இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணை என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ் , குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— வன்முறைக்குப் பிறகு, லடாக்கின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 35 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லே நிர்வாகம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவதை தடை செய்துள்ளது.


— நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு அக்டோபர் 6-ஆம் தேதி ஒன்றிய அரசுக்கும் லே உச்ச அமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வன்முறை ஏற்பட்டது. பேச்சுவார்த்தைகளில் வாங்சுக்கை ஒரு தடையாகக் கருதி, அவரை பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைக்க அரசாங்கம் விரும்பியதாக ஒன்றிய அரசு  வட்டாரங்கள் தெரிவித்தன.


— இந்த பிரச்சினை 2019-ஆம் ஆண்டில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், (Jammu and Kashmir Reorganisation Act, 2019) நிறைவேற்றப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. இதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது: சட்டமன்றத்துடன் ஜம்மு காஷ்மீர், மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் பகுதிகளாகும்.


— லடாக்கின் அரசியல் மற்றும் சட்ட அங்கீகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. யூனியன் பிரதேச மக்கள் நேரடி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். லடாக்கின் 90%-க்கும் அதிகமான மக்கள் பட்டியல் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால், இப்பகுதியை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை இருந்து வருகிறது.


— இந்திய அரசியலமைப்பின் பிரிவு 244-ன் கீழ் உள்ள 6-வது அட்டவணை தன்னாட்சி பெற்ற மாவட்ட பகுதிகள் (Autonomous District Councils (ADCs)) எனப்படும் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள் அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. இவை சில வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி பெரும்பான்மை பகுதிகளை ஆட்சி செய்கின்றன.


— தன்னாட்சி பெற்ற மாவட்ட பகுதிகள் ஐந்து ஆண்டு காலத்துடன் 30 உறுப்பினர்கள் வரை கொண்டிருக்கும். மேலும், நிலம், காடு, நீர், விவசாயம், கிராம பகுதிகள், சுகாதாரம், தூய்மை, கிராம மற்றும் நகர அளவிலான காவல்துறை போன்ற விவகாரங்களில் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்க முடியும். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் 10 தன்னாட்சி பெற்ற  மாவட்ட பகுதிகள் உள்ளன. அசாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஒவ்வொன்றிலும் மூன்று வீதமும், திரிபுராவில் ஒன்றும் உள்ளன.


— சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர் மற்றும் நிலையான தயாரிப்புகளின் கண்டுபிடிப்பாளர் ஆவார். அவர் 2009-ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான’ 3 இடியட்ஸில்’ ஆமிர்கான் நடித்த கதாபாத்திரத்திற்கு உத்வேகம் அளித்ததற்காக மிகவும் பிரபலமானவர். 2018-ஆம் ஆண்டில், அவருக்கு மதிப்புமிக்க ராமன் மகசேசே விருது (Ramon Magsaysay Award) வழங்கப்பட்டது. "தொலைதூர வட இந்தியாவில் கற்றல் முறைகளின் தனித்துவமான முறையான, ஒத்துழைப்பு மற்றும் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தத்திற்காகவும், இதன் மூலம் லடாக்கி இளைஞர்களின் வாழ்க்கை வாய்ப்புகளை மேம்படுத்தியதற்காகவும், உள்ளூர் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளின் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்காகவும், உலகில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


- 6-வது அட்டவணையில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள் உள்ளன.


-லடாக் 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டால், அது தன்னாட்சி பெற்ற  மாவட்ட பகுதிகள் (Autonomous District Councils (ADCs)) மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையங்களை அமைக்க முடியும். இந்தக் குழுக்கள் பழங்குடிப் பகுதிகளை நிர்வகிக்கவும், காடுகள், விவசாயம், கிராமம் மற்றும் நகர நிர்வாகம், பரம்பரை, திருமணம், விவாகரத்து மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் போன்ற விவகாரங்களைப் பற்றிய விதிகளை உருவாக்கவும் அதிகாரம் பெறும்.


- ARC-கள் மற்றும் ADC-களுக்கு நில வருவாயை வசூலிப்பதற்கும், வரி விதிப்பதற்கும், பணக்கடன் வழங்குதல் மற்றும் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், உரிமங்கள் அல்லது அல்லது குத்தகைகளில் இருந்து கட்டணங்களை வசூலிக்கவும், பள்ளிகள், சந்தைகள் மற்றும் சாலைகள் போன்ற பொது வசதிகளை நிறுவவும் ARCகள் மற்றும் ADCகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.


- 2019-ஆம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் லடாக்கை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:


(i) லடாக்கில் 97 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் உள்ளனர்.


(ii) இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் லடாக்கில் நிலம் வாங்கவோ அல்லது சொந்தமாக வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.


(iii) லடாக் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.



Original article:

Share:

இந்தியாவின் நகர்ப்புற வரையறை ஏன் அதன் வளர்ந்துவரும் நகரங்களை தோல்வியடையச் செய்கிறது? -நிரஞ்சனா கே.பி.

 2011ஆம் ஆண்டு  மக்கள்தொகை கணக்கெடுப்பில் (Census), ஒரு நகர்ப்புற அலகு சட்டபூர்வ நகரம் (statutory town) அல்லது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரம் (census town) என வரையறுக்கப்பட்டது.


தற்போதைய செய்தி:


இந்தியாவின் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (Registrar General of India and Census Commissioner) மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் ஆகஸ்ட் 14 தேதியிட்ட கடிதத்தில் மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்ககங்களுக்கு (States' Directorates of Census Operations (DCO)), கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்பதையும், இந்தியாவில் நகரங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதைப் படிப்பதையும் எளிதாக்க, 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் நகர்ப்புறங்களுக்கான அதே வரையறை பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.


2011ஆம் ஆண்டு  மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஒரு நகர்ப்புற அலகு சட்டபூர்வ நகரம் (statutory town) அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரம் (census town) என வரையறுக்கப்பட்டது. சட்டபூர்வ நகரங்கள் என்பவை மாநில அரசால் முறைப்படி நகர்ப்புறமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். அவை மாநகராட்சிகள் (municipal corporations), நகராட்சிகள் (municipal councils) மற்றும் நகர் பஞ்சாயத்துகள் (nagar panchayats) போன்ற நகர்ப்புற உள்ளூர் அமைப்புகளைக் கொண்டுள்ளன. குறைந்தபட்சம் 5,000 மக்கள்தொகை, ஆண் முக்கிய தொழில் செய்யும் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 75% பேர் விவசாயம் அல்லாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது, மற்றும் சதுர கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் 400 நபர்கள் என்ற மக்கள்தொகை அடர்த்தி ஆகிய நிபந்தனைகளை பூர்த்திசெய்யும்  மற்ற எல்லா இடங்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரங்கள் நிர்வாக ரீதியாக கிராமப்புறமாகவே இருக்கின்றன. ஆனால், அவை நகர்ப்புற பகுதிகளைப் போல செயல்படுகின்றன.


வரம்புகள் என்ன?


இந்தியாவில், நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் மிகவும் தன்னாட்சி (autonomous) பெற்றவை மற்றும் அவற்றின் நிதிகள் மீது அதிக சுதந்திரம் மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. அதே, சமயம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் (Panchayati Raj institutions) முக்கியமாக ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துகின்றன. எனவே, ஒரு இடத்திற்கு நகர்ப்புற அங்கீகாரம் வழங்கப்பட்டால், அது பொதுவாக அந்தப் பகுதியின் வளர்ச்சியைக் குறிக்கும்.


நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்ற தற்போதைய வரையறை, இந்தியாவில் உள்ள குடியிருப்புகளின் சிக்கலான மற்றும் பரிணாம வளர்ச்சியைப் புறக்கணிக்கும் இரண்டு கலவையாக உள்ளன. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் இடையேயான வரம்பில் வரும் குடியிருப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது.  விரைவான நகரமயமாக்கல் பல கிராமங்களை செயல்பாடு மற்றும் வடிவம் இரண்டிலும் நகரங்களாக மாற்றுகிறது. ஆனால், இந்தப் பகுதிகள் பெரும்பாலும் முறையான அங்கீகாரம் இல்லாமல் கிராமப்புற நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றன. இதன் விளைவாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரங்கள் மற்றும் நகர் சுற்றுப்புற பகுதிகள் (peri-urban regions) போன்ற குடியிருப்புகள் - அடர்த்தியான மக்கள்தொகை, விவசாயம் அல்லாத வாழ்வாதாரம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந்தாலும் - நகர்ப்புற நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வழங்கலில் இருந்து விலக்கப்பட்டு, திட்டமிடல், சேவைகள் மற்றும் வள ஒதுக்கீட்டில் இடைவெளிகளுக்கு வழிவகுக்கின்றன.


மேற்குவங்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், நகரங்களைப் போல செயல்படும் பல இடங்கள் முறையான அங்கீகாரத்திற்கும் இடையே இடைவெளி இருப்பதை தெளிவாகத் தெரிகிறது. 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளின் தரவுகள், 2001-ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரங்களாக வகைப்படுத்தப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான குடியிருப்புகள், பத்தாண்டுகளுக்கு பிறகும்கூட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளால் தொடர்ந்து நிர்வகிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. 2011-ஆம் ஆண்டில் 526 புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரங்கள் அடையாளம் காணப்பட்டதால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரங்களின் எண்ணிக்கையில் மேற்குவங்கம் அதிகமான அளவு அதிகரிப்பைச் சந்தித்தது. இருப்பினும், 2001-ஆம் ஆண்டில் ஏற்கனவே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நகரங்களாக வகைப்படுத்தப்பட்ட 251 குடியிருப்புகள் 2011-ஆம் ஆண்டுக்குள் நிர்வாக நிலையில் எந்த மாற்றத்தையும் காணவில்லை. அவை நகராட்சி அமைப்புக்கு வெளியேயும் கிராமப்புற நிர்வாக கட்டமைப்பின் கீழ் இருந்தன. நகர்ப்புற வகைப்பாட்டிற்கான மக்கள்தொகை மற்றும் பொருளாதார அளவுகோல்களை பூர்த்தி செய்யும் எத்தனை பகுதிகள் 'நகராட்சிமயமாக்கப்படவில்லை' என்பதை இந்த நிலைமை எடுத்துக்காட்டுகிறது - அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் சட்டப்பூர்வ நகரங்களாக மாற்றப்படவில்லை. மேற்குவங்க உதாரணம், நகரங்களையும் நாம் வகைப்படுத்தும் விதம் உண்மையில் என்ன நடக்கிறது என்பதோடு பொருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது. நகரங்களைப் போல மாறிவிட்ட பல இடங்கள் இன்னும் கிராமங்களாக நிர்வகிக்கப்படுகின்றன. இது நகர்ப்புற வாழ்க்கைக்கு சரியான சேவைகளையும் திட்டமிடலையும் வழங்குவதை கடினமாக்குகிறது.


விளைவுகள் என்ன?


இந்தியா அதன் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குத் தயாராகும்போது, "நகர்ப்புறம்" எதைக் குறிக்கிறது என்பதற்கான வரையறையை மறுபரிசீலனை செய்து திருத்துவது முக்கியம். Population and Environment என்ற இதழில் வெளியிடப்பட்ட "Missing millions: undercounting urbanisation in India" என்ற தலைப்பிலான 2019ஆம் ஆண்டு ஆராய்ச்சிக் கட்டுரை, 'நகர்ப்புறம்' என்பதை வரையறுப்பதில் மக்கள்தொகை அளவு மற்றும் அடர்த்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. குறுகிய கட்டமைப்பை மட்டுமே நம்புவது — 5,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை அளவு மற்றும் விவசாயம் அல்லாத தொழிலாளர்களின் சதவீதம் போன்றவை ஆகும். நகர்ப்புற மக்கள்தொகையை கணிசமாக குறைவாக எண்ணுவதற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஒவ்வொரு வரம்பிலும் எத்தனை குடியிருப்புகள் நகர்ப்புறமாக தகுதி பெறுகின்றன என்பதை சோதிக்க, இது வெவ்வேறு அடர்த்தி வரம்புகளை (எடுத்துக்காட்டாக, 400 பேர்/கிமீ², 1,000 பேர்/கிமீ²) பரிசோதித்தது. பயன்படுத்தப்படும் அடர்த்தி குறைப்பைப் பொறுத்து, 2011ஆம் ஆண்டில் 35% முதல் 57% வரை மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்தனர். இது அதிகாரப்பூர்வ மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எண்ணிக்கையான 31%-ஐ விட மிக அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.


காகிதத்தில் கிராமப்புறமாகத் தோன்றும் பல குடியிருப்புகள் உண்மையில் பெரிய, முறைசாரா நகர்ப்புற கூட்டங்களின் பகுதியாக உள்ளன. அவை தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முறைகளின்கீழ் எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை. ஏனெனில், அவை நகராட்சி எல்லைக்கு வெளியே வருகின்றன அல்லது நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


75% ஆண் தொழில்சக்தி விதி காலாவதியானது; சிறு நகரங்கள் இந்த வரம்பை எட்டாமல் இருக்கலாம். ஆனால், தெளிவான நகர்ப்புற பண்புகளைக் காட்டுகின்றன. தொழில்கள், சேவை வேலைகள் மற்றும் கிக் பொருளாதாரம் (gig economy) வேலைகள் கிராமங்கள் மற்றும் அரை-நகர்ப்புற பகுதிகளுக்குள் பரவுவது, கிராமப்புற–நகர்ப்புற வேறுபாடுகளை குறைக்கிறது.


இந்த விதி விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத வேலைகள் இரண்டிலும் ஈடுபடுவோரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறது. இது பெரும்பாலும் பருவகாலமாக அல்லது ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. அரை-கிராமப்புற மற்றும் மாற்றம் அடையும் பகுதிகளில் உள்ள பலர் வேலைக்காக அருகிலுள்ள நகரங்கள் அல்லது நகரங்களுக்கு தினசரி அல்லது பருவகாலமாக பயணம் செய்கிறார்கள். அதே, சமயம் நிலச் சொந்தம் அல்லது பருவகால விவசாயம் மூலம் விவசாயத்துடன் தொடர்பைப் பராமரிக்கிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் அரை-நகர்ப்புற அல்லது கிராமப்புற பகுதிகளில் செயலி அடிப்படையிலான மற்றும் கிக் பொருளாதார வேலைகளின் விரிவாக்கம், நகர்ப்புற வகை வேலைவாய்ப்பு இனி பாரம்பரியமாக நகர்ப்புற மையங்களுக்கு மட்டுமே இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெண்களின் முறைசாரா அல்லது ஊதியம் பெறாத வேலையைப் புறக்கணிக்கும் 'ஆண் தொழிலாளர்' அளவுகோலும் சிக்கலானது.

எனவே, 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ‘நகர்ப்புற’ என்ற பழைய வரையறையை தொடர்ந்து பயன்படுத்துவது, மில்லியன் கணக்கான மக்களை தவறாக வகைப்படுத்துவதற்கும், நகரமயமாக்கப்பட்ட பகுதிகளை குறைவாக எண்ணுவதற்கும், வேகமாக வளர்ந்துவரும் குடியிருப்புகளை பொருத்தமான ஆளுமை மற்றும் சேவைகளில் இருந்து விலக்குவதற்கும் வழிவகுக்கும். ஒரு கடினமான, இருமை கட்டமைப்பு இனி இந்தியாவின் பரிணாம வளர்ச்சியடையும் குடியிருப்பு முறைகளை பிரதிபலிக்கவில்லை — மேலும் அதை திருத்தத் தவறினால், திட்டமிடல், உள்கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தில் ஏற்கனவே இருக்கும் இடைவெளிகளை மேலும் விரிவாக்கும்.



Original article:

Share:

குடிமக்கள், குடியிருப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர்: மாநிலக் குடியுரிமை குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? -ஸ்வதஃசித்த சர்க்கார்

 மாநில குடியுரிமை (Provincial citizenship) என்பது உள்ளூர் அடையாள அரசியலில் வேரூன்றிய பூர்வீக அரசியலில் இருந்து வருகிறது. இது பிராந்திய தேர்தல் அரசியலில் உடனடியாக செல்வாக்கைப் பெறுகிறது. மாநிலத் தேர்தல்களின் போது இது முக்கியமானதாகிறது. இது ஒற்றை இந்திய குடியுரிமை (singular Indian citizenship,) என்ற கருத்தை சவால் செய்கிறது. யார் 'பூர்வீகக் குடிமக்கள்', 'பழங்குடி', 'உள்ளூர் மக்கள்' அல்லது 'மண்ணின் மையந்தன்' என்று கருதப்படுகிறார்கள் என்பது பற்றிய விவாதங்களுக்கு வழிவகுக்கிறது.


பல வடிவங்களில் இடம் பெயரும் ஆற்றல் (Mobility) என்பது மனித முன்னேற்றத்திற்கும் நாகரிகங்களை உருவாக்குவதற்கு எப்போதும் முக்கியமானதாக இருந்து வருகிறது.  மாறாக, ஒரே இடத்தில் வாழும் நடைமுறை - சொத்து, வம்சாவளி மற்றும் பரம்பரையை வளங்களின் கட்டுப்பாட்டுடன் இணைக்க வேண்டிய அவசியத்திலிருந்து வெளிப்படுகிறது. உலக வரலாறு பழங்குடியினர், கால்நடை வளர்ப்பவர்கள், வணிகர்கள் மற்றும் வீரர்களின் வண்டிப் பாதைகளால் நிரம்பியுள்ளது. இந்த இயக்கத்தின் இந்த வரலாற்று சூழல் இன்றைய உலகளாவிய வலையமைப்புகளால் வலுப்படுத்தப்படுகிறது. வரலாறு முழுவதும் மக்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இன்றைய உலகளாவிய வலையமைப்புகள் இதை எளிதாக்குகின்றன. இப்போது, ​​பொருட்கள் மற்றும் பணத்திற்கு மட்டுமல்ல, தொழிலாளர்களும் நாடுகளைக் கடந்து நகர்ந்து, ஒரு புதிய வகையான உலகத்தை வடிவமைக்கின்றனர். இது உறுதியாக, நமது சமூக, கலாச்சாரங்கள், அரசியல், பொருளாதாரங்கள் மற்றும் நாம் நம்மையும் நமது அடையாளங்களையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் பாதிக்கிறது.


கவலைக்குரிய விவகாரம்


இந்தப் பின்னணியில், இடம் பெயரும் ஆற்றல் பற்றிய கருத்து விரிவடைந்திருந்தாலும், நமது உடல் இயக்கம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. குறிப்பாக, ஒருவர் தனது சொந்த மாநிலத்திற்கு வெளியே வேலை செய்ய முயற்சிக்கும்போது பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். COVID-19 தொற்றுநோய்களின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மிகவும் தெளிவாகத் தெரிந்தாலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்கள் வேலைகளுக்குச் செல்ல விரும்பும் இடங்களாக இந்தியாவின் பெரிய நகரங்கள் இன்னும் உள்ளன.


சமீபத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) புதுப்பிப்பு மற்றும் தேர்தல் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) ஆகியவற்றைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தவறான நடத்தை தேசிய விவாதமாக மாறியுள்ளது. ஊடகங்கள் வலுவான பொது உணர்வை உருவாக்கியிருந்தாலும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்காக இடம்பெயர்வது போன்ற சிக்கலான பிரச்சினைகள் குறித்து மக்கள் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.


இது சம்பந்தமாக, கல்வி மன்றங்களில் சர்ச்சை கூறிய விவாதங்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியமானது. அங்கு ‘மாநில குடியுரிமை’ (provincial citizenship) ஜேஎன்யுவில் முனைவர் பட்டம் பெற்ற அலோக் ரஞ்சன் முன்வைத்த சொல் போன்ற புதிய நுண்ணறிவுகள் ஆழமான பிரதிபலிப்பைத் தூண்டுகின்றன. ரஞ்சனின் முன்மாதிரியைப் பின்பற்றி, பரந்த பார்வையாளர்களுக்காக, குறிப்பாக இந்தப் பிரச்னையின் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைப்பவர்களுக்கு, மாநிலங்களுக்கு இடையேயான  (inter-state) இடப்பெயர்வு என்ற கருத்தை ஆராய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும்.


ரஞ்சனின் ஆய்வு மாநிலங்களுக்கு இடையிலான இடப்பெயர்வு மற்றும் அது இந்தியாவின் ஜனநாயக அரசியல் அமைப்பில் ‘குடியிருப்பு அரசியலில்’ (politics of domicile) ஒரு புதிய அத்தியாயத்தை எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. இது மாநில அளவில் மட்டுமே செயல்படுகிறது. ‘மாநில குடியுரிமை’ (Provincial citizenship) என்பது ஒரு மாநிலத்தின் மீதான உணர்வுப்பூர்வமான பற்றுதலில் வேரூன்றிய பூர்வீகவாத அரசியலில் இருந்து தோன்றுகிறது. இது மண்டல தேர்தல் அரசியலில் உடனடி செல்வாக்கைப் பெறுகிறது. இந்த செயல்பாட்டில், இடம் சார்ந்த அடையாளம், நடமாட்ட சுதந்திரம் மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் சிக்கல் குடியிருப்பை அரசியல் திரட்டலுக்கான புதிய வகையாக வெளிப்படுத்த அனுமதிக்கிறது. முக்கியமாக, அகண்ட பாரதத்தின் (பிரிக்கப்படாத இந்தியா) மையமாக, மிகவும் உள்ளடக்கிய, தேசிய அளவிலான குடியுரிமை வலியுறுத்தப்படும் நேரத்தில் கூட, இந்தப் போக்குகள் குடியுரிமைக்கான தளங்களாக மாநிலங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.


அரசியல் கருவியாக வசிப்பிடம்


ரஞ்சனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட், ஜம்முகாஷ்மீர் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களை உன்னிப்பாகக் கவனிப்பது இருப்பிடம் (domicile) எவ்வாறு ஒரு சக்திவாய்ந்த அரசியல் கருவியாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும். ஜம்முகாஷ்மீரில், 2019ஆம் ஆண்டில் அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் சிறுபான்மையினரை (வால்மீகிகள், கோர்க்காக்கள் மற்றும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் போன்றவர்கள்) பாதுகாக்கும் உள்ளடக்கிய அரசியலின் நடவடிக்கையாக இருப்பிடக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், ஜார்க்கண்ட், 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் சிறுபான்மை உயரடுக்கின் செல்வாக்குக்கு எதிரான பெரும்பான்மை குறைகளை வெளிப்படுத்துவதற்கு இருப்பிடம் பயன்படுத்தப்பட்ட ஒரு வழக்கைக் குறிக்கிறது. அதன் தனித்துவமான வரலாற்றின் ஆதரவுடன், ஜார்க்கண்டில் வசிப்பிட அரசியல் 6-வது அட்டவணைப் பகுதிகள் போன்ற பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இது முழு மாநிலத்தையும் உள்ளடக்கியது. நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை மீறுகிறது மற்றும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 16(2)-ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேசிய குடியுரிமை உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.


ஜார்க்கண்டில் மாநில அங்கீகாரத்தை பெறுவது துணை தேசியவாத அரசியலைத் (sub-nationalist politics) தீர்க்கவில்லை. அதற்குப் பதிலாக, இந்த உணர்வுகள் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஜனநாயக குடியேற்ற அரசியலாக மாற்றப்பட்டன. இந்த மாற்றம் ‘ஒரு நாடு, ஒரு குடியுரிமை’ (one nation, one citizenship) என்ற இலக்கை சவால் செய்கிறது. இங்கு, ஒற்றை தேசிய குடியுரிமை என்ற கருத்து, மாநில குடியுரிமை என்ற அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்டமைக்கப்பட்ட யோசனையின் செயல்திறனால் பலவீனமடைகிறது. இதன் அரசியல் முக்கியத்துவம் தேசிய கட்டமைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து விடும்.


ஜார்க்கண்டின் மாநிலத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடம், உள்நாட்டு குடியேறிகளின் நலன்களுக்கும் மாநில குடியுரிமை குறித்த கவலைகளுக்கும் இடையிலான மோதல்களை, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பிற்குள் ஜனநாயக ரீதியாக தீர்ப்பளிக்க முடியாது என்பதையும், உச்சநீதிமன்றத்தின் தலையீடு தேவைப்படுவதையும் குறிக்கிறது.


இந்த ‘அதிகாரப்பூர்வமற்ற’ (unofficial) மாநில குடியுரிமை, அதிகாரப்பூர்வமான ஒற்றை இந்திய குடியுரிமையின் கருத்தை சிக்கலாக்குகிறது. இது இந்திய குடிமகனின் அடையாளத்துடன் இணைந்து இருக்கும் 'பூர்வீக மக்கள்', 'ஆதிக்குடி', 'ஆதிவாசி', 'உள்ளூர்', அல்லது 'மண்ணின் மைந்தன்' என்ற வரையறைகள் மீது போட்டியை உருவாக்குகிறது.


பழைய கருத்தின் புதுமை


மாநில சூழல்களில், உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினை புதியது அல்ல. மைரன் வைனர் (Myron Weiner), தனது புத்தகமான "Sons of the Soil: Migration and Ethnic Conflict in India (1978)-ல், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை மதிப்பிட்ட முதல் நபராக இருந்தார். ‘குடிமக்கள்-வெளியாட்கள்’ (citizen-outsiders) என்ற ராயின் 2010ஆம் ஆண்டு சொல், ‘வேறுபடுத்தப்பட்ட குடியுரிமை’ (differentiated citizenship) ஜெயலின் 2013-ஆம் ஆண்டு சொல் மற்றும் ‘இடைநிறுத்தப்பட்ட குடிமக்கள்’ (paused citizens) சர்மாவின் 2024ஆம் ஆண்டு சொல், "இடைக்கோடு உடைய தேசிய அடையாளம்" (hyphenated nationality - Sarkar 2025) போன்ற சமீபத்திய சொல் உருவாக்கங்கள் இந்தப் பிரச்சினையை பகுப்பாய்வு செய்வதற்கான நமது சொல்லகராதியை வளப்படுத்தியுள்ளன.


1955ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் (States Reorganisation Commission (SRC)) பரிந்துரைகளை கருத்தில் கொள்வதும் தொடர்புடையது. SRC-ன் உறுப்பினர்கள் குடியிருப்பு கொள்கைகளிலிருந்து எழும் பாகுபாடு மற்றும் ஒதுக்கல் பிரச்சினைகளை எதிர்பார்த்தனர். அவர்கள் இந்த விதிகளைப் பற்றி மிகவும் கவலைப்பட்டனர், அவை அரசியலமைப்பின் பிரிவுகள் 15, 16 மற்றும் 19 உடன் ஒத்துப்போகாதவை என்றும் இந்திய குடியுரிமையின் கருத்துக்கே முரணானவை என்றும் கண்டறிந்தனர். உறுப்பினர்கள், 'இந்த கட்டுப்பாடுகளின் சட்டப் பக்கம் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம், ஆனால் அவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் அரசியலமைப்பு விரும்பியதற்கு முற்றிலும் எதிரானது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்றனர் (இது 1955ஆம் ஆண்டு  மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை, பக்கம் 230-ல் உள்ளது)


மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை இருப்பிட விதிகளை பொருத்தமான நாடாளுமன்ற சட்டத்தால் மாற்ற பரிந்துரைத்தது, "இல்லாவிட்டால், பொதுவான இந்திய குடியுரிமையின் கருத்துக்கு எந்த அர்த்தமும் இருக்காது" (பக்கம் 230-231-ல் உள்ளது) என்று எச்சரித்தது. பல விதங்களில், மாநில குடியுரிமையின் கருத்து இந்த பத்தாண்டு கால எச்சரிக்கைகளை எதிரொலிக்கிறது. இந்தக் கருத்தின் புதுமை, அது எழுதப்பட்ட கருத்தாக இருந்து, உண்மையான மற்றும் தீவிரமான பிரச்சினையாக மாறியதிலிருந்து வருகிறது.


(ஸ்வதசித்த சர்க்கார், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் உள்ள வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் இமயமலை ஆய்வு மையத்தில் கற்பிக்கிறார்)



Original article:

Share:

இந்தியர்களின் அமெரிக்கக் கனவு மரித்துவிட்டதா? - சப்தபர்ணோ கோஷ்

 செப்டம்பர் 19, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது இந்திய தொழிலாளர்களை, குறிப்பாக குறைந்த சம்பளம் வாங்குபவர்களை பெரிதும் பாதிக்கும் என்று பலர் அஞ்சுகின்றனர். இந்தக் கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும், விசாக்களைப் புதுப்பிப்பவர்களுக்கு அல்லது ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், குடியேற்றக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்கு மத்தியில் கவலைகள் உள்ளன. அமெரிக்கக் கனவு இன்னும் இந்தியர்களால் அடையக் கூடியதா? சப்தபர்ணோ கோஷ் நடுவராக நடத்திய உரையாடலில் அர்ஜுன் அப்பாதுரை மற்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இந்தக் கேள்வியைப் பற்றி விவாதிக்கின்றனர். 


H-1B விசா கட்டண உயர்வு இந்தியாவில் சிறிது பீதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க கனவு இப்போது மரித்துவிட்டதாக நீங்கள் கூறுவீர்களா?


அர்ஜுன் அப்பாதுரை: யதார்த்தங்கள் மாறுவதால் கனவுகள் மறைந்துவிடுவதில்லை. அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும், வெவ்வேறு சமூக வகுப்புகளைச் சேர்ந்த பலருக்கு அமெரிக்கக் கனவு இன்னும் உயிருடன் உள்ளது. எதுவும் சாத்தியமான இடமாக அமெரிக்கா தொடர்ந்து பார்க்கப்படுகிறது. வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அந்தக் கனவு இன்னும் முக்கியமானது.


அஜய் ஸ்ரீவஸ்தவா: அமெரிக்காவில் சுமார் 3.4 லட்சம் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் STEM அல்லது மேலாண்மை படிப்புகளில் படிக்கின்றனர். அவர்கள் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு $2,00,000-க்கும் அதிகமாக செலவிடுகிறார்கள், பெரும்பாலும் வங்கிகள் அல்லது உறவினர்களிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களின் கனவு படிப்படியாக சுருங்குகிறது. விசா கட்டண உயர்வு, சிறந்த STEM பட்டதாரிகளைத் தவிர வேறு யாருக்கும் வேலை கிடைப்பதை மிகவும் கடினமாக்குகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் இன்னல்களை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. கனவு குறைவாக இருந்தால், இரு தரப்பினரும் இழக்கிறார்கள். இந்திய மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் மூலம் அமெரிக்கா $15 பில்லியனையும், வாழ்க்கைச் செலவுகள் மூலம் $10 பில்லியனையும் சம்பாதிக்கிறது.


H1-B விசா நடைமுறை, குடியுரிமை பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாக சிலர் கூறுகிறார்கள். அதற்கு நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?


அஜய் ஸ்ரீவஸ்தவா: இந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை. சில முறைகேடுகள் நடந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக, இந்த அமைப்பு அமெரிக்காவிற்கும் குடியேறியவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. பல அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக வேலையில்லாதவர்கள் அல்லது குறைந்த ஊதியம் பெறும் MAGA ஆதரவாளர்களுக்கு, வெளியாட்களைக் குறை கூறுவது எளிது. தொழிலாளர்களிடையே உள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, வெள்ளை மாளிகையும் இந்த யோசனையை ஊக்குவிக்கிறது. சில முறைகேடுகள் இருந்தாலும், அங்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்மையான STEM திறமையாளர்கள் அல்லது உயர்தர ஆராய்ச்சியைத் தொடர்பவர்கள் ஆவர்.


அவர்கள் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் அல்லது வளர்த்துள்ளனர், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். இதில் இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். எடுத்துக்காட்டாக, ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி பிரின் கூகிளை இணைந்து நிறுவினார், தென்னாப்பிரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த எலோன் மஸ்க் டெஸ்லாவை உருவாக்கினார். இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மைக்ரோசாப்டை வழிநடத்துகிறார். இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகிளை வழிநடத்துகிறார். பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


அர்ஜுன் அப்பாதுரை: அமெரிக்கா தனித்துவமானது, ஏனெனில் அது குடியேற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. எல்லாவற்றையும் கண்டிப்பாக கட்டுப்படுத்த முயற்சிப்பது இப்போது அல்லது கடந்த காலத்தில், நடைமுறைக்கு மாறானது. உலகளவில், பிரச்சினைகள் எழும்போது அல்லது யாராவது அதிகாரத்தை விரும்பும்போது, ​​புதியவர்களைக் குறை கூறுவது பொதுவானது.


கடினமான கேள்வி என்னவென்றால், அதிக அளவு செல்வத்தை உற்பத்தி செய்யும் ஒரு சமூகம் பாதுகாப்பு, சுகாதாரம் அல்லது வேலைவாய்ப்புகள் போன்ற அடிப்படை சமூக ஆதரவை வழங்கத் தவறுவது ஏன்? அமெரிக்காவில் சிலர் மட்டுமே விவாதிக்க விரும்பும் ஒரு பெரிய பிரச்சனை இது. குடியேற்ற எதிர்ப்பு வாதங்களில் இதுதான் தவறு.


H1-B விசா வைத்திருப்பவர்கள், இந்தியாவிலிருந்து வந்தாலும் சரி, வேறு இடங்களிலிருந்து வந்தாலும் சரி, சட்டவிரோதமான எதையும் செய்வதில்லை. அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள், ஒரு குறிப்பிட்ட காலம் தங்குகிறார்கள், பின்னர் முறையான நடைமுறைகள் மூலம் கிரீன் கார்டு பெறலாம். அவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பங்களிக்கிறார்கள், ஆராய்ச்சியை வலுப்படுத்துகிறார்கள் மற்றும் இந்த நிறுவனங்களை உலகளவில் வலிமையாக்குகிறார்கள். சிலர் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் இணைகிறார்கள். இது அனைவருக்கும் பயனளிக்கிறது. எனவே குடியேற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாட்டில் ஏன் திடீர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்?


அமெரிக்கா சமீபத்தில் AI-ல் அதிக முதலீடு செய்துள்ளது. இந்திய தொழிலாளர்கள் தங்கள் திறன்கள், அறிவு மற்றும் நியாயமான ஊதியங்களுக்காக விரும்பப்படுகிறார்கள். இந்த சூழலில், அவர்கள் இல்லாமல் அமெரிக்கா தனது வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?


அஜய் ஸ்ரீவஸ்தவா: அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI-க்காக $600 பில்லியன் முதல் $1 டிரில்லியன் வரை செலவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. OpenAI, Microsoft, Google மற்றும் Amazon போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கான பங்களிப்புகளைச் செய்யும். சுமார் 300,000 இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள் உள்ளனர். மொத்தத்தில் சுமார் 70% பேர் இதில் அடங்குவர். அவர்களில் பெரும்பாலோர் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் மற்றும் AI-யில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் விசாக்களைப் புதுப்பிப்பது கடினமாக இருக்கும். குறிப்பாக, நடுத்தர மற்றும் தொடக்கநிலை பதவிகளுக்கு இந்த வேலைவாய்ப்புகள் அமெரிக்க தொழிலாளர்களால் நிரப்பப்படும். முக்கியமான ஊழியர்களின் விசா கட்டணங்களை நிறுவனங்கள் ஈடுகட்டலாம். ஆனால், பெரும்பாலான பணிகள் அமெரிக்கர்களுக்கு மாறும். சில சிக்கல்கள் எழலாம். ஆனால், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதால் அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும், பலர் இதேபோன்ற AI பயன்பாடுகளை உருவாக்குகிறார்கள்.


அர்ஜுன் அப்பாதுரை: AI என்பது மிகவும் புதிய துறை. பெரும்பாலான முதலீடுகள் மிகவும் திறமையான நிபுணர்களிடம் செல்லும். AI-யில் வெற்றி என்பது குறைந்த எண்ணிக்கையிலான அதிக ஊதியம் பெறும் நபர்களைப் பொறுத்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் சுமார் 100 பேர் மட்டுமே ஒரு பெரிய AI முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும், மேலும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அவர்களை பணியமர்த்த முயற்சிப்பார்கள். நூற்றுக்கணக்கான H-1B தொழிலாளர்கள் AI-யில் புரட்சியை ஏற்படுத்த முடிந்தால், அது சந்தையை மலிவாக மாற்றும், ஆனால் இது அப்படியல்ல.


பெரிய கேள்வி AI பற்றி மட்டுமல்ல, பொதுவாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பற்றியது. அளவு, நம்பகத்தன்மை மற்றும் தரத்தை அமெரிக்கா எவ்வாறு ஈடுசெய்ய முடியும்? இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விநியோகத்தைக் குறைத்தால், கல்வி முறை அதிக திறமையானவர்களை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்படும். இது அமெரிக்காவிற்கு சாத்தியமற்றது அல்ல, ஆனால் அவர்களுக்கு கொள்கை மாற்றங்கள் தேவைப்படும், அதற்கு நேரம் எடுக்கும்.


H-1B விசா பிரச்சினை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விஷயமா, அல்லது அது அழுத்தம் கொடுக்கும் தந்திரோபாயங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த புவிசார் அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக உள்ளதா?


அஜய் ஸ்ரீவஸ்தவா: டிரம்ப் தனது MAGA வாக்காளர்களுக்கு வலிமையானவராகத் தோன்ற விரும்பிய ஒரு கொடுமைக்காரன் என்று நான் நம்புகிறேன். சீனாவுடன் அவரால் இதைச் செய்ய முடியவில்லை. எனவே அவருக்கு ஒரு பலிகடா தேவைப்பட்டது, மேலும் இந்தியா அந்த பலிகடா ஆனது. அமெரிக்க அதிபர்கள் பொதுவாக சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை ஆதரித்த போதிலும் இது நடந்தது. அது எப்படி நடந்தது? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக டிரம்ப் முதலில் கூறினார். ஆனால், இந்தியா அதை மறுத்தது. தனக்கும் அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இடையில் இந்தியா குறுக்கே நிற்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம், எனவே அவர் இந்தியாவைத் தண்டிக்க விரும்பினார். அவர் சொன்ன உடனடி காரணம், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. ஆனால் சீனா அதிகமாக வாங்குகிறது, ஐரோப்பாவும் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. இது அமெரிக்கா உண்மைகளில் அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. முன்னதாக, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தோற்றது, அது நாடுகளைத் தண்டிக்க வரிகளைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக சரியானதல்ல என்று கூறியது. இப்போது, ​​அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்த, நிர்வாகம் இந்தியாவை குறிவைத்துள்ளது.


அர்ஜுன் அப்பாதுரை: இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ H1-B பிரச்சினை மிகவும் முக்கியமல்ல. அதன் முக்கியத்துவம் அரசியல், அரசியல்வாதிகள், அதிகப்படியான எதிர்வினைகள் மற்றும் சில துறைகளின் கவலைகளிலிருந்து வருகிறது.


சரி, இங்கிருந்து நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும்?


அர்ஜுன் அப்பாதுரை: முதலில், உங்கள் முதலீட்டையும் எதிர்பார்க்கப்படும் வருமானத்தையும் கவனமாகத் திட்டமிடுங்கள். ஏனென்றால், நீங்கள் அமெரிக்காவிற்கு வந்து சம்பாதிக்கத் தொடங்க முடியாது. பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக நீங்கள் பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கும். இரண்டாவதாக, அமெரிக்காவிற்குச் செல்லுங்கள். ஆனால், தேவைப்பட்டால் இடம்பெயரத் தயாராக இருங்கள். மூன்றாவதாக, அதிபர் டிரம்ப் எப்பொழுதும் பதவியில் இருக்க மாட்டார். எனவே இந்தத் திட்டமும் எப்பொழுதும்  நீடிக்காது.


அஜய் ஸ்ரீவஸ்தவா: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திற்காக விண்ணப்பதாரர்கள் வருவதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் நம்பினால், கட்டணத்தைத் தள்ளுபடி செய்யும் ஒரு சிறிய அறியப்பட்ட விதி உள்ளது. இந்திய வல்லுநர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அவர்கள் அங்கீகாரம் பெற்றால், விசா கட்டணம் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படலாம்.


இந்தியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா; நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சமூக-கலாச்சார மானுடவியலாளர் மற்றும் அர்ஜுன் அப்பாதுரை ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொடர்புக்கான பேராசிரியர் ஆவார்.



Original article:

Share:

சர்வதேச எல்லைகளைக் கொண்ட எட்டு மாநிலங்கள், ஏற்றுமதியில் 0.13% பங்கைக் கொண்டுள்ளன. -சங்முவான் ஹேங்சிங்

 ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை இணைக்க வடகிழக்கு போன்ற முக்கிய புவியியல் பகுதிகளை புறக்கணித்து, இந்தியா உலகளாவிய வர்த்தகப்  பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது.


ஆகஸ்ட் 2025-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகப் பற்றாக்குறை, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் கடந்தகால பழிவாங்கல்களைக் காரணம் காட்டி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதித்தபோது, ​​புது தில்லி கவனமாக வார்த்தைகள், தனியார் இராஜதந்திரம் மற்றும் பொது பழிவாங்கல் இல்லாமல் அதன் வழக்கமான வழியில் பதிலளித்தது. இந்த முறை நன்கு அறிப்பட்டதே. அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதை இருதரப்பு பதட்டங்களின் மற்றொரு அத்தியாயம் என்று அழைத்தன. ஆனால் இந்த வரிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிரச்சினைகளைவிட அதிகமானவற்றை வெளிப்படுத்துகின்றன. புதுதில்லி நீண்டகாலமாக தீர்க்காமல் தவிர்த்து வந்த இந்தியாவிற்குள் உள்ள ஆழமான உள் ஏற்றத்தாழ்வுகளையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.


இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரம் மிகவும் குவிந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை அனைத்து வணிக ஏற்றுமதிகளிலும் 70%-க்கும் அதிகமாக உள்ளன. குஜராத் மட்டுமே 33%-க்கும் அதிகமாக பங்களிக்கின்றன. இந்த செறிவு வேண்டுமென்றே, உள்கட்டமைப்பு, ஊக்கத்தொகைகள் மற்றும் பல ஆண்டுகளாக நிலையான அரசியல் ஆதரவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு, நாட்டின் ஏற்றுமதியில் சுமார் 5% மட்டுமே பங்களிக்கின்றன.


வடகிழக்கு பகுதி தனித்து வைத்தல்


இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் வடகிழக்கு ஒரு சிறிய பங்கை மட்டுமே கொண்டுள்ளது. 5,400 கிலோமீட்டருக்கும் அதிகமான சர்வதேச எல்லைகளைக் கொண்ட எட்டு மாநிலங்கள், நாட்டின் ஏற்றுமதியில் 0.13% மட்டுமே பங்களிக்கின்றன. வெளிநாட்டு சந்தைகளுடன் அவற்றை இணைக்கும் செயலில் உள்ள வர்த்தகப் பாதை இல்லை. மேலும், பெரிய அளவிலான வர்த்தகத்தை கையாள அல்லது செல்வாக்கு செலுத்தும் கொள்கையை கையாள எந்த உள்கட்டமைப்பும் இல்லை. அதற்குப் பதிலாக, இந்தப் பகுதியில் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பில் கவனம் செலுத்தும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இதில் வர்த்தகம் ஒருபோதும் முன்னுரிமையாக இருந்ததில்லை.


இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்களில் வடகிழக்கு பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் எந்த உறுப்பினரும் இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்தியாவின் ஏற்றுமதி உத்தியை வழிநடத்தும் வர்த்தக வாரியத்தில், மிசோரம், திரிபுரா அல்லது அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் இல்லை. குஜராத் முதல் தமிழ்நாடு வரையிலான தொழில்துறை பகுதிகளில் RoDTEP மற்றும் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) போன்ற திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால், வடகிழக்கு உள்கட்டமைப்பு, தளவாடங்கள் அல்லது நிறுவன ஆதரவு இல்லாமல் உலகளாவிய சந்தைகளை எதிர்கொள்ள விடப்படுகிறது. இது வெறும் அதிகாரத்துவ மேற்பார்வை அல்ல, இது வேண்டுமென்றே புறக்கணிப்பை பிரதிபலிக்கிறது. 2024-ஆம் ஆண்டில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் இராஜதந்திர ஏற்றுமதித் திட்டத்தில் 87 பக்கங்கள் இருந்தன. ஆனால், அதில் எதுவும் வடகிழக்கைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த மாநிலங்கள் விடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வெறுமனே ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அசாமில், தேயிலைத் தொழில் போராடி வருகிறது. விலைகள் தேக்க நிலையில் உள்ளன, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது, மற்றும் தோட்டங்கள் அழுத்தத்தில் உள்ளன. முக்கிய மேற்கத்திய சந்தைகளில் 25% கட்டண உயர்வு லாபத்தை நிலைநிறுத்த முடியாததாக மாற்றும். "நாங்கள் மிகவும் சிரமத்துடன் நிர்வகிக்கிறோம்," என்று 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் திப்ருகார் தோட்ட உரிமையாளர் கூறினார். "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வாங்குபவர்கள் கொள்முதல் ஆணைகளைக் குறைத்தால், நாங்கள் உடனடியாக செயல்பாடுகளைக் குறைக்க வேண்டியிருக்கும்." என்றார்.


இந்தப் பகுதி இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் பாதிக்கும் மேல் பங்களிக்கிறது, ஆனால் உயர்மதிப்பு பொட்டலம் அல்லது சந்தைப்படுத்தலில் கிட்டத்தட்ட எதுவும் இல்லை. பெரும்பாலானவை இன்னும் CTC தரத்தில் உள்ளன, ஏலங்களில் விற்கப்படுகின்றன, ஒவ்வொரு சந்தை ஏற்ற இறக்கத்திற்கும் ஆளாகின்றன. வாங்குபவர்கள் மறு மதிப்பீட்டு மனநிலையில் உள்ளனர், மேலும் மேல் அசாம் பகுதியிலும் டூவார்ஸிலும் செலவு குறைப்பு தொடங்கிவிட்டது. ஊதியங்கள் மாற்றமின்றி உள்ளன. உள்ளீடுகள் குறைந்து வருகின்றன. மேலும், வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்.


நுமாலிகரில், சுத்திகரிப்பு நிலையம் அசாமின் எரிசக்தி வலையமைப்பின் முக்கியப் பகுதியாகும். பெரும்பாலான கச்சா எண்ணெய் இன்னும் அருகிலுள்ள ஆயில் இந்தியா மற்றும் ONGC வயல்களில் இருந்து வருகிறது. ஆனால், இது மாறிக்கொண்டே இருக்கிறது. வருடத்திற்கு ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன்களாக விரிவடைந்துவரும் நிலையில், சுத்திகரிப்பு நிலையம் இப்போது பாரதீப்பையும், மலிவான ரஷ்ய இறக்குமதியையும் நோக்கிச் செல்கிறது.


இந்த ஆபத்து வாஷிங்டனின் கட்டணங்களிலிருந்து வருகிறது, இது ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு ஓரளவு எதிர்வினையாகும். அடுத்த தடைகள் கடுமையானதாகினாலோ அல்லது கப்பல் பாதைகள் தடுக்கப்பட்டாலோ, மும்பையின் நிதி பாதிக்கப்படாமல் போகலாம். அதனால், அசாம் இதன் தாக்கத்தை உணரும்.


மியான்மர், ஆசியான் நாடுகளுடன் அமைதியான எல்லை

2021-ஆம் ஆண்டு நய்பிடாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான வர்த்தகம் குறைந்துள்ளது. இப்பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலைகள் இப்போது சோதனைச் சாவடிகள், தடைகள் மற்றும் அதிகாரத்துவ தாமதங்களில் முடிவடைகின்றன. ஒரு காலத்தில் பரிமாற்றத்துடன் செயல்பட்ட எல்லை, இப்போது அமைதியாகிவிட்டது.


மியான்மருடனான இந்தியாவின் முக்கிய எல்லைப் புள்ளிகளான மிசோரமில் உள்ள ஜோகாவ்தர் மற்றும் மணிப்பூரில் உள்ள மோரே ஆகியவை சரிந்துவிட்டன. ஒரு காலத்தில் ‘கிழக்கில் செயல்படும்’ கொள்கைக்கு முக்கியமானதாக இருந்த அவை இப்போது வர்த்தக மையங்களைவிட பாதுகாப்புப் புள்ளிகளாகவே செயல்படுகின்றன. சாலைகள் பெரும்பாலும் நிறைவடையாமல் உள்ளன, சுங்க அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லை, குளிர்ப்பதன சேமிப்பு வசதிகள் இல்லை. 2024-ல் சுதந்திர இயக்க ஆட்சி முடிவுக்கு வருவது வர்த்தகத்தை மேலும் பாதித்தது மற்றும் மலைகளின் அன்றாட வாழ்க்கையையும் உள்ளூர் பொருளாதாரங்களையும் சீர்குலைத்தது.


வர்த்தகம் கண்காணிப்பால் மாற்றப்பட்டுள்ளது. இந்த வழிகள் இப்போது வர்த்தகத்திற்காக அல்ல, கட்டுப்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் அரிதாகவே கொண்டு செல்லப்படுகின்றன, எனினும் இரானுவப் படைகள் அந்தப் பகுதியை அதிகம் பயன்படுத்துகின்றன. உள்கட்டமைப்பு மோசமடைவதால், இந்த நகரங்கள் பொருளாதார முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுகள் எல்லைகள் எப்போது மூடப்படும் என்ற யோசனைக்கு மட்டுமே திறந்து இருக்கின்றன.


வடகிழக்கு ஒரு காலத்தில் இந்தியாவின் இராஜதந்திரத்தின் பிராந்தியமாகவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துடன் இணைப்பாகவும் பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டம் ஒருபோதும் நிறைவேறவில்லை. இன்று, கொள்கை விவாதங்களில், வர்த்தக மீள்தன்மை என்பது மின்னணுவியல் முதல் குறைமின்கடத்திகள் அல்லது ஜவுளி முதல் மருந்துகள் வரை தயாரிப்பு வகைகளுக்கு இடையில் மாறுவதில் கவனம் செலுத்துகிறது. புவியியல் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. காலனித்துவ துறைமுகங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தொழில்துறை மையங்கள் பயன்படுத்திய அதே பாதைகளை வர்த்தகம் பின்பற்றுகிறது என்பது அனுமானம். வடகிழக்கு இந்தக் கட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது, தற்செயலாக அல்ல, வேண்டுமென்றே நடந்துள்ளது.


ஆசியாவின் நகர்வுகள், இந்தியாவின் மந்தநிலை


சீனா உள்கட்டமைப்பு, போராளிகள் ஆதரவு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் வடக்கு மியான்மர் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தி வருவதால், இந்தியா தனது சொந்த பகுதிகளைப் பாதுகாக்கத் தவறி வருகிறது. மோரேயில் தொடங்கும் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை இப்போது காட்டுக்குள் மறைந்து வருகிறது. இந்தியா வர்த்தகத்தைவிட கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்துகிறது. சரக்குகள் கடக்காத இடத்தில், எல்லைப் படைகள் கடப்பார்கள். இயக்கம் ரோந்து பணிகளுக்கு மட்டும் குறைக்கப்படும்போது, எல்லைப் பகுதிகள் அசைவுகளின்றி இருப்பதில்லை; அவை ஒழுங்கின்மையை நோக்கி நகர்கின்றன.


தேவைப்படுவது அடிப்படை நிர்வாகம், புதிய யோசனைகள் அல்ல. வர்த்தகம் பேச்சுக்களை அல்ல. அவை சாலைகள் மற்றும் கிடங்குகளை நம்பியுள்ளது,  வெறும் அறிக்கைகளை அல்ல. வடகிழக்கில், இந்த அத்தியாவசிய அமைப்புகள் குறைவு. உள்கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க இருப்பு மிகக் குறைவு. இந்தியா லண்டனுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் அல்லது வாஷிங்டனில் அறிக்கைகளை வெளியிடலாம். ஆனால், நன்மைகள் அரிதாகவே சென்றடையும். திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் இரண்டிலும் வடகிழக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகளாவிய வர்த்தகத்தை பேச்சுவார்த்தை நடத்துகிறது, அதே நேரத்தில் அதை ஆதரிக்கக்கூடிய பகுதிகளை புறக்கணிக்கிறது.

டிரம்பின் வரி விதிப்புகளை ஒரு சிறிய பிரச்சினையாகக் கருதுவதன் மூலம், இந்தியா ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதைத் தவிர்க்கிறது. குஜராத்தில் வெள்ளம் அல்லது தமிழ்நாட்டில் தொழிலாளர் வேலைநிறுத்தம் தேசிய விநியோகச் சங்கிலியைத் தடுக்கலாம். உலகளவில், விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. விநியோகச் சங்கிலிகள் நகர்கின்றன, சீனா தனது முதலீடுகளை மாற்றி வருகிறது, தென்கிழக்கு ஆசியா புதிய வர்த்தக வழிகளை உருவாக்கி வருகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் தனது பங்கைப் பற்றி இந்தியா பேசுகிறது, ஆனால் அதன் பெரும்பாலான ஏற்றுமதிகள் இன்னும் ஒரு சில கடலோரப் பகுதிகளை நம்பியுள்ளன. கிழக்குப் பகுதிகள் வர்த்தகத் திட்டங்களிலிருந்து விடுபட்டால் இராஜதந்திர அறிக்கைகள் வெறுமையாக உணர்கின்றன.


ஒரு மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தால் பிராந்திய ரீதியாக வலுவாக இருக்க முடியாது. வடகிழக்குக்கு முழக்கங்கள் தேவையில்லை. அதற்கு அடிப்படை நிர்வாகம் தேவை. சந்தைகளுடன் இணைக்கும் சாலைகள், புவியியலுடன் பொருந்தக்கூடிய கொள்கைகள் மற்றும் தேர்தல்களுக்கு அப்பால் பார்க்கும் தலைமை போன்றவை தேவை. பல ஆண்டுகளாக, கிளர்ச்சிகள், போர்நிறுத்தங்கள் மற்றும் வெற்று கொள்கை வாக்குறுதிகள் மூலம் காத்திருக்குமாறு பிராந்தியம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகம் நகர்கிறது. வர்த்தக இடையூறுகள் அதிகரித்து வருகின்றன, வழித்தடங்கள் மாறி வருகின்றன. மேலும், தொடர்ந்து தாமதம் செய்வது எந்த நன்மையையும் தராது.


எந்த ஒரு ஒற்றை வரியும் இந்தியாவை உடைக்க முடியாது, ஆனால் மீண்டும் மீண்டும் வரும் பிராந்திய இடைவெளிகள் அதன் பொருளாதாரத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்துகின்றன. மீள்தன்மை என்பது வலிமையை குவிப்பது மட்டுமல்லாமல், அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் அதிர்ச்சிகளை உள்வாங்குவதாக இருக்க வேண்டும். அதுவரை, இந்த மறைமுக புள்ளிகள் அப்படியே இருக்கும்.



Original article:

Share:

சவுதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் இந்தியாவின் இராஜதந்திர சிந்தனையை தலைகீழாக மாற்றுகிறது. -கபீர் தனேஜா

 ரியாத்-இஸ்லாமாபாத் ஒப்பந்தம் குறைத்து மதிப்பிடப்படுகிறது, ஆனால் அது பரந்த புவிசார் அரசியல் அதிர்வுகளைக் கொண்ட ஒன்றாகும்.


பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே சமீபத்தில் ஒரு இராஜதந்திர பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது புது தில்லியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் இரு நாடுகளில் ஒன்றின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்ற ஒரு பிரிவு உள்ளது. இது இந்தியா-சவுதி உறவுகளின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்புகிறது.


ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2025-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த இந்தியா உலகளாவிய இராஜதந்திர பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இராணுவ பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியாவின் முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை. தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமாபாத்திற்கு மற்றொரு இராஜதந்திர ஆதாயமாக சவுதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் கருதப்படுகிறது.


மே மாதத்தில், பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ​​ஏவுகணைகள் எல்லையைக் கடக்கத் தொடங்கின. அதே நேரத்தில், சவுதி அரேபியா மற்றும் ஈரானைச் சேர்ந்த தூதர்கள் புதுதில்லியில் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி ரியாத்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.  ஆனால், பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக விரைவாக இந்தியா திரும்பினார். சிறிது நேரத்திலேயே, சவுதி வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-ஜுபைர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்திக்க வந்தார். பிரதமர் அலுவலகத்தில் அவரது சந்திப்பு கவனத்தை ஈர்த்தது. இரு தரப்பினரும் அமைதியாக இருந்தபோதிலும், அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க ரியாத் முயற்சித்திருக்கலாம்.


புவிசார் அரசியல் மாற்றங்களுடன் தொடர்புடையது


தெற்காசியாவிற்கு அப்பால், இந்த நிகழ்வுகள் 2023 அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் நடந்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்களையும் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தங்கள் இராஜதந்திர திட்டங்களை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.


தற்போது, ரியாத்-இஸ்லாமாபாத் ஒப்பந்தம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஆனால், அது இன்னும் பரந்த புவிசார் அரசியல் தாக்கத்தைக் கொண்டுள்ளது.


இந்தியாவின் நலன்கள் ரியாத்துக்கு முக்கியமற்றவை, ஆனால் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் ஒரே கல்லால் இரண்டு பறவைகளை வீழ்த்துகிறது. இது அந்த இராச்சியத்துடனான இழந்த பிரகாசத்தை மீட்டெடுப்பதோடு, அதே நேரத்தில் புது தில்லியின் பாதுகாப்பு கவலைகளை சவாலாக எதிர்கொள்கிறது.


இந்த ஒப்பந்தம், பதற்றமான காலத்திற்குப் பிறகு சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இயல்பான உறவுகளுக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. 2015-ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் உள்ள நவாஸ் ஷெரீப் அரசாங்கம், யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகளுக்கு எதிரான சவுதி அரேபியாவின் பிரச்சாரத்தை ஆதரிக்க துருப்புக்களை அனுப்ப மறுத்துவிட்டது. பல ஆண்டுகளாக, சவுதி அரேபியா விரிவான நிஜ உலகப் போர் அனுபவத்தைப் பெற்ற பாகிஸ்தான் இராணுவத்தை பெரும்பாலும் இந்தியாவுடனான மோதல்களில் தனது சொந்த உள்நாட்டு மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் ஒரு வலுவான சக்தியாகக் கருதி வருகிறது. அமெரிக்கா இப்போது மேற்கு ஆசியாவில் குறைந்த நம்பகமான இராணுவ நாடாக காணப்படுவதால், சவுதி அரேபியா மீண்டும் தனது பாரம்பரிய நட்புநாடுகளை நோக்கித் திரும்புகிறது. இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, அணுசக்தி பிரச்சினை மீண்டும் ஒருமுறை நன்மைகளைத் தருகிறது. இது திட்டமிடலைவிட தற்செயலாகவே இருக்கிறது. இருப்பினும், அதன் தாக்கத்தை வாஷிங்டனில் இருந்து ரியாத் வரை காணலாம்.


மேற்கத்திய ஊடகங்களில் வந்த செய்திகள், இந்த ஒப்பந்தம் சுமார் மூன்று ஆண்டுகளாக திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறின. இரு நாடுகளுக்கும் இடையே இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் பரிசீலிக்கப்படுவதை அறிந்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. நீண்டகாலமாக, அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தான், சவுதி அரேபியாவின் அணுசக்தித் தேவைகளுக்கு ஒரு சாத்தியமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய 12 நாள் போரில் இந்த இருநாடுகளும் கத்தாரைத் தாக்கினர். இதனால் பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளனர்.


அடிப்படைகள் உறுதியானவை


சவுதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் உலக  அரங்கில் பல மாற்றங்களை பிரதிபலிக்கிறது.


முதலாவதாக, மேற்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு பாகிஸ்தானுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. அவர்களின் உறவுகள் இஸ்லாம், சித்தாந்தம் மற்றும் மதக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அவர்களின் பகிரப்பட்ட இஸ்லாம் சித்தாந்தம் அடையாளத்தால் பிணைப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது. இந்த முக்கியத் தொடர்புகளை உடைக்க முடியாது.


இரண்டாவதாக, சவுதி அரேபியா இப்போது இராஜதந்திரம் சுதந்திரம், பல துருவ உலகம் மற்றும் பல கூட்டணிகளைப் பின்பற்றுகிறது. இவை ஒரு பெரிய சக்தியாக மாறுவதற்கு இந்தியா பின்பற்ற விரும்பும் முக்கிய வெளியுறவுக் கொள்கை இலக்குகளாகும். இந்த அணுகுமுறை பல நாடுகளுக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. மேலும் சில சமயங்களில் இந்தியாவின் இராஜதந்திர நலன்களுடன் முரண்படும் நாடுகளை இதில் சேர்க்க கூடும்.




இந்தியாவுக்கான செய்தி


சவுதி-பாகிஸ்தான் உறவு முறைப்படுத்தல், 1980களின் முற்பகுதியில் பாகிஸ்தான் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ‘இஸ்லாமிய குண்டு (Islamic bomb)’ என்ற கருத்தாக்கத்தின் மையத்திற்கு எழுப்பும் சவால் மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும், புவிசார் அரசியல் செஸ்போர்டு எவ்வாறு அடுக்கப்படுகிறது என்பதற்கு ஒரு முன்னோட்டமாக உள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு முக்கிய சவாலையும் வெளிப்படுத்துகிறது, அதாவது, இந்தியாவின் பண்பாட்டு ரீதியாக ஆபத்தைத் தவிர்க்கும் மூலோபாய சிந்தனையும், இது மாறும் மெதுவான வேகமும், நிலவும் உண்மைகளிலிருந்து படிப்படியாகப் பிரிந்து செல்கிறது. இந்தியத் தலைமை, அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாலும், அதைத் திரட்டுவதாலும் வரும் ஆபத்துகளை ஏற்க வேண்டும். இல்லையெனில், வேலியில் அமர்ந்திருப்பது தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையாக இருந்தால், மற்றும் ‘முதன்மை அமைதிவாதி (chief pacifist)’ என்ற பாத்திரத்தை வகிக்கும் கற்பனாவாத கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டால், இந்தியா தனது செல்வாக்கை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும், இது மூலோபாய தேர்வுகளைத் தடுக்கும்.


உலகம் மறுவடிவமைக்கப்படுகிறது, இந்தியா தனது நேரம் வரும் என்று நம்புவதற்காக காத்திருக்காது. சவுதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் என்பது இஸ்லாமாபாத் — குறிப்பாக பாகிஸ்தான் இராணுவம் — உலக மற்றும் மேற்கத்திய ஒழுங்கில் ஏற்படும் இடையூறுகளையும் பிளவுகளையும் தனது நன்மைக்காகப் பயன்படுத்துவதாகும். உலகின் செயல்பாட்டை மறுவடிவமைக்க மற்றொரு வாய்ப்பு இந்த நூற்றாண்டில் மீண்டும் வராமல் போகலாம். இந்தியாவின் கணக்கீடுகள் இப்போது சரியாக இருக்க வேண்டும், மேலும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.


கபீர் தனேஜா, Observer Research Foundation அமைப்பின் இராஜதந்திர ஆய்வுகள் திட்டத்தின் துணை இயக்குநராகவும் உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share: