வரவு செலவுத் திட்டமானது ஏன் வளங்களில் மட்டுமன்றி, ஊக்கத்தொகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்? -ஆஷிமா கோயல்

 வரி குறைப்புகளுக்குப் பிறகும் பெருநிறுவன முதலீடு பெரிதாக அதிகரிக்கவில்லை. இது வளங்கள் மட்டும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்பதைக் காட்டுகிறது.


வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவில் பேரியல் பொருளாதாரக் கொள்கை குறித்த சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது வளர்ச்சியின் கட்டாயத்தைக் கருத்தில் கொண்டு புரிந்துகொள்ளத்தக்கது. தொற்றுநோய்க்குப் பிறகு, பேரியல் பொருளாதாரக் கொள்கை (macroeconomic policy) வலுவான மீட்சியை இயக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. இது வெளிப்புற அதிர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க உதவியது. இந்த சுழற்சி வளர்ச்சியையும் பாதிக்கிறது.


தேர்தல் மாதங்களில் அரசாங்க செலவினங்களைக் குறைப்பது பொருளாதார மந்தநிலைக்கு ஒரு காரணமாக அமையும். நவம்பர் மாத இறுதிக்குள், ஒன்றிய அரசு அதன் மூலதனச் செலவின இலக்கில் 46.2% மட்டுமே செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் 58.5% உடன் ஒப்பிடப்படுகிறது. இருப்பினும், அதன் வருவாய்ச் செலவு சுமார் 1% அதிகமாகும். மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.5 டிரில்லியனில் ரூ.0.88 டிரில்லியனை மட்டுமே மாநிலங்கள் செலவிட்டுள்ளன. எனவே, எதிர் சுழற்சி நிதிக் கொள்கை (countercyclical fiscal policy) அரசாங்கம் அதிகமாகச் செலவிட வேண்டுமா அல்லது வரிகளைக் குறைக்க வேண்டுமா? என்பதுடன் அரசாங்கம் அதன் செலவுக்கான இலக்குகளை அடைய நிர்ணயம் செய்ய வேண்டும். 


இருப்பினும், தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பும் முக்கியமானது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7%-க்கும் அதிகமாக உள்ளது. இது உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். வட்டி செலுத்துதல்கள் ஒன்றிய அரசின் செலவினங்களில் 19% ஆகும். கடன் மற்றும் பற்றாக்குறை விகிதங்களைக் குறைப்பது நிதி நெகிழ்வுத்தன்மை, குறைந்த ஆபத்து ஊக்கத் தொகை (risk premium) மற்றும் குறுகிய வட்டி விகிதப் பரவல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு அவசியம்.


வருவாய் செலவினம் (revenue expenditure) சீராக இருந்தபோதிலும், பொது முதலீடு குறைந்ததைத் தொடர்ந்து மந்தநிலை ஏற்பட்டது. சிறந்த செலவினத் தரம் ஒரு தூண்டுதலை வழங்குகிறது என்பதை இது காட்டுகிறது. எனவே, அதிகரித்து வரும் பொது முதலீடு தொடர வேண்டும். செலவினங்களில் செயல்திறன் இதற்கான வளங்களை விடுவிக்கும். இருப்பினும், முதலீட்டை அதிகரிக்க வளங்களை விட ஊக்கத்தொகைகள் அதிகம் தேவை. எடுத்துக்காட்டாக, மாநிலங்களின் மூலதனச் செலவினத்தை அதிகரிக்க உதவிகரமான நிபந்தனைகள் தொடர வேண்டும்.


வரி குறைப்புகளுக்குப் பிறகும் பெருநிறுவன முதலீடு பெரிதாக உயரவில்லை. இதனால், வளங்கள் மட்டும் போதாது என்பதை இது காட்டுகிறது. அதிக வளர்ச்சி மற்றும் இலாபங்கள் தனியார் நிறுவன சேமிப்பில் அதிகரிப்புக்கு வழிவகுத்தன. 1990 களுக்கு முன்பு, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதமாக இருந்தது. 2005-06-க்குப் பிறகு, இது சராசரியாக 10.7 சதவீதமாக இருந்தது. இருப்பினும், தனியார் துறை நிலையான மூலதன உருவாக்கம் 2007-08-ல் 27.5 சதவீதமாக உயர்ந்தது. 


அப்போதிருந்து, இது 2015-21 முதல் சராசரியாக 21.5 சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளது. இதன் விளைவாக, பெருநிறுவன அல்லாத வணிக வருமானத்தின் பங்கு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. வரவு செலவு திட்டத்தின் மூலம் வணிகம் அல்லாத வருமானத்தின் மீது வரி விதிக்கப்படலாம். இதை முதலீட்டு வரி வரவு மூலம் ஈடுசெய்யலாம். கூடுதலாக, வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கான தூண்டுதல்கள் இருக்கலாம்.


உள்நாட்டு சேமிப்புகள் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வெளிநாட்டு சேமிப்புகளும் இதேபோல் செயல்படுகிறது. பொருளாதாரத்திற்கான வரவுகள் பொதுவாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைவிட அதிகமாகும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) என்பது முதலீட்டிற்கும் சேமிப்புக்கும் இடையிலான வித்தியாசமாகும். வெளிநாட்டு சேமிப்பு இடைவெளியை நிதியளிக்கிறது. எனவே, அரசாங்கம் கவனிக்க வேண்டியது வளங்கள் அல்ல, முதலீடுதான். தேவைக் கட்டுப்பாட்டாக கே-வடிவ மீட்பு (K-shaped recovery) மற்றும் நுகர்வு (consumption) என்ற கருத்தை மிகைப்படுத்தலாம். சமீபத்திய சுதந்திரமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆய்வுகள், நல்ல ஒட்டுமொத்த நுகர்வு வளர்ச்சியைக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு நுகர்வு 8-9 சதவீதம் வளர்ந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு 7.3 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. குறைந்த வருமானக் குழுக்களிலும் மீட்சி ஏற்பட்டுள்ளது.


இந்திய நடுத்தர வர்க்கம் பரவலாக வரையறுக்கப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதன் எண்ணிக்கை கீழ்நிலையில் உள்ளது. 2021-ம் ஆண்டில், 31 சதவீதம் (432 மில்லியன்) மக்கள் ஆண்டுக்கு ரூ.5-31 லட்சம் வருமான வரம்பில் இருந்தனர். வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்கான (Fast-moving consumer goods (FMCG)) சந்தையின் அளவைக் குறிக்கிறது. இருப்பினும், 2023-ம் ஆண்டில், 5 சதவீதம், அதாவது 60 மில்லியன் மக்கள் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தனர். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதால், பிகெட்டியின் ஆய்வுகளைப் போலவே வருமான வரித் தரவைப் பயன்படுத்தும் ஆய்வுகள், நடுத்தர வர்க்கத்தின் நம்பத்தகாத சிறிய மதிப்பீடுகளை வழங்குகின்றன.


ஆனால், பெருநிறுவன பிரீமியமயமாக்கல் உத்திகள் (Corporate premiumisation strategies) மேல் முனையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, தேவையின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. வறுமை 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய நடுத்தர வர்க்கங்களின் முக்கிய அம்சம் அவர்களின் இயக்கம், குறிப்பாக கீழ் நிலையில் உள்ளவர்களை குறிக்கும். விலைவாசியை அதிகம் பாதிக்கும் இந்த குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் சிறப்பாக செயல்படும்.


 குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி குறைப்புக்கள் அவர்களின் செலவினங்களை அதிகரிக்கக்கூடும். இது அரசாங்கத்தின் செலவினங்களைவிட வேகமாக நடக்கும். பணவீக்கம் உண்மையான வரிகளை உயர்த்தி உண்மையான வருமானத்தைக் குறைப்பதால் வரி குறைப்புகளும் நியாயமானவை. இருப்பினும், வரி சீர்திருத்தத்தின் முக்கிய கவனம் இன்னும் எளிமைப்படுத்துதல், தவறுகளை சரிசெய்தல் மற்றும் வரி தளத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இருக்க வேண்டும்.


சமீபத்திய கணக்கெடுப்புகள், நுகர்வில் உணவுப் பங்கு 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. இதில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து, பால் பொருட்கள் உள்ளன. தானியங்களின் பங்கு காய்கறிகளை விடக் குறைந்துள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு அதிக வளங்களை மாற்றும் அரசாங்கத் திட்டங்களால் இது நிகழ்கிறது. காய்கறிகளின் விநியோகம் சரியான முறையில் மிகவும் ஒழுங்கமைக்கப்படவில்லை. சமீபத்திய மாதங்களில், பொருளாதாரம் விலை ஏற்றங்களுடன் போராடியதில் ஆச்சரியமில்லை.


ஆனால், வேளாண் சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்கள் மாநில அளவில் முன்னேறி வருகின்றன. 26 மாநிலங்கள் தனியார் சந்தைகளை ஏற்றுக்கொண்டு நேரடி பண்ணை விற்பனையை அனுமதித்துள்ளன. இருப்பினும், 14 மாநிலங்கள் மட்டுமே இதற்கான ஒழுங்குமுறை விதிகளை அறிவித்துள்ளன. வேளாண் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவதற்கும் பிற நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை விற்பனையை நம்பியிருந்தவர்களைவிட, உற்பத்தியைப் பன்முகப்படுத்திய உழவர்கள் அதிக லாபம் ஈட்டியதாக ஆராய்ச்சி காட்டுகிறது. பல்வேறு விளைபொருட்களின் விற்பனையை எளிதாக்குவதுதான் மாநிலங்கள் தங்கள் உழவர்களுக்கு உதவ சிறந்த வழியாகும்.


கடந்த ஆண்டு, வரவு செலவுத் திட்டத்தில் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புக்கான ஒரு கட்டமைப்பை முன்மொழிந்தது. இதில், ஒரு முக்கிய பகுதி உணவு விநியோகமாக இருக்க வேண்டும். இதன் மற்றொரு கவனம் விதிமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகும். ஆயிரக்கணக்கான பழமையான சட்டங்களை நீக்கிவிட்டதாக ஒன்றியம் கூறுகிறது. 


இருப்பினும், வணிகங்கள் இதை எளிதாகக் காணவில்லை. எளிமைப்படுத்தல் அரசாங்கத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்குகளை அடைய வேண்டும். இது நிறுவனங்களுடன் பணிபுரியும் உள்ளூர் அதிகாரிகளையும் சென்றடைய வேண்டும். உலகளாவிய செயல்திறன் மையங்களுக்கு (Global Capability Centre (GCC)) போட்டியிடுவதால் மாநிலங்கள் சீர்திருத்தங்களுக்கு அதிகளவில் திறந்திருக்கும்.


செலவு-மிகுதி பணவீக்கம் குறைவதால், வட்டி விகிதங்களும் குறையலாம். குறைந்த உண்மையான வட்டி விகிதங்கள் தேவையை ஊக்குவிக்கின்றன, குறிப்பாக இந்தியாவில் பல இளைஞர்கள் வீடுகளை வாங்கி தளவாடங்களால் நிறைக்கிறார்கள். வளங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், அவற்றின் செலவு மற்றும் வாய்ப்புச் செலவு முக்கியம். 


டிரம்பின் கொள்கைகள் அல்லது புவி-பொருளாதார அபாயங்கள் போன்ற வெளிப்புற சவால்களால் பழமைவாத பேரியல் பொருளாதாரக் கொள்கை நமக்குத் தேவை என்ற எண்ணம் காலாவதியான சிந்தனையை பிரதிபலிக்கிறது. தொற்றுநோய்களின் போது, ​​நமது அளவு, பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் இராஜதந்திரக் கொள்கை நடவடிக்கைகள் ஆகியவை வெளிப்புற அதிர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க உதவும் என்பதை நாங்கள் காட்டினோம்.


வரவு செலவுத் திட்ட முன்னுரிமைகள் பொருளாதாரத்தின் தேவைகளுடன் ஒத்துப்போக வேண்டும். அவை உற்பத்தி நிலைமைகளை மேம்படுத்த உதவ வேண்டும். இது அதிக பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்க அனுமதிக்கும். வெறுமனே வளங்கள் இருப்பது தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. நன்கு வடிவமைக்கப்பட்ட சலுகைகள் வெற்றிக்கு மிக முக்கியமானவை.


எழுத்தாளர் முன்னாள் நாணயக் கொள்கை குழு உறுப்பினர் மற்றும் IGIDR-ல் தகைசால் பேராசிரியர் ஆவார்.




Original article:


Share:

இந்தியாவின் கிழக்குச் செயல்பாட்டுக் கொள்கையில் (Act East Policy) சிங்கப்பூரின் பங்கு என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சண்முகரத்தினம், இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மாநில அரசாங்கத்தின் தலைமையைச் சந்திக்க அவர் வெள்ளிக்கிழமை ஒடிசாவுக்குச் செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


2. சிங்கப்பூர் அதிபர் செய்தியாளர்களிடம் ஒரு தரவு வழித்தடம் (data corridor) குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறினார். இது குஜராத்தில் உள்ள GIFT நகரத்தை சிங்கப்பூருடன் இணைக்கும். இது இரு தரப்பினரின் நிதி நிறுவனங்களும் பாதுகாப்பாக தரவுகளைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும்.

3. சமீபத்திய பத்தாண்டு காலங்களில், சிங்கப்பூர்-இந்தியா உறவுகளைப் பற்றி அவர் விவாதித்தார். இரு நாடுகளும் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் உறவு விரிவான இராஜதந்திர கூட்டாண்மையாக மேம்படுத்தப்பட்ட பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது இந்த மேம்படுத்தல் ஏற்பட்டது.


4. சிங்கப்பூர் அதிபர், சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.


5. 2025-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.


6. இந்த நிகழ்வைக் கொண்டாட, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் சண்முகரத்னமும் ஒரு கூட்டு இலச்சினையை (joint logo) வெளியிட்டனர்.


7. இந்த இலச்சினையில் இந்திய மற்றும் சிங்கப்பூர் தேசியக் கொடிகளின் வண்ணங்கள், தாமரை (இந்தியாவின் தேசிய மலர்), ஆர்ச்சிட் (சிங்கப்பூர் தேசிய மலர்) மற்றும் 60வது ஆண்டு நிறைவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எடுத்துக்காட்டும் எண் 60 ஆகியவை அடங்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


1. சிங்கப்பூர் நன்கு வளர்ச்சியடைந்த குறைக்கடத்தி தொழில்துறையைக் (semiconductor industry) கொண்டுள்ளது. இந்த வெற்றி அதன் முதல் பிரதமர் லீ குவான் யூவின் ஆரம்பகால தொடக்கத்தாலும் தொலைநோக்குப் பார்வையாலும் ஏற்பட்டது.


2. 1980-ம் ஆண்டுகளின் முற்பகுதியில், மின்னணுத் தொழில் ஏற்கனவே சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% மற்றும் அதன் உற்பத்தி வேலைகளில் கால் பகுதியைக் கொண்டிருந்தது என்று மில்லர் குறிப்பிடுகிறார். 


3. இன்று, சிங்கப்பூர் உலகளாவிய குறைக்கடத்தி உற்பத்தியில் சுமார் 10% பங்களிக்கிறது. இது உலகளாவிய செதில் உற்பத்தி திறனில் (global wafer fabrication capacity) 5% ஆகும். சிலிக்கான் செதில் (silicon wafer) என்பது மிகவும் தூய சிலிக்கானின் வட்டத் துண்டாகும். இது பொதுவாக 8-12 அங்குல விட்டம் கொண்டது. இந்த வேஃபர்களில் இருந்து சில்லுகள் (Chips) உருவாக்கப்படுகின்றன. கூடுதலாக, சிங்கப்பூர் 20% குறைக்கடத்தி உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.


4. குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியின் அனைத்துப் பிரிவுகளிலும் பங்கு வகிக்கிறது. இதில் ஒருங்கிணைந்த சுற்று (integrated circuit (IC)) வடிவமைப்பு, அசெம்பிளி (assembly), பேக்கேஜிங் (packaging), சோதனை (testing), செதில் உற்பத்தி (wafer fabrication) மற்றும் உபகரணங்கள்/மூலப்பொருள் உற்பத்தி ஆகியவை அடங்கும்.


5. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) என்பது சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (free trade pact) ஆகும். இது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் ஜூன் 29, 2005 அன்று கையெழுத்தானது.


6. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை ஊக்குவித்தது. இந்தப் பகுதிகளில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவை அடங்கும். சிங்கப்பூர் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஆதரித்துள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. சிங்கப்பூர் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை (Special Economic Zone (SEZ)) நிறுவவும் உதவியுள்ளது.


7. இந்தியா இப்போது சிங்கப்பூரின் நான்காவது பெரிய சுற்றுலாப் பயணிகள் நாடாக உள்ளது. 2006-ம் ஆண்டில் 6,50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிங்கப்பூருக்கு பயணம் செய்தனர். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றியுள்ளன. இவற்றில் விமானப் போக்குவரத்து, விண்வெளி பொறியியல், விண்வெளித் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி ஆகியவை அடங்கும்.




Original article:

Share:

8-வது ஊதியக் குழு -குஷ்பு குமாரி

 8-வது ஊதியக் குழுவை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். ஊதியக் குழு என்றால் என்ன? 


ஜனவரி 16-ம் தேதி அன்று, ஒன்றிய அரசு 8-வது ஊதியக் குழுவை அமைப்பதாக அறிவித்தது. இந்தக் குழு கிட்டத்தட்ட 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும். இது 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான பணம் வழங்கலைப் புதுப்பிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஓன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தக் குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய அம்சங்கள்


1. இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஊதியக் குழு, ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் இழப்பீட்டை தீர்மானிக்கிறது. இது ஓய்வூதியதாரர்களுக்கான பணம் வழங்கலையும் தீர்மானிக்கிறது. 8-வது ஊதியக் குழு சம்பளம் மற்றும் ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்களை பரிந்துரைக்கும். இது ஊதியம் மற்றும் பணம் வழங்கலில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.


2. ஊதியக் குழுக்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கட்டமைப்புகள், சலுகைகள் மற்றும் பணம் வழங்களை பரிந்துரைப்பதற்கு முன்பு அவர்கள் மற்ற பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்கின்றனர். அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் பெரும்பாலும் அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்கின்றன.


3. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நுகர்வுக்கான அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும், ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க ஒரு ஊதியக் குழு செயல்படுகிறது.


4. ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை ஊதிய நிவாரணத்தை திருத்துவதற்கான செயல்முறையை ஆணையம் பரிந்துரைக்கிறது. இது பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை பரிந்துரைகள் மட்டுமே, ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை.


அகவிலைப்படி (Dearness allowance (DA)) 


அகவிலைப்படி (DA) என்பது சம்பளத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இது வாழ்க்கைச் செலவை சரிசெய்ய உதவுகிறது மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index for Industrial Workers (CPI-IW)) பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீடு தொழிலாளர் பணியகத்தால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது


5. 1947-ம் ஆண்டு முதல், 7-வது ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2014-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு ஜனவரி 1, 2016 அன்று செயல்படுத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழு 2016-17 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி செலவின அதிகரிப்பை ஏற்படுத்தியது. நீதிபதி அசோக் குமார் மாத்தூர் 7-வது ஊதியக் குழுவின் தலைவராக உள்ளார்.


6. ஊதிய உயர்வால் பயனடையும் 49 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்களும் கிட்டத்தட்ட 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டில் முடிவடைகிறது. இந்த செயல்முறையைத் தொடங்குவது, பதவிக்காலம் முடிவதற்கு முன்பு பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் போதுமான நேரத்தை அளிக்கிறது என்று வைஷ்ணவ் கூறினார். 2025-ம் ஆண்டில் புதிய ஊதியக் குழுவை அமைப்பது, 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு அதன் பரிந்துரைகள் பெறப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


1. பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொதுவான விலை நிலை காலப்போக்கில் அதிகரிக்கும் விகிதமாகும். இது பணத்தின் வாங்கும் சக்தி அல்லது உண்மையான வருமானத்தில் குறைவை ஏற்படுத்துகிறது. அதாவது, பணவீக்கம் உயரும்போது, ​​ஒவ்வொரு நாணய அலகும் முன்பைவிட குறைவான பொருட்களையும் சேவைகளையும் வாங்க முடியும்.


2. உயரும் பணவீக்கம் குடும்பங்களின் நிதி நலனைப் பாதிக்கிறது. குறிப்பாக, குறைந்த வருமானம் அல்லது நிலையான வருமானம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் போது, அது அதே பெயரளவு வருமானத்துடன் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவைக் குறைக்கிறது. இதனால், குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படுகிறது. 


3. அதிக பணவீக்கம் ஒருவரின் பணத்தை வங்கி அல்லது அது போன்ற சேமிப்புகளில் வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் உண்மையான வட்டியை குறைக்கிறது. எடுத்துக்காட்டாக, சேமிப்பு வைப்புத்தொகையிலிருந்து 6% பெயரளவு வட்டியைப் பெறுவது என்பது பணவீக்கமும் 6%ஆக இருந்தால் உண்மையான வட்டியைப் பெறுவதில்லை என்பதாகும். மறுபுறம், கடன் வாங்குபவர்கள் பணவீக்கம் உயரும்போது பயனடைகிறார்கள். ஏனெனில், அவர்கள் குறைந்த "உண்மையான" வட்டி விகிதத்தை செலுத்துகின்றனர்.


4. பணவீக்கத்தை அளவிடுவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. இவற்றில் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)), மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)), மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்கம் (GDP deflator), உற்பத்தியாளர் விலைக் குறியீடு (Producer Price Index (PPI)) மற்றும் ஊதிய பணவீக்கம் (wage inflation) ஆகியவை அடங்கும். ஒவ்வொரு முறையும் விலை மாற்றங்களின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்துகிறது.




Original article:

Share:

போபால் யூனியன் கார்பைடு கழிவுகளை அகற்றுவதில் உள்ள சிக்கல் - பிரியலி பிரகாஷ், வாசுதேவன் முகுந்த்

 பிதாம்பூரில் உள்ள மக்களுக்கு, உமிழ்வுகள் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கவலையை நிவர்த்தி செய்வதற்காக மத்தியப் பிரதேச அரசானது கழிவுகளை எரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 


ஜனவரி 2-ம் தேதி அன்று, மத்தியப் பிரதேச அரசாங்க அதிகாரிகள் போபாலில் செயல்படாமல் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் (Union Carbide) இருந்து தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் தொழில்துறை நிலையத்துக்கு 358 டன் அபாயகரமான கழிவுகளை மாற்றினர். 4,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற மற்றும் ஆயிரக்கணக்கானோரைக் காயப்படுத்திய அல்லது சுகவீனப்படுத்திய எரிவாயுவின் பேரழிவு நிகழ்வானது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அன்று, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இந்த கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு நான்கு வார காலக்கெடுவை நிர்ணயித்தது. 


கழிவுகளின் நிலை என்ன? 


1984 டிசம்பர் 2-3 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில் ஏற்பட்ட பேரழிவானது, உரங்களை உற்பத்தி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து கசிந்த நச்சு வாயுக்களின் விளைவாகும். ஆலையில் உள்ள கழிவுகளில் இந்த உரங்களை தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் இருந்தன.


பல வருடங்களாக போபாலில் வைக்கப்பட்டதால், சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து பல மனுக்கள் வந்த பிறகு, மத்தியப் பிரதேச அரசு கழிவுகளை எரிக்க முடிவு செய்தது. இது, கிட்டத்தட்ட 200 கி.மீ. தொலைவில் உள்ள பிதாம்பூரில் உள்ள ஒரு சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியுள்ள கிடங்கில் (treatment, storage, and disposal facility (TSDF)) இதைச் செய்ய அவர்கள் திட்டமிட்டனர். அபாயகரமான கழிவு மேலாண்மை விதிகளின்படி (Hazardous Waste Management Rules) கழிவுகளை பேக் செய்து லேபிளிட (packaged and labelled) அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவர்கள் அதை பாதுகாப்பான நீண்ட தூர கொள்கலன்களில் கொண்டு சென்றனர்.


ஆனால், இந்தக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளுக்குப் பயந்து, தொழில்துறை நகரத்தில் உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்கள் அரசின் திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. 


ஜனவரி 6, 2025 அன்று, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதில், கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நீதிமன்றம் அரசுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்தது. இதற்கு அரசு தரப்பில், கழிவுகளை அகற்றும் செயல்முறை குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் மாநில அரசு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அவகாசம் கேட்டனர். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் விளைவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதே அவர்களின் நோக்கமாகும்.


ஒன்றிய அரசு மாநிலத்திற்கு ₹126 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை கழிவுகளை எரிக்கப் பயன்படுத்தப்படும். இந்தச் செயல்முறையிலிருந்து கிடைக்கும் எச்சங்கள் சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியுள்ள (treatment, storage, and disposal facility (TSDF)) குப்பைக் கிடங்கில் வைக்கப்படும்.


பீதாம்பூர் எதற்கு? 


2007-ம் ஆண்டில், மத்தியப் பிரதேச அரசு குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள ஒரு TSDF-ல் சில கழிவுகளை அப்புறப்படுத்த முயன்றது. இந்த வசதி ஒரு எரிப்பு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த வசதி கழிவுகளை ஏற்க மறுத்துவிட்டது.


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் பிதாம்பூர் இடமானது கிடங்கில் கழிவுகளை பாதுகாக்க மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்தது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரே சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி கிடங்கு (TSDF) இதுதான் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) கூறியது. இங்கு ஒரு குப்பைக் கிடங்கு (landfill) மற்றும் ஓர் எரிசிதைப்பு உலையும் (an incinerator) உள்ளது.

2013-ம் ஆண்டில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை (affidavit) சமர்ப்பித்தது. இதில், யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வரும் கழிவுகளை பிதாம்பூர் TSDF கையாள முடியும் என்பதை பிரமாணப் பத்திரம் உறுதிப்படுத்தியது.


அதற்கு அடுத்த ஆண்டு, இப்போது ஒரு பத்தாண்டிற்கு முன்பு மத்தியப் பிரதேசம் ஒரு 'சோதனை ஓட்டத்தை' (trial run) ஏற்பாடு செய்தது. இதன் போது ராம்கி குழுமத்தால் (Ramky Group) இயக்கப்பட்ட சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி கிடங்கில் (TSDF) 10,157 கிலோ கழிவுகளை எரித்தது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களின் நிபுணர்களின் உதவியுடன் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த செயல்முறையை கண்காணித்தது. உள்ளூர் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக அரசு இரகசியமாக எரிக்கும் தேதியை சில நாட்களுக்கு முன்கூட்டியே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை (Bhopal Gas Tragedy Relief and Rehabilitation Department) இயக்குநர் சுதந்திர குமார் சிங், சோதனையிலிருந்து வெளியேற்றப்படும் உமிழ்வுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதாகக் கூறினார். மேலும், சுற்றுச்சூழல் அல்லது பொது சுகாதாரத்தில் எந்த எதிர்மறையான விளைவுகளும் இல்லை என்று மாநில மக்கள் தொடர்பு அலுவலகமும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள கழிவுகளை அதே முறையில் எரித்து அப்புறப்படுத்தலாம் என்று இது பரிந்துரைத்தது.


கழிவுகள் தீங்கு விளைவிப்பதா? 


'சோதனை' கழிவுகள் பல்வேறு வகைகளைக் கொண்டிருந்தன. 4.8 டன் தோண்டியெடுக்கப்பட்ட கழிவுகள், 1.6 டன் மிதப்பதப்படுத்தப்பட்ட எச்சங்கள், 1.3 டன் நாப்தால் கழிவுகள், 1.3 டன் கார்பரில் எச்சங்கள் மற்றும் 0.8 டன் உலை எச்சங்கள் இருந்தன. ஆலையில் அவற்றின் மிகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு கழிவு வகையின் நிறை ஒதுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. நாப்தால் என்பது நாப்தால்-1 ஆகும். இது கார்பரைல் (carbaryl) உற்பத்தியில் ஒரு முன்னோடியாகும். இது ஆலை தயாரிக்க வடிவமைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியாகும்.


டிசம்பர் 2024-ம் ஆண்டில், CPCB போபாலின் பிராந்திய இயக்குநர் (மத்திய) பிதம்பூர் TSDF-ஐச் சுற்றியுள்ள ஐந்து நீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதித்ததாக மாநில மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்திக்குறிப்பு பகிர்ந்து கொண்டது. இந்த அறிக்கை (WW24.25-188.189) குப்பைக் கிடங்கிற்கு அருகிலுள்ள இரண்டு திறந்தவெளி கிணறுகளில் உள்ள நீர் நிறம், குளோரைடு, சல்பேட், ஃப்ளோரைடின் செறிவுகள், கடினத்தன்மை மற்றும் மொத்த கரைந்த திடப்பொருட்களின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியது என்பதைக் காட்டுகிறது. இந்த மதிப்புகள் IS 10500-ல் குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளை மீறியது.


இருப்பினும், பகுப்பாய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அதிக மதிப்புகள் நிலத்தடி நீரின் பொதுவான தரத்தை பிரதிபலிப்பதை நம்புவதாக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்புகள் TSDF செயல்பாடுகளுடன் இணைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.


குறிப்பிடப்படாத ஊடக அறிக்கைக்கும் இந்த வெளியீட்டால் பதிலளித்தது. TSDF-ஐச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு தோல் நோய்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறியது. போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்கள் (Indian Council of Medical Research surveyed) 12 கிராமங்களை ஆய்வு செய்தனர். இந்த கிராமங்களில் தோல் மற்றும் சுவாச நோய்கள் பரவுவது தேசிய சராசரியை விட குறைவாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


2015-ம் ஆண்டில் நம்பகமான ஊடக அறிக்கைகள், எரிக்கப்பட்ட கழிவுகளைவிட நான்கு மடங்கு சாம்பல் மற்றும் எச்சங்கள் உருவாகியுள்ளதாகக் கூறின. இந்தக் கழிவுகளை குப்பைக் கிடங்கில் அப்புறப்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) குறிப்பிட்டது. சாயக்கழிவுகள் மண்ணில் வெளியேறுவதைத் தடுக்க பாதுகாப்புகளையும் இது செயல்படுத்தும்.


அபாயகரமான கழிவுகளைக் கொண்ட குப்பைக் கிடங்குகளில் உள்ள கலவையான லைனர்கள் (composite liners) சிதைவடையும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency (EPA)) கூறியுள்ளது. இந்த லைனர்களை வழக்கமான இடைவெளியில் மீண்டும் நிறுவ வேண்டும்.


அடுத்து என்ன? 


மத்தியப் பிரதேச அரசு, கழிவுகளை எரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இரண்டு முறை தற்கொலை முயற்சிகள் உட்பட உள்ளூர் ஆர்ப்பாட்டங்கள், அகற்றும் செயல்முறையின் பாதுகாப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜனவரி 4-ம் தேதி, போராட்டக்காரர்கள் TSDF மீது கற்களை வீசினர். கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி காணாமல் போனதாக வதந்திகள் பரவின. பின்னர் போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.


சுமார் 50 முதன்மை பயிற்சியாளர்களை தயார் செய்துவரும் நிலையில் உள்ளது. இவர்களில் அறிவியல் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்குவர். கழிவுகளின் சரியான நிலை குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். பின்னர், எந்தவொரு தவறான தகவலையும் சரிசெய்ய அவர்கள் மக்களைத் தொடர்புகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்னொரு சோதனை ஓட்டம் இருக்கும். 90 கிலோ எடையுள்ள ஒரு தொகுதி 1,200ºC வெப்பநிலையில் எரிக்கப்படும் என்று சிங் கூறினார். நாப்தால்-1 போன்ற பெரும்பாலான கரிம சேர்மங்கள் 590-650ºC வெப்பநிலையில் அழிக்கப்படுகின்றன என்று EPA கூறுகிறது. 980-1,200ºC-ல் அபாயகரமான கழிவு எரியூட்டிகளை இயக்குவதன் மூலம் கழிவுகளிலிருந்து கரிமப் பொருட்களை அகற்ற முடியும்.


இதன் விளைவாக ஏற்படும் உமிழ்வுகள் சட்ட வரம்புகளை மீறவில்லை என்றால், மீதமுள்ளவை மூன்று மாதங்களுக்கு தலா 270 கிலோ தொகுதிகளாக எரிக்கப்படும். உமிழ்வுகள் வரம்பை மீறினால், தொகுதி அளவு குறைக்கப்படும் என்று சிங் தி இந்துவிடம் தெரிவித்தார். கால அளவு ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். உயர் நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை பிப்ரவரி 18-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.




Original article:

Share:

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் மற்றும் முன்கணிப்பு -சி.ரங்கராஜன், டி.கே.ஸ்ரீவஸ்தவா

 அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் எதிர்பார்ப்பு நிலையான வளர்ச்சி விகிதமாகும். உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.5%ஆக இருக்க வாய்ப்புள்ளது.

 

2024-25ஆம் ஆண்டில் தேசிய கணக்குகளுக்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் (First Advance Estimates (FAE)) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.4% மற்றும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 9.7% காட்டுகின்றன. இந்த புள்ளிவிவரங்கள் ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வளர்ச்சி மதிப்பீடுகளை விடக் குறைவானதாகும். 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவியல் கொள்கை அறிக்கையில் ரிசர்வ் வங்கி 6.6% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கணித்திருந்தது. ஜூலை 2024-ல் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் 10.5% பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் மதிப்பிட்டது. 


6.4% வருடாந்திர வளர்ச்சி என்பது முதல் பாதியில் 6% வளர்ச்சியும், இரண்டாம் பாதியில் 6.7% வளர்ச்சியும் ஆகும். இது 5.4% என்ற இரண்டாம் காலாண்டின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது எதிர்பார்க்கப்படும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. 2024-25 வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில், முந்தைய ஆண்டில் 8.2%ஆக இருந்த கூர்மையான சரிவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டுமே காணப்படுகிறது. மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added (GVA)), 7.2% மற்றும் 6.4%க்கு இடையே சிறிய வேறுபாடு உள்ளது. மொத்த மதிப்பு கூட்டலைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறை வளர்ச்சியில் கணிசமான அளவு சரிவைச் சந்தித்தது. இது 2023-24-ல் 9.9% ஆக இருந்ததிலிருந்து 2024-25-ல் 5.3% ஆகக் குறைந்தது.

 

2025-26-க்கான வளர்ச்சி வாய்ப்புகள் 


2021-22 முதல் 2024-25 வரை நிலையான விலைகளில் மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் (Gross Fixed Capital Formation rate (GFCF)) 33.3% முதல் 33.5% வரை உள்ளது. இது சுமார் 33.4% வரை நிலையாக இருப்பதாகத் தெரிகிறது. 2025-26ஆம் ஆண்டில் இதே அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் சராசரி அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதம் (incremental capital output ratio (ICOR)) 5ஐ விட சற்று அதிகமாக உள்ளது. 2025-26-ல் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதம் 5.1ஆக இருந்தால், 6.5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நிலையானதாகக் கருதப்படும்.


டொனால்ட் டிரம்ப் பதவியேற்பது பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்றாலும், உலகப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இந்தியா பெரும்பாலும் உள்நாட்டு தேவையை நம்பியிருக்க வேண்டியிருக்கும். இந்திய அரசாங்கம் தனது முதலீட்டுச் செலவினங்களைத் தளர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2024-25ஆம் ஆண்டில் குறைவான வளர்ச்சி, அரசாங்க முதலீட்டு வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாகும். நிதியாண்டில் 8 மாதங்களுக்குப் பிறகும் இந்த வளர்ச்சி எதிர்மறையாக (-12.3%)உள்ளது.


2024-25ஆம் ஆண்டில், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.7%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட 10.5%-ஐ விடக் குறைவு. இதன் விளைவாக, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட 1.03 மிதப்பு பராமரிக்கப்பட்டால், பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த வரி வருவாய் (Gross Tax Revenue (GTR)) ₹38.4 லட்சம் கோடியை அடைய முடியாது. கணக்குகள் கட்டுப்பாட்டுத் தலைவர் (General of Accounts (CGA)) தரவுகளின்படி, முதல் 8 மாதங்களுக்கு மொத்த வரி வருவாய் வளர்ச்சி 10.7% ஆக இருந்தது. இந்த வளர்ச்சி ஆண்டு முழுவதும் தொடர்ந்தால், உணரப்பட்ட மிதப்பு சுமார் 1.1 ஆக இருக்கும். இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட மிதப்புவிட அதிகமாகும். இந்த விஷயத்தில், வரி வருவாய் பற்றாக்குறை மிகக் குறைவாக இருக்கும். எனவே, நிதிப் பற்றாக்குறையின் மீதான எந்தவொரு வருவாய் கட்டுப்பாடும் அல்லது அழுத்தமும் அரசாங்கத்தின் மூலதனச் செலவின இலக்கான ₹11.1 லட்சம் கோடியை அடையும் திறனைப் பாதிக்காது.

 

சரிவுக்கான காரணம் 


இருப்பினும், முதல் 8 மாதங்களுக்குப் பிறகு, இந்திய அரசின் மூலதனச் செலவு ₹5.14 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது பட்ஜெட் இலக்கில் 46.2% ஆகும். மீதமுள்ள 4 மாதங்களில், அரசாங்கம் அதன் மூலதனச் செலவினத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால் அது இன்னும் இலக்கை அடைய வாய்ப்பில்லை. 2024-25 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவுக்கு இதுவே முக்கிய காரணமாகும்.


2025-26ஆம் ஆண்டை எதிர்நோக்குகையில், இந்திய அரசு மூலதனச் செலவின வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். 2024-25ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தது 20% அதிகரிப்பை இலக்காகக் கொள்ள வேண்டும். நிலையான அரசாங்க மூலதனச் செலவு தனியார் முதலீட்டை பாதிக்கலாம். அரசாங்கத்தின் முதலீட்டுச் செலவு தனியார் முதலீட்டையும் ஊக்குவிக்கவும் துரிதப்படுத்தவும் வடிவமைக்கப்பட வேண்டும்.


நடுத்தர முதல் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகள் 


அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா 6.5% என்ற உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கலாம். இது சர்வதேச நாணய நிதியத்தின் (nternational Monetary Fund’s (IMF)) இந்தியப் பொருளாதாரத்திற்கான கணிப்புக்கு ஏற்ப உள்ளது. அக்டோபர் 2024 வெளியீட்டில், IMF 2025-26 முதல் 2029-30 வரை இந்தியாவிற்கு 6.5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கணித்துள்ளது. இந்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன், மறைமுக விலைக் குறைப்பான் (IPD) அடிப்படையில் சுமார் 4% பணவீக்க விகிதம் இருக்கலாம். இதன் விளைவாக, பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5% முதல் 11% வரை இருக்கலாம். 


உலகளாவிய நிலைமைகள் மேம்படும் மற்றும் நிகர ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் ஆண்டுகளில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7%-ஐ கூட எட்டக்கூடும். இந்தியா நீண்ட காலத்திற்கு 6.5% உண்மையான வளர்ச்சியையும், 10.5%-11% பெயரளவு வளர்ச்சியையும், ஆண்டுக்கு சராசரியாக 2.5% மாற்று விகித தேய்மானத்தையும் பராமரித்தால், அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாட்டிற்கு இணையான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை எட்ட வேண்டும். இருப்பினும், இந்தப் பணி எளிதானதாக இருக்காது. அடிப்படை தொடர்ந்து அதிகரித்து வருவதால் 6.5%-ல் வளர்ச்சியடைவது கடினமாக இருக்கும். முந்தைய ஆண்டுகளில், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். தற்போது, ​​சாத்தியமான வளர்ச்சி விகிதம் 6.5%ஆக உள்ளது. ஆனால், அது மாறக்கூடும்.


6.5% வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, 2024-25ஆம் ஆண்டில் 6.4% வளர்ச்சியை ஏமாற்றமாகக் கருதக்கூடாது. 2023-24ஆம் ஆண்டில் 8.2% வளர்ச்சியை விதிவிலக்காக கருத வேண்டும். முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதமான 6.4%, இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி விகிதத்துடன் தொடர்புடையதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 


சி.ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஆவார். டி.கே. ஸ்ரீவஸ்தவா, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் கௌரவ பேராசிரியராகவும், 16வது நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.




Original article:

Share:

எழுத்துரு வாசிப்பு: சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துருக்களை புரிந்துகொள்வது குறித்து…

 சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களைப் புரிந்துகொள்வது அரசியல் காரணிகளால் மறைக்கப்படக்கூடாது. 

 

சிந்து சமவெளி நாகரிக (Indus Valley Civilisation (IVC)) எழுத்துருவைப் புரிந்துகொள்வதற்கு $1 மில்லியன் பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு சிந்து சமவெளி நாகரிகத்தின் மீது பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் மொழியியலாளர்களுக்கு சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் புரியாத புதிராகவே உள்ளன. சிந்து சமவெளி நாகரிக கண்டுபிடிப்பின் 100வது ஆண்டு நிறைவின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 


இந்தக் கண்டுபிடிப்பு முதன்முதலில் செப்டம்பர் 1924-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவரான ஜான் மார்ஷலால் (John Marshall) வெளியிடப்பட்டது. ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகம், வெண்கல காலத்தில் (கிமு 3000-1500) இருந்தது. இது 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தப் பகுதியில் நவீன இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் இடம் பெற்றிருந்தன. ஹரப்பா நாகரிகம் மெசபடோமியா, எகிப்து மற்றும் சீனாவின் நாகரிகங்களைப் போலவே முன்னேறியதாக இருந்தது. 


ஹரப்பா நாகரிகம் பெரும்பாலும் நகர்ப்புறமாக இருந்தது. சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பல மதிப்புமிக்க தொல்பொருள் பொருட்கள் மற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றிய ஆய்வை ஆதரிக்கின்றன. இருப்பினும், முத்திரைகள் மற்றும் பலகைகளைப் பற்றி புரிந்துகொள்வது இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை. 


சில நிபுணர்கள் முடிவுகளில் திருப்தி அடையவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கத்திய அறிஞர்கள் குழு ஒன்று, ஹரப்பா நாகரிகம் உட்பட பண்டைய நகர்ப்புற குடியிருப்புகளுக்கு எழுத்து அவசியமில்லை என்று வாதிட்டது. கண்டுபிடிக்கப்பட்ட "ஒரு சில அறியப்படாத சின்னங்களை" எழுத்துக்கான சான்றாகக் கருத முடியாது என்று அவர்கள் கூறினர். அதன் பின்னர், சிந்து சமவெளி நாகரிகம் அதிக கல்வியறிவு பெற்றிருக்கிறதா என்று அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை இந்த சூழலில் முக்கியமானதாக பார்க்க வேண்டும். 


சிலர் இந்த எழுத்தை "ஆதி-திராவிட" (proto-Dravidian) “ஆரியர் அல்லாத" மற்றும் "ஆரியத்திற்கு முந்தைய" எழுத்து என்று நம்புகிறார்கள். இதன் காரணமாக தென் மாநிலமான தமிழ்நாடு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம். தமிழ்நாட்டில் காணப்படும் சிந்து சமவெளி அடையாளங்கள் மற்றும் சுவரெழுத்து (graffiti) அடையாளங்கள் குறித்த ஆய்வையும் மாநில அரசு ஆதரிக்கிறது. இது இப்பகுதியில் இருந்து சுவரெழுத்து மற்றும் தமிழ்-பிராமியில் (Tamil-Brāhmī) பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகளை ஆவணப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


சிந்து சமவெளி நாகரிகத்தில் உள்ள சிக்கலை தீர்ப்பதில் ஆராய்ச்சியாளர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். முக்கியமான பிரச்சினை என்னவென்றால், சிந்துவெளி முத்திரைகளின் முழு தரவுத்தளமும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகள் இந்த வளங்களை இலவசமாக அணுக அனுமதிக்க வேண்டும். இருப்பினும், அவை அவற்றுக்கான சூழலையும் வழங்க வேண்டும். மிக முக்கியமாக, ஆய்வுகள் குறுக்கீடு இல்லாமல் செய்யப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் நிறுவப்பட்ட கதைகளால் பாதிக்கப்படக்கூடாது. 


இது அறிவுசார் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் இந்த நாகரிகத்தில் உள்ள மர்மத்தைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட முடியும். இருப்பினும், அரசியல் வேறுபாடுகள் ஆய்வைப் பாதித்தால், அது உலகிற்கும் இந்தியாவிற்கும் தீங்கு விளைவிக்கும்.




Original article:

Share: