வரதட்சணை தடுப்புச் சட்டம் (Dowry Prohibition Act) 1961 குறித்து…

 முக்கிய அம்சங்கள்


1. வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், 'வரதட்சணை தடுப்புச் சட்டம்' (Dowry Prohibition Act) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498A ஆகியவை திருமணமான பெண்களை வரதட்சணை கோரிக்கைகள் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால், நம் நாட்டில் இந்த சட்டங்கள் தேவையற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும், கணவன் மனைவிக்கு இடையே வேறு எந்த வகையான தகராறு எழும்போதும் கணவரின் குடும்பத்தை ஒடுக்குவதற்கும் ஆயுதமாக மாறுகின்றன. 


2. இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி திருமணமான ஆண்களை தவறாகப் பயன்படுத்துவதால், பெண்களுக்கு எதிரான உண்மைச் சம்பவங்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


3. தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷின் தற்கொலை குறித்து குறிப்பிடுகையில், இது வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் மற்றும் ஆண்களின் மன ஆரோக்கியம் குறித்து நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 


உங்களுக்குத் தெரியுமா? 


1. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 498A 1983-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது திருமணமான பெண்களை அவர்களின் கணவர் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துவதில் இருந்து பாதுகாக்கும். இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். "கொடுமை" என்ற சொல் பரந்த அளவில் வரையறுக்கப்படுகிறது. இது பெண்ணின் உடல் அல்லது ஆரோக்கியத்திற்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தீங்கு விளைவிக்கும். சொத்து அல்லது மதிப்புமிக்க பொருட்களுக்கான சட்டவிரோத கோரிக்கைகளை சந்திக்கும்படி அவரை அல்லது அவரது குடும்பத்தினரை கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட துன்புறுத்தல் செயல்களும் இதில் அடங்கும். வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல்கள் இந்த பிரிவின் கீழ் அடங்கும். ஒரு பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்குவதும் கொடுமையாகக் கருதப்படுகிறது.


2. சட்ட ஆணையத்தின் 243-வது அறிக்கையில் குறிப்பாக பிரிவு 498-A பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குற்றத்தை ஜாமீனில் வெளிவர முடியாத நிலையிலேயே இருக்க வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைக்கிறது. எவ்வாறாயினும், குற்றத்தை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற தனது முந்தைய பரிந்துரையையும் அறிக்கையில் மீண்டும் கூறியுள்ளது. 237-வது அறிக்கை உட்பட முந்தைய அறிக்கைகளில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது.




Original article:

Share:

பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார் : அம்பேத்கர், கே.எம்.முன்ஷி கூறியவை என்ன? - ரிஷிகா சிங்

 1948-ம் ஆண்டில், அம்பேத்கரும், கே.எம்.முஷியும் இந்தியா ஒரு பொது சிவில் சட்டம் (UCC) கொண்டிருப்பதை சுற்றியுள்ள சில விமர்சனங்களை சவால் செய்தனர். எவ்வாறாயினும், தனிப்பட்ட சட்டங்கள்மீது அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்துவது "வெவ்வேறு சமூகங்களின் உணர்வுகளுக்கு சமரசம் செய்ய வேண்டும்" என்றும் அம்பேத்கர் கூறினார். 


டிசம்பர் 14, சனிக்கிழமையன்று நாடு தழுவிய பொது சிவில் சட்டத்திற்கான (UCC) தனது அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார். மூத்த தலைவர்களான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் மற்றும் கே.எம். முன்ஷி ஆகியோரின் கருத்துகளை அவர் குறிப்பிட்டார்.


மக்களவையில் "இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்" என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் போது, "அரசியலமைப்பு சபை பொது சிவில் சட்டம் (UCC) குறித்து நீண்ட மற்றும் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டது. வருங்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு நல்லது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பெரிதும் வாதிட்டார். 


மேலும் "தேசிய ஒற்றுமை மற்றும் நவீனமயமாக்கலுக்கு UCC இன்றியமையாதது என காங்கிரஸ் தலைவர் கே.எம்.முன்ஷி விவரித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கருத்துகளை மனதில் கொண்டு, "மதச்சார்பற்ற பொதுச் சட்டத்தை" உருவாக்குவதற்கு அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.


பொது சிவில் சட்டம் (UCC) என்பது வாரிசு மற்றும் திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்களை நிர்வகிக்கும் பொதுவான சட்டங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. தற்போது, ​​இந்தியாவில் உள்ள பல்வேறு மத சமூகங்கள் தனித்தனி தனிநபர் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்தே பொது சிவில் சட்டம் (UCC) பற்றிய கருத்து  விவாதிக்கப்பட்டு வருகிறது. இரு தலைவர்களும் என்ன சொன்னார்கள் மற்றும் விவாதம் எப்படி முடிந்தது என்பதை இங்கே குறிப்பிட்டுள்ளது.


பொது சிவில் சட்டத்தில் (UCC) கே.எம்.முன்ஷி கூறியது என்ன? 


நவம்பர் 23, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதம், பொது சிவில் சட்டம் (UCC) தொடர்பான வரைவுக் கட்டுரையில் கவனம் செலுத்தியது. இது "அரசு நெறிமுறை வழிகாட்டும் கோட்பாடுகளில்" (Directive Principles of State Policy) சேர்க்கப்பட வேண்டும். கொள்கை வகுப்பதில் மாநிலம் கருத்தில் கொள்ள வேண்டிய பரந்த கருத்துகளை இப்பிரிவு கோடிட்டுக் காட்டியது. ஆனால், சட்டப்பூர்வமாக அவற்றைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.


வரைவு பிரிவு 35 ஆனது, "இந்திய எல்லை முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டம் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்" என்று கூறி வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 


இந்த விவாதத்தின் போது, முன்ஷி பொது சிவில் சட்டம் (UCC) வைத்திருப்பதை ஆதரித்தார் மற்றும் அது சிறுபான்மையினருக்கு "கொடுங்கோன்மை" என்று அதன் விமர்சனத்தை எதிர்த்தார். "இது கொடுங்கோன்மையா? முன்னேறிய முஸ்லிம் நாடுகளில் எங்கும் ஒவ்வொரு சிறுபான்மையினரின் தனிப்பட்ட சட்டமும் ஒரு சிவில் சட்டம் இயற்றப்படுவதைத் தடுக்கும் அளவுக்கு புனிதமானது என்று அங்கீகரிக்கப்படவில்லை." 


அவர் இந்துக்களிடம் பேசுகையில், “பல இந்துக்கள் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதை நான் அறிவேன். முன்பு பேசிய மாண்புமிகு முஸ்லீம் உறுப்பினர்களின் அதே கருத்தை அவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். பரம்பரை, வாரிசுரிமை போன்றவற்றில் தனிப்பட்ட சட்டங்கள் தங்கள் மதத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், அது உண்மையாக இருந்தால், பெண்களுக்கு சமத்துவம் வழங்குவது சாத்தியமில்லை. ஆனால், ஏற்கனவே சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்க அடிப்படை உரிமைகளை நிறைவேற்றியுள்ளது. இது, பாலின அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. இந்து சட்டத்தைப் பொறுத்த வகையில், பெண்களை பல வழிகளில் பாகுபடுத்துகிறது. இது இந்து மதம் அல்லது நடைமுறையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டால், எந்தச் சட்டமும் இந்து பெண்களின் நிலையை ஆண்களுக்கு நிகராக மேம்படுத்த முடியாது. எனவே, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் இருக்கக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.


முன்ஷி பொது சிவில் சட்டத்தை தேசிய ஒற்றுமையுடன் இணைத்தார். "நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. அது, எனது முஸ்லிம் நண்பர்கள் இதை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாழ்க்கை குறித்த தனிமைப்படுத்தும் கண்ணோட்டத்தை நாம் எவ்வளவு விரைவில் மறக்கிறோமோ, அது நாட்டிற்கு நல்லது. மதம் சம்பந்தப்பட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் வாழ்க்கை முறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இதனால் நாம் ஒரு வலுவான மற்றும் ஐக்கிய தேசத்தை விரைவாக உருவாக்க முடியும். இது சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சி என்று நமது நண்பர்கள் நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இது உண்மையில் பெரும்பான்மையினருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 


பொது சிவில் சட்டம் பற்றி அம்பேத்கர் என்ன சொன்னார்? 


இந்த விவாதத்தின் போது அம்பேத்கர் இந்தியா பொது சிவில் சட்டத்தைக் கொண்டிருப்பதன் நன்மை தீமைகளைப் பற்றி விவாதிக்கப் போவதில்லை என்றும், ஆனால், அரசியலமைப்புப் பிரிவு 35-ஐ ஆதரிப்பதாகவும் கூறினார். 


"எனது நண்பர் திரு ஹுசைன் இமாம், திருத்தங்களை ஆதரிக்க எழுந்தபோது, இவ்வளவு பரந்த ஒரு நாட்டிற்கு ஒரு பொதுச் சட்டத் தொகுப்பைக் கொண்டிருப்பது சாத்தியமா மற்றும் விரும்பத்தக்கதா என்று கேட்டார். இந்தக் கூற்றைக் கேட்டு நான் மிகவும் வியப்படைந்தேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில், மனித உறவுகளின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய ஒரே சீரான பொதுச் சட்டத் தொகுப்பு இந்த நாட்டில் இருக்கிறது. தண்டனைச் சட்டம் (Penal Code) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக் (Criminal Procedure Code) தொகுப்பில் உள்ளடக்கப்பட்ட நாடு முழுவதும் சீரான மற்றும் முழுமையான குற்றவியல் சட்டம் நம்மிடம் உள்ளது, "என்று அவர் கூறினார். 


"முஸ்லிம் தனிநபர் சட்டம் (Muslim personal law) இந்தியா முழுவதும் மாறாதது மற்றும் ஒரே மாதிரியானது என்று சில உறுப்பினர்கள் கூறுகிறார்கள். அந்த அறிக்கையை சவால் செய்ய விரும்புகிறேன். 1935-ம் ஆண்டு வரை, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province) ஷரியத் சட்டத்திற்கு (Shariat Law) உட்பட்டது அல்ல. மாறாக, அது குறிப்பிட்ட விஷயங்களில் இந்து சட்டத்தைப் பின்பற்றியது. இதில், வாரிசு மற்றும் பிற போன்றவை ஆகும்." ஐக்கிய மாகாணங்கள், மத்திய மாகாணங்கள் மற்றும் பம்பாய் போன்ற பிற பிராந்தியங்களையும் அவர் குறிப்பிட்டார். அங்கு இந்து சட்டம் வெவ்வேறு நேரங்களில் சில விஷயங்களில் பயன்படுத்தப்பட்டது.


பின்னர், டிசம்பர் 2-ம் தேதி, மத விஷயங்களில் சட்டங்களை இயற்றும் மாநிலத்தின் அதிகாரம் குறித்த விவாதத்தின் போது அவர் இந்த விவகாரத்தைப் பற்றி மீண்டும் பேசினார். அதில் கூறியதாவது, “வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மதம் ஏன் இவ்வளவு பரந்த செல்வாக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் புரியவில்லை. இந்தப் பகுதிகளில் பேசுவதை சட்டமன்றத்தில் நிறுத்தக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு ஏன் சுதந்திரம்? ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் மற்றும் பிற பிரச்சனைகள் நிறைந்த நமது சமூக அமைப்பை சீர்திருத்த நமக்கு சுதந்திரம் உள்ளது. எனவே, தனிப்பட்ட சட்டம் அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று யாரும் நம்ப முடியாது.


அவர் மேலும் கூறுகையில், "இந்த விஷயத்தில் அரசு கூறுவது அனைத்தும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, அரசுக்கு அதிகாரம் இருந்தால், முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த சமூகத்தினராலும் கருத்திற்குப்பட்டதாகக் கருதப்படும் வகையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்த அல்லது மேற்கொள்ள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்ற உண்மையைக் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை." ஏனென்றால், அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்துவது "வெவ்வேறு சமூகங்களின் உணர்வுகளுடன் சமரசம் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார். 




விவாதத்தின் முடிவில் என்ன நடந்தது? 


அரசியலமைப்புப் பிரிவு-35 ஆனது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. பின்னர், இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு-44 என மறுபெயரிடப்பட்டது. 




Original article:

Share:

செயல்படாத சொத்து (Non-Performing Asset (NPA)) என்றால் என்ன? - ரோஷினி யாதவ்

 1. மார்ச் 31, 2019 நிலவரப்படி, இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (scheduled commercial banks (SCBs)) 9.33 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த செயல்படாத சொத்துகளைக்  (NPA) கொண்டுள்ளன. இது, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வங்கி வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக அதிகமான மோசமான கடன் தொகை இதுவாகும்.


2. முதல் 100 வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களும் அடங்கும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் பிரபல தொழிலதிபர்களால் நடத்தப்படுகின்றன. மார்ச் 31, 2019 நிலவரப்படி, இந்த கடன் செலுத்தாதவர்களின் மொத்த கடன் ரூ.8.44 லட்சம் கோடி ஆகும். இந்தக் கடனில் ஏறக்குறைய பாதி மோசமான கடன்கள் அல்லது NPA களாக அறிவிக்கப்பட்டது.


3. சிறந்த கடனாளிகளின் பட்டியலை கவனித்தால், உற்பத்தி, எரிசக்தி மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த வெறும் 15 நிறுவனங்கள் மட்டுமே முதல் 100 நிறுவனங்களின் மொத்தக் கடனில் 50% (ரூ. 4.58 லட்சம் கோடி)க்கு மேல் உள்ளன.


4. முதல் 100 செயல்படாத சொத்துகள் (NPA) அல்லது வங்கித் திருப்பிச் செலுத்தாதவர்களில் நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் உற்பத்தி, ஆற்றல், கட்டுமானம், ரியல் எஸ்டேட், தகவல் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி அல்லது நிதி இடைநிலை போன்ற பல்வேறு துறைகளில் இருந்து வருகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


1. வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து முன்பணங்களும் "சொத்துக்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை வட்டி அல்லது தவணைகள் மூலம் வங்கிக்கு வருமானத்தை உருவாக்குகின்றன. இருப்பினும், ஒரு கடன் நிலுவைத் தேதிக்குப் பிறகும் வட்டி அல்லது தவணை செலுத்தப்படாவிட்டால் மோசமானதாக மாறும். மேலும், 90 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாவிட்டால் செயல்படாத சொத்து அல்லது NPA ஆக மாறும். 


2. கடன்களை பசுமையாக்கும் செயல்முறை பொதுவாக ஒரு வங்கிக்கான தற்காலிக தீர்வாகும். ஒரு கணக்கு NPA ஆக மாறும் போது, ​​வங்கிகள் அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க வேண்டும். இது, அவர்களின் லாபத்தை பாதிக்கிறது. கடனை NPAஆக வகைப்படுத்துவதைத் தவிர்க்க, வங்கிகள் பசுமையான முறையைப் பயன்படுத்துகின்றன.




Original article:

Share:

இனி அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பற்றி…

 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் மீறல்களுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


வழிபாட்டுத் தலங்களின் மீறல்கள் தொடர்பாக நாடு முழுவதும் புதிய வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்தும் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, இது போன்ற தீவிரமாக கொண்ட வழக்குகளை நோக்கிய நீதித்துறையின் அனுமதிக்கும் அணுகுமுறையில் இருந்து சமீபகாலமாக விலகியிருப்பது வரவேற்கத்தக்கது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிமன்ற அமர்வு (Division Bench), வழக்குகள் மற்றும் இடைக்கால உத்தரவுகளின் தீவிரத்தை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டது. 


வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (Places of Worship (Special Provisions) Act), 1991-க்கு சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய தலங்கள் மற்றும் கட்டமைப்புகளின் 'கணக்கெடுப்பு'களை அனுமதிக்கும் உத்தரவுகளும் இதில் அடங்கும். இந்த விவகாரம் உள்நாட்டு தகராறுகள் மட்டுமல்ல, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் எதிர்காலம் பற்றியது என்பதை இந்த உத்தரவு தெளிவாகப் புரிந்துகொள்கிறது. சுதந்திர தினத்தில் இருந்தபடியே அனைத்து வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையை முடக்கும் சட்டம், இதுபோன்ற சர்ச்சைகளால் மதப் பிளவுகளை தீவிரப்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தை ஒரு தற்காப்பாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது சிந்தனைமிக்க குடிமக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. சட்டத்தின் தடையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வழக்குகளை முன்கூட்டியே தடுக்க நீதிமன்றங்கள் தவறியது துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. மாறாக, அவர்கள் கணக்கெடுப்பு விண்ணப்பங்களை அனுமதித்துள்ளனர். மேலும், சட்டம் மற்றும் கடந்த நீதிமன்றத் தீர்ப்புகளை ஆதரித்து அல்லது இந்த வழக்குகளுக்கு தடை பொருந்தாது என்று தீர்ப்பளித்தது.


ஆக்கிரமிப்பாளர்களால் இழந்த மத தளங்களை மீட்க பல குழுக்களும், உரிமை கோரும் பக்தர்களும் சிவில் நீதிமன்றங்களை அணுகி வருகின்றனர். மசூதிகள் அழிக்கப்பட்ட கோயில்களின் இடிபாடுகளில் கட்டப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய கேள்விக்குரிய உத்தரவுகளைப் பெறுகிறார்கள். ராம ஜென்மபூமி இயக்கத்தின் வெற்றி பெரும்பாலும் அரசியல் ஆதரவினாலும் நீதிமன்றத் தீர்ப்பினாலும் கிடைத்தது. 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து வழக்குரைஞர்களிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது. இடிப்பில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மேல்முறையீடு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர். 


இது ஒரு மத உணர்வைத் தூண்டியது மற்றும் பிற மசூதிகளின் நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு வழிவகுத்தது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதிகள் அமைந்துள்ள வாரணாசி, மதுரா மற்றும் சம்பல் போன்ற இடங்களில் இப்போது உரிமைகோரல்கள் எழுந்துள்ளன. இந்த நீதித்துறை அணுகுமுறையின் ஒரு கவலைக்குரிய அம்சம், கோவில் இயக்கத்தின் அரசியல் தன்மை பற்றிய புரிதல் இல்லாதது. இத்தகைய தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறான நோக்கத்துடன் கூடிய வழக்குகளை நீதிபதிகள் விசாரிப்பது கவலைக்குரியது. மத ரீதியில் இந்த அரசியல் இயக்கங்களின் குற்றவியல் தாக்கத்தை மறந்துவிடக் கூடாது.




Original article:

Share:

கனிமவள இராஜதந்திரத்தில் இந்தியாவின் உறுதியான முயற்சிகள் -அபிஷேக் சர்மா

 இந்த கனிமவள நடவடிக்கைகள் இந்தியாவின் இராஜதந்திர ரீதியில் பாதிப்பைக் குறைப்பதாகும். இருப்பினும், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. 


இந்தியா தனது உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப திறனை விரிவுபடுத்த முயலும்போது, இந்த இலக்கை நிறைவேற்ற முக்கியமான கனிமங்கள் இன்றியமையாதவையாக மாறும். இருப்பினும், ஒரு முக்கியமான கனிம இறக்குமதியாளரான இந்தியா, அதன் கனிமவள பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளை, குறிப்பாக சீனாவை இன்னும் சார்ந்துள்ளது. இது இராஜதந்திர ரீதியில் இந்தியாவின் பாதிப்பில் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சிந்தனையாளர் கூட்டத்தில் (defence think tank meeting) நாட்டின் கவலைகளை எடுத்துரைத்தார். "பொருளாதார காரணங்களுக்காக நாட்டின் வளங்களுக்கான போட்டி நீண்ட காலமாக இருந்து வந்தாலும், இராஜதந்திர ரீதியில் நாட்டின் நோக்கங்களுக்காக அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் புதியது" என்று அவர் கூறினார். இது சீனாவின் செயல்களை குறிப்பதாக இருந்தது. இந்தியாவின் கனிமவளப் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள, அதன் இராஜதந்திர ரீதியில் நாட்டின் பாதிப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவானது கனிமவள இராஜதந்திரத்தில் ஈடுபடுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. 


கூட்டு முயற்சிகளை நிறுவுதல் 


இந்த முயற்சி பின்வரும் முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது : கனிமவள உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சர்வதேச உறவுகளை வளர்த்தல் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான நிறுவனங்களுடன் இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மைகளை நிறுவுவதில் கவனம் செலுத்துகிறது. இதில், முதல் அம்சமாக லித்தியம் மற்றும் கோபால்ட் விநியோகத்தைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் போன்ற வளம் நிறைந்த நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நிலையை எளிதாக்க, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Ltd. (KABIL)) ஐ நிறுவியது. இது "இந்திய உள்நாட்டு சந்தைக்கு முக்கியமான மற்றும் நாட்டின் இராஜதந்திர ரீதியில் தாதுக்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக" ஒரு ஆணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். கனிமவள பாதுகாப்பை அடைய, KABIL நிறுவனமானது பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் செயல்படுகிறது. இவை அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு  (government-to-government), அரசாங்கத்திலிருந்து வணிகத்திற்கு (government-to-business) மற்றும் வணிக-வர்த்தகம் (business-to-business) ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.


மார்ச் 2022-ம் ஆண்டில், KABIL நிறுவனம் ஆஸ்திரேலியாவுடன் ஒரு முக்கியமான கனிமவள முதலீட்டுக்கான கூட்டாண்மை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, இரண்டு லித்தியம் மற்றும் மூன்று கோபால்ட் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. மேலும், அர்ஜென்டினா, சிலி மற்றும் பொலிவியாவை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்காவின் லித்தியம் முக்கோணமும் (Lithium Triangle) இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனவரி 2024-ம் ஆண்டில், அர்ஜென்டினா அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் 24 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ஐந்து லித்தியம் உப்புத் தொகுதிகளில் (lithium brine blocks) லித்தியத்தை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது. பொலிவியா மற்றும் சிலியில் இருந்து வளங்களைப் பெறுவதற்கு உதவுவதன் மூலம் கனிம விநியோகங்களைப் பாதுகாக்க KABIL நிறுவனமானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசு மட்டுமின்றி, இந்தியாவின் தனியார் துறையும் பயனடைந்துள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள் விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க பொலிவியாவின் தேசிய நிறுவனமான YLB நிறுவனத்துடன் ஆல்ட்மின் பிரைவேட் லிமிடெட் (Altmin Private Limited) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 


மத்திய ஆசியாவும் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில், இந்தியாவும் கஜகஸ்தானும் இந்தியாவில் டைட்டானியம் கசடு தயாரிக்க IREUK Titanium Limited என்ற கூட்டு முயற்சியை உருவாக்கின. மத்திய ஆசிய குடியரசுகளுடனான இந்தியாவின் முதல் கூட்டு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நாட்டின் வளமான வளங்களை மேம்படுத்துவதற்காக இந்தியா-மத்திய ஆசியா அரிய பூமி மன்றத்தை (India-Central Asia Rare Earths Forum) நிறுவுவதற்கான இந்தியாவின் முன்மொழிவுடன் இந்த முயற்சி இணைக்கப்பட்டுள்ளது. 


கூட்டுறவு ஈடுபாடுகள் 


நாட்டின் கனிமவள இராஜதந்திரத்தின் இரண்டாவது அம்சம் சர்வதேச ஈடுபாடு ஆகும். இது குவாட் (ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா), இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF)), கனிம பாதுகாப்பு கூட்டாண்மை (Mineral Security Partnership (MSP)) மற்றும் முக்கியமான கனிமவள விநியோக சங்கிலியில் ஒத்துழைப்புக்காக G-7 போன்ற கனிம பாதுகாப்பு தொடர்பான சிறிய மற்றும் பலதரப்பு முன்முயற்சிகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்கி வலுப்படுத்துகிறது. இந்த கூட்டுறவுக்கான ஈடுபாடுகள் இந்தியாவை அதன் மூன்று பிரிவுகளான மேல்நிலை (upstream), நடுநிலை (midstream) மற்றும் கீழ்நிலை (downstream) ஆகியவற்றில் முக்கியமான கனிமத் துறையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


கூடுதலாக, அவை அறிவுக்கான பகிர்வு மற்றும் திறன் வளர்ப்பையும் எளிதாக்குகின்றன. இது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைக்க முக்கியமானது. 


மேற்கத்திய கூட்டணி நாடுகளுடனான இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க, இந்தியாவின் சுரங்க அமைச்சகம் சர்வதேச எரிசக்தி நிறுவனத்துடன் முக்கியமான கனிமங்கள் மீதான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், "முக்கியமான கனிமத் துறையில் அதன் கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் முதலீட்டு உத்திகளை நெறிப்படுத்தவும், அவற்றை உலகளாவிய தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் சீரமைக்கவும்" உதவுகிறது. 


காணாமல் போன பொருட்கள் (missing pieces) 


கனிமவள இராஜதந்திரத்திற்கான இந்தியாவின் முயற்சி பல சாதகமான விளைவுகளுக்கு வழிவகுத்தது. ஆனால், அதன் சர்வதேச இராஜதந்திர ஈடுபாட்டிற்கு தேவையான மூன்று அத்தியாவசிய கூறுகள் இன்னும் இல்லை. அவை, தனியார் துறை பங்களிப்பு இல்லாமை, பலவீனமான இராஜதந்திர திறன் மற்றும் போதுமான நிலையான கூட்டாண்மை போன்றவை ஆகும். மேலும், இந்தியாவின் தனியார் துறை பெரும்பாலும் சமன்பாட்டில் இருந்து விடுபட்டுள்ளது.


ஒரு முக்கியமான கனிம விநியோக சங்கிலிக்கான நாட்டின் இராஜதந்திரம் இல்லாதது மற்றும் தனியார் துறைக்கான தெளிவான சாலை வரைபடம் ஆகியவை கொள்கை தெளிவின்மைக்கு பொறுப்பான இரண்டு முதன்மை மாறிகள் இல்லாததற்கு அவை வழிவகுக்கிறது. இவற்றை நிவர்த்தி செய்ய, விநியோகச் சங்கிலியில் தனியார் துறையின் பங்கைக் கருத்தில் கொண்டு, ஆபத்தைக் குறைப்பதற்கான விரிவான அணுகுமுறையை இந்தியா வகுக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளின் அடிப்படையில் விநியோகச் சங்கிலிக்கான உத்தியை மேற்கொள்வது ஒரு முக்கியமான படியாக இருக்கும். 

 

இரண்டாவதாக, இந்தியா தனது கனிமவள இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டும். புதிய மற்றும் வளர்ந்து வரும் உத்தியின் தொழில்நுட்பங்கள் (New and Emerging Strategic Technologies (NEST)) பிரிவைப் போன்ற, வெளிவிவகார அமைச்சின் கீழ் ஒரு பிரத்யேக கனிமவள இராஜதந்திர பிரிவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜதந்திர தூதரகங்களில் கனிமவள இராஜதந்திரத்திற்கான ஒரு சிறப்பு பதவியை கொண்டிருப்பது முதல் படியாக இருக்கும். 


மூன்றாவதாக, கனிமவள பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் இலக்கு, இருதரப்பு கூட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இந்தியாவின் உத்தி, நிலையான மற்றும் நம்பகமான கூட்டாண்மைகளை உருவாக்குவதை அவசியமாக்குகிறது. அதன் அனைத்து கூட்டணி நாடுகளிடையே, ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா மற்றும் பிற குவாட் உறுப்பினர்களுடன் பணிபுரிவது இந்தியாவின் உள்நாட்டு திறன்கள், நாடுகளின் இராஜதந்திர வலையமைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவு காரணமாக இந்தியாவின் கனிமவள பாதுகாப்புக்கு முக்கியமானது. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், கனிமவள இராஜதந்திரத்திற்கான இந்தியாவின் முயற்சிகள் வலிமையைப் பெறும். மேலும், தற்போது மெதுவான வேகத்தில் நகர்ந்து வரும் இந்தியாவின் உள்நாட்டு முக்கியமான கனிம முயற்சிகளை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும். 


அபிஷேக் சர்மா, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உத்திக்கான ஆய்வுகள் திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளராக உள்ளார்.




Original article:

Share:

“ஒரு வேட்பாளர், பல தொகுதிகள்” நடைமுறை குறித்து… - சந்தோஷ் குமார் தாஷ், சந்தோஷ் குமார் பாண்டா

 ஒரு நபர், ஒரு ஓட்டு" (‘one person, one vote’) என்பது வாக்காளர்களுக்கான முக்கிய கொள்கை என்றால், "ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" (‘one candidate, one constituency’) என்பது அரசியல்வாதிகளுக்கு விதியாக இருக்க வேண்டும்.


முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான “ஒரே நாடு ஒரே தேர்தல்” (‘One Nation One Election’) குழு, மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போதிருந்து, இந்த யோசனையின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள், நடைமுறை சவால்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியல் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அனைத்து அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு முக்கியமான பிரச்சினை கவனிக்கப்படாமல் உள்ளது. ஒரே வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting from multiple constituencies (OCMC)), ஒரே பதவிக்கு போட்டியிடுவதுதான் பிரச்சனையாக உள்ளது.


பின்னணி, சவால்கள் 


இந்திய அரசியலமைப்பு சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தின் கீழ்சபைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த அனுமதிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) நிறுவுவதைத் தவிர்த்து, இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான விதிகளை அமைக்கும் அதிகாரத்தையும் இது நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of the People Act 1951) "பல தொகுதிகளில் போட்டியிடுவது" என்ற பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில், ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதற்கு வரம்பு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70வது பிரிவின்படி, பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், சில சமயங்களில் இரண்டிற்கு மேல், அனைத்திலும் வெற்றி பெற்று, ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்திலும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் உருவானது. இதனால் அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 


1996ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மாற்றியது. பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், நடைமுறை தொடர்ந்தது. குறிப்பாக, அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நவம்பர் 2024-ல், மாநில சட்டசபைகளுக்கு 44 இடைத்தேர்தல்கள் நடந்தன. தற்போதைய, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்களால் அடிக்கடி இடைத்தேர்தல்கள் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. முதலாவதாக, அவர்கள் வரி செலுத்துவோரின் செலவுகளை அதிகரிக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான நிர்வாகச் செலவை ஒன்றிய அரசு ஏற்கிறது. அதே, நேரத்தில் மாநில அரசுகள் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்குப் பணம் செலுத்துகின்றன. 2014 பொதுத் தேர்தலில், ₹3,870 கோடி செலவானது. 6% ஆண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப, 2024 பொதுத் தேர்தலுக்கு ₹6,931 கோடி அல்லது ஒரு இடத்துக்கு ₹12.76 கோடி செலவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளில் 10 அரசியல்வாதிகள் வெற்றி பெற்றால், இடைத்தேர்தலுக்கான கூடுதல் செலவு ₹130 கோடியாகும். இது ஒட்டுமொத்த தேர்தல் செலவீனத்துடன் ஒப்பிடும் போது சிறியதாக இருந்தாலும், உண்மையான பிரச்சினை அரசியல் கட்சிகளின் பெரிய செலவினமாகும். சமீபத்திய, பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ₹1,35,000 கோடி அல்லது ஒரு தொகுதிக்கு ₹250 கோடி செலவிட்டதாக ஊடக ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. இந்தச் சுமை இறுதியில் பொதுமக்கள் மீதுதான் விழுகிறது. கறுப்புப் பணத்தில் இருந்து அதிக நிதி கிடைக்கிறது. இது நிதி வெளிப்படைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.


இரண்டாவதாக, வெற்றிபெறும் வேட்பாளர் முதல் ஆறு மாதங்களுக்குள் ராஜினாமா செய்யும்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலை ஆளும் கட்சிக்கு சாதகமாக மாறுகிறது. இது பல மாநிலங்களில் இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அதிக வளங்களைக் கொண்டுள்ளது மற்றும் அந்த கட்சி தனது தொண்டர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க முடியும். இத்தகைய சூழல் ஆளும் கட்சிக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 


மூன்றாவதாக, ஒரு இடைத்தேர்தலை ஏற்பாடு செய்வதற்கான நிதிச் சுமை ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் மற்றும் அவரது கட்சியின் மீது விழுகிறது. இது அவர்களை மீண்டும் செலவிட கட்டாயப்படுத்துகிறது. 


நான்காவதாக, "ஜனநாயகம் என்பது மக்களுக்காகவும் மக்களால் நடத்தப்படும் ஆட்சி" என்ற பழமொழி, தேர்தல்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. எவ்வாறாயினும், ஒரு வேட்பாளர் பல இடங்களில் போட்டியிடும் போது, ​​அவர்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். இது பெரும்பாலும் மக்களின் நலன்களைவிட தலைவரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு மேலாக அரசியலை வைக்கிறது.


ஐந்தாவது,  ஒரே வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting from multiple constituencies (OCMC)), சில நேரங்களில் தலைவர்களால் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற அவர்களின் பிரபலத்தை நம்பியிருக்கிறது. இது கட்சியின் மீது தலைவரின் கட்டுப்பாட்டை காட்டுகிறது. குறிப்பாக, குடும்பம் அல்லது தலைவர் இயக்கும் கட்சிகளில். இது குடிமக்களின் பேச்சு சுதந்திர உரிமைக்கு எதிரானது. 2023-ல் ஒரு மனு (அஷ்வினி குமார் உபாத்யாய் vs யூனியன் ஆஃப் இந்தியா) வாதிடப்பட்டது. மக்கள் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​அந்த நபர் தங்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதும், இடைத்தேர்தலுக்கு ஒன்றை விட்டுக் கொடுப்பதும் அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவை மீறுவதாகும். இந்த நடைமுறை வாக்காளர்களைக் குழப்பி ஏமாற்றமடையச் செய்கிறது. உதாரணமாக, 2024-ல் கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி ராஜினாமா செய்தபோது, ​​பொதுத் தேர்தலில் 72.92% ஆக இருந்த வாக்குப்பதிவு இடைத்தேர்தலில் 64.24% ஆகக் குறைந்தது.


சில நன்மைகள் 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் (OCMC) போட்டியிடும் நடைமுறை பல நாடுகளில் பொதுவானது மற்றும் சில நடைமுறை காரணங்களும் உள்ளன. முதலாவதாக, சில பகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியில்லாமல் வேட்பாளர்களுக்கு காப்புப்பிரதியை அளிக்கிறது. இரண்டாவதாக, இந்தியா போன்ற நாடுகளில், அரசியல் பெரும்பாலும் தலைவர் அல்லது குடும்பத்தைச் சுற்றியே சுழலும், அது தலைவர் அதிகாரத்தில் இருக்க அல்லது சுமுகமாக மாற உதவுகிறது. உதாரணமாக, 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தனது நந்திகிராம் தொகுதியை ராஜினாமாவேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், மற்றொரு தலைவர் பபானிபூரில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதேபோல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் 2022 தேர்தலில் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார்.


சர்வதேச அனுபவம் 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting multiple constituencies (OCMC)) போட்டியிடும் நடைமுறை இந்தியாவுக்கு தனித்துவமானது அல்ல. பாகிஸ்தானும் வங்களதேசமும் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கின்றன. ஆனால், அவர்கள் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ராஜினாமா வேண்டும். ஒரு வேட்பாளர் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தான் எந்த வரம்பையும் வைக்கவில்லை. 2018 தேர்தலில் முன்னாள் பிரதமர் ஐந்து இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களை ராஜினாமா செய்தார். இதேபோல் பங்களாதேஷ், வேட்பாளர்கள் 2008 வரை ஐந்து தொகுதிகள் வரை போட்டியிட அனுமதித்தது, ஆனால் இப்போது அதை மூன்று ஆக மட்டுப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை ஒரு காலத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK) பொதுவானதாக இருந்தது, ஆனால் 1983 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய ஜனநாயக நாடுகள் தெளிவான பிரதிநிதித்துவம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக அதை படிப்படியாக அகற்றியுள்ளன. 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் போட்டிடுவது நன்மைகளைவிட அதிக தீங்கு விளைவிக்கும். சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகள் உள்ளன. சாத்தியமான தீர்வுகள் பரிசீலிக்கப்படலாம். முதலாவதாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 33 (7)ஐ திருத்தி ஒரே பதவிக்கு பல தொகுதிகளில் இருந்து ஒரு வேட்பாளர் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும். 2004ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை தடை செய்ய அரசாங்கத்துக்கு பரிந்துரைத்தது. 2015 ஆம் ஆண்டில் 255வது சட்ட ஆணைய அறிக்கையும் இதே பரிந்துரையை அளித்தது. 


இரண்டாவதாக, இடைத்தேர்தலுக்கான முழு செலவையும், ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இது பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தடுக்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2004-ல் இதைப் பரிந்துரைத்தது. இருப்பினும், வெற்றி பெறும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் செலவை ஏற்க முடியும் என்பதால் இந்த நடைமுறை தொடரலாம்.


மூன்றாவதாக, ஓராண்டுக்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது வாக்காளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு அதிக அவகாசத்தை அளிக்கிறது மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர் மீண்டும் மற்றொரு போட்டிக்கு தயாராக அனுமதிக்கிறது. இது செயல்முறையை மிகவும் நியாயமானதாக மாற்றும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 151A ஐ மாற்றுவதன் மூலம் இதைச் செய்யலாம். தற்போதுள்ள சட்டத்தின்படி காலியாக உள்ள தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும்.


தேர்தலை நடத்துவதால் அரசுக்கு அதிக பணம் செலவாகிறது. இந்தியாவில், ஆண்டு முழுவதும் தேர்தல்கள் நடக்கின்றன. இடைத்தேர்தல் அடிக்கடி தேவைப்படுவதால் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறது. இந்த வளங்களை நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும். “ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" (‘one candidate, one constituency’ (OCOC)) பிரச்சினையை மாற்ற முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. “ஒரே நாடு ஒரே தேர்தல்” (‘One Nation One Election’) யோசனையைப் போல் பல அரசியல் கட்சிகள் “ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி”யை ஆதரிக்கவில்லை. "ஒரு நபர், ஒரு வாக்கு" என்பது முக்கிய ஜனநாயகக் கொள்கை என்றால், அரசியல்வாதிகளுக்கு "ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" என்பதை அமல்படுத்த வேண்டிய நேரம் இது.


சந்தோஷ் குமார் தாஷ், குஜராத்தின் ஆனந்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட், ஆனந்த் (Institute of Rural Management Anand (IRMA))-யில் உதவி பேராசிரியர். சந்தோஷ் குமார் பாண்டா ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி ஆய்வாளர்.




Original article:

Share:

உயர்கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் -சங்கீதா கந்தவேல், மேக்னா எம்.

 தமிழ்நாட்டு அரசின் மாதாந்திர உதவித்தொகைத் திட்டமான புதுமைப் பெண் (Pudhumai Penn) திட்டம், பல மாணவிகளுக்கு நற்பேறாக இருந்து வருகிறது. உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழந்த பெண் மாணவிகளுக்கு இந்தத் திட்டம்  பல்வேறு வழிகளில் உதவி புரிகிறது. சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. சங்கீதா கந்தவேல் மற்றும் M. மேக்னாஇத்திட்டம் இந்த மாணவர்களுக்கு எவ்வளவு பயனளித்தது என்பதை ஆராய்கின்றனர்.


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான S. பாண்டியம்மாள், சரியான நேரத்தில் உதவி பெறும் வரை உயர்கல்வி கிடைக்காது என்று நினைத்தார். 19 வயதில் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையுடன் கோவையில் வசித்து வரும் அவர், மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பகிர்ந்து கொண்டார். புதுமைப் பெண் திட்டத்தில் இருந்து ₹1,000 மாதாந்திர உதவித்தொகை கிடைத்ததால் அவரது மாமியார் அவருக்கு ஆதரவளித்தார்.


“இது போன்ற திட்டங்கள் இல்லாமல் நான் எனது பட்டப்படிப்பைத் தொடர்ந்திருக்க முடியாது. மேலும், நிதி ரீதியாக எனது கணவரைச் சார்ந்திருப்பேன்" என்று பாண்டியம்மாள் கூறினார். இந்தத் திட்டம் இப்போது அந்த பெண்ணின் கல்லூரிச் செலவுகள் அனைத்தையும் செலுத்துகிறது. இது அந்த பெண்ணின் தனிப்பட்ட தேவைகளுக்காக கூடுதல் பணத்தையும் வழங்குகிறது. தற்போது பாண்டியம்மாள்,கோவையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய  துறையில் மூன்றாம் ஆண்டு படித்து  வருகிறார்.


20 வயதான தேவதர்ஷினிக்கு பட்டயக் கணக்காளராக வேண்டும் (Chartered Accountant (CA)) என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இருப்பினும், அந்த பெண்  12ஆம் வகுப்பில் நுழைந்தபோது, அதிக தேர்வுச் செலவு காரணமாக அந்த பெண் தனது  கனவை நோக்கிய பயணம் பூர்த்தியாகாது என்பதை தெளிவாக உணர்ந்தார். அந்த பெண் தனது பெற்றோரிடம் உதவி கேட்டபோது, அவர்கள் ஒரு அடிப்படை பட்டப்படிப்புக்கு மட்டுமே நிதியளிக்க முடியும் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்தனர். அந்த பெண்ணினது தந்தை, மிதமான வருமானம் கொண்ட ஒரு ஓவியர் மற்றும் அவரது தாய் இல்லத்தரசியாக உள்ளர். இதன் காரணமாக அவர்களால் கூடுதல் நிதி உதவி வழங்க முடியவில்லை. பட்டப்படிப்பை முடித்த அந்த பெண்ணின் சகோதரன், குடும்பத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் இருந்ததால், அந்த பெண்ணினது கல்விக்கு உதவ முடியவில்லை. "நான் என் கனவை ஏறக்குறைய விட்டுவிட்டேன். 


ஆனால், நான் எனது கல்லூரி மூலம் புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றி அறிந்தேன் என்று தேவதர்ஷினி கூறினார். தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பெண் பட்டயக் கணக்காளர் தேர்வுக்கு பணம் சேமித்து வந்துள்ளார். மேலும், “என்னால் பயிற்சி பெற முடியாது, அதனால் நான் சுயமாக படிப்பேன். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தும்போது எனது குடும்பத்தை ஆதரிக்க பகுதி நேரமாகவும் வேலை செய்வேன்” என்று அந்த பெண் கூறினார்.


 புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn scheme) 


தமிழ்நாடு அரசு, புதுமைப் பெண் திட்டம் என்றழைக்கப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை (Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme) அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி பயிலும் பெண்களின் சேர்க்கையை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் இந்த திட்டத்தை அறிவித்தார். மார்ச் 18, 2022 அன்று சட்டசபையில் தனது நிதிநிலை அறிக்கை உரையின் போது இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, திட்டத்தில் இடம் பெற்றுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த பெண்கள் இளங்கலை, பட்டயம், தொழில்துறை பயிற்சி அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை நிதி உதவி வழங்கப்படும். நிதி உதவி அளிப்பதன் மூலம், இளம் வயது திருமணத்தை குறைப்பதன் மூலமும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலமும், மிக முக்கியமாக பெண் குழந்தைகளை உயர்கல்வியில் தக்க வைத்துக் கொள்வதன் மூலமும் சமூகத்தில் மாற்றம் கொண்டுவருவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.  தமிழ்நாடு அரசின், திட்டக்குழு மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வின் தரவுகளின்படி, மே 2023 நிலவரப்படி சுமார் 2,30,820 மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 


ஆய்வின்படி, 38 மாவட்டங்களில், சேலத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். சேலத்தில் 17,032 பயனாளிகள் உள்ளனர். சேலத்தைத், தொடர்ந்து நாமக்கல் 13,312 (5.77%) பயனாளிகள் உள்ளனர். தர்மபுரி 11,915 (5.16%) பயனாளிகள் உள்ளனர். சென்னை 11,468 (4.97%) பயனாளிகள் உள்ளனர். திருவண்ணாமலை 11,146 (4.83%) மற்றும் கோயம்புத்தூர் 10,777 (4.67%) பயனாளிகள் உள்ளனர்.

 

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறுகையில், இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள பெண் மாணவிகளுக்கு உதவுவதாக குறிப்பிட்டார். தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள்கூட இந்த திட்டத்தால் பயனடைந்ததாக தெரிவித்தார். மேலும், ஒற்றை பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புதுமைப் பெண் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  பள்ளிக் கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் அமைச்சர் கூறினார். “நாங்கள் பள்ளி மாணவிகளுக்காக கல்லூரிகளுக்கு களப்பயணத்தை ஏற்பாடு செய்கிறோம். இந்த வருகைகளின் போது, ​​ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய வசதிகளை மாணவிகளுக்கு காட்டுகிறோம். பள்ளிக்குப் பிறகு மாணவிகளின் விருப்பமான படிப்புகளைப் புரிந்து கொள்ள நாங்கள் அவர்களிடம் பேசுகிறோம். உயர்கல்வியை இலக்காகக் கொள்ள இது அவர்களை ஊக்குவிக்க உதவுகிறது”  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, உயர்கல்வியில் பெண் மாணவர்களின் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது.

 

பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், கல்விச் செலவுகளை நிர்வகிப்பது ஒரு போராட்டமாக இருந்தது. இருப்பினும், இப்போது என் மகளின் படிப்பு முடிந்துவிட்டதால், எனது குடும்பத்தை ஆதரிப்பதில் கவனம் செலுத்த முடியும் என்று சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் S. மணி தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் அவரது குடும்பத்தினர் பயனடைந்தனர். இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவி அனி விசாலினி, புதுமைப் பெண் திட்டத்தின் உதவி ஒரு வரம் என்றார். வீட்டுச் செலவுக்கும் இந்த பணம் உதவியது. அந்த பெண் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர முடியும் என்று நம்புகிறாள்.


நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மாணவியாக எப். சிந்துஜா மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறாள். அந்தப் பெண், ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் பணத்தை பெறுவதாகவும், அந்த பணத்தை தனது தாயிடம் வழங்குவதாகவும் தனது தாய் அதை தங்க சேமிப்புக்காக பயன்படுத்துவதாக தெரிவித்தார். சேலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி S. மலர் அந்தப் பணத்தை புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்தியதாகச் சொன்னாள்.  மதுரையில் M. திவ்ய பாரதி முதலாமாண்டு வணிக நிர்வாக இளங்கலை (BBA) மாணவி, மற்றும் K. அனுஷ்யா இரண்டாம் ஆண்டு இளங்கலை அறிவியல் மாணவி, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது அவர்களின் நிதியை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அவர்களின் செலவினங்களை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பதை கற்றுக் கொடுத்ததாக அந்த பெண்கள் கூறினர்.


வங்கிச் சேவைக்கான அணுகல் 


புதுமைப் பெண் திட்டம் மாணவிகளை மேம்படுத்த உதவியது. வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் வங்கி அமைப்பு பற்றிய அறிவைப் பெறுவதற்கும் இது பெண்களுக்கு உதவியது. பல மாணவிகள் புதிய கணக்கு துவங்கியதால் வங்கிகள் பயனடைந்துள்ளன. புதுமைப் பெண் திட்டத்தின் 74,700 பயனாளிகள் தங்களிடம் கணக்கு வைத்திருப்பதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பயனாளிகளுக்கு 50,000 ரூபாய் அட்டைகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது. சவால்கள் குறித்து வங்கியிடம் கேட்டபோது, ​​“பயனாளிகளின் கணக்கில் ஆதார் பதிவு செய்வது கடினமான பணி. ஆதார் கட்டண பால அமைப்பு (Aadhaar Payments Bridge System (APBS)) மூலம் நேரடி பணப்பரிவர்த்தனைகளுக்கு இது தடையாக உள்ளது. 


சில சூழல்களில், ஆதார் ஒரு கணக்கிற்கு விதைக்கப்பட்டாலும், பயனாளி அதே ஆதாரை மற்ற கணக்குகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். இதனால், பழைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது இலக்கு பணப் பரிமாற்றத்தின் இலக்கைத் தோற்கடித்தது. சில பயனாளிகள் சிறார்கள் என்றும், அவர்களின் கணக்குகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் பாதுகாவலர்களால் தொடங்கப்பட்டதாகவும் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த பயனாளிகள் தங்கள் கணக்குகளை மறுசீரமைக்க வங்கிகள் உதவ வேண்டும். அதனால், அவர்கள் பலன்களைப் பெற முடியும்.


காங்கயத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் நசீம் ஜான் கூறுகையில், இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டவர்களை மீண்டும் கல்லூரியில் சேரத் தூண்டியது. ஏனெனில், இது அவர்களின் நிதிச்சுமையைக் குறைத்தது. தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவாலா சுன்னன் செட்டியின் இந்துக் கல்லூரியின் முதல்வர் G. கல்விக்கரசி கூறுகையில், அதிக  மாணவிகள் தாங்கள் விரும்பும் சான்றிதழ் படிப்புகளில் சேருகின்றனர். கூடுதல் நிதி பல்வேறு விருப்பங்களை ஆராய அவர்களுக்கு உதவியது.


இருப்பினும், மாணவிகளுக்கு வழங்கப்படும் ₹1,000 போதாது என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். “1,000 ரூபாய் வழங்குவதற்கு பதிலாக முழு கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். பலருக்கு, மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து வராத பெரும்பாலான மாணவர்களுக்கு இது கைச்செலவுப்பணம் போன்றது" என்று தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷீலு பிரான்சிஸ் கூறினார். இருப்பினும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் பெண்களின் ஒட்டுமொத்த அதிகாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த திட்டம் கல்வி தடைகளை உடைத்து பாலின சமத்துவத்தை மேம்படுத்த உதவியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.


(சேலத்தைச் சேர்ந்த M. சபரி  கோயம்புத்தூரைச் சேர்ந்த T.C. சிபி ஸ்ரீவத்சன், மதுரையைச் சேர்ந்த B.திலக் சந்தர், நஹ்லா நயினார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த M. நச்சினார்க்கினியன் ஆகியோரின் உள்ளீடுகளுடன்)




Original article:

Share: