வெப்ப அலை என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 1. காலநிலை மாற்றம் பேரழிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்று வெப்ப அலை (heatwave), இது குறிப்பாக நம் நாட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தியா அடிக்கடி நிகழும், நீண்ட மற்றும் மிகவும் தீவிரமான வெப்ப அலைகளை எதிர்கொள்கிறது.


2. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) பேரிடர்கள் குறித்த பொதுக் கொள்கையைக் கையாளுகிறது. இது வெப்ப அலைகளை ஒரு தீவிர ஆபத்தாக வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) பொறுப்பேற்றுள்ளது.


3. பேராசிரியர் ஜேம்ஸ் ஹேன்சனின் பகுப்பாய்வின்படி, பாரிஸ் உச்சி மாநாடு தொழில்துறைக்கு முந்தைய நிலைகளைவிட 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக உலக வெப்பநிலை உயர்வை வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த இலக்கை அடைவது இப்போது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஜனவரி 2025-ம் ஆண்டில், உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. கடந்த 19 மாதங்களில் இது 18-வது முறையாக நடந்தது.


4. தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கம் பரந்த அளவில் உள்ளது. இது பொது சுகாதாரம், விவசாயம், எரிசக்தி வழங்கல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை பாதிக்கிறது. இதனால், 90 சதவீத இந்தியர்கள் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக, சுகாதார அமைப்புகள், கிராமப்புறங்களில் நெருக்கடியில் உள்ளன.


5. பெரும்பாலான பணியாளர்கள் வெளியில் வேலை செய்வதால் பொருளாதாரம் உற்பத்தித்திறன் இழப்புகளை (productivity losses) எதிர்கொள்கிறது. வெப்ப அழுத்தத்துடன் தொடர்புடைய உற்பத்தித்திறன் சரிவு காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 34 மில்லியன் வேலைகளை இழக்க நேரிடும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.


6. அதிக வெப்பநிலை ஆவியாவதை துரிதப்படுத்தி மற்றும் நீர் தேவையை அதிகரிக்கிறது. இது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நீர் வளங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உலக வள நிறுவனத்தின் (World Resources Institute (WRI)) படி, இந்தியாவின் 54% நிலங்கள் அதிக முதல் தீவிர நீர் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.


7. நிலத்தடி நீர் பயன்பாடு நீர் மட்டங்களைக் குறைத்துள்ளது. இதனால், தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் விநியோகம் அதிக விகிதத்தில் இல்லை. உலக மக்கள்தொகையில் இந்தியா 18 சதவீதத்தையும் அதன் நன்னீரில் 4 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளது.


8. வெப்ப அலைகள் இந்தியாவின் மின் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில், ஒரு முக்கிய பிரச்சினை அதிகரித்துவரும் தேவையின் பயன்பாடு ஆகும். வெப்ப அலைகளின் போது, ​​மக்கள் அதிக காற்றுச்சீரமைப்பிகள் (air conditioners) மற்றும் குளிரூட்டும் அமைப்புகளைப் (cooling systems) பயன்படுத்துகின்றனர். இது மின்சார நுகர்வு அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, தொழில்களுக்கான மின்சாரம் கிடைப்பது குறைகிறது. இது உற்பத்தித் துறைக்கு சவால்களை உருவாக்குகிறது.


9. இந்தப் பிரச்சினைகளை அங்கீகரித்து, பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) நடவடிக்கை எடுத்துள்ளது. இது மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் வெப்ப செயல் திட்டங்களை (Heat Action Plans (HAP)) உருவாக்க தீவிரமாக உதவியுள்ளது. இந்தத் திட்டங்கள் வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகின்றன.


உங்களுக்குத் தெரியுமா? :


1. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கூற்றுப்படி, வெப்ப அலை என்பது வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையைக் கொண்ட ஒரு காலமாகும். வடமேற்கு இந்தியாவில் கோடையில் இந்த வெப்பநிலை சாதாரணமாகவே அதிகபட்ச வெப்பநிலையைவிட அதிகமாக இருக்கும். வெப்ப அலைகள் பொதுவாக மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஏற்படும். மேலும், சில அரிதான சந்தர்ப்பங்களில், அவை ஜூலை வரை நீடிக்கும். தீவிர வெப்பநிலை மற்றும் அதன் தொடர்புடைய வளிமண்டல நிலைமைகள் இந்த பகுதிகளில் உள்ள மக்களை எதிர்மறையாக பாதிக்கின்றன. அதனால், உடல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது சில நேரங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும்.


2. இந்திய வானிலை ஆய்வுத் துறை (Indian Meteorological Department (IMD)) வெப்ப அலைகளுக்கு பின்வரும் அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது:


  • அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளில் குறைந்தது 40°C அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் குறைந்தது 30°C அடையும் வரை வெப்ப அலை கருதப்படாது.


  • ஒரு நிலையத்தின் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை 40°C அல்லது அதற்கும் குறைவாக இருந்தால்:


  • வெப்பநிலை இயல்பைவிட 5°C முதல் 6°C வரை உயரும் போது வெப்ப அலை ஏற்படுகிறது.


  • வெப்பநிலை இயல்பை விட 7°C அல்லது அதற்கு மேல் உயரும் போது கடுமையான வெப்ப அலை ஏற்படுகிறது.


  • ஒரு நிலையத்தின் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை 40°C-க்கு மேல் இருந்தால்:

  • வெப்பநிலை இயல்பை விட 4°C முதல் 5°C வரை உயரும்போது வெப்ப அலை ஏற்படுகிறது.


  • வெப்பநிலை இயல்பைவிட 6°C அல்லது அதற்குமேல் உயரும்போது கடுமையான வெப்ப அலை ஏற்படுகிறது.


  • உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 45°C அல்லது அதற்கு மேல் இருந்தால், சாதாரண அதிகபட்ச வெப்பநிலை எதுவாக இருந்தாலும், வெப்ப அலைகள் அறிவிக்கப்பட வேண்டும்.


  • காலநிலை மாற்றம் காரணமாக, தினசரி உச்ச வெப்பநிலை அதிகரித்து வருகிறது. உலகளவில் வெப்ப அலைகள் நீண்டதாகவும், தீவிரமாகவும், அடிக்கடி நிகழ்கின்றன.


3. இந்தியா காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அனுபவித்து வருகிறது. வெப்ப அலைகள் ஒவ்வொரு ஆண்டும் அடிக்கடியும், தீவிரமாகவும் வருகின்றன. அவை, மனித ஆரோக்கியத்தில் பேரழிவு விளைவை (devastating effect) ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, வெப்ப அலை தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



Original article:

Share:

பிரதம மந்திரி தன்-தன்யா கிரிஷி யோஜனா திட்டத்தின் இலக்கு என்ன? அது எவ்வாறு செயல்படுத்தப்படும்? -ஹரிகிஷன் சர்மா

 பிப்ரவரி 1-ஆம் தேதி தனது வரவு செலவு அறிக்கை உரையின் போது இந்த திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் போது, ​​பிரதம மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனாவை (Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana (PMDKY)) தொடங்குவதாக அறிவித்தார்.


"ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தின் (Aspirational District Programme (ADP)) வெற்றியால், அரசாங்கம் மாநிலங்களுடன் இணைந்து  பிரதம மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனாவை மேற்கொள்ளும்" என்று திட்டத்தை அறிவிக்கும் போது சீதாராமன் கூறினார்.


ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் (Aspirational District Programme (ADP)) ஜனவரி 2018-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் மிகவும் வளர்ச்சியடையாத 112 மாவட்டங்களை விரைவாகவும் திறம்படவும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 


1. ஒருங்கிணைப்பு (Convergence) - ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களை ஒன்றிணைத்தல்.


2. ஒத்துழைப்பு (Collaboration) - ஒன்றிய  மற்றும் மாநில அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இடையே முயற்சிகளை ஒருங்கிணைத்தல்.


3. போட்டி - மாவட்டங்களை அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் மாதாந்திரமாக தரவரிசைப்படுத்துதல் போன்ற மூன்று முக்கிய கொள்கைகளை (3 Cs)  இந்த திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.


சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் & நீர் வளங்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 5 சமூக-பொருளாதாரக் கருப்பொருள்களின் கீழ் 49 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்துள்ளது.


PMDKY மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் 100 மாவட்டங்களில் கவனம் செலுத்தும்: குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அளவுருக்கள் என்று சீதாராமன் கூறியிருந்தார். ஆதாரங்களின்படி, வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் இந்த அளவுருக்களின் தரவுகளை சேகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டங்கள் அடையாளம் காணப்படும்.


பயிர்த் தீவிரம் (Cropping intensity) என்பது விவசாயத்திற்கு நிலம் எவ்வளவு திறமையாக பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இது மொத்த பயிர் செய்யப்பட்ட பரப்பளவிலிருந்து நிகர விதைக்கப்பட்ட பரப்பளவின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. எளிமையாக பயிர் தீவிரம் என்பது ஒரு விவசாய ஆண்டில் ஜூலை முதல் ஜூன் வரை ஒரே நிலத்தில் எத்தனை பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்ற எண்ணிக்கையை குறிக்கிறது.


இந்திய முழுவதும் 2021-22ல் பயிர் தீவிரம் 155% ஆக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் பெரிதும் மாறுபடுகிறது. 1950-51ல் பயிர் தீவிரம் 111% மட்டுமே.


மாவட்ட வாரியாக விவசாயக் கடன் குறித்த தரவுகளை வழங்குமாறு நிதிச் சேவைகள் துறை மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியிடம் (National Bank for Agriculture and Rural Development (NABARD)) அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


நிதி அமைச்சரின் கூற்றுப்படி: 


விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல்;


பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்கப்படுத்துவது.


பஞ்சாயத்து மற்றும் தொகுதி மட்டங்களில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரிப்பது.


சிறந்த நீர் விநியோகத்திற்காக நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவது.


உழவர்களுக்கு நீண்டகால மற்றும் குறுகியகால கடன் வழங்குவது. இது போன்ற ஐந்து நோக்கங்களைக் இந்த திட்டம்  கொண்டுள்ளது.


இந்தத் திட்டம் 1.7 கோடி உழவர்களுக்கு பயனளிக்கும் என்று சீதாராமன் கூறினார்.


வரவு செலவு அறிக்கை ஆவணங்கள் திட்டத்திற்கு தனி ஒதுக்கீடு வழங்கவில்லை என்றாலும், வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் இருந்து நிதி பெறப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்றிய அமைச்சரவையால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, அது களத்தில் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு,  அரசாங்கத்தால் இந்தத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைச் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.




Original article:

Share:

டீஸ்டா அணை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் -வாசுதேவன் முகுந்த்

 அணை "வணிக ரீதியாக சாத்தியமானது" என்று கூறுவது அதை மீண்டும் கட்டுவதற்கு ஒரு பலவீனமான காரணமாகும்.


ஜனவரி 27, 2025 அன்று, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு சிக்கிமில் உள்ள டீஸ்டா நதியின் மீது உள்ள டீஸ்டா-3 அணையை மீண்டும் கட்ட பரிந்துரைத்தது. அக்டோபர் 2023-ல், தெற்கு லோனாக் ஏரியிலிருந்து வந்த வெள்ளம் டீஸ்டா-3 அணையையும் அதன் மின் உற்பத்தி நிலையத்தையும் அழித்தது. வெள்ள நீர் அணையில் இருந்து குப்பைகளை அடித்து நொறுக்குவது போல் தள்ளியது, மேலும் கீழ்நோக்கி சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 80,000-க்கும் மேற்பட்டோர் நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டனர்.


தெற்கு லோனாக் ஏரியின் பக்கவாட்டில் உள்ள ஒரு பகுதி இடிந்து விழுந்து, ஏரியின் முனையத்தை பலவீனப்படுத்தியது கண்டறியப்பட்டது. பாறைகள் ஏரிக்குள் விழுந்து, வலுவான அலைகளை உருவாக்கியது. இதன் விளைவாக, தடுப்பு உடைந்து, செயற்கைக்கோள் தரவுகளில் காணப்படுவது போல், 50 பில்லியன் லிட்டர் தண்ணீர் பள்ளத்தாக்கில் வெளியேறியது. வெள்ளம் 30 முதல் 40 கிலோமீட்டர் கீழ்நோக்கி பல நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஏரியை கண்காணிக்கும் நிபுணர்கள், அந்தப் பகுதி இன்னும் நிலையற்றதாக இருப்பதாகக் கூறினர்.


புவி வெப்பமடைதலுடனான தொடர்பு


புவி வெப்பமடைதல் மற்றும் காற்று மாசுபாடு, குறிப்பாக கருப்பு கார்பன் (black carbon) சூட்  என்றும் அழைக்கப்படுகிறது. இமயமலை பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்துகின்றன. உருகும் நீர் புதிய ஏரிகளை உருவாக்குகிறது அல்லது ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்துகிறது. சிறிய பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன. அவை சுருங்கும்போது, ​​உருகும் வேகம் இன்னும் அதிகரிக்கிறது. 


2024-ஆம் ஆண்டு ஒன்றிய நீர் ஆணையத்தின் அறிக்கை, இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளின் எண்ணிக்கை 2011 முதல் 2024 வரை 10.8% அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவற்றின் மொத்த பரப்பளவும் 33.7% அதிகரித்துள்ளது. தெற்கு லோனாக் ஏரி 1960களின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது மற்றும் 2023ஆம் ஆண்டில் 167 ஹெக்டேராக விரிவடைந்தது. பனிப்பாறைகள் உருகுவதும் நிலத்தை பலவீனப்படுத்தி புதிய அபாயங்களை உருவாக்கும். இந்த சூழ்நிலையில், டீஸ்டா-3 அணையை மீண்டும் கட்டுவதற்கு நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பது கவலையளிக்கிறது.


தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது போல, டீஸ்டா-3 "வெற்றிகரமானது" மற்றும் "வணிக ரீதியாக சாத்தியமானது" என்று கருதாமல் அதை மீண்டும் கட்ட குழு முடிவு செய்தது. வெள்ளத்திற்குப் பிறகு மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் சேதமடையாமல் இருந்தன என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நீர்வளவியல் நிபுணர்கள் இமயமலையில் உள்ள பெரிய நீர்மின் திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். புதிய வடிவைமைப்பிற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். டீஸ்டா-3 திட்டத்தை ரத்து செய்யக் கோரி பல பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் பகுதியில் அதன் இருப்பிடம் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. அதன் தொழில்நுட்ப-பொருளாதார அனுமதியிலும் சிக்கல்கள் உள்ளன. சிக்கிம் 51% உரிமையை வைத்திருக்க வேண்டும் என்ற 1996 விதியைப் பின்பற்றத் தவறியது மற்றொரு கவலையாகும். கூடுதலாக, இந்த திட்டம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன.


டீஸ்டா-3 2.0 முன்பு போல கான்கிரீட் மற்றும் பாறைகளாக இல்லாமல் கான்கிரீட்டை மட்டும் கொண்டு கட்டப்பட உள்ளது. மூன்று மடங்கு பெரிய அளவிலான ஒரு கசிவு பாதையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் வெள்ளத்திற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். புதிய வடிவமைப்பு, இந்திய வானிலை ஆய்வுத் துறையால் மாதிரியாகக் கொண்ட "மோசமான சூழ்நிலையை" எதிர்கொள்வதை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த நூற்றாண்டில் இந்தப் பகுதியில் "அதிகபட்ச மழை பெய்யக்கூடும்”  என்று குழு தனது கருத்தை தெரிவித்துள்ளது


ஆனால், காலநிலை மாற்றம் ஆபத்தை பெருக்கும் காரணியாக இருப்பதால், பேரழிவுகள் மேலும் தீவிரமடைகின்றன. ஏரி இல்லையென்றால், தெற்கு லோனக்கில் சரிவு வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை.  அதேபோல், பனிப்பாறை சரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் தண்ணீர் மெதுவாக உருவாகி நிரம்பி இருக்கும். இது பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (Glacial Lake Outburst Flood (GLOF)) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைவிட குறைவான அழிவை ஏற்படுத்தியிருக்கும்.


நிபுணர்களின் கருத்துக்கள்


பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இது அபாயங்களை அதிகரிக்கிறது. புவியியல் உறுதியற்ற தன்மையும் நிலப்பரப்பை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. நிலம் மாறுதல் மற்றும் பனி உருகுதல் போன்ற தற்காலிக நிலப்பரப்பு மாற்றங்கள் புதிய அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன. 

கங்கை சமவெளியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. மழைப்பொழிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு மாதிரி இந்த அபாயங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. 2023 பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்திற்கு கனமழை காரணமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த நேரத்தில் உள்ளூர் வானிலை நிலையங்கள் மிதமான அல்லது குறைந்த மழைப்பொழிவு மட்டுமே இருக்கும் என்று கூறின. 


பேராசிரியர் ரகு முர்துகுடே மே 24, 2024 அன்று தி இந்துவில் "The value of attributing extreme events to climate change | Explained”" என்ற தனது கட்டுரையில் இதைப் பற்றி விவாதித்தார். உள்ளூர் மழைப் பொழிவுடன் காலநிலை மாற்றத்தை தொடர்புபடுத்துவது கடினம் என்று அவர் விளக்கினார். துல்லியமான மாதிரியாக்கத்திற்கு போதுமான தரவு பெரும்பாலும் இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறினார். காலநிலை மாதிரிகள் சாதாரண மழைப்பொழிவை முறையாகப் கணிக்க போராடுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஜனவரி 30, 2025 அன்று, புவனேஸ்வர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், இந்தோ திபெத்திய எல்லை காவல் துறை மற்றும் சிக்கிம் அரசு ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட ஒரு சர்வதேச குழு, பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (Glacial Lake Outburst Flood (GLOF)) (“அக்டோபர் 2023 சிக்கிம் வெள்ளம்: பல ஆபத்து அடுக்கின் காரணிகள், காரணங்கள் மற்றும் தாக்கங்கள்") பற்றிய விரிவான மதிப்பீட்டை வெளியிட்டது. 


மற்றவற்றுடன், தற்போதைய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் மாதிரிகள் முக்கியமான இடைவெளிகளைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவை அரிப்பு மற்றும் வண்டல் எவ்வாறு நகர்கிறது என்பதை முழுமையாகக் கருத்தில் கொள்வதில்லை. நதிக்கரை சரிவுகள் மற்றும் அடிவாரத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள் போன்ற மலைச்சரிவுகள் மற்றும் ஆறுகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதையும் அவை கவனிக்கவில்லை. ஆற்றுப்படுகைகளிலும் நீர் மட்டங்களிலும் வண்டல் இயக்கத்தின் தாக்கத்தையும் அவர்கள் எடுத்துக்காட்டினர். பெரிய ஆறுகளில் இது மிகவும் முக்கியமானது.  ஏனெனில், நீர் அலைகள் வண்டல் அலைகளை விட வேகமாக நகரும், 


பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்திற்கு முன்பு டீஸ்டா-3 வணிக ரீதியாக சாத்தியமானதாக இருந்தது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் மின் தேவையையும் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறது. இருப்பினும், காலநிலை மாற்றம் எல்லா இடங்களிலும் அபாயங்களை அதிகரிக்கிறது. எனவே, மின் திட்டங்களின் இருப்பிடத்தை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். 


முதல் டீஸ்டா-3 அணை கீழ்நோக்கி சேதத்தை மோசமாக்கியது. அணை ஆற்றின் பாதையில் நின்றதால் வெள்ளம் மிகவும் அழிவுகரமானது. புதிய டீஸ்டா-3 2.0 வடிவமைப்பு திட்டமிட்டபடி செயல்பட்டால், அது இதேபோன்ற வெள்ளத்திலிருந்து சேதத்தைக் குறைக்கலாம். ஆனால், வலுவான அல்லது மிகவும் மாறுபட்ட வெள்ளம் ஏற்பட்டால், அழிவு இன்னும் மோசமாக இருக்கலாம். மிகவும் சிக்கலான பகுதிகளைக் கொண்ட ஒரு புதிய அணை புதிய நன்மைகளையும் புதிய அபாயங்களையும்  உருவாக்கும்.


மக்கள் பெரிய படத்தை உருவாக்குகிறார்கள்


பிராந்தியத்தில் வசிப்பவர்களின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். இது குடியிருப்பாளர்கள் தங்கள் சமூக, சுகாதார அல்லது பொருளாதார நிலைத்தன்மையை இழக்காமல் பேரழிவுகளிலிருந்து எளிதாக மீள உதவும். ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரான பிரையன் ஸ்டோன், ஜூனியர், 2024-ஆம் ஆண்டு தனது பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீண்டும் பணிகளை மேற்கொள்வது தவறான நடவடிக்கை" என்ற கட்டுரையில் இதைப் பற்றி எழுதினார்.  


காலநிலை மாற்றத்திலிருந்து நாம் வெளியேறும் வழியை வடிவமைக்க முடியாது என்றும் பின்வாங்குவது தவிர்க்க முடியாது என்று விளக்கினார். அதாவது, ஒரு பகுதியில் காலநிலை மாறினால் X ஆபத்து நிலையாக இருக்க வேண்டும் என்றால், காலப்போக்கில் அந்தப் பகுதி சுருங்கும் அல்லது X-ஐ பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரிக்கும். X என்பது சொத்து, வாழ்வாதாரம், மனித உயிர்கள்கூட இருக்கலாம்.


இந்தத் திட்டம் வணிக ரீதியாக சாத்தியமானதாக இருந்தது என்று கூறி பணிகளை மீண்டும் மேற்கொள்வது வலுவான காரணம் இல்லை. உள்ளூர் மக்கள், அவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பேரழிவுகளிலிருந்து மீள்வதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். 


சரியான முடிவெடுக்கும் கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இந்த கட்டமைப்பில் ஆபத்து தீர்மான அணி, மறுமொழித் திட்டம் மற்றும் தெளிவான 'ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து நிலை ஆகியவை இருக்க வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் விலை நீர்மின்சார கட்டணத்தில் சேர்க்கப்பட வேண்டும். அணை வணிக ரீதியாக சாத்தியமானதா என்பதை முடிவு செய்யும்போது அதை புறக்கணிக்கக்கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் இல்லாமல், திட்டம் நிலையானதாக இருக்காது.




Original article:

Share:

கட்டுப்பாடுகளை நீக்குவது வளர்ச்சித் தேவைகளை அதிகரிக்கும் -அமர்த்ய லஹிரி

 பொருளாதாரத்திற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு, நாட்டின் மிகப்பெரிய வளமான அதன் மக்களின் தொழில்முனைவோர் சுறுசுறுப்பு மற்றும் அவர்களின் திறன்களை வெளிக்கொணர்வதாகும்.


இந்தியாவின் வருடாந்திர பட்ஜெட் செயல்பாடு இரட்டை வேடங்களில் செயல்படுகிறது. முதலாவதாக, அடுத்த நிதியாண்டிற்கான அதன் கொள்கை லட்சியங்களை, அவற்றை ஆதரிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றுக்கு நிதியளிப்பதற்கான வருவாய் ஈட்டும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க ஒரு நிறுவன மன்றத்தை இது வழங்குகிறது. இரண்டாவதாக, வரவிருக்கும் ஆண்டிற்கான அதன் சொந்த திட்டங்களை உருவாக்க தனியார் துறை பயன்படுத்தக்கூடிய அரசாங்க நோக்கங்களின் ஆரம்ப சமிக்ஞையை பட்ஜெட் வழங்குகிறது. 


இந்த ஆண்டு பட்ஜெட்டைப் பொறுத்தவரை, ₹12 லட்சம் வரையிலான சம்பள வருமானத்தை வரியிலிருந்து விடுவிக்கும் கூடுதல் தள்ளுபடிகள் மற்றும் சில இறக்குமதி வரிகளைக் குறைத்தல் ஆகியவை சிறப்பம்சங்கள். இருப்பினும், இந்த இரண்டு முயற்சிகளின் விளைவுகளும் மிகக் குறைவு. வரிச் சலுகை தொகுப்பு சம்பளம் பெறும் இந்தியர்களில் 90% பேர் எந்த வருமான வரியையும் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தாலும், அதற்கான நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.3% மட்டுமே. 


புதிய தள்ளுபடி நடவடிக்கைக்கு முன்பே, இந்தியாவில் கிட்டத்தட்ட 79 மில்லியன் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் எந்த வரியும் செலுத்தவில்லை என்பதை இது பிரதிபலிக்கிறது. அதாவது, அவர்களின் வருமானம் மிகக் குறைந்த வரி விதிக்கக்கூடிய வருமான அளவான ₹7 லட்சத்திற்குக் கீழே இருந்தது. இதேபோல், கட்டணக் குறைப்புக்கள் ஒரு அடையாள விளைவை மட்டுமே ஏற்படுத்தும். ஏனெனில். இதன் விளைவாக சராசரி கட்டண விகிதம் ஒரு சதவீத புள்ளி மட்டுமே குறைந்து 10.6% ஆக இருக்கும்.


இந்தியப் பொருளாதார நிலைமையின் யதார்த்தம் என்னவென்றால், நாடு நடுத்தர வளர்ச்சிப் பாதையில் சிக்கித் தவிக்கிறது. 2023ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்பது கோவிட் காரணமாக ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீள்வதில் ஏற்பட்ட தாமதமாகும். 2025ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 6.4% மெதுவான வளர்ச்சி விகிதம் கவலைகளை எழுப்பியுள்ளது. ஆனால், இது உண்மையில் 2015 முதல் 2024 வரையிலான சராசரி வளர்ச்சி விகிதத்தைப் போன்றது. கோவிட் பாதித்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளை (பொருளாதார கணக்கெடுப்பு 2024-25-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி) நாம் விலக்கினாலும் இது உண்மையாகவே இருக்கும்.


பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு இந்தியாவில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் கொண்டிருந்த ஒரே பெரிய யோசனை உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரிப்பதாகும். இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக அரசாங்கத்தின் வளர்ச்சி தொலைநோக்கை "உள்கட்டமைப்பை உருவாக்குங்கள், மீதமுள்ளவை பின்பற்றப்படும்" (“build infrastructure and the rest will follow”) என்று சுருக்கமாகக் கூறலாம். துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தி 15 ஆண்டுகளாக தோல்வியடைந்து வருகிறது. இருப்பினும், அது எவ்வளவு தோல்வியடைகிறதோ, அவ்வளவுக்கு அரசாங்கங்கள் இந்த உத்தியை இரட்டிப்பாக்குகின்றன. அரசாங்கம் வளர்ச்சிக்கு ஒரே ஒரு உத்தியை மட்டுமே நம்பியிருப்பது போல் தெரிகிறது. உள்கட்டமைப்பிற்கான செலவானது மற்ற அனைத்து முயற்சிகளும் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. இது லட்சியமின்மை, சோம்பேறி சிந்தனை அல்லது இரண்டையும் குறிக்கலாம்.


உள்கட்டமைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி தனியார் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், தனியார் முதலீட்டை ஆதரிக்கும் லாபக் கணக்கீடுகளில் உள்ள பல பொருட்களில் இதுவும் ஒன்று. தனியார் லாபம் என்பது தொழிலாளர் சந்தைகள், நிலச் சந்தைகள், கடன் சந்தைகள், வெளியீட்டுச் சந்தைகள் மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பை சமமாகவோ அல்லது அதிகமாகவோ சார்ந்துள்ளது. கூடுதலாக, அது செயல்படும் கொள்கை சூழலின் உறுதிப்பாடு, வணிக முதலீட்டிற்கான மற்றொரு முக்கிய காரணியாகும். இருப்பினும், 1991ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு, அடுத்தடுத்த அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை நீக்குவதில் இருந்து விலகிவிட்டன.


விதிமுறைகள் இந்த மோசமான போக்கை அகற்றுவது மிகவும் கடினம். எனவே, புதிய ஒழுங்குமுறை தலையீடுகள் காலாவதியானவற்றுக்கு மாற்றாக இல்லாமல், இருக்கும் விதிமுறைகளில் கூடுதலாகவே இருக்கின்றன. இதன் விளைவாக, காலப்போக்கில் ஒழுங்குமுறை கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான சிக்கலாக மாறுகிறது. இது சட்டங்களை அமல்படுத்துபவர்களையோ அல்லது அவற்றைச் சுற்றி எவ்வாறு சூழ்ச்சி செய்வது என்பதைக் கண்டுபிடிக்கும் சிறப்பு ஆர்வக் குழுக்களையோ மட்டுமே அதிகாரம் செய்கிறது. அத்தகைய ஒழுங்குமுறை சிக்கலில் வணிகம் செய்வதில் உள்ள அமைதியின்மை பல வருங்கால தொழில்முனைவோரைத் தடுக்க போதுமானது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் மிகவும் சுறுசுறுப்பு தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. அங்கு ஒழுங்குமுறை சகிப்புத்தன்மை அரசாங்கத்தின் இயல்புநிலை நிலைப்பாடாக உள்ளது.


கொள்கை மாற்றங்களுக்கான யோசனைகளை யாராவது விரும்பினால், அவர்கள் அர்ஜென்டினாவைப் பார்க்கலாம். ஜேவியர் மிலே அரசாங்கம் ஒரு வருடம் முன்பு ஆட்சிக்கு வந்தபோது, ​​நாட்டில் 250% பணவீக்கம் இருந்தது மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவை, நெருக்கடிக்குப் பின் நெருக்கடியை எதிர்கொள்ளும் போராடும் நடுத்தர வருமான நாடாக மாற்றியதன் மூலம், அதன் 75 ஆண்டுகால கொள்கை வரலாற்றில் இது மற்றொரு அத்தியாயம் மட்டுமே.


மக்களின் வாழ்க்கையில் அரசாங்கத்தின் ஈடுபாட்டைக் குறைப்பதே மிலேயின் முதல் பெரிய முடிவாகும். விதிமுறைகளில் சிறிய குறைப்புகளைச் செய்வதற்குப் பதிலாக, அவரது அரசாங்கம் பெரிய மற்றும் கடுமையான மாற்றங்களைச் செய்தது. அவர்கள் அரசாங்க விதிகள் மற்றும் செலவினங்களை தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.


ஒரு வருடத்திற்குள் முடிவுகள் தோன்றின. அர்ஜென்டினாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ந்து வருகிறது. மாதாந்திர பணவீக்கம் 2% ஆகக் குறைந்துள்ளது. அரசாங்கத்திடம் இப்போது பட்ஜெட் உபரி உள்ளது. விதிமுறைகளை நீக்கி அரசாங்க செலவினங்களைக் குறைப்பதன் மூலம் இது அடையப்பட்டது. பெரும்பாலான செலவினக் குறைப்புகள் உள்கட்டமைப்பு திட்டங்களில் இருந்தன. அதே நேரத்தில் சமூகத் திட்டங்கள் பெரும்பாலும் அப்படியே இருந்தன.


அர்ஜென்டினாவின் சீர்திருத்தங்கள் அமெரிக்காவிற்கு (அமெரிக்கா) பொருத்தமற்றதாக இருக்கலாம். முரண்பாடாக, அவை தற்போது புதிய டிரம்ப் நிர்வாகம் அரசை நடுநிலையாக்குவதற்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகின்றன. அமெரிக்கா ஒரு தோல்வியுற்ற நாடு அல்ல. அதன் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அது வளர்ந்த உலகின் பிற பகுதிகளை விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அது உலகில் பாதுகாப்பான நிதி சொத்துக்களின் ஒரே ஆதாரமாக இருக்கலாம். இந்த கலவையை ஒரு செயலிழந்த அரசால் உருவாக்க முடியாது, அதை அகற்ற வேண்டும்.


இந்தியா தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. இளம் மக்கள் தொகை, பெரிய சந்தை மற்றும் பல படித்த மக்கள் இருந்தபோதிலும், நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய அது போராடுகிறது. அரசாங்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. ஆனால், பெரும்பாலும் திறம்பட செயல்படத் தவறிவிடுகிறது. சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், சட்ட அமலாக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் உட்பட பல துறைகளில் சிக்கல்கள் உள்ளன. அரசாங்கத்தால் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்த முடியாவிட்டால், பொருளாதார வளர்ச்சியை இயக்கும் தொழில்துறை கொள்கைகளை உருவாக்கி நிர்வகிக்கும் என்று எதிர்பார்ப்பது நம்பத்தகாதது.


அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு, நாட்டின் மிகப்பெரிய வளமான அதன் மக்களின் தொழில்முனைவோர் சுறுசுறுப்பு மற்றும் அவர்களில் திறன்களை வெளிக்கொணர்வதாகும். அதற்கான வழி, அவர்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதை ஒழுங்குபடுத்த முயற்சிப்பதை நிறுத்துவதாகும். மாறாக, 75 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த பிறகு, அரசு அதன் வழியிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது.


அமர்த்தியா லஹிரி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ராயல் வங்கியின் பொருளாதாரப் பேராசிரியர் ஆவார்.

                   



Original article:

Share:

PMLA தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய குறிப்புகள் பிரிவு 21-ன் கீழ் தனிப்பட்ட சுதந்திரக் கொள்கையை எவ்வாறு பாதிக்கின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, "பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) ஒருவரை சிறையில் அடைக்க முடியாது" என்று கூறியது.


• ஆகஸ்ட் 8, 2024 அன்று திரிபாதியை அமலாக்கத் துறை கைது செய்தது. இருப்பினும், பிப்ரவரி 7, 2025 அன்று, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அவர் மீது வழக்குத் தொடர எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறியது.


• நவம்பர் 6, 2024 அன்று நீதிபதி ஓகா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தனது முடிவை எடுத்தது. பொது ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசாங்க ஒப்புதல் தேவைப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 197(1), பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?:


• 1990ஆம் ஆண்டுகளில், உலகளாவிய பயங்கரவாதம் ஒரு பெரிய கவலையாக மாறியது. பயங்கரவாதம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பணப் புழக்கத்தைத் தடுக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின. பணமோசடிக்கு எதிரான முயற்சிகளை வழிநடத்த நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force (FATF)) 1989-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. FATF-ன் உறுப்பினராக, இந்த முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருந்தது.


• ஜூன் 8-10, 1998 அன்று நடைபெற்ற சிறப்பு அமர்வில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக PMLA உருவாக்கப்பட்டது. இந்த முடிவு, பணமோசடியைத் தடுக்க நாடுகள் தங்களுக்கெனச் சட்டங்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டது.


• பணமோசடி தடுப்பு மசோதா 1998 (Prevention of Money-Laundering Bill), ஆகஸ்ட் 4, 1998 அன்று அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்மொழியப்பட்ட சட்டம் பணமோசடி மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளைத் தடுப்பது, குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பறிமுதல் செய்தல், பணமோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முகமைகள் மற்றும் வழிமுறைகளை அமைத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தியது.






• இந்த மசோதா நிதிக்கான நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.  அது மார்ச் 4, 1999 அன்று மக்களவையில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. பின்னர், அக்டோபர் 29, 1999 அன்று, அரசாங்கம் மக்களவையில் பண மோசடி தடுப்பு மசோதா (The Prevention of Money-Laundering Bill), 1999 அறிமுகப்படுத்தியது. மக்களவை பிப்ரவரி 12, 1999 அன்று மசோதாவை நிறைவேற்றியது. மேலும், ஜூலை 25, 2002 அன்று மாநிலங்களவை அதை அங்கீகரித்தது.




Original article:

Share:

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான மூன்று அணுகுமுறைகள் என்ன? அவை ஏன் முக்கியம்? -மீரா மல்ஹான், அருணா ராவ்

 நுகர்வோர் செலவு, உற்பத்தி செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீட்டில் பணவீக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு சரியாக அளவிடப்படுகிறது?


நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் சில்லறை பணவீக்கம், ஜனவரி மாதத்தில் 4.31% ஆகக் குறைந்தது, இது ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் மிகக் குறைவு. காய்கறிகள் போன்ற முக்கியமான உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணம்.


பணவீக்கம் மக்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள், தயாரிப்புகளை தயாரிப்பதற்கான செலவு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கணக்கிடுவதில் இது ஒரு முக்கிய காரணியாகும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான சாத்தியமான வழிகள் என்ன?


மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான மூன்று வழிகள்


ஒரு நாட்டிற்குள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.


தற்போதைய விலைகளைப் பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடப்படும்போது, ​​அது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது உற்பத்தி வளர்ச்சியை துல்லியமாகக் காட்டாமல் போகலாம். ஏனெனில், அதிக உற்பத்தியைவிட அதிக விலைகள் அதிகரிப்பு காரணமாக இருக்கலாம்.


விலை மாற்றங்களின் விளைவை நீக்க, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) பயன்படுத்தப்படுகிறது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும், இது உண்மையான உற்பத்தியின் சிறந்த அளவீடாக அமைகிறது.


பெயரளவு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி  = பெயரளவு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி / மொத்த மக்கள் தொகை


உண்மையான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி = உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி / மொத்த மக்கள் தொகை



மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிட பொருளாதார வல்லுநர்கள் மூன்று முக்கிய முறைகளைப் பயன்படுத்துகின்றனர்: செலவு, வருமானம் மற்றும் உற்பத்தி. (Expenditure, Income, and Product) மூன்றும் ஒரே முடிவைக் கொடுக்க வேண்டும். இருப்பினும், பொருளாதாரம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடப்படும் விதம் மாறலாம்.


திறந்த பொருளாதாரத்தில், பொருளாதார நடவடிக்கைகள் நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கியது, அவை:


1. நுகர்வோர்


2. உற்பத்தியாளர்கள்


3. அரசுத் துறை


4. மீதமுள்ள உலகத் துறைகள் (rest of the world sector (ROW))


ஒவ்வொரு துறையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவற்றின் ஒருங்கிணைந்த பங்களிப்புகள் மூன்று வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன.


செலவு அணுகுமுறை,  இது நான்கு முக்கிய கூறுகளைச் சேர்க்கிறது:


1. தனிப்பட்ட நுகர்வு (C) – பொருட்கள் மற்றும் சேவைகளில் தனிநபர்கள் செலவிடும் பணம்.

2. முதலீடு (I) – உபகரணங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்ற வணிக முதலீடுகளில் செலவிடும் பணம்.

3. அரசு செலவு (G) – பொது சேவைகளில் அரசாங்கம் செலவிடும் பணம்.

4. நிகர ஏற்றுமதிகள் (X-M) – ஏற்றுமதிகளின் மதிப்பு இறக்குமதிகளைக் கழித்தல், இது பிற நாடுகளுடனான வர்த்தகத்தைக் குறிக்கிறது (ROW துறை).


தனிப்பட்ட நுகர்வு செலவினத்தில் மூன்று செலவுகள் அடங்கும்: நுகர்வோர் நீடித்து உழைக்கும் பொருட்கள் (கார்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற நீண்ட கால பொருட்கள்), நீடித்து உழைக்காத பொருட்கள் (உணவு மற்றும் உடை போன்ற குறுகிய கால பொருட்கள்), மற்றும் சேவைகள் (சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்றவை).


மொத்த தனியார் உள்நாட்டு முதலீடு மூன்று வகையான முதலீடுகளை உள்ளடக்கியது: வணிக நிலையான முதலீடு (குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மென்பொருளுக்கான செலவு), குடியிருப்பு முதலீடு (வீட்டுவசதி மற்றும் கட்டுமானத்திற்காக செலவிடப்படும் பணம்), மற்றும் சரக்கு முதலீடு (வணிகப் பங்கு அல்லது சேமிக்கப்பட்ட பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள்).


அரசாங்க கொள்முதல்களில் கூட்டாட்சி மற்றும் மாநில/உள்ளூர் மட்டங்களில் செலவுகள் அடங்கும். இந்த செலவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சாராத செலவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதிகளின் மதிப்பிலிருந்து இறக்குமதியின் மதிப்பைக் கழிப்பதன் மூலம் நிகர ஏற்றுமதிகள் கணக்கிடப்படுகின்றன. இது பொருளாதாரத்தில் மொத்த செலவினங்களை அளவிட உதவுகிறது.


வருமான அணுகுமுறை ஈட்டிய அனைத்து வருமானத்தையும் கூட்டுவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதும்  இதில் அடங்கும். அவை:


- ஊதியங்கள் மற்றும் சம்பளங்கள்

- சுயதொழில் மற்றும் சிறு வணிகங்களிலிருந்து வருமானம்

- வாடகை வருமானம்

- நிறுவன இலாபங்கள்

- நிகர வட்டி (ஈட்டப்பட்ட வட்டி கழித்தல் செலுத்தப்பட்ட வட்டி)


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிகர மறைமுக வரிகள், புள்ளிவிவர முரண்பாடுகள், தேய்மானம் மற்றும் பிற நாடுகளுக்கான நிகர கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும்.


தயாரிப்பு அணுகுமுறை (வெளியீடு அல்லது மதிப்பு கூட்டப்பட்ட முறை என்றும் அழைக்கப்படுகிறது) முந்தைய உற்பத்தி நிலைகளில் பயன்படுத்தப்பட்டவற்றைத் தவிர்த்து, உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுகிறது.


மூன்று மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டு அணுகுமுறைகளும் பின்வரும் உறவுகள் காரணமாக எப்போதும் ஒரே மொத்தத்தைக் கொடுக்க வேண்டும்:


உற்பத்தி மற்றும் செலவினங்களின் சமநிலை (Equivalence of production and expenditure:): ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு, வரையறையின்படி, வாங்குபவர்கள் அவற்றை வாங்குவதற்கு செலவிட வேண்டிய தொகைக்குச் சமம்.


எனவே, தயாரிப்பு அணுகுமுறையின் மதிப்பு = செலவு அணுகுமுறையால் பெறப்பட்ட மொத்தம் (சமன்பாடு 1).

செலவு மற்றும் வருமானத்தின் சமநிலை (Equivalence of expenditure and income): விற்பனையாளர்கள் பெறுவது வாங்குபவர்கள் செலவிடுவதற்கு சமமாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விற்பனையாளர்களின் வருவாய்கள் தொழிலாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படும் வருமானம், அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிகள் மற்றும் இலாபங்கள் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்படும் வருமானத்தைக் குறிக்கின்றன.


எனவே, மொத்த செலவு = மொத்த வருமானம் (சமன்பாடு 2)

(1) மற்றும் (2) காரணமாக, மொத்த தயாரிப்பு = மொத்த வருமானம்


மொத்த தயாரிப்பு = மொத்த வருமானம் = மொத்த செலவு தேசிய வருமானக் கணக்கியலின் அடிப்படை அடையாளம் என்று அழைக்கப்படுகிறது.


மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு: காரணி செலவு vs சந்தை விலை அணுகுமுறைகள்


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மத்திய புள்ளிவிவர அலுவலகத்தால் (Central Statistical Office (CSO)) இரண்டு முறைகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகிறது. ஒன்று பொருளாதார செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது (காரணி செலவில், இதில் வரிகள் இல்லை), இரண்டாவது செலவினமாகும் (சந்தை விலையில், இதில் வரிகள் அடங்கும்).


பொருளாதார செயல்பாடு அடிப்படையிலான முறை (காரணி செலவில்) (Economic activity-based method (at factor cost)): இது உற்பத்தி செலவின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுகிறது.


செலவு அடிப்படையிலான முறை (சந்தை விலையில்)(Expenditure-based method (at market prices)): இது வரிகள் உட்பட ஆனால் மானியங்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் மொத்த செலவினத்தின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது.


காரணி செலவு முறையைப் பயன்படுத்தும் துறைகள்


காரணி செலவு முறை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தரவுகளைச் சேகரிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. மற்ற இரண்டு முறைகளுக்கும் நம்பகமான தரவு இல்லாததால், மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்மையாக பின்வரும் துறைகளில் காரணி செலவு முறையைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது:


1. விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடித்தல்


2. சுரங்கம் மற்றும் குவாரி


3. உற்பத்தி


4. மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகள்


5. கட்டுமானம்


6. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு


7. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள்


8. பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகள்.


செலவின முறை என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டிற்குள் இறுதிப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவினங்களைக் கூட்டுகிறது. இதில் வீட்டுப் பொருட்களுக்குச் செலவிடப்படும் பணம், முதலீடுகள் (மூலதன உருவாக்கம்), அரசாங்கச் செலவு மற்றும் நிகர வர்த்தகம் (ஏற்றுமதிகளில் இறக்குமதியைக் கழித்தல்) ஆகியவை அடங்கும்.


இரண்டு முறைகளிலிருந்தும் கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில், அவை வெவ்வேறு தரவுத்தளங்களையும் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளையும் பயன்படுத்துகின்றன. இந்த வேறுபாடு புள்ளிவிவர முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் முக்கிய காரணிகளைப் புரிந்துகொள்ள செலவு அணுகுமுறை நமக்கு உதவுகிறது. எடுத்துக்காட்டாக, வீட்டுச் செலவு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60.34% ஆகும். இந்த உயர்ந்த அளவிலான உள்நாட்டு நுகர்வு, மற்ற நாடுகளின் மந்தநிலையிலிருந்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவுகிறது.


ஒப்பிடுகையில், ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தும் பொருளாதாரம் உலகளாவிய மந்தநிலையின் விளைவுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பு சேவைத் துறை ஆகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5% பங்களிக்கிறது. அடுத்த பெரிய பங்களிப்பு தொழில்துறை 23%, அதைத் தொடர்ந்து விவசாயத் துறை 15.4%.


மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டும் ஒரு எண். மூன்று மாதங்களில் (ஒரு காலாண்டில்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கான வழக்கமான வழியாகும். இருப்பினும், வளர்ச்சியை அளவிடுவதற்கான ஒரு வழியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில வரம்புகள் உள்ளன. இவற்றில் பின்வருவன அடங்கும். அவை:


  • இது சந்தை அல்லாத பரிவர்த்தனைகளை விலக்குகிறது

  • இது வாழ்க்கைத் தரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது (தனிநபர் வருமானம் அதற்கு ஒரு சிறந்த அளவீடு)

  • இது வெளிப்புறங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாது

  • இது வருமான ஏற்றத்தாழ்வுகள் அல்லது வருமான விநியோகத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது


எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஒரு முக்கியமான அளவீடாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியை இன்னும் விரிவாக மதிப்பிடுவதற்கு இது மற்ற நலன்  குறிகாட்டிகளுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.




Original article:

Share: