சரக்கு மற்றும் சேவை வரியை எளிமைப்படுத்துவது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளுக்கான இழப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் -ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

 இது வெறும் வரி விகிதங்கள் அல்லது வருவாய்கள் பற்றிய சர்ச்சை மட்டுமல்ல. இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் நிதி கூட்டாட்சியைப் பாதுகாப்பது பற்றியது.


2017ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டுறவு கூட்டாட்சியின் வெற்றியாகப் பாராட்டப்பட்டது. மாநிலங்கள் தங்கள் நிதி அதிகாரங்கள் மற்றும் சுதந்திரத்தின் பெரும்பகுதியை விட்டுக்கொடுத்தன. 


ஆனால், இழப்பீடு மற்றும் சமமானக் கூட்டாண்மை போன்றவை உறுதி செய்யப்பட்டதால் மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. 2016ஆம் ஆண்டின் 101வது அரசியலமைப்புத் திருத்தம், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இரண்டிற்கும் GST சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை வழங்கியது. நிதி கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய வழியாக இது கருதப்பட்டது.


இருப்பினும், "ஒரே நாடு, ஒரே வரி" (“One Nation, One Tax”) என்ற யோசனை தோல்வியடைந்தது. ஏனெனில், GST ஏழு வெவ்வேறு வரி அடுக்குகளுடன் இருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நம்பிக்கையும் பலவீனமடைந்துள்ளது. ஏனெனில், மத்திய அரசு தனது சொந்த நிதி மற்றும் அரசியல் நலன்களை மாநிலங்களின் நலன்களுக்கு மேலாக வைப்பதாகக் கருதப்படுகிறது. பல மாநிலங்கள் இப்போது தங்கள் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக உணர்கின்றன. 


GST அடுக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒன்றியத்தின் சமீபத்திய திட்டம் ஒரு நேர்மறையான படியாகும். இது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய நீண்டகால கோரிக்கையை ஆதரிக்கிறது. இது GSTயை எளிமைப்படுத்தக்கூடும் என்றாலும், இதுபோன்ற மாற்றங்களால் தாங்கள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்புகளை ஈடுகட்ட இழப்பீட்டுக்கான தெளிவான திட்டத்தையும் மாநிலங்கள் விரும்புகின்றன.


மோடி அரசு புறக்கணிக்க முடியாத ஒரு சவாலை எதிர்கொள்கிறது. GST 2.0 அறிமுகப்படுத்தப்பட்டபிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்யும் என்பதை அது விளக்க வேண்டும்.


புதிய GST மாற்றங்கள் வருவாயை சுமார் ரூ.40,000 கோடி குறைக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறுகிறது. ஆனால் மற்ற மதிப்பீடுகள் மிக அதிகமாக உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி ரூ.80,000 கோடி, HSBC ரூ.1.4 லட்சம் கோடி, மற்றும் மாநிலங்களின் இழப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் போகலாம் என்றும் எச்சரிக்கின்றன.


ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் ரூ.1.8 லட்சம் கோடி கூடுதல் வரியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், இதை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள என்ன நீண்டகாலத் திட்டம் உள்ளது என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த கூடுதல் வரிதான் மாநிலங்களுக்கான இழப்பீட்டிற்கான ஒரே உண்மையான உத்தரவாதம். 

அது இல்லாமல், மாநிலங்கள் தங்கள் நிதி சுதந்திரத்தை இழந்து நகராட்சிகளைப் போல ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்க அஞ்சுகின்றன. ஜனநாயகத்திற்கும் நாட்டின் அடிப்படை கட்டமைப்பிற்கும் மாநிலங்களின் நிதி சுதந்திரம் அவசியம்.


மாநில வரிவருவாயில் GST பெரும் பங்கு வகிக்கிறது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சுமார் 0.5% மாநிலங்களை நேரடியாக பாதிக்கிறது. இந்தப் பணம் பொதுவாக மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள், ஹரியானாவில் உள்ள சுகாதார மையங்கள் மற்றும் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. எதிர்கால வளர்ச்சி இந்த இழப்பை ஈடுகட்டும் என்று அரசு சொல்வது, ஆதரவு இல்லாமல் நிதிச் சிக்கலை எதிர்கொள்ளச் சொல்வது போன்றது.


பல்வேறு கூடுதல் வரிகள் மூலம் சேகரிக்கப்படும் பெரிய நிதியை இந்திய அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1.8 லட்சம் கோடி வரை சேர்க்கிறது. ஆடம்பர மற்றும் தீவினைப் பொருட்கள் (sin goods) போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் இந்த கூடுதல் வரிகள், மொத்த GST வசூலில் சுமார் 7–8% ஆகும். அவை மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் வகையில் இருந்தன. 


ஆனால் இப்போது, ​​மத்திய அரசு மாநிலங்களுக்குச் செல்லும் பங்கை 88%-லிருந்து 40%-ஆகக் குறைக்க விரும்புகிறது. கூடுதல் வரி பணத்தை மத்திய அரசு தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பிரிக்கக்கூடிய தொகுப்பிற்கு வெளியே வைத்திருப்பதே அதன் திட்டமாக உள்ளது. இது மாநிலங்கள் GST மற்றும் கூடுதல் வரிவருவாய் இரண்டையும் இழக்கச் செய்கிறது. ஒத்துழைப்புக்குப் பதிலாக, இது கூட்டாட்சியின் மீதான நம்பிக்கையை மீறுவதாக உணர்கிறது.


அக்டோபர் 2024-ல், மோடி அரசாங்கம் கூடுதல் வரி வருமானத்தை மாநிலங்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்திருந்தது. இப்போது, ​​அந்த வாக்குறுதி பின்பற்றப்படவில்லை. மேலும், ஒன்றிய அரசு முழு கூடுதல் வரி வருமானத்தையும் தனக்கே வைத்திருக்க விரும்புகிறது. 


இந்த மையமயமாக்கல் தொடர்ந்தால், மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து பலவீனமடையக்கூடும். இதன் காரணமாக, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஒன்றிணைந்து மையத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றன.


பிரிவு 246A என்ன சொல்கிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது அத்தகைய ஏற்றத்தாழ்வைத் தடுக்க உருவாக்கப்பட்டது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு GST சட்டங்களை உருவாக்கும் உரிமையை வழங்குகிறது. மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில், IGST மூலம் மட்டுமே, பாராளுமன்றத்திற்கு பிரத்யேக அதிகாரங்கள் உள்ளன. 


மோஹித் மினரல்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் (Mohit Minerals vs Union of India case) (2022), உச்சநீதிமன்றமும் இதைத் தெளிவுபடுத்தியது. GST கவுன்சிலின் பரிந்துரைகள் பிணைக்கப்படவில்லை என்றும், மாநிலங்களுக்கு இன்னும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன என்றும் நீதிமன்றம் கூறியது. 


கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒத்துழைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும், அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.


உலகளாவிய அழுத்தங்களால் நிலைமை மோசமடைந்துள்ளது. அமெரிக்க வரிகள் இந்திய ஏற்றுமதியைப் பாதிக்கின்றன. மேலும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களைக் கொண்ட மாநிலங்கள் அதன் தாக்கத்தை உணர்கின்றன. 


மகாராஷ்டிராவின் நெசவுத் தொழில்கள், குஜராத்தின் ரசாயனங்கள் மற்றும் நகைகள், கர்நாடகாவின் ஐடி மற்றும் விண்வெளி, மற்றும் தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் பாகங்கள் அனைத்தும் மெதுவான வளர்ச்சி மற்றும் வேலை இழப்புகளை எதிர்கொள்கின்றன. அத்தகைய நேரத்தில் தங்கள் உள்நாட்டு வருவாயைக் குறைப்பது ஒரு தவறு.


மாநிலங்கள் GST முறைக்கு எதிரானவை அல்ல. அதற்குப் பதிலாக, அவர்கள் நடைமுறை பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்:


1. ஏற்கனவே உள்ள வரிகளுடன் தீவினைப் பொருட்களுக்கு (மது மற்றும் புகையிலை போன்றவை) வரியைச் சேர்க்கவும். இந்தப் பணம் மாநிலங்களுக்குச் செல்லும்.

2. தற்போதைய GST வருவாய் பாதுகாப்பை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

3. 2024–25ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்தவும், கூடுதல் வரி வசூல்களைச் சேர்க்கவும், கடந்தகால GST கவுன்சில் நடைமுறைகளைப் பின்பற்றி, மூன்று ஆண்டு சராசரியாக வருவாயைக் கணக்கிட வேண்டும்.

4. முன்னர் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது போல, பற்றாக்குறையை ஈடுகட்ட எதிர்கால வருவாய்களுக்கு எதிராக கடன் வாங்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும்.


நிச்சயமற்ற காலங்களில் நிதி சரிவிலிருந்து மாநிலங்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.


இது வெறும் வரி அடுக்குகள் அல்லது வருவாய்களைப் பற்றியது மட்டுமல்ல. இது இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தையும் நிதி கூட்டாட்சியையும் பாதுகாப்பது பற்றியது. மாநிலங்களுக்கு போதுமான வருவாய் மறுக்கப்பட்டால், அவை ஒன்றியத்தின் முடிவுகளை முழுமையாகச் சார்ந்து இருக்கக்கூடும். மாநில அதிகாரத்தை இழப்பது, நீண்டகாலத்திற்கு ஒன்றிய அரசை பலவீனப்படுத்தும்.


வரி விகிதங்கள் தீவிரமாக எளிமைப்படுத்தப்படாவிட்டால் மற்றும் வரியானது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாவிட்டால், இந்த மாற்றம் ஒரு சீர்திருத்தமாக கருதப்படாது. மாறாக, அது மாநிலங்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்.


ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எழுத்தாளர், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.



Original article:

Share:

அரிவாள் செல் (Sickle cell) : மாற்றுத்திறனாளர் நீதிக்கான போராட்டம் -லீலா ஸ்ரீராம், சரோஜினி நாடிம்பள்ளி, கார்கி மிஸ்ரா, ராகினி டி

 

Sickle cell :  அரிவாள் செல் -  அரிவாள் செல் என்பது மரபுவழி இரத்தக் கோளாறுகளின் ஒரு குழுவாகும். இதில் சிவப்பு இரத்த அணுக்கள் கடினமாகவும் அரிவாள் வடிவமாகவும் மாறி, இரத்த ஓட்டத்தைத் தடுத்து, இரத்த சோகை, வலி ​​மற்றும் உறுப்பு சேதத்திற்கு வழிவகுக்கும்.


உயிரிமருத்துவம் (biomedical) மீதான தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் அரிவாள் செல் நோயால் (sickle cell disease) பாதிக்கப்பட்டவர்களை முழு பாதுகாப்புகளிலிருந்து விலக்குவது சட்டத்தின்கீழ் நிலைமையை அங்கீகரிப்பதன் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.


மார்ச் 2024-ல், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், (Rights of Persons with Disabilities (RPWD) Act) 2016-ன் கீழ் இந்திய அரசாங்கம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 


இந்த வழிகாட்டுதல்கள், அரிவாள் செல் மரபணுவின், இரண்டு பிரதிகள் உள்ளவர்களுக்கு மாற்றுத்திறனாளியை மதிப்பிடுவதற்கான (assess disability) கட்டமைப்பை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன. இதில், அரிவாள் செல் (sickle cell) மற்றும் பீட்டா தலசீமியா (beta thalassaemia) அல்லது Hb D ஆகிய இரண்டும் உள்ளவர்களுக்கும் அவை பொருந்தும்.


அரிவாள் செல் நோய் (SCD) என்பது வலிமிகுந்த, முற்போக்கான மற்றும் முடக்கும் இரத்தக் கோளாறு உள்ளவை ஆகும். இது விழிம்புநிலை சமூகங்களை (marginalised communities) மிகவும் கடுமையாக பாதிக்கிறது. இச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம் விவசாய நிலம் மற்றும் வீட்டுவசதிகளில் இடஒதுக்கீடு, வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அணுகல் மற்றும் கல்வி, வேலை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (RPWD), 2016 ஆனது பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு, இயக்கக் குறைபாடுகள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு 4% ஒதுக்கீட்டின்கீழ் பொதுத்துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுகளை விரிவுபடுத்துகிறது. இருப்பினும், அரிவாள் செல் நோய் (SCD) மற்றும் பிற இரத்தக் கோளாறுகள் உள்ள நபர்கள் ஒதுக்கீட்டில் சேர்க்கப்படவில்லை. இந்த முடிவு ஏமாற்றத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மாற்றுத்திறனாளிகளின் குறுகிய பார்வை


RPWD சட்டம், 2016, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அவர்களை முழுமையாகச் சேர்ப்பதை ஊக்குவிப்பதையும் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டது. இந்தச் சட்டம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா மாநாட்டுடன் ஒத்துப்போகும் இந்த சட்டம், கண்ணியம், சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாமை ஆகியவற்றை உறுதியளிக்கிறது. 

இது மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட வரையறையை விரிவுபடுத்தியது மற்றும் 'அளவுகோல் குறைபாடுகள்' (benchmark disabilities) உள்ள நபர்களுக்கு உரிமைகள் அடிப்படையிலான பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தியது. 


சட்டத்தின் பிரிவு 2(r) குறிப்பிடுவதாவது, குறிப்பாக 40% அல்லது அதற்கும் அதிகமான குறைபாடுகளை கொண்ட மாற்றுதிறனாளி நபர்களை அடையாளம் காண 'அளவுகோல்' (benchmark) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த நபர்கள் இலவச பள்ளிக் கல்விக்கு உரிமையுடையவர்கள் ஆவர். மேலும், அவர்கள் உயர்கல்வியில் இடஒதுக்கீடு, மேம்பாட்டுத் திட்டங்களில் ஆதரவு மற்றும் அரசு வேலைகளையும் பெறுகிறார்கள்.


இருப்பினும், இந்த 40% வரம்பு, மதிப்பிடப்பட்ட குறைபாடு (assessed impairment) இந்த வரம்புக்கு கீழே உள்ள பல குறைபாடுகளைக் கொண்ட நபர்களை விலக்குகிறது. சமூக அனுபவங்கள், மாற்றுத்திறனாளிக்கான சதவீதம் ஒரு புறநிலை அளவீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதைக் காட்டுகின்றன. 


அதாவது வெவ்வேறு மருத்துவமனைகள், மருத்துவ வாரியங்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் தனிப்பட்ட தீர்ப்பைப் பொறுத்து ஒரே நபருக்கு வெவ்வேறு சதவீதங்களை ஒதுக்கலாம். இதன் விளைவாக, ஒரு தனிநபரின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும் மாற்றுத்திறானாளி நிலைமைகள் இன்னும் ஒரு அளவுகோல் கொண்ட குறைபாடாக தகுதி பெறத் தவறிவிடலாம்.


அரிவாள் செல் நோய் (SCD) எப்போதும் வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் அது பலவீனப்படுத்துகிறது. SCD உள்ள நபர்கள் கடுமையான வலி, சோர்வு, இரத்த சோகை, உறுப்பு சேதம் மற்றும் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் போன்ற தொடர்ச்சியான நிலைமைகளை அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. 


இதுபோன்ற நிலைமைகள் பள்ளிப் படிப்பை சீர்குலைக்கும். அவை வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை குறைக்கலாம் மற்றும் ஆயுட்காலம் வெகுவாகக் குறைக்கலாம். களங்கம் மற்றும் பாகுபாடு இந்த தடைகளை, குறிப்பாக ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்களுக்கு இன்னும் மோசமாக்கும்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (RPWD), இயலாமை பற்றிய குறுகிய, மருத்துவமயமாக்கப்பட்ட பார்வையிலிருந்து விலகிச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது புலப்படும், உடல் குறைபாடுகளில் மட்டுமல்ல, நாள்பட்ட, ஏற்ற இறக்கமான மற்றும் கண்ணுக்குத் தெரியாதவற்றிலும் கவனம் செலுத்த முயல்கிறது. 


இருப்பினும், உயிரி மருத்துவ மதிப்பெண் மீதான தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் SCD உடையவர்களை முழுப் பாதுகாப்பிலிருந்து விலக்குவது, சட்டத்தின்கீழ் உள்ள நிலையை அங்கீகரிப்பதன் நோக்கத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.


ஆதாரத்தின் சுமை


இந்தியாவில், பல திட்டங்கள் சான்றளிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. உதாரணமாக, ஒடிசா மற்றும் இமாச்சலப் பிரதேசம் கடுமையான மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களை வழங்குகின்றன. 


வருமான வரிச் சட்டம், (Income Tax Act) 1961-ன் பிரிவு 80U-ன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆணையத்தால் மாற்றுத்திறனாளி எனச் சான்றளிக்கப்பட்டவர்கள், அவர்களின் மொத்த வருமானத்தில் இருந்து ₹75,000 நிலையான விலக்கைப் பெறலாம். 


இது கடுமையான மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் ₹1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த பலன் மற்றும் பல அரசு திட்டங்களைப் பெற, தனிநபர்கள் சட்டத்தின் 58-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழை (disability certificate) வைத்திருக்க வேண்டும்.


முக்கியத் தடையாக சான்றிதழ் செயல்முறை உள்ளது. தலைமை மருத்துவ அதிகாரி போன்ற ஒரு மருத்துவ அதிகாரி, மாற்றுத்திறனாளியை மதிப்பீடு செய்து சான்றளிக்கிறார். உறுதிப்படுத்தும் சோதனைகளின் நோயறிதல் அறிக்கைகள் அரசு அல்லது நிலையான ஆய்வகத்திலிருந்து இருக்க வேண்டும். 


40% என்ற அடிப்படைக்கு அப்பால் மாற்றுத்திறனாளியாக மேலும் தரப்படுத்தல், வலி, இரத்தமாற்றத் தேவைகள் மற்றும் நரம்பியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு புள்ளிகளை ஒதுக்கும் மதிப்பெண் முறையை அடிப்படையாகக் கொண்டது. 


இருப்பினும், இந்த அமைப்பு பெரும்பாலும் இந்த நிலையின் முழு தாக்கத்தையும் காட்டத் தவறிவிடுகிறது. குறிப்பாக, இது கண்ணுக்குத் தெரியாத அல்லது எப்போதாவது மட்டுமே ஏற்படும் அறிகுறிகளைத் தவறவிடுகிறது. இந்த அணுகுமுறை SCD உள்ளவர்களின் சமூகப் பொருளாதார மற்றும் உணர்ச்சி விளைவுகளையும் புறக்கணிக்கிறது. 


உதாரணமாக, ஒரு இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் பள்ளியை இழக்க நேரிடலாம் அல்லது பலவீனமான வலி காரணமாக வேலையை இழக்க நேரிடலாம், இவை அனைத்தும் ‘அதிக’ மதிப்பெண்ணுக்கு தகுதி பெறாமல் இருக்கலாம். 


இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், சான்றளிப்பு செயல்முறை (certification process) மிகவும் தேவைப்படும் நபர்களுக்கு பெரும்பாலும் அணுக முடியாதது. கிராமப்புற அல்லது தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஆதிவாசி மற்றும் தலித் நோயாளிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நோயறிதல் பரிசோதனைகளை (diagnostic tests) ஏற்பாடு செய்வது அல்லது மதிப்பீடு செய்வதற்காக மாவட்ட மருத்துவமனைகளுக்குச் செல்வது சாத்தியமற்றது.


சட்டம் அதன் வாக்குறுதியை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த பல சீர்திருத்தங்கள் தேவை. SCD மற்றும் தொடர்புடைய இரத்தக் கோளாறுகள் உள்ள நபர்களுக்கு வேலைக்கான இடஒதுக்கீடுகள் நீட்டிக்கப்பட வேண்டும். 


இது, அவர்களின் நிலையை குறிப்பிடத்தக்க, வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளியாக அங்கீகரிக்கும். ஏற்ற இறக்கமான மற்றும் கண்ணுக்கு தெரியாத குறைபாடுகளை கணக்கில் கொண்டு சான்றிதழ் செயல்முறையை சீர்திருத்துவது, முற்றிலும் உயிரியல் மருத்துவத்தைவிட, உரிமைகள் சார்ந்த கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும்.


மாற்றுத்திறனாளர் என்பது உடல் ஆரோக்கியத்தால் மட்டுமல்ல, சமூகப் புறக்கணிப்பு, கட்டமைப்புத் தடைகள் மற்றும் கொள்கை இடைவெளிகளாலும் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை அனுபவமாகும். இந்தியாவின் SCD அங்கீகாரம் உண்மையான உரிமைகளையும் பாதுகாப்புகளையும் கொண்டுவராவிட்டால், அது உள்ளடக்கமாக மறைந்த விலக்கலாக மாறும் அபாயம் உள்ளது.


கார்கி மிஸ்ரா, சரோஜினி நதிம்பள்ளி மற்றும் லீலா ஸ்ரீராம் ஆகியோர் பொது சுகாதாரம், பாலினம், இயலாமை மற்றும் அரிவாள் செல் நோய் ஆகிய பொருண்மைகளில் பணியாற்றுகிறார்கள். ராகினி தே ஒரு தன்னிச்சை எழுத்தாளர்.



Original article:

Share:

இந்தியாவிற்கு, உச்சநீதிமன்றத்தில் அதிக பெண் நீதிபதிகள் தேவை -ஜெய்னா கோத்தாரி

 இந்திய உச்சநீதிமன்றம் அதிக பெண் நீதிபதிகளை நியமிப்பதன் மூலம் அதன் கடுமையான பாலின ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டும். 


ஆகஸ்ட் 9, 2025 அன்று நீதிபதி சுதன்ஷு துலியா ஓய்வு பெற்றவுடன், இந்திய உச்சநீதிமன்றத்தில் இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. நீதிமன்றத்தில் பாலின ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்து பெண் நீதிபதிகளை நியமிக்க, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால், இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. 


34 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னா என்பவர் மட்டுமே ஒரே ஒரு பெண் நீதிபதி ஆவார். நீதிபதி நாகரத்னாவும் கொலீஜியத்தின் ஒரு பகுதியாக உள்ளார். நீதிமன்றத்திற்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி விபுல் பஞ்சோலியை அவர் ஏற்கவில்லை. 


ஏனெனில், அவரைவிட மூத்த நீதிபதிகள் இருப்பதாகவும், பிராந்திய பிரதிநிதித்துவமும் முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அவரது கருத்து வேறுபாடு புறக்கணிக்கப்பட்டது. 


ஆகஸ்ட் 29, 2025 அன்று, நீதிபதி விபுல் பஞ்சோலி மற்றும் நீதிபதி அலோக் ஆராதே ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.


இது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமன நடைமுறையை மறுபரிசீலனை செய்ய மட்டுமல்லாமல், பெண் நீதிபதிகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் எவ்வாறு கருதப்படுகின்றன என்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பெண் நீதிபதிகளின் கடுமையான பற்றாக்குறையை ஆராய்ந்து கேள்வி கேட்கவும் குறிப்பிடுகிறது. 


நீதிமன்றத்தில் பெண்களின் நியமனங்கள் முழுமையாக விலக்கப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது இன்று நாட்டுக்கு என்ன அர்த்தம் விளக்கப்படும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


குறைவான நியமனங்கள், பன்முகத்தன்மை இல்லாதது

1950 முதல், உச்ச நீதிமன்றம் 287 நீதிபதிகளை நியமித்துள்ளது. இவற்றில், 11 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் ஆவர். இது மொத்தத்தில் 3.8% மட்டுமே.


உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் பின்வருமாறு :


  1. நீதிபதி பாத்திமா பீவி (அக்டோபர் 6, 1989 - ஏப்ரல் 29, 1992)

  2. நீதிபதி சுஜாதா வி. மனோகர் (நவம்பர் 8, 1994 - ஆகஸ்ட் 27, 1999)

  3. நீதிபதி ரூமா பால் (ஜனவரி 28, 2000 - ஜூன் 2, 2006)

  4. நீதிபதி ஞான சுதா மிஸ்ரா (ஏப்ரல் 30, 2010 - ஏப்ரல் 27, 2014)

  5. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (செப்டம்பர் 13, 2011 - அக்டோபர் 29, 2014)

  6. நீதிபதி ஆர். பானுமதி (ஆகஸ்ட் 13, 2014 - ஜூலை 19, 2020)

  7. நீதிபதி இந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 - மார்ச் 13, 2021)

  8. நீதிபதி இந்திரா பானர்ஜி (ஆகஸ்ட் 7, 2018 – செப்டம்பர் 23, 2022)

  9. நீதிபதி ஹிமா கோஹ்லி (ஆகஸ்ட் 31, 2021 – செப்டம்பர் 1, 2024)

  10. நீதிபதி பேலா எம். திரிவேதி (ஆகஸ்ட் 31, 2021 – ஜூன் 9, 2025)

  11. நீதிபதி பி.வி. நாகரத்னா (ஆகஸ்ட் 31, 2021 – அக்டோபர் 29, 2027)


கடந்த ஆகஸ்ட் 31, 2021 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், மூன்று பெண் நீதிபதிகளை நியமித்ததுதான் நீதிமன்றத்திற்கு கடைசியாக பெண் நீதிபதிகளின் நியமனம் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகளை நியமிப்பதுகூட அரிதான செயலாக இருந்ததால் இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகக் கருதப்பட்டது. 


ஏற்கனவே, நீதிமன்ற அமர்வில் இருந்த நீதிபதி இந்திரா பானர்ஜியுடன், முதன்முறையாக, நீதிமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10%-க்கும் அதிகமாக இருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளிடையே சாதி வேறுபாடு முற்றிலும் இல்லை. ஏனெனில், இது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பெண்களை நியமிக்க வழிவகுக்கவில்லை. சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒரே பெண் நீதிபதியாக நீதிபதி பாத்திமா பீவி இன்னும் இருக்கிறார்.


வழக்குரைஞர் சங்கத்திலிருந்து (Bar), நேரடியாக நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அல்லது நடைமுறையில் இருந்து நேரடியாக உயர்த்தப்பட்ட வழக்கறிஞர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பாலின வேறுபாடு உள்ளது. 1950 முதல், ஒன்பது ஆண் நீதிபதிகள் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நேரடியாக நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளனர். 


இருப்பினும், இன்றுவரை நீதிபதி இந்து மல்ஹோத்ரா அவர்கள் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே இவற்றில் இருந்துள்ளார். நீதிமன்றத்தில் பெண் மூத்த வழக்கறிஞர்கள் இருந்தும், வேறு எந்த பெண் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை. 


உண்மையில், உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிப்பதில் இடைவெளி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உலகம் முழுவதும், வழக்கறிஞர் சங்கம் நீதித்துறைக்கான வழக்கமான முக்கியப் பாதையாக பார்க்கப்படுகிறது மற்றும் உயர் நீதித்துறைக்கான நியமனங்கள் பெரும்பாலும் ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கையின் இறுதிக் கட்டமாக பார்க்கப்படுகிறது. 


இருப்பினும், இந்தியாவில் உள்ள பெண் வழக்கறிஞர்களுக்கு இது பொருந்தாது மற்றும் சட்டத் தொழிலில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் வெளிப்படையான பகுதியாக உள்ளது.


உச்சநீதிமன்றத்தில் பெண்களும் மிகவும் தாமதமான வயதிலேயே நியமிக்கப்படுகிறார்கள். இது நீதிமன்றத்தில் அவர்களின் நேரத்தையும், மூத்த பதவிகளுக்கு உயரும் வாய்ப்புகளையும் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இன்றுவரை நீதிமன்றத்தில் உள்ள 11 பெண் நீதிபதிகளில், ஐந்து பெண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், மூன்று பேர் மட்டுமே நியமனங்களில் பங்கேற்றுள்ளனர். 


நீதிபதி இந்து மல்ஹோத்ரா மற்றும் நீதிபதி பாத்திமா பீவி ஆகியோர் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர். இது வரலாற்று ரீதியாக, இதில் ஐந்து ஆண் நீதிபதிகள் மட்டுமே இவ்வளவு குறுகிய பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர். 


தாமதமாக நியமனம் செய்யப்படுவதால், பெண் நீதிபதிகள் அரிதாகவே கொலீஜியத்தில் சேருகிறார்கள் அல்லது இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு உயர்கிறார்கள். நீதிபதி நாகரத்னா இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருப்பார். ஆனால் அவரது பதவிக்காலம் செப்டம்பர் 24, 2027 முதல் அக்டோபர் 29, 2027 வரை 36 நாட்கள் மட்டுமே நீடிக்கும்.


நியமனங்களுக்கான நடைமுறை மற்றும் அளவுகோல்கள்


நீதிமன்றங்களில் நியமன செயல்முறை (process of appointments) என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நடைமுறை குறிப்பாணையின்படி, நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்துடன் கலந்து ஆலோசித்து, நீதிமன்ற நீதிபதி நியமனம் இந்திய தலைமை நீதிபதியால் (Chief Justice of India (CJI)) முடிவு செய்யப்படுகிறது. 


தலைமை நீதிபதியின் இறுதிப் பரிந்துரையைப் பெற்ற பிறகு, மத்திய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் (Union Minister of Law, Justice and Company Affairs), நியமன விஷயத்தில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் பரிந்துரைகளை பிரதமரிடம் சமர்ப்பிக்கிறார். மேலும், நியமனம் தொடர்பாக பிரதமர் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.

இதற்கான விதிமுறைகள் பொதுவாக குறிப்பிடாததால், எந்த அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் அதன் சில தீர்மானங்களை உச்சநீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிட்டது. இந்தத் தீர்மானங்களில் நியமனங்களுக்கான காரணங்கள் இருந்தன. 


இருப்பினும், பின்னர் தலைமை நீதிபதிகள் தலைமையிலான கொலீஜியம்கள் தங்கள் பரிந்துரைகளுக்கான காரணங்களை வழங்குவதில் நிலைத்தன்மையுடன் இல்லை. நாம் அறிந்தது என்னவென்றால், பல்வேறு காலகட்டங்களில், வேட்பாளர்களின் சாதி, மதம் அல்லது பிரதேசம் போன்றவை நியமனங்களுக்கு பரிசீலிக்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக் காலத்தில், கொலீஜியம் தீர்மானங்கள் நியமனங்களுக்கான விரிவான காரணங்களை அளித்தன.


சாதி, மதம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் ஆகியவை நியமனங்களுக்கான அளவுகோலாகக் கருதப்படும்போது, ​​நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பாலினம் ஏன் அதிகாரப்பூர்வ அளவுகோலாக மாற்றப்படவில்லை? உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பாலினம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.


யார், எப்போது பரிசீலிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், கொலீஜியத்தின் செயல்முறையும் இரகசியமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடத்தப்படுகிறது. உயர் நீதித்துறைக்கு பரிசீலிக்கப்படும் நியமனங்கள் வெளிப்படையாகவும், பொதுவில் இருக்க வேண்டும். 


பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள் விதிவிலக்கான அறிவார்ந்த மற்றும் சட்டத் திறன் கொண்டவர்களாகவும், சிறந்த தீர்ப்பு மற்றும் சிறந்த பணிப் பதிவையும் கொண்டிருக்க வேண்டும். மேலும், வெவ்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களின் தேவைகளுக்கு உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். 


பன்முகத்தன்மை மற்றும் பாலினம், சாதி, மதம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குவதற்கான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இந்த உறுதிப்பாடு உயர் நீதித்துறையில் எழுதப்பட்ட கொள்கை மூலம் நிறுவனமயமாக்கப்பட வேண்டும். அத்தகைய கொள்கை பாலின பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்க வேண்டும்.


முன்னாள் தலைமை நீதிபதிகளிடம், உயர்நீதிமன்றத்தில் பெண்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டபோது, பணிமூப்பு அடிப்படையில் பெண்கள் இல்லாதது போன்ற பல்வேறு ஆறுதலான காரணங்கள் கூறப்பட்டன. தற்போதைய நியமனங்கள், பணிமூப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன, ஏனெனில் உயர்நீதிமன்றங்களில் மூத்தவர்களாக இருந்த பல பெண் நீதிபதிகள் பரிசீலிக்கப்படவில்லை. 


மேலும், பெண் வழக்கறிஞர்களை நேரடியாக நீதிமன்றத்தில் நியமிக்க பணிமூப்பு தேவையில்லை, ஆனால் 2018ஆம் ஆண்டு நீதிபதி இந்து மால்ஹோத்ரா நியமிக்கப்பட்ட பிறகு இதுவும் செய்யப்படவில்லை.


இந்திய உச்சநீதிமன்றம் பாலின சமத்துவம் மற்றும் பாலின சேர்க்கைக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தேர்வு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர் பதவிகளில் 30% பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அரசியலமைப்பு நீதிமன்றங்களில் பாலின பிரதிநிதித்துவத்திற்கு அதிகாரப்பூர்வ ஆணை எதுவும் இல்லை. இது மாற வேண்டிய நேரம் இது.


பெரிய நம்பிக்கையையும், உறுதியையும் உருவாக்குவதற்கு ஒரு வழியாக


 நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் இருப்பு மிகவும் முக்கியமானது. பெண் நீதிபதிகள், தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அனுபவங்களின் அடிப்படையில் சட்டத்துடன் தனித்துவமான கண்ணோட்டங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகின்றனர், இது நீதித்தீர்ப்பு முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 


வெவ்வேறு கண்ணோட்டங்களையும் பல்வேறு பகுத்தறிவு முறைகளையும் நீதிமன்றத்தில் கொண்டு வருவது, பல்வேறு சமூக சூழல்களையும் அனுபவங்களையும் ஒருங்கிணைப்பதால், பொதுமக்களின் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது. 


மிக முக்கியமாக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண் நீதிபதிகளின் இருப்பு, அது சேவை செய்ய விரும்பும் அனைத்து குடிமக்களுக்கும் உண்மையான பிரதிநிதித்துவ நீதிமன்றமாக மாற்றும்.


இந்திய உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் போதுமான பெண் நீதிபதிகள் இருந்தால் மட்டுமே பாலின சமத்துவம் பற்றிய அனைத்து விரிவுரைகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.


ஜெய்னா கோத்தாரி, இந்திய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.



Original article:

Share:

இடிபாடுகளில் புதைந்தது : ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் குறித்து . . .

 கட்டிடக் குறியீடுகள் (building codes) கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டால், நிலநடுக்கங்கள் ஆபத்தானவையாக இருக்க வேண்டியதில்லை.


திங்கட்கிழமை (செப்டம்பர் 1, 2025) ஆப்கானிஸ்தானில் ஒரு வலுவான நிலநடுக்கம் மற்றும் பல தாக்கங்களுக்குப் பிறகு, இதில் 1,400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் மற்றும் குறைந்தது 3,100 பேர் காயமடைந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, முக்கிய நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் அருகே இது ஏற்பட்டது. 


இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 6.3 ரிக்டர் அளவில், எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, 4.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது முதல் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் மிக மோசமான பேரிடர்களின் தாக்கம் காணப்படுகிறது. 


அங்கு மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து உடல்களை மீட்க முயற்சித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் மிகவும் கடினமானவையான உள்ளதுடன், அதிகாரிகளிடம் குறைந்த வசதிகளே உள்ளன. 


இதனால், தலிபான் ஆட்சி பல தடைகளை எதிர்கொள்கிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது. 


ஐக்கிய நாடுகள் சபையும் (United Nations), சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் (international humanitarian agencies) தங்களின் இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கும் நிவாரண நடவடிக்கைகளில் உதவுவதற்கும் அவர்கள் ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தான், இந்து குஷ் மலைகளுக்கு அடுத்ததாக உள்ளது. இது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் உள்ளது. இதனால், நாடு தொடர்ந்து நிலநடுக்க அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. 1900-ம் ஆண்டு முதல், வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் 7 ரிக்டர் அளவிளான 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 2023-ல், மேற்கு ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 


அதைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன. இதில், 1,500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 63,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன. இப்பிராந்தியத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இதே அளவு மற்றும் மையப்பகுதி-ஆழத்தின் நிலநடுக்கங்கள் உலகின் பல பகுதிகளில் மிகக் குறைந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அது விளக்குகிறது. 


உதாரணமாக பிப்ரவரி 2025-ல் இந்தியா, ஒப்பீட்டளவில் ஆழமற்ற மற்றும் பேரழிவு தரக்கூடியதாக மேற்பரப்பில் இருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உண்மைதான், ரிக்டர் அளவு 6-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் 4 ரிக்டர் அளவைக் காட்டிலும் 100 மடங்கு சக்தி வாய்ந்தது. 

உலகின் மறுபுறத்தில், சிலி தொடர்ந்து 6 ரிக்டர் அளவைவிட அதிகமான நிலநடுக்கங்களை எதிர்கொண்டது. உள்கட்டமைப்புக்கு சிறிய சேதம் மற்றும் கிட்டத்தட்ட எந்த உயிரிழப்புகளும் இல்லை என்று அறிக்கைகள் காட்டுகின்றன. ஏனென்றால், சிலி வலுவான கட்டிடக் குறியீடுகளை கண்டிப்பாக முறையில் அமல்படுத்தியதே இதற்கு முக்கியக் காரணமாகும். நிலநடுக்கங்கள் மரண தண்டனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 


மேலும், ஆப்கானிஸ்தான் அதன் கட்டிடக் குறியீடுகளை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றின் அமலாக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேலை செய்ய வேண்டும்.



Original article:

Share:

தெளிவான மாற்றம் : SCO உச்சி மாநாடு மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து . . .

 SCO உச்சி மாநாட்டில், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது.


விளைவுகளைவிட, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) உச்சிமாநாட்டிற்காக சீனாவுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு, அதன் வெளியுறவுக் கொள்கைக் கண்ணோட்டத்தில் (foreign policy outlook) மாற்றம் குறித்த அரசாங்கத்தின் தெளிவான முடிவாகும். பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஏழு வருடங்கள் இருந்தநிலையில், தற்போது, 2020-ம் ஆண்டு இராணுவ மோதலுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான அவரது சந்திப்பு இருநாட்டு தலைவர்களின் முதல் இருதரப்பு சந்திப்பாகும். 


SCO உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. SCO என்பது மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு என்று பெரும்பாலும் பார்க்கப்படும் ஒரு யூரேசிய குழுவாக (Eurasian grouping) உள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையேயான பரஸ்பர புகைப்படங்கள், செயலற்ற ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு (Russia-India-China (RIC) trilateral) பற்றிய நினைவுகளை எழுப்பின. 


சீனாவுடனான இருதரப்பு சந்திப்பின்போது, ​​இருநாட்டு தலைவர்களும் LAC-ல் இராணுவ வீரர்கள் விலக்கப்பட்ட பிறகு 2024 அக்டோபரில் தொடங்கிய இயல்பாக்க செயல்முறைக்கு (normalisation process) ஒப்புதல் அளித்தனர். மேலும், இருநாட்டு தரப்பினரும் தங்கள் சிறப்புப் பிரதிநிதிகளால் கையாளப்படும் எல்லைத் தீர்மான செயல்முறையை விரைவாகக் கண்காணிக்க ஒப்புக்கொண்டனர். 


"உலக வர்த்தகத்தை நிலைப்படுத்த" (stabilize world trade) உதவும் வகையில் நேரடி விமானங்கள், எளிதான விசா விதிகள் மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கும் அவர்கள் ஒப்புதல் அளித்தனர். "பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு" பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில், "டிராகனும் (சீனா) யானையும் (இந்தியா) ஒன்றிணைய வேண்டும்" என்று அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். 


இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இத்தகைய நட்புறவு ஒரு வருடத்திற்கு முன்புகூட கற்பனை செய்ய முடியாதது. மேலும், இந்த மாற்றம் இந்தியா மீது வரிவிதிப்புகள் மற்றும் தடைகளை விதிக்க அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஓரளவுக்கு உந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இது, டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கங்கள் குறித்து இந்தியாவுக்கு அதிகரித்து வரும் அவநம்பிக்கை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. 


இது, பிரதமர் மோடி மற்றும் அவரது குழுவை, சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கொண்டிருந்த சில கவலைகள், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் மற்றும் NSG உறுப்பினர் பதவி மீதான இந்திய நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளை நியமிப்பதைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்தது ஆகியவை இந்த சந்திப்பின்போது தற்காலிகமாக தவிர்க்க முடிந்தது.


தியான்ஜின் பிரகடனம் (Tianjin declaration) "பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கத்திற்கு" (cross-border movement of terrorists) எதிரான வலுவான வார்த்தைகளைப் பயன்படுத்தியது முக்கியம். இருப்பினும், பஹல்காம் தாக்குதல் மற்றும் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை சம அளவில் கண்டனம் செய்தது. 


காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைக் கண்டனம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒட்டுமொத்த SCO உறுப்பினர்களும் பொதுவான நிலையை மேற்கொண்டனர். இருப்பினும், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (Belt and Road Initiative) ஆதரிக்கும் உரையையும் இந்தியா தனது எதிர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. 


SCO மேம்பாட்டு வங்கிக்கான அதிபர் ஜி-யின் திட்டங்கள் மற்றும் SCO உறுப்பினர்களுக்கு இடையே "நாகரீக உரையாடலை" (Civilisational Dialogue) தொடங்குவதற்கான பிரதமர் மோடியின் பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 


சீனாவிற்கு "பயனுள்ள" பயணம் என்று பிரதமர் மோடி விவரித்ததற்கு முடிவுகள் மற்றும் பார்வைகள் வழிவகுத்தாலும், "SCO பிளஸ்" உச்சிமாநாட்டைத் தவிர்த்துவிட்டதால், இந்தியாவின் அண்டைநாடு மற்றும் உலகளாவிய தெற்கின் தலைவர்களுடன் நெருக்கமான ஈடுபாட்டிற்கான சில வாய்ப்புகளை அவரது பயணத் திட்டம் தவறவிட்டது.



Original article:

Share: