கரிம-நடுநிலை உத்திகள் (carbon-neutral strategies) சந்தை தலைமையை தீர்மானிக்கும் -RS ஜலான்

 நவம்பர் 2021ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி COP26 உச்சி மாநாட்டில் இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலை ஆக மாற இலக்கு வைத்துள்ளதாக அறிவித்தார். 2023ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் 100வது சுதந்திர ஆண்டான 2047ஆம் ஆண்டுக்கான வளர்ந்த இந்தியா (Viksit Bharat) திட்டமானது அனைத்து அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது.


இந்த இலக்குகளை அடைய, இந்தியா புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் யோசனைகளை விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பெரிய மாற்றங்கள் தேவைப்படும், குறிப்பாக பொருளாதாரத்திற்கு முக்கியமான தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவில் பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்திற்கு தொழில்துறை ஒரு முக்கிய ஆதாரமாகும். ஆனால், இது வேலைகளை உருவாக்குகிறது, புதுமைகளை இயக்குகிறது மற்றும் நாட்டை போட்டித்தன்மையுடன் வைத்திருக்கிறது. எனவே, சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதோடு தொழில்கள் வளர வேண்டும். இது விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், இது எதிர்காலத்திற்குத் தயாராகுதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் மக்கள் மற்றும் சந்தைகளின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல் பற்றியது.


உற்பத்தி, கனரகத் தொழில்கள் மற்றும் மூலப்பொருட்கள் போன்ற தொழில்கள்  பெரும்பாலும் அதிக எரிசக்தி பயன்பாட்டில் சுத்தமான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, ஆற்றலைச் சேமிப்பது மற்றும் பசுமையான வழிகளில் உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்க வேண்டும்.  காலநிலை மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகம் மாறிவரும் நிலையில், சரியான கொள்கைகள், முதலீடுகள் மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.


இருப்பினும், இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைந்து அதன் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதால், புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் எதிர்காலத்தில் தேவைப்படும்.


இந்தியா ஏற்கனவே குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பல வணிகங்கள் உள் கார்பன் விலை நிர்ணயம் செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் தண்ணீரை சேமிப்பதில் கவனம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த மாற்றங்கள் முதலில் அதிக செலவு மிகுந்தாக இருக்கலாம். ஆனால், பணத்தை மிச்சப்படுத்துதல், நிறுவனத்தின் பிம்பத்தை மேம்படுத்துதல் மற்றும் வணிகங்களை மேலும் மீள்தன்மை கொண்டதாக மாற்றுதல் போன்ற நீண்டகால நன்மைகளைத் தருகின்றன.


சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, social, and governance (ESG)) தரநிலைகள் இப்போது ஒரு நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் நீண்டகால திட்டங்களின் முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முதலீட்டாளர்கள் வலுவான நிலைத்தன்மை நடைமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களை விரும்புகிறார்கள். எனவே, தெளிவான ESG தகவல்களைப் பகிர்வது இப்போது அவசியம். ஒரு தேர்வாக மட்டும் இருக்க கூடாது. இது முதலீட்டை ஈர்க்கவும் நம்பிக்கையை வளர்க்கவும் உதவுகிறது. இதை அறிந்த பல நிறுவனங்கள் இப்போது காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்க வேகமாகச் செயல்படுகின்றன. இந்த முதலீடுகள் காலநிலை தொடர்பான அபாயங்களைக் குறைத்து, காலப்போக்கில் நிறுவனங்கள் வலுவாக வளர உதவுகின்றன.


இந்த மாற்றம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதைவிட அதிகமாக செயல்பட வேண்டும். இது முன்னேற்றத்தை நாம் எவ்வாறு வரையறுக்கிறோம் என்பதை மாற்றுவது பற்றியது. இப்போது, ​​இந்தியாவில் தொழில்துறை வெற்றி எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதன் மூலம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல், மக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கான நன்மைகளாலும் அளவிடப்பட வேண்டும்.


இந்தியாவின் இன்றைய நடவடிக்கைகள் அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு, குறைந்த உமிழ்வு தொழில்நுட்பம் மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளில் அதிக நிறுவனங்கள் பணத்தை முதலீடு செய்வதைப் பார்ப்பது நல்லது. இந்தப் படிகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, வணிக வெற்றிக்கும் முக்கியமானவை.


நிலையான தொழில்துறை கண்டுபிடிப்புகளில் உலகை வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. குறைந்த விலை பொறியியலில் நமது திறமை, வலுவான தொடக்க கலாச்சாரம் மற்றும் புதிய யோசனைகளைச் சோதித்துப் பரப்பும் திறன் இதற்குக் காரணம். பசுமை மாற்றம் நியாயமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம், வணிகங்கள் மற்றும் சமூகத்தில் குழுப்பணி இப்போது தேவை.


நிகர-பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கு மாறுவது நாடுகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ இடையிலான போட்டி அல்ல, இது காலத்திற்கு எதிரான ஒரு போட்டி. இதில் வணிகங்கள் முன்னிலை வகிக்க வேண்டும். புதிய விதிகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், சீக்கிரமாக செயல்பட வேண்டும். சில சமயங்களில் தேவைக்கு அப்பால் செல்ல வேண்டும். உண்மையான கேள்வி என்னவென்றால், நாம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது பற்றியது அல்ல. நாம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா என்பதுதான்.


உலகம் நிகர பூஜ்ஜிய உமிழ்வை நோக்கி நகரும்போது, ​​உண்மையான தலைவர்கள் விரைவாக தகவமைத்துக் கொண்டு பிரச்சினைகளை அனைவருக்கும் வாய்ப்புகளாக மாற்றுபவர்களாக இருப்பார்கள். அரசாங்க விதிகளை வெறுமனே பின்பற்ற வேண்டிய நேரம் இதுவல்ல. உலகப் பொருளாதாரம் மாறி, இந்தியா ஒரு முன்னணி நாடாக மாறும்போது, ​​காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்ள தொழில்துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


RS ஜலான் புது தில்லியின் GHCL நிர்வாக இயக்குநராக உள்ளார்.


Original article:
Share:

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இராஜதந்திரத்திற்கான அரசியல் சிக்கல்கள்.

 இந்தியா வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் இந்திய இராஜதந்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முக்கியமாக, பாகிஸ்தானுடனான இந்த மோதலுக்குப் பிறகு இந்திய அரசியல் ரீதியாக முன்னேறுவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க நடவடிக்கை கோரும்போது பொதுமக்களின் உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், ஒரு இறையாண்மையின் சக்தியைப் பயன்படுத்துவது அரசியலில் இருந்து பிரிக்கப்பட முடியாது என்பதால் இதை இந்தியாவால் புறக்கணிக்க இயலாது. அரசாங்கம் தனது விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, எப்படி, எப்போது, ​​எங்கு பதிலளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஆயுதப்படைகளுக்கு சுதந்திரம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாக அங்கீகரித்தார். பயங்கரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்தியாவின் சொந்த இராணுவ பதில் அரசியல் தீர்ப்பு மற்றும் இராஜதந்திர ரீதியில் உத்தியின் அவசியமாக வடிவமைக்கப்பட வேண்டும். இதில் முக்கியமாக, இந்திய இராஜதந்திரத்திற்கு மூன்று அரசியல் சவால்கள் தனித்து நிற்கின்றன.


பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்பதை உலகிற்கு உணர்த்துவதே முதல் முன்னுரிமை ஆகும். பல நாடுகள் தாக்குதல் குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் பொறுப்பு என்று நம்பவில்லை. இந்தியாவின் வழக்கை விளக்கவும், பாகிஸ்தானின் ஈடுபாட்டிற்கான ஆதாரங்களை முன்வைக்கவும், வெளியுறவு அமைச்சகம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (United Nations Security Council (UNSC)) நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய நாடுகளை அணுகி வருகிறது. பாகிஸ்தான் தற்போது UNSC-யில் நிரந்தரமற்ற உறுப்பினராக பணியாற்றி வருவதால், கவுன்சிலானது ஒரு ராஜதந்திர போர்க்களமாக மாறியுள்ளது. UNSCயில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகளை எதிர்கொள்ள இந்தியா, அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது.


இரண்டாவது பிரச்சினை என்னவென்றால், இந்தியா இராணுவ நடவடிக்கையை கருத்தில் கொள்ளும்போது, ​​பல நாடுகள் நிதானத்தைக் கோருகின்றன. இந்த எதிர்வினை இயல்பானது மற்றும் எந்தவொரு மோதலிலும் நடக்கும். உதாரணமாக, "இது போரின் சகாப்தம் அல்ல" (this is not an era of war) என்று இந்தியா முன்னர் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அறிவுறுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை பரிசீலிக்கும்போது, ​​பொது மக்கள் நிதானத்திற்கான அழைப்புகளுக்கும், இந்தியா எதிர்கொள்ளும் உண்மையான அரசியல் சூழ்நிலைக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்ப்பதே இந்திய இராஜதந்திரத்திற்கான சவாலாகும். சிலர் நம்புவதற்கு மாறாக, பாகிஸ்தான் இராணுவம் வலிமையானது. எந்தவொரு இராணுவ மோதலிலும் இந்தியா எளிதான வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது. சாத்தியமான இராணுவ மோதலின்போது சர்வதேச ஆதரவைப் பெறுவது மிக முக்கியம்.


மூன்றாவதாக, தவிர்க்க முடியாத சர்வதேச இராஜதந்திர தலையீட்டை நிர்வகிப்பது பற்றியது. ஏனெனில், பெரிய சக்திகள் மற்றும் UNSC-களிடமிருந்து அணு ஆயுதப் போர் அதிகரிப்பைப் பற்றிய கவலைகள் உள்ளன. அவர்கள் பதற்றத்தைத் தணிப்பதை ஆதரிக்கிறார்கள் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள். 1986-87 இராணுவ நெருக்கடி மற்றும் 2019 பாலகோட் தாக்குதல் போன்ற கடந்தகால இந்தியா-பாகிஸ்தான் மோதல்களில் இந்த முறை தோன்றியுள்ளது. இந்த நெருக்கடிகளில், காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை கட்டாயப்படுத்த பாகிஸ்தான் சர்வதேச அழுத்தத்தைப் பயன்படுத்த முயன்றது. மறுபுறம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்தை இந்தியா அழுத்தம் கொடுக்க இந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான இந்த மோதல்களுக்குப் பிறகு இந்தியா அரசியல் ரீதியாக வலுவாக வெளிப்படுவதை உறுதி செய்வதில் இந்திய ராஜதந்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


Original article:
Share:

பிரதமர் மோடியின் பயணம் இந்திய-சவுதி இராஜதந்திரக் கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. -எம்.டி. முடாசிர் குவாமர்

 பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா வருகை முக்கியமானது. இது புதிய துறைகளில் இந்தியா-சவுதி அரேபியா ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இது அவர்களின் வளர்ந்து வரும் இராஜதந்திர கூட்டாண்மைக்கு பங்களிக்கிறது. மோடி-முகமது பின் சல்மான் சந்திப்பின் (Modi-MBS meeting) போது விவாதிக்கப்பட்ட இந்த புதிய ஒத்துழைப்புத் துறைகள் யாவை?


ஏப்ரல் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா பயணம் இந்திய-சவுதி உறவுகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் இருநாட்டு உறவுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அதே நாளில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அது குறைக்கப்பட்டது.


இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கு முக்கியமானது.


பிரதமர் மோடி இரண்டு நாள் பயணத்திற்காக ஏப்ரல் 22, 2025 செவ்வாய்க்கிழமை ஜெட்டாவிற்கு சென்றடைந்தார். அவரை பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் (MBS) ஆகியோர் அழைத்தனர். இருப்பினும், பிரதமர் அவர்கள் புதன்கிழமை இரவு இருந்து தங்குவதற்குப் பதிலாக, தாக்குதல் காரணமாக, புதன்கிழமை காலை அவர் நாடு திரும்பினார்.


பிரதமர் வருகையின் மதிப்பீடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தீவிரமடைந்து வருவதைக் காட்டுகிறது. இந்த ஒத்துழைப்பு புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் நடக்கிறது. அவர்களின் இருதரப்பு உறவுகளை ஒரு இராஜதந்திர கூட்டாண்மையாக மாற்றுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவும் சவுதி அரேபியாவும் இராஜதந்திர உறவுகளை தீவிரப்படுத்துகின்றன.


வர்த்தகம், வணிகம், முதலீடுகள், எரிசக்தி பாதுகாப்பு, வெளிநாட்டவர்கள், ஹஜ் மற்றும் மக்களிலிருந்து மக்கள் தொடர்புகள் (people-to-people contacts) போன்ற இந்தியா-சவுதி அரேபியா உறவுகளின் பாரம்பரிய அம்சங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இருப்பினும், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, இணைப்பு, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பு பிரதமரின் வருகையின் சிறப்பம்சமாக இருந்தது. இந்த வளர்ந்து வரும் பகுதிகளில் ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது மற்றும் உறவை பன்முக இராஜதந்திர கூட்டாண்மையாக வளர்க்க உதவுகிறது.


இதில், மோடியின் வருகையும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஏனெனில், இது பிராந்திய மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த காலத்தில் நடந்தது. உக்ரைன் மற்றும் காசாவில் நடந்த போர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாக நிச்சயமற்ற சர்வதேச பொருளாதார நிலைமை போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்கிறது. இந்த சூழலில், ஜி20 பொருளாதாரங்களான இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் பங்கு இன்னும் முக்கியமானது. பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலை நிலைநிறுத்துவதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.


இது சம்பந்தமாக, குறிப்பாக தென்மேற்கு ஆசியப் பகுதி உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது. இது ஒரு, கூட்டுறவு மற்றும் கூட்டு அணுகுமுறையை முக்கியமானதாக ஆக்குகிறது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற விவாதத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் சிலர் இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளனர்.


இந்தப் பயணத்தின் முடிவுகளைப் பார்க்கும்போது, ​​மோடிக்கும் MBS-க்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதைக் காண்கிறோம். இது வர்த்தகம், வாணிபம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் உறவுகள் போன்ற வழக்கமான சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது. வளர்ந்து வரும் இந்தோ-சவுதி ஒத்துழைப்பின் மூன்று முக்கியப் பகுதிகளை இந்த சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது. அவை, சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு (environment and food security), பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு (defense and counter-terrorism) மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு (cultural cooperation) போன்றவை ஆகும்.


சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவும் சவுதி அரேபியாவும் சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளன. இந்த பகுதிகளில் விவாதங்கள் மற்றும் செயல் திட்டங்களில் அவர்கள் பணியாற்றியுள்ளனர். இரு நாடுகளுக்கும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் பலங்கள் உள்ளன. இந்த பலங்கள் ஒன்றையொன்று சார்ந்தவை மற்றும் பூர்த்திசெய்யும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன.


பிரதமர் மோடி மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை, அவர்களின் நீண்டகால ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஒத்துழைப்பு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதில் உரங்களின் வர்த்தகமும் அடங்கும். இரு நாட்டு தலைவர்களும் நீண்டகால ஒப்பந்தங்களில் பணியாற்றவும் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தங்கள் விநியோகத்தைப் பாதுகாப்பது, பரஸ்பர முதலீடுகள் மற்றும் கூட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்தும். உணவுப் பாதுகாப்பில் நீண்டகால இராஜதந்திர ரீதியில் ஒத்துழைப்பை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள் ஆகும்.


இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக எரிசக்தி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. சமீபத்தில், இந்த இரு நாட்டு உறவுகள் ஒரு நாடுகடந்த உறவிலிருந்து ஒரு இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையாக வளர்ந்துள்ளன. நிலையான எரிசக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒத்துழைப்பைப் பற்றி இரு தரப்பினரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.


இதன் விளைவாக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளன. சூரிய ஆற்றல் திறனை ஆராய்வதில் இந்தியாவும் சவுதி அரேபியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன.


காலநிலை மாற்றத்தில் அதிக ஒத்துழைப்பு


காலநிலை மாற்றம் ஒத்துழைப்பின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக, இரு நாட்டு தலைவர்களும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் காலநிலை மாற்றத்தில் அதிக ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். 


காலநிலை மாற்ற விவாதத்தில் வடக்கு மற்றும் தெற்கு இடையே வளர்ந்து வரும் பிளவு காரணமாக இது முக்கியமானது. சவுதி அரேபியா மற்றும் இந்தியா போன்ற பெரிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் உலகத் தலைவர்களால் அதிகளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க இந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, பலதரப்பு அமைப்புகளில், குறிப்பாக கட்சிகளின் மாநாடு மற்றும் G20-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானது.


எனவே, இந்தியாவும் சவூதி அரேபியாவும், மோடி மற்றும் எம்பிஎஸ் இடையேயான இருதரப்பு சந்திப்பின்போது, ​​"ஆதாரங்களை விட கார்பன் உமிழ்வை மையமாகக் கொண்டு காலநிலை ஒப்பந்தங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டியதன் அவசியம்" குறித்து ஒப்புக்கொண்டன. கார்பன் உமிழ்வைக் குறைத்தல், காடு வளர்ப்பு மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் இரு தரப்பு முயற்சியையும் அவர்கள் பாராட்டினர். 


எடுத்துக்காட்டாக, சவுதி இராச்சியம் பசுமை முன்முயற்சி மற்றும் மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், சவூதி அரேபியாவால் கார்பன் உமிழ்வை நிர்வகிப்பதற்கும் காலநிலை மாற்ற நோக்கங்களை அடைவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்ட கார்பன் பொருளாதாரத்தின் (circular carbon economy) முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "சர்வதேச சோலார் கூட்டணி (International Solar Alliance), ஒரே சூரியன் - ஒரே உலகம் - ஒரே மின்கட்டமைப்பு (One Sun-One World-One Grid), பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (Coalition of Disaster Resilient Infrastructure (CDRI)) மற்றும் சுற்றுச்சூழலுக்கான மிஷன் வாழ்க்கை முறை ​​(Mission Lifestyle for Environment (LiFE)) மற்றும் உலகளாவிய பசுமை கடன் முன்முயற்சி (Global Green Credit Initiative), உள்ளிட்ட இந்திய முயற்சிகள் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டன.


பாதுகாப்பு, பாதுகாப்புத் தன்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு


பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை சமீபத்தில் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன. இதில் மிக முக்கியமான பகுதி, அதிகரித்து வரும் இராணுவங்களுக்கு இடையேயான உறவுகள் (military-to-military ties) ஆகும். இந்த உறவுகளில் கூட்டுப் பயிற்சி, பயிற்சிகள், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் வழக்கமான உயர்மட்டக் கூட்டங்களை நடத்துவது ஆகியவை அடங்கும். கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.


கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன. சைபர் பாதுகாப்பு (cybersecurity), எல்லைப் பாதுகாப்பு (border security) மற்றும் நாடுகடந்த குற்றம் (fighting transnational crime), போதைப்பொருள் (narcotics) மற்றும் போதைப்பொருள் கடத்தலை (drug trafficking) எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.


ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் பிரதமர் தனது பயணத்தை ஒரு நாள் குறைக்க வேண்டியிருந்தது. இதனால், இருநாட்டு தரப்பினரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். "எந்த காரணத்திற்காகவும் எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்." 


மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்டித்தபோது மோடியும் முகமது பின் சல்மானும் (MBS) பாகிஸ்தானைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டனர். பயங்கரவாதத்தை நிராகரிக்கவும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றவும், பொறுப்பானவர்களை விரைவாக நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டனர். பயங்கரவாதத்தை எந்தவொரு இனம், மதம் அல்லது கலாச்சாரத்துடனும் இணைப்பதையும் அவர்கள் நிராகரித்தனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதிலும் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை அவர்கள் பாராட்டினர்.


ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களை பயங்கரவாதிகள் அணுகுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் சவுதி அரேபியாவும் வலியுறுத்தின. இந்த முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமானது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழுவை உருவாக்குவதாகும். மோடி மற்றும் MBS தலைமையிலான இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மை கவுன்சிலின் கீழ் உள்ள இந்தக் குழு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை உறவுகளை வலுப்படுத்த உதவும்.


கலாச்சார உறவுகள்


வழக்கமாக, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் கலாச்சார உறவுகள் முக்கியமாக ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரைகள் (Hajj and Umrah pilgrimage) மூலம் காணப்படுகின்றன. மேலும், பல இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இது இந்தியாவில் உள்ள பல குடும்பங்களை ஆதரிக்க உதவுகிறது. தற்போது, ​​சுமார் 2.5 மில்லியன் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். இந்திய சமூகம் அதன் கடின உழைப்புக்கு பெயர் பெற்றது. சமீபத்தில், இந்தியாவில் இருந்து முதலீடுகள் மற்றும் வணிகங்களும் வளர்ந்து, இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.


சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளும் சுற்றுலா, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் போன்ற புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராயத் தொடங்கியுள்ளன. சவுதி அரேபியா தனது பார்வை-2030 (Vision 2030) திட்டத்தின் கீழ் பெரிய சீர்திருத்தங்களைச் செய்து வருவதால் இது முக்கியமானது. இந்தப் பகுதிகளில் திறனைத் திறக்க உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாடு பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக, இசை மற்றும் ராக் விழாக்கள், செங்கடல் திரைப்பட விழா மற்றும் NEOM, நியூ முராப்பா, முகாப், அல்-உலா மற்றும் திரியா போன்ற பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற நிகழ்வுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த வருகையின் போது, ​​வளர்ந்து வரும் கலாச்சார ஒத்துழைப்பை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். பாரம்பரியம், திரைப்படம், இலக்கியம் மற்றும் நிகழ்ச்சி மற்றும் காட்சி கலைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழுவை உருவாக்குவது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மை கவுன்சிலின் கீழ் நான்காவது அமைச்சரவைக் குழுவான சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அமைச்சர் குழுவை உருவாக்குவது ஒரு சிறப்பம்சமாகும். இதில் திறன் மேம்பாடு மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.


விரிவடையும் எல்லைகள்


இந்திய-சவுதி இருதரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளன. மேலும், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)), நிலையான வளர்ச்சி, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் பலவற்றின் மூலம் இணைப்பு போன்ற துறைகளில் அதிக ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. 


இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகள், ஹஜ் மற்றும் உம்ரா மற்றும் இந்திய வெளிநாட்டினரின் பங்களிப்புகள் ஆகியவை உறவின் முக்கிய அம்சங்களாகும். இரு தரப்பினரும் தங்கள் இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையை அங்கீகரிப்பதால், அவர்கள் புதிய எல்லைகளுக்கு விரிவடைந்து வருகின்றனர். இதில் இருவழி முதலீடுகள், எரிசக்தி பாதுகாப்பு, தளவாடங்கள், விநியோகச் சங்கிலி இணைப்புகள் (supply chain links) மற்றும் தொடர்பு (connectivity) ஆகியவை அடங்கும். இது அவர்களின் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 


பிரதமர் மோடியின் பயணம், இந்தியா-சவுதி அரேபியா உறவுகளில் வழக்கத்திற்கு மாறான பகுதிகளின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மை ஒத்துழைப்பு, உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவை இந்த பகுதிகளில் அடங்கும். இந்த வருகை பாரம்பரிய ஒத்துழைப்பு பகுதிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இது இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


Original article:
Share:

பதட்டமான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (LoC) : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் எதைப் பற்றியது? -பஷீர் அலி அப்பாஸ்

 ஒரு வாரத்திற்கும் மேலாக, பாகிஸ்தான் இராணுவம் ஒவ்வொரு இரவும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் (Line of Control(LoC)) போர் நிறுத்தத்தை மீறி வருகிறது. ஒவ்வொரு மீறலுக்கும் இந்தியாவிலிருந்து பதிலானது தகுந்தளவில் கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தன்மை என்ன? இந்த மீறல்கள் ஏன் நடக்கின்றன? அவை ஏன் நிறுத்தப்படுகின்றன?


கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control(LoC)) மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள பல இராணுவப் பிரிவுகளில் வியாழக்கிழமை இரவும் தொடர்ந்து 8-வது நாளாக பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர். இது, இந்திய இராணுவம் இந்த ஒவ்வொரு மீறலுக்கும் "அளவீடு மற்றும் விகிதாசார முறையில்" (calibrated and proportionate manner) பதிலளித்துள்ளது.


ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் இந்தியாவின் பதிலடி, இதுவரை இரு தரப்பிலும் எந்த இறப்பையும் ஏற்படுத்தவில்லை.


ஆனால், பிப்ரவரி 2021-ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ இயக்குநரகங்கள் (Directorates General of Military Operations (DGMOs)) ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் போர்நிறுத்தத்தை புதுப்பித்ததில் இருந்து இந்த மீறல்கள் போர்நிறுத்தத்தின் மிகத் தீவிரமான முடிவைக் குறிக்கின்றன.


இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் எப்படி உருவானது? நெருக்கடி காலங்களில் போர் நிறுத்தத்தை மீறுவது எதைக் குறிக்கிறது?


கட்டுப்பாட்டுக் கோடு : இயற்கை மற்றும் பரிணாமம்


இன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்பது ஒரு முறையான ஒப்பந்தத்தைவிட ஒரு புரிதலாக உள்ளது.


இரண்டு வழக்கமான இராணுவப் படைகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் பொதுவாக ஒரு போர் முடிந்த பிறகு நடக்கும். இது நிலப்பரப்பில் ஒரு கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு இராணுவப் படையும் இந்தக் கட்டுப்பட்டு எல்லைக் கோட்டில், சொந்த நாடுகளில் உள்ள பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.


இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இதுபோன்ற போர் நிறுத்தம் கடைசியாக டிசம்பர் 1971-ல் ஏற்பட்டது. இதற்கான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பெரும்பாலும் 1948-49 போருக்குப் பிறகு கராச்சி ஒப்பந்தத்தால் (1949) நிறுவப்பட்ட "போர் நிறுத்த எல்லைக் கோடு" (Ceasefire Line) போலவே இருந்தது.


சிம்லா ஒப்பந்தம் 1972-ல் கையெழுத்தானது. இது எல்லையை "கட்டுப்பாட்டு எல்லைக் கோடு" (LoC) என்று மறுபெயரிட்டது. இது ஒரு இராணுவ எல்லையாகும். இது இந்தியா அல்லது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பிராந்தியளவில் உரிமைகோரல்களைப் பாதிக்காது. இதன் பொருள், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை அல்ல. மாறாக, இரு நாட்டு இராணுவப் படைகளும் தற்போது நாடுகளின் நிலைகளை குறிப்பதற்காக வைத்திருக்கும் ஒரு கோடாகக் கருதப்படுகிறது.


கட்டுப்பாட்டு எல்லைக் கோடு சுமார் 740 கி.மீ தூரம் உடையது. இது காஷ்மீரில் உள்ள சங்கம் (Sangam) அருகே தொடங்கி சியாச்சின் பனிப்பாறைக்கு அருகிலுள்ள NJ-9842 புள்ளி Point (NJ-9842) வரை செல்கிறது. ஜம்மு பகுதியில், கட்டுப்பாடு எல்லைக் கோடு இந்தியாவிற்கான சர்வதேச எல்லையாக (International Border (IB)) மாறுகிறது. இந்தக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் பகுதி பஞ்சாபின் எந்தப் பகுதியையும் இந்தியாவானது உரிமை கோரவில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்த எல்லையை ஒரு "வேலை செய்யும் எல்லை"யாகக் (Working Boundary) கருதுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் இந்தியப் பகுதியின் அருகில் உள்ள ஜம்முவை உரிமை கோருகிறது. எனவே, இதனால் பாகிஸ்தான் இந்த எல்லையை தீர்க்கப்படாததாகக் கருதுகிறது.


பல ஆண்டுகளாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பயனுள்ள எல்லையாக மாறியுள்ளது.


அதன் இராணுவத்தின் இயல்பான தன்மையின் காரணமாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பெரும்பாலும் இரு நாடுகளின் படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் சர்வதேச எல்லையிலிருந்து (IB) வேறுபட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் வலுவான தற்காப்பு கட்டமைப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் உள்ளனர்.


இரு நாட்டு தரப்பினரும் மறுபக்கமாக, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் எந்தவொரு "ஒருதலைப்பட்ச மாற்றங்களையும்" (unilateral changes) செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் பனி உருகும்போது (snow melts) அல்லது குவியும் போது (accumulates seasonally) போன்ற பருவகால மாற்றங்கள் காரணமாக கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு இயற்கையாகவே மாறக்கூடும். இதில் இராணுவ வீரர்கள் அல்லது பொதுமக்கள் (எ.கா., மேய்ப்பர்கள்) போன்ற அங்கீகரிக்கப்படாத நபர்கள் எல்லையைக் கடப்பதைத் தடுக்கவும் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.


இரண்டு அணு ஆயுத நாடுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள், ஒருவருக்கொருவர் எதிரெதிரே நிலைநிறுத்தப்பட்ட போர் வரலாற்றைக் கொண்டிருப்பதால், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு எப்போதும் பதட்டங்களுக்கு உள்ளாகிறது.


எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் "எல்லை நடவடிக்கைக் குழுக்களின்" (Border Action Teams) தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட அர்த்தமற்றதாக்கியுள்ளன. ஏனெனில், 1989-ல் காஷ்மீரில் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இது குறிப்பாக உண்மையின் வெளிப்பாடாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, 1972-க்குப் பிறகு முதல் துப்பாக்கிச் சூடு நடந்தபோது போர் நிறுத்தம் காலாவதியானது.


அப்போதிருந்து, ஒரு சில பரிமாற்றங்களுக்குப் பிறகு எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு நிலை நிறுத்தப்படும் போதெல்லாம், இரு நாடு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்கிறார்கள். சில சமயங்களில், 1990-களில் அல்லது 2016 மற்றும் 2021-க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீறல்கள் நடந்தன. குறிப்பாக, 1990கள், இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளைப் பிரிவின் (Northern Command) இராணுவ வீரர்களால் "அனைவருக்கும் இலவசம்" (free for all) என்று பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன.


ஷேக்ஸ்பியரின் வழியில், போர்நிறுத்தம் பெரும்பாலும் "கடைபிடிப்பை விட மீறலில் அதிக மரியாதைக்குரியது" (more honoured in the breach than the observance) (ஹேம்லெட், சட்டம் I) என்று குறிப்பிடுகிறது.


மீறல்கள் : நிறுத்தமும் தொடக்கமும்


மீறல்கள் ஏன் நிகழ்கின்றன?, அவை ஏன் நிறுத்தப்படுகின்றன?


1972-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நெருக்கடியின் போதும் கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளன.


2016ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு எதிரான இந்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் போன்ற வரையறுக்கப்பட்ட சிறிய-ஆயுத துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் இருந்து முழு அளவிலான எல்லை தாண்டிய நடவடிக்கைகள் வரை இத்தகைய மீறல்கள் உள்ளன.


சில நேரங்களில், இந்த மீறல்கள் தரையில் உள்ள உள்ளூர் இயக்கவியலின் விளைவாக (local dynamics on the ground) இருக்கலாம். இந்த காரணிகள் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை அல்ல.


இந்த "தன்னாட்சி இராணுவ காரணிகள்" (ஹேப்பிமான் ஜேக்கப், ”லைன் ஆன் ஃபயர்: போர் நிறுத்த மீறல்கள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் விரிவாக்க இயக்கவியல்”, 2019) இரு இராணுவங்களும் எல்லையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதிலிருந்து எழுகின்றன. இதில் மறுபுறம் உள்ள பிரிவுகளை தொடர்ந்து "சோதிக்க" வேண்டிய அவசியம், இராணுவ வீரர்களின் மன உறுதியைப் பேணுதல், இராணுவ வெறுப்புகளைத் தீர்த்து வைத்தல் அல்லது மறுபக்கத்தைவிட மேன்மையைக் காட்ட வேண்டிய அவசியம் ஆகியவை இதில் அடங்கும்.


முன்னாள் வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எச் எஸ் பனாக் உட்பட பல இந்திய ஜெனரல்கள் கூறியது போல், ஒரு தரப்பினர் மற்றவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தடுக்கும் கடுமையான உத்திக்கான விதிகள் எதுவும் இல்லை.


இருப்பினும், எழுதப்படாத நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.


உள்ளூர் கமாண்டர்களுக்கு இடையேயான "கொடி சந்திப்புகள்" (flag meetings) மற்றும் புதுதில்லி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள இரண்டு இராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநரகங்களுக்கு இடையேயான தீவிர நிகழ்வுகளும் இதில் அடங்கும்.


இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அத்துமீறல்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதம் அளிக்கவில்லை, மேலும் அவ்வாறு செய்யவுமில்லை. கட்டுப்பாடு எல்லைக் கோடு ஒரு தனித்துவமான எல்லையாகும். இங்கு, வன்முறை பொதுவானது மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.


தற்போதைய நெருக்கடி: இப்போது என்ன?


2021-ம் ஆண்டில், இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இரண்டும் கட்டுப்பாட்டு எல்லை கோட்டில் போர் நிறுத்தத்தை மீறுவதை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன. இந்தியா-பாகிஸ்தான் கூட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் 2003 ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய "புரிந்துணர்வு" அடைய அவர்கள் இலக்கு வைத்தனர்.


பாகிஸ்தான் இராணுவம் புதிய உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் கையாண்டது. அது ஆப்கானிஸ்தானுடனான நிலைதன்மையின்மைக்குட்பட்ட எல்லையையும் எதிர்கொண்டது. இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை, போர் நிறுத்தம் லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) சீனாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் அதிகக் கவனம் செலுத்த அவர்களுக்கு வாய்ப்பளித்தது.


விதிமீறல்கள் வருடத்திற்கு ஒரு சில குறிப்பிட்ட சம்பவங்களாகக் குறைந்ததால், உள்ளூர் மக்கள் பயனடைந்தனர். எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள் எல்லையோர கிராமங்களை நேரடியாகப் பாதிக்கிறது. இதில் வெளிப்பட்ட தவறான குண்டுகள் அல்லது தோட்டாக்கள் பொதுமக்களைக் கொல்லும். மேலும், இதில் குறிப்பிடும்படியாக, மகத்தான பயிர் விளைச்சல் மற்றும் நிலையான வாழ்வாதாரங்களில் நன்மைகள் காணப்பட்டன.


இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த புரிதலைப் பேணுவதற்கு காரணங்கள் உள்ளன. 2019 முதல், இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் முறிந்ததிலிருந்து, இரு நாடுகளும் முக்கியமாக இராணுவ வழிகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன.


2021-ம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சங்கா கூறுகையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உள்ள முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்ய இயக்குநரகத்தில் உள்ள தீவிர நிகழ்வு கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் பயன்படுத்தப்படுகிறது. முக்கிய சம்பவங்களின் போது, ​​இயக்குநர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேசுகிறார்கள்.


ஏப்ரல் 29 அன்று, இராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநர் (Director General of Military Operations(DGMO)) இருந்து பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் அவசர தொலைபேசி எண்ணில் பேசினர். பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் போர் நிறுத்த மீறல்களுக்கு இந்தியத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் இந்தியப் படைகள் மீது அழுத்தம் கொடுக்க உதவுகிறது. குறிப்பாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று அஞ்சுவதால், பாகிஸ்தானின் பலவீனங்களை சோதிக்கவும் இது அனுமதிக்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுப்பது மட்டுமே பிரச்சினை அல்ல. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் விவகாரத்தைப் போலவே, இந்தியாவும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை (International Border (IB)) தற்செயலாகக் கடந்ததிலிருந்து அவர் பாகிஸ்தான் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெருக்கடி காலங்களில், இந்த தற்செயலான கடவுகள் (accidental crossings) ஒரு தரப்பினரால் மறுபுறம் செல்வாக்கு செலுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன.


எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு என்பது பெரும்பாலும் நெருக்கடியின் போது இரு நாடு தரப்பினரும் எடுக்கும் முதல் நடவடிக்கையாகும். இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். ஏனெனில், இரு தரப்பினரும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் பல ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இருப்பினும், நிலைமை மோசமடையக்கூடிய ஆபத்து எப்போதும் உள்ளது.


பஷீர் அலி அப்பாஸ் புது தில்லியில் உள்ள இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலில் மூத்த ஆராய்ச்சி நிபுணராக உள்ளார்.


Original article:
Share:

விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவிற்கு ஒரு புதிய கடல்சார் சகாப்தத்தின் விடியலைக் குறிக்கிறது. -தினேஷ் கல்லுங்கல்

 பிரதமர் நரேந்திர மோடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்எஸ்சி செலஸ்டினோமாரஸ்கா (MSC Celestinomaresca) கப்பலில் ஏறினார். பின்னர், துறைமுகத்தின் முறையான திறப்பு விழாவுக்கு முன், துறைமுக செயல்பாட்டு கட்டிடம் உள்ளிட்ட முக்கிய நிறுவல்களைப் பார்வையிட்டார்.


உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் புதிய எல்லைகளை ஆராய நாட்டிற்கு உதவும் வகையில், புதிதாகக் கட்டப்பட்ட அனைத்து வானிலை விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை (Vizhinjam International Seaport) பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மே 2, 2025-ஆம் தேதியன்று  நாட்டிற்கு அர்ப்பணித்தார்.


ஐரோப்பா, வளைகுடா பகுதி மற்றும் அதிக தொலைவில் உள்ள கிழக்கு நாடுகள், கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து அச்சை இணைக்கும் சர்வதேச கப்பல் பாதைகளில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகம், சரக்குகளின் மறுஏற்றுமதிக்காக (transshipment) இந்தியா பிற சர்வதேச துறைமுகங்களை சார்ந்திருப்பதை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் மோடி காலை 10.30 மணியளவில் துறைமுகத்தை அடைந்தபோது, துறைமுக நகரம் திருவிழா போன்று இருந்தது. அவரை முதலமைச்சர் பினராயி விஜயனும் அவரது அமைச்சர்களும் வரவேற்றனர்.

விழிஞ்சம் துறைமுகம்: உலக வர்த்தகத்திற்கான முக்கிய கடல் நுழைவாயில் என்று கேரள முதல்வர் பாராட்டினார்


பின்னர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த MSC Celestinomaresca என்ற கப்பலில் பிரதமர் ஏறினார். பின்னர், துறைமுகத்தை முறையாக இயக்கும் முன் துறைமுக செயல்பாட்டு கட்டிடம் உள்ளிட்ட முக்கிய நிறுவல்களைப் பார்வையிட்டார். 


நாட்டின் முதல் அரை தானியங்கி துறைமுகமான இந்தத் துறைமுகம், சர்வதேச கப்பல் பாதைக்கு அருகில் இந்தியாவில் ஆழ்கடல் துறைமுகங்கள் இல்லாததால், சிங்கப்பூர், கொழும்பு, சலாலா மற்றும் துபாய் ஆகிய வெளிநாட்டு துறைமுகங்களில் தற்போது மேற்கொள்ளப்படும் இந்திய சரக்கு பரிமாற்றத்தை உள்நாட்டிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் துறைமுகம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், விழிஞ்சம் துறைமுகம் இந்திய துணைக்கண்டம் முழு இந்தியாவிற்கும் சேவை செய்யும் உலகத் தரம் வாய்ந்த கப்பல் போக்குவரத்து மையமாக மாறுகிறது.


துறைமுகம் அமைந்துள்ள இடத்தில் கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் 20 மீட்டர் வரை இயற்கையான நீர் ஆழம் இருப்பதால், மிகப் பெரிய தாய்க் கப்பல்களை (mother vessels) நிறுத்திவைக்க ஏற்றதாக இந்த துறைமுகம் கேரளாவிற்கும் தெற்காசியாவின் கடல்சார் வர்த்தகத்திற்கும் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழிஞ்சம் துறைமுகத்தில் உள்ள தானியங்கி, உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன மறுஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றாக அதை நிலைநிறுத்துகிறது. கப்பல் திரும்பும் நேரத்தை குறைக்கிறது மற்றும் பெரிய கொள்கலன் கப்பல்களை கையாளும் இந்தியாவின் திறனை அதிகரிக்கிறது. துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து 24 யார்டு கிரேன்களின் செயல்பாடுகளும் முழுமையாக தானியங்கி முறையில் இயங்குகின்றன. அதே நேரத்தில் 8 கப்பல்களில் இருந்து கரைக்கு செல்லும் கிரேன்கள் தொலைதூரத்தில் இயக்கப்பட்டு, துறைமுகத்தை நாட்டின் முதல் அரை தானியங்கி துறைமுகமாக  (semi-automated port) மாற்றுகிறது.


திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே, துறைமுகம் அதன் சோதனை ஓட்டத்தின்போது பல சாதனைகளை அடைந்தது மற்றும் அதைத் தொடர்ந்து ஐந்து மாத வணிகச் செயல்பாட்டில் இருந்தது.


2025ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அடிப்படையில் இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள 15 துறைமுகங்களில் முதலிடம் பெற்றது. பிப்ரவரியில் 40 கப்பல்களில் இருந்து 78,833 இருபது அடி சம அலகு (Twenty-foot Equivalent Units (TEUs)) மற்றும் மார்ச் மாதத்தில் 51 கப்பல்களில் இருந்து 1.08 லட்சம் இருபது அடி சம அலகாகவும் இருந்தது. இந்த துறைமுகம் இதுவரை மொத்தம் 285 கப்பல்களை நிறுத்த உதவியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5.93 லட்சம் இருபது அடி சம அலகு சரக்குகளை கையாண்டுள்ளது. இந்த காலத்தில் அதன் நிறுவப்பட்ட திறனில் சுமார் 110% பயன்பாட்டை கொண்டுள்ளது.


எம்எஸ்சி டர்கியே போன்ற பெரிய தாய்க் கப்பல்கள், உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான (24,346 TEUs) மற்றும் 24,116 TEUs கொண்ட MSC கிளாட் ஜிரார்டெட் ஆகியவை துறைமுகத்திற்கு வந்தன. இது துறைமுகத்தின் பொறியியல் திறமையை உலகிற்கு காட்டியது.


ரப்பிள்-மவுண்டட் அலைத்தடுப்பான் (rubble-mounded breakwater) ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். 18 மீ முதல் 20 மீ ஆழமுள்ள நீரில் கட்டப்பட்ட 2,960 மீட்டர் நீளமுள்ள அலைத்தடுப்பான், 28 மீட்டர் மொத்த உயரத்துடன், 9 மாடி கட்டிடத்திற்கு சமமாக, நாட்டில் இதுவரை கட்டப்பட்ட ஆழமான அலைத்தடுப்பானாக உள்ளது.


இப்போது, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (Ministry of Environment and Forests) துறைமுகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மேம்பாட்டிற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. இது கேரளா அரசுடன் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் (public-private partnership model) கீழ் துறைமுகத்தை உருவாக்கிய அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் (Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ)) மூலம் ₹9,560 கோடி முதலீட்டை ஈர்க்கும். இது அதன் தற்போதைய திறனை ஆண்டுக்கு 1 மில்லியன் TEUவில் இருந்து 2028ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 3 மில்லியன் TEUவாக உயர்த்தும்.


திட்டத்தின் முதல் கட்ட செலவு ₹8,867 கோடியாகும். இதில், மாநில அரசின் பங்களிப்பு சுமார் ₹5,595 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஒன்றிய இணை அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன் மற்றும் சுரேஷ் கோபி, மாநில அமைச்சர்கள் மற்றும் பலர் துறைமுகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


Original article:
Share:

இந்தியாவில் நாடாளுமன்ற மேற்பார்வையை வலுப்படுத்துதல் -மிதுல் ஜாவேரி, ஆத்மன் ஷா

 “அதிகபட்ச ஆளுகை” (maximum governance) உடன் சேர்த்து, “அதிகபட்ச பொறுப்பு” (maximum accountability) இருக்க வேண்டும். இது அதிகாரம் பெற்ற மற்றும் பயனுள்ள நாடாளுமன்றத்துடன் தொடங்க வேண்டும்.


ஒரு வரலாற்று உண்மை என்னவென்றால், மூன்று ஆண்டுகளாக, அரசியலமைப்பு சபை இந்திய அரசியலமைப்பை உருவாக்க 167 நாட்கள் கூடியது. நடந்த பல முக்கியமான விவாதங்களில், இந்தியா எந்த வகையான அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் இருந்தது. நாடாளுமன்ற முறையின் தேர்வை ஆதரித்து, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாதிட்டார். இது ஒரு செயல்படும் ஜனநாயகத்திற்கு அவசியமான சமரசமாக அதிக பொறுப்புணர்வையும் குறைந்த நிலைத்தன்மையையும் வழங்குகிறது. நாடாளுமன்றத்தில் கேள்விகள், தீர்மானங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் நிர்வாகத்தின் தினசரி பொறுப்புக்கூறலையும், தேர்தல்கள் மூலம் காலமுறை பொறுப்புக்கூறலையும் இத்தகைய அமைப்பு அனுமதிக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.


கண்காணிப்பு குறைதல்


அரசியலமைப்பு காசோலைகள் மற்றும் சமநிலைகளை உள்ளடக்கியிருந்தாலும், சட்டமன்ற மேற்பார்வை பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் செயல்திறன் முக்கியமானது. ஆனால், வெளிப்படைத்தன்மையின் விலையில் அல்ல. நிறைவேற்று நடவடிக்கையை ஆராய்வதில் நாடாளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்துவது சட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை திறம்பட செயல்படுத்துவதையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வதிலும் மிகவும் முக்கியமானது. இந்தியா 'அதிகபட்ச நிர்வாகம்” மற்றும் திறமையான நிர்வாகத்தைக் கொண்டிருக்க, வலுவான பொறுப்புக்கூறலும் இருக்க வேண்டும். இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள நாடாளுமன்றத்துடன் தொடங்க வேண்டும்.


பல ஆண்டுகளாக, அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க ​​நாடாளுமன்றம் பல வழிகளை உருவாக்கியுள்ளது. சில வழிகள் அதிகாரப்பூர்வமானவை, சில பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டவை. கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் நிலைக்குழுக்களின் பணிகள் இதில் அடங்கும். கோட்பாட்டளவில், அவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணைக் கேள்விகளைக் கேட்கவும், விரிவான தகவல்களைப் பெறவும், தேவைப்பட்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழியவும் அதிகாரம் அளிக்கின்றன.


அதன் வலுவான கட்டமைப்பு இருந்தபோதிலும், நாடாளுமன்ற மேற்பார்வை பெரும்பாலும் குறைகிறது. அரசாங்கப் பொறுப்புக்கூறல் குறித்த தினசரி கவனத்தை ஈர்க்கும் கேள்வி நேரம், சத்தமில்லாத போராட்டங்களால் அடிக்கடி சீர்குலைந்து, முக்கியமான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுகின்றன. 17வது மக்களவையின்போது 2019 மற்றும் 2024=க்கு இடையில், கேள்வி நேரம் மக்களவையில் 60% நேரமும், மாநிலங்களவையில் 52% நேரம் மட்டுமே இருந்தது. இதனால் அதன் செயல்திறன் குறைவாக இருந்தது. அது நடக்கும்போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கலான, அமைச்சர்கள் இடையேயான பிரச்சனைகளை முறையாக ஆராய்வதற்குப் பதிலாக தனிமைப்படுத்தப்பட்ட கேள்விகளில் கவனம் செலுத்த முனைகிறார்கள்.


துறை தொடர்பான நிலையான குழுக்கள் உட்பட நாடாளுமன்றக் குழுக்கள் (Department-related Standing Committees (DRSC)) அடிக்கடி சந்தித்து விரிவான அறிக்கைகளை தயாரிக்கின்றன. இருப்பினும், இந்த அறிக்கைகள் பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதில்லை. இதனால், கொள்கைகள் மற்றும் திட்டங்களை பற்றி விரிவாக ஆய்வு செய்திருந்தாலும், குழுக்களின் கண்டுபிடிப்புகள் சட்டங்கள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. இந்தக் குழுக்கள் ஆழமாக ஆராய்வதற்கான அதிகாரம் பெற்றிருந்தாலும், சிறிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் மட்டுமே கலந்தாலோசிக்கின்றன. இதனால் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்படுவதில்லை. மேலும், இந்த குழுக்களின் தற்காலிக அமைப்பு காரணமாக, நிபுணத்துவம் மற்றும் நிறுவன நிலைப்பாட்டை வளர்ப்பதற்கான உறுப்பினர்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறது.


சில வெற்றிகள்


முரண்பாடுகள் இருந்தபோதிலும், இந்திய சட்ட மேற்பார்வை குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. ரயில்வேக்கான நிலைக்குழு, இந்திய ரயில்வேயின் நிதி நிலையை மேம்படுத்த 2015ஆம் ஆண்டில் ஈவுத்தொகையை தள்ளுபடி செய்ய பரிந்துரைத்தது. இது 2016-ல் செயல்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டில், போக்குவரத்துக்கான நிலைக்குழு, மூன்றாம் தரப்பு காப்பீட்டிற்கான வரம்புகளை நீக்கி, தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை உருவாக்குவதன் மூலம் மோட்டார் வாகன மசோதாவை (Motor Vehicles Bill) மேம்படுத்த உதவியது.


மற்ற குறிப்பிடத்தக்க தலையீடுகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India (NHAI)) நிர்வகிக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்யும் பொது நிறுவனங்களுக்கான குழு, 80% நிலம் மற்றும் தேவையான அனுமதிகளைப் பெற்ற பின்னரே திட்டங்களைத் தொடங்க பரிந்துரைக்கிறது. இதேபோல், புதிய சுரங்கங்களைத் திறப்பதன் மூலம் உள்நாட்டு யுரேனியம் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மதிப்பீடுகள் குழு அறிவுறுத்தியது. பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது முக்கியமான தாமதங்கள், வெளிப்படைத்தன்மையில்லா நியமனங்கள் (opaque appointments) மற்றும் ஊழல் நடைமுறைகளை அம்பலப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளில் சராசரியாக, பொதுக் கணக்குக் குழு ஒவ்வொரு ஆண்டும் 180 பரிந்துரைகளை செய்துள்ளது. அவற்றில் 80% அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


மேற்பார்வையை பயனுள்ளதாக்க, நாடாளுமன்றம் வலுவான சட்டமியற்றல் ஆய்வுடன் (post-legislative scrutiny) தொடங்கி இலக்கு வைத்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டங்கள் அவற்றின் நிறைவேற்றத்துடன் முடிவடைவதில்லை; அங்குதான் அவை தொடங்குகின்றன. இருப்பினும், சட்டங்கள் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை அடைகின்றனவா என கண்காணிக்க இந்தியாவில் முறையான செயல்முறை இல்லை. ஒவ்வொரு நிலையான குழுவின்கீழ் துணைக்குழுக்களை உருவாக்குவதன் மூலமோ அல்லது செயல்பாட்டை மதிப்பாய்வு செய்ய ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்குவதன் மூலமோ இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யலாம். ஐக்கிய இராச்சியம் (United Kingdom) ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது: அரசாங்கத் துறைகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் முக்கிய சட்டங்களின் மதிப்பாய்வுகளைச் சமர்ப்பிக்கின்றன. பின்னர், அவை நாடாளுமன்றக் குழுக்களால் ஆராயப்படுகின்றன. சரியான நேரத்தில் நடவடிக்கைகளைத் திருத்துவதற்கும் சட்டங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது.


குழுப் பணிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவனமயமாக்குதல் ஆகியவை முன்னுரிமையாக இருக்க வேண்டும். இதைச் செய்வதற்கான ஒரு வழி மேற்பார்வை கண்டுபிடிப்புகளை அணுகக்கூடியதாகும். உள்ளூர் மொழிகள், எளிய காட்சிகள் அல்லது குறுகிய வீடியோக்களைப் பயன்படுத்துவது போன்ற கண்டுபிடிப்புகளை எளிதாகப் புரிந்துகொள்வதாகும். அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட துறை தொடர்பான நிலையான குழுக்களின் (Department-related Standing Committees  (DRSC)) அறிக்கைகள் விவாதத்திற்காக அவைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் பதில் கட்டாயமாக இருக்க வேண்டும். இது குழு வேலை நாடாளுமன்ற உரையாடலை தகவல் அறிவிப்பதையும் நிர்வாக பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதையும் உறுதி செய்யும். குழுக்களும் அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் பலப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்ய முடியும்.



தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல்


நாடாளுமன்ற மேற்பார்வையை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் தொழில்நுட்பம் ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் சிறப்புப் பணியாளர்கள் அல்லது தொழில்முறை ஆராய்ச்சி ஆதரவு இல்லாமல் செயல்படுவதால், சிக்கலான கொள்கைகள் அல்லது செலவுத் தரவுகளை ஆராய்வது கடினமாகிறது. வரவு செலவுத் திட்ட ஆவணங்கள், தணிக்கை அறிக்கைகள் மற்றும் கொள்கை மதிப்பாய்வுகளின் பாரிய தொகுதிகளை எதிர்கொள்வதால், அவை எதிர்பார்த்த விளைவை தரவில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாடாளுமன்றம் உறுப்பினர்களுக்கு முறைகேடுகளை விரைவாகக் சுட்டிக்காட்டவும், கொள்கைப் போக்குகளைக் கண்காணிக்கவும், கூர்மையான, சான்றுகள் சார்ந்த கேள்விகளை உருவாக்கவும் உதவும்.


1993-ஆம் ஆண்டு புதிய நிலைக்குழுக்களை முறையாகத் துவக்கி வைத்து தொடக்க உரை நிகழ்த்தியபோது, ​​அப்போதைய துணை குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ அல்ல. மாறாக, அதற்கு பயனுள்ள நாடாளுமன்ற ஆதரவை வழங்குவதன் மூலம் அதை வலுப்படுத்துவதாகும் என்று கூறினார். சட்டமியற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துதல் என்பது குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கிய ஆணையை மதிப்பதாகும்; அரசாங்கத்தின் இயந்திரம் வெளிப்படையாகவும், பொறுப்புடனும், உண்மையாகவும் “மக்களுடைய, மக்களால், மக்களுக்காக” (of the people, by the people, and for the people) இருப்பதை உறுதி செய்வதாகும்.


மிதுல் ஜாவேரி ஒரு பொதுக் கொள்கை நிபுணர் மற்றும் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர். ஆத்மன் ஷா ஒரு பொதுக் கொள்கை நிபுணர் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர்.


Original article:
Share: