உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 -குஷ்பூ குமாரி

 இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது, உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ல் கடந்த ஆண்டு நிலையிலிருந்து இரண்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்தியாவின் செயல்திறன் என்ன?


தற்போதைய செய்தி:


2025-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின் 19வது பதிப்பு, உலக பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்டது. இதன்படி 148 நாடுகளுக்கு உலகளாவிய பாலின இடைவெளி 68.8 சதவீதமாக உள்ளது. இது COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு வலுவான வருடாந்திர முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், தற்போதைய விகிதங்களில் முழு சமத்துவம் 123 ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 2024-ஆம் ஆண்டில் அனைத்து பரிமாணங்களிலும், பாலின சமத்துவம் உயர்ந்துள்ளது என்றும், 14 குறிகாட்டிகளில் 11-ல், கடந்த ஆண்டின் முடிவைவிட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் அறிக்கை காட்டுகிறது. எந்த நாடும் இன்னும் முழுமையான பாலின சமத்துவத்தை அடையவில்லை.


முக்கிய அம்சங்கள்:


1. உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு (Global Gender Gap Index) உலக பொருளாதார மன்றத்தால் (WEF) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு (Economic Participation and Opportunity), கல்வி சாதனை (Educational Attainment), சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு (Health and Survival) மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் (Political Empowerment) ஆகிய நான்கு முக்கிய பரிமாணங்களில் பாலின சமத்துவத்தின் தற்போதைய நிலை மற்றும் பரிணாமத்தை அளவிடுவதற்காக இது முதன்முதலில் 2006-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குறியீடு 0 மற்றும் 1-க்கு இடையில் உள்ளது. 1 முழுமையான சமத்துவத்தைக் குறிக்கிறது. பாலின இடைவெளி என்பது முழு சமத்துவதில் உள்ள தூரமாகும்.


2. 2025-ஆம் ஆண்டு குறியீட்டில் உள்ளடக்கப்பட்ட 148 பொருளாதாரங்களில், சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு பாலின இடைவெளி 96.2% ஆகவும், கல்வி சாதனை இடைவெளி 95.1% ஆகவும், பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு இடைவெளி 61.0% ஆகவும், அரசியல் அதிகாரமளித்தல் இடைவெளி 22.9% ஆகவும் குறைந்துள்ளது" என்று அறிக்கை சுட்டிக்காட்டியது. பெண்கள் உலகளாவிய பணியாளர்களில் 41.2 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆனால், பெண்கள் உயர் தலைமைப் பதவிகளில் வெறும் 28.8 சதவீதத்தை மட்டுமே வகிப்பதால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இடைவெளி நீடிக்கிறது.


3. ஐஸ்லாந்து தொடர்ந்து 16-வது ஆண்டாக உலகின் மிகவும் பாலின-சமத்துவ பொருளாதாரமாக உள்ளது. பாலின இடைவெளியில் 92.6% வைத்து உள்ளது. 90% சமத்துவத்தை எட்டிய ஒரே பொருளாதாரமாக ஐஸ்லாந்து உள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து, நோர்வே, ஐக்கிய ராச்சியம் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. தெற்காசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக வங்கதேசம் உருவெடுத்து, உலகளவில் 75 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளது. நேபாளம் 125-வது இடத்திலும், இலங்கை 130-வது இடத்திலும், பூட்டான் 119-வது இடத்திலும், மாலத்தீவுகள் 138-வது இடத்திலும், பாகிஸ்தான் 148-வது இடத்திலும் உள்ளன.


இந்தியாவின் செயல்திறன்


4. இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது, கடந்த ஆண்டு நிலையிலிருந்து இரண்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் முழுமையான அடிப்படையில் +0.3 புள்ளிகள் மேம்பட்டுள்ளது. வெறும் 64.1 சதவீத சமத்துவ மதிப்பெண்ணுடன், இந்தியா தெற்காசியாவில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள நாடுகளில் ஒன்றாகும். 2024-ஆம் ஆண்டில், இந்தியா 129-வது இடத்தில் இருந்தது.


5. பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பில் (Economic Participation and Opportunity), இந்தியாவின் மதிப்பெண் +0.9 சதவீத புள்ளிகள் மேம்பட்டு 40.7 சதவீதமாக உள்ளது. மதிப்பிடப்பட்ட வருமானத்தில் சமத்துவம் 28.6 சதவீதத்திலிருந்து 29.9% உயர்ந்துள்ளது. இது துணைக் குறியீட்டு மதிப்பெண்களில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


6. கல்வி சாதனையில், இந்தியா 97.1 சதவீதம் பெற்றுள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது கல்வியறிவு மற்றும் மூன்றாம் நிலை கல்வி சேர்க்கையில் பெண்களின் பங்கில் நேர்மறையான மாற்றங்களை பிரதிபலிக்கிறது. இது ஒட்டுமொத்த துணைக் குறியீட்டுக்கு நேர்மறையான மதிப்பெண் மேம்பாடுகளை ஏற்படுத்துகிறது.


7. இந்தியா பிறப்பின் போது பாலின விகிதம் மற்றும் ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றில் மேம்பட்ட மதிப்பெண்களால், சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வில் அதிக சமத்துவத்தைப் பதிவு செய்கிறது" என்று அறிக்கை கூறியது. இருப்பினும், மற்ற நாடுகளைப் போலவே, ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் ஒட்டுமொத்தமாகக் குறைந்த போதிலும், ஆரோக்கியமான ஆயுட்காலத்தில் சமத்துவம் பெறப்படுகிறது என்று அறிக்கை கூறியது.


8. அரசியல் அதிகாரமளித்தல் அடிப்படையில், இந்தியா கடந்த பதிப்பிலிருந்து சமத்துவத்தில் சிறிது குறைவை (-0.6 புள்ளிகள்) அனுபவித்துள்ளது. பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 14.7 சதவீதத்திலிருந்து 2025இல் 13.8 சதவீதமாக குறைந்துள்ளது, இது தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக குறிகாட்டி மதிப்பெண்ணை 2023 அளவுகளுக்குக் கீழே குறைக்கிறது. இதேபோல், அமைச்சர் பதவிகளில் பெண்களின் பங்கு 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.


பாலினம் குறித்த முக்கியமான குறியீடுகள்:                                                         


பாலின சமத்துவமின்மை குறியீடு (Gender Inequality Index (GII)): பாலின சமத்துவமின்மை குறியீட்டை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) அதன் மனித மேம்பாட்டு அறிக்கையில் வெளியிடுகிறது. இது இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் சந்தை ஆகிய மூன்று முக்கிய பரிமாணங்களில் பாலின ஏற்றத்தாழ்வுகளை அளவிடுகிறது. பெண்களும் ஆண்களும் சமமாகப் போட்டியிடும் 0 முதல், அனைத்து அளவிடப்பட்ட பரிமாணங்களிலும் ஒரு பாலினம் முடிந்தவரை மோசமாகப் போட்டியிடும் 1 வரை மதிப்பெண் மாறுபடும். இந்தியா 0.403 GII மதிப்பைக் கொண்டுள்ளது, 2023-ல் 172 நாடுகளில் 102-வது இடத்தைப் பிடித்துள்ளது.


பாலின மேம்பாட்டு குறியீடு (Gender Development Index (GDI): இது UNDP-ஆல் வெளியிடப்பட்டது. மனித வளர்ச்சியின் மூன்று அடிப்படை பரிமாணங்களில் சாதனைகளில் பாலின ஏற்றத்தாழ்வுகளை GDI அளவிடுகிறது: சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வளங்களின் மீதான கட்டுப்பாடு, இது பெண் மற்றும் ஆண் மதிப்பிடப்பட்ட வருவாய் மூலம் அளவிடப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு மனித வள மேம்பாட்டு அறிக்கையின் படி, இந்தியாவிற்கான 2023-ஆம் ஆண்டு பெண்களின் மனித வள மேம்பாட்டு மதிப்பு 0.631 ஆகும். இது ஆண்களுக்கு 0.722 உடன் ஒப்பிடும்போது, ​​பாலின மேம்பாட்டு குறியீடு மதிப்பு 0.874 ஆகும்.


உலகளாவிய பாலின சமத்துவ குறியீடு (Global Gender Parity Index (GGPI)): இது மனித வளர்ச்சியின் நான்கு பரிமாணங்களில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் சாதனைகளின் நிலையை மதிப்பிடுவதற்காக UNDP மற்றும் UN பெண்கள் உருவாக்கிய ஒரு கூட்டுத் திட்டமாகும். வாழ்க்கை மற்றும் நல்ல ஆரோக்கியம்; கல்வி, திறன் மேம்பாடு மற்றும் அறிவு; உழைப்பு மற்றும் நிதி உள்ளடக்கம்; மற்றும் முடிவெடுப்பதில் பங்கேற்பு போன்றவைகள் மதிப்பிடப்படுகின்றன.


பெண்கள் அதிகாரமளிப்பு குறியீடு (Women’s Empowerment Index (WEI)): இது ஐந்து பரிமாணங்களில் பெண்களின் அதிகாரமளிப்பின் அளவை அளவிடுவதற்காக UNDP மற்றும் UN பெண்கள் உருவாக்கிய ஒரு கூட்டு குறியீடாகும். சுகாதாரம், கல்வி, உள்ளடக்கம், முடிவெடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவைகளை மதிப்பிடுகிறது. 1-க்கு நெருக்கமான மதிப்பு ஐந்து பரிமாணங்களில் அதிக அதிகாரமளிப்பைக் குறிக்கிறது. மேலும், 0-க்கு நெருக்கமான மதிப்பு குறைந்த அதிகாரமளிப்பைக் குறிக்கிறது. இதில், இந்தியாவின் மதிப்பெண் 0.52 ஆகும்.


Original article:

Share:

இந்தியாவில் கோவிட்-19 பரவல் மீண்டும் எழுச்சி பெறுகிறது - இதன் பொருள் என்ன? -எம்.எஸ். சேஷாத்ரி, டி. ஜேக்கப் ஜான்

 சமீபத்தில் பதிவான COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,000 ஆகும். இந்த அதிக எண்ணிக்கை முக்கியமாக அதிகரித்த சோதனை மதிப்பீட்டு அளவுகளின் (volume of testing) காரணமாகும். இது மக்கள்தொகையில் தொற்று அல்லது நோயின் உண்மையான அளவைக் காட்டவில்லை.


கோவிட்-19 தொற்றுநோயை ஏற்படுத்திய SARS-Co-V2 உலகெங்கிலும் உள்ள மக்களை பல வழிகளில், சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக அளவிட முடியாத பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்றுநோய் சுமார் 3 ஆண்டுகள் நீடித்தது. இந்த தொற்றின் ஒவ்வொரு அலையும் வைரஸின் வெவ்வேறு மாறுபாட்டால் இயக்கப்படுகிறது.


கோவிட் நிலைகள் மற்றும் சுகாதார தாக்கம்


2020-ம் ஆண்டில், கோவிட் தொற்றின் முதல் அலை வுஹான் வைரஸால் (Wuhan virus) ஏற்பட்டது. இந்த வைரஸ் கடுமையான நோய்க்கு வழிவகுத்தது. அதாவது, இது குறைந்த ஆக்ஸிஜன் அளவு (hypoxia), இரத்த உறைவு (clotting) மற்றும் இரத்தப்போக்கு (bleeding) போன்ற பிரச்சனைகள் மற்றும் ஒப்பீட்டளவில் மிதமான இறப்பு போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தியது. இந்தியாவில், இந்த தொற்றுநோயின் அலை மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தொடங்கி, செப்டம்பரில் உச்சத்தை எட்டியது. ஜனவரி 2021-ல் நோயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.


2021-ம் ஆண்டில் இரண்டாவது அலை டெல்டா மாறுபாடு (Delta variant) காரணமாக ஏற்பட்டது. இது மிக வேகமாக பரவி, இன்னும் கடுமையான நோயை உருவாக்கியது. பிப்ரவரியில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை அடைந்து, ஜூன் மாதத்திற்குள் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த மாதங்களில் அது சுகாதார சேவைகளை விட அதிகமாக பரவி, மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.


COVID-19-ன் போது தங்களின் அனுபவங்களை நாங்கள் அனைவரும் நினைவில் கொள்கிறோம். தங்களில் சிலர் நோய்வாய்ப்பட்டது மற்றும் சிலர் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டது, பல முதியவர்கள் தனிமையில் இறந்தனர். இந்த சூழ்நிலையில்  தடுப்பூசிகளை எடுக்கலாமா, எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து நாங்கள் கடினமான முடிவுகளை எதிர்கொண்டோம். ஊரடங்கு மற்றும் பள்ளிகள் செயல்பாடு இல்லாமல் இருந்தது. இந்த நினைவுகள் கூட எங்கள் நினைவில் இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஆழ் மனதில் உள்ளன. 


சமீபத்திய நாட்களில், COVID-19 மீண்டும் எழுச்சி பெறுவது பற்றிய செய்திகளுடன், அந்த பயங்கரமான நினைவுகள் வெளிப்படுகின்றன. மின்னணு ஊடகங்கள் இதை ஒவ்வொரு நாளும் தெரிவிக்கின்றன. மற்றொரு அலை விரைவில் வரக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மைகளைப் பார்த்தால், மற்றொரு அலை சாத்தியமில்லை.


மூன்றாவது அலை ஓமிக்ரான் மாறுபாடு (Omicron variant) காரணமாக ஏற்பட்டது. இது ஜனவரி 2022-ல் தொடங்கியது. இது பிப்ரவரியில் அதன் உச்சத்தை அடைந்து மார்ச் மாதத்திற்குள் குறைந்தது. தொற்றுநோய் 2022 நடுப்பகுதியில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், ஓமிக்ரான் மாறுபாடு உலகளவில் நிலைத்துள்ளது. இது தற்போது 'வட்டார அளவில்' (endemic) வகை மாறுபாடாக உள்ளது. இதன் பொருள் வைரஸ் இன்னும் பரவுகிறது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே.


தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இப்போது ஒரு வைரஸ் அதிகமாக பரவுகிறது. மூன்றாவது அலை லேசான நோயை மட்டுமே ஏற்படுத்தியது என்பதை பெரும்பாலான மக்கள் மறந்துவிட்டார்கள். தற்போதைய தொற்றுகளின் அதிகரிப்பு ஓமிக்ரான் துணை மாறுபாடு Omicron sub-variants) காரணமாக ஏற்படுகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது நமக்கு இருந்த பயம் இனி தேவையில்லை.


இந்தியாவில் COVID-19 தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருவதால், தடுப்பூசிக்கான இருப்பு நிலைமையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.


மாறுபாடுகள் (Variants) மற்றும் நோய் வடிவங்கள் (disease patterns)


COVID-19-ஐ ஏற்படுத்தும் வைரஸ் SARS-CoV-2, தொடர்ந்து உருமாற்றம் அடைகிறது. இந்த உருமாற்றங்களில் பெரும்பாலானவை புதிய உருமாற்றங்களை உருவாக்குகின்றன, அவை அதிகம் பாதிக்காது. அவை, முக்கியமாக மூலக்கூறு வைராலஜிஸ்டுகளுக்கு (molecular virologists) சுவாரஸ்யமானவை. கிரேக்க எழுத்துக்களின் பெயரிடப்பட்ட சில வகைகள் வைரஸ்கள், பொது சுகாதார கவனத்தை ஈர்த்தன. ஆனால், அவை மிகவும் ஆபத்தானவை அல்ல.


பீட்டா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய மூன்று வைரஸ் வகைகள் குறிப்பாக கவலைக்குரியவையாக மாறியது. இவை, உண்மையான வுஹான் வைரஸிலிருந்து (Wuhan virus) வந்தவை. இந்த மாறுபாடுகள் மிக எளிதாகப் பரவி, முந்தையதைவிட நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மாறுபாடு முந்தைய மாறுபாடுகளை மாற்றியது. பின்னர், ஓமிக்ரான் டெல்டா மாறுபாட்டை மாற்றியது.


தொற்றின் தன்மை அல்லது பரவும் விதம் ஆகியவற்றை அளவிட முடியும். ஒரு பாதிக்கப்பட்ட நபரால் பாதிக்கப்பட்ட நபர்களின் சராசரி எண்ணிக்கை 'இனப்பெருக்க எண்' (reproduction number) R எனக் குறிக்கப்படுகிறது. R அதிகமாக இருந்தால், தொற்றின் மாறுபாடு விதம் அதிகமாகவும் தொற்றுநோயாகவும் இருக்கும். மேலும், அதன் பரவல் வேகமாகவும் அதிகமாகவும் இருக்கும். உண்மையான வுஹான் மாறுபாடு சுமார் 2 R ஆகவும், டெல்டா மாறுபாடு சுமார் 4 R ஆகவும், ஓமிக்ரான் மாறுபாடு சுமார் 8 R ஆகவும் இருந்தது. ஓமிக்ரானின் JN.1 துணை மாறுபாட்டின் R மதிப்பு சுமார் 12 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. புதிய துணை மாறுபாடான NB.1.8.1 மற்றும் XFG, இன்னும் அதிக R மதிப்புகளைக் கொண்டிருக்கலாம்.


டெல்டா மற்றும் ஓமிக்ரான் தொற்று வகைகளுக்கிடையில், நோய் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் ஒரு பெரிய மாற்றம் இருந்தது. டெல்டா COVID-19-ன் கடுமையான மற்றும் பொதுவான வடிவத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், ஓமிக்ரான் முந்தைய வகைகளைவிட மிகவும் உருமாற்றமடைகிறது. இது ஒரு 'மாறுபாடு' என்பதைவிட 'உருமாற்றம்' என்று சிறப்பாக விவரிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இது அதிக புரத மரபணுவில் (spike protein gene) தொற்றிற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, இது பொதுவாக தொண்டைவலி (sore throat) அல்லது மேல் சுவாசக்குழாய் தொற்று (upper respiratory tract infection) போன்ற லேசான நோயை ஏற்படுத்துகிறது.


ஓமிக்ரான் நோய் நுரையீரலைப் பாதிக்காது. இது குறைந்த ஆக்ஸிஜன் அளவு (hypoxia) அல்லது இரத்தப்போக்கு அல்லது இரத்த உறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது. இது வாசனை இழப்பையும் ஏற்படுத்தாது. வைரஸ் ஆல்ஃபாக்டரி பல்ப் (olfactory bulb) எனப்படும் வாசனை அமைப்பை ஆக்கிரமிக்கும்போது வாசனை இழப்பு ஏற்படுகிறது. ஓமிக்ரான் வித்தியாசமாக நடந்துகொள்வதற்கான காரணம், அதன் செல்களுக்குள் நுழையும் விதம் மற்ற வகைகளிலிருந்து வேறுபட்டது. ஓமிக்ரான் தொற்று அருகிலுள்ள செல்களுக்கு இடையில் இணைவை ஏற்படுத்தாது. இந்த இணைவு தொழில்நுட்ப ரீதியாக சின்சிடியம் உருவாக்கம் (syncytium formation) என்று அழைக்கப்படுகிறது.


syncytium formation :  சின்சிடியம் உருவாக்கம் என்பது பல செல்கள் ஒன்றிணைந்து ஒரு பெரிய, பல உட்கருக்களைக் கொண்ட ஒரு செல்போல தோற்றமளிக்கும் ஒரு நிகழ்வாகும். இதை தமிழில், "சின்சிடியம் உருவாக்கம்" அல்லது "பல உட்கரு உயிரணு உருவாக்கம்" என்று குறிப்பிடலாம்.


இந்த நன்மைகள் அனைத்தும் இருந்தபோதிலும், வைரஸ் ஒரே இனம் மற்றும் மேற்கூறிய அனைத்தும் ஒப்பீட்டளவில் உள்ளன. வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு தவிர்க்கலாம். ஆனால், ஒருவருக்கு முந்தைய மாறுபாடுகளிலிருந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி அடுத்த தொற்றுநோயைக் குறைக்கிறது. இருப்பினும், வயதானவர்கள், கடுமையான பிற நோய்கள் உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் அல்லது நோயெதிர்ப்பு சக்தியை அடக்கும் சிகிச்சையில் உள்ளவர்கள் கடுமையான சிக்கல்களைப் பெறலாம். இது பல உடல் உறுப்புகளைப் பாதிக்கும் கடுமையான சிக்கல்களை உருவாக்கலாம். அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படலாம். அவர்களுக்கு, இறப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் இறப்புகளை எண்ணிக்கைக்குள் கொண்டுவருவது யதார்த்தத்தைக் காட்டாது. ஆரோக்கியமான மக்களிடையே ஓமிக்ரானால் கிட்டத்தட்ட எந்த இறப்புகளும் இல்லை.


ஓமிக்ரான் பல தொடர்ச்சியான உருமாற்றங்களுக்கு (mutations) உட்படுகிறது. இந்த உருமாற்றங்கள் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி பெயரிடப்பட்டுள்ளன. பலர் அவற்றை மாறுபாடுகள் (variants) என்று தவறாக அழைக்கிறார்கள். ஆனால், அவை உண்மையில் துணை மாறுபாடுகள் (sub-variants) ஆகும். தற்போது, ​​சில பொதுவான துணை மாறுபாடுகள் NB 1.8.1 மற்றும் XFG ஆகும். XFG என்பது ஒரு மறுசீரமைப்பு (recombinant), அதாவது இது இரண்டு முந்தைய துணை மாறுபாடுகளிலிருந்து வருகிறது. இந்த துணை மாறுபாடுகள் அனைத்தும் ஓமிக்ரான் JN.1 துணை மாறுபாட்டிலிருந்து வருகின்றன. ஓமிக்ரான் தொற்றுக்கு விவரிக்கப்பட்டுள்ள மருத்துவ அம்சங்கள் இந்த துணை மாறுபாடு வகைகள் அனைத்திற்கும் பொருந்தும்.


இந்தியாவில் சமீபத்திய கோவிட்-19 அதிகரிப்புக்குப் பின்னால் என்ன இருக்கிறது?


சோதனையில் குறைவு மற்றும் தவறான பாதுகாப்பு உணர்வு


ஆகஸ்ட் 2024 காலகட்டத்தில், பல நாடுகள் SARS-CoV-2 தொற்றுக்கான வழக்கமான சோதனையை நிறுத்திவிட்டன. இது வைரஸ் பரவுவதை நிறுத்திவிட்டது என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்தது என்னவென்றால், தொடர்ந்து சோதனை செய்த நாடுகள் வைரஸ் இன்னும் பரவி வருவதாகவும் அதிகரித்து வருவதாகவும் கண்டறிந்தன. இதைப் பார்த்த பிறகு, இந்தியாவும் மேலும் சோதனை செய்யத் தொடங்கியது. தாங்கள் அதிக சோதனைகளைச் செய்ததால், அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டன.


இந்தியாவில், ஒவ்வொரு நாளும் சுமார் 70,000 புதிய குழந்தைகள் பிறக்கின்றன. இந்தப் புதிதாகப் பிறந்த குழந்தைகள் வைரஸ் தொற்றுநோய்க்கு முந்தைய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத ஒரு குழுவை உருவாக்குகிறார்கள். இந்தக் குழு மக்கள்தொகையில் வைரஸ் பரவலைத் தக்கவைக்க உதவுகிறது. ஆனால், இந்தப் புதிதாகப் பிறந்த குழந்தைகள் எவ்வளவு அடிக்கடி நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும்.


நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும் மீண்டும் தொற்று ஏற்படுவது SARS-CoV-2-ன் விதிமுறையாகும். ஓமிக்ரான் மற்றும் அதன் துணை வகைகள் படிப்படியாக அதிக தொற்றுநோயாக மாறி, பரவுவதற்கான அதிக ஆற்றலைக் கொண்டிருந்தன. சமீபத்திய COVID-19 எண்ணிக்கை, கிட்டத்தட்ட 7,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள்தொகையில் தொற்று அல்லது நோயின் உண்மையான அளவை அல்ல, அதிக அளவிலான சோதனையை பிரதிபலிக்கிறது.


இந்த தொற்றின் தாக்கத்தை சுகாதார அமைச்சகம் கண்காணித்து வருகிறது. மேலும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (influenza like illness (ILI)) உள்ள நோயாளிகள் மற்றும் கடுமையான சுவாச நோயால் (severe acute respiratory illness (SARI)) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனை தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருப்பதால், லேசான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையைவிட குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கையையே அறிக்கையிடப்பட்ட எண்கள் அதிகமாக பிரதிபலிக்கின்றன.


நோய் எதிர்ப்பு சக்தி விடுபடல் (Immune escape)


வைரஸின் தொடர்ச்சியான மாறுபாடுகள் 'நோய் எதிர்ப்பு சக்தி விடுபடல்’ (Immune escape) எனப்படும் நிகழ்வைக் காட்டியுள்ளன. கடந்த கால தொற்று மற்றும் தடுப்பூசியிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி விடுபடல் ஓரளவுக்கு நிகழ்கிறது. புதிய மாறுபாடுகள் மற்றும் துணை மாறுபாடுகள் அதிக தொற்றுநோயாகும். ஏனெனில், அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை (immune system) சிறப்பாகத் தவிர்க்க முடியும். 2022 ஓமிக்ரான் அலையின்போது, ​​பெரும்பாலான புதிய தொற்றுகள் ஏற்கனவே கடந்தகால தொற்றுகள், தடுப்பூசி அல்லது இரண்டிலிருந்தும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களிடமே ஏற்பட்டன.


COVID-19 தொற்றுகள் 5,000 ஐத் தாண்டுகின்றன, ஆதலால் ஒன்றியமானது ஆயத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது


தொற்றுகளின் இந்த எழுச்சியின் சாத்தியமான விளைவு என்ன?


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு தொண்டை வலி, வறட்டு இருமல் (நுரையீரல் சம்பந்தப்படாததால்), காய்ச்சல், தலைவலி போன்ற லேசான நோய் இருக்கும். சிலருக்கு லேசான வயிற்றுப்போக்கும் வரும். முந்தைய தொற்று மற்றும் நோய்த்தடுப்பு காரணமாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கும்கூட பெரும்பாலும் லேசான நோய் இருக்கும். சிலருக்கு நிமோனியா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும், அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினர் இறந்துவிடுவார்கள். இந்த நோயாளிகளுக்கு நிலையான முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதில் துணை பராமரிப்பு மற்றும் ஸ்டீராய்டுகள் அடங்கும். ஆன்டிவைரல் மருந்துகள் (Antiviral drugs) அதிகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.


அனைத்து உள்ளூர் வைரஸ் தொற்றுகளைப் போலவே, தொற்றுகளின் ஒவ்வொரு அதிகரிப்பும் உச்சத்தை அடைந்து பின்னர் குறையும். அதன் பிறகு, சமூகம் நிலையான தொற்றுநோய் நிலைக்குத் திரும்பும், இது வட்டார பரவல் (endemic prevalence) என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் வெப்பமான கோடை நாட்களில் தொற்றுகளின் அதிகரிப்பு இருந்தது. மற்ற சுவாச வைரஸ்கள் பொதுவாக குளிர்ந்த காலநிலை மற்றும் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவுகின்றன.


வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அவர்கள் நெரிசலான இடங்களில் இருக்கும்போது அல்லது பேருந்து, இரயில் அல்லது விமானத்தில் பயணிக்கும்போது இதைச் செய்ய வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது சுவாச தொற்று அறிகுறிகள் இருந்தால் வீட்டிலும் இந்த எச்சரிக்கை தேவை.


டாக்டர் எம்.எஸ். சேஷாத்ரி ஓய்வு பெற்ற பேராசிரியர். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நாளமில்லா சுரப்பியியல், நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றத் துறையில் பணியாற்றினார்.



Original article:
Share:

ஏர் இந்தியா அகமதாபாத் விமான விபத்து மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து குறித்து…

 இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.


"ட்ரீம்லைனர்" எனப்படும் மிகவும் மேம்பட்ட இரட்டை இடைகழி (twin-aisle)  விமானத்தின் முதல் முழு இழப்பு மிகவும் கவலை அளிக்கிறது, குறிப்பாக சமீபத்தில் நவீன அகல உடல் விமானங்கள் உயிர் பிழைப்பதற்கான எடுத்துக்காட்டுகளைக் காட்டியுள்ளன. ஏர் இந்தியா விமானம் AI171, ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில், 625 அடி உயரத்தை மட்டுமே எட்டிய நிலையில், ஒரு பயணியைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகளவில் தீவிரமாக ஆய்வு செய்யப்படும்.


11-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 (Boeing 787-8) விமானத்தில், போதுமான ஏவியானிக்ஸ் உதிரி பாகங்கள் (avionics redundancy) மற்றும் நம்பகமான இரட்டை இன்ஜின்கள் — GEnx-1B67, ஒவ்வொன்றும் 67,000 பவுண்ட் உந்துதல் (thrust) திறன் கொண்ட விமானத்தில் விமானக் குழுவினர் திடீர் மற்றும் மாற்றங்களை எதிர்கொண்டதால், அது அதிக ஊகங்களுக்கு வழிவகுத்தது. நிபுணர்கள் சுமை திட்டமிடல் (load planning), சுற்றுப்புற காற்று வெப்பநிலை மற்றும் இன்ஜின் செயல்திறன், இறக்கை மேற்பரப்பு அமைப்புகள், மற்றும் பறவை மோதல் போன்ற காரணங்களை பரிந்துரைத்துள்ளனர். 2006-ல் போயிங்குடன் கையெழுத்திடப்பட்ட 68 விமான ஒப்பந்தத்தின் பகுதியாக, அரசுக்கு சொந்தமான காலத்தில் ஏர் இந்தியாவால் சேர்க்கப்பட்ட 787-8 களின் துணைப்படை (subfleet) ஐரோப்பா, தூர கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அதன் நடுத்தர முதல் நீண்ட தூர நெட்வொர்க் விரிவாக்கத்தில் பங்கு வகித்துள்ளது. விமானத்தின் உலகளாவிய பாதுகாப்பு தரவுகள் வலுவாக இருந்துள்ளது. ஆனால், இது சில கவலைகளை எழுப்பிய விமான வகையாகவும் இருந்துள்ளது. இவற்றில் அசெம்பிளி லைன் தர கட்டுப்பாடு (assembly-line quality control), 'விசில் பிளோவர்' (whistle-blower) அறிக்கைகள், பாதுகாப்பு வழிகாட்டுதலுக்கு வழிவகுத்த இன்ஜின் பனி உறைதல் பிரச்சினைகள், உலகளாவிய விரிவான நிறுத்தங்களுக்கு வழிவகுத்த லித்தியம் ஏரோஸ்பேஸ் பேட்டரி (lithium aerospace battery) தொடர்பான மின் அமைப்பு பிரச்சினை, வெப்ப சேதத்தை ஏற்படுத்திய அவசர இடம் கண்டறிதல் டிரான்ஸ்மிட்டர் பேட்டரி தீ (emergency locator transmitter battery fire) மற்றும் 2024-ல், விமான டெக் குழு இருக்கையின் (flight deck crew seat) அம்சத்துடன் இணைக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு ஆகியவை அடங்கும்.


விமான நிறுவனத்தின் புதிய உரிமையாளரான டாடா சன்ஸ் (Tata Sons) (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் 25.1% பங்குகளைக் கொண்டுள்ளது) 'முன்னோடியற்ற' நான்கு விமான நிறுவன இணைப்புக்குப் பிறகு அதன் செயல்பாடுகளை எவ்வாறு வழிநடத்துகிறது மற்றும் பாதுகாப்புக் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கிறது என்பதில் அனைவரின் கவனமும் இருக்கும். குழுமம் 'குழு பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் தர தலைவர்' நியமனத்துடன் விமான நிறுவனத்தின் 'ஐந்தாண்டுகளில் மாற்ற பாதை' Vihaan.AI-ஐ தயார் நிலையில் உள்ளது. அதே நேரத்தில், இந்த விமான நிறுவனம் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (Directorate General of Civil Aviation) ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது. விமானப் போக்குவரத்து நெறிமுறைகளின்படி, சர்வதேச பங்கேற்பை உள்ளடக்கிய ஒரு முறையான விசாரணை தொடங்கப்பட்டதன் மூலம், முதல் முறையாக 787 விபத்து பகுப்பாய்வு ஏற்படுத்தக்கூடிய சிக்கல்கள் களையப்பட வேண்டும். கடந்த வாரம் புதுடெல்லியில் நடந்த 81-வது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்திலும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டிலும் (World Air Transport Summit), இந்தியா மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், அதன் வேகமாக விரிவடைந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை, தரையிலும் வான்வெளியிலும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.


Original article:
Share:

வறுமை ஒழிப்பு

 வறுமை ஒழிப்பில் (poverty reduction) இந்தியாவின் சாதனைகள் மறுக்க முடியாதவை.


கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா தீவிர வறுமையைக் குறைப்பதில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள வறுமை குறித்த உலக வங்கியின் சமீபத்திய தரவு, இந்தியா பெரும்பாலான நாடுகளிலிருந்து வேறுபட்டது என்பதைக் காட்டுகிறது. கோவிட்க்குப் பிறகு பல நாடுகளில் வறுமை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா அதைக் குறைக்க முடிந்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான வறுமைக் கோடு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $3 (2021 விலையில்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாங்கும் திறன் சமநிலைக்கு (purchasing power parity) சரிசெய்யப்படும்போது இந்தத் தொகை தோராயமாக ₹80-க்கு சமம்.


இந்தியாவின் வறுமை விகிதம் 2022-ல் 5.25 சதவீதமாக இருந்தது. இது 2011-ல், அதிகளவாக 27.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு இந்த தரவு சரிசெய்யப்படுகிறது. இதன் பொருள் இந்த நேரத்தில் கிட்டத்தட்ட 270 மில்லியன் மக்கள் தீவிர வறுமையிலிருந்து தப்பித்துள்ளனர். வறுமைக் கோடு (poverty line) மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சிலர் கூறலாம். ஆனால், இந்தியா தீவிர வறுமையை 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைத்தது என்பதை இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும். 75 மில்லியன் மக்கள் இன்னும் இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்தாலும், எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.


இந்தியாவில் வறுமை இப்போது அவ்வளவு வெளிப்படையாகவோ அல்லது கடுமையாகவோ இல்லை. வருமானம் மற்றும் உணவு ஆதரவை வழங்கும் திட்டங்கள் நிறைய உதவியுள்ளன. இந்தத் திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் நடத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் காரணமாக, மக்கள் பிற தேவைகளுக்காக பணத்தை சேமிக்க முடியும். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த முன்னேற்றத்தின் காரணமாக, வறுமையைக் குறைப்பதில் இந்தியா வெற்றி பெற்றதாக உலக வங்கி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது.


இரங்கராஜன் வறுமைக் கோட்டைப் (Rangarajan poverty line) பயன்படுத்தும் போது பத்து ஆண்டுகளில் வறுமை முடிவுகள் ஒத்தவையாக உள்ளது. இந்த வறுமைக் கோடு ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டு தற்போதைய விலைகளுக்கு புதுப்பிக்கப்பட்டது. இது FY23 மற்றும் FY24-ல் இருந்து வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு தரவுகளுடன் ஒப்பிடப்படுகிறது.


இரங்கராஜன் அறிக்கை டெண்டுல்கர் வறுமைக் கோடு (Tendulkar poverty line) பற்றிய ஒரு பெரிய விவாதத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. டெண்டுல்கர் கோடு மிகவும் குறைவாகக் காணப்பட்டது. ஏனெனில், அது அடிப்படையான கலோரி தேவைகளை மட்டுமே உள்ளடக்கியது.


உலக வங்கி வீட்டு நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு தரவை (Household Consumer Expenditure Survey data) வருமானத்தை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்துகிறது. ஆனால், இது மருத்துவமனை கட்டணங்கள் (hospital bills), நீடித்த பொருட்களை வாங்குதல் (buying durable goods) மற்றும் வீட்டு வாடகை மதிப்புகள் (house rent values) போன்ற பெரிய ஒரு முறை செலவுகளை நீக்குகிறது.


உலக வங்கி ஒரு கலப்பு திரும்பப் பெறும் காலத்தைப் (mixed recall period) பயன்படுத்துகிறது. இதன் பொருள் இது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வகையான செலவுகளுக்கான தரவை சேகரிக்கிறது. இது இந்த முறையை 2011 கணக்கெடுப்புக்குப் பின்னோக்கிப் பயன்படுத்துகிறது. இது ஒரு சீரான திரும்பப் பெறும் காலத்தைப் பயன்படுத்தியது. எனவே தரவை நியாயமாக ஒப்பிடலாம்.


உலக வங்கி நாடுகளின் வெவ்வேறு குழுக்களுக்கு நான்கு உலகளாவிய வறுமைக் கோடுகளை உருவாக்குகிறது. வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity) அடிப்படையில் டாலர் மதிப்பைப் பயன்படுத்தி தேசிய வறுமைக் கோடுகளை சரிசெய்வதன் மூலம் இது இதைச் செய்கிறது. பின்னர், உலகளாவிய வறுமைக் கோடுகளை அமைக்க சராசரி மதிப்பை எடுத்துக்கொள்கிறது.


இந்தியாவில், பழைய டெண்டுல்கர் வறுமைக் கோடு (old Tendulkar poverty line) இன்னும் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரங்கராஜன் வறுமைக் கோடு ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிதி ஆயோக் (NITI Aayog), மனித மேம்பாட்டு குறியீட்டை (Human Development Index (HDI)) ஒத்த, பல பரிமாண வறுமைக் குறியீடு (multi-dimensional poverty index) எனப்படும் வேறுபட்ட அளவீட்டைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, நம்பகமான வருமான அடிப்படையிலான வறுமைக் கோட்டை உருவாக்குவது முக்கியம்.


சமத்துவமின்மையை அளவிடும் கினி குறியீடு (Gini index), 2011-ல் 28.78 ஆக இருந்து 2022-ல் 25.51-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், வீட்டு நுகர்வோர் செலவின ஆய்வுகள் (Household Consumer Expenditure Surveys) பணக்கார குடும்பங்களின் செலவினங்களை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்று உலக வங்கி கூறுகிறது.


இருந்தாலும், நாடு முழுவதும், பின்தங்கிய மாநிலங்களும் ‘நாட்டமுள்ள’ மாற்றத்தை நோக்கி செல்லும் வகையில், கடுமையான வறுமை வேகமாக ஒரே மாதிரியாக குறைந்து வருவதை மறுக்க முடியாது.


Original article:
Share:

இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கல்: இது உறுதி செய்யப்பட்டது. கீழடி கங்கை சமவெளிகளைப் போலவே பழமையானது; கதிரியக்க கால அளவீடு இந்த இடத்தின் தோற்றத்தை கிமு 580 என்கிறது. -எ ரகு ராமன்

 தமிழ்நாட்டின் கீழடி தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், கங்கை சமவெளி நகரமயமாக்கலின் சமகாலத்திலுள்ள, கிமு 6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நகர்ப்புறக் குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. இவற்றின் கண்டுபிடிப்புகளில் செங்கல் கட்டமைப்புகள், கல்வியறிவு பெற்ற சமுதாயத்தைக் குறிக்கும் கலைப்பொருட்கள் மற்றும் வர்த்தக வழிகளின் சான்றுகள் ஆகியவை இதில் அடங்கும். இப்பகுதியில் வசித்த பண்டைய தமிழர்களின் வாழ்க்கையையும் அடையாளத்தையும் புனரமைப்பதே தற்போதைய ஆராய்ச்சியின் நோக்கமாகும்.


மதுரையில் உள்ள கீழடி தளம் தமிழ்நாட்டின் கடந்த காலத்தின் மற்றொரு அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆய்வகமான பீட்டா அனலிட்டிக்ஸ் கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு தளம், இது கிமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது கங்கைச் சமவெளிகளின் நகரமயமாக்கலுடன் சமகாலமாகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.


2018 அகழ்வாராய்ச்சி காலத்தில் இருந்து தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் தேதியிட்ட 29 ரேடியோ கார்பன் மாதிரிகளில், இதன் ஆரம்பமானது பழமையான கிமு 580-ஆம் ஆண்டிலிருந்தும், மிகச் சமீபத்திய கிமு 200-ஆம் ஆண்டிலிருந்தும் ஆகும்.


இதில் மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்புகள் நகர்ப்புற மற்றும் தொழில்துறை குடியேற்றத்தைக் காட்டுகின்றன. இது கிமு 6-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை 800 ஆண்டுகள் செழித்து வளர்ந்தது. சங்க காலத்தைச் சேர்ந்த பெரிய செங்கல் கட்டமைப்புகள் இங்கு காணப்பட்டன. இந்த கட்டமைப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நகரமயமாக்கலை நிரூபிக்கின்றன.


தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையின் ஆலோசகரான தொல்பொருள் ஆய்வாளர் கே ராஜன், அகழ்வராய்ச்சிகளின் மாதிரிகளின் காலக்கெடுவை விளக்குகிறார். இதில், செங்கல் கட்டமைப்புகளுக்கு மேலே காணப்படும் பெரும்பாலான மாதிரிகள் கிமு 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தையவை. இந்த கட்டமைப்புகளுக்குக் கீழே உள்ள மாதிரிகள் கிமு 6-ஆம் நூற்றாண்டு வரை உள்ளன. இதன் பொருள், கீழடி இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கல் என்று அழைக்கப்படும் கங்கை சமவெளிகளின் நகரமயமாக்கலுடன் சமகால வளர்ந்த நகரமாகும். கீழடியில் இருந்து 29 கதிரியக்க தேதிகளை கொண்டுள்ளன. இவற்றில், 12 தேதிகள் அசோகர் காலத்திற்கு முந்தையவை. அதாவது அவை கிமு 3 ஆம் நூற்றாண்டை விட பழமையானவையாக குறிப்பிடுகிறது.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கீழடி குடியிருப்பில் வாழ்ந்த பண்டைய தமிழரின் முகத்தை, கொண்டகை புதைகுழியில் தோண்டியெடுக்கப்பட்ட அவரது மண்டை ஓட்டிலிருந்து 3D தொழில்நுட்பம் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நெருங்கி வருவது போல் தெரிகிறது.


"மண்டை ஓட்டின் அடிப்படையில், வயது, உணவு முறை, பாலினம் மற்றும் நபரின் உண்மையான முகம் ஆகியவற்றை நாங்கள் மறுகட்டமைப்போம்," என்கிறார் ராஜன்.


மாநில தொல்பொருள் துறையானது, இந்த திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள பீசா பல்கலைக்கழகம், சிகாகோவில் உள்ள கள அருங்காட்சியகம், பாண்டிச்சேரியின் பிரெஞ்சு நிறுவனம், ஐஐடி காந்திநகர் மற்றும் டெக்கான் கல்லூரி ஆகியவை இதில் அடங்கும். கிமு 580-ஆம் ஆண்டில் கீழடியில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மீண்டும் உருவாக்குவதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.


கீழடியில் கிடைத்த விலங்குகளின் எலும்புகளை டெக்கான் கல்லூரி ஆய்வு செய்து வருகிறது. அகழ்வாராய்ச்சியில் காளைகள், எருமைகள், ஆடுகள், மாடுகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பன்றிகள், மான்கள் மற்றும் புள்ளிமான்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பழங்கால மனித டிஎன்ஏ மற்றும் விலங்குகளின் டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது கீழடி மற்றும் கொந்தகை, கீழடியில் உள்ள பழங்கால குடிமக்களின் மனித இடம்பெயர்வு (human migration) மற்றும் கலவையைப் (admixture) புரிந்துகொள்ள உதவும்.


இந்த அறிவியல் அணுகுமுறை ஒரே ஒரு தளத்திலிருந்து 29 தேதிகளை வழங்கியுள்ளது.


கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், எழுத்து வடிவத்தின் தோற்றத்தை கிமு 6-ஆம் நூற்றாண்டுக்கும் பின்னுக்குத் தள்ளியது. பண்டைய தமிழர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தங்கம் மற்றும் தந்தத்தின் கலைப்பொருட்கள் தெரிவிக்கின்றன.


மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குனர் ஆர் சிவானந்தம் கூறுகையில், "கீழடி ஒரு எழுத்தறிவு பெற்ற சமுதாயம் மற்றும் 2 கைவினைஞர்களைக் கொண்ட நகர்ப்புற குடியேற்றமாக இருந்தது. "அழகன்குளம் கிழக்கு கடற்கரை துறைமுகத்தை மதுரை வழியாக மேற்கு கடற்கரையில் உள்ள முசிரியுடன் இணைக்கும் பண்டைய வர்த்தக பாதையில் இது ஒரு தொழில்துறை மையமாக இருந்தது." இருப்பினும், கீழடி குடியேற்றத்தின் உண்மையான பெயர் தெரியவில்லை. 


சங்க இலக்கியங்கள் வெளிநாட்டு வணிகம், ஆபரணங்கள், இரத்தினக் கற்கள், நகரங்கள் மற்றும் தெருக்கள் மற்றும் அரண்மனை கட்டிடங்கள் பற்றி பேசுகின்றன. ”சங்க இலக்கியம் பழங்காலத் தமிழர்களின் வாழ்ந்த அனுபவமே தவிர கற்பனைக் கதைகள் அல்ல என்பதை கீழடி நிரூபித்துள்ளது” என்கிறார் இந்தியவியலாளர் ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள். 


மேலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தில் செவ்வக மற்றும் கன வடிவங்களில் டெரகோட்டா மற்றும் தந்த பகடைகளைக் கண்டறிந்தனர். இது சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகுப்புகளில் 6-வது ‘கலித்தொகை’யில் (Kalithogai) குறிப்பிடப்பட்டுள்ளதாக பாலகிருஷ்ணன் கூறுகிறார். 


கிமு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடித்தளத்தை கொண்ட ஒரே தளம் கீழடி அல்ல. இது கொடுமணல், பொருந்தல், சிவகலை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை போன்ற பிற தளங்களிலும் அந்தக் காலத்தின் எச்சங்கள் உள்ளன என்று ராஜன் கூறுகிறார். மேலும், “கொற்கை கிமு 785-ஆம் ஆண்டிலேயே ஒரு தேதியை உருவாக்கியது. இது சங்க காலத்தில் நகரமயமாக்கல் பரவலாக இருந்ததைக் குறிக்கிறது.”


கீழடியில் ஆராய்ச்சியாளர்கள் 10 பருவங்களாக அகழ்வாராய்ச்சி நடந்தாலும், கீழடியில் உள்ள 110 ஏக்கர் கலாச்சார வைப்புத்தொகையில் 4% மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். மாநில அரசு அகழ்வாராய்ச்சியைத் தொடரத் திட்டமிட்டுள்ளது மற்றும் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. அகழாய்வுத் தளத்திலேயே அருங்காட்சியகம் (onsite museum), இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு உள்ளது. பாலகிருஷ்ணன் கூறுகையில், கீழடி தமிழர்களிடையே வலுவான ஆர்வத்தை உருவாக்கியபோது இது மாறியது என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார். தமிழ்நாட்டில் தொல்பொருளியல் பற்றிய மக்களின் புரிதலை மாற்றிய முதல் தளம் கீழடி என்று ராஜன் மேலும் கூறுகிறார்.


கீழடி தொடர்பான சர்ச்சை 


தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா 2014 முதல் 2016 வரை காலங்களில் கீழடியில் முதல் இரண்டு அகழ்வாராய்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். 2023-ல், அவர் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (Archaeological Survey of India (ASI)) ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இது, கீழடி கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் தீவிரமாக இருந்ததாக அறிக்கை கூறியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் ஷெகாவத், இந்த அறிக்கை தொழில்நுட்ப ரீதியாக நன்கு ஆதரிக்கப்படவில்லை என்றும் மேலும் அறிவியல் சரிபார்ப்பு தேவை என்றும் கூறினார்.





கீழடி ஏன் முக்கியமானது? 


இந்த தளம் ஆரம்பகால வரலாற்று காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சங்க காலத்தின் செங்கல் கட்டமைப்பு எச்சங்களைக் கொண்டுள்ளது.


'தமிழகத்தில் உள்ள சில இடங்களில், அரிக்கமேடு, காவேரிப்பட்டினம் மற்றும் கொற்கையுடன், சிக்கலான செங்கல் கட்டமைப்புகள், தொட்டி போன்ற அம்சங்களுடன் கூடிய வடிகால் அமைப்புகள், இரட்டைச்சுவர் உலைகள், டெரகோட்டா வளைய கிணறுகள் என பலதரப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன. 


கதிரியக்க கால அளவீடு (RADIOCARBON DATING) எப்படி வேலை செய்கிறது? 


உயிரினங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பனை எடுத்துக்கொள்கின்றன. இதில் கதிரியக்க ஐசோடோப்பு C-14 எனப்படும் சிறப்பு வகை கார்பன் அடங்கும். ஒரு உயிரினம் இறக்கும் போது, ​​அது C-14 ஐ உறிஞ்சுவதை நிறுத்துகிறது. இறந்த பிறகு, உயிரினம் அறியப்பட்ட விகிதத்தில் சிதையத் தொடங்குகிறது. விஞ்ஞானிகள் உயிரினத்தில் மீதமுள்ள C-14 அளவை அளவிடுகிறார்கள். இது உயிரினம் எப்போது இறந்தது என்பதைக் கணக்கிட உதவுகிறது.


பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான முறை முடுக்கி நிறை நிறமாலை அளவீடு (accelerator mass spectrometry) ஆகும். இந்த முறை C-14 அணுக்களை நேரடியாகக் கணக்கிடுகிறது. இதற்கு மிகச் சிறிய மாதிரி மட்டுமே தேவை, சுமார் 1 கிராம். இது கூட்டல் அல்லது கழித்தல் 30 ஆண்டுகள் துல்லியத்துடன் வயதைக் கணக்கிட முடியும்.


கீழடியில் கண்டெடுக்கப்பட்டவை 


தோண்டியெடுக்கப்பட்ட பகுதி 90 மீ நீளமும் 60 மீ அகலமும் கொண்டது. கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களில் கண்ணாடி மணிகள், ஓடு மணிகள், தந்த மணிகள், முத்து மணிகள் மற்றும் டெரகோட்டா மணிகள் ஆகியவை அடங்கும். கண்டுபிடிக்கப்பட்ட பிற பொருட்களில் முத்திரைகள், பகடை மற்றும் அடையாளம் தெரியாத செப்பு நாணயங்கள் ஆகியவை அடங்கும். தங்க ஆபரணங்களும் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.



Original article:

Share:

நாரி சக்தி வந்தன் ஆதினியம் (128-வது திருத்தம்) மசோதா, 2023. -பிரியா குமாரி சுக்லா

 

Nari Shakti Vandan Adhiniyam :  பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா


முக்கிய அம்சங்கள் :


அடுத்த தேர்தலில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் நாரி சக்தி வந்தன் ஆதினியத்தை (Nari Shakti Vandan Adhiniyam) அமல்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


அரசியலமைப்பு (128-வது திருத்தம்) மசோதா, 2023-ன் படி, செப்டம்பர் 2023-ல் நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் ஆதினியம், சட்டம் இயற்றப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை (delimitation) மேற்கொள்ளப்பட்ட பிறகு, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.


இந்த மாத தொடக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தரவு சேகரிப்பு செயல்முறை, சாதிக் கணக்கீடுகளுடன், அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும், மார்ச் 1, 2027-ல் நாட்டின் மக்கள்தொகையின் ஒரு புகைப்படத்தை (snapshot) வழங்கும் என்றும் அரசாங்கம் அறிவித்தது.


அடுத்த மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர வேண்டுமானால், புதிய தொகுதி மறுவரையறையின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் 2029-ம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு, தொகுதி மறுவரையறை சரியான நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவு முன்பைவிட வேகமாகத் தயாராக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவு டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். அனைத்து தகவல்களையும் ஒன்றிணைத்து நிர்வகிக்க ஒரு மைய போர்டல் (central portal) பயன்படுத்தப்படும்.


மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவானது, தொகுதி மறுவரையறைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளின் இடங்களை மறுசீரமைக்கும் செயல்முறை மற்றும் அவற்றின் பிராந்திய எல்லைகளை மறுவடிவமைக்கும் செயல்முறை தரவு கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை நடைபெற, நாடாளுமன்றம் ஒரு தொகுதி மறுவரையறைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வழிவகுக்கும் பயிற்சிக்காக ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை உள்ளடக்கும். அரசியலமைப்பின் 82-வது பிரிவு ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இடங்களை மறுசீரமைப்பதை குறிப்பிடுகிறது.



உங்களுக்கு தெரியுமா?


அரசியலமைப்பு (128-வது திருத்தம்) மசோதா, 2023, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை செயல்முறையுடன் இணைக்கிறது. இந்த மசோதா தொடங்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தொடர்புடைய புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, பெண்களுக்கான இடஒதுக்கீடு "இந்த நோக்கத்திற்காக தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்..." என்று அது கூறுகிறது.


அரசியலமைப்பின் பிரிவு 82, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளின் தொகுதிகளை (எண்ணிக்கை மற்றும் எல்லைகள்) மறுசீரமைக்க வழங்குகிறது.


42வது திருத்தம் 2000-க்குப் பிறகு முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை இந்த தொகுதி மறுவரையறை நடவடிக்கையை முடக்கியது. 2001-ல், இது மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. எனவே இப்போது, ​​2026-க்குப் பிறகு முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளில் தொகுதி மறுவரையறை நடக்கும்.


சாதாரணமாக, 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்று அர்த்தம். ஆனால், 2021-ல் நடக்கவிருந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நடத்தப்படும். ஆனால், கோவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமாகிவிட்டதால், இந்த காலக்கெடு மாற்றப்படலாம்.


மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பயிற்சியானது 2025-ல் நடைபெறக்கூடியது. 2024-ல் வீடு தொடர்பான பட்டியலைத் தொடர்ந்து உண்மையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (actual Census) மற்றும் வெளியீடு (publication) ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். '2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு' முடிவுகள் 2026-க்குப் பிறகு வெளியிடப்பட்டால், அவை தொகுதிகளின் வரையறைகளை மீண்டும் வரைய பயன்படுத்தப்படலாம்.


மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர், அரசியலமைப்பில் மேலும் திருத்தங்கள் தேவைப்படும் எல்லை நிர்ணயப் பயிற்சி நடைபெறும். சட்டமன்றங்களின் கட்டமைப்பைப் பற்றி விவாதிக்கும் பிரிவுகள் 82 மற்றும் 170 (3) திருத்தப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் சட்ட ஆலோசகர் எஸ்.கே. மெண்டிரட்டா கூறினார்.


ஆனால், தற்போதைய நிலவரப்படி, மக்களவையின் இடங்கள் மறுஒதுக்கீடு மற்றும் மாநில சட்டசபைகளில் இடங்களை மறுசீரமைத்தல் ஆகியவை "2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் போது" செய்யப்படுகின்றன. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த 2026-க்கான காலக்கெடுவை மாற்ற வேண்டும் என்று மெண்டிரட்டா கூறினார்.



Original article:

Share: