நீதித்துறை சுயவிமர்சனத்திற்கான ஒரு வழக்கு -காளீஸ்வரம் ராஜ்

 இந்தியாவில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல் தேர்தல் கையாளுதல் நடந்திருந்தால், அதற்கு ஒரு நியாயமான நிறுவனத்தால் ஆழமான மற்றும் விரிவான ஆய்வு தேவைப்படும். நீதிமன்றம் தனியாக இந்த பணியை மேற்கொள்ள முடியாது.


ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சிகள் ஏன் உச்சநீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியல் பிரச்சினையை அதிகாரப்பூர்வமாக எழுப்பவில்லை என்று கேட்டுள்ளனர். ஆனால், முக்கிய எதிர்க்கட்சிகள் தயங்குவது புரிந்துகொள்ளக்கூடியதும் நியாயமானதாகவும் உள்ளது.


மோடி அரசு 2023-ஆம் ஆண்டில்  தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டத்தை அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றிய வழக்கில் அரசியலமைப்பு அமர்வு (Constitution Bench) வழங்கிய தீர்ப்பை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்தது. 

இந்த சட்டம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கி, அவரது இடத்தில் பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு ஒன்றிய அமைச்சரை இந்தியத் தேர்தல் ஆணையத்தை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக சேர்த்தது. இந்த சட்டம் பல நீதிமன்ற வழக்குகளில் சவால் செய்யப்பட்டாலும், அவை இன்னும் இறுதியாக விசாரிக்கப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், மனுதாரர்கள் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரினர்.


 நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான ஒரு அமர்வு, தடைக்கான விண்ணப்பத்தை விசாரித்து, மார்ச் 22, 2024 அன்று டாக்டர் ஜெயா தாக்கூர் மற்றும் பிறர் vs இந்திய ஒன்றியம் வழக்கில் விரிவான உத்தரவின் மூலம் அதை நிராகரித்தது. இந்தச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், 2024ஆம் ஆண்டு  மக்களவைத் தேர்தல்களுக்கும் அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கும் நாடு ஒரு நடு நிலையான தேர்தல் ஆணையத்தை பெற்றிருக்கலாம்.


 எல்லா சாத்தியக்கூறுகளிலும், மிகவும் சுதந்திரமான தேர்தல் ஆணையம் தேர்தலை மிகவும் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் நடத்தும் திறனைப் பெற்றிருக்கலாம். இது நடக்காதது, உச்சநீதிமன்றம் செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படத் தவறியதைக் காட்டுகிறது.


தற்போதைய தேர்தல் ஆணையம்


அனூப் பரன்வால் வழக்கில், அரசியலமைப்பு அமர்வு தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான அரசியலமைப்பின் 324-வது பிரிவை பகுப்பாய்வு செய்தது. ஜனநாயக தேர்தல்களை மேற்பார்வையிடும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு நியாயமான வழியின் அவசியத்தை இந்த உரை வலியுறுத்துகிறது. 


அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரு சார்புடைய தேர்தல் ஆணையத்தை தவிர்க்க, நியமன செயல்முறையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தக்கூடாது என்று அது வாதிடுகிறது. ஒரு நடுநிலை தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. 

ஏனெனில், இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்கிறது. பாரபட்சமற்ற நியமனங்களுக்கான பொதுமக்களின் கோரிக்கைகள் செயல்முறை வெளிப்படையானதாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதன் மூலம், தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இடம்பெறுவதற்கான காரணம் தெளிவாகிறது.


இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசு, தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், தாங்கள் சொல்லும் பேச்சை கேட்கும் நபர்களையே இடம் பெற செய்தது. இது டாக்டர் அம்பேத்கர் அஞ்சியது போல் நடந்தது. இது நீதிமன்றத்தில் காட்டப்பட்டபோதும், நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை. சட்டங்கள் தவறில்லை என்ற நம்பிக்கையால், அந்த சட்டத்தில் தலையிட முடியாது என கூறியது. இதனால் தான், தற்போதைய தேர்தல் ஆணையம் இந்த அமைப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டது.


பெரும்பான்மைவாதம் பெரும்பாலும் தேர்தல் மோசடிகளில் தங்கியிருக்கும் நேரத்தில், உலகம் முழுவதிலுமான நீதிமன்றங்கள் புதிய சவால்களை, நீதித்துறை மற்றும் அரசியல் இரண்டிலுமே, எதிர்கொள்கின்றன. 'தவறான நீதித்துறை மறுபரிசீலனை: ஜனநாயகத்திற்கு எதிரான நீதிமன்றங்கள்' (Abusive Judicial Review: Courts Against Democracy, 2020) என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையில், டேவிட் லாண்டாவ் மற்றும் ரோஸலிண்ட் டிக்ஸன் இந்த தலைப்பில் விரிவான உலகளாவிய ஆய்வை நடத்தியுள்ளனர். 


அவர்களின் கூற்றுப்படி, சில நாடுகளில் நீதிமன்றங்கள், ஆட்சி நடத்தும் தரப்பை பாராட்டும் விதத்தில், அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவும், எதிர்க்கட்சியை கண்டுகொள்ளாமலும், தேர்தல் சமநிலையை கெடுக்கவும் உதவுகின்றன. அவர்கள் விளக்குவது என்னவென்றால் சில நேரங்களில், (புத்திசாலியான) சர்வாதிகாரிகள் தேர்தல்கள் உண்மையில் நடத்தப்படுவதற்கு முன்பே தங்கள் சூழ்ச்சிகளைச் சிறப்பாகச் செய்கிறார்கள். 


அதிகாரத்தை பலப்படுத்துவதன் மூலமும், நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களை குவிப்பதன் மூலமும், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களைத் துன்புறுத்துவதன் மூலமும் அவர்கள் இவ்வாறு செய்வதாக என்று அவர்கள் விளக்குகிறார்கள். 


வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் தேர்தல் மோசடிகளுக்கு உதவி செய்து உதவின என்றும், இது சர்வாதிகாரங்களைத் தொடர்வதை உறுதி செய்தது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மறுபுறம், தேர்தல் மோசடிகளையும் அதன் விளைவாக ஜனநாயகம் சீர்குலைவதையும் நீதிமன்றங்கள் தடுக்கக்கூடிய சூழ்நிலைகள் குறைவாக உள்ளன. பரன்வால் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அத்தகைய நீதித்துறை விழிப்புணர்வை (judicial vigilance) எடுத்துக்காட்டுகிறது.


நான்காவது அதிகார அங்கங்கள்


பிரிவு 324, ஆளும் நிர்வாகத்திலிருந்து விடுபட்ட, தேர்தல் ஆணையத்தை (ECI) நியமிப்பதற்கு ஒரு அமைப்பை வகுக்கத் தவறிவிட்டது. நவீன அரசியலமைப்புகள், ஆளும் நிர்வாகத்திலிருந்து தன்னாட்சி மற்றும் சுதந்திரமான நான்காவது அதிகார அங்கங்களை (Fourth branch institutions) (நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு அப்பால்) உருவாக்க வேண்டிய தேவையை மறுசீரமைத்துள்ளன. 


தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு, “அரசியலமைப்பு ஜனநாயகத்தை ஆதரிக்கும்” மாநில நிறுவனங்களின் குழுவை எதிர்பார்க்கிறது. இவை பிரிவு ஒன்பது நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன, இதில் தென்னாப்பிரிக்க தேர்தல் ஆணையமும் அடங்கும். இந்திய அரசியலமைப்பின் மௌனம், பரன்வால் வழக்கில் நீதிமன்றத்தை ஒரு நியாயமான அமைப்பை ECI-ஐ தேர்ந்தெடுக்க வகுக்கத் தூண்டியது. 


இது தொடர்புடைய அரசியலமைப்பு விதியின் கற்பனைத்திறன் மிக்க விளக்கமாக இருந்தது. இருப்பினும், 2023-ஆம் ஆண்டு சட்டத்தை இயற்றியபோது, நாடாளுமன்றம் நீதிமன்றத்தையும் மக்களையும் தோல்வியடையச் செய்தது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்தது, ECI-ஐ ஒரு சுதந்திரமான நான்காவது அதிகார அங்கமாக மறுவரையறை செய்ய நீதிமன்றம் மேற்கொண்ட கடின உழைப்பையும் அறிவையும் நடைமுறையில் பயனற்றதாக்கியது.


இந்தியாவில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல் தேர்தல் கையாளுதல் நடந்திருந்தால், அதற்கு ஒரு நியாயமான நிறுவனத்தால் ஆழமான மற்றும் விரிவான ஆய்வு தேவைப்படும். நீதிமன்றம் தனியாக இந்த பணியை மேற்கொள்ள முடியாது. நமது ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரே வழி பரன்வால் தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட நிலையை மீட்டெடுப்பதும் 2023ஆம் ஆண்டு சட்டத்தை முறியடிப்பதுமாகும். 


தலைமை நீதிபதியுடன் கூடிய ஒரு தேர்வுக் குழு புதிய தேர்வு முறையின் மூலம் மற்றொரு தேர்தல் ஆணையத்தை அமர்த்த வேண்டும். இந்த ஒரு புதிய ஆணையம், தேர்தல் தேர்தல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு உண்மை ஆணையமாகச் செயல்பட வேண்டும். இதை நடக்க அனுமதிக்க, தற்போதைய அரசு, இப்போதுள்ள தேர்தல் ஆணையரை நீக்கி, புதிய நியமனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.



Original article:

Share:

எத்தனால் கலப்பால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? -குணால் சங்கர், எஸ். ஹரிஹரன்

 பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் E20 கட்டாயத்திற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? இந்தியா எத்தனால் பயன்பாட்டிற்கு கரும்பை நம்பியிருப்பது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்தது? இந்தியாவின் வளர்ந்து வரும் எத்தனால் பொருளாதாரத்திற்கு அமெரிக்கா எவ்வாறு எதிர் வினையாற்றியது? மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது ஏன் மிகவும் மெதுவாக உள்ளது?


20% எத்தனால் கொண்ட E20 பெட்ரோல், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் விற்கப்படுகிறது. இது சமீப காலமாக செய்திகளில் அதிகம் இடம்பிடித்துள்ளது. உயிர்எரிபொருள்கள் தொடர்பான தேசிய கொள்கை (National Policy on Biofuels) இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. 


இந்தியாவில் எத்தனால் கலப்பு 2014-ஆம் ஆண்டில், வெறும் 1.5%-ஆக இருந்ததிலிருந்து 2025ஆம் ஆண்டில் 20%-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அரசாங்கம் கரும்புத் தொழிலுக்கு அளித்த வலுவான நிதி ஊக்கத்தொகைகள் முக்கியக் காரணியாக இருந்தன. 


எத்தனால் கலப்பு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்தல் போன்ற பல்வேறு இலக்குகளை அடைகிறது என்று அரசாங்கம் கூறினாலும், சுற்றுச்சூழலுக்கு அதன் நன்மைகள் குறித்து நெருக்கமான ஆய்வு தேவைப்படுகிறது.

வாகன உரிமையாளர்கள் இந்த மாற்றத்திற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்?


2023ஆம் ஆண்டு  முதல் இந்தியாவில் விற்கப்படும் வாகனங்கள் E20 ஒட்டுப்படங்களுடன் (stickers) வருகின்றன. இது 20% எத்தனால் கலந்த பெட்ரோலுடன் பொருந்தக்கூடிய தன்மையைக் குறிக்கிறது. கூடுதலாக, உற்பத்தியாளர்கள் பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்துள்ளனர்.


 எரிபொருளுக்கு நேரடியாக வெளிப்படும் ரப்பர், மீள்திற ரப்பர் துணி (elastomers)  மற்றும் நெகிழிக் கூறுகள் போன்ற பொருள் கலவையும் E20 பொருந்தக்கூடிய பொருட்களாக மாற்றப்பட வேண்டும் என்று  Hero Motocorp தனது இணையதளத்தில் கூறுகிறது.


இருப்பினும், லோக்கல் சர்க்கிள்ஸின் கூற்றுப்படி, மூன்றில் இரண்டு பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் E20 ஆணைக்கு எதிராக உள்ளனர். 315 மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்ட 36,000 பேரில் வெறும் 12% பேர் மட்டுமே இந்த மாற்றத்திற்கு ஆதரவாக உள்ளனர். எரிபொருள் சேமிப்பு திறன் குறைவு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததை விமர்சகர்கள் குறிப்பிட்டனர். நுகர்வோர் தாங்கள் விரும்பும் எரிபொருள் வகையைத் தேர்வு செய்ய அனுமதிக்குமாறு ஒன்றிய அரசை இந்த ஆய்வு வலியுறுத்தியது.


இயந்திர செயல்திறனில் "சிறிதளவு சரிவு" ஏற்பட்டதாக ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டாலும், "மேம்பட்ட இயந்திர சரிசெய்தல் மற்றும் E20-இணக்கமான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை மேலும் குறைக்க முடியும்" என்று கூறியது. நுகர்வோர் கோபத்தை "சொந்த, பொருளாதார நலன்களால்" எளிதாக்கப்பட்ட "அவதூறு பிரச்சாரம்" என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அழைத்தார்.


 ஒன்றியஅரசு அதன் E20 கொள்கையைப் பாதுகாக்க முயற்சிக்கும் அதே வேளையில், அதன் சொந்த சிந்தனைக் குழுவான NITI ஆயோக், ‘E10 மற்றும் E20 எரிபொருளுக்கான வரி சலுகைகள்’ மூலம் ‘எத்தனால் கலந்த எரிபொருட்களால் ஏற்படும் செயல்திறன் வீழ்ச்சிக்கு நுகர்வோருக்கு ஈடுசெய்ய’ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


அமைச்சரின் கூற்றுப்படி, ‘2014-15ஆம் ஆண்டு முதல் இந்தியா பெட்ரோல் மாற்றீட்டின் மூலம் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் வெளிநாட்டு செலாவணியை ஏற்கனவே சேமித்துள்ளது’. ஆனால், வாடிக்கையாளருக்கு பலன் இறுதியாக கிடைத்ததா?


தி இந்துவின் பகுப்பாய்வில், கோல் இந்தியா லிமிடெட், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil & Natural Gas Corporation (ONGC)), இந்திய எண்ணெய்கழகம்  (Indian Oil Corporation (IOC)), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharat Petroleum Corporation (BPCL)) மற்றும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவை கூட்டாக ரூ.1.27 லட்சம் கோடி பங்களித்தன.


 இது 2020-21 மற்றும் 2024-25 க்கு இடையில் வங்கி அல்லாத பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து (Public Sector Undertaking (PSUs)) ஒன்றிய அரசு பெற்ற மொத்த ரூ.3 லட்சம் கோடி ஈவுத்தொகையில் 42.3% ஆகும். IOC மற்றும் BPCL இணைந்து 2022-23 முதல் தங்கள் ஈவுத்தொகை செலுத்துதல்களில் 255% உயர்வையும் எண்ணெய் விலையில் 65% குறைப்பையும் கண்டன. இருப்பினும், இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல் விலையில் 2% குறைப்பை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கின.


விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?


கரும்பு சார்ந்த எத்தனால் விநியோகம், 2014ஆம் நிதியாண்டில் 40 கோடி லிட்டரிலிருந்து ஏறக்குறைய 670 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இது மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 9% ஆகும். 


இது 2024-ஆம் நிதியாண்டில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு, நிதியாண்டு 2015 முதல் ‘விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் கோடிக்கு மேல்’ செலுத்தியுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், எத்தனாலுக்கு இந்தியா கரும்பை நம்பியிருப்பது எவ்வளவு சுற்றுச்சூழலுக்கு உகந்தது?

ஒரு டன் கரும்பு பயிரிட 60-70 டன் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் கரும்பு பயிரிடும் பல பகுதிகளுக்கு பயிரின் சிறந்த வளர்ச்சிக்கு தேவையான 1,500 முதல் 3,000 மில்லிமீட்டர் மழை கிடைக்கவில்லை. இது நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் நீடிக்காத நீர்ப்பாசன முறைகளுக்கு வழிவகுக்கிறது. 


2023-ஆம் ஆண்டு  ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Groundwater Board) அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் கரும்பு பயிரிடும் மாவட்டங்கள் அருகில் உள்ள பகுதிகளைவிட அதிக நிலத்தடி நீரை எடுக்கின்றன. அந்த மாநிலத்தில் கரும்பு விவசாயிகளிடையே துயரம் பரவலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. நீடிக்காத விவசாய நடைமுறைகள் நில சீரழிவை துரிதப்படுத்துகின்றன. 


இந்தியாவின் பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு வரைபடம் 2021 (Desertification and Land Degradation Atlas of India) இந்தியாவின் நிலத்தில் ஏறக்குறைய 30% அழிந்துள்ளதாக கண்டறிந்தது. கரும்பின் நீர் தீவிர தன்மை மற்றும் கடுமையான வானிலையின்போது நிலத்தடி நீர் இருப்பு மீதான தாக்கம் எத்தனால்-கலந்த பெட்ரோல் பற்றிய விவாதத்தில் இருந்து விடுபட்டுள்ளது.


இருப்பினும், எத்தனால் விநியோகத்தை பன்முகப்படுத்த முயற்சிப்பதாக ஒன்றிய அரசு  கூறுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் எத்தனாலுக்கான அரிசி ஒதுக்கீடு சாதனை அளவில் 5.2 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. இது உற்பத்தியில் 3.6% ஆகும். 


இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 3,000 டன்களுக்கும் குறைவாக இருந்தது. இதேபோல், 2024-25-ஆம் ஆண்டில், சோள உற்பத்தியில் 34%-க்கும் அதிகமானவை எத்தனால் உற்பத்திக்காக திருப்பி விடப்பட்டன. இந்த மாற்றத்தால், இந்தியா 2024-25-ஆம் ஆண்டில் 9.7 லட்சம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது — இது கடந்த ஆண்டு இறக்குமதி செய்த 1.37 லட்சம் டனைவிட 6 மடங்கு அதிகமாகும்.


பன்முகப்படுத்துதல் முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த பருவத்தில் கரும்பு சாகுபடி 57.11 லட்சம் ஹெக்டேரில் இருந்து இந்த ஆண்டு 57.24 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கரும்புக்கான உறுதியான கட்டண வழிமுறையான நியாயமான மற்றும் ஊதிய விலை நிர்ணயம் (Fair and Remunerative Pricing), விவசாயிகள் நிலையான வருமானத்திற்கான ஆதாரமாக பயிரை நம்புவதற்கு முக்கிய காரணமாகும். இப்போது உயர்வு சிறியதாக இருந்தாலும், OECD-FAO ஆய்வின்படி, 2034ஆம் ஆண்டில் இந்தியாவின் கரும்பின் 22% எத்தனாலை தயாரிக்க பயன்படும் என்று கூறுகிறது.


இந்தியாவின் வளர்ந்துவரும் எத்தனால் பொருளாதாரம் அமெரிக்காவின் கவனத்திற்கு சென்றுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவை தனது எத்தனால் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில்,  தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கை (National Trade Estimate report) இந்தியாவின் கொள்கையை குறிப்பிடத்தக்க ‘வர்த்தகத் தடை’ (trade barrier) என்று குறிப்பிட்டது. 


இறக்குமதி தளர்வு எத்தனால் உற்பத்தியில் பல ஆண்டுகால முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டைக் கணிசமாக குறைக்கக்கூடும். இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (Indian Sugar Mills Association) அரசாங்கத்தை கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.


இது மின்சார வாகனங்களுக்கு மாறுவதைப் பாதிக்குமா?


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மாற்றப்பட்டதன் மூலம், ‘இந்தியாவுக்கு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை 700 லட்சம் டன்கள் குறைக்க உதவியுள்ளது’ என்று கூறியுள்ளது. இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு (electric vehicles (EV)) மாறுவது உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் போக்குவரத்து கார்பன் வெளியீட்டை (transport decarbonisation) குறைக்க உதவும். 


இது ஆற்றல் மற்றும் தொழில்துறைக்குப் பிறகு 3-வது பெரிய கார்பன்-உமிழும் துறையாகும். பெய்ஜிங் போன்ற நகரங்கள் விரைவாக மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் காற்று மாசுபாட்டை வெற்றிகரமாகக் குறைத்துள்ளன. இது செயல்பாட்டிற்கு வர, மின்சார வாகனங்கள் நிலக்கரியைவிட புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்பட வேண்டும். இதனால் கார்பன் வெளியேற்றத்தை உண்மையிலேயே குறைக்க முடியும்.


அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் மெதுவாக உள்ளது. 


2024-ஆம் ஆண்டில், வாகன விற்பனையில் 7.6% மின்சாரம் சார்ந்ததாக இருந்தது. 2030-ஆம் ஆண்டுக்குள் அரசாங்கத்தின் சொந்த இலக்கான 30 சதவீதத்தை அடைய, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை 22%-க்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும்.


இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பரவலான பயன்பாட்டிற்கு மற்றொரு சவாலாக இருப்பது, அரிய மண் தனிமங்களை (REE) சார்ந்திருப்பது ஆகும். சுரங்க அமைச்சகத்தின் கூற்றுப்படி, சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, 2023-24-ஆம் ஆண்டில் 2,270 டன் அரிய மண் தனிமங்கள் மற்றும் அவற்றின் கலவைகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன. 


ஆனால், இந்த ஒப்பீட்டளவில் குறைவான அளவு, தற்போதைய மின்சார வாகன உற்பத்தியை தக்கவைக்க தொழிற்துறைக்கு முக்கியமானது. பல அரிய மண் தனிமங்களின் உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் புவியியல் ரீதியாக சீனாவில் குவிந்துள்ளதால், உலகளாவிய விநியோகம் பல்வேறு அபாயங்களுக்கு ஆளாகிறது.


மோட்டார் வாகன தொழில்துறையும் (automotive industry) அரிய மண் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு குறித்து எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, அதன் புதிய மின்சார வாகனமான இ-விட்டாராவின் உற்பத்தி இலக்குகளை குறைத்துள்ளது. அரிய மண் தனிமங்கள் காந்தங்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற உற்பத்தியாளர்களும் இடையூறுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.


Crisil Ratings சீனியர் இயக்குனர் அனுஜ் சேதி (Crisil Ratings Senior Director Anuj Sethi) கூறுகையில், மூலப்பொருட்களின் குறைபாடு, மின்னணு வாகனங்களை அதிகம் வெளியிடத் திட்டமிடும் நேரத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போது, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் கொஞ்சம் மேம்பட்டுள்ளதால், இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மிக முக்கியமான ஒரு அரிய உலோகமான ஜெர்மேனியம் பற்றிய குறைபாட்டை தீர்க்க, இந்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


முன்னோக்கிச் செல்லும்போது, 20%-க்கும் அதிகமான எத்தனால் கலப்பை ஒன்றிய அரசு முன்னெடுக்க விரும்புகிறதா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை தற்போது நிலவுகிறது. அமைச்சர் பூரி, 20%-க்கும் அதிகமான எத்தனால் கலப்புக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் என்று கூறியிருந்தாலும், மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசு இது தொடர்பாக  எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியது.



Original article:

Share:

உச்சநீதிமன்றம் மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை குறித்து…

 இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறை தோல்விகளை உச்சநீதிமன்ற தலையீடு வெளிக்காட்டுகிறது.


சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR)) நடைமுறையைத் தொடர்ந்து, பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு கடுமையான நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும்.    உச்சநீதிமன்றம் தலையிட்டு, வாக்காளர்களை நீக்கும்போது தேர்தல் ஆணையம் நியாயமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலை வந்தது. 


இது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த பணியில் பெரிய குறைபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம், சிலர் இறந்துவிட்டார்கள், காணவில்லை அல்லது போலி/இரட்டை பதிவுகள் உள்ளன என்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியதாக சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு நீக்கத்திற்கும் எதிராக எந்த காரணங்களும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 


தி இந்து மற்றும் கள அறிக்கைகள் பகுப்பாய்வு செய்த தரவுகள் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. அதிகமான ஆண்கள் இடம்பெயர்ந்திருந்தாலும், ஆண்களைவிட வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 32 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட 25 லட்சம் ஆண்களைவிட இது அதிகமான அளவாகும். 


இருப்பினும், சமீபத்தில் அதிகமான ஆண்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் செல்லுபடியாகும் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் இருப்பிடச் சான்றுகள் இருந்தபோதிலும், பல வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவோ அல்லது கணக்கெடுக்கப்படாமல் இருப்பதாகவோ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. நீதிமன்றத்தின் நடவடிக்கை, தேர்தல் ஆணையம் செப்டம்பர் 1-ஆம் தேதி உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர் தங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்ய வாக்காளர்களுக்கு இப்போது வாய்ப்பளிக்கிறது.


நீதிமன்றம் சிறப்பு தீவிர திருத்தம்  குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும், அதில் மற்ற சிக்கலுக்கு கூறிய கூறுகளும் உள்ளன. மேலும், வரைவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், 11 அறிகுறி ஆவணங்களில் ஒன்றின் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் பரவலாகக் கிடைக்கும் ஆதார் அல்லது குடும்ப அட்டைகள் இல்லை. 


நீக்கப்பட்ட குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, முந்தைய இரண்டு விசாரணைகளில் இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்திய நிலையில், தேர்தல் ஆணையம் இப்போது ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக சேர்க்க வேண்டும்.


 நீதிமன்றத்தின் உத்தரவு, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கு வெளிப்படைத்தன்மையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தியதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது; இதன் காரணமாக, என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதைப் பொதுமக்கள் மற்றும் சமூகக் குழுக்களால் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. 


மேலும் தேர்தல் நீக்கப்பட்டவர்களின் முழுப் பட்டியலையும் அதற்கான காரணங்களையும் ஒரே இடத்தில் வைக்க மறுப்பதன் மூலம் அது இப்போதும் அந்த தந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அனைவருக்குமான வயதுவந்தோர் வாக்குரிமை (Universal adult franchise) இந்தியாவின் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தூணாக இருந்து வருகிறது. 


இந்த வழக்கில் வரவிருக்கும் விசாரணைகளும், பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டில் அதன் பங்கை சரிசெய்வதில் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள், இன்று நாட்டில் நிலவும் வாக்காளர் சேர்க்கை செயல்முறை குறித்த கடுமையான கவலைகளைத் தீர்க்க பெரிதும் உதவும்.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரி மறுசீரமைப்பு: 5% மற்றும் 18% ஆகிய இரு அடுக்கு வரி கட்டமைப்பு, தீவினைப் பொருட்களுக்கு 40% -ஷிஷிர் சின்ஹா

 குறைந்த விகிதங்களை நிதி நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்தி, அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில், சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களின் இரண்டாம் தலைமுறையானது வரி விகிதங்களின் முக்கியமான மறுசீரமைப்பை உள்ளடக்கியுள்ளது என்றும் இதை ஒன்றிய அரசு 5 மற்றும் 18 சதவீதத்தின் இரு அடுக்கு வரி கட்டமைப்பை முன்மொழிவதன் மூலம் பின்பற்றுகிறது என்றும் மேலும் சில தீவினைப் பொருட்களுக்கு 40 சதவீத வரியையும் சேர்த்துள்ளது என்று கூறினார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, அக்டோபர் முதல் நவம்பர் வரை புதிய கட்டணக் கட்டமைப்பை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது


தற்போது, நான்கு முக்கிய வரி விகிதங்கள் உள்ளன: 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும். 0.25% மற்றும் 3% சிறப்பு வரி விகிதங்களும் உள்ளன. புகையிலை மற்றும் கார்கள் போன்ற சில பொருட்களுக்கு 28% வரி மற்றும் கூடுதல் இழப்பீட்டு கட்டணம் உள்ளது.


இந்த முன்மொழிவு ஆக்கப்பூர்வமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உரையாடலை செயல்படுத்துவதற்காக வரி பகுத்தறிவாக்கலுக்கான அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த சில வாரங்களில் இது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக ஒன்றிய அரசாங்கம் அரசுகளுடன் இணைந்து செயல்படும்


செப்டம்பர் அல்லது அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி குழு கூட்டம் கூடும் என்று மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்களையும் முடிக்க அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்கள் தேவைப்படலாம்.



சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அதிகபட்ச அடுக்கை 40 சதவீதமாக நிர்ணயிக்கிறது. 28 சதவீத வரி பிரிவில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை 5-7 ஆக குறைக்கப்பட்டு, புகையிலை, பான் மசாலா போன்றவற்றை உள்ளடக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன.


சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அதிகபட்ச வரி விகிதத்தை 40 சதவீதமாக நிர்ணயிக்கிறது. 28 சதவீத விகிதப் பிரிவில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை 5-7 ஆகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதில், முதன்மையாக புகையிலை, பான் மசாலா போன்றவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


40 சதவீத புதிய வரி விகிதத்தை அறிமுகப்படுத்துவதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும். அரசாங்கம் வசூலிக்கும் இழப்பீட்டு கூடுதல் வரி வசூல் படிப்படியாக நீக்கப்பட்டவுடன் இந்த புதிய விகிதம் நடைமுறைக்கு வரும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. புகையிலை, குட்கா மற்றும் சிகரெட் போன்ற தீவினைப் பொருட்கள் மீதான வரி முன்பு போலவே தொடரும். எந்தக் குறைப்பும் இருக்காது.


மூன்றாவது கொள்கை விவசாயிகளுடன் தொடர்புடையது. இங்கு வேளாண் உபகரணங்களின் வரிகளைக் குறைக்கும் முயற்சி இருக்கும். இது உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும் விவசாய இயந்திரமயமாக்கலை செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நான்காவது கொள்கை, உயர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்காக இருக்கும், இதில் வெள்ளைப் பொருட்களுக்கான (white goods) வரி விகிதங்களைக் குறைப்பதற்கு முயற்சி செய்யப்படும். ஐந்தாவது கொள்கை, இழப்பீட்டு வரி (compensation cess) தொடர்பானது, இதை அகற்றுவது மூலம் அதிக நிதி இடைவெளியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கி, வரி விகிதத்தை ஜிஎஸ்டியுடன் ஒருங்கிணைத்து நியாயப்படுத்த உதவும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


வரி விகிதங்களை மாற்றுவது அரசாங்க வருமானத்தைக் குறைக்குமா என்று கேட்டபோது, அது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகமான மக்கள் விதிகளைப் பின்பற்றி அதிகமாக வாங்குவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது இழப்பை ஈடுசெய்யும். அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் விகிதக் குறைப்பு திட்டமிடப்பட்டுள்ளதால், நிதியாண்டின் இறுதிக்குள் வருமானம் மேம்படும். எனவே, பட்ஜெட்டில் பெரிய தாக்கம் எதுவும் இருக்காது என்று மற்றொரு வட்டாரம் மேலும் கூறியது.



Original article:

Share:

‘சபாசார் (SabhaSaar)', கிராம சபைக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி -குஷ்பூ குமாரி

 நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அரசாங்கம் கிராம சபைகளுக்காக செயற்கை நுண்ணறிவு சக்தியால் இயங்கும் 'சபாசார்' (SabhaSaar) கருவியை அறிமுகம் செய்தது. இதன் அம்சங்கள் என்ன, மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு என்ன மற்ற டிஜிட்டல் முயற்சிகள் உள்ளன?


தற்போதைய செய்தி


நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 'சபாசார்' (SabhaSaar) என்ற செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) சக்தியால் இயங்கும் கருவி திரிபுராவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது. இது வியாழக்கிழமை புதுடில்லியில் ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் மற்றும் அவரது துணை அமைச்சர் பேராசிரியர் S.P. சிங் பாகேல் ஆகியோரால் வெளியிடப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. ‘SabhaSaar’ கிராம சபை காணொளிகள் மற்றும் ஒலிப் பதிவுகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட கூட்ட நடவடிக்கை குறிப்புகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்துகிறது. இது நாடு முழுவதிலும் கிராம சபை கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகளில் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டு வரும். பஞ்சாயத்து அலுவலர்கள் தங்கள் இ-கிராம்ஸ்வராஜ் (e-GramSwaraj) உள்நுழைவு அடையாளங்களைப் பயன்படுத்தி SabhaSaar-ல் வீடியோ/ஆடியோ பதிவுகளை பதிவேற்றலாம்.


2. 'SabhaSaar’ என்பது எழுத்தறிவு, மொழி மற்றும் டிஜிட்டல் பிளவுகளைக் குறைக்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவால்-இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான Bhashini-யில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி ஒரு வீடியோ அல்லது ஆடியோவிலிருந்து ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கி, அதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீட்டு மொழியில் மொழிபெயர்த்து, ஒரு சுருக்கத்தைத் தயாரிக்கிறது. இது ஆங்கிலத்துடன் சேர்ந்து, ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜராத்தி போன்ற இந்தியாவின் முக்கியமான அனைத்து மொழிகளிலும் உரைமாற்றத்தை (transcription) வழங்குகிறது.


3. 'SabhaSaar’ பஞ்சாயத்துகள், நிர்வாக அமைப்புகள், மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்றது. ஏனெனில், இது ஆவணங்களை நெறிப்படுத்துகிறது மற்றும் பங்குதாரர்களுக்கு சந்திப்பு நுண்ணறிவுகளை உடனடி அணுகலுடன் அதிகாரம் அளிக்கிறது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றது.


4. ஒரு கிராம சபை வருடத்திற்கு குறைந்தது நான்கு முறை - ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டங்கள் சரியான நேரத்தில் நடைபெறுவதையும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிவதையும் உறுதிசெய்ய, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்து NIRNAY என்ற இணையதளத்தைத் தொடங்கியது. இந்த இணையதளம் கூட்டங்களை நிகழ்நேரத்தில் பார்க்கவும் கண்காணிக்கவும் உதவுகிறது.


5. கிராம சபைக் கூட்டங்களை அதிக பங்கேற்பு, வெளிப்படையான மற்றும் துடிப்பானதாக மாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, பஞ்சாயத்து NIRNAY கூட்டம் கொள்கையை முன்கூட்டியே திட்டமிட்டு குடிமக்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை  செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.


6. அமைச்சகத்தின் கிடைக்கும் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் பஞ்சாயத் NIRNAY இணையதளத்தின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் பெரும்பாலானவை பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் பீகாரில் நடத்தப்பட்டன.


7. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடித்தளமாக கிராம சபை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினமாகக் (Panchayati Raj Day) கொண்டாடப்படுகிறது. 1993-ஆம் ஆண்டு இந்த நாளில், 73-வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, கிராமம், தொகுதி மற்றும் மாவட்டம் என மூன்று நிலை உள்ளூர் அரசாங்க அமைப்பு தொடங்கப்பட்டது.


8. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின்படி, நாடு முழுவதும் 2,55,397 கிராம பஞ்சாயத்துகள், 6,742 இடைநிலை பஞ்சாயத்துகள், 665 மாவட்ட பஞ்சாயத்துகள், மற்றும் 16,189 பாரம்பரிய உள்ளூர் அமைப்புகள் உள்ளன.


BHASHINI


1. ஜூலை 2022-ல் பிரதம மந்திரி நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட BHASHINI, தேசிய மொழி தொழில்நுட்ப நோக்கத்தின் (National Language Technology Mission) கீழ், மொழி தடைகளை உடைத்து மக்கள் டிஜிட்டல் சேவைகளை சுமூகமாக அணுக உதவ 22 அட்டவணைப்படுத்தப்பட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. BHASHINI  என்பது மொழிகளுக்கான தேசிய பொது டிஜிட்டல் தளத்தை நிறுவ மற்றும் இந்திய மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கத்தின் அளவை அதிகரிக்க இந்திய மொழிகளின் நேரலை மொழிபெயர்ப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்பு கருவியாகும்.


3. BHASHINI திட்டம் ஆட்சியில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பல மொழி ஒருங்கிணைப்புடன் இணைத்து, தேசிய ஒருங்கிணைப்பை வளர்க்கவும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் மேலும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கிராம பஞ்சாயத்துகளுக்கான மற்ற டிஜிட்டல் முயற்சிகள் என்ன?


1. கடந்த ஆண்டு மாநிலங்கவையில் கேட்கப்பட்ட சாதாரண கேள்விக்கு (unstarred question) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலை வழங்கியது. பஞ்சாயத்துகளின் அதிகாரமளிப்புக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சகத்திடம் கேட்டது. எழுத்துப்பூர்வ பதிலில் அரசாங்கம் எடுத்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:


2. இ-கிராம்ஸ்வராஜ் (eGramSwaraj), ஒரு பயனர் நட்பு வலை அடிப்படையிலான இணையத்தளமாகும். இது பரவலாக்கப்பட்ட திட்டமிடுதல், முன்னேற்ற அறிக்கையிடுதல், நிதி மேலாண்மை, வேலை அடிப்படையிலான கணக்கியல், மற்றும் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்களில் சிறந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. கிராமப் பஞ்சாயத்துகளின் ரசீதுகள் மற்றும் செலவினங்கள் போன்ற பஞ்சாயத்து கணக்குகளை சரியான நேரத்தில் தணிக்கை செய்வதை உறுதி செய்வதற்காக இணைய வழி தணிக்கைகள் (AuditOnline) தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி பஞ்சாயத்து கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், தணிக்கைப் பதிவுகளைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.


4. கிராமப்புறங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு நகர்வாசி மைய சேவைகளை இணைய வழியில் வழங்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு சமுதாயமான பொது சேவை மையங்களை நடத்தும் ஒரு சிறப்பு நோக்கத்துக்கான நிறுவனம் (Common Service Centre – Special Purpose Vehicle) பொது சேவை மையங்கள் (Common Service Centres) மூலம் நிறுவப்பட்டுள்ளன.



Original article:

Share:

உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? -வினீத் பல்லா

 உரிமையியல் வழக்குகளில் (civil disputes) குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உயர் நீதிமன்றங்கள் அனுமதித்த இரண்டு நிகழ்வுகளில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தலையிட்டுள்ளது. இந்தியாவின் சட்ட அமைப்பில், குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்திற்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.


கடந்த இரண்டு வாரங்களில், குற்றவியல் பிரச்சனைகளுக்காக இருந்த வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உயர் நீதிமன்றங்கள் அனுமதித்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு முறை தலையிட்டுள்ளது.


புதன்கிழமை, நீதிபதிகள் J B பர்திவாலா மற்றும் R மகாதேவன் அடங்கிய அமர்வு, ஒரு ஒட்டு மர சரக்கு (plywood consignment) விற்பனையில் செலுத்தப்படாத தொகை தொடர்பான வழக்கில் ஒரு தம்பதியருக்கு முன்கூட்டிய ஜாமீன் (pre-arrest bail) மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. ‘விற்பனை பரிவர்த்தனை நடந்தவுடன் நம்பிக்கை துரோகம் (criminal breach of trust) என்ற கேள்வியே எழாது’ என்றும் இது சட்டத்தின் நிலையான நிலைப்பாடு என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.


ஆகஸ்ட் 4ஆம் தேதி  அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஒரு எளிய வணிகப் பிரச்சனையில் குற்றவியல் நடவடிக்கையை அனுமதித்ததற்காக, அவரை குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதிலிருந்து உச்ச நீதிமன்றம் நீக்கியது. நீதிபதி அளித்த தீர்ப்பு, "அதிர்ச்சியளிப்பதாகவும்" (shocking), நீதியை கேலிக்கூத்தாக்குவதாக (Mockery of justice) உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகளை கையாளக்கூடாது என்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று திரும்பப் பெற்றது.



உரிமையியல் (Civil) மற்றும் குற்றவியல் (criminal)  சட்டம்


உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்திற்கு இடையேயான வேறுபாடு இந்தியாவின் சட்ட அமைப்பில் அடிப்படையானது. அவற்றின் நோக்கம், சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் வேறுபடுகின்றன.


உரிமையியல் சட்டம் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி வழக்குகள் (suits) என்று அழைக்கப்படும் உரிமையியல் வழக்குகள், பொதுவாக வழக்கை தாக்கல் செய்த நபரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த கருத்து வேறுபாடுகளை உள்ளடக்குகின்றன. ஒரு உரிமையியல் வழக்கின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக ஒரு தீர்வை வழங்குவதாகும். பொதுவாக பண இழப்பீடு (monetary compensation) சேதங்கள் என்று அழைக்கப்படுகிறது அல்லது நீதிமன்றத்தால் ஒரு தரப்பினருக்கு ஏதாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க உத்தரவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை தடை உத்தரவு (injunction) என்று அழைக்கப்படுகிறது.


சொத்து பிரச்சனைகள், ஒப்பந்த மீறல்கள், விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற குடும்பச் சட்ட விவகாரங்கள் மற்றும் பணத்தை மீட்டெடுப்பதற்கான வழக்குகள் ஆகியவை உரிமையியல் வழக்குகளுக்கான (civil cases) எடுத்துக்காட்டுகளாகும். ஒரு உரிமையியல் வழக்கில், வழக்கைத் தாக்கல் செய்பவர் வாதி (plaintiff) என்றும், அது யாருக்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிறதோ அவர் பிரதிவாதி (defendant) என்றும் அழைக்கப்படுகிறார்.


குற்றவியல் சட்டம் (Criminal law), அரசு அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும் செயல்களைக் கையாள்கிறது. குற்றவாளியைத் தண்டிப்பதும், இதே போன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து மற்றவர்களைத் தடுப்பதுவே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக, அரசு, ஒரு அரசு தரப்பு வழக்கறிஞர் (prosecutor) மூலம் குற்றவியல் வழக்கைத் தொடங்குகிறது. அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது கடுமையான வழக்குகளில் மரண தண்டனை போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம். திருட்டு, மோசடி, தாக்குதல் மற்றும் கொலை போன்ற குற்றங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் வருகின்றன.


உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம், எவ்வளவு ஆதாரம் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு குற்றவியல் வழக்கில், வழக்கைத் தொடங்குபவர் வாதி என்றும் மற்ற தரப்பினரை விட தங்கள் சொல்வது உண்மை என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிச்சயமாக குற்றவாளி என்பதை அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் சிறைக்குச் செல்வது, சுதந்திரத்தை இழப்பது (loss of liberty) போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதால், இது போன்ற வழக்குகளுக்கு அதிக அளவிலான ஆதாரம் தேவைப்படுகிறது.


சில செயல்கள் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் இரண்டிற்கும் வழி வகுக்கலாம். உதாரணமாக, உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த முன்னர் குறிப்பிட்ட இரு வழக்குகளில், ஒப்பந்த மீறல், இது ஒரு குற்றவியல் தவறு, ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை துரோகம், இரண்டும் குற்றவியல் குற்றங்கள், நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த எந்த நிரூபிக்கக்கூடிய குற்றவியல் கூறுகளும் இல்லை என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது; வணிக உறவில் நுழைவதற்கு முன்பு மோசடி செய்வதற்கான குற்றவியல் நோக்கம் இருந்திருந்தால், ஒரே நேரத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்.


நடவடிக்கைகளின் கால அளவு 


ஒரு பொதுவான கருத்து - இது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியால் அவரது பின்னர் ரத்து செய்யப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டது - உரிமையியல் நடவடிக்கைகள் (civil proceedings) குற்றவியல் விசாரணைகளைவிட கணிசமாக அதிக நேரம் எடுக்கும். முதல் பார்வையில், இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான தேசிய நீதித்துறை தரவு கட்டதிலிருந்து (National Judicial Data Grid (NJDG)) வரும் தரவு இந்த கருத்தை ஆதரிக்கிறது. ஆகஸ்ட் 14, 2025 நிலவரப்படி, 70.17% குற்றவியல் விசாரணைகள் (criminal trials) ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டன. அதே நேரத்தில் 37.91% உரிமையியல் வழக்குகள் மட்டுமே அதே காலக்கெட்டில் தீர்க்கப்பட்டன.


சட்டம் மற்றும் நீதி சீர்திருத்தங்களில் பணிபுரியும் ஒரு குழுவான DAKSH-ன் திட்ட இயக்குநரான B. S. சூர்ய பிரகாஷ், உரிமையியல் வழக்குகள் அவற்றின் மாறுபட்டத் தன்மை காரணமாக பொதுவாக அதிக நேரம் எடுக்கும் என்று கூறுகிறார்.



DAKSH என்றால் என்ன?


DAKSH என்பது சட்ட மற்றும் திருத்தங்களை ஆராயும் ஒரு தனிப்பட்ட ஆய்வு அமைப்பாகும். இது அரசால் உருவாக்கபட்ட குழு அல்ல. மேலும், இந்த குழு சட்டம், நீதித்துறை, மனித உரிமைகள் மற்றும் ஆட்சி தொடர்பான ஆய்வுகளை செய்து, மாற்றங்களுக்கான பரிந்துரைகள் வழங்குகிறது.


குற்றவியல் வழக்குகளில், உயிர் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளது என்று B.S. சூர்ய பிரகாஷ்  The Indian Express கூறினார். குற்றவியல் வழக்குகள் பொதுவாக மிகவும் அவசரமானவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், குற்றவியல் வழக்குகளில், நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் (out-of-court settlement) நம்பிக்கையில், மக்கள் பெரும்பாலும் செயல்முறையைத் தாமதப்படுத்துகிறார்கள். பெங்களூரு நீதிமன்றங்களைப் பற்றிய DAKSH-ன் ஆய்வில், பல குற்றவியல் வழக்குகள் ஆரம்பத்திலேயே தாமதமாகின்றன. அதே நேரத்தில் நீதிமன்றம் அறிவிப்பு (Notice) மற்றும் சம்மன்களை (summons) அனுப்புகிறது என்பதைக் காட்டுகிறது.


விதி சட்டக் கொள்கை மையத்தின் சட்ட வல்லுநரான ஷ்ரேயா திரிபாதி, நீதிமன்ற அமைப்பில் ஒரு வழக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கண்காணிப்பது கடினம் என்றார். உதாரணமாக, ஒரு மாவட்டநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்புக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம். அங்கு அது ஒரு தனி, நிலுவையில் உள்ள வழக்காகக் காட்டப்படும் என்று ஷ்ரேயா திரிபாதி, The Indian Express-இடம் கூறினார். இது தாக்கல் செய்வதிலிருந்து இறுதித் தீர்ப்பு வரை எடுக்கும் மொத்த நேரத்தைத் தீர்மானிப்பதை கடினமாக்குகிறது என்று அவர் கூறினார்.


தேசிய நீதித்துறை தரவு கட்டதிலிருந்து (National Judicial Data Grid (NJDG)) வரும் தரவு குறிப்பிட்ட வகை வழக்குகளைப் பொறுத்து மாறுபாடுகளையும் காட்டுகிறது. உதாரணமாக, உரிமையியல் (Civil) வழக்குகள் முடிப்பதற்கு சராசரியாக 4.91 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அதே வேளையில், உரிமையியல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தாக்கல் செய்யப்படும் அமலாக்க மனுக்கள் (execution petitions) முடிவுக்கு வர சுமார் 3.97 ஆண்டுகள் எடுக்கின்றன.


குற்றவியல் வழக்குகளில் (criminal cases) ஜாமீன் விண்ணப்பங்கள் சராசரியாக 6.12 மாதங்களில் முடிவு செய்யப்படுகின்றன. எனினும், கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றவழக்குகள் சராசரியாக 4.65 ஆண்டுகள் எடுக்கின்றன. இது உரிமையியல் வழக்குகளுக்கு எடுக்கும் நேரத்தைப் போன்றது.


மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குறைவான கடுமையான குற்ற வழக்குகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் முடிவடைய சராசரியாக 2.45 ஆண்டுகள் ஆகும்.



Original article:

Share:

வழக்கமான இராணுவ சேவையிலிருந்து அக்னிபாத் (Agnipath) எவ்வாறு வேறுபடுகிறது? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு : ஆயுதப்படைகள், தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளத்திற்கு இடையே ஒரு சிறந்த விகிதத்திற்கான தேவையையும், படையில் உள்ள வீரர்களின் வயது சுயவிவரத்தை குறைப்பதற்கான தேவையையும் கருத்தில் கொண்டு, அக்னிபத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்வது குறித்து விவாதித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள் :


2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நான்கு வருடங்கள் வரை சிப்பாய்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் மாலுமிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டத்தை சேவைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்து வருகின்றன.


சேவைகள் மற்றும் ராணுவ விவகாரத் துறை சாத்தியமான மாற்றங்கள் குறித்து விவாதங்களை நடத்தியது. ஆனால் இன்னும் பெரிய மாற்றங்கள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை.


இருப்பினும், ஆதாரங்களின்படி, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளில் அவர்கள் பெற்ற பயிற்சி, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் போன்ற காரணிகளின் அடிப்படையில், அக்னிவீரர்களை தக்கவைத்துக்கொள்வதை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


அக்னிவீரர்களின் முதல் குழு 2026-ம் ஆண்டு இறுதிக்குள் தங்கள் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும், மேலும் இந்த திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்த முடிவு அந்த நேரத்தில் எடுக்கப்படும்.


தற்போதைய விதிகளின்படி, நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் முடிவில், தகுதி மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு உட்பட்டு, 25% வரை அக்னிவீரர்கள் சேவைகளில் தக்கவைக்கப்படலாம்.


இந்த சதவீதத்தை அதிகரிப்பதற்கான வழிகளை இராணுவம் விவாதித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சரியான எண்ணிக்கை துறைகளுக்கு இடையே வேறுபடலாம்.


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு ஆயுதப் படைகளில் புதிய தலைமுறையின் இராணுவ தளங்கள், உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வாங்குவதற்கும் உள்வாங்குவதற்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான விவாதங்கள் அவற்றைப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அதிக மனிதவளத்தின் அவசியத்தை இந்த விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


உதாரணமாக, இராணுவத்தில், இந்த சிறப்புப் பயிற்சியில் பெரும்பாலானவை அக்னிவீரர்கள் தங்கள் பிரிவுகளில் சேர்ந்த பின்னரே நடைபெறுகின்றன. அதற்கு முன், அவர்கள் தங்கள் படைப்பிரிவு மையங்களில் ஆறு மாத ஆரம்பப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், அக்னிவீரர்களின் விடுப்புக் கொள்கைகளை வழக்கமான வீரர்களின் விடுப்புக் கொள்கைகளுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி கூறினார். இரு குழுக்களுக்கும் விபத்து சலுகைகளை ஒரே மாதிரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


தொழில்நுட்ப ரீதியாக திறமையான வீரர்களுக்கான தேவையை அவர் மேலும் குறிப்பிட்டார். அதிகபட்ச வயது வரம்பை 21-லிருந்து 23 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசினார்.


உங்களுக்கு தெரியுமா?


அக்னிபாத், நான்கு ஆண்டுகளுக்கு இந்திய ஆயுதப் படைகளுக்கு அதிகாரி பதவிகளுக்குக் கீழே (below officer ranks) உள்ள பணியாளர்களின் பட்டியலில் வீரர்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளாக இல்லாத மாலுமிகளை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.


நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படும் இந்த ஆட்சேர்ப்பு செய்பவர்களில் 25% பேர் வரை சேவைகளில் நீடிக்கலாம். அவர்கள் மேலும் 15 ஆண்டுகள் நிரந்தர ஆணையத்தில் பணியாற்றலாம். இது தகுதி மற்றும் நிறுவனத் தேவைகளைப் பொறுத்தது.


17.5 ஆண்டுகள் முதல் 23 வயது வரையிலான ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, அதிகபட்ச வயது வரம்பு 21-ஆக இருந்தது, ஆனால் அது அதிகரிக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு தரநிலைகள் அக்னிபாத்திற்கு முந்தைய வழக்கமான சேவையைப் போலவே உள்ளன.


இந்தத் திட்டம் ஜூன் 2022-ல் தொடங்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இராணுவ ஆட்சேர்ப்பு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.


அக்னிவீரர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அடிப்படை சம்பளத்தைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஆபத்து மற்றும் கஷ்டக் காலங்களில் பணம் வழங்கலும் கிடைக்கின்றன.


அவர்கள் தங்கள் மாத சம்பளத்தில் 30%-ஐ சேவா நிதி நிதியில் (Seva Nidhi fund) செலுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கு சமமான தொகையைச் சேர்க்கிறது. தங்கள் சேவையை முடித்தபிறகு, வட்டி உட்பட சுமார் ரூ.11.71 லட்சத்தை மொத்தமாகப் பெறுகிறார்கள். இந்தத் தொகை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


ஒரு அக்னிவீரர் பணியில் இருக்கும்போது இறந்தால், குடும்பம் ரூ.1 கோடியை மொத்தமாகப் பெறுகிறது. இதில் சேவா நிதி தொகுப்பும் அடங்கும். சிப்பாய் முடிக்க முடியாத மீதமுள்ள சேவைக் காலத்திற்கு குடும்பத்தினர் முழு ஊதியத்தையும் பெறுகிறார்கள். ஒரு அக்னிவீரர் ஊனமுற்றால், அவர்கள் ரூ.44 லட்சம் வரை இழப்பீடாகப் பெறலாம். இது இராணுவ சேவையால் ஏற்படும் அல்லது மோசமடையும் ஊனத்தின் சதவீதத்தைப் பொறுத்து இருக்கும்.


வழக்கமான வீரர்களைப் போலல்லாமல், ஓய்வு பெற்றபிறகு அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு படைகளில் சேர்க்கப்படும் அக்னிவீரர்களில் 25% பேருக்கு மட்டுமே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும். இருப்பினும், முதல் நான்கு வருட சேவை இந்த ஓய்வூதியப் பலன்களுக்குக் கணக்கிடப்படாது.



Original article:

Share: