இந்திய வேளாண்மைத் துறையின் 2047-ஐ நோக்கிய பாதை - சூர்யபிரதா மொஹாபத்ரா, சஞ்சீப் போஹித்

 பல சவால்கள் உள்ளன. ஆனால், மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகளும் உள்ளன. 


இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திர தினம் 2047-ஆம் ஆண்டில் வரவிருக்கிறது. அதற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய தனிநபர் மொத்த தேசிய வருமானத்தில் (Gross National Income (GNI)) தற்போதைய அளவை விட ஆறு மடங்கு அதிகமாக அதிகரிக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்துவதில் வலுவான கவனம் செலுத்தி, வளர்ச்சிக்கான முழுமையான திட்டம் தேவைப்படுகிறது.


இந்திய விவசாயத்தை மேம்படுத்த, சுற்றுச்சூழலுக்கும் உற்பத்தித்திறனுக்கும் ஏற்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும். துல்லியமான விவசாயம், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் சொட்டுநீர் மற்றும் தெளிப்பான் அமைப்புகள் போன்ற நவீன நீர்ப்பாசனம் ஆகியவை முக்கிய அணுகுமுறைகள் ஆகும். உதாரணமாக, பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY)) 78 லட்சம் ஹெக்டேர்களில் நீர் பயன்பாட்டை மேம்படுத்தியுள்ளது மற்றும் 2021 முதல் 2026-ஆம் ஆண்டு வரை ₹93,068 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நீர் மேலாண்மையில் அரசாங்கத்தின் கவனத்தைக் காட்டுகிறது.


இந்தியாவின் விவசாயம் பருவநிலை மாற்றம், நில சேதம் மற்றும் சந்தை அணுகல் சிக்கல்கள் (market access issues) போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவி செய்கிறது. 


49.5 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், ₹1.45 லட்சம் கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் உள்ளதால், விவசாய அபாயங்களை நிர்வகிப்பதற்கான முக்கிய ஆதரவு இதுவாகும்.


2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை (Electronic National Agriculture Market (eNAM)), தற்போதுள்ள சந்தைகளை மின்னணு தளம் மூலம் இணைக்கிறது. செப்டம்பர் 2023-க்குள், 1,361 மண்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.  1.76 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர் மற்றும் ₹2.88 லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தக பரிமாற்றம் நடந்தது. இத்திட்டம் விவசாயிகள் சந்தைகளை எளிதில் அணுகவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் உதவுகிறது.


ஒரு ஏற்றத்தாழ்வு 


ஏறக்குறைய 46% மக்கள் விவசாயத்தில் வேலை செய்தாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே பங்களிக்கிறது. இது ஏற்றத்தாழ்வுகள்  இருப்பதை வெளிக் காட்டுகிறது. வளர்ச்சிப் போக்குகள் ஒரே மாதிரியாக இருந்தால், இந்த இடைவெளி மோசமாகிவிடும்: ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1991-92-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 6.1% வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3% மட்டுமே வளர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5.9% ஆகவும், விவசாய உற்பத்தி 3.6% ஆகவும் வளர்ந்தது. 


ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறைக்கு இந்த வளர்ச்சி விகிதம் போதாது. 2047-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 7%-8% ஆகக் குறையக்கூடும். இருப்பினும் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாவிட்டால், அது இன்னும் 30% தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்கக்கூடும். தற்போதைய வளர்ச்சி விகிதங்களை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது என்பதை இது காட்டுகிறது. 2023-24-ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  விவசாய வளர்ச்சி 7.6%-ஆக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வழக்கத்திற்கு மாறான மழை காரணமாக விவசாயத்தில் 0.7% மிகக் குறைந்த வளர்ச்சி இருந்தது.


இந்தியாவின் மக்கள்தொகை 2030-ல் 1.5 பில்லியனாகவும், 2040-ல் 1.59 பில்லியனாகவும் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் (United Nations) சபை கணித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மிக முக்கியமானதாக இருக்கும். 0.85% மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தின் காரணமாக உணவுத் தேவை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.85% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் உண்மையான தனிநபர் வருமானம் 2011-12 முதல் 2021-22 வரை 41% அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2023-க்குப் பிறகு, செலவின நெகிழ்ச்சித்தன்மை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தனிநபர் செலவினத்தில் 5% அதிகரிப்பு தேவையின் 2% வளர்ச்சியுடன் தொடர்புடையது. இறைச்சி தேவை 5.42 சதவீதமும், அரிசி தேவை 0.34 சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, உணவு மற்றும் உர மானியங்களை குறைப்பதும், சேமிப்பை விவசாய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்துவதும் முக்கியம்.


 சில முயற்சிகள் 


நிலையான விவசாய வளர்ச்சியை மேம்படுத்த பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2019-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)), விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 மூன்று தவணைகளில் வழங்குகிறது. இந்த திட்டம் 11.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது.  மற்றொரு முக்கிய திட்டம்  மண் வள அட்டை (Soil Health Card (SHC)) திட்டம், மண்ணின் ஊட்டச்சத்து பயன்பாட்டை மேம்படுத்துவதையும், விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


23-கோடிக்கும் அதிகமான  மண் வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மண் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த முக்கிய நுண்ணறிவுகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அரசாங்கம் 2023-ஆம் ஆண்டில் சர்வதேச சிறுதானியங்கள் (International Year of Millets) ஆண்டை ஊக்குவித்தது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சத்தான சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது.


வேளாண் உள்கட்டமைப்பு நிதி, ₹1 லட்சம் கோடி நிதி நிதியுதவியுடன், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் உதவுகிறது. 


மூன்று ஆண்டுகளுக்குள், வேளாண் உள்கட்டமைப்பு துறையில் ரூ.30,030 கோடி திரட்டும் 38,326 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் 5.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நல்ல விலையின் காரணமாக விவசாயிகளின் வருமானத்தை 20%-25% அதிகரித்துள்ளது.


கூடுதலாக, கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் களஆய்வு மற்றும் வரைபடமிடல்  (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas (SVAMITVA)) முன்முயற்சி கிராமப்புறங்களில் வெளிப்படையான சொத்து உரிமையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2023-ல் 1.6 கோடிக்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு, நிலப் பாதுகாப்பை மேம்படுத்தி, விவசாயிகள் கடன் பெற உதவுகின்றன.

 

ராஜதந்திர (Strategic planning) திட்டமிடல் 


2047 வரையிலான விவசாயத்திற்கான அரசாங்கத்தின் திட்டம் பல முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது: 2047-48-ல், உணவு தானிய தேவை 402 மில்லியன் டன்கள் முதல் 437 மில்லியன் டன்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த தேவையை விட உற்பத்தி 10%-13% அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவையை நிலையான முறையில் பூர்த்தி செய்ய, விவசாய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் கொள்கைகளில் பெரிய முதலீடுகள் தேவைப்படுகின்றன, பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்காக ₹20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாய கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.


இருப்பினும், இந்த தேவையை நிலையான முறையில் பூர்த்தி செய்ய, விவசாய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் அவசியம். 

2024-25-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், இலக்கு விவசாயக் கடனுக்காக ₹20 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் வேளாண் நிதியைத் அறிமுகப்படுத்துகிறது. இது விவசாய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவைக் காட்டுகிறது.



2047-ஆம் ஆண்டுக்கான பாதை இந்திய வேளாண்மைத் துறைக்கு சவால்களையும் வாய்ப்புகளையும் அளிக்கிறது. நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், புத்திசாலித்தனமான உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலமும், இந்தியா விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை (sustainable development) அடையவும் முடியும்.


சௌர்யபிரதா மொஹாபத்ரா மற்றும் சஞ்சிப் போஹித், புது தில்லியின் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி குழுவில் (National Council of Applied Economic Research (NCAER)) உள்ளனர்.



Original article:

Share:

இந்திய விண்வெளித் திட்டத்தில் ஒரு மைல்கல் -எம்.ரவிச்சந்திரன்

 இந்திய விண்வெளித் திட்டமானது இந்தியாவின் புவி அறிவியல் சேவைகளை மேம்படுத்துவதற்கான பரந்த ஆற்றலைக் கொண்டுள்ளது.


இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை (National Space Day) ஆகஸ்ட் 23, 2024 அன்று கொண்டாடுகிறது.  இது சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதைக் குறிக்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் கணிசமாக வளர்ந்துள்ளது. பல செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுதல் வாகனங்கள் நாட்டிற்குள் உருவாக்கப்பட்டு ஏவப்பட்டுள்ளன. 

புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) இந்தியாவில் பல்வேறு பூமி அமைப்பு தொடர்பான சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளில் விவசாயிகள் மற்றும் குடிமக்களுக்கான தினசரி வானிலை அறிவிப்புகள், கனமழை, சூறாவளி மற்றும் சுனாமி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு கடல் நிலை மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த பயனுள்ள ஆலோசனைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சேவைகள் இந்தியாவின் விண்வெளி திட்டத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. 

 

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், பத்ம விபூஷண் விருதைப் பெற்றவருமான விக்ரம் சாராபாய், விண்வெளி தொழில்நுட்பத்தை தேசிய வளர்ச்சி மற்றும் குடிமக்கள் நலனுக்காக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருந்தார். மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்திய அரசின் கீழ் செயல்படும் அறிவியலுக்கான சேவை நிறுவனமாகும். இது பூமியின் ஐந்து பகுதிகளான, வளிமண்டலம் (காற்று), நீர்க்கோளம் (பெருங்கடல்கள்), பாறைக்கோளம் (நிலம்), தாழ்வெப்பநிலைக் கோளம் (cryosphere) ஆர்க்டிக், அண்டார்டிக் மற்றும் இமயமலை பனிப்பாறைகளை கண்காணித்து ஆய்வு செய்கிறது. 


இந்த அமைப்பின் நோக்கம், தரவு சேகரித்தல்   மற்றும் அவற்றை  பகுப்பாய்வுடன் இணைந்து, வானிலை, காலநிலை, கடல், கடற்கரைகள் மற்றும் பூகம்பங்கள் தொடர்பான சூழ்நிலைகளில் எச்சரிக்கை  வழங்குவதாகும். துருவ அறிவியல் மற்றும் ஆழ்கடல் போன்ற லட்சியத் திட்டங்களை மேற்கொள்வதற்கும், அவற்றின் மூலம் அறிவியல் அறிவை விரிவுபடுத்துவதற்கு புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) செயல்படுகிறது. புவி அறிவியல் அமைச்சகம் (MoES) வழங்கும் தரவு மற்றும் சேவைகள் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில்  பேரிடர் மேலாண்மைக்கு இன்றியமையாதவை ஆகும். 


விரிவடையும் பங்களிப்புகள் 


இந்தியாவில் புவி அமைப்பு அறிவியல் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் இந்திய விண்வெளிப் பணியின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. 

முன்னாள் பெருங்கடல் மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்பட்ட புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES))  60 ஆண்டுகளுக்கு மேலாக செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி வருகிறது. இந்தத் தரவு இப்போது முன்னெப்போதையும் விட, அதன் நடவடிக்கைகளில் மிகவும் விரிவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வளிமண்டல மற்றும் துருவ அறிவியலை விரிவுபடுத்துவதற்கான புவி அறிவியல் அமைச்சகம்  மேற்கொள்ளும் எதிர்காலத் திட்டங்களுக்கு செயற்கைக்கோள் தரவு அவசியம். இயற்கை நிகழ்வுகளின் துல்லியமான கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் கணிப்பு ஆகியவற்றிற்கான முக்கிய தரவுகளை செயற்கைக்கோள்கள் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்குகிறது. 


விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தவும் இந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார உறுதித்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஒரு நாடாக, இயற்கை பேரழிவுகள் குறித்த வெறும் எச்சரிக்கைகளை வழங்குவதில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் இது. அறிவியலும் மற்றும் சேவைகள் இப்போது பேரழிவுகளின் விளைவுகளைத் தணித்தல் மற்றும் அவற்றைத் எதிர்கொள்ளுதல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.


புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES))  அதன் ஒட்டுமொத்த பணிக்காக பல உலகளாவிய மற்றும் இந்திய செயற்கைக்கோள்களிலிருந்து தரவைப் பயன்படுத்துகிறது. இந்தத் தரவு முதன்மையாக அதன் ஆறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. அவை,


  1. இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD))

  2. பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National  Centre for Ocean Information Services (INCOIS))

  3. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM))

  4. நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF))

  5. கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Coastal Research (NCCR))

  6. துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Polar and Ocean Research (NCPOR)). 


இந்த தரவுகள் அனைத்தும் வானிலை, காலநிலை மற்றும் கடல் நிலையை கண்காணிக்க உதவுகிறது. மேலும், ஆலோசனைகள், எச்சரிக்கைகள் போன்றவற்றையும் வெளியிடுகிறது. எடுத்துக்காட்டாக, சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள், கடலில் இழந்த பொருட்கள், கடல் மாசுபாடு (பாசிக்கள் மற்றும் எண்ணெய் கசிவு உட்பட), கடலோர அரிப்பு, கரையோர மாற்றங்கள், கடலோர உயிர் புவி வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், துருவப் பகுதிகள் மற்றும் இமயமலை பனிப்பாறைகள் போன்றவை) பற்றிய ஆலோசனைகளை வழங்க தரவு பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவைகள் விவசாயம், கப்பல் போக்குவரத்து, மீன்வளம் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற துறைகளுக்கு பயனளிக்கின்றன. 


பூமியின் வளிமண்டலம், பெருங்கடல்கள் மற்றும் மேற்பரப்பைக் கண்காணிக்கவும் புரிந்துகொள்ளவும் தரவை வழங்கும் பூமி கண்காணிப்புகளுக்கு செயற்கைக்கோள்கள் அவசியம். இந்தியாவின் வானிலை ஆய்வுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் (ISRO) பிப்ரவரி 2024 இல் தொடங்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள், ஆகஸ்ட் 16, 2024 அன்று, இஸ்ரோ சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்-D3 ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-08) விண்ணில் செலுத்தியது. 


இந்த செயற்கைக்கோள் இயற்கை பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்காணிப்பதிலும், இந்தியாவின் காலநிலை ஆய்வுகள் மற்றும் கடலியல் ஆராய்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். ஆகஸ்ட் 6, 2024 அன்று, சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வரவிருக்கும் முதல் தேசிய விண்வெளி தினத்தை (ஆகஸ்ட் 23, 2024) புவி அறிவியல் அமைச்சகம் (MoES), இஸ்ரோவின் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National  Centre for Ocean Information Services (INCOIS)) உடன் இணைந்து ஹைதராபாத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்தியது.



கடல் திட்டம்


கடல் கண்காணிப்பு மற்றும் காலநிலை மாற்ற ஆலோசனை சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் ஆழ்கடல் பணியின் முக்கிய பகுதி, செயற்கைக்கோள் தரவை பெரிதும் நம்பியுள்ளது. கடல் மட்ட உயர்வு, சூறாவளிகள், புயல் எழுச்சிகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற காலநிலை மாறிகளின் நீண்டகால கணிப்புகளை உருவாக்கவும், இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் அவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்யவும் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National  Centre for Ocean Information Services (INCOIS))  விஞ்ஞானிகள் இந்தத் தரவைப் பயன்படுத்துவார்கள். துருவ பனி மற்றும் இமயமலை பனிப்பாறைகளை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதும் விரிவுபடுத்தப்படும். 


ஏனெனில், இவை கடல் மட்ட உயர்வு மற்றும் உலகளாவிய காலநிலை சுழற்சிகளில் முக்கிய காரணிகளாகும். துருவ மற்றும் வெப்பமண்டல பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் படிப்பதற்கான முன்கணிப்பு மாதிரிகளின் துல்லியத்தை மேம்படுத்தவும், துருவப் பகுதிகளில் பாதுகாப்பான கப்பல் மற்றும் துருவ நடவடிக்கைகளுக்கான நிகழ்நேர கடல் பனி கண்காணிப்பை எளிதாக்கவும் பூமி கண்காணிப்பு தரவு உதவும். 


செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்க புவி அறிவியல் அமைச்சகம் (MoES) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒத்துழைப்பு முக்கியமானது.  இந்த ஒத்துழைப்பு இயற்கைப் பேரழிவுகளுக்கு திறம்பட பதிலளிக்கவும், மதிப்புமிக்க பூமி அறிவியல் தொடர்பான சேவைகளை வழங்கவும் நாட்டை அனுமதிக்கிறது. ஒடிசாவில் ஒரு புதிய வளிமண்டல மற்றும் விண்வெளி ஆராய்ச்சி வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது பருவமழை மற்றும் இடியுடன் கூடிய மழை கணிப்புகளை மேம்படுத்த உதவும். 


இந்த வசதி  புவி அறிவியல் அமைச்சகம் (MoES), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். 

சுனாமி மிதவைகளுடன் விரைவான இருவழி தொடர்புக்கு ஏதுவாக டிரான்ஸ்பாண்டர்களுடன் (Transponder) கூடிய அதிநவீன ஜிசாட்-6 (GSAT-6) செயற்கைக்கோள்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்சாட் நான்காம் தலைமுறை, ரிசாட் -1பி (RISAT-1B) மற்றும் ஓசியன்சாட் -3 ஏ (Oceansat-3A) செயற்கைக்கோள்களை இந்தியா விரைவில் விண்ணில் செலுத்த உள்ளது. 


சிறந்த வானிலை முன்னறிவிப்புக்காக, குறிப்பாக கடுமையான வானிலை நிகழ்வுகளுக்காக கூடுதல் விவரங்கள் அமைக்கப்படும். மேலும், துல்லியமான ஆலோசனைகளுக்காக தற்போதுள்ள சென்சார்கள் (sensors) மேம்படுத்தப்படும். 


உள்நாட்டிலேயே செயற்கைக்கோள்களை உருவாக்குதல் மற்றும் விண்ணில் செலுத்துதல் ஆகியவற்றில் தற்போது தனி கவனம் செலுத்தப்படுவது, தற்போதுள்ள புவியின் செயல்முறைகள் குறித்த அறிவியல் புரிதலை விரிவுபடுத்தும். 21-ம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். 


2047-ஆம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரத்' (Viksit Bharat’) என்ற பிரதமரின் கனவை அடைய புவி அறிவியல் அமைச்சகம் (MoES) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். மிகவும் மேம்பட்ட செயற்கைக்கோள் சென்சார்களை இணைத்தல், தெளிவுத்திறனை மேம்படுத்துதல், தரவு செயலாக்கத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் செயற்கைக்கோள் தரவை நில அடிப்படையிலான ஆய்வுகளுடன் நிகழ்நேர ஒருங்கிணைப்பை இணைத்தல் ஆகியவை பெரிய மாற்றங்களாக இருக்கலாம். 


செயற்கைக்கோள்கள் மற்றும் சேவைகள் 


புவி அறிவியல் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.




இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (Indian National Satellite System( INSAT))   


வானிலை ஆய்வுகளுக்கான மேம்பட்ட இமேஜிங் மற்றும் ஒலி சென்சார்களைக் கொண்ட பல்நோக்கு புவிநிலையான செயற்கைக் கோள்களைக் கொண்டது.  வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மேகமூட்டம் உள்ளிட்ட நிகழ்நேரத்தில் வானிலை நிலைமைகளைக் கண்காணித்தல். முக்கியமாக சூறாவளிகள், பருவமழை, மழைப்பொழிவு மற்றும் புயல் உருவாக்கம் ஆகியவற்றை கணிக்க பயன்படுகிறது. 



புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் (Earth observation satellites (OCEANSAT))


கடல் கண்காணிப்புகளுக்கான பல்நோக்கு புவிநிலையான செயற்கைக்கோள்கள் அமைப்புகளைக் கொண்டது.   கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் குளோரோபில் நிறம் உள்ளிட்ட கடல் நிலையை நிகழ்நேரத்தில் கண்காணித்தல். 


ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (Radar Imaging Satellite (RISAT))   


பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட ரேடார் படங்களுக்கான அனைத்து வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்களை கொண்டது.   மண்ணின் ஈரப்பதத்தை கண்காணித்தல் மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. 


வரைபட செயற்கைக்கோள் (Cartosat) 


பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன், பஞ்சரோமாடிக் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜிங்கிற்கான தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்களை கொண்டது. நில மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் வரைபடமாக்குதல், வெள்ளம் மற்றும் கரையோர மாற்றங்களுக்கான வரைபடங்களை உருவாக்குதல் பணிகளை மேற்கொள்கிறது.



சாரல் (SARAL)   


இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம் இடையேயான ஒரு ஒத்துழைப்பு பணி, தரவு சேகரிப்புக்காக செயல்படுகிறது.  கடல் மட்ட உயர்வு, கடல் சுழற்சி மற்றும் அலை உயரங்களை கண்காணித்தல், குறிப்பாக புயல் எழுச்சிகள் மற்றும் சுனாமிகளை முன்னறிவிப்பு பணிகளை மேற்கொள்கிறது.


ஸ்கேட்டரோமீட்டர் செயற்கைக்கோள்-1 (SCATSAT-1)


கடல் மற்றும் வானிலை ஆராய்ச்சிக்காக செயல்படுகிறது.   சூறாவளிகள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளைக் கண்காணித்தல் மற்றும் கணித்தல், வானிலை முன்னறிவிப்புக்கான மாதிரிகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை ஆராய்ச்சிக்கான தரவை வழங்குதல், குறிப்பாக காற்று திசையன் தரவு வடிவங்கள் (வேகம் மற்றும் திசை) மற்றும் கடல் நீரோட்டங்கள் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுகிறது. 


எம்.ரவிச்சந்திரன், செயலாளர், மத்திய புவி அறிவியல் அமைச்சகம்.



Original article:

Share:

புதிய தொழில் கொள்கைக்கான வாதம் -ஆதித்யா சின்ஹா

 நீடித்த பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கும் மற்றும் நாட்டை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் ஒரு கொள்கை இந்தியாவுக்கு தேவை.


தொழில்துறை கொள்கை பெரும்பாலும் மிக அதிகமான மற்றும் மிகக் குறைந்த அரசாங்க தலையீட்டிற்கு இடையில் சமநிலைப்படுத்துகிறது. அதிகப்படியான கட்டுப்பாடு சந்தைகளை சிதைக்கும், போட்டியைக் குறைக்கும், திறமையின்மைகளை உருவாக்கும் மற்றும் பொருளாதாரத்தை மெதுவாகவும் அதிகாரத்துவமாகவும் மாற்றும். மறுபுறம், ஒரு அதிகாரத்துவ அணுகுமுறை சந்தை தோல்விகளுக்கு வழிவகுக்கும். மேலும், இது பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. சந்தை சிக்கல்களை சரிசெய்வதற்கும், பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்காமல், வள ஒதுக்கீட்டை வழிநடத்துவதற்கும் போதுமான ஒழுங்குமுறையை வழங்குவதே குறிக்கோள்.


சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தொழில்துறைக் கொள்கை ஒரு அதிகாரத்துவ அமைப்பை உருவாக்கியது. இது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. 

1951-ஆம் ஆண்டின் தொழில்துறை (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Industries (Development and Regulation) Act) "உரிமம்-அனுமதி" முறையை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு தொழில்துறை முடிவுக்கும் அரசாங்க ஒப்புதல் தேவைப்பட்டது. இது லட்சியத்தை அதிகாரத்துவ சவாலாக மாற்றியது. 1969-ஆம் ஆண்டின் முற்றுரிமை மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் (Monopolistic and Restrictive Trade Practices Act (MRTP)) சட்டம் மற்றும் 1973-ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் (Foreign Exchange Regulation Act) ஆகியவை வளர்ச்சியை மேலும் கட்டுப்படுத்தி, இந்தியத் தொழில்களை உலகப் போட்டியிலிருந்து தனிமைப்படுத்தின. 


வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் நோக்கம் கொண்ட இந்தக் கொள்கைகள், சந்தையில் போட்டியிடுவதற்குப் பதிலாக புதுமைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வழிநடத்துவதில் கவனம் செலுத்தும் வணிக முயற்சிகளைத் திணறடித்தன. அதிகப்படியான கட்டுப்பாடு மற்றும் திறமையின்மையின் இந்த வரலாறு இந்தியாவில் தொழில்துறை கொள்கைக்கு எதிர்மறையான  நிலையை அளித்தது. இது பெரும்பாலும் திறமையின்மை மற்றும் பாதுகாப்புவாதத்தின் ஆதாரமாகக் கருதப்படுகிறது.


சமீபத்தில், தொழில்துறை கொள்கை ஒரு காலகட்ட வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளது. சந்தை உந்துதல் அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்ப இடையூறு, பொருளாதார தேக்கம் மற்றும் புவிசார் அரசியல் போட்டி போன்ற சவால்களை உலகளாவிய மறுபரிசீலனை செய்வதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகிறது, குறிப்பாக சீனாவுடன் கருத்தொற்றுமையால் ஏமாற்றமடைந்துள்ள வளரும் நாடுகள், இப்போது தங்கள் பொருளாதாரங்களை பன்முகப்படுத்தவும் மேம்படுத்தவும் தீவிர அரசாங்கத் தலையீட்டை நாடுகின்றன. முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்கள் சரியும் உற்பத்தித்துறை வேலைகள் மற்றும் நிதிய நெருக்கடியின் பின்விளைவுகளைக் கையாள்கின்றன. 


சீனாவின் விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் போட்டி பற்றிய நிலைகள் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் வலுவான தொழில்துறை உத்திகள் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளை பரிசீலிக்க வழிவகுத்துள்ளன. ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப மாற்றங்களும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் ஈடுபாட்டின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.


தொழில் கொள்கை என்றால் என்ன? புதிய  தொழில்துறை கொள்கையின் பொருளாதாரம் (2023) படி, தொழில்துறைக் கொள்கைகள் குறிப்பிட்ட பொது இலக்குகளை அடைய பொருளாதார நடவடிக்கைகளின் கலவையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்குகள் பொதுவாக புதுமை, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை உள்ளடக்குகின்றன. காலநிலை மாற்றத்தை எளிதாக்குதல், தொழிலாளர் சந்தை விளைவுகளை மேம்படுத்துதல், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் ஏற்றுமதித் திறனை விரிவுபடுத்துதல் போன்ற இலக்குகளும் அவற்றில் அடங்கும். தொழில்துறை கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் அதன் தேர்ந்தெடுக்கும் தன்மை ஆகும். அங்கு கொள்கை வகுப்பாளர்கள் கட்டமைப்பு மாற்றத்தை இயக்க சில துறைகள் அல்லது தொழில்களுக்கு மற்றவர்களைவிட முன்னுரிமை அளிக்க தேர்வு செய்கிறார்கள், இது சில துறைகளுக்கு குறைந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அர்த்தம்.


உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டம் பெரும்பாலும் ஒரு தொழில்துறை கொள்கையாக கருதப்படுகிறது.  இது சில துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க நிதி சலுகைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்குத் தேவையான பரந்த கட்டமைப்பு சவால்களை இது முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை.


பல காரணங்களுக்காக இந்தியாவுக்கு ஒரு தொழில்துறை கொள்கை தேவைப்படுகிறது. முதல் காரணம் தெளிவான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆர்தர் லூயிஸ் மற்றும் ஆல்பர்ட் ஓ. ஹிர்ஷ்மேன் போன்ற அமைப்பியல் பொருளியலாளர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயத்திலிருந்து உற்பத்தி மற்றும் சேவைக்கு மாறுவது தேவை என்று வாதிடுகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளது, இது ஒரு பெரிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது, ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்து வரும் பங்கை பங்களிக்கிறது.


ஏன் புதிய முறைக்கு செல்ல வேண்டும்?


நன்கு வடிவமைக்கப்பட்ட தொழில்துறை கொள்கை கட்டமைப்பு மாற்றத்திற்கு வழிகாட்டும் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அதிக உற்பத்தி துறைகளை நோக்கி மாற உதவும். இந்தியாவுக்கு புதிய தொழில் கொள்கை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:


முதலாவதாக, ரோமர் (1990) மற்றும் லூகாஸ் (1988) ஆகியோர் அரசாங்கத்தின் தலையீடு புதுமை மற்றும் அறிவு சிதறல்களை ஊக்குவிக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. இது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.


இரண்டாவது, ஸ்டிக்லிட்ஸ் மற்றும் கிரீன்வால்ட் (2014)  "ஒரு கற்றல் சமூகத்தை உருவாக்குதல்" (“Creating a Learning Society”) கற்றல் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவை அரசாங்க ஆதரவு தேவைப்படும் செயல்முறைகள் என்று விளக்குகின்றன. ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் மின்னணு மற்றும் வாகன உற்பத்தி போன்ற துறைகளில் அரசின் தலையீடு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு உதவியது. உற்பத்தித்திறன் வளர்ச்சியை அதிகரிக்க உதவியது என்பதை அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது.


மூன்றாவதாக, ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் மற்றும் ஜார்ஜ் அக்கெர்லோஃப் ஆகியோர் தகவல் சமச்சீரற்ற தன்மைகள், வெளிப்புறங்கள் மற்றும் பொதுப் பொருட்கள் பிரச்சினை காரணமாக வள ஒதுக்கீட்டில் உள்ள திறமையின்மைகளைப் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Rearch & Development) மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்த பிரச்சினைகள் தெளிவாகத் தெரிகின்றன. 


தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த பகுதிகளில் குறைந்த முதலீடு செய்கின்றன. ஏனெனில், அவை அவற்றின் முதலீடுகளிலிருந்து முழுமையாக பயனடைய முடியாது. தகவல் சமச்சீரற்ற தன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறைந்த முதலீட்டிற்கு வழிவகுக்கிறது. மேலும், உள்கட்டமைப்பின் விலக்கப்படாத தன்மை தனியார்துறை ஈடுபாட்டைத் தடுக்கிறது. அத்தியாவசிய சேவைகளில் இடைவெளிகளை உருவாக்குகிறது. சந்தை சார்ந்த தொழில்துறை கொள்கை தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும், சிறந்த வணிக சூழலை உருவாக்குவதன் மூலமும் இந்த திறமையின்மைகளை குறிவைக்க முடியும்.


நான்காவதாக, சுறுசுறுப்பான தொழில்துறை கொள்கைகளைக் கொண்ட நாடுகள் பெரும்பாலும் அதிக மொத்த காரணி உற்பத்தித்திறன் வளர்ச்சியைக் காண்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, உயர் தொழில்நுட்ப தொழில்களில் சீனாவின் முதலீடுகள் குறிப்பிடத்தக்க உற்பத்தித்திறன் ஆதாயங்களுக்கு வழிவகுத்துள்ளன. முன்கூட்டிய தொழில்மயமாக்கல் பற்றிய டானி ரோட்ரிக்கின் விவாதம், வளரும் நாடுகள் பெரும்பாலும் மிக முன்கூட்டியே தொழில்மயமாக்கத் தொடங்குகின்றன. இது உற்பத்தியிலிருந்து உற்பத்தித்திறன் ஆதாயங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான அவற்றின் திறனைக் கட்டுப்படுத்துகிறது, இதன் விளைவாக குறைந்த வளர்ச்சி மற்றும் குறைவான வேலைகள் ஏற்படுகின்றன.


ஐந்தாவதாக, ஆம்ஸ்டன் (1989) மற்றும் ஜான்சன் (1982) ஆகியோரின் வளர்ச்சி நிலை கோட்பாடு கிழக்கு ஆசியாவில் விரைவான தொழில்மயமாக்கலை தொழில்துறை கொள்கைகள் எவ்வாறு உந்தின என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை வழங்குகிறது. செயலில் அரசு தலையீடு காலங்களில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் உற்பத்தி மதிப்பு கூட்டல் ஆகியவற்றை அவர்களின் தரவு காட்டுகிறது.


ஆறாவது, எட்வர்ட் லுட்வாக் விவாதித்தபடி, புவிசார் பொருளாதாரம், பொருளாதார கருவிகள் புவிசார் அரசியல் இலக்குகளை எவ்வாறு அடைய முடியும் என்பதைப் பார்க்கிறது. பல்துருவ உலகில் தேசிய பாதுகாப்புக்கு பொருளாதார வலிமை முக்கியமானது. இந்தியாவின் தொழில்துறை திறன்கள், குறிப்பாக பாதுகாப்பு உற்பத்தி, தொலைத்தொடர்பு மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில், சுயாட்சியைப் பேணுவதற்கும், வெளிநாட்டு சக்திகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் இன்றியமையாதவை. இந்த துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு தொழில்துறை கொள்கை, பொருளாதார வளர்ச்சியை தேசிய பாதுகாப்பு நோக்கங்களுடன் சீரமைக்க முடியும்.


இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு விவசாயத்தை நோக்கி சாய்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சியடைந்த பங்களிப்பு இருந்தபோதிலும் விகிதாசாரமற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது



Original article:

Share:

வங்கதேச அரசியல் நெருக்கடி, அரசியல் அபாயங்களை திறம்பட நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. -சஞ்சய பாரு

 வெளிநாட்டு முதலீடுகளை பாதுகாக்க, உள்நாட்டு அரசியல் மற்றும் ஆர்வமுள்ள நாடுகளின் கொள்கைகளில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது.


வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் அங்கு வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள், மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் போது இந்திய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அரசியல் அபாயங்களை நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர். இந்திய வணிகங்கள் பெரும்பாலும், தொலைதூர இடங்களை விட தெற்காசியாவில் நாட்டிற்கு அருகில் அரசியல் அபாயங்களை எதிர்கொள்கின்றன.


2004-ஆம் ஆண்டில், டாடா குழுமம் பங்களாதேஷின் எரிசக்தி துறையில் $3 பில்லியன் முதலீடு செய்ய முயற்சித்தது. ஆனால், அரசியல் பிரச்சனைகளால் திட்டத்தை கைவிட்டது. 2009-ஆம் ஆண்டில், டாபரின் தயாரிப்புகள் நேபாளத்தில் அரசியல் தாக்குதலை எதிர்கொண்டது. 2013-ல், மாலத்தீவின் புதிய அரசாங்கம் GMR குழுவிற்கு முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது. ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா அரசியல் அழுத்தத்தை கொடுக்கிறது என்று அதிகாரிகள் கூறியதால் அதானி குழுமம் இலங்கையில் பிரச்சனைகளை எதிர்கொண்டது.


பிரதமர் நரேந்திர மோடி இந்திய நிறுவனங்களை வெளிநாடுகளில் முதலீடு செய்து உலக அளவில் முன்னணி நிறுவனங்களாக மாற ஊக்குவித்து வருகிறார். உலகச் சந்தைகளை அடையவும் உள்நாட்டில் உள்ள அபாயங்களைக் குறைக்கவும் பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் முதலீடு செய்து வருகின்றன. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள் மற்ற நாடுகளில் உள்ள அரசியல் அபாயங்களை மதிப்பீடு செய்யவில்லை. மாறாக பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்திய அரசாங்கம் உதவும் என்ற நம்பிக்கையில் உள்ளது.


வெளிநாட்டில் உள்ள அரசியல் அபாயங்களைக் கையாளுவதற்கு உள்நாட்டில் அரசாங்கத்தை நம்புவது ஆபத்தானதாகும். பாதுகாப்பு உறுதியளித்த தலைவர் மாற்றப்பட்டால் அல்லது அவர்களின் வார்த்தையைக் காப்பாற்ற முடியாவிட்டால் என்ன செய்வது? அத்தகைய பாதுகாப்பின் கீழ் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடிவு செய்யும் போது, ​​நிறுவன வாரியங்கள் இந்த அபாயத்தை கருத்தில் கொள்கின்றனவா?


இந்தியாவில் உள்ள ஒரு உலகளாவிய நிறுவனம் உள்நாட்டுச் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் சிக்கல்களை எதிர்கொண்டபோது, நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. கொள்கை மாற்றத்திற்குப் பொறுப்பான புதிய அமைச்சரைச் சந்திக்குமாறு சிலர் நிறுவனத்தின் உலகளாவிய தலைவருக்கு ஆலோசனை வழங்கினர். அத்தகைய அபாயங்களை நிர்வகிப்பது, யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மற்றும் நன்கு அறிந்திருப்பது ஆகியவைமிகவும் முக்கியமானதாகும்.


வளர்ந்த நாடுகளில், வணிகங்கள் பெரும்பாலும் நிலையான கொள்கைகளை நம்பியுள்ளன மற்றும் அரசியல் ஆபத்து பற்றி குறைவாக கவலைப்படுகின்றன. இருப்பினும், இந்திய நிறுவனங்கள் இன்னும் அங்கு அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, லட்சுமி மிட்டல் சிமெண்ட் நிறுவனமான ஆர்செலரை வாங்குவதற்கு ஐரோப்பிய அரசியலில் செல்ல வேண்டியிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளையும் செல்வத்தையும் உருவாக்குகிறது என்பதை அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம்  காட்ட வேண்டியிருந்தது.


இந்திய நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் அரசியல் அபாயங்களை எதிர்கொள்கின்றன. வெளிநாட்டில் உள்ள முக்கியமான நபர்களுடன் நெட்வொர்க்கிங் செய்வது, அரசியல் பாதுகாப்பு பெறுவது அல்லது இந்திய தூதரிடம் ஆலோசனை பெறுவது போன்றவை. இந்திய வணிகத் தலைவர்கள் இந்தியாவில் உள்ள அனுபவத்தின் காரணமாக வெளிநாடுகளில் அரசியல் பாதுகாப்பைப் பெறுவதில் திறமையானவர்கள். 


இராஜதந்திரிகள் பெரும்பாலும் தாங்கள் இடுகையிடப்பட்ட நாடுகளில் முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களுடன் வேலை தேடுகிறார்கள். இருப்பினும், இந்தியாவில் அரசியல் ஆபத்துக் காப்பீட்டுக்கான தேவை குறைவாக உள்ளது. எனவே இந்த ஆலோசனைப் பகுதி பெரிதாக வளர்ச்சியடையவில்லை.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச இராஜதந்திர ஆய்வு நிறுவனத்தில் புவிசார் பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரம் பற்றிய திட்டத்தில் (International Institute of Strategic Studies) பணிபுரிந்தபோது, ​​வெளிநாட்டில் உள்ள அரசியல் அபாயங்களை இந்திய வணிகங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றன என்பதைப் பார்த்தேன். பல தலைவர்கள் முறையான இடர் மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்துவதைவிட நாட்டில் உள்ள முக்கியமான நபர்களுடன் தனிப்பட்ட உறவுகளை உருவாக்க விரும்புவதை நான் கண்டேன். 


கடந்த பத்தாண்டுகளில், பல இந்திய வணிகக் குழுக்கள் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அரசியலைப் படிக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளன. இருப்பினும், இந்த ஆய்வுகள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளில் குறிப்பிட்ட பொருளாதார மற்றும் அரசியல் அபாயங்களைக் காட்டிலும் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் இருதரப்பு உறவுகளில் கவனம் செலுத்துகின்றன.


இந்திய வணிகங்கள், அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி ஆய்வுத்தாள்கள் மற்றும் செய்தித்தாள் பத்திகளில் அடிக்கடி படிக்கின்றன. ஆனால், மற்ற நாடுகளில் உள்ள குறிப்பிட்ட அபாயங்கள் குறித்த சிறிய நடைமுறை ஆலோசனைகளையே பெறுகின்றன. அரசு மற்றும் வணிகத் தலைவர்கள் இருவரும் பெரும்பாலும் கல்வி ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று பார்க்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகளைப் படிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், விரிவான அரசியல் இடர் மதிப்பீடுகள் அரிதாகவே உள்ளன.


ஊடகங்கள், குறிப்பாக வெளிநாட்டு நிருபர்கள், வெளிநாட்டு அபாயங்கள் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குவதன் மூலம் கல்வி ஆராய்ச்சிக்கும் அரசாங்க ஆலோசனைக்கும் இடையிலான இடைவெளியை அடிக்கடி நிரப்புகின்றனர். வெளிநாட்டு நிருபர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் நிபுணர்களாகவும் அரசியல் இடர் மதிப்பீட்டில் உதவவும் முடியும். இருப்பினும், இந்தியாவில், சில ஊடக நிறுவனங்கள் வெளிநாட்டு நிருபர்களில் முதலீடு செய்கின்றன, இந்த முக்கியமான தகவல் ஆதாரத்தை கட்டுப்படுத்துகின்றன.


வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் வணிகங்கள், இந்திய தேர்தல்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கிய இந்திய ஊடகங்களை நம்பியிருந்தன, வெளிநாட்டு நிருபர்களைப் பின்தொடர்ந்தவர்களைக் காட்டிலும் குறைவான முடிவுகளுக்குத் தயாராக இல்லை. "கடினமான" வெளிநாட்டு நிருபர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் உள்நாட்டு அரசியலை சுதந்திரமாக செய்தியாக்கும் திறனைக் கட்டுப்படுத்தியது, இது தற்போதைய ஆளும் கட்சிக்கு எதிர்பாராத முடிவுகளுக்கு வழிவகுத்தது.


வெற்றிகரமான வெளிநாட்டு முதலீடுகளுக்கு, முக்கிய நாடுகளின் உள் அரசியல் மற்றும் கொள்கைகளில் பகுதி ஆய்வுகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சியை அரசாங்கமும் வணிகங்களும் ஆதரிக்க வேண்டும். சிந்தனைக் குழுக்கள் (think tanks) வெளியுறவுக் கொள்கையில் மட்டும் கவனம் செலுத்தாமல், தாங்கள் முதலீடு செய்யத் திட்டமிடும் நாடுகளின் உள்நாட்டு அரசியலைப் புரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.


ஷேக் ஹசீனா வங்கதேசத்தைவிட்டு வெளியேறுவதற்கு முந்தைய வாரங்களில் டாக்காவைப் பற்றி இந்திய ஊடகங்கள் முழுமையாகச் செய்தி வெளியிட்டிருந்தால், பல இந்திய நிறுவனங்களும் டெல்லியில் உள்ள அரசாங்கமும் நிகழ்வுகளின் திடீர் மாற்றத்திற்குத் தயாராக இருந்திருக்கும்.


கட்டுரையாளர் 1999-2001 வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (National Security Advisory Board of India)  உறுப்பினர், 2004-08-ல் இந்தியப் பிரதமரின் ஊடக ஆலோசகராகர்.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி (goods and service tax (GST)) விகிதத்தை சீரமைத்தல் குறித்து… -ஆஞ்சல் இதழ்

 அமைச்சர்கள் குழு (Group of Ministers (GoM)) உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளனர். செப்டம்பர் 9-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி ஆணையை கூட்டத்தில் விகிதங்களை சரிசெய்வது குறித்த தங்கள் யோசனைகளை முன்வைக்க இந்தத் தகவலைப் பயன்படுத்துவார்கள்.


சரக்கு மற்றும் சேவை வரியின் (goods and service tax (GST)) கீழ் விகித மாற்றங்கள் தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  முதல் முறையாக வியாழக்கிழமை கூடியது. தற்போதைய வரி விகிதங்களை மாற்ற வேண்டாம் என்று அவர்கள் கூறினர். இந்த சந்திப்பின் போது, ​​சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகைக்கான (life insurance premiums) சரக்கு மற்றும் சேவை வரிவிகிதங்களை குறைப்பது குறித்தும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சிக்கலை, பொருத்துதல் குழு (fitment committee) ஆய்வு செய்து வருகிறது.


அமைச்சர்கள் குழு பல்வேறு விவகாரங்களில் கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளது. இந்தத் தரவை மதிப்பாய்வு செய்த பிறகு, செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தில் வரி விகிதங்களைச் சரிசெய்வது குறித்த தங்கள் யோசனைகளை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் பிறகு அமைச்சர் குழு மீண்டும் செப்டம்பர் இறுதியில் கூடும். தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்ற சில உறுப்பினர்கள் விரும்பவில்லை என்று அமைச்சர்கள் குழுவை வழிநடத்தும் பீகாரின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறினார். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துள்ளனர் மற்றும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் மேலும் விவாதங்களை நடத்துவர்.


‘காப்பீட்டுக்கான ஜிஎஸ்டியை  (insurance goods and service tax) குறைப்பது குறித்து பேசினோம். ஆனால், இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சவுத்ரி கூறினார். பானங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்றவைகளுக்கு வரி குறைப்பு கோரிக்கைகளைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். இவை மறு ஆய்வு செய்யப்பட்டு, சில பொருத்துதல் குழுவுக்கு அனுப்பப்படும்.


சரக்கு மற்றும் சேவை வரி அடுக்குகள் இப்போது மாறாமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போதைய, சரக்கு மற்றும் சேவை வரியான 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்று மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் மதிப்பாய்வு செய்யும். சாத்தியமான கட்டணக் குறைப்பு பற்றி கேட்டபோது, ​​​​அவர்கள் அதைப் பற்றி மட்டுமே விவாதித்தோம், ஆனால், எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.


ஜூன் கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அடுத்த சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தில், பீகார் துணை முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழு அவர்களின் பணிகள் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ளவை பற்றிய புதுப்பிப்பை முன்வைக்கும் என்று கூறினார்.


சரக்கு மற்றும் சேவை வரியில் ஐந்து முக்கிய வரி விகிதங்கள் உள்ளன: பூஜ்யம், 5%, 12%, 18% மற்றும் 28%. 28% விகிதத்திற்கு மேல் ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 1% முதல் 290% வரை கூடுதல் இழப்பீடு வரி உள்ளது. இந்த விகிதங்களில் சிலவற்றை இணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் முறையான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.


மேற்கு வங்காளத்தின் நிதி அமைச்சர் பட்டாச்சார்யா உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகை மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கும் யோசனையை குறிப்பிட்டார். இதை பொருத்துதல் குழு (fitment committee) பரிசீலனை செய்யும். காப்பீடு மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது பற்றி சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக பைரே கவுடா குறிப்பிட்டார். 


ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த மாற்றத்தைக் கோரி நிதியமைச்சர் சீதாராமனுக்கு பானர்ஜி கடிதம் எழுதினார். ஜூலை 28-அன்று, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியும் சீதாராமனுக்கு கடிதம் எழுதினார், காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பது போன்றது என்று கடிதத்தில் குறிப்பிட்டார்.  சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன்பே காப்பீட்டுக் கட்டண தவணைத் தொகை மீதான வரிகள் இருந்ததாகவும், சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளித்தார்.


செப்டம்பர் 2021-ல் லக்னோவில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் அதன் 45-வது கூட்டத்தில் வருவாய் நிலைமை குறித்து ஆலோசித்தது, அதன் பிறகு கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் கீழ் விகிதத்தை பகுத்தறிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு ஜூன் 2022-ல் ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது, சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் மற்றும் தலைகீழ் வரி கட்டமைப்பை திருத்தம் செய்ய பரிந்துரைத்தது.


வரி விகிதங்களில் மாற்றங்களைப் பற்றி விவாதிக்கும் போது, ​​வருவாய் நடுநிலையை பராமரிப்பது ஒரு முக்கிய கவலையாகும். வருவாய் நடுநிலை (Revenue neutrality) என்பது அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயை நிலையானதாக வைத்திருப்பதாகும். ரிசர்வ் வங்கியின் ஆய்வில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் 15.3% வருவாய் நடுநிலை விகிதத்தை பரிந்துரைத்தாலும், சராசரி சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் மே 2017-ல் 14.4% ஆக இருந்தது மற்றும் செப்டம்பர் 2019-ல் 11.6% ஆக குறைந்துள்ளது.



Original article:

Share: