ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - அஜய் சிஹ்னா கற்பூரம்

 ஆதார் அடையாளச் சான்று மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 

 

பள்ளி விடுப்புச் சான்றிதழ் (School Leaving Certificate) போன்ற பிற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்த நோக்கத்திற்காகச் செயல்படுவதால், ஆதார் அட்டைகளை வயதுச் சான்றாகப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பு ஆதாரின் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) ஆதார் எண்களை வழங்குவதற்கு பொறுப்பான "அனைவருக்குமான  அடையாள உள்கட்டமைப்பு" (universal identity infrastructure) என்று ஆதாரை விவரிக்கிறது.


நீதிமன்றம் ஏன் இந்தத் தீர்ப்பை வழங்கியது? ஆதாருக்கான முதல் அட்டைகள் வழங்கப்பட்டதிலிருந்து ஆதார் தற்போது எவ்வாறு மாறிவிட்டது?


மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு கோருவதற்கு பெரும்பாலும் வயதுச் சான்று (Age proof) தேவைப்படுகிறது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சிகா ராம் என்ற நபரின் குடும்பத்திற்கான இழப்பீடு வழங்குவது குறித்து தீர்ப்பு  வழங்க வேண்டியிருந்தது. ஏப்ரல் 2015-ஆம் ஆண்டில், ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் (Motor Accident Claims Tribunal), காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடாக 19,35,400 ரூபாய்  வழங்க உத்தரவிட்டது.


மோட்டார் வாகனச் சட்டம், 1988 (Motor Vehicles Act(MVA)) இன் கீழ் இறப்பு தொடர்பான வழக்குகளுக்கான இழப்பீடு, குறிப்பிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த காரணிகளில் இறந்தவரின் வருமானம் மற்றும் வயது, அத்துடன் இவரை சார்ந்திருப்பவர்களின் நபர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும். இறந்தவரின் வயது ஒரு விரிவாக்கத்தை தீர்மானிக்க உதவுகிறது.  இந்த விரிவாக்கம் ஒரு எண்ணிக்கையை குறிக்கிறது. இது இறந்தவரின் சம்பாதிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.


மேல்முறையீட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை 9,22,336 ரூபாய் ஆக குறைத்தது. இவர் இறக்கும் போது இவரது ஆதார் அட்டையின்படி 47 வயதாக இருந்தார். அதாவது, மோட்டார் வாகனச் சட்டத்தின் (MVA) கீழ் 13-ன் விரிவாக்கத்தைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவரது பள்ளி விடுப்பு சான்றிதழின்படி விபத்து நடந்தபோது அவருக்கு உண்மையில் 45 வயது என்றும், அதற்கு பதிலாக பெருக்கி 14-க இருக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். 


சிறார் நீதிச் சட்டம் (Juvenile Justice Act): உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆதார் வயதுச் சான்றாக இல்ல என்பதைக் குறிக்கிறது.


உச்ச நீதிமன்றம் 13 பக்க தீர்ப்பை வழங்கியது. உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாக விமர்சித்தது. இந்த  உத்தரவில் “வக்கிரம், சட்ட விரோதம் அல்லது அதை செல்லாததாக்கும் வேறு ஏதேனும் சிக்கல்கள்” உள்ளதா என்பதில் மட்டுமே உயர் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (Juvenile Justice (Care and Protection of Children) Act), 2015-ன் பிரிவு 94 ஐ மேற்கோள் காட்டியது. இது "சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான சான்றிதழ்" சட்டத்தின் கீழ் ஒரு வாரியம் அல்லது குழுவின் முன் கொண்டு வரப்பட்ட ஒரு நபரின் வயதை தீர்மானிக்க ஆதாரமாக பயன்படுத்தப்படலாம்.  ஆதார் அட்டைக்கு பதிலாக ஒரு நபரின் வயதை தீர்மானிக்க பள்ளி விடுப்பு சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுடன் இது கூடுதலாக இருந்தது. 


நீதிபதி டாக்டர். ஏ.கே.சிக்ரி ஆதாரை "அடையாளச் சான்று" என்று விவரித்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் இந்த வாதம் குறிப்பிடுகிறது.  அத்துடன் ஆதார் "பிறந்த தேதிக்கான சான்று அல்ல" என்பதை மீண்டும் வலியுறுத்தும் UIDAI சுற்றறிக்கை ஒன்றை மீண்டும் வலியுறுத்தியது. 


இதனால் பள்ளி விடுப்புச் சான்றிதழில் வயது அடிப்படையில் இழப்பீட்டைக் கணக்கிட உச்ச நீதிமன்றம் 14-ஐ பெருக்கி குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்தை வழங்கியது.


பல ஆண்டுகளாக ஆதாருக்கான ஆணை எவ்வாறு விரிவடைந்துள்ளது? 


வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அரசாங்கத் திட்டங்களைப் பெற உதவுவதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் முதலில் ஆதார் ஒரு தனிப்பட்ட அடையாளமாக (unique ID (UID) முன்மொழியப்பட்டது. இது பின்னர், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாள அட்டைகளை பதிவு செய்து வழங்குவதற்கான தேசிய முயற்சியாக மாறியது. இருப்பினும், இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தை (UIDAI) மேற்பார்வையிட்ட நிதி அமைச்சகத்துக்கும்,  உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், இந்த திட்டம் முடங்கியது.  இந்திய தேசிய அடையாள ஆணைய (National Identification Authority of India (NIAI)) மசோதாவும் வாக்கெடுப்புக்கு முன் நிராகரிக்கப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆதாருக்கான முயற்சியை பாஜக எதிர்த்தது. தரவுத்தளத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகைகள் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை எழுப்பினர்.


2016-ஆம் ஆண்டு பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பிறகு நிலைமை மாறியது.  இந்திய தேசிய அடையாள ஆணைய (NIAI) மசோதா திரும்பப் பெறப்பட்டது.  மேலும், கட்சி ஜூலை 2016 இல் ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) மசோதாவை பண மசோதாவாக (Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits, and Services) Bill) அறிமுகப்படுத்தியது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 110-வது பிரிவு, பண மசோதா சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், மாநிலங்களவையின் எதிர்ப்புகளை மீறி மக்களவையில் சட்டமாக நிறைவேற்ற அதிகாரம் அளிக்கிறது. 


கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சட்ட மனுவைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் அல்லது மொபைல் சிம் கார்டு பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இருப்பினும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் உறுதி செய்தது. அரசாங்க சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளின் அடையாளங்களைச் சரிபார்க்க ஆதாரை பயன்படுத்தவும் இது அனுமதித்தது.


ஆதார் பதிவு தன்னார்வலமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் பயன்பாடு கணிசமாக விரிவடைந்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களைப் பெற ஆதார் சரிபார்ப்பு இப்போது அவசியம். அமேசான் பே (Amazon Pay) மற்றும் ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் (Aditya Birla Housing Finance) போன்ற தனியார் நிறுவனங்களும் ஆதாரை கோருகின்றன. ஜனவரி 2024-ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) கீழ் வேலை தேடும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.




Original article:

Share:

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நவம்பர் 10-ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வு பெற்ற  பின்பு, அவருக்குப் பிறகு பதவியேற்பார். இதன் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது? என்பது பற்றிய விவரம். 


அக்டோபர் 24-ம் தேதி, நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக (Chief Justice of India (CJI)) ஒன்றிய அரசு நியமித்தது. இந்த நியமனம், ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அளித்த பரிந்துரையை முறையாக அங்கீகரித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தலைமை நீதிபதி சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்ற  பின்பு,  அவருக்குப் பிறகு பதவியேற்பார்.  அவர் மே 13, 2025 அன்று ஓய்வு பெறும் வரை பதவியில் இருப்பார். தற்போது, தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக்காலமானது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்டதாக உள்ளது. 


தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான செயல்முறை என்ன?


மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி (உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பல வருட அனுபவத்தின் அடிப்படையில்) இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) பொறுப்பேற்கிறார். இந்த செயல்முறையானது ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறைக் குறிப்பாணையில்’ (Memorandum of Procedure (MoP) என குறிப்பிடப்படுகிறது) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதியின் நியமனத்தின் அடிப்படை : இந்திய தலைமை நீதிபதி நியமனம் அந்த பதவிக்கு தகுதியானவராக கருதப்படுபவரை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிக்கு பரிந்துரை வழங்கப்பட வேண்டும் என்று நடைமுறைக் குறிப்பாணை (Memorandum of Procedure (MoP)) கூறுகிறது. 1999-ஆம் ஆண்டில் நடைமுறைக் குறிப்பாணை (MoP) நிறுவப்படுவதற்கு முன்பே, தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மரபுப்படி உயர் பதவிக்கு உயர்த்தப்படுவது வழக்கம். 


நியமன செயல்முறை எவ்வாறு தொடங்குகிறது : நடைமுறைக் குறிப்பாணையின் (MoP) படி, ஒன்றிய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் ஒரு பரிந்துரையை குறிப்பிடும்போது நியமனத்திற்கான செயல்முறை தொடங்குகிறது. இந்த பரிந்துரை, அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதியிடம் (CJI) பரிந்துரை கோரப்படுகிறது. மரபுப்படி, தற்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெறும் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு செயல்முறை தொடங்க "பொருத்தமான நேரம்" (appropriate time) ஆகும். தலைமை நீதிபதி சந்திரசூட் தனது பரிந்துரை கடிதத்தை அக்டோபர் 17-ம் தேதி அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். 


ஒன்றிய அரசின் ஒப்புதல் : நடைமுறைக் குறிப்பாணையில் (MoP) குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள செயல்முறையின் படி, இந்திய தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையை வழங்குகிறார். இதன்பிறகு, மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர், பிரதமரிடம் பரிந்துரை செய்வார். அதன்பின்னர், பிரதமர் நியமனம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.


அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதால், ஒரு தலைமை நீதிபதியின் பதவிக்காலம் அவர்களின் முன்னோடி நீதிபதியின் ஓய்வு பெறும் வயதைப் பொறுத்தது.  எதிர்காலத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளின் பட்டியல் இங்கே குறிப்பிட்டுள்ளது. 

 

மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியை தலைமை நீதிபதியாக நியமிக்கும் மரபிலிருந்து எப்போதாவது விலகல் ஏற்பட்டுள்ளதா?


ஆம். இந்த மரபு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நிராகரிக்கப்பட்டது. அவரது அரசாங்கம் 1973-ஆம் ஆண்டில் நீதிபதி ஏ.என்.ரேவை இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. மேலும், மூன்று மூத்த நீதிபதிகளான ஜே.எம்.ஷெலட் (J.M. Shelat), கே.எஸ்.ஹெக்டே (K.S. Hegde) மற்றும் ஏ.என்.குரோவர் (A.N. Grover) ஆகியோரை மாற்றியது.


நீதிபதி ரே (Justice Ray) தனது மூத்த சக நீதிபதிகளைக் காட்டிலும் இந்திரா அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததாகக் கருதப்பட்டார். "அடிப்படை கட்டமைப்பு" கோட்பாட்டை (basic structure doctrine) வகுத்த கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை அறிவித்த மறுநாள் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வின் 7-6 தீர்ப்பில் நீதிபதி ரே சிறுபான்மையினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜனவரி 1977-ஆம் ஆண்டில், நீதிபதி எச்.ஆர்.கண்ணாவை நீக்கிவிட்டு, நீதிபதி எம்.எச்.பெக்கை தலைமை நீதிபதியாக நியமித்தது இந்திரா காந்தி அரசு நியமத்திற்கான மரபை மீண்டும் புறக்கணித்தது.  ஏ.டி.எம் ஜபல்பூர் vs ஷிவ் காந்த் சுக்லா (ADM Jabalpur vs. Shiv Kant Shukla) உத்தரவில் நீதிபதி கன்னா மட்டுமே கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இதில் நீதிபதிகள் ஏ.என்.ரே, பி என் பகவதி, ஒய்.வி.சந்திரசூட் மற்றும் எம்.எச்.பெக் ஆகியோர் அடங்கிய பெரும்பான்மை அமர்வில் தேசிய அவசரகால காலத்தில் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன என்பதை அரசாங்கத்துடன் ஒப்புக்கொண்டனர். 


நடைமுறைக் குறிப்பாணை (MoP) எப்படி உருவானது? 


முதல் நீதிபதிகள் வழக்கு (1981), இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993) மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு (1998) ஆகியவற்றில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக்கான செயல்முறையை நிறுவியது. இந்த செயல்முறை உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம், அதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.


1999-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நடைமுறைக் குறிப்பாணை (MoP), நியமன செயல்முறை மற்றும் மையமாகச் செயல்படுகிறது. இது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.  நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம் அமைப்பு ஒரு நீதித்துறை கண்டுபிடிப்பு என்பதால் இந்த மையம் முக்கியமானதாக உள்ளது. இது சட்டத்தால் நிறுவப்படவில்லை அல்லது அரசியலமைப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை.


2015-ம் ஆண்டில்,  உச்சநீதிமன்றம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உருவாக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்தது.  இந்த சட்டத்திருத்தம் நீதிபதிகளை பரிந்துரை செய்வதில் ஒன்றிய அரசுக்கு அதிக செல்வாக்கு செலுத்த அனுமதித்திருக்கும். இந்த தீர்ப்புக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் நடைமுறைக் குறிப்பாணை (MoP) மறுபரிசீலனை செய்யப்பட்டது. இருப்பினும், அது இன்னும் இறுதி செய்யப்படுவதாக கடந்த ஆண்டு வரை அரசாங்கம் கூறியுள்ளது.




Original article:

Share:

லடாக் நிர்வாகத்திற்கு அட்டவணை 6-க்கான கோரிக்கைகள் -ரோஷினி யாதவ்

 லடாக் நிர்வாகத்தின் எதிர்கால விவாதங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைப் பெற்ற பின்னர், லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 


லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஏன் போராட்டம் நடத்தினர்? 6-வது அட்டவணை என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன? லடாக்கை 6-வது அட்டவணையில் சேர்க்க முடியுமா? சட்டப்பிரிவு 371-ன் கீழ் சில மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து என்ன?


அக்டோபர் 21 அன்று, லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தின் எதிர்கால விவாதங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைப் பெற்ற பின்னர், தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதில், வாங்சுக் மற்றும் பிற ஆர்வலர்கள் லடாக்கின் நிர்வாகத்தில் கூடுதல் தன்னாட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள், குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்கவும், மேலும் இப்பகுதியில் ஒரு சட்டமன்றத்தை நிறுவவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


1. ஆகஸ்ட் 2019-ம் ஆண்டில், சட்டப்பிரிவு 370-வது பிரிவை நீக்கி, ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (J & K Reorganisation Act), 2019 இயற்றப்பட்ட பின்னர் லடாக் நிர்வாகத்தில் தன்னாட்சிக்கான கோரிக்கை மற்றும் இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 6-ல் சேர்ப்பது முக்கியத்துவம் பெற்றது. 


2. ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் (J & K Reorganisation Act), 2019-ம் ஆண்டில் லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக அங்கீகரித்தது. இருப்பினும், லடாக் "சட்டமன்றம் இல்லாத" யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, புது டெல்லி மற்றும் பாண்டிச்சேரியைப் போலவே ஜம்மு & காஷ்மீரும் தனிப்பட்ட முறையில் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது.


3. ஆறாவது அட்டவணை இந்திய அரசியலமைப்பின் 244-வது பிரிவின் ஒரு பகுதியாகும். இது பழங்குடியின நிர்வாகப் பகுதிகளை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த பிராந்தியங்கள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (Autonomous District Councils (ADC)) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (Autonomous Regional Councils (ARC)) என்று அழைக்கப்படுகின்றன.


4. ஆறாவது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள் உள்ளன. 


5. ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்படுவது லடாக் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (ARC) உருவாக்க அனுமதிக்கும். இந்த கவுன்சில்கள் பழங்குடியின பகுதிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாகும். அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக சட்டங்களை உருவாக்க முடியும். இதில் வன மேலாண்மை, விவசாயம், கிராமம் மற்றும் நகர நிர்வாகம், பரம்பரை, திருமணம், விவாகரத்து மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் போன்ற பகுதிகள் அடங்கும்.


6. இந்த அட்டவணை ARC கள் மற்றும் ADC களுக்கு நிலவரி வசூலிக்கவும், வரி விதிக்கவும், கடன் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும், தங்கள் பகுதிகளில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான உரிமங்கள் அல்லது குத்தகைகளில் இருந்து ராயல்டிகளை சேகரிக்கவும், பள்ளிகள், சந்தைகள் மற்றும் சாலைகள் போன்ற பொது வசதிகளை நிறுவவும் அதிகாரம் அளிக்கிறது. 


7. தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களின் (ADC) உட்கூறுகள் : இந்த கவுன்சில்கள் ஐந்து வருட காலத்துடன் 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். அசாமில் உள்ள போடோலாந்து பிராந்திய கவுன்சில் 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும் மற்றும் 39 தொடர்பான பிரச்சனைக்கான சட்டங்களை இயற்றும் உரிமை உள்ளது. தற்போது, வடகிழக்கில் 10 தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) உள்ளன. இதில், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்றும், திரிபுராவில் ஒன்றும் உள்ளது. 


8. 2019-ம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Tribes) லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது: 


(i) லடாக்கில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். 97 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.


(ii) இவை நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்கள் இப்பகுதியில் நிலம் வாங்குவதையோ அல்லது கையகப்படுத்துவதையோ தடுக்கிறது.


(iii) இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 


9. குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே எந்த பிராந்தியமும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மணிப்பூரில் கூட, தன்னாட்சி கவுன்சில்கள் ஆறாவது அட்டவணையின் ஒரு பகுதியாக இல்லை. இதேபோல், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் முற்றிலும் பழங்குடி மக்களைக் கொண்டிருந்தாலும், அவர்களும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறப்பு அந்தஸ்து மற்றும் சட்டப்பிரிவு 371 


1. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 371 மற்றும் 371-A முதல் J வரையிலான பிரிவுகள் சில மாநிலங்களுக்கு "சிறப்பு அந்தஸ்துகளை" (special provisions) வழங்குகின்றன. இந்த விதிகள் குறிப்பிட்ட மத மற்றும் சமூக குழுக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கின்றன. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் தலையீடு இல்லாமல் இந்த குழுக்களை தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கவும் அவர்கள் அனுமதிக்கிறார்கள்.


2. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் (சட்டப்பிரிவு-371) : "விதர்பா (Vidarbha), மராத்வாடா (Marathwada) மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகள்" மற்றும் குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா (Saurashtra) மற்றும் கட்ச் (Kutch) ஆகியவற்றிற்கு "தனித்தனி மேம்பாட்டு வாரியங்களை" (separate development boards) நிறுவ ஆளுநருக்கு "சிறப்பு அந்தஸ்து" உள்ளது. இது, மாநில அரசின் கீழ், மேற்கூறிய பகுதிகளில் வளர்ச்சிக்காக சமமான நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கு போதுமான வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கு சமமான அந்தஸ்தை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். 


இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு-371 படி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அரசின் செலவினங்களின் தேவையை மதிப்பிடுவதற்காக குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு "வளர்ச்சி வாரியங்கள்" உருவாக்கப்பட வேண்டும். புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால், கூடுதல் சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


3. நாகாலாந்து (பிரிவு 371A) : இந்த விதி 1962-ஆம் ஆண்டில் 13-வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நாகா மதம் (Naga religion) அல்லது சமூக நடைமுறைகள் (social practices) குறித்து நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க முடியாது என்று கூறுகிறது. இது நாகா மரபுச் சட்டம் மற்றும் நடைமுறைகள் மற்றும் நாகா வழக்கத்தைப் பின்பற்றும் குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்திற்கும் பொருந்தும்.  கூடுதலாக, இது நிலம் மற்றும் அதன் வளங்களின் உரிமை மற்றும் பரிமாற்றத்தை உள்ளடக்கியது. 


மேலும், துயன்சாங் மாவட்டத்திற்கான 35 உறுப்பினர்களைக் கொண்ட பிராந்திய கவுன்சிலுக்கான ஏற்பாடு உள்ளது. இது சட்டமன்றத்தில் துயென்சாங் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. துயன்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் துயன்சாங் விவகாரங்களுக்கான அமைச்சராக உள்ளார். துன்சாங் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆளுநரே இறுதிக் கருத்தைக் கூறுவார்.


4. அஸ்ஸாம் (பிரிவு 371 பி, 22 வது திருத்தச் சட்டம், 1969) : மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் குழுவை அமைப்பதற்கும், இதன் செயல்பாடுகளை வரையறுப்பதற்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் உருவாக்கலாம். 


5. மணிப்பூர் (பிரிவு 371 சி, 27 வது திருத்தச் சட்டம், 1971) : இந்திய குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றத்தில் ஒரு குழுவை அமைக்கலாம். இந்தக் குழுவில் மணிப்பூர் மலைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பர். இந்தக் குழு சரியாகச் செயல்படுவதை உறுதி செய்ய, குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு "சிறப்புப் பொறுப்பையும்" வழங்குவார்.  ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் அவர்கள், குடியரசுத் தலைவருக்கு இது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.


6. ஆந்திரா மற்றும் தெலுங்கானா (பிரிவு 371D, 32 வது திருத்தச் சட்டம், 1973; ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 ஆல் மாற்றப்பட்டது) : மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பொது வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருப்பதை குடியரசுத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு வகையான சிவில் சர்வீஸ் பதவிகள் அல்லது சிவில் பதவிகளை உள்ளூர் பணியாளர்களாக ஒழுங்கமைக்க குடியரசுத் தலைவர் மாநில அரசைக் கேட்கலாம். இந்தப் பதவிகளை ஒதுக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. கூடுதலாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு இதே போன்ற அதிகாரங்கள் உள்ளன.


சட்டப்பிரிவு 371-E ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது.  இருப்பினும், அரசியலமைப்பின் இந்தப் பிரிவில் உள்ள மற்ற விதிகளைப் போல இது ஒரு "சிறப்பு அந்தஸ்து" என்று கருதப்படவில்லை.


7. சிக்கிம் (பிரிவு 371 F, 36 வது திருத்தச் சட்டம், 1975) : சட்டப் பிரிவு 371-F மூலம், "மக்களின் பல்வேறு பிரிவுகளின் உரிமைகள் மற்றும் நலன்களை" பாதுகாப்பதற்காக, சிக்கிம் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு வழங்க சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


8. மிசோரம் (பிரிவு 371-G, 53 வது திருத்தச் சட்டம், 1986) : மிசோரம் மாநில கலாச்சாரம் தொடர்பான


  • மிசோரத்தின் மத மற்றும் சமூக நடைமுறைகள் (religious and social practices of the Mizos)

  • மிசோ வழக்கமான சட்டம் மற்றும் நடைமுறைகள் (Mizo customary law and procedure) 

  • மிசோ மரபுச் சட்டத்தின் அடிப்படையில் சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் (civil and criminal justice based on Mizo) ஆகியவை அடங்கும்.

  • இது நிலத்தின் உரிமை மற்றும் பரிமாற்றம்.


போன்ற அம்சங்களில் நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்க முடியாது என்று இந்த விதி கூறுகிறது. எனினும், சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் இந்தச் சட்டங்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கலாம்.


9. அருணாச்சலப் பிரதேசம் (பிரிவு 371 H, 55-வது திருத்தச் சட்டம், 1986) : சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநருக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது. மேலும் "அமைச்சர் குழுவைக் கலந்தாலோசித்த பிறகு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அவர் தனது தனிப்பட்ட முடிவைப் பயன்படுத்துவார்". ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ஆளுநர் "தனது தனிப்பட்ட முடிவின்படி செயல்பட வேண்டும். ஆளுநரின் முடிவே இறுதியானது" மற்றும் "கேள்விக்கு அழைக்கப்படக்கூடாது... ”


10. கோவா (பிரிவு 371-I, 56 வது திருத்தச் சட்டம், 1987) : இது "கோவா மாநிலத்தின் சட்டமன்றத்தில் 30-க்கும் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்" என்று கூறுகிறது. 


10. கர்நாடகா (பிரிவு 371 J, 98 வது திருத்தச் சட்டம், 2012) : ஹைதராபாத்-கர்நாடகா பகுதிக்கு தனி மேம்பாட்டு வாரியம் (separate development board) அமைக்கப்படும். இந்த வாரியம் தனது செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் சட்டசபைக்கு தெரிவிக்கப்படும். இப்பகுதியின் மேம்பாட்டிற்க்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இப்பகுதி மக்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் சம வாய்ப்புகள் மற்றும் வசதிகள் அமைய வலியுறுத்தும்.


ஹைதராபாத்-கர்நாடகா பகுதியில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் இருப்பிடத்தின் அடிப்படையில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு, வேலைவாய்ப்புகளில் "விகிதாச்சார அடிப்படையில்" ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படலாம். 




Original article:

Share:

இந்தியாவில் அதிக மின்-பேருந்துகளைப் பெற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது - பௌமிக் கோவாண்டே, சுமதி கோலி

 இந்தியாவில் மின்-பேருந்து சந்தை விரிவடைவதற்கு, தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

 

இந்தியா தனது காலநிலை இலக்குகளை அடைய உதவுவதற்காக, புதுமையான வாகன மேம்பாட்டிற்கான PM E-DRIVE திட்டத்திற்கு சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் பல்வேறு பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கு நிதி வழங்குகிறது. ஒன்பது நகரங்களில் 14,028 மின்-பேருந்துகளை வாங்குவதற்கான மானியங்கள் மற்றும் ஊக்குவிப்புகளுக்கான ₹4,391 கோடி ரூபாய் இதில் அடங்கும். பொதுப் போக்குவரத்தை மின்சார வாகனங்களை நோக்கி நகர்த்துவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், தனியார் பேருந்து நடத்துநர்கள் மானியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இது அரசாங்கத்தால் இயக்கப்படும் பேருந்துகளைத் தாண்டி மின்சார இயக்கத்தை விரிவுபடுத்துவது பற்றிய கவலையை எழுப்புகிறது.

 



பேருந்துகள் பொதுத்துறையால் இயக்கப்படுகிறது 


இந்தியாவில் மின்சாரப் பேருந்து விநியோகம் இதுவரை பொதுத் துறையால் இயக்கப்படுகிறது. மின்சார வாகனங்களின் உற்பத்தி (FAME India) திட்டத்தின் மூலம் நிதி உதவியைப் பெற்றது. FAME-I 2015-2019-ன் கீழ், 425 பேருந்துகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை FAME II 2019-2024-ன் கீழ் 7,120 பேருந்துகளாக அதிகரித்துள்ளது.


மாநில மற்றும் நகர போக்குவரத்து கழகங்கள், மாநகராட்சிகள் மற்றும் பிற பொது நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைத்தது. பொதுப் போக்குவரத்து பேருந்து புள்ளிவிவரங்கள் படி: இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட 24 லட்சம் பேருந்துகளில் 7% மட்டுமே பொதுப் போக்குவரத்து பேருந்துகளாக உள்ளன.


  இந்தியாவில் உள்ள மொத்த பேருந்துகளில் 93% தனியார் பேருந்துகள் இருந்தாலும், அவை எந்த முக்கிய தேசிய திட்டங்களிலும் அல்லது சிறப்பு சலுகைகளிலும் சேர்க்கப்படவில்லை. NueGo மற்றும் Chartered Speed ​​போன்ற சில முன்னணி தனியார் பேருந்து நிறுவனங்கள் கடற்படைகளில் மின்-வாகனங்களைப்  பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவற்றின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் மின்சார பேருந்து சந்தை வளர, தனியார் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவது முக்கியம். 


மாசு இல்லாத  போக்குவரத்துக்கான சர்வதேச ஆணையம் (International Council on Clean Transportation (ICCT)) சமீபத்தில் நடத்திய ஆய்வில், தனியார் நிறுவனங்கள் மின்சார பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கு குறைந்த அளவிலான நிதியுதவி தடையாக உள்ளதாக குறிப்பிட்டது. மேலும், முக்கிய சவால்களையும் முன்வைத்தது. அவை, மின்சார பேருந்துகளின் விலை அதிகமாக உள்ளது.  மின்சார பேருந்துகள் மறுவிற்பனை செய்வதற்கு கடினமாக உள்ளது.  இதனால், கடனுக்கான பிணையமாக அவற்றைப் பயன்படுத்துவது கடினமாகிறது.  பேட்டரிகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற தன்மை அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.




தடைகள் 


நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் டீசல் பேருந்துகளை விட  மின்சார பேருந்துகள் அதிக வருமானம் அளிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், அதிக வட்டி மற்றும் கடன் தவணை செலவுகள் கடன் காலத்தில் அவற்றை நிதி ரீதியாக குறைந்த செயல்திறன் கொண்டதாக மாற்றுகின்றன. இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள தனியார் மாநகர பேருந்து நடத்துநர்கள் மின்சார பேருந்துகள் மூலம் பெரிதும் பயனடையக்கூடும்.


 இந்தியாவின் போக்குவரத்தில் மாநகர பேருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், அவை அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளை கட்டுப்படுத்தும்.   ஒவ்வொரு நாளும் 22.8 கோடி பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.  இது மொத்த பயணங்களில் 57%  மற்றும் வாகனங்கள் கடந்து செல்லும் மொத்த தூரத்தில் 64% ஆகும். கூடுதலாக, 40%  உள்ளூர் பயணங்கள் 250 கிலோமீட்டர் முதல் 300 கிமீ வரையிலான வரம்பிற்குள் வருகின்றன. தற்போதைய மின்சார பேருந்து மாதிரிகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். இந்தச் செயல்பாடுகள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு மிகவும் பொருத்தமானவை.


2030-ஆம் ஆண்டுக்குள் 8,00,000 டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நிதிச் சுமையைக் குறைக்க வட்டி மானியங்கள் மற்றும் நீண்ட கடன் காலங்கள் போன்ற சாதகமான நிதி விருப்பங்களை வழங்குவதற்கான திறனை இந்த மாசு இல்லாத  போக்குவரத்துக்கான சர்வதேச ஆணையத்தின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. கூடுதலாக, கடன் உத்தரவாதங்கள், அரசாங்க வங்கிகள் மற்றும் பிற நியமிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன. இது நிதியாளர்களுக்கான முதலீட்டு அபாயங்களைக் குறைக்க உதவும் ஒரு வழியாகும். 


தனியார் துறையில் மின்-பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கான மற்றொரு பெரிய சவால், மின்ஏற்றி கட்டமைப்பு (charging infrastructure) இல்லாதது.  தற்போது, ​​FAME மூலம் நிதியளிக்கப்படும் வசதிகள் மாநில போக்குவரத்து அலகு நிலையங்களில்   மட்டுமே கிடைக்கின்றன. இந்தியாவில் 90% தனியார் பேருந்து நடத்துனர்கள் ஐந்துக்கும் குறைவான பேருந்துகளைக் கொண்டிருப்பதால், நிலம் மற்றும் உள்கட்டமைப்புக்கான அதிக விலைகள், மின் ஏற்றி நிலையங்களில்முதலீடு செய்வதை கடினமாக்குகின்றன.


அவர்களுக்கு தேவையான 70 முதல் 120 சதுர மீட்டர் இடம் இருந்தாலும், நிலத்தை வாடகைக்கு எடுப்பதற்கான அதிக விலை மின்ஏற்றி நிலையங்களை நிதி ரீதியாக சாத்தியமற்றதாக மாற்றும். தனியார் நகரங்களுக்கு இடையேயான பேருந்து நடத்துனர்களும் மின்சார விநியோகத் தடைகள், வரையறுக்கப்பட்ட கட்டத் திறன் மற்றும் போதிய ஆதரவு உள்கட்டமைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். தனியார் துறையில் மின்சார பேருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, நகரங்கள் மற்றும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில், குறிப்பாக நகரங்களுக்கு இடையேயான முக்கிய வழித்தடங்களில் பகிரப்பட்ட பொது மின்ஏற்றி நிலையங்களை (charging stations) உருவாக்குவது முக்கியம்.


 1,800 பேருந்து மின் ஏற்றிகளுக்கு மானியம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட PM E-Drive திட்டத்தின் நிதி மானியங்களைப் பயன்படுத்தி மாநில அரசுகள் இந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்க, மாநிலங்கள் கூடுதல் நிதிச் சலுகைகளை வழங்கலாம். வடிவமைப்பு-கட்ட-இயக்க-பரிமாற்றம் (design-build-operate-transfer (DBOT)) அணுகுமுறையைப் பயன்படுத்தி பகிரப்பட்ட மின் ஏற்றி நிலையங்களுக்கான ஒப்பந்தங்களையும் உருவாக்கலாம். கூடுதலாக, திட்டம் சாத்தியமானதா என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு மின் ஏற்றிக்கும் குறைந்தபட்ச தினசரி ஆற்றல் நுகர்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

 

பின்பற்ற மதிப்புள்ள வணிக மாதிரி 


ஒரு சேவையாக பேட்டரியின் திறன் (Battery-as-a-Service (BaaS)) என்பது மற்றொரு புதிய வணிக மாதிரி. மின்சார பேருந்துகளின் உயர் ஆரம்ப செலவைக் குறைக்க உதவும்.  இந்த மாதிரியானது, சீனா மற்றும் கென்யாவில் செய்யப்படுவதைப் போன்றே, பேட்டரி உரிமையை வாகன உரிமையிலிருந்து பிரிக்கிறது.  BaaS, பேட்டரி மாற்றத்துடன் சேர்ந்து, பயன்பாட்டின் அடிப்படையில் குத்தகை விருப்பங்களை வழங்குவதன் மூலம் மின்சார பேருந்துகளை ஏற்றுக்கொள்ள தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க முடியும். இந்தியாவில் Macquarie-ன் வெர்டெலோ இயங்குதளம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு மாசு இல்லாத போக்குவரத்துக்கான சர்வதேச ஆணையம் (International Council on Clean Transportation (ICCT)) வலைப்பதிவு இந்த யோசனைகளை விரிவாக விவாதித்தது, இந்தியாவில் மின்சார பேருந்துகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது.

 

இந்தியாவில் மின்சார பேருந்து சந்தையில் அளவு மற்றும் குறைந்த செலவுகளை அதிகரிக்க, தனியார் துறை பங்கேற்பை அதிகரிப்பது முக்கியம். புதிய PM E-DRIVE திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை அரசாங்கம் ஆதரிப்பதால், நிதியளிப்பு ஊக்குவிப்பு, மின்ஏற்றி உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான வணிக மாதிரிகள் தொடர்பான கொள்கைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. மின்சார பேருந்துகளை ஏற்றுக்கொள்வதில் தனியார் பேருந்து நடத்துனர்கள்  எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இந்தக் கொள்கைகள் உதவும்.


பௌமிக் கோவாண்டே, இந்தியாவில் உள்ள மாசு இல்லாத போக்குவரத்துக்கான சர்வதேச ஆணையத்தின் (International Council on Clean Transportation (ICCT)) இணை ஆராய்ச்சியாளர் ஆவார். சுமதி கோலி, இந்தியாவில் உள்ள மாசு இல்லாத  போக்குவரத்துக்கான சர்வதேச ஆணையத்தின் (ஐ.சி.சி.டி) ஆராய்ச்சியாளர் 




Original article:

Share:

மது கட்டுப்பாடு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு . . .

 இந்திய உச்ச நீதிமன்றம் மது கட்டுப்பாட்டில் கூட்டாட்சி சமநிலையை வைத்திருக்கிறது.


மாநிலப் பட்டியலில் உள்ள “போதையூட்டும் மதுபானங்கள்” (‘intoxicating liquors’) என்பது தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மதுபானங்களையும் என்பதையும் உள்ளடக்கியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பிரிக்கும் கூட்டாட்சிக் கொள்கையை இந்த தீர்ப்பு  வலுப்படுத்துகிறது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் உள்ள  ஏழாவது அட்டவணையில், பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் “போதையூட்டும் மதுபானங்கள்” மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்மதுபானங்கள் ஆகிய இரண்டிற்கும் இவை பொருந்தும் என்று தெளிவுபடுத்தியது. மதுபானங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும். 


1951-ஆம் ஆண்டின் தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் (Development and Regulation) Act (IDRA)) மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும்  மதுபானங்களை நீக்கியதா என்பதே இங்கு முக்கிய பிரச்சனையாகும். எட்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 'போதை தரும் மதுபானங்கள் தொழில் தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் கீழ் வராது என்று முடிவு செய்தது. மது அருந்தும் ஒட்டுமொத்த தொழிற்சாலையையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுபான சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் வைத்திருக்க வேண்டும் மற்றும்  ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்குவது அதிகார பகிர்வை சீர்குலைக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது கருத்தை தெரிவித்தார்.


கூட்டாட்சி கொள்கைகளை ஆதரிக்கும் சமீபத்திய மாதங்களில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது முக்கியமான தீர்ப்பு இதுவாகும். ஜூலை மாதம், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, கனிம உரிமைகள் மற்றும் கனிம வளம் கொண்ட நிலங்களுக்கு (tax mineral rights and land with minerals) மாநிலங்கள் வரி விதிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மாநிலங்களின் அதிகாரம் பாராளுமன்றத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தது. கனிம உரிமை வழக்கைப் போலவே, '“போதையூட்டும் மதுபானங்கள்” வழக்கிலும் நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட கருத்தை முன்வைத்தார்.  


“போதையூட்டும் மதுபானங்கள்” என்ற சொல் மனிதர்கள் உட்கொள்ள கூடிய மதுபானத்தை மதுபானத்தை மட்டுமே  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தார். குடிக்கத் தகுதியற்ற அல்லது தொழில்துறை மதுபானங்களை சேர்க்கும் நோக்கம் இல்லை என்று குறிப்பிடுகிறார். அவரது பார்வையில், பாராளுமன்றம் 'நொதித்தல் தொழில்' (‘fermentation industries’) துறையைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், மனித நுகர்வுக்கு மதுவை விலக்குகிறது. இதன் காரணமாக, தொழிற்சாலைகளில் மதுவை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மாநிலங்கள் இழந்துவிட்டன. நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்துறை மது முக்கியமானது என்பதை நீதிபதி நாகரத்னா எடுத்துரைத்தார். இது இரசாயனத் தொழிலில் முக்கிய மூலப்பொருளாகவும், பெட்ரோலுடன் கலந்த திரவ எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட தொழிலாக, உட்கொள்ளக்கூடிய மதுபானத்தை தவிர்த்து, "நொதித்தல் தொழில்களை" ஒன்றிய அரசு வகைப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை நவீன முறையில் விளக்க முயற்சிக்கும்போது, அதன் அடிப்படை விதிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி நாகரத்னா எச்சரித்தார்.




Original article:

Share: