அரசியலமைப்பின் 48A மற்றும் 51A(g) பிரிவுகள் என்பவை என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் பகுதியில் நிலையான சுரங்க மேலாண்மைத் திட்டத்தின் (Management Plan for Sustainable Mining (MPSM)) கீழ் ஆறு பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்க ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுமதி அளித்தது.


— “இந்தத் தீர்ப்பு வெளியான நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள், 1968-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 126 பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளை, ஆறு பிரிவுகளைத் தவிர்த்து... வனவிலங்கு சரணாலயமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம்" என்று அமர்வு தீர்ப்பளித்தது.


— வனத்தின் ஒரு பகுதியை மட்டும் சரணாலயமாக அறிவிக்கும் மாநிலத்தின் திட்டத்தை நிராகரித்த அமர்வு, “… அரசியலமைப்பின் பிரிவுகள் 48A மற்றும் 51A(g), வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 26A ஆகியவற்றின் ஆணையைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் அறிக்கையின் வெளிச்சத்தில், 31,468.25 ஹெக்டேர் பரப்பளவை சரண்டா (Saranda) வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கும் கடமையிலிருந்து அரசு விலக முடியாது” என்றும் தெரிவித்தது. 


— "இந்தத் தீர்ப்பின் மூலம், பழங்குடியினர் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வனவாசிகளின் தனிப்பட்ட உரிமைகளோ அல்லது சமூக உரிமைகளோ மோசமாகப் பாதிக்கப்படாது என்பதை பரந்த அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்" என்று அமர்வு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


— "தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்குள் மற்றும் அத்தகைய தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையிலிருந்து 1 கிமீ பரப்பளவில் சுரங்கம் அனுமதிக்கப்படாது" என்ற 2023-ஆம் ஆண்டு கோவா அறக்கட்டளை வழக்கில் வழங்கிய தனது உத்தரவை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.


— "2017-31-ஆம் ஆண்டுக்கான தேசிய வனவிலங்கு செயல் திட்டம், பாதுகாக்கப்பட்ட பகுதி வலையமைப்பை (பொதுவாக தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், சமூக காப்பகங்கள் முதலியவற்றை உள்ளடக்கியது) மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான எல்லைகளை வரையறுக்க வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்கிறது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— சரண்டா, அதாவது எழுநூறு மலைகள் என்று பொருள்படும், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வனப்பிரிவானது சுமார் 856 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 816 சதுர கிலோமீட்டர் ஒரு பாதுகாக்கப்பட்ட காடு (Reserved Forest), மீதமுள்ளவை ஒரு பாதுகாப்பளிக்கப்பட்ட காடு (Protected Forest) ஆகும். சரண்டா நிலப்பரப்பின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்த அதன் மதிப்பீட்டில், இந்திய வனவிலங்கு நிறுவனம், இப்பகுதி வரலாற்றுரீதியாக அதன் வளமான பல்லுயிரினங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.


— தற்போது யானைகள், நான்கு கொம்புடைய மான் (four-horned antelope), மற்றும் சோம்பல் கரடிகள் (sloth bear) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், வாழ்விடச் சிதைவு மற்றும் துண்டு துண்டாகப் பிரிவதைச் சந்தித்து வருகிறது. அதோடு இது மற்ற அண்டை காடுகளுடன் இணைப்பை வழங்கும் மூன்று யானை வழித்தடங்களின் (elephant corridors) தாயகமாகவும் அமைந்துள்ளது.


— இந்திய வனச் சட்டம், 1927-ன் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வேட்டையாடுதல், மேய்ச்சல் மற்றும் மரங்களை வெட்டுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், அவை வாழ்விடங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், பேணுவதற்கும் முக்கியமானவையாகும்.



Original article:

Share:

இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் யாவை? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— இஷான் பக்ஷி எழுதுகிறார்: கடந்த பத்தாண்டு காலமாக, காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பல பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன… தூய்மையான காற்று என்ற பொது நலனை வழங்குவதில் அரசு மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையில், தனியார் மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். தனியார் தனிநபர்கள் நேரடியாக விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு, பயிர்க் கழிவுகளை (வைக்கோலை) எரிக்காமல் இருப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியுமா?


— பஞ்சாபில், ஒரு ஏக்கருக்கான சராசரி நெல் மகசூல் சுமார் 2.5 முதல் 3 டன்கள் ஆகும். தானியத்திற்கும் வைக்கோலுக்கும் இடையேயான விகிதம் தோராயமாக 1:1 ஆக உள்ளது, அதாவது ஒரு ஏக்கருக்கு 2.5 முதல் 3 டன் வைக்கோல் கிடைக்கிறது. 32.4 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவில், பஞ்சாப் சுமார் 20-24 மில்லியன் டன் பயிர்க் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இப்போது, ​​பயிர்க் கழிவுகளை வெட்டுதல், பரப்புதல், கட்டுதல் மற்றும் சேமித்து வைப்பதில் உள்ள செலவுகள் குறித்து பல்வேறு மதிப்பீடுகள் உள்ளன.


— ரமேஷ் சந்த் மற்றும் ஸ்வேதா சாஹ்னி (2023) கருத்துப்படி, ஒரு டன்னுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை இந்த செயல்முறைக்குப் போதுமானதாக இருக்கும். “ஆற்றல், சூழல் மற்றும் நீர்வளம் குறித்த கூட்டமைப்பு (Council on Energy, Environment and Water (CEEW)) (2021) நடத்திய ஆய்வில், ஒரு டன்னுக்கு ரூ.1,330 என மதிப்பிடப்பட்டுள்ளது. பண்ணையில் இருந்து 15 கி.மீ வரை வைக்கோலை கொண்டு செல்வதற்கான செலவும் இதில் அடங்கும். இந்த மதிப்பீடுகளை பணவீக்கத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து, அறிவு, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (Center for Study of Science, Technology and Policy (CSTEP)) (2024) நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஒரு டன்னுக்கு ₹1,620 என செலவுத் தொகை கணிக்கப்பட்டுள்ளது. 


— பஞ்சாபில் உள்ள அனைத்து பயிர்க் கழிவுகளையும் கொள்முதல் செய்வதற்கான செலவு ரூ.2,000 முதல் ரூ.4,000 கோடி வரை இருக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்தச் செலவை யாரோ ஒருவர் ஏற்க வேண்டும். விவசாயியும் அரசாங்கமும் இந்த முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இல்லாததால், ஒருவேளை தனியார் நிறுவனங்கள் இதில் ஒரு பகுதிச் செலவை ஏற்க முன்வரலாம்.


— பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஒரு பரந்த பகுதி பாதிக்கப்படுகிறது. ஆனால், தேசிய தலைநகர் பகுதியில் வசிப்பவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு இல்லாததால், மின் இணைப்புகளை எடுத்துக் கொள்வோம். டெல்லியில் சுமார் 60 லட்சம் உள்நாட்டு மின் நுகர்வோர் உள்ளனர். இத்துடன் குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது, சுமார் 80 லட்சம் குடும்பங்கள் என்று வைத்துக் கொண்டால், பயிர்க் கழிவுகளை அகற்றுவதற்கான செலவு ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கான செல்வு ₹2,500 முதல் ₹5,000 வரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

 

— இதில் மிகவும் பணக்காரர்களான 1 சதவீதத்தினருக்கு மட்டும், ஒரு மாதத்திற்கு ₹20,000 முதல் ₹40,000 வரை ஆகும். இடைப்பட்ட சிறு அளவிலான தொகையை ஏற்கலாம். அனைத்து குடும்பங்களும் பங்களிக்க முடியும். ஆனால், சிலர் பங்களிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. மாசுபாடு ஏற்படுத்தும் செலவைக் கருத்தில் கொள்ளும்போது இந்தச் செலவினத் தொகை அவ்வளவு அதிகமாக இல்லை.


— இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு தோல்வியடைவதைவிட, இதற்கு  கோய்சியன் கொள்கையின் (Coasean Principle) அடிப்படியில் தீர்வு காண்பது மாற்று வழியாகும். இது புறநிலைச் சிக்கல்களைத் தீர்க்க கட்சிகளுக்கு இடையேயான தனியார் பேரத்தை சார்ந்துள்ளது.


— அனுமிதா ராய்சௌத்ரி, மாசுக் கட்டுப்பாட்டிற்கு எதிரான போரில் படிப்படியான மற்றும் தற்காலிக நடவடிக்கைகளால் வெற்றி பெற முடியாது. வாகனங்கள், தொழிற்சாலைகள், மின் நிலையங்கள், கழிவு நீரோடைகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் திட எரிபொருட்கள் மற்றும் தூசிக் கோளங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் உமிழ்வைக் குறைக்க ஆழமான துறைசார் சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரங்களை பூர்த்தி செய்ய டெல்லி அதன் வருடாந்திர PM2.5 அளவுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குறைப்பை அடைய முடியாது. இதனால் தேசிய வெளிப்புற காற்றின் தர நிலைகளை (National Ambient Air Quality Standards) பூர்த்தி செய்யவும் இயலாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.


— இந்தப் பகுதியில் நகர்ப்புற மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலிருந்து மாசு ஏற்படுதலைக் குறைப்பதென்பது மிகப்பெரிய சவாலாகும். இதற்கு நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும், எல்லை தாண்டிய மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இந்திய-கங்கை சமவெளி முழுவதும் மேம்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முறையான மாற்றங்கள் தேவைப்படுகிறது. 


— விரைவான தீர்வுகள் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது முக்கியமாகிறது. கடந்த காலங்களில்கூட, போக்குவரத்துக்கான அசுத்தமான டீசல் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்களில் உள்ள நிலக்கரியை தொடர்ந்து குறிவைத்து, பெரிய அளவிலான எரிசக்தி அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் இயற்கை எரிவாயு அடிப்படையிலான உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்பட்டதன் மூலமே டெல்லியால் அதன் மாசுபாட்டைக் குறைக்க முடிந்தது.


— டெல்லி முறையான தீர்வுகளைக் கையாள்வதில் இருந்து பின்வாங்க முடியாது. குளிர்காலத்தில் ஏற்படுகின்ற உள்ளூர் மாசு மூலங்களில் ஏறக்குறைய பாதியளவுக்குக் காரணமான வாகனப் புகையைக் கட்டுப்படுத்த, டெல்லிக்கு வாகனப் பிரிவு வாரியாக உமிழ்வு கொண்ட மின்சார வாகனங்கள் (Electric Vehicle - EV) பயன்பாட்டுக்கான கட்டாய ஆணையும், அத்துடன் உள்எரிப்பு இயந்திரங்களுக்கான (Internal Combustion Engines (ICE)) ஊக்கமின்மைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான ஆதரவு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.


— டெல்லி, தனது போக்குவரத்துத் தேவைகளில் 80 சதவிகிதத்தை ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்புகளால் பூர்த்தி செய்யும் முக்கியத் திட்டங்கள் இலக்கை அடையாவிட்டால், வேறு எந்த முயற்சியும் போதுமானதாக இருக்காது. உதாரணமாக, சேவையை மேம்படுத்தாமலும், மக்களின் பொதுப் பயன்பாட்டை அதிகரிக்காமலும் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உதவாது என்று தெரிவிக்கப்படுகிறது. 


— வாகன நெரிசல் மற்றும் மாசுபாட்டைப் குறைக்கும் வகையிலான மேம்பாலங்கள் மற்றும் அகலமான சாலைகள் உள்ளிட்ட கார் போன்ற வாகனங்களை மையப்படுத்தும் சாலை உள்கட்டமைப்புக்காகப் பெரிய அளவிலான நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிதி, நடப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஏற்ற சுற்றுப்புறங்கள் மற்றும் வாகனங்களுக்கான சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்குத் திறம்பட விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றுடன் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுடன் (Transit-oriented development) சீரமைக்கப்பட வேண்டும் என்கின்றனர்


— இதேபோல், குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும் தொழில்துறை உமிழ்வைக் கட்டுப்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட சுத்தமான எரிபொருட்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளைச் சாதகமான விலை நிர்ணயக் கொள்கையுடன் நிவர்த்தி செய்து, தொழில்நுட்பரீதியாக சாத்தியமான இடங்களில் தொழில்துறை செயல்முறைகளின் மின்மயமாக்கலை ஊக்குவிக்க வேண்டும்.


— நகராட்சி அமைப்புகள் 100 சதவிகித வீட்டுக் கழிவுகளையும் சேகரித்து பிரித்து வைக்கவில்லை என்றால், கழிவுகள் தொடர்ந்து எரியும். டெல்லிக்குக் கழிவு பதப்படுத்தும் திறனில் மிகப்பெரிய விரிவாக்கம் தேவைப்படுகிறது. இதில் உரமாக்குதல் மற்றும் சுருக்கப்பட்ட உயிரிவாயு உற்பத்தி ஆகியவை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas (CNG)) வலைப்பின்னலுக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியம். அதேநேரத்தில், கலப்பு-உணவு அடிப்படையிலான கழிவிலிருந்து-ஆற்றல் (waste-to-energy) அமைப்புகளை படிப்படியாக நிறுத்த வேண்டும்.


— மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு கட்டாய ஆணை இருப்பதும் அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக, டெல்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளுக்கான மறுசுழற்சி ஆலைகள் உள்ளன, ஆனால் புதிய பொது மற்றும் தனியார் கட்டுமானங்கள் அனைத்திலும் குறைந்தது 10 முதல் 20 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்த ஒரு ஒழுங்குமுறை கட்டாய ஆணை உறுதி செய்ய வேண்டும்.


— அடிப்படை விஷயம் என்னவென்றால், என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியும். ஆனால், நகர்ப்புற உள்கட்டமைப்பில் உள்ள பொதுச் செலவினங்களையும் தனியார் முதலீடுகளையும் தூய்மையான காற்று இலக்குகளுடன் சீரமைக்க, ஒழுங்குமுறை கட்டாய ஆணைகள், இணக்கத் தேவைகள் மற்றும் நிதி அளிப்பாளர்கள் போதுமான அளவில் இல்லை. நமக்கு வழி தெரியும். ஆனால், அதைச் செயல்படுத்த விருப்பமோ அல்லது படைப்புத் திறனோ  இல்லை.


உங்களுக்குத் தெரியுமா?


— இந்த நெல் அறுவடைக் காலம் டிசம்பர் மாதம் முடிவடையும்போது,  ஒன்றிய அரசின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் அமைப்பானது, செயற்கைக்கோள்களால்  வரையறுக்கப்பட்ட எரிந்த பகுதிகளைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், வைக்கோல் எரிக்கப்பட்ட பண்ணைகளின் அளவைப் பற்றிய மிகவும் துல்லியமான தரவுகளைப்  பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.


 — கடந்த ஆண்டு, தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காற்றின் தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) பண்ணைகளின் வரைபடத்தை மேம்படுத்துவதன் மூலம் வைக்கோல் எரிப்புச் சம்பவங்கள் குறைவாகக் கணக்கிடப்படுவதைத் தீர்க்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.


— கடந்த ஆண்டு ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டாலும், இந்த ஆண்டு முழு அளவிலான சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அதிகாரிகளின் ஆதரவுடன், களச் சரிபார்ப்பு அல்லது உறுதிப்படுத்துதல் தொடங்கிவிட்டதாக இந்த விவகாரம் குறித்து அறிந்த பலரும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


— இந்தச் செயல்பாட்டில் தேசிய தொலை உணர்வு மையம் (National Remote Sensing Centre (NRSC)), பஞ்சாபில் உள்ள தொலை உணர்வு மையங்கள், ஹரியானா விண்வெளிப் பயன்பாட்டு மையம், இந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research (ICAR)) ஆகியவை ஈடுபட்டுள்ளன. 


— ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் சென்டினல்-2 (Sentinel-2) உட்படச் செயற்கைக்கோள்கள், பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்ட பண்ணை பரப்பளவை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட 10 மீட்டர் அளவிலான படங்களைத் தருகின்றன. இந்தக் காட்சிகள் மாநில அரசுகளுடன் சரிபார்ப்புக்காகப் பகிரப்படுகின்றன என்று இந்த வளர்ச்சிகள் குறித்து அறிந்த ஒரு விஞ்ஞானி கூறினார். இந்தச் செயற்கைக்கோள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அந்தப் பகுதியைக் கடந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


— மற்ற தயாரிப்புகளின் படங்களும் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சென்டினல்-2 திறந்த மூலமாக (open source) இருப்பதால் மிகவும் நம்பப்படுகிறது. ஏனெனில், அது வயல்களில் எரிக்கப்பட்ட அடையாளங்களைக் கண்டறிய ஒளியியல் படங்கள் (Optical images), அருகில்-அகச்சிவப்பு படங்கள் (near-infrared images), குறுகிய-அலை அகச்சிவப்பு 1 (short-wave infrared 1) மற்றும் குறுகிய-அலை அகச்சிவப்பு 2 (short-wave infrared 2) படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



Original article:

Share:

பீகாரில் வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படும்? -குஷ்பூ குமாரி

 இந்திய தேர்தல் ஆணையம் பீகார் தேர்தல் முடிவுகள் 2025 | வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்போது என்ன நடக்கும்?


தற்போதைய செய்தி : 


பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அதன் தனித்துவமான இணையதளங்களான eciresults.nic.in, eci.gov.in மற்றும் results.eci.gov.in மூலம் 2025-ஆம் ஆண்டுக்கான இறுதி பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும். ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) பீகாரில் வெற்றி பெற்றது. 2025-ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் 66.91% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. வருகைப் பதிவில் பெண்களே முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 7.45 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.


முக்கிய அம்சங்கள்:


1. வாக்குப்பதிவு முடிந்ததும்: வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machines (EVMs)) உடனடியாக முத்திரை வைக்கப்பட்டு, பின்னர் அவற்றை முறையான பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்பான அறைகளுக்கு மாற்ற வேண்டும்.


2. வாக்கு எண்ணிக்கைக்கான செயல்முறை: வாக்கு எண்ணிக்கை, பொதுவாக மாவட்டத் தலைமையகம் அல்லது ஒரு தொகுதிக்குள் உள்ள பிற மையப் பகுதிகளில், நியமிக்கப்பட்ட மையங்களில் நடைபெறும். பெரிய தொகுதிகளில் பல எண்ணும் அரங்குகள் இருக்கலாம். தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை அரங்குகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


3. வாக்கு எண்ணிக்கை நாள்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரை வைக்கப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன: அவை வாக்குப்பதிவு அலகுகள், கட்டுப்பாட்டு அலகு (Control Unit (CU)) மற்றும் வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை சோதனை (Voter-verified paper audit trail (VVPAT)) ஆகும். வாக்காளர்கள் உண்மையில் வாக்களிக்கும் இயந்திரம் வாக்குப்பதிவு அலகுகள் (Balloting unit(s) (BU)) ஆகும். வாக்குகள் உண்மையில் பதிவு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஒரு பகுதியாக கட்டுப்பாட்டு அலகு உள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கைக்காக எண்ணும் கூடத்திற்கு கொண்டு வரப்படுவது கட்டுப்பாட்டு அலகாகும்.


4. தபால் வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கை செயல்முறையை மேலும் நெறிப்படுத்தவும், தபால் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான தெளிவை வழங்கவும், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) செப்டம்பர் 25 அன்று சில அறிவுரைகளை வழங்கியது அவை பின் வருமாறு: வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை முடியும் வரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்/வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் எண்ணிக்கை முடிவடையும்வரை இரண்டாவது சுற்று நடத்தப்படாது என்று கூறியது. தபால் வாக்குச்சீட்டுகள் அல்லது அஞ்சல் வாக்குச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரடியாகச் செல்லாமல் தபால் மூலம் தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கின்றன 


5. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும்: அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்ததும், தேர்தல் அதிகாரி முழு தொகுதிக்கான முடிவுகளை அறிவிக்கிறார். அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை தேர்தல் அதிகாரி வெற்றியாளராக அறிவிக்கிறார். முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு, முடிவு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது.


6. தேர்தல் சான்றிதழ்: வெற்றி பெற்ற வேட்பாளருக்கு, அந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரி (Returning Officer) ஆல் “தேர்தல் சான்றிதழ்” வழங்கப்படும், இது அவர்களின் தேர்தலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. வேட்பாளர் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலை கையொப்பமிடுமாறு கேட்கப்படுவார். இந்த சான்றிதழ், படிவம் 22 என அழைக்கப்படுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரிகளால் தேவைப்படும், அவர்கள் லோக் சபா அல்லது விதான் சபாவிற்கு சென்று உறுப்பினர்களாக பதவியேற்பதற்கு.


இறுதி முடிவுகள் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அனுப்பப்படும், பின்னர் அது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை வெளியிடும் மற்றும் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும்.


7. மறு எண்ணிக்கை கோரிக்கைகள்: மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தால், வெற்றியின் வித்தியாசம் குறைவாக இருந்தாலோ அல்லது பிழை இருப்பதாக சந்தேகிக்க சரியான காரணங்கள் இருந்தாலோ, தேர்தல் அதிகாரி அது போன்று எழும் கோரிக்கைகளை பரிசீலிக்கலாம். அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டால், ஒரு வேட்பாளர் முடிவுகளை மறுத்தால், முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்புடைய உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுவை தாக்கல் செய்யலாம்.


8. வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய தேர்தல் பொருட்களின் சேமிப்பு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற பொருட்கள் ஏதேனும் சட்ட மறுஆய்வு அல்லது தணிக்கைக்கு தேவைப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாப்பாக வைக்கப்படும். அனைத்தும் நியாயமாக நடந்ததா என்பதை உறுதிசெய்து, ஏதேனும் தவறுகளைச் சரிசெய்ய தேர்தல் ஆணையம் பின்னர் தேர்தலை மதிப்பாய்வு செய்யலாம் அல்லது தணிக்கை செய்யலாம்.


தேர்தல் முடிவு அறிவிப்புக்குப் பிறகான நடவடிக்கைகள்


1. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் (Representation of the People Act) கீழ் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டவுடன், அவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் கடமைப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 178-வது, பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து சட்டமன்றத்தை அமைக்காமல், குறைந்தபட்சம் சபாநாயகர் (அல்லது துணை சபாநாயகரை) தேர்ந்தெடுக்கும்வரை, ஆளுநரால் புதிதாக ஒரு அரசாங்கத்தை அமைக்கும் செயல்முறையைத் தொடங்க முடியாது.

2. சட்டமன்றம் இவ்வாறு அமைக்கப்பட்ட பின்னரே, ஆளுநர் சட்டமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அரசாங்கத்தை அமைக்க அழைப்பார். ஒரு கட்சிக்கு அதிக பெரும்பான்மை (undisputed majority) இருந்தால், அந்தக் கட்சியின் பிரதிநிதியை முதலமைச்சராக நியமிப்பார்.


3. இருப்பினும், அத்தகைய பெரும்பான்மை கொண்ட கட்சி இல்லையென்றால், அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டு அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும் கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்க முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும், அத்தகைய கட்சி தனது உரிமை கோரும் நேரத்தில், மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி, கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதைக் காட்டினால், பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சிக்கு பதிலாக,  அந்த கூட்டணி அரசாங்கத்தை அமைக்க ஆளுநர் அழைப்பது நியாயப்படுத்தப்படும்.


4. மாநிலத்தில் பெரும்பான்மை அல்லது கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுமா என்பதை முடிவு செய்வது கட்சிகள் வென்ற இடங்களைப் பொறுத்து இருக்கும். பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் மகாகத்பந்தன் கூட்டணிகள் தேர்தலுக்கு முன்பே உருவாக்கப்பட்டன.


இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கு


இந்திய தேர்தல் ஆணையம் (ECI), இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்களில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான ஒரு நிரந்தர, சுதந்திரமான மற்றும் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பாகும். நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை மேற்பார்வையிட, மேற்பார்வையிட மற்றும் நிர்வகிக்க இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.


பிரிவு 324: நாடாளுமன்றத்திற்கும் ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கும் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களுக்கும், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல்களுக்கும் தேர்தல் பட்டியல்களைத் தயாரிப்பதற்கும், அவற்றை நடத்துவதற்கும் உள்ள மேற்பார்வை, இயக்கம் மற்றும் கட்டுப்பாடு.


பிரிவு 325: மதம், இனம், சாதி, பாலினம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு தனிநபரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.


பிரிவு 326: மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் நடைபெறும் தேர்தல்களுக்கு வயது வந்தோர் வாக்குரிமை (Adult suffrage) அடிப்படையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


பிரிவு 327: இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் தேவை ஏற்படும்போது சட்டங்களை இயற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளது.


பிரிவு 328: ஒரு மாநில சட்டமன்றம் தேவை ஏற்படும் போது சட்டத்தின் மூலம், அவை அல்லது சட்டமன்றத்தின் இரண்டு அவைகளுக்கான தேர்தல்கள் தொடர்பான அல்லது தொடர்புடைய அனைத்து விவகாரங்களிலும் சட்டங்களை இயற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளது.


பிரிவு 329: தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்கிறது.

Original article:

Share:

பிர்சா முண்டாவின் பிறந்தநாளில், கண்ணியத்திற்கான அவரது போராட்டத்தைக் கொண்டாடுவோம். -சி பி ராதாகிருஷ்ணன்

 பழங்குடியினத் தலைவர்களும் அவர்களின் இயக்கங்களும், சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் இந்தியாவின் பழங்குடியினப் பகுதிகளின் காடுகளிலும் மலைகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுகின்றனர்.


இந்தியாவின் பழங்குடியின சமூகங்கள் தேசத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை வடிவமைப்பதில் மிக முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன. வரலாறு முழுவதும், பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் நிலம், கலாச்சாரம் மற்றும் கண்ணியத்தை காலனித்துவ சுரண்டல் மற்றும் அநீதியிலிருந்து பாதுகாக்க சக்தி வாய்ந்த இயக்கங்களை வழிநடத்தியுள்ளனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பழங்குடியின சமூகங்கள், அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை சீர்குலைத்த பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகம், உள்ளூர் நிலப்பிரபுக்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன.


பிர்சா முண்டா தலைமையிலான உல்குலான் இயக்கம் முதல் அல்லூரி சீதாராம ராஜு, தாண்டியா பீல், வீர் குண்டதூர், ராணி காயிதின்ல்யூ, ராம்ஜி கோண்ட், ஷஹீத் வீர் நாராயண் சிங், சித்து-கான்ஹு மற்றும் பிறரின் எதிர்ப்புகளும், இந்தப் பழங்குடியின இயக்கங்கள் தனித்தனியான கிளர்ச்சிகள் அல்ல என்பதை நிரூபித்தன. அவை காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான நிலையான, சக்திவாய்ந்த எதிர்-விவாதங்களாக இருந்தன. அவர்களின் போராட்டங்கள் பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாத்தது மட்டுமின்றி, தேசத்தின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான பரந்த போராட்டத்தையும் வலுப்படுத்தியுள்ளன.


இந்தப் பழங்குடியினத் தலைவர்களையும் அவர்களின் போராட்டத்தையும் அங்கீகரிக்கும் வகையில், பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ஆம் தேதியை பழங்குடியின பெருமை தினம் ('ஜனஜாதிய கௌரவ திவாஸ்') எனக் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2021-ஆம் ஆண்டில்  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்தது. இந்தப் பிரமாண்டமான முடிவு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் செழுமையான பாரம்பரியம் மற்றும் போராட்டங்களைப் பற்றிய பெருமையையும் அறிவையும் தலைமுறைகள் தாண்டியும் கொண்டு சேர்க்கிறது. 


இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில், நாம் 2024-ஆம் ஆண்டில் தொடங்கிய பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ('ஜனஜாதிய கௌரவ வர்ஷ்') இந்த நாளில் நிறைவு செய்கிறோம்.


அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (12வது மற்றும் 13வது மக்களவை) பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது ஆட்சி காலத்தில்தான் பழங்குடியினர் விவகாரங்களுக்கான தனி அமைச்சகம் நிறுவப்பட்டது. மக்களவை உறுப்பினராக, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய தனி மாநிலங்களை உருவாக்குவதற்கும் நான் வாக்களித்தேன். பின்னர், நான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநரானேன்.


பதவியேற்ற பிறகு, பிர்சா முண்டாவின் பிறந்த இடமான உலிஹாட்டுக்குச் (Ulihatu) சென்று அஞ்சலி செலுத்தினேன். குறிப்பாக, உலிஹாட்டுக்கு வருகை தரும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை முழு நாட்டின் பார்வையிலும் பழங்குடிமக்களின் (Janjatiyas) முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி சமூகங்களைப் பாதுகாப்பதையும் அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM-JANMAN) திட்டத்தை அவர் அறிவித்தார்.


PM-JANMAN என்பது குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட பழங்குடி (tribal) சமூகங்களை 

சமூக-பொருளாதார ரீதியாக மேம்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு பிரதான திட்டம்.


கடந்த பத்தாண்டுகளாக, பழங்குடி சமூகங்களுக்கான கொள்கை வகுப்பில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நலத்திட்டங்களை நோக்கியதாக இருந்ததிலிருந்து, அதிகாரமளிப்பதை நோக்கியதாக மாறியுள்ளது. உதாரணமாக, 75 மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) இலக்காகக் கொண்ட PM-JANMAN திட்டமானது, கான்கிரீட் வீடுகள், சாலை வசதி, குடிநீர், மின் இணைப்பு, சுகாதார வசதிகள், கல்வி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.


மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம் தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan), இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். இது 63,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் அடிப்படை சேவைகளை நூறு சதவிகிதம் சென்றடையச் செய்வதையும், முழுமையான சமூக-பொருளாதார மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டது. பழங்குடி தயாரிப்புகளுக்கான புவிசார் குறியிடுதல் (Geotagging), பழங்குடி வணிகக் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் இது போன்ற பிற முன்முயற்சிகள், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நேர்மறையான நடவடிக்கைகளாகும். இந்த முயற்சிகள், பழங்குடி சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட குழுக்களாக இருந்ததிலிருந்து, தேசிய நீரோட்டத்தில் ஒரு பகுதியாக மாற உதவியுள்ளன.


“தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்தர்ஷ் அபியான்” என்ற திட்டம் பிர்சா முன்டா அவர்களின் பெயரில், பழங்குடியினர் கிராமங்களை முன்னேற்றம் செய்யும் திட்டம். தார்தி ஆபா (Dharti Aaba) என்பதற்கு ‘மண்ணின் தந்தை’ என்று பொருள்.

ஜார்கண்ட், தெலுங்கானா, பின்னர் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக, நான் அதிக பலன்கள் கிடைப்பதற்காக ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் (Eklavya Model Residential (EMR)) விரிவாக்கம் குறித்த பிரச்னையை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் எடுத்துரைத்தேன். 728 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்  பள்ளிகளை அமைப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்றும், அவற்றில் 479 பள்ளிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3.5 லட்சம் பழங்குடி மாணவர்கள் பயனடைகின்றனர். 


பழங்குடித் தலைவர்களின் வரலாற்றுக் கதைகள் அழியாமல் இருப்பதற்காக அரசாங்கம் முன்முயற்சிகளை எடுப்பது மகிழ்ச்சியான ஒன்று. 10 மாநிலங்களில் மொத்தம் 11 அதிநவீன பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு அருங்காட்சியகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்கள், டிஜிட்டல் மற்றும் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, துடிப்பான கல்வி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.


பழங்குடித் தலைவர்களின், அவர்களின் இயக்கங்களின், சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளின் காடுகள் மற்றும் மலைகளில் ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுகின்றன. அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் நீடித்த உத்வேகம் ஆகியவை நாடு முழுவதும் சமூக நீதி, சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் மனித உரிமைகளுக்கான இயக்கங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. பிர்சா முண்டா 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஆனால், அவர் சமூகத்தில் தேசபக்தியின் நெருப்பை மூட்டினார், அது வரும் தலைமுறைகளுக்கும் நீடிக்கும்.


எழுத்தாளர், இந்திய குடியரசு துணைத் தலைவர்.



Original article:

Share:

‘மத மாற்றத் தடை’ சட்டம்: அருணாச்சல பிரதேசம் வரைவு விதிகளை ஆய்வு செய்ய குழுத் தலைவரை நியமித்தது.

 அருணாச்சலப் பிரதேச அரசு, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட "மதம் மாற்றத் தடை" சட்டத்திற்காக வகுக்கப்பட்ட வரைவு விதிகளை ஆய்வு செய்ய, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியை உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது.


அருணாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் (Arunachal Pradesh Freedom of Religion Act (APFRA)), 1978-க்கான வரைவு விதிகளை ஆய்வு செய்வதற்காக, மாநில உள்துறை அமைச்சர் மாமா நதுங்கை மாற்றியமைத்து, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ப்ரோஜேந்திர பிரசாத் கட்டாகே நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தக் குழுவின் உறுப்பினர்களில் கென்டோ ஜினி மற்றும் பாலோ ராஜா ஆகிய இரண்டு அமைச்சர்கள், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஆறு அமைப்புகளின் தலைவர்கள் - அருணாச்சல கிறிஸ்தவ மன்றம் (Arunachal Christian Forum (ACF)), அருணாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி நம்பிக்கை மற்றும் கலாச்சார சங்கம் (Indigenous Faith and Cultural Society of Arunachal Pradesh (IFCSAP)), மோன்பா மிமாங் சோக்பா, தாய் காம்தி மேம்பாட்டுச் சங்கம், அருணாச்சல விகாஸ் பரிஷத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் மாநிலப் பிரிவு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அரசியலமைப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு, அருணாச்சல பிரதேச மதச்சுதந்திர விதிகள், 1978-ன் வரைவை ஆராயும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் இந்திய அரசியலமைப்பின் விதிகளுக்கும் நீதித்துறை வழிகாட்டுதல்களுக்கும் இணங்கி இருப்பதை உறுதிசெய்ய இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய துறைகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பும் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


உயர்நீதிமன்றத்தின் காலக்கெடுவை பூர்த்திசெய்யும் வகையில், பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறும் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


செப்டம்பர் 2024-ல், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் இட்டாநகர் கிளை, பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையை முடித்து வைக்கும்போது, வழக்கறிஞர் தம்போ தமின் (Tambo Tamin) தாக்கல் செய்திருந்த வழக்கில், அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தின் வரைவு விதிகளை ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்யுமாறு பேமா காண்டு (Pema Khandu) அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. 


அருணாச்சல கிறிஸ்தவ மன்றமானது, அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தின் "உள்ளடக்கம் மற்றும் நோக்கம்" கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் கிறிஸ்தவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட "அடிப்படை உரிமைகளைச் சுருக்குவதற்கான" பல தெளிவின்மைகளைக் கொண்டுள்ளது என்றும் வாதிடுகிறது.


அருணாச்சல கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் தார் மிரி உயர்மட்டக் குழுவில்  சேர்க்கப்பட்டிருந்தாலும், குழுவின் அமைப்பு அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற அதன் கோரிக்கையை பலவீனப்படுத்துகிறது என்று அந்த அமைப்பு கூறியது.


மறுபுறம், அருணாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி நம்பிக்கை மற்றும் கலாச்சார அமைப்பானது, (Indigenous Faith and Cultural Society of Arunachal Pradesh (IFCSAP)), சட்ட விதிகளை விரைவாக வகுத்து, சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மாநில பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.


கவுகாத்தி உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 1978-ஆம் ஆண்டின் அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை இறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Original article:

Share:

சிக்கலில் கிரேட் நிக்கோபார் திட்டமும் ஒரு அமைச்சகமும் -பங்கஜ் சேக்சாரியா

 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சரியான அறிவியல் முறைகளையோ அல்லது சரியான நடைமுறைகளையோ பின்பற்றவில்லை.


2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) முன் சமர்ப்பிக்கப்பட்ட முக்கியமான சமர்ப்பிப்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தொடரின் தெற்கு முனையில் அமைந்துள்ள பல்லுயிர் மற்றும் காடுகள் நிறைந்த இந்தத் தீவில் கிரேட் நிக்கோபார் மெகா உள்கட்டமைப்புத் திட்டம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டது (தி இந்து, அக்டோபர் 31, 2025 கிரேட் நிக்கோபார் திட்டத்தின் தாக்கம் குறித்து மத்திய அரசுக்கு முழுமையாகத் தெரியும் என்று கூறுகிறது).


2021-ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கான செலவு ரூ.72,000 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, இந்தத் திட்டத்திற்கு ரூ.92,000 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ஒரு சரக்கு பரிமாற்ற துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஒரு புதிய சுற்றுலாத் திட்டம் மற்றும் டவுன்ஷிப் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடுமையான ஆய்வு மற்றும் சட்ட சவால்களை எதிர்கொண்டது.


நவம்பர் 2022-ல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைப் பாதுகாக்கும் வகையில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி (Aishwarya Bhati) அக்டோபர் 30 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம், ‘துறைமுகம் கட்டப்படும் கலாத்தியா விரிகுடாவில் 20,000-க்கும் மேற்பட்ட உயிருள்ள பவளப்பாறைகள் உள்ளன. அரிய நிக்கோபார் மெகாபோட் பறவையின் 50-க்கும் மேற்பட்ட கூடுகள் உள்ளன. மேலும், ராட்சத தோல் முதுகு ஆமைகள் கூடு கட்டும் இடமாகும். 2052-ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்திருப்பதால், திட்டத்தின் தாக்கம் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதன் கடமை குறித்து அமைச்சகம் முழுமையாக அறிந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.


சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நோக்கி கேட்கப்படும் விளக்கம்


முதலில் எழும் அடிப்படை கேள்விகள், அமைச்சகம் தவிர்க்க விரும்புவது, பாதுகாப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கான தேவைதான். திட்டத்தை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாகக் காட்டி, தணிப்பு நடவடிக்கைகளை தீர்வாக முன்வைப்பது, முதலாவதாக அமைச்சகத்தின் சொந்த தொடர்பை திட்டத்தை அனுமதித்ததில் மறைக்கிறது, இரண்டாவதாக அதன் முதன்மை பணியான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் தோல்வியை மறைக்கிறது.


இந்த அடிப்படை முரண்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் குறைந்தது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் உள்ளன. முதலாவதாக, 2021-ல், தேசிய வனவிலங்கு வாரியம் (National Board for Wildlife (NBWL)), 1997-ல் அரிசி தோல் ஆமைகள், பவளக் காலனிகள், மெகாபோடின் கூடு மக்கள்தொகை மற்றும் சதுப்புநிலங்கள், உப்புநீர் முதலைகள் போன்ற பல்லுயிர் முக்கிய அம்சங்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட கலதியா விரிகுடா வனவிலங்கு சரணாலய அறிவிப்பை நீக்கம் செய்தது. வனவிலங்கு சரணாலயத்தை உருவாக்கி அதன் பாதுகாப்பிற்கு சட்டப்பூர்வ பொறுப்பைக் கொண்ட நிறுவனம் முதலில் இந்தப் பாதுகாப்பை அகற்றிவிட்டு, பின்னர் பாதுகாப்பு மற்றும் தணிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் கூறுவது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.


கடலோர ஒழுங்குமுறை பொருந்தும்


இரண்டாவது பிரச்சினை, இந்திய சட்டத்தால் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (coastal regulation zone (CRZ))-1A) என பெயரிடப்பட்ட நில வகை சட்டமாகும். சதுப்புநிலங்கள், பவளப்பாறைகள், ஆமை கூடு கட்டும் கடற்கரைகள், கடல் புல் படுக்கைகள் மற்றும் பறவைகள் கூடு கட்டும் இடங்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட (வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா) கடலோரப் பகுதிகள் அனைத்தும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1A-வில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளன. மேலும், கிரேட் நிக்கோபாரில் உள்ள துறைமுகம் போன்ற பெரிய கட்டுமானத் திட்டங்கள் இருக்கக்கூடாது. கலாத்தியா விரிகுடா கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்கிறது. இந்த இடத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் தானே ஒரு திட்டத்தை உருவாக்கி பல்வேறு நடைமுறை சிக்கல்களில்  சிக்கிக்கொண்டது.


ஏப்ரல் 2023-ல், துறைமுக தளத்தில் 20,668 பவளப்பாறை காலனிகள் உள்ளன என்றும், அது கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1A பகுதியில் உள்ளது என்றும், அங்கு துறைமுகம் கட்ட அனுமதி இல்லை என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) குறிப்பிட்டபோது சிக்கல் தெளிவாக தெரிந்தது. பின்னர், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரம் குறித்து ஆராய ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்தது. இது சென்னையை தளமாகக் கொண்ட தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (National Centre for Sustainable Coastal Management (NCSCM)), சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றிடம் ஒரு உண்மையான ஆய்வை நடத்துமாறு கேட்டுக் கொண்டது.


கணக்கெடுப்பு, திட்ட ஆதரவாளரான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (Andaman and Nicobar Islands Integrated Development Corporation (ANIIDCO)) வழங்கிய தளவமைப்பு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில், திட்டப் பகுதியின் எந்தப் பகுதியும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1Aவில் வரவில்லை என்று தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் முடிவு செய்தது. பின்னர் தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் உயர் அதிகாரம் கொண்ட குழுவிடம் சமர்ப்பித்த ரகசிய அறிக்கை, துறைமுக இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1A பகுதி அல்ல என்ற கூற்றுக்கு அடிப்படையாக அமைந்தது. செப்டம்பர் 2024-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் அளித்த பிரமாணப் பத்திரம் இதைத் தெளிவாகக் கூறுகிறது: தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் சமர்ப்பித்த அறிக்கையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IB பகுதியில் ஒரு துறைமுகம் கட்ட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1A பகுதியில் அனுமதிக்கப்படவில்லை என்று உயர்மட்ட குழு முடிவு செய்தது. எனவே, திட்டப் பகுதியின் எந்தப் பகுதியும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1A பகுதியின் கீழ் வரவில்லை என்று தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் முடிவு செய்தது.


இந்தக் காரணம் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் அறிக்கையோ அல்லது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் (National Green Tribunal (NGT)) குழு சமர்ப்பித்த விவரம் பொது வெளியில் கிடைக்கவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். சரணாலயத்தின் மறு அறிவிப்பு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1B ஆக தரமிறக்குதல் ஆகியவை முற்றிலும் வணிகத் திட்டங்களுக்காக செய்யப்பட்டிருந்தாலும், திட்டத்தின் சில பகுதிகள் பாதுகாப்பு தொடர்பானவை என்று வாதிட்டு, அமைச்சகம் இது போன்ற காரணங்களை வெளியிட பலமுறை மறுத்துவிட்டது.


கலாத்தியா விரிகுடா சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமானது


முக்கியமாக, ஐஸ்வர்யா பாட்டியின் மிகச் சமீபத்திய அறிக்கை, கலாதியா விரிகுடாவில் பவளப்பாறைகள், மெகாபோட் கூடுகள் உள்ளன மற்றும் கடற்கரையானது தோல் முதுகு ஆமைகளால் கூடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், உண்மையில் அமைச்சகம் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தது என்றும், இந்த இடத்தின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வனத்துறையின் சொந்த தரவுகளே உண்மையில் கலாதியா விரிகுடாவின் கடற்கரையில் 2024 கூடு கட்டும் பருவத்தில் 600-க்கும் மேற்பட்ட தோல் முதுகு ஆமை கூடுகள் இருந்ததைக் காட்டுகின்றன. இது பெரிய நிக்கோபாரில் பதிவு செய்யப்பட்டவற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையில்  ஒன்றாகும்.


நிலைமை இப்படி இருக்க, பாட்டி மற்றும் உயர் அதிகாரம் கொண்ட குழு/தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (National Centre for Sustainable Coastal Management (NCSCM)) அறிக்கை இரண்டும் உண்மையைச் சொல்கின்றன என்பது சாத்தியமில்லை. பாட்டியின் அறிக்கை மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பான ஒப்புதல்கள் உண்மையில் சரியானவை என்றால், கலாத்தியா விரிகுடா இன்னும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1Aவில் உள்ளது மற்றும் மிக அதிகபட்ச பாதுகாப்பிற்கு தகுதியானதாக கருதப்படலாம். இது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து வேறுவிதமாக வாதிடுவது குறித்து ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. இது அமைச்சகம் தன்னை குழப்பத்தில் ஆழ்த்துவது பற்றியது மட்டுமல்ல, அறிவியல் துல்லியம், சரியான நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் நேர்மை பற்றிய கடுமையான கேள்விகளையும் எழுப்புகிறது.


பங்கஜ் சேக்சாரியா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பற்றிய ஏழு புத்தகங்களின் ஆசிரியரும் ஆசிரியருமான ஆவார்.



Original article:

Share: