இந்தியாவில் தேர்தல்கள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. தற்போதைய தேர்தலில், 800 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், பெண் வேட்பாளர்கள் இல்லாத இடங்களின் எண்ணிக்கை 152 ஆகக் குறைந்தது. 1951 மற்றும் 1971ஆம் ஆண்டுக்கான தரவு பெண் வேட்பாளர்களை ஒப்பிடுவதற்கு கிடைக்கவில்லை. காலப்போக்கில், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 543 தொகுதிகளில் 152 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் இல்லை. இது 2019-ம் ஆண்டில் 171 ஆகவும் 2014-ம் ஆண்டில் 166 ஆகவும் குறைந்துள்ளது.


3. 2024 மக்களவைத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில், அதிகபட்சமாக 30 தொகுதிகள் உள்ள உத்திர பிரதேசத்தில் இருந்தன. அதைத் தொடர்ந்து பீகார் 15 மற்றும் குஜராத் 14 இடங்களும் இருந்தன. 2024 மக்களவைத் தேர்தலில் 167 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு பெண் வேட்பாளராவது இருந்தனர். 119 இடங்களில் 2 பெண்கள், 59 இடங்களில் 3 பேர், 25 இடங்களில் 4 பேர், 10 இடங்களில் 5 பேர், 5 இடங்களில் 6 பேர், 2 இடங்களில் 7 பேர், 3 இடங்களில் 8 பேர் போட்டியிட்டனர்.


4. அதிக எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்களைக் கொண்ட தொகுதிகள் பாராமதி, செகந்திராபாத் மற்றும் வாரங்கல் போன்ற தொகுதிகளில் தலா எட்டு வேட்பாளர்கள் இருந்தனர். இந்த ஆண்டு 800 பெண் வேட்பாளர்களில் 74 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர், 629 பேர் டெபாசிட் இழந்தனர்.


5. தற்போதைய காலகட்டத்தில், அதிகமான பெண்கள் வாக்களிக்க வருகின்றனர். உண்மையில், அவர்கள் 2024-ம் ஆண்டில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இது 2019-ம் ஆண்டின் தொடர்ச்சியாகும். தற்போது கருத்துக் கணிப்புக் குழுவின் படி, 65.78% பெண் வாக்காளர்கள், 65.55% ஆண்களுடன் ஒப்பிடும்போது 2024-ம் ஆண்டில் வாக்களித்தனர் (சூரத் தவிர்த்து). “2019-ம் ஆண்டைப் போலவே 2024-ம் ஆண்டிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்தது. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பது இது இரண்டாவது முறையாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


1. 1951-52 ஆம் ஆண்டில் அதன் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, உலகளாவிய வயது வந்தோருக்கான வாக்குரிமைக்கான (universal adult franchise) அதன் அர்ப்பணிப்பாகும். இந்தியாவில் உள்ள அனைத்து வயது வந்த பெண்களும் தேசம் விடுதலை அடைந்ததில் இருந்து வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக, கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த மற்றும் சக்திவாய்ந்த நாடுகள் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க நீண்டகாலம், கடினமான மற்றும் பெரும்பாலும் வன்முறையான செயல்முறையை கையாண்டனர்.


2. பெண்களின் வாக்களிக்கும் உரிமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்  இருந்தபோதிலும், சுமார் 1990-ம் ஆண்டுகள் வரை, இந்தியாவில் பெண்களின் வாக்களிப்பு விகிதம் ஆண்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இதன் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றத்தின் மூலம் மாறிவிட்டது.


3. இந்தியா இந்த ஆண்டு மக்களவைக்கு 74 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும், 2019-ம் ஆண்டைவிட நான்கு குறைவாகவும், 1952-ம் ஆண்டில் நடந்த இந்தியாவின் முதல் தேர்தலைவிட 52 அதிகமாகவும் உள்ளது. இந்த 74 பெண்கள் மக்களவையில் (Lower House) தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களில் வெறும் 13.63% மட்டுமே உள்ளனர். இது அடுத்த எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் (delimitation exercise) பிறகு பெண்களுக்கு ஒதுக்கப்படும் 33% ஐ விட மிகக் குறைவு.




Original article:

Share:

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 -ரோஷ்னி யாதவ்

 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டமானது (Land Acquisition Act) 2014 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், விவசாயிகள் ஏன் அதை செயல்படுத்த முயல்கின்றனர்? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?


பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் கானௌரி (Khanauri) மற்றும் ஷம்பு எல்லைகளில் (Shambhu borders) பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price (MSP)) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். இது தவிர மேலும் பல கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வைத்துள்ளனர். இதில் முக்கியமாக, 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை (Land Acquisition Act) அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். இதில் முக்கிய அம்சங்கள்,


1. நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition, Rehabilitation, and Resettlement Act), 2013-ம் ஆண்டில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (Land Acquisition Act), 2013 என்றும் அழைக்கப்படுகிறது. இது 1894-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்குப் பதிலாக ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.


2. நிலம் கையகப்படுத்துதல், அத்தகைய கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான நவீன கட்டமைப்பை இந்த சட்டம் நிறுவுகிறது. 2015 ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் இது ஜனவரி 1, 2014 முதல் அமலுக்கு வந்தது. ஆனால், இந்தச் சட்டம் அதன் எழுத்து மற்றும் உணர்வில் செயல்படுத்தப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.


இந்தச் சட்டத்தை அதன் அசல் வடிவில் அமல்படுத்தாததற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு என்று பாரதி கிசான் யூனியன் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் கூறினார்.


சட்டத்தின் முக்கிய அம்சங்கள் : 


1. சட்டம் நியாயமான இழப்பீடு மற்றும் ஒப்புதல் தேவைகள் மீது கவனம் செலுத்துகிறது. நில உரிமையாளர்கள் நகர்ப்புறங்களில் சந்தை மதிப்பைவிட இரண்டு மடங்கும், கிராமப்புறங்களில் சந்தை மதிப்பைவிட நான்கு மடங்கும் இழப்பீடு பெற வேண்டும்.


2. கூடுதலாக, பொது-தனியார் கூட்டு (Public-Private Partnership (PPP)) திட்டங்களுக்கு, பாதிக்கப்பட்ட 70% குடும்பங்களின் ஒப்புதல் தேவை. தனியார் நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு, 80% ஒப்புதல் தேவை.


3. நீர்ப்பாசன வசதியானது பலபயிர் நிலங்களுக்கு, மாநில அரசுகள் குறிப்பிடும் வரம்புகளுக்கு அப்பால் கையகப்படுத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது. அத்தகைய வளமான நிலம் கையகப்படுத்தப்பட்டால், விவசாய நோக்கங்களுக்காக சமமான அளவிலான தரிசு நிலத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும். 


4. ஒரு தனிநபர் சட்டத்தின் கீழ் ஒரு தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால், அவர்கள் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ஆணையத்தை (Land Acquisition, Rehabilitation, and Resettlement (LARR)) அணுகலாம். 


5. நிலம் கையகப்படுத்துதலின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகளை மதிப்பிடுவதற்கு சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment (SIA)) சட்டத்திற்கு தேவைப்படுகிறது. 


6. இது மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (Rehabilitation and Resettlement (R&R)) ஆகியவற்றையும் வழங்குகிறது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிமைகளும் அடங்கும்.  அவை,


- இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல்.


- வாழ்வாதார இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி வழங்குதல்.


-சார்ந்துள்ள குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது வருடாந்திர அடிப்படையிலான வருமானத்தை வழங்குதல்.


- சாலைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட மீள்குடியேற்றப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.


7. நிலம் கையகப்படுத்துதல் தன்னிச்சையாக செய்யப்படுவதைத் தடுக்க "பொது நோக்கம்" (public purpose) என சட்டம் வரையறுக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, நகரமயமாக்கல் மற்றும் தொழில்துறை வழித்தடங்கள் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். ஐந்தாண்டுகளுக்குள் நிலம் அதன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாவிட்டால், அது உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது நில வங்கியில் வைக்கப்பட வேண்டும்.


8. குறிப்பிடத்தக்க வகையில், பாதுகாப்பு, இரயில்வே மற்றும் அணுசக்தி தொடர்பான சில திட்டங்கள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இழப்பீடு மற்றும் மறுவாழ்வு விதிகள் இன்னும் பொருந்தும். பொது விசாரணைகள் மற்றும் சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment (SIA)) அறிக்கைகளை அணுகுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) ஆகியோருக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் ஆலோசனை தேவை.




செயல்படுத்துவதில் உள்ள சவால்கள்


இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தச் சவால்கள் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதை கடினமாக்குகின்றன. இவற்றில் சில சவால்களானவை,


- நடைமுறைத் தேவைகள் பெரும்பாலும் வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைத் தாமதப்படுத்துகின்றன.


- இழப்பீட்டுச் செலவுகள் பொது மற்றும் தனியார் திட்டங்களின் வரவு செலவுத் திட்டங்களைக் குறைக்கலாம்.


வளர்ச்சித் தேவைகளை சமூக நீதியுடன் சமநிலைப்படுத்துவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் நிலையை வலுப்படுத்த வருவாய் சேகரிப்பு முறையைத் தரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள பல்வேறு விவசாயிகளின் குழுக்களுடன் வெவ்வேறு தீர்வுகளை பேச்சுவார்த்தை நடத்தினர். சுதந்திரத்தின் போது, ​​மூன்று முக்கிய வகையான நில உரிமைகள் இருந்தன. அவை ஜமீன்தாரி முறை, இரயத்வாரி முறை மற்றும் மஹால்வாரி முறை ஆகும்.


1. ஜமீன்தாரி முறை (Zamindari System) : ஜமீன்தாரி முறையின் கீழ், தனிநபர்கள் நிலத்தை வைத்திருந்தனர் மற்றும் நில வருவாயை செலுத்துவதற்கு பொறுப்பானவர்களாக இருந்தனர். நிலத்தின் உண்மையான சாகுபடி, இல்லாத நில உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த குத்தகைதாரர்களால் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு வகையான ஜமீன்தாரி அமைப்புகள் இருந்தன:


(i) முதல் வகை நிரந்தர குடியேற்றம். இந்த முறையில், நில உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய வருவாய் நிர்ணயிக்கப்பட்டு அப்படியே இருந்தது. நில உரிமையாளர்கள் முக்கியமாக நிலத்தை மேற்பார்வையிட்டனர். குத்தகைதாரர்கள் சாகுபடி மற்றும் அனைத்து தொழிலாளர்களையும் கையாண்டனர். இந்த முறை ஒரிசா, வங்காளம், பனாரஸ் மற்றும் மெட்ராஸின் சில பகுதிகளில் பொதுவானது.


(ii) இரண்டாவது வகை ஜமீன்தாரி முறையானது வருவாய் வழங்குவதை கொண்டிருந்தது. அவை அவ்வப்போது திருத்தப்பட்டன. இந்த அமைப்பு உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய மாகாணங்கள் (Central Provinces (C.P.)) போன்ற பகுதிகளில் காணப்பட்டது.


2. இரயத்துவாரி முறை (Ryotwari System) : இம்முறையில், நிலம் உழுபவர்களால் சொந்தமாகப் பயிரிடப்பட்டது. அவர்கள் உரிமையாளர்கள் அல்லது விவசாய உரிமையாளர்கள் என்றும் அறியப்பட்டனர். இரயத்துகளை (விவசாயிகளை) அரசு கட்டுப்படுத்தியது. ஒவ்வொரு தனி நபருக்கும் நில வருவாய் மதிப்பிடப்பட்டது. இந்த வருவாயை செலுத்துவதற்கு இரயத் (ryot) பொறுப்பேற்றார். இந்த அமைப்பின் கீழ் நில வருவாய் தொடர்பான தீர்வுகள் தற்காலிகமானவை.


1792-ம் ஆண்டில் பாரா மஹால் மாவட்டத்தில் கேப்டன் ரீட் மற்றும் தாமஸ் முன்ரோ ஆகியோரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இது பம்பாய், அசாம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.


3. மஹால்வாரி முறை (Mahalwari System) : இந்த அமைப்பில், நிலம் கிராம சமூகத்திற்கு கூட்டாக சொந்தமானது. இருப்பினும், நிலத்தை பயிரிடுவதற்கு தனிநபர்களின் பொறுப்பாக இருந்தது. கிராம சமூகத்திற்கு வருவாயை வசூலித்து அரசுக்கு செலுத்தும் கடமை இருந்தது.


இந்த அமைப்பு முக்கியமாக பஞ்சாப், ஆக்ரா மற்றும் அவாத் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டது. மஹால்வாரி முறையின் கீழ், கிராமம் மஹால்களாக (mahals) பிரிக்கப்பட்டது. இவை நில வருவாய் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட தனி பகுதிகளாகும்.




Original article:

Share:

கர்நாடகா உயர்நீதிமன்றம் ஏன் திருநங்கைகள் பிறப்புச் சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அனுமதித்தது? -அஜய் சின்ஹா ​​கற்பூரம்

 ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் திருநங்கைகள் பெயர் மற்றும் அடையாளத்தை மாற்றுவது பற்றி சட்டம் என்ன சொல்கிறது?


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 இயற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம் தலையிட்டது. திருநங்கை ஒருவர் தனது பிறப்புச் சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாற்றம் அவருக்கு முன்பு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், 2019 சட்டமும் அதன் விதிகளும் தெளிவாக அனுமதிக்கின்றன.


அந்த பெண்ணினுடைய கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது? மேலும் ஒரு திருநங்கை தனது பெயரையும் அடையாளத்தையும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மாற்றுவதற்கான செயல்முறை என்ன?


(Ms. X vs State of Karnataka (2024)) வழக்கில் மனுதாரருக்கு பாலின அசொகரியம் (dysphoria) இருப்பது கண்டறியப்பட்டது. பாலின அசொகரியம் என்பது ஒருவரின் பாலின அடையாளத்தில் ஏற்படும் பிரச்சனையை குறிக்கிறது. பிறக்கும்போது, ​​ஆண் அல்லது பெண் போன்ற பாலின அடையாளங்கள் பாலின உறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகினற்ன. இருப்பினும், காலப்போக்கில், பாலினம் என்பது உயிரியலைக் குறிக்கும் பாலினத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு சமூக அடையாளமாக புரிந்து கொள்ளப்பட்டது.


இந்நிலையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, பெயரை மாற்ற மனுதாரர் முடிவு செய்தார். அவரது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த, அவர் தனது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டில் தனது பெயர் மற்றும் பாலின அடையாளத்தை புதுப்பித்துள்ளார். எனினும், அந்த பெண் தனது பிறப்புச் சான்றிதழில் உள்ள தகவலை மாற்ற விண்ணப்பித்தபோது, ​​அந்த பெண்னினது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


மங்களூரில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மனுதாரருக்கு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்,  (Registration of Births and Deaths Act, 1969) பற்றி தெரிவித்தார். இந்த சட்டம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதை நிர்வகிக்கிறது. தகவல் "தவறானது" (erroneous) அல்லது "மோசடியாக அல்லது தவறாக" குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே பிறப்புச் சான்றிதழில் மாற்றங்களைச் சட்டப்  பிரிவு 15 அனுமதிக்கிறது.


பின்னர் இந்த சட்டத்தை எதிர்த்து அந்த பெண் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பிரிவு 15 "மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது" (extremely restrictive) என்று வாதிட்டார். இது அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான (curtailed her right to life) தனது உரிமையை மீறுவதாக அவர் கூறினார். ஒரு பெயர் ஒரு நபரின் அடையாளத்தின் வெளிப்பாடு என்று அவர் கூறினார்.


வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட ஆவணங்களை வைத்திருப்பது இரட்டை வாழ்க்கையை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். ஒரு அடையாளம் காகிதத்தில் உள்ளது, மற்றொன்று உண்மையில் உள்ளது. இது எதிர்காலத்தில் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று அந்த பெண் கூறினார். 


பதிவாளர் 1969 சட்டத்தின்படி மட்டுமே செயல்பட முடியும் என்று கர்நாடகா அரசு வாதிட்டது.


சிறப்பு சட்டங்கள் மற்றும் பொதுச் சட்டங்கள் vs கர்நாடக உயர்நீதிமன்றம்


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019, திருநங்கைகளுக்கு அவர்களின் அடையாளச் சான்றாக “அடையாளச் சான்றிதழை” (certificate of identity) வழங்கலாம் என்று பிரிவு 6 கூறுகிறது. பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு (sex-reassignment surgery) அவர்கள் தேர்வு செய்தால் இந்தச் சான்றிதழைத் திருத்தலாம் என்று பிரிவு 7 கூறுகிறது.


இந்தச் சான்றிதழின் அடிப்படையில் திருநங்கையின் பாலினம் "அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட வேண்டும்" என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்தச் சான்றிதழ் அல்லது திருத்தப்பட்ட சான்றிதழைக் கொண்ட எவரும் "பிறப்புச் சான்றிதழில் உள்ள முதல் பெயரையும் அவர்களின் அடையாளத்துடன் தொடர்புடைய மற்ற அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் மாற்ற உரிமை உண்டு" என்றும் சட்டம் கூறுகிறது.


இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறை திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள், 2020 இல் விளக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் "அதிகாரப்பூர்வ ஆவணங்களையும்" பட்டியலிடுகின்றன. மேலும் "பிறப்புச் சான்றிதழ்" முதலாவதாக உள்ளது.


கர்நாடக உயர் நீதிமன்றம் 2020 விதிகளைக் குறிப்பிட்டு, 1969ஆம் ஆண்டு சட்டம், "பொதுச் சட்டமாக" (general enactment), "சிறப்புச் சட்டமான" திருநங்கைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


பொதுச் சட்டங்கள் என்பது பல சூழ்நிலைகளுக்கு பரவலாகப் பொருந்தும் சட்டங்கள் ஆகும். உதாரணமாக, 1969 சட்டம் பெரும்பாலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பொருந்தும். சிறப்புச் சட்டங்கள், மறுபுறம், குறிப்பிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்துகின்றன. பணமோசடி தடுப்புச் சட்டம், 2002, பணமோசடி குற்றத்தை கையாள்கிறது. அதே போல் திருநங்கைகள் சட்டம் திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. 


1969 சட்டம் 2019 சட்டத்திற்கு இணைந்து செயல்படவேண்டும் என்று கூறுவதன் மூலம், கர்நாடக உயர் நீதிமன்றம் "பொதுவிதி, தனிவிதியை மிஞ்சி நிற்காது" (generalia specialibus non derogant) என்ற சட்ட விதியைப் பின்பற்றியது. அதாவது "பொதுவான சட்டங்களை விட சிறப்பு சட்டங்கள் மேலானவை என்று பொருள்".


ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்காக வடிவமைக்கப்பட்ட சட்டத்தில் பொதுச் சட்டம் தலையிடக் கூடாது என்பது பொதுவான கருத்து. உதாரணமாக, பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பெற கடுமையான நிபந்தனைகளை சந்திக்க வேண்டும். இது பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து வேறுபட்டது. அவர்கள் ஜாமீனில் குறைந்த தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.


திருநங்கைகள் சட்டத்தின் கீழ் பதிவாளர் சான்றிதழை ஏற்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பதிவாளர் திருத்தப்பட்ட பெயர் மற்றும் பாலின அடையாளத்துடன் பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும். “1969 சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை" இந்த நடைமுறை தொடர வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


திருநங்கைகள் சட்டத்தின் கீழ் சான்றிதழுக்கான விண்ணப்ப செயல்முறை


திருநங்கைகள் சட்டத்தின்கீழ் அடையாளச் சான்றிதழைப் பெற, நபர் திருநங்கைகள் விதிகளில் உள்ள செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். முதலில், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் (District Magistrate) ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் பாலின அடையாளத்தை தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தைச் அதில் சேர்க்க வேண்டும். மாவட்ட நீதிபதி உறுதிமொழியைச் செயல்படுத்தி, விண்ணப்பதாரருக்கு ஆதாரமாக அடையாள எண்ணைக் கொடுப்பார். அடையாளச் சான்றிதழும் திருநங்கை அடையாள அட்டையும் 30 நாட்களுக்குள் வழங்கப்படும் அல்லது விண்ணப்பம் காரணங்களுடன் நிராகரிக்கப்படும்.


ஒரு நபர் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (reassignment surgery) செய்து கொண்டால், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடம் மருத்துவச் சான்றிதழைக் கோரலாம். இந்தச் சான்றிதழுடன், திருத்தப்பட்ட அடையாளச் சான்றிதழுக்காக அவர்கள் மாவட்ட நீதிபதிக்கு விண்ணப்பிக்கலாம். அது 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.


சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே ஒருவர் பாலினத்தை மாற்றிக் கொண்டால், அவர்கள் புதிய சான்றிதழுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.


ஆதார், ஓட்டுநர் உரிமம் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்குவதற்குப் பொறுப்பான எந்தவொரு அதிகாரமும், ஆவணத்தில் உள்ள பெயர், பாலினம், புகைப்படம் அல்லது வேறு ஏதேனும் தகவலை மாற்ற வேண்டும். செல்லுபடியாகும் அடையாளச் சான்றிதழைக் கொண்ட திருநங்கையிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்ற 15 நாட்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.




Original article:

Share:

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை, இந்தியாவுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகள் - அகில்யா ஆனந்த், சைலேஷ் குமார்

 ஷேக் ஹசீனா விசயத்தில் நியாயமான விசாரணையாக இருக்க வேண்டும் என்பதை வங்காளதேசம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இந்த செயல்முறையை மேற்கொள்ள வங்காளதேச அரசு முகமைகளை இந்தியா அனுமதிக்க வேண்டும்.


ஆகஸ்ட் 2024-ம் ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, ​​வங்காளதேசத்தின் வெளியேற்றப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் புது தில்லிக்குத் தப்பி ஓடிய சில மாதங்களுக்குப் பிறகு, வங்காளதேசம் அரசு அவரை திரும்ப ஒப்படைக்குமாறு முறைப்படி கோரியது. இதற்கு டிசம்பர் 23, 2024 அன்று, "நீதித்துறை செயல்முறையை" (judicial process) எதிர்கொள்ள அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் முறைப்படி கேட்டுக் கொண்டது. 


அதே நாளில் டாக்கா இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு வாய்மொழியாக ஒரு அறிக்கையை அனுப்பியது. இது, வங்காளதேசத்தின் தலைமை ஆலோசகரின் பத்திரிகை செயலாளர், "இந்தியாவுடனான எங்களின் உறவுகள் நியாயம் (fairness), சமத்துவம் (equality) மற்றும் கண்ணியத்தின் (dignity) அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார். 


ஆகஸ்ட் 5, 2024 அன்று டாக்காவிலிருந்து வெளியேறிய பின்னர் சரணடையாததால் ஷேக் ஹசீனா அவர்கள் தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கும் மற்றும் அவரது சில முன்னாள் நண்பர்களுக்கு எதிராக ஆகஸ்ட் 13, 2024 அன்று முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) தாக்கல் செய்யப்பட்டது.


 ஏனெனில், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை அழிக்க சதி செய்ததாகவும், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை தவறாக நடத்தியது மற்றும் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக உள்ள உறுதியான வழக்கை உருவாக்க வலுவான மற்றும் நம்பகமான ஆதாரங்களை சேகரிக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 


அக்டோபர் 17 அன்று, டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Crimes Tribunal), முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் உட்பட திருமதி ஹசீனா மற்றும் 45 பேருக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது. நவம்பர் 18 அன்று, விசாரணையை முடிக்க டிசம்பர் 17, 2024 காலக்கெடுவாக நிர்ணயித்த தீர்ப்பாயம் விசாரணையாளர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்தது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமறைவாக இருந்த வழக்கு 


பொதுவான சட்ட அதிகார வரம்புகளில், குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் விசாரணையைத் தொடங்க முடியாது. இந்த விசாரணையைத் தொடங்க, திருமதி ஹசீனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் நேரடியாகவோ அல்லது மெய்நிகர் தளங்கள் (virtual platform) மூலமாகவோ பங்கேற்க வேண்டும். 


இதற்கு மாற்றாக, சில இடங்களில், தங்கள் கட்சிக்காரர் சார்பாக ஒரு வழக்கறிஞர் ஆஜராகலாம். இது "ஆக்கபூர்வமான இருப்பு" (constructive presence) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், பொதுவான சட்ட நாடுகளில் இது இன்னும் விவாதிக்கப்படும் பிரச்சினையாக உள்ளது. இருப்பினும், வங்காளதேச குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) 1898-ன் பிரிவு 339 B குற்றம் சாட்டப்பட்ட நபரை அவர்கள் இல்லாத நிலையில் விசாரிக்க முடியும் என்று கூறுகிறது. 


குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத ஒரு விசாரணையைப் பொறுத்தவரை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் (International Criminal Court (ICC)) ஒரு சமீபத்திய முன்னுதாரணத்தைக் கொண்டுள்ளது. அக்டோபர் 29, 2024 அன்று, அதன் விசாரணைக்கு முந்தைய அறை III சந்தேகத்திற்குரிய ஜோசப் கோனி முன்னிலையில் இல்லாமல் குற்றச்சாட்டு விசாரணையை உறுதிப்படுத்த முடிவு செய்தது. வடக்கு உகாண்டாவில் 36 போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கோனி, 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உண்மையில், வங்காளதேசம் விசாரணைக்கு பொருத்தமான இடமாகத் தோன்றுகிறது. ஏனெனில், அங்கு குற்றம் சாட்டப்பட்ட செயல்கள் ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் செயல்படுத்தப்படவேண்டும். இதற்காக, திருமதி ஹசீனாவை ஒரு இராஜதந்திர வழிமுறைகள் (diplomatic channels) மூலம் ஒப்படைக்குமாறு வங்காளதேசம் இந்தியாவைக் கேட்டுக் கொண்டாலும், இந்திய அரசாங்கம் இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 


இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், வலுக்கட்டாயமாக காணாமல் போதல் அல்லது சித்திரவதை போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ளும் எந்தவொரு குற்றவாளியையும் "ஒப்படைக்க அல்லது வழக்குத் தொடர" வழக்கமான சர்வதேச சட்டத்தின் கீழ் அரசுக்கு ஒரு கடமை இருந்தாலும், ஹசீனாவை வங்காளதேசத்திடம் ஒப்படைக்க இந்தியா கடமைப்படவில்லை. 


இந்தியாவின் சாத்தியமான பாதுகாப்பு 


ஹசீனாவின் குற்றங்களில் இந்தியா எந்த வகையிலும் ஈடுபடவில்லை. இது போன்ற செயல்களை ஆதரிக்கவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை.

2013-ம் ஆண்டில், இந்தியா வங்காளதேசத்துடன் இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1962-ம் ஆண்டின் இந்திய ஒப்படைப்புச் சட்டம் (Indian Extradition Act), இந்திய குடிமக்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, தனிநபர்களை நாடு கடத்துவதற்கான தெளிவான கட்டமைப்பை வழங்குகிறது. இந்த நிலையில், வங்கதேசம் நாடு கடத்தக் கோரும் நாடாகவும், இந்தியாவை ஒப்படைக்கக் கோரும் நாடாகவும் உள்ளது.


வங்காளதேசத்தின் ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரிக்க இந்தியா இரண்டு சட்டப் பாதுகாப்புகளைப் பயன்படுத்தலாம்.


1. ஹசீனா அரசியல் குற்றங்களைச் செய்துள்ளார் என்று இந்தியா வாதிடலாம். இருப்பினும், ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரிப்பதற்கான சரியான காரணம் அரசியல் குற்றங்கள் ஆகும். இருப்பினும், இந்த வாதம் வெற்றிபெற வாய்ப்பில்லை. முதல் பார்வையில், ஹசீனாவின் நடவடிக்கைகள் அரசியல் குற்றங்களாகத் தகுதி பெறுகின்றன என்ற கருத்துக்கு சிறிய ஆதரவு இல்லை.


2. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (Amnesty International and Human Rights Watch) போன்ற அமைப்புகளின் அறிக்கைகள் அவரது அரசாங்கம் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் அரச ஆதரவு வன்முறை, சித்திரவதை, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல், துன்புறுத்தல் மற்றும் பிற கடுமையான செயல்கள் அடங்கும்.


அவர் இந்தக் குற்றங்களைச் செய்தாரா இல்லையா என்பதை நியாயமான விசாரணையின் மூலம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.


ஷேக் ஹசீனாவைச் சுற்றியுள்ள நாடு கடத்தல் சர்ச்சை முக்கியமான சட்டக் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இரண்டாவதாக, பொதுவானச் சட்டத்தின் கீழ், "விசாரணை அல்ல" என்று அழைக்கப்படும் ஒரு விதி உள்ளது. இதன் பொருள், பாரம்பரியமாக, ஒப்படைப்பு என்பது நிர்வாகத்தின் விருப்பமாகும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தின் தலையீட்டை நாட முடியாது. இருப்பினும், இந்த நடைமுறைக்கு இப்போது அதிக ஆதரவு இல்லை. ஆயினும்கூட, ஹசீனா ஒரு இந்திய குடிமகனாக இல்லாவிட்டாலும், இந்திய அரசியலமைப்பின் 20 மற்றும் 21 வது பிரிவுகளால் பாதுகாக்கப்படுகிறார். 


தேசிய மனித உரிமை ஆணையம் vs அருணாச்சல பிரதேசம் மற்றும் பிறர் (National Human Rights Commission vs State of Arunachal Pradesh) 1996 வழக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் குடிமகன் அல்லாதவர் கூட பிரிவு 21 இன் பாதுகாப்பைப் பெற உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது. ஏனெனில், அது 'நபர்' (persons) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. தற்போதைய நிலைமை மற்றும் சித்திரவதை மற்றும் சிறை நிலைமைகள் குறித்த வங்காளதேசத்தின் கடந்தகால பதிவுகளின் அடிப்படையில், ஹசினாவைப் பாதுகாக்கவும், அவரை வங்காளதேசத்திற்கு ஒப்படைப்பதில் இருந்து இந்திய அரசாங்கத்தைத் தடுக்கவும் நீதிமன்றம் நியாயமான அடிப்படையைக் கொண்டிருக்கும். 


எவ்வாறாயினும், முன்னால் ஒரு சாத்தியமான வழி உள்ளது. ஹசீனா தங்கியிருக்கும் அதே நிலையில் இந்தியாவில் அவரை வீட்டிலேயே கைது செய்ய இந்திய அரசு அனுமதிக்கலாம் மற்றும் வங்காளதேச நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரான அவருக்கு விருப்பமான வழக்கறிஞருடன் காணொலி (video conferencing) மூலம் அவரது விசாரணையில் பங்கேற்பதை உறுதி செய்யலாம். இதற்குப் பிறகு, விசாரணை மற்றும் ஆதாரங்களை சேகரிப்பதில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா வங்காளதேசத்திற்கு உறுதியளிக்க முடியும். 


வங்காளதேச அதிகாரிகள் ஹசீனாவை முன் அறிவிப்பு தெரிவித்தபின் அணுக வேண்டும். ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருந்தால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் தண்டனையை அனுபவிக்க முடியும். இந்த நடவடிக்கை இந்தியாவின் சார்பாக உண்மையான நோக்கத்தைக் காட்டுகிறது மற்றும் ஐ.நா சாசனத்தின் பிரிவு 2(4) க்கு இணங்குவதை நிரூபிக்கிறது. அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஆபத்து மற்றும் கவலைகளைப் பாதுகாக்கிறது. 


ஹசீனா இப்போது ஆட்சியில் இல்லை, மேலும் அவரது முதுமை மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக, அவரது நல்வாழ்வுக்காக எந்த பொருத்தமற்ற நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படவில்லை.  அவருக்கு மனித உரிமைகள் பெற உரிமை உண்டு. பகுத்தறிவு மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்தின் மூலம் இதை அடைய முடியும். இந்தியா-வங்காளதேச உறவுகளில் கருத்து வேறுபாடுகள் மற்றும் உணர்ச்சிகரமான வாதங்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஹசீனாவின் விசாரணையின் முக்கியத்துவத்தை வங்காளதேசம் புரிந்துகொண்டு அவர் பழிவாங்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இந்தியா தனது விசாரணையை திறம்பட நடத்த வங்காளதேசத்தின் அரசு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். இது நடந்தால், அது சர்வதேச சமூகத்திற்கு நியாயமான விசாரணைக்கு ஒரு கூட்டு அணுகுமுறையை நிரூபிக்கும்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அதிகார வரம்பு, மாற்றுத் தீர்வு 


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சாசனத்தில் (Rome Statute) அங்கம் வகிக்கும் 111 ஆவது நாடாக வங்காளதேசம் உள்ளது. இது ரோம் சாசனத்தின் 5, 11 மற்றும் 12 பிரிவுகளின் அடிப்படையிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகார வரம்புகளின் அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கும், அதாவது பொருள், தனிப்பட்ட, பிராந்திய மற்றும் தற்காலிக அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன் ஒரு காரணமாக இருக்கலாம். இவை, 


- குற்றம் என்பது "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று கருதப்படுகிறது. இதன் பொருள் ஈர்ப்பின் தன்மையை சந்திக்கிறது.


- குற்றம் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு நாட்டின் தனிப்பட்ட குடிமகனால் செய்யப்பட்டது.


- குற்றம் வங்கதேசத்தில் (பிராந்தியத்தில்) உறுதி செய்யப்பட்டது.


- குற்றம் 2002-ம் ஆண்டுக்குப் பிறகு தற்காலிகமாக நடந்தது.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) என்பது கடைசி முயற்சியின் நீதிமன்றமாகும். மேலும், இது தேசிய அதிகார வரம்பிற்கு மாற்றாக அல்ல. பிரிவு 17-ன் படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகார வரம்பு நிரப்பு கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. வங்காளதேசம் ஏற்கனவே உள்நாட்டில் விசாரணையை கையாண்டு வருவதால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தலையிட எந்த காரணமும் இல்லை.


எவ்வாறாயினும், ரோம் சட்டத்தின் பிரிவு 53, பிரிவு 17 உடன் ஒப்பிடும்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபரின் உரிமைகள் ஆபத்தில் இருந்தால், மற்றும் நடவடிக்கைகள் சுதந்திரமாக அல்லது பாரபட்சமற்றதாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் நலன்கள் பெரும் ஆபத்தில் இருப்பதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். நபரை நீதிக்கு முன் கொண்டுவரும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் முரணாக இருந்தால் இது நிகழலாம். ஹசீனா, ரோம் சட்டத்தின் பிரிவு 21(3) உடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights (ICCPR)) பிரிவு 14-ன் கீழ் தேவைப்படும் பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான நீதித்துறை அதிகாரத்தைப் பெற முடியாமல் போகலாம். 


அத்தகைய சூழ்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) வழக்குரைஞர் அலுவலகம் (Office of the Prosecutor (OTP)), பிரிவு 15-ன் கீழ், ஒரு பூர்வாங்கத் தேர்வைத் தொடங்கலாம். எனவே, முதல் பரிந்துரைக்கு மாற்றாக, ரோம் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் வங்கதேசம் இந்த விஷயத்தை ஐசிசிக்கு அனுப்பலாம். மாற்றாக, பிரிவு 15ன் கீழ் வழக்குரைஞர் அலுவலகம் (OTP) சொந்த முயற்சியில் (proprio motu) முதல்நிலை தேர்வைத் தொடங்கலாம். ஹசீனா வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்ற உத்திரவாதத்துடன் ஐசிசியிடம் சரணடையலாம்.


அக்லவ்யா ஆனந்த் டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் உதவி பேராசிரியராக உள்ளார். ஷைலேஷ் குமார் லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் ஹோலோவேயில் உள்ள சட்டம் மற்றும் குற்றவியல் துறையில் சட்ட விரிவுரையாளர் மற்றும் ஒரு காமன்வெல்த் அறிஞர் ஆவார்.





Original article:

Share:

நாணய கவலை : ரூபாய் குறித்து…

 ரூபாயின் வேகமான சரிவு பொருளாதாரத்திற்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. 


இந்திய ரூபாயின் மதிப்பு கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறது. அந்நியச் செலாவணி சந்தையில் அதன் வேகமான சரிவைத் தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி நிலையான மாற்று விகிதத்தை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிசம்பர் 19 அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 85 ரூபாயை  எட்டியது. இது கடந்த வெள்ளிக்கிழமை, கிட்டத்தட்ட 86 ரூபாயை எட்டியது. இருப்பினும், மத்திய வங்கி தாமதமாகத் தலையிட்டு அதை 85.53-க்கு கொண்டு வந்தது. சமீபகாலமாக பல காரணிகளால் ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரின் பிற்பகுதியில் பங்குகளின் குறியீடுகள் உச்சத்தை அடைந்த பிறகு, பங்கு சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிதிச் சொத்துக்களின் முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவது ஒரு முக்கிய காரணியாகும். 


அதிக மதிப்புள்ள பங்குகள், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பலவீனமான பெருநிறுவன செயல்திறன் மற்றும் சீனாவின் பொருளாதார ஊக்கம் ஆகியவை சந்தையை பாதித்தன. இந்த காரணிகள் மும்பை போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து நிதிச் சொத்து முதலீடுகள் பெய்ஜிங்கிற்கு செல்வது போன்ற மாற்றங்களுக்கு வழிவகுத்தது. கூடுதலாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்க டாலரின் வலிமை அதிகரித்தது. அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் ஒரு பொதுவான நாணயத்தைத் திட்டமிடுவதற்காக பிரிக்ஸ் நாடுகளுக்கு (பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, ஈரான், ரஷ்ய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) 100% வரி விதிக்கப்படும் என்ற அவரது அச்சுறுத்தல், வளர்ந்து வரும் சந்தை நாணயங்களையும் கடுமையாக பாதித்தது.

 

வர்த்தக விஷயங்களில் டிரம்ப்பின் பொதுவான பாதுகாப்புவாத நிலைப்பாடு குறித்த அச்சங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இந்தியாவின் சரக்கு வர்த்தகம் போராடி வருகிறது. நாடு வரலாறு காணாத வர்த்தக பற்றாக்குறை மற்றும் அதிக இறக்குமதி கட்டணங்களை எதிர்கொள்கிறது. இது இந்த காலாண்டில் பெரிய நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2%-ல் இருந்து பற்றாக்குறை இரட்டிப்பாகும். சேவைகள் வர்த்தகம் இன்னும் உபரியை உருவாக்கும் அதே வேளையில், H-1B விசா அமைப்பைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை கவலையளிக்கிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரிக்ஸ் நாணயம் பற்றிய யோசனையை வெறும் ஆலோசனையாக நிராகரித்து, டாலர் மதிப்பை நீக்கும் திட்டம் இந்தியாவில் இல்லை என்று வலியுறுத்தினார். 


இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு தெளிவான பொது அறிக்கையையும் வெளியிட வேண்டும். மற்ற வளர்ந்து வரும் சந்தை நாணயங்கள் மேலும் வீழ்ச்சியடைந்தாலும், பலவீனமான ரூபாய் ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை அளிக்கிறது. குறிப்பாக, சமையல் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான அதிக இறக்குமதி செலவினங்களை இந்தியா எதிர்கொள்கிறது. வெளிநாட்டு முதலீடு நிச்சயமற்றது மற்றும் 2025-க்கான அமெரிக்க நாணயக் கொள்கை தெளிவாக இல்லை.


 ரூபாயை நிர்வகிப்பதற்கு அந்நிய செலாவணி இருப்புக்களை பயன்படுத்துவதற்கு மத்திய வங்கிக்கு குறிப்பிட்ட வரையறை உள்ளது. மேலும், சமீபத்திய நாணய நகர்வுகள் கொள்கை வகுப்பாளர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை நிதி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார சவால்கள் பலவீனமான நுகர்வு மற்றும் குறைந்த முதலீடு போன்ற உள்நாட்டு பிரச்சினைகளால் ஏற்படுகின்றன. ரூபாய் மதிப்பு சரிவில் இருப்பதால், இந்தியாவின் வெளிப்புற சவால்களை கையாளும் திறன் 2025-ல் சோதிக்கப்படலாம். கொள்கை வகுப்பாளர்கள் இந்த அபாயத்திற்கு தயாராக வேண்டும்.




Original article:

Share:

தமிழ்நாடு பெண் கல்வியில் முன்னணியில் திகழ்கிறது: ”புதுமைப் பெண்” திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

  “ஒரு ஆண் உயர்கல்வியில் நுழைவது கல்வி வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், ஒரு பெண் கல்லூரிக்குச் செல்லும்போது அல்லது ஆராய்ச்சியைத் தொடரும்போது, ​​அது ஒரு சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும்” என்று என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

 

முதல்வர் மு.க. ஸ்டாலின், டிசம்பர் 30, 2024 திங்கள் அன்று “புதுமைப் பெண்” திட்டம் (‘Pudumai Penn scheme’) பற்றி பேசினார். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்ற கழகம் அளித்த வாக்குறுதிகளில் இது இல்லை என்று அவர் கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியது. பெண் குழந்தைகள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

“புதுமைப் பெண்” திட்டம் (‘Pudumai Penn scheme’) எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது ? 


புதுமை பெண் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் இளம் பெண்களுக்கு இத்திட்டம் மாதம் தோறும் நிதியுதவி வழங்குகிறது.


தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் காசோலைகளை வழங்கினார். 


மாணவிகளை "நாளைய சாதனையாளர்கள்" என்று குறிப்பிட்ட முதலமைச்சர், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும், பல மாநிலங்கள் திராவிட மாதிரியைப் பின்பற்றுவதாகவும் கூறினார். வேலைவாய்ப்பு, உயர்கல்வி, ஆராய்ச்சி என எந்த துறையாக இருந்தாலும் தேசிய அளவில் தமிழ்நாட்டு பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் என்று  கூறினார்.




“ஒரு சமூகப் புரட்சி” 


பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை திமுக பின்பற்றுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மகளிர் மேம்பாட்டிற்காக கட்சி அயராது பாடுபடும் என்று உறுதியளித்தார்.


முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் கல்வி வரலாறு குறித்து பேசினார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அனைவருக்கும் கல்வி இயக்கத்தை நீதிக்கட்சி துவக்கியது என்றார். இது பலர் தங்கள் பெயர்களைப் படிக்கவும், எழுதவும், கையொப்பமிடவும் கற்றுக்கொள்ள உதவியது. பின்னர், கலைஞர் கருணாநிதியின் தலைமையில், அரசு (1969-75) மாநிலத்தில் 97 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறந்தது. மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கென தனித்துவமான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


இலவச பயணத் திட்டம் 


தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை வழங்க அரசு முடிவு செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 567 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 


விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்த ஸ்டாலின், எதிர்க்கட்சியின் இடையூறுகளையும் மற்றும் ஒன்றிய அரசின் ஒத்துழையாமையையும் மீறி, இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று கூறினார். 


பெண்களுக்கான உயர்கல்வி, குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்களை குறைக்க உதவுகிறது என்று  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதன் மூலம் பெண்கள் தேவையான அதிகாரம் பெறுகிறார்கள். பாடசாலை முடிந்து படிப்பை நிறுத்திய பல பெண்கள் தற்போது உயர் கல்வியை தொடர்வதாக என்று முதலைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசின் “புதுமைப் பெண்” திட்டமே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்றும் கூறினார்.

“என்னுடைய  பொறுப்பு”


"புதுமைப் பெண் திட்டம்” கருவூலத்திற்கு (exchequer) அதிக செலவை உருவாக்கி இருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கல்வியை கற்பிக்க ஆர்வமாக இருப்பது போல, உங்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவது என்னுடைய பொறுப்பு" என்று  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.




Original article:

Share: