இந்தியாவில் காபி -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி : 


பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) இந்தியாவின் பல வகையான காபி வகைகள் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவதாகக் கூறினார். இந்த வளர்ந்துவரும் புகழ் நாட்டின் பல்வேறு பகுதிகளான கர்நாடகாவின் சிக்மகளூர், கூர்க் மற்றும் ஹாசன் முதல் தமிழ்நாட்டின் பழனி, சேர்வராயன்மலை, நீலகிரி மற்றும் ஆனைமலை வரை உள்ள காபி விவசாயிகளுக்கும் பயனளித்து வருகிறது. இந்த சூழலில், இந்தியாவில் காபி உற்பத்தியின் வரலாறு மற்றும் அது தொடர்பான பிற முக்கிய உண்மைகளைப் பார்ப்போம்.




முக்கிய அம்சங்கள்:


1. இந்திய காபியின் வரலாறு கி.பி 1600-ல் கர்நாடகாவில் உள்ள பாபா புதன் கிரிஸில் உள்ள தனது துறவி இல்லத்தின் முற்றத்தில் புனித துறவி பாபா புதன், ஏழு 'மோச்சா' விதைகளை நட்டபோது தொடங்கியது. நீண்டகாலமாக, இந்தத் தாவரங்கள் ஒரு சிறிய தோட்டமாக இருந்து மெதுவாக கொல்லைப்புற பயிர்களாக பரவின.


2. 18-ஆம் நூற்றாண்டில், வணிக காபி தோட்டங்கள் தொடங்கின. அப்போதிருந்து, இந்தியாவின் காபி தொழில் வேகமாக வளர்ந்து உலக காபி சந்தையில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது.


3. இந்தியாவில் காபி சுமார் 4.90 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது, இது 3.63 லட்சம் மெட்ரிக் டன் காபியை உற்பத்தி செய்கிறது. இது முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. காபி விவசாயம் ஆந்திரா, ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற புதிய பகுதிகளிலும் வேகமாக விரிவடைந்து வருகிறது.


4. காபி முக்கியமாக ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் காபியில் சுமார் 70% 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, 2024–25-ஆம் ஆண்டில் $1.80 பில்லியன் வருவாய் ஈட்டுகிறது. மீதமுள்ள 30% நாட்டிற்குள் நுகரப்படுகிறது.


5. இந்தியாவில் இரண்டு முக்கிய வகை காபி பயிரிடப்படுகிறது: அராபிகா மற்றும் ரோபஸ்டா. அராபிகா அதிக சந்தை மதிப்பைக் கொண்ட லேசான மற்றும் நறுமணமுள்ள காபி ஆகும், அதே நேரத்தில் ரோபஸ்டா வலுவானது மற்றும் காபி கலவைகளை தயாரிப்பதில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


6. அராபிகா அதிக உயரத்தில் வளரும் மற்றும் 15°C முதல் 25°C வரை குளிர்ந்த மற்றும் சீரான வெப்பநிலையை விரும்புகிறது. மறுபுறம், ரோபஸ்டா, 20°C முதல் 30°C வரை வெப்பநிலை இருக்கும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் நன்றாக வளரும்.


காரணிகள்

அராபிகா

ரோபஸ்டா

மண்கள்

ஆழமான, வளமான, கரிமப் பொருட்கள் நிறைந்த, நன்கு வடிகட்டிய மற்றும் சற்று அமிலத்தன்மை கொண்டது (Ph6.0-6.5)

அராபிகாவைப் போலவே

சரிவுகள்

மென்மையானது முதல் மிதமான சரிவுகள்

சமமான நிலங்கள் மற்றும் மென்மையான சரிவுகள்

உயரம்

1000-1500 மீ

500-1000 மீ

அம்சம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு அம்சங்கள்

அராபிகாவைப் போலவே

வெப்பநிலை

15–25 டிகிரி செல்சியஸ்; குளிர்ச்சியானது, சமமானது

20 – 30 டிகிரி செல்சியஸ்; வெப்பம், ஈரப்பதம்

ஈரப்பதம்

70-80%

80-90%

வருடாந்திர மழைப்பொழிவு

1600-2500 மி.மீ.

1000-2000 மி.மீ.

பூக்கும் காலம்

மார்ச்- ஏப்ரல் (25-40மிமீ)

பிப்ரவரி - மார்ச் (25-40 மி.மீ)

மழை 

ஏப்ரல்-மே (50-75 மி.மீ) நன்கு பரவியுள்ளது.

மார்ச்-ஏப்ரல் (50-75 மி.மீ) நன்கு பரவியுள்ளது.


7. அரபிகா காபி பெரிய பண்ணைகளில் சிறப்பாக வளரும். அதே சமயம், ரோபஸ்டா எந்த அளவிலான பண்ணைகளிலும் நன்றாக வளரும். அரபிகா நவம்பர் முதல் ஜனவரி வரை அறுவடை செய்யப்படுகிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ரோபஸ்டா அறுவடை செய்யப்படுகிறது. வெள்ளை தண்டு  மற்றும் இலை துரு போன்ற பூச்சிகள் மற்றும் நோய்களால் அரபிகா எளிதில் பாதிக்கப்படுகிறது. ரோபஸ்டாவைவிட இதற்கு அதிக நிழல் தேவைப்படுகிறது.


8. பிரேசில் உலகின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது. இது உலகளாவிய காபியில் சுமார் 40% உற்பத்தி செய்கிறது. வியட்நாம் இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது.


இந்திய காபி வாரியம்


1. 1940ஆம் ஆண்டகளில், இரண்டாம் உலகப் போரின் காரணமாக இந்தியாவின் காபி தொழில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தது. விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன, பூச்சிகள் மற்றும் நோய்கள் பயிர்களை சேதப்படுத்தின. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இந்திய அரசு "1942 ஆம் ஆண்டின் காபி சட்டம் VII" -ன் கீழ் "காபி வாரியத்தை" உருவாக்கியது. இது வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வைக்கப்பட்டது.


2. 1990ஆம் ஆண்டுகளில், தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியில் காபி வாரியத்தின் தன்னாட்சி நிலை நீக்கப்பட்டது. செப்டம்பர் 1996-ல் நடைமுறைக்கு வந்த காபி (திருத்தம்) சட்டம், 1993 வள திரட்டல் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.


3. வள திரட்டல் முறை முடிவுக்கு வந்த பிறகு, காபி வாரியம் காபி துறைக்கு ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும் செயல்படத் தொடங்கியது, முழு மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கியது. அதன் முக்கிய செயல்பாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தர மேம்பாடு, உழவர்களுக்கு மேம்பாட்டு ஆதரவு மற்றும் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகளில் காபியை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.


4. வாரியத்தில் தலைவர், செயலாளர் & தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 33 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது.


5. இந்த வாரியம் ஆறு சட்டப்பூர்வக் குழுக்கள் மூலம் செயல்படுகிறது. ஒவ்வொரு குழுவும் ஒரு வருடத்திற்கு நியமிக்கப்படுகிறது. காபி சட்டத்தின்கீழ் அவற்றின் செயல்பாடுகள் பின்வருமாறு:


(i) நிர்வாகக் குழு: இந்த குழு காபி விதிகளின்கீழ் அதற்கு வழங்கப்பட்ட செயல்பாடுகளைக் கையாளுகிறது. பிரச்சாரம், சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி அல்லது வாரியத்தின் வேறு எந்த குழுவிற்கும் குறிப்பாக ஒதுக்கப்படாத விஷயங்களையும் இது கையாள்கிறது.


(ii) பிரச்சாரக் குழு: இந்த குழு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்திய காபியின் விற்பனையை ஊக்குவிப்பதிலும் நுகர்வை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.


(iii) சந்தைப்படுத்தல் குழு: சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள காபி சந்தைப்படுத்தல் திட்டத்தை இந்தக் குழு நிர்வகிக்கிறது.


(iv) ஆராய்ச்சிக் குழு: இந்தியாவில் காபி தொழிலை ஆதரிக்க விவசாய மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்தக் குழு ஊக்குவிக்கிறது.


(v) வளர்ச்சிக் குழு: இந்த குழு காபி எஸ்டேட்களை மேம்படுத்த உதவும் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் செயல்படுகிறது.


(vi) தரக் குழு: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காபியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்தக் குழு கையாளுகிறது.


6. வாரியம் தணிக்கைக் குழு எனப்படும் ஒரு சட்டப்பூர்வமற்ற குழுவையும் கொண்டுள்ளது. இது வருடாந்திர கணக்குகள் தொடர்பான விஷயங்களைக் கையாள்கிறது மற்றும் நிதி ஆய்வுகளை நடத்துகிறது.



Original article:

Share:

வெளிநாட்டில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கான புதிய மசோதா பாதுகாப்பு வழங்கவில்லை — அது அவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது -ரெஜிமோன் குட்டப்பன்

 மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, ​​கட்டாய தரநிலைகளை அமைத்தல், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்தல், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளுடன் உரிமைகளை சீரமைத்தல் மற்றும் பிரத்யேக நிதிகளை உருவாக்குதல் போன்ற மேம்பாடுகளைக் கோர வேண்டும்.


தற்போது 17 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் மற்ற நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பலவீனமான தொழிலாளர் சட்டங்கள் அல்லது பாதுகாப்பு அபாயங்கள் உள்ள நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கையைத் தேடுகிறார்கள் என்று ஒரு நாடாளுமன்ற அறிக்கை காட்டுகிறது.


இருப்பினும், இந்தியா இன்னும் பழைய குடியேற்றச் சட்டத்தின் மூலம் இந்தப் பெரிய இடம்பெயர்வை நிர்வகிக்கிறது. இது 42 ஆண்டுகள் பழமையானது மற்றும் இன்றைய உலகிற்கு இனி பொருந்தாது. அரசாங்கம் 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டில் அதைப் புதுப்பிக்க முயற்சித்தது. ஆனால், அப்பொழுது தோல்வியடைந்தது. இப்போது, ​​அரசாங்கம் வெளிநாட்டு நகர்வு (சேவை மற்றும் நலன்) மசோதா (Overseas Mobility (Facilitation and Welfare) Bill) (2025) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், அரசாங்கம் நவம்பர் 7 வரை பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது.


இது ஒரு முக்கியமான தருணம்: இந்த மசோதா இறுதியாக நமது உலகளாவிய தொழிலாளர்களுக்குத் தகுதியான பாதுகாப்புகளையும் பாதைகளையும் வழங்குமா?


இந்த மசோதா 1983-ஆம் ஆண்டு சட்டத்திற்கு ஒரு நவீன புதுப்பிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், வலுவான நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் உலகமயமாக்கலின் நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. வளர்ந்துவரும் உலகமயமாக்கல் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும், அனைத்து நிலைகளிலும் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க வலுவான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதியளிக்கிறது.


இருப்பினும், இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், ஒரு நெருக்கமான பார்வை ஏமாற்றமளிக்கும் யதார்த்தத்தைக் காட்டுகிறது. மில்லியன் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, வலுவான உரிமைகளுக்குப் பதிலாக தெளிவற்ற வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற்றுவதாகத் தெரிகிறது.


சட்டப் பாதுகாப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்குப் பதிலாக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன்மூலம் இது புலம்பெயர்ந்தோரை ஏமாற்றுகிறது. இதன் விளைவாக, தொழிலாளர்கள் தொடர்ந்து அதே பழைய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். வளைகுடா நாடுகளில் ஊதியம் பெறாத வேலைகள் அல்லது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணைய அடிமை முகாம்களுக்கு (cyber slave camps) கடத்தப்படுவது போன்ற பல ஆண்டுகளாக இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட அதே வகையான சுரண்டலுக்கு அவர்களை ஆளாக்குகிறது.


இங்கு "இணைய அடிமை முகாம்கள் (cyber slave camps)" என்பது தென்கிழக்கு ஆசியாவில் — முக்கியமாக மியான்மர், கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் — உள்ள ரகசிய, சிறை போன்ற கூட்டுப் பகுதிகளைக் குறிக்கிறது. இங்கு மனித கடத்தல்காரர்கள் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களைச் சிறை வைத்து, ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளை நடத்த வற்புறுத்துகின்றனர்.

 

தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்த மசோதா மக்கள் சுதந்திரமாக பணியாற்ற உதவாது; மாறாக, அது அதிக சிக்கல்களையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும்.


இந்த மசோதா வேலைவாய்ப்புகள் பற்றிய மிகக் குறைந்த விவரங்களையே வழங்குகிறது. அங்கு அதிக தெளிவு தேவைப்படுகிறது. பிரிவு 2(v) வேலை வகைகளை பட்டியலிடுவதன் மூலம் "வேலை" என்பதை வரையறுக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் நேர ஊதியம் அல்லது ஓய்வு நாட்கள் போன்ற முக்கிய பாதுகாப்புகளைக் குறிப்பிடவில்லை.


பிரிவு 4(d) தொழிலாளர்களின் "பாதுகாப்பான திரும்புதல் மற்றும் மறு ஒருங்கிணைப்பை" உறுதி செய்வது பற்றி கூறுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த நிதி அல்லது பயிற்சித் திட்டங்களை வழங்கவில்லை. இது 182 நாட்களுக்குள் நாடு கடத்தப்படுபவர்களையும் பிரிவு 2(t) விலக்குகிறது. குறுகிய காலத்தில் நாடு திரும்புபவர்களை விட்டுவிடுகிறது.


புதிய சட்டம் பழைய 1983ஆம் ஆண்டு சட்டத்தின் குடியேற்ற அனுமதி அலுவலகங்களை (emigration clearance offices), "நடமாடும் வள மையங்கள்" (Mobility Resource Centers) என்று மாற்றுகிறது. இருப்பினும், இந்த மையங்களுக்கு உண்மையான அதிகாரம் குறைவாகவே உள்ளது. பல மொழிகளில் முறையான ஆலோசனையை உறுதி செய்வதற்கான தெளிவான விதிகள் இல்லை அல்லது பாஸ்போர்ட் பறிமுதல் அல்லது தொழிலாளர் துஷ்பிரயோகம் போன்ற அபாயங்கள் பற்றிய தகவல்களை எளிதாக நடைமுறைப்படுத்தக்கூடிய தரநிலைகளும் இல்லை. இதன் விளைவாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த பல குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் இன்னும் சரியான விழிப்புணர்வு அல்லது பாதுகாப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.


பிரிவு 11(vi) வெளிநாடுகளில் உள்ள "வழிமுறைகள்" பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், நிலையான காலக்கெடுவுடன் கூடிய தூதரக அடிப்படையிலான நடுவர் மன்றம் போன்ற தெளிவான படிகளைக் குறிப்பிடவில்லை.


பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறியீட்டு கவனத்தை மட்டுமே பெறுகின்றன. பிரிவு 12(2) "பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான" திட்டங்களை உருவாக்குவது பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், அவர்கள் யார் என்பதை வரையறுக்கவில்லை. துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களுக்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை, குழந்தைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இது பெரும்பாலும் கடத்தலுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறார்களை பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகிறது. இது பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாட்டிற்கும் (Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW)) எதிரானது. இந்தியர்கள் ஏற்கனவே பாகுபாட்டை எதிர்கொள்ளும் அரபு வளைகுடா நாடுகளில், இத்தகைய தெளிவின்மை இன்னும் தீங்கு விளைவிக்கும்.


இந்த மசோதா அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தையும் வழங்குகிறது. எந்தவொரு நீதித்துறை மதிப்பாய்வு அல்லது புலம்பெயர்ந்தோரின் உள்ளீடு இல்லாமல் "தேசிய பாதுகாப்பு" அல்லது "பொது நலன்" போன்ற தெளிவற்ற காரணங்களுக்காக முழு நாடுகளுக்கும் பயணத்தைத் தடைசெய்ய பிரிவு 13 மையத்தை அனுமதிக்கிறது.


வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட 1983-ஆம் ஆண்டு சட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த மசோதா வெளிப்படைத்தன்மை இல்லாமல் அவற்றை விரிவுபடுத்துகிறது. இது திடீரென வெளிநாட்டில் வேலை செய்வதைத் தடுக்கக்கூடும். மேலும், பிரிவு 19-ன் கீழ் இயக்க சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறக்கூடும்.


வெளிநாட்டு வேலைகளிலிருந்து வரும் வருமானத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கும் உலகில், இதுபோன்ற நியாயமற்ற கொள்கைகள் பாதுகாப்பை வழங்குவதில்லை. மேலும், அவை கண்ணியத்திற்கு தடையாகின்றன.


வெளிநாட்டு வேலைக்கான நுழைவுப் புள்ளியாகக் கருதப்படும் ஆட்சேர்ப்பு, பெரும்பாலும் ஒரு கனவாகவே மாறிவிடும். பிரிவு 14, வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றிப் பேசுகிறது. ஆனால், முக்கியமான விவரங்களை பின்னர் "விதிகளின்" மூலம் முடிவு செய்ய விட்டுவிடுகிறது. ஆட்சேர்ப்பு கட்டணங்கள் அல்லது பிணைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மீதான தடைகள் குறித்த எந்த வரம்புகளையும் இது குறிப்பிடவில்லை. 1983-ஆம் ஆண்டு சட்டம் குறைந்தபட்சம் கட்டண வரம்புகளைக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த புதிய மசோதா அவற்றை முழுமையாகப் புறக்கணிக்கிறது. தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தக் கோரும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளின் 181 பிரிவையும் இது கவனிக்கவில்லை.


இதன் காரணமாக, கடன் அடிமைத்தனம் தொடர்கிறது. குறிப்பாக அரபு வளைகுடாவில், பல இந்திய தொழிலாளர்கள் மாதக்கணக்கில் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இதை "நல்ல வேலை நிலைமைகள்" ("decent working conditions”) என்று அழைக்க முடியாது. மாறாக, வேலை தேடுபவர்களை சுரண்டும் இடைத்தரகர்களுக்கு இது பயனளிக்கிறது.


இதேபோல், பிரிவு 17 வெளிநாட்டு முதலாளிகளைப் பற்றி கூறுகிறது, ஆனால் கட்டுமானம் மற்றும் வீட்டு வேலைகளில் பாதுகாப்பற்ற அல்லது சுரண்டல் நிலைமைகளுக்கு ஆய்வுகள் அல்லது முதலாளிகளின் பொறுப்பை அவை வழங்கவில்லை. வளைகுடாவில் இந்தியர்கள் மிகவும் ஆபத்தில் உள்ள துறைகள் உள்ளன. 1983-ஆம் ஆண்டு சட்டம் சிறந்த பாதுகாப்புகளை எதிர்பார்த்த நிலையில் அது தற்போது நீண்ட வேலை நேரம் மற்றும் பாதுகாப்பற்ற பணியிடங்கள் போன்ற துஷ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின் (ILO) 155 பிரிவான  பாதுகாப்பான பணிச்சூழலுக்கான கோரிக்கையை மீறுகிறது.


ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு (பிரிவு 18) சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தரவைச் சேகரிக்கிறது. இது அவர்களின் சம்மதத்தைக் கேட்காது மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டம் சட்டத்தைப் பின்பற்றாது. இந்த பலவீனமான தனியுரிமைப் பாதுகாப்பு, மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கிறது மற்றும் நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு களங்கத்தை உருவாக்குகிறது. அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, தரவு கண்காணிப்புக்கான ஒரு கருவியாக மாறுகிறது. பிரிவுகள் 20–22 இந்திய நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடுமையான அபராதம் விதிக்கின்றன. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த அபராதங்களும் விதிப்பதில்லை. இதில் காப்பீடு தொடர்பான சலுகைகளும் இல்லை. இந்த அணுகுமுறை தடுப்பைவிட தண்டனையில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின்  (ILO)  நல்ல வேலைவாய்ப்பு முறைகளுக்கு எதிரானது.


1983 சட்டம் ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் பலவீனமான மேற்பார்வை மற்றும் ஊழலுக்கு எதிராக ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, ​​கட்டாய தரநிலைகளை அமைத்தல், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்தல், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளுடன் உரிமைகளை சீரமைத்தல் மற்றும் பிரத்யேக நிதிகளை உருவாக்குதல் போன்ற மேம்பாடுகளைக் கோர வேண்டும். நாம் சரியான ஆதரவுடன் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை என்றால், நாம் திறமையை ஏற்றுமதி செய்யவில்லை மாறாக விரக்தியை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் உலகளாவிய லட்சியங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்; நாட்டில் மக்களும் சிறப்பாக இருக்க வேண்டும்.


குட்டப்பன் ஒரு தொழிலாளர் இடம்பெயர்வு நிபுணர் மற்றும் எழுத்தாளர்.



Original article:

Share:

இந்தியாவின் சுகாதார அமைப்பு அத்தியாவசிய சேவைகளுக்கு தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகமாகச் சார்ந்துள்ளது. -ஆனந்த் கிருஷ்ணன்

 இவர்களின் தேவையை கருத்தில்கொண்டு, ஆட்சேர்ப்பு முறை, ஊக்கத்தொகைகளின் பங்கு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.


சத்தீஸ்கரில் சுமார் 16,000 தேசிய சுகாதார திட்ட (National Health Mission (NHM)) ஊழியர்கள் சமீபத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். ஹரியானா மற்றும் கேரளாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists(ASHA)) தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொழிற்சங்கங்களை அமைத்துள்ளனர். 

இந்த வேலைநிறுத்தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களுக்குள் உள்ள தீவிரமான பிரச்சினைகளைக் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவையை (comprehensive primary healthcare (CPHC)) வழங்குவதற்கான உந்துதல் புதிய பணியாளர் சவால்களை உருவாக்கியுள்ளது, அவை திறம்பட தீர்க்கப்பட வேண்டும்.


இந்தச் சூழலில், விரிவான ஆரம்ப சுகாதார சேவையை (CPHC) வழங்குவதில் வழக்கமான சுகாதாரப் பணியாளர்களை ஆதரிக்கும் மூன்று பிரிவு பணியாளர்கள் தனித்து நிற்கிறார்கள். இதில், அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers (AWW)), அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் சமூக சுகாதார அதிகாரிகள் (Community Health Officers (CHO)) ஆவர். அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) 1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் (Integrated Child Development Services Scheme (ICDS)) ஒரு பகுதியாகும். மேலும், அவர்களின் பங்கு ஊட்டச்சத்து கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கூடுதல் மற்றும் தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை வழங்குவதை எளிதாக்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையது. சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அவர்கள் அதனுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள்.


சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) 2005-ஆம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டனர், மேலும் அவர்களது முதன்மைப் பொறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சாத்தியமான பயனாளிகளை சுகாதார வசதிகளுக்கு திரட்டுவதுமாகும். சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக 2018-ல் சமூக சுகாதார அதிகாரிகளின் (CHO) புதிய பிரிவு தொடங்கப்பட்டது. அவர்கள் பல் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது ஆயுஷ் பயிற்சியாளர்கள் ஆவார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெறுகிறார்கள், மேலும் அவர்களது ஊதியம் நிலையான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையின் கலவையாகும்.


அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களும் (Accredited Social Health Activists(ASHA)) அங்கன்வாடி பணியாளர்களும் (Anganwadi workers (AWW)) சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் (healthcare providers) அல்ல. இருவரும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் சுமார் 1,000 பேர் அல்லது 200 வீடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். இருவரும் "இணைப்பு" பணியாளர்கள் - அவர்கள் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை சமூகத்துடன் இணைத்து, கடைசி கட்ட இணைப்பை வழங்குகிறார்கள்.


சேவை வழங்குவதை உறுதி செய்யத் தவறிய வழக்கமான தொழிலாளர்களின் அனுபவம் குறைவாக இருந்ததால், தன்னார்வலர் அடிப்படையிலான அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருவரும் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வரை பகுதிநேர வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு (AWW) நிலையான கௌரவ ஊதியம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) செய்யப்படும் ஒவ்வொரு நிலை வேலைக்கும் ஊக்கத்தொகையாக ஊதியம் பெறுகிறார்கள். பிரசவம் அல்லது நோய்வாய்ப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை போன்ற எந்தவொரு அவசரநிலைகளுக்கும் அல்லது ஒரு நோயாளியை சுகாதார வசதிக்கு அழைத்துச் செல்வதற்கும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக, அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மாதத்திற்கு ரூ.5,000-10,000 சம்பாதிக்கிறார்கள். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) சுமார் ரூ.12,000 சம்பாதிக்கிறார்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

கோவிட் தொற்றுநோய் காலத்தில் அங்கீகாரம்பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களின் (ASHA) பணி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுடன் (ASHA) நான் தொடர்பு கொண்டபோது, ​​அவர்களை தங்கள் பணியில் பெருமை கொள்ளும் ஒரு உந்துதல் பெற்ற மக்கள் குழுவாக நான் பார்க்கிறேன். அவர்கள் இப்போது சுகாதார அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாக மாறிவிட்டனர். அவர்கள் இல்லாமல் திறம்பட செயல்பட முடியாது.


காலப்போக்கில், இந்த இரண்டுவகை பணியாளர்களுக்கும் அவர்களின் உண்மையான பணியின் ஒரு பகுதியாக இல்லாத கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொற்றில்லா நோய் (Non-Communicable Diseases (NCDs)) பரிசோதனை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்குதல் ஆகியவை அடங்கும். விருப்பமில்லாத வழக்கமான ஊழியர்களை கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தப் பணியாளர்களுக்கு அத்தகைய பணிகளை ஒதுக்கி அவர்களை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு எளிதாக்குகிறது. இது அவர்களின் வேலை நேரத்தை உண்மையான நிலையில் நான்குபேரைவிட அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர்கள் சில கூடுதல் ஊதியத்தைப் பெறுகிறார்கள்.


இருப்பினும், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) இருவருக்கும் பல குறைகள் உள்ளன. இவற்றில் அதிகரித்துவரும் பணிச்சுமை, போதுமான பாதுகாப்புநிலை இல்லாதது, மிக முக்கியமாக, பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் இல்லாதது ஆகியவை அடங்கும். இந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களை (ASHA) தொழிற்சங்கங்களை உருவாக்க வழிவகுத்தது. பல மாநிலங்களில் வேலைநிறுத்தங்கள் இப்போது பொதுவானதாகிவிட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தொழிற்சங்கங்கள் உள்ளன, மேலும் அவர்கள் வழக்கமான பணி நிரந்தரம் கோரி வருகின்றனர். நீதிமன்றங்கள் பொதுவாக அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, விடுப்பு போன்ற அரசு ஊழியர்களின் சலுகைகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்தன. இருப்பினும், அரசாங்கம் அவர்கள் "தன்னார்வலர்கள்" என்றும், அரசு ஊழியர்களாகக் கருத முடியாது என்றும் கூறுகிறது. இருப்பினும், அது அவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்துள்ளது.


இந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது மிகப்பெரிய சம்பளப் பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொரு குழுவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இது பதவி உயர்வுகள் தொடர்பான சிக்கல்களையும் உருவாக்கும். இந்த தன்னார்வ பணியாளர்கள் உருவாக்கப்பட்டபோது, ​​பதவி உயர்வுகளுக்கான எந்த அமைப்பும் திட்டமிடப்படவில்லை. இப்போது நிரந்தரப்படுத்தல் மற்றும் பதவி உயர்வுகள் இந்த பணியாளர்கள் முதலில் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படையையும் நியாயத்தையும் கேள்விக்குள்ளாக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சமூக சுகாதார அதிகாரிகள் (CHO) இந்தப் பணியாளர்களைப் போலவே பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், அவற்றின் பதவி உயர்வு வழிகளும் நன்கு வரையறுக்கப்படவில்லை.


சுகாதாரப் பணியாளர்களுக்கு மற்றொரு சவால், அனுமதிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகும். துணை செவிலித் தாதி (Auxiliary Nurse Midwife (ANM)) பணியிடங்களில் சுமார் 10-15 சதவீதமும், மருத்துவர் பணியிடங்களில் 20-25 சதவீதமும் காலியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் இப்போது பெரும்பாலும் ஒப்பந்தப் பணிகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த ஊழியர்களை நோக்கிய இந்த மாற்றம் முக்கியமாக நிகழ்கிறது. ஏனெனில், இது குறைந்த சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இல்லாதது போன்ற நிதிச் செலவுகளைக் குறைக்கிறது. மேலும், ஆட்சேர்ப்பு தாமதங்கள் மற்றும் ஊழலைத் தவிர்ப்பதன் மூலம் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துகிறது.


இந்த உதாரணங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது சுகாதாரப் பணியாளர்களை எவ்வாறு அணுகுகின்றன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. சமூக சுகாதார அதிகாரிகள் (Community Health Officers (CHO)) போன்ற பல மத்திய நிதியுதவித் திட்டங்கள், வழக்கமான ஊழியர்களை பணியமர்த்துவதற்கான மாநிலங்களின் மோசமான உந்துதலைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 


சுகாதார அமைச்சகத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் இந்த சவால்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் தீர்வுகளைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஆட்சேர்ப்பு முறைகள், ஊக்கத்தொகை கட்டமைப்புகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அமைப்பு போன்ற முக்கிய கவலைகளைக் கையாள வேண்டிய நேரம் இது. இதில், ஒப்பந்த மற்றும் தன்னார்வ அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஒரு பங்கு இருந்தாலும், அமைப்பு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது அவர்களை அதிகமாகச் சார்ந்துள்ளது. இதில் சிறந்த சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.


எழுத்தாளர் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சமூக மருத்துவ மையத்தில் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

ஒரு திருத்தப்பட்ட அரசியலமைப்பு மசோதா, அதன் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் -ஆர்.கே.விஜ், ஷிவானி விஜ்

 அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா மற்றும் அதன் 'கைது' மீதான கவனம் குறித்து அதிக ஆய்வு தேவை.


மத்திய அமைச்சரவை, மாநில அமைச்சரவை மற்றும் டெல்லிக்கான சிறப்பு நிர்வாக விதிகள் தொடர்பான அரசியலமைப்பின் பிரிவு 75, பிரிவு 164 மற்றும் பிரிவு 239AA ஆகியவற்றைத் திருத்துவதற்காக மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (Joint Parliamentary Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்படுவார். அந்தக் காவலின் 31-வது நாளுக்குள் இந்த ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அல்லது, ஆலோசனை வழங்கவில்லை என்றால், அமைச்சர் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார். மாநில சட்டமன்றங்களில் உள்ள அமைச்சர்களுக்கும் இதே போன்ற விதி பொருந்தும். அவர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். ஒரு மாநிலத்தின் பிரதமர் மற்றும் முதலமைச்சரைப் பொறுத்தவரை, அவர்கள் 31-வது நாளுக்குள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது (தானாகவே) ஒரு மாநிலத்தின் பிரதமர் அல்லது முதலமைச்சர் பதவியை இழக்க வேண்டும்


எதிர்க்கட்சிகளுக்கு சர்ச்சைக்குரியதாக இருந்தது எது?


எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து ஒன்று சேர நிர்பந்தித்த இரண்டு சர்ச்சைக்குரிய பிரச்சினைகள், காவல்துறையினரால் 'கைது' செய்யப்பட்டதும், நீதிமன்றத்தால் 'தடுப்புக் காவல்' வைக்க அனுமதித்ததும் ஆகும். இருவருக்கும் பரந்த அளவிலான அதிகாரம் இருப்பதால், மசோதா தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான முதல் நிபந்தனை கைது ஆகும். இது விருப்புரிமை மற்றும் அமலாக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளது. ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு கைது செய்யப்படுவதற்கு முன்பு சில நிபந்தனைகளை அமல்படுத்த பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) வழங்குகிறது. ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரையும் ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்வது கட்டாயமில்லை.


தீனன் vs ஜெயலலிதா-1989 (Deenan vs Jayalalithaa) வழக்கில், மனுதாரர் தனது உள்ளார்ந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதிவாதியான ஜெயலலிதாவைக் கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபோது, ​​காவல் விசாரணையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.


பிரிவு 41-ன் கீழ் 'கைது செய்யலாம்' (may arrest) என்ற வார்த்தைகள் கைது செய்யும் அதிகாரம் விருப்புரிமை கொண்டது என்பதையும், ஒரு காவல்துறை அதிகாரி எப்போதும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் காட்டுகிறது என்று உயர்நீதிமன்றம் கூறியது. கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இருந்தாலும், குற்றத்தின் தன்மை மற்றும் புகாரில் மட்டுமல்ல, விசாரணையின்போதும் வெளிப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து, அவர் நபர்களைக் கைது செய்வதைத் தவிர்க்கலாம். ஒரு தனிப்பட்ட நபரால் ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம், அவர் முன்னிலையில் பிணையில் (ஜாமீனில்) வெளிவர முடியாத மற்றும் விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் அவர் முன்னிலையில் செய்யப்பட்டாலோ அல்லது அந்த நபர் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலோ மட்டுமே கைது செய்ய முடியும். மற்ற எல்லா வழக்குகளிலும், அத்தகைய அதிகாரம் பொருந்தாது.


ஜோகிந்தர் குமார் vs உத்திரப் பிரதேச மாநிலம்-1994 (Joginder Kumar vs State of U.P.) வழக்கில், ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதால் மட்டுமே கைது செய்ய முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியது. கைது செய்யப்படுவதை நியாயப்படுத்த அந்த அதிகாரிக்கு சரியான காரணம் இருக்க வேண்டும். ஒருவரைக் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைப்பது ஒரு நபரின் நற்பெயருக்கும் சுயமரியாதைக்கும் கடுமையாக தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.


மற்றொரு வழக்கில், அமராவதி மற்றும் பிறர் எதிர். உத்திரப் பிரதேச மாநிலம்-2004 (Amarawati and Anr. (Smt.) vs State of U.P.), அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) பிரிவு 41 மற்றும் பிரிவு 157-ன் விதிகளின்படி, 'அடையாளம் காணக்கூடிய குற்றம்' என்பதன் வரையறையை கவனமாக ஆராய்ந்த பிறகு, சட்டமன்றம் 'கைது செய்யலாம்' என்ற வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளது என்றும், ஒவ்வொரு அறியக்கூடிய குற்றத்திலும் ஒருவரைக் கைது செய்வது காவல்துறைக்கு கட்டாயமில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 157, அறியக்கூடிய குற்றத்தை விசாரித்து, தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.


2009-ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41-ல் செய்யப்பட்ட திருத்தத்தில், ஏழு ஆண்டுகள்வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களிலும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களிலும் கைது செய்வதற்கு சில வேறுபாடுகளை குறிப்பிட்டது. இருப்பினும், (ஒரு நபரைக் கைது செய்யத் தேவையில்லை என்றால்) ஆஜராகுமாறு அறிவிப்பை வழங்குவதற்கு வழங்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41A, அவற்றின் சிறைத்தண்டனை காலத்தின் அடிப்படையில் குற்றங்களுக்கு இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தாது. சதேந்தர் குமார் அன்டில் vs சிபிஐ மற்றும் பிறர்.-2022 (Satender Kumar Antil vs CBI and Anr) வழக்கில், விசாரணை நிறுவனங்கள் பிரிவு 41 மற்றும் பிரிவு 41A குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 35, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 மற்றும் 41A-ஐ ஒன்றாகப் படிக்கும்போது ஒத்திருக்கிறது.


கைது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்


கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்வது அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு நல்லதல்ல என்றாலும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை குறிவைத்து காவல்துறையினரால் கைது செய்யும் இந்த விருப்புரிமை அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை நிராகரிக்க முடியாது. அர்னேஷ் குமார் vs பீகார் மாநிலம் மற்றும் பிறர்-2014 (Arnesh Kumar vs State of Bihar and Another) வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றாததற்கு உயர்நீதிமன்றங்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்துள்ளன. இது கைதுக்கு அவசியமான காரணங்களையும் ஆதாரங்களையும் விசாரணை அதிகாரி பதிவுசெய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. தேசிய காவல் ஆணையம்-1977 (National Police Commission) தனது மூன்றாவது அறிக்கையில் கிட்டத்தட்ட 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்று குறிப்பிட்டது. காவல்துறை அரசியல் அழுத்தத்திற்கு இணங்குவதாகக் கூறப்படும் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளில் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய 'கைது' ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படலாம்.


இரண்டாவது நிபந்தனை, "தொடர்ச்சியாக முப்பது நாட்கள்" தொடர்ந்து காவலில் வைப்பது, இது பிணையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்தக் காலத்திற்குள் ஒரு அமைச்சர் பிணைபெற முடிந்தால், பிரிவு 75(5A)-ன் கீழ் தகுதி நீக்கம் செல்லுபடியாகாது. 'பிணைஎன்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு' (bail is the rule, jail is the exception) என்ற கொள்கையை உச்சநீதிமன்றம் பலமுறை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தாலும், மும்முறை சோதனையைத் தவிர வேறு காரணிகளுக்காக பிணைபெரும்பாலும் நிராகரிக்கப்படுகிறது. அதாவது, தப்பித்து ஓடுவதற்கான சாத்தியக்கூறு, ஆதாரங்களை சேதப்படுத்தும் நிலை மற்றும் சாட்சிகளை அச்சுறுத்துதல் நிலை போன்ற காரணங்களால் நிராகரிக்கப்படும். உதாரணமாக, குற்றம் சாட்டப்பட்டவரின் நிரபராதி என்ற அனுமானத்துடன் முரண்பட்டாலும், ஒரு குற்றத்தின் ஈர்ப்பு அல்லது தீவிரம் ஒரு முக்கியமான நான்காவது காரணியாகக் கருதப்படுகிறது. எனவே, பொருளாதார குற்றங்களில் ஆரம்ப கட்டங்களில் பிணைவழங்கப்படலாம் என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர் கணிசமான சிறைவாசத்தை அனுபவித்திருக்காவிட்டால் கொடூரமான குற்றங்களில் பிணைபெறுவது மிகவும் கடினமாகிவிடும்.


முக்கியப் பிரச்சினைகள்


புதிய திருத்தம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 167(2)-ன் கீழ் (BNSS-ன் பிரிவு 187 உடன் தொடர்புடையது) பிணைவழங்குவதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, விசாரணை 60 அல்லது 90 நாட்களுக்குள் முடிவடையாதபோது, ​​பிணைபெறத் தவறுவது குற்றம் சாட்டப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமையாகும். காவல்துறை மற்றும் நீதித்துறை காவலின் ஒட்டுமொத்த காலம் 30 நாட்களைத் தாண்டியதால், பிரிவு 75(5A)-ன் கீழ் தடை நியாயமானதாகத் தெரியவில்லை. காவலில் வைப்பது சிறைத்தண்டனை அனுபவிப்பதைப் போன்றது அல்ல, மேலும் நீதிமன்றத்தால் அவ்வப்போது நீட்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நீதிமன்றங்கள் இந்த நீட்டிப்பை 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரம்பிற்குள் இந்த நீட்டிப்புகளை வழங்குகின்றன.


PMLA : Prevention of Money Laundering Act  -பணமோசடி தடுப்புச் சட்டம் 

NDPS :  Narcotic Drugs and Psychotropic Substances - போதை மருந்துகள் மற்றும் மனநோய் 

            தூண்டும் பொருட்கள்

UAPA : Unlawful Activities (Prevention) Act -சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 


மேலும், 'தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் குற்றம்' என்ற சொற்றொடரில் PMLA (பணமோசடி), NDPS (போதைப்பொருள்) மற்றும் UAPA (சட்டவிரோத செயல்பாடு) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார்களும் அடங்கும். அனைத்து சிறப்புச் சட்டங்களிலும் CrPC/BNSS-ல் இல்லாத இரட்டை பிணைநிபந்தனைகள் இருப்பதால் இது இன்னும் ஆபத்தானது. முதலாவதாக, குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும், இரண்டாவதாக, பிணையில் இருக்கும்போது அவர் எந்தக் குற்றத்தையும் செய்யமாட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும். விசாரணைக்கு மாறாக, இந்த நிபந்தனைகள் பிணைகட்டத்திலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவை பெரும்பாலும் கடுமையானவை என்று அழைக்கப்படுகின்றன. மேலும், வழக்கு விசாரணையிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதாரச் சுமையை மாற்றியமைக்கின்றன. மதுபானக் கொள்கை ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் சிசோடியா வழக்கு, ஒரு உதாரணமாகும். இது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் சிறையில் அடைக்கப்பட்ட 17 மாதங்களுக்குப் பிறகு பிணைவழங்கப்பட்டது. சிறப்புச் சட்டங்களின் கீழ் உள்ள வழக்குகளுக்கு இது பொதுவானது என்பதால், புதிய திருத்த மசோதாவில் "தொடர்ச்சியாக முப்பது நாட்கள்" வரம்பு மிகக் குறைந்த வரம்பை அமைக்கிறது. இதன் அடிப்படையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அது கடுமையான மற்றும் நியாயமற்ற சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.


ஒரு அமைச்சருக்கு பிணைவழங்குவதில் தடையாக இருக்கும் மற்றொரு காரணி, அவர்களின் அதிகார நிலை காரணமாக சாட்சிகளை பாதிக்கும் திறன் ஆகும். இது விசாரணை மற்றும் விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு அமைச்சர் கடினமான தேர்வை எதிர்கொள்ள நேரிடும், அதாவது பதவியில் தொடர்வதா அல்லது பிணைகோருவதா என்பது குறித்து. அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், அது பிணை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கலாம். இது திருத்தப்பட்ட விதிகளின்கீழ் பதவி நீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், அமைச்சர் இராஜினாமா செய்தால், பின்னர் பிணை வழங்கப்பட்டாலும்கூட அவர்களால் தங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்ய முடியாது.


பிணை வழங்குவதை நிச்சயமற்றதாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் ஆக்கும் இறுதிக் காரணி, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் சுதந்திரத்தை ஆதரிக்கும் (pro-liberty) நிலைப்பாடு அல்லது சுதந்திரத்திற்கு எதிரான (ante-liberty) நிலைப்பாடு உள்ளதா என்பதாகும். ஒரு வழக்கின் புறநிலை உண்மைகளைத் தவிர்த்துவிட்டு, இது பிணை வழங்குவதில் மிகுந்த அகநிலைத்தன்மையையும் விவேகத்தையும் ஏற்படுத்துகிறது.


ஆர்.கே. விஜ் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. ஷிவானி விஜ் ஒரு வழக்கறிஞர்.



Original article:

Share:

சீரற்ற வளர்ச்சி : செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி தரவுகள் குறித்து . . .

 தேவையை அதிகரிக்க வருமானத்தை அதிகரிப்பதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.


செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தித் தரவு, இரண்டாவது காலாண்டு மற்றும் நிதியாண்டின் முதல் பாதியில் பொருளாதாரத்தின் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் செய்திகள் அனைத்தும் மோசமாக இல்லை. ஆனால், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. அரையாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2025-க்கு இடையில், தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production(IIP)) தரவு, தொழில்துறை வளர்ச்சி குறைந்தது ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இது வெறும் 3% மட்டுமே, இது எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு. இருப்பினும், இரண்டாவது காலாண்டில் நிலைமை மேம்படுவதைக் காட்டுகிறது. இதில், இரண்டாவது காலண்டின் (Q2) வளர்ச்சி முதல் காலாண்டின் (Q1) 2% உடன் ஒப்பிடும்போது 4.1% மிகவும் வலுவானது. இவை அனைத்திலும் உற்பத்தித் துறை முக்கிய நேர்மறையான புள்ளியாக இருந்தது. செப்டம்பரில், இது 4.8% வளர்ச்சியடைந்தது, இது இந்த நிதியாண்டில் இரண்டாவது மிக உயர்ந்த வளர்ச்சியாகும். காலாண்டு அடிப்படையில், ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் உற்பத்தித் துறை ஒப்பீட்டளவில் வலுவான 4.9% வளர்ச்சியைக் கண்டது, இது டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டிற்குப் பிறகு அது கண்ட வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். அரையாண்டு அடிப்படையில், இந்தத் துறையின் வளர்ச்சி முந்தைய ஆண்டின் முதல் பாதியில் 3.8%-ஆகக் குறைந்த பின்னர், ஏப்ரல்-செப்டம்பர் 2025 பாதியில் 4.1% ஆக மீண்டும் உயர்ந்தது. சுரங்கத் துறையின் செயல்பாடு செப்டம்பர் 2025, இரண்டாவது காலாண்டிலும், நிதியாண்டின் முதல் பாதியிலும் சுருங்கியது. இந்த ஆண்டு பருவமழை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், இந்த செயல்திறன் இன்னும் வழக்கத்திற்கு மாறாக மோசமாக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் உத்திநிலையான கனிமப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தத் துறையை வலுப்படுத்துவது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.


உற்பத்தித் துறையின் வலுவான செயல்திறன் வெளிப்படையாகத் தெரிவது, அதை நேரடியாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. இந்தத் தரவுகள் வளர்ச்சிக்கான பரந்த அளவில் இல்லை என்றும், இது ஒரு சில துறைகளில் குவிந்துள்ளது என்றும் காட்டுகின்றன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) அளவிடப்பட்ட 23 முக்கிய உற்பத்தி துணைத் துறைகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் சுருங்கின. ஆடைகள், தோல் பொருட்கள், ரப்பர் பொருட்கள் மற்றும் நெகிழிப் பொருட்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகள் அனைத்தும் செப்டம்பர் 2025 காலாண்டில் சுருங்கியது கவலைக்குரியது. வளர்ச்சி அடைந்த துறைகளில் மரப் பொருட்கள், கனிமப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகப் பொருட்கள் ஆகியவை அடங்கும், இவை பலவும் அதிக மூலதனச் செலவினங்களைக் கொண்டுள்ளன. இந்தப் போக்கு தொடர்ந்தால், அது வேலை உருவாக்கத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். தரவின் மற்றொரு கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், நுகர்வோர் நீடித்து உபயோகிக்க முடியாத பொருட்கள் துறை கடந்த ஆறு தொடர்ச்சியான காலாண்டுகளாக சுருங்கியுள்ளது. இவற்றில் சில உப்பு மற்றும் உணவு எண்ணெய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் என்றாலும், மற்றவை விருப்பத்தேர்வு செலவினப் பொருட்களாகும். இதில் பெரும்பாலானவை அடிப்படை விளைவு காரணமாக இருந்தாலும், தேவை குறைவு என்பது கொள்கை வகுப்பாளர்கள் சில காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சனையாகும். உண்மையான தீர்வு வருமானங்களை அதிகரிப்பதிலும் வேலைகளை உருவாக்குவதிலும் உள்ளது.



Original article:

Share: