வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் விரும்பத்தகாதவை என்பதையே தற்போது நடைபெறும் இந்த போராட்டங்கள் காட்டுகின்றன. 


லே மற்றும் கார்கிலின் இரண்டு தன்னாட்சி மலைப்பகுதி கவுன்சில்களுக்கு லடாக் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், யூனியன் பிரதேசத்தில் அதிகாரம் பெற்ற சட்டமன்றம் இல்லாததை, புது டெல்லியின் அதிகாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் நிர்வாகத்திற்கு குறைவான செல்வாக்கு உள்ளதால் இது எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையிலான போராட்டங்கள், புதுடெல்லியில் எதிரொலித்தது. தற்போதைய, நிலைமைக்கு வழிவகுத்த 2019-ம் ஆண்டில் காணப்பட்ட ஒற்றை மேலாதிக்கத்தின் மாக்கியவெல்லியன் வழியை ஒன்றிய அரசு தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. 


2019 முதல் லடாக்கை, புது டெல்லி எப்படிப் பார்க்கிறது என்பது ஒரு பெரிய கேள்வி உள்ளது. இந்த மாற்றம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) வழியாக சீன ஊடுருவல் மற்றும் பிராந்தியத்தில் நடந்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து, லடாகானது பெரும்பாலும் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 


வாழ்வாதாரம் தொடர்பான உள்ளூர் கவலைகள், நீர் பற்றாக்குறை, கழிவு மேலாண்மை மற்றும் மாசு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் மேய்ச்சல் சமூகங்களுக்கான நிலத்தை அணுகுவது போன்ற குடிமைப் பிரச்சினைகள் நிர்வாகத் திட்டத்தில் ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் (UT) சட்டமன்றம் இல்லாததால், குடியிருப்பாளர்கள் கவலையடைவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். 


மேலும், இவர்கள் தங்கள் கவலைகளைப் பற்றி விவாதிக்கவோ அல்லது புகார்களைப் பதிவு செய்யவோ போதுமான வசதி இல்லை. ஒன்றிய அரசு லடாக்கின் நியாயமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அதற்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். கூடுதலாக, இந்த அதிருப்தி இந்தியாவின் பயனுள்ள “சமச்சீரற்ற கூட்டாட்சி” (asymmetric federalism) முறையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த அமைப்பு குறைகளை தீர்க்க  வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.




Original article:

Share:

முன்பதிவு காலத்தை குறைக்கும் இந்திய இரயில்வேயின் முடிவு குறித்து... -மைத்ரி போரேச்சா

 இதற்கு முன்பு, முன்பதிவு காலத்தை இரயில்வே குறைத்துள்ளதா? நீண்டகால முன்பதிவு காத்திருப்பு எவ்வாறு மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன? இந்த விதிகள் வெளிநாட்டு பயணிகளுக்கும் பொருந்துமா?


பயணிகள் நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. இருப்பினும், இந்த விதியானது மாறிவிட்டது. இப்போது, ​​இரண்டு மாதங்களுக்கு முன்பே இரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதை, இரயில்வே வாரியம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்கூட்டிய முன்பதிவுக் காலம் (Advance Reservation Period (ARP)) எப்போது நடைமுறைக்கு வரும்? 


புதிய முன்கூட்டிய முன்பதிவு காலம் (Advance Reservation Period (ARP)) விதிகள் நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களுக்கு முன்பே (உண்மையான பயண நாளைத் தவிர) திறக்கப்படும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது. இருப்பினும், ஒரு பயணி அக்டோபர் 31-ம் தேதிக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், அந்த முன்பதிவுகள் செல்லுபடியாகும். இது முந்தைய 120 நாள் கால விதிக்கு பொருந்தும். பயணிகள் எப்போது வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம்.


முன்பதிவு காலத்தை 60 நாட்களாகக் குறைப்பதன் மூலம், 2008 மே 1 முதல் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 16 ஆண்டு கால கொள்கையை இரயில்வே வாரியம் மாற்றியுள்ளது. இதற்கு முன்பு, 1995 முதல் 2007-ம் ஆண்டு வரை, முன்பதிவுக்கான அவகாசம் 60 நாட்களுக்கு குறைக்கப்பட்டது. சுவாரஸ்யமாக, 1988 முதல் 1993-க்கு இடையில், இரயில்வே டிக்கெட்டுக்கான முன்பதிவு அவகாசம் 45 நாட்களுக்குள் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டது. இதற்கு முன், 1981 முதல் 1985-ம் ஆண்டு வரை, இரயில்வே 90 நாள் அவகாசமாக முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP) திறந்து வைத்தது.


ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது? 


பொதுவாக, பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கு 120 நாட்கள் என்பது மிக நீண்ட காலம் என்றும், இது அதிக அளவு டிக்கெட்டுகளை ரத்து செய்ய வழிவகுத்தது என்றும் இரயில்வே அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, ​​டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளில் 21% நபர்கள் வரை டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள்." இருக்கைகள் / படுக்கைகளை முன்பதிவு மூலம் ஒதுக்கும்போது, பயணிகள் குறித்த நேரத்தில் பயணங்களுக்கு வராததால் இருக்கைகள் / படுக்கைகள் வீணாவதையும், அதே நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யவதை பயணிகள் கவலைப்படாததையும் அதிகாரிகள் குறிப்பிடிருந்தனர். 4% முதல் 5% பயணிகள் முன்பதிவு செய்து குறித்த நேரத்தில் வருவதில்லை என்றும், இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகக் கருதப்படுகிறது என்று அதிகாரி மேலும் கூறினார். "இரயில்வே வாரியம் மேற்கொண்ட மற்றொரு போக்கு என்னவென்றால், 88% முதல் 90% வரை இரயில் முன்பதிவுகள் 60 நாட்களாக குறைத்துள்ளது சரியான போக்காக கருதப்பட்டது" என்று மற்றொரு மூத்த அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்திருந்தார். 


நீண்ட முன்பதிவு காத்திருப்பு மோசடிகளை அதிகரிக்குமா? 


புதிய முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (Advance Reservation Period (ARP)) குறைக்க அதிகாரிகள் கூறிய காரணம் என்னவென்றால், பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை ரத்து செய்யாமலும், பயணத்திற்கு வராமலும் இருந்தால், அது மோசடிக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. ஆள்மாறாட்டம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் காலிப் படுக்கைகளை ஒதுக்க சட்டவிரோதமாக பணம் பெறுவது போன்ற சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முன்பதிவு மூலம், ஒதுக்கீடு செய்யப்படும்  இருக்கைகள் நீண்ட காலத்தை குறைப்பதன் மூலம் இதைத் தடுக்க முடியும்" என்று அந்த அதிகாரி கூறினார். 


விபத்துகளைத் தடுக்க இரயில்வே வாரியம் என்ன செய்ய வேண்டும்?  


இரண்டாவதாக, இரயில்வே நெட்வொர்க்கில் செயல்படும் தரகர்களைக் (touts) கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் உள்ளது. "முன்பதிவு காலம் நீண்டதாக இருக்கும்போது, தரகர்கள் கணிசமான அளவு டிக்கெட்டுகளைத் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP)  குறைப்பது உண்மையான பயண நேரத்தில் பயணிகள் அதிக டிக்கெட்டுகளை வாங்குவதை ஊக்குவிக்கும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். 


இதேபோல், முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP) குறைப்பது அல்லது அதிகரிப்பது என்ற முடிவு ஆலோசிக்கப்பட்டு வருவதாக இரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். "ARP-க்கான காத்திருப்பு நேரத்தை எவ்வாறு சரிசெய்வது என்று விவாதிக்கும் இரண்டு எதிரெதிர் முகாம்கள் உள்ளன. அமைச்சகத்தில் ஒரு முன்பதிவு செய்வதற்கான இரயில்வே முகாம் உள்ளது. இது, ஆண்டு முழுவதும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதை உறுதிபடுத்துகிறது. மேலும், பயணிகள் 365 நாட்களில் ஆண்டு முழுவதும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் முன்பதிவு செய்வதன் மூலம் இரயில்வேக்கு முன்கூட்டியே வருமானம் கிடைக்கும் என்று இந்த முகாம் நம்புகிறது. தற்போது, ​​இந்த விருப்பம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அவர்கள், இந்தியாவில் தங்கள் இரயில் பயணத்தைத் திட்டமிட குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் பெற்றுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.


ஏஆர்பி-யின் விதியிலிருந்து எந்த பயணிகளின் குழுக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? 


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பொது வகுப்பு டிக்கெட்டுகள் (General class tickets) பாதிக்கப்படாது என மத்திய இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் பொதுவாக இவர்களின் பயணத்திற்கு முன்பே வாங்கப்படும் என்பதால் இது சாத்தியம். தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற சில ரயில்களுக்கு இந்த அமர்ந்து பயணிக்கும் ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தெரிய வந்தது என்றும் அது கூறியுள்ளது. "இந்த ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடனடியாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதால் அவர்களுக்கு ஏஆர்பி விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்று முதல் அதிகாரி மேலும் கூறினார்.




Original article:

Share:

பண்பாடு மற்றும் சமூகம்: குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவை நிலைநிறுத்துவது குறித்து…

 அசாமின் குடியுரிமை சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதிய பிரச்சினைகளை தடுக்க உதவும்.


உச்ச நீதிமன்றம் குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவை உறுதி செய்துள்ளது. இந்த பிரிவு 1985-ல் அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. நீதிமன்றம் 4:1 பெரும்பான்மையுடன் இந்த முடிவை எடுத்தது. ஜனவரி 1, 1966-க்கு முன் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அசாமிற்குள் நுழைந்த எந்த ஒரு நபருக்கும் இந்த பிரிவு குடியுரிமையை வழங்குகிறது. இரண்டாவதாக, ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 25, 1971-க்கு இடையில் குடியேறியவர்களுக்கு இது ஒரு பதிவு முறையை உருவாக்கியது. வங்காள தேசியவாத இயக்கத்தை ஒடுக்க ஆபரேஷன் சர்ச்லைட் (Operation Searchlight) தொடங்கப்பட்டது. 


 இந்த இரண்டாவது குழுவிற்கு, தனிநபர்கள் பொதுவாக அசாமில் வசிக்க வேண்டும் மற்றும் அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் ஒரு தீர்ப்பாயத்தால் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட வேண்டும். எனினும், அவர்கள் வெளிநாட்டினர் என அடையாளம் காணப்பட்ட பின்னர் 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்க முடியாது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பிரிவு 6A சமநிலையைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கினார். இது அசாமில் குடியேறிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாக்கிறது.


பெரும்பாலான நீதிபதிகள், பிரிவு 6A அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற கருத்தை நிராகரித்துள்ளனர். ஏனெனில், இது இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து அசாமை வித்தியாசமாகக் காட்டும். குறிப்பிட்ட தேதிகளில் இருந்து குறிப்பிட்ட குழுக்களுக்கு வெவ்வேறு குடியுரிமை விதிகளை உருவாக்க அரசியலமைப்பு நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மக்கள்தொகை மாற்றங்கள் சில குழுக்களின் கலாச்சார உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது, மாநிலங்களுக்கு இடையேயான குடியேற்றத்திற்கு எதிராக அதிக சவால்களுக்கு வழிவகுக்கும் என்று நீதிபதி சூர்ய காந்த் கூறினார். இந்த சவால்கள் உள்ளூர் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளாக முன்வைக்கப்படலாம். தற்போது, ​​அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இறுதி செய்யும் செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 19 லட்சம் பேர் குடிமக்கள் அல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. பிரிவு 6A ரத்து செய்யப்பட்டால், அது புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.




Original article:

Share:

அரசியலமைப்பு நிர்வாகத்தில் ஒரு புதிய மைல்கல் -சி.ராஜ்குமார்

 அரசியலமைப்பு நிர்வாகத்தின் (constitutional governance) 75 ஆண்டை கொண்டாட இந்தியாவுக்கு பல காரணங்கள் உள்ளன.

 

நவம்பர் 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த சாதனையை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் கொண்டாட வேண்டும். இந்தியாவில் அரசியலமைப்பு நிர்வாகம் என்பது ஜனநாயக நிறுவனங்களுக்கு வழிகாட்டும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மட்டுமல்ல. பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் வலுவான அரசியலமைப்பு கலாச்சாரத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும். நிறுவனங்களுக்கான மரியாதை மற்றும் அதிகாரத்தின் சுமுகமான மாற்றங்கள் இதில் அடங்கும்."

 

அரசியலமைப்பு தினத்தை கொண்டாட நாடு தயாராகி வருவதால், இந்தியாவின் அரசியலமைப்பு கலாச்சாரத்தை வடிவமைத்துள்ள முக்கிய அரசியலமைப்பு மதிப்புகளை அடையாளம் காண வேண்டிய நேரம் இது. இந்த ஐந்து மதிப்புகளும் காலப்போக்கில் நீடித்து வருகிறது. 


முதலாவதாக, ஜனநாயக அமைப்புகளுக்கு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இந்தியாவில் சராசரி மனிதனின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாக இருந்தது. இன்று, சராசரி மனிதனின் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஜனநாயக அமைப்புகள் மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளாக பொதுக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை சுட்டி காட்டுகிறது. பல இந்தியர்கள் உள்ளூர், மாநில அல்லது தேசிய தேர்தல்களில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் பிரதிநிதிகளிடமிருந்து சிறந்த செயல்திறனை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உள்ளூர், மாநிலம் அல்லது பொதுத் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியர்கள் ஏன் இவ்வளவு பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1951-52 முதல் தேர்தல்களில் 60% இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். 2024 பொதுத் தேர்தலில், 65.79% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜனநாயகத்திற்கான மரியாதை மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கை ஆகியவை காலங்காலமாக நீடித்து வரும் இந்தியாவின் முக்கிய அரசியலமைப்பு மதிப்புகள் ஆகும். 


இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களில் சுமுகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளில், இந்தியா தேசிய  மற்றும் அளவில் அளவில் பல தேர்தல் நடந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பல்வேறு முக்கிய பதவிகளை பெற்றுள்ளனர். பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் தலைவர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று மாநிலங்களிலும் தேசிய அளவிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் ஜனநாயக மரபுகளின் தனித்துவம் என்னவென்றால், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்ய ஒவ்வொரு அரசியல் கட்சியின்  வலுவான அர்ப்பணிப்பு ஆகும். 


தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் மற்றும் சில சமயங்களில் பிளவுபடுத்தும் செய்திகள் இருந்தாலும், தேர்தல் முடிவுகள் எப்போதும் சிறந்த அனுபவமாக இருக்கும். இருப்பினும், ஒவ்வொரு தேர்தலிலும், இறுதியில் வெற்றி பெறுபவர்கள் வாக்காளர்களாகிய மக்கள். இந்திய வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதே அவர்களின் வாக்களிக்கும் முடிவுகளை வடிவமைக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்திய மக்கள் தேர்தலின் முக்கியத்துவத்தை மதிக்கிறார்கள் மற்றும் ஒரு அரசாங்கத்திடமிருந்து மற்றொரு அரசாங்கத்திற்கு அதிகாரத்தை சுமுகமாக மாற்றுவதை தங்களின் வாக்குகள் மூலம் உறுதி செய்கிறார்கள்.


உரிமைகளை நிலைநிறுத்துதல் 


மூன்றாவதாக, உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பது நீதிமன்றங்கள் மூலம்  மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களான அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றினார். ஆங்கிலேயரின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடி இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தனர். அடிப்படை உரிமைகளுக்கான விதிகளை உருவாக்கும் போது, ​​அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் அரசு மற்றும் அதன் அமைப்புகளின் அதிகாரத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தனர்.


 அவர்கள் கருணையுள்ள அரசு (benevolent state) என்ற கருத்தை ஆதரித்திருக்கலாம். சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் அரசின் அதிகாரத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தனர். இது அவர்களின் நீண்ட காலப் பார்வையை சுட்டிக் காட்டியது. ஆனால், உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மிக முக்கியமானவை என்பதை புரிந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பின் மதிப்பு பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது.


நான்காவதாக, கூட்டாட்சி (federalism) என்பது அரசியலமைப்பு நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் பல மொழிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் உட்பட நாட்டின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு மற்றும் மரபுகளை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு மாநிலங்களின் தனித்துவமான அடையாளம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க உதவியது, அதே நேரத்தில் தேசிய அடையாளத்தையும் உருவாக்கியது.


 பல்வேறு வகையான சுயாட்சி மற்றும் சிறப்பு சலுகைகளை உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்துவமான வரலாறுகள் மற்றும் கலாச்சாரங்களைக் கருத்தில் கொண்டு, சில பிராந்தியங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை திறம்பட நிவர்த்தி செய்ய, இந்திய அரசியலமைப்பு சட்டம் நேர்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சிறப்பு நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது.


கடந்த ஏழுபது ஆண்டுகளாக, கூட்டாட்சி கொள்கை இரண்டு முக்கிய வழிகளில் வளர்ந்துள்ளது:


1. இந்தியாவில் மாநில அளவிலான அரசியல் கட்சிகளின் எழுச்சி தேசிய அளவில் விழிப்புணர்வை அதிகரிக்க உதவியுள்ளது. இந்த வலுவான மாநில கட்சிகள் மாநில மற்றும் தேசிய அளவில் கூட்டணி அரசாங்கங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.


2. கூட்டாட்சி (federalism) கொள்கை 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்ற வழிவகுத்தது. இந்த திருத்தங்கள் கிராம சபை மற்றும் நகர சபைகளை (nagarpalikas) நிறுவ வழிவகுத்தது. 


ஊடகங்கள், குடிமை சமூங்கள் ஆற்றிய பங்கு 


ஐந்தாவதாக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்ப்பதில் ஊடகங்களும் குடிமை சமூகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய ஊடகங்கள் பல்வேறு மொழிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கண்ணோட்டங்களை வெளிக்காட்டுகிறது. அச்சிலிருந்து ஒளிபரப்பு ஊடகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவது தகவல்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. ஊடக நிறுவனங்களுக்கு  எவ்வாறு நிதியளிக்கப்படுகின்றன மற்றும் நிர்வகிக்கப்படுகின்றன என்பது தொடர்பான முக்கிய சவால்கள் உள்ளன. 


ஊடகங்களும் குடிமை சமூகமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன. ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் பிரச்சினைகளை நாம் விமர்சிக்க வேண்டும். ஆனால், அதன் முக்கியத்துவத்தையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஊடகக் கலாச்சாரத்தில் வெளிப்படைத்தன்மை, பல்வேறு ஊடக ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் மூலம், இந்திய வாக்காளர்கள் ஊடகங்கள் மற்றும் குடிமை சமூகத்தின் பாத்திரங்களைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.


அரசியலமைப்பு நிர்வாகத்தின் 75-வது நிறைவு விழாவை கொண்டாடுவதற்கு இந்தியர்கள் அனைவருக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.


சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய இராணுவத்தின் கடைசி ஆங்கிலேய தளபதியான ஜெனரல் கிளாட் ஆச்சின்லெக் (Claude Auchinleck), சீக்கியர்கள் ஒரு தனி ஆட்சியை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று கூறினார். இது ஒரு பொதுவான பரவலாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். ஐரோப்பா ஒரு இத்தாலியனிலிருந்து வேறுபட்டது போல, பஞ்சாபி ஒரு மதராசியிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலேயர்கள் இந்த குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. பல்வேறு நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கண்டத்திலிருந்து நீங்கள் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். 


அரசியலமைப்பு இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தின் தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் பலரை நாம் தவறென நிரூபித்தோம், ஆனால் அரசியலமைப்பை சமூக மனசாட்சியையும் அரசியல் உணர்வையும் வலுப்படுத்தும் கருவியாகவும் மாற்றியுள்ளோம்.

சி.ராஜ்குமார் ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்




Original article:

Share:

கிரீன்வாஷிங் (Greenwashing) பற்றிய உண்மைகள்

 கிரீன்வாஷிங் (Greenwashing) வழிகாட்டுதல்கள் நல்லது. ஆனால், அவை  மோசடி செயல்முறையாக (sharper) இருக்கலாம். 


இந்திய நுகர்வோர்கள், மற்ற நாடுகளைப் போலவே, சுற்றுச்சூழலுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும் தயாரிப்புகளையும் சேவைகளையும் இப்போது விரும்புகிறார்கள். இந்த விருப்பங்களுக்கு பலர் அதிக பணம் செலுத்த தயாராக உள்ளனர். வணிக நிறுவனங்கள் சாதாரண தயாரிப்புகளுக்கு அதிக விலை வசூலிக்க 'கரிம' (‘organic), 'இயற்கை' (‘natural’), 'சுற்றுச்சூழல் மாசுபடுத்தாதவை (‘eco-friendly) அல்லது 'நிலையானவை' (‘sustainable’) என்று முத்திரையிடுகின்றன. 


பிப்ரவரி 2024 இல், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (Advertising Standards Council of India (ASC)) பசுமை உரிமைகோரல்களைக் கொண்ட பெரும்பாலான விளம்பரங்கள் தெளிவற்றவை அல்லது தவறாக வழிநடத்துகின்றன என்பதைக் கவனித்தது. இதை நிவர்த்தி செய்ய, பசுமை உரிமைகோரல்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டனர். இப்போது, நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)), அவர்களுக்கு சட்ட அதிகாரத்தை வழங்கி இந்த வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளது. 


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் குறிப்பாக கிரீன்வாஷிங் (Greenwashing)  நடைமுறையை தடை செய்கின்றன. கிரீன்வாஷிங் (Greenwashing)  என்பது சுற்றுச்சூழல் நன்மைகளை மிகைப்படுத்தும் அல்லது தவறாகக் வழிநடத்தும ஏமாற்றும் நடைமுறை என பரவலாக வரையறுக்கப்படுகிறது. ஒரு தயாரிப்பின் முக்கியமான தகவல்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் அம்சங்களை மறைப்பது அல்லது தவிர்ப்பதும் இதில் அடங்கும். தவறான படங்களைப் பயன்படுத்துவதும் கிரீன்வாஷிங் (Greenwashing) ஆகும். 


மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் பசுமை உரிமைகோரல்களைச் செய்யும் வணிகங்களுக்கு பல விதிகளை அமைக்கின்றன. முதலாவதாக, பசுமை, சுற்றுச்சூழல் நட்பு, கரிம, இயற்கை, நிலையான அல்லது கார்பன்-நடுநிலை (carbon-neutral) போன்ற சொற்களை ஆதாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. இந்த உரிமைகோரல்கள் சுயாதீன ஆய்வுகள் அல்லது மூன்றாம் தரப்பு சான்றிதழ்களால் ஆதரிக்கப்பட வேண்டும்.  அவை QR குறியீடு அல்லது URL மூலம் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும். 


இந்த விதி தவறான அல்லது தெளிவற்ற உரிமைகோரல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும்,  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. இந்த பசுமை உரிமைகோரல்கள் அனைத்தையும் சான்றளிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ அமைப்புகள் இந்தியாவில் உள்ளனவா? நுகர்வோருக்கு அவர்களைப் பற்றி தெரியுமா? 


இரண்டாவதாக, ஒரு தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்லது நச்சுத்தன்மையற்றது என்று ஒரு நிறுவனம் கூறினால்,  இதன் முழு தயாரிப்பு, உற்பத்தி செயல்முறை, பேக்கேஜிங் அல்லது அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் அகற்றப்படுகிறது  என்பதை முழுமையாக விளக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் செய்யும் மாற்றங்களையும் மற்றும் ஒரு தயாரிப்பை 'பசுமை' என்று அழைப்பதையும் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு அட்டை பெட்டியில் நெகிழி மூடப்பட்ட தயாரிப்பை மக்கும் என்று பெயரிட முடியாது. 


மூன்றாவதாக, மக்கும் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய போன்ற கூற்றுக்கள் மற்றும் அறிவியல் சான்றுகள் போன்றவை மூன்றாம் தரப்பு சரிபார்ப்பால் ஆதரிக்கப்பட வேண்டும். விற்பனையாளர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதரவான ஆராய்ச்சி ஆய்வுகளின் பகுதிகளை எடுக்க முடியாது. அவர்கள் முழு ஆய்வையும் வெளிப்படுத்த வேண்டும். 


இந்த வழிகாட்டுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீன்வாஷிங் (Greenwashing) எதிர்ப்பு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அவை குறைவான பாதிக்கப்பட கூடிவை. ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு ஒரு தயாரிப்பின் வாழ்க்கைச் சுழற்சியை வெளிப்படுத்த வேண்டும்.  இதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) முறையான வழிகாட்டுதல்கள் இல்லை. 


இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA)  வழிகாட்டுதல்கள் இன்னும் பரந்தவை மற்றும் அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த கவலைகளை எழுப்புகின்றன. அவை நுகர்வோருக்கு புகார்களை பதிவு செய்வதற்கான வழியை வழங்கவில்லை. விதி மீறல்களுக்கு அபராதமும் இல்லை. கூடுதலாக, இந்தியா இன்னும் முக்கிய நகரங்களில் சரியான கழிவுப் பிரிப்பை (waste segregation) செயல்படுத்தவில்லை. ஏனெனில் அவற்றிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லை.


Original article:

Share:

வலுவான நிறுவனமா, வலிமையான தலைமையா? சேஷன் வழக்கின் படிப்பினைகள் -இன்சியா வாகனவதி

 வலுவான தலைமைக்கும் நிறுவன பொறுப்புணர்வுக்கும் இடையே எவ்வாறு சமநிலையை ஏற்படுத்த முடியும்? 


இந்திய ஜனநாயகத்தில், வலுவான தலைமைக்கும் நிறுவனங்களின் ஒருமைப்பாட்டிற்கும் இடையே அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறது. வலுவான தலைவர்கள் நிறுவனங்களை முன்னோக்கி செயல்படுத்த முடியும்.  ஆனால், இவை பலவீனமான தலைவர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கலாம். சில நேரங்களில் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) போன்ற நிறுவனங்களுக்கு இந்த பிரச்சினை மிகவும் பொருத்தமானது. 


சமீபத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக அரசியல் கட்சிகள் மீது, குறிப்பாக பாரதிய ஜனதா (பாஜக) மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. இது அரசியல் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் தேர்தல் ஆணையத்தின் திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. வலுவான தலைமை முக்கியமானது என்றாலும், ஒரு நபரின் கைகளில் அதிக அதிகாரம் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். இது தேர்தல் ஆணையம் பராமரிக்க வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை பலவீனப்படுத்தும். எனவே, வலுவான தலைமைத்துவத்திற்கும் பொறுப்புக்கூறலுக்கும் இடையில் சமநிலையை எவ்வாறு காணலாம்? 


தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில், 1995-ஆம் ஆண்டில் டி.என்.சேஷன் Vs இந்திய ஒன்றியம் (TN Seshan Vs. Union of India) வழக்கின் போது இந்த பிரச்சினைகள் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது. இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையர் (chief election commissioner (CEC)) டி.என்.சேஷன் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டது.  இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. 


சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக ஆனதும், செயல்படாத ஒரு நிறுவனத்தை செயல்படுத்தும் நோக்கில் பொறுப்பேற்றார். அவர் உறுதியாகவும் ஊழலற்றவராகவும் இருந்தார் மற்றும் பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். தேர்தல் ஆணையத்தின் குறைந்தபட்ச மேற்பார்வைக்குப் பழகிய அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அவர் கடுமையாக விதிகளை அமல்படுத்தினார்.  ஆனால், சேஷனுக்கு தலைமை தேர்தல் ஆணையர் என்பதைத் தவிர வேறு செல்வாக்கு இல்லை. அவர் பெரும்பாலும் முரட்டுத்தனமானவராகக் காணப்பட்டார் மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


அரசியல்வாதிகள் அவரை நீக்க விரும்புகிறார்கள் என்று சேஷனுக்குத் தெரியும். ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை.  ஏனென்றால், ஒரு தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவது ஒரு நீதிபதியை நீக்குவது போல கடினம். அந்த நேரத்தில், தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பாக இருந்தது.  இது சேஷனுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வழங்கியது. 1993-ஆம் ஆண்டில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு, அவசரச் சட்டம் மூலம் தேர்தல் ஆணையத்தை பல உறுப்பினர் அமைப்பாக மாற்ற முயன்றது. இதனால் ஆத்திரமடைந்த சேஷன் தனது அதிகாரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்புவதாகக் கூறி இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.  


உச்ச நீதிமன்றம் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது: தேர்தல் ஆணையத்தில் கூடுதல் தேர்தல் ஆணையர்களை (election commissioners (ECs)) சேர்ப்பது அரசியலமைப்பு சட்டமா? மேலும், புதிய அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா? என்ற வாதத்தை முன்வைத்தார். எனினும் வழக்கில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை சேஷன் இருந்தது. 


இருப்பினும், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) ஏ.எம்.அகமதி, அதிகாரம் ஒரு தனிநபரிடம் குவிவதை எதிர்ப்பதில் அறியப்பட்டார். நீதிபதிகளை நியமிப்பதில் தலைமை நீதிபதியின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதில் உடன்படாதபோது அகமதி  இந்த கருத்தை இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் முன்பு காட்டியிருந்தார். டி.என்.சேஷன் வழக்கில், நீதிபதிகள் அகமதி, ஜே.எஸ்.வர்மா, என்.பி.சிங், எஸ்.பி.பரூச்சா மற்றும் எம்.கே.முகர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு தனிநபர் மீது அதிக கவனம் செலுத்துவது தவறு என்று தீர்ப்பளித்தது. தேர்தல் ஆணையம் ஒற்றை உறுப்பினர் அமைப்பாக இருந்தாலும், அது சக்தி வாய்ந்தது என்று  கூறினர். 


அகமதி எழுதிய தீர்ப்பில், அரசியலமைப்பின் பிரிவு 324, பிரிவு 2 தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட பிற ஆணையர்களை சேர்க்க அனுமதிக்கிறது என்று விளக்கியது. தலைமை தேர்தல் ஆணையர் தலைவராக செயல்படுவார். ஆனால், தேர்தல் ஆணையம் இன்னும் பல உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற கருத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. கூடுதலாக, தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் பெரும்பான்மை வாக்குகளால் எடுக்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையரால் மட்டுமே அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பை நிரந்தரமாக மாற்றியது. ஆனால், இன்று இந்த வழக்கிலிருந்து நாம் என்ன படிப்பினைகளைப் பெறலாம்? ஒரு நபரின் கைகளில்  அதிக அதிகாரம் இருந்தால் அவை தவறான செயலுக்கு வழிவகுக்கும். மறுபுறம், பலவீனமான தலைவர்கள் முக்கியமான நிறுவனங்களை பலவீனப்படுத்தலாம் என்ற  இரண்டு சூழ்நிலைகளுக்கும் தீங்கு விளைவிக்கும். 


இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்றால், தனிநபர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள். ஆனால், நிறுவனங்கள் நிலையாக நீடிக்கின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களையும், அதிக அரசியல் அழுத்தங்களையும் எதிர்க்கும் அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும்.  இதை உறுதி செய்ய, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி அடங்கிய குழுவால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டது.  இது அரசாங்கத்தின் எந்தவொரு அமைப்பின்  முக்கிய நியமனங்களைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கிறது. 


ராஜேந்திர பிரசாத், அரசியல் நிர்ணய சபையில், ஒரு அரசியலமைப்பு ஒரு இயந்திரத்தைப் போன்றது, அதை நடத்தும் மக்கள் இல்லாமல் அது உயிரற்றது என்று கூறினார். நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் நேர்மையான நபர்கள் இந்தியாவுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தினார். இந்த யோசனை நமது அரசியலமைப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும். அவை நமது ஜனநாயகத்திற்கு சேவை செய்ய வலுவான மற்றும் நியாயமான தலைவர்கள் தேவை. 


இன்சியா வாகன்வதி, 'தி ஃபியர்லெஸ் ஜட்ஜ்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் ஏ.எம்.அஹ்மதி' (Insiyah Vahanvaty is the author of The Fearless Judge) என்ற புத்தகத்தை எழுதியவர். 




Original article:

Share:

சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC)) தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? 13 ஆண்டுகளாக ஏன் அவை நடத்தப்படவில்லை? - கமல்தீப் சிங் பிரார்

 சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழுவுக்கு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் 2011-ஆம் ஆண்டு முதல் தேர்தல் எதுவும் நடக்கவில்லை ஏன்? 


2011-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 170 சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC)) உறுப்பினர்களில் குறைந்தது 30 பேர் கடந்த 13 ஆண்டுகளில் இறந்துவிட்டனர். இந்தக் குழுவிற்கான தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்றாலும், கடந்த பத்தாண்டுகளாக தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. 


2011-ஆம் ஆண்டில் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC)) தேர்தலில் வெற்றி பெற்ற சிரோமணி அகாலி தளம் (Shiromani Akali Dal (Badal)), அதே காலகட்டத்தில் பஞ்சாபில் நடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. எஸ்.ஜி.பி.சி கட்சி (SGPC) இன்னும் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் புதிய தேர்தல்கள் இல்லாததுதான் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.


முதலில், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) என்றால் என்ன? 


பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகரில் உள்ள அனைத்து சீக்கிய குருத்வாராக்களுக்கும் எஸ்ஜிபிசி (SGPC) முக்கியமான நிர்வாகக் குழுவாகும். இது நவம்பர் 15, 1920-ஆம் ஆண்டில் அமிர்தசரஸில் நிறுவப்பட்டது. முதலில், தர்பார் சாஹிப் குருத்வாரா மற்றும் பிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாராக்களை நிர்வகிப்பதற்காக இந்த குழுவானது நிறுவப்பட்டது. 


19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பஞ்சாப், கிறிஸ்தவ அறக்கட்டளை நடவடிக்கைகளின் எழுச்சி மற்றும் ஆரிய சமாஜம் என்ற இந்து சீர்திருத்த இயக்கத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.  இந்த சூழலில்தான் அன்றாட வாழ்க்கையில் "சீக்கிய சிந்தனை மற்றும் கொள்கைகளை தரங்குறைத்தலை" (degradation of Sikh thought and principles) தடுக்க சிங் சபா இயக்கம் சீக்கியர்களிடையே தொடங்கியது. 


ஆனால், தர்பார் சாஹிப் மற்றும் பிற குருத்வாராக்களின் கட்டுப்பாடு பிரிட்டிஷாரின் மறைமுக ஆதரவைப் பெற்ற சக்திவாய்ந்த மதகுருமார்களின் கைகளில் இருந்தது. இந்த மதகுருமார்கள் குருத்வாராக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தங்களின் தனிப்பட்ட பண்பாகக் கருதினர். உருவ வழிபாடு (idol worship) மற்றும் தலித் சீக்கியர்களுக்கு (Dalit Sikhs) எதிரான பாகுபாடு போன்ற சீக்கிய மதத்தின் கொள்கைகளை மீறும் நடைமுறைகளை அவர்கள் ஊக்குவித்தனர். 


பிரபலமற்ற மதகுருமார்களை மாற்றவும், சீக்கிய மதத்தின் கொள்கைகளின்படி சீக்கிய குருத்வாராக்களை நிர்வகிக்கவும் எஸ்ஜிபிசி (SGPC) உருவாக்கப்பட்டது. இது, உருவாக்கப்பட்ட ஆண்டுகளில், எஸ்ஜிபிசி (SGPC) பல குருத்வாராக்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முடிந்தது.  இருப்பினும்,  இது அடிக்கடி வன்முறைக்கு வழிவகுத்தது. இறுதியில், ஆங்கிலேயர்கள் 1925-ஆம் ஆண்டில் குருத்வாராச் சட்டத்தை (Gurdwaras Act) இயற்றினர். இந்தச் சட்டம் எஸ்ஜிபிசி (SGPC) அமைப்பிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து, குருத்வாராக்களை நிர்வகிக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாக நிறுவியது.


சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) தேர்தல் எவ்வாறு நடைபெறுகின்றன? 


எஸ்ஜிபிசி (SGPC)  மொத்தம் 170 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, 15 நியமன உறுப்பினர்கள் உள்ளனர்.  எஸ்ஜிபிசி (SGPC), சீக்கிய தற்காலிக இடங்களான தக்த்ஸின் 5 தலைவர்களையும் உள்ளடக்கியது. இறுதியாக, பொற்கோயிலின் தலைமை அர்ச்சகராக இருக்கும் தலைமை கிரந்தியும் எஸ்ஜிபிசி (SGPC)  இன் ஒரு பகுதியாக உள்ளார்.


குருத்வாரா தேர்தல் ஆணையம் 1925 சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். எஸ்ஜிபிசி (SGPC) தேர்தலை நடத்துவதற்கு இது பொறுப்பாக அமைகிறது. குருத்வாரா தேர்தல் ஆணையத்தின் தலைவர் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகிறார். இந்தத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிடுகிறார் மற்றும் பாதுகாப்பு மற்றும் பிற ஆதாரங்களை வழங்கும் பஞ்சாப் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.


அக்டோபர் 2020-ஆம் ஆண்டில், குருத்வாரா தேர்தல் ஆணையத்தின் தலைவராக பஞ்சாப் மற்றும் ஹரியானா ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் சரோனை மத்திய அரசு நியமித்தது. இருப்பினும், சரோன் இந்த ஆண்டு மே மாதத்தில்தான் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கினார். 


பொதுத் தேர்தல் வாக்காளர்களைப் போலவே எஸ்ஜிபிசி (SGPC) வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றும் நடைமுறையை எஸ்ஜிபிசி (SGPC)  பின்பற்றுகிறது. தகுதியுடைய எந்தவொரு நபரும் வாக்காளர்களாக பதிவு செய்ய நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளை அணுகலாம்.



சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு (Shiromani Gurdwara Parbandhak Committee(SGPC)) தேர்தலில் யார் வாக்காளராக முடியும்? 


எஸ்ஜிபிசி (SGPC) தேர்தல்களில் வாக்காளராக ஆவதற்கு, நான்கு முக்கிய நிபந்தனைகள் உள்ளன. பதிவு செய்யும் போது, ​​ஒரு நபர் பின்வரும் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும்:


  1. நீக்கப்படாத முடியை பராமரிக்கிறார்கள். 


  1. மது அருந்த மாட்டார்கள்.


  1. அவர்கள் ஹலால் இறைச்சியை உட்கொள்வதில்லை.


  1. அவர்கள் புகையிலையை உட்கொள்வதில்லை.


கூடுதலாக, வாக்காளர்கள் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சீக்கியர்களாக இருக்க வேண்டும். இந்த முறை, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சீக்கியர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஹரியானாவில் இருந்து சீக்கியர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஏனெனில், மாநிலம் இப்போது அதன் சொந்த ஹரியானா சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவைக் கொண்டுள்ளது. 


கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் எஸ்ஜிபிசி (SGPC) தேர்தலுக்கு பதிவு செய்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் 5.6 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் (5.27 மில்லியன்) பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். அதைத் தொடர்ந்து ஹரியானா (337,000), இமாச்சலப் பிரதேசம் (23,011), மற்றும் சண்டிகர் (11,932) போன்ற மாநிலங்களில் வாக்காளர்களும் உள்ளனர்.





தேர்தல் ஏன் தாமதமானது?


பல சீக்கியக் குழுக்கள் 2016-ஆம் ஆண்டு  முதல் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இருப்பினும், 2011-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையானது இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

 

எஸ்ஜிபிசி (SGPC) தேர்தல்களில் முதலில் ஏற்பட்ட தாமதம் சட்டச் சிக்கலால் ஏற்பட்டது. டிசம்பர் 2011-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற எஸ்ஜிபிசி (SGPC) தேர்தலை ரத்து செய்தது. 2003-ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்வதன் மூலம் செஹாஜ்தாரி சீக்கியர்களின் வாக்களிக்கும் உரிமையை நீதிமன்றம் மீட்டெடுத்தது. 


இந்த அறிவிப்பானது 2011-ஆம் ஆண்டு செகாஜ்தாரி சீக்கியர்கள் வாக்களிப்பதைத் தடுத்தது. செகாஜ்தாரி வாக்களிக்கும் உரிமை பற்றிய விசாரணைகளின் போது, ​​2011-ஆம் ஆண்டு வாக்கெடுப்பு முடிவுகள் இந்த விவகாரத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


பிப்ரவரி 2012-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்ஜிபிசி (SGPC)  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருந்தபோதிலும், 2016-ஆம் ஆண்டில் புதிய தேர்தல்கள் நடக்கவிருந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் 2011-ஆம் ஆண்டு இருந்த எஸ்ஜிபிசி (SGPC) சபையை மீண்டும் நிறுவியது.


இந்த மறுசீரமைக்கப்பட்ட சபை கூட 2021-ஆம் ஆண்டில் அதன் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்தது. 2022-ஆம் ஆண்டில் பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் எஸ்ஜிபிசி (SGPC) தேர்தல்களை விரைவில் நடத்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.




Original article:

Share: