உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான லோக்பால் உத்தரவை நிறுத்தி, புகார் நடைமுறை குறித்த சிக்கலை எழுப்புகிறது. -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 ஜனவரி 27 அன்று, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு, 2013ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் முன்னாள் நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தது.


ஜனவரி மாதம், லோக்பால் இந்த வரையறையைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்குகளைக் கையாள முடியாது என்று முடிவு செய்தது. உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124-ன் கீழ் உருவாக்கப்பட்டது என்றும், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அது விளக்கியது.


பெயர் குறிப்பிடப்படாத உயர் நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட லோக்பால் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது.


லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 (லோக்பால் சட்டம்) கீழ் முன்னாள் நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு ஜனவரி 27ஆம் தேதி அளித்த உத்தரவில் கூறியது.


எவ்வாறாயினும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், நீதிபதிகள் பி ஆர் கவாய், சூர்யா காந்த் மற்றும் ஏ எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய  அமர்வு இந்த உத்தரவை நிறுத்தி வைக்கும் போது " மிகவும் கவலைக்குரியது" என்று அழைத்தது.  அடுத்த விசாரணை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




உச்சநீதிமன்றத்தின் காரண விளக்கம்:


நீதிபதிகள் விமர்சிக்கப்படலாம் என்பதை உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. இருப்பினும், அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இது செயல்படுகிறது. நீதித்துறையின் மீது அரசாங்கம் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைத் தடுக்க முயற்சிக்கிறது.


லோக்பால் என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு சுதந்திரமான அமைப்பு. ஜனவரி 27ஆம் தேதி அதன் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்றாமல், நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை புதிய முறையில் அனுமதித்திருக்கலாம்.


நீதிபதிகள் மீது புகார்


1860ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 77, ஒரு நீதிபதி தனது அதிகாரப்பூர்வ கடமையின் ஒரு பகுதியாகச் செய்யப்படும் எந்தவொரு செயலுக்கும் தண்டிக்கப்பட முடியாது என்று கூறுகிறது. இதே விதி 2023ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 15-ல் சேர்க்கப்பட்டுள்ளது.


1991ஆம் ஆண்டு கே வீராசாமி எதிர் இந்திய ஒன்றியம் (K Veeraswami vs Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்டப் பாதுகாப்பை வலுப்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான நீதிபதி வீராசாமி, தனது அறியப்பட்ட வருமானத்திற்கு அப்பாற்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததற்காக சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய அவர் முயன்றார். இருப்பினும், அவர் ஒரு "பொது ஊழியர்" (public servants) என்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1947-ன் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது (பின்னர் இது 1988-ல் ஒரு புதிய சட்டத்தால் மாற்றப்பட்டது).


நீதிபதிக்கு எதிரான குற்றவியல் வழக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொடர முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒப்புதல் அளிப்பதற்கு முன், குடியரசுத் தலைவர் இந்திய தலைமை நீதிபதியை (CJI) கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விதி, பொய்யான வழக்குகள் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து நீதிபதிகளைப் பாதுகாக்க உதவுகிறது. குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.


ஒரு நீதிபதி மீது வழக்குத் தொடுப்பது, ஒரு நீதிபதி மீது குற்றச்சாட்டு சுமத்துவதை விட வேறுபட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது. குற்றச்சாட்டு சுமத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.


லோக்பால் முன் வழக்கு


ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டன.  அவர் ஒரு கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதியை செல்வாக்கு செலுத்தியதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நீதிபதிகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்தவர் தாக்கல் செய்த வழக்குகளை கையாண்டனர்.


புகார் அளித்தவரின் கூற்றுப்படி,  தற்போதைய நீதிபதி வழக்கறிஞராக இருந்தபோது, அந்த நிறுவனம் அவரின் கட்சிக்காரராக இருந்தது என்று கூறினார்.


லோக்பால் உத்தரவு, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. புகார்கள் உண்மையா இல்லையா என்பதை அது ஆராயவில்லை.


லோகாயுக்தா சட்டம், பொது ஊழியர் இந்தியாவில் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி அவருக்குப் பொருந்தும்.


பிரிவு 14-ல் பொது ஊழியர்களை சட்டம் வரையறுக்கிறது. அவர்கள் தன்னாட்சி அமைப்பில், தலைவர், உறுப்பினர், அதிகாரி அல்லது பணியாளராக இருப்பவர் அல்லது இருந்தவர் அடங்குவர். இது நீதிபதிகளை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், துணைப் பிரிவு (f) பொது ஊழியர்களில்  அவர்களும் அடங்குவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதில் நாடாளுமன்றச் சட்டத்தால் அமைக்கப்பட்ட அமைப்புகள் அல்லது மத்திய அரசால் பகுதியளவு அல்லது முழுமையாக நிதியளிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்படும் அமைப்புகள் இதில் அடங்கும்.


ஜனவரி மாதம், லோக்பால் இந்த வரையறையைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற (SC) நீதிபதிகளுக்கு எதிரான வழக்குகளைக் கையாள முடியாது என்று முடிவு செய்தது. உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124-ன் கீழ் உருவாக்கப்பட்டது, பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அல்ல என்று அது விளக்கியது.


உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அந்தஸ்து இல்லை என்பதை லோக்பால் கண்டறிந்தது. உயர் நீதிமன்றங்கள் சட்டம், 1861 மற்றும் இந்திய அரசு சட்டம், 1935 ஆகியவற்றின் கீழ் பல உயர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டன. அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நாடாளுமன்றச் சட்டம் உள்ளடக்கியதாக பொது உட்பிரிவுகள் சட்டம், 1897 கூறுவதால், இந்தச் சட்டங்கள் "நாடாளுமன்றச் சட்டங்கள்" என்று கணக்கிடப்படுகின்றன என்று லோக்பால் சுட்டிக்காட்டியது.


"எந்தவொரு நபரும்" என்ற வார்த்தையில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சேர்க்கப்படவில்லை என்று கருதுவது தவறு என்று லோக்பால் கூறியது. இருப்பினும், கே. வீராசாமி தீர்ப்பின் காரணமாகவும், கூடுதல் கவனமாக இருக்கவும், புகாரை விசாரிப்பது என்பது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பார்ப்பதாகும் என்று லோக்பால் குறிப்பிட்டது. எனவே, விசாரணையைத் தொடங்குவதற்கு முன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலுக்காக புகாரை இந்திய தலைமை நீதிபதிக்கு (CJI) அனுப்புவது சிறந்தது என்று லோக்பால் முடிவு செய்தது.




Original article:

Share:

‘சர்பஞ்ச் பதி’ என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 



முக்கிய அம்சங்கள்:


  • முன்னாள் சுரங்கச் செயலாளர் சுஷில் குமார் தலைமையிலான குழு, தனது அறிக்கையில், பிரதிநிதி தலைமைத்துவம் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று கூறியது. இது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் பெண்களின் தலைமைப் பொறுப்புகளில் ஆண் உறவினர்கள் தலையிடுவதைத் தடுக்க உதவும்.


  • இந்த அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது, ​​குழுவின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில் கொள்கைகளில் மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவை  அடங்கும்.


  • பரிந்துரைக்கப்பட்ட சில முயற்சிகள்:


  • பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவிலான குழுக்களில் குறிப்பிட்ட பாலின ஒதுக்கீடுகளை அமைத்தல் (எ.கா.) கேரளா.

  • "பிரதான் பதி" (Pradhan Pati)-க்கு (பெண் தலைமையைக் கட்டுப்படுத்தும் ஆண் உறவினர்கள்) எதிராகப் போராடுபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்குதல்.

  • பெண்களை குறைதீர்ப்பாளர்களாக நியமித்தல்.

  • கிராம சபைகளில் பெண் தலைமைகளுக்கான பொது பதவியேற்பு விழாக்களை நடத்துதல்.

  • ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் குழுக்களை உருவாக்குதல்.

  • தலைமைத்துவ பயிற்சி, சட்ட உதவி மற்றும் ஆதரவு நெட்வொர்க்குகளுக்கான பாலின வள மையங்களை நிறுவுதல்.


  • தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை (WERs) ஆதரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த குழு பரிந்துரைத்தது. அவர்கள் பரிந்துரைத்தவற்றில் பின்வருவன அடங்கும்:


  • திறன்களை மேம்படுத்த மெய்நிகர் உருவக பாவனை பயிற்சி.

  • உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் சட்டம் மற்றும் நிர்வாக கேள்விகளுக்கு பதிலளிக்க AI-இயங்கும் அமைப்புகள்.

  • தினசரி பிரச்சினைகளைத் தீர்க்க பஞ்சாயத்து மற்றும் தொகுதி அதிகாரிகளுடன் WERகளை இணைக்கும் வாட்ஸ்அப் குழுக்கள்.

  • கூட்டங்கள் மற்றும் முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான்களின் பங்கேற்பை குடிமக்கள் கண்காணிக்க பஞ்சாயத்து நிர்னே போர்டல் அனுமதிக்கும். இது பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் மற்றும் பிரதிநிதி தலைமையைக் குறைக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


  • இந்தியாவில் மூன்று நிலைகளில் சுமார் 2.63 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன. அவை:

  • கிராமப் பஞ்சாயத்து (கிராம நிலை)

  • பஞ்சாயத்து சமிதி (தொகுதி நிலை)

  • ஜில்லா பரிஷத் (மாவட்ட நிலை)


இந்த பஞ்சாயத்துகளில் 32.29 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில், 15.03 லட்சம் (46.6%) பெண்கள் ஆவார்.


  • பஞ்சாயத்து அதிகாரிகளாக அதிகமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், முடிவெடுப்பதில் அவர்களுக்கு இன்னும் குறைவான பங்கு மட்டுமே உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில், 'பிரதான் பதி', (‘Pradhan Pati’)  'சர்பஞ்ச் பதி' (‘Sarpanch Pati’) அல்லது 'முக்கிய பதி' (‘Mukhiya Pati’) என்று அழைக்கப்படும் ஒரு நடைமுறை பொதுவானது. இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, அவர்களின் கணவர்கள் அவர்களுக்காக அதைச் செய்கிறார்கள் என்று ஒரு அமைச்சக அதிகாரி கூறினார்.


  • பெண் தலைமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை ஆராய்வதே இந்தக் குழுவின் பணியாகும். இது ஜூலை 6, 2023 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்தது. செப்டம்பர் 19, 2023 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்  ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தது.


  • திறன்களை மேம்படுத்த பயிற்சித் திட்டங்களை குழு பரிந்துரைக்கிறது. அவை:


  • உள்ளூர் மொழிகளில் தொடர்ச்சியான மற்றும் கட்டாயப் பயிற்சி.

  • IIMS, IITs/NITs, உடன் பணிபுரிதல்.

  • சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களை உள்ளடக்கியது.

  • பெண் கிராமத் தலைவர்கள் (பிரதான்கள்), பெண் சட்டமன்ற உறுப்பினர்கள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி.


  • பொறுப்பு மற்றும் மேற்பார்வையை உறுதி செய்வதற்கான வழிகளையும் இது பரிந்துரைத்தது. இவற்றில் உதவி எண்கள் மற்றும் பெண்கள் கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவை அடங்கும். அங்கு மக்கள் தலைமை பற்றிய ரகசிய புகார்களைப் புகாரளிக்கலாம். சரிபார்க்கப்பட்ட வழக்குகளுக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு  வெகுமதிகள் வழங்கப்படும்.




Original article:

Share:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 8 மற்றும் 9 எதைக் குறிப்பிடுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் பிரமாணப் பத்திரத்தில், பல தண்டனைச் சட்டங்கள் தண்டனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பதாகக் கூறியது. இது தண்டனை ஒரு தடுப்பு நடவடிக்கையாக செயல்படுவதை உறுதி செய்கிறது. ஆனால், அது மிகவும் கடுமையானதாக மாறாது என்று ஒன்றிய அரசு கூறியது.


• மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் 8 மற்றும் 9-வது பிரிவுகளின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

• காலவரையறை செய்யப்பட்ட தகுதி நீக்கம் அரசியலமைப்பை மீறுவதாக மனுவில் வாதிட்டது. இதுபோன்ற வழக்குகளில் தகுதி நீக்கம் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.


• மனுவுக்குப் பதிலளித்த அரசு, வாழ்நாள் தடை குறித்து முடிவெடுக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று அரசாங்கம் பதிலளித்தது. தடை அவசியமா அல்லது அதிகமாக உள்ளதா என்பதை மனுதாரரோ அல்லது பிரதிவாதியோ முடிவு செய்ய முடியாது என்று அரசு கூறியது. தண்டனைகள் நியாயமானதாகவும் சமநிலையானதாகவும் இருப்பதை நாடாளுமன்றம் உறுதி செய்கிறது.


• சவால் செய்யப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்றும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்றும் ஒன்றிய அரசு கூறியது. அது யாருக்கும் அதிகப்படியான அதிகாரத்தை வழங்குவதில்லை என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியது.

உங்களுக்குத் தெரியுமா?


• சட்டத்தின் பிரிவு 8, விதியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறுகிறது.


• பிரிவு 9, ஊழல் அல்லது அரசுக்கு உண்மையாக இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும் என்று கூறுகிறது.


• “அரசியலை குற்றமயமாக்குதல்" (criminalization of politics) என்ற சொல் இந்தியாவில் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.




Original article:

Share:

தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் குறித்து ஏன் தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் மோதிக்கொள்கின்றன -அபிநயா ஹரிகோவிந்த், ரித்திகா சோப்ரா

 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாடு இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது. மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது.


2020-ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையை (New Education Policy (NEP)) அமல்படுத்த மாநிலம் மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் பிரதமருக்கு தமிழ்நாட்டின் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


பாஜக தலைமையிலான ஒன்றிய அரக்கும் தமிழ்நாட்டின் திமுக அரசிற்கும் இடையிலான மோதல், புதிய கல்விக் கொள்கை 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட "மும்மொழிக் கொள்கையை" சுற்றி உள்ளது. இந்தக் கொள்கை பல்வேறு பிராந்தியங்களில் இளைஞர்கள் வேலை தேட உதவும் என்று ஒன்றிய அரசு வாதிடுகிறது. இருப்பினும், தமிழ்நாடு இதை மாநிலத்தின் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியாகவே பார்க்கிறது.


கல்வியில் மொழி விவாதம்


கல்வியில் மொழிக் கொள்கை குறித்த விவாதம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இருந்து வருகிறது. இதில் பயிற்றுவிக்கும் மொழி மற்றும் மொழிகள் கற்பித்தல் ஆகிய இரண்டும் பற்றிய விவாதங்களும் அடங்கும். இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையிலான 1948-49 பல்கலைக்கழக கல்வி ஆணையம், இந்த தலைப்பை விரிவாக ஆராய்ந்தது.


அப்போதும் இது ஒரு அரசியல் விவாதமாக இருந்தது. ஆணையத்தின் அறிக்கை "வேறு எந்தப் பிரச்சினையும் கல்வியாளர்களிடையே இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியதில்லை, மேலும் நாங்கள் அறிய இவ்வளவு முரண்பாடான கருத்துக்களைத் தூண்டியதில்லை. மேலும், இந்தக் கேள்வி உணர்ச்சிவசமானது ஆகையால், அதை அமைதியாகவும், தனிமையாகவும் பரிசீலிப்பது கடினம்." என்று குறிப்பிட்டது.


அந்த நேரத்தில் கூட மொழிக் கொள்கை பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. வேறு எந்தப் பிரச்சினையும் கல்வியாளர்களிடையே இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தவில்லை என்பதை ராதாகிருஷ்ணன் ஆணையத்தின் அறிக்கை எடுத்துக்காட்டியது. சாட்சிகள் கடுமையாக எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது. 


மொழிப் பிரச்சினை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்ததால், அது பற்றி விவாதிப்பது கடினமாக இருந்தது. ராதாகிருஷ்ணன் ஆணையம் இந்தியாவின் கூட்டாட்சி மொழியாக இந்தி இந்துஸ்தானியை ஆதரித்தது. தேசிய அளவில் நிர்வாகம், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கு இந்தியைப் பயன்படுத்துவதை அது பரிந்துரைத்தது. அதே நேரத்தில் வெவ்வேறு மாநிலங்களில் பிராந்திய மொழிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அது கூறியது.


ஆங்கிலப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை ஆணையம் புரிந்துகொண்டது. அனைத்து மாநிலங்களும் இந்திக்கு மாற முழுமையாகத் தயாராகும் வரை கூட்டாட்சிப் பணிகளுக்கான மொழியாக ஆங்கிலம் தொடர வேண்டும் என்று அது கூறியது.


மும்மொழிக் கொள்கை


இந்த ஆணையம் முதலில் பள்ளிக் கல்விக்கான மும்மொழி சூத்திரமாக மாறுவதை முதலில் முன்மொழிந்தது.


ஒவ்வொரு பிராந்தியமும் கூட்டாட்சி நடவடிக்கைகளில் தேவையான பங்கை பெறவும், மாகாணங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கவும், படித்தவர்கள் இந்தியாவில் இருமொழி பேசுபவராக இருக்க வேண்டும், மேலும் உயர்நிலை மற்றும் பல்கலைக்கழக நிலைகளில் உள்ள மாணவர்கள் மூன்று மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் ஆணையம் கூறியது.


இதன் பொருள், ஒருவரின் பிராந்திய மொழியைத் தாண்டி, ஒவ்வொரு நபரும் "கூட்டாட்சி மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்" மற்றும் "ஆங்கிலத்தில் புத்தகங்களைப் படிக்கும் திறன்" கொண்டிருக்க வேண்டும்.


இந்த முன்மொழிவை 1964-66ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணையம் (கோத்தாரி ஆணையம்) ஏற்றுக்கொண்டது. மேலும் இந்திரா காந்தி அரசாங்கத்தால் 1968-ல் நிறைவேற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் இணைக்கப்பட்டது.


இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்கள் "இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, தென்னிந்திய மொழிகளில் ஒன்றான நவீன இந்திய மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது" என்றும், "இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியையும் கற்றுக்கொள்வது நல்லது" என்றும் இந்த கொள்கை முன்மொழிந்தது.


ராஜீவ் காந்தி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட 1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையும், 2020-ஆம் ஆண்டின் சமீபத்திய தேசிய கல்விக் கொள்கையும் இந்த கொள்கையத் தக்க வைத்துக் கொண்டன. இருப்பினும் பிந்தையது அதன் செயல்படுத்தலில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. முந்தைய கல்விக் கொள்கைகளைப் போல் இல்லாமல், 2020 தேசிய கல்விக் கொள்கையில் இந்தி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


"குழந்தைகள் கற்றுக் கொள்ளும் மூன்று மொழிகள் மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் நிச்சயமாக மாணவர்களின் விருப்பங்களாக இருக்கும். மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளாவது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்" என்று கொள்கை கூறுகிறது.


இதன் பொருள், NEP 2020-ன் படி, ஒவ்வொரு மாநிலமும் கல்விக்கான மொழிகளைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளது. ஒரு மாநிலம் ஏதேனும் இரண்டு இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். 

இந்த இரண்டு மொழிகளிலும் இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த இரண்டு இந்திய மொழிகளுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படும்.


ஒன்றிய அரசின் மாறுபட்ட நிலைப்பாடு


கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதாக ஒன்றிய அரசு நீண்ட காலமாகக் கூறி வருகிறது. இதன் பொருள் ஒன்றிய அரசும் மாநிலங்களும் கல்விக் கொள்கைகளில் முடிவுகளை எடுக்க முடியும்.


2004ஆம் ஆண்டில், ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் (காங்கிரஸ்) நாடாளுமன்றத்தில் மும்மொழி கொள்கை ஒரு பரிந்துரை மட்டுமே என்று கூறினார். அதை செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் மட்டுமே பொறுப்பு என்று அவர் தெளிவுபடுத்தினார். 2014ஆம் ஆண்டில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டங்களை தீர்மானிக்க முழு அதிகாரம் உள்ளது என்று அவர் கூறினார்.


இருப்பினும், இப்போது, சமக்ர சிக்ஷா நிதியைப் பெறுவதற்கு, மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் கூறுகிறது. இது மாநிலங்கள் தங்கள் கல்விக் கொள்கைகளை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க கட்டாயப்படுத்துகிறது.
Original article:


Why Tamil Nadu, Centre are clashing over NEP’s 3-language formula. -Abhinaya Harigovind , Ritika Chopra

Share:

தேசிய அறிவியல் தினம் 2025: சி.வி. ராமனைக் கொண்டாடுதல் மற்றும் ராமன் விளைவைப் புரிந்துகொள்ளுதல்.

 பல ஆண்டுகளாக ‘ராமன் விளைவு’ வேதியியல், உயிரியல் மற்றும் மருத்துவம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி இயற்பியலாளர் சி.வி. ராமன் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு ராமன் விளைவைக் கண்டுபிடித்ததை நினைவுகூர்ந்து, நாட்டில் அறிவியலை ஊக்குவிப்பதற்காக தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடி வருகிறது.


தேசிய அறிவியல் தினம் அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது. இது மனிதகுலத்திற்கு பயனளிக்கும் அறிவியல் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.


சந்திரசேகர வெங்கட ராமன் 1888-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். 1921-ஆம் ஆண்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, ​​சர்வதேச பல்கலைக்கழக காங்கிரஸ் பிரதிநிதியாக லண்டனுக்கு அனுப்பப்பட்டார்.


SS நர்குண்டா கப்பலில் இந்தியாவிற்கு 15 நாள் திரும்பும் பயணத்தில், சி.வி. ராமன் மத்தியதரைக் கடலின் அடர் நீல நிறத்தால் கவரப்பட்டார். வானம் நீல நிறத்தில் தோன்றிய அதே காரணத்திற்காகவே கடல் நீல நிறத்தில் தோன்றியது, ஏனென்றால் நீல ஒளி மற்ற வண்ணங்களைவிட அதிகமாக சிதறும் (scatter) என்பதை அவர் உணர்ந்தார். 


இந்தியா திரும்பியதும், ராமன் ஒளி சிதறலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். வெவ்வேறு பொருட்கள் வழியாக ஒளி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டார். அவரது கடின உழைப்பு இறுதியில் பிப்ரவரி 28, 1928 அன்று ராமன் விளைவு என்றும் அழைக்கப்படும் ராமன் சிதறலைக் (Raman Effect) கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது. அவர் 1929-ல் நைட் பட்டம் பெற்றார். 1930-ல், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.


ராமன் விளைவு என்றால் என்ன?


ராமன் விளைவு என்பது ஒரு பொருளைத் தாக்கி அதன் அலைநீளத்தை மாற்றும் வகையில் சிதறடிக்கும்போது நிகழ்கிறது. எளிதாகச் சொன்னால், ஒரு ஒளிக்கற்றை ஒரு பொருளின் வழியாகச் செல்லும்போது, ​​மூலக்கூறுகள் ஆற்றலை உறிஞ்சுவதால் அல்லது வெளியிடுவதால் சில ஒளியின் நிறம் மாறுகிறது. இந்த செயல்முறை ஒளியின் மீள் சிதறல் என்று அழைக்கப்படுகிறது.


ராமன் விளைவு ராமன் நிறமாலையியல் (Spectroscopy) ஆய்வுக்கு அடிப்படையாக அமைகிறது. இது வேதியியலாளர்கள் மற்றும் இயற்பியலாளர்களால் பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெறப் பயன்படுகிறது. நிறமாலையியல் (Spectroscopy) என்பது பொருள் மற்றும் மின்காந்த கதிர்வீச்சுக்கு (electromagnetic radiation) இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வு ஆகும்.


ராமன் விளைவு பல ஆண்டுகளாக வேதியியல், உயிரியல், மருத்துவம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஏதேனும் சட்டவிரோத பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா என்பதைக் கண்டறிய காவல்துறையினரும் இந்தக் கொள்கையின் அடிப்படையில் ராமன் ஸ்கேனர் எனப்படும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர்.


தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம் என்ன?


தேசிய அறிவியல் தினத்தைக் கடைப்பிடிப்பதன் அடிப்படை நோக்கம், அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு குறித்த செய்தியை மக்களிடையே பரப்புவதாகும். 


மக்களின் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்த செய்தியை பரவலாகப் பரப்புதல்.


மனிதர்களின் நலனுக்காக அறிவியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்துதல்


அறிவியல் வளர்ச்சிக்கான அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதித்து புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல்


மக்களை ஊக்குவித்தல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துதல்.


இது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய அறிவியல் விழாக்களில் ஒன்றாக பின்வரும் நோக்கங்களுடன் கொண்டாடப்படுகிறது.


2025-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் என்ன?


2025-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்திற்கான கருப்பொருள் "வளர்ந்த இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்" என்பதாகும். இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் இளம் மனங்களின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்ததாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட வளர்ந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வையை இந்த கருப்பொருள் ஆதரிக்கிறது.




Original article:

Share:

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயல்முறை -பி.டி.டி. ஆச்சாரி

 தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதாவில் குறைபாடுகள் உள்ளன. இந்த மசோதா அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வேட்பாளர்களுக்கு சாதகமாக உள்ளது.


2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா ஒரு முக்கியமான சட்டமாகும். இது அரசியலமைப்பின் பிரிவு 324(5)-ன் கீழ் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (Election Commissioners (EC)) நியமனத்திற்கான விதிகள் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 


பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள்  நியமிக்கப்பட வேண்டும் என்று மார்ச் 2023-ன் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை இது இடைக்கால நடவடிக்கையாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டனர். 


இந்த நியமனங்களுக்கான பரிந்துரையை பிரதமர் வழங்குவர். இந்த செயல்முறை திருப்தியற்றதாக நீதிமன்றம் கண்டறிந்தது. நியமனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த அனுமதிப்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலையைப் பாதிக்கும் என்று நீதிமன்றம் நம்பியது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பொறுப்பாகும். பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்ய, நியமன செயல்முறை சுதந்திரமாக இருக்க வேண்டும்.


புதிய சட்டத்திற்கு சவால் விடுகிறது


நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அரசாங்கம் புதிய சட்டத்தை உருவாக்கினாலும், குழுவில் அது தலைமை நீதிபதிக்கு பதிலாக மூன்று பேர் கொண்ட குழுவின் தலைவராக இருக்கும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு கேபினட் அமைச்சரை நியமித்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றொரு உறுப்பினர் ஆவார். தேர்வுக் குழுவின் அமைப்பு தொடர்பான விதி உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழிகாட்டுதலை மீறுவதாக இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.எம். ஜோசப் (ஓய்வு பெற்றவர்) தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு,  குழுவின் அமைப்பு குறித்து வேறுபட்ட வழிகாட்டுதலை வழங்கியது. இருப்பினும், புதிய சட்டம் அந்த தீர்ப்பைப் பின்பற்றவில்லை.


புதிய சட்டம் சட்ட அமைச்சர் தலைமையில் ஒரு தேடல் குழுவை உருவாக்குகிறது. ஒன்றிய அரசின் இரண்டு மூத்த அதிகாரிகள் இதற்கு உதவுகிறார்கள். 

தேடல் குழு தேர்வுக் குழு மதிப்பாய்வு செய்ய ஐந்து வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. இருப்பினும், தகுதியான வேட்பாளர்களின் பெயர்கள் பகிரப்படுவதில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் (தேர்வுக் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்களில் இருவர்) மூத்த தேர்தல் ஆணையரை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் தேர்வை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் வரை அவர் செயல்முறையை தாமதப்படுத்த விரும்பினார். 


எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சேபனை இருந்தபோதிலும், தேடல் குழு பெரும்பான்மை வாக்குகளால் முடிவை எடுத்தது. தேர்வு செயல்முறை புதிய சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட விதிகளைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மற்றொரு தேர்தல் ஆணையர் நியமனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.


இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களை (ECs) நியமிப்பது தொடர்பான சட்டம் இப்போது நீதிமன்றத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான அரசியலமைப்பு சிக்கல்கள் உள்ளன. உயர் அரசியலமைப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான நியமன செயல்முறை பற்றி தெளிவான புரிதலை உறுதி செய்வதற்கு இந்தப் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.


தேர்வு செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள்


இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல்களை நடத்துவதற்கான முழுப் பொறுப்பையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) வழங்குகிறது. தேர்தல் ஆணையம் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பாகும். அரசியலமைப்பின் பிரிவு 324-ல் கூறப்பட்டுள்ளபடி, இந்தத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.


இந்திய தேர்தல் ஆணையம் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1993-ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் VS  தமிழ்நாடு மாநிலம் மற்றும் பிற மாநிலங்கள் வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம்  ஒரு உயர் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பு என்றும், அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கு பொறுப்பான அமைப்பாகும் என்றும், இது தேர்தல் செயல்முறையின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு நோக்கத்தை அடைய தேவையான அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது என்றும், அதன் பரந்த அளவிலான அதிகாரங்கள் அதன் கடமைகளின் முக்கியத்துவத்துடன் பொருந்துகின்றன என்று உச்சநீதிமன்றம் அதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டது.


நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கும், தேர்தல் செயல்முறையின் தூய்மையைப் பராமரிப்பதற்கும் தேர்தல் ஆணையத்தின் கடமையை வலியுறுத்துகின்றன. இந்தியாவில் சுமார் 960 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறைகளில் பங்கேற்கின்றனர். 


இது உலகில் எங்கும் உள்ள ஒரு தேர்தல் அமைப்பின் மிகப்பெரிய பணியாக அமைகிறது. இவ்வளவு பெரிய தேர்தலை நடத்துவதற்கு, அது சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், தேர்தல் ஆணையம் நேர்மையான மற்றும் திறமையான நபர்களைக் கொண்டிருக்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட திறமை மற்றும் முழுமையான பாரபட்சமற்ற தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை அரசியலமைப்பு ரீதியாக சரியான மற்றும் இந்திய குடிமக்கள்மீது மிகுந்த நம்பிக்கையை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானது.


இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான பகுதி, பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவின் அமைப்பு ஆகும். இதில், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் லோக்பால் குழுவும், கேபினட் அமைச்சரும் உறுப்பினர்களாக உள்ளனர். தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத்தலைவர் நியமிப்பார் என்று சட்டத்தின் பிரிவு 7 கூறுகிறது. தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படும் நபர்களை குடியரசுத்தலைவர் கட்டாயமாக நியமிக்க வேண்டும். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தேர்வுக் குழுவுக்கு உள்ளது.


இந்த விதியில் உள்ள கடுமையான குறைபாடு என்னவென்றால், சட்டமே அரசாங்கத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையை உருவாக்குகிறது. குழுவின் மூன்றாவது உறுப்பினர் பிரதமரின் கீழ் கேபினட் அமைச்சராக இருக்கும் போது, ​​பிரதமரும் கேபினட் அமைச்சரும் எப்போதும் பெரும்பான்மையினராக இருப்பார்கள். அரசாங்கம் முடிவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த குழுவால் அரசாங்கம் விரும்பும் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். 


சட்டத்தின் செயல்பாடு, தேர்வுக் குழு உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் அந்தஸ்தை சட்டம் வரையறுக்க வேண்டுமே தவிர, அரசாங்க வேட்பாளருக்கு பெரும்பான்மையை உறுதி செய்வதை சட்டத்தின் மூலம் உறுதி செய்யக்கூடாது. ஒரு கேபினட் அமைச்சர் எப்போதும் பிரதமரின் தேர்வை ஏற்றுக்கொள்வார். எனவே, அத்தகைய குழுவால் பட்டியலிடப்பட்ட அனைத்து நபர்களை எப்படி மதிப்பிட முடியும்? எந்தவொரு குழுவிலும் பெரும்பான்மை கருத்து சுயாதீன உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் மூலம் வெளிப்படுகிறது, அதை முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் உள்ள குழுவால், முடிவை முன்கூட்டியே கணிக்க முடியும்.


தேர்வுச் செயல்பாட்டில் உள்ள மற்றொரு குறைபாடு என்னவென்றால், பிரதமர், தலைவராக, குழு உறுப்பினர்களில் ஒருவரை கேபினட் அமைச்சரை நியமிக்கிறார். தேர்வுக் குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. அதன் உறுப்பினர்கள் சுதந்திரமாகவும், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். 


இருப்பினும், பிரதமர் குழுவிற்கு ஒரு கேபினட் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அந்த அமைச்சர் எப்போதும் பிரதமரின் முடிவை ஆதரிப்பார். ஒரு கேபினட் அமைச்சர் பிரதமரின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இதன் விளைவாக, தேர்வுக் குழு, தற்போதைய கட்டமைப்பில், மிகவும் தகுதியான நபரை நியாயமாகவும் வெளிப்படையாகவும் தேர்ந்தெடுக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.



இது நேர்மையையும் வெளிப்படையையும் தோற்கடிக்கிறது


இந்தக் குறைபாடுகள் இந்தச் சட்டத்தை அரசியலமைப்பு ரீதியாக நிலைத்தன்மையற்றதாக ஆக்குகின்றன. ஏனெனில், குழுவின் அமைப்பு தொடர்பான விதி தன்னிச்சையானது மற்றும் அதற்கு ஒரு அடிப்படை பகுத்தறிவு இல்லை. இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வேட்பாளருக்கு பெரும்பான்மையை உருவாக்குகிறது. இது சமமாகத் தகுதி பெற்ற பிற வேட்பாளர்களின் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டைத் தடுக்கிறது. 


இந்த விதி அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறக்கூடும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு மிகவும் முக்கியமானது. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதியாக இருக்கும் தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்கிறது. தேர்வுக் குழு எப்போதும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டால், அது நியாயமான தேர்தல் செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும். 


இந்திய உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை கடுமையாக பரிசீலிக்க வேண்டும்.


பி.டி.டி. ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.




Original article:

Share:

எண்ணுவது முக்கியம் : எல்லை நிர்ணயம், கூட்டாட்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி…

 எல்லை நிர்ணயம் பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டாட்சி இரண்டிற்கும் உண்மையாக இருக்க வேண்டும்.


எல்லை நிர்ணயம் குறித்து விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிப்பதே அவரது நோக்கமாக உள்ளது. 1973-ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கையில் எல்லை நிர்ணயம் எந்த விதமான அதிகரிப்பையும் ஏற்படுத்தவில்லை. 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மாநிலங்கள் முழுவதும் சமநிலையான மக்கள்தொகை வளர்ச்சியை நிலையாக வைத்திருக்க எல்லை நிர்ணயத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. 


அதிக மக்கள்தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்கள் அதிக பிரதிநிதிகளைப் பெறுவதைத் தடுக்க இது செய்யப்பட்டது. இல்லையெனில், அவை இடங்களைப் பெறும், அதே நேரத்தில் சிறந்த சுகாதாரம் மற்றும் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தை இழக்கும். 

84-வது அரசியலமைப்புத் திருத்தம், 2026-க்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. எல்லை நிர்ணயப் பணி முன்னதாகவே நடத்தப்படுவதற்காக ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியினை தாமதப்படுத்துகிறதா? பொதுவாக, 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை நிர்ணயம் நடந்திருக்கும். ஆனால், 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, இந்த செயல்முறை 2026-க்குப் பிறகு நடக்கலாம்.


ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் விகிதாசார முறையில் மட்டுமே பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த நடைமுறை நாடாளுமன்றத்தில் தனது பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடும் என்று தமிழ்நாடு கவலை கொள்கிறது. தமிழ்நாடு மற்றும் பிரிக்கப்படாத பீகாரில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் (1971-2024) விளக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தரவுகள், தமிழ்நாட்டில் 171% மற்றும் பீகாரில் 233% வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகக் காட்டுகின்றன. 


இருப்பினும், இரண்டு மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தமிழ்நாடு 39 நாடாளுமன்ற கொண்டிருந்தது மற்றும் பீகார் 54 ஜார்க்கண்ட் மாநிலத்தையும் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது. எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, மக்கள்தொகை வளர்ச்சியின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், பீகாருடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கு குறைவான இடங்கள் கிடைக்கும். 


மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இது நடக்கும். கேரளா, கர்நாடகா போன்ற குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்களும் பிரதிநிதித்துவக் குறைப்பை எதிர்கொள்ளும். தென் மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் இடங்களை இழக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். அவர்களுக்கு பிரதிநிதித்துவத்தில் "சரியான பங்கு" கிடைக்கும் என்று அவர் கூறினார். 



இருப்பினும், 1973 முதல், இந்தியாவின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது நாடாளுமன்றத்தில் அதிக பிரதிநிதிகளை உருவாக்க வழிவகுக்கும். இதன் விளைவாக, அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்கள் அதிக மக்களவை இடங்களைப் பெறும். கூட்டாட்சி கொள்கை மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் போலவே முக்கியமானது. 


மாநிலங்களுக்கு இடையே அதிகார சமநிலையைப் பராமரிக்க, விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தாமதம் ஆரம்ப மற்றும் சர்ச்சைக்குரிய எல்லை நிர்ணயத்தை செயல்படுத்துவதற்கானது என்ற சந்தேகங்களைத் தீர்க்க அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவுபடுத்த வேண்டும். உலக வல்லரசாக மாற விரும்பும் ஒரு நாடு, தனது மக்களைக் கணக்கிடும் முக்கியமான பணியைத் தாமதப்படுத்தக் கூடாது.




Original article:

Share: