மாயாபினி (Mayabini), ஜூபீன் கார்க் (Zubeen Garg) மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் -மானஸ் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய நிகழ்வு : 


மனதைத் தொடும் ஒரு செயலாக, அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் பிறந்த யானைக்கன்றுக்கு, மறைந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் பிரபலமான பாடலான 'மாயாபினி' (Mayabini) நினைவாகப் பெயரிடப்பட்டது. இது அவரது இறுதிச் சடங்குகளின் போது அவரது ரசிகர்களுக்கான கீதமாக உருவெடுத்தது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கையை "மனதைக் கவரும் நிகழ்வாக" (heartwarming) குறிப்பிட்ட அசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி, "காடுகளில் புதிய வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கம்" ஆகியவற்றைக் குறிக்கும் புதிதாகப் பிறந்த யானைக் கன்றுக்கு "மாயாபினி" என்று பெயரிடுவதற்கான அமைச்சகத்தின் முடிவை சனிக்கிழமை அறிவித்தார்.


X-வலைதளத்தில் செய்தியைப் பகிர்ந்துகொண்டு, படோவரி குறிப்பிட்டதாவது, "உலக விலங்கு தினத்தன்று மகிழ்ச்சியான செய்தி - காசிரங்காவைச் சேர்ந்த குவாரி என்ற யானை ஆரோக்கியமான பெண் கன்றைப் பெற்றெடுத்ததாக அவர் அறிவித்தார். பொதுமக்களின் நல்லெண்ணத்துடனும், அந்தக் கன்றுக்கு “மாயாபினி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது காடுகளில் புதிய வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் காடுகளின் நல்லிணக்கத்தின் சின்னம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


இந்த ஆண்டு செப்டம்பர் 19 அன்று, அஸ்ஸாமைச் சேர்ந்த மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜூபீன் கார்க், சிங்கப்பூரில் நீச்சல் விபத்தில் இறந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 52 ஆகும். மேலும், அவர் 40 வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 38,000 பாடல்களை எழுதி இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல இசைக்கருவிகளை வாசிக்கக்கூடியவர் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இசை காணொலிகளை இயக்கி நடித்துள்ளார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக அசாமில் ஒரு வழிபாட்டு நிகழ்வை உருவாக்கினார்.


2001-ல் வெளியிடப்பட்ட ‘மாயாபினி’ பாடலை ‘டாக்’ ஆல்பத்திற்காக ஜூபீன் கார்க் மற்றும் கல்பனா படோவரி இணைந்து பாடியுள்ளனர். மேலும், இது அசாமிய இசைத் துறையின் ஒரு வழிபாட்டு முறையின் வெற்றியாகப் பாராட்டப்படுகிறது.


ஜூபீனை அறிவது ஏன் முக்கியம்?


முர்ச்சனா கௌஷிக், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய ‘பிளவுபட்ட அசாமில் ஜூபீன் கார்க் ஒற்றுமையின் அடையாளமாக மாறியது எப்படி’ என்பதிலிருந்து ஒரு பகுதி இங்கே குறிப்பிட்டுள்ளது,


"வரலாற்று ரீதியாக அஸ்ஸாமானது தேசம் பற்றிய கருத்து வேறுபாடுகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் பல இயக்கங்கள் வெவ்வேறு அடையாளங்களை வலியுறுத்த வழிவகுத்தன. அசாம் இயக்கம், அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோற்றம், பல்வேறு பழங்குடி குழுக்களின் அடையாள வலியுறுத்தல்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை சமீபத்திய முக்கிய நிகழ்வுகளாகும். இப்பகுதி எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டது என்பதையும், வெவ்வேறு குழுக்கள் எவ்வாறு முரண்பட்ட நலன்களைக் கொண்டுள்ளன என்பதையும் காட்டுகின்றன. இந்தப் பிரச்சினைகள் சமூகம், அரசியல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை வடிவமைத்துள்ளன.


அஸ்ஸாம் மாநிலத்தின் சமூக-அரசியல் யதார்த்தத்தை வகைப்படுத்தும் இந்த மோதல்கள் மற்றும் படிநிலைகளை ஜூபீன் புரிந்து கொண்டார் மற்றும் அவரது மனிதாபிமான அணுகுமுறையால் அவற்றிலிருந்து மேலே உயர முயன்றார். சாதி, மதம், இனம், மொழி, போன்ற சமூக கலாச்சார அடையாளங்களுக்கு கட்டுப்படாத ஒரு பொதுவுடைமையாக (socialist) அவர் தன்னைப் பார்த்தார். இந்தக் கண்ணோட்டம் அவரை ஜூபீன் டா என்று அறிய வைத்தது.


1990-களின் முற்பகுதியில், ஜூபீனின் அசாமிய இசையானது புதிய காற்றின் சுவாசம் (breath of fresh air) என்று பலர் நினைக்கிறார்கள். அவரின் இசையானது, அஸ்ஸாமின் சிக்கலான கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்கும், சிறந்த முறையில் எதிர்காலத்தை நோக்கி கனவு காண மக்களுக்கு முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுவதற்கான ஒரு வழியாகவும் அமைகிறது. ஜூபீனின் ராக் மற்றும் பாப் இசையின் பாணி (rock and pop style) அசாமிய இசைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்ததாக இளைஞர்கள் அடையாளம் கண்டதாக குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இன்னும் சிலர், அவரது நேரடியான இயல்பையும் இசையின் கருவி என்று அழைக்கும் திறனையும் எடுத்துக்காட்டுகின்றனர். 


இந்த குணம் அனைவருக்கும் விருப்பமுள்ள, குறிப்பாக இளைஞர்களிடையே அவரை அச்சமற்ற, துணிச்சலான மற்றும் சரியான காரணத்திற்காகப் பேசுபவர் என்று பார்த்தார்கள். பிஹு விழாக்களில் இந்திப் பாடல்களை பாடுவதற்கு உல்ஃபா தடை விதித்ததற்கு (ULFA’s ban) எதிரான அவரது நிலைப்பாடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான அவரது குரல் ஆகியவை அவரது எதிர்ப்பின் எடுத்துக்காட்டுகளில் அடங்கும். அவரது தாராள மனப்பான்மை, ஏழைகளுக்கு உதவ பல முன்முயற்சிகளால் எடுத்துக்காட்டுகிறது. அவரது மரணத்திற்குப் பிறகு பலரால் முன்னிலைப்படுத்தப்பட்டது.


காசிரங்கா தேசிய பூங்கா (Kaziranga National Park) : இது அசாமின் கோலாகாட், நாகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது 1985-ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த தேசிய பூங்கா அதன் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு பிரபலமானது மற்றும் பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்பி (மிகிர்) மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா யானைகள், காட்டு நீர் எருமைகள், கங்கை நதி டால்பின் மற்றும் சதுப்பு மான்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. காசிரங்கா 2006-ல் புலிகள் காப்பகமாக (Tiger Reserve) அறிவிக்கப்பட்டது. இந்த பூங்கா புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான பகுதியாகும்.


உலக விலங்கு தினம் (World Animal Day) : மாயாபினி உலக விலங்குகள் தினத்தில் பிறந்தது. இது உலகம் முழுவதும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்படுகிறது, இது விலங்குகளின் நிலையை உயர்த்தி, உலகளவில் நலவாழ்வு தரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சமூகப் பணியாகும். அக்டோபர் 4 ஆனது விலங்குகளின் புரவலர் புனிதரான அசிசியின் புனித பிரான்சிஸின் விழா நாளுடன் ஒத்துப்போகிறது. 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் “விலங்குகளைக் காப்போம், பூமியைக் காப்போம்!” ஆகும், இது அந்நாளின் 100வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.


பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (Mutual Legal Assistance Treaty (MLAT))


சிங்கப்பூரில் சூப்பர் ஸ்டார் ஜூபீன் கார்க்கின் (superstar Zubeen Garg) மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவ, சிங்கப்பூருடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை (Mutual Legal Assistance Treaty (MLAT)) செயல்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்திடம் அசாம் அரசு கோரியுள்ளது.


ஒரு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (MLAT) என்பது பொதுச் சட்டங்கள் அல்லது குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சியில் தகவல்களைச் சேகரித்து பரிமாறிக்கொள்ளும் நோக்கத்திற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாகும்.


சாட்சி அறிக்கைகள் அல்லது ஆவணங்களின் சேவை போன்ற சான்றுகள் அல்லது பிற வகையான சட்ட உதவிகள், ஒரு வெளிநாட்டு இறையாண்மையிடமிருந்து தேவைப்படும்போது, ​​மாநிலங்கள் அந்தந்த காவல் முகமைகள் (police agencies) மூலம் முறைசாரா முறையில் ஒத்துழைக்க முயற்சி செய்யலாம் அல்லது அதற்கு மாற்றாக, பொதுவாக 'பரஸ்பர சட்ட உதவி' (mutual legal assistance) கோரிக்கைகள் என குறிப்பிடப்படுவதை நாடலாம்.



Original article:

Share:

இந்தியாவின் சுதர்சன் சக்ரா திட்டம் (Mission Sudarshan Chakra) பற்றி . . . -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


ஆதாரங்களின்படி, இந்த திட்டத்தில் ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் அடங்கும். இந்த அமைப்பால் உள்ளடக்கப்பட வேண்டிய இராஜதந்திர இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


பல அடுக்கு வான் பாதுகாப்பு கவசமானது (multi layered air defence shield), இந்தியாவை நோக்கி வரும் எதிரியின் அச்சுறுத்தல்களை கண்காணித்தல், கண்டறிதல், அடையாளம் கண்டு அழித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, ​​நாட்டின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பு முக்கியமான இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர ரீதியில் சொத்துக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. சுதர்சன் சக்ரா திட்டம் (Mission Sudarshan Chakra), இந்த பாதுகாப்பை நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் தொகையின் முக்கியத்துவத்துக்கு கணிசமாக விரிவுபடுத்தும்.


பாதுகாப்புப் படைகளுக்கான விண்வெளி கண்காணிப்பு திறன்களை இந்தியா அதிகரிக்க முயற்சிக்கும் நிலையில், விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (Space-Based Surveillance (SBS)) திட்டத்தின் 3-ம் கட்டத்தின் கீழ் 2030-ம் ஆண்டுக்குள் 52 புதிய கண்காணிப்பு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.


இந்த அமைப்புகள் சுதர்சன் சக்ரா திட்டத்தின் கீழ் சிறிய வான் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் ரேடார்களுடன் இணைக்கப்படும். அவை எதிரி விமானங்கள், ஆளில்லா விமானங்கள் அல்லது ஏவுகணைகளை ஸ்கேன் செய்து கண்காணித்தல் மற்றும் கண்டறியப்பட்டதும், இந்த அச்சுறுத்தல்களைத் தடுக்க ஆயுத அமைப்புகளை வழிநடத்தும்.


எதிரியின் எல்லைக்குள் தீவிரமாகப் பார்க்கும் திறன் கொண்ட தொடுவானத்திற்கு மேலே (Over-the-Horizon(OTH)) ரேடார்கள் உட்பட பல ரேடார் அமைப்புகள், எதிர் வானூர்தி (hostile aircraft), ஆளில்லா விமானங்கள் (drones) அல்லது ஏவுகணைகளைக் (missiles) கண்டறிந்து கண்காணிக்கவும், இணைக்கப்பட்ட ஆயுத அமைப்புகள் மூலம் அவற்றின் இலக்குகளை அழிக்க இயக்கவும் அதன் பாதுகாப்பில் வாங்கப்பட்டு ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, இயக்கப்பட்ட-ஆற்றல் ஆயுதங்கள் (directed-energy weapon (DEW)), இலக்குகளை நடுநிலையாக்க (neutralise targets) அதிக ஆற்றல் கொண்ட லேசர்களைப் பயன்படுத்துகின்றன. அவை, புதிய பாதுகாப்பு வலையமைப்பின் (new defence network) ஒரு பகுதியாக சேர்க்கப்படும். இராஜதந்திர மற்றும் போர் உத்தி நிலைகளில் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பல அடுக்கு பாதுகாப்பு (multilayered shield) கொண்டு வடிவமைக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


செயற்கைக்கோள்கள், தொடுவானத்திற்கு மேலே (OTH) ரேடார்கள் மற்றும் இயக்கப்பட்ட-ஆற்றல் ஆயுதங்கள் (DEW) நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணை அமைப்புகள், ஆளில்லா விமானங்கள் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக அடுக்கு பாதுகாப்பை (layered protection) உருவாக்கும்.


இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்படும். இருப்பினும், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து ஏற்கனவே உள்ள சில ஆயுத அமைப்புகளும் சேர்க்கப்படும். இது ஒரு ஒருங்கிணைந்த, நாடு தழுவிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க உதவும்.


உங்களுக்குத் தெரியுமா? :


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) ஆரம்பகால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த மாதம், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை (Integrated Air Defence Weapon System (IADWS)) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அமைப்பு மூன்று முக்கிய கூறுகளை ஒருங்கிணைக்கிறது. அவை, எதிரி விமானங்களை இடைமறிக்கும் விரைவு எதிர்வினை தரையிலிருந்து வான் ஏவுகணைகள் (Quick Reaction Surface-to-Air Missiles (QRSAM)), நெருக்கமான அச்சுறுத்தல்களுக்கான மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு (Very Short Range Air Defence (VSHORADS)) ஏவுகணைகள் மற்றும் 5-கிலோவாட் லேசர் ஆகியவற்றை இணைத்தது.


விரைவு எதிர்வினை தரையிலிருந்து வான் ஏவுகணைகள் (QRSAM) : QRSAM என்பது ஒரு குறுகிய தூர தரையிலிருந்து-வான்-ஏவுகணை (Surface-to-Air Missile(SAM)) அமைப்பாகும். இது முக்கியமாக இராணுவத்தின் நகரும் கவச வாகனங்களை எதிரி வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. முழு ஆயுத அமைப்பும் மிகவும் இயங்கக்கூடிய தளங்களில் (highly mobile platforms) கட்டமைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய நிறுத்தங்களில் இருக்கும்போது தேடலாம், கண்காணிக்கலாம் மற்றும் சுடலாம். இந்த அமைப்பு மூன்று முதல் 30 கிலோமீட்டர் வரையிலான செயல்பாட்டு வரம்பைக் கொண்டுள்ளது.


மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு (VSHORADS) : VSHORADS என்பது நான்காம் தலைமுறை, குறுங்கால வான் பாதுகாப்புக்கான சிறிய கையடக்க ஏவுகணை அமைப்பு (miniaturised Man Portable Air Defence System (MANPAD)) கொண்டது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் இந்த ஏவுகணை அமைப்பு கொண்டுள்ளது என்று DRDO தெரிவித்துள்ளது.


Original article:

Share:

இந்தியா முழுவதும், மாநில நிதிநிலைகள் ஒரே நிலையை வெளிப்படுத்துகின்றன : நிதி நிலையற்றத் தன்மை, எப்போதும் விரிவடையும் நலன்புரி அரசு. -தீபன்சு மோகன், அதிதி லாசரஸ் மற்றும் கீதாலி மல்ஹோத்ரா

 சிறிய மாநிலங்கள் பரிமாற்றங்களைச் சார்ந்து இருக்கின்றன. அதே, நேரத்தில் பெரிய மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களையும் கடன் வாங்குவதையும் அதிகம் நம்பியுள்ளன. இருப்பினும், அடிப்படைப் பிரச்சனை இரண்டிற்கும் ஒன்றுதான்.


மாநில நிதி குறித்த சமீபத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கை, நிதி வருவாய் குறையும் போதெல்லாம், இந்திய மாநிலங்கள் அதிகரித்த கடன்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பத்திரங்கள் மூலம் பற்றாக்குறை இடைவெளியைக் குறைக்க முனைகின்றன. இது அவர்களின் பொதுக் கடனை (public debt) படிப்படியாக அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த முறை தீவிரமடைந்துள்ளது. தொற்றுநோய்களின் போது, ​​வருவாய் சரிவு மற்றும் அவசரகால செலவினங்கள் ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்தையும் எதிர்பாராத அளவு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியது.


2022–23ஆம் ஆண்டிற்கான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) தரவுகள், 2016–17 மற்றும் 2022–23-ஆம் ஆண்டிற்கு இடையில் கடன் வாங்கும் பழக்கம் நிறைய மாறியிருப்பதைக் காட்டுகின்றன. சிறிய மாநிலங்கள் பரிமாற்றங்களைச் சார்ந்து இருக்கின்றன. அதே, நேரத்தில் பெரிய மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களையும் கடன் வாங்குவதையும் அதிகம் நம்பியுள்ளன.


இந்தியாவின் நிதிநிலை பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. பெரிய மாநிலங்கள் பெரிய பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் அதிக பொறுப்புகளைக் கொண்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு புள்ளியியல் மற்றும் அமலாக்க அமைச்சக தரவின்படி, ராஜஸ்தான் 342,239 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியது. இது பல நாடுகளைவிட பெரிய பரப்பளவாகும். அதே, சமயம் மத்தியப் பிரதேசம் (308,252 சதுர கிமீ), மகாராஷ்டிரா (307,713 சதுர கிமீ) மற்றும் உத்தரப் பிரதேசம் (240,928 சதுர கிமீ) பெரிய பரப்பளவைக் கொண்ட மாநிலங்கள் ஆகும்.


இந்த மாநிலங்களின் பெரிய அளவு நன்மைகள் மற்றும் சவால்கள் இரண்டையும் கொண்டுவருகிறது. நாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கும் மற்றும் பெரிய நலத்திட்டங்களை நிர்வகிக்கும் பெரிய, மாறுபட்ட பொருளாதாரங்களை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் நிதி உத்திகள் தேசிய அளவில் எதிரொலிக்கின்றன. 2022–23-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா தனது வருமானத்தில் ஏறக்குறைய 70%-ஐ சொந்தமாக ஈட்டியது. பணம் திரட்டுவதற்கான வலுவான திறனை அந்த மாநிலம் வெளிப்படுத்தியது. அதே, நேரத்தில் மற்ற மாநிலங்கள் அதிக நிலையற்ற ஆதாரங்களைச் சார்ந்துள்ளன. கேரளா லாட்டரி விற்பனையிலிருந்து ஏறக்குறைய ₹12,000 கோடி சம்பாதித்தது. ஆனால், அத்தகைய வருமானத்தை நம்பியிருப்பது ‘குடும்ப மதிப்புமிக்க பொருட்களை விற்று வாடகை செலுத்துவது’ (paying rent by selling family heirlooms) போன்ற ஆபத்தான நடவடிக்கையாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் - இது இப்போதைக்கு உதவக்கூடும். ஆனால், இது ஒரு நீண்டகால தீர்வாகாது.


மறுமுனையில், அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் போன்ற சிறிய இந்திய மாநிலங்கள் அவற்றின் சிறிய அளவு மற்றும் புவியியல் நிலைமைகள் காரணமாக தனித்துவமான நிதி சவால்களை எதிர்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, இமாச்சலப் பிரதேசம் (55,673 சதுர கி.மீ), உத்தரகண்ட் (53,483 சதுர கி.மீ), மேகாலயா (22,429 சதுர கி.மீ), மற்றும் சிக்கிம் (7,096 சதுர கி.மீ) ஆகிய வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட சிறிய மாநிலங்கள், அவற்றின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறன.


கோவா மிகச்சிறிய கடற்கரை மாநிலமாகும். இது 3,702 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது. இது மிகவும் சிறிய எடுத்துக்காட்டாக அமைகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்பு, பரவியிருக்கும் குடியிருப்புகள் மற்றும் குறுகிய பொருளாதார தளங்கள் பெரும்பாலான சிறிய மாநிலங்களில் விநியோக செலவுகளை உயர்த்துகின்றன மற்றும் வருவாய் திரட்டுவதில் தடையாக உள்ளன.


2022–23ஆம் ஆண்டில், உத்தரகாண்ட் அதன் சொந்த வரிகளிலிருந்து 35% வரி வருவாயை ஈட்டியது. அருணாச்சலப் பிரதேசம் 9% மட்டுமே வருவாயை ஈட்டியது. பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் தங்கள் சொந்த வரிகளிலிருந்து 20%-க்கும் குறைவாகவே பெறுகின்றன. இந்த மாநிலங்கள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் நிதியையே அதிகம் சார்ந்துள்ளன. அவர்களுக்கு வருமானம் குறைவாகவே உள்ளது. ஆனால், அவர்களின் கடமைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, புவியியல் மற்றும் திறனுக்கு ஏற்ப தேர்வுகளை மேற்கொள்கின்றன.


குறுகிய வரி அடிப்படைகள் மற்றும் அதிக விநியோகச் செலவுகளுடன், கடன் வாங்குவதில் ஏற்படும் மிதமான அதிகரிப்பு, சிறிய மாநிலங்களின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களை பெரிய மாநிலங்களுக்கு இதுவரை இல்லாத ஆபத்தான சூழலை ஏற்படுத்தும்.


அசாம் இந்தப் பிரச்சனையை தெளிவாகக் காட்டுகிறது. அதன் கடன் 2016-17ஆம் ஆண்டில் ரூ.3,902 கோடியிலிருந்து 2022-23ஆம் ஆண்டில் ரூ.28,270 கோடியாக அதிகரித்தது. இது 2023-ஆம் ஆண்டில் அதன் கடன் அதன் பொருளாதாரத்தில் 28.5% ஆக அதிகரித்தது. இமாச்சலப் பிரதேசத்தின் கடன் வாங்குதலும் ரூ.8,603 கோடியிலிருந்து ரூ.22,372 கோடியாக உயர்ந்தது, கடன் அதன் பொருளாதாரத்தில் 43-44%-ஆக உயர்ந்துள்ளது. மணிப்பூர் மற்றும் மேகாலயா மொத்தமாக குறைவாக கடன் வாங்கினாலும், 2022-23-ஆம் ஆண்டில் மாநிலத்தின் கடனை ரூ.11,116 கோடி மற்றும் ரூ.6,221 கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கு நேர்மாறாக, 2020-21-ஆம் ஆண்டில் கோவா கடன் வாங்குவதை ரூ.7,655 கோடியாக இருந்த உச்சத்திலிருந்து 2022-23ஆம் ஆண்டில் ரூ.2,628 கோடியாக கடுமையாகக் குறைத்தது. இதனால், கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. திரிபுரா ரூ.877 கோடியாகக் குறைவாகக் கடன் வாங்கியது. ஆனால், அதன் கடன் 30%-க்கும் அதிகமாகவே இருந்தது. ஏனெனில், அது ஒரு சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 2020-க்குப் பிறகு நாகாலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குவதைக் குறைத்தன. ஆனால், அவற்றின் கடன்கள் 45-47% ஆகவும், அவற்றின் பொருளாதாரத்தில் 34% ஆகவும் உயர்ந்தன.


2016–17 மற்றும் 2022–23ஆம் ஆண்டிற்கு இடையில், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் அதிகமாக உள்ளன. ஆந்திரப் பிரதேசம் நீடித்த விரிவாக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. 2016–17-ஆம் ஆண்டில் ரூ.59,923 கோடியிலிருந்து 2022–23-ஆம் ஆண்டில் ரூ.1,86,024 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் பொறுப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.1 சதவீதமாக உள்ளது. ராஜஸ்தானின் கடன் ரூ.1,60,565 கோடியாக உயர்ந்து. அதன் கடன் விகிதம் (debt ratio) 37.3% ஆகும். தெலுங்கானாவின் கடனும் ரூ.1,26,884 கோடியாக அதிகரித்தது, ஆனால், அதன் கடன் அதன் பொருளாதாரம் 26.2% உடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. தொற்றுநோய்க்குப் பிறகு மற்ற மாநிலங்கள் கடன் வாங்குவதைக் குறைத்தன. 2020–21-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் கடன் ரூ.11,18,516 கோடியாக உயர்ந்தது. பின்னர், ரூ.194,702 கோடியாகக் குறைந்தது. மகாராஷ்டிரா ஒரு பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால், அதன் கடன் மொத்தப் பொருளாதாரத்தில் 18.1% ஆகவே இருந்தது.


இரண்டு மாநிலங்களும் மிகவும் வேறுபட்டவை. ஒடிசா தனது கடனை ₹5,347 கோடியாகக் குறைத்து. அதிக வருவாய் ஈட்டியதன் மூலமும், செலவினங்களில் கவனமாக இருந்ததன் மூலமும் தனது கடனை 19.5% ஆக வைத்திருந்தது. மறுபுறம், பஞ்சாப் சமமற்ற முறையில் கடன் வாங்கியது. ஆனால், இன்னும் 47.1% அளவுக்கு மிக அதிக கடனைக் கொண்டுள்ளது. இது தொடர்ச்சியான நிதிச் சிக்கல்களைக் காட்டுகிறது.


மகாராஷ்டிராவைப் போல விரிந்திருந்தாலும் அல்லது மேகாலயாவைப் போல சிறியதாக இருந்தாலும், மாநிலங்கள் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றன: அவர்களின் நலன் சார்ந்த லட்சியங்கள் தொடர்ந்து அவர்களின் நிதி வழிகளைவிட அதிகமாக உள்ளன. கடன் வாங்கும் முறைகள் அளவு மற்றும் அளவுகளில் வேறுபடலாம். ஆனால், அடிப்படை முரண்பாடு ஒன்றுதான்: அரசாங்க நலத்திட்டங்கள் விரிவடைந்து வருவதால், நிதிப் பற்றாக்குறையும் (Fiscal fragility) வலுவாக உள்ளது.


காகிதத்தில், பல மாநிலங்கள் சமநிலையான அல்லது உபரி நிலைகளைக் காட்டுகின்றன. உண்மையில், இந்த மாநிலங்கள் ஒன்றிய அரசிடமிருந்து வரும் பணம், மறைக்கப்பட்ட கடன்கள் மற்றும் தாமதமான திருப்பிச் செலுத்துதல்களையே அதிகம் நம்பியுள்ளன. பஞ்சாபில் அதிக கடன்களுடன் நீண்டகால பணப் பிரச்சினைகள் உள்ளன. கேரளா லாட்டரி விற்பனையையே அதிகம் சார்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை பெரிய விவசாயக் கடன் தள்ளுபடிகள் மற்றும் இலவச மின்சாரத்திற்கு சிறப்பு முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துகின்றன. அவை, உண்மையான செலவுகளை தங்கள் பட்ஜெட்டிலிருந்து மறைக்கின்றன.


இந்தியா, உலகின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், அதன் நிதி நிலைமை மிகவும் பலவீனமாக உள்ளது. அரசுக்கு பெரிய லட்சியங்கள் உள்ளன. நிறைய செய்ய முயற்சிக்கின்றன. இதன் விளைவாக, பலருக்கு உதவ முயற்சிக்கும் போதுமான வளங்கள் இல்லாத ஒரு அரசாங்கம் உருவாகிறது. எனவே, மக்களைப் பராமரிப்பதற்கும் பணப் பற்றாக்குறைக்கும் இடையில் ஒரு கவனமான சமநிலையை இது உருவாக்குகிறது.


மோகன், பொருளாதாரப் பேராசிரியராகவும், OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் டீனாகவும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வருகைதரு பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AMES என்ற ஆராய்ச்சிக் கூட்டாளராகவும் உள்ளார். லாசரஸ் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோர் OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வு மையத்தின் (Centre for New Economics Studies (CNES)) ஆராய்ச்சி ஆய்வாளர்கள்.



Original article:

Share:

இணக்கத்தை உறுதி செய்தல்: இந்திய மருந்துத் துறை குறித்து…

 தரம் குறைந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும்.


சுய-சார்பு இந்தியா (Atmanirbhar Bharat) என்பது ஒரு லட்சிய இலட்சியமாகும். ஆனால், அதற்கு நிலையான தரக் கட்டுப்பாட்டு சட்டகம் இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, மருந்துத் துறையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' (making in India) என்ற குறிக்கோளுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் மீண்டும் மீண்டும் எழுந்துள்ளன. உலகளாவிய மருத்துவத் துறையில் இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. ஆனால், அதன் இருமல் சிரப்களின் தரம் தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த மருந்துகள் தேவையான தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பது குறித்து மீண்டும் மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன. இது தொழில்துறையின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது. சமீபத்தில், ஒன்றிய சுகாதார அமைச்சகம் அனைத்து இந்திய மருந்து தயாரிப்பாளர்களையும், அட்டவணை M எனப்படும் புதிய தரநிலைகளின் அடிப்படையில், மருந்துகளை தயாரிப்பதற்கு கடுமையான விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை, ஒரு தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்பான கோல்ட்ரிஃப்பின் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (diethylene glycol (DEG)) எனப்படும் அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்ததை அடுத்து இது நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது 16 குழந்தைகளின் இறப்புக்குப் பின்னணியில் இருமல் சிரப் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதை அடுத்து, இந்த சோதனைகள் தொடங்கப்பட்டன. 


சுவாரஸ்யமாக, சுகாதார அமைச்சகம் ஆரம்பத்தில் இரண்டு மாநிலங்களில் இருந்து மாதிரிகளை பரிசோதித்த பிறகு இருமல் சிரப்பில் எந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனமும் (DEG) இல்லை என்று கூறியது. பின்னர், மருந்து தொழிற்சாலையில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட விதத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை கண்டறிந்தது. மோசமான தொகுதி, தரம் குறைந்த புரோபிலீன் கிளைகோலைப் (propylene glycol) பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்றும், இது சிறுநீரகங்களை பாதிக்கும் DEG மற்றும் எத்திலீன் கிளைகோல் எனப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களால் மருந்தை மாசுபடுத்தியிருக்கலாம் என்றும் அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தில் இறந்த பல குழந்தைகளுக்கு இருமல் சிரப்பை பரிந்துரைத்ததாகக் கூறப்படும் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.


இந்த நடவடிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் நிலைமையை நிவர்த்தி செய்ய நல்லவை என்றாலும், இந்திய அரசு செய்ய வேண்டியது மோசமான தரமான மருந்துகளுக்கு பூஜ்ஜிய வரம்பைக் கொண்டிருக்க வேண்டும். மருந்து போன்ற கண்காணிப்பு அவசியம். மேலும், மீறல்கள் கண்டறியப்படும்போது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது செய்வதற்கு முன்பு மக்கள் இறக்கும் வரை காத்திருப்பது தவறு, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நல்ல ஆய்வக நடைமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஆனால், ஒரு பிரச்சனை பதிவாகும் போதெல்லாம் கடுமையான நடவடிக்கை தேவை. மருந்துத் தொகுதிகளில் வழக்கமான திடீர் சோதனைகள் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு தவறுக்கும் கடுமையான தண்டனை இருக்க வேண்டும். மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான தரம் அல்லது பாதுகாப்பற்ற மருந்துகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்பதை அனைவரும் அறிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியம்.



Original article:

Share:

அமெரிக்க அரசாங்கம் முடங்கும்போது என்ன நடக்கிறது? இது அமெரிக்காவையும் இந்தியாவையும் எவ்வாறு பாதிக்கிறது? -ராமசாமி ஜெயபிரகாஷ்

 அமெரிக்காவின் பணிநிறுத்தம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் அலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது இந்தியாவையும் பிற ஆசிய தொழிற்சாலைகளையும் பாதிக்கக்கூடும். இந்திய பங்குச் சந்தைகள் சிறிய குறுகியகால விளைவுகளைக் காணக்கூடும்.


அமெரிக்க அரசாங்க பணிநிறுத்தம் என்றால் என்ன?


அமெரிக்க மத்திய அரசின் நிதியாண்டு அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது. அனைத்து அரசு கிளைகளுக்கும் செலவு வரம்புகளை நிர்ணயிக்கும் ஒரு நிதிச் சட்டம் (பட்ஜெட்) நாடாளுமன்றத்தின் (காங்கிரஸின்) இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு அதிபரால் கையொப்பமிடப்பட வேண்டும். இந்தச் சட்டம் ஆண்டுக்கான செலவுகளைச் செலுத்த அரசாங்கத்தை அனுமதிக்கிறது.


முழு ஆண்டு நிதிச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், தொடர்ச்சியான தீர்மானம் (continuing resolution (CR)) எனப்படும் குறுகியகாலச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். ஒரு தொடர்ச்சியான தீர்மானம் (CR) பொதுவாக சில வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் மற்றும் முந்தைய ஆண்டின் மட்டங்களில் செலவினங்களை வைத்திருக்கும்.


அரசாங்கத்திற்கு நிதியளிக்கப்படாமல் இருக்க, செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன் அல்லது தற்போதைய தொடர்ச்சியான தீர்மானம் (CR) காலாவதியாகும் முன் ஒரு நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அது சரியான நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், அமெரிக்க மத்திய அரசு மூடப்படும்.




பணிநிறுத்தத்தில் என்ன நடக்கும்?


மத்திய அரசின் நிதி தீர்ந்து போகும்போது, ​​அத்தியாவசியமற்ற அனைத்து செயல்பாடுகளும் நின்றுவிடும். அத்தியாவசியமற்ற பணிகளில் உள்ள மத்திய ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காது. ஊதியம் இல்லாமல் தன்னார்வ வேலை செய்வது சட்டவிரோதமானது, எனவே இந்த சேவைகள் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் 'பணிநீக்கம்' செய்யப்படுவார்கள். ஃபர்லோ என்பது அத்தியாவசியமற்ற கூட்டாட்சி ஊழியர்களுக்கு தற்காலிகமாக ஊதியம் பெறாத விடுப்பு ஆகும். பணிநிறுத்தம் முடிந்ததும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பொதுவாக ஊதியத்தை திரும்பப் பெறுவார்கள்.


நிறுத்தப்படும் அத்தியாவசியமற்ற சேவைகளில் அருங்காட்சியகங்கள், பொது பூங்காக்கள், தேசிய நினைவுச்சின்னங்கள், IRS வரி செலுத்துவோர் சேவைகள், கூட்டாட்சி மானியங்கள் அல்லது கடன்களைச் செயலாக்குதல் மற்றும் அவசரகாலமற்ற கூட்டாட்சி ஆராய்ச்சி ஆகியவை அடங்கும். தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரப் பணிகளை இடைநிறுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.


அத்தியாவசிய சேவைகள் பெரும்பாலும் உடனடி ஊதியம் இல்லாமல் தொடர்ந்து செயல்படுகின்றன. ஆனால், நிதி மீண்டும் தொடங்கும்போது ஊழியர்களுக்கு பின்னோக்கி ஊதியம் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளில் செயலில் உள்ள இராணுவம், எல்லை ரோந்து, ICE முகவர்கள், FBI மற்றும் கூட்டாட்சி சட்ட அமலாக்க அதிகாரிகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், விமான நிலையங்களில் TSA அதிகாரிகள், அமெரிக்க அஞ்சல் சேவை ஊழியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். தற்போதுள்ள பயனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீட்டு மற்றும் மருத்துவ உதவிப் பணம் தொடர்கிறது. ஆனால், புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.




நிதி மசோதாவை நிறைவேற்றுவது ஏன் கடினம்?

                     

நிதியுதவிச் சட்டத்தை நிறைவேற்ற, பிரதிநிதிகள் சபையில் எளிய பெரும்பான்மை போதுமானது. இருப்பினும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், ஐந்தில் மூன்று பங்கு பெரும்பான்மை தேவை. அதாவது குறைந்தது 60 வாக்குகள் தேவை. ஒரு கட்சிக்கு 60 வாக்குகள் இல்லையென்றால், அது மற்ற கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இது பெரும்பாலும் திருத்தங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களை உள்ளடக்கியது. தற்போது, அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி அவை மற்றும் செனட் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. அவையில் 219-212 பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இது ஒரு செலவு மசோதாவை நிறைவேற்ற போதுமானது. செனட்டில், கட்சிக்கு 53-47 பெரும்பான்மை உள்ளது, இது சிறப்பு பெரும்பான்மை தேவை என்பதால் செலவு மசோதாவை நிறைவேற்றத் தேவையான 60 வாக்குகளை அடைய போதுமானதாக இல்லை.


கூட்டாட்சி அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான தொடர்ச்சியான தீர்மானம் செப்டம்பர் 19-ஆம் தேதி அவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜனநாயகக் கட்சியினர் அதை ஆதரிக்காததால் அது செனட்டில் தோல்வியடைந்தது, எனவே ஃபிலிபஸ்டரை முறியடிக்க தேவையான 60 வாக்குகளைப் பெறவில்லை. 2025-ஆம் ஆண்டின் முழு கூட்டாட்சி நிதியாண்டும் (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) பல்வேறு தொடர்ச்சியான தீர்மானங்கள் மூலம் மட்டுமே நிதியளிக்கப்பட்டது, ஏனெனில் கட்சிகள் முழு நிதியளிப்புச் சட்டத்தில் உடன்பட முடியவில்லை.  

   

ஏன் இப்போது அமெரிக்க அரசு முடங்கியுள்ளது?


ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடையே அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அரசாங்க முடக்கம் பொதுவாக நிகழ்கிறது. கட்சிகளுக்கு இடையிலான அரசியல், சித்தாந்தம் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளில் உள்ள வேறுபாடுகளாலும் இந்த முடக்கம் ஏற்படுகிறது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்க செலவினங்களை பெருமளவில் குறைக்க விரும்புகிறார். அவரது இரண்டாவது பதவிக்காலம் அரசாங்க செயல்திறன் துறையுடன் (DOGE) தொடங்கியது. இது செலவினங்களைக் குறைப்பதாக உறுதியளித்தது. ஆனால், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இப்போது, ​​புதிய நிதிச் சட்டத்தின் மூலம், டிரம்ப் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மலிவு விலை பராமரிப்புச் சட்டம், மருத்துவ உதவி, வெளிநாட்டு உதவி மற்றும் பலவற்றிற்கான செலவினங்களைக் குறைக்க இலக்கு வைத்துள்ளார். இந்தக் குறைப்புக்கள் அமெரிக்கர்களுக்கு காப்பீட்டு கட்டணங்களை அதிகரிப்பதற்கும் சுகாதாரச் செலவுகளை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் வாதிடுகின்றனர்.


கடந்த காலங்களில் இதுபோன்ற முடக்கங்கள் நடந்துள்ளனவா? அவை எவ்வளவு காலம் நீடித்தன?


நவீன பட்ஜெட் செயல்முறை 1974-ஆம் ஆண்டு காங்கிரஸின் பட்ஜெட் மற்றும் பறிமுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்துடன் தொடங்கியது. 1980ஆம் ஆண்டில், பற்றாக்குறை எதிர்ப்புச் சட்டத்தின் கடுமையான விளக்கம் அரசாங்கப் பணிநிறுத்தங்களை விடுமுறைகளுடன் ஏற்படுத்தியது. அதற்குமுன், 1976 முதல் 1979-ஆம் ஆண்டு வரையிலான நிதி இடைவெளிகள் பணிநிறுத்தங்கள் அல்லது விடுமுறைகளுக்கு வழிவகுக்கவில்லை. 1980ஆம் ஆண்டு முதல், அமெரிக்க அரசாங்கம் 15 பணிநிறுத்தங்களைச் செய்துள்ளது. அதிபர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் 2018-19-ஆம் ஆண்டில் மிக நீண்டது.


இந்த முடக்கத்தால் அமெரிக்காவில் என்ன பாதிப்பு?


அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் விளைவு, பணிநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு வாரமும் பணிநிறுத்தம் அரசாங்க செயல்பாடுகள் குறைவதால் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை சுமார் 0.1% குறைக்கிறது என்று ஜே.பி. மோர்கன் கூறினார். பணிநிறுத்தம் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் நீடித்தால், அது பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கலாம். சில இழப்புகளை மீட்டெடுக்க முடியும், ஆனால் நீண்ட பணிநிறுத்தம் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிய மற்றும் நீடித்த வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் போன்ற கூட்டாட்சி நிறுவனங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன, அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) அறிக்கை போன்ற முக்கிய பொருளாதார தரவுகளை தாமதப்படுத்துகின்றன. இதன் விளைவாக, அக்டோபர் 28–29 FOMC கூட்டத்தின்போது முழுமையான தரவு இல்லாமல் வட்டி விகிதக் குறைப்புகளில் பெடரல் ரிசர்வ் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.


இது அமெரிக்க டாலரை பாதிக்குமா?


ஆம். இந்த பணிநிறுத்தம் நிச்சயமற்றத் தன்மையை ஏற்படுத்துகிறது. கடந்த 5 நாட்களில் டாலர் குறியீடு ஏற்கனவே சுமார் 0.50 சதவீதம் குறைந்துள்ளது. நீடித்த பணிநிறுத்தத்தால், அது மேலும் குறையக்கூடும். 2018–19 ஆம் ஆண்டில் முந்தைய பணிநிறுத்தத்தின் போது, ​​டாலர் குறியீடு சுமார் 2 சதவீதம் சரிந்தது.


இந்த முடக்கத்தால் இந்தியா பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா?

ஆம், ஆனால் பணிநிறுத்தத்தின் காலம் மற்றும் டிரம்ப் முன்மொழியக்கூடிய தற்காலிக கொள்கைகளைப் பொறுத்து தாக்கத்தின் தீவிரம் மாறுபடலாம். வழக்கம் போல், பணிநிறுத்தம் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு நிதியைக் குறைக்கும், இதன் விளைவாக இந்தியர்களுக்கான H-1B நுழைவுச் சீட்டுகள் மற்றும் நிரந்தர குடியுரிமை அட்டைகளை செயலாக்குவதில் தாமதம் ஏற்படும். இருப்பினும், விசா நேர்காணல்கள் மற்றும் தூதரக சேவைகள் குறைந்தபட்ச தாக்கத்தைக் காணும், ஏனெனில் இந்த சேவைகள் கட்டண அடிப்படையிலானவை மற்றும் பொதுவாக இடையூறு ஏற்படாது. நீடித்த பணிநிறுத்தம் இந்த சேவைகளையும் கட்டுப்படுத்தக்கூடும். அமெரிக்க பணிநிறுத்தம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கலாம். இது இந்தியா மற்றும் பிற ஆசிய தொழிற்சாலைகளை பாதிக்கக்கூடும். இந்திய பங்குச் சந்தைகள் சிறிய குறுகிய கால விளைவுகளைக் காணக்கூடும்.



Original article:

Share:

டிஜிட்டல் சுயாட்சி.

 வலையமைப்பின் தேசிய பயன்பாடுகளுக்கு அரசாங்க ஆதரவு தேவை.


இந்தியா செய்தி அனுப்புதல், மின்னஞ்சல், இயக்க முறைமைகள், பொழுதுபோக்கு மற்றும் AI தளங்கள் உள்ளிட்ட தனக்கென ஒரு டிஜிட்டல் சூழலை உருவாக்க விரும்புகிறது. இந்த இலக்கு சரியான நேரத்தில் மற்றும் முக்கியமானது. உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் பலவீனமடைந்து வருகின்றன. மேலும் சர்வதேச போட்டிகள் வளர்ந்து வருகின்றன. வெளிநாட்டு டிஜிட்டல் தளங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது இந்தியாவின் டிஜிட்டல் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். அதனால்தான் உள்ளூர் தீர்வுகளில் அரசாங்கம் கவனம் செலுத்துவது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் அவசியமான உத்தியாகும்.


இயக்க முறைமைகள், சமூக ஊடகங்கள், மேப்பிங் தொழில்நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆப் ஸ்டோர்கள் போன்ற துறைகளில் வலுவான உள்ளூர் மாற்றுகளை உருவாக்குவதே இதன் குறிக்கோள். இது உலகளாவிய நிறுவனங்கள் அல்லது அவற்றின் கொள்கைகளால் ஏற்படும் சேவை இடையூறுகளின் அபாயத்தைக் குறைக்கும்.


சில படிகள் ஏற்கனவே முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. அரசாங்கம் மற்றும் வணிகங்களுக்கான பாதுகாப்பான மற்றும் கட்டற்ற மென்பொருள் தரவுத்தள அமைப்பான BharatDB ஐ உருவாக்க மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.  இதேபோல், இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho, அரசாங்க மின்னஞ்சல் மற்றும் உற்பத்தித்திறன் கருவிகளை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. MapmyIndia அதிகாரப்பூர்வ மேப்பிங் சேவைகளிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.


இருப்பினும், இந்தியாவின் உண்மையான சவால் வெறும் செயலிகளை உருவாக்குவது மட்டுமல்ல, முழுமையான சூழல் அமைப்புகளை உருவாக்குவதும் ஆகும். WhatsApp, Gmail மற்றும் Instagram போன்ற உலகளாவிய தளங்கள் அமைப்பின் காரணமாக வெற்றி பெறுகின்றன. அங்கு அதிகமான மக்கள் அதைப் பயன்படுத்தும்போது ஒரு தளம் மிகவும் மதிப்புமிக்கதாகிறது. இது புதிய வலையமைப்பு தளங்கள் போட்டியிடுவதை மிகவும் கடினமாக்குகிறது. இந்தியா ஏற்கனவே இதை அனுபவித்துள்ளது. ஒரு காலத்தில் "இந்திய வாட்ஸ்அப்" என்று அழைக்கப்பட்ட Hike Messenger மற்றும் ட்விட்டரின் இந்திய பதிப்பாக இருந்த Koo போன்றவை மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


சீனாவைப் போலன்றி, உள்ளூர் தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக இந்தியா வெளிநாட்டு தளங்களைத் தடைசெய்ய முடியாது. அதற்குப் பதிலாக, இந்தியாவின் மாதிரி நியாயமான போட்டி மற்றும் புத்திசாலித்தனமான ஒழுங்குமுறையைச் சார்ந்திருக்க வேண்டும். கூகிள் பயன்பாடுகள் ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் எவ்வாறு தொகுக்கப்படுகின்றன என்பதைப் போலவே, திறன்பேசி தயாரிப்பாளர்கள் சில சரிபார்க்கப்பட்ட இந்திய பயன்பாடுகளை முன்னிருப்பாக முன்கூட்டியே நிறுவச் சொல்வது ஒரு யோசனை.


மிக முக்கியமாக, இந்தியா இயங்குநிலையை கட்டாயமாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். இயங்குநிலை என்பது வெவ்வேறு தளங்களில் உள்ள பயனர்கள் எளிதாக தொடர்பு கொள்ளமுடியும் என்பதாகும். இது புதிய நிறுவனங்கள் நியாயமான முறையில் போட்டியிட உதவும். UPI-ன் வெற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். அதில் அனைத்து வங்கிகளும் ஒரே இயங்குநிலை கட்டண முறையில் சேர வேண்டியிருந்தபோது, ​​அது விரைவான மற்றும் உள்ளடக்கிய ஏற்புக்கு வழிவகுத்தது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டமும் செய்தியிடல் பயன்பாடுகளுக்கு இதே போன்ற விதிகளைக் கொண்டுள்ளது. செய்தியிடல் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கும் இந்தியா இதைச் செய்ய முடியும், இது உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டுப்பாட்டைக் குறைக்கும்.


ஆனால் எந்தவொரு உள்ளூர் தளமும் செழிக்க, பயனர்கள் உலகளாவிய பயன்பாடுகளிலிருந்து பெறும் அதே எளிமை, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்க அதை நம்ப வேண்டும். எனவே இந்தியா டிஜிட்டல் கல்வியறிவு, பயனர் வடிவமைப்பு மற்றும் வெளிப்படையான தனியுரிமை நடைமுறைகளில் முதலீடு செய்ய வேண்டும். உள்நாட்டு பயன்பாடுகள் வணிகரீதியாக விரிவடைவதற்கு முன்பு அவை வளர உதவும் முதல் வாடிக்கையாளராக அரசாங்கம் செயல்பட முடியும்.



Original article:

Share:

அணைகளைப் பொறுத்தவரை, சீன முறையை பின்பற்றுங்கள். -அசித் கே பிஸ்வாஸ், சிசிலியா டோர்டஜாடா

 சீனாவும் இந்தியாவும் ஒரே நேரத்தில் பெரிய அணை கட்டும் பணியில் இறங்கின. ஆனால், இந்தியாவைவிட 10 மடங்கு மின் உற்பத்தி திறன் கொண்ட சீனா இன்று நீர்மின்சாரத்தில் முன்னணியில் உள்ளது.


கடுமையான வெள்ளம் மற்றும் வறட்சியின் தாக்கங்களைக் குறைப்பதற்கு தண்ணீரை எவ்வாறு கையாள்வது என்பதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அரசர்கள் தண்ணீரை முறையாக நிர்வகிக்கத் தவறியதால் இரு நாடுகளிலும் பேரரசுகள் வீழ்ந்தன.


இந்தியா 1947-ல் சுதந்திரமடைந்தது, 1949-ல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. 1950ஆம் ஆண்டுகளில், இரு நாடுகளும் பெரிய அணைகளைக் கட்டத் தொடங்கின. இந்தியா தனது இரண்டு பெரிய அணைகளான ஹிராகுட் மற்றும் பக்ராவை 1957 மற்றும் 1963-ல் கட்டியது. அதேபோல், சீனா தனது பெரிய அணையான சான்மென்சியாவை 1960-ல் கட்டியது.


இந்த கட்டுமானங்களின் முடிவுகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஹிராகுட் மற்றும் பக்ரா வெற்றி பெற்றனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இத்தகைய பெரிய அணைகளை "நவீன இந்தியாவின் கோவில்கள்" (temples of modern India) என்று பெருமையுடன் அறிவித்தார். மாறாக, சான்மென்சியாவின் பதிவு அவ்வளவு சிறப்பாக இல்லை. அதிக வண்டல் படிவு காரணமாக அணை எதிர்கொண்ட முதல் வெள்ளத்தின்போது 17 சதவீத சேமிப்பு கொள்ளளவை இழந்தது. அடுத்த பல காலகட்டங்களில், அதன் வடிவமைப்பு மற்றும் இயக்க நடைமுறைகள் பல முறை மாற்றப்பட்டது.


1980ஆம் ஆண்டில், சீன அரசாங்கம் இந்தக் கட்டுரையின் முதல் ஆசிரியரிடம் அதன் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமான தெற்கு-வடக்கு நீர் பரிமாற்றம் சாத்தியமா என்று சரிபார்க்கச் சொன்னது. அந்த நேரத்தில், சீன பொறியாளர்கள் அணைகள் கட்டுவதில் அதிக நம்பிக்கையுடன் இல்லை, குறிப்பாக இந்திய பொறியாளர்களுடன் ஒப்பிடும்போது. சான்மென்சியா திட்டம் அவர்களின் நம்பிக்கையைக் குறைத்துவிட்டது.


1990ஆம் ஆண்டுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் நிலைமை நிறைய மாறியது. அணை கட்டுவதில் சீனா மீண்டும் நம்பிக்கையைப் பெற்றது மற்றும் அணைகள் கட்டுவதில் உலகின் முன்னணி நாடாக மாறியது. கடந்த மூன்று தசாப்தங்களில், பெரிய அணைகளைத் திட்டமிடுவதிலும் கட்டுவதிலும் அது பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது, இந்தியா மற்றும் பிற முக்கிய அணை கட்டும் நாடுகளை மிகவும் பின்தங்கியுள்ளது.


1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், மீள்குடியேற்றப் பிரச்சினைகள் காரணமாக, பெரிய அணைகள் கட்டுவதில் சீனாவும் இந்தியாவும் வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கின. 1990ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் அணை கட்டுமானம் கிட்டத்தட்ட முற்றிலும் மெதுவாகிவிட்டது. அந்த நேரத்தில், இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெரிய திட்டங்களைவிட சிறிய திட்டங்கள் சிறந்தவை என்று நம்பினர். மழைநீர் சேகரிப்பு மற்றும் பெரிய அணைகளுக்குப் பதிலாக சிறிய தடுப்பணைகள் கட்டுதல் போன்ற முறைகளை அவர்கள் ஆதரித்தனர்.


சர்தார் சரோவர் அணையின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிந்திருந்தாலும், இந்திய உச்சநீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு அதன் கட்டுமானத்தை நிறுத்தியது. இந்தக் காலகட்டத்தில், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் பெரிய அணைகளுக்கு நிதியளிப்பதை நிறுத்தியது. உலகின் பல பகுதிகளில், பெரிய அணைகளுக்கும் மிகவும் கெட்ட பெயர் இருந்தது.


இதற்கு நேர்மாறாக, சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்காக பெரிய அணைகளை தொடர்ந்து கட்டியது. இது ஒரு நடைமுறை அணுகுமுறையை எடுத்தது. பெரிய அணைகள் கட்டப்பட்ட பிறகு, அது சரியாக வேலை செய்யாததை மதிப்பீடு செய்து, புதிய தலைமுறை அணைகள் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாத வகையில் தேசிய கொள்கைகளை சரியான முறையில் மாற்றியமைத்தது.


பெரிய அணைகள் கட்டுவது நீர் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இரண்டையும் மேம்படுத்தும் என்பதை சீனா புரிந்துகொண்டது. இது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. 2000ஆம் ஆண்டு வாக்கில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக சீனா விரைவில் மாறும் என்பதை உணர்ந்தது. எனவே, அது தனது அணை கட்டும் திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தியது. இந்த அணைகள் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு உதவும், மக்களுக்கு நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்யும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும்.


நீர்மின்சார மேம்பாட்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடு மிகவும் தெளிவாக உள்ளது. 2000ஆம் ஆண்டில், இந்தியா 21.8 GW நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் சீனா ஏற்கனவே 77.08 GW-ஐக் கொண்டிருந்தது. 2024ஆம் ஆண்டின் இறுதியில், இடைவெளி மிகவும் விரிவடைந்துள்ளது. இந்தியாவின் திறன் 42.72 GW-ஆக இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. ஆனால், சீனாவின் திறன் 435.95 GW ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவைவிட 10 மடங்கு அதிகம்.


உலகளவில், அணை கட்டுவதில் சீனாவின் முன்னேற்றத்துடன் தற்போது எந்த நாடும் போட்டியிட முடியாது. 2024ஆம் ஆண்டில், மொத்த புதிய உலகளாவிய கொள்ளளவான 24.6 ஜிகாவாட்டில், சீனா மட்டும் 14.4 ஜிகாவாட் புதிய ஹைட்ரோ மேம்பாட்டிற்கு பங்களித்தது.


சீனாவும் இந்தியாவும் பருவமழை நாடுகளாகும். இங்கு ஆண்டு மழைப்பொழிவின் பெரும்பகுதி பருவமழை மாதங்களில் பெய்யும். உதாரணமாக, இந்தியாவின் அதிக மழை பெய்யும் நகரங்களில் ஒன்றான சிரபுஞ்சி, ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சுமார் 10,820 மிமீ மழையைப் பெறுகிறது. இந்த மழையில் கிட்டத்தட்ட 80% வெறும் 120 மணி நேரத்திற்குள் பெய்யும். டெல்லியில், வருடாந்திர மழைப்பொழிவில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தொடர்ச்சியாக அல்லாத 80 மணிநேரம் மழைப்பொழிவு இருக்கும்.


இந்தியா மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக மழையைப் பெறுகிறது என்பதை இது காட்டுகிறது. இதன் காரணமாக, மக்களின் தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்ய மழையின் பெரும்பகுதியை சேகரித்து சேமிக்க வேண்டும். பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அணைகள், நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு மூலம் இந்த சேமிப்பு செய்ய முடியும். 1980ஆம் ஆண்டு முதல் அணைகள் கட்டுவதில் இந்தியாவின் சாதனை மோசமாக உள்ளது. இதன் காரணமாக, நாடு பல காலகட்டங்களாக பெரும் நீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மிக அதிக மழை பெய்யும் சிரபுஞ்சியில்கூட, சேமிப்பு அமைப்புகள் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.


2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 1.7 பில்லியனாக உயரக்கூடும். 2047-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிய அதிகரிப்பையும் நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மிகவும் சிறப்பாக எதிர்பார்க்கிறார்கள். இதை அடைய, பெரிய அணைகள் உட்பட அனைத்து வகையான நீர் சேமிப்பு அமைப்புகளையும் இந்தியா தாமதமின்றி கட்ட வேண்டும்.காலநிலை மாற்றம் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. இது நீர் சேமிப்பை இன்னும் அவசரமாக்குகிறது. வலுவான மற்றும் நிலையான சேமிப்பு அமைப்புகளை வடிவமைக்க இந்தியா ஏற்கனவே அறிவு மற்றும் திறன்களைக் கொண்டுள்ளது. ஆனால் அது அவசரமாக அதன் நீர் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கொள்கைகளை மாற்றாவிட்டால், நாடு இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.


பிஸ்வாஸ் சிங்கப்பூரின் நீர் மேலாண்மை இண்டர்நேஷனலின் இயக்குநராகவும், UK, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியராகவும் உள்ளார் மற்றும் டோர்டாஜாடா இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக உள்ளார். இருவரும் புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர்களாக உள்ளனர்.



Original article:

Share: