இந்தியாவில் காபி உற்பத்தியின் புவியியல் பரவலைப் பற்றிய விவாதம் - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. ரொபஸ்டா காபி (Robusta coffee) விலையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக கடுமையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரோபஸ்டா உலகளாவிய காபி உற்பத்தியில் 40%க்கும் அதிகமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காடழிப்பு ஒழுங்குமுறைக்கு (new deforestation regulation) முன்னதாக இருப்பு வைப்பதன் மூலம் இது பாதிக்கப்படுகிறது. இந்த ஒழுங்குமுறை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காபி மற்றும் பிற விவசாய ஏற்றுமதிகளின் விலையை அதிகரிக்கலாம்.


2. இந்தியாவின் காபி ஏற்றுமதியானது நிதியாண்டு-2024 இல் ஏப்ரல் மற்றும் நவம்பர் இடையே $1,146.9 மில்லியனை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் $803.8 மில்லியனுடன் ஒப்பிடப்பட்டது. இது 29% அதிகரிப்பைக் காட்டுகிறது. 460 மில்லியன் டாலர்களாக இருந்த நிதியாண்டு-2021-ன் அதே காலக்கட்டத்தில் இருந்த ஏற்றுமதியை விட இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காகும்.


3. உலகளாவிய ரோபஸ்டா விலைகள் பல பத்தாண்டுகளில் மிக அதிகளவை எட்டியுள்ளன. வியட்நாம் மற்றும் பிரேசில் போன்ற முக்கிய காபி உற்பத்தி செய்யும் நாடுகளில் விநியோக பிரச்சனைகள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.


4. குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளர்களில் ஒருவரான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து புதிய சந்தைகளைப் பெறுவதற்கான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் சிறிய மாற்றம் காணப்பட்டது. 


5. இந்த மாத தொடக்கத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் (United States Department of Agriculture (USDA)) அறிக்கை, பிரேசிலில் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை பழங்கள் வளரும் காலத்தை பாதித்தது. இதனால் அரேபிகா (Arabica) மற்றும் ரோபஸ்டா (Robusta) விளைச்சல் எதிர்பார்த்த அளவைவிட குறைந்துவிட்டது.


6. குறிப்பிடத்தக்க வகையில், பிரேசில் உலகின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது. இது உலகளாவிய உற்பத்தியில் சுமார் 40 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதற்கிடையில், இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளரான வியட்நாமும் குறைந்த உற்பத்திக்கான கணிப்புகளை அறிவித்துள்ளது. 


7. காபி வாரியத் தரவுகளின்படி, அரேபிகா மற்றும் ரோபஸ்டா காபி உற்பத்தியில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் 2,48,020 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. கர்நாடகாவின் சிக்கமகளூரு, குடகு மற்றும் ஹாசன் ஆகியவை இந்த உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. கேரளா 72,425 மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 18,700 மெட்ரிக் டன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.


உங்களுக்கு தெரியுமா


1. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் சிறந்த ஏற்றுமதிக்கான இலக்கு ஐரோப்பிய ஒன்றியமாகும். இதில்,  இத்தாலி, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகியவை மொத்த காபி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன. மற்ற குறிப்பிடத்தக்க இடங்களில், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இவை மொத்த ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் காபி உற்பத்தியில் அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. 


2. ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் பொருட்கள் காடழிப்பு நிலத்திலிருந்து பெறப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (European Union’s Deforestation Regulation (EUDR)) டிசம்பரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் ஒழுங்குமுறையின் காலக்கெடுவை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க முடிவு செய்தது. 


3. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) என்ற சிந்தனைக் குழுவானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) மற்ற நாடுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை பாதிக்கும் என்று கணித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் விவசாய ஏற்றுமதி மதிப்பு $1.3 பில்லியன் ஆகும். ஏனென்றால், போட்டியிடும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காடழிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 




Original article:

Share:

மணிப்பூரில் நடக்கும் இனக்கலவரத்திற்கு காரணம் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில், 2023-ம் ஆண்டில் கிளர்ச்சி தொடர்பான வன்முறை அதிகரித்ததாக உள்துறை அமைச்சகம் (MHA) குறிப்பிட்டிருந்தது. இதில், முக்கியமாக மணிப்பூரில் உள்ள இனக்கலவரத்தின் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. மெய்தேய், நாகா, குகி, சோமி மற்றும் ஹ்மார் குழுக்கள் உட்பட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களின் நடவடிக்கைகளால் மணிப்பூர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.


2. 2023-ம் ஆண்டில் வட-கிழக்கு பிராந்தியத்தில் (North-East Region (NER)) நடந்த வன்முறை சம்பவங்களில் மணிப்பூர் 77% என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மணிப்பூரில் 187 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில், முழு வட-கிழக்கு பிராந்தியத்தில் (NER) 243 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக கிளர்ச்சியாளர்கள், 184 பேர் கைது, 49 ஆயுதங்கள் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக, 80 கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் சரணடைந்தனர். மேலும், 31 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


3. மணிப்பூருக்கு ஒன்றிய அரசு சிறப்பு உதவி வழங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு மார்ச் 31 வரை ரூ.247.26 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


4. தரவுகளின்படி, 2021-ம் ஆண்டில் 209 கிளர்ச்சி தொடர்பான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 23 பொதுமக்கள், எட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 686 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 1,473 தீவிரவாதிகள் சரணடைந்தனர், 368 ஆயுதங்கள் மீட்கப்பட்டன, 471 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன, 94 பேர் கடத்தப்பட்டனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


5. இந்த ஆண்டு மார்ச் 31 வரை, 77 கிளர்ச்சி தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில், ஒன்பது பொதுமக்களும், நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஐம்பத்து மூன்று பேர் கடத்தப்பட்டனர். நூற்று இருபத்தைந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர், 25 பேர் சரணடைந்தனர். ஐம்பத்தொரு ஆயுதங்கள் மீட்கப்பட்டன, ஏழு ஆயுதங்கள் திருப்பி அனுப்பப்பட்டன என்று அறிக்கை கூறுகிறது.


7. அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஹெலிகாப்டர் மானியத் திட்டத்தை (helicopter subsidy scheme) உள்துறை அமைச்சகம் (MHA) செயல்படுத்துகிறது.


உங்களுக்கு தெரியுமா?


1. மணிப்பூரில் உள்ள மிகப்பெரிய சமூகம் மெய்தேயி இனத்தவர் ஆவர். அரசால், அங்கீகரிக்கப்பட்ட 34 பழங்குடியினர் உள்ளனர். அவை 'ஏதேனும் குக்கி பழங்குடியினர்' (Any Kuki Tribes) மற்றும் 'ஏதேனும் நாகா பழங்குடியினர்' (Any Naga Tribes) என பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் மத்திய பள்ளத்தாக்கு மணிப்பூரின் நிலப்பரப்பில் சுமார் 10% ஆகும். மேலும், இது முதன்மையாக மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 64.6% உள்ள மெய்தேய் (Meitei) மற்றும் மெய்தேய் பங்கல்களின் (Meitei Pangals) தாயகமாகும். மாநிலத்தின் புவியியல் பரப்பளவில் மீதமுள்ள 90% பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளை உள்ளடக்கியது. அவை, அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினரின் தாயகமாகும். இது மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 35.4% ஆகும். 


2. மே 3, 2023 அன்று, மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கின் பெரும்பான்மைக் குழுவான மெய்தேய் மற்றும் சுற்றியுள்ள மலைகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கு (Kuki-Zo tribals) இடையே இன வன்முறை வெடித்தது. பழங்குடியினரின் அமைதியின்மையைக் கையாள்வதில் ஒரு முக்கிய பாடத்தை இந்திய அரசு மறந்துவிட்டதாகத் தெரிகிறது. வன்முறையை நிறுத்துவதே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். 


இருப்பினும், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளால் இது விரைவாகப் பின்பற்றப்பட வேண்டும். ஒரு நடுத்தர நிலத்தைக் கண்டுபிடித்து வேறுபாடுகளை சரிசெய்ய வேண்டியது அவசியம். பல்வேறு நிலைகளில் அமைதிக் குழுக்கள் (Peace committees) அமைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் நேர்மையைக் காட்டவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் அரசியல் முயற்சிகள் தேவை. இந்த அணுகுமுறை WHAM அணுகுமுறை எனப்படும் இதயங்களையும் மனதையும் வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share:

ஐஏஎஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த 2012 மற்றும் 2016-க்கு இடையில் 2.74 லட்சத்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்களை (gun licences) வழங்கியதில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட நீதிபதிகள் (district magistrates (DM)), துணை ஆணையர்கள் (deputy commissioners) மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரிகளால் "பணப் பரிசீலனைகளுக்கு" (monetary considerations) ஈடாக உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த முறைகேட்டின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


2. வழக்கின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தில் அக்டோபரில் தெரிவித்தது. 16 முன்னாள் மாவட்ட நீதிபதிகளுக்கு இந்த ஒப்புதல் தேவை. இவர்களில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளும், 3 கர்நாடக நிர்வாக சேவை அதிகாரிகளும் (KAS officers) அடங்குவர். முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டபோது அதிகாரிகள் சட்டவிரோதமாக துப்பாக்கி உரிமங்களை வழங்கியுள்ளனர். தகுதி இல்லாதவர்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டது. இது நாடு முழுவதும் நடந்தது.


3. நவம்பர் 25 அன்று, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஷி ரப்ஸ்தான் மற்றும் நீதிபதி எம்.ஏ. சௌத்ரி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற நடுவர் அமர்வு (Division Bench), இந்த வழக்கில் "தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு" குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது. சிபிஐ ஏற்கனவே விசாரணையை முடித்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அவர்கள் மீது வழக்குத் தொடர இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

 

உங்களுக்கு தெரியுமா?


1. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஒன்றிய அரசின் பணிகளில் தவறு செய்யும் போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளது. மாநில அரசால் தொடரப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளில், விசாரணைக்குப் பின்னர் சரியான தண்டனை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசே தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்ததாகும். 


2. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவுகளையும் ஒன்றிய அரசு பரிசீலிக்கிறது. கடந்த ஓராண்டில் 8 வழக்குகள் தொடர ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


3. அனைத்து இந்திய சேவைகள் (இறப்பு மற்றும் ஓய்வு பலன்கள்) விதிகள் (All India Services (Death-cum-retirement Benefits) Rules) 1958-ன் விதி 16-ன் துணை விதி 3-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)), நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்கள் ஆவார்.




Original article:

Share:

2024-ம் ஆண்டில் நான்கு ஐ.நா சுற்றுச்சூழல் உச்சி மாநாடுகள் தோல்வியடைந்தன. இதற்கு என்ன காரணம்? - இந்து கே.மூர்த்தி

 தேசிய முன்னுரிமைகளில் உள்ள முக்கிய வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தை முறிந்தது. நாடுகளின் வளர்ச்சிக்கான சவால்கள், பொருளாதார தடைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆகியவற்றுடன் பல சவால்களை மேற்கொள்ளும் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளிடமிருந்து அதிக தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் நிதி ஆதரவையும் பலமுறை கோருகின்றன. 


முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கையாள்வதில் ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டது. இதில் முக்கியமாக, காலநிலை உச்சிமாநாடுகளில் நான்கு விதமாக குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைய முடியவில்லை. இவை, கொலம்பியாவில் (பல்லுயிர் பெருக்கம்), அஜர்பைஜான் (காலநிலை), சவுதி அரேபியா (நிலச் சீரழிவு) மற்றும் தென் கொரியா (பிளாஸ்டிக்) ஆகிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் பல சவால்களை ஏற்படுத்துகிறது.


இந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்கள் அரசாங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து தங்கள் இலக்குகள் சீரமைக்கப்படுவதை உறுதி செய்யவும், சமமான பொறுப்புணர்வை உருவாக்கவும், நடவடிக்கைக்கு போதுமான நிதியைத் திரட்டவும் உதவி செய்தன. இருப்பினும், உச்சிமாநாடுகள் எதுவும் தங்கள் நோக்கங்களை நிவர்த்தி செய்வதில் முழுமையாக வெற்றிபெறவில்லை. பல்லுயிர் இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி மாசுபாடு பற்றிய ஐ.நா.வின் விவாதங்கள் வலுவான ஒப்பந்தங்கள் அல்லது திருப்திகரமான முடிவுகள் இல்லாமல் முடிவடைந்ததை இது நான்காவது முறையாக தெளிவுப்படுத்துகிறது.


இந்த பின்னடைவு பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க உலகளாவிய முயற்சிகளுக்கு ஒரு பெரிய அடியாகும். காலநிலை நிதி, வறட்சி தணிப்பு மற்றும் நெகிழி மாசுபாடு போன்ற அவசரப் பிரச்சினைகளில் இது தாமதமாகலாம். மிகவும் ஆபத்தில் இருக்கும் நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.


இந்த பேச்சுவார்த்தைகளின் பகுதியளவு அல்லது முழுமையான தோல்வியானது தீவிரமான கவலைகளை எடுத்துக்காட்டுகிறது. பல்லுயிர் இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் உலகின் திறனை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த பின்னடைவுகள் ஏன் நிகழ்ந்தன மற்றும் அவை உலகளாவிய ஒத்துழைப்புக்கு என்ன அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதற்கு இந்த அறிவு முக்கியமானது.


மாறுபட்ட தேசிய நலன்கள் 


தேசிய முன்னுரிமைகளில் உள்ள முக்கிய வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தை முறிந்தது. நாடுகளின் வளர்ச்சிக்கான சவால்கள், பொருளாதார தடைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆகியவற்றுடன் பல சவால்களை மேற்கொள்ளும் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளிடமிருந்து அதிக தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் நிதி ஆதரவையும் பலமுறை கோருகின்றன.  ஆனால், வளர்ந்த நாடுகள் அதிக வளங்களை வழங்கத் தயங்குகின்றன. இதற்கு உள்நாட்டு அரசியல் அழுத்தங்களே காரணம் எனக் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த பொருளாதார சவால்களையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


எடுத்துக்காட்டாக, நிலையான நில பயன்பாட்டு நடைமுறைகளை ஆதரிப்பதற்கான நிதி வழிமுறைகளில் நாடுகள் உடன்படத் தவறியதால் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த கொலம்பியா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இவை, ஆண்டுக்கு 700 பில்லியன் டாலர் தேவையை வழங்குவதற்கு தயாராக இல்லாத நாடுகளுடன் பாதுகாப்புக்கு நிதியளிப்பது ஒரு தடையாக இருந்தது. அஜர்பைஜானில், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளிடமிருந்து ஆண்டுக்கு 1.3 டிரில்லியன் டாலர் கோரின. இதில், வளர்ந்த நாடுகள் தொகையை அதிகரிக்க சம்மதம் தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்தப் பணம் தனியார் முதலீடு உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து வரும்.


அஜர்பைஜானில், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்கான உறுதிமொழியில் நாடுகள் உடன்படவில்லை. இது, கடந்த ஐநா காலநிலை உச்சி மாநாட்டின் போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. தென் கொரியாவில் நடந்த நெகிழி மாசுபாடு பேச்சுவார்த்தைகள் பங்கேற்கும் நாடுகளிடையே குறிப்பிடத்தக்க பிளவை முன்னிலைப்படுத்தின. இந்தக் கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டை எட்டாமல் முடிவடைந்தது. ஏனென்றால், நெகிழித் தேவைகளை நம்பியிருக்கும் பொருளாதாரங்களை நம்பியிருக்கும் நாடுகள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை எதிர்த்தன. அதற்குப் பதிலாக, நெகிழிக் கழிவுகளை முறையாகப் பயன்படுத்தவும், மறுசுழற்சி செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். 


ஒருமித்த கருத்துகள் மற்றும் நெருக்கடிகள் 


சுற்றுச்சூழல் இலக்குகளை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் செயல்படுத்துவது என்பதில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பல பேச்சுக்கள் சிரமங்களை எதிர்கொண்டன. அஜர்பைஜானில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உலகளாவிய பங்குகளை செயல்படுத்துவது பற்றிய விவாதங்கள் பிளவுகளை வெளிப்படுத்தின. கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான பொறுப்புத் தன்மைக்கான வழிமுறைகள், குறிப்பாக அதிக உமிழ்வு நாடுகளுக்கு முக்கியப் பிரச்சினையாக இருந்தது.


சவுதி அரேபியாவில், தொழில்மயமான நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுடன் சட்டப்பூர்வ வறட்சி நெறிமுறைக்கு (drought protocol) உடன்படவில்லை. தொழில்மயமான நாடுகள் பரந்த செயல்பாட்டுக் கட்டமைப்பை விரும்பின. இதற்கிடையில், ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதார உறுதிப்பாடுகளுடன் தெளிவான திட்டத்தைக் கோரின.


COVID-19 தொற்றுநோய், பொருளாதார நிலையின்மை மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற உலகளாவிய நெருக்கடிகள் சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கு பெரும் சவால்களை உருவாக்கியுள்ளன. இந்த சிக்கல்கள் அவசர சுற்றுச்சூழல் தேவைகளிலிருந்து கவனத்தையும் வளங்களையும் திசை திருப்பியுள்ளன. பொது சுகாதாரம், பொருளாதார மீட்பு மற்றும் சமூக நிலைத்தன்மை போன்ற உள்நாட்டு கவலைகளை வெளிப்படுத்துவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்துகின்றன.


பல நாடுகளுக்கு, குறிப்பாக குறைந்த வளங்கள் அல்லது திறன் கொண்ட நாடுகளுக்கு, நீண்ட கால நிலைத்தன்மை இலக்குகளுடன் பொருளாதார மீட்சியை சமநிலைப்படுத்துவது கடினமாகிவிட்டது. இது திறம்பட பேச்சுவார்த்தை நடத்தும் அவர்களின் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, லட்சியமான சுற்றுச்சூழல் இலக்குகளை அவர்கள் குறைவாக விரும்புகின்றனர் அல்லது செய்ய முடியும். குறிப்பாக, வளரும் பொருளாதாரங்கள் பணவீக்கம், கடன் சுமைகள் மற்றும் காலநிலை பாதிப்புகளுடன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சவால்களை வழிநடத்துவதால் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றன. இது பணக்கார நாடுகளிடமிருந்து அதிக நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்கான அழைப்புகளுக்கு வழிவகுக்கிறது. 


வளர்ந்து வரும் பிளவு, ஒருமித்த கருத்து இல்லாமை 


உலகளாவிய பேச்சுவார்த்தைகளில் இந்த பின்னடைவுகள் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் பணியை சிக்கலாக்குகின்றன. 


தாமதமான நடவடிக்கை : கட்டமைப்புகளில் உடன்படத் தவறியது மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது பல்லுயிர் இழப்பு, காலநிலை மாற்றம், நிலச் சீரழிவு மற்றும் பிளாஸ்டிக் மாசு போன்ற உலகளாவிய பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான முக்கியமான நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது. இந்த தாமதமானது, மீளமுடியாத முனைப்புள்ளிகளை அடைவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது, இது உலகளாவிய சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.


பொருத்தமற்ற, பகுதியளவான முயற்சிகள் : பலதரப்பு செயல்முறைகள் தடுமாறும்போது, நாடுகள் ஒருதலைப்பட்சமான பிராந்திய நடவடிக்கைக்கு திரும்பும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்த முன்முயற்சிகள் முன்னேற்றம் அடையலாம், ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நியாயமாகவும் விரிவாகவும் தீர்க்கத் தேவையான உலகளாவிய ஒருங்கிணைப்பு இல்லை. மேலும், நாடுகளிடையே ஒத்துழைப்பின்மையால் இது புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


நம்பிக்கை இழப்பு : பேச்சுவார்த்தைகளில் மீண்டும் மீண்டும் தோல்விகள் நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது. இது எதிர்கால ஒத்துழைப்பை இன்னும் கடினமாக்குகிறது. 


எதிர்கால உச்சிமாநாடுகள் மீதான அழுத்தம் : சுற்றுச்சூழல் குறித்த பல உலகளாவிய பேச்சுவார்த்தைகளின் தோல்வி வரவிருக்கும் கூட்டங்களை அர்த்தமுள்ள முடிவுகளை வழங்க மேலும் கட்டாயப்படுத்துகிறது. 


உத்வேகத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் 


உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளை முன்னெடுக்க, பல முக்கிய உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்கு காலநிலை நிதி முக்கியமானது. பணக்கார நாடுகள் வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இது பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் நியாயமான அடித்தளத்தை உருவாக்கும் மற்றும் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான நம்பிக்கை இடைவெளிகளை குறைக்க உதவும்.  முன்னேற்றத்தைக் கண்காணிக்க வலுவான வழிமுறைகளை நிறுவுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத் தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் நாடுகள் தங்கள் கடமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதன் அவசியம் சமமாக முக்கியமானது. பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும்.  


புவிசார் அரசியல் பதட்டங்களை நிவர்த்தி செய்வதற்கும், அனைத்து நாட்டு தலைவர்களின் குரல்களும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் குரல்கள் பேச்சுவார்த்தைகளில் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கும் உள்ளடக்கிய இராஜதந்திரம் அவசியம். சமமான பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம், உலகளாவிய ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாகவும் நெகிழ்திறன் கொண்டதாகவும் மாறும். கூடுதலாக, செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். லட்சிய வாக்குறுதிகளிலிருந்து உண்மையான செயல்களுக்கு முக்கியத்துவம் மாற வேண்டும். இந்த நடவடிக்கைகள் அளவிடக்கூடிய விளைவுகளால் ஆதரிக்கப்பட வேண்டும். பரந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த நடைமுறை அணுகுமுறை முன்னேற உதவுகிறது.


இறுதியாக, பல்லுயிர் இழப்பு, நிலச் சீரழிவு, பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை ஒப்புக்கொள்வதும் உரையாற்றுவதும் முக்கியம். இவை அனைத்தும்  ஒன்றுக்கொன்று மோசமடையச் செய்யும் இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் நெருக்கடிகள். காலநிலை மாற்றம் வாழ்விட அழிவை துரிதப்படுத்துகிறது, இது பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில், காடுகள் அழிக்கப்பட்ட நிலங்கள், பாலைவனங்கள் மற்றும் அதிகப்படியான மண் போன்ற சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கார்பனை வெளியிடுகின்றன, இது புவி வெப்பமடைதலை மோசமாக்குகிறது.


இதேபோல், பிளாஸ்டிக் மாசுபாடு கடல் மற்றும் நிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் அதன் உற்பத்தி மற்றும் சீரழிவின் போது பசுமை இல்ல வாயு (greenhouse gas) உமிழ்வுக்கு பங்களிக்கிறது. இந்த பிரச்சினைகளை தனித்தனியாகத் தீர்ப்பது போதுமானதாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உலகளாவிய சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தைகள் இந்த ஒன்றோடொன்று தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த உத்திகளை வளர்க்க வேண்டும். சீரழிந்த நிலப்பரப்புகளை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் போது மாசுபாட்டைக் குறைக்க வேண்டும். 


சவால்கள் மகத்தானவை. ஆனால் பங்குகள் இன்னும் அதிகமாக உள்ளன. சுற்றுச்சூழல் நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், உலகத்தால் அதிக முட்டுக்கட்டைகளை தாங்க முடியாது. நாடுகள் குறுகிய கால நலன்களுக்கு அப்பால் பார்க்க வேண்டும் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


இந்து கே.மூர்த்தி, ஆராய்ச்சி அடிப்படையிலான சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தில் (CSTEP) காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை துறையை வழிநடத்துகிறார்.




Original article:

Share:

ஆங்கிலக் கல்வி: இரு மொழிக் கொள்கைக்கான கருத்தாக்கம் -ரா. ஷிவா

 கடந்த பத்தாண்டுகளாக, இந்தியாவில் "நவீனமயமாக்கல்" என்பது பெரிய சீர்திருத்தங்களாக முன்வைக்கப்பட்ட சிறிய மாற்றங்களைக் குறிக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் உற்சாகத்துடன் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், உண்மையான முயற்சியுடன் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறை நன்கு தெரிந்ததே: உண்மையான முன்னேற்றம் நிறுவப்பட்ட படிநிலைகளை சீர்குலைக்க அச்சுறுத்தும் போது, ​​அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரிய மாற்றங்களை எதிர்க்கின்றனர்.


மொழிக் கொள்கையும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு வலுவான தீர்வுகள் தேவை, ஆனால் உண்மையான மாற்றங்களைக் காட்டிலும் குறியீட்டுச் செயல்களையே அதிகம் பார்த்திருக்கிறோம்.  விளைவு?


நமது பெரிய இலக்குகளுக்கும் பலவீனமான செயல்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதால், வரலாற்று ஏற்றத்தாழ்வுகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஒரு லட்சிய, இருமொழி அணுகுமுறை இந்த இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளடக்கிய கல்வி உண்மையான சமூக முன்னேற்றம் (social mobility) மற்றும் தேசிய வளர்ச்சியை அடைய மனநிறைவை சவால் செய்ய வேண்டும் என்பதை அது புரிந்துகொள்கிறது.


ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக இருப்பதை உறுதிசெய்யும் சவாலில் லட்சியத்திற்கும் தயக்கத்திற்கும் இடையிலான பதற்றம் தெளிவாக உள்ளது. பல ஆண்டுகளாக, கல்வியில் "நவீனமயமாக்கல்" (“modernisation”) என்பது தற்போதுள்ள கட்டமைப்புகளுக்கு சிறிய மேம்பாடுகளாக அடிக்கடி மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இவை மாற்றம் மற்றும் நம்பிக்கையின் முழக்கங்களால் மூடப்பட்டிருக்கும். இதை தவிர்க்க முடியாதது என ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைப்புகள் மெதுவாக நகர்கின்றன. அவர்கள் முன்முயற்சிகளை அறிவிக்கிறார்கள். ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்த உறுதி இல்லை. இந்த மேலோட்டமான முயற்சிகள் வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை இன்னும் மோசமாக்குகின்றன. இதன் விளைவாக, உண்மையான கல்வி சீர்திருத்தம் தேவைப்படுபவர்கள் (substantive educational reform) பின்தங்கியுள்ளனர்.

அதிகரிப்பு (Incrementalism) VS தைரியமான சீர்திருத்தம்


இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு மொழிக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இருப்பினும், ஒரே பொதுவான மொழியின் யோசனை (single lingua franca) தேசத்தை ஒன்றிணைக்கவில்லை அல்லது அனைவருக்கும் செழிப்பை உறுதிப்படுத்தவில்லை. உண்மையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள பெற்றோர்கள் ஒரு பொதுவான இலக்கைப் பகிர்ந்து கொள்கிறார்கள்: அவர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் கற்க விரும்புகிறார்கள். ஏனென்றால் ஆங்கிலம், சிறந்த ஊதியம் பெறும் வேலைகள், சர்வதேச வாய்ப்புகள் மற்றும் சமூக நடமாட்டத்திற்கான கதவுகளைத் திறக்கிறது.


அதே நேரத்தில், கல்வி வல்லுநர்கள் அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் சுய பிரதிபலிப்பை மேம்படுத்துவதில் தாய்மொழியின் (mother tongue) முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றனர். ஒரு நபர் தனது தாய்மொழியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கும்போது எந்த மொழியையும் கற்றுக்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.


இரண்டு பார்வைகளும் ஒன்றாகக் கருதப்பட வேண்டும், ரத்து செய்யப்படக்கூடாது. குழந்தைகளின் தாய்மொழியைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளமாக வைத்திருக்கும் கொள்கை, அதேசமயத்தில் அவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறுவதை உறுதிசெய்வது, நீண்டகால கல்வி ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும். இந்த அணுகுமுறை உலகளவில் இந்தியாவின் பயன்படுத்தப்படாத திறனைத் மேம்படுத்த உதவும். சிறிய முயற்சிகள் பெரிய முன்னேற்றங்களாக முன்வைப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இருப்பினும், குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல், உள்ளடக்கிய முன்னேற்றத்தின் இலக்கை அடைய முடியாமல் போகலாம். தற்போதைய அமைப்புகள் மற்றும் நடைமுறைகளின் நிலைத்தன்மையால் இது தடுக்கப்படும்.


ஏன் ஆங்கிலம் முக்கியம் மற்றும் ஏன் தாய்மொழி இன்னும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது


ஆங்கிலம் வெளியுறவு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மொழியாக மாறியுள்ளது. இந்தியாவில், மருத்துவம், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் இது மிகவும் முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு மற்றும் விரைவான கண்டுபிடிப்புகளால் இயக்கப்படும் டிஜிட்டல் யுகம் ஆங்கிலத்தை இன்னும் முக்கியமானதாக மாற்றியுள்ளது. ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாதவர்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடும். இந்த வாய்ப்புகள் தனிப்பட்ட வெற்றிக்கும், அவர்களின் சமூகங்களின் வளர்ச்சிக்கும், தேசத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கியமாகும்.


தாய்மொழி அறிவுறுத்தல் ஒரு முக்கியமான அறிவாற்றல் பலனை வழங்குகிறது. வீட்டில் பேசப்படும் மொழியில் கற்பிக்கும் போது குழந்தைகள் சிக்கலான கருத்துக்களைக் கற்றுக்கொள்வது மற்றும் வலுவான கலாச்சார அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வது எளிது. ஆங்கிலத்தையும் உள்ளூர் மொழிகளையும் எதிர் எதிர் மொழிகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, கல்விக் கொள்கைகள் அவற்றை பூர்த்தி செய்யும் கருவிகளாகப் பார்க்க வேண்டும். குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு இரு மொழிக் கொள்கை மிகவும் முக்கியமானது.


அணுகல் இடைவெளிகளை விரிவுபடுத்துகிறது


இந்தியாவின் மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினர், முக்கியமாக பணக்கார, நகர்ப்புறங்களில் இருந்து, தரமான ஆங்கிலக் கல்வியைப் பெறுகிறார்கள் என்று சமீபத்திய தரவு காட்டுகிறது. உள்ளூர் மொழிகள் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளில் ஆங்கிலத்தை நன்றாகக் கற்பிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இது பணக்காரர்களையும் ஏழைகளையும் பிரிக்கிறது. பல குடும்பங்கள் வறுமையிலிருந்து தப்பிக்க போராடுகின்றன.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10%க்கும் அதிகமான இந்தியர்கள் ஓரளவு ஆங்கிலம் பேச முடியும். இருப்பினும், 2019ஆம் ஆண்டு லோக் அறக்கட்டளை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (Centre for Monitoring Indian Economy) ஆகியவற்றின் ஆய்வில் 6% பேர் மட்டுமே ஆங்கிலம் பேச முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த இடைவெளி ஆங்கிலக் கல்விக்கான சமமற்ற அணுகலை எடுத்துக்காட்டுகிறது மற்றும் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை பெரிதாக்குகிறது. வளர்ச்சி மற்றும் சமூக இயக்கத்திற்கான அதன் இலக்குகளை அடைவதை இந்தியாவுக்கு இது கடினமாக்குகிறது.


மாற்றுக் கொள்கை அணுகுமுறை


முழுமை பெறாத முயற்சிகளைத் தாண்டி செல்ல இந்தியாவுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு வலுவானத் திட்டம், அனைத்து குழந்தைகளும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் நல்ல திறன்களுடன் பட்டம் பெறுவதை உறுதி செய்யும். இதைச் செய்ய, இந்தியாவுக்கு தெளிவான கொள்கைகள், போதுமான நிதி மற்றும் வலுவான தலைமை தேவை. இதற்கு, மூன்று முக்கிய கூறுகள் முக்கியமானவை. அவை :


அர்ப்பணிப்புள்ள தேசிய ஆணையம்: இந்த அமைப்பு மொழி இடைவெளியை மதிப்பிடுவதோடு, ஆங்கிலம் கற்க கலாச்சார, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு தடைகளை அடையாளம் காணும். பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கு உதவித்தொகை, அதிக ஊதியம் மற்றும் கிராமப்புற சேவைக்கான படிகள் (rural service allowances) போன்ற சலுகைகளை இது பரிந்துரைக்கலாம். பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றத்தை ஆணையம் தெரிவிக்க வேண்டும்.


பாடத்திட்டத்தின் மறுசீரமைப்பு மற்றும் ஆரம்பகால தலையீடு: ஆரம்பப் பள்ளி ஆண்டுகளில் இருந்து ஆங்கிலத்தை அறிமுகப்படுத்துவது, தாய்மொழியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், மாணவர்கள் பட்டப்படிப்பு மூலம் அடிப்படை மற்றும் மேம்பட்ட மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும். இந்த புதிய அணுகுமுறைக்கு தொடர்ச்சியான அரசியல் ஆதரவும் நிதியுதவியும் தேவைப்படுகிறது. இரு மொழிகளையும் திறம்பட கற்பிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் கருவிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதும் முக்கியம்.


பெற்றோரின் தேவைகளுக்கு மதிப்பளித்தல்: பெற்றோரின் விருப்பத்திற்கு முரணாக இருந்தால் எந்த மொழிக் கொள்கையும் வெற்றி பெறாது. ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் குடும்பங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஆங்கிலம் உள்ளூர் மொழிகளை மாற்றாது, ஆனால் உலகளாவிய உலகத்துடன் சமூகங்களை இணைக்க உதவுகிறது என்பதைக் காட்டுகிறது. பெற்றோர்களை ஈடுபடுத்துவது இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தக் கொள்கை உறுதி செய்கிறது.


இந்தியாவின் முழுத் திறனுக்கு வாய்ப்பளித்தல் 


ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆங்கிலம் கற்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களின் தாய்மொழியைப் பாதுகாப்பது இந்தியாவின் வளர்ச்சியையும் உலகளாவிய செல்வாக்கையும் அதிகரிக்கும். ஆங்கிலம் பேசும் பணியாளர்கள் அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்க முடியும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை தக்கவைக்க பிராந்திய மொழிகள் இன்னும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


இந்தத் தேவை முக்கியமானதாக இருந்தாலும், எந்தப் பெரிய அரசியல் கட்சியும் இதற்கு முழு ஆதரவு அளிக்கவில்லை. இருப்பினும், கொள்கை வகுப்பாளர்கள் கேட்கவில்லை என்றாலும், பெற்றோர்கள் அதைக் கோருகின்றனர். ஆங்கிலம் ஒரு ஆடம்பரம் மட்டுமல்ல அது சமூக இயக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான முக்கியமான கருவி என்பதை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.


கல்வியை மறுபரிசீலனை செய்தல்


முக்கிய கேள்வி: இந்த முக்கியமான வாய்ப்பை "நாம் செய்வோம்" (we will)) என்பதற்கு பதிலாக "நம்மால் முடியும்" (we can) என்று வெற்று வாக்குறுதிகளுடன் கடந்து செல்வோமா? அல்லது உலகளாவிய இருமொழி, உள்ளூர் மொழிகளை மதிப்பது மற்றும் இந்தியாவின் உலகளாவிய இருப்பை அதிகரிக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்வோம்?


தற்போதைய, சூழ்நிலையை மாற்றுவதைவிட பராமரிப்பது எளிது. நாம் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்களின் குறைகளை கேட்பதன் மூலம் தொடங்க வேண்டும். எந்த மொழித் திறன்கள் தங்கள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே பயனளிக்கும் என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். கலாச்சார அடையாளங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவற்றை எவ்வாறு கற்பிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள நாடு தழுவிய கணக்கெடுப்பை ஏன் நடத்தக்கூடாது? அத்தகைய விவாதங்களை ஊக்குவிப்பது ஒரு பகிரப்பட்ட நோக்கத்தை உருவாக்க உதவும். முன்னேற்றம் அடிமட்ட அளவில் தொடங்க வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.


இறுதியில், பிராந்திய மொழிகளை ஆங்கிலத்துடன் இணைப்பதன் மதிப்பை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இது நாட்டை ஒருங்கிணைக்கவும் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் உதவும். மாற்றத்திற்கான எதிர்ப்பை எதிர்கொள்வதை இந்தியா தவிர்த்தால், அது இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையே தொடரும். முன்னோக்கிச் செல்ல, பெற்றோரின் நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் சமநிலையான அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும். குழந்தைகள் ஆங்கிலம் கற்கும் போது அவர்களின் தாய்மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அணுகுமுறை நாட்டை மாற்ற உதவும். இது மற்றொரு கொள்கை தேர்வு மட்டுமல்ல. வளர்ச்சி, சமூக ஒற்றுமை மற்றும் உலகளாவிய தலைவராக இந்தியா எழுச்சி பெறுவதற்கு அவசியமானது.




Original article:

Share:

மக்கள்தொகை கட்டுப்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம் எல்லை நிர்ணயத்தை எதிர்கொள்ளுதல் - எஸ். இருதய ராஜன்,எம்.ஏ. கலாம்

 தென் மாநிலங்களில் உள்ள சில அரசியல்வாதிகள் மிகவும் எளிமையான ஒரு தீர்வை வழங்குகிறார்கள்.


சமீபத்தில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் என்.சந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணய நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இடங்களை இழக்கும் வாய்ப்பு குறித்து மிகவும் வருத்தமடைந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் கருவுறுதல் மாற்றத்தில் இந்தியாவின் பிற பகுதிகளை விட முன்னணியில் இருப்பதால் இது நிகழ்கிறது. வடக்கு மாநில பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டின் (“family planning”) வெற்றி, தென்னிந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது மக்கள் குறைந்த தொகை கொண்ட மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை நிச்சயம் குறைக்கும்.


இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று சட்டம் இயற்றுவது குறித்து ஆந்திர மாநில அரசு யோசித்து வருகிறது. முன்னதாக, ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. "நாங்கள் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளோம். இப்போது, அதை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று என்.சந்திரபாபு நாயுடு கூறினார். அதிக குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கலாம்.


அதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "இன்று, மக்களவைத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நாம் ஏன் குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதோடு நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நகைச்சுவையாக, "ஏன் 16 குழந்தைகளை இலக்காகக் கொள்ளக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார். 


சீனாவின் உதாரணம் 


முதலமைச்சர்களின் எதிர்வினைகள் மற்றும் பதில்களின் வெளிச்சத்தில் எழும் கேள்வி இதுதான்: கருவுறுதல் வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா, மேலும், அதை அதிகரிக்க முயற்சிப்பதன் மூலம் அதை மாற்றியமைக்க முடியுமா? மாற்றத்தின் போது கருவுறுதல் குறைந்தால், அதை மாற்றுவது கடினம் என்பது தெளிவாகிறது. ஆனால், இயற்கையான நிகழ்வுகளின் போக்கில், காணப்படுவது போல், ஒரு சிறிய தலைகீழ் மாற்றம் இருக்கலாம். இது இருந்தபோதிலும், சில நாடுகள் ஊக்கத்தொகையை வழங்குவதன் மூலம் கருவுறுதல் போக்கை மாற்ற முயற்சிக்கின்றன. ஆனால், வெற்றி பெறவில்லை. சீனாவின் ஒரு குழந்தை கொள்கையானது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் ஒரு தீவிர முயற்சியாகும். இதனால், சீனா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பல்வேறு முனைகளில் சீன அரசு எதிர்கொள்ளும் விளைவுகளில் திருமணச் சந்தையில் உள்ள சிக்கல்கள், ஒரு சார்புச் சுமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, தலைகீழ் மாற்றத்திற்கான நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மிகக் குறைந்த கருவுறுதல் ஆகியவை அடங்கும்.

 

இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விரைவான, கட்டாய நடவடிக்கைகள் மக்கள்தொகை எண்ணிக்கையை மட்டுமே குறைக்கின்றன. அவை நீண்ட கால நன்மைகளை வழங்காது. அதனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் தொகையை குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது திட்டமிடப்படாததாகவே பார்க்க முடியும். இதற்கு, சீனாவின் நிலைமை ஒரு சிறந்த உதாரணம். குடும்பக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கும் சுமை காரணமாக நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.


இயற்கையான மாற்றத்தின் போக்கில் குறுக்கிடுவதால் ஏற்படும் சமநிலையற்ற மக்கள்தொகை (imbalanced population), பிரச்சனைகளை உருவாக்கும். இடம்பெயர்வை (migration) ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் காணப்படுவது போல, இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள் மற்றும் பிறப்புக்கு ஆதரவான மக்கள் தொகை  கொள்கைகளை (pro-natal population policy) பின்பற்றுவது பலனளிக்காமல் போகலாம். எனவே, வளர்ந்து வரும் பிரச்சினைக்கு தென் மாநிலங்களின் பதில் மிக விரைவாக இருக்கலாம் மற்றும் இந்த பதில்கள், நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்காது.

 

மாறுபட்ட மக்கள்தொகை எண்ணிக்கை 


இந்தியாவின் மாநிலங்களில் கருவுறுதல் குறைவது பிராந்தியங்கள் மற்றும் குணாதிசயங்களில் சமநிலையின் சில அறிகுறிகளைக் காட்டுகிறது. இருப்பினும், மக்கள்தொகை வளர்ச்சியானது பிராந்தியங்களுக்கிடையேயான மக்கள்தொகைப் பிரிவை (demographic divide) பரவலாக வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், மாநிலங்களுக்கிடையேயான மக்கள்தொகை எண்ணிக்கையைப் பயன்படுத்துவது அரசியல் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்க சிறந்த வழியாக இருக்காது. இது நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக அமையலாம். "ஒரு நபர், ஒரு வாக்கு" (‘One person one vote’) சிறந்தது. ஆனால், மாநிலங்களுக்கிடையேயான அரசியல் பிரதிநிதித்துவத்தில் உள்ள வேறுபாடு மிக அதிகமாக இருக்கலாம். மக்கள்தொகை எண்ணிக்கை மற்ற காரணிகளுடன் சமநிலைப்படுத்தப்படாவிட்டால், அது நியாயமற்றதாக இருக்கலாம். உதாரணமாக, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு மாநிலத்திற்கு இது நியாயமற்றதாக இருக்கும். அரசியல் விளைவுகளை வடிவமைப்பதில் முக்கியமான கல்வி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற காரணிகளை உள்ளடக்கிய மக்கள்தொகைப் பிரிவை (demographic divide) இது எடுத்துக்காட்டுகிறது.


பெண்கள் மீதான தாக்கம் 


பெண்களை அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பு செய்வதைவிட எளிதாக இருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில், குழந்தைகளைப் பெறுவதால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட இழப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. அரசின் ஆதரவு இல்லாததே இதற்குக் காரணம். கருவுறுதல் குறைவு மற்றும் பெரிய காரணத்திற்காக அதன் பலன்களை அரசு கொண்டாடும் அதே வேளையில், பெண்களின் வாழ்க்கையில் தாக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே உள்ளது. எனவே, கருவுறுதலை மாற்றியமைப்பதைக் கருத்தில் கொள்வதற்கு முன், கூடுதல் குழந்தைகளுக்கான சமூக ஆதரவை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதே சமயம் குழந்தை பெற்ற பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.


ஒரு நிலையான மக்கள்தொகையை பராமரிப்பதற்கு கருவுறுதலை மாற்றுவது  (Reversing fertility) சிறந்ததாக இருக்கலாம். இருப்பினும், பிராந்திய மக்கள் ஏற்றத்தாழ்வை குறுகிய காலத்தில் இடம்பெயர்வு மூலம் இதை தீர்க்க முடியும். மக்கள் தொகை குறைவாக இருப்பதன் தீமையும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் அதன் தாக்கமும் முக்கிய பிரச்சினையாகும். மக்கள்தொகை எண்ணிக்கையை திறன்களின் அடிப்படையில் மதிப்பிட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். எனவே, கருவுறுதலை மாற்றியமைப்பதில் தீர்வு இல்லை. மாறாக, எல்லை நிர்ணய (delimitation) நடவடிக்கையின் போது மக்கள் தொகையின் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவத்தை மறுபரிசீலனை செய்வதில் உள்ளது.


S.இருதய ராஜன், கேரளாவின் சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (International Institute of Migration and Development (IIMAD)) தலைவராக உள்ளார். M.A. கலாம், கேரளாவின் சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (IIMAD) வருகை தரும் பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share: