விளிம்புநிலை இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு என்பது பொருளாதார ரீதியாக அவசியமான ஒன்றாக இருக்க வேண்டும். -ஜோதி சர்மா

 தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொழில்களில், சிறப்பு தொழில்நுட்ப திறன்களுக்கான தேவையானது, விநியோகத்தை விட வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், தரமான பயிற்சிக்கான அணுகல் இல்லாதவர்கள் பெருகிய முறையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். விளிம்புநிலை இளைஞர்களின் திறமையில் தோல்வி என்பது பில்லியன் கணக்கான உற்பத்தித் திறனைக் குறிக்கிறது.


இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.  மேலும், நாட்டின் இளைஞர்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக இணைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் தொகை 35 வயதுக்குட்பட்டவர்கள். இது இந்த டிஜிட்டல் வளர்ச்சியிலிருந்து பயனடைய நாட்டிற்கு வாய்ப்பளிக்கிறது. ஆனால், இந்த முன்னேற்றம் நகரங்களுக்கு வெளியே வாழும் மக்களையும், பின்தங்கிய பின்னணியில் இருந்து வருபவர்களையும் சென்றடைய வேண்டும்.


தொழில்நுட்பம் சார்ந்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate social responsibility (CSR)) திட்டங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுமார் 90 சதவீத நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், இத்தகைய செலவினங்களில் 4.5 சதவீதம் மட்டுமே நாட்டின் மக்கள்தொகையில் 17.5 சதவீதத்தைக் கொண்ட ஆர்வமுள்ள மாவட்டங்களைச் சென்றடைகிறது. இந்த இடைவெளி ஒரு அடிப்படை சவாலை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. ஆனால், அது மிகவும் தேவைப்படும் மக்களை நாம் சென்றடையவில்லை.


இன்றைய தொழில்கள் தொழில்நுட்ப திறன்களை மட்டும் கோரவில்லை. ஆனால் தகவமைப்பு, டிஜிட்டல் சரளமாக மற்றும் தொழில்முறை தொடர்பு பாரம்பரிய கல்வி வழங்குவதை விட அதிகமாக உள்ளன. விளிம்புநிலையில் உள்ளஇளைஞர்களுக்கு, தடைகள் இன்னும் சிக்கலானவை மற்றும் தொழில்நுட்ப திறன்களுக்கு அப்பாற்பட்டவை. தகவல் தொடர்பு திறன், தொழில்முறை வெளிப்பாடு மற்றும் முறையான பெருநிறுவன கட்டமைப்புகளுக்குத் தகவமைப்பு ஆகியவை பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தடைகளாக மாறும். இது திறமையான நபர்கள் அடுக்கு-1 (Tier 1) தொழில்நுட்ப சூழல்களில் வெற்றிபெறுவதைத் தடுக்கிறது.


இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) 2022ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2047-ம் ஆண்டிற்குள் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 40 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரக்கூடும். 2030-ம் ஆண்டுக்குள், உலகத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இந்தியர்களாக இருப்பார்கள். இது ஒரு வாய்ப்பு மற்றும் முக்கியமான பொறுப்பு இரண்டையும் முன்வைக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் எண்ணிக்கையின் அளவு வெற்றிகரமான திறன் முயற்சிகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதாகும். இருப்பினும்கூட, வேலைச் சந்தையானது மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களுக்கு வெகுமதிகளை வழங்குவதால், ஏற்கனவே இருக்கும் பிளவுகளை நாம் தீவிரப்படுத்துகிறது. 


தற்போதைய வேலைச் சந்தையில் அதிக திறன் கொண்ட தொழிலாளர்களின் மீதான சார்பு, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கட்டமைப்புத் தடைகளை உருவாக்கி, பொருளாதார சமத்துவமின்மையை விரிவுபடுத்துகிறது. தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொழில்களில், சிறப்பு தொழில்நுட்ப திறன்களுக்கான தேவை விநியோகத்தை விட வேகமாக வளர்கிறது. இதனால், தரமான பயிற்சிக்கான அணுகல் இல்லாதவர்கள் பெருகிய முறையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். விளிம்புநிலையில் உள்ள இளைஞர்களுக்கு திறன் வழங்கத் தவறுவது பில்லியன் கணக்கான உற்பத்தித்திறனை இழக்க வழிவகுக்கிறது. இது இந்தியா தனது மிகவும் மதிப்புமிக்க சொத்தை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. திறன் வளர்ப்புக்கான தேவை மிகவும் விரிவானது. இது அடிப்படை தொழில்நுட்பக் கருத்துகள் முதல் மேம்பட்ட ஆழமான தொழில்நுட்ப சிறப்புகள் வரை உள்ளது. சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளுக்கு கூட தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. இந்த திறன் இடைவெளி அனைவரையும் பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது. தற்போது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. ஆனால், எவ்வளவு விரைவாக நீங்கள் தகவமைத்து வளர முடியும் என்பதுதான் முக்கியம். இன்று, தகவமைப்புத் தன்மை மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவை வெற்றிக்கான உண்மையான திறவுகோல்கள் ஆகும்.

திறமைக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை. அடிப்படையான டிஜிட்டல் கல்வியறிவிலிருந்து (basic digital literacy) இளைஞர்களை தரவு பகுப்பாய்வு, UI/UX வடிவமைப்பு, குற்றவியல் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் மேம்பாடு போன்ற மேம்பட்ட நிபுணத்துவங்களுக்கு அழைத்துச் செல்லும். தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் தரநிலையாக மாற வேண்டும். அங்கு, திறன்கள் வாய்ப்புக்கான கதவுகளைத் திறக்கும். இந்தச் சான்றிதழ்கள் முதலாளிகள் நம்பும் தரப்படுத்தப்பட்ட அளவுகோல்களை வழங்குகின்றன. கல்வி அல்லது சமூகப் பின்னணியைக் காட்டிலும் திறன்கள் முக்கியமானதாக இருக்கும் விளையாட்டுக் களத்தை உருவாக்குகிறது. விளிம்புநிலையில் உள்ள இளைஞர்களுக்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படும்போது, ​​அவர்கள் பங்கேற்பது மட்டுமின்றி சிறந்து விளங்குகிறார்கள்.


வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட மாதிரிகள், வழிகாட்டுதல், நேர்காணல் தயாரிப்பு மற்றும் முதலாளிகளுடனான நேரடி தொடர்புகள் ஆகியவை எதிர்காலமாகும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அப்பால், இந்த மாதிரிகள் நம்பிக்கை, நிறுவனம் மற்றும் நீண்டகால சுதந்திரத்தையும் உருவாக்குகின்றன. பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்புக்கு தடையற்ற மாற்றத்தை உருவாக்க, வழிகாட்டுதல், நேர்காணல் தயாரிப்பு மற்றும் பணியமர்த்தல் நிறுவனங்களுடன் நேரடி கூட்டாண்மைகளை இணைப்பதன் மூலம் இந்தத் திட்டங்கள் பாரம்பரிய வகுப்பறை கற்றலுக்கு அப்பால் செல்கின்றன.

தொழில்நுட்பத்தில் உள்ள பெண்கள் தொடர்ச்சியான தடைகளை எதிர்கொள்கின்றனர். அதை இலக்காகக் கொண்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் இந்தத் தடைகளைத் தீர்க்க உதவும். கிராமப்புற திறன்பேசி பயன்பாடு (Rural smartphone) அதிகமாக இருந்தாலும், பாலின இடைவெளி உள்ளது. 44 சதவீத சிறுவர்களுடன் ஒப்பிடும்போது 20 சதவீத பெண்கள் மட்டுமே திறன்பேசிகளை வைத்துள்ளனர். இந்த டிஜிட்டல் அணுகல் இடைவெளி தற்போதுள்ள சமூகத் தடைகளை ஒருங்கிணைக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் செழிக்க பெண்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆதரவான, நெகிழ்வான பயிற்சி சூழல்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.


பொது-தனியார் கூட்டாண்மை பெரிய அளவிலான தாக்கத்தை உருவாக்க முடியும். அவை அரசாங்கக் கொள்கை, தொழில் நிபுணத்துவம் மற்றும் கல்வி வளங்களை ஒருங்கிணைக்கின்றன. இந்த அணுகுமுறை தனிமைப்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகளை முறையான மாற்றமாக மாற்றும். குறிப்பாக, அடுக்கு-2 மற்றும் 3 நகரங்களில் கவனிக்கப்படாத திறமையாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.  தனியார் துறையானது, நிதியளிப்பவர்களாக மட்டுமல்லாமல், பாடத்திட்டத்தை இணைந்து உருவாக்கி உள்ளூர் திறமைகளை ஆதரிக்க வேண்டும். இது பயிற்சித் திட்டங்கள் சந்தை தேவைகளுடன் பொருந்துவதையும் வேலைகளுக்கு நேரடி பாதைகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது. இது நகர்ப்புற-கிராமப்புறப் பிரிவினையான இடம்பெயர்தலை தேவையில்லாமல் குறைக்க முடியும், சிறிய நகரங்களில் இருந்து திறமையான நபர்கள் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் தரமான வேலை வாய்ப்புகளை அணுக முடியும்.


உண்மையான உள்ளடக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு உறுதியளிப்பதைக் குறிக்கிறது. தொழில்நுட்பம் மாறும்போது, ​​பணியாளர் மேம்பாட்டிற்கான நமது அணுகுமுறையும் மாற வேண்டும். இடைவெளிகளை உடைத்து, அரசாங்கம், தொழில்துறை மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும். இந்த குழுக்கள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இந்தியாவின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் சமாளிக்கும் முழு ஆதரவு வலையமைப்புகளை அவர்கள் உருவாக்க வேண்டும்.


இந்தக் கூட்டாண்மை மாதிரியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது திறன் மேம்பாடு நடைபெறும் விதத்தை மாற்றியமைக்கும். இது தனிப்பட்ட திறன்களை நிகழ்நேர வேலை வாய்ப்புகளுடன் பொருத்த முடியும். இதன் மூலம் கற்பவரின் வேகம் மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை உருவாக்க முடியும். மேலும், பயிற்சி பெற்ற நபர்களை அவர்களின் குறிப்பிட்ட திறன்களைத் தேடும் முதலாளிகளுடன் நேரடியாக இணைக்க முடியும். இது இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களை இந்தியா தொழிலாளர் மேம்பாட்டில் உலகளாவிய தலைவராக மாற்ற உதவும்.


எழுத்தாளர் நாஸ்காம் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share:

மண் உருவாகும் செயல்முறை என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் :


கோதுமை-விதைப்பு பருவத்திற்கு (wheat-sowing season) முன்னதாக, பலர் மண்ணின் வளம் மற்றும் பஞ்சாபின் விவசாய உற்பத்திதிறனில் வெள்ளத்தின் (Floods) தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புவதற்கு வழிவகுத்தது.


வெள்ளம் வெவ்வேறு வழிகளில் மண்ணை பாதிக்கிறது? இந்தக் கேள்விக்கு எளிய பதில் இல்லை. அதாவது வெள்ளத்தின் வகை, அது எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மண்ணின் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து சரியான பாதிப்புகள் மாறுபடும். இருப்பினும், இரண்டு முக்கிய வகையான தாக்கங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.


அரிப்பு (first is erosion) : 


மண் அரிப்பு முதல் காரணமாக உள்ளது. விவசாயிகளின் முயற்சி மூலம் மேம்படுத்திய வளமான மேற்பரப்பு மண்ணை வெள்ள நீர் (Floodwaters) அடித்துச் செல்கிறது. இந்த மேற்பரப்பு மண் முக்கியமானது. ஏனெனில், இதில் பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் கார்பன் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பயிர்கள் வளர உதவுகிறது.


வண்டல் படிவு (depositing of silt) :  


இரண்டாவது காரணம் வண்டல் படிவு ஆகும். வெள்ளமானது, பஞ்சாபின் பல பகுதிகளில், குறிப்பாக ஆற்றங்கரைக்கு அருகில் அல்லது ஆற்றின் படுகைகளில் உள்ள மேற்பரப்பு மண்ணை மூடியிருக்கும் வண்டல் படிவுகளை கொண்டு வருகிறது.


இருப்பினும், அனைத்து வண்டல் மண்ணும் மோசமானவை அல்ல. வெள்ளம் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் வளமான வண்டல் மண்ணையும் கொண்டு வரக்கூடும். கடந்த காலங்களில், ஆறுகளுக்கு அருகில் நிலங்களைக் கொண்ட விவசாயிகள் இந்த இயற்கை நிரப்புதலால் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டும் இதுவே நடக்கிறது.


இருப்பினும், நீண்ட காலம் நீர் தேங்குவது மண்ணின் இறுக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும், மண்ணின் காற்றோட்டம் மற்றும் ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கலாம். இந்த காரணிகள் ஒன்றாக உற்பத்தித்திறனைக் குறைக்கின்றன.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களிலிருந்து லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் (PAU) சேகரித்த மண் மாதிரிகள் சில பகுதிகளில், மண் சேதப்படுத்தப்பட்டதாக முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நிலை இன்னும் சமாளிக்கக்கூடியது.


நீர் தேங்குவதால் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் வெளியேறி மண்ணின் pH அளவில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்பரப்பு மண் அரிக்கப்பட்ட பகுதிகளில், ஊட்டச்சத்தின் அளவுகள் குறைந்துள்ளன. ஆனால் ஆழமான உழவு, மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களைச் சேர்ப்பது மற்றும் கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


ஒட்டுமொத்தமாக, முறையான மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம்மண் வளத்தை பராமரிக்க முடியும் என்பதை சோதனைகள் காட்டுகின்றன. பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் அடுத்த பருவத்திற்கு உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தனித்தனியாக மண் பரிசோதனை செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கின்றன.


மீட்பு உத்தி மண்ணின் வகை மற்றும் வண்டல் மண் ஆழத்தைப் பொறுத்தது. வண்டல் மண் இரண்டு முதல் மூன்று அங்குல ஆழத்தில் இருந்தால், சாதாரண உழவு அதை மண்ணுடன் கலக்கலாம். இலகுவான மண்ணில், ஒன்பது அங்குலங்கள் வரை ஆழமான வண்டல் அடுக்குகளை ஆழமான உளி மூலம் (deep chiselling) கையாளப்படலாம்.


மண் அமைப்பை மீட்டெடுக்க உரம் அல்லது கரிமப் பொருட்களைப் பயன்படுத்துவதும் அறிவுறுத்தப்படுகிறது. மிக முக்கியமாக, ஆரம்பகால தலையீடு விவசாயிகள் தங்கள் வயல்களை ராபி பயிர் சுழற்சிக்கான நேரத்தில் தயார் செய்ய அனுமதிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வெள்ளத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட களைகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், சரியான நேரத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


பஞ்சாப் அரசு, விவசாயிகள் தங்கள் நிலத்தில் குவிக்கப்பட்ட மணல் அல்லது வண்டல் மண்ணை “ வயலின் உரிமையாளருக்குச் சொந்தமானது” (Jisda Khet Usdi Ret’) என்ற கொள்கையின் கீழ் விற்கலாம் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக, மணல் படிவு அதிக அளவில் சாகுபடிக்கு இடையூறாக இருந்தால் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


வண்டல் படிவுகள் அதிகமாக இல்லாத பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர் சுழற்சிகளை திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கலாம் என்று விவசாய நிபுணர்கள் நம்புகின்றனர். அதிக வண்டல் படிவுகள் உள்ள பகுதிகளில் கூட, விரைவான நடவடிக்கை விவசாயிகள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்ற உதவும்.


உங்களுக்குத் தெரியுமா? :


மண்ணின் வகைப்பாடு (Soil Classification) என்பது ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட (வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல்) மண்ணை புவியியல் ரீதியாகக் குறிப்பிடப்பட்டு மற்றும் வரைபடமாக்கக்கூடிய அலகுகளாக வகைப்படுத்துவதைப் பற்றியது. மண் மிகவும் சிக்கலான இயற்கை வளமாகும். மண் என்பது காற்று மற்றும் நீரை விட மிகவும் சிக்கலான இயற்கை வளமாகும்.


அசோக் குலாட்டி குறிப்பிடுவதாவது, மண் சேதமடைந்துள்ளதாகவும் கரிம கார்பன் இல்லாததாகவும் சுட்டிக்காட்டுகிறார். உலக உணவுப் பரிசு பெற்ற (World Food Laureate) ரத்தன் லால் கருத்துப்படி மண்ணின் கரிம கார்பனின் (soil organic carbon (SOC)) சிறந்த அளவு 1.5 முதல் 2 சதவீதம் வரை உள்ளது. இருப்பினும், இந்தியாவில், 60 சதவீதத்திற்கும் அதிகமான மண்ணில் 0.5 சதவீதத்திற்கும் குறைவான மண்ணின் கரிம கார்பன் உள்ளது.



Original article:

Share:

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியல் என்பது என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்:


- அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) உலக மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமை அன்று, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், தேசிய அளவிலான ஐந்தாண்டு (2025-2030) மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதலை வெளியிட்டார்.


- மதிப்பீட்டுத் திட்டத்தின்படி, இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு நிலையை துல்லியமாக வெளிக்காட்டும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட, பங்கேற்பு மற்றும் மேம்படுத்தக்கூடிய 'சிவப்பு பட்டியல்' (Red Listing) அமைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.


- சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் என்பது 160 உறுப்பு நாடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொது சமூகக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய அமைப்பாகும். அவை சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. உலகப் பாதுகாப்பு மாநாடு (World Conservation Congress) பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் முன்னுரிமைகளை உருவாக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது.


- சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் அவ்வப்போது உயிரினங்களின் ஆரோக்கியம் மற்றும் அவற்றின் அழிவு அபாயங்களை ஆய்வு செய்கிறது. மேலும், இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் சிவப்பு பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் பாதுகாப்பு நிலையைப் பொறுத்து, இனங்கள் அழிந்துவிட்டன, காடுகளில் அழிந்துவிட்டன, மிகவும் ஆபத்தானவை, அழிந்து வருபவை, பாதிக்கப்படக்கூடியவை, அச்சுறுத்தலுக்கு அருகில், குறைந்த பாதுகாப்பு கொண்டவை, தரவு குறைபாடு அல்லது மதிப்பீடு செய்யப்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன.


- இந்த மதிப்பீடு கொள்கை வகுப்பாளர்களுக்கும் வனவிலங்கு நிபுணர்களுக்கும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்றவும், அத்தகைய உயிரினங்களுக்கு வளங்களை நேரடியாக வழங்கவும் திட்டங்களை உருவாக்க உதவுகிறது.


- இந்தியாவில் பாசி, பூஞ்சை மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட 55,726 பதிவு செய்யப்பட்ட தாவர இனங்கள் உள்ளன. இந்த 6.33%-இல், 3,501 தாவர இனங்கள் மற்றும் 27 பூஞ்சை இனங்கள் உலகளாவிய சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றிய சிவப்புப் பட்டியலுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.


- இந்தியாவில் 1,04,561 பதிவு செய்யப்பட்ட விலங்கு இனங்கள் உள்ளன. IUCN சிவப்பு பட்டியலில் இவற்றில் 7,516 இனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது மொத்த இனங்களில் 7.2% ஆகும். இந்த முடிவுகள் கவலையளிக்கின்றன. ஏனெனில், 1,012 இனங்கள் (13.4%) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. மேலும், 289 இனங்கள் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ளவை என பட்டியலிடப்பட்டுள்ளன.


- IUCN சிவப்புப் பட்டியலின்படி, இந்தியாவில் 6,568 மதிப்பிடப்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றில் 1,582 இனங்கள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை உள்ளூர் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது அவை நாட்டின் காட்டு வாழ்விடங்களில் மட்டுமே இயற்கையாகவே உள்ளன. குறிப்பாக நீர்வீழ்ச்சிகள் (79%) மற்றும் ஊர்வன (54.9%) ஆகியவற்றில் உள்ளூர் தன்மை அதிகமாக உள்ளது.


- இந்தியாவின் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை ஆய்வு செய்யும் 'தேசிய சிவப்பு பட்டியல்' (national red list) ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழிநடத்தும். இந்த திட்டம் இந்திய தாவரவியல் ஆய்வு, இந்திய விலங்கியல் ஆய்வு மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.





உங்களுக்குத் தெரியுமா?:


- சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) உலக பாதுகாப்பு மாநாடு ஐக்கிய அரபு அமீரகயத்தில் உள்ள  அபுதாபியில் 2025 அக்டோபர் 9 முதல் 15 வரை நடைபெறுகிறது.


- இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இது 1,400-க்கும் மேற்பட்ட சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றிய உறுப்பினர் குழுக்களுக்கு வாக்களித்து மிக முக்கியமான இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கிறது. இது மக்கள் பூமியை எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதை வழிநடத்த உதவுகிறது.



Original article:

Share:

பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் (GEI) இலக்கு விதிகள் -என் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய செய்தி:


— 2025ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான (Greenhouse Gas Emission Intensity (GEI)) முதல் அதிகாரப்பூர்வ விதிகளை ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.


- இந்த விதிகள் அலுமினியம், சிமென்ட், குளோர்-காரம் மற்றும் கூழ் மற்றும் காகிதம் போன்ற அதிக உமிழ்வை உருவாக்கும் நான்கு தொழில்களுக்குப் பொருந்தும்.


- உமிழ்வு இலக்குகள் அக்டோபர் 8 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


— உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு யூனிட் பொருளுக்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை விதிகள் நிர்ணயிக்கின்றன.


வேதாந்தா, ஹிண்டால்கோ, பாரத் அலுமினியம், JSW சிமென்ட், அல்ட்ராடெக், நால்கோ, ஜேகே சிமென்ட், டால்மியா சிமென்ட், ஸ்ரீ சிமென்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேகே பேப்பர் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இந்த இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.


கார்பன் வரவு வர்த்தக திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS))


- இந்த விதிகள், கார்பன் வரவு வர்த்தக திட்டம் (CCTS), 2023இன் மூலம் இந்தியாவின் கார்பன் சந்தையைத் செய்யல்பட்டிற்கு கொண்டு வர உதவும்.


- கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு அமைப்பை அமைப்பதற்கும், கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide (CO2)) உமிழ்வைக் குறைப்பதற்கும், 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் காலநிலை இலக்குகளை ஆதரிப்பதற்கும் கார்பன் கடன் வர்த்தக திட்டம் தொடங்கப்பட்டது.



பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் 2015 மற்றும் இந்தியா


- 2005ஆம் ஆண்டு அளவை விட, 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகளின் அளவை 45% குறைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இது உலகளாவிய காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் வாக்குறுதியின் ஒரு பகுதியாகும்.


குறிப்பு: தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் மாற்றம் அடையும் நாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின்படி பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் கோரும் சர்வதேச ஒப்பந்தமான கியோட்டோ நெறிமுறையின் (Kyoto Protocol) பிரிவு 17 இன் கீழ், கூடுதல் உமிழ்வு அலகுகளைக் கொண்ட நாடுகள்  பயன்படுத்தாத உபரியை தங்கள் இலக்குகளை மீறிய நாடுகளுக்கு விற்கலாம்.


பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான (Greenhouse Gas Emission Intensity (GEI)) விதிகள்


ஒட்டுமொத்த நோக்கம்: காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்களில் நவீன, சூழல் நட்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும்.


2025-26 மற்றும் 2026-27ஆம் ஆண்டுகளுக்கான மொத்தம் 282 பெரிய மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தேவையான உமிழ்வு வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த 282 அலகுகள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன: அதன் படி,


  • 186 சிமெண்ட் அலகுகள்


  • 13 அலுமினிய அலகுகள்


  • 30 குளோர்-கார அலகுகள்


  • 53 பல்ப் (pulp) மற்றும் காகித அலகுகள்


- ஒவ்வொரு யூனிட் வெளியீடு அல்லது தயாரிப்புக்கும் உற்பத்தி செய்யப்படும் டன் கார்பன் டை ஆக்சைடு (tCO2e) அளவை அடிப்படையாகக் கொண்டு விதிகள் GEI இலக்குகளை நிர்ணயிக்கின்றன.


— tCO2e என்பது அனைத்து பசுமை இல்லவாயுக்களின் தாக்கத்தையும் அளவிடப் பயன்படுத்தப்படும் நிலையான அலகு ஆகும். இது நமது பூமியை வெப்பமாக்கும் அவற்றின் திறனை அடிப்படையாகக் கொண்டது.


பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு தீவிரம் அல்லது பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம்


- பசுமை இல்ல வாயு அல்லது பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் என்பது உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவாகும்.


- பசுமை இல்ல வாயுக்கள் என்பது வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வாயுக்கள் ஆகும். இதனால் பூமியின் மேற்பரப்பு ‘பசுமை இல்ல விளைவு’ (greenhouse effect) மூலம் வெப்பமடைகிறது.


- வளிமண்டலத்தில் ஐந்து மிக அதிகமான பசுமை இல்ல வாயுக்கள் உள்ளன அவை நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் போன்றவையாகும். மற்ற சுமை இல்ல வாயுக்களில் குளோரோபுளோரோகார்பன்கள் (chlorofluorocarbons (CFCs)) மற்றும் ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள் (hydrochlorofluorocarbons (HCFCs)) போன்ற செயற்கை புளோரின் வாயுக்கள் (synthetic fluorinated gases) அடங்கும்.


- கார்பன் டை ஆக்சைடு முக்கிய பசுமை இல்ல வாயுவாக இருப்பதால், அதை வர்த்தகம் செய்வது ‘கார்பன் சந்தையில்’ (carbon market) கார்பன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது.


கார்பன் வரவுகள்


- தொழிற்சாலைகள் தங்கள் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கும்போது, ​​அவை கார்பன் வர்த்தக திட்டத்தின் (carbon credit trading scheme) கீழ் கார்பன் வரவுகளைப் பெறுகின்றன.


— இந்த வரவுகளை உள்நாட்டு கார்பன் சந்தையில் வர்த்தகம் செய்யலாம்.


- எரிசக்தி திறன் பணியகம் அதிகாரப்பூர்வ கார்பன் வரவு சான்றிதழ்களை வழங்கும்.


- தொழிற்சாலைகள் தங்கள் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடையவில்லை என்றால், அதை ஈடுசெய்ய கார்பன் சந்தையிலிருந்து கார்பன் வரவுகளை வாங்க வேண்டும்.


-அவர்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவர்களுக்கு சுற்றுச்சூழல் அபராதம் விதிக்கும்.


— இதேபோன்ற கார்பன் வரவு சந்தைகள் உலகின் பிற இடங்களில் செயல்படுகின்றன. அவை ஐரோப்பா மற்றும் சீனாவில் முறையே 2005 மற்றும் 2021 முதல் செயல்பட்டு வருகின்றன.


— ஒன்றிய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் பணியகத்தின் மேற்பார்வையுடன், இந்திய கார்பன் சந்தை தளத்தின் மூலம் கார்பன் வரவுகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

செயல்திறன், அடைதல் & வர்த்தகம்  (Perform, Achieve, Trade (PAT))


— முதல் முறையாக பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத்தை குறைப்பதற்கான இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், செயல்திறன், அடைதல் & வர்த்தகம் (PAT) எனப்படும் ஆற்றல் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

எடுத்துக்காட்டு:


— பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (GEI) இலக்குகள் மூலம் தொழில்கள் கார்பன் வரவுகளைப் பெறுவதற்கு சரியாக என்ன அடைய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும். இந்த இலக்குகளை அடைய அவர்கள் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.


- பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், அகற்றுதல் அல்லது தவிர்ப்பதன் மூலம் குறைந்த பசுமை இல்ல வாயுவை உற்பத்தி செய்யும் அதே வேளையில் தொழில்கள் வளர உதவுவதே முக்கிய நோக்கமாகும்.


- உதாரணமாக, ஒரு சிமென்ட் ஆலை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் தூய்மையான மற்றும் பசுமையான செயல்முறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத்தை குறைக்க முடியும். இது நிலக்கரியின் பயன்பாட்டை உயிரி எரிபொருளுடன் மாற்றலாம். மேலும் தூய்மையான, அதிக ஆற்றல் திறன் கொண்ட முறைகளை ஏற்றுக்கொள்ளலாம்.


காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான இந்திய அரசின் முக்கிய முயற்சி


— 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (National Clean Air Programme (NCAP)), 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 130 நகரங்களை உள்ளடக்கியது. இதன் நோக்கம், 2017-18ஆம் ஆண்டு முதல் 2025-26ஆம் ஆண்டுக்குள் காற்றின் தரத்தில் கணிசமான முன்னேற்றத்தை அடைவதும், துகள்களின் அளவை 40% வரை குறைப்பதும் ஆகும்.


- காற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் புதுப்பிக்க சாதனை படைக்காத நகரங்களில் காற்று மாசுபாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான (Portal for Regulation of Air-Pollution in Non-Attainment cities (PRANA)) இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.


- விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) விதிகள்: நெகிழிக் கழிவுகள், டயர் கழிவுகள், மின்கல கழிவுகள், பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கழிவுகள் மற்றும் மின்-கழிவுகள் ஆகியவை பொருளாதாரத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுற்றுச்சூழல் நல்ல முறையில் கழிவுகளை நிர்வகிக்க உதவும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளன.


- கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI)): சதுப்புநிலங்களை ஒரு தனித்துவமான, இயற்கை சூழல் அமைப்பாக மீட்டெடுக்கவும் மேம்படுத்தவும் மற்றும் கடலோர வாழ்விடங்களின் நிலைத்தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்தவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.


- நகர் வான் யோஜனா (Nagar Van Yojana): தேசிய காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியம் (National Afforestation and Eco-development Board (NAEB)) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. நகரவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதைத் தவிர, காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் மற்றும் பசுமையை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சுற்றுச்சூழலுக்கான நன்மைகள் ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது..


- பாதுகாப்பான வாழ்க்கை முறை (Mission LiFE): வளங்களை கவனமாகவும் சிந்தனையுடனும் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மக்கள் வாழ ஊக்குவிப்பதற்காக இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய திட்டமாகும். இது ஏழு முக்கிய தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவை: பின்வருவன,


  • தண்ணீர் சேமிப்பு


  • ஆற்றல் சேமிப்பு


  • விரயத்தை குறைக்கும்


  • மின்னணு கழிவுகளை நிர்வகித்தல்


  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழித்தல்


  • நிலையான உணவு முறைகளை ஊக்குவித்தல்


  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல்



— சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்திகளுக்கான விதிகள் (Eco-mark Rules): இது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle for Environment (LiFE)) என்ற கருத்தை ஆதரிக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும். குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும், வள-திறனுள்ள மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை ஆதரிக்கும் தயாரிப்புகளை ஊக்குவிப்பதை அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. தயாரிப்பு குறிப்புகள்(labels) துல்லியமாக இருப்பதையும் தவறான தகவல்களை வழங்காமல் இருப்பதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.


- காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change (NAPCC)) : இது அனைத்து காலநிலை முயற்சிகளுக்கும் விரிவான கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் சூரிய ஆற்றல், மேம்பட்ட ஆற்றல் திறன், நிலையான வாழ்விடங்கள், தண்ணீர், இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளைத் பாதுகாத்தல், பசுமை இந்தியா, நிலையான விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய முக்கியமான அறிவு ஆகியவற்றிற்கான சிறப்புப் பணிகளை கொண்டுள்ளது.



Original article:

Share:

உண்மையான தேவை ஒரு முழுமையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. -எஸ். இருதயராஜன், யு.எஸ். மிஷ்ரா

 ஒரு உண்மையான மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நிகழும் பல்வேறு மாற்றங்களைப் ஆராய வேண்டும்.


ஆகஸ்ட் 15, 2025 அன்று வெளியிடப்பட்ட மக்கள்தொகைப் கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு சமூக மற்றும் அரசியல் விவாதங்களில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த பணி முக்கியமாக வங்காளதேசத்திலிருந்து ஆவணப்படுத்தப்படாத குடியேற்றத்தையும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகையில் அதன் தாக்கத்தையும் கண்காணிப்பதாகும். இருப்பினும், இந்தியாவுக்கு இப்போது உண்மையில் தேவைப்படுவது ஒரு பரந்த, முழுமையான மக்கள்தொகைப் பணியாகும். ஏனெனில், நாடு மக்கள்தொகை திருப்புமுனையில் உள்ளது.


 இந்தியா அதிக மக்கள்தொகை மற்றும் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடக உள்ளது. சந்தேகமே இல்லாமல், இந்தியாவின் மக்கள்தொகை உலகம் போற்றும் ஒன்று என்று உள்ளூர்வாசிகள் அதைப் பற்றி பெருமைப்படுகிறார்கள். கடந்த காலங்களில், மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பற்றி சிந்திக்கும்போது கொள்கை வகுப்பாளர்கள் பெரும்பாலும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தினர். இந்தியாவின் மக்கள்தொகைப் பன்முகத்தன்மை என்பது அடுத்த நூற்றாண்டு வரை அதன் மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்கக்கூடிய ஒரு மறைக்கப்பட்ட பலமாகும். நமது நாட்டின் மக்கள்தொகையைப் புரிந்துகொள்வது என்பது இந்தியாவைப் பற்றியதாக மட்டும் இருக்கக்கூடாது. அதை உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிட வேண்டும்.


பரந்த நோக்கத்திற்கான தேவை


கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை எவ்வாறு மாறிவிட்டது என்பதை மக்கள்தொகை ஆய்வு பார்க்க வேண்டும். பொதுவாக, பிறப்பு விகிதங்கள், இறப்பு விகிதங்கள் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவது ஒரு வரையறுக்கப்பட்ட பார்வையை அளிக்கிறது. ஆனால், இந்த காரணிகள் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் மற்றும் குடும்பங்களின் வயது மற்றும் பாலின பரவலை அமைப்பை (age-sex composition) பாதிக்கின்றன. மக்கள்தொகை பணி எதிர்கால மாற்றங்களை கணிக்க மட்டும் முயற்சிக்கக்கூடாது. மாறாக மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைகள் மற்றும் இடம்பெயர்வு காரணமாக சமூகம் எவ்வாறு மாறுகிறது போன்ற புதிய மக்கள்தொகை போக்குகளையும் பார்க்க வேண்டும். மனித மேம்பாட்டுக் கண்ணோட்டத்தில், மக்கள்தொகை ஆய்வு, மக்களின் திறன்களை வளர்க்க வெவ்வேறு பிராந்தியங்களில் கிடைக்கும் சமமற்ற வசதிகளைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, இந்தியா திறமையான தொழிலாளர்களுக்கான உலகளாவிய மையமாக மாற விரும்பினாலும், பள்ளிகளும் பயிற்சி மையங்களும் நாடு முழுவதும் சமமற்ற முறையில் பரவியுள்ளன. இதன் விளைவாக, வசதி படைத்தவர்கள் சாதிக்க முடிவதும், வசதி குறைந்தவர்கள் சாதிக்கத் தவறுவதும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.


இடம்பெயர்வு பிரச்சினை


கருவுறுதல் மற்றும் இறப்பு விகிதங்களில் பெரிய முன்னேற்றங்கள் இருந்தாலும், இடம்பெயர்வு பகுதிகள் முழுவதும் ஒரு முக்கிய மக்கள்தொகை சமநிலையாளராகத் தெரிகிறது. எனவே, அனைவருக்கும் இடம்பெயர்வதற்கான ஒரே வாய்ப்பு இருப்பதை உறுதி செய்ய நியாயமான கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், இடம்பெயர்வு பற்றிய அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் எதிர்மாறானவையாக உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் மக்கள் மாநிலங்களுக்கு இடையே சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்று கூறினாலும், இடம்பெயர்ந்தோர் பெரும்பாலும் தங்கள் அடையாளத்தின் காரணமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். முதலாவதாக, இந்த அடையாளம் இயற்கையானது அல்ல. மாறாக மற்றவர்களால் உருவாக்கப்பட்டது. எனவே, அத்தகைய அடையாளத்தைப் பாதுகாப்பது தனிநபரைக் காட்டிலும் அரசாங்கத்திடமே இருக்க வேண்டும்.


மற்றொரு சிக்கலானது வீடு மற்றும் இடமளிப்பவர் பண்பு (host attribute) ஆகும். இடம்பெயர்ந்தவராக இருக்கும் தனிநபரைத் சமமான பங்கைக் கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய அரசியல் விவாதம், இடம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த மாநிலத்தில் வழக்கமான குடியிருப்பாளர்களாகக் கருததால், அவர்களின் வாக்குரிமையைப் பறிப்பதில் கவனம் செலுத்துகின்றன.


அவர்களுக்கு உரிமைகள் இல்லாமல் இருப்பதால், தற்போது வழங்கப்பட்ட இடமும் (host place) அவர்களுக்கு அதே உரிமைகளை வழங்கக்கூடும்.இது இடம்பெயர்ந்தோர் தொடர்ந்து உரிமைப் போராட்டத்தை எதிர்கொள்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. உள்நாட்டில் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பது, இடம்பெயர்ந்தோர் உரிமைகளை மீட்டெடுக்க பாடுபடும் ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும்.


நீண்ட ஆயுள் குறித்து


மாறிவரும் மக்கள்தொகை, நீண்ட ஆயுட்காலம் மற்றும் சிறந்த சமூகப் பாதுகாப்பின் தேவை போன்றவை புதிய சவால்களைக் எழுப்புகிறது. ஆயுள் மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட ஆண்டுகளை மறுவரையறை செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருக்கும் வரை சுறுசுறுப்பாக இருக்க முடியும். மூகப் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பைத் திட்டமிட தொழிலாளர்களுக்கு முதலாளிகள் உதவ வேண்டும். ஒட்டுமொத்தமாக, மக்கள் நீண்ட காலம் வாழ்வதால், சமூகப் பாதுகாப்பை வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


திட்டமிடல், கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் முன்னேற்றத்தைச் சரிபார்ப்பதற்கு மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். முன்னேற்றம் மற்றும் சாதனைகளை கொண்டாடுவதற்கு பெருமளவில் குறிகாட்டிகள் கிடைக்கச் செய்யப்படுகின்றன. ஆனால், பல குறிகாட்டிகள் சாதனைகளைக் காட்டினாலும், மக்கள்தொகை எவ்வாறு மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒதுக்கீடு மற்றும் வள விநியோகத்தில், மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் முன்னுரிமைகளை வழிநடத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தனிநபர் புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்துவது  மக்கள்தொகையின் உண்மையான அமைப்பைப் புறக்கணிக்கிறது. மக்கள்தொகை ஆய்வு அனைவரையும் உள்ளடக்குதல், ஓரங்கட்டப்படுவதை நிவர்த்தி செய்தல் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் பற்றிய விவாதங்களைத் தூண்ட வேண்டும். மக்கள்தொகைப் புள்ளிவிவரம் என்பது கடந்த கால மற்றும் எதிர்கால மக்கள்தொகைப் போக்குகளைப் படிக்கும் ஒரு பாடம் மட்டுமல்ல. மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைக்கு ஏற்ப உத்திகளை சரிசெய்வதன் மூலம் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அடித்தளமாகும்.


S. இருதய ராஜன் கேரளாவின் சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Institute of Migration and Development (IIMAD)) தலைவராக உள்ளார். யு.எஸ். மிஸ்ரா கேரளாவின் சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Institute of Migration and Development (IIMAD)) பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

குற்ற முறைகள்: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2023ஆம் ஆண்டின் அறிக்கை பற்றி…

 2023ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பக (National Crime Records Bureau (NCRB)) அறிக்கை, இணையவழி குற்றங்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.


குற்றம் மற்றும் சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) ஆண்டு அறிக்கைகளை கவனமாகப் படிக்க வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான எண்களை மாநிலங்களுக்கு இடையே நேரடியாக ஒப்பிட முடியாது, ஏனெனில் அவை பெரும்பாலும் குற்றங்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன அல்லது பதிவாகின்றன என்பதைப் பொறுத்தது. 


இருப்பினும், சில தேசிய போக்குகள் மற்றும் மாநிலங்களுக்குள் ஏற்படும் திடீர் வருடாந்திர மாற்றங்கள் இன்னும் அரசாங்க நடவடிக்கை தேவைப்படும் பயனுள்ள வடிவங்களைக் காட்டக்கூடும். ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய NCRB அறிக்கை, தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கீழ் ஒத்திவைக்கப்பட்ட ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுத்துக்காட்டுகிறது. 


கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான எண்கள் உள்ளன. அவை, இந்தியா முழுவதும் கொலை வழக்குகளில் 2.8% குறைவு, பட்டியல் பழங்குடியினருக்கு (STs) எதிரான குற்றங்களில் 28.8% கூர்மையான அதிகரிப்பு மற்றும் இணையவழி குற்றங்களில் 31.2% அதிகரிப்பு போன்றவை உள்ளன.


கொலை வழக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி சட்ட அமலாக்கத்திற்கு ஒரு நிம்மதியாகும். ஏனெனில், பெரும்பாலான கொலைகள் தகராறுகள், தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது நிதி ஆதாயத்துடன் தொடர்புடையவை. இருப்பினும், பட்டியல் பழங்குடியினருக்கு (STs) மற்றும் இணையவழி குற்றங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு கவலை அளிக்கிறது.


பட்டியல் பழங்குடியினருக்கு (STs) எதிரான குற்றங்களில் ஏற்பட்ட பெரிய அதிகரிப்பு முக்கியமாக மணிப்பூரில் நடந்த இன வன்முறை காரணமாகும். அங்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டிலிருந்து 2023-ல் 3,399 ஆக உயர்ந்தது. இது மிகவும் திறமையான அரசாங்கம் இருந்தால் தடுத்திருக்க முடியும்.


மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தானிலும் பழங்குடி சமூகங்களுக்கு எதிராக அதிக குற்ற விகிதங்கள் பதிவாகியுள்ளன. இது மத்திய இந்தியாவில் அவர்களின் தொடர்ச்சியான பாதிப்பைக் காட்டுகிறது. இந்தப் போக்கு புதியதல்ல; முந்தைய NCRB அறிக்கைகள் அதிக பழங்குடி மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அதிக குற்ற விகிதங்களைக் காட்டியுள்ளன.


நாடு முழுவதும் இணைய பயன்பாடு (Internet penetration) அதிகமாக இருப்பதால், இணையக் குற்றங்களில், குறிப்பாக நிதி மோசடி (financial fraud) மற்றும் பாலியல் சுரண்டல் (sexual exploitation) தொடர்பான குற்றங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்வுகளின் அடிப்படையில், இந்த எண்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தினசரி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீட்டில் டிஜிட்டல் நிதிக் கருவிகளின் அதிக பயன்பாட்டுடன் மேலும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. 

சிறப்பு பிரிவுகளுடன் காவல்துறை வளர்ந்து வரும் இணையக் குற்ற அச்சுறுத்தலுடன் தொடர முயன்றாலும், டிஜிட்டல் குற்றங்களின் எங்கும் நிறைந்த தன்மை மற்றும் ஆழமான பரவலுக்கு எதிராக அவற்றை எதிர்கொள்ள காவல்துறையால் அதிக நுட்பம் (sophistication) மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023ஆம் ஆண்டில் 9.2% அதிகரித்தன. இதில 96% வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவருக்கு நெருங்கிய தொடர்பில் இருப்பவராக உள்ளார். இந்த அதிகரிப்பு மாநிலங்கள் முழுவதும் மேம்பட்ட புகார் அளிப்பதன் விளைவாக இருக்கலாம் என்றாலும், அதிக எண்ணிக்கையிலான (1,77,335 வழக்குகள்) இந்த குற்றங்கள் மற்றும் பெரியவர்களின் தவறான நடத்தை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 


போக்சோ (Protection of Children from Sexual Offences Act (POCSO)) சட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். மேலும், இது வழக்குத் தொடரும் நபர் மற்றும் காவல்துறையினரால் கவனமாகக் கையாளப்பட வேண்டும்.  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 0.4% சிறிதளவு அதிகரித்துள்ளன. ஆனால், வரதட்சணை தொடர்பான குற்றங்களில் (dowry-related crimes) 14.9% உயர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து நிலவும் சமூகப் பிரச்சினையை (societal problem) சுட்டிக்காட்டுகிறது.



Original article:

Share: