பொது அணுசக்தி துறை என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்: 


• முதலாவது அணுசக்தி பொறுப்புச் சட்டத்தில் உள்ள விதிகளை தளர்த்துவதுடன் தொடர்புடையது. இது ஒப்பந்தத்தின் உண்மையான மதிப்பிற்கான பண வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இந்த பொறுப்பு எப்போது பொருந்தும் என்பது குறித்த காலக்கெடு வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில், விபத்து ஏற்பட்டால், கருவி விற்பனையாளர்களின் பொறுப்பை திறம்பட கட்டுப்படுத்தும்.


• இரண்டாவது திருத்தம் நாட்டில் தனியார் நிறுவனங்களுக்கான அணு மின்சார நிலையங்களில் பணியாற்ற அனுமதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது எதிர்கால அணு மின்சார திட்டங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்தபட்ச பங்கு முதலீடு செய்வதை உள்ளடக்கக்கூடும்.


• இதுவரை, அணுசக்தி இந்தியாவில் மிகவும் மூடிய துறைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இரட்டை சட்டத் திருத்தங்கள் ஒரு சீர்திருத்த முயற்சியாக பார்க்கப்படுகின்றன, இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திடப்பட்ட இந்தியா-அமெரிக்கா குடிமையியல் அணுசக்தி ஒப்பந்தத்தின் வணிகத் திறனைப் பயன்படுத்த உதவும். புது தில்லி இதை வாஷிங்டன் டி.சி. உடனான பரந்த வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் முன்னிலைப்படுத்த விரும்புகிறது. இது தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் முடிவடையக்கூடும்.


• இந்த இரண்டு திருத்தங்களும் அணுசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளைத் தடைசெய்ததாகக் கருதப்படும் சட்டச் சிக்கல்களை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணு விபத்தால் ஏற்படும் சேதத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட பொதுத்துறை அணுசக்தி சட்டம் (Civil Liability for Nuclear Damage Act, 2010), பொறுப்பை ஒதுக்குவது மற்றும் இழப்பீட்டிற்கான நடைமுறைகளைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. GE-Hitachi, வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான Areva தற்போது ஃப்ராமடோம் (Framatome)) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் இது ஒரு தடையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


• அணுசக்திச் சட்டம், 1962 Atomic Energy Act, 1962)-க்கான திருத்தங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் சாத்தியமாக பின்னர் வெளிநாட்டு நிறுவனங்களும் அணுசக்தி உற்பத்தியில் இயக்குநர்களாக நுழைய அனுமதிக்கின்றன. தற்போது, இது இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (Nuclear Power Corporation of India Limited. (NPCIL)) அல்லது தேசிய வெப்ப மின் கழகம் (National Thermal Power Corporation (NTPC Ltd)) போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


• இந்த இரண்டு சட்டங்களையும் நிறைவேற்ற அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் இது தொடர்பாக வெளிப்படையான உறுதிமொழி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் முன்மொழியப்பட்ட இரண்டு மசோதாக்களில் குறைந்தது ஒன்றுக்காவது சட்டமியற்றும் பாதை கடினமானதாக இருக்கும்.


• இவை அனைத்தும் அமெரிக்க எரிசக்தித் துறை (US Department of Energy (DoE)) நியூ ஜெர்சியின் காம்டனைச் சேர்ந்த ஹோல்டெக் இன்டர்நேஷனல் (Holtec International) நிறுவனத்திற்கு முன்னெப்போதும் இல்லாத ஒழுங்குமுறை அனுமதியை வழங்கிய இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின் வருகிறது. இது இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வணிக திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்கான பாதையை அமைக்கிறது.


• மார்ச் 26 அன்று DoE-இடமிருந்து பெறப்பட்ட அனுமதி, தடைசெய்யும் ஒழுங்குமுறையான '10CFR810'-ஐ பொறுத்தவரை ஹோல்டெக் இன்டர்நேஷனலின் குறிப்பிட்ட அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தை அனுமதித்தது. இந்த குறிப்பிட்ட அங்கீகாரம் (SA IN2023-001) தற்போது ஹோல்டெக் நிறுவனத்திற்கு "வகைப்படுத்தப்படாத சிறிய மட்டு அணு உலை தொழில்நுட்பத்தை" அதன் பிராந்திய துணை நிறுவனமான ஹோல்டெக் ஆசியா, டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (Tata Consulting Engineers Ltd), மற்றும் லார்சன் & டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro Ltd) ஆகியவற்றுக்கு இந்தியாவில் நிபந்தனைகளுடன் பரிமாற அனுமதிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• ஒரு குறிப்பிட்ட '10CFR810' அங்கீகாரத்தைப் பெறுவதில் சிக்கல் (தலைப்பு 10-ன் பகுதி 810, 1954-ஆம் ஆண்டின் அமெரிக்க அணுசக்திச் சட்டத்தின் கூட்டாட்சி விதிமுறைகளின் குறியீடு) புது டெல்லிக்கு ஒரு பெரிய ஒழுங்குமுறை தடையாக இருந்தது. ஏனென்றால், ஹோல்டெக் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு சில கடுமையான பாதுகாப்புகளின் கீழ் இந்தியா போன்ற நாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் திறனைக் கொடுக்கும் அதே வேளையில், இந்தியாவில் அணுசக்தி சாதனங்களைத் தயாரிக்கவோ அல்லது அணுசக்தி வடிவமைப்புப் பணிகளைச் செய்யவோ வெளிப்படையாகத் தடை விதித்தது. இந்த விதிமுறை, புதிய டெல்லியின் பார்வையில் ஏற்க முடியாததாக இருந்தது. ஏனெனில், இந்தியா தனது உள்ளூர் தேவைக்காக சிறிய தொகுதி உலைகள் (Small Modular Reactors (SMRs)) மற்றும் அணு கூறுகளை இணைந்து உற்பத்தி செய்ய விரும்பியது.


• ஒன்றிய அரசின் 2025-26ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கை, அணு சக்தியை இந்தியாவின் நீண்டகால சக்தி மாற்றத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னெடுக்க ஒரு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது 2047ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறன் என்ற லட்சிய இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் ஆற்றல் கலவையில் அணுசக்தியை ஒரு முக்கிய தூணாக நிலைநிறுத்துகிறது. இந்த வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற பரந்த நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது. ஆற்றல் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இந்த இலக்கை அடைய, திட்டமிட்ட அரசியல் தலையீடுகள் மற்றும் கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அணு தொழில்நுட்பம் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகள் (public-private collaborations) மீது கவனம் செலுத்தப்படுகிறது.


• ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை அடைவதற்கான ஒரு முக்கிய அங்கமாக அணுசக்தியை அங்கீகரித்து, அரசாங்கம் விக்சித் பாரத்-கான அணுசக்தி இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சி உள்நாட்டு அணுசக்தி திறன்களை மேம்படுத்துதல், தனியார் துறை பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் சிறிய தொகுதி உலைகள் போன்ற மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


• அணுசக்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக, அணுசக்திச் சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான அணுசக்தி பொதுத்துறை பொறுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்படும். இந்த திருத்தங்கள் அணுமின் திட்டங்களில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article:
Share:

பஞ்சாயத்து மட்டத்தில் உள்ளூர் நிலையை புரிந்து கொள்ளுதல் -சுனில் குமார்

 பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (Panchayat Development Index (PAI)) வலைத்தளம் துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி மற்றும் மாநில அரசுகளுக்கும் பயனுள்ள கருவியாக மாறலாம்.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவை ஆராய்ச்சியாளர்களுக்கு வெளியிடுவதிலும் ஏற்படும் தாமதத்தை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகள் அல்லது முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. இதன் மூலம் காலத் தொடர் தரவு கிடைப்பதை கடினமாக்குகின்றன. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் சான்றுகள் அடிப்படையிலான முடிவெடுப்பதில் கடக்க வேண்டிய தடைகளாக அவை உள்ளன. இருப்பினும், அரசாங்க அதிகாரிகள் பல்வேறு அமைச்சகங்களின் இணையதளங்களில் மிகப்பெரிய தரவு கிடைப்பதையும், இந்திய அரசின் 2012-ஆம் ஆண்டு தேசிய தரவு பகிர்வு மற்றும் அணுகல் கொள்கையையும் (National Data Sharing and Accessibility Policy (NDSAP)) சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கொள்கை, உணர்திறன் இல்லாத அரசாங்கத் தரவை திறந்த, அணுகக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.


இருப்பினும், கிடைக்கும் தரவுகள் பொதுமக்களாலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலோ எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் புகார் கூறுகின்றனர். குடிமக்களும், பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள் கூட மிகப்பெரிய தரவுகளால் மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர். https://data.gov.in மற்றும் பிற அரசு வலைத்தளங்களில் உள்ள தரவு காட்சிப்படுத்தல் கருவிகள் (Data visualisation tools) ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. தரவு பகுப்பாய்வு அதிகம் விரும்பத்தக்கதாக இல்லை. இதன் விளைவாக, ஒன்றிய மற்றும் மாநில அளவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் அனுபவம் அல்லது உள்ளுணர்வின் அடிப்படையில் தொடர்ந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.


தரவு உருவாக்கம் மற்றும் பயன்பாடு


அடிமட்ட அளவில் — கிராம பஞ்சாயத்துகள், வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்கள் போன்ற அடிமட்ட மட்டத்தில், மாநில மற்றும் தேசிய தலைமையகங்களில் உள்ள மூத்த அதிகாரிகளால் பயன்படுத்துவதற்காக மட்டுமே தரவு உருவாக்கப்பட்டு அமைப்பில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக, வலைத்தளங்கள் துறைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம், வட்டாரம் அல்லது கிராம பஞ்சாயத்து அளவில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான தேவைகளை நிச்சயமாக பூர்த்தி செய்வதில்லை. எனவே, நாம் எப்போதும் 'பரந்த காட்சியை' மட்டுமே பெறுகிறோம்.  “நுண்காட்சியை” அல்ல. கிராம பஞ்சாயத்து அளவில் உள்ள தரவுகள் ஒரு குடும்பம் மற்றும் வீட்டுடன் இணைக்கப்படுகிறது. எனவே, குடியிருப்பாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கப்பட்டால் அதை புறக்கணிப்பது கடினமாகிவிடும்.


பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (Panchayat Development Index (PAI)) பற்றி


பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (PAI) அடிப்படை அறிக்கை 2022-23 (ஏப்ரல் 2025-ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது) தயாரிப்பில் செய்யப்பட்ட பணியின் அளவை இந்த சூழலில் புரிந்து கொள்ள வேண்டும். பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு என்பது ஒரு கூட்டு குறியீடாகும். இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய குறியீட்டு கட்டமைப்பு (National Indicator Framework (NIF)) உடன் இணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் (Localization of Sustainable Development Goals (LSDGs)) ஒன்பது கருப்பொருள்களில் 435 தனித்துவமான உள்ளூர் குறிகாட்டிகள் (331 கட்டாயம் மற்றும் 104 விருப்பத்தேர்வு) மற்றும் 566 தனித்துவமான தரவு புள்ளிகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. 2.16 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் சரிபார்க்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒரு கிராம பிரதான் (sarpanch) அல்லது வார்டு உறுப்பினர் கூட (சில ஆதரவுடன்) தங்கள் கிராம பஞ்சாயத்து ஒன்பது LSDGs-களுடன் தொடர்புடைய இடத்தை மட்டுமின்றி, அவற்றை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. 11,000 கிராம பஞ்சாயத்துகளின் தரவுகள் பஞ்சாயத்து மேம்பாட்டு குறியிட்டில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவை நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி சரிபார்க்கப்படவில்லை. ஏறக்குறைய 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% கிராமப்புற கிராமங்களின் சரிபார்க்கப்பட்ட தரவை வழங்கியிருந்தாலும், உத்தரப் பிரதேசம் 57,702 கிராமப்புற கிராமங்களில் 23,207 கிராமப்புற கிராமங்களுக்கு 40% மட்டுமே தரவை வழங்கியது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த விடுபாடு உ.பி.யில் வளர்ச்சியின் நிலை குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது. இந்த விடுபட்ட தன்மை உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு (www.pai.gov.in) தரவுத்தளம் துறை அதிகாரிகளுக்கு ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்படும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குறிப்பிட்ட உள்ளூர் நிலையான வளர்ச்சி இலக்கு (Local Sustainable Development Goal  (LSDG)) மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், தொகுதி வாரியான அறிக்கை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


உண்மையான முடிவுகளைக் காட்ட இப்போது தரவு பயன்படுத்தப்படுவது ஒரு பெரிய மாற்றமாகும். உதாரணமாக, ஒரு கிராம பஞ்சாயத்து உண்மையிலேயே ஆரோக்கியமானதா? ஆரோக்கியமான பஞ்சாயத்து குறிகாட்டிகளில் கிராம பஞ்சாயத்துக்கு கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில், இப்போது குறைபாடுகளை எளிதாக கண்டறிந்து குறுகிய காலத்தில் சரிசெய்ய முடியும். மேலும், தனிநபர், சமூகம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறையின் முன்களப் பணியாளர்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பும் தெளிவாக வெளிப்படத் தொடங்கும். கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற வளர்ச்சித் துறைகளின் முன்களப் பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் குடிமை அமைப்புகள் (civil society organisations (CSOs)) இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருப்பது பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு அளவீட்டில் கிராம பஞ்சாயத்துக்களின் செயல்திறனை மேம்படுத்தும் மிக முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது.


உன்னத பாரத் அபியான் (Unnat Bharat Abhiyan) உடன் இணைக்கப்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள குறைந்தது ஐந்து கிராம பஞ்சாயத்துகளின் ஆய்வை மேற்கொண்டு, சமூகத்திற்கு அவர்களின் பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (Panchayat Development Index (PAI)) மதிப்பெண்ணின் தாக்கங்களையும், அவர்களின் மதிப்பெண்ணை மேம்படுத்த அவர்கள் என்ன செய்யலாம் என்பதையும் விளக்கினால் அது சிறந்ததாக இருக்கும். இந்த நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புகள் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுவது, துறை சார்ந்த அதிகாரிகளின் பங்குக்கு மேலதிக ஆதரவு அளிப்பதுடன், நிலையான வளர்ச்சி இலக்குகளை  (Sustainable Development Goals (SDGs)) அடைய பெரிதும் உதவும். 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதிகள், மாவட்ட கனிம அறக்கட்டளை (District Mineral Foundation (DMF)) நிர்வகிக்கும் பிரதமரின் கனிமப் பகுதி நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Members of Parliament Local Area Development Scheme (MPLADS)) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Member of Legislative Assembly Local Area Development Scheme (MLALAD)) உள்ளிட்டவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கும் பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு மதிப்பெண் அட்டை தாக்கங்களைக் கொண்டுள்ளது.


பகுப்பாய்வாளர்களின் தேவை


பல்வேறு பங்குதாரர்களுக்கு வழக்கமான அறிக்கை அட்டைகளைத் தயாரித்து வழங்கக்கூடிய பயிற்சி பெற்ற தரவு பகுப்பாய்வாளர்களை தொகுதி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து மட்டங்களில் வழங்குவது அவசரத் தேவையாக உள்ளது. ஒன்றிய அரசைவிட, பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நகர்ப்புற உள்ளூர் அரசாங்கங்களுக்கும் இதேபோன்ற சாதனை குறியீடு உருவாக்கப்பட வேண்டும். ஒரு அடிப்படை பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு அறிக்கையைத் தொடர்ந்து, கடினமான அடிப்படை வேலைகள் செய்யப்பட்ட பிறகு, வழக்கமான இடைவெளியில் அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.



பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு என்பது கிராம பஞ்சாயத்துகள் (Gram Panchayats (GPs)) மாவட்டங்கள் அல்லது மாநிலங்களின் தரவரிசையைவிட அதிகமானது. இது ஒரு செயல் அழைப்பாகும். மோசமாக செயல்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. நிதிகள் எங்கு செல்கின்றன அல்லது அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன (அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன) என்பதை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அனைத்து பங்குதாரர்களும் தங்கள் முக்கிய பங்கைப் புரிந்துகொள்ளவும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றும் இலக்கை நனவாக்குவதை உறுதிசெய்யவும், சமீபத்திய தரவு காட்சிப்படுத்தல் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.


சுனில் குமார் கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தின் வருகை விரிவுரையாளர் மற்றும் புனே சர்வதேச மையத்தின் உறுப்பினர். இவர் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர்.


Original article:
Share:

EPR சான்றிதழ் வர்த்தகம் மூலம் இந்தியாவின் மின்னணுக் கழிவு விதிகள் மற்றும் அதன் சவால்கள்

 

  • விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended producer responsibility (EPR))


உலகளவில், 2022-ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுக் கழிவுகளின் அளவு 62 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது 2030-ம் ஆண்டில் 82 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


2022-ம் ஆண்டில், மின்னணுக் கழிவுகளை நிர்வகிப்பதற்கான ஒரு புதிய விதியை இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த விதி 2011-ம் ஆண்டின் முந்தைய மின்னணுக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளை மாற்றியது. இது ஒரு வர்த்தக முறையையும் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பின் கீழ், உற்பத்தியாளர்கள் மறுசுழற்சி செய்பவர்களிடமிருந்து சான்றிதழ்களை வாங்கலாம். இந்த சான்றிதழ்கள் அவர்களின் வருடாந்திர மின்னணுக்-கழிவு மேலாண்மை இலக்குகளை (yearly e-waste management targets) அடைய உதவுகின்றன.


அதே ஆண்டில், இந்தியா 1.6 மில்லியன் மெட்ரிக் டன் மின்னணுக்-கழிவுகளை உற்பத்தி செய்தது. இந்த அளவு 2018-ல் உருவாக்கப்பட்டதைவிட சுமார் 126% அதிகம் ஆகும். 2030-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை சுமார் 14 மில்லியன் டன்களை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.


இதில் மறுசுழற்சி விகிதங்கள் (Recycling rates) மேம்பட்டுள்ளன. 2019-20 ஆம் ஆண்டில், சுமார் 22% மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டன. 2023-24 வாக்கில், இது 43% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், மின்னணுக் கழிவுகளில் பெரும்பகுதி இன்னும் பதப்படுத்தப்படாமல் உள்ளது. மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை முறைசாரா துறையால் கையாளப்படுகின்றன.


2022-ம் ஆண்டில், உலகம் 62 மில்லியன் மெட்ரிக் டன் மின்னணுக்-கழிவுகளை உற்பத்தி செய்தது. இந்த அளவு 2030-ஆம் ஆண்டுக்குள் 82 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ​​சீனாவிற்குப் பிறகு இந்தியா இரண்டாவது பெரிய மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கும்.


பாதுகாப்பற்ற மறுசுழற்சியானது (Unsafe recycling) முக்கியமாக முறைசாரா துறையில் நிகழ்கிறது. இது காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாடு போன்ற கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.


மின்னணுக் கழிவுகளை நிர்வகிக்க, இந்தியா 2005-ல் ஒரு விதியை உருவாக்கியது. இந்த விதி மின்னணுக் கழிவுகளை கையாள ஒரு கட்டமைக்கப்பட்ட வழியில் கவனம் செலுத்தியது. இது "மாசுபடுத்துபவரே செலுத்த வேண்டும்" (polluter-pay) கொள்கையைப் பின்பற்றியது. இதன் பொருள் உற்பத்தியாளர்கள் தாங்கள் உருவாக்கும் மின்னணுக் கழிவுகளை திரும்பப் பெற வேண்டும்.


இருப்பினும், 2005 விதிகள் பிரச்சினையை தீர்க்கவில்லை. உற்பத்தியாளர்கள் தங்கள் பொறுப்புகளை முழுமையாகப் பின்பற்றவில்லை. எனவே, 2011-ல், விதிகள் சிறந்த மற்றும் விரிவான ஒழுங்குமுறையுடன் மாற்றப்பட்டன. புதிய விதிகளில் மறுசுழற்சி ஒரு முக்கிய பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.


இன்னும் பல ஒழுங்குமுறை சிக்கல்கள் இருந்தன. அவற்றை சரிசெய்ய, அரசாங்கம் 2022-ல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் மின்னணுக்-கழிவுகளைக் கையாள்வதில் ஈடுபட்டுள்ள அனைவரின் பங்குகளையும் தெளிவாக வரையறுத்தன.


2011-ல், விதிகள் 22 வகை மின்னணுக்-கழிவுகளை உள்ளடக்கியது. ஆனால் 2022 விதிகள் இதை 130 வகைகளாக விரிவுபடுத்தின. இதில் பிராண்ட் இல்லாத பொருட்கள் (unbranded items) அடங்கும். புதுப்பிக்கப்பட்ட விதிகள் மின்னணுக்-கழிவு சேகரிப்புக்கான படிப்படியான இலக்குகளை நிர்ணயித்தன. முதல் ஆண்டில், நிறுவனங்கள் 60% மின்னணு கழிவுகளை சேகரிக்க வேண்டியிருந்தது. இந்த இலக்கு ஐந்து ஆண்டுகளில் 80%-க்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


முதல் முறையாக புதிய விதிகள் சூரிய மின்கலங்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொம்மைகளை உள்ளடக்கியது, மேலும் பேட்டரி கழிவு மேலாண்மைக்கு தனி விதிகளை கொண்டு வந்தது.


முதன்மையாக, 2022 விதிகளின் முக்கிய குறிக்கோள்கள் மின்னணுக்-கழிவு அமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல், அபாயகரமான பொருட்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


புதிய விதிகள் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (EPR) வலுப்படுத்தின. தயாரிப்பாளர்கள் (manufacturers), உற்பத்தியாளர்கள் (producers), மறுசுழற்சி செய்பவர்கள் (recyclers) மற்றும் புதுப்பிப்பவர்கள் (refurbishers) என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக வரையறுத்தனர்.


EPR என்பது மின்சாரம் அல்லது மின்னணு உபகரணங்களின் உற்பத்தியாளர் பயன்பாட்டிற்குப் பிறகு அதன் மேலாண்மைக்கு பொறுப்பு என்பதாகும்.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) ஒரு தனி இணையவழி போர்ட்டலை உருவாக்கியது. இந்த போர்டல் தயாரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் புதுப்பிப்பாளர்களைப் பதிவு செய்யப் பயன்படுகிறது. இது அவர்கள் காலாண்டு மற்றும் வருடாந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் கட்டாயப்படுத்துகிறது.


CPCB ஒவ்வொரு குழுவிற்கும் ஆண்டு இலக்குகளை வழங்கியது. இந்த இலக்குகள் EPR சான்றிதழ்களை வர்த்தகம் செய்ய அனுமதிக்கின்றன. கழிவு மேலாண்மையில் முதன்முறையாக இந்த வர்த்தக சான்றிதழ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


நிச்சயமாக, EPR சான்றிதழ் வர்த்தகம் (certificate trade), உமிழ்வு சான்றிதழ் (emission certificate) வர்த்தகத்தைப் போன்றது. இருப்பினும், EPR சான்றிதழின் விலையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) நிர்ணயிக்கிறது.


புதிய விதிகளின் கீழ், உற்பத்தியாளர்கள் EPR சான்றிதழ்களை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி தங்கள் நடப்பு ஆண்டின் பொறுப்பையும் பூர்த்திசெய்யலாம். முந்தைய ஆண்டுகளிலிருந்து எஞ்சியிருக்கும் எந்தவொரு பொறுப்பையும் அவர்கள் ஈடுகட்டவும் அவற்றைப் பயன்படுத்தலாம்.


பதிவுசெய்யப்பட்ட மறுசுழற்சி செய்பவர்கள் சான்றிதழ்களை உருவாக்கலாம். CPCB-ன் இணையவழி போர்டல் மூலம் இந்த சான்றிதழ்களை உற்பத்தியாளர்களுக்கு விற்கலாம். CPCB-ன் படி, இந்த அமைப்பு மறுசுழற்சி செய்பவர்களுக்கு நிதிக்கான ஊக்கத்தொகையை வழங்குகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மின்னணுக்-கழிவுகளை மறுசுழற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது. இது முறையான மின்னணுக் கழிவு மேலாண்மை அமைப்பில் அவர்களைச் சேர்க்க உதவுகிறது.


இருப்பினும், சான்றிதழ்கள் மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களால் நடத்தப்படும் CPCB-ல் சுற்றுச்சூழல் தணிக்கைக்கு உட்பட்டவை. உண்மையில், அது நடக்குமா என்பது ஒரு கேள்விக்குறி. ஜூலை 2024 இல், குஜராத் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பிளாஸ்டிக் துறைக்காக மறுசுழற்சி செய்பவர்களால் உருவாக்கப்பட்ட சுமார் 600,000 போலி EPR சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


CPCB கூறியது போல், தங்கள் இலக்குகளை அடையாத உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு எனப்படும் அபராதத்தை விதிகள் வழங்குகின்றன. EPR சான்றிதழ் வர்த்தக முறையுடன், உற்பத்தியாளர்கள் தங்கள் இலக்குகளைத் தவறவிடுவது சாத்தியமில்லை.


EPR சான்றிதழ் வர்த்தகம் 2024-ம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டுமே தொடங்கியதால், மின்னணு கழிவுத் துறையில் அதன் தாக்கத்தை அளவிடுவது கடினம். மின்னணுத் துறை இந்த வர்த்தக முறையைப் பற்றி சந்தேகம் கொண்டுள்ளது.


ஏற்கனவே மிகவும் விலை-போட்டி நிறைந்த மின்னணு மற்றும் மின்சார சந்தையில் இது செலவுகளை அதிகரிக்கும் என்பது அவர்களின் முதல் கவலை. இரண்டாவது கவலை என்னவென்றால், மறுசுழற்சி செய்பவர்களுக்கு பெரிய ஊக்கத்தொகை கிடைக்கிறது. ஆனால், மிகக் குறைந்த பொறுப்பு உள்ளது. மூன்றாவது கவலை என்னவென்றால், சந்தை விலையை தீர்மானிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, CPCB சான்றிதழ் விலையை தன்னிச்சையாக நிர்ணயிக்கிறது.


புதிய விதிகள் கூட, பதிவுசெய்யப்பட்ட மறுசுழற்சி செய்பவர் அல்லது உற்பத்தியாளரிடம் மின்னணுக் கழிவுகளைத் திருப்பித் தர வாடிக்கையாளரைத் தள்ளுவதற்குத் தேவையான உந்துதலை வழங்கவில்லை என்று பங்குதாரர்கள் கூறுகின்றனர்.


சில்லறை விற்பனையாளர்கள் மின்னணுக் கழிவுகளை திரும்பப் பெறுவதில்லை என்பது ஒரு முக்கிய காரணம். முறைசாரா துறை, முறையான துறையை விட சிறந்த விலைகளை வழங்குகிறது. மேலும், பதிவுசெய்யப்பட்ட மறுசுழற்சி செய்பவர்களிடம் மின்னணுக் கழிவுகளை சேகரிக்க முகவர்களின் வலையமைப்பு இல்லை. டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களிலும் இது உண்மை. இந்த இரண்டு நகரங்களும் இந்தியாவின் மின்னணுக் கழிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்கின்றன.


அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல நாடுகளில் சில்லறை விற்பனையாளர் மட்டத்தில் கட்டாயமாக திரும்பப் பெறுதல் மற்றும் EPR சான்றிதழ் வர்த்தகத்தை இணைக்கும் அமைப்புகள் உள்ளன. இது அவர்களின் மின்னணுக் கழிவுகளில் 80%-க்கும் அதிகமானவற்றை நிர்வகிக்க உதவியுள்ளது. ஒப்பிடுகையில், இந்தியா சுமார் 33% மட்டுமே நிர்வகிக்கிறது. மேற்கத்திய உலகில், விதிகளைப் பின்பற்றாவிட்டால் நிறுவனங்கள் கடுமையான அபராதங்களை எதிர்கொள்கின்றன.


எதிர்காலத்தில், இந்தியாவின் மின்னணுக் கழிவு உத்தி ஒரு வட்டப் பொருளாதாரத்தை (circular economy) நோக்கி நகர்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது தயாரிப்புக்கான நிலையை நீட்டிக்கவும் கழிவுகளைக் குறைக்கவும் உதவும்.


Original article:
Share:

பணவீக்கத்தின் ‘அடிப்படை’ மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் விகிதக் குறைப்பு முடிவுகள். -ஹரிஷ் தாமோதரன்

 நீண்டகாலமாக, பணவீக்கம் முக்கியமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஏற்பட்டது. இதன் காரணமாக, மக்கள் இந்திய ரிசர்வ் வங்கி 'முதன்மை' (headline) பணவீக்கத்திற்கு பதிலாக 'அடிப்படை' (core) பணவீக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இப்போது, ​​உணவுப் பணவீக்கமானது முதன்மை (headline) மற்றும் அடிப்படை (core) பணவீக்கம் இரண்டையும் விடக் குறைவாக உள்ளது. இதன் அர்த்தம் என்ன?


பிப்ரவரி 8, 2023 முதல் பிப்ரவரி 6, 2025 வரை, இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகளுக்கான அதன் முக்கிய குறுகிய கால 'ரெப்போ' (repo) கடன் விகிதத்தை 6.5% ஆக மாற்றாமல் வைத்திருந்தது.


இந்த கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தில், அதிகாரப்பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டை (consumer price index (CPI)) அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 5.2% ஆக இருந்தது. நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (consumer food price index (CFPI)) இன்னும் அதிகமாக, 7.6%-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில், முக்கியப் பணவீக்க விகிதம் (core inflation rate) 4.1% மட்டுமே. வருடாந்திர விலை உயர்வைக் கணக்கிட, முக்கிய பணவீக்கம் உணவு மற்றும் எரிபொருள் விலைகளை நுகர்வோர் விலைக் குறியீட்டிலிருந்து (CPI) விலக்குகிறது.


இந்த ஒப்பீட்டளவில் குறைந்த முக்கிய பணவீக்கம் RBI-ன் பணவியல் கொள்கைக் குழு (monetary policy committee) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு ஒரு நல்ல காரணம் என்று பலர் கூறினர்.


உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம் பெரும்பாலும் விநியோகம்-சார்ந்த காரணிகளால் ஏற்படுகிறது. மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் பயிர் உற்பத்தியைப் பாதிக்கும் பிற வானிலை மாற்றங்கள் இதில் அடங்கும். இதில், முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் உற்பத்திக்கான கொள்கைகளையும் பாதிக்கிறது.


உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம் இயற்கையாகவே மிகவும் நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளது. வட்டி விகிதங்கள் முக்கியமாக கடன் செலவுகள் மற்றும் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவையை பாதிக்கும் என்பதால் பணவியல் கொள்கையால் அதை நன்றாகக் கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த 'பொது' நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கத்திற்குப் பதிலாக 'அடிப்படை' பணவீக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.


பிப்ரவரி 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை இரண்டு முறை, ஒவ்வொரு முறையும் 0.25 சதவீத புள்ளிகள் குறைத்து, அதை 6%-ஆகக் குறைத்துள்ளது. இருப்பினும், முன்னதாகவே விகிதத்தைக் குறைக்க அழுத்தம் இருந்தது. நவம்பர் 14 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் போது உணவு பணவீக்கத்தைக் கருத்தில் கொள்வது தவறு என்று கூறினார். ஜூன் 2024-க்குள் முக்கிய பணவீக்கம் (core inflation) 3.1%-ஆகக் குறைந்திருந்தாலும், இந்திய ரிசர்வ் வங்கி விகிதங்களைத் தளர்த்துவதைத் தாமதப்படுத்தியதாகவும் நிதி அமைச்சகத்தின் 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


நடைமுறையில் தலைகீழ் மாற்றம்


நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (Consumer Food Price Index (CFPI)) பணவீக்கம் பொதுவாக பொது CPI பணவீக்கத்தைவிட அதிகமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. பொது CPI பணவீக்கமும், அடிப்படை பணவீக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இந்த நடைமுறை ஜூலை 2023 முதல் ஜனவரி 2025 வரை நீடித்தது.


ஆனால் கடந்த இரண்டு மாதங்கள் இதற்கு நேர்மாறாக இருந்தன. ஏப்ரல் 2025-ல், CFPI பணவீக்கம் 1.8%-ஆக இருந்தது. இது அக்டோபர் 2021-க்குப் பிறகு அதன் மிகக் குறைந்த அளவாகும். இது ஜூலை 2019-க்குப் பிறகு மிகக் குறைந்த 3.2%-ஆக இருந்த முதன்மை பணவீக்கத்தைவிடக் குறைவாக இருந்தது. இதற்கிடையில், முக்கிய பணவீக்கம் 4.2%-ஆக இருந்தது. இது செப்டம்பர் 2023-க்குப் பிறகு மிக உயர்ந்ததாகும்.


எளிமையாகச் சொன்னால், இந்திய ரிசர்வ் வங்கி இப்போது முதன்மை பணவீக்கத்திற்குப் பதிலாக முக்கிய பணவீக்கத்தில் கவனம் செலுத்தினால், அது வட்டி விகிதங்களைக் குறைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். முக்கிய பணவீக்கம் RBI-ன் நடுத்தர கால இலக்கான 4%-ஐ விட அதிகமாக உள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் உணவுப் பணவீக்கத்தின் இரண்டு முக்கிய அத்தியாயங்களை இந்தியா சந்தித்துள்ளது. இருவரும் விநியோக-சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தன.


முதலாவது, பிப்ரவரி 2022-இன் பிற்பகுதியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இது சர்வதேச விவசாயப் பொருட்களின் விலைகளை உயர்த்தியது. UN உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization(FAO)) உலக உணவு விலைக் குறியீடு (அடிப்படை மதிப்பு: 2014-16=100) மார்ச் 2022-ல் இதுவரை இல்லாத அளவுக்கு 160.2 புள்ளிகளுக்கு உயர்ந்தது.


இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பணவீக்கத்தை ஏற்படுத்திய ‘போர்’ காரணமாக உலகளாவிய விநியோகத் தடைகள் 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் தளர்த்தப்பட்டபோதும், இரண்டாவது பிரச்சனை ஏற்பட்டது. இது 'வானிலை'யுடன் தொடர்புடையது. இதில், குறிப்பாக ஏப்ரல் 2023 முதல் மே 2024 வரை எல் நினோ நிகழ்வு (El Niño event) ஆகும்.


எல் நினோ (El Niño) என்பது ஈக்வடார் (Ecuador) மற்றும் பெருவுக்கு (Peru) அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதைக் குறிக்கிறது. இது அந்தப் பகுதியில் அதிக ஆவியாதல் மற்றும் மேகங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே நேரத்தில், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா குறைந்த மழையைப் பெறுகின்றன. எல் நினோ என்பது பொதுவாக இந்தியாவில் பலவீனமான மழையைக் குறிக்கிறது.


2023-24-ஆம் ஆண்டின் வலுவான எல் நினோ, வழக்கத்தைவிட பலவீனமான பருவமழையை ஏற்படுத்தியது. பருவமழைக்குப் பிந்தைய மற்றும் குளிர்கால மழைகளும் இயல்பைவிட குறைவாக இருந்தன. குளிர்காலம் தாமதமாகவும் வழக்கத்தைவிட குறைவாகவும் இருந்தது. அதன் பிறகு, மார்ச் நடுப்பகுதியிலிருந்து ஜூன் 2024 வரை வெப்ப அலைகள் ஏற்பட்டன. இந்த வானிலை மாற்றங்கள் பயிர் உற்பத்தியைக் குறைத்தன. இதன் விளைவாக, உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன. இதன் விளைவுகள் ஜூலை 2023 முதல் 2024 முழுவதும் உணரப்பட்டன.


எதிர்பார்ப்பு என்ன?


எல் நினோவின் முடிவு கடந்த ஆண்டு சராசரியைவிட அதிகமான பருவமழையை ஏற்படுத்தியது. பின்னர், லேசான லா நினா ஏற்பட்டது. லா நினா என்பது எல் நினோவிற்கு எதிரானது. இது பொதுவாக இந்தியாவில் நல்ல மழை மற்றும் குளிரான வெப்பநிலையைக் கொண்டுவருகிறது. இந்த நிகழ்வுகள் 2024-25-ல் விவசாயத்தை மேம்படுத்த உதவியது.


காரீஃப் பயிருடன் நன்மைகள் தெரியத் தொடங்கின. இந்தப் பயிர் பருவமழைக் காலத்தில் பயிரிடப்பட்டு 2024-ம் ஆண்டின் பிற்பகுதியில் சந்தைகளுக்கு வந்தது. குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் வளர்க்கப்படும் ஒரு நல்ல ராபி பயிரும் இருந்தது. இதன் காரணமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் குறைந்துள்ளது.


அடுத்த தென்மேற்கு பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) கணித்துள்ளது. 2025-ம் ஆண்டில் எல் நினோ எதிர்பார்க்கப்படுவதில்லை. FAO உணவு விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 128.3 புள்ளிகளாக இருந்தது, இது மார்ச் 2022-ல் அதன் உச்சத்தைவிட மிகக் குறைவு. அமெரிக்க வேளாண்மைத் துறை 2025-26-ஆம் ஆண்டில் கோதுமை, அரிசி, சோளம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாதனை உற்பத்தியை எதிர்பார்க்கிறது.


இந்த காரணிகள் அனைத்தும் எதிர்காலத்தில் உணவுப் பணவீக்கம் குறைவாகவே இருக்கும் என்பதைக் குறிக்கின்றன.

எண்ணெய் விலைகள் சிறப்பாக உள்ளன. பிரெண்ட் கச்சா எண்ணெய் இப்போது பீப்பாய்க்கு $65-க்கு சற்று அதிகமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, அது $75-ஆக இருந்தது. கடந்த ஆண்டு, இந்த நேரத்தில் $83-ஆக இருந்தது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் மட்டும் முன்னேற்றம் இல்லை.


மூன்று மாதங்களுக்கு முன்பு, ரூபாய் வேகமாக சரிந்து கொண்டிருந்தது. பிப்ரவரி 10 அன்று ஒரு அமெரிக்க டாலருக்கு 87.99 ரூபாய் என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. அதே நேரத்தில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. செப்டம்பர் 27 அன்று $704.89 பில்லியனில் இருந்து ஜனவரி 17 அன்று $623.98 பில்லியனாக உயர்ந்தது.


அமெரிக்க அதிபர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியது. டொனால்ட் டிரம்ப் அதிபரானபோது, ​​அக்டோபர் 2024 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $22.7 பில்லியனை இந்தியாவின் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் இருந்து வெளியேற்றினர். பின்னர், டிரம்பின் "பரஸ்பர வரிவிதிப்பு” (reciprocal tariff) கொள்கைகள் இன்னும் அதிகமான பணத்தை வெளியேறச் செய்தன. அதில் ஏப்ரல் மாதத்தில், $2.34 பில்லியன் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில வாரங்களில் நிச்சயமற்ற தன்மைகள் சற்று குறைந்துள்ளன. வெள்ளிக்கிழமை, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சுமார் 85.5-ஆக முடிவடைந்தது. மே 9-ம் தேதி நிலவரப்படி, அந்நிய செலாவணி இருப்பு $690.62 பில்லியனாக உயர்ந்தது. இந்த மாதம் இதுவரை, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPI)) நிகரத் தொகை $1.3 பில்லியனை வாங்கியுள்ளனர்.


உணவுப் பொருட்களின் விலைகள் நன்கு கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அடிப்படை பணவீக்கமும் (core inflation) கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ரூபாய் மதிப்பு நிலையாக உள்ளது. டாலருக்கு எதிரான அதன் மதிப்பு 90-க்கு மேல் செல்லவில்லை, அது முன்பு இருந்ததைப் போலவே இருந்தது. இதன் காரணமாக, அதிக விலைகளை இறக்குமதி செய்வதால் பலவீனமான ரூபாயால் ஏற்படும் பணவீக்க ஆபத்து இப்போதைக்கு குறைவாகவே உள்ளது.

இரண்டாவது காரணி சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து மலிவான இறக்குமதிகளுக்கான வாய்ப்பு ஆகும். டிரம்பின் வரிகள் காரணமாக இந்த நாடுகள் தங்கள் ஏற்றுமதிகளை அமெரிக்காவிலிருந்து திருப்பிவிடுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில், இந்தியா பல சீனப் பொருட்களுக்கு டம்பிங் எதிர்ப்பு இறக்குமதி வரிகளை (anti-dumping import duties) [மிகவும் மலிவாக விற்கப்படும் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி] விதித்துள்ளது. இந்தப் பொருட்களில் அலுமினியத் தகடுகள், வெற்றிட காப்பிடப்பட்ட குடுவைகள், பாலிவினைல் குளோரைடு பேஸ்ட் பிசின், சோலார் கிளாஸ் மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு ஆகியவை அடங்கும். சில தட்டையான எஃகு பொருட்களுக்கு இந்தியா 12% பாதுகாப்பு வரியையும் சேர்த்துள்ளது.


நிலையான ரூபாய் மதிப்பு, சீன இறக்குமதிகளால் ஏற்படும் குறைந்த பணவீக்கம், மென்மையான உலகளாவிய எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் மற்றும் சிறந்த உள்நாட்டு உணவு விநியோகம் ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கி அதன் வரவிருக்கும் கொள்கை மதிப்பாய்வுகளில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும். உணவு அல்லது முக்கிய பணவீக்கம் பற்றி இந்திய ரிசர்வ் வங்கி அதிகம் கவலைப்படக்கூடாது.


Original article:
Share:

அம்ரித் பாரத் நிலையத் திட்டம் (Amrit Bharat Station Scheme) என்றால் என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் :


அமிர்த பாரத் நிலையத் திட்டம் (Amrit Bharat Station Scheme) 2022-ல் தொடங்கப்பட்டது. இது 1,337 இரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து "நகர மையங்களாக" (city centres) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்படும் சில முக்கியமான நிலையங்களில் ராஜஸ்தானில் உள்ள தேஷ்னோக் (Deshnoke) மற்றும் மண்டல்கர் (Mandalgarh), குஜராத்தில் டகோர் (Dakor) மற்றும் மோர்பி (Morbi), உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூர் சந்திப்பு (Saharanpur Junction) மற்றும் கோவர்தன் நிலையம் (Govardhan Station) ஆகியவை அடங்கும். தெலுங்கானாவில் பேகம்பேட் (Begumpet), பீகாரில் தாவே சந்திப்பு (Thawe Junction), மத்தியப் பிரதேசத்தில் ஷாஜாபூர் (Shajapur), தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் (Srirangam) மற்றும் கர்நாடகாவில் தார்வாட் (Dharwad) ஆகியவை பிற நிலையங்களாகும்.


இந்த நிலையங்கள் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் சுத்தமான கழிப்பறைகள் (clean toilets), மின்தூக்கி (lifts), நகரும் படிக்கட்டுகள் (escalators) மற்றும் இலவச இணையசேவை (free Wi-Fi) ஆகியவை அடங்கும். மேலும், இதில் பயணிகளுக்குத் தகவல் அளிக்க சிறந்த அமைப்புகளும் உள்ளன. பயணிகளுக்கு வசதியான காத்திருப்பு பகுதிகள் மற்றும் உயர்தர ஓய்வறைகள் (executive lounges) இருக்கும். நிலையங்களில் பெரிய திறந்தவெளி பகுதிகள் (bigger circulating area) மற்றும் ஒரு பிரமாண்டமான நுழைவாயில் (grand porch) இருக்கும். ஒவ்வொரு கட்டிடத்தின் வடிவமைப்பும் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது.


பெரும்பாலான நிலையங்கள் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (Engineering, Procurement, and Construction (EPC)) மாதிரியைப் பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. இந்த மாதிரியில், ஒரு ஒப்பந்ததாரர் முழு திட்டத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை நிர்வகிக்கிறார். இருப்பினும், புனே, டெல்லி சந்திப்பு, விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் போன்ற 20 பெரிய திட்டங்கள், அதற்கு பதிலாக பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership (PPP)) மாதிரியைப் பயன்படுத்துகின்றன.


உங்களுக்கு தெரியுமா?


டிசம்பர் 23, 2022 அன்று தொடங்கப்பட்ட அமிர்த பாரத் நிலையத் திட்டம், நவீன முகப்பு, ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து இயக்கம், நல்ல வெளிச்சம், அழகியல் பிரமாண்டமான நுழைவாயில்கள், இயற்கையை இரசித்தல் மற்றும் உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரம், சைகைகள் மற்றும் மேற்கூரை பிளாசாக்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலையத்தை “நகர மையமாக” உருவாக்கத் திட்டமிடுகிறது.



Original article:
Share:

வங்கதேசம் மற்றும் இந்தியா உறவில் சமீபகாலமாக ஏற்பட்ட நெருக்கடிக்கான காரணங்கள் என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்:


  • இந்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பகுதியான வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், சனிக்கிழமையன்று, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் மீன், இயற்கை எரிவாயு, சமையல் எண்ணெய் மற்றும் வெட்டியெடுக்கப்பட்ட தனிமங்கள் ஆகியவற்றிற்கு சில இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று அறிவித்தது. மேலும், இந்தியா வழியாக நேபாளம் அல்லது பூட்டானுக்குச் செல்லும் வங்கதேசப் பொருட்கள் இந்தக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாது.


  • வங்கதேச அரசாங்கத்தின் இடைக்கால தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பெய்ஜிங்கில் வடகிழக்கு இந்தியா கடலுக்கு நேரடி அணுகலைக் கொண்டிருக்கவில்லை என்றும், இந்தப் பிராந்தியத்திற்கு உதவக்கூடிய கடற்கரையைக் கொண்ட அருகிலுள்ள ஒரே நாடு வங்கதேசம் என்றும் கூறிய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் வருகின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.


  • அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் வடக்கு வங்காளத்தின் சில பகுதிகளில் உள்ள அனைத்து நில சுங்கச்சாவடிகள் மற்றும் சோதனைச் சாவடிகள் வழியாக வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் வரும் சில பொருட்களுக்கு இந்தியா இப்போது வரம்புகளை நிர்ணயித்துள்ளது.


  • தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஆயத்த ஆடைகள், மர தளவாடங்கள், பிளாஸ்டிக் மற்றும் PVC பொருட்கள், பழ இரசங்கள் மற்றும் காற்றடைத்த பானங்கள், வேகவைத்த சிற்றுண்டி, சிப்ஸ், இனிப்புகள் மற்றும் பருத்தி நூல் போன்றவை அடங்கும்.


  • இந்தியா, வங்காளதேசப் பொருட்களை அனைத்து நில மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாகவும் நுழைய அனுமதித்ததாகக் கூறுகிறது.


  • இந்தப் பிரச்சினை பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், வங்காளதேசம் இன்னும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகிலுள்ள அதன் நிலத் துறைமுகங்களில் இந்தியப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது.


  • வங்காளதேசத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தங்கள் உள்ளூர் பொருட்களை வங்காளதேசத்தில் எளிதாக விற்க முடியாது. அவர்கள் பெரும்பாலும் மூலப் பண்ணை பொருட்களை மட்டுமே விற்கிறார்கள். இதற்கிடையில், வங்காளதேசம் தனது தயாரிப்புகளை வடகிழக்கு சந்தைகளில் சுதந்திரமாக விற்க முடியும். இந்தியாவின் கூற்றுப்படி, இந்த நிலைமை நியாயமற்ற சார்புநிலையை உருவாக்குகிறது மற்றும் வடகிழக்கில் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியை பாதிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


  • தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக வங்கதேசம் உள்ளது. ஆசியாவில், வங்கதேசத்திற்கு இந்தியா இரண்டாவது பெரிய வர்த்தக நட்பு நாடாகும். 2023-24-ஆம் ஆண்டில், வங்கதேசம் இந்தியாவிற்கு 1.97 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்றது. அந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 14.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.


  • வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இரு நாடுகளுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. பல குடியேறிகள் அனுமதியின்றி எல்லையைக் கடக்கின்றனர். இது இந்திய எல்லை மாநிலங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இது வளங்களைப் பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்குகிறது. மியான்மரில் ரோஹிங்கியா நெருக்கடி காரணமாக இந்த பிரச்சனை மோசமாகியுள்ளது.


  • வங்கதேசத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. வங்கதேசம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு (Belt and Road project) திட்டத்தின் ஒரு பகுதியாகும். வங்கதேசத்தில் சீனாவின் ஈடுபாடு, பிராந்தியத்தில் இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்தி, அங்கு வலுவாக வளரும் அதன் திட்டங்களை நிறுத்தக்கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது.


Original article:
Share:

அரிய பூமி காந்தங்கள் என்றால் என்ன? - குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்:


  • இந்தியாவில் மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்கள் விரைவில் முக்கியமான பாகங்களின் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இது கார் சந்தையின் புதிய மற்றும் செலவு உணர்திறன் கொண்ட பகுதியில் விலைகள் அதிகரித்து உற்பத்தியை மெதுவாக்கும்.


  • சீனாவிலிருந்து அரிய பூமி காந்தங்களைப் பெறுவதை எளிதாக்க இந்திய கார் தொழில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.


  • அரிய பூமி காந்தங்கள் என்பவை நியோடைமியம்-இரும்பு-போரான் (neodymium-iron-boron (NdFeB)) எனப்படும் ஒரு வகை காந்தமாகும். இது மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானவை.  அவை மின்சார மோட்டார்கள் நன்றாகவும் சக்திவாய்ந்ததாகவும் செயல்பட உதவுகின்றன.  இதில் காரை நகர்த்தும் மோட்டார்கள் அடங்கும்.


  •  இந்த காந்தங்கள் பவர் ஸ்டீயரிங், வைப்பர்கள் மற்றும் பிரேக்குகள் போன்ற மின்சார வாகனங்களின் பிற பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காந்தங்களின் கிட்டத்தட்ட அனைத்து விநியோகங்களும் சீனா கட்டுப்பாட்டில் உள்ளது.


  • அரிய பூமி உலோகங்கள் சீனாவிற்கு வெளியே காணப்பட்டாலும், அவற்றை பயனுள்ள காந்தங்களாக செயலாக்குவதில் சீனா மிகவும் சிறந்து விளங்குகிறது. கடந்த காலத்தில், அமெரிக்காவும் ஜப்பானும் இந்த செயலாக்கத்தில் முன்னணியில் இருந்தன.


  • சமீபத்தில், அரசாங்க ஆதரவு காரணமாக ஜப்பான் மீண்டும் சில கனிமங்களை செயலாக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அமெரிக்காவும் இந்தியாவும் இன்னும் இந்த உலோகங்களுக்கு சீனாவை பெரிதும் நம்பியுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


  • 2023-24-ஆம் ஆண்டில், இந்தியா 2,270 டன் அரிய பூமி தனிமங்களை (rare earth elements (REEs)) இறக்குமதி செய்தது. இது 2019-20-ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 1,848 டன்களைவிட 23% அதிகம். இந்த இறக்குமதிகளில் பெரும்பாலானவை சீனா (65%) மற்றும் ஹாங்காங்கிலிருந்து (10%) வந்தன என்று சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.


  • 17 அரிய பூமி தனிமங்கள் உள்ளன. இவற்றில் லாந்தனைடுகள் எனப்படும் 15 (அணு எண் 57 முதல் 71 வரை), ஸ்காண்டியம் (21) மற்றும் யிட்ரியம் (39) ஆகியவை அடங்கும். REEகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: லேசான அரிய பூமி தனிமங்கள் (light rare earth elements (LREE)) மற்றும் கனமான அரிய பூமி தனிமங்கள் (heavy rare earth elements (HREE)).


  • இந்தியாவில் லாந்தனம், சீரியம், நியோடைமியம், பிரசியோடைமியம் மற்றும் சமாரியம் போன்ற சில அரிய பூமி தனிமங்கள் உள்ளன. ஆனால், டிஸ்ப்ரோசியம், டெர்பியம் மற்றும் யூரோபியம் போன்ற கனமான அரிய பூமி தனிமங்கள் இந்தியாவில் பெரிய அளவில் காணப்படவில்லை. இதன் காரணமாக, உலகின் அரிய பூமி தனிமங்களில் சுமார் 70% உற்பத்தி செய்யும் சீனா போன்ற நாடுகளை இந்தியா சார்ந்துள்ளது.


  • அவை "அரிதானவை" ("rare,") என்று அழைக்கப்பட்டாலும், இந்த தனிமங்கள் உண்மையில் பூமியின் மேலோட்டத்தில் பொதுவானவை. பிரச்சனை என்னவென்றால், அவை எளிதில் வெட்டி எடுக்கும் அளவுக்கு பெரிய அளவில் அரிதாகவே காணப்படுகின்றன. அரிய பூமி தனிமங்களைப் பிரித்தெடுப்பதும் செயலாக்குவதும் கடினம் மற்றும் விலை உயர்ந்தது. அவற்றைப் பிரித்து சுத்திகரிக்க மேம்பட்ட தொழில்நுட்பமும் திறமையான தொழிலாளர்களும் தேவை.


Original article:
Share: